1 00:01:08,735 --> 00:01:09,736 இதை வெளியிடு. 2 00:01:11,738 --> 00:01:13,323 அப்ப வானவேடிக்கையை என்ன பண்றது? 3 00:01:15,117 --> 00:01:16,159 சொல்றதை செய். 4 00:01:18,620 --> 00:01:21,290 ஊரடங்கு மாலை 7 மணி - காலை 7 மணி அடுத்த அறிவிப்பு வரும் வரை 5 00:01:21,373 --> 00:01:23,417 அனைத்து பொழுதுபோக்கு பகுதிகளும் மூடப்பட வேண்டும் 6 00:01:24,251 --> 00:01:25,252 ஹே, ரூத். ம்… 7 00:01:27,379 --> 00:01:29,423 நீங்க இன்னைக்கு இங்க இருக்கணும். 8 00:01:30,340 --> 00:01:32,843 கண்டிப்பா. நான் 3:00 மணிக்குப் போனா போதும். 9 00:01:33,343 --> 00:01:36,763 இல்ல. அதைத் தான் நான் சொல்ல வந்தேன். சரி. 10 00:01:39,725 --> 00:01:42,019 இது பைத்தியக்காரத்தனம், ஏன் இப்படி என்னை அடைச்சு வச்சிருக்கீங்க? 11 00:01:42,769 --> 00:01:44,479 திரும்பவும் வாதிட எனக்கு நேரமில்ல. 12 00:01:44,563 --> 00:01:47,816 ஒரு 30 நிமிஷம் வெளிய போறேன். உனக்கு சாப்பிட ஏதாவது வேணும்னா, ரூத் கிட்ட கேளு. 13 00:01:50,777 --> 00:01:53,488 இந்த 30 நிமிஷத்துக்கு, எப்படி தப்பிச்சுப் போகலாம்னு நீ நினைக்கிறது புரியுது. 14 00:01:53,572 --> 00:01:56,366 அதனால ஒவ்வொரு பத்து நிமிஷத்துக்கும் நான் உன்னைக் கூப்பிடப் போறேன். 15 00:01:57,951 --> 00:01:59,244 நான் என்ன பண்ணணும்? நான்… 16 00:02:00,120 --> 00:02:03,749 இந்த பட்டனை அழுத்தி, அப்புறம்… 17 00:02:03,832 --> 00:02:05,959 எப்படி… என்ன… எப்படி நான்… என்ன பண்ணணும்? 18 00:02:06,585 --> 00:02:08,586 நீ அந்த எழவு ஃபோனை எடுத்தா போதும். 19 00:02:08,669 --> 00:02:10,672 இப்ப கெட்ட வார்த்தையெல்லாம் பேசலாமா? 20 00:02:11,673 --> 00:02:14,343 ஆமா, ஃபாதர் தூக்குல தொங்கினது உண்மையா? 21 00:02:17,054 --> 00:02:18,180 அவர் உங்க நண்பர் தானே? 22 00:02:24,770 --> 00:02:26,605 அதைப் பத்தி நான் திரும்ப வரும் போது பேசலாம். 23 00:02:47,209 --> 00:02:51,296 எனக்குப் புரியல. சில வாரத்துக்கு முன்னால தான் பார்ல அவரைப் பார்த்தேன். 24 00:02:52,005 --> 00:02:53,674 அவர் காபி குடிக்க வந்தார். 25 00:02:54,925 --> 00:02:56,009 அப்படின்னு நினைக்கிறேன். 26 00:02:56,760 --> 00:02:58,804 தெரியல. நாங்க பேசல. 27 00:02:59,555 --> 00:03:01,598 எப்படியும் அவரை எனக்கு ரொம்ப தெரியாது. 28 00:03:07,354 --> 00:03:08,647 நன்றி, பால். 29 00:03:09,439 --> 00:03:13,861 நீங்கள் பேச வேண்டும் என்ற கட்டாயமில்லை என்று மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். 30 00:03:28,500 --> 00:03:31,003 என் கண் திறந்துள்ளது 31 00:03:38,886 --> 00:03:39,970 இங்க ஒண்ணுமில்ல. 32 00:03:41,763 --> 00:03:43,140 ஆ, எப்போதும் ஏதாவது இருக்கும். 33 00:03:44,558 --> 00:03:46,310 இங்க என்ன எழவு தான் நடந்துச்சு? 34 00:03:46,393 --> 00:03:48,145 ஏன் எல்லாத்தையும் எரிச்சிருக்கார்? 35 00:03:48,228 --> 00:03:50,606 உருப்படியா இருக்கிற எல்லாத்தையும் எடு. 36 00:03:54,776 --> 00:03:55,777 சரி. 37 00:03:55,861 --> 00:03:58,989 என்ன நடக்குதுன்னு மக்கள்கிட்ட சொல்லணும், அல்லது மக்கள் சாக ஆரம்பிக்கப் போறாங்க. 38 00:04:01,658 --> 00:04:03,911 - விஷயத்தை கட்டுக்குள்ள வச்சிக்க முயற்சிக்கிறேன். - ஆமா. 39 00:04:03,994 --> 00:04:08,081 உன்னோட இந்த குட்டி ஊரடங்கு உதவாது. உன்னால உன் பையனைக் கூட கட்டுப்படுத்த முடியாது. 40 00:04:08,165 --> 00:04:10,334 சரி. சரி. 41 00:04:14,922 --> 00:04:15,923 சரி. 42 00:04:32,147 --> 00:04:33,482 என்னாச்சு? 43 00:04:36,985 --> 00:04:37,986 அவர்… 44 00:04:38,070 --> 00:04:39,571 அவர் என்னைக் கூப்பிட்டிருக்கார். 45 00:04:44,201 --> 00:04:45,494 இன்னொரு நம்பரையும். 46 00:04:47,788 --> 00:04:48,789 நிறைய முறை. 47 00:04:48,872 --> 00:04:49,873 அதை டயல் பண்ணு. 48 00:05:01,760 --> 00:05:02,886 ஹலோ? 49 00:05:04,847 --> 00:05:06,056 ஹாய். இது… 50 00:05:08,100 --> 00:05:09,434 யார் நீங்க? 51 00:05:09,518 --> 00:05:10,686 நீங்க யாரு? 52 00:05:11,395 --> 00:05:12,855 சாரி. நான்… 53 00:05:13,355 --> 00:05:16,191 என் ஃபோன்ல உங்க நம்பரைப் பார்த்தேன், நான்… 54 00:05:16,275 --> 00:05:17,484 சே. 55 00:05:20,195 --> 00:05:21,405 நீ முயற்சி பண்ணு. 56 00:05:21,905 --> 00:05:23,532 - ஆமா! - எடுக்க மாட்டான். 57 00:05:23,615 --> 00:05:25,158 கால் அதே நம்பர்ல இருந்து போகும். 58 00:05:27,286 --> 00:05:28,495 ஹலோ? 59 00:05:28,579 --> 00:05:29,705 ஹாய். எப்படி இருக்கீங்க? 60 00:05:30,873 --> 00:05:32,040 நல்லா இருக்கேன். 61 00:05:35,711 --> 00:05:37,379 ஃபாதர் ப்ரைஸ் உங்க நம்பரைக் கொடுத்தார். 62 00:05:38,046 --> 00:05:39,673 உங்களுக்கு அப்பாயிண்ட்மென்ட் வேணுமா? 63 00:05:40,632 --> 00:05:42,551 - ஆமா. - ஆமா வேணும். 64 00:05:43,051 --> 00:05:44,303 ஒரு 15 நிமிஷம் கொடுங்க. 65 00:05:45,429 --> 00:05:46,847 அது… சரி. நீங்க எங்க இருக்கீங்க? 66 00:05:51,268 --> 00:05:52,269 12 பர்ச் தெரு. 