1 00:00:07,174 --> 00:00:11,303 டென்டு செகண்ட். குளோஸ் பேக்வர்ட்ஸ், டென்டு சைட், குளோஸ் பேக். 2 00:00:12,012 --> 00:00:16,558 ஃபைவ், சிக்ஸ், செவன், எய்ட். பிக் ப்லியே. பாஸே… 3 00:00:16,642 --> 00:00:18,727 ஒன்பது வயசு இருக்கும் போது நான் ஆட ஆரம்பிச்சேன். 4 00:00:19,353 --> 00:00:22,231 ஸ்கூலுக்கு அப்புறமா இலவச பாலே வகுப்புல சேர்ந்தப்ப ஆரம்பிச்சது. 5 00:00:22,314 --> 00:00:24,358 சீக்கிரமே அதைப் பத்தி மட்டுமே நினைக்க ஆரம்பிச்சேன். 6 00:00:27,486 --> 00:00:30,822 ஒரு டான்ஸரா என்னோட பெரிய பலம் வலியை சகிச்சிக்கிறது தான். 7 00:00:31,823 --> 00:00:34,326 அது நான் ஏற்கனவே என் வாழ்க்கையில நடந்துக்கிட்டிருக்கிற ஒண்ணு. 8 00:00:35,035 --> 00:00:37,829 எனக்குக் கிடைக்கிற இந்த அனுபவத்துக்கு இந்த வலி ஒரு பொருட்டே இல்ல. 9 00:00:39,039 --> 00:00:41,959 காற்றுல நடக்கிற மாயை உருவாக்க, நம் கால் விரல் நுனியில நின்னு 10 00:00:42,042 --> 00:00:44,211 நம்ம எடையைப் போல பன்னிரெண்டு மடங்கோட அழுத்தத்தை 11 00:00:44,711 --> 00:00:47,589 நாம தாங்குறதுக்குக் கத்துக்கிறோம். 12 00:00:47,673 --> 00:00:51,426 பொறுத்துக்கொள்ள முடியாததா தோணும் சமயத்திலேயும், 13 00:00:51,510 --> 00:00:54,179 நளினமா, எளிதா ஆடுறதுக்கு அது தேவை. 14 00:01:04,565 --> 00:01:05,899 நீ நல்லா தூங்கினியா, செல்லம்? 15 00:01:06,984 --> 00:01:08,068 இல்ல. 16 00:01:08,151 --> 00:01:09,736 நான்ஸியின் மரணத்துக்கு இரண்டு வருடங்கள் முன்பு 17 00:01:09,820 --> 00:01:11,321 சோஃபாலயா படுத்த? 18 00:01:11,405 --> 00:01:12,823 கெஸ்ட் ரூமில படுத்தேன். 19 00:01:13,782 --> 00:01:16,410 மீட்டிங் ரொம்ப நேரம் போயிட்டிருந்துச்சு. அதனால உன்னை எழுப்ப விரும்பல. 20 00:01:24,376 --> 00:01:25,627 இதை கொஞ்சம் போட்டுவிடுறியா? 21 00:01:26,753 --> 00:01:29,006 ம். பார்க்கிறேன். 22 00:01:33,218 --> 00:01:35,971 எனக்கு 6.00 மணிக்கு முடிஞ்சிடும், வேணும்னா டின்னர் சேர்ந்து சாப்பிடலாம். 23 00:01:36,054 --> 00:01:41,476 எனக்கு நிறைய மீட்டிங் இருக்கு, அதனால எனக்காக வெயிட் பண்ணாத. 24 00:01:41,560 --> 00:01:44,104 - மாட்டிட்டேன். - நன்றி. 25 00:01:45,772 --> 00:01:48,025 முதல் நாள் பயத்தால எனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லாம போயிடுச்சு. 26 00:01:48,609 --> 00:01:51,361 அந்த தன்னார்வ வேலையா? 27 00:01:55,073 --> 00:01:57,868 அந்த மொத்த நிகழ்ச்சிக்கும் நான் கிரியேட்டிவ் கன்சல்டன்ட்டா இருக்கேன். 28 00:01:57,951 --> 00:01:59,369 ம். 29 00:01:59,453 --> 00:02:03,790 செட் டிஸைன், உடைகளுக்கு கருத்து சொல்றது ஒத்திகைகளைப் பார்க்கிறது. 30 00:02:08,794 --> 00:02:10,547 முதலீடுகள் கஷ்டம்னு நீ நினைக்கிற, 31 00:02:10,631 --> 00:02:13,175 ஆனால் தடுமாறும் ஒரு பரிட்சார்த்த பாலே நிகழ்ச்சியை நடத்திப் பார்க்கணும். 32 00:02:22,476 --> 00:02:23,894 நான்ஸி, வேண்டாம்… 33 00:02:23,977 --> 00:02:26,021 ரெண்டு நாள்ல முழுசா ஒரு லிட்டரா? 34 00:02:26,104 --> 00:02:29,274 நான் ஏற்கனவே நிறைய பார்த்துட்டிருக்கேன், இதுல நீ வேற தொல்லைப்படுத்தாத. 35 00:02:31,276 --> 00:02:33,529 அதைக் கீழப் போடுறியா, ப்ளீஸ்? 36 00:02:39,660 --> 00:02:41,995 நான் கேக்குறதெல்லாம் கொஞ்சம் நேரம் தான். 37 00:02:42,079 --> 00:02:45,541 நான் சொன்ன தெரப்பிஸ்ட் கிட்ட ஒரு மணி நேரம். 38 00:02:45,624 --> 00:02:48,585 சரி, நிச்சயமா. நான் அதுக்கு நேரம் ஒதுக்கப் பார்க்கிறேன். 39 00:02:49,086 --> 00:02:52,047 சரி, மீட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால நான் இதை கிட் கிட்ட முடிச்சு கொடுக்கணும். 40 00:02:53,382 --> 00:02:55,217 நீ பேசுறதுக்கு தயாரா இருக்கும் போது சொல்லு. 41 00:03:40,429 --> 00:03:42,347 ஆரமின்ட்டா ஹாலின் புத்தகத்தைத் தழுவியது 42 00:04:05,662 --> 00:04:08,081 ஹாய், அவரை கூட்டிட்டுப் போறதுக்கு நன்றி. 43 00:04:08,165 --> 00:04:09,917 - ஹாய். - எங்க காரு மெக்கானிக் கிட்ட இருக்கு. 44 00:04:10,000 --> 00:04:11,668 இதோட இந்த வருஷம் நாலாவது முறை, அது… 45 00:04:11,752 --> 00:04:13,420 இன்னைக்கு வந்துடும்னு நினைக்கிறேன். தெரியல. 46 00:04:13,504 --> 00:04:15,005 காலைல எத்தனை காபி குடிச்ச? 47 00:04:15,088 --> 00:04:16,964 ஒரு காபி, இல்ல ரெண்டு, மூணு, நாலு. அஞ்சு இருக்கலாம். 48 00:04:17,048 --> 00:04:19,176 ஆனால் அஞ்சு மணிக்கே எழுந்துட்டேன். இந்த வாரம் ரெண்டு அத்தியாயம் எழுதியிருக்கேன். 49 00:04:19,259 --> 00:04:21,053 எழுத்தாளர் பட்டறைக்குப் பதிவு பண்ணியா? 50 00:04:21,136 --> 00:04:23,388 பண்ணேன். இது வரைக்கும் சவுத் பாஸ் பொது நூலகத்துல 51 00:04:23,472 --> 00:04:25,098 ஆறு ஓய்வு பெற்ற பூமர்கள் தான் பதிவு பண்ணியிருக்காங்க. 52 00:04:25,182 --> 00:04:27,684 ஆனால் அது ஒரு கட்டமைப்பைத் தருது, எனக்கு அது பிடிச்சிருக்கு. 53 00:04:27,768 --> 00:04:29,353 - அருமை. - நீ அற்புதமா இருக்க. 54 00:04:29,436 --> 00:04:31,104 - அப்படியா? - ஆமா. நல்லா ப்ரொஃபஷனலா இருக்கு. 55 00:04:31,188 --> 00:04:34,775 ஒரு வேளை, நான் இதை கொஞ்சம் நிரந்தரமான ஒண்ணா மாத்தலாம். 56 00:04:34,858 --> 00:04:36,944 வேற சில நிகழ்ச்சிகளுக்குக் கன்சல்ட் பண்றதைச் சொல்றேன். 57 00:04:37,027 --> 00:04:38,028 - அருமை, அருமை. - ஆமா. 58 00:04:38,111 --> 00:04:40,155 - பணம் கொடுப்பாங்களா? - கொடுக்கலாம். 59 00:04:40,239 --> 00:04:41,406 தெரியல, நான்… 60 00:04:41,490 --> 00:04:43,825 எனக்கு என்ன நடக்கப் போகுதுன்னு தெரியல, மேர். நான் ரெடியா இருக்கணும். 61 00:04:44,409 --> 00:04:45,452 எதுக்கு ரெடியா இருக்கணும்? 62 00:04:45,536 --> 00:04:46,995 தெரியல. எதுக்கும். 63 00:04:48,455 --> 00:04:49,790 நீயும், ராபர்ட்டும் இன்னும்… 64 00:04:50,499 --> 00:04:55,212 அங்கேயும், இங்கேயுமா, ஒண்ணு ரெண்டு வார்த்தைகளை பேச வச்சேன், ஆனால்… 65 00:04:55,963 --> 00:04:58,131 இங்க பாரு, ரெண்டு வாரம் தானே ஆகுது? பார்ட்டி முடிஞ்சதுலேர்ந்து. 66 00:04:58,215 --> 00:05:00,425 அதனால கொஞ்சம் கஷ்டமா இருக்கலாம். 67 00:05:01,009 --> 00:05:02,177 அவன் திரும்ப வருவான். 68 00:05:03,053 --> 00:05:05,764 ஆர்கேயா! மவுண்ட் ஒலிம்பஸ் ஆட்டம் தொடங்கட்டும்! 69 00:05:06,557 --> 00:05:07,641 ஹாய், ஹாவர்ட்! 70 00:05:07,724 --> 00:05:08,892 - இந்தாங்க. - ஹே, நான்ஸி. 71 00:05:08,976 --> 00:05:09,977 சரி, ஜாலியா இருங்க. 72 00:05:12,104 --> 00:05:14,064 - வரேன். - ஹே, நன்றி. 73 00:05:14,147 --> 00:05:17,067 ஹாவர்டுக்கு இது தேவைன்னு தெரியும், ஆனால் இது எனக்கு அதிகம் தேவைப்பட்டிருக்கு. 74 00:05:17,150 --> 00:05:18,569 எல்லாம் நல்லா நடக்கட்டும், சரியா? 75 00:05:19,111 --> 00:05:20,696 ஜாலியா இருங்க, மக்களே. 76 00:05:21,238 --> 00:05:23,490 இத்தனை வருஷ மேரியோட நட்புல, 77 00:05:23,574 --> 00:05:25,701 அவளோட கணவர் கூட தனியா நான் நேரம் செலவழிச்சதே இல்ல. 78 00:05:26,535 --> 00:05:27,619 அதைப் பத்தி நான் நினைச்சதும் இல்ல. 79 00:05:27,703 --> 00:05:30,205 - …என்னோட ஃபோன். நான் இதை… - அப்புறம். 