1 00:00:11,803 --> 00:00:12,804 ஜிபிஎஸ் கண்காணிப்பு சாதனம் 2 00:02:09,086 --> 00:02:12,716 ஓ. நான்… நீங்கள் தவறான அபார்ட்மெண்ட்டில் இருக்கிறீர்கள் நான் நினைக்கிறேன். 3 00:02:27,606 --> 00:02:29,024 என்ன… என்ன… 4 00:02:38,825 --> 00:02:40,244 ச்சே. 5 00:03:05,936 --> 00:03:07,604 இதன் பிசுப்புத்தன்மை பிடித்திருக்கிறது. 6 00:03:09,231 --> 00:03:11,316 - இது எப்படி உறைகிறது என்று பார்ப்போம். - சரி. 7 00:03:15,237 --> 00:03:17,239 ஃப்ளோரியன் கர்ட்ஸ் உணவு அறிவியலின் உலகளாவிய தலைவர் 8 00:03:39,595 --> 00:03:40,888 ட்ரெவருடனான சந்திப்பிற்கு உங்கள் விபரங்களை உறுதி செய்யுங்கள் 9 00:03:42,556 --> 00:03:43,599 ஹாய். 10 00:03:43,682 --> 00:03:45,100 மன்னித்துவிடு, தாமதமாகிவிட்டது. 11 00:03:45,184 --> 00:03:48,228 ஹேய். எனக்குப் பிடித்த உணவு விஞ்ஞானி எப்படி இருக்கிறான்? 12 00:03:48,312 --> 00:03:49,521 நன்றாக. 13 00:03:49,605 --> 00:03:51,690 - பிஸியாக. - சரி. 14 00:03:51,773 --> 00:03:53,150 நாம் பரிசோதனையைத் தொடங்கலாமா? 15 00:03:56,820 --> 00:03:57,946 சரி. 16 00:03:59,323 --> 00:04:00,324 நல்லது. 17 00:04:01,533 --> 00:04:02,826 சரி, நிறுத்து. 18 00:04:02,910 --> 00:04:04,411 உனக்குத் தெரிந்ததைச் சொல். 19 00:04:04,494 --> 00:04:06,038 இது அவமானகரமானது. 20 00:04:06,121 --> 00:04:07,539 நான் ஒரு பிரிவால் பாதிக்கப்பட்டிருந்தேன். 21 00:04:08,123 --> 00:04:09,374 ட்ரெவர் இன்ஸ்டாகிராமில் எனக்கு மெசேஜ் அனுப்பினான். 22 00:04:09,458 --> 00:04:12,669 அவன் வசீகரமாக இருந்தான், நான் தனிமையில் இருந்தேன், எங்களுக்குள் ஈர்ப்பு ஏற்பட்டது. 23 00:04:13,170 --> 00:04:14,254 அவன் என்னை நன்றாக உணர வைத்தான். 24 00:04:15,047 --> 00:04:17,548 பிறகு என்னிடம் வீடியோ சாட் செய்யலாமா என்று கேட்டான்… 25 00:04:18,509 --> 00:04:19,635 எவ்வளவு முட்டாள்தனம். 26 00:04:19,718 --> 00:04:23,555 இல்லை, என்னை நம்பு, நானும் அப்படித்தான் உணர்கிறேன். இதில் பாதிக்கப்பட்டவர்கள் நாம் மட்டும் கிடையாது. 27 00:04:23,639 --> 00:04:25,307 என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ளத்தான் முயற்சிக்கிறேன். 28 00:04:25,390 --> 00:04:27,851 உண்மையைச் சொன்னால், அவன் என்னைப் பதிவு செய்வது எனக்குத் தெரியாது. 29 00:04:27,935 --> 00:04:30,229 பிறகு ஒரு நாள் ஒருவன் வந்தான், அவனிடம் அந்த வீடியோ இருந்தது. 30 00:04:30,312 --> 00:04:32,898 - சரி, அவன் இவனா? - ஆம், இவன்தான். 31 00:04:33,774 --> 00:04:37,402 அவன் சொல்வதைக் கேட்காவிட்டால், வீடியோவை எல்லோருக்கும் பரப்புவேன் என்றான். 32 00:04:38,487 --> 00:04:39,780 அவன் எவ்வளவு பணம் கேட்டான்? 33 00:04:39,863 --> 00:04:42,491 எதுவுமில்லை. நான்தான் அவனுக்குப் பணம் தருவதாக சொன்னேன், ஆனால் அவன் வாங்கவில்லை. 34 00:04:42,574 --> 00:04:45,160 அவன் சொன்னதை அப்படியே நான் செய்ய வேண்டும் என்றான். 35 00:04:45,244 --> 00:04:46,245 க்வின் அம்மா குரூப் சாட் மெசேஜ் 36 00:04:46,328 --> 00:04:47,704 அப்படியே அவன் சொன்னது போலவே. 37 00:04:47,788 --> 00:04:49,289 இல்லையென்றால் என் வாழ்க்கையைச் சீரழித்துவிடுவேன் என்றான். அவனுக்கு எல்லாம் தெரியும். 38 00:04:49,373 --> 00:04:50,958 க்வின் - கலை நிகழ்ச்சிக்கு யாராவது எலுமிச்சை சாறு கொண்டு வர முடியுமா? 39 00:04:51,041 --> 00:04:52,125 என்னால் முடியும்! எவ்வளவு கொண்டு வர வேண்டும்? 40 00:04:52,209 --> 00:04:53,794 - என் குடும்பம், நண்பர்கள். நான் அவனிடம் கெஞ்சினேன்… - வருந்துகிறேன். 41 00:04:53,877 --> 00:04:55,295 கிரா உங்களை இந்தச் சாட்டிலிருந்து நீக்கிவிட்டார் 42 00:04:55,379 --> 00:04:57,256 …ஆனால் அதிலிருந்து தப்பிக்க வழியே இல்லை. 43 00:05:01,260 --> 00:05:05,097 எனவே, மன்னித்துவிடு, அந்த பிளாக்மெயில் செய்தவனுக்கு பணம் வேண்டாம் என்றால், 44 00:05:05,180 --> 00:05:06,640 அவனுக்கு வேறு என்னதான் வேண்டும்? 45 00:05:06,723 --> 00:05:10,686 நாங்கள் காப்புரிமை வாங்கவிருந்த வேகமாக வளரும் ஒரு புதிய வகை ஈஸ்ட் பற்றிய 46 00:05:10,769 --> 00:05:12,187 தொழில்நுட்ப ரகசியங்களைக் கேட்டான். 47 00:05:12,855 --> 00:05:15,190 - ஈஸ்டா? - அதை உருவாக்க பல ஆண்டுகள் ஆனது. 48 00:05:15,274 --> 00:05:18,485 அந்தக் காப்புரிமையின் மதிப்பு பல பத்து மில்லியன்கள் வருமானம் தரக்கூடியது. 49 00:05:18,569 --> 00:05:21,071 நீ அந்த வீடியோவைப் பார்த்தாய். அது தெளிவாக என் அலுவலகம்தான். 50 00:05:21,154 --> 00:05:22,489 என் வாழ்க்கை சீரழிந்திருக்கும். 51 00:05:22,573 --> 00:05:24,908 அதனால் அவன் கேட்டதைக் கொடுத்தேன். 52 00:05:25,742 --> 00:05:27,536 எனவே அவ்வளவுதானா? வேறு எதுவும் இல்லையா? 53 00:05:27,619 --> 00:05:30,539 சில மாதங்களுக்கு பிறகு, நார்த்ஈஸ்டர்ன் உணவு குழுமம் அதை எங்களுக்கு முன் பெற்றுவிட்டது. 