67 00:06:07,367 --> 00:06:08,368 உள்ள வாங்க! 68 00:06:21,089 --> 00:06:22,090 ஹே. 69 00:06:29,723 --> 00:06:30,724 நன்றி. 70 00:06:36,897 --> 00:06:37,898 இது அருமையா தோணுது. 71 00:06:42,319 --> 00:06:43,320 சரி. 72 00:06:51,286 --> 00:06:52,287 என்ன விஷயம்? 73 00:07:06,552 --> 00:07:07,678 என்ன இது? 74 00:07:13,809 --> 00:07:15,102 அடடா. 75 00:07:16,436 --> 00:07:18,355 சரியான சரக்கு. 76 00:07:18,438 --> 00:07:19,606 வாவ். 77 00:07:23,277 --> 00:07:24,278 டாட் ஓ'கானர்? 78 00:07:25,320 --> 00:07:26,738 ஹே, பேட்டி. நீ எப்படி இருக்க? 79 00:07:26,822 --> 00:07:27,990 நல்லா இருக்கேன். 80 00:07:28,532 --> 00:07:31,243 - கடவுளே. நீ ஒரு டிரக் டீலரா? - இல்ல, இல்ல. 81 00:07:31,326 --> 00:07:32,327 நான் ஒரு ஷாமன், ஆவிகளோடு பேசுறவன். 82 00:07:32,828 --> 00:07:34,037 அது கோகேய்னா? 83 00:07:34,121 --> 00:07:35,122 ஆமா. 84 00:07:36,331 --> 00:07:38,417 டாடும், நானும் ஸ்கூல்ல சேர்ந்து படிச்சோம். நாங்க… 85 00:07:38,500 --> 00:07:40,002 இது… இது என்ன? 86 00:07:40,085 --> 00:07:44,923 நண்பா, இது ஒரு பயங்கரமான காளான். 87 00:07:45,007 --> 00:07:48,135 நீங்க போக விரும்புறீங்களோ இல்லையோ, நீங்க போக வேண்டிய இடத்துக்கு, 88 00:07:48,218 --> 00:07:50,804 இது உங்களைக் கூட்டிட்டுப் போகும். 89 00:07:50,888 --> 00:07:52,806 பழைய ஆட்கள் இதை ஞானக்கண் அப்படின்னு சொல்லுவாங்க. 90 00:07:53,473 --> 00:07:55,225 இந்தத் தீவுல மட்டும் தான் விளையுது. 91 00:07:55,309 --> 00:07:57,227 உங்க மூணாவது கண்ணுக்கு லேசர் ஆப்பரேஷன் பண்ண மாதிரி. 92 00:07:57,311 --> 00:07:58,896 அதை அப்படியே திறந்திடும். 93 00:07:58,979 --> 00:07:59,980 டமால்! 94 00:08:01,940 --> 00:08:06,862 இதை ஏன் ஃபாதர் எடுத்துகிட்டார்னு எனக்குப் புரியல. 95 00:08:06,945 --> 00:08:08,363 ம், அவர் பதில்களைத் தேடிட்டிருந்தார். 96 00:08:08,447 --> 00:08:09,531 அவர் தற்கொலை பண்ணிக்கிட்டார். 97 00:08:12,326 --> 00:08:13,327 சே. 98 00:08:18,290 --> 00:08:20,292 அவருக்குப் பதில்கள் பிடிக்கல போல. 99 00:08:21,293 --> 00:08:22,294 சே. 100 00:08:22,794 --> 00:08:24,922 இதை எடுத்துக்கொண்ட ஒரு நண்பனை எனக்குத் தெரியும். 101 00:08:25,005 --> 00:08:26,298 உனக்கு பிரையன் மோரிஸன் ஞாபகம் இருக்கா? 102 00:08:26,381 --> 00:08:28,217 "ப்ரை பையனா"? எட்டாவது வகுப்பில அம்மாவோட காரைத் திருடினானே? 103 00:08:28,300 --> 00:08:30,511 காட்டில அதை கவுத்திட்டானே? பைத்தியம். 104 00:08:30,594 --> 00:08:34,306 எப்படியோ, பிரையன் வழியில ஏதோ பார்த்திருக்கான். அது அவனை முழுசா மாத்திடுச்சு. 105 00:08:34,890 --> 00:08:37,392 ஏதோ நடந்திருக்கு, அதைப் பத்தி பேச மாட்டேன்னுட்டான். 106 00:08:37,476 --> 00:08:40,187 ஆனால் அதுக்குப் பிறகு பெரும்பாலும் சாந்தமா மாறிட்டான். 107 00:08:40,270 --> 00:08:43,232 சண்டை போடுறதில்ல, பொண்ணுங்களைப் பார்த்து கத்துறதில்ல. 108 00:08:44,149 --> 00:08:45,526 ஆனாலும் அவங்க அவனுக்கு ஊட்ட வேண்டிதா இருந்துச்சு. 109 00:08:45,609 --> 00:08:47,611 அவனுக்குப் பெரும்பாலான உடலியக்கம் பாழாயிடுச்சு. 110 00:08:48,612 --> 00:08:49,696 இருந்தாலும் சந்தோஷமான பேர்வழி. 111 00:08:50,781 --> 00:08:52,908 ஆனால் ராத்திரியில அவனை உட்கார வைக்கிறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டாங்க. 112 00:08:52,991 --> 00:08:59,331 என்னவோ, அவன் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை வரைஞ்சிட்டே இருந்தான். 113 00:08:59,414 --> 00:09:02,835 அதை அவன் காட்டில பார்த்திருக்கணும். அது இங்க ஒண்ணு இருந்துச்சு. 114 00:09:04,419 --> 00:09:06,797 அது ஒரு பழங்காலத்து… 115 00:09:07,965 --> 00:09:10,676 ஏதோ மதத்தோட அடையாளம் மாதிரி. 116 00:09:10,759 --> 00:09:14,096 அது ஒரு புனிதமான வடிவம் மாதிரி, எளிதா பண்ண முடியாது. 117 00:09:19,101 --> 00:09:20,102 ஆமா. 118 00:09:20,811 --> 00:09:22,062 நல்லா பாருங்க. 119 00:09:24,147 --> 00:09:26,275 - சில கதவுகள் மூடிதான் இருக்கணும். - ம், ஆமா. 120 00:09:26,358 --> 00:09:27,609 சரிதானே, மக்களே? 121 00:09:28,360 --> 00:09:29,444 இதை எப்படி எடுத்துக்கிறது? 122 00:09:31,071 --> 00:09:34,533 ம், உங்களுக்கு ஓகேன்னா, 35 டாலருக்கு ஒரு கஷாயம் பண்ணி தரேன். 123 00:09:34,616 --> 00:09:36,702 - இல்ல வேண்டாம். - நீங்களும் உங்க நண்பர்களும் 124 00:09:36,785 --> 00:09:38,453 அமைதி மையத்தில காசு கொடுக்காம தங்கிக்கலாம். 125 00:09:38,537 --> 00:09:39,538 ரெடி பண்ணு. 126 00:09:41,957 --> 00:09:43,125 சரி. 127 00:09:43,834 --> 00:09:45,335 ஒரு நிமிஷம் நாங்க தனியா பேசலாமா? 128 00:09:45,419 --> 00:09:48,380 கண்டிப்பா. ஆன்மாவோட வளர்ச்சிக்கு அவரசமே இல்ல, மக்களே. 