80 00:05:30,289 --> 00:05:31,498 என்னோட ஃபோனை கனெக்ட் பண்ணப் போறேன். 81 00:05:31,582 --> 00:05:33,375 என்கிட்ட… நல்லதொரு ஸ்ட்ரவின்ஸ்கி கலெக்ஷன் இருக்கு. 82 00:05:33,458 --> 00:05:36,086 எனக்கு மேரியை பிடிக்கும், ஆனால் ஒருத்தரோட 83 00:05:36,170 --> 00:05:38,672 வேலையில்லாத கணவரை கைப்பிடிச்சு நடத்துற மனநிலையில நான் இல்ல. 84 00:05:48,807 --> 00:05:49,808 நன்றி, பானி. 85 00:05:49,892 --> 00:05:50,893 LA மெட்ரோ பாலே 86 00:05:50,976 --> 00:05:53,103 டான்சர்ஸ், மியுசிஷியன்ஸ், டெக்னிக்கல் ஆர்டிஸ்ட்ஸ், 87 00:05:53,187 --> 00:05:55,647 அப்புறம் நம்ம மொத்த குழுவுக்கும் நன்றி. 88 00:05:56,148 --> 00:06:00,194 இப்ப, நாம ஒத்திகையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னால, ஒரு நிமிஷம் எடுத்து, 89 00:06:00,277 --> 00:06:03,280 நம்ம பக்கத்தில இருக்கிறவங்க கிட்ட திரும்பி, நம்மள அறிமுகப்படுத்திக்குவோம். 90 00:06:03,989 --> 00:06:05,616 ஹெல்கா டியூரர், காஸ்ட்யூம் டிசைனர். 91 00:06:05,699 --> 00:06:08,785 நான் நான்ஸி ஹென்னஸி. “வேவ்ஸ்” கடந்த சீஸன்ல உங்க வேலை எனக்குப் பிடிச்சிருந்தது. 92 00:06:08,869 --> 00:06:10,370 - நன்றி. - ரொம்ப அழகா இருந்துச்சு. 93 00:06:10,454 --> 00:06:14,625 அடுத்த எட்டு வாரங்களுக்கு, நிகழ்ச்சி ஆரம்பிக்கிற வரைக்கும், இது தான் உங்க குடும்பம். 94 00:06:16,001 --> 00:06:20,088 இப்போ, இதை முடிக்கிறதுக்கு முன்னால, உங்களுக்கு ஒருத்தரை அறிமுகம் பண்ண விரும்புறேன், 95 00:06:20,172 --> 00:06:23,634 மெட்ரோ பாலே போர்டு உறுப்பினர், இந்த நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் கன்சல்டன்ட், 96 00:06:23,717 --> 00:06:24,885 நான்ஸி ஹென்னஸி. 97 00:06:26,929 --> 00:06:27,971 நன்றி, ஃபில். 98 00:06:28,639 --> 00:06:32,059 அரியாட்னி நம்ம கம்பெனியின் இது வரையிலான மிக சிக்கலான பாலே. 99 00:06:32,559 --> 00:06:35,103 இது நாம வாழுற சிக்கலான காலத்துக்குப் பொருத்தமானது. 100 00:06:35,187 --> 00:06:37,981 இந்த பயணத்துல உங்கள எல்லார் கூடவும் இருப்பதுல எனக்கு சந்தோஷம். 101 00:06:38,815 --> 00:06:43,403 நான் ஹாவர்ட் சிம்ஸனை அறிமுகப்படுத்த விரும்புறேன் அவர் ஒரு கிளாஸிக்ஸ் ஸ்காலர், அதோட… 102 00:06:43,487 --> 00:06:44,863 நெருங்கிய நண்பர். 103 00:06:44,947 --> 00:06:47,824 நண்பர், அவரோட நடன விளக்கக்கள் பார்வையாளர்களுக்கு 104 00:06:47,908 --> 00:06:49,910 தேவையான வரலாற்று பின்புலத்தைக் கொடுக்கும். 105 00:06:51,828 --> 00:06:54,456 ஃபில் என்னை இந்த நிகழ்ச்சிக்கு சேர்த்த போது, 106 00:06:54,540 --> 00:06:58,126 என்னோட ஹெர்குலேனியம் சுவடிகள் மொழிப்பெயர்ப்பை நிறுத்தி வச்சிருக்கேன். 107 00:06:58,210 --> 00:06:59,753 உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம், தெரியாமலும் இருக்கலாம், 108 00:06:59,837 --> 00:07:05,300 அரியாட்னி என்கிறது கிரேக்கத்துல மிக புனிதமான அல்லது மிக தூய்மையான… 109 00:07:05,384 --> 00:07:07,344 - நன்றி, டேவிட். - ஹாவர்ட். 110 00:07:07,427 --> 00:07:10,764 சரி, நன்றி. நாம வேலையைப் பார்க்கப் போகலாம். நன்றி. 111 00:07:10,848 --> 00:07:12,558 - உங்களை சந்திச்சதில சந்தோஷம். - எனக்கும் தான். 112 00:07:15,936 --> 00:07:18,856 ஹே, நான்ஸி. இங்க மதிய சாப்பாடு இருக்கா… உனக்குத் தெரியுமா? 113 00:07:18,939 --> 00:07:21,191 தெரியல. சாரி. 114 00:07:23,652 --> 00:07:26,822 ஹே, ஃபில், ஒரு நிமிஷம். எனக்கு ஒரு விஷயத்துல உன் கருத்து தெரியணும். 115 00:07:26,905 --> 00:07:30,325 காஸ்ட்யூம்ஸுக்கு கலர் பத்தி யோசிட்டிருந்தேன். 116 00:07:30,409 --> 00:07:32,619 உன்னோட சமீபத்திய நிகழ்ச்சிகள்ல, 117 00:07:32,703 --> 00:07:35,163 நவீன ஒற்றை கலரை பயன்படுத்தியிருக்க, அந்த கருப்பு டிரஸ் லுக். 118 00:07:35,247 --> 00:07:37,875 ஆனால் இந்த வருஷம் ஏதாவது புதுசா பண்ணலாம்னு எனக்குத் தோணுச்சு. 119 00:07:38,917 --> 00:07:39,918 அப்படியா? 120 00:07:40,002 --> 00:07:45,591 வெளிச்சத்தையும், கலரையும் பிரதிபலிக்கிற, வீடியோ கூட ப்ரோஜெக்ட் பண்ற திறனுள்ள 121 00:07:45,674 --> 00:07:47,009 துணிகளை ஆராய்ச்சி பண்ணிட்டிருந்தேன். 122 00:07:47,092 --> 00:07:49,761 அது நிகழ்ச்சியோட அழகை நல்லா எடுத்துக் கொடுக்கும்னு தோணுச்சு. 123 00:07:50,470 --> 00:07:52,723 நீ ஒரு லுக்புக் தயாரிச்சுக் கொடு, அதைப் பார்த்து முடிவு பண்ணலாம். 124 00:07:52,806 --> 00:07:54,474 நல்லது. எனக்குக் கொஞ்ச நாட்கள் கொடு. 125 00:07:54,558 --> 00:07:55,559 சரி. 126 00:08:08,405 --> 00:08:12,159 ஒரு டான்ஸ் ஸ்டூடியோவில நான் காலடி எடுத்து வச்சு 25 வருஷம் ஆகுது. 127 00:08:15,829 --> 00:08:19,458 பாலேக்கு திரும்ப வருவதற்கு நிறைய மனோ தைரியம் தேவைப்பட்டுச்சு. 128 00:08:21,502 --> 00:08:24,087 ஒத்திகை அறைகளில பழைய நினைவுகளைப் பார்க்க முடிஞ்சது. 129 00:08:25,297 --> 00:08:29,218 உடலை வளைக்கிற இளம்வயசு பிள்ளைங்க, இந்த பெரிய மேடை. 130 00:08:35,724 --> 00:08:37,893 நான் நினைச்சதை விட கஷ்டமா அது இருந்துச்சு. 131 00:08:41,647 --> 00:08:43,941 அதை நான் ராபர்ட்டோட நண்பர்கள் கிட்ட பார்த்திருக்கேன். 132 00:08:44,024 --> 00:08:48,779 ஒரு நாள், தன்னோட கார்ட்டியர் பிரேஸ்லெட்களை எலனா பெர்காஃப் பெருமையா காட்டிட்டிருப்பா. 133 00:08:48,862 --> 00:08:51,365 அடுத்த நாள் பார்த்தா சாப்பாட்டுக்காக அதை வித்திட்டிருப்பா. 134 00:08:51,448 --> 00:08:52,866 சரி, கொஞ்சம் நிதானமா இரு. 135 00:08:52,950 --> 00:08:55,702 உண்மையா சொல்றேன், கொஞ்சம் மூச்சை இழுத்து விடு. 136 00:08:56,995 --> 00:08:58,956 நீ தேவையில்லாம கற்பனை பண்ற. 137 00:09:00,123 --> 00:09:01,750 என் பக்கமிருந்து பார்க்கும் போது, 138 00:09:01,834 --> 00:09:04,461 குடிக்கிறது, வீட்டுமக்களோட சண்டை பிடிக்கிறது, இது… 139 00:09:04,545 --> 00:09:07,714 இந்த வயசுல வரும் குழப்பம்னு தோணுது, விவாகரத்து இல்ல. 140 00:09:07,798 --> 00:09:10,843 பணக்கார குடும்பங்கள் சொத்தைப் பல காரணங்களுக்காக பிரிப்பாங்க. 141 00:09:10,926 --> 00:09:12,886 நீ சும்மா அவன் கிட்ட அது பத்தி பேசணும். 142 00:09:12,970 --> 00:09:17,224 ஒவ்வொரு முறையும் அவன் சோஃபாவில படுத்திருக்கும் போது அல்லது… 143 00:09:22,813 --> 00:09:24,773 ஒரு காலி பாட்டிலைப் பார்க்கும் போது, 144 00:09:24,857 --> 00:09:27,317 என் குழந்தைப்பருவ கெட்டக் கனவை திரும்பத் திரும்ப போட்டுப் பார்க்கிற மாதிரி இருக்குது. 145 00:09:28,193 --> 00:09:31,655 ஒரு மூலையில எதுவாயிருந்தாலும் சரியாயிடும்னு தோணுது. 146 00:09:32,406 --> 00:09:34,783 ஆனால் ஒரு சத்தமான குரல், "பார்த்திடலாம். 147 00:09:34,867 --> 00:09:37,703 நம்மளால நம்ம வாழ்க்கையை கட்டுப்படுத்த முடியலைன்னா, நாம…" 148 00:09:40,247 --> 00:09:41,248 தெரியல… 149 00:09:42,791 --> 00:09:45,460 நான்ஸி, நான் ஒண்ணு சொல்றேன், கேட்குறியா? 150 00:09:47,212 --> 00:09:48,422 சொல்லு. 151 00:09:49,506 --> 00:09:53,552 நீ அந்த அமைதியான குரலுக்கு காது கொடுக்கணும். 152 00:09:54,595 --> 00:10:01,226 ராபர்ட் குடிக்கிறது பழைய புண்களை திறக்குதுன்னு எனக்குத் தெரியும், ஆனால் நிஜத்துல, 153 00:10:01,310 --> 00:10:06,315 இந்த மனுஷன் உன்னை அணுஅணுவா ரசிக்கிறான். 