1 00:00:54,805 --> 00:00:57,724 “குதிப்பதா வேண்டாமா?” 2 00:01:08,694 --> 00:01:09,695 என்னவொரு ஷாட். 3 00:01:15,993 --> 00:01:18,328 நான் கம்பீரமான மலையேறும் ஆடு. 4 00:01:18,912 --> 00:01:20,956 அவள் அதை எளிதாகச் செய்கிறாள். 5 00:01:25,961 --> 00:01:28,714 அது அற்புதமான குதிக்கும் திறமை, சார். 6 00:01:28,714 --> 00:01:31,884 மிதக்கும் படகுத்துறைக்கு கடைசியாக வருபவர்கள் தோத்தாங்கோலி. 7 00:01:37,598 --> 00:01:38,849 என்ன ஆயிற்று, சாலி? 8 00:01:38,849 --> 00:01:40,893 என் வாத்து மிதவையைக் காணவில்லை. 9 00:01:41,476 --> 00:01:43,395 உன்னிடம் மிதவைகள் இருக்கிறதே. 10 00:01:43,395 --> 00:01:45,397 இது நீந்துவதற்கானது இல்லை. 11 00:01:45,397 --> 00:01:47,649 இது என் ஏரிக்கரை டீ பார்ட்டிக்கானது. 12 00:01:48,692 --> 00:01:50,986 எனில் எங்களுக்கு அதிக டீ கிடைக்கும் என நினைக்கிறேன். 13 00:02:33,153 --> 00:02:34,613 அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்? 14 00:02:35,531 --> 00:02:37,741 யார் சிறப்பாக குதிக்கிறார் எனப் பார்ப்போம். 15 00:02:37,741 --> 00:02:38,700 - அருமையான யோசனை. - ஆம்! 16 00:02:38,700 --> 00:02:40,118 குதிப்போம். 17 00:02:46,542 --> 00:02:48,043 அடுத்து நீதான், பெப்பர்மின்ட் பேட்டி. 18 00:02:49,461 --> 00:02:50,671 ஆம். 19 00:02:56,176 --> 00:02:58,595 நீர் அமைதியாவதற்காகக் காத்திருக்கிறேன். 20 00:03:00,138 --> 00:03:01,807 எனக்கு அமைதியாகத்தான் தெரிகிறது. 21 00:03:03,433 --> 00:03:05,769 அதிக கவனமாக இருப்பதில் தவறில்லை. 22 00:03:05,769 --> 00:03:09,523 அது உங்களுக்கு மழை மேகம் போலத் தெரிகிறதா? 23 00:03:12,568 --> 00:03:16,154 அவசரப்படுத்தவில்லை, ஆனால் என் உடல் உலர்ந்துவிட்டது. 24 00:03:22,995 --> 00:03:25,038 அது வித்தியாசமான குதித்தலாக உள்ளதே. 25 00:03:25,914 --> 00:03:28,750 கேனான்பால்கள்தான் சிறந்தது என அனைவருக்கும் தெரியும். 26 00:03:28,750 --> 00:03:32,629 நிச்சயமாக நான் இப்போது உலர்வாக இல்லை. 27 00:03:33,797 --> 00:03:35,799 அது அற்புதமான கேனான்பால், சார். 28 00:03:36,633 --> 00:03:40,596 மற்றவர்களைவிடச் சிறப்பாக குதிக்காமல் இருந்து, சீன் போடாமல் இருந்தது கனிவான விஷயம். 29 00:03:41,263 --> 00:03:42,264 ஆம், அது, 30 00:03:42,806 --> 00:03:45,726 நான் மற்றவர்கள் தனித்துத் தெரிய ஒரு வாய்ப்பு கொடுக்க விரும்பினேன். 31 00:03:55,444 --> 00:03:57,696 குதிப்பதில் அப்படி என்ன ஸ்பெஷலாக உள்ளது? 32 00:04:16,798 --> 00:04:18,926 அற்புதமாகக் குதித்தாய், ஸ்நூப்பி. 33 00:04:18,926 --> 00:04:20,761 அதை எப்படிச் செய்வதென எனக்குக் கற்றுக்கொடுப்பாயா? 34 00:04:26,517 --> 00:04:28,143 அதை சரி என்று எடுத்துக்கொள்கிறேன். 35 00:04:28,143 --> 00:04:30,354 எப்போது தொடங்கலாம், கோச்? 