129 00:09:48,922 --> 00:09:51,175 இந்த பூஞ்சைக்குள்ள ஒண்ணும் இந்தத் தீவோட ரகசியங்கள் இல்ல. 130 00:09:51,258 --> 00:09:52,885 ஓரமா உட்கார்ந்து முணுமுணுக்க வைக்கும், அவ்வளவு தான். 131 00:09:52,968 --> 00:09:55,304 பாரு, தீவுக்கு இந்த சுற்றுலா பயணிகள் எல்லாரையும் வரவச்சிட்டு, 132 00:09:55,387 --> 00:09:57,723 இந்த பயமுறுத்தும் காளானை நீ எடுத்துக்க விரும்பலேன்னா, 133 00:09:57,806 --> 00:09:59,850 அதுக்குப் பிறகு உனக்குத் தான் பிரச்சினை. 134 00:10:14,156 --> 00:10:15,240 விக் அதை எடுத்துக்குவார். 135 00:10:16,325 --> 00:10:17,326 அருமை. 136 00:10:18,035 --> 00:10:19,786 இல்ல. கண்டிப்பா வானவேடிக்கை இருக்காது. 137 00:10:19,870 --> 00:10:21,788 ஊரடங்குன்னு சொன்னா அவங்களுக்குப் புரியாதா? 138 00:10:21,872 --> 00:10:25,042 மக்கள் கோபமா இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியணும். 139 00:10:25,125 --> 00:10:29,296 ஊரடங்கை ரத்துசெய்றதுக்கு கர்ட் எல்லாரையும் ஒண்ணு சேர்க்கிறான். 140 00:10:30,214 --> 00:10:31,715 நான் 15 நிமிஷத்துல வந்திடுறேன். 141 00:10:33,258 --> 00:10:34,551 சே. 142 00:10:36,887 --> 00:10:38,305 - நான் திரும்பிப் போகணும். - ம்-ம். 143 00:10:38,388 --> 00:10:39,640 நான் அவர் கூட இருக்கேன். 144 00:10:39,723 --> 00:10:42,643 - கண்டிப்பா இதைப் பண்ணணுமா? - இதை முயற்சி பண்றது தான் ஒரே வழி. 145 00:10:42,726 --> 00:10:44,728 தெ-தெரியும், ஆனால் இது… தெரியல. 146 00:10:44,811 --> 00:10:47,898 கடவுளே. இது பார்க்க இன்னும் மோசமா இருக்கு. 147 00:10:48,690 --> 00:10:50,275 ஆனால் சுவை தெரியல, இல்லையா? 148 00:10:50,359 --> 00:10:51,360 என்ன? 149 00:10:58,742 --> 00:11:01,620 அது… இதுல இருக்கா? 150 00:11:07,292 --> 00:11:10,921 நாங்க விக் எடுத்துக்கப் போறதா தானே சொன்னோம். 151 00:11:11,004 --> 00:11:12,256 ஆமா. நீங்க தான் விக். 152 00:11:13,882 --> 00:11:17,469 - கடவுளே. கடவுளே! - சரி, சரி. 153 00:11:17,553 --> 00:11:20,472 - அதை… அதை கொஞ்சம் கொஞ்சமா குடிங்க. - என்ன? நான் தான் குடிச்சிட்டேனே! 154 00:11:20,556 --> 00:11:23,183 நான் குடிச்சிருக்கக் கூடாது! நான் குடிச்சிருக்கக் கூடாது! 155 00:11:23,267 --> 00:11:24,726 அதுவும் இப்ப! இன்னைக்கு! 156 00:11:24,810 --> 00:11:26,061 போய் வாந்தி எடுங்க. 157 00:11:26,144 --> 00:11:27,187 - என்னால முடியாது! - அமைதியா இருங்க. 158 00:11:27,271 --> 00:11:30,357 - இது வெறும் 12 மணிநேர அனுபவம் தான். - கடவுளே! 159 00:11:30,440 --> 00:11:31,567 - கடவுளே! - டாம்… 160 00:11:31,650 --> 00:11:33,777 கடவுளே. ஐயோ, கடவுளே. 161 00:11:33,861 --> 00:11:35,487 வாந்தி எடுக்கிறது தான் நல்லது! 162 00:11:38,323 --> 00:11:39,741 என்னால முடியாது. நான் அப்படி வாந்தி எடுத்ததே இல்ல. 163 00:11:39,825 --> 00:11:42,202 - இந்தா. - நிறுத்து, நிறுத்து! 164 00:11:42,286 --> 00:11:43,871 அட, டாம். உஷ்! 165 00:11:43,954 --> 00:11:45,372 நிறுத்து, நிறுத்து, நிறுத்து, நிறுத்து! 166 00:11:46,290 --> 00:11:47,749 கடவுளே. ஏவான். 167 00:11:48,625 --> 00:11:50,002 ஏவானை இப்ப என்ன பண்றது? 168 00:11:50,586 --> 00:11:52,171 கவலைப்படாதீங்க. நான் பார்த்துக்கிறேன். 169 00:11:53,088 --> 00:11:54,590 என்ன? நீ என்ன பண்ண போற? 170 00:11:59,261 --> 00:12:00,971 கவனம். 171 00:12:01,054 --> 00:12:03,515 இந்த அமைதி மையத்தில நீங்க ஓய்வெடுக்கப் போறீங்க. 172 00:12:05,100 --> 00:12:06,310 நல்லது. 173 00:12:06,393 --> 00:12:09,438 உட்காருங்க. இது கவனத்தை ஒருங்கிணைக்கும் படுக்கை. 174 00:12:09,521 --> 00:12:11,190 ம்… ஆமா. அப்படித் தான். 175 00:12:11,273 --> 00:12:13,567 நல்லா மல்லாக்கப் படுங்க. அப்படி. 176 00:12:13,650 --> 00:12:16,278 அப்படித் தான். 177 00:12:18,488 --> 00:12:20,532 சாரி. இது வெளிய வந்ததை நான் கவனிக்கல. 178 00:12:20,616 --> 00:12:21,992 இங்க வா, ப்ரிட்ஜெட். 179 00:12:22,075 --> 00:12:25,120 இதுக்கு சீக்கிரம் 50 வயசு ஆகப் போகுது, அதனால ஊர் சுத்த ஆசை வந்திடுச்சு. 180 00:12:25,704 --> 00:12:28,498 டாம். டாம்! சொல்றதைக் கேளு. 181 00:12:28,582 --> 00:12:30,125 சொல்றதைக் கேளு. உட்காரு. உட்காரு. 182 00:12:30,751 --> 00:12:33,921 இதை இப்ப வீணடிச்சிடாத. 183 00:12:34,505 --> 00:12:36,590 அந்த பதில்களைக் கண்டுபிடி, இப்பவே. 184 00:12:36,673 --> 00:12:37,674 - என்ன? - ஆமா. 185 00:12:38,342 --> 00:12:39,343 நல்ல செய்தி. 186 00:12:40,302 --> 00:12:43,347 ஏவான் நல்லா இருக்கான், அவன் ரூத் வீட்ல தங்கப் போறான். 187 00:12:43,430 --> 00:12:44,932 அப்பாடா. யார் கிட்ட பேசுன? 188 00:12:45,015 --> 00:12:46,558 - ஏவான் கிட்ட. - கடவுளே. 189 00:12:46,642 --> 00:12:48,018 - நான் திரும்பப் போகணும். - டாம். 