1 00:00:10,010 --> 00:00:11,428 உனக்கு ஒண்ணுமில்லையே? 2 00:00:12,221 --> 00:00:15,724 முழிப்பு வந்துச்சு, நீ பக்கத்தில இல்ல, அதனால ஏதோ நடந்திருக்குன்னு தோணுச்சு. 3 00:00:19,770 --> 00:00:22,230 நீ என்ன பண்ற? ஏன் அவ பொருட்களை எடுத்துப் பார்க்கிற? 4 00:00:22,231 --> 00:00:24,399 இவ்வளவு நேரம் உன் பக்கத்தில தான் நான் இருந்தேன். 5 00:00:25,526 --> 00:00:27,527 அது நீ நினைக்கிற மாதிரி இல்ல. 6 00:00:27,528 --> 00:00:30,405 அவ உன்னை காயப்படுத்துனான்னு நினைச்சேன். 7 00:00:32,073 --> 00:00:34,158 பாரு, என்ன நடந்துச்சுன்னு உனக்குப் புரியல. 8 00:00:34,159 --> 00:00:38,079 இந்த உறவு பத்தி உனக்குத் தெரிஞ்சிருந்தும், அதைப் பத்தி என் வாயால சொல்ல வச்ச. 9 00:00:38,080 --> 00:00:39,580 கேளு, நான் விளக்கம் சொல்றேன், சரியா? 10 00:00:39,581 --> 00:00:41,166 நீ அவள கொன்னியா? 11 00:00:41,834 --> 00:00:43,000 நீ நான்ஸியை கொன்னியா? 12 00:00:43,001 --> 00:00:46,712 - எப்படி நீ அதைக் கேட்கலாம்? - நான் எப்படி இதை புரிஞ்சிக்கிறது? 13 00:00:46,713 --> 00:00:48,339 நான் என்னன்னு நினைக்கிறது? 14 00:00:48,340 --> 00:00:50,049 எலனார், நான் என் மனைவியைக் கொல்லல. 15 00:00:50,050 --> 00:00:51,217 நீ ஏதோ பண்ணியிருக்க. 16 00:00:51,218 --> 00:00:53,135 எதுக்கோ மன்னிப்பு கேட்டிருக்க. 17 00:00:53,136 --> 00:00:55,388 - அவள ஏன் அப்படி பயமுறுத்துன? - ஆமா, நாங்க சண்டை பிடிச்சோம். 18 00:00:55,389 --> 00:00:57,181 - அவள அடிச்சியா? - இல்ல. 19 00:00:57,182 --> 00:01:00,226 கடவுளே, நாம இப்ப சேர்ந்து இருந்தோமே. அது சும்மா பழி வாங்குறதுக்கா? 20 00:01:00,227 --> 00:01:02,728 நான்ஸி உனக்குத் துரோகம் பண்ணிட்டா, அதுக்கு நீ இப்ப பழி தீர்த்துக்கிட்டியா? 21 00:01:02,729 --> 00:01:03,813 இல்ல, இல்ல. 22 00:01:03,814 --> 00:01:05,815 - ஏன்? எனக்குப் புரியல. ஏன் நீ… - நிறுத்து! 23 00:01:05,816 --> 00:01:06,984 நிறுத்து. 24 00:01:11,738 --> 00:01:13,031 சே. 25 00:01:17,494 --> 00:01:19,037 வெளிய போயிட்டு அப்ப தான் வீட்டிக்கு வந்தோம். 26 00:01:20,539 --> 00:01:22,748 அன்னைக்கு அரியாட்னி ஓபராவோட முதல் நாள். 27 00:01:22,749 --> 00:01:24,792 நான்ஸி குளிச்சிட்டிருந்தான்னு நினைக்கிறேன். 28 00:01:24,793 --> 00:01:29,463 அவ ஃபோனை கட்டில் பக்கத்தில விட்டுப் போயிருந்தா. அது அதிர ஆரம்பிச்சுச்சு. 29 00:01:29,464 --> 00:01:32,300 எனக்கு அவ ஃபோனை பார்த்தெல்லாம் பழக்கமில்ல. 30 00:01:32,301 --> 00:01:34,553 ஆனால் அது அடிச்சிட்டே இருந்துச்சு. அதனால பார்த்தேன்… 31 00:01:35,888 --> 00:01:40,100 அவ ஆடை இல்லாம இருக்கிற மாதிரி ஒரு மெசேஜ் வந்துச்சு. 32 00:01:40,601 --> 00:01:42,894 அதனால அந்த நம்பரை திரும்ப கூப்பிட பார்த்தேன், ஆனால் அது ப்ளாக் ஆகி இருந்துச்சு. 33 00:01:42,895 --> 00:01:47,315 அதுக்குப் பிறகு, அவகிட்ட அது பத்தி கேட்டப்பபோ, அவ ஒத்துக்கிட்டா. 34 00:01:47,316 --> 00:01:49,108 எனக்கு சரியான கோபம் வந்துச்சு. 35 00:01:49,109 --> 00:01:51,027 கத்துனேன். பொருட்களை போட்டு உடைச்சேன். 36 00:01:51,028 --> 00:01:53,279 நான் நடந்துகிட்டதை நான் நியாயப் படுத்தலை. 37 00:01:53,280 --> 00:01:55,072 ஆனால் அவ மேல நான் கை வைக்கல. 38 00:01:55,073 --> 00:01:58,452 சத்தியமா. நான்ஸி அடிக்கிறதுக்கு முன்னால நான் செத்துருவேன். 39 00:01:59,119 --> 00:02:00,786 டேவிட் யாருன்னு உனக்குத் தெரியுமா? 40 00:02:00,787 --> 00:02:04,624 இல்ல. யாருன்னு அவ கிட்ட கெஞ்சிக் கேட்டேன். அவ மறுத்துட்டா. 41 00:02:04,625 --> 00:02:07,460 எங்க உறவில, அவ்வளவு மோசமான சூழ்நிலையிலும், 42 00:02:07,461 --> 00:02:09,294 அவ ரகசியத்தை வெளியில சொல்லல. 43 00:02:09,295 --> 00:02:11,256 அதுக்காக நீ பொய் சொன்னது சரியாகாது. 44 00:02:11,882 --> 00:02:13,509 அன்னைக்கு ராத்திரி அவ அவனைப் போய்ப் பார்த்து… 45 00:02:14,510 --> 00:02:15,718 எல்லாத்தையும் முடிக்கப் போறதா சொன்னா. 46 00:02:15,719 --> 00:02:17,970 நீயும் கூட வரணும்னு சொன்னாளா? 47 00:02:17,971 --> 00:02:21,766 இல்ல, அவளே அதை பார்த்துக்கணும்னு அவ நினைச்சா, நான்… 48 00:02:21,767 --> 00:02:22,850 அதைத் தடுக்கல. 49 00:02:22,851 --> 00:02:24,352 அதனால தான் நான் பொய் சொன்னேன். 50 00:02:24,353 --> 00:02:30,691 எனக்கு இந்த தொடர்பு பத்தி தெரிஞ்சு நான் ஒண்ணும் பண்ணலன்னு, உன்கிட்ட, போலீஸ் கிட்ட சொல்ல முடியல. 51 00:02:30,692 --> 00:02:33,319 அது நானே சரண்டர் ஆகிறதுக்கு சமம். 52 00:02:33,320 --> 00:02:34,403 யாரும் என்னை நம்பப் போறதில்ல. 53 00:02:34,404 --> 00:02:36,197 ஆனால் இதுல கொடுமையான விஷயம், 54 00:02:36,198 --> 00:02:38,241 அவள காப்பாத்துறதுக்கு நான் எதாவது பண்ணியிருக்கலாம், 55 00:02:38,242 --> 00:02:41,161 ஆனால் நான் பண்ணல. 56 00:02:42,454 --> 00:02:43,789 அது எனக்கு எப்படி இருக்குத் தெரியுமா? 57 00:02:54,591 --> 00:02:57,177 போலீஸ் இந்த டைரியைப் பார்த்தாங்களா? 58 00:02:59,513 --> 00:03:01,890 அது உதவலைன்னு திருப்பிக் கொடுத்துட்டாங்க. 59 00:03:03,600 --> 00:03:07,104 அதுல வெறும் புரியாத கவிதைகளும், விசித்திரமான ஓவியங்களும் இருந்துச்சு. 