54 00:05:30,622 --> 00:05:34,501 பங்குகளின் மதிப்பு சரிந்து, எங்கள் நிறுவனம் ஆட்குறைப்பு செய்கிறது, 55 00:05:34,585 --> 00:05:36,378 இந்த மாத இறுதியில் நான் வேலையை விட்டுப் போகிறேன். 56 00:05:36,962 --> 00:05:38,797 இதற்கெல்லாம் பின்னால் நார்த்ஈஸ்டர்ன் குழுமம் இருக்கும் என்று நினைக்கிறாயா? 57 00:05:38,881 --> 00:05:41,550 எனக்குத் தெரியவில்லை. நான் மோசமான நிலையில் இருப்பதுதான் எனக்குத் தெரியும். 58 00:05:41,633 --> 00:05:45,679 இதைச் சீக்கிரம் கண்டுபிடிக்கவில்லை… நானும்தான். 59 00:05:48,807 --> 00:05:50,142 ஃப்ளோரியன் - ஈஸ்ட் 60 00:05:55,731 --> 00:05:57,774 நான் இதற்கு முன்பு இப்படிச் செய்ததில்லை. 61 00:05:59,276 --> 00:06:01,320 அழகாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன். 62 00:06:01,403 --> 00:06:03,822 அது சரிதான். அந்த வாழைப்பழத்தைச் சாப்பிடு, குண்டு குரங்கே. 63 00:06:03,906 --> 00:06:05,532 அடடா, ட்ரெவர், நீ அருமையாக இருக்கிறாய். 64 00:06:08,035 --> 00:06:10,704 ரிவர்ஸ் புகைப்படத் தேடல் கமிட்டி அலுவலகம் - ஸ்டுவர்ட் 65 00:06:11,622 --> 00:06:12,539 மைகா கார்லைல் நிர்வாக இயக்குநர் 66 00:06:14,208 --> 00:06:15,542 ரெபேக்கா ஹெலிடே - "நீதிபதி ஜாமீனுக்கு நிபந்தனைகளைச் சேர்த்திருக்கிறார்" 67 00:06:15,626 --> 00:06:16,627 சீக்கிரமாக கையெழுத்திடுங்கள் 68 00:06:16,710 --> 00:06:17,544 இழிவானவனே. 69 00:06:17,628 --> 00:06:18,462 ஏஞ்சலா சூ கவுன்சில் உறுப்பினர் 70 00:06:19,505 --> 00:06:20,714 ஏஞ்சலா? 71 00:06:20,797 --> 00:06:21,924 - ஆம். - ஆம். 72 00:06:23,091 --> 00:06:24,551 ஹாய். நான்… நான் பௌலா. 73 00:06:24,635 --> 00:06:25,928 உனக்கு என் பெயர் எப்படித் தெரியும்? 74 00:06:26,011 --> 00:06:27,471 - நான் பௌலா. - என்னை எப்படிக் கண்டுபிடித்தாய்? 75 00:06:27,554 --> 00:06:29,348 - நீயும் இதில் ஒரு அங்கமா? - இல்லை, எனக்கு அதில் தொடர்பில்லை. 76 00:06:29,431 --> 00:06:30,766 …ஒரு வாடிக்கையாளர் மற்றும் எங்கள் நிறுவனம் தொடர்பான… 77 00:06:30,849 --> 00:06:31,725 ஸ்டுவர்ட் மைகா 78 00:06:31,808 --> 00:06:33,268 …ரகசியத் தகவல்களைக் கேட்டான். அது முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்பினேன். 79 00:06:33,352 --> 00:06:34,353 சுரங்க உரிமைகள். 80 00:06:34,436 --> 00:06:36,146 அவன் பணம் வாங்கவில்லை. சில வாக்குகளுக்கு என் செல்வாக்கைப் பயன்படுத்தச் சொன்னான். 81 00:06:36,230 --> 00:06:38,315 அவன் நிறைய மண்டல அனுமதிகள் கேட்டான். 82 00:06:38,398 --> 00:06:39,650 மண்டல அனுமதிகள் 83 00:06:41,276 --> 00:06:42,277 ச்சே. 84 00:06:46,865 --> 00:06:48,283 ஹேஸலின் கலை நிகழ்ச்சி இன்று, காலை 11 மணி 85 00:06:49,117 --> 00:06:50,118 அபத்தம். 86 00:06:53,163 --> 00:06:55,082 ரைக்கர்ஸ் ஐலேண்ட் நியூயார்க் நகர சிறை வளாகம் 87 00:06:57,918 --> 00:06:59,169 நீங்கள் என்ன தேடுகிறீர்கள்? 88 00:06:59,753 --> 00:07:02,506 மூச்சில் காபி வாடை வீசும் ஐந்து அடி எட்டு அங்குல உயரமுள்ள சிறைக் காவலரைத் தேடுகிறேன். 89 00:07:03,423 --> 00:07:05,175 ஓ, பார். நன்றி, கடவுளே. 90 00:07:08,011 --> 00:07:09,638 வியாழக்கிழமை 8:15. 91 00:07:13,892 --> 00:07:15,269 பாவி. 92 00:07:15,811 --> 00:07:17,688 வியாழக்கிழமை 9:17. பாருங்கள். 93 00:07:18,814 --> 00:07:20,274 இரண்டு ரெபேக்கா ஹெலிடேக்கள். 94 00:07:20,774 --> 00:07:21,817 இரண்டு வித்தியாசமான கையெழுத்துகள். 95 00:07:24,069 --> 00:07:25,195 ஓ, ஆம். 96 00:07:25,988 --> 00:07:28,782 இந்த இரண்டு பார்வையாளர்களின் பாதுகாப்பு கேமரா பதிவுகளும் எனக்கு வேண்டும். 97 00:07:28,866 --> 00:07:31,118 அதோடு வாகன நிறுத்துமிடப் பதிவும் வேண்டும். 98 00:07:31,201 --> 00:07:33,871 - அவர்களின் கார்கள், நம்பர் பிளேட் தகவல்கள் வேண்டும். - புரிந்தது. 99 00:07:33,954 --> 00:07:37,291 ஹேய். பௌலாவைப் பார்க்க ஒரே பெயரில் இரண்டு வழக்கறிஞர்கள் வந்திருக்கிறார்கள். 100 00:07:37,374 --> 00:07:39,543 - அவள் உண்மையைதான் சொல்லியிருக்கிறாள். - அடச்சே. 101 00:07:39,626 --> 00:07:42,588 டென்னிஸ் ஓநீல் ஃபோனை எடுக்கவில்லை. நேராக வாய்ஸ்மெயிலுக்குப் போகிறது. 102 00:07:42,671 --> 00:07:43,964 நான் அந்த வழக்கறிஞரைத் தேடுகிறேன். 103 00:07:44,047 --> 00:07:47,342 - நீ டென்னிஸ் வீட்டுக்குப் போ. அவனைக் கண்டுபிடி. - சரி, போகிறேன். ஆனால் ஹேய், ஜி, 104 00:07:47,426 --> 00:07:50,262 எப்போதாவது ஒரு முறையாவது, தயவுசெய்து என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும். 105 00:07:50,345 --> 00:07:51,471 தயவுசெய்து. 106 00:07:52,389 --> 00:07:53,765 பரவாயில்லை. 107 00:07:59,438 --> 00:08:01,106 இதோ என் ஜெனிஃபர் அழைக்கிறாள். 108 00:08:01,690 --> 00:08:03,358 - என்ன விஷயம்? - எல்லாம் சரிசெய்யப்பட்டிருக்க வேண்டும். 