190 00:12:48,101 --> 00:12:51,104 நாம் இங்க இருந்து போகலாம்னு நினைக்கிறேன். இவர் பார்க்க தெளிவாகத் தான் இருக்காரு. 191 00:12:51,188 --> 00:12:53,440 - ஆமா. - இங்க தங்குறது தான் நல்லதுன்னு நினைக்கிறியா? 192 00:12:53,524 --> 00:12:56,276 நிச்சயமா. ஆனால் நான் வெளிய போகணும். 193 00:12:56,360 --> 00:12:58,028 என்னோட கேர்ள்ஃப்ரெண்டோட பூனை காணாம போயிடுச்சு. 194 00:12:58,111 --> 00:13:00,030 நான் வர வரைக்கும், நீ அவருக்கு வழிகாட்டலாம். 195 00:13:00,113 --> 00:13:01,740 - என்ன? - சும்மா அமைதியா இரு. 196 00:13:01,823 --> 00:13:05,661 நீங்க என்ன பண்ணாலும் சரி, கண்ணாடியை மட்டும் பார்க்காதீங்க. 197 00:13:05,744 --> 00:13:07,079 பார்த்துக்கோங்க, விக். 198 00:13:09,373 --> 00:13:12,084 நீங்க பயந்து பிரச்சினை பண்ணா என்ன பண்றது? நீங்க பயந்து பிரச்சினை பண்ணா என்ன பண்றது? 199 00:13:12,167 --> 00:13:13,710 இப்பவே நீ என்னை ஆஃபீஸுக்குக் கூட்டிட்டு போ. 200 00:13:13,794 --> 00:13:17,256 - நீ எதையாவது பார்த்தியா? - என்னை ஆஃபீஸுக்குக் கூட்டிட்டு போங்க. இப்பவே. 201 00:13:21,009 --> 00:13:22,636 சும்மா, சும்மா என்னைப் பார்த்து கத்தாதீங்க. 202 00:13:24,179 --> 00:13:25,305 இங்க எப்படி வந்தோம்? 203 00:13:25,389 --> 00:13:26,515 விக் எங்க? 204 00:13:27,349 --> 00:13:28,809 அவர் போகட்டும்னு நீங்க தான் சொன்னீங்க. 205 00:13:29,393 --> 00:13:31,270 நீங்க கண்டுப்பிடிக்காத பதில்களை அவர் கண்டுப்பிடிக்கப் போறதா சொன்னாரு. 206 00:13:31,353 --> 00:13:33,814 அதுக்கு அர்த்தம் எனக்குத் தெரியாது, ஆனால்… 207 00:13:34,314 --> 00:13:35,315 உனக்கு அது கேட்குதா? 208 00:13:42,531 --> 00:13:44,157 ஒரு பெயரை மட்டும் சொல்லுங்க, டாம். 209 00:13:44,783 --> 00:13:47,369 ஏவான் எங்க? என் பையன் எங்க? 210 00:13:48,579 --> 00:13:49,705 மூணாவது முறை. 211 00:13:51,957 --> 00:13:53,000 ஏவான் இங்க இல்ல. 212 00:13:54,376 --> 00:13:56,336 ஆனால் அவனைக் கண்டுப்பிடிச்சிடுவோம். 213 00:13:57,087 --> 00:13:58,547 அவன் கூட இருப்பானே, அந்த பையன் பேர் என்ன? 214 00:13:59,631 --> 00:14:00,632 பி.ஜே. கிலான்வில்லா? 215 00:14:00,716 --> 00:14:02,843 பி.ஜே. கிலான்வில் ஒரு மோசமான, மோசமான… 216 00:14:04,469 --> 00:14:05,470 பையன். 217 00:14:08,932 --> 00:14:10,100 உனக்கு அந்த சத்தம் கேட்குதா? 218 00:14:10,893 --> 00:14:13,854 இல்ல, டாம். எனக்கு அந்த சத்தம் கேட்கல. 219 00:14:14,354 --> 00:14:16,732 நல்லா ஆழமா மூச்சை இழுத்து விடுங்க. 220 00:14:20,277 --> 00:14:21,653 இவருக்கு என்ன ஆச்சு? 221 00:14:22,988 --> 00:14:25,073 ஒண்ணுமில்ல. அவர் சும்மா… 222 00:14:25,616 --> 00:14:27,534 இந்தாங்க. உங்க ஃபைலைப் பிடிச்சுக்கோங்க. 223 00:14:27,618 --> 00:14:29,995 வெளிய எவ்வளவு ஆபத்துன்னு அவனுக்குத் தெரியாது. 224 00:14:31,371 --> 00:14:33,498 பெ-பெட்ரிஷியா, அவனுக்கு… நான் சொல்றது கேட்குதா? 225 00:14:33,582 --> 00:14:35,417 வெளிய எவ்வளவு ஆபத்துன்னு அவனுக்குத் தெரியாது! 226 00:14:36,835 --> 00:14:37,920 ஹலோ. 227 00:14:38,003 --> 00:14:39,254 கடவுளே! 228 00:14:42,508 --> 00:14:44,468 இந்த இடத்தில பொண்ணுங்க கொஞ்சம் கவனமா இருக்கணும். 229 00:14:44,551 --> 00:14:45,802 - ஏன்? - ஏன்? 230 00:14:47,471 --> 00:14:49,681 அங்க இருக்கிற வீடு. அது… 231 00:14:49,765 --> 00:14:52,392 அந்த காலத்தில, பொண்ணுங்களுக்கு, யாரோ ஃபோன்ல கூப்பிட்டு எதுவும் பேசாம வச்சிடுவாங்க. 232 00:14:55,020 --> 00:14:57,606 கடைசியில பார்த்த இந்த வீட்டில இருந்தவன் தான் அப்படி கூப்பிட்டிருக்கான். 233 00:14:57,689 --> 00:15:01,360 அவனுக்கு புத்தி பேதலிச்சு, 234 00:15:01,443 --> 00:15:05,280 ஒரு நாள் ராத்திரி வெளிய போய், கொஞ்சம் பொட்டப் புள்ளைங்களைக் குத்தி கொன்னுட்டான். 235 00:15:05,364 --> 00:15:07,241 பொட்டைப்புள்ளைங்களா? 236 00:15:07,324 --> 00:15:09,576 மன்னிக்கணும், மஹாராணியே, கொஞ்சம் இளம்பெண்களைக் குத்தி கொன்னுட்டான். 237 00:15:10,077 --> 00:15:11,078 நன்றி. 238 00:15:11,161 --> 00:15:12,162 சீரியஸா சொல்றேன். அவங்க… 239 00:15:12,246 --> 00:15:16,375 அவங்க அவனைக் கொல்ல முயற்சித்ததா எங்க மாமா சொன்னார். அவனைப் பூச்சாண்டின்னு சொல்வாங்க. 240 00:15:16,458 --> 00:15:19,127 அவங்க அவனைச் சுட்டும், அவன் சாகல. 241 00:15:19,211 --> 00:15:20,212 அதனால அவங்க… 242 00:15:21,755 --> 00:15:23,715 அவனை பேஸ்மென்ட்ல புதைச்சு, 243 00:15:23,799 --> 00:15:25,968 அப்படியே கான்கிரீட் போட்டு மூடிட்டாங்க. 244 00:15:26,051 --> 00:15:27,344 - உண்மையாவா சொல்றான்? - ஆமா. 245 00:15:27,427 --> 00:15:29,763 இங்க அமைதியா இருக்கணும், எப்ப… 246 00:15:31,431 --> 00:15:32,975 என்ன நடக்கும்னு தெரியாது. 247 00:15:39,648 --> 00:15:41,567 கடவுளே! 248 00:15:41,650 --> 00:15:42,693 - கடவுளே! - கடவுளே! 249 00:15:42,776 --> 00:15:43,902 - சாரி. - உனக்கு என்ன பிரச்சினை? 