1 00:00:11,470 --> 00:00:12,513 இது ஒரு கற்பனைக் கதை. 2 00:00:12,596 --> 00:00:14,515 எந்தவொரு வாழும் அல்லது வாழ்ந்த நபர், நிகழ்வு அல்லது 3 00:00:14,598 --> 00:00:16,433 இடத்தோடு ஒத்திருந்தால் அது முற்றிலும் தற்செயலானது. 4 00:00:22,356 --> 00:00:23,857 அடுத்து காலி லெவி விஷயத்தில், 5 00:00:23,941 --> 00:00:28,570 அந்த இளம்பெண் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக இன்னமும் ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாள். 6 00:00:28,654 --> 00:00:30,489 முன்னதாக, தன்னுடைய மகளை விடுவிப்பதற்கான 7 00:00:30,572 --> 00:00:34,284 இராஜதந்திர முயற்சிகளில் முன்னேற்றம் அல்லது 8 00:00:34,368 --> 00:00:36,662 பின்னடைவு பற்றி ஓர்னா லெவியுடன் பேசினோம். 9 00:00:36,745 --> 00:00:38,914 ஓர்னா லெவி, குட் ஈவினிங். 10 00:00:39,456 --> 00:00:42,543 - குட் ஈவினிங், சிவான். - "குட் ஈவினிங், சிவான்..." 11 00:00:48,006 --> 00:00:50,133 காலி தனியாக இல்லை 12 00:00:55,305 --> 00:00:57,140 வ்வோ, பார்த்து வா! 13 00:00:57,224 --> 00:00:59,726 - மன்னித்துவிடு... - கவனமாகப் பார்த்துப் போ! 14 00:02:06,543 --> 00:02:11,632 ஹாய், நான் யகீர் என்பவரைப் பார்க்க வேண்டும். 15 00:02:11,965 --> 00:02:13,217 அவர் இங்கே வேலை செய்கிறாரா? 16 00:02:13,425 --> 00:02:15,594 - அவர் அங்கே இருக்கிறார். - நன்றி. 17 00:02:15,677 --> 00:02:19,306 அது எஃபி, மோஸி, பாஸ்... 18 00:02:19,973 --> 00:02:22,184 - இவனுடைய பெயரை மறந்துவிட்டேன்... - டுடி. 19 00:02:22,851 --> 00:02:24,019 சரிதான், டுடி. 20 00:02:24,937 --> 00:02:27,231 காலி உளவுத்துறையில் வேலை செய்தது எனக்குத் தெரியும், ஆனால்... 21 00:02:27,314 --> 00:02:30,817 சரியாக எங்கே என்றுதான் தெரியாது... அதாவது, அது ரகசியமானது என்று தெரியும்... 22 00:02:31,360 --> 00:02:33,111 உங்களால் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்... 23 00:02:33,403 --> 00:02:36,114 எனக்கென்ன கவலை. அவர்கள் எல்லோரும் எப்படியோ நாசமாய்ப் போகட்டும். 24 00:02:36,406 --> 00:02:40,452 அது சிறப்பு அதிரடிப்படை பிரிவு. சைபர், தொழில்நுட்பம், செயல்பாடு. 25 00:02:40,536 --> 00:02:45,457 அவர்கள், அதே பிரிவில் இருந்தார்களா? 26 00:02:45,541 --> 00:02:48,544 ஆம், இல்லை. காலியும் நானும் "கட்டுப்பாட்டு அறையில்", 27 00:02:48,627 --> 00:02:50,671 பின்னணியில், ஏசி அறையில் வேலை செய்தோம். 28 00:02:50,754 --> 00:02:53,799 இவர்கள் "களத்தில்', அங்கே வேலை செய்தார்கள். 29 00:02:54,132 --> 00:02:55,801 அவர்கள் நால்வருமே ரிசர்வ் படையில் இருந்தார்கள். 30 00:02:55,884 --> 00:02:57,928 நீங்கள் அவர்களில் யாருடனாவது தொடர்பில் இருக்கிறீர்களா? 31 00:02:58,220 --> 00:03:04,184 காலியின் நண்பர்கள் "காலியை வீட்டுக்குக் கூட்டி வாருங்கள்" என்று பேசுவது போன்ற ஒரு பிரச்சார 32 00:03:04,268 --> 00:03:07,896 - வீடியோவைத் தயாரிக்கிறோம். - அவர்களை நம்ப முடியாது. 33 00:03:09,523 --> 00:03:13,610 - "நம்ப முடியாது" என்றால்? - வீடியோவில் உருக்கமாக பேசும் ரகம் இல்லை. 34 00:03:15,320 --> 00:03:18,532 ஹடாஸ் உங்களிடம் சொன்னானா என்று தெரியாது, ஆனால் காலி அங்கே சேவை செய்த அந்த வருடம் 35 00:03:18,615 --> 00:03:19,700 நான்தான் அவளுடைய கமாண்டர். 36 00:03:19,783 --> 00:03:22,327 - மூன்று வருடங்கள். - இல்லை. 37 00:03:22,411 --> 00:03:24,204 இரண்டு வருட நேரடி ராணுவப் பணி, ஒரு வருட ஒப்பந்தப் பணி. 38 00:03:24,496 --> 00:03:27,749 இல்லை, அவள் நேரடி ராணுவப் பணியில் இருந்தபோதே அவளை வெளியேற்றிவிட்டார்கள் என நினைக்கிறேன். 39 00:03:27,833 --> 00:03:28,750 அவள் உங்களிடம் சொல்லவில்லையா? 40 00:03:29,376 --> 00:03:31,211 உறுதியாக காலியைப் பற்றித்தான் பேசுகிறீர்களா? 41 00:03:31,461 --> 00:03:35,632 முதலில் அவளை முகாம் வேலைகளை செய்ய வைத்தார்கள், பிறகு அவளை வெளியேற்றிவிட்டார்கள். 42 00:03:36,800 --> 00:03:39,136 - ஏன்? அவள் என்ன செய்தாள்? - வழிவிடுங்கள்... 43 00:03:39,219 --> 00:03:40,804 உட்காருங்கள், சொல்கிறேன். 44 00:03:41,221 --> 00:03:45,184 சில மாதங்களுக்கு ஒருமுறை, அந்தப் படைப்பிரிவு ஒரு கூட்டு நடவடிக்கையை நடத்தும். 45 00:03:46,185 --> 00:03:48,854 பல ஆண்டுகளாக அதே நடைமுறைதான். 46 00:03:48,937 --> 00:03:51,899 அதோடு அது ராணுவம் இல்லையா? எல்லாரும் ஒரு எந்திரம் போல செயல்படுவார்கள். 47 00:03:52,149 --> 00:03:55,819 பிறகு காலி வந்தாள், நடக்கும் வேலைகளை பார்த்துவிட்டு 48 00:03:55,903 --> 00:03:59,406 "ஹேய், அந்த ஏர் சப்போர்ட் ஏன் அந்தப் பாதையில் போகிறது?" என்று கேட்பாள். 49 00:04:00,407 --> 00:04:01,325 "ஏன் அந்த நேரத்தில்?" 50 00:04:01,408 --> 00:04:05,579 "எரிபொருள், பார்வை திறனை கருத்தில்கொண்டு நடத்தும் வழக்கமான நடைமுறைதான்" என்று நாங்கள் விளக்கினோம். 51 00:04:05,662 --> 00:04:08,790 அவள், "சரி" என்று சொல்லிவிட்டு, அந்த படைப்பிரிவின் வானிலை ஆய்வாளரிடம் பேசிவிட்டு 52 00:04:08,874 --> 00:04:10,584 திரும்பி வந்து, "அந்நேரத்தில், 53 00:04:10,918 --> 00:04:16,423 பின்காற்று வீசும், எரிபொருள் மிச்சமாகும், பாதுகாப்பான பாதையில் போகலாம்" என்றாள். 54 00:04:16,632 --> 00:04:19,551 "அது பிரார்த்தனைக்கான நேரம், எனவே சிலர்தான் நம்மை கவனிப்பார்கள்." 55 00:04:21,094 --> 00:04:24,515 இருபது வருடங்களாக ஒரே விஷயத்தைச் செய்தோம், பிறகு காலி வந்தாள், பூம்! 56 00:04:24,598 --> 00:04:27,142 மாயாஜாலம் போல, எல்லாம் கச்சிதமாக அமைந்தது, அருமையாக வேலை செய்தது. 57 00:04:27,226 --> 00:04:31,480 எங்கள் கமாண்டர் அதைத் தன்னுடைய திட்டமாகச் சொல்லி 58 00:04:31,563 --> 00:04:33,148 எல்லா நற்பெயரையும் பெற்றதை தவிர. 59 00:04:34,066 --> 00:04:36,985 அதோடு காலி... அது அவளைக் கோபப்படுத்தியது. 60 00:04:37,069 --> 00:04:41,156 அவள் போய் படைப்பிரிவு கமாண்டரிடம் அதைச் சொன்னதால், கீழ்படியாமைக்காக அவளை வெளியேற்றிவிட்டார்கள். 61 00:04:42,324 --> 00:04:44,910 கேளுங்கள், அவள் எனக்கு ரொம்ப முக்கியம். 62 00:04:44,993 --> 00:04:48,497 அவள் மோஸிடம் வேலை செய்ய தொடங்கியதை நான் கேள்விப்பட்ட பிறகுதான் நாங்கள் கடைசியாக பேசினோம். 63 00:04:48,580 --> 00:04:51,959 அவனைப் போன்றவர்களிடம் வேலை செய்வது நல்ல யோசனை இல்லை என்று அவளை எச்சரித்தேன். 64 00:04:52,334 --> 00:04:56,129 - அவள் யாருக்காக வேலை செய்ய தொடங்கினாள்? - மோஸ் அடர், 65 00:04:56,213 --> 00:04:59,716 லெப்டினென்ட் கர்னல், அவனையும் படைப்பிரிவில் இருந்து வெளியேற்றினார்கள். 66 00:04:59,800 --> 00:05:01,301 அவனை எதற்காக வெளியேற்றினார்கள்? 