109 00:08:03,942 --> 00:08:05,944 நான் பௌலா சாண்டர்ஸைச் சந்தித்தேன். அவளுக்கு எதுவும் தெரியவில்லை. 110 00:08:06,028 --> 00:08:09,198 ஆனால் அவளிடம் டென்னிஸின் பர்னர் ஃபோன் இருந்தது, அதை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். 111 00:08:09,281 --> 00:08:12,117 ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால், அந்தப் ஃபோனில் ஒரு தொடர்பு எண் இருந்தது. 112 00:08:12,910 --> 00:08:14,453 அது பெரிய சிக்கலாகத் தெரிகிறது. 113 00:08:14,536 --> 00:08:16,163 ஒரு பைக்குள் அமுக்கி வைக்கப்பட்ட லினன் சூட் போல. 114 00:08:16,246 --> 00:08:18,749 அவன் திறமைசாலி. அதிகம் வெளியே தெரிந்திருக்காது. 115 00:08:18,832 --> 00:08:22,002 பார், இந்த வாரத்தின் மீதமுள்ள நாட்களில் நிறுவனத்தின் புத்துணர்வு பயணத்திற்காக வெளியூர் போகிறேன். 116 00:08:22,085 --> 00:08:25,005 நான் வருவதற்குள், அந்தப் பௌலாவைக் கண்டுபிடித்து, 117 00:08:25,088 --> 00:08:26,840 அந்தப் பிரச்சினையை முடித்து, ஆபத்தை நீக்கிவிடு. 118 00:08:26,924 --> 00:08:27,966 - நான் சொல்வது புரிந்ததா? - ஆம். 119 00:08:28,050 --> 00:08:30,135 - சரியான திட்டம். - அற்புதம். 120 00:08:30,219 --> 00:08:33,304 ஹேய், அதோடு எப்போதும் நீ சாப்பிடும்போது என்னை அழைக்காதே. 121 00:08:47,236 --> 00:08:48,237 இது எனக்குப் பிடித்திருக்கிறது. 122 00:08:53,242 --> 00:08:54,243 ஹேய். 123 00:08:57,204 --> 00:08:58,205 பால்ஸ். 124 00:08:59,039 --> 00:09:02,167 - நீ… நீ இங்கே வந்திருக்கிறாய். - ஆம், அதாவது… 125 00:09:02,251 --> 00:09:04,461 வரும் வழியெல்லாம், "நான் இங்கே வருவது 126 00:09:04,545 --> 00:09:07,422 பைத்தியக்காரத்தனமோ?" என்று வியந்தேன். ஆனால்… 127 00:09:08,549 --> 00:09:10,217 இன்றைய நாள் ஹேஸலைப் பற்றியது, என்னைப் பற்றியது இல்லை. 128 00:09:10,300 --> 00:09:13,095 அது உனக்கு மட்டும் தெரிந்ததில்லை. என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். எல்லோருக்கும். 129 00:09:13,178 --> 00:09:16,098 நீ இங்கே இருக்க முடியாது. பௌலா, உனக்கு அது புரிகிறதுதானே? 130 00:09:16,181 --> 00:09:18,559 நான்… அவளுக்கு சத்தியம் செய்தேன், அதனால் போக மாட்டேன். 131 00:09:18,642 --> 00:09:20,394 - எனக்குப் புரிகிறது, ஆனால், பௌலா, உன்னால்… - நான் நிரபராதி. 132 00:09:20,477 --> 00:09:21,770 நான் எதையும் செய்யவில்லை. 133 00:09:21,854 --> 00:09:23,272 சரி, நான் உன்னை நம்புகிறேன். 134 00:09:23,981 --> 00:09:28,110 நீ இங்கே இருக்கக் கூடாது என்றும் நம்புகிறேன், சரியா? 135 00:09:28,193 --> 00:09:30,404 - இது நன்றாக முடிவடையாது. - ஆம். 136 00:09:30,487 --> 00:09:31,697 உனக்கு அது தெரிகிறதுதானே? 137 00:09:32,281 --> 00:09:33,615 - அதாவது, உனக்குத் தெரிய வேண்டும். - ஆம். 138 00:09:33,699 --> 00:09:35,075 - இது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை… - துணைக்கு வருகிறாள். 139 00:09:35,158 --> 00:09:36,493 ஹேய், பௌலா. அது எப்படி… 140 00:09:38,662 --> 00:09:39,663 நீ இங்கே என்ன செய்கிறாய்? 141 00:09:39,746 --> 00:09:42,291 ஹேய், மேல். நான் உள்ளே போக வேண்டும் என்று நீ விரும்புவாய், இல்லையா? 142 00:09:43,417 --> 00:09:46,712 சரியா? ஏனென்றால், நான் பிரச்சினை செய்யலாம், நீ கஸ்டடி பெறலாம். 143 00:09:46,795 --> 00:09:49,673 கஸ்டடி பற்றி நான் நினைக்கவில்லை. நான் ஹேஸல் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். 144 00:09:50,257 --> 00:09:52,551 எல்லோருக்கும் தெரியும். அவளுக்குத் தெரியாது. 145 00:09:52,634 --> 00:09:55,345 நீ உள்ளே போனால், அவள் அதைக் கண்டுபிடித்துவிடுவாள். 146 00:09:55,429 --> 00:09:56,763 அது தவிர்க்க முடியாதது. 147 00:09:58,682 --> 00:10:00,225 நீ என்ன நடக்க வேண்டும் என்று விரும்புகிறாய்? 148 00:10:00,809 --> 00:10:03,770 அவள் அதை இப்படி தெரிந்துகொள்ள வேண்டுமா, பௌலா? 149 00:10:04,855 --> 00:10:09,860 தயவுசெய்து. அதைப் பற்றி யோசி. இப்போது என்ன செய்கிறாய் என்று யோசி. 150 00:10:26,585 --> 00:10:29,338 இல்லை, யாரும் என் லேப்டாப்பை உடைக்கவில்லை. 151 00:10:29,421 --> 00:10:31,089 அது வேலை செய்யவில்லை. அது ரொம்ப வினோதமாக இருந்தது. 152 00:10:31,673 --> 00:10:33,759 சரி, நான் காப்பீடு செய்திருப்பதில் என்ன பிரயோஜனம்… 153 00:10:34,801 --> 00:10:36,178 என்ன செய்கிறாய்? 154 00:10:38,805 --> 00:10:41,433 - நீ ஏன் இப்படி கேவலமாக இருக்கிறாய்? - என் சொந்த போங் பைப்பால் தாக்கப்பட்டேன். 155 00:10:42,184 --> 00:10:43,769 போங்கா? நீ நடுநிலைப் பள்ளியில் படிக்கிறாயா? 156 00:10:44,353 --> 00:10:46,772 என்னைக் கேலி செய்ய முயற்சிக்கும்போது நீ முக்கிய விஷயத்தைத் தவறவிடுகிறாய். 157 00:10:46,855 --> 00:10:49,024 - நான் தாக்கப்பட்டேன். - என்ன நடந்தது? 