250 00:15:43,986 --> 00:15:45,737 - கடவுளே. - சரி மக்களே நாம நண்பர்களா இருக்கலாம், 251 00:15:45,821 --> 00:15:48,198 கஞ்சா குடிக்கலாம், நாம சிரிச்சு சந்தோஷமா இருக்கலாம், சரியா? 252 00:15:48,282 --> 00:15:51,243 சரி. அவன் வந்தான்னா மட்டும் என்கிட்ட சொல்லுங்க. 253 00:15:51,326 --> 00:15:52,411 ரொம்ப நன்றி. 254 00:15:54,288 --> 00:15:55,289 நல்லா பேசுனாங்க. 255 00:15:57,207 --> 00:15:58,500 கடவுளே. 256 00:16:02,296 --> 00:16:03,505 என்கிட்ட கேட்டியா? 257 00:16:05,841 --> 00:16:06,925 ஊரடங்கு? 258 00:16:07,426 --> 00:16:10,262 பாரு, என் ஸ்டேஷன்ல, ஆறு செல் தான் இருக்கு, 259 00:16:10,345 --> 00:16:14,057 இன்னைக்கு ராத்திரி வெளிய போனா, எல்லாரும் வெளிய தான் சுத்திட்டிருப்பாங்க, 260 00:16:14,141 --> 00:16:17,519 ஏன்னா, இன்னைக்கு ராத்திரி வானவேடிக்கை இருக்கு, 261 00:16:17,603 --> 00:16:19,730 இப்ப இவங்கள்ல எந்த ஆறு பேரை நான் கைது பண்றது? 262 00:16:21,899 --> 00:16:24,109 என்ன? சொல்லு. என்ன பண்றதுன்னு சொல்லு. 263 00:16:27,029 --> 00:16:29,615 சரி, இதை ரொம்ப யோசிச்சு முடிவு எடுத்திருக்கேன்னு தோணுது. நல்லது. 264 00:16:29,698 --> 00:16:31,283 பெட்ரிஷியா, வா. 265 00:16:31,366 --> 00:16:32,701 நாம இப்ப ஸ்டேஷனுக்குப் போறோம். 266 00:16:32,784 --> 00:16:34,578 நானா? எதுக்கு? 267 00:16:34,661 --> 00:16:36,622 ம், உன் ஸ்டேட்மென்ட்டை வாங்கணும். 268 00:16:38,415 --> 00:16:40,334 - அப்புறமா பார்க்க முடியாதா? - முடியாது, 269 00:16:40,417 --> 00:16:44,296 ஏன்னா நேத்து கடல்ல முழிச்சவங்க சிலர் புகார் கொடுக்க வந்திருக்காங்க. 270 00:16:45,464 --> 00:16:46,590 சரி, சரி. 271 00:16:47,799 --> 00:16:51,178 நான் இப்ப வந்துடுறேன், நீங்க, ம், நீங்க இங்கேயே உட்கார்ந்திருங்க. 272 00:16:52,012 --> 00:16:53,013 சரியா? 273 00:16:56,058 --> 00:16:57,100 கதவைத் திறக்காதீங்க. 274 00:17:23,377 --> 00:17:24,377 ஜெர். 275 00:17:25,295 --> 00:17:27,256 விக். நீ இங்க என்ன பண்ற? 276 00:17:27,756 --> 00:17:29,091 - ஏதாவது பிரச்சினையா? - இல்ல. 277 00:17:29,174 --> 00:17:32,678 இல்ல, நான் ஒரு விஷயமா மேயர் கூட சேர்ந்து வேலை பார்க்கிறேன், நீ… 278 00:17:33,971 --> 00:17:36,557 நீ அதைக் கொஞ்சம் பார்க்க முடியுமான்னு கேட்க வந்தேன். 279 00:17:36,640 --> 00:17:38,058 நீ மேயர் கூட சேர்ந்து வேலை பார்க்கிறியா? 280 00:17:38,141 --> 00:17:39,852 - ம், புதுசா இருக்கே. - ஆமா. 281 00:17:39,935 --> 00:17:41,687 எனக்கும் பிடிக்கல, ஆனால்… 282 00:17:42,980 --> 00:17:44,690 இதைக் கொஞ்சம் பார்க்கிறியா? இது… 283 00:17:45,190 --> 00:17:46,650 - ம். - இது முக்கியமானது. 284 00:17:46,733 --> 00:17:47,734 கண்டிப்பா. 285 00:17:47,818 --> 00:17:49,820 இதை ப்ரைஸோட ரூமில் கண்டெடுத்தேன். 286 00:17:50,404 --> 00:17:51,405 ஆமா. 287 00:17:51,488 --> 00:17:52,489 ம். 288 00:17:57,035 --> 00:17:58,036 சரி. 289 00:17:59,079 --> 00:18:00,080 நீ எப்படி இருக்க? 290 00:18:01,039 --> 00:18:02,040 நல்லா இருக்கேன். 291 00:18:03,458 --> 00:18:06,837 சரி. ரொம்ப அளந்து பேசுற. 292 00:18:08,589 --> 00:18:13,802 என்னோட அப்பா சொல்வார், நீ தொணத்தொணன்னு பேசுவேன்னு. 293 00:18:17,472 --> 00:18:18,891 ஆமா, அவருக்கு என்னைப் பிடிக்கவே பிடிக்காது. 294 00:18:18,974 --> 00:18:21,310 ஆமா, என்னை ராத்திரி நீ வெளிய கூட்டிட்டு போயிடுவ, அதான். 295 00:18:22,352 --> 00:18:23,353 அட, என்ன சுவாரஸ்யம்! 296 00:18:23,437 --> 00:18:25,147 - இதை நான்… - சரி. 297 00:18:27,149 --> 00:18:28,150 லைட்டைப் போடு. 298 00:18:31,486 --> 00:18:32,821 - ம். - ம். 299 00:18:33,989 --> 00:18:35,240 சரி. 300 00:18:35,324 --> 00:18:38,243 "இந்த தீவின் மீது விழுந்துள்ள சாபத்தின் தன்மையை 301 00:18:38,327 --> 00:18:40,787 என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. 302 00:18:41,330 --> 00:18:45,125 என் கணவன் தன் கழுத்தைச் சுற்றிப் போட்டிருக்கும் உருளையின் உள்ளே 303 00:18:45,626 --> 00:18:48,045 அதன் இதயம் துடிக்கிறது என்று எனக்குத் தெரியும். 304 00:18:48,128 --> 00:18:53,091 என் குரல்வளையை யார் நசுக்குவார்? அவனது கைகளா? இந்தக் கொள்ளை நோயா? 305 00:18:53,175 --> 00:18:57,596 நம் ஒவ்வொருவருக்கும் மரணம் வருகிறது, ஆனால் முதலில் எனக்கு வருகுது என பயப்படுகிறேன். 306 00:18:57,679 --> 00:18:59,973 எப்படி என்று தெரியாது எனக்கு, ஆனால் யாரால் என்று தெரியும். 307 00:19:01,099 --> 00:19:05,312 ஆம், இங்கு என்னோடு தான் இருக்கிறான், ஆக, இதை நான் வேடிக்கையாகச் சொல்கிறேன், 308 00:19:05,395 --> 00:19:07,272 அத்தோடு, முடிக்கிறேன்." 309 00:19:09,691 --> 00:19:10,692 அது… 310 00:19:12,194 --> 00:19:13,195 இல்ல. 311 00:19:23,830 --> 00:19:25,040 டாம்? 