67 00:05:01,677 --> 00:05:06,890 படைப்பிரிவின் வசதிகளைப் பயன்படுத்தி எல்லை தாண்டி போதைப்பொருள் கடத்தியதாக 68 00:05:06,974 --> 00:05:10,561 ஒரு பேச்சு இருக்கிறது. புரிகிறதா? 69 00:05:10,644 --> 00:05:14,356 அவனுக்குத்தான் அவள் வேலை செய்தாள். பிறகு அவர்கள் ஜோடி சேர்ந்துவிட்டார்கள். 70 00:05:15,023 --> 00:05:16,984 - இல்லை. - ஆம். 71 00:05:17,067 --> 00:05:19,987 ஐம்பது வயதுக்காரன் இருபது வயது பெண்ணுடன் என்ன செய்கிறான்? 72 00:05:20,195 --> 00:05:25,284 நான் அதையும் அவளிடம் சொன்னேன், ஆனால் அவள்... அதை சரியாக எடுத்துக்கொள்ளவில்லை. 73 00:05:25,367 --> 00:05:28,704 என்னை அவளைத் தொந்தரவு செய்யும் அயோக்கியனாக என்னைப் பார்த்தாள். 74 00:05:30,414 --> 00:05:34,793 இப்போது அவளுடைய நிலையைப் பாருங்கள். இது எதேச்சையாக நடந்தது போல தெரியவில்லைதானே? 75 00:05:34,877 --> 00:05:36,962 அவர்களைக் கண்டுபிடிக்க எனக்கு உதவ முடியுமா? 76 00:05:37,045 --> 00:05:40,883 அவர்களுடைய ஃபோன் எண்களைக் கண்டுபிடித்து, விடாமல் அழைத்தேன், அவர்களுடைய 77 00:05:40,966 --> 00:05:44,094 வீட்டுக்குப் போனேன், குடும்பத்திடம் பேசினேன், ஆனால் அவர்களை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. 78 00:05:44,178 --> 00:05:46,180 யாரை, எங்கே... எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. 79 00:05:46,471 --> 00:05:50,309 இந்த மோஸ் பற்றி தெரிந்தவர்கள் யாராவது இருக்க வேண்டும். 80 00:05:50,392 --> 00:05:53,729 இல்லை, யாரும் இல்லை. அவன் வெளியே வந்துவிட்டானா என்று கூட எனக்குத் தெரியாது. 81 00:05:54,146 --> 00:05:58,275 - எங்கிருந்து வெளியே, இராணுவத்திலிருந்தா? - இல்லை, இராணுவத்தில் இருந்து இல்லை. 82 00:05:58,358 --> 00:05:59,985 சிறையிலிருந்து. 83 00:06:03,572 --> 00:06:06,867 ஜெருசலேம் ஸ்டுடியோஸ் 84 00:06:06,950 --> 00:06:11,246 இணையதளத்தில் நன்கொடை கொடுத்தவர்களுக்கு மறுபடியும் என்னுடைய நன்றியைச் சொல்கிறேன், 85 00:06:11,330 --> 00:06:15,709 உதவ வேண்டும் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து நன்கொடை கொடுக்கலாம், 86 00:06:16,084 --> 00:06:18,086 முக்கியமாக, பிரதமருக்கும், கடுமையாக உழைக்கும் 87 00:06:18,170 --> 00:06:21,131 வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கும் நன்றி, 88 00:06:21,215 --> 00:06:22,716 நான் இதை சாதாரணமாக நினைக்கவில்லை. 89 00:06:22,799 --> 00:06:26,345 - ஓர்னா, எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு. - கண்டிப்பாக. 90 00:06:26,553 --> 00:06:29,389 - ஒரு விளம்பர இடைவேளைக்குப் பிறகு தொடர்வோம். - அதோடு... கட்! 91 00:06:30,557 --> 00:06:32,392 - ரெவிடல், ரொம்ப நன்றி. - நன்றி. 92 00:06:32,476 --> 00:06:33,977 - ஓடெட், நன்றி. - பரவாயில்லை. 93 00:06:34,061 --> 00:06:36,063 காலி சீக்கிரம் வீட்டுக்கு வருவாள் என்று நம்புகிறோம். 94 00:06:36,146 --> 00:06:37,523 - ஆமென். - நன்றி. 95 00:06:39,525 --> 00:06:41,401 - பை, பார்க்கலாம். - பை, பார்க்கலாம். 96 00:06:41,485 --> 00:06:43,070 - என்னவொரு பெண்... - ஆஹா. 97 00:06:43,153 --> 00:06:44,821 - எப்படிப் போனது? - நன்றாக இருந்தது. 98 00:06:45,864 --> 00:06:49,785 எனக்கே ரொம்ப முட்டாள்தனமாகத் தோன்றியது. எதற்காக வெளியுறவுத் துறைக்கு நன்றி சொன்னேன்? 99 00:06:49,868 --> 00:06:52,371 அது என்னைக் கொல்கிறது, காலி அங்கே இருக்கிறாள், அவர்கள் எதுவுமே செய்யவில்லை. 100 00:06:52,454 --> 00:06:54,998 - பணயத்தொகை கேட்பது போல தோன்றுகிறது. - சரியாக அதுதான் நடக்கிறது. 101 00:06:55,082 --> 00:06:58,210 - ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா? - கடந்த வாரத்திலிருந்து ஒன்றுமில்லை. 102 00:06:58,293 --> 00:07:00,671 நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம் என சொல்லிவிட்டு வெளியுறவுத் துறையினர் காணாமல் போய்விட்டனர். 103 00:07:00,754 --> 00:07:01,964 ஓ, அப்படியா? 104 00:07:02,631 --> 00:07:03,632 என்ன? 105 00:07:03,715 --> 00:07:07,219 அவர்கள் வேகமாக செயல்படுவது நல்லது, இந்தப் பிரச்சாரத்தை ரொம்ப நாள் நீட்டிக்க முடியாது. 106 00:07:07,719 --> 00:07:11,807 - எனவே நாம் இப்போது என்ன செய்வது? - நமக்கு இன்னும் அதிக பணம் தேவை, அதுதான் விஷயம். 107 00:07:12,391 --> 00:07:14,643 பணம் சத்தம் போன்றது. சத்தம் அதிகமாக இருந்தால், 108 00:07:14,726 --> 00:07:17,187 யாராலும் தூங்க முடியாது, வெளியுறவுத் துறைக் கூட. 109 00:07:17,396 --> 00:07:18,313 சரி. 110 00:07:18,397 --> 00:07:20,440 - சரி. ஏதாவது இருக்கிறதா? - இல்லை. 111 00:07:21,358 --> 00:07:24,278 எல்லாவற்றையும் விலையுயர்ந்த PR-க்கே செலவழித்துவிட்டேன். 112 00:07:24,361 --> 00:07:26,738 - உங்கள் கணவரின்... - காலி வீடு திரும்பட்டும், ஆமென். 113 00:07:26,947 --> 00:07:32,077 ...குடும்பத்திடம் பேசுவதாகச் சொன்னதை உங்களுக்கு மென்மையாக நினைவூட்ட விரும்புகிறேன். 114 00:07:33,620 --> 00:07:35,956 அந்தப் பக்கம் நிலைமை எப்படி இருக்கிறது? 115 00:07:37,332 --> 00:07:38,500 அதை விட்டுத்தள்ளுங்கள். 116 00:07:39,459 --> 00:07:40,878 நான் கூட்டிப் போகவா? 117 00:07:40,961 --> 00:07:42,546 இல்லை, நான் காரில்தான் வந்தேன். 118 00:07:42,629 --> 00:07:43,797 புதிதாக கார் ஓட்டுகிறீர்களா? 119 00:07:44,131 --> 00:07:46,216 இல்லை, பல ஆண்டுகளாக லைசென்ஸ் வைத்திருக்கிறேன், கார்தான் ஓட்டியதில்லை. 120 00:07:46,466 --> 00:07:47,509 ஏன் ஓட்டவில்லை? 121 00:07:48,969 --> 00:07:50,804 - போவதற்கு எந்த இடமும் இல்லை. - சரி. 122 00:07:51,471 --> 00:07:52,556 - பை. - பை. 123 00:08:11,867 --> 00:08:16,371 மோஸ் அடர் 124 00:08:21,960 --> 00:08:23,795 ஆனால் அவள் என்னிடம் பொய் சொல்லியிருக்கிறாள், புரிகிறதா? 125 00:08:23,879 --> 00:08:26,840 இன்னும் எனக்குப் புரியவில்லை, ஒரு வருடத்துக்கு மேலாக, தினமும் எழுந்து, 126 00:08:26,924 --> 00:08:28,592 ஊரை ஏமாற்ற இராணுவ சீருடை அணிந்துகொண்டு, அந்தப் போதைப்பொருள் 127 00:08:28,675 --> 00:08:32,554 விற்பவனிடம் வேலைக்குப் போயிருக்கிறாள், அங்கே என்ன செய்தாள் என்று கடவுளுக்குத்தான் தெரியும். 128 00:08:34,472 --> 00:08:37,142 அவள் வெறும் 20-வயது பெண், நீ வருத்தப்படுவாய் என்று பயந்திருப்பாள். 129 00:08:38,393 --> 00:08:39,394 இருக்கலாம். 130 00:08:39,477 --> 00:08:42,188 - அவள் இங்கேதான் வேலை செய்கிறாளா? - எனக்கு அப்படித்தான் சொன்னார்கள். 131 00:08:48,153 --> 00:08:51,406 பூட்டி வைத்தது புத்திசாலித்தனம், யாருக்கும் திருட ஆசை வராது. 132 00:08:54,159 --> 00:08:57,412 நிஜமாகவே அந்த பையன் அவளை வைத்து ஏதாவது கடத்தியிருப்பான் என்று நினைக்கிறாயா? 