36 00:04:35,901 --> 00:04:38,028 நாளை முதல் வேலையாக. புரிந்தது, கோச். 37 00:04:53,919 --> 00:04:55,712 நான் நிபுணர் இல்லை, ஆனால்... 38 00:04:56,755 --> 00:04:58,090 குதிப்பதற்கு... 39 00:04:59,007 --> 00:05:00,175 வழக்கமாக... 40 00:05:01,134 --> 00:05:02,553 தண்ணீர் தேவைப்படும்தானே? 41 00:05:10,143 --> 00:05:11,979 நான் விமர்சிக்கவில்லை, 42 00:05:11,979 --> 00:05:14,565 ஆனால் நாம் இப்படியே அரை மணிநேரமாக நிற்கிறோம். 43 00:05:24,741 --> 00:05:27,578 இதில் இவ்வளவு கணிதம் இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. 44 00:05:34,251 --> 00:05:35,627 இதோ குதிக்கப் போகிறேன். 45 00:05:59,193 --> 00:06:00,986 என்னால் முடியாது, ஸ்நூப்பி. 46 00:06:01,528 --> 00:06:04,948 இதை உன் கோச்சிங் திறமையின் பிரதிபலிப்பாக எடுத்துக்கொள்ள மாட்டாய் என நம்புகிறேன். 47 00:07:07,970 --> 00:07:09,888 எதுவும் பிரச்சினையா, சார்? 48 00:07:09,888 --> 00:07:12,891 உன் குதிக்கும் திறன் குறைந்துவிட்டது போலத் தெரிகிறது. 49 00:07:12,891 --> 00:07:15,435 நீந்துவது உனக்கு உற்சாகம் தரலாம்? 50 00:07:15,435 --> 00:07:19,606 ஒருவேளை நீ அற்புதமாக குதிப்பது உதவலாம். 51 00:07:20,148 --> 00:07:21,775 என்னால் பொறுக்க முடியாது! 52 00:07:21,775 --> 00:07:24,611 குதிப்பதில் அப்படி என்ன பெரிதாக உள்ளது? 53 00:07:24,611 --> 00:07:28,031 அது நீரில் தலைகீழாகக் குதிப்பதுதான். 54 00:07:30,909 --> 00:07:32,744 அதில் என்ன வேடிக்கை உள்ளது? 55 00:07:36,081 --> 00:07:37,875 நான் விளக்க வேண்டும் என நினைக்கிறேன். 56 00:07:37,875 --> 00:07:40,252 இது போன கோடையில் தொடங்கியது. 57 00:07:41,128 --> 00:07:43,672 என் அப்பாவும் நானும் என் கசின்கள் வீட்டுக்குச் சென்றோம். 58 00:07:43,672 --> 00:07:45,924 அவர்களது கொல்லையில் நீச்சல் குளம் இருந்தது. 59 00:07:45,924 --> 00:07:47,843 ஹேய், அப்பா. நான் குதிப்பதைப் பாருங்கள். 60 00:07:49,303 --> 00:07:51,013 ஆனால், நான் குதிக்கவில்லை. 61 00:07:54,558 --> 00:07:56,101 நான் என் வயிற்றில் குதித்தேன். 62 00:07:56,101 --> 00:07:58,937 என் முகம் மட்டும்தான் அன்று சிவக்காமல் இருந்தது. 63 00:07:58,937 --> 00:08:03,734 அந்தக் கோடை முழுவதும், அனைவரும் என்னை பின்க் நிற வயிறு என்று அழைத்தனர். 64 00:08:05,652 --> 00:08:08,405 அப்போதிலிருந்து, நானே விரும்பினாலும், 65 00:08:08,405 --> 00:08:11,241 என்னால் குதிக்க முடிவதில்லை. 66 00:08:11,241 --> 00:08:14,995 பரவாயில்லை, பெப்பர்மின்ட் பேட்டி. அனைவரும் ஏதோவொன்றுக்கு பயப்படுவார்கள். 67 00:08:14,995 --> 00:08:16,914 எனக்கு கஸ்டர்ட் என்றால் பயம். 68 00:08:16,914 --> 00:08:21,376 அது சுவையாக இருக்கும் எனத் தெரியும், ஆனால் ஆடும் உணவை நான் நம்புவதில்லை. 