154 00:10:06,398 --> 00:10:10,611 உன்னை ஆராதிக்கிறான். அவன் உன்னை விட்டு போகமாட்டான். 155 00:10:13,614 --> 00:10:16,742 நீ சொல்றது சரி. என்னால… இந்த எண்ணத்தை மாத்த முடியல. 156 00:10:19,661 --> 00:10:21,997 இப்ப இது பத்தி பேசறது வேடிக்கையா இருக்கும். 157 00:10:22,080 --> 00:10:25,292 நான் இப்ப தான் எங்க திருமண நாளுக்கு ஒரு ஓவியத்தை வரையுறதுக்கு சொல்லியிருக்கேன்… 158 00:10:26,126 --> 00:10:27,544 அதாவது நாங்க அது வரைக்கும் சேர்ந்து இருந்தா. 159 00:10:27,628 --> 00:10:30,589 கடவுளே. நீங்க கண்டிப்பா சேர்ந்து இருப்பீங்க. 160 00:10:30,672 --> 00:10:32,799 அதான் சாகும் வரையும் பிரியாதிருப்போம்னு வாக்குறுதி எடுத்திருக்கீங்களே. 161 00:10:32,883 --> 00:10:35,010 அவன் எங்கேயும் போகப் போறதில்ல. 162 00:10:49,566 --> 00:10:51,985 ஜார்ஜா லெனார்ட் கூட ஒண்ணு வரைஞ்சியே அது எனக்குப் பிடிச்சிருந்தது. 163 00:10:53,445 --> 00:10:55,781 நான் ஜார்ஜாவோட நிறைய வேலை பண்றேன். 164 00:10:56,865 --> 00:11:01,203 அவளோட நாய்களை வரையச் சொன்னதை உன்கிட்ட சொன்னாளா? 165 00:11:05,290 --> 00:11:08,794 நாம கொஞ்சம் பாதுகாப்புக் குறைவா உள்ளதை செய்யலாம்னு எனக்குத் தோணுச்சு. 166 00:11:12,631 --> 00:11:15,133 இதிலிருந்து என்னால கண்ணை எடுக்கவே முடியல. யார் இவ? 167 00:11:16,635 --> 00:11:17,719 ஒரு கவிஞர். 168 00:11:18,720 --> 00:11:20,138 ஒரு பார்ட்டியில சந்திச்சோம். 169 00:11:20,222 --> 00:11:21,640 ரெண்டு பேரும் உறவு வச்சிக்கிட்டீங்களா? 170 00:11:23,141 --> 00:11:24,643 அவளை எனக்குப் பிடிச்சிருந்தது. 171 00:11:25,227 --> 00:11:27,020 ப்ளீஸ், உட்கார். 172 00:11:39,950 --> 00:11:41,118 இது செக்ஸியா இருக்கு. 173 00:11:42,870 --> 00:11:45,539 ம், என்னோட… என்னோட வடுக்கள் தெரியும். 174 00:11:46,123 --> 00:11:48,125 தெரியட்டுமே? எனக்கு அது பிடிச்சிருக்கு. 175 00:11:49,126 --> 00:11:51,378 அது உனக்குள் ஒரு பகுதி. அது உன் கதையை சொல்லுது. 176 00:11:52,171 --> 00:11:54,506 நான் மறக்க நினைக்கிற ஒரு கதை. 177 00:11:55,507 --> 00:11:56,925 நீ தான் கொஞ்சம் பாதுகாப்பு குறைவான்னு… 178 00:11:58,218 --> 00:11:59,219 சொன்னியே. 179 00:11:59,970 --> 00:12:01,805 அதை தான் நான் தினமும் கண்ணாடியில பார்க்கிறேனே. 180 00:12:01,889 --> 00:12:04,808 அதை எதிர்காலத்துக்காக படம்பிடிச்சு வைக்க அவசியமில்லைன்னு நினைக்கிறேன். 181 00:12:05,642 --> 00:12:07,686 அப்ப பாதுகாப்பா இருக்க விரும்புற. 182 00:12:08,979 --> 00:12:10,939 எனக்கு இப்ப எல்லாம் என்ன வேணும்னே தெரியல. 183 00:12:15,194 --> 00:12:17,905 பேசு. முடிஞ்சதும் நாம தொடரலாம். 184 00:12:17,988 --> 00:12:18,989 மன்னிக்கணும். 185 00:12:21,909 --> 00:12:23,327 ஸ்காட் ரீட் எடு நான்ஸி - என் கிட்ட பேசு 186 00:12:23,410 --> 00:12:25,329 நீ என் கிட்ட பேசுற வரைக்கும் மெசேஜ் பண்ணிட்டே இருக்கப் போறேன் நான்ஸி. 187 00:12:25,412 --> 00:12:27,581 ஸ்காட் கிட்ட இருந்து மெசேஜ் வர்றது பயமா இருந்துச்சு. 188 00:12:27,664 --> 00:12:29,416 ஆனால் இதுல மோசம் என்னன்னா நான் தான் முதல்ல மெசேஜ் அனுப்பினேன். 189 00:12:29,499 --> 00:12:30,584 நிறுத்து - எனக்கு சும்மா பேசணும் 190 00:12:30,667 --> 00:12:34,213 எனக்குள்ள ஏதோ ஒண்ணு, திரும்பப் போய் பழைய நெருப்பைத் தொட தூண்டுச்சு… 191 00:12:34,296 --> 00:12:35,464 ஸ்காட் ரீடை ப்ளாக் செய்ய வேண்டுமா? - ப்ளாக் 192 00:12:35,547 --> 00:12:36,590 ப்ளாக் செய்கிறது 193 00:12:36,673 --> 00:12:38,759 …அது என்னைக் காயப்படுத்தியிருந்தாலும். 194 00:12:39,468 --> 00:12:40,594 ஒண்ணும் பிரச்சினை இல்லையே? 195 00:12:43,096 --> 00:12:44,348 ஒண்ணுமில்ல. 196 00:12:51,855 --> 00:12:53,106 நான் ரெடி. 197 00:13:22,302 --> 00:13:23,554 நீ இதை தான் தேடுறியா? 198 00:13:25,556 --> 00:13:29,142 உன்னோட நோட்டுபுத்தகம் முடிஞ்சதைப் பார்த்தேன்… இது… இது ஒண்ணுமில்ல. 199 00:13:29,226 --> 00:13:30,477 நன்றி, ஹாவர்ட். 200 00:13:31,562 --> 00:13:32,771 பெறுநர்: லூயீஸ் அனுப்புநர்: டேவிட் 201 00:13:33,522 --> 00:13:36,275 உன்னை இன்னும் டேவிட்ன்னா கூப்பிடுறான்? இந்த வாரம் என்னை ரெண்டுமுறை லூயீஸ்ன்னு கூப்பிட்டான். 202 00:13:36,358 --> 00:13:38,235 என்னை ஒவ்வொரு முறையும் வேற வேற பேர் சொல்லி கூப்பிடுறான். 203 00:13:40,988 --> 00:13:43,907 போதை பொருள் எடுக்குறவன் கிட்ட அதை தான் எதிர்பார்க்க முடியும். 204 00:13:43,991 --> 00:13:45,409 என்ன? பொறு, ஃபில்லா? 205 00:13:46,702 --> 00:13:49,872 அந்த போதை மருந்து அவனோட மூளைக்குள்ள புகுந்திடுச்சுன்னு நினைக்கிறேன். 206 00:13:51,832 --> 00:13:53,750 எப்படியோ. உனக்கு இது பிடிச்சதில சந்தோஷம். 207 00:13:55,586 --> 00:13:57,588 நல்லா இருந்துச்சு. எல்லாரும் வாங்க. 208 00:14:39,296 --> 00:14:42,174 நன்றி. நன்றி. 209 00:14:42,925 --> 00:14:44,092 கேட்டுலஸ் கவிதை தொகுப்பு ஒரு புதிய மொழிப்பெயர்ப்பு 210 00:14:44,176 --> 00:14:45,177 டாக்டர் ஹாவர்ட் சிம்ப்ஸன், PHD 211 00:14:49,264 --> 00:14:51,475 நான் ஹாவர்ட் பத்தி தவறா நினைச்சு வச்சிருக்கேனோன்னு தோணுச்சு. 212 00:14:51,975 --> 00:14:56,313 அவனை கண்டுக்காம இருந்ததுக்கு நான் தான் காரணம், அவனில்லைன்னு தோணுச்சு. 213 00:15:14,456 --> 00:15:15,457 ஹே. 214 00:15:19,044 --> 00:15:22,381 எங்களுக்குள்ள ஒரு நட்பு உருவாகிறதை தடுக்க முடியாதுன்னு தோண ஆரம்பிச்சது. 215 00:15:30,681 --> 00:15:33,350 நான்ஸியின் மரணத்துக்கு நான்கு வாரங்களுக்கு முன் 216 00:15:36,395 --> 00:15:37,396 அப்படி தான். 217 00:15:37,479 --> 00:15:40,274 சரி. நல்லது மக்களே. இன்னைக்கு இது போதும். 218 00:15:42,526 --> 00:15:45,320 வாவ், பாதி நாள் ஒத்திகை, எனக்கு இப்ப என்ன பண்றதுன்னு தெரியல. 219 00:15:45,404 --> 00:15:48,657 பசங்கள கூப்பிட போற வரைக்கும் நாலு மணி நேரம் செலவழிக்கணும் 220 00:15:50,868 --> 00:15:52,411 நான் இப்போ போய் தியேட்டர்ல 221 00:15:52,494 --> 00:15:56,123 “ரெட் ஷூஸ்” படம் பார்த்தா மோசமான அப்பான்னு அர்த்தமா? 222 00:15:56,623 --> 00:15:57,791 நீயும் கூட வரலாம். 223 00:15:58,458 --> 00:16:00,502 ஐயோ, இது சிந்திருச்சு. நான் கழுவிட்டு வந்துடுறேன். 224 00:16:00,586 --> 00:16:02,629 - சரி, போ. நான் வெயிட் பண்றேன். - சரி. 225 00:16:03,672 --> 00:16:05,549 ஹே, ஃபில். ஒத்திகை நல்லா போச்சு. 226 00:16:05,632 --> 00:16:06,842 நாளைக்குப் பார்க்கலாம், லூயீஸ். 227 00:16:07,926 --> 00:16:09,428 நான்ஸி. 228 00:16:09,511 --> 00:16:11,555 அனைத்து பாலினத்தவரும் 229 00:16:28,697 --> 00:16:32,201 அரியாட்னி லுக்புக் 230 00:16:33,285 --> 00:16:34,286 நான்ஸி ஹென்னஸி 231 00:16:40,250 --> 00:16:41,502 பாலெட் 232 00:16:41,585 --> 00:16:42,920 அரியாட்னி காட்சி ஒன்று துணி 233 00:16:52,262 --> 00:16:53,347 என்னாச்சு? 234 00:16:53,430 --> 00:16:54,681 ஒண்ணுமில்ல 235 00:16:55,516 --> 00:16:57,059 நான்ஸி, பரவாயில்ல. நீ என் கிட்ட சொல்லலாம். 