133 00:08:57,496 --> 00:09:00,249 அவனை "பையன்" என்று சொல்லாதே, அவன் வளர்ந்த ஆள், உன்னைவிட வயதில் மூத்தவன். 134 00:09:00,332 --> 00:09:02,584 ஹலோ, ரெவிடல் எங்கே இருப்பார்? 135 00:09:02,668 --> 00:09:04,169 - அங்கே. - நன்றி. 136 00:09:04,253 --> 00:09:06,880 கிளம்புவதற்கு முன்பு இந்தப் பலகையை நகர்த்தி வை... 137 00:09:07,464 --> 00:09:09,508 அதில் மாஷா கையெழுத்து போடுவதை உறுதிசெய். 138 00:09:13,011 --> 00:09:14,972 நாங்கள் தனியார் வாடிக்கையாளர்களுக்கு விற்பதில்லை. 139 00:09:15,055 --> 00:09:19,184 - நிர், அதுக்கு அப்புறம் இதையும் எடுக்கிறாயா? - சரியாக எதை எங்களுக்கு விற்க மாட்டீர்கள்? 140 00:09:20,811 --> 00:09:25,190 உங்களுக்கு விற்க மாட்டோம்... அலுவலக நாற்காலிகள், மேஜைகள், 141 00:09:25,440 --> 00:09:27,985 அலமாரிகள்... இன்னும் சொல்லவா? 142 00:09:28,610 --> 00:09:31,989 ரெவிடல்தானே? மன்னிக்கவும், நான் ஓர்னா, 143 00:09:32,072 --> 00:09:36,285 உங்களை தொடர்புகொள்ள முயற்சித்தேன், சில மெசேஜ்களை அனுப்பினேன். 144 00:09:37,202 --> 00:09:39,538 மோஸைத் தேடுகிறீர்கள். அவர் உங்களுக்கும் பணம் தர வேண்டுமா? 145 00:09:39,872 --> 00:09:45,544 இல்லை, அது அவர் விடுதலையாகிவிட்டார் என்று கேள்விப்பட்டேன், 146 00:09:45,627 --> 00:09:50,257 எனவே என் மகளைப் பற்றி அவரிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும், அதனால்... 147 00:09:51,133 --> 00:09:53,927 உங்களைப் பார்த்தால் பரிச்சயமானவர் போல தெரிந்தது, மகள் ரஷ்யாவில் இருக்கிறாள். 148 00:09:54,845 --> 00:09:55,804 அவளுக்கும் மோஸுக்கும் என்ன சம்பந்தம்? 149 00:09:57,181 --> 00:10:00,017 என்ன? இல்லை, ஒன்றுமில்லை, எதுவுமே இல்லை. 150 00:10:00,100 --> 00:10:04,229 அவர்கள்... இருவரும் ஒன்றாக இருந்தார்கள். ஒரே இராணுவ படைப்பிரிவில். 151 00:10:04,897 --> 00:10:08,442 ஆனால் அதில் ஒன்றுமில்லை. 152 00:10:08,901 --> 00:10:10,402 அப்படியென்றால், எதுவும் இல்லாதது போல தோன்றுகிறது. 153 00:10:11,820 --> 00:10:13,780 நீங்கள்? நீங்கள்தான் அப்பாவா? 154 00:10:14,323 --> 00:10:17,409 இல்லை, முன்னாள் மனைவிகளின் ஃபோன் எண்களைத் தேடி பிடிக்கும் ஆள் நான். 155 00:10:20,037 --> 00:10:22,706 பாருங்கள், வருந்துகிறேன், ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. 156 00:10:22,789 --> 00:10:25,334 நேர்மையாகச் சொன்னால், நான் அவரைத் தவிர்க்க முயற்சிக்கிறேன். 157 00:10:26,126 --> 00:10:28,212 நிர், இப்போதுதான் வெளியே எடுத்தாய், திரும்பவும் ஏன் உள்ளே வைக்கிறாய்? 158 00:10:28,295 --> 00:10:30,380 - அதை வெளியே எடு! - சரி... 159 00:10:30,881 --> 00:10:32,549 எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா? 160 00:10:33,717 --> 00:10:36,011 அவன் இருக்குமிடம் உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று தோன்றுகிறது. 161 00:10:36,970 --> 00:10:39,598 அவன் எப்படி இவ்வளவு சீக்கிரம் வெளியே வந்தான் என்று யோசித்திருக்கிறீர்களா? 162 00:10:39,681 --> 00:10:43,185 - நான் அவரிடம் பேசவில்லை என்று சொன்னேனே. - அவன் கூட்டாளிகளை காட்டிக் கொடுத்தான் என்பதால். 163 00:10:43,519 --> 00:10:46,063 இப்போது, அவன் தலைமறைவாக இருக்கிறான், அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. 164 00:10:46,522 --> 00:10:49,316 அவனைப் பற்றி விசாரிக்கும் முதல் நபர்களாக நாங்கள் இருக்கலாம், 165 00:10:49,650 --> 00:10:52,194 ஆனால் நாங்கள் கடைசி நபர்களாக இருக்க மாட்டோம் என்று உறுதியாகச் சொல்ல முடியும். 166 00:10:52,694 --> 00:10:54,363 அதனால் எங்களை அவனிடம் பேச விடுங்கள் 167 00:10:54,821 --> 00:10:57,783 அல்லது எங்களுக்குப் பிறகு வருபவர்களை நீங்களே சமாளிக்கலாம், 168 00:10:57,866 --> 00:11:01,119 ஆனால் நினைவிருக்கட்டும், அவர்கள் எங்களைப் போல தன்மையாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. 169 00:11:05,415 --> 00:11:09,461 நீங்கள் யார், என்னை மிரட்டலாம் என்று எப்படி உங்களுக்குத் தோன்றுகிறது என்று எனக்குத் தெரியாது, 170 00:11:09,837 --> 00:11:12,798 என் ஆட்களைக் கூப்பிடுவதற்கு முன்பு என் கண் முன்னே இருந்து போய்விடுங்கள். 171 00:11:28,021 --> 00:11:29,439 சரி, நாடகம் முடிந்தது. 172 00:11:29,523 --> 00:11:33,610 - அவன் கூட்டாளிகளை காட்டிக் கொடுத்தது உண்மையா? - எனக்கு எதுவும் தெரியாது, 173 00:11:33,694 --> 00:11:36,780 ஆனால் அவன் இருக்குமிடம் அவளுக்கு தெரிந்திருந்தால், நமக்கும் சீக்கிரம் தெரிந்துவிடும். 174 00:11:36,864 --> 00:11:37,781 ஏன்? 175 00:11:38,407 --> 00:11:41,952 ஏனென்றால் அவன் இருக்குமிடம் அவளுக்குத் தெரிந்திருந்தால், அவனை அழைத்து எச்சரிப்பாள், 176 00:11:42,035 --> 00:11:44,371 அவள் அவனை அழைத்தவுடனேயே, அவன் எங்கே இருக்கிறான் என்று நமக்குத் தெரிந்துவிடும். 177 00:11:44,872 --> 00:11:45,706 எப்படி? 178 00:11:46,206 --> 00:11:49,585 படைப்பிரிவில் இருக்கும் நண்பனிடம் அவள் ஃபோன் எண்ணை டிராக் செய்ய சொன்னேன், அது பெரிய விஷயமில்லை. 179 00:11:52,671 --> 00:11:54,131 ஆஹா... 180 00:11:57,176 --> 00:11:58,177 ஹலோ? 181 00:11:58,260 --> 00:12:01,013 நீ உன் மகளை உயிருடன் பார்க்க வேண்டுமா? 182 00:12:01,805 --> 00:12:05,142 - யார் இது? - வாயை மூடிக்கொண்டு, நான் சொல்வதை மட்டும் செய். 183 00:12:05,726 --> 00:12:11,440 2,00,000 டாலர்கள் வேண்டும், உனக்கு 24 மணிநேரம் அவகாசம் தருகிறேன். 184 00:12:11,523 --> 00:12:15,152 சரி, பொறு, நான்... 185 00:12:15,235 --> 00:12:18,530 என்னிடம் அவ்வளவு பணம் இல்லை, ஆனால் ஏற்பாடு செய்கிறேன், சரியா? 186 00:12:18,614 --> 00:12:21,617 நிறுத்து! நாங்கள் இதை உனக்கு இன்னும் எளிதாக்குகிறோம். 187 00:12:21,700 --> 00:12:24,161 1,00,000 அமெரிக்க டாலர்கள் 188 00:12:24,244 --> 00:12:27,497 இல்லையென்றால் சிறையில் இருப்பவளைக் கவனித்துக்கொள்ள ஆட்களை அனுப்புவோம். 189 00:12:27,581 --> 00:12:29,458 வேண்டாம், தயவுசெய்து, அப்படிச் செய்யாதீர்கள், 190 00:12:29,541 --> 00:12:32,794 - பணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன். - சரி. 191 00:12:32,878 --> 00:12:36,048 இதுதான் எங்களுடைய கடைசி சலுகை. கேட்கிறதா? 192 00:12:37,466 --> 00:12:39,718 இரண்டு ஷெக்கல்கள், நாங்கள் ரசீது தர மாட்டோம், சரியா? 193 00:12:39,801 --> 00:12:42,221 மேஜைக்கு அடியில், யாருக்கும் தெரியக் கூடாது. 194 00:12:43,180 --> 00:12:45,432 ஓ, பொறு... ஒரு நிமிடம். 195 00:12:46,600 --> 00:12:50,437 என்ன தெரியுமா? நீ ஒரு நல்ல வாடிக்கையாளர், உனக்காக என்ன செய்கிறேன் என்று கேள்: 196 00:12:50,521 --> 00:12:53,315 25,000 டாலருக்கு நாங்கள் உனக்கு... 