158 00:10:49,107 --> 00:10:51,818 யாரோ ஒருவள் என் அபார்ட்மெண்டுக்குள் புகுந்து, என்னைக் கொடூரமாக தாக்கிவிட்டு, 159 00:10:51,902 --> 00:10:53,529 அந்த பர்னர் ஃபோனைத் திருடினாள். 160 00:10:53,612 --> 00:10:55,072 என்னிடமிருந்து நீ திருடிய பர்னர் ஃபோனையா? 161 00:10:55,656 --> 00:10:57,074 அடக் கடவுளே. ஆம். 162 00:10:57,157 --> 00:10:59,159 சரி, இது ஒரு முடிவில்லாத குற்ற செயல்களின் சுழற்சி. 163 00:10:59,243 --> 00:11:01,912 கடவுளே, நீ உண்மையில் ரொம்ப அற்பமான விஷயங்களில் கவனம் செலுத்துகிறாய். 164 00:11:01,995 --> 00:11:03,622 சரி, அந்த ஃபோனுக்காக யாரோ ஒருவர் ஏன் என்னைத் தாக்க வேண்டும்? 165 00:11:03,705 --> 00:11:04,957 பௌலா சொன்னது உண்மையாக இருக்க வேண்டும். 166 00:11:05,040 --> 00:11:07,167 தவிர அதில் எதுவும் இல்லை. 167 00:11:07,251 --> 00:11:09,670 சரி, அதில் ஏதாவது மதிப்பு இருக்க வேண்டும், ஜெரி, ஏனென்றால்… 168 00:11:10,379 --> 00:11:11,463 என் தலையைப் பார். 169 00:11:12,047 --> 00:11:14,091 நாம் பௌலாவிடம் போய் சொல்ல வேண்டும். வா. 170 00:11:16,468 --> 00:11:18,053 அறுபத்தெட்டு சதவிகிதம் உன்னுடன் இருக்கிறேன். 171 00:11:18,136 --> 00:11:21,348 ஆனால் மற்ற 32% என் லேப்டாப்பை உடைத்ததற்காக "நாசமாய்ப் போ" என்கிறது. 172 00:11:21,932 --> 00:11:23,767 சரி, முதலில் நீதான் என்னிடம் பொய் சொன்னாய். சரியா? 173 00:11:23,851 --> 00:11:25,394 அது நிஜமாகவே வலித்தது. 174 00:11:27,604 --> 00:11:28,605 நான் மன்னிப்பு கேட்கிறேன். 175 00:11:29,231 --> 00:11:32,234 என் செய்திக்கட்டுரையில் மூழ்கியிருந்தேன், அதற்கு எவ்வளவு ஆசைப்பட்டேன் என்று உனக்கே தெரியும். 176 00:11:33,277 --> 00:11:35,153 அது நமக்கிடையே வர நான் ஒருபோதும் விட்டிருக்கக்கூடாது. 177 00:11:35,737 --> 00:11:37,823 ஆம், நீ விட்டிருக்கக்கூடாது. 178 00:11:38,699 --> 00:11:39,700 என்னை மன்னிப்பதற்கு நெருக்கமாக வந்துவிட்டாயா? 179 00:11:40,284 --> 00:11:41,493 தெரியவில்லை. நான் இப்போது அதை தவிர்க்கிறேன். 180 00:11:41,577 --> 00:11:43,203 சரி, வா. போகலாம். 181 00:11:43,287 --> 00:11:44,288 சரி. 182 00:11:46,039 --> 00:11:47,499 உன் தலையில் பேண்ட்-எய்ட் ஒட்ட வேண்டும். 183 00:12:02,181 --> 00:12:04,892 அடச்சே. ச்சே. 184 00:12:14,568 --> 00:12:16,320 கலை நிகழ்ச்சியை தவறவிட்டீர்கள் என்று நினைக்கிறேன், ம்? 185 00:12:17,321 --> 00:12:19,990 அது ரொம்ப மோசமானது. அது லூவுக்குப் போனது போல இருந்தது. 186 00:12:20,574 --> 00:12:22,576 ஆனால் அதிகம் பாப்சிகல் குச்சி சிற்பங்கள்தான். 187 00:12:26,121 --> 00:12:28,081 நம் டேட் அன்று நான் வராததற்கு வருந்துகிறேன். 188 00:12:28,165 --> 00:12:32,878 உங்களுக்குக் காரணம் தெரியும் என்று நினைக்கிறேன்? 189 00:12:33,712 --> 00:12:34,713 ஆம். 190 00:12:34,796 --> 00:12:36,381 இதுவரை அப்படி ஒன்றைக் கேட்டதில்லை. 191 00:12:36,924 --> 00:12:39,968 என் கருத்து பற்றி உங்களுக்கு அக்கறை இல்லாமல் போகலாம், ஆனால் அது ஒரு பெரிய தவறு. 192 00:12:40,928 --> 00:12:43,055 நான் உங்களை நிரபராதி என்று அனுமானிக்கிறேன். 193 00:12:43,847 --> 00:12:45,599 ஆம், நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று எப்போதும் சொல்வார்கள், 194 00:12:45,682 --> 00:12:47,309 ஆனால் நான் இதற்கு முன்பு முயற்சித்ததில்லை. 195 00:12:47,392 --> 00:12:48,602 முயற்சி செய்ததற்கு நன்றி. 196 00:12:48,685 --> 00:12:52,689 இது, வேறு எவருக்கும் நான் சொல்வதைவிட அதிகம். நிலைமை ரொம்ப மோசமாகிவிட்டது. 197 00:12:54,525 --> 00:12:55,567 என்னால் வேலைக்குப் போக முடியவில்லை. 198 00:12:56,944 --> 00:13:00,155 என் சொந்த மகளின் கலை நிகழ்ச்சியைப் பார்க்க என்னால் போக முடியவில்லை. இது… 199 00:13:00,781 --> 00:13:01,823 உங்கள் ஃபோனை அன்லக் செய்யுங்கள். 200 00:13:08,163 --> 00:13:10,123 பௌலா சாண்டர்ஸ் 201 00:13:10,207 --> 00:13:11,667 இதோ. 202 00:13:11,750 --> 00:13:16,129 எனவே கலை நிகழ்ச்சியின் ஒவ்வொரு தலைசிறந்த படைப்பையும் உங்களுக்கு ஏர்டிராப் செய்தேன். 203 00:13:16,213 --> 00:13:17,422 நன்றி. 204 00:13:17,506 --> 00:13:21,343 பாருங்கள், ஹேஸலின் ஆழமான நுணுக்கமான வாட்டர்கலர் ஓவியம் ஒன்று கூட இருக்கிறது… 205 00:13:22,719 --> 00:13:23,971 அது கிளியா? 206 00:13:24,721 --> 00:13:26,014 அது மேலொரி என்று நினைக்கிறேன். 207 00:13:26,098 --> 00:13:27,432 ஆம். 208 00:13:28,225 --> 00:13:29,434 அதே இறகுகள். 209 00:13:33,522 --> 00:13:34,523 நன்றி. 210 00:13:34,606 --> 00:13:35,691 ஆம். 211 00:13:36,191 --> 00:13:37,818 நான் போக வேண்டும். 212 00:13:37,901 --> 00:13:39,319 சரி. சீக்கிரத்தில் சந்திப்போம். 213 00:13:40,028 --> 00:13:42,447 பத்து முதல் 20 ஆண்டுகள் வரை ஆகலாம், ஆனால் எனக்காக காத்திருங்கள். 