236 00:16:59,144 --> 00:17:01,730 நான் பண்ண இந்த லுக்புக்கை ஃபில் தூக்கி எறிஞ்சிட்டான். 237 00:17:02,940 --> 00:17:05,567 அவன்… என்னோட பணத்து மேல காட்டுற அக்கறை மாதிரி என் மேலயும் காட்டுறான்னு 238 00:17:05,651 --> 00:17:07,152 நினைச்சது அபத்தம். 239 00:17:07,736 --> 00:17:11,281 அந்த பகுமான நாய்க்கு நீ இல்லேன்னா ஒரு வேலை கூட இருக்காது. 240 00:17:12,281 --> 00:17:14,034 அது என்னோட பணம் கூட இல்ல, அது ராபர்ட்டோடது. 241 00:17:14,117 --> 00:17:15,743 நீ அப்படியா நினைக்கிற? 242 00:17:15,827 --> 00:17:19,039 ம், அவங்க குடும்பம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் அதை எனக்கு ஞாபகப்படுத்தாம இருக்க மாட்டாங்க. 243 00:17:20,958 --> 00:17:23,085 இந்த பண சமாச்சாரம் எப்படி வேலை செய்யுதுன்னு எனக்குத் தெரியாது. 244 00:17:23,167 --> 00:17:26,755 எங்க அப்பா நோய்வாய்ப்பட்டு வீல் சேரே கதின்னு இருந்தார். 245 00:17:26,839 --> 00:17:28,048 எங்க கிட்ட எப்பவுமே பணத் தட்டுப்பாடு இருந்துச்சு. 246 00:17:28,131 --> 00:17:31,552 எனக்குக் கோபம் வரும், அப்போ அவரு, 247 00:17:32,970 --> 00:17:36,974 "அந்த மக்கள் கிட்ட இல்லாதது நம்ம கிட்ட ஒண்ணு இருக்கு, 248 00:17:37,724 --> 00:17:39,059 சாதிச்சோம் என்கிற பெருமை," அப்படின்னு சொல்வார். 249 00:17:39,893 --> 00:17:41,270 நீ கீழே இருந்து வந்து… 250 00:17:41,353 --> 00:17:42,521 பேக்கர்ஸ்ஃபீல்ட் தானே? 251 00:17:43,188 --> 00:17:46,859 ஒரு உலகப் புகழ் பெற்ற பாலே கம்பெனியில ஒரு கிரியேட்டிவ் கன்சல்டன்ட்டா ஆனது, 252 00:17:48,068 --> 00:17:49,736 ஒரு பொறாமைப்பட வேண்டிய சாதனை. 253 00:17:50,737 --> 00:17:53,073 ராபர்ட் இதை தன்னார்வ வேலைன்னு சொல்றான். 254 00:17:54,199 --> 00:17:57,619 உன் கணவனை தப்பா சொல்லல, ஆனால் அவனுக்குள்ளது பரம்பரை சொத்து. 255 00:17:58,120 --> 00:17:59,538 நீ பண்ணது ஒரு பெரிய காரியம். 256 00:18:01,498 --> 00:18:02,583 ரொம்ப நன்றி. 257 00:18:04,459 --> 00:18:05,711 படம் எத்தனை மணிக்கு? 258 00:18:09,298 --> 00:18:10,757 அதுக்காக தான் அப்படியா? 259 00:18:10,841 --> 00:18:16,346 ஆமா. காதல், உணவு, தூக்கம் எல்லாத்தையும் விட விக்கி அவ நினைச்சதைத் தேர்வு செஞ்சா. 260 00:18:16,430 --> 00:18:17,848 இப்போது ஓடுகிறது - த ரெட் ஷூஸ் 35MM-ல் புதுப்பிக்கப்பட்டது 261 00:18:17,931 --> 00:18:21,143 அந்த தேர்வு தான் அவளை அந்த அழிவுக்குக் கொண்டு போச்சு. 262 00:18:21,226 --> 00:18:25,606 நம்மோட கட்டுப்படுத்த முடியா ஆசைகள், அதை நாம தேர்ந்தெடுக்கிறோமோ, இல்ல நமக்குள்ள ஒண்ணாயிருக்கா? 263 00:18:25,689 --> 00:18:28,150 அவ நினைச்சா கூட அவளால நிறுத்த முடியாதுன்னு எனக்குத் தோணுது. 264 00:18:28,233 --> 00:18:29,651 அது தான் அதுல உள்ள சோகமே. 265 00:18:32,070 --> 00:18:36,033 நான்… நான் எப்பவுமே அழகுக்காக கல்யாணம் பண்ற விஷயத்தை உண்மைன்னு நம்புவேன். 266 00:18:36,700 --> 00:18:39,745 ஆனால், அந்த கச்சிதமான உடலமைப்பையும், 267 00:18:39,828 --> 00:18:41,413 அதிக விலையுள்ள வாட்சையும் தாண்டி, 268 00:18:41,496 --> 00:18:43,332 நாம கண்ணால பார்க்கிறதை விட நிறைய உண்மைகள் இருக்கு. 269 00:18:43,415 --> 00:18:47,252 ம், அது தான் எனக்கு கிடைச்சதிலேயே மிக அழகான வஞ்சப் புகழ்ச்சி. 270 00:18:48,420 --> 00:18:52,591 அப்புறம், உன்னோட பேகன் சாப்பிடுற வீகனிஸம் என்கிற போலி ஒழுக்கத்தை வியக்கிறேன். 271 00:18:53,175 --> 00:18:55,886 அதோட உன்னோட அர்த்தமில்லாத ஈ-புக் வெறுப்பையும். 272 00:18:55,969 --> 00:18:58,430 என்னால தொட முடியலைன்னா, நான் அதைப் படிக்க மாட்டேன். 273 00:19:00,933 --> 00:19:02,851 - ஹலோ. - நான்ஸி? 274 00:19:05,562 --> 00:19:07,105 நீங்க என்னை கூப்பிடுறதை நிறுத்தணும். 275 00:19:07,189 --> 00:19:09,358 ஏன் இப்படி விளையாடிட்டிருக்க? நீ தான் என்னைத் தேடிக் கண்டுப்பிடிச்ச. 276 00:19:10,817 --> 00:19:11,902 இல்ல. 277 00:19:12,819 --> 00:19:18,659 இல்ல, ஏதோ ஆர்வம். ஒரு முட்டாள்தனமான பலவீனமான தருணத்துல உங்களைத் தேடிப் பார்த்தேன். 278 00:19:19,243 --> 00:19:20,994 என்னைத் தொல்லை பண்ணாதீங்க. 279 00:19:21,495 --> 00:19:22,496 நான்ஸி… 280 00:19:25,999 --> 00:19:27,000 ஹே, சாரி. 281 00:19:29,336 --> 00:19:30,420 கோபமா பேசுன மாதிரி இருந்துச்சு. 282 00:19:32,506 --> 00:19:33,507 ஆமா. 283 00:19:33,590 --> 00:19:36,009 அதைப் பத்தி பேசணுமா, இல்ல… 284 00:19:37,135 --> 00:19:39,680 அது என் கடந்த காலத்தில இருந்து ஒருத்தர். 285 00:19:39,763 --> 00:19:45,769 நினைச்சுப் பார்க்கிறதை விட… ரொம்ப சிக்கலானது, கொடுமையானது. 286 00:19:46,520 --> 00:19:48,689 எனக்கும் அந்த மாதிரி நிலைமை ஏற்பட்டிருக்கு. 287 00:19:49,940 --> 00:19:51,692 கடவுளே, நீ நடுங்குற. 288 00:19:54,528 --> 00:19:56,864 உங்க வீட்டுக்கு டின்னுருக்கு மேரி எங்களைக் கூப்பிட்டிருக்கா. 289 00:19:57,531 --> 00:19:58,824 ஆமா, நான் ஆவலா எதிர்பார்த்திட்டிருக்கேன். 290 00:19:58,907 --> 00:20:00,909 இந்த விஷயத்தை நமக்குள்ள வச்சிக்கலாமா? 291 00:20:02,119 --> 00:20:03,370 அதான், இந்த ஃபோன் கால்கள். 292 00:20:03,453 --> 00:20:06,790 நான், நான்… இது வரைக்கும் ராபர்ட் கிட்ட இது பத்தி பேசல. 293 00:20:08,542 --> 00:20:10,544 கண்டிப்பா. ஒரு வார்த்தை பேசமாட்டேன். 294 00:20:10,627 --> 00:20:12,212 நல்லது. நன்றி. 295 00:20:17,843 --> 00:20:18,969 ரெண்டு காப்பசீனி. 296 00:20:19,553 --> 00:20:20,679 ஆர்டர்ல என்ன பேரு போடுறது? 297 00:20:20,762 --> 00:20:21,805 - டேவிட். - லூயீஸ். 298 00:20:26,268 --> 00:20:29,813 நீ பேசுவதாய்க் கேள்விப்பட்டேன் ஆனால் நான் நன்றாக இருக்கிறேன் 299 00:20:29,897 --> 00:20:33,817 ஆனால் விடாது அழுகிறேன் ஒவ்வோர் இரவிலும் 300 00:20:33,901 --> 00:20:37,946 ஏமாற்ற விரும்பவில்லை ஆனால் நான் நன்றாக இருக்கிறேன் 301 00:20:38,030 --> 00:20:41,575 நன்றாக இருக்கிறேன் நன்றாக இருக்கிறேன் 302 00:20:42,159 --> 00:20:45,162 ஆம், ஆம், நான் நன்றாக இருக்கிறேன் 303 00:20:45,787 --> 00:20:49,499 நன்றாக இருக்கிறேன் நன்றாக இருக்கிறேன் 304 00:20:49,583 --> 00:20:52,586 ஆம், ஆம், நான் நன்றாக இருக்கிறேன் 305 00:20:55,172 --> 00:20:56,173 அற்புதம்! 306 00:20:56,256 --> 00:20:57,966 அருமை! அருமையா இருந்துச்சு. 307 00:20:58,050 --> 00:20:59,760 நாம அவளை நம்ம பார்ட்டி ஒண்ணுக்கு புக் பண்ணணும். சரியா? 308 00:20:59,843 --> 00:21:00,844 நாங்க உன்னை புக் பண்ணப் போறோம்! 309 00:21:00,928 --> 00:21:02,137 - ஆமா! - உன்னை புக் பண்ணப் போறோம். 310 00:21:02,221 --> 00:21:03,764 போய் வீட்டுப்பாடத்தைப் பண்ணுங்க. எழுத்துக் கூட்டுறதுல ஆரம்பிங்க. 311 00:21:03,847 --> 00:21:05,140 அற்புதமா இருந்துச்சு, செல்லம். 312 00:21:05,224 --> 00:21:06,767 - அவ ரொம்ப அழகு. - நான் பார்த்துக்குறேன். 313 00:21:06,850 --> 00:21:08,477 நன்றி. பாலே எப்படிப் போயிட்டிருக்கு? 314 00:21:08,560 --> 00:21:10,687 - சூப்பரா போகுது. இது வரைக்கும். - அப்படியா? 