60 00:03:08,272 --> 00:03:10,983 இந்த கடிதத்தை வச்சு நீ என்னப் பண்ணப் போற? 61 00:03:12,526 --> 00:03:14,152 உறுதியா தெரியல. 62 00:03:16,530 --> 00:03:17,613 நான் போகணும். 63 00:03:17,614 --> 00:03:20,324 - பொறு. எங்க? ஏன்? - ஒரு விருது நிகழ்ச்சி இருக்கு. 64 00:03:20,325 --> 00:03:22,618 - நாம ஒரே கார்ல வந்தோம். - நான் டாக்சியை வரவச்சு போய்க்கிறேன். 65 00:03:22,619 --> 00:03:24,705 - போகாத. ப்ளீஸ். - ராபர்ட் 66 00:03:26,456 --> 00:03:27,540 நாம செஞ்சது… 67 00:03:27,541 --> 00:03:29,458 தெரியும். நாம எல்லையை கடந்துட்டோம். 68 00:03:29,459 --> 00:03:31,752 இல்ல. இது அதையும் தாண்டி. 69 00:03:31,753 --> 00:03:33,796 நாம எல்லையை சிதறடிச்சிட்டோம். 70 00:03:33,797 --> 00:03:36,049 இப்போ அந்த எல்லையே இல்ல. 71 00:03:36,884 --> 00:03:38,509 நாம திட்டம் போட்டு இதைப் பண்ணல. 72 00:03:38,510 --> 00:03:41,013 அதுவா நடந்துச்சு. 73 00:03:43,849 --> 00:03:45,517 என்னை மோசமானவன்னு நினைக்கிறியா? 74 00:03:46,685 --> 00:03:48,269 இல்ல. 75 00:03:48,270 --> 00:03:51,607 நீ என்னை நம்பலைன்னா, யாரு என்னை நம்புவா? 76 00:03:52,316 --> 00:03:53,692 நான் நிறைய பண்ணியிருக்கலாம். 77 00:03:55,611 --> 00:03:57,196 ஆனால், நான் ஒரு அரக்கன் இல்ல. 78 00:04:43,242 --> 00:04:45,160 ஆரமின்ட்டா ஹாலின் புத்தகத்தைத் தழுவியது 79 00:05:28,036 --> 00:05:32,206 கோரா இன்னைக்கு அழுதுக் கிட்டே எழுந்திரிச்சேன். 80 00:05:32,207 --> 00:05:36,294 ஏறக்குறைய கொஞ்சம் முடியை வெட்டிட்டேன். 81 00:05:36,295 --> 00:05:41,716 எலனார் - ஆழமா மூச்சு விடு. கத்திரியை கீழப் போடு. 82 00:05:41,717 --> 00:05:44,218 எல்லாம் சரியாகிடும், கோரா. 83 00:05:44,219 --> 00:05:45,303 கோரா நன்றி. 84 00:05:45,304 --> 00:05:47,431 இது எல்லாம் நீங்க இல்லாம என்னால சமாளிச்சிருக்க முடியாது. 85 00:05:49,266 --> 00:05:52,519 டிரிப் காபியும் வைட் சாக்லெட் மோக்காவும், எலனாருக்கு. 86 00:05:53,061 --> 00:05:54,062 அது நான் தான். 87 00:05:54,771 --> 00:05:55,855 நன்றி. 88 00:05:55,856 --> 00:06:00,026 நடைபெற்று வரும் உள்ளூர் பெண் நான்ஸி ஹென்னஸி 89 00:06:00,027 --> 00:06:04,447 கொலை விசாரணை தொடர்பாக தகவல்கள் கொடுக்க பாஸடீனா காவல் துறை 90 00:06:04,448 --> 00:06:07,783 பொதுமக்களுக்கு ஒரு தகவல் எண்ணை அறிவித்துள்ளனர். 91 00:06:07,784 --> 00:06:09,952 - அவரது உடல் ஏப்ரல் 9 அன்று… - கொடுமையா இருக்கு. 92 00:06:09,953 --> 00:06:12,163 அந்த பழைய லேஸி பீட்டர்ஸன் கொலை சம்பவம் மாதிரி தோணுது. 93 00:06:12,164 --> 00:06:14,582 - கணவன் தான் பண்ணியிருப்பானா? - யாராவது 94 00:06:14,583 --> 00:06:16,959 - நெருக்கமானவங்க தான் பண்ணியிருக்கணும். - அனைவரும் கூடுதல் கவனமாக இருக்க 95 00:06:16,960 --> 00:06:19,545 - காவல் துறை அறிவுறுத்துகிறது. - ராபர்ட் ஒண்ணுத்துக்கும் ஆகாதவன். 96 00:06:19,546 --> 00:06:21,631 இது வேஸ்ட்ன்னு சொன்னதை என்னால நம்ப முடியல. 97 00:06:21,632 --> 00:06:24,050 இதை பாரேன். 98 00:06:24,051 --> 00:06:25,176 இது ஒரு வரம். 99 00:06:25,177 --> 00:06:29,472 நம்ம தோழியோட அழகான கற்பனையை நாம இதுல பார்க்கலாம். 100 00:06:29,473 --> 00:06:31,015 இது உதவல. 101 00:06:31,016 --> 00:06:32,309 எது உதவல? 102 00:06:32,893 --> 00:06:35,019 இது உதவல, ஆனால் வேஸ்ட் இல்ல. 103 00:06:35,020 --> 00:06:37,605 அதுவும் அப்படி சொன்னது போலீஸ், ராபர்ட் இல்ல. 104 00:06:37,606 --> 00:06:38,899 சரி. 105 00:06:39,775 --> 00:06:43,319 டாவீட் சொன்னது சரி, 106 00:06:43,320 --> 00:06:45,905 அவள பத்தி நாம முழுசா தெரிஞ்சுக்கல. 107 00:06:45,906 --> 00:06:47,782 இந்த நினைவுகளை பாரு. 108 00:06:47,783 --> 00:06:49,243 எல்லி, 109 00:06:49,952 --> 00:06:51,537 அவ நம்ம நான்ஸி. 110 00:06:52,579 --> 00:06:57,668 நம்ம கிட்ட தன் ரகசியங்களை ஏன் மறைக்க நினைச்சான்னு எனக்குப் புரியல. 111 00:07:00,629 --> 00:07:02,339 நான் இதை வச்சுக்கட்டுமா? 112 00:07:03,131 --> 00:07:04,800 இல்ல, அது… 113 00:07:05,300 --> 00:07:06,759 நான் அனுமதி கொடுக்குறதுக்கு அது என்னோடது இல்ல. 114 00:07:06,760 --> 00:07:07,761 அது அவளோடது. 115 00:07:14,935 --> 00:07:16,686 நான் ஆஃபீஸூக்குப் போகணும். 116 00:07:16,687 --> 00:07:20,690 இன்னைக்கு ராத்திரி விருதுகள் டின்னர்ல, நீயும், ஹாவர்டும் என் கூட உட்கார ஏற்பாடு பண்ணிருக்கேன். 117 00:07:20,691 --> 00:07:24,110 - நான் தனியா வரப் போறேன். - சரி. நல்லது தான். 118 00:07:24,111 --> 00:07:26,279 - ஆமா. - ஆமா. அப்புறம் பார்க்கலாம். 119 00:07:26,280 --> 00:07:27,656 பிறகு பார்க்கிறேன். 120 00:07:41,378 --> 00:07:44,256 {\an8}ராபர்ட் நாம பேசலாமா? 121 00:07:51,889 --> 00:07:53,306 - எல்லி. - சொல்லு. 122 00:07:53,307 --> 00:07:54,765 - நான்… சாரி. - ஹே. 123 00:07:54,766 --> 00:07:56,309 இல்ல. பரவாயில்லை. 124 00:07:56,310 --> 00:07:58,686 நீ இங்க நல்ல வேலை பார்க்குறேன்னு கேள்விப்பட்டேன். 