197 00:12:57,486 --> 00:12:58,737 இது அடிக்கடி நடக்கிறதா? 198 00:13:01,198 --> 00:13:03,575 இப்போது நான் டிவியில் வருவதால். 199 00:13:04,535 --> 00:13:05,661 பிறகு ஏன் ஃபோனை எடுக்கிறாய்? 200 00:13:11,416 --> 00:13:13,502 ஒருவேளை அது அவளாக இருக்கலாம் என்பதால். 201 00:13:39,570 --> 00:13:43,615 யோசி லெவிக்கு மேயராக வாக்களியுங்கள்! 202 00:13:44,032 --> 00:13:45,742 அடச்சே. 203 00:13:45,826 --> 00:13:47,578 ச்சே. 204 00:13:59,715 --> 00:14:02,176 பென்னி, எவ்வளவு அழகாக இருக்கிறது பார், அவருக்காக தொப்பிகளைச் செய்தோம். 205 00:14:02,259 --> 00:14:06,430 ஓ, வந்துவிட்டாய். நாங்கள் கவலைப்பட்டோம், சரியா? 206 00:14:06,805 --> 00:14:10,142 உன் நாத்தனார் மீண்டும் இங்கே வந்தால், நான் வேலையை விட்டு நின்றுவிடுவேன். 207 00:14:11,143 --> 00:14:14,521 வெளியே அமர்ந்தோம். பென்னி இன்று நாள் முழுக்க வெளியே வரவில்லை என்று சொன்னான். 208 00:14:14,605 --> 00:14:15,522 அப்படியா... 209 00:14:15,606 --> 00:14:20,402 பார்... ஒருவழியாக அந்த அரசியல்வாதி வெளியே வந்துவிட்டான். 210 00:14:20,485 --> 00:14:23,197 ஆம், இதுதான் சரியான நேரம் என்று எங்களுக்குத் தோன்றியது. 211 00:14:23,447 --> 00:14:26,283 "'சீக்கிரம் அரசியலில் இறங்கு" என்று எல்லோரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். 212 00:14:26,366 --> 00:14:28,577 நான் உங்களை நினைத்து உற்சாகமாக இருக்கிறேன். 213 00:14:28,660 --> 00:14:32,164 அவன் சிறுவயதில் செய்தது எனக்கு நினைவிருக்கிறது, எங்கள் பெற்றோரை ஒரு வழி செய்துவிடுவான். 214 00:14:32,372 --> 00:14:34,291 அவன் எப்போதும் எங்களுக்காக பேரம் பேசுவான். 215 00:14:34,374 --> 00:14:38,295 தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன், இன்று கடினமான நாளாக இருந்தது. 216 00:14:38,587 --> 00:14:41,006 அதற்குப் பிறகு, லெபனானில், அவனுடைய வாகனம் IED மீது ஏறியது. 217 00:14:45,052 --> 00:14:46,762 உடனடியாகக் கொல்லப்பட்டான். கொடுமையான கதை. 218 00:14:50,599 --> 00:14:53,519 நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க ஒரு நிகழ்வை நடத்துகிறோம், 219 00:14:53,602 --> 00:14:55,938 நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். 220 00:14:56,230 --> 00:14:59,274 நாம் எல்லோரும் ஒன்றுகூடி பல வருடங்கள் ஆகிவிட்டன. 221 00:14:59,358 --> 00:15:03,904 நாம் ஒன்றாக இருந்ததை மிஸ் செய்கிறோம். பென்னியும்தான், சரியா? 222 00:15:04,488 --> 00:15:06,782 - சரிதானே, பென்னி? - கண்டிப்பாக. 223 00:15:07,366 --> 00:15:11,411 பென்சுக், மேலே இருக்கும் தண்ணீர் குழாயில் எனக்கு உதவ முடியுமா? 224 00:15:12,913 --> 00:15:15,249 என்னால் திறக்க முடியவில்லை. 225 00:15:15,499 --> 00:15:18,001 இவனுக்கும் கொஞ்சம் தண்ணீர் கொடு, சரியா? 226 00:15:18,085 --> 00:15:21,380 தண்ணீர் குழாயால்தான் உன்னை சமாளிக்க முடியவில்லை. 227 00:15:25,008 --> 00:15:28,262 தமாரா... உண்மை... 228 00:15:28,887 --> 00:15:30,514 உங்கள் நிகழ்வைப் பற்றி, 229 00:15:30,597 --> 00:15:33,141 பென்னிக்கு நேற்று இரவு காய்ச்சல் வந்தது, 230 00:15:33,225 --> 00:15:35,519 அதனால்தான் அவன் இன்று வெளியே போகவில்லை. 231 00:15:36,019 --> 00:15:38,063 அது பரவாயில்லை, நீ வா. 232 00:15:39,022 --> 00:15:42,526 நீ வா. இது யோசிக்கும் எனக்கும் எல்லோருக்கும் முக்கியமானது. 233 00:15:43,026 --> 00:15:45,529 அது நாம் செய்யும் முயற்சிக்கு மதிப்பானது, குறிப்பாக இப்போது. 234 00:15:45,612 --> 00:15:48,365 - ஒற்றுமையில் பலம், சரிதானே? - ஆம். 235 00:15:50,075 --> 00:15:52,119 உண்மை என்னவென்றால்... 236 00:15:53,871 --> 00:15:57,416 நீ எனக்கு ஒன்றில் உதவுவாய் என்ற நம்பிக்கையில் அழைத்தேன். 237 00:15:57,499 --> 00:15:59,501 நிச்சயமாக, என்ன அது? 238 00:16:00,377 --> 00:16:04,798 இப்போது ரஷ்யாவில் சட்டக் கட்டணம், 239 00:16:04,882 --> 00:16:07,384 பிரச்சாரச் செலவுகள் இருக்கிறது, அதோடு ஒரிட் கட்மோன்... 240 00:16:07,593 --> 00:16:10,095 - ஓர்னா... - அதை இப்போது பேசுவதற்கு வருந்துகிறேன். 241 00:16:10,179 --> 00:16:12,014 நிகழ்வு முடியும் வரை காத்திருப்போம், சரியா? 242 00:16:12,097 --> 00:16:14,725 நாங்கள் இப்போது குழப்பத்தில் இருக்கிறோம். 243 00:16:14,808 --> 00:16:16,977 நிகழ்வுக்கு வா, அது நன்றாக இருக்கும், 244 00:16:17,060 --> 00:16:19,229 நாங்கள் காலிக்கான விஷயங்களை தயார் செய்கிறோம், நீயே பார்ப்பாய். 245 00:16:19,313 --> 00:16:22,357 அதன் பிறகு நாம் முறையாக உட்கார்ந்து, 246 00:16:22,441 --> 00:16:25,152 - எல்லாவற்றையும் பற்றி பேசுவோம். சரியா? - சரி. 247 00:16:25,485 --> 00:16:27,196 சரி. நான் போக வேண்டும். 248 00:16:27,571 --> 00:16:29,990 ஓ, கிட்டத்தட்ட மறந்துவிட்டேன். 249 00:16:30,574 --> 00:16:32,201 என்ன கண்டுபிடித்தேன் பார். 250 00:16:32,701 --> 00:16:35,996 நீ இதை உன் நேர்காணல்களுக்கு கொண்டு போகலாம், பின்னணியில் வைக்கலாம். 251 00:16:36,413 --> 00:16:39,583 குட்டி காலியை அவள் மாமாவுடன் நாம் இன்னும் டிவியில் காட்டவில்லை. 252 00:16:39,833 --> 00:16:41,710 நல்ல புகைப்படம், இல்லையா? 253 00:16:42,044 --> 00:16:43,212 - பை, போக வேண்டும். - பை. 254 00:16:49,343 --> 00:16:54,097 டோரி 255 00:16:54,181 --> 00:16:58,101 ஹேய், கேட்கிறதா? நல்ல செய்தி, கெட்ட செய்தி. 256 00:16:58,352 --> 00:17:01,855 நல்ல செய்தி: அவனுடைய முன்னாள் மனைவி அழைத்தாள், எனக்கு ஒரு இடம் கிடைத்திருக்கிறது. 257 00:17:01,939 --> 00:17:05,901 அது நான்கு கிலோமீட்டர் பகுதி, ஆனால் ஒரே ஒரு கட்டடம்தான் இருக்கிறது. 258 00:17:05,983 --> 00:17:09,195 - அது நல்ல செய்தியா? - ஆம். கெட்ட... 259 00:17:10,280 --> 00:17:12,115 நான் அவனுடைய கோப்பைப் பார்த்தேன். 260 00:17:13,325 --> 00:17:15,577 ரோனி, அவன் போதைப்பொருள் விற்றதில் சிக்கவில்லை. 261 00:17:15,911 --> 00:17:17,538 ஆயுதங்களை விற்றதில் மாட்டியிருக்கிறான். 262 00:17:19,580 --> 00:17:22,209 அங்கே போவதற்கு முன்பு பேசுவோம், சரியா? 263 00:17:22,917 --> 00:17:25,420 அது நல்ல யோசனையா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. 264 00:17:26,003 --> 00:17:29,383 காலியை இதில் இழுத்துவிட்டிருந்தால், நான் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். 265 00:17:29,466 --> 00:17:30,634 எனக்கு வேறு என்ன வழி இருக்கிறது? 266 00:17:31,343 --> 00:17:33,804 கேள், அப்படிப்பட்டவர்களிடம், நீ கவனமாக இருக்க வேண்டும். 267 00:17:34,429 --> 00:17:36,473 நான் இல்லாமல் நீ அங்கே போக மாட்டாய் என்று எனக்கு சத்தியம் செய். 