315 00:21:10,771 --> 00:21:13,398 ஆனால் மூக்குல உறிஞ்சி, பெருமையடிக்கிற அந்த டைரக்டரை தான் 316 00:21:13,482 --> 00:21:15,442 பொறுத்துக்க முடியல. 317 00:21:16,443 --> 00:21:19,488 - மூக்குல உறிஞ்சுறவனா? - யாரைப் பத்தி பேசுறீங்க? 318 00:21:20,113 --> 00:21:23,116 - தெரியல… - அது… ஃபில், ஆர்ட்டிஸ்டிக் டைரக்டர், அவன்… 319 00:21:23,200 --> 00:21:26,036 …ஒரு முட்டாள். அவனைப் பத்தி பேசுனது போதும். நீங்க ரெண்டு பேரும் ஓய்வெடுங்க. 320 00:21:26,119 --> 00:21:28,497 ஹாலுக்குப் போய் உட்காருங்க, நாங்க ஆண்கள் பாத்திரங்களை கழுவுறோம். 321 00:21:28,580 --> 00:21:29,831 நன்றி. 322 00:21:36,421 --> 00:21:38,632 - ஐயோ. டயர்டா இருக்கு. - அப்படியா? 323 00:21:38,715 --> 00:21:41,844 கொஞ்ச நாளா தூக்கம் கிடைக்கிறது பெரிய விஷயமா இருக்கு. 324 00:21:41,927 --> 00:21:47,099 ஹாவர்ட் வேலை தேடுறது, மார்கஸ் சுத்தி நடக்குற விஷயம். 325 00:21:47,182 --> 00:21:48,517 ம், ஹாவர்டுக்கு சீக்கிரம் 326 00:21:48,600 --> 00:21:50,561 - ழுழு நேர வேலை கிடைச்சிடும்னு நினைக்கிறேன். - நன்றி. 327 00:21:50,644 --> 00:21:53,897 அவன் கூட கொஞ்ச நேரம்தான் செலவழிச்சிருக்கேன், ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கான். 328 00:21:53,981 --> 00:21:55,524 நான் கொடுத்த கிளாடா மோதிரத்தையா போட்டிருக்க? 329 00:21:55,607 --> 00:21:57,568 - ஆமா. - பார்க்க அழகா இருக்கு. 330 00:21:57,651 --> 00:22:01,780 இது என்னைத் தரையில நிக்க வைக்கும்னு சொன்ன தானே? அது உண்மை தான். 331 00:22:03,699 --> 00:22:07,327 பாரேன், யாரு அம்மாவோட ஷூவைப் போட்டிருக்கிறதுன்னு! 332 00:22:07,411 --> 00:22:09,663 கவனமா இரு! 333 00:22:09,746 --> 00:22:11,415 அதுலேயும் படியில ஏறம் போது, கண்ணா. 334 00:22:11,498 --> 00:22:13,375 ஹே. நாம வீட்டுக்குப் போகணும்னு நினைக்கிறேன். 335 00:22:13,458 --> 00:22:15,210 - அவங்க குழந்தைங்கள தூங்க வைக்கணும். - ஆமா. 336 00:22:15,294 --> 00:22:17,254 இல்ல, மேரிக்கும் ஹாவர்டுக்கும் ஒரு விஷயம் சொல்லணும். 337 00:22:18,422 --> 00:22:19,590 சொல்லு. 338 00:22:19,673 --> 00:22:22,426 என்னோட நண்பன் ஒருத்தன், ஜே மைக்கில்ஸ்… 339 00:22:22,509 --> 00:22:24,219 உண்மையில என்னோட வீட்டு மக்களுக்கு பழக்கமானவன். 340 00:22:24,303 --> 00:22:27,306 அவன் கொஞ்சம் திமிரு தான், ஆனால் ரொம்ப புத்திசாலி. 341 00:22:27,389 --> 00:22:29,266 - வா. நாம வீட்டுக்குப் போகலாம். - பொறு. 342 00:22:29,349 --> 00:22:32,186 இவங்க நம் நண்பர்கள், அவங்களுக்கு நம்ம உதவி தேவை. 343 00:22:32,269 --> 00:22:35,439 - இருக்கட்டும். ஒண்ணுமில்ல. - இந்த ஜே ஒரு கிரிமினல் வக்கீல், 344 00:22:35,522 --> 00:22:37,774 அவனுக்கு நான் பெரிசா உதவி பண்ணியிருக்கேன். 345 00:22:37,858 --> 00:22:41,236 மார்கஸ் நீதிமன்றத்துக்கு போகணும்னு நான்ஸ் சொன்னா. 346 00:22:41,320 --> 00:22:45,157 அவனுக்காக ஜே ஆஜாராகச் சொல்றேன். காசு கொடுக்க வேண்டாம். 347 00:22:45,240 --> 00:22:48,243 கடவுளே. அது… ராபர்ட், அது… 348 00:22:48,327 --> 00:22:50,704 உங்க மனசு புரியுது, ஆனால் அது வேண்டாம். 349 00:22:51,622 --> 00:22:53,332 ம்… ஹாவர்ட், நாம அதைப் பத்தி பேசலாம். 350 00:22:53,415 --> 00:22:55,501 எங்க மகனைக் காப்பாத்துறதுக்கு உன் நண்பர்களை இலவசமா பயன்படுத்த வேண்டாம். 351 00:22:56,460 --> 00:22:57,961 நான் வேற ஏதாவது வழியைப் பார்த்துக்குறேன். 352 00:22:58,045 --> 00:23:00,214 - நன்றி. - ஹாவர்ட், இது இலவசம் இல்ல. 353 00:23:00,297 --> 00:23:02,799 இது பரிசு. அவனுக்கு நான் உதவி பண்ணியிருக்கேன்னு சொன்னேன்ல? 354 00:23:02,883 --> 00:23:05,344 வேணாம், இந்த விஷயத்துல நாம அவங்க எல்லைகளை மதிப்போம். 355 00:23:06,428 --> 00:23:07,846 கடவுளே, நான்ஸ். 356 00:23:07,930 --> 00:23:09,681 "எல்லைகளை மதிக்கிறது." 357 00:23:09,765 --> 00:23:12,768 நீ எவ்வளவு முட்டாள்தனமா பேசுறேன்னு உனக்குத் தெரியுதா? 358 00:23:15,979 --> 00:23:17,105 ஐயோ, மன்னிச்சிடு. 359 00:23:17,773 --> 00:23:19,024 அட, நான் உதவி பண்ண தான் நினைச்சேன். 360 00:23:20,234 --> 00:23:21,276 ரொம்ப சென்சிட்டிவா இருக்கா. 361 00:23:30,327 --> 00:23:33,121 இதை நான் சொல்லக் கூடாது, ஆனால் அவன் அப்படி பேசியிருக்கக் கூடாது. 362 00:23:34,748 --> 00:23:37,292 இன்னைக்கு அவன் கூட தனியா இருக்கிறது ஒண்ணும் பிரச்சினை இல்லையே? 363 00:23:40,212 --> 00:23:41,338 ஆமா, ஒண்ணுமில்ல. 364 00:23:45,467 --> 00:23:47,636 நான்ஸ், ராபர்ட் கார்ல ஏறப் போறான். 365 00:23:47,719 --> 00:23:49,721 ஆமா, நான் அவனை கூட்டிட்டுப் போகணும். 366 00:23:49,805 --> 00:23:51,807 - டெக் ஒத்திகையில சந்திக்கலாம். - சரி. 367 00:24:06,405 --> 00:24:07,406 ஹே. 368 00:24:07,948 --> 00:24:09,867 - ஹே, நீ போயிட்டேன்னு நினைச்சேன். - பையை மறந்திட்டேன். 369 00:24:10,868 --> 00:24:13,120 நான், நிகழ்ச்சிக் குறிப்பை முடிக்கப் போறேன். 370 00:24:13,203 --> 00:24:15,789 நான் அனுப்புறதுக்கு முன்னால இந்த பத்தியை ஒரு முறை பார்க்குறியா? 371 00:24:16,456 --> 00:24:17,457 கண்டிப்பா. 372 00:24:18,250 --> 00:24:22,045 நீதான் இதுல பெரிய ஆள். நான்… சரியான தொனியை பயன்படுத்தியிருக்கேனான்னு தெரியல. 373 00:24:23,005 --> 00:24:24,423 கொஞ்சம் கீழ வா? 374 00:24:25,215 --> 00:24:26,758 ஆமா, அங்க தான். 375 00:24:26,842 --> 00:24:30,387 அங்க ஒரு வரியை சேர்த்துக்கோ, 376 00:24:30,470 --> 00:24:36,143 "அவன் ஆங்குலர் ஸ்டக்காட்டோ அசைவுகள் கொண்டு பாலேவின் எல்லைகளை கடக்கிறான், 377 00:24:36,226 --> 00:24:40,689 அந்தத் தொடுதல் நடன கலைஞர்களிடையே ஒரு நெருக்கத்தை உருவாக்குகிறது." 378 00:24:41,857 --> 00:24:43,066 இப்ப தான் அதை யோசிச்சியா? 379 00:24:43,734 --> 00:24:45,944 ஆமா, ஒரு தீவிரமான டான்ஸரா இருந்தேன். 380 00:24:46,028 --> 00:24:49,364 பதினாறு வயசுல சான் ஃப்ரான்சிஸ்கோ பாலேயில என்னை எடுக்குற அளவுக்கு தீவிரமாயிருந்தேன். 381 00:24:49,448 --> 00:24:51,116 ஆனால் நான் அதுல சேரவே இல்ல. 382 00:24:51,200 --> 00:24:53,785 அது எத்தனையோ வருஷங்களுக்கு முன்னால. 383 00:24:54,661 --> 00:25:00,751 ஆனால் அதைப் போட்டா போதும்னு நினைக்கிறேன். 384 00:25:05,380 --> 00:25:06,673 முடிஞ்சது. 385 00:25:08,926 --> 00:25:12,471 பாரு, நான் உனக்கு நன்றி சொல்லணும். 386 00:25:13,805 --> 00:25:16,099 எனக்கு சம்பளத்தோட வேலை கிடைச்சதையும் தாண்டி, 387 00:25:17,226 --> 00:25:18,977 எனக்கு ஒரு அருமையான தோழி கிடைச்சிருக்கா. 388 00:25:19,561 --> 00:25:21,146 பார்த்து, ரொம்ப உணர்ச்சி வசப்படாத. 389 00:25:21,230 --> 00:25:23,273 நீ என்னோட உயிர் தோழியோட கணவன். 390 00:25:23,357 --> 00:25:24,441 உன்னைப் பார்க்கத் தான் போறேன். 391 00:25:24,525 --> 00:25:25,526 ஆமா. தெரியும். தெரியும். 392 00:25:25,609 --> 00:25:28,529 ஆனால் ஒரு அக்கறையுள்ள, புத்திசாலி நபரோட நேரம் செலவழிச்சது நல்லா இருந்துச்சு. 393 00:25:29,655 --> 00:25:32,533 நீ, நான்ஸி ஹென்னஸி, நல்ல ஒரு துணையா இருந்த. 394 00:25:33,909 --> 00:25:36,036 உனக்கு நல்ல மனசு. நன்றி. 395 00:25:38,497 --> 00:25:43,335 இந்த அற்புதமான ஒயினை குடிக்கலாம்னு இருந்தேன். 