125 00:07:58,687 --> 00:08:00,938 நான் பெரும்பாலும் பேப்பருக்கு பின் போடுறேன், 126 00:08:00,939 --> 00:08:03,357 ஆனால் காய்ககறி கடையில பொட்டலம் மடிக்கிறதுக்குப் பரவாயில்ல. 127 00:08:03,358 --> 00:08:05,151 பொட்டலம் மடிக்கிறதுல தப்பு ஒண்ணும் இல்ல. 128 00:08:05,152 --> 00:08:06,485 ஏன்னா நீங்க அதைப் பண்ணதே கிடையாது. 129 00:08:06,486 --> 00:08:07,821 உனக்கு எப்படித் தெரியும்? 130 00:08:09,948 --> 00:08:12,325 - என்னோட படிவத்தில கையெழுத்து போடுறீங்களா? - சரி. 131 00:08:12,326 --> 00:08:14,827 என்னோட கேஸ் வர்க்கர் சூப்பர்வைஸர்கிட்ட இருந்து கையெழுத்து கேட்டார். 132 00:08:14,828 --> 00:08:17,998 கண்டிப்பா. அப்பா-அம்மா கூட எல்லாம் நல்லா போகுதா? 133 00:08:18,707 --> 00:08:20,334 - ஆமா. அப்படி தான் நினைக்கிறேன். - என்ன? 134 00:08:21,084 --> 00:08:23,295 தெரியல, நான் அவங்க பக்கம் போறதில்ல. 135 00:08:23,795 --> 00:08:26,088 ஏன்? அம்மாகிட்ட என்ன நடந்ததுன்னு சொன்னீங்களா? 136 00:08:26,089 --> 00:08:28,049 - ஏன்னா, அவங்களுக்குத் தெரிஞ்சா, அவங்க… - இல்ல, இல்ல மார்கஸ். 137 00:08:28,050 --> 00:08:29,800 நான் எதுவும் சொல்லல. சொல்லப் போறதும் இல்ல. 138 00:08:29,801 --> 00:08:31,302 நான் தான் ஏற்கனவே சொன்னேன், இல்லையா? 139 00:08:31,303 --> 00:08:33,803 ஆனால் அன்னைக்கு ராத்திரி நடந்தை நீ மறக்கணும். 140 00:08:33,804 --> 00:08:35,807 அதை உன் தலையில இருந்து தூக்கி எறி. 141 00:08:36,308 --> 00:08:37,392 சரி. 142 00:08:43,440 --> 00:08:45,817 போதும்! போதும்! 143 00:08:47,069 --> 00:08:49,862 போதும். தயவு செஞ்சு நிறுத்துங்க. 144 00:08:49,863 --> 00:08:52,823 எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல. 145 00:08:52,824 --> 00:08:59,080 இந்த அங்கீகாரம் உங்க எல்லாரோட கடின உழைப்பின் பிரதிபலிப்பு, சரியா? 146 00:08:59,081 --> 00:09:02,208 அதனால, நீங்க கொண்டாடுறதா இருந்தா, உங்களையே கொண்டாடுங்க. 147 00:09:02,209 --> 00:09:03,210 சரி. 148 00:09:05,170 --> 00:09:06,672 ஒரு நிமிஷம். 149 00:09:07,256 --> 00:09:08,381 நீ லேட்டா வந்திருக்க. 150 00:09:08,382 --> 00:09:10,466 - இது என்னோட ஐடியா இல்ல. - உனக்கு இது பிடிக்காதுன்னு தெரியும், 151 00:09:10,467 --> 00:09:12,635 - ஆனால் நம்ம அமைப்புக்கு இது நல்லது. - நீ சொன்னா சரி. 152 00:09:12,636 --> 00:09:15,555 - ஹாய். - எலனார், இது ஆண்ட்ரூ. 153 00:09:15,556 --> 00:09:17,974 லெகஸி பத்திரிகைல இருந்து வந்திருக்கார். ஆண்ட்ரூ, இது எலனார் புஷே. 154 00:09:17,975 --> 00:09:20,226 - மிஸ். புஷே, சந்திச்சதில சந்தோஷம். - எனக்கும் தான். 155 00:09:20,227 --> 00:09:21,894 உங்களுக்கு ஓகேன்னா நாம மொதல்ல உங்களோட, 156 00:09:21,895 --> 00:09:24,939 உங்க ஊழியர்கள், ஆஃபீஸோட புகைப்படங்களோட ஆரம்பிக்கலாம். 157 00:09:24,940 --> 00:09:26,566 சரி. நீங்க சொல்ற மாதிரியே பண்ணலாம். 158 00:09:26,567 --> 00:09:27,733 அருமை. 159 00:09:27,734 --> 00:09:29,527 - இப்ப அப்படியே கேமராவை பாருங்க. - சரி. 160 00:09:29,528 --> 00:09:31,196 அப்புறம் ஜன்னலை பார்த்த மாதிரி ஒண்ணை எடுக்கலாம். 161 00:09:40,831 --> 00:09:43,499 - ஹே. - சனி, ஞாயிறு நீ கூப்பிடவே இல்ல. 162 00:09:43,500 --> 00:09:45,168 நாம சேர்ந்து இருப்போம்னு நினைச்சேன். 163 00:09:45,169 --> 00:09:47,295 சரி தான், நான் இந்த பிறந்தநாள் பார்ட்டியை ப்ளான் பண்ணிட்டிருந்தேன். 164 00:09:47,296 --> 00:09:50,465 பாரு, எல். இந்த காரணங்கள் எரிச்சலாக்குது. 165 00:09:51,216 --> 00:09:53,051 ஒண்ணு வேணும்னு சொல்லு, இல்ல விட்டுடு. 166 00:09:54,094 --> 00:09:55,344 நிஜமா சொல்றியா? 167 00:09:55,345 --> 00:09:56,596 என்ன விளையாடுறியா? 168 00:09:56,597 --> 00:09:57,930 அதுவும் இன்னைக்குப் பார்த்து. 169 00:09:57,931 --> 00:10:00,057 இங்க ஒரு பத்திரிகை ஆளு இருக்கான். 170 00:10:00,058 --> 00:10:01,935 எனக்கு வேற வழியே இல்லையே. 171 00:10:04,062 --> 00:10:06,439 - நாம இந்த உறவை நிறுத்தணும். - என்ன சொல்ற நீ? 172 00:10:06,440 --> 00:10:08,775 இனி மேல நாம ஆஃபீஸ் விஷயமா மட்டும் தான் பேசணும்னு நினைக்கிறேன். 173 00:10:09,776 --> 00:10:10,777 இதுல நான் சொல்றதுக்கு ஒண்ணும் இல்லையா? 174 00:10:12,446 --> 00:10:13,864 இல்ல. 175 00:10:17,117 --> 00:10:19,327 இது தான் என் ஆஃபீஸ். நான் எங்க நிக்கணும்? 176 00:10:19,328 --> 00:10:22,163 உங்க சேர்லயே உட்காருங்க. 177 00:10:22,164 --> 00:10:23,165 சரி. 178 00:10:23,749 --> 00:10:25,875 உங்க தோழி பத்தி வாசிச்சது வருத்தமா இருந்துச்சு. 179 00:10:25,876 --> 00:10:27,710 ரொம்ப கொடுமையான விஷயம். 180 00:10:27,711 --> 00:10:30,047 யாரு அதைப் பண்ணான்னு போலீஸ் கண்டுப்பிடிப்பாங்கன்னு நம்புறேன். 181 00:10:31,089 --> 00:10:33,049 மன்னிக்கணும். நீங்க அவங்க தோழி தானே? 182 00:10:33,050 --> 00:10:34,884 நான்ஸி ஹென்னஸி? நான்… 183 00:10:34,885 --> 00:10:37,845 சாரி. உங்க ரெண்டு பேருக்கும் அறிமுகம் இருக்குன்னு வாசிச்சதா நினைச்சேன்… 184 00:10:37,846 --> 00:10:39,388 இல்ல, இருக்கு. நான்… நான்… 185 00:10:39,389 --> 00:10:42,433 நாம நீங்க வந்த வேலைல கவனம் செலுத்துனா நல்லா இருக்கும். 