268 00:17:38,141 --> 00:17:39,351 ஓர்னா? 269 00:18:17,890 --> 00:18:19,808 சேஸ், உட்காரு! 270 00:18:22,019 --> 00:18:23,520 ஹாய். 271 00:18:27,649 --> 00:18:28,984 நீங்கள் மோஸா? 272 00:18:31,862 --> 00:18:35,407 - நமக்கு ஒருவரையொருவர் தெரியாது... - டிவி மூலமாக எனக்கு உன்னைத் தெரியும். 273 00:18:35,741 --> 00:18:39,203 ஆம், நான் ஓர்னா, என் மகள் காலி லெவி. 274 00:18:40,829 --> 00:18:44,124 நீங்கள் இராணுவத்தில் ஒன்றாக இருந்தீர்கள் என்று நினைக்கிறேன், சரிதானே? 275 00:18:46,251 --> 00:18:49,171 நீ தவறான நபரிடம் வந்திருக்கிறாய், நீ நினைக்கும் நபர் நான் இல்லை. 276 00:18:50,547 --> 00:18:52,216 சரி... 277 00:18:54,134 --> 00:18:56,011 ஆனால் நீங்கள்தான் இங்கே வசிக்கிறீர்களா? 278 00:18:57,095 --> 00:18:58,889 நான் இங்கே வசிக்கவில்லை. 279 00:18:58,972 --> 00:19:00,641 இது வேலை. 280 00:19:01,391 --> 00:19:03,268 விவசாயிகளுக்குப் பாதுகாப்பு. 281 00:19:03,352 --> 00:19:04,811 நகரு. 282 00:19:06,230 --> 00:19:08,982 யாரோ அவர்களுடைய கால்நடைகளைத் திருட முயற்சிக்கிறார்கள், நான் அதைக் கவனித்துக்கொள்கிறேன். 283 00:19:09,358 --> 00:19:11,860 பன்றிகள் அவர்களுடைய பயிர்களை சாப்பிட வருகின்றன, நான் அதைக் கவனித்துக்கொள்கிறேன். 284 00:19:11,944 --> 00:19:13,737 யார் வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். 285 00:19:17,115 --> 00:19:19,034 அது காட்டுப்பன்றி. அதன் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி வருகிறோம். 286 00:19:20,202 --> 00:19:22,329 நீ இங்கே இருக்கக்கூடாது, இது தனிப்பட்ட சொத்து. 287 00:19:22,871 --> 00:19:25,499 ஆனால் என் மகளை உங்களுக்குத் தெரியுமா என்று ஞாபகப்படுத்திப் பார்க்க முயற்சிக்க முடியுமா? 288 00:19:25,582 --> 00:19:28,126 - என்னால் அவளுடைய படத்தைக் காட்ட முடியும். - படங்களை விடு, எனக்கு அவளைத் தெரியாது. 289 00:19:28,210 --> 00:19:29,837 அட, ஆனால் உங்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும். 290 00:19:29,920 --> 00:19:31,922 - உங்களுக்கு எஃபி, பாஸ், டுடியைத் தெரியும்... - கேள்... 291 00:19:32,297 --> 00:19:35,217 - அவள் உங்களுக்காக வேலை செய்தது எனக்கு தெரியும். - கேள். உன்னை எனக்குத் தெரியாது. 292 00:19:35,968 --> 00:19:39,930 உன் மகளையோ அல்லது இவர்களில் யாரையோ தெரியாது. 293 00:19:40,013 --> 00:19:43,267 மழை வரப் போகிறது. நானாக இருந்தால் காரில் ஏறி, கிளம்புவேன். 294 00:19:43,350 --> 00:19:46,019 நீ எங்கோ ஒரு பள்ளத்தாக்கில் சிக்கும் முன்பு. 295 00:20:31,607 --> 00:20:35,903 ஹாய், மன்னியுங்கள், என் சாவியை காரில் வைத்து பூட்டிவிட்டேன். 296 00:20:35,986 --> 00:20:39,406 பூட்டு சாவி செய்பவரை அழைக்க நான் உள்ளே வரலாமா? 297 00:20:44,828 --> 00:20:48,624 ஐயோ! பொறுங்கள்... சரி, நான் போகிறேன்! 298 00:20:50,584 --> 00:20:52,127 நான் கிளம்புகிறேன்... 299 00:20:55,214 --> 00:20:56,131 இல்லை! 300 00:21:03,889 --> 00:21:06,725 சேஸ்! 301 00:21:31,667 --> 00:21:32,876 ஹலோ? 302 00:21:32,960 --> 00:21:34,294 ஓர்னா லெவி? 303 00:21:34,378 --> 00:21:35,337 யார் இது? 304 00:21:35,420 --> 00:21:38,507 நான் உன் மகளை மீண்டும் உன் வாழ்க்கைக்கு கொண்டு வரக்கூடிய ஆள், 305 00:21:38,590 --> 00:21:41,260 நீ விரும்பும் அமைதியைக் கொண்டு வரக்கூடிய ஆள். 306 00:21:41,343 --> 00:21:43,971 சரி, ஆனால் அங்கே மக்கள் ஹீப்ரு பேசுவது எனக்குக் கேட்கிறது. 307 00:21:44,054 --> 00:21:45,681 நீ என்ன பேசுகிறாய் என்று தெரியவில்லை. 308 00:21:45,764 --> 00:21:47,391 அழைப்பைத் துண்டி... 309 00:22:04,825 --> 00:22:08,036 {\an8}காலியின் பொருட்கள் 310 00:22:17,796 --> 00:22:19,006 தொடங்குகிறது... 311 00:22:19,089 --> 00:22:20,841 குரல் இல்லாதவர்களுக்காகப் பேசுங்கள் 312 00:22:28,891 --> 00:22:32,895 சமீபத்தில் ப்ளே செய்யப்பட்டவை 313 00:22:34,980 --> 00:22:38,192 {\an8}ஃபேண்டம் லிம்பின் "யூரி கிளாஸ்கோவ்" 314 00:24:04,695 --> 00:24:06,697 நீ என்னைத் துன்புறுத்துகிறாய், நீ தேடும் ஆள் நான் இல்லை. 315 00:24:06,780 --> 00:24:10,242 நீங்கள் எல்லோரும் என்ன செய்தீர்கள் என்று சொல்லும் வரை நான் எங்கேயும் போகப் போவதில்லை: 316 00:24:10,325 --> 00:24:12,703 நீங்கள், எஃபி, பாஸ், டுடி... 317 00:24:13,996 --> 00:24:16,582 - உன்னை அனுப்பியது யார்? - யாரும் இல்லை. 318 00:24:17,374 --> 00:24:19,960 இவர்களுடைய பெயர்கள் உனக்கு எப்படித் தெரியும்? 319 00:24:21,545 --> 00:24:24,506 அவளுடைய பொருட்களில் அவர்களின் பாஸ்போர்ட்களைக் கண்டுபிடித்தேன். 320 00:24:32,931 --> 00:24:35,475 நீங்கள் என் மகளை என்ன செய்தீர்கள் என்று சொல்லப் போகிறீர்கள். 321 00:24:37,477 --> 00:24:38,812 அது ஏன் வேடிக்கையானது? 322 00:24:40,772 --> 00:24:42,858 அந்த முழு 'மகள்' விஷயமும், நேர்காணல்களிலும். 323 00:24:42,941 --> 00:24:44,401 "என் மகள் இப்படி, என் மகள் அப்படி." 324 00:24:44,860 --> 00:24:46,111 அவளுக்கு எட்டு வயது என்று நீ நினைக்கலாம். 325 00:24:53,493 --> 00:24:57,289 - நாங்கள் எல்லோரும் இதை ஒன்றாகச் செய்தோம். - உனக்குக் கேவலமாக இல்லை, அவளுக்கு 20 வயது. 326 00:24:57,372 --> 00:25:02,586 வயதில் ஒரு சின்ன இடைவெளி, அதனால் என்ன? நோய்வாய்ப்பட்ட உன் கணவனை ஏமாற்றுவதைவிட மோசமானதா? 327 00:25:04,671 --> 00:25:09,009 என்ன? காலி என்னிடம் சொன்னாள். என்ன, அவள் கவனிக்க மாட்டாள் என்று நினைத்தாயா? 328 00:25:09,343 --> 00:25:10,677 குழந்தைகள் எல்லாவற்றையும் கவனிப்பார்கள். 329 00:25:14,139 --> 00:25:16,308 உன் நண்பர்கள் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்று சொல்! 330 00:25:16,391 --> 00:25:19,436 பார், நீ ஒரு அடிப்படை தவறை செய்துவிட்டாய். 331 00:25:19,520 --> 00:25:21,939 பிரச்சினைகளைக் கொண்ட ஒரு அயோக்கிய கூட்டம், உன் 'செல்ல மகளை' கூட்டிப் போய், 332 00:25:22,022 --> 00:25:25,234 பயன்படுத்தினார்கள், இப்போது அவள் சிறையில் வாடுகிறாள், அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று 333 00:25:25,317 --> 00:25:26,944 நீயே உனக்குச் சொல்லிக்கொள்கிறாய். அப்படி ஒன்றையா? 334 00:25:32,366 --> 00:25:35,410 அவர்களால் அவள் பாதிக்கப்படவில்லை, அதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். 335 00:25:35,744 --> 00:25:36,995 ஏன்? 336 00:25:37,913 --> 00:25:40,123 ஏனென்றால் அவர்கள் அவளுக்காக வேலை செய்தார்கள்! 337 00:25:42,668 --> 00:25:45,212 ஆனால் அவள் உங்களுக்காக வேலை செய்தாள் என்று என்னிடம் சொன்னார்கள். 338 00:25:45,420 --> 00:25:48,090 வேலை செய்தாள். கடந்த காலம். 