396 00:25:44,002 --> 00:25:46,588 கண்டிப்பா இதை ராபர்ட் கூட சேர்ந்து குடிக்க முடியாது. 397 00:25:46,672 --> 00:25:49,633 அதனால, உனக்கு… 398 00:25:53,720 --> 00:25:56,056 இது ஒரு '98 போமரால் போர்டோ. 399 00:25:57,099 --> 00:26:00,227 லூயீஸ், இதை நீ தனியா குடிச்சா பெரிய பாவம். 400 00:26:00,310 --> 00:26:02,187 நீ ஒண்ணும் வீட்டுக்குச் சீக்கிரம் போக வேண்டியதில்லையே? 401 00:26:02,271 --> 00:26:04,982 உங்க வீட்டில இது சாதாரண ஒயினா இருக்கலாம், 402 00:26:05,065 --> 00:26:07,609 ஆனால் இது ஒரு சூப்பர் சரக்கு. அதனால… 403 00:26:08,443 --> 00:26:10,571 பாக்காய் பக்தர்கள் போல, 404 00:26:10,654 --> 00:26:15,951 இந்த அற்புதமான திரவத்தின் ஒவ்வொரு துளியையும் ரசிச்சு குடிச்சு, 405 00:26:16,034 --> 00:26:22,291 கி.மு. 13-ம் நூற்றாண்டு லீனியர் B பதாகையின் கடவுளை ஆராதிப்போம். 406 00:26:22,875 --> 00:26:24,459 அதென்ன லீனியர் B பதாகை? 407 00:26:26,086 --> 00:26:29,798 டையனைசிஸ் முதல்ல தோன்றின மைசீனிய கலைப்பொருள். ஆமா. 408 00:26:29,882 --> 00:26:34,761 அதோட டையனைசிஸ் பொறுத்தவரையில, அவன் பைத்தியக்காரத்தனத்தின் கடவுள், 409 00:26:34,845 --> 00:26:37,973 ஆதனால குழப்பத்துக்கும், பைத்தியக்காரத்தனத்துக்கும். 410 00:26:38,682 --> 00:26:40,350 இப்ப, இதை ஊத்துறதுக்கு கிளாஸ் வேணும். 411 00:26:41,143 --> 00:26:42,144 பார்க்கலாம். 412 00:26:55,199 --> 00:26:56,700 நான் இதை நல்லா பண்றேன்னு நினைக்கிறேன். 413 00:26:56,783 --> 00:27:00,037 - நான் ஒரு மேதாவியா இருக்கணும். - உன்னால நேரா கூட நிக்க முடியல. 414 00:27:00,120 --> 00:27:03,165 கடவுளே. அது ரொம்ப… 415 00:27:03,248 --> 00:27:05,209 எல்லாரும் ஆட முடியும்னு நினைக்கிறாங்க, யாருக்கும் தெரியாது அது எவ்வளவு கஷ்டம்னு… 416 00:27:05,292 --> 00:27:06,919 ம், வந்து ஆடிக் காட்டு. 417 00:27:07,002 --> 00:27:11,340 எனக்குத் தெரியும். அதான், இது முதல் நிலை. ரெண்டாவது நிலை. 418 00:27:11,423 --> 00:27:13,800 இல்ல, நீ கையை இன்னும் கொஞ்சம் நீட்டணும். 419 00:27:13,884 --> 00:27:17,763 நீட்டிட்டிருக்கேன். என் தோள்ல அடிப்பட்டிருக்கு. 420 00:27:17,846 --> 00:27:18,972 இவ்வளவு தூரம் தான் தூக்க முடியும். 421 00:27:19,056 --> 00:27:21,934 ஐயோ, கடவுளே, இல்ல. திரும்பப் பண்ணு. 422 00:27:22,017 --> 00:27:24,102 நான் உனக்கு செஞ்சு காட்டுறேன். 423 00:27:26,063 --> 00:27:27,648 - பொறு. ஐயோ. - உனக்கு ஒண்ணுமில்லையே? 424 00:27:27,731 --> 00:27:29,900 ஐயோ… அசையாத. அசையாத. நான் பார்க்குறேன். 425 00:27:29,983 --> 00:27:31,360 ஒரு நிமிஷம் உட்காரு. 426 00:27:33,320 --> 00:27:34,905 கால்ல அழுத்தத்தை கொடுக்காத. கடவுளே. 427 00:27:36,406 --> 00:27:37,533 - ஐயோ! நல்லா அடி… - கடவுளே. 428 00:27:39,743 --> 00:27:41,870 - இது வீக்கத்துக்கு. - நன்றி. 429 00:27:43,455 --> 00:27:44,706 இது வலிக்கு. 430 00:27:44,790 --> 00:27:45,791 நல்லது. 431 00:27:56,134 --> 00:27:58,136 சரி, நீ எதுக்கு… எதுக்கு ஆடுறதை நிப்பாட்டுன? 432 00:27:59,596 --> 00:28:01,849 சுருக்கமா சொல்லவா, விளக்கமா சொல்லவா? 433 00:28:01,932 --> 00:28:03,267 முதல்ல சுருக்கமா சொல்லு. 434 00:28:03,934 --> 00:28:05,018 ஒரு கார் விபத்து. 435 00:28:07,104 --> 00:28:08,105 முழு கதை என்ன? 436 00:28:12,276 --> 00:28:13,277 ம்… 437 00:28:16,613 --> 00:28:17,948 நான் என் கதையைச் சொன்னா, 438 00:28:18,031 --> 00:28:20,325 எனக்கு பைத்தியம்னு நீ நினைப்ப. 439 00:28:20,909 --> 00:28:22,286 பார்ப்போம். 440 00:28:24,162 --> 00:28:28,375 என் அம்மா, என் மேல கோபமா இருந்தாங்க, அது நியாயம் தான். 441 00:28:30,377 --> 00:28:34,548 அவங்க ஓட்டிட்டிருந்தாங்க, வேகமா, அவங்கள நிறுத்த சொல்லி கெஞ்சுனேன். 442 00:28:35,716 --> 00:28:37,759 அவங்க நிறுத்தல. 443 00:28:37,843 --> 00:28:41,597 நான் வழக்கமா பண்றது இந்த முறை வேலைக்கு ஆகாதுன்னு தெரியும், 444 00:28:41,680 --> 00:28:43,223 ஏன்னா நான் பண்ண காரியம் அப்படி. 445 00:28:44,057 --> 00:28:45,058 அப்படி என்ன பண்ண? 446 00:28:47,352 --> 00:28:49,021 அவங்க காதலனோட நான் படுத்தேன். 447 00:28:50,522 --> 00:28:51,815 அதாவது அவன் தவறா நடந்துக்கிட்டான்னு சொல்ற. 448 00:28:53,275 --> 00:28:54,943 அம்மா குடிச்சிட்டு கவிழ்ந்த பிறகு, 449 00:28:55,027 --> 00:28:59,948 என்னை காருக்கு, அல்லது ரூமுக்கு, இல்ல எங்கேயாவது கூட்டிட்டு போவார். 450 00:29:00,908 --> 00:29:03,035 அவன் தான் அன்னைக்கு கூப்பிட்டானா? 451 00:29:03,619 --> 00:29:04,620 ஸ்காட். 452 00:29:07,372 --> 00:29:09,208 இதுல நான் பண்ண பைத்தியக்காரத்தனம் என்ன தெரியுமா? 453 00:29:09,291 --> 00:29:11,543 இந்த முறை நான் தான் அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். 454 00:29:14,630 --> 00:29:16,048 நான் அதை ஏன் பண்ணேன்னு தெரியல. 455 00:29:16,882 --> 00:29:18,050 உனக்குத் தெரியும். 456 00:29:19,927 --> 00:29:21,220 நீ நெருப்பை ஆரம்பிச்சு வைக்கிறவ. 457 00:29:22,262 --> 00:29:23,722 அது தான் உன் உண்மையான இயல்பு. 458 00:29:24,389 --> 00:29:28,060 எரியுற வீடு இடிஞ்சு விழுறதுக்கு முன்னாடி நீ அதுக்குள்ள ஓடிப் போவ. 459 00:29:30,395 --> 00:29:35,859 ஆனால் இந்த கௌரவம் கன்றாவிக்குப் பின்னால நீ அதை ஒளிச்சு வைக்கணும். 460 00:29:38,111 --> 00:29:39,988 அதான் ராபர்ட்டோட செல்ல மனைவி. 461 00:29:41,365 --> 00:29:43,242 அவனுக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்கிறேன். 462 00:29:45,369 --> 00:29:46,912 எனக்கு அது பிடிக்க ஆரம்பிச்சது. 463 00:29:49,998 --> 00:29:51,124 அந்த ஆபத்து. 464 00:29:52,501 --> 00:29:54,461 பிடிபடுவோமா இல்லையான்னு தெரியாது. 465 00:29:57,422 --> 00:29:59,758 அப்புறம் அந்த கவனிப்பு. எனக்கு அது கிடைச்சதே இல்ல. 466 00:30:00,676 --> 00:30:02,135 நீ அதை விரும்பின. 467 00:30:03,971 --> 00:30:05,013 எனக்கு அது தேவைப்பட்டது. 468 00:30:13,856 --> 00:30:16,191 சில விபத்துகள் நடக்கப் போவது தெரியும். 469 00:30:16,817 --> 00:30:20,112 தாக்கத்தை எதிர்கொள்ள தயாராக, அல்லது விலகிப் போக நேரம் இருக்கும். 470 00:30:20,988 --> 00:30:24,783 ஆனால் சில விபத்துகள், நாம நம்ம விதியை மாத்த எதுவுமே செய்ய முடியாத அளவு 471 00:30:24,867 --> 00:30:27,160 ஒரு வேகத்தில நம்மை தூக்கி அடிக்கும். 472 00:31:24,384 --> 00:31:27,888 மார்கஸை ஒரு மாற்று திட்டதுல போடுறதுக்கு நீதிபதி ஒத்துக்கிட்டாரு. 473 00:31:27,971 --> 00:31:31,350 அதுக்கு அவன் சூதாட்ட மறுவாழ்வு கூட்டத்துக்குப் போகணும், அப்புறம் சமூக சேவை பண்ணணும். 474 00:31:31,433 --> 00:31:34,394 - அது… அது ஒரு நல்ல விஷயம். - அருமை, இல்லையா? 475 00:31:38,857 --> 00:31:41,026 ஏன்னா, அவனுக்குத் தேவையான உதவி அவனுக்குக் கிடைக்கப் போகுது. 476 00:31:41,109 --> 00:31:43,028 அவனோட பேரில நிரந்தரமா கெட்ட பெயர் இருக்காது. 477 00:31:43,111 --> 00:31:44,780 - அது தான் முக்கியம். - நான் கிளம்பணும். 478 00:31:44,863 --> 00:31:47,658 - எனக்கு உடம்பு சரியில்ல. நான் வீட்டுக்குப் போறேன். - என்னாச்சு? என்ன… நான்ஸி? 