186 00:10:42,434 --> 00:10:44,269 கண்டிப்பா. ஒரு பிரச்சினையும் இல்ல. 187 00:10:46,688 --> 00:10:48,272 நாம 2012 பத்தி பேசுவோம். 188 00:10:48,273 --> 00:10:49,607 நீங்க இதை 2012-ல ஆரம்பிச்சீங்க. 189 00:10:49,608 --> 00:10:51,400 அந்த வருஷத்தைப் பத்தி சொல்லுங்க. 190 00:10:51,401 --> 00:10:55,112 லெகஸி பத்திரிகையின் 2026 உலகளாவிய தாக்க விருது பெறுநருக்கு 191 00:10:55,113 --> 00:11:01,245 கரகோஷம் எழுப்புவோம். இதோ, எலனார் புஷே. 192 00:11:08,836 --> 00:11:10,253 நன்றி. 193 00:11:10,254 --> 00:11:11,838 - இதுக்கு தகுதியானவங்க. - வாவ். 194 00:11:11,839 --> 00:11:14,049 - கொஞ்சம் பிடிச்சுக்குறீங்களா? - கண்டிப்பா. 195 00:11:15,467 --> 00:11:17,426 நன்றி. ரொம்ப நன்றி. 196 00:11:17,427 --> 00:11:19,762 லெகஸி பத்திரிகைக்கு நன்றி. 197 00:11:19,763 --> 00:11:21,806 நான் ரொம்ப நன்றிகடன் பட்டிருக்கேன். நான்… 198 00:11:21,807 --> 00:11:24,433 நான் ஹீரோக்கள் நிறைஞ்ச அறையில இருக்கேன். 199 00:11:24,434 --> 00:11:28,020 இது இந்த அங்கீகாரத்தை ரொம்ப பணிவாக ஆக்குது. 200 00:11:28,021 --> 00:11:33,776 உங்கள்ல பலரை நான் வியந்திருக்கேன், உங்க வேலையும் எப்படி தேவையால வெளிபட்டதுன்னு 201 00:11:33,777 --> 00:11:36,154 வியந்திருக்கேன். 202 00:11:36,989 --> 00:11:42,410 இந்த வேலையைப் பண்றதுக்கு நாம சரியான நபரான்னு சில சமயம் நான் போராடியிருக்கேன். 203 00:11:42,411 --> 00:11:43,745 நான் அப்பழுக்கில்லாதவ இல்ல. 204 00:11:44,621 --> 00:11:46,331 உண்மையில, யாருமே அப்படி இல்ல. 205 00:11:47,499 --> 00:11:49,000 ஆனால் நாம விரும்புறோம், இல்லையா? 206 00:11:49,001 --> 00:11:51,711 நான் விரும்புறேன், முயற்சி பண்றதுக்கு. 207 00:11:51,712 --> 00:11:52,837 வெளிக்காட்டுறதுக்கு. 208 00:11:52,838 --> 00:11:57,008 நான் மோசக்காரியா தோன்றினாலும், அரக்கியா தோன்றினாலும், 209 00:11:57,009 --> 00:12:03,639 நான்… நான் ஒரு நல்ல விஷயத்துக்காக என்னையே முழுசா கொடுக்கத் தயாரா இருக்கேன். 210 00:12:03,640 --> 00:12:04,641 ஒரு… 211 00:12:05,684 --> 00:12:07,311 பரந்த நலனுக்காக. 212 00:12:08,020 --> 00:12:12,607 அதனால தான் நாம எல்லாரும் இங்க இருக்கோம், இல்லையா? 213 00:12:12,608 --> 00:12:16,068 ஒரு பரந்த நலனில் நாமும் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறோம். 214 00:12:16,069 --> 00:12:18,154 ஆக, நன்றி. இந்த கௌரவத்துக்கு நன்றி. 215 00:12:18,155 --> 00:12:20,656 உங்களோட இங்க இருக்கிறதுல, நாம சேர்ந்து இருக்கிறதுல சந்தோஷப்படுறேன். 216 00:12:20,657 --> 00:12:21,867 நன்றி. 217 00:12:30,334 --> 00:12:31,335 வரேன். 218 00:12:33,754 --> 00:12:35,796 நீ இவ்வளவு நேரம் காத்திருக்க தேவையில்லையே. 219 00:12:35,797 --> 00:12:37,715 மார்கஸ் குழந்தைகள பார்த்துக்குறான். அதனால அவசரம் இல்ல. 220 00:12:37,716 --> 00:12:39,134 அதை எடுத்துக்கலாமா? 221 00:12:40,344 --> 00:12:41,636 நான் நான்ஸியோட டைரியில பார்த்த ஒண்ணை 222 00:12:41,637 --> 00:12:43,554 - உனக்குக் காண்பிக்கணும். - இல்ல, மேர். 223 00:12:43,555 --> 00:12:45,933 - ப்ளீஸ். எல்லி, சும்மா பாரு. - இது பார்க்குற இடமில்ல. 224 00:12:46,725 --> 00:12:48,017 இவனைப் பாரு. 225 00:12:48,018 --> 00:12:50,019 இவன் கண்களைப் பாரு, எப்படி வரைஞ்சிருக்கான்னு பாரு. 226 00:12:50,020 --> 00:12:53,689 பயமுறுத்துது. நிச்சயமா அவளை இவன் பயமுறுத்தியிருக்கான். 227 00:12:53,690 --> 00:12:58,612 எனக்கு தெரிஞ்சு இந்த அளவுக்கு நான்ஸியை பயமுறுத்தியது ஸ்காட் மட்டும் தான். 228 00:12:59,613 --> 00:13:00,614 என்ன? 229 00:13:01,532 --> 00:13:04,158 இவனைப் பார்த்தா சர்ச்ல பார்த்தவன் மாதிரி தெரியுது. 230 00:13:04,159 --> 00:13:05,701 இறுதிச் சடங்குல. 231 00:13:05,702 --> 00:13:07,578 எல்லி, நாம இதை போலீஸ் கிட்ட சொல்லணும். 232 00:13:07,579 --> 00:13:09,789 - இல்ல, போய் என்ன சொல்றது? - ஆமா. 233 00:13:09,790 --> 00:13:12,875 நம்ம கிட்ட இருக்கிறது நான்ஸியோட மாற்றான் தந்தையோட படமா இருக்கலாம், 234 00:13:12,876 --> 00:13:14,627 அவர் இறுதி சடங்குக்கு வந்திருக்கலாம்னு சொல்லலாம். 235 00:13:14,628 --> 00:13:15,795 ஒண்ணுமில்லாததுக்கு இது பரவாயில்ல. 236 00:13:15,796 --> 00:13:17,713 இல்லேன்னா நம்ம கிட்ட எதுவும் இல்ல, எல்லி. 237 00:13:17,714 --> 00:13:19,006 எதுவுமே இல்ல. 238 00:13:19,007 --> 00:13:20,466 இதோ, இந்த நாளோட நாயகி. 239 00:13:20,467 --> 00:13:22,009 - ஹே. - நான் குறுக்கிடலேல. 240 00:13:22,010 --> 00:13:23,344 டானவன், ஹாய்! 241 00:13:23,345 --> 00:13:24,428 நீ ரொம்ப அழகா இருக்க. 242 00:13:24,429 --> 00:13:27,974 நிச்சயமா ஹாவர்ட் இதை வச்சிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம இருப்பான். கடவுளே. 243 00:13:27,975 --> 00:13:29,517 கொஞ்சம் வழியுறதை நிறுத்துறியா? 244 00:13:29,518 --> 00:13:31,769 - என்னால முடியாது. - அமான்டா எப்படி இருக்கா? 245 00:13:31,770 --> 00:13:32,896 என் ஜீவனாம்ஸத்தை வச்சு சந்தோஷமா இருக்கா. 