214 00:13:59,840 --> 00:14:01,717 போங் பைப்பால் தாக்கியது அருமை. 215 00:14:02,467 --> 00:14:03,594 உண்மையில் அப்படி இல்லை. 216 00:14:03,677 --> 00:14:05,679 இல்லை, நான் கட்டுரைக்காகச் சொல்கிறேன். அது ரொம்ப சினிமாத்தனமானது. 217 00:14:07,222 --> 00:14:08,473 பொறு, இன்னும் அதை எழுதுகிறாயா? 218 00:14:09,266 --> 00:14:11,518 அது சூசிக்குப் பிடித்திருக்கிறது. என் கட்டுரை பிரசுரமாக அது ஒரு வாய்ப்பாக இருக்கலாம். 219 00:14:12,853 --> 00:14:13,854 ஒரு வாய்ப்பா? 220 00:14:15,480 --> 00:14:17,316 உன் நண்பர்களைப் புண்படுத்தாத மற்ற நல்ல 221 00:14:17,399 --> 00:14:20,068 செய்திக்கட்டுரைகளை எழுதும் அளவுக்கு நீ நல்ல எழுத்தாளர் இல்லை என்று 222 00:14:20,152 --> 00:14:21,987 நிஜமாகவே நினைக்கிறாயா? 223 00:14:22,070 --> 00:14:23,155 நேரமையாகச் சொன்னால், தெரியவில்லை. 224 00:14:24,865 --> 00:14:25,991 சரி, நான் சொல்கிறேன். 225 00:14:27,451 --> 00:14:29,411 எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. 226 00:14:32,122 --> 00:14:37,169 ஏனென்றால் அந்த மோசமான குணத்தைத் தாண்டி நீ ஒரு நல்லவள். 227 00:14:39,505 --> 00:14:41,840 அதைச் செய்தால் உன்னை நீயே வெறுப்பாய். 228 00:14:47,346 --> 00:14:48,847 அது அதிர்ச்சியூட்டும் விதத்தில் கனிவாக இருந்தது. 229 00:14:49,681 --> 00:14:50,682 நல்லது. 230 00:14:51,308 --> 00:14:52,309 செய்திக்கட்டுரையை எழுத மாட்டேன். 231 00:14:53,143 --> 00:14:54,353 அப்படியா? 232 00:14:54,436 --> 00:14:55,437 ச்சே. 233 00:14:55,938 --> 00:14:57,564 உன்னால் ஒரு நல்ல வழக்கறிஞராக ஆக முடியும். 234 00:14:57,648 --> 00:14:59,525 இருந்தாலும் ஒருவேளை நீ எல்சாட்களில் தோல்வியடைவாய். 235 00:14:59,608 --> 00:15:01,777 சரி, ஜெர்-பேர், 236 00:15:02,736 --> 00:15:04,029 நீ இயல்புக்கு வந்துவிட்டாய். 237 00:15:04,112 --> 00:15:05,113 இங்கே வா. 238 00:15:05,197 --> 00:15:06,823 - நன்றி. - எனக்குத் தெரியும். 239 00:15:18,126 --> 00:15:19,545 பௌலா இங்கேதான் வசிக்கிறாரா? 240 00:15:19,628 --> 00:15:21,088 ஆம், நான் நினைக்கிறேன்… இன்னும் கொஞ்சம் அந்த வழியாக. 241 00:15:28,053 --> 00:15:30,264 - ஹேய். - ஹேய், பௌலா, உன்னைப் பயமுறுத்த விரும்பவில்லை, 242 00:15:30,347 --> 00:15:31,390 ஆனால் நேரம் போய்க்கொண்டிருக்கிறது. 243 00:15:31,473 --> 00:15:35,686 நமக்கு கஸ்டடி விசாரணை தேதி ஒதுக்கப்பட்டிருக்கிறது, அது அடுத்த வாரம். 244 00:15:36,270 --> 00:15:38,230 அடுத்த வாரமா? என்ன சொல்கிறீர்கள்? 245 00:15:38,313 --> 00:15:39,314 நான் ஜாமீனில் வெளியே இருக்கிறேன். 246 00:15:39,398 --> 00:15:41,567 அதைத்தான் நானும் வாதிட்டேன், ஆனால் அதற்கு நீதிபதி நார்லெஸ்கி, 247 00:15:41,650 --> 00:15:43,610 எப்பொழுதும் மோசமான சூழ்நிலைகள் இருக்கும், நீதிமன்றங்கள் பிஸியானவை 248 00:15:43,694 --> 00:15:44,987 என்று இன்னும் ஏதேதோ சொன்னார். 249 00:15:45,070 --> 00:15:47,573 கடவுளே. கொலைக் குற்றத்திற்காக நான் கைது செய்யப்பட்டிருக்கும்போது 250 00:15:47,656 --> 00:15:50,033 எனக்கு எப்படி நியாயமான விசாரணை நடக்கும்? 251 00:15:50,117 --> 00:15:52,160 சரி, நீ நிரபராதி, அருமையான அம்மா, 252 00:15:52,244 --> 00:15:54,663 இந்த இரண்டு விஷயங்களையும் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்துவோம். 253 00:15:54,746 --> 00:15:55,747 இன்னொரு விஷயம் இருக்கிறது. 254 00:15:56,456 --> 00:15:59,293 - பீதியடையாதே. - நான் பீதியடைகிறேன். என்ன? 255 00:15:59,376 --> 00:16:01,920 கார்லும் மேலொரியும் முழு கஸ்டடிக்கு மனு தாக்கல் செய்கிறார்கள். 256 00:16:02,004 --> 00:16:03,922 இனி இது ஐடஹோவைப் பற்றியது இல்லை. 257 00:16:04,006 --> 00:16:06,675 அவர்கள் வெற்றி பெற்றால், ஹேஸலை நீ பார்ப்பதை அவர்கள் கட்டுப்படுத்துவார்கள். 258 00:16:06,758 --> 00:16:08,635 அவர்களால் அதைச் செய்ய முடியாது! 259 00:16:08,719 --> 00:16:10,804 அவர்கள் முயற்சி செய்யலாம், நாம் முயற்சி செய்து அவர்களை நிறுத்துவோம். 260 00:16:10,888 --> 00:16:13,140 நாம் இதைக் கடந்து வருவோம். சரியா? சீக்கிரம் உன்னிடம் பேசுகிறேன். 261 00:16:13,724 --> 00:16:15,017 என்னவொரு மோசமான நிலை. 262 00:16:18,896 --> 00:16:19,897 ஹாய். 263 00:16:19,980 --> 00:16:21,732 மன்னியுங்கள், உங்களை அழைக்க முயற்சித்தோம். 264 00:16:22,524 --> 00:16:24,151 - ஹேய். - என்ன? ஹாய். 265 00:16:24,234 --> 00:16:25,319 வுட்க்ளென் அபார்ட்மெண்ட்கள் 266 00:16:25,402 --> 00:16:26,403 நீங்கள் நலமா? 267 00:16:33,035 --> 00:16:35,329 ஹேய். அந்தக் காதலனின் வீட்டில் இருக்கிறேன். 268 00:16:35,913 --> 00:16:37,956 அவனுடைய எந்த அறிகுறியும் இல்லை, ஆனால் இந்த இடம் வினோதமாக இருக்கிறது. 