312 00:19:27,125 --> 00:19:28,252 உங்களுக்கு ஒண்ணுமில்லையே? 313 00:19:30,879 --> 00:19:33,298 - நான் அவனை நிறுத்தணும். - நான் அவனை நிறுத்தணும். 314 00:19:34,049 --> 00:19:37,761 - அவன்… - அவன் ஊரடங்கை ரத்துசெய்ய விடக்கூடாது. 315 00:19:37,845 --> 00:19:39,096 …ஊரடங்கை… 316 00:19:59,950 --> 00:20:01,618 அவங்க சீக்கிரம் சந்திக்கிறாங்கன்னு நினைக்கிறேன். 317 00:20:12,004 --> 00:20:13,005 உங்களுக்கு ஒண்ணுமில்லையே? 318 00:20:39,948 --> 00:20:41,658 நீங்க சொல்றது சரி, நாங்க கோபமா தான் இருக்கோம்! 319 00:20:41,742 --> 00:20:44,244 இதை "அடுத்த மார்த்தாஸ் வினியார்டா" மாத்த 320 00:20:44,328 --> 00:20:49,499 எங்க ரத்தம், வியர்வை, கண்ணீர், அப்புறம் நிறைய பணம் எல்லாத்தையும் இதுல போட்டிருக்கோம். 321 00:20:49,583 --> 00:20:51,668 இதுல வேடிக்கை என்னான்னா, அது வேலை செய்யுது. 322 00:20:51,752 --> 00:20:56,089 உண்மையில நல்லா போயிட்டிருக்கு, ஆனால் நீங்க எதுக்காக இதை நாசம் பண்றீங்க? 323 00:20:57,132 --> 00:20:58,133 எதுக்காக? 324 00:20:58,217 --> 00:20:59,551 எதுக்காக? 325 00:20:59,635 --> 00:21:00,844 எதுக்காக? எதுக்காக? 326 00:21:05,265 --> 00:21:09,144 எல்லாம் நல்லா போயிட்டிருக்கும் போது, மக்களை வீட்ல பூட்டி வைக்க முடியாது, லாஃப்டிஸ். 327 00:21:10,479 --> 00:21:12,689 வெளிப்புறத்தில நடக்கிற விஷயத்துக்காகத்தான் மக்கள் இங்க வராங்க. 328 00:21:12,773 --> 00:21:14,525 கடற்கரைகள், சூரிய ஒளி. 329 00:21:14,608 --> 00:21:18,570 நாள் முழுசும் என்னோட கேவலமான ஹோட்டல்ல கழிக்க வரல! 330 00:21:19,238 --> 00:21:21,573 பரவாயில்ல! என்னோட கேவலமான ஹோட்டல்! 331 00:21:21,657 --> 00:21:23,200 அது மோசமான ஹோட்டல்! அது மோசம்னு எனக்குத் தெரியும்! 332 00:21:23,784 --> 00:21:26,328 இருபத்து அஞ்சு வருஷமா மோசமா இருந்துச்சு! அதனால தான் நான் அங்க தங்குறதில்ல! 333 00:21:26,828 --> 00:21:30,374 இந்தத் தடைகள், இந்த ஊரடங்கு 334 00:21:30,457 --> 00:21:32,334 - நாசமா போகட்டும். - ஆமா. 335 00:21:32,417 --> 00:21:33,961 - எனக்கு நிறைய சுற்றுலா பயணிகள் வேணும். - நான் ரெடி. 336 00:21:34,503 --> 00:21:37,130 இந்தத் தீவுக்குள்ள நிறைய பணம் வரணும்! 337 00:21:37,214 --> 00:21:38,423 - ஆமா. - சரி தான். 338 00:21:38,507 --> 00:21:42,594 அதே போல இந்த வானவேடிக்கையை நாங்க நிறுத்தப் போறதில்ல! 339 00:21:42,678 --> 00:21:44,638 ஆமா! ஆமா, கர்ட்! 340 00:21:45,806 --> 00:21:48,350 ஒரு நிமிஷம்! ஒரு நிமிஷம்! 341 00:21:48,433 --> 00:21:49,977 ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம்! 342 00:21:50,060 --> 00:21:52,855 லாஃப்டிஸ் பேசுறதை நான் கேட்கணும்! 343 00:21:52,938 --> 00:21:55,315 அவர் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்! 344 00:22:11,498 --> 00:22:14,960 நான் திரும்பும் போது அனைவரும் கண்களை மூடுங்கள் 345 00:22:19,256 --> 00:22:21,133 யாரோ நல்லா சாப்பிட்டிருக்காங்க. 346 00:22:21,884 --> 00:22:23,260 இன்னைக்கு சாப்பிட நிறைய இருந்ததா? 347 00:22:26,638 --> 00:22:27,639 உங்களுக்கு ஒண்ணுமில்லையே, பாஸ்? 348 00:22:42,362 --> 00:22:43,655 இங்க இருக்கீங்களா? 349 00:22:45,032 --> 00:22:46,491 இது கண்டிப்பா கரெக்ட் இல்ல. 350 00:22:46,575 --> 00:22:49,244 - சரியா? - நான்… நான் சீரியஸா சொல்றேன். 351 00:22:49,745 --> 00:22:50,871 உண்மை தான். 352 00:22:50,954 --> 00:22:53,498 - உண்மைதான், மாமா என்கிட்ட பொய் சொல்ல மாட்டார். - பொறு, என்ன அது? 353 00:22:53,582 --> 00:22:54,583 என்ன? 354 00:22:56,293 --> 00:22:58,170 ஜன்னல்ல யாரையோ பார்த்த மாதிரி இருந்துச்சு. 355 00:23:00,339 --> 00:23:02,341 நீ போதையில இருக்கன்னு நினைக்கிறேன். 356 00:23:05,802 --> 00:23:06,803 சரி. 357 00:23:08,972 --> 00:23:10,307 கவலப்படாத, நான் உன்னைப் பார்த்துக்குவேன். 358 00:23:11,141 --> 00:23:12,518 - அப்படியா? - ஆமா. 359 00:23:13,018 --> 00:23:15,771 நான் உன்னைப் பார்த்துக்குவேன். தைரியமானவனே. 360 00:23:16,563 --> 00:23:18,607 - தையரியமானவன். - சரி. போதும். 361 00:23:19,483 --> 00:23:21,276 அவங்க என்ன சொல்வாங்க தெரியுமா? 362 00:23:21,944 --> 00:23:23,570 உள்ள போற யாரும் திரும்பி வரமாட்டாங்களாம். 363 00:23:25,072 --> 00:23:26,114 கண்டிப்பா வெளிய வர முடியாது. 364 00:23:32,037 --> 00:23:34,831 கடவுளே! சரி. 365 00:23:35,791 --> 00:23:36,792 பார்க்கலாம். 366 00:23:38,043 --> 00:23:39,837 சூப்பர்ன்னு நினைக்கிறேன். 367 00:23:42,089 --> 00:23:44,591 - அவன் பண்ணப் போறதில்ல. - ரொம்ப தைரியமானவன் மாதிரி நடிக்கப் போறான். 368 00:23:44,675 --> 00:23:45,759 அவன் பயந்து… 369 00:23:47,469 --> 00:23:48,971 நான் பயப்படல. 370 00:23:49,054 --> 00:23:51,306 - அவன் நிச்சயம்… - நீ பயந்துட்ட. நான் பார்த்தேன். 371 00:23:51,390 --> 00:23:52,474 ஆமா. 