246 00:13:33,689 --> 00:13:34,939 ஐயோ, சாரி. 247 00:13:34,940 --> 00:13:36,148 பரவாயில்ல. 248 00:13:36,149 --> 00:13:37,651 ஒரு நிமிஷம். 249 00:13:38,277 --> 00:13:39,861 நீ அவள நினைச்சு பெருமைப்படணும். 250 00:13:39,862 --> 00:13:41,822 உன்னோட தங்கை ஒரு ராக் ஸ்டார். 251 00:13:42,990 --> 00:13:44,741 அவ பிறக்கும் போதே அப்படித் தான். 252 00:13:45,784 --> 00:13:47,244 நிகழ்ச்சி 6.00 மணிக்கு. 253 00:13:47,870 --> 00:13:49,121 எனக்கு வேலை இழுத்துடுச்சு. 254 00:13:51,748 --> 00:13:53,000 இது நல்லா இருக்கு. 255 00:13:53,584 --> 00:13:55,918 நீ மேடைல பேசுனியா? அழுதியா? மேரி அழுதாளா? 256 00:13:55,919 --> 00:13:57,170 ரெண்டு பேரும் அழுதீங்க தானே? 257 00:13:57,171 --> 00:13:59,173 நீ ரொம்ப எரிச்சலூட்டுற. 258 00:14:00,799 --> 00:14:02,091 அம்மா பேசினாங்களா? 259 00:14:02,092 --> 00:14:05,887 ஆமா. சுருக்கமா ஒரு வாழ்த்து மெசேஜ் அனுப்பனாங்க. 260 00:14:05,888 --> 00:14:08,931 அவங்க எப்பவும் இப்படித் தான் தன் அன்பை வெளிப்படுத்துவாங்க. 261 00:14:08,932 --> 00:14:11,268 மிகச் சுருக்கமா. 262 00:14:14,521 --> 00:14:15,647 உன் மனசுக்குள்ள என்ன ஓடுது? 263 00:14:16,273 --> 00:14:20,234 ஒரு பெரிய விருது வாங்கின சந்தோஷம் உன் முகத்தில இல்லையே? 264 00:14:20,235 --> 00:14:22,196 நீ பண்ணதிலேயே மிக மோசமான விஷயம் எது? 265 00:14:26,909 --> 00:14:29,660 வாவ். நான் இதை எதிர்பார்க்கல. 266 00:14:29,661 --> 00:14:30,913 - ஷாம்பெய்ன்? - நன்றி. 267 00:14:33,040 --> 00:14:35,791 இந்த நிகழ்ச்சி முழுசும், நான் எவ்வளவு அற்புதமானவ, எவ்வளவு தைரியமானவ, 268 00:14:35,792 --> 00:14:38,462 சுயநலமற்றவன்னு சொல்லிட்டிருக்காங்க… 269 00:14:39,713 --> 00:14:42,048 அவங்க வேற யாரை பத்தியோ பேசுற மாதிரி எனக்குத் தோணுது. 270 00:14:42,049 --> 00:14:44,884 நீ மிகைப்படுத்தி பேசுறேன்னு நினைக்கிறேன். 271 00:14:44,885 --> 00:14:49,180 அட, எல். நீ இருக்கிறதிலேயே ரொம்ப சுத்தமானவ. 272 00:14:49,181 --> 00:14:50,264 அது தான் உன் குணமே. 273 00:14:50,265 --> 00:14:51,474 நீ இப்ப எங்க இருக்கேன்னு பாரு. 274 00:14:51,475 --> 00:14:53,227 நீ என்ன பேசுற? 275 00:14:55,395 --> 00:14:57,647 கிளம்புறியா? நான் இப்ப தான் வந்தேன். 276 00:14:57,648 --> 00:14:59,525 நிகழ்சி 6.00 மணிக்கு. 277 00:15:00,442 --> 00:15:01,652 உனக்கு ஒண்ணுமில்லையே? 278 00:15:02,653 --> 00:15:03,737 ஏதாவது நடந்துச்சா என்ன? 279 00:15:05,697 --> 00:15:09,075 இல்ல. நான் நல்லாயிருக்கேன். 280 00:15:09,076 --> 00:15:10,660 ரொம்பவே நல்லா இருக்கேன். நான்… 281 00:15:10,661 --> 00:15:12,829 நான் சுத்தமானவ, இல்லையா? 282 00:15:18,752 --> 00:15:19,962 உன்னை நாளைக்கு கூப்பிடுறேன். 283 00:15:31,348 --> 00:15:32,516 ஹே, நான் தான். 284 00:15:33,267 --> 00:15:34,517 நீ ஃபோனை எடுக்காதது சரி தான். 285 00:15:34,518 --> 00:15:37,687 ம், நேத்து ராத்திரிக்கு அப்புறம் என்கூட பேச கூட விரும்ப மாட்ட. 286 00:15:37,688 --> 00:15:41,441 ஆனால், உன் கிட்ட மட்டும் தான் நான் பேச விரும்புறேன். அது தான் உண்மை. 287 00:15:42,025 --> 00:15:44,862 பொய் சொன்னதுக்கு என்னை மன்னிச்சிடு. நீ என்னை மன்னிப்பேன்னு நம்புறேன். 288 00:15:46,905 --> 00:15:49,616 நான்ஸி ரகசியங்களை மறைச்சான்னு கோபப்பட்டேன், ஆனால்… 289 00:15:50,909 --> 00:15:53,161 இப்ப நானே அதைப் பண்ணிட்டிருக்கேன். 290 00:15:53,662 --> 00:16:00,002 உண்மையை மறைச்சதுக்கு வருத்தப்படுறேன், ஆனால் நமக்குள்ள நடந்ததுக்கு வருத்தப்படல. 291 00:16:01,128 --> 00:16:07,176 நான்ஸி இறந்த பிறகு, வலியை தாண்டி நான் வேறொன்றை உணர்ந்தது நேத்து ராத்திரி தான். 292 00:16:08,177 --> 00:16:09,553 நீயும் அதை உணர்ந்திருப்பேன்னு தெரியும். 293 00:16:30,991 --> 00:16:32,284 நான் கார்ல வீட்டிக்குப் போயிட்டிருந்தேன்… 294 00:16:34,203 --> 00:16:35,537 அப்படியே போயிட்டிருந்தேன். 295 00:17:54,199 --> 00:17:56,200 உன் அப்பாவோட படகுல போவியா? 296 00:17:56,201 --> 00:17:58,579 இல்ல, போய் பல வருஷமாச்சு. 297 00:17:59,329 --> 00:18:01,289 அது டானவன் கிட்ட இருக்கு. 298 00:18:01,290 --> 00:18:02,457 சுத்த மோசம். 299 00:18:03,292 --> 00:18:04,459 அது ஒரு அழகு. 300 00:18:05,794 --> 00:18:07,129 டானவன். 301 00:18:16,013 --> 00:18:18,598 நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, தண்ணிக்கடியில மூச்சை பிடிக்கும் போட்டியில 302 00:18:18,599 --> 00:18:20,057 நான் ஜெயிச்சதை சொல்லியிருக்கேனா? 303 00:18:20,058 --> 00:18:21,059 இல்ல. 304 00:18:21,602 --> 00:18:23,352 பெரிய விஷயம். 305 00:18:23,353 --> 00:18:26,272 ஆமா பெரிய விஷயம். ரெண்டு நிமிஷம், நாற்பத்து ஏழு நொடிகள். 306 00:18:26,273 --> 00:18:27,356 - வாவ். - ஆமா. 307 00:18:27,357 --> 00:18:28,692 என் கிட்ட சவால் விடுறியா? 308 00:18:29,943 --> 00:18:30,944 சரி ஒரு விளையாட்டு. 309 00:18:31,528 --> 00:18:32,778 நம்ம வயசென்ன? 310 00:18:32,779 --> 00:18:33,780 உண்மையை சொல்றியா இல்ல நான் சொல்றதை செய்றியா? 