269 00:16:38,040 --> 00:16:40,417 - எப்படி வினோதமாக? - ஒரு உடைந்த ஜன்னல் இருக்கிறது, 270 00:16:40,501 --> 00:16:44,463 ஒரு உடைந்த கற்றாழை இருக்கிறது, யாருக்கோ பைரேட்ஸ் பூட்டியைப் பிடித்திருப்பதாகத் தெரிகிறது. 271 00:16:44,546 --> 00:16:48,050 பௌலாவைப் போய் பார்த்த போலி வழக்கறிஞரின் படமும் வண்டி எண்ணும் எனக்குக் கிடைத்தன. 272 00:16:48,133 --> 00:16:50,427 - முகவரி கிடைத்ததா? - நான் இப்போது அங்கே போய்க்கொண்டிருக்கிறேன். 273 00:16:50,511 --> 00:16:51,845 ஆம், அந்தக் காரை தேடச் சொல்லி செய்தி அனுப்பியிருக்கிறேன். 274 00:16:52,763 --> 00:16:55,682 இந்த வழக்கில் ஏதோ தவறு இருப்பதாக எனக்குத் தோன்றியது. நான் என் உள்ளுணர்வுகளை நம்ப வேண்டும். 275 00:16:55,766 --> 00:16:56,934 அங்கே போனதும் உன்னை அழைக்கிறேன். 276 00:17:00,521 --> 00:17:01,855 உன் தலைக்கு என்ன ஆனது? 277 00:17:02,439 --> 00:17:04,525 - போங் பைப்பால் தாக்கப்பட்டேன். - பெரிய, சலிப்பான கதை. 278 00:17:04,608 --> 00:17:06,443 சலிப்பானது இல்லை, உண்மையில் வேதனையானது. 279 00:17:06,527 --> 00:17:08,987 தாக்கப்பட்டிருக்கிறான். யாரோ அந்த பர்னர் ஃபோனை திரும்பப் பெற முயற்சித்திருக்கிறார்கள். 280 00:17:09,070 --> 00:17:11,365 - அடக் கடவுளே. - என்னால் அதை ஹேக் செய்ய முடிந்தது. 281 00:17:11,448 --> 00:17:13,659 நான் உங்களிடம் பொய் சொன்னேன். மன்னித்துவிடுங்கள். 282 00:17:14,242 --> 00:17:17,496 உங்களை நம்பாததற்கு நானும் ரொம்ப வருந்துகிறேன். 283 00:17:17,579 --> 00:17:19,164 பொறு, நீ அந்த ஃபோனை அன்லாக் செய்தாயா? அதில் என்ன இருந்தது? 284 00:17:19,248 --> 00:17:22,334 ஒன்றுமில்லை, யேலில் வேலை செய்யும் யாரோ ஒரு பெண்ணின் முகவரி. 285 00:17:22,416 --> 00:17:24,086 அவள் யாரையும் சந்தித்ததாக ஞாபகம் இல்லை என்று சொன்னாள். 286 00:17:24,169 --> 00:17:25,546 அதாவது, அவள் அநேகமாக பொய் சொல்லலாம். 287 00:17:25,628 --> 00:17:28,089 அவள் டென்னிஸின் ஃபோனில் இருந்தால், அவள்… 288 00:17:28,173 --> 00:17:29,716 கண்டிப்பாக அவள் அவனுடைய இலக்குகளில் ஒருத்தியாக இருப்பாள். 289 00:17:29,800 --> 00:17:31,260 டென்னிஸ் யார்? 290 00:17:32,052 --> 00:17:33,762 நீங்கள் மேலே வர வேண்டும். 291 00:17:34,429 --> 00:17:35,597 இவன்தான் டென்னிஸ் ஓநீல். 292 00:17:36,974 --> 00:17:40,894 டென்னிஸ் ட்ரெவரைக் கொன்றான், ஏனென்றால் அவன் என்னிடம் செய்த சின்ன மோசடியால் 293 00:17:40,978 --> 00:17:43,981 அவர்கள் இருவரும் சேர்ந்து செய்துகொண்டிருந்த பெரிய விஷயத்துக்கு ஆபத்து ஏற்பட்டது. 294 00:17:44,064 --> 00:17:45,232 பெரிய விஷயம் என்ன? 295 00:17:45,315 --> 00:17:49,027 எனவே, டென்னிஸ், பாதிக்கப்படக்கூடிய, உயர் மதிப்புள்ள நபர்களை அடையாளம் கண்டுபிடிப்பான், 296 00:17:49,111 --> 00:17:51,029 பிறகு ட்ரெவர் அவர்களை அணுகுவான் என்று நினைக்கிறேன். 297 00:17:51,113 --> 00:17:53,448 அவன் அவர்களுக்கு டிஎம் அனுப்புவான், அவர்களிடம் வலிந்து பேசுவான், என்னவோ. 298 00:17:53,532 --> 00:17:55,117 அவர்கள் வீடியோ சேட் செய்வார்கள், 299 00:17:55,200 --> 00:17:57,995 பிறகு அவர்களுக்கு சமரசம் செய்யக்கூடிய பாலியல் வீடியோ கிடைக்கும், 300 00:17:58,078 --> 00:18:01,832 பிறகு டென்னிஸ் அவர்கள் எல்லோரையும் மிரட்ட அதைப் பயன்படுத்துவான். 301 00:18:01,915 --> 00:18:03,584 - எவ்வளவுக்கு? - அதுதான் விஷயம். 302 00:18:03,667 --> 00:18:04,793 அது ஒருபோதும் பணத்தைப் பற்றியது இல்லை. 303 00:18:04,877 --> 00:18:06,670 எனவே, இவனிடம் பீட்சா மாவுக்கான ஒரு வகையான 304 00:18:06,753 --> 00:18:10,090 விசேஷ ஈஸ்டுக்கான காப்புரிமையை விட்டுக்கொடுக்கும்படி அழுத்தம் கொடுத்து, 305 00:18:10,174 --> 00:18:12,050 பிறகு அதை ஒரு போட்டியாளருக்கு விற்றிருக்கிறார்கள். 306 00:18:12,134 --> 00:18:15,804 - மன்னிக்கவும், பீட்சாவுக்காக அவனை மிரட்டினார்களா? - ஆம், எல்லா மாதிரியான விஷயங்களும். 307 00:18:15,888 --> 00:18:19,183 எனவே இந்தப் பெண் அமகேன்செட் நகர மண்டல வாரியத்தில் இருந்திருக்கிறாள், 308 00:18:19,266 --> 00:18:22,853 ஒரு நீர் நிறைந்த நிலத்தில் ஒரு இரசாயன ஆலையை கட்டுவதற்கு மிரட்டி அனுமதி வாங்கியிருக்கிறார்கள். 309 00:18:22,936 --> 00:18:27,107 இவனிடம் வடக்கு டகோட்டாவில் சுரங்க உரிமைகளை கொடுக்க கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். 310 00:18:27,191 --> 00:18:31,278 இவன் ஓஹயோவில் ஒரு தேர்தலில் ஒரு வேட்பாளரை தன்னுடைய தொழிற்சங்கத்தை ஆதரிக்க வைத்திருக்கிறான். 311 00:18:31,361 --> 00:18:36,116 இது சில எப்ஸ்டீன் கோப்பு, ஜோ ரோகன் அளவிலான சதி போல இருக்கிறது. 312 00:18:36,700 --> 00:18:39,453 எனவே, டென்னிஸும் ட்ரெவரும் இதையெல்லாம் செய்தார்களா? 313 00:18:39,536 --> 00:18:40,621 நான் அப்படி நினைக்கவில்லை, 314 00:18:40,704 --> 00:18:45,292 ஏனென்றால் ட்ரெவர் ஒரு கேம்பாய்தான், டென்னிஸ், ஒரு இடைத்தரகர் போன்றவன் என்று நினைக்கிறேன். 