479 00:31:47,741 --> 00:31:48,825 - எனக்கு… எனக்கு உடம்பு சரியில்ல. - நான்? 480 00:31:49,368 --> 00:31:51,828 - நீ… சரி, சரி. - நான் கூட? சரி. ஒரு நிமிஷம். 481 00:31:51,912 --> 00:31:53,413 ஹே, நான்ஸி. 482 00:31:54,706 --> 00:31:57,042 - நான்ஸ்! என்ன நடக்குது? - சாரி. நான்… 483 00:31:57,125 --> 00:31:59,044 எனக்கு மேர் கூட இருக்கணும்னு தான் ஆசை, ஆனால்… 484 00:32:00,045 --> 00:32:02,256 எனக்குள்ள நிறைய ஓடிட்டிருக்கு. 485 00:32:02,339 --> 00:32:03,590 உனக்கென்ன… ராபர்ட்டோடவா? 486 00:32:05,592 --> 00:32:07,427 நான் ஒரு முட்டாள்தனமான காரியம் பண்ணிட்டேன். 487 00:32:07,511 --> 00:32:09,388 முட்டாள்தனமானா? 488 00:32:11,765 --> 00:32:13,350 நான் ஒருத்தன் கூட படுத்தேன். 489 00:32:14,977 --> 00:32:17,187 மேரி கிட்ட சொல்லாத. அவளுக்கு இது புரியாதுன்னு நினைக்கிறேன். 490 00:32:17,271 --> 00:32:18,272 நான்ஸி, நான்… 491 00:32:19,273 --> 00:32:20,941 நீ என்ன உறவு வச்சிருக்கியா? 492 00:32:24,570 --> 00:32:25,904 யார் கூட? 493 00:32:26,738 --> 00:32:28,699 - அது முக்கியமில்ல. அது உனக்கு தெரிஞ்சவன் இல்ல. - சரி. 494 00:32:28,782 --> 00:32:31,034 அவன் பேரு டேவிட். அது திரும்ப நடக்கப் போறதில்ல. 495 00:32:31,118 --> 00:32:33,245 - சரி. - நான் போகணும். 496 00:32:33,328 --> 00:32:34,705 - நீ என்னைக் கூப்பிடுறியா? - சரி. 497 00:32:34,788 --> 00:32:35,789 சரி. 498 00:32:43,672 --> 00:32:44,673 ஹே, செல்லம். 499 00:32:45,174 --> 00:32:46,300 நீ எங்க போற? 500 00:32:47,009 --> 00:32:49,511 போய் ஒரு ஃப்ளைட்ட பிடிக்கணும். 501 00:32:50,095 --> 00:32:51,680 நீ என் கிட்ட சொல்லவே இல்லையே? 502 00:32:51,763 --> 00:32:53,765 இப்ப தான் எனக்கே தெரியும். 503 00:32:53,849 --> 00:32:55,475 ஒரு அவசரம். 504 00:32:55,559 --> 00:32:58,645 புது கட்டமைப்பை இறுதி பண்றதுக்கு முன்னால, டீலை முடிக்க அவங்களுக்கு என்னோட உதவி தேவை. 505 00:32:58,729 --> 00:33:01,231 நாளைக்கு காலைல முதல் காரியமா நியூ யார்க் வக்கீல்களை பார்க்குறேன். 506 00:33:01,315 --> 00:33:03,025 எனக்குப் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு. 507 00:33:04,151 --> 00:33:06,028 என்ன? ஏன்? நீ… இதுல கவலைப்படுற மாதிரி ஒண்ணுமில்ல. 508 00:33:06,111 --> 00:33:07,696 ஆமா கவலை தான் படுறேன். 509 00:33:08,322 --> 00:33:10,699 விரல் சொடுக்குற நேரத்துல உனக்கு ஊரைக் கடந்து போக முடியுது, 510 00:33:10,782 --> 00:33:15,329 என் கூட பேசுறதுக்கோ, கவுன்செலர் கிட்ட போறதுக்கோ உனக்கு நேரமில்ல? 511 00:33:15,412 --> 00:33:17,581 நான் திங்கட்கிழமை திரும்பி வந்ததும் இதுக்கு எல்லாம் நேரம் ஒதுக்குறேன். 512 00:33:17,664 --> 00:33:18,665 நிங்கட்கிழமையா? 513 00:33:19,166 --> 00:33:20,375 நீ ஒரு வாரத்துக்குப் போறியா? 514 00:33:22,920 --> 00:33:24,505 எனக்குப் போகணும்னு ஆசையெல்லாம் இல்ல. 515 00:33:25,631 --> 00:33:27,216 - அப்ப போகாத. - நான் போயாகணும். 516 00:33:28,509 --> 00:33:29,718 நீ என்னை விவாகரத்து பண்ணப் போறியா? 517 00:33:38,060 --> 00:33:40,312 ஹே. கவலைப்படுறதை நிறுத்து. நான் உன்னை நேசிக்கிறேன். 518 00:33:45,776 --> 00:33:47,611 நாம திரும்பி வந்ததும் பேசலாம். 519 00:34:11,342 --> 00:34:12,386 ஹே. 520 00:34:13,387 --> 00:34:14,429 நாம சந்திக்கலாமா? 521 00:35:45,979 --> 00:35:48,023 மேடை 522 00:36:50,335 --> 00:36:51,461 அது சரியா இருக்கு. 523 00:36:56,175 --> 00:36:57,176 ஹே. 524 00:36:58,427 --> 00:36:59,428 ஹே. 525 00:37:00,012 --> 00:37:01,180 பயணம் எப்படி இருந்துச்சு? 526 00:37:02,139 --> 00:37:03,140 நல்லா போச்சு. 527 00:37:06,852 --> 00:37:09,646 இன்னைக்கு ராத்திரி உட்கார்ந்து பேசலாம் தானே? 528 00:37:09,730 --> 00:37:12,024 இன்னைக்கு ராத்திரி நாம எங்க வீட்டு டின்னருக்கு போறோம். 529 00:37:13,650 --> 00:37:15,235 நான் குளிக்கப் போறேன். 530 00:37:23,118 --> 00:37:24,828 மூஸோ & ஃப்ராங்க் கிரில் 1919 முதல் ஹாலிவுட்டின் மிகப் பழமையான உணவகம் 531 00:37:24,912 --> 00:37:27,998 அது வேஸ்ட்ன்னு சொன்னாங்க. ரொம்ப மோசமாயிடுச்சு. அதை விட்டுட சொன்னாங்க. 532 00:37:29,249 --> 00:37:31,960 ஆனால், ம், உங்க பிடிவாத அப்பா அதை காதில வாங்கல. 533 00:37:32,044 --> 00:37:34,796 அதுக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறதுக்கு எந்த விலையும் ஒரு பொருட்டே கிடையாது. 534 00:37:35,506 --> 00:37:39,843 இந்த கோடையில, டிமீட்டர்ஸ் விஷ் படகு பாதுகாப்பாகப் போய் வர வாழ்த்துகள். 535 00:37:39,927 --> 00:37:42,221 நம்ம பழைய படகு, பயணத்துக்கு தயாரா இருக்கு. 536 00:37:43,222 --> 00:37:44,723 - தம்பி. - சொல்லுங்க, சார். 537 00:37:44,806 --> 00:37:47,351 - எங்க ஷாம்பெய்ன் கிளாஸ ரீஃபில் பண்றியா? - இதோ. 538 00:37:48,227 --> 00:37:49,728 நான் ஒவ்வாரு முறையும் கேட்க முடியாது. 539 00:37:50,812 --> 00:37:52,564 ம், அது அற்புதமான விஷயம், அப்பா. 540 00:37:53,065 --> 00:37:55,943 பாபி சொதப்புனதால, அது நடக்காம போயிருக்கும். 541 00:37:56,985 --> 00:37:58,445 இங்க வேண்டாம். ப்ளீஸ். 542 00:37:58,529 --> 00:38:00,822 ஏன் வேண்டாம்? அதுக்கு தான் நாம கொண்டாடுறோம். 543 00:38:00,906 --> 00:38:04,868 ஹார்லன் திறமையா கையாண்டதால, நாம இந்த பங்குசந்தை பிரச்சினைல இருந்து தப்பிச்சோம். 544 00:38:04,952 --> 00:38:06,578 அது என்னோட வேலை. 545 00:38:07,371 --> 00:38:10,624 ஒரு பெரிய ரத்தகளரியில இருந்து மயிரிழையில தப்பிச்சோம். 546 00:38:10,707 --> 00:38:13,293 என்னைப் பொறுத்தவரை, அது கொண்டாடுறதுக்கான ஒரு காரணம். 547 00:38:14,211 --> 00:38:15,921 அவர் எதைப் பத்தி பேசுறார்? என்ன சொதப்பல்? 548 00:38:18,298 --> 00:38:20,634 நீ வீட்டுக்கு வந்தவுடனே அவகிட்ட சொல்லப் போறேன்னு சொன்னியே, பாபி? 549 00:38:21,593 --> 00:38:23,428 எனக்கு நேரம் கிடைக்கல. 550 00:38:23,512 --> 00:38:25,222 இல்லையா? சரி, நான் சொல்றேன். 551 00:38:25,305 --> 00:38:28,350 பாபி அப்பா கிட்ட பேசி எங்க சொத்துல 20 சதவீதத்தை 552 00:38:28,433 --> 00:38:32,354 ஒரு உருப்படாத கம்பெனியை வாங்குறதுக்கு சம்மதிக்க வச்சான். 553 00:38:32,437 --> 00:38:36,984 அதனால சொத்துல பாபிக்கு இருந்த பங்கை எடுத்து முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுத்து, 554 00:38:37,067 --> 00:38:41,738 அவங்க எங்க மேல வழக்குப் போடாம இருக்க வச்சோம். 555 00:38:42,406 --> 00:38:43,574 அது உண்மையா? 556 00:38:44,324 --> 00:38:46,660 சில நேரம் உண்மை கசந்தாலும் சொல்லியாகணும், பாபி. 557 00:38:46,743 --> 00:38:50,038 அவர் குழந்தையில்ல, இப்ப அவர் பேரு ராபர்ட். 558 00:38:51,665 --> 00:38:53,041 சரி, நாம போகலாம். 559 00:39:35,876 --> 00:39:37,002 செல்லம். 560 00:39:42,132 --> 00:39:44,176 நான் சொதப்பிட்டேன், நான்ஸ். 561 00:39:47,262 --> 00:39:49,181 உண்மையிலேயே சொதப்பிட்டேன். 562 00:39:51,558 --> 00:39:52,768 நானே ஒரு சொதப்பல் தான். 563 00:39:54,353 --> 00:39:55,896 அவங்க சரியா தான் சொன்னாங்க. 564 00:39:58,148 --> 00:39:59,858 இப்ப எல்லாமே மாறும். 