311 00:18:36,158 --> 00:18:38,242 - உண்மை. - அது தவறான பதில். 312 00:18:38,243 --> 00:18:40,078 - இல்ல, இல்ல. வேண்டாம்! - பார்த்து. 313 00:18:43,207 --> 00:18:44,790 - சாரி. - வெறும் வாய் வார்த்தை. 314 00:18:44,791 --> 00:18:45,917 உனக்கு கொஞ்சம் உந்துதல் தேவைப்பட்டது. 315 00:18:45,918 --> 00:18:47,961 - அப்படியா? இது மாதிரியா? - ஆமா, உனக்கு… 316 00:18:51,381 --> 00:18:52,382 அப்பா? 317 00:18:55,969 --> 00:18:58,514 எல்லி? என்ன ஆச்சு? 318 00:19:01,600 --> 00:19:03,936 நீ என்ன பண்ற? நீ ஸ்கூல்ல தானே இருக்கணும்? 319 00:19:05,187 --> 00:19:06,479 நாங்க ஏதோ வந்துட்டோம். 320 00:19:06,480 --> 00:19:08,815 துக்கத்தை தணிக்கிறதுக்கு இங்க வரலாம்னு நினைச்சோம். 321 00:19:09,525 --> 00:19:10,526 அது சரக்கா? 322 00:19:11,109 --> 00:19:12,194 அது மாதிரி. 323 00:19:12,819 --> 00:19:14,362 எங்க அப்பாவோட உறவு வச்சிருக்கீங்களா? 324 00:19:14,363 --> 00:19:16,156 கோரா. இல்ல, அது… 325 00:19:16,698 --> 00:19:19,575 இது அதில்ல. அம்மாவோட பொருட்களை ஒழுங்குபடுத்த உதவ எலனார் வந்தா. 326 00:19:19,576 --> 00:19:20,952 அதை தான் நேத்து பண்ணீங்களே? 327 00:19:20,953 --> 00:19:24,247 ஆமா, எனக்குக் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. 328 00:19:24,248 --> 00:19:28,835 நிறைய நினைவுகள், அதனால நிறுத்திட்டேன், எலனாரும் இங்க தங்கினா. 329 00:19:28,836 --> 00:19:30,254 இங்க எதுவும் நடக்கல. 330 00:19:31,004 --> 00:19:32,505 எதுவுமில்ல. 331 00:19:32,506 --> 00:19:35,508 இன்னைக்கு அந்தப் பெட்டிகளைக் காலி பண்ணோம். 332 00:19:35,509 --> 00:19:38,594 இன்னும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. 333 00:19:38,595 --> 00:19:40,471 கொஞ்சம் மன பாரத்தை இறக்கி வைக்க வேண்டிருந்துச்சு. 334 00:19:40,472 --> 00:19:43,058 நாங்க… நாங்க உங்க அம்மாவை ரொம்ப மிஸ் பண்றோம். 335 00:19:43,559 --> 00:19:45,268 சும்மா சாக்கு போக்கு சொல்லல. 336 00:19:45,269 --> 00:19:47,896 நாங்க தான் பெரியவங்க. நாங்க அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கணும். 337 00:19:49,022 --> 00:19:52,901 கோரா, என்னை மன்னிச்சிடு. இது சரியில்லைன்னு தெரியும். 338 00:19:55,195 --> 00:19:58,614 அது போல தான், சரக்கு அடிக்கிறதும், ஸகூலுக்குப் போகாததும். சரியா? 339 00:19:58,615 --> 00:19:59,824 இன்னைக்கு ராத்திரி இங்க இருங்க. 340 00:19:59,825 --> 00:20:02,703 காலைல முதல் காரியமா ஸ்கூலுக்குப் போறீங்க. சரியா? 341 00:20:14,131 --> 00:20:15,424 கடவுளே. 342 00:20:16,008 --> 00:20:18,092 - அவ என்னை வெறுக்கிறா. - இல்ல. 343 00:20:18,093 --> 00:20:20,637 ஆமா. அவ கண்ல அந்த பார்வையை பார்த்தியா? 344 00:20:21,430 --> 00:20:23,056 நான் அவகிட்ட பொய் சொன்னதே இல்ல. 345 00:20:23,849 --> 00:20:25,725 அவ எதையும் நம்புனதா தெரியல. 346 00:20:25,726 --> 00:20:27,476 இல்ல, அவ நல்லா தான் இருக்கா. 347 00:20:27,477 --> 00:20:28,604 அவ ஒரு ஹென்னஸி. 348 00:20:29,188 --> 00:20:30,271 அப்படின்னா? 349 00:20:30,272 --> 00:20:32,023 எங்க குடும்பத்தில யாரும் கேள்வி கேட்கக் கூடாது. 350 00:20:32,024 --> 00:20:35,818 சொல்றதை வேதவாக்கா எடுத்துக்கணும், ஆதாரம் என்ன வேணா இருக்கட்டும். 351 00:20:35,819 --> 00:20:37,279 அது அவ இரத்தத்தில இருக்கு. 352 00:20:38,989 --> 00:20:40,949 அவ முழுசா ஹென்னஸி இல்ல. 353 00:20:42,993 --> 00:20:44,786 அவளுக்குள்ள கொஞ்சம் நான்ஸியும் இருக்கு. 354 00:20:46,997 --> 00:20:47,998 ஆமா. 355 00:20:50,167 --> 00:20:51,668 அது ரொம்ப ஆபத்தா தெரிஞ்சது. 356 00:20:52,169 --> 00:20:54,004 இந்த மாதிரி மாட்டிக்கிறது. 357 00:20:56,673 --> 00:20:58,342 நாம நிறுத்தணும்னு நினைக்கிறியா? 358 00:21:01,887 --> 00:21:03,972 அது தான் உனக்கு வேணுமா? 359 00:21:07,351 --> 00:21:08,352 இல்ல. 360 00:22:02,364 --> 00:22:04,073 குட்மார்னிங், மக்களே. 361 00:22:04,074 --> 00:22:06,368 நேத்து ராத்திரி நல்லா எஞ்சாய் பண்ணீங்கன்னு நினைக்கிறேன். 362 00:22:07,202 --> 00:22:11,290 போதை தெளிய வரைக்கும் தூங்கி இருப்பீங்கன்னும் நம்பறேன். 363 00:22:12,040 --> 00:22:13,208 நான் எதுவும் நினைக்கல, ரோரி. 364 00:22:16,253 --> 00:22:18,421 ஒலிவியா, இன்னைக்குள்ள அப்பாய்ன்ட்மென்டை எனக்கு பிரிண்ட் பண்ணி தரியா? 365 00:22:18,422 --> 00:22:19,964 - …இன்னைக்கு பேசி முடிக்கலாம்… - நன்றி. 366 00:22:19,965 --> 00:22:21,799 - …பிறகு உங்க ஆஃபீஸூக்கு வரேன்… - ஹே. 367 00:22:21,800 --> 00:22:24,510 …முடிஞ்ச அளவு சீக்கிராமா. ஆனால் பிரச்சினை என்னன்னா… சார், பிரச்சினை… 368 00:22:24,511 --> 00:22:26,262 ஜோர்டன் லேட்டா வரான்னா? 369 00:22:26,263 --> 00:22:27,930 உடம்பு சரியில்லைன்னு ஃபோன் பண்ணான். 370 00:22:27,931 --> 00:22:28,932 எல்லாருக்கும் என்ன ஆச்சு? 371 00:22:30,309 --> 00:22:31,434 உனக்குத் தெரியாதா? 372 00:22:31,435 --> 00:22:32,602 என்னது? 373 00:22:32,603 --> 00:22:34,145 ஒலிவியா, நாங்க கொஞ்சம் பேசணும். 