315 00:18:45,375 --> 00:18:46,877 அவர்கள் யாரோ பெரிய ஒருவனுக்கு வேலை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். 316 00:18:46,960 --> 00:18:48,879 - யாரைப் போல? - அதுதான் ரொம்ப வெறுப்பாக இருக்கிறது. 317 00:18:48,962 --> 00:18:50,714 எனக்குத் தெரியாது. 318 00:18:50,797 --> 00:18:53,926 நான் நிரபராதி என்று அந்த நபருக்கு நிச்சயமாகத் தெரியும். 319 00:18:54,009 --> 00:18:56,428 அவர்களால் என்னை இதிலிருந்து வெளியே கொண்டுவர முடியும், ஆனால் மண்டல அனுமதிகள், 320 00:18:56,512 --> 00:18:59,264 சுரங்க உரிமைகள், ஈஸ்ட் இதையெல்லாம் வைத்து யார் பயனடைவார்கள்? 321 00:18:59,348 --> 00:19:01,892 நான் அவர்களிடம் பேசியபோது இவர்கள் யாருக்கும் எதுவும் தெரியாது. 322 00:19:03,060 --> 00:19:04,978 நீங்கள் ஜெரியின் யேல் பெண்ணிடம் பேசவில்லை. 323 00:19:05,062 --> 00:19:06,730 அவள் முகவரி என்ன? உன்னிடம் இருக்கிறதா? 324 00:19:06,813 --> 00:19:07,856 இருக்கிறது, ஆம். 325 00:19:07,940 --> 00:19:10,442 அருமை. நான் இப்போதே போகிறேன். 326 00:19:10,526 --> 00:19:13,445 ஹேய், நாங்கள் உங்களோடு வருகிறோம். நீங்கள் இதைத் தனியாக செய்யப் போவதில்லை. 327 00:19:14,279 --> 00:19:16,323 ஆம். நூறு சதவீதம். கண்டிப்பாக. 328 00:19:16,823 --> 00:19:18,075 உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். 329 00:19:18,617 --> 00:19:21,328 அதைச் செய்வோம், கையை வையுங்கள். மூன்று எண்ணும்போது "பௌலா நிரபராதி" என்று சொல்லுங்கள். 330 00:19:21,411 --> 00:19:23,205 ஒன்று, இரண்டு, மூன்று. 331 00:19:23,288 --> 00:19:24,498 பௌலா நிரபராதி. 332 00:19:25,082 --> 00:19:26,542 எனக்கு அது பிடிக்கவில்லை. இனி அப்படிச் செய்ய வேண்டாம். 333 00:19:47,396 --> 00:19:50,399 நீங்கள் நீச்சலடிப்பது பிடித்திருக்கிறது, ஆனால் இடது குதிகாலை இழுக்கிறீர்கள், சும்மா சொன்னேன். 334 00:19:51,525 --> 00:19:52,651 நான் உங்களுக்கு உதவலாமா? 335 00:19:52,734 --> 00:19:54,987 - நிச்சயமாக என்று நம்புகிறேன். - என்னை ஞாபகம் இருக்கிறதா, ஜாய்ஸ்? 336 00:19:55,070 --> 00:19:57,865 உங்கள் அலுவலகத்திற்கு வந்து, நீங்கள் ஒருவனை சந்தித்தீர்களா என்று கேட்டேன். 337 00:19:57,948 --> 00:20:00,200 ஆம், இங்கே இருக்கும், இவன். 338 00:20:00,284 --> 00:20:01,827 டென்னிஸ் ஓநீல். 339 00:20:02,870 --> 00:20:04,663 எதுவும் ஞாபகமில்லாதது எனக்கு ஞாபகம் இருக்கிறது. 340 00:20:04,746 --> 00:20:05,914 தயவுசெய்து. சரி. 341 00:20:05,998 --> 00:20:07,875 என் தோழி சிறைக்குப் போகலாம். 342 00:20:08,458 --> 00:20:10,377 அவருடைய மகளின் கஸ்டடியை இழக்கலாம். 343 00:20:10,878 --> 00:20:12,045 இவர் இங்கே நிஜ சிக்கலில் இருக்கிறார். 344 00:20:12,129 --> 00:20:13,589 அப்படியா, அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 345 00:20:13,672 --> 00:20:16,341 உண்மையில், இருக்கலாம். ஏனென்றால் நாம் ஒரே நிலைமையில் இருக்கலாம். 346 00:20:17,426 --> 00:20:19,011 நீங்கள் யார்? 347 00:20:19,595 --> 00:20:20,679 நான் பாதுகாவலரை அழைக்க வேண்டுமா? 348 00:20:21,597 --> 00:20:22,598 இல்லை, வெறும்… 349 00:20:22,681 --> 00:20:24,266 சரி, நீங்கள் இப்போது ஒரு நல்ல மனிதராக இருந்து, 350 00:20:24,349 --> 00:20:26,268 நீங்கள் என்ன பேசினீர்கள் என்று எங்களிடம் சொல்லாதது 351 00:20:26,351 --> 00:20:28,145 ரொம்ப வெறுப்பாக இருக்கிறது. ரொம்ப எளிமையானது. 352 00:20:28,812 --> 00:20:31,356 - அது உன் வேலை இல்லை. - எனவே நீங்கள் அவரை சந்தித்தீர்களா? 353 00:20:31,440 --> 00:20:33,275 - இது அபத்தமானது. - எங்களிடம் சொல்லுங்கள். 354 00:20:33,358 --> 00:20:36,153 - என்னைத் தனியாக விடுங்கள். - கடவுளே, சொல்லித் தொலையுங்கள்! 355 00:20:38,155 --> 00:20:39,656 இந்த உரையாடல் முடிந்தது. 356 00:20:42,242 --> 00:20:45,162 என்னைப் புறக்கணிக்க முடியும் என்று ஏன் எல்லோரும் நினைக்கிறார்கள்? ம்? 357 00:20:45,245 --> 00:20:48,123 நான் புறக்கணிக்கக்கூடிய ஏதோவொரு தோல்வியடைந்தவன் போல. 358 00:20:49,958 --> 00:20:51,168 - பார்த்துவிடுகிறேன். - ரூடி. 359 00:20:51,251 --> 00:20:52,753 - என்ன? - ஹேய். 360 00:20:53,420 --> 00:20:54,421 ஹேய்! 361 00:20:54,505 --> 00:20:56,673 - என்னைப் புறக்கணிக்க முடியாது, சரியா? ஹேய்! - ரூடி! 362 00:20:57,883 --> 00:20:59,176 - வேண்டாம். - நடப்பது நடக்கட்டும். 363 00:20:59,259 --> 00:21:00,636 ரூடி, வேண்டாம்! 364 00:21:04,264 --> 00:21:07,851 நான் 6'5" உயரம், கட்டுமஸ்தாக இருக்கிறேன். 365 00:21:07,935 --> 00:21:09,269 ரூடி! 366 00:21:09,353 --> 00:21:11,188 நீங்கள் என்ன பேசினீர்கள் என்று எங்களுக்குத் தெரிய வேண்டும், சரியா? 367 00:21:11,271 --> 00:21:12,356 நீங்கள் சொல்லியாக வேண்டும். 368 00:21:12,439 --> 00:21:14,900 சொல்லுங்கள் அல்லது ஏதாவது மோசமான செயலைச் செய்யப் போகிறேன், சரியா? 