372 00:23:52,558 --> 00:23:55,143 சீக்கிரம், நண்பா. சீக்கிரம். 373 00:23:55,227 --> 00:23:56,895 - அதோ, அவன் போறான். - ஆமா. 374 00:23:56,979 --> 00:23:58,105 - சரி தான். - இன்னும் போறான். 375 00:24:01,233 --> 00:24:06,196 சரியா? பிறகு… ம். நான் பேசும் போது காபி வாடை வர்றதுக்கு மன்னிக்கணும். 376 00:24:06,280 --> 00:24:07,823 எனக்குத் தெரியல. 377 00:24:07,906 --> 00:24:09,575 நல்லது. இந்த… 378 00:24:10,367 --> 00:24:12,452 இங்க… ம், இங்க வருஷம் இல்ல, 379 00:24:12,536 --> 00:24:15,831 ஆனால் என் கவனத்தை ஈர்த்தது இது தான். 380 00:24:15,914 --> 00:24:17,708 ஒரு ப்ளேக் பத்தி குறிப்பிட்டிருக்கிறது. 381 00:24:18,709 --> 00:24:21,545 விடோஸ் பே-ல ஒரே ஒரு பிளேக் தான் வந்தது, அது 1702-ல. 382 00:24:22,129 --> 00:24:25,257 அதனால, புரட்டிப் பார்த்தேன். 383 00:24:27,843 --> 00:24:28,844 இதோ. 384 00:24:34,057 --> 00:24:35,267 இது பெரிய விஷயமில்லையா? 385 00:24:35,350 --> 00:24:36,852 ஆமா, சேரா வெஸ்ட்காட் வாரன். 386 00:24:36,935 --> 00:24:38,145 நான் எங்க இருக்கேன்? 387 00:24:39,313 --> 00:24:40,606 நீ எதையாவது பார்த்தியா? 388 00:24:43,192 --> 00:24:45,235 சரி, ம், நாங்க ஒரு முக்கியமான காரியத்தைப் பார்த்திட்டிருக்கோம், டாம், 389 00:24:45,319 --> 00:24:47,279 அதனால, ஒரு நிமிஷம் பொறுங்க. 390 00:24:47,362 --> 00:24:48,780 உங்க கிரேயானை பயன்படுத்துங்க. 391 00:24:48,864 --> 00:24:50,324 சரி, பிறகு… 392 00:24:50,407 --> 00:24:53,952 அவள் அந்த வருஷம், நம்ம நிறுவனர், ரிச்சர்ட் வாரனை கல்யாணம் பண்ணா. 393 00:24:54,036 --> 00:24:57,289 அப்புறம் இது. அவர் கழுத்தில போட்டிருக்கும் உருளையைப் பத்தி குறிப்பு இருக்குல்ல? 394 00:24:57,372 --> 00:24:58,874 இந்த "சபிக்கப்பட்ட" பொருள்? 395 00:25:00,250 --> 00:25:01,835 இது என்ன? இதைப் பார்க்க எப்படி இருக்கு? 396 00:25:01,919 --> 00:25:05,422 சரி, என்கிட்ட ஒரு பெயின்ட்பிரஷ் கொடுத்தா, உங்களுக்கு வேண்டியது எதுவானாலும் சொல்றேன். 397 00:25:05,506 --> 00:25:07,716 அருமை, டாம். என்ன, விக்? 398 00:25:07,799 --> 00:25:10,928 அவர் அதோடு சேர்த்து புதைக்கப்பட்டிருப்பார்னு நினைக்கிறேன். 399 00:25:11,011 --> 00:25:12,346 அந்த உருளையோடவா? 400 00:25:13,305 --> 00:25:15,933 ஏவான்? ஏவா… ஏவான்? ஏவான்? 401 00:25:16,850 --> 00:25:17,893 என் பையன் எங்க? 402 00:25:20,020 --> 00:25:22,231 ஏவான் எங்க? என் பையன் எங்க? 403 00:25:22,314 --> 00:25:24,358 - சரி, அமைதி. - ஏவான் எங்க? 404 00:25:24,441 --> 00:25:26,693 சும்மா உட்காருங்க, டாம். 405 00:25:26,777 --> 00:25:27,861 உட்காருங்க. 406 00:25:28,529 --> 00:25:29,738 உட்காருங்க. 407 00:25:29,821 --> 00:25:30,989 உட்காருங்கன்னு சொன்னேன்! 408 00:25:31,573 --> 00:25:33,909 டாம்! டாம்! டாம்! 409 00:25:34,493 --> 00:25:35,494 டாம்! 410 00:25:39,623 --> 00:25:40,624 ஹே. 411 00:25:41,166 --> 00:25:43,961 பின்னால லேப் பெல்ட் மட்டும் தான் இருக்கு, போட்டுக்கோ. 412 00:25:46,296 --> 00:25:48,090 நான் ஏவானைக் கண்டுப்பிடிக்கணும். 413 00:25:48,715 --> 00:25:51,844 ம், அவன் உன் வீட்டில இருப்பான்னு நம்புவோம், 414 00:25:51,927 --> 00:25:54,137 ஏன்னா உன்னை அங்க தான் கூட்டிப் போகச் சொன்னாங்க. 415 00:25:54,221 --> 00:25:55,514 அப்பாடா. 416 00:25:55,597 --> 00:25:57,140 ஒரேயொரு இடத்துக்கு மட்டும் போயிட்டு போகலாம். 417 00:25:57,224 --> 00:26:00,394 - என்ன? இல்ல, இல்ல, ப்ளீஸ். வேண்டாம். - ஒரு நிமிஷம் தான் ஆகும். 418 00:26:00,477 --> 00:26:02,020 - வேண்டாம்! ரோஸ்மேரி, வேண்டாம்! - ஒரு… 419 00:26:03,522 --> 00:26:07,526 ஸ்கோல் பலசரக்கு கடை & பெட்ரோல் 420 00:26:48,775 --> 00:26:50,694 திரும்பவும் காரை நகர்த்தாத, டாம். 421 00:26:52,404 --> 00:26:56,158 ஹா! பதினஞ்சு டாலர் வெற்றி பெற்றிருக்கேன்! அப்படி! 422 00:27:07,586 --> 00:27:08,962 அது என்னோட ஷூ. 423 00:27:10,297 --> 00:27:11,590 வேண்டாம், வராதீங்க! 424 00:27:11,673 --> 00:27:14,426 உங்களை வெளிய போகச் சொன்னேன்! வெளிய போங்க! 425 00:27:14,927 --> 00:27:15,969 இல்ல, இல்ல! 426 00:28:00,430 --> 00:28:04,268 ஏவான் லாஃப்டிஸ். அந்த எழவு வீட்டை விட்டு தள்ளி வா. 427 00:28:06,645 --> 00:28:09,815 இது என்னோட வீடில்லையா? தெரியமா வந்துட்டேன். 428 00:28:09,898 --> 00:28:11,567 - ஏய், இங்க வா. - நான்… 429 00:28:11,650 --> 00:28:12,651 நல்ல வேளை. 430 00:28:20,242 --> 00:28:24,204 ஹாய். சாரி. 431 00:28:24,288 --> 00:28:27,666 எங்கக் கூட கார்ல தீவுக்கு வெளிய இருந்து கொஞ்சம் பொண்ணுங்க இருக்காங்க, 432 00:28:27,749 --> 00:28:30,419 அவங்களை… நாங்க இம்ப்ரெஸ் பண்ண முயற்சி பண்ணோம். 433 00:28:32,004 --> 00:28:33,964 ம். ம், புரியுது. 434 00:28:35,048 --> 00:28:37,676 வீட்டை உடைச்சு, உள்ள போறது பெரிய காரியம் தான். 