374 00:22:34,146 --> 00:22:35,147 நன்றி. 375 00:22:35,814 --> 00:22:37,148 என்னாச்சு? 376 00:22:37,149 --> 00:22:38,232 என்ன நடக்குது? 377 00:22:38,233 --> 00:22:42,195 நீ துக்கத்தை அனுசரிக்கிறதுக்கு, நான் மரியாதையா, உனக்கான இடத்தைக் கொடுத்தேன். 378 00:22:42,196 --> 00:22:44,113 ஆனால் உன்னோட தனிப்பட்ட வாழ்க்கை நம்ம பிஸினெஸ்ஸை நாசம் பண்ணுது. 379 00:22:44,114 --> 00:22:45,741 நீ என்ன பேசுற? 380 00:22:48,243 --> 00:22:49,578 நீ டிக்டாக்ல இல்ல தானே? 381 00:22:50,329 --> 00:22:52,998 - அதை ஏன் கேட்குற? - சே. 382 00:22:54,082 --> 00:22:56,376 இன்னைக்கு காலைல ஒரு வீடியோ போட்டிருக்காங்க. 383 00:22:57,419 --> 00:22:58,878 அது ராபர்ட்டோட மகள், கோரா. 384 00:22:58,879 --> 00:23:01,672 நீயும், ராபர்ட்டும் உறவு வச்சிருக்கீங்கன்னு நேரடியா சொல்லியிருக்கா. 385 00:23:01,673 --> 00:23:03,382 அவ உன்னை பேர் சொல்லி சொல்ல. 386 00:23:03,383 --> 00:23:05,886 ஆனால் சில இன்டெர்நெட் புத்திசாலிங்க, அது நீ தான்னு கண்டுப்பிடிச்சுட்டாங்க. 387 00:23:06,929 --> 00:23:10,097 அது அபத்தமானது. 388 00:23:10,098 --> 00:23:12,850 இருக்கலாம், ஆனால் எனக்கு தொடர்ச்சியா ஃபோன் வருது. 389 00:23:12,851 --> 00:23:15,353 லெகஸி கூப்பிட்டிருந்தாங்க. அவங்க நம்ம கதையை நீக்கலாம்னு நினைக்கிறாங்க. 390 00:23:15,354 --> 00:23:16,938 நம்ம புரோக்ராம் பார்ட்னர்கள், நாம ஏதோ 391 00:23:16,939 --> 00:23:19,650 - பிரச்சினைல இருக்கோம்னு கவலப்படுறாங்க. - சரி. அந்த வீடியோவை பார்க்கணும். 392 00:23:20,442 --> 00:23:23,236 - அதைக் காட்டு, ஸோயி. - எலனார், நான் ஏற்கனவே அது என்னன்னு… 393 00:23:23,237 --> 00:23:25,154 யாராவது அந்த வீடியோவை காட்டுறீங்களா? 394 00:23:25,155 --> 00:23:27,114 நான் அதைப் பார்க்கணும். யாராவது? 395 00:23:27,115 --> 00:23:28,407 - எலனார் - நிறுத்து! 396 00:23:28,408 --> 00:23:30,910 அந்த எழவு வீடியோவை நான் பார்க்கணும். 397 00:23:30,911 --> 00:23:32,454 ப்ளீஸ். 398 00:23:35,874 --> 00:23:37,292 நன்றி, மார்கஸ். 399 00:23:37,960 --> 00:23:41,379 இறந்த உங்க அம்மாவோட நெருங்கின தோழி உங்க அப்பாவோட படுத்தா கோபம் வருதா? 400 00:23:41,380 --> 00:23:42,964 இல்ல எனக்கு மட்டும் தான் அப்படி இருக்கா? 401 00:23:42,965 --> 00:23:43,966 அருமை. 402 00:23:46,009 --> 00:23:49,471 இறந்த உங்க அம்மாவோட நெருங்கின தோழி உங்க அப்பாவோட படுத்தா கோபம் வருதா? 403 00:24:17,541 --> 00:24:19,084 டிடெக்டிவ் கேன்ஸ் 404 00:24:25,465 --> 00:24:26,549 சே. 405 00:24:26,550 --> 00:24:27,551 டானவன் 406 00:24:28,051 --> 00:24:29,510 நம்ம பேரு எங்கேயாவது 407 00:24:29,511 --> 00:24:32,890 அடிப்பட்டுச்சுன்னா எனக்கு எச்சரிக்கை வரும், தெரியுமா? 408 00:24:33,390 --> 00:24:35,183 நான் பேசுற நிலைமையில இல்ல. 409 00:24:35,184 --> 00:24:37,894 ராபர்ட் கூட படுக்கணும்னு நினைக்கிறது, சரி, 410 00:24:37,895 --> 00:24:39,979 ஆனால் அதை செயல்படுத்துறதும், 411 00:24:39,980 --> 00:24:42,607 மாட்டிக்கிறதும், தலைப்புச் செய்தி ஆகுறதும் வேற. 412 00:24:42,608 --> 00:24:45,359 கோரா வருத்தமா இருந்தா, அவ தப்பா புரிஞ்சுக்கிட்டா. 413 00:24:45,360 --> 00:24:48,321 இது வெறும் ஒரு பெரிய தவறான புரிதல். 414 00:24:48,322 --> 00:24:52,366 வேண்டாம். பொய் சொல்லி என்னையும் சங்கடப்படுத்தாத, உன்னையும் அசிங்கப்படுத்தாத. 415 00:24:52,367 --> 00:24:53,743 நீ செய்திகளை பார்த்தியா? 416 00:24:53,744 --> 00:24:56,120 கடவுளே, இல்ல, ஆனால் அவங்க என்ன சொன்னாலும், 417 00:24:56,121 --> 00:24:58,331 அதை ஒரு ஸ்டேட்மென்ட்ல சரி பண்ணிடலாம். 418 00:24:58,332 --> 00:25:01,501 தயவு செய்து ரொம்ப பெரிசு படுத்தாத. 419 00:25:01,502 --> 00:25:04,128 வக்கீல்கள் கூப்பிடுறாங்க. அம்மா ஃப்ளைட் பிடிச்சு வராங்க. 420 00:25:04,129 --> 00:25:07,507 எலனார், இது மோசமாச்சுன்னா, நிச்சயம் மோசமாகும், அப்போ, 421 00:25:07,508 --> 00:25:11,969 ராபர்ட் குடும்பம் இந்த அசிங்கத்தைத் துடைக்கிறதுக்கு முடிஞ்ச எல்லாத்தையும் பண்ணுவாங்க, 422 00:25:11,970 --> 00:25:15,223 கடைசியில தப்பு உன் மேல தான் விழும். 423 00:25:15,224 --> 00:25:17,266 அந்த அளவுக்கு அந்த நாய் தகுதியான்னு தெரியல. 424 00:25:17,267 --> 00:25:19,520 நிறுத்து! நிறுத்தறியா? 425 00:25:20,145 --> 00:25:22,939 உன் கற்பனைக்கு எனக்கு நேரமில்ல, டானவன். 426 00:25:22,940 --> 00:25:25,900 இது வெறும் நெருப்பு, அதை அணைக்க மட்டும் செய்யணும். 427 00:25:25,901 --> 00:25:28,402 இது நடக்கும்னு எனக்குத் தெரியும். 428 00:25:28,403 --> 00:25:31,949 அந்த நாய் உன்னை நல்லாவே மாத்திட்டான். 429 00:25:45,170 --> 00:25:48,005 ஹே, வா. இந்த அலங்கோலத்தை கண்டுக்காத. 430 00:25:48,006 --> 00:25:49,799 இப்ப தான் பொண்ணுங்கள ஸ்கூலுக்கு அனுப்பி வச்சேன். 431 00:25:49,800 --> 00:25:53,135 துணி தோய்ச்சிட்டிருக்கேன், ஆர்டீ படுக்கையில ஒன்னுக்கு போயிட்டா. 432 00:25:53,136 --> 00:25:56,264 இப்ப ரெண்டு வாரமா இப்படி விட்டு விட்டு போயிட்டிருக்கா. 