339 00:25:48,423 --> 00:25:50,592 நான் கைது செய்யப்பட்ட பிறகு, அவள் ஒரு வாரம் கூட காத்திருக்கவில்லை. 340 00:25:51,343 --> 00:25:54,680 என் ரஷ்ய கூட்டாளியைக் கண்டுபிடித்து, அவனுக்காக வேலை செய்யத் தொடங்கிவிட்டாள். 341 00:25:54,763 --> 00:25:57,057 - அவன் பெயர் என்ன? - எனக்குத் தெரியாது, எனக்குக் கவலையில்லை. 342 00:25:57,140 --> 00:25:59,935 நான் பயிற்சியளித்த ஒரு குழுவோடு நான் ஒரு வருடம் செலவழித்து ஏற்படுத்திய 343 00:26:00,018 --> 00:26:03,939 ஒரு ஒப்பந்தத்தை உன் மகள் திருடி, அதை அவளுடையது போல அந்த ரஷ்யக்காரனுக்கு அனுப்பினாள். 344 00:26:04,022 --> 00:26:07,651 மூன்று நிமிட சிறை ஃபோனின் அழைப்பில் என்னைக் கழட்டிவிட்டுவிட்டாள். 345 00:26:07,860 --> 00:26:09,361 உன் 'மகள்'. 346 00:26:09,695 --> 00:26:12,990 ஆனால் அவர்கள், 347 00:26:13,991 --> 00:26:16,910 அவர்கள் அவளை எதுவும் செய்யவில்லை என்றால், ஏன் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்? 348 00:26:16,994 --> 00:26:18,954 அவர்கள் ஒளிந்திருக்கவில்லை. 349 00:26:24,751 --> 00:26:29,006 எனக்கு மூன்று மாதங்களுக்கு முன், நடு இரவில் இந்தியாவிலிருந்து ஒரு வினோதமான அழைப்பு வந்தது. 350 00:26:29,214 --> 00:26:32,634 நீ குறிப்பிட்டவர்களில் ஒருவனான எஃபி, பயத்தில் பேசினான், 351 00:26:32,718 --> 00:26:36,346 ஒரு புது பாஸ்போர்ட்டைப் பெறுவதற்காக ஒரு இந்தியப் பெண்ணின் முகவரிக்கு 352 00:26:36,430 --> 00:26:38,515 பணம் அனுப்பச்சொல்லி கேட்டான். 353 00:26:38,724 --> 00:26:41,310 அவனுக்கு ஏன் புது பாஸ்போர்ட் தேவை என்று நீ கேட்கவில்லையா? 354 00:26:41,393 --> 00:26:42,311 இல்லை... 355 00:26:42,394 --> 00:26:45,230 நாங்கள் செய்யும் வேலையில் அதுபோன்ற கேள்விகளை நாங்கள் கேட்பதில்லை. 356 00:26:45,314 --> 00:26:48,150 ஆனால், ஒரு ஒப்பந்தம் சரியாக போகும்போது, 357 00:26:48,442 --> 00:26:50,736 அதுபோன்ற அழைப்புகள் வராது என்று நான் உறுதியளிக்கிறேன். 358 00:26:50,944 --> 00:26:54,531 அவன் அந்தப் பணத்தை எடுக்கவில்லை, அதுதான் முக்கிய அறிகுறி. 359 00:26:54,865 --> 00:26:56,074 எதற்கு அறிகுறி? 360 00:26:56,158 --> 00:26:59,203 அவர்கள் ஒளிந்திருப்பதால் உன்னால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று இல்லை. 361 00:26:59,661 --> 00:27:02,623 கண்டுபிடிக்க யாரும் இல்லாததால் உன்னால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 362 00:27:05,918 --> 00:27:08,962 கேள், நீ அவளுடைய அம்மா என்று எனக்குத் தெரியும். 363 00:27:10,130 --> 00:27:11,840 அது உன் தவறு இல்லை. 364 00:27:12,466 --> 00:27:15,010 ஆனால் இப்போது காலிக்கு நடக்கும் எல்லாம், 365 00:27:15,093 --> 00:27:17,763 ஒவ்வொன்றும் அவளாகத் தேடிக்கொண்டது என்பதை தெரிந்துகொள். 366 00:27:23,435 --> 00:27:25,312 காலியை வீட்டிற்கு அழைத்து வாருங்கள் 367 00:27:45,415 --> 00:27:46,917 மாயாஜாலம். 368 00:27:47,000 --> 00:27:48,001 இல்லை... 369 00:27:48,085 --> 00:27:49,670 - ஆம். - இவ்வளவு வேகமாகவா? 370 00:27:49,753 --> 00:27:51,004 வந்து பாருங்கள். 371 00:28:09,690 --> 00:28:12,776 அவர் சோர்வாக இல்லை என்று சொன்னார், எனவே அவரை ஒரு புத்தகம் படிக்கும்படி சொன்னேன், 372 00:28:12,860 --> 00:28:14,444 அவருக்கு டீ போட்டுக் கொடுத்தேன், 373 00:28:14,528 --> 00:28:17,781 நான் திரும்பி வரும்போது, ஒரு குழந்தையைப் போல தூங்கிவிட்டார். 374 00:28:19,366 --> 00:28:21,326 நம்ப முடியாதது. 375 00:28:21,535 --> 00:28:23,328 நமக்கு ஐஸ்கிரீம் எடுத்து வருகிறேன். 376 00:28:38,135 --> 00:28:40,304 {\an8}நோக்ஸோலைட் 7.5 377 00:28:40,929 --> 00:28:42,931 அம்மா, நான் விளையாட்டை தயார் செய்கிறேன். 378 00:28:43,807 --> 00:28:46,518 இந்த முறை எப்படி விளையாட விரும்புகிறீர்கள்? 379 00:28:46,602 --> 00:28:47,811 விரிவாக்கத்துடனா அல்லது இல்லாமல்? 380 00:28:47,895 --> 00:28:50,439 நேர்மையாகச் சொன்னால், புதிதாக எதையும் கற்றுக்கொள்ள எனக்கு மனமில்லை. 381 00:28:50,522 --> 00:28:53,984 சமீப காலமாக அப்பாவை ஏதாவது எரிச்சலூட்டினால், அதைக் குப்பையில் வீசி விடுகிறார். 382 00:28:54,651 --> 00:28:58,113 அதை ஒரு நகைச்சுவை என்கிறார், அதைக் கண்டுபிடிக்க முடியாதபோது கோபமடைகிறார். 383 00:28:58,197 --> 00:29:00,115 எனவே நான் ஜாக்கிரதையாக இருக்க கற்றுக்கொண்டேன். 384 00:29:00,449 --> 00:29:01,950 என்ன இது? 385 00:29:03,911 --> 00:29:07,581 - அது நோக்ஸோலைட். - தெரியும், ஏன் அட்டையே காலியாக இருக்கிறது? 386 00:29:09,249 --> 00:29:11,210 ஏன் என்று உங்களுக்குத் தெரியும். 387 00:29:15,047 --> 00:29:17,007 அவருக்கு எப்படி கொடுத்தாய்? 388 00:29:17,382 --> 00:29:20,010 அதை அவருடைய டீயில் கலந்தேன். 389 00:29:20,677 --> 00:29:24,097 - உனக்கு புத்தி கெட்டுவிட்டது. - அம்மா, இப்போது அதைப் பற்றி பேச முடியாது... 390 00:29:24,181 --> 00:29:27,017 அவர் வேண்டாம் என்றார். ரொம்ப தெளிவாகச் சொன்னார். 391 00:29:27,100 --> 00:29:31,188 சரி, ஆனால் இந்த வீட்டில் அவர் மட்டும் இல்லை, 392 00:29:31,271 --> 00:29:33,565 மற்றவர்களும் இருக்கிறார்கள், நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் கொஞ்சம் வாழ வேண்டும். 393 00:29:33,649 --> 00:29:35,817 நான் உன் பொறுப்பு இல்லை. 394 00:29:35,901 --> 00:29:40,197 - ஏதோ கோபத்தை என் மீது காட்டுகிறீர்கள். - இல்லவே இல்லை. 395 00:29:40,280 --> 00:29:42,491 அம்மா, நிறைய பேர் சாப்பாட்டில் மருந்தை கலக்கிறார்கள், 396 00:29:42,574 --> 00:29:45,619 - எல்லா பெற்றோர்களும் அதைச் செய்கிறார்கள். - ஆம், குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு இல்லை. 397 00:29:45,702 --> 00:29:48,288 அது அவ்வளவு பெரிய விஷயமில்லை. 398 00:29:48,372 --> 00:29:50,707 நீ அவரை ஒரு குழந்தையைப் போல நடத்தக்கூடாது, புரிகிறதா? 399 00:29:51,583 --> 00:29:53,627 நீ அவரை ஒரு குழந்தையைப் போல நடத்தக்கூடாது. 400 00:29:54,711 --> 00:29:56,797 உன் அப்பாவின் மருந்துகளை கலப்பது... 401 00:29:59,341 --> 00:30:01,134 யார் அப்படிச் செய்வார்கள்? 402 00:30:03,804 --> 00:30:05,389 நான் செய்கிறேன், வெளிப்படையாக. 403 00:30:10,561 --> 00:30:11,645 வெளிப்படையாக. 404 00:30:22,447 --> 00:30:26,326 ஓர்னா, என்ன? எல்லாம் நலமா? 405 00:30:29,288 --> 00:30:30,914 என்ன நடந்தது? 406 00:31:43,904 --> 00:31:45,739 உள்ளே வா, உட்காரலாம். 407 00:31:48,116 --> 00:31:49,409 வா... 408 00:31:55,916 --> 00:31:57,209 உள்ளே வா. 