69 00:08:21,376 --> 00:08:25,172 நான் முகாம் ஷவரில் சிலந்தியைப் பார்த்ததிலிருந்து அதைப் பயன்படுத்த பயப்படுகிறேன். 70 00:08:25,172 --> 00:08:28,300 நான் மிகவும் வசீகரமானவள் மற்றும் அற்புதமானவள் என பிறர் நினைப்பார்கள் என பயப்படுகிறேன். 71 00:08:29,593 --> 00:08:31,845 என்ன? இது உண்மையான பயம்தான். 72 00:08:31,845 --> 00:08:33,722 எனக்கு, 73 00:08:33,722 --> 00:08:36,558 கிட்டத்தட்ட எல்லாமே பயம்தான். 74 00:08:37,726 --> 00:08:41,063 என்னை நம்பு, நான் பல ஏமாற்றங்களைச் சந்தித்துள்ளேன், 75 00:08:41,063 --> 00:08:44,525 ஆனால் பின்வாங்குவது சில நேரம் மிகவும் மோசமாக இருக்கலாம். 76 00:08:44,525 --> 00:08:46,860 நீ முயல்வதை பயம் தடுக்க அனுமதிக்கக் கூடாது. 77 00:08:54,284 --> 00:08:56,203 - உன்னால் முடியும். - உன்னால் முடியும், சார். 78 00:08:56,203 --> 00:08:57,579 - குதி. - நீரில் குதி. 79 00:08:57,579 --> 00:08:58,872 - யேய்! - பெப்பர்மின்ட் பேட்டி! 80 00:09:06,255 --> 00:09:07,256 நான் குதித்துவிட்டேன்! 81 00:09:12,177 --> 00:09:15,556 ஹேய். அதோ என் வாத்து மிதவை. 82 00:09:26,942 --> 00:09:27,943 பீகிள் ஸ்கௌட் கையேடு 83 00:09:27,943 --> 00:09:29,903 “உங்களால் பீகிள் ஸ்கௌட்டாக இருக்க முடியுமா? 84 00:09:30,988 --> 00:09:32,406 தகவல்தொடர்பு. 85 00:09:37,035 --> 00:09:38,412 பீகிள் ஸ்கௌட்டாக இருக்க, 86 00:09:38,412 --> 00:09:42,082 பேச்சில்லாத் தகவல்தொடர்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 87 00:09:42,082 --> 00:09:44,793 அல்லது வார்த்தையின்றி உங்கள் கருத்தை வெளிப்படுத்தத் தெரிய வேண்டும்.” 88 00:09:47,254 --> 00:09:50,257 உன் நாய் அந்தத் தீவிலிருந்து கையசைக்கிறது, சார்லி பிரவுன். 89 00:09:50,257 --> 00:09:51,341 அப்படியா? 90 00:09:53,886 --> 00:09:55,429 ஹாய், ஸ்நூப்பி. 91 00:10:04,146 --> 00:10:07,649 “பேச்சில்லாத் தகவல்தொடர்பில் மோர்ஸ் குறியீடு ஒரு முறையாகும். 92 00:10:08,317 --> 00:10:12,529 குறுகிய புள்ளிகள் மற்றும் நீண்ட கோடுகள் மூலம் எழுத்துகளைக் கூறும் குறியீட்டு வடிவம்." 93 00:10:13,614 --> 00:10:18,285 புள்ளி, புள்ளி, புள்ளி. கோடு, கோடு, கொடு. புள்ளி, புள்ளி, புள்ளி. 94 00:10:18,285 --> 00:10:20,662 உனக்கு மோர்ஸ் குறியீடு தெரியும் என்பது எனக்குத் தெரியாது, ஃபிராங்க்ளின். 95 00:10:21,413 --> 00:10:23,665 அதைப் பற்றித் தெரியும். 96 00:10:24,499 --> 00:10:25,959 அடப் பாவமே. 97 00:10:25,959 --> 00:10:28,962 அதில் ஒரு நல்ல விஷயம், அவனது வெளிச்ச விளையாட்டு நன்றாக உள்ளது. 98 00:10:31,715 --> 00:10:35,594 ஸ்நூப்பி, எங்களுக்குப் புரியவில்லை! 99 00:10:35,594 --> 00:10:39,556 “பேச்சில்லாத் தகவல்தொடர்பில் இன்னொரு வடிவம் செமஃபோர். 