435 00:28:40,137 --> 00:28:41,889 ப்ளீஸ் அப்பா கிட்ட சொல்லாதீங்க. 436 00:28:44,433 --> 00:28:47,019 சரி, முதல்ல இங்க இருந்து கிளம்பு. 437 00:28:47,102 --> 00:28:48,520 சரி. நன்றி. 438 00:28:52,274 --> 00:28:55,903 அப்படியே போகும் போது, நான்… 439 00:28:55,986 --> 00:28:59,656 "போடா, பன்னி"ன்னு கத்தலாமா? பொண்ணுங்களுக்காக? 440 00:29:01,867 --> 00:29:03,410 கொலை விழும். 441 00:29:03,493 --> 00:29:04,661 சரி. சரி. 442 00:29:06,663 --> 00:29:07,664 பை. 443 00:29:23,472 --> 00:29:24,473 சே. 444 00:29:37,027 --> 00:29:38,862 உங்க அப்பாவுக்கு என்னடா ஆச்சு? 445 00:29:39,404 --> 00:29:40,489 அது உங்க அப்பாவா? 446 00:29:42,407 --> 00:29:43,659 என்ன? என்ன? 447 00:29:51,124 --> 00:29:52,125 கடவுளே. 448 00:30:00,092 --> 00:30:02,386 டேய், உங்க அப்பா உன்னை தேடுறார்னு நினைக்கிறேன். 449 00:30:19,361 --> 00:30:20,654 - நான் போகணும். இறங்கு. - சரி. 450 00:30:21,154 --> 00:30:24,032 உள்ள போ, இப்பவே. இந்த பொண்ணுக்கு குட்நைட்… 451 00:30:25,742 --> 00:30:26,743 சொல்லு. 452 00:30:30,080 --> 00:30:31,790 ஒழுங்கா வெளிய போன காரணத்தைச் சொல்லு… 453 00:30:31,874 --> 00:30:33,500 - முடியாது! - என்ன சொன்ன? 454 00:30:34,001 --> 00:30:35,919 என்ன… என்ன சொன்ன? 455 00:30:43,260 --> 00:30:44,761 இன்னைக்கு ஜாலியா இருந்தேன். 456 00:30:45,554 --> 00:30:46,930 ரொம்ப சந்தோஷமா போச்சு. 457 00:30:49,558 --> 00:30:52,644 நீங்க சொன்னதைக் கேட்டிருந்தா, உங்க அழுக்கு ஆஃபீஸ்ல நாள் முழுக்க உட்கார்ந்திருப்பேன். 458 00:30:52,728 --> 00:30:54,646 ஏவான், நான் என்ன உன்னை நாள் முழுக்கக் 459 00:30:54,730 --> 00:30:56,940 - கண்காணிச்சிட்டே இருக்கணும்னு நினைக்கிறியா? - இல்ல, நினைக்கல! 460 00:30:57,024 --> 00:31:00,444 இல்ல… உங்களால என்னை கட்டுக்குள்ள வைக்க முடியும்னு எல்லாருக்கும் காட்ட விரும்புறீங்க. 461 00:31:01,361 --> 00:31:02,362 என்ன? 462 00:31:04,865 --> 00:31:08,785 நீங்க மோசமான மேயரா இருக்கிறதுக்கு நான் காரணம் இல்ல, சரியா? 463 00:31:16,376 --> 00:31:18,754 ஒரு நாள்… ஒரு நாள் 464 00:31:18,837 --> 00:31:20,380 இப்படி என் கிட்ட பேசினதுக்கு 465 00:31:20,464 --> 00:31:22,132 குற்ற உணர்ச்சியோட கஷ்டப்படுவ. 466 00:31:26,970 --> 00:31:28,555 நாம ஏன் இந்தத் தீவை விட்டு வெளிய போறதில்ல? 467 00:31:32,935 --> 00:31:34,436 இது என்ன எழவு மாதிரியான குழந்தை வளர்ப்பு? 468 00:31:34,520 --> 00:31:36,939 நீ இங்க தான் வளரணும் என்கிறது, ம், உங்க அம்மாவோட விருப்பம். 469 00:31:37,022 --> 00:31:38,815 என்ன? எங்கேயும் போகக் கூடாதா? அது தான் அவங்க விருப்பமா? 470 00:31:38,899 --> 00:31:40,234 நாம காலைல பேசலாம். 471 00:31:45,280 --> 00:31:46,281 அப்பா! 472 00:31:47,157 --> 00:31:48,158 அப்பா! 473 00:31:48,242 --> 00:31:51,995 அப்பா, ஒருநாளில்ல ஒருநாள், நான் அப்படியே கிளம்பி போயிடுவேன், திரும்ப வர மாட்டேன்! 474 00:32:26,196 --> 00:32:27,197 நீங்க ரெடியா? 475 00:32:29,157 --> 00:32:30,200 நீங்க ரெடியா? 476 00:32:33,203 --> 00:32:34,204 நீங்க ரெடியா? 477 00:32:45,632 --> 00:32:47,426 லாரென்? லாரென்? லாரென்? 478 00:32:58,228 --> 00:32:59,229 என்னால எதுவும் பார்க்க முடியல. 479 00:33:02,983 --> 00:33:06,111 லாரென்? லாரென்? 480 00:33:07,529 --> 00:33:10,449 - லாரென்? லாரென்? - என்னால… என்னால எதுவும் பார்க்க முடியல! 481 00:33:10,532 --> 00:33:11,617 என்னால எதுவும் பார்க்க முடியல! 482 00:33:11,700 --> 00:33:13,660 ப்ளீஸ், எனக்கு கொஞ்சம் உதவி வேணும்! 483 00:33:13,744 --> 00:33:16,705 கொஞ்சம் படகைத் திருப்ப முடியுமா? படகைத் திருப்புங்க. 484 00:33:16,788 --> 00:33:18,123 திருப்புங்க! இப்பவே! 485 00:33:18,207 --> 00:33:19,917 லாரென்? லாரென்? 486 00:33:26,089 --> 00:33:27,716 குழந்தை நல்லா இருக்கான். 487 00:33:29,218 --> 00:33:32,054 சரி. அவ எப்படி இருக்கா? 488 00:33:32,137 --> 00:33:33,514 அவ… அவ கொஞ்சம்… 489 00:33:34,890 --> 00:33:35,974 பித்துப்பிடிச்ச மாதிரி இருக்கா. 490 00:33:36,558 --> 00:33:38,185 கொஞ்ச நேரத்தில சரியாயிடும். 491 00:33:42,731 --> 00:33:43,732 ஹலோ. 492 00:34:04,044 --> 00:34:09,257 ப்ளீஸ், கடவுளே, நான் பேசுறது கேட்குதுன்னா, 493 00:34:10,092 --> 00:34:11,885 நீங்க இருப்பது உண்மைனா… 494 00:34:14,429 --> 00:34:16,348 தயவுசெய்து உதவி பண்ணுங்க. 495 00:34:17,474 --> 00:34:18,641 ப்ளீஸ். உதவி பண்ணுங்க. 496 00:34:18,725 --> 00:34:20,768 தயவுசெய்து என் பையனைப் பாதுகாத்திடுங்க. 497 00:34:23,355 --> 00:34:25,023 தயவுசெய்து என் பையனைப் பாதுகாத்திடுங்க. 498 00:34:28,235 --> 00:34:29,610 நான் எதையும் பண்ண தயார். 499 00:36:42,661 --> 00:36:44,663 தமிழாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்