565 00:39:59,942 --> 00:40:01,193 நம்ம செலவுகளை எல்லாம்… 566 00:40:03,362 --> 00:40:05,197 இப்ப அப்பா கட்டுப்பட்டுல இருக்கும். 567 00:40:05,822 --> 00:40:09,201 இந்த வீடு, கார்கள், உன்னோட பார்ட்டிகள். 568 00:40:11,370 --> 00:40:12,955 எல்லாமே அவர் தான் அங்கீகரிக்கணும். 569 00:40:15,582 --> 00:40:17,835 இது எல்லாம் வெறும் பணம் பத்தி தானா? 570 00:40:20,379 --> 00:40:22,714 இதை நீ எதிர்பார்த்திருக்க மாட்டேன்னு தெரியும். 571 00:40:22,798 --> 00:40:28,136 அதனால நீ என்னை விட்டுப் போறதா இருந்தாலும் பரவாயில்ல. எனக்குப் புரியுது. 572 00:40:28,220 --> 00:40:31,682 உன்னை விட்டுப் போறதா? நீ தான் என்னை விட்டுப் போக விரும்புறதா நினைச்சேன். 573 00:40:31,765 --> 00:40:33,475 நான் எதுக்கு உன்னை விட்டுப் போகணும்? 574 00:40:33,559 --> 00:40:37,437 இந்த உலகத்திலேயே எனக்கு ரொம்பவும் முக்கியமான ஒருத்தி நீ. 575 00:40:38,021 --> 00:40:43,527 ஏன்னா அந்த சொத்துக்களை பிரிக்கிறது பத்தின மின்னஞ்சலை நான் படிச்சேன். 576 00:40:43,610 --> 00:40:47,906 - நான்… - அது உன்னைப் பாதுகாக்கிறதுக்கு. 577 00:40:48,574 --> 00:40:50,534 என்னைப் பாதுகாக்கிறதுக்கு நீ என்னை விவாகரத்து பண்றியா? 578 00:40:50,617 --> 00:40:52,870 உன்னொட செட்டில்மென்ட் பணத்தை ஒரு வெளிநாட்டு அக்கௌண்ட்ல போட 579 00:40:52,953 --> 00:40:54,955 அது தேவைப்பட்டது. அப்ப தான் எங்க அப்பாவால அதைத் தொட முடியாது. 580 00:40:55,038 --> 00:40:56,164 கடவுளே. 581 00:40:57,624 --> 00:40:59,960 உனக்கு பாதுகாப்பு வேணும். 582 00:41:03,797 --> 00:41:05,883 எனக்கு விவாகரத்து வேண்டாம். எனக்கு நீ வேணும். 583 00:41:06,508 --> 00:41:11,763 ஆனால், நான் இன்னும் உன்னைக் காப்பாதின அந்த பழைய ஆளு இல்ல. 584 00:41:12,347 --> 00:41:14,099 உன் பணம் ஒண்ணும் என்னைக் காப்பாத்தல. 585 00:41:14,850 --> 00:41:16,852 - நீ அப்படி சொல்ல முடியாது. - முடியும். 586 00:41:16,935 --> 00:41:18,228 என்னால முடியும். 587 00:41:19,813 --> 00:41:22,357 உன்னோட அன்பு இல்லாம இப்ப மூணு மாசம் வாழ்ந்திட்டிருக்கேன். 588 00:41:22,441 --> 00:41:26,945 நான்… ரொம்ப மோசமா இருக்கேன். 589 00:41:27,029 --> 00:41:29,990 எனக்கு அதைப் பத்தி கவலை இல்ல. உங்க அப்பாவே அதை எடுத்துக்கட்டும். 590 00:41:30,073 --> 00:41:31,491 எனக்கு நீ மட்டும் தான் வேணும். 591 00:41:32,034 --> 00:41:33,493 என்னை மன்னிச்சிடு. 592 00:41:35,954 --> 00:41:38,665 இந்த குடி உண்மையிலேயே என் கையை மீறிப் போயிடுச்சு. 593 00:41:40,000 --> 00:41:41,835 நான் அதையும் சொதப்பிட்டேன, இல்லையா? 594 00:41:43,086 --> 00:41:46,340 பிறகு உன்னைப் பார்த்தா, ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்க. 595 00:41:46,423 --> 00:41:47,424 - இல்ல. - ஆமா. 596 00:41:47,508 --> 00:41:48,509 வேண்டாம். 597 00:42:02,814 --> 00:42:04,650 உன்னை ஒரு போதும் விட்டுப் போக விட மாட்டேன். 598 00:43:40,871 --> 00:43:42,706 நீ என் ஃபோன் காலை எடுத்து ரொம்ப நாளாச்சு. 599 00:43:46,376 --> 00:43:49,296 அந்த ரெண்டாவது ஃபோனை தூக்கி எறிஞ்சிடு. நாம ரெண்டு பெரும் இதைக் கடந்து போகணும். 600 00:43:49,379 --> 00:43:52,257 ரெண்டு வாரத்துக்கு முன்னால உன்னோட ரேஞ்ச் ரோவர்ல நீயும் நானும் சேரந்து இருந்தோம். 601 00:43:52,925 --> 00:43:55,552 அதுக்கு முந்தின நாள் டிரெஸ்ஸிங் ரூமில பண்ணோம். 602 00:43:55,636 --> 00:43:57,721 அதுக்கும் முன்னால நீ சொன்ன இடத்தில எல்லாம் பண்ணோம். 603 00:43:57,804 --> 00:44:01,225 அது ஒரு தவறு. அப்ப என் திருமணத்துல ஒரு ஒரு மோசமான கட்டத்தில இருந்தேன். 604 00:44:01,308 --> 00:44:03,810 - அது நடந்திருக்கவே கூடாது. - நீ கொஞ்சம் கரிசனமா பேசணும். 605 00:44:04,686 --> 00:44:06,688 - உனக்காக எல்லாத்தையும் துணிஞ்சேன். - நான் உன்கிட்ட கேட்கவே இல்லையே. 606 00:44:06,772 --> 00:44:09,566 இல்ல, நீ என்னை மயக்கி, மணியடிச்சா வந்து நிக்கிற உன் வீட்டு வேலைக்காரன் மாதிரி 607 00:44:09,650 --> 00:44:12,236 - என்னை நடத்துன. - சரி. என் மேல பழியைப் போடுறது 608 00:44:12,319 --> 00:44:15,697 உனக்கு நிம்மதி கொடுத்துச்சுன்னா, நல்லது, ஆனால் நாம இதைக் கடந்து போகணும். 609 00:44:15,781 --> 00:44:17,407 அதை நீ முடிவு பண்ண முடியாது. 610 00:44:17,991 --> 00:44:22,162 என் கையை விடு, இல்ல இது உனக்கு மோசமா போய் முடியும். 611 00:44:24,456 --> 00:44:27,000 ஒருவேளை நம்மளப் பத்தி நான் ராபர்ட் கிட்ட போய் சொல்லணும் போல. 612 00:44:30,128 --> 00:44:31,255 அவன் நல்லவன். 613 00:44:33,924 --> 00:44:35,801 தான் யாரை கல்யாணம் பண்ணியிருக்கோம்னு அவனுக்குத் தெரியணும். 614 00:44:38,220 --> 00:44:40,597 உன் கூட படுப்பேன்னு அவன் நம்புவான்னு நீ நினைக்கிறியா? 615 00:44:42,140 --> 00:44:43,475 யாரும் நம்ப மாட்டாங்க. 616 00:44:55,654 --> 00:44:58,782 நீ அதை வெறுக்காதது எனக்கு சந்தோஷமா இருக்கு. 617 00:44:58,866 --> 00:45:00,826 - என்னது? - நீ வெறுக்காதது. 618 00:45:01,326 --> 00:45:03,203 எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. எனக்கு எல்லாமே பிடிச்சிருந்தது. 619 00:45:03,704 --> 00:45:06,999 ஆடுனது, அந்த உடைகள். 620 00:45:07,082 --> 00:45:08,208 உடைகள். 621 00:45:08,292 --> 00:45:09,960 உடைகள், ஆமா. அழகா இருந்துச்சு. 622 00:45:10,544 --> 00:45:14,298 இது தான் தவறைச் சரி செய்து, சேதத்தைத் தவிர்ப்பதுக்கான ஒரே வாய்ப்பு. 623 00:45:14,381 --> 00:45:17,551 நான் ராபர்ட் கிட்ட உண்மையைச் சொல்லணும். எல்லாத்தையும். 624 00:45:17,634 --> 00:45:19,720 அதுக்குப் பிறகும் என்னை நேசிப்பான்னு நம்புறேன். 625 00:45:23,765 --> 00:45:24,850 ஹே. 626 00:45:28,854 --> 00:45:30,022 உன்னோட ஃபோன்… 627 00:45:42,242 --> 00:45:46,205 செல்லம். உன் கிட்ட ஒண்ணு சொல்லணும். 628 00:45:47,831 --> 00:45:48,999 யாரு உனக்கு இதை அனுப்பியிருக்கா? 629 00:45:51,001 --> 00:45:53,504 தெரியல, நான்… 630 00:45:54,755 --> 00:45:57,716 எனக்கு… எனக்குத் தெரியல. நான்… 631 00:45:57,799 --> 00:45:58,884 நீ பொய் சொல்ற. 632 00:46:01,094 --> 00:46:02,304 யார் இவன்? 633 00:46:03,597 --> 00:46:06,183 யாருமில்ல. அது ஒரு தவறு. 634 00:46:06,266 --> 00:46:08,769 உன் கார் பின் சீட்ல பண்ணது ஒரு தவறா? 635 00:46:08,852 --> 00:46:10,562 ப்ளீஸ், ப்ளீஸ், நாம இதைப் பத்தி பேசலாமா? 636 00:46:10,646 --> 00:46:13,398 இத்தனை நாளா நான் குற்ற உணர்ச்சியால என்னையே கஷ்டப்படுத்திட்டிருந்தேன். 637 00:46:13,482 --> 00:46:15,734 - என்னை மன்னிச்சிடு. என்னை மன்னிச்சிடு. - இந்த நேரம் முழுசும். 638 00:46:15,817 --> 00:46:17,653 என்னால நம்ப முடியல. என்னால நம்ப முடியல. 639 00:46:17,736 --> 00:46:19,613 - உன்னால எப்படி முடிஞ்சது? - இல்ல… வேண்டாம்… 640 00:46:19,696 --> 00:46:21,990 - நிறுத்து! நிறுத்து! - நீ இதை பண்ணியிருக்க! 641 00:46:22,074 --> 00:46:23,909 ஹே! எங்க போற? 642 00:47:42,571 --> 00:47:44,573 தமிழாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்