100 00:10:39,556 --> 00:10:42,392 கொடிகள் மூலம் தூரத்தில் இருப்பவர்களுடன் தொடர்புகொள்வது.” 101 00:10:49,650 --> 00:10:52,653 அவன் தாளத்துடனான ஜிம்னாஸ்டிக்ஸ் செய்கிறானா? 102 00:10:53,153 --> 00:10:54,530 “எல்லாம் தோல்வியடைந்தால்... 103 00:10:55,989 --> 00:10:58,450 ...பழைய நடித்துக் காட்டுதல் எப்போதும் வேலை செய்யும்.” 104 00:10:59,493 --> 00:11:01,370 நடித்துக் காட்டுதல். இரண்டு வார்த்தைகள். 105 00:11:05,791 --> 00:11:07,584 முதல் வார்த்தை. சாப்பிடுவதா? 106 00:11:08,919 --> 00:11:10,170 இரவு உணவா? 107 00:11:12,214 --> 00:11:13,507 இரண்டாம் வார்த்தை. 108 00:11:14,258 --> 00:11:17,135 கைக்கடிகாரமா? ஓ, நேரம். 109 00:11:25,435 --> 00:11:29,022 இது இரவு உணவுக்கான நேரம், அந்தத் தீவில் இருந்து அவனைக் காப்பாற்ற வேண்டும். 110 00:11:30,649 --> 00:11:32,150 ஏன் இதை முன்பே சொல்லவில்லை? 111 00:11:43,579 --> 00:11:45,122 உன்னுடன் சேர்ந்துகொள்ளவா, ஸ்நூப்பி? 112 00:11:49,626 --> 00:11:50,752 என்ன படிக்கிறாய்? 113 00:11:54,590 --> 00:11:58,135 ”பீகிள் ஸ்கௌட் இயற்கையிலும் அற்புதமான வெளிப்புறங்களின் 114 00:11:59,511 --> 00:12:03,015 அமைதி மற்றும் சாந்தியிலும் வீட்டை உணர்வார்கள்.” 115 00:12:07,144 --> 00:12:08,562 உனக்கு அது கேட்கிறதா? 116 00:12:28,916 --> 00:12:31,335 “மழை நேர நண்பர்கள்.” 117 00:12:34,505 --> 00:12:38,550 மழை வரும் முன்பு முகாமில் இருப்பது வேடிக்கையாக இல்லை என நினைத்தேன். 118 00:12:39,468 --> 00:12:43,764 மழை பெய்யும் நாள் என்பது கைவினைப் பொருட்கள் செய்து, பிரகாசத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பாகும். 119 00:12:44,348 --> 00:12:47,059 அதற்கான மஞ்சள் கிரேயான்கள் என்னிடம் இல்லை. 120 00:12:47,726 --> 00:12:49,144 நான் உவமையாகக் கூறினேன். 121 00:12:49,645 --> 00:12:53,732 இந்த விஷயத்தில், நான் உருவாக்க நினைக்கும் பிரகாசம், பென்சில் ஹோல்டர். 122 00:12:54,274 --> 00:12:57,069 நீ உவமைகளைவிட, கைவினைகளில் சிறப்பானவனாக இருப்பாய் என நம்புகிறேன். 123 00:12:57,945 --> 00:13:01,198 ஹேய், சாலி. நாம் ஏன் நட்பு பிரேஸ்லெட்களைச் செய்யக் கூடாது? 124 00:13:01,740 --> 00:13:04,243 இந்த மழை பற்றி சிந்திக்கவிடாத எதுவும் சரிதான். 125 00:13:04,243 --> 00:13:05,244 என்னைக் கேட்டால், 126 00:13:05,244 --> 00:13:09,248 மூன்று பேர் சேர்ந்து பென்சில் ஹோல்டர்கள் செய்வதைவிட நட்பான விஷயம் எதுவுமில்லை. 127 00:13:12,626 --> 00:13:13,877 சரி. 128 00:13:13,877 --> 00:13:17,339 ஆனால் உங்கள் பென்சில்கள் மேசையில் உருளும்போது, 129 00:13:17,339 --> 00:13:18,841 என்னிடம் குறை சொல்லாதீர்கள். 130 00:14:10,851 --> 00:14:13,395 “கட்டுமான பேட்ஜானது, இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் 131 00:14:13,395 --> 00:14:16,732 தங்குமிடத்தைக் கட்டும் பீகிள் ஸ்கௌட்டுக்குக் கொடுக்கப்படும்." 