369 00:21:14,983 --> 00:21:16,818 உனக்கு என்ன பிரச்சினை? 370 00:21:16,902 --> 00:21:19,988 என்னைச் சோதிக்காதீர்கள், ஜாய்ஸ். என்னைச் சோதிக்காதீர்கள், சரியா? 371 00:21:20,572 --> 00:21:21,865 உங்கள் கதையை முடித்துவிடுவேன். 372 00:21:21,949 --> 00:21:25,410 சரி, என்னிடமிருந்து விலகி இரு. சரியா? 373 00:21:29,540 --> 00:21:30,541 பேச ஆரம்பியுங்கள். 374 00:21:32,501 --> 00:21:33,585 நான்… 375 00:21:34,545 --> 00:21:37,422 நான் வேலையில் சில எல்லைகளைத் தாண்டினேன். 376 00:21:37,923 --> 00:21:39,633 அதை அவன் கண்டுபிடித்துவிட்டான், 377 00:21:40,676 --> 00:21:43,971 ஒருவனை யேலில் அனுமதிக்காவிட்டால் என்னை அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டினான். 378 00:21:44,054 --> 00:21:45,055 அவ்வளவுதான். 379 00:21:45,138 --> 00:21:46,682 அவன் பெயர் என்ன? 380 00:21:47,724 --> 00:21:49,226 வாண்டர்வால். 381 00:21:50,185 --> 00:21:52,104 சரியா? பிளேக் வாண்டர்வால். 382 00:21:57,234 --> 00:21:58,610 ஆஹா. 383 00:21:59,778 --> 00:22:00,863 ஆஹா. 384 00:22:01,905 --> 00:22:02,906 இங்கிருந்து போவோம். 385 00:22:02,990 --> 00:22:04,741 உங்கள் கதையை முடித்துவிடுவேன். 386 00:22:04,825 --> 00:22:08,161 - அதை உன் கல்லறையில் எழுதப் போகிறேன். - ஆம், அல்லது அலுவலக கழிப்பறைக்கு மேலே. 387 00:22:08,245 --> 00:22:09,788 நான் அக்வாமேன் போல உணர்கிறேன். 388 00:22:10,539 --> 00:22:12,457 பிளேக் வாண்டர்வால் பெயர் கிடைத்துவிட்டது. 389 00:22:12,541 --> 00:22:15,711 இப்போது பிளேக் வாண்டர்வால் யார் என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும். 390 00:22:19,339 --> 00:22:20,757 பிளேக் வாண்டர்வால் 391 00:22:24,428 --> 00:22:26,471 பிளேக் வாண்டர்வால் பெற்றோர்கள் வில்லியம் வாண்டர்வால் இரங்கல் அறிவிப்பு 392 00:22:27,723 --> 00:22:28,765 அன்பு நினைவாக வில்லியம் வாண்டர்வால் 393 00:22:28,849 --> 00:22:30,851 அவருடைய மனைவி சிசிலியா 394 00:22:30,934 --> 00:22:32,102 அம்மா - சிசிலியா வாண்டர்வால் 395 00:22:32,186 --> 00:22:33,228 சூட்டர் குழுமத்தின் மூத்த துணைத் தலைவர் 396 00:22:38,692 --> 00:22:39,693 நிதி ஆபத்து மேலாண்மை நிறுவனம் 397 00:22:41,570 --> 00:22:43,280 ஆபத்து குறித்த ஆலோசனை - நிதி அறிக்கையிடல் - தொழில்நுட்ப போக்குகள் 398 00:22:43,363 --> 00:22:46,241 கண்ணோட்டத்தின் சக்தி மக்கள் - எங்கள் குழு 399 00:22:46,325 --> 00:22:47,659 சிசிலியா வாண்டர்வால் மூத்த துணைத் தலைவர் 400 00:22:49,328 --> 00:22:50,329 வாடிக்கையாளர்கள் 401 00:22:50,996 --> 00:22:51,997 பைரோன் சுகாதார குழுமம் சன்செட் ஃபிராங்க்ளின் 402 00:22:52,080 --> 00:22:53,373 நார்த்ஈஸ்டர்ன் உணவுக் குழுமம் பெல்கோர்ட் ப்ளூபிரிண்ட் 403 00:22:57,544 --> 00:23:00,297 புதியது என்ன கார்ப்பரேட் தலைமைப் புத்துணர்வு நிகழ்வு 404 00:23:04,134 --> 00:23:05,427 செவ்வாய், அக்டோபர் 28 405 00:23:05,511 --> 00:23:06,803 கோல்ஃப் நேரம் மாலை 3 மணி. 406 00:23:06,887 --> 00:23:08,180 செவ்வாய் அக்டோபர் 28 பிற்பகல் 1:57 மணி 407 00:23:09,389 --> 00:23:11,016 கார்ப்பரேட் புத்துணர்வு நிகழ்வா? பெட்ஃபோர்ட் ஹில்ஸ் 408 00:23:12,392 --> 00:23:13,310 பெட்ஃபோர்ட் ஹில்ஸில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் 409 00:23:13,393 --> 00:23:15,312 சரியான அடையாள ஆவணம் இல்லாமல் நுழைவு அனுமதி இல்லை 410 00:23:16,855 --> 00:23:18,774 பெட்ஃபோர்ட் ஹில்ஸ் கோல்ஃப் கிளப் 411 00:23:43,757 --> 00:23:45,217 நன்றி, சார். தொடர்பில் இருப்போம். 412 00:23:46,844 --> 00:23:49,680 பேக்ஸ், சிவப்பு ப்ரியஸின் உரிமையாளரிடம் பேசினேன், 413 00:23:49,763 --> 00:23:52,516 அவர் ரொம்ப வயதானவர், கண்புரை கொண்டவர். 414 00:23:53,100 --> 00:23:55,727 ஏப்ரல் முதல் கார் தன் கேரேஜில் இருப்பதாக அவர் நினைத்திருக்கிறார். 415 00:23:55,811 --> 00:23:59,189 எனவே யாரும் திருடப்படாது என்று நினைத்த ஒரு காரை அவள் திருடியிருக்கிறாள். 416 00:23:59,273 --> 00:24:00,274 புத்திசாலித்தனம். 417 00:24:00,357 --> 00:24:01,942 அவள் புத்திசாலியாக இருக்கலாம், ஆனால் நாம் அதிர்ஷ்டசாலிகள். 418 00:24:02,025 --> 00:24:05,362 த்ரோக்ஸ் நெக்கில் ஈ-ஸிபாஸ் வழியாக அந்த ப்ரியஸ் இப்போது போவதாக தகவல் கிடைத்தது. 419 00:24:05,445 --> 00:24:07,030 இப்போது அந்தப் பாலத்தின் மீது ஏறுகிறேன். 420 00:24:07,114 --> 00:24:08,532 நல்லது. அவளைக் கண்டுபிடித்ததும் எனக்குத் தெரியப்படுத்து. 421 00:26:27,963 --> 00:26:29,339 அசையாதே! காவல்துறை! 422 00:26:30,924 --> 00:26:32,259 துப்பாக்கியைக் கீழே போடு. 423 00:26:34,636 --> 00:26:36,013 உடனே, அல்லது உன்னைச் சுட்டுவிடுவேன். 424 00:28:05,310 --> 00:28:07,312 வசனத் தமிழாக்கம் அருண்குமார்