409 00:32:04,049 --> 00:32:07,427 பென்னியை அவர்களிடமிருந்து திருடியவளாகத்தான் குடும்பம் என்னை எப்பொழுதும் பார்க்கும், 410 00:32:07,511 --> 00:32:12,683 அவரை சிக்க வைக்க நான் கர்ப்பமானது போல. 411 00:32:13,475 --> 00:32:14,643 நன்றி. 412 00:32:15,853 --> 00:32:19,231 நான் செய்யும் எல்லாவற்றையும் அவர்கள் அப்படித்தான் விளங்கிக்கொள்கிறார்கள். 413 00:32:19,565 --> 00:32:24,820 நிச்சயமாக, பிரேக் இறக்குமதியாளர்களின் பணக்கார குடும்பத்திற்குள் நுழைய நான் ஏங்கினேன். 414 00:32:26,947 --> 00:32:29,908 அப்படியென்றால்... மோஸ் உடன் எப்படிப் போனது? 415 00:32:32,911 --> 00:32:35,372 - எனவே இப்போது என்ன நினைக்கிறாய்? - எனக்குத் தெரியவில்லை, 416 00:32:35,581 --> 00:32:39,877 நான் உன்னை நம்பியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆரம்பத்திலிருந்தே நீ சொன்னதை, 417 00:32:39,960 --> 00:32:41,211 அதை விட்டுவிடு, 418 00:32:41,295 --> 00:32:44,965 ஒரிட் விஷயத்தில் கவனம் செலுத்து, பிரச்சாரத்திற்கு பணம் திரட்டு... எனக்குத் தெரியவில்லை. 419 00:32:45,048 --> 00:32:47,968 இன்று எனக்கு சில பதில்கள் கிடைக்கும் என்று ரொம்ப நம்பினேன். 420 00:32:48,218 --> 00:32:52,598 ஆனால் நான் அதை எவ்வளவு ஆழமாக தோண்டுகிறேனோ, அது அவ்வளவு இருண்டதாக ஆகிறது... 421 00:32:55,225 --> 00:32:58,520 - ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. - என்ன? 422 00:33:00,189 --> 00:33:04,151 காலியைக் கூட்டி வர இங்கே இருக்க வேண்டியது நான் இல்லை. 423 00:33:06,069 --> 00:33:07,196 அது காலிதான். 424 00:33:13,160 --> 00:33:15,621 அவள் அதை எங்கிருந்து கற்றுக்கொண்டாள் என்று நினைக்கிறாய்? 425 00:33:16,788 --> 00:33:20,167 - வெளிப்படையாக பென்னியிடம் இருந்து இல்லை. - வாய்ப்பு இல்லை. 426 00:33:21,210 --> 00:33:22,711 அப்படியென்றால் மிச்சமிருப்பது யார்? 427 00:33:25,631 --> 00:33:29,551 அவள் என்னைப் பார்த்து, அதற்கு எதிராக செய்ய சிறந்த முறையில் கற்றுக்கொண்டாள். 428 00:33:31,011 --> 00:33:32,429 பார்... 429 00:33:36,141 --> 00:33:38,435 இதையெல்லாம் இப்போது சொல்கிறாய், 430 00:33:39,561 --> 00:33:45,192 ஆனால் ஒரு நாள் உன்னை, நீ எப்படிச் செயல்பட்டாய், இதையெல்லாம் திரும்பிப் பார்த்து, 431 00:33:45,859 --> 00:33:49,947 நீயே உன்னை எவ்வளவு நொந்துகொண்டாய் என்பதை 432 00:33:50,572 --> 00:33:53,575 உணர்வாய் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 433 00:33:54,701 --> 00:33:59,122 ஒருவேளை அப்போது... நான் உன்னைப் பார்ப்பது போலவே நீ உன்னைப் பார்ப்பாய், 434 00:34:00,999 --> 00:34:03,168 நீ எவ்வளவு பெரிய... 435 00:34:06,547 --> 00:34:10,592 முட்டாள் என்று! எவ்வளவு பெரிய முட்டாள்... 436 00:34:10,801 --> 00:34:12,135 அப்படி... 437 00:34:14,221 --> 00:34:15,806 மருத்துவ ரீதியாக முட்டாள் போல. 438 00:34:16,431 --> 00:34:20,185 ஏதோ ஒருவிதத்தில் எல்லோராலும் கவனிக்கப்படாமல் போனது. 439 00:34:28,110 --> 00:34:30,445 இன்னொரு முறை என்னை முட்டாள் என்று சொல்... 440 00:34:38,829 --> 00:34:41,998 மேயருக்கான போட்டியாளர் யோசி லெவி 441 00:35:27,211 --> 00:35:31,924 வருகை தந்த எல்லோருக்கும் நன்றி, அதோடு நூரிட் மற்றும் சமூக மையத்தின் 442 00:35:32,007 --> 00:35:34,301 விருந்தோம்பலுக்கு நன்றி. 443 00:35:34,801 --> 00:35:38,222 உங்களில் சிலருக்குத் தெரியும், 444 00:35:38,680 --> 00:35:42,184 எனக்கும் என் குடும்பத்துக்கும் இது சவாலான காலம், 445 00:35:42,976 --> 00:35:45,270 முக்கியமான, அன்புக்குரிய ஒரு விருந்தாளி ஒருவரால் 446 00:35:45,354 --> 00:35:48,023 இன்று இங்கே இருக்க முடியவில்லை. 447 00:35:48,565 --> 00:35:50,859 நான் நிச்சயமாக, எங்களுடைய காலியைப் பற்றி பேசுகிறேன். 448 00:35:52,361 --> 00:35:56,573 எனவே, இந்த அடுத்தப் பாடலை காலி மற்றும் எல்லா துயரங்களுக்கு மத்தியிலும் 449 00:35:57,241 --> 00:35:59,618 தன்னுடைய வருகையால் நம்மை கௌரவித்த 450 00:36:00,577 --> 00:36:05,624 அவளுடைய அற்புதமான தாயார் ஓர்னாவுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறோம். 451 00:36:06,834 --> 00:36:11,421 ஒருவேளை, ஏதோ ஒரு அதிசயத்தால், நாம் பேசுவதை தூரத்தில் காலி கேட்பாள். 452 00:36:14,550 --> 00:36:16,426 எல்டார், தயவுசெய்து... 453 00:36:30,482 --> 00:36:33,861 ஒரு தொலைதூர இடம் இருக்கிறது 454 00:36:34,611 --> 00:36:37,573 அங்கே ஒருவர் எப்போதும் உங்களுடன் இருப்பார் 455 00:36:38,115 --> 00:36:39,992 எப்போதும் உங்களுடையது 456 00:36:40,367 --> 00:36:44,121 நீங்கள் தனிமையில் இருக்கும்போது நீட்டப்படும் ஒரு கை... 457 00:36:44,204 --> 00:36:47,332 ஓர்னுஷ், எப்படி இருக்கிறாய்? 458 00:36:47,666 --> 00:36:49,877 - நீ டனீலாவை சந்தித்திருக்கிறாயா? - இல்லை. 459 00:36:49,960 --> 00:36:51,795 - எங்களுடைய மன்ற உறுப்பினர். - உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 460 00:36:51,879 --> 00:36:54,131 - உங்களை ஒருவருக்கொருவர் தெரியுமா? - இல்லை. 461 00:36:54,214 --> 00:36:56,133 ஆம், டிவி மூலமாக. 462 00:36:56,842 --> 00:36:59,511 - என்னுடைய அனுதாபங்கள். - நன்றி. 463 00:36:59,761 --> 00:37:04,349 நினைவாக வைத்துக்கொள்ள ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வோம். 464 00:37:08,395 --> 00:37:09,313 நன்றி. 465 00:37:09,396 --> 00:37:11,231 சரி, அதற்கு மீண்டும் போவோம்... 466 00:37:11,648 --> 00:37:12,649 சரியா? 467 00:37:13,525 --> 00:37:14,902 தமாரா? 468 00:37:15,944 --> 00:37:17,404 - நான்...? - நிச்சயமாக. 469 00:37:20,157 --> 00:37:25,204 இது நல்ல நேரம் இல்லைஎன்று எனக்குத் தெரியும்... வெளிப்படையாக... 470 00:37:27,414 --> 00:37:31,168 ஆனால் எனக்கு நிஜமாகவே தேவை... நீ எங்களுக்கு 471 00:37:31,251 --> 00:37:35,047 நிதி உதவி செய்ய முடியும் என்று நினைக்கிறாயா என்று தெரிய வேண்டும். 472 00:37:35,130 --> 00:37:37,549 எனக்குத் தெரிய வேண்டும். 473 00:37:37,633 --> 00:37:42,137 ஓர்னா, தயவுசெய்து. என் கணவர் இன்று தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். 474 00:37:44,389 --> 00:37:46,308 என் மகள் இன்று என்ன செய்கிறாள்? 475 00:37:48,602 --> 00:37:51,605 தமாரா, நான் உதவி கேட்கிறேன், 476 00:37:51,813 --> 00:37:56,026 பேச்சுகள் அல்லது பாடல்கள் இல்லை. நான்... எனக்குப் பணம் தேவை. 477 00:37:56,109 --> 00:38:00,405 சரி, நாங்கள் ஒரு நியாயமான தொகையைத் தருவோம், அதை அமைதியாகப் பேசுவோம், 478 00:38:00,489 --> 00:38:03,784 எந்தவித அழுத்தமும் இல்லாமல், இன்னும் பொருத்தமான நேரத்தில். 479 00:38:03,867 --> 00:38:06,078 - நிஜமாகத்தான், ஓர்னா. - நீ சொல்வது சரிதான், மன்னித்துவிடு. 