132 00:14:35,292 --> 00:14:37,878 என்ன நினைக்கிறாய்? தங்க ட்வைனா அல்லது சிவப்பா? 133 00:14:37,878 --> 00:14:40,005 - இரண்டுமே! - நல்ல யோசனை. 134 00:14:43,842 --> 00:14:45,177 என்ன? 135 00:14:45,177 --> 00:14:49,223 முன்னோக்கிய முடிச்சுகளைவிட பின்னோக்கிய முடிச்சுகள் நன்றாக இருக்கும். 136 00:14:50,849 --> 00:14:52,184 நீ சொல்வது சரிதான். 137 00:14:57,773 --> 00:14:59,358 எதுவும் பிரச்சினையா? 138 00:15:00,359 --> 00:15:02,277 அதில் மணிகளைச் சேர்க்கிறாயா? 139 00:15:02,277 --> 00:15:03,445 சேர்க்கக் கூடாதா? 140 00:15:03,946 --> 00:15:06,031 இல்லை. பரவாயில்லை. 141 00:15:06,031 --> 00:15:07,616 அப்படி நினைக்கிறேன். 142 00:15:09,409 --> 00:15:10,285 என்ன? 143 00:15:11,370 --> 00:15:13,372 நீ இறுக்கமாக முடிச்சு போடவில்லை. 144 00:15:13,372 --> 00:15:16,708 நட்பு பிரேஸ்லெட்கள் இறுக்கமாகவும் திடமாகவும் இருக்க வேண்டும். 145 00:15:16,708 --> 00:15:20,754 நட்பு பிரேஸ்லெட்கள் நெகிழ்வாகவும் வண்ணமயமாகவும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். 146 00:15:20,754 --> 00:15:24,466 ஓஹோ. அதற்கு எல்லா விதங்களும் சரியாக இருக்கும், 147 00:15:24,466 --> 00:15:26,134 அப்படி நினைக்கிறேன். 148 00:15:28,720 --> 00:15:31,306 “நன்றாகக் கட்டப்படும் தங்குமிடம், பாதுகாப்பிற்காகத் 149 00:15:31,306 --> 00:15:32,891 தங்கும் வெறும் இடம் மட்டுமில்லை. 150 00:15:32,891 --> 00:15:36,144 அது துணிச்சலான பீகிள் ஸ்கௌட்களின் பெருமையாகும்.” 151 00:16:20,189 --> 00:16:21,732 நீ எனக்கு மிக அருகில் நிற்கிறாய். 152 00:16:21,732 --> 00:16:24,276 ஏனெனில் நீ சரியாகச் செய்கிறாயா எனப் பார்க்க வேண்டும். 153 00:16:24,276 --> 00:16:27,070 நீ இவ்வளவு நெருக்கத்தில் நின்றால், எப்படி என்னால் சரியாகச் செய்ய முடியும்? 154 00:16:28,655 --> 00:16:30,032 இன்னும் மணிகளா? 155 00:16:30,032 --> 00:16:31,450 என்னால் பொறுக்க முடியாது. 156 00:16:31,450 --> 00:16:36,038 நாம் என்ன செய்கிறோம்? நெக்லேஸ்களா? கொஞ்சம் கிளிட்டராவது பயன்படுத்து. 157 00:16:36,038 --> 00:16:38,040 உனக்கு நட்பு பற்றி எதுவும் தெரிந்திருந்தால், 158 00:16:38,040 --> 00:16:40,542 பிரேஸ்லெட்டில் கிளிட்டர் போடக் கூடாது எனத் தெரிந்திருக்கும். 159 00:16:40,542 --> 00:16:43,420 அது அழுக்காக்கிவிடும். அதில் நட்பு எங்கே உள்ளது? 160 00:16:43,420 --> 00:16:46,757 குறைந்தது நான் என் நட்பு பிரேஸ்லெட்டை நாசமாக்கவில்லை. 161 00:16:46,757 --> 00:16:50,093 சரி. உனக்கு என் பிரேஸ்லெட் பிடிக்கவில்லை எனில், உனக்கென ஒன்று செய்துகொள். 162 00:16:50,093 --> 00:16:51,178 நான் செய்வேன். 163 00:16:52,554 --> 00:16:54,765 - நான்... - உட்காரு! 164 00:17:41,186 --> 00:17:45,440 லைனஸ், நான் பேசாத சாலியிடம், 165 00:17:45,440 --> 00:17:46,984 கத்தரிக்கோலைக் கொடுக்கும்படி சொல்வாயா? 166 00:17:46,984 --> 00:17:51,613 லைனஸ், நான் பேசாத நயோமியிடம், 167 00:17:51,613 --> 00:17:54,741 கத்தரிக்கோல் அவள் பக்கம்தான் உள்ளது என்று சொல்வாயா? 168 00:17:54,741 --> 00:17:58,537 லைனஸ், நான் பேசாத சாலியிடம், 169 00:17:58,537 --> 00:18:01,039 - என்னிடம்... - யாராவது என் இடத்தில் அமர்கிறீர்களா? 170 00:18:01,039 --> 00:18:02,124 இல்லை! 171 00:18:39,620 --> 00:18:40,704 அவ்வளவுதான். 172 00:18:43,040 --> 00:18:46,835 இதோ, உண்மையான நண்பனுக்காக இன்னொரு பிரேஸ்லெட். 173 00:18:54,301 --> 00:18:57,679 உன் மணிகள் உள்ள பிரேஸ்லெட்டுகள் பாவமான லைனஸை என்ன செய்ய வைத்துள்ளது பார். 174 00:18:57,679 --> 00:19:02,184 அந்த கிளிட்டர்களால் அவன் கண்கள் கூசியதால்தான், அவனால் பார்க்க முடியவில்லை. 175 00:19:02,184 --> 00:19:03,894 என்னால் பொறுக்க முடியாது! 176 00:19:04,686 --> 00:19:08,273 நட்பு பிரேஸ்லெட் செய்ய சரியான அல்லது தவறான வழி என்று ஒன்று இல்லை. 177 00:19:08,273 --> 00:19:12,903 அது கண்டிப்பாக உண்மையான நட்பைவிடப் பெரிதானது இல்லை. 178 00:19:26,291 --> 00:19:29,878 என்னிடம் இன்னொரு பிரேஸ்லெட் உள்ளது. 179 00:19:29,878 --> 00:19:33,048 ஆனால் இதை குப்பையில் எறிய வேண்டும் என நினைக்கிறேன். 180 00:19:33,048 --> 00:19:36,677 அது வீணாகிவிடுமே. அது அழகான பிரேஸ்லெட். 181 00:19:36,677 --> 00:19:40,389 உன்னுடையதும்தான். அந்த மணி வேலைப்பாடுகள் அற்புதமாக உள்ளன. 182 00:19:40,889 --> 00:19:43,183 உனக்கு வேண்டுமெனில், நீ எடுத்துக்கொள். 183 00:19:48,647 --> 00:19:51,275 பச்சை நிற பென்சில் ஹோல்டரை யார் கேள்விப்பட்டுள்ளனர்? 184 00:19:51,275 --> 00:19:54,486 இதுபோன்ற ஒன்றில் நான் என் பென்சிலை வைக்க மாட்டேன். 185 00:19:54,486 --> 00:19:55,571 ஆமாம். 186 00:20:10,043 --> 00:20:12,254 “பெருமை அல்லது தங்குமிடத்தைவிட, 187 00:20:12,254 --> 00:20:14,756 அந்தக் கட்டுமான பேட்ஜானது, ஒன்றாக வேலை செய்வது பற்றியது. 188 00:20:15,716 --> 00:20:19,511 உண்மையில் பீகிள் ஸ்கௌட்டாக இருப்பது என்பது அதுதான்.” 189 00:20:38,197 --> 00:20:40,073 ஒருவழியாக மழை நின்றுவிட்டது. 190 00:20:40,073 --> 00:20:41,825 ஹேய், லைனஸ். இதைப் பிடி. 191 00:20:46,163 --> 00:20:47,247 அடச்சே. 192 00:20:48,415 --> 00:20:49,458 சார்லஸ் M. ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் காமிக் ஸ்ட்ரிப்பை அடிப்படையாகக் கொண்டது 193 00:21:13,357 --> 00:21:15,359 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம் 194 00:21:18,445 --> 00:21:20,447 நன்றி, ஸ்பார்க்கி. எங்கள் மனதில் என்றும் இருப்பீர்கள்.