480 00:38:06,411 --> 00:38:08,789 அதோடு கொஞ்சம் நன்றியுணர்ச்சி காயப்படுத்தாது. 481 00:38:10,290 --> 00:38:13,126 - சரியாக எதற்காக? - என்ன? 482 00:38:13,710 --> 00:38:16,380 எதற்கு நன்றியுணர்ச்சி? 483 00:38:16,630 --> 00:38:19,424 நீ "நன்றியுணர்ச்சி" என்று சொன்னாய், அதனால் நான் எதற்காக என்று கேட்கிறேன். 484 00:38:20,342 --> 00:38:24,221 காலி கைது செய்யப்பட்ட பிறகு என்னை அழைக்க இரண்டு மாதங்கள் எடுத்துக்கொண்டதற்கா? 485 00:38:24,471 --> 00:38:27,099 மரியாதையுடன் சொல்கிறேன், நாங்களும் சமாளிக்க நிறைய இருந்தது. 486 00:38:27,182 --> 00:38:29,226 எனவே எதற்கு நன்றியுணர்ச்சி? 487 00:38:29,476 --> 00:38:31,728 உண்மையில், இல்லை. சங்கடப்படுவதால், 488 00:38:32,521 --> 00:38:35,065 உங்களுக்கும் போதைப்பொருளுக்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக மக்கள் நினைப்பார்கள் என்றா? 489 00:38:35,399 --> 00:38:38,694 பென்னி நோய்வாய்ப்பட்டபோது நீங்கள் எல்லோரும் காணாமல் போனதற்கு நன்றியுணர்ச்சியா? 490 00:38:38,777 --> 00:38:41,780 - என்னை முற்றிலும் தனியாக விட்டதற்கா? - நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. 491 00:38:42,364 --> 00:38:45,033 நல்ல வேளை, நீ எப்படி நடந்துகொள்கிறாய் என்பதைப் பார்க்க பென்னி இங்கே இல்லை. 492 00:38:45,117 --> 00:38:49,079 - ஒருவேளை நீ அவனைப் பூட்டி வைத்திருப்பது நல்லது. - "அவனைப் பூட்டி வைத்திருப்பதா"? 493 00:38:49,162 --> 00:38:52,791 எப்போதும் உன்னைக் கவனித்துக்கொள்ளும் மனிதனை அப்படித்தான் நடத்துவாயா? 494 00:38:53,041 --> 00:38:58,046 நீ வெளியே போய், ஜாலியாக இருக்கும்போது காப்பாளரோடு விட்ட நாய் போலவா? 495 00:38:58,130 --> 00:39:01,049 நான்தான் அவனை விட்டுவிட்டு போகிறேனா? யோசி கடைசியாக எப்போது வந்தார்? 496 00:39:01,133 --> 00:39:03,969 வருந்துகிறேன், ஆனால் நீ இதை கெடுக்க நான் உன்னை விடமாட்டேன், 497 00:39:04,386 --> 00:39:07,306 குறிப்பாக இன்றிரவு, நாங்கள் காலிக்காக செய்ததற்குப் பிறகு. 498 00:39:09,224 --> 00:39:11,310 நீங்கள் நிஜமாகவே காலியைப் பற்றி கவலைப்படவில்லை என்று நினைக்கிறேன். 499 00:39:11,393 --> 00:39:13,353 உஷ்... ஓர்னா, தயவுசெய்து... 500 00:39:13,437 --> 00:39:16,440 நீங்கள் கரிசனத்தோடு இருப்பதாக காட்டிக்கொள்ள என்னைப் பயன்படுத்துவதும் முக்கியம் என்று 501 00:39:16,523 --> 00:39:18,609 - நான் நினைக்கிறேன்... - மெதுவாகப் பேசு... 502 00:39:18,692 --> 00:39:22,112 ஆனால் நீங்கள் என்னைப் பற்றியோ அவளைப் பற்றியோ கொஞ்சம்கூட கவலைப்படுவதில்லை. 503 00:39:22,321 --> 00:39:25,490 "எங்கள் காலி" என்று ஏன் சொன்னாய்? நீ அவளைக் கடைசியாக எப்போது பார்த்தாய்? 504 00:39:25,574 --> 00:39:28,243 - ஓர்னா, போதும். - நிஜமாகவே கேட்கிறேன், ஏனென்றால் எனக்கு 505 00:39:28,327 --> 00:39:31,038 நினைவிருக்கிறபடி, அது பாஸ்ஓவரின் போது, அப்போது அவளுக்கு 17 வயது, நீ அவளை 506 00:39:31,121 --> 00:39:33,707 - இரவு முழுவதும் "காலியா" என்று அழைத்தாய். - அபத்தம்... 507 00:39:33,790 --> 00:39:36,877 அவள் அங்கே மூன்று மாதங்களாக இருக்கிறாள், அது உனக்குப் புரிகிறதா? ஒன்றுமில்லை. 508 00:39:37,503 --> 00:39:38,795 ஒன்றுமில்லை, ஒரு வார்த்தையும் இல்லை. 509 00:39:38,879 --> 00:39:42,508 ஆனால் நான் இப்போது டிவியில் வருகிறேன், இல்லையா? அதனால் திடீரென்று அது "எங்கள் காலி" ஆகிவிட்டது. 510 00:39:42,716 --> 00:39:44,676 இதை உன்னிடம் கேட்கிறேன், 511 00:39:45,177 --> 00:39:48,472 நானும் யோசியும் இருக்கும் படம் செய்தித்தாள்களில் வர வேண்டுமா? ஆமாவா இல்லையா? 512 00:39:48,555 --> 00:39:53,018 - என்ன? - நானும் யோசியும் ஒன்றாக இருக்கும் படம், 513 00:39:53,101 --> 00:39:55,103 செய்தித்தாள்களில், உனக்கு அது வேண்டுமா? 514 00:39:55,312 --> 00:39:58,732 காலியின் மாமா, அவளுடைய இரண்டாவது அப்பா போன்றவர், 515 00:39:58,815 --> 00:40:02,194 மேயர் பதவிக்குப் போட்டியிடுவதைப் பற்றி நான் பேச விரும்புகிறாயா? 516 00:40:02,986 --> 00:40:05,948 நீ எவ்வளவு வருத்தமாக இருக்கிறாய், எவ்வளவு சோகமாக இருக்கிறாய் என்று சொல்ல 517 00:40:06,031 --> 00:40:07,741 நான் பத்திரிகையாளர்களை அனுப்ப வேண்டுமா... 518 00:40:07,824 --> 00:40:10,327 நீ ஒரு மகளை இழந்தது போல இருக்கிறது என்று சொல்லவா? 519 00:40:13,163 --> 00:40:15,082 அது கொஞ்சம் பணத்துக்கு மதிப்பானது இல்லையா? 520 00:40:15,791 --> 00:40:18,210 பதில் சொல்ல வேண்டாம், தலையாட்டு. 521 00:40:23,674 --> 00:40:25,133 நல்லது. 522 00:40:25,217 --> 00:40:27,344 நன்றி, இது ஒரு அழகான மாலைப்பொழுதாக இருந்தது. 523 00:40:28,846 --> 00:40:30,347 பை. 524 00:40:37,354 --> 00:40:42,818 கிரியாட் அடா சமூக மையம் 525 00:41:21,398 --> 00:41:25,235 தனிப்பட்ட எண் 526 00:41:29,656 --> 00:41:31,116 ஹலோ? 527 00:41:32,284 --> 00:41:34,411 திருமதி. லெவி? ஓர்னா லெவி? 528 00:41:35,412 --> 00:41:37,456 என்ன, மீண்டும் அதைப் பற்றி பேசுகிறோமா? 529 00:41:37,539 --> 00:41:39,416 உன் மகளைப் பற்றி பேச வேண்டும். 530 00:41:39,750 --> 00:41:42,711 ஆம், அதிர்ச்சியாக இருக்கிறது. சரி, நான் ஃபோனை வைக்கிறேன். 531 00:41:43,212 --> 00:41:44,421 என்னால் உனக்கு உதவ முடியும். 532 00:41:45,589 --> 00:41:48,550 உண்மையில், இந்த முறை நான் உனக்கு உதவுகிறேன். 533 00:41:48,842 --> 00:41:52,095 சொல், உன் வாழ்க்கையை இப்படித்தான் கழிக்கிறாயா? 534 00:41:52,179 --> 00:41:54,765 சிறையில் இருக்கும் மகளின் அம்மாவை துன்புறுத்துவதா? 535 00:41:54,848 --> 00:41:59,061 நீ என்ன நான்காம் வகுப்பிலா இருக்கிறாய்? 536 00:41:59,311 --> 00:42:02,856 இரவில் உன் பரிதாபகரமான படுக்கையில் தூங்குவதற்கு முன் எப்போதாவது அதைப் பற்றி யோசித்திருக்கிறாயா? 537 00:42:02,940 --> 00:42:06,401 நீ ஏன் இப்படி இருக்கிறாய் என்று எப்போதாவது நீயே உன்னைக் கேட்டிருக்கிறாயா? 538 00:42:06,485 --> 00:42:11,198 உன் வாழ்க்கையை இப்படித்தான் கற்பனை செய்கிறாயா, ஒளியும் அன்புமாய்... 539 00:42:12,824 --> 00:42:15,285 என்ன... நான் என்ன செய்வது? 540 00:42:15,786 --> 00:42:17,829 என்ன? இல்லை, எனக்கு... எனக்குப் புரியவில்லை. 541 00:42:19,581 --> 00:42:21,291 இதோ, உன் அம்மாவிடம் பேசு. 542 00:42:22,751 --> 00:42:25,170 அம்மா? நீங்களா பேசுகிறீர்கள்? 543 00:42:25,254 --> 00:42:27,214 - காலி? - அம்மா...? 544 00:42:27,297 --> 00:42:30,175 திருமதி. லெவி, உன் அரசாங்கம் உன்னிடம் பொய் சொல்கிறது. 545 00:42:30,676 --> 00:42:34,179 என்னால் உதவ முடியும். நீ ஒரு முகவரியை எழுதிக்கொள்ள வேண்டும். 546 00:43:24,396 --> 00:43:26,398 வசனத் தமிழாக்கம் அருண்குமார்