433 00:25:56,265 --> 00:25:59,016 ஹாவர்டால தாங்க முடியல, அதனால நான்… 434 00:25:59,017 --> 00:26:01,186 ம், அவர் ப்ளாஸ்டிக் ஷீட் வாங்கணும்னு சொல்றார். 435 00:26:01,937 --> 00:26:03,563 இன்னும் ஒரு வருஷத்துக்கு, அவ வளர்றது வரை. 436 00:26:03,564 --> 00:26:06,482 ஆனால், தெரியல, அது என்னமோ ரொம்ப… 437 00:26:06,483 --> 00:26:07,651 என்னாச்சு? 438 00:26:09,778 --> 00:26:10,779 என்ன? 439 00:26:12,865 --> 00:26:15,158 என்ன நடக்குது? எனக்கு பயமா இருக்கு. 440 00:26:16,994 --> 00:26:21,498 ஒஹாயில இருக்கும் போது. நானும் ராபர்ட்டும் சேர்ந்து இருந்தோம். 441 00:26:22,082 --> 00:26:24,376 கோரா அதை பார்த்திட்டா. 442 00:26:24,918 --> 00:26:28,880 நேத்து ராத்திரி அவ வீட்டுக்கு வந்தா, இன்னைக்கு அது பத்தி ஒரு வீடியோ போட்டிருக்கா. 443 00:26:28,881 --> 00:26:31,591 அது ஆன்லைன்ல இருக்கு, எனக்கும் ராபர்ட்டுக்கு ஏதாவது உறவு இருக்கான்னு 444 00:26:31,592 --> 00:26:34,552 நிறைய கட்டுரைகளும், கேள்விகளும் நிறைய இருக்கு. 445 00:26:34,553 --> 00:26:37,389 அதனால நாங்க நான்ஸியை கொன்னிருக்கலாம்னு சொல்றாங்க. 446 00:26:43,937 --> 00:26:47,899 மேரி, உன் கிட்ட ஒரு விஷயத்தை சொல்லல. ஒரு கடிதம் இருக்கு. 447 00:26:47,900 --> 00:26:53,404 ராபர்ட்டுக்கு டேவிட் கூட இருந்த உறவு தெரிஞ்சிருக்கு, அவங்க சண்டை போட்டிருக்காங்க. 448 00:26:53,405 --> 00:26:57,159 அவன் வருத்தப்பட்டிருக்கான், நான்ஸி பயந்திருக்கான்னு நினைக்கிறேன்… 449 00:26:57,743 --> 00:27:01,037 தெரியல, அவன் அவளுக்கு ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி இருக்கான். 450 00:27:01,038 --> 00:27:05,500 அதை பார்த்த தப்பா தெரியுது, ஆனால் அவன் எதுவும் செய்யலை, அவள ஒண்ணும் பண்ணலைன்னு சொல்றான். 451 00:27:05,501 --> 00:27:06,584 என்னை மன்னிச்சுடு. 452 00:27:06,585 --> 00:27:09,795 நான் இதை உன் கிட்ட சொல்லியிருக்கணும், ஆனால் நான்… 453 00:27:09,796 --> 00:27:12,173 அதை யோசிச்சிட்டிருந்தேன், நான் அதை உன் கிட்ட சொன்னா 454 00:27:12,174 --> 00:27:14,259 - நீ வந்து… - அவன் பொய் சொல்லியிருக்கான். 455 00:27:15,052 --> 00:27:18,930 டேவிடோட உறவு தனக்குத் தெரியாத மாதிரி நடிச்சிருக்கான். 456 00:27:18,931 --> 00:27:19,973 பொய் சொல்லியிருக்கான். 457 00:27:21,141 --> 00:27:23,560 அதனால நாம அந்தக் கடிதத்தைப் போலீஸ் கிட்ட எடுத்துட்டு போகணும். 458 00:27:24,228 --> 00:27:26,354 - முடியாது. - ஏன் முடியாது? 459 00:27:26,355 --> 00:27:27,523 அது ஆதாரம். 460 00:27:32,069 --> 00:27:34,278 அது சரியான ஆதாரம். அவன் நான்ஸியை கொன்னிருக்கான். 461 00:27:34,279 --> 00:27:37,281 - ஆனால் அவன் பண்ணல. - அது உனக்குத் தெரியாது. 462 00:27:37,282 --> 00:27:39,700 - எனக்குத் தெரியும். - குற்றம் செஞ்சவங்க தான் பொய் சொல்லுவாங்க, எல்லி. 463 00:27:39,701 --> 00:27:41,202 இது தப்பா இருக்குன்னு தெரியும். 464 00:27:41,203 --> 00:27:43,914 தப்பா தெரியுதா, இது கொலைக்கான காரணம். 465 00:27:44,498 --> 00:27:46,999 கடவுளே, இதனால நீ ஜெயிலுக்குப் போகலாம், உனக்குப் புரியுதா? 466 00:27:47,000 --> 00:27:50,878 எங்களுக்கு வக்கீல்கள் இருக்காங்க, அவங்க சரி பண்ணிடுவாங்க. நான் பண்ணாததுக்கு ஆதாரம் இருக்கு. 467 00:27:50,879 --> 00:27:52,463 நீ ராபர்ட்டோட படுத்திருக்க. 468 00:27:52,464 --> 00:27:56,218 கடவுளே, இந்த வார்த்தையை சொல்றேன்னு என்னால நம்ப முடியல. நான்… 469 00:27:58,178 --> 00:28:00,304 உனக்கு அவன் மேல உள்ள மோகம் முடிஞ்சிச்சுன்னு நினைச்சேன். 470 00:28:00,305 --> 00:28:02,391 அது மோகம் இல்ல. 471 00:28:03,350 --> 00:28:05,434 நாங்க ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்கிற அக்கறை. 472 00:28:05,435 --> 00:28:07,937 ஆனால் அவன் உன்னைத் தேர்ந்தெடுக்கல, இல்லையா? 473 00:28:07,938 --> 00:28:09,146 அவன் உன்னைத் தேர்ந்தெடுக்கல. 474 00:28:09,147 --> 00:28:10,899 இப்ப அவன் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கான். 475 00:28:11,567 --> 00:28:13,985 நீ ஏன் ரொம்ப ஒழுக்கம் மாதிரி இது பத்தி பேசுற? 476 00:28:13,986 --> 00:28:15,903 உன் கல்யாணமே ஒரு உறவுல தான் ஆரம்பிச்சது. 477 00:28:15,904 --> 00:28:17,530 - இது ரெண்டும்… - எனக்கும், அவனுக்கும் நிஜமா… 478 00:28:17,531 --> 00:28:18,865 - …ஒண்ணில்ல. - …அன்பு இருக்கலாமே? 479 00:28:18,866 --> 00:28:21,367 எனக்கு ஏற்கனவே கோராவைப் பிடிக்கும். அவளுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன். 480 00:28:21,368 --> 00:28:22,577 வாயை மூடு! 481 00:28:22,578 --> 00:28:24,996 நீ சொல்றது உனக்கே சரின்னு படுதா? 482 00:28:24,997 --> 00:28:27,540 உனக்கும், ராபர்ட்டும் இடையில இருக்கிறது எதுவும் நிஜமில்ல. 483 00:28:27,541 --> 00:28:30,168 நிஜம்னா உனக்கு என்னன்னே தெரியாது. 484 00:28:30,169 --> 00:28:33,296 தரையில கிடக்கிற துணியும், கழுவ வேண்டிய பாத்திரமும் நிஜம். 485 00:28:33,297 --> 00:28:38,217 டாக்டர்கிட்ட போறது, காயம், சிராய்ப்பு, தியாகங்கள், இதெல்லாம் நிஜம். 486 00:28:38,218 --> 00:28:44,640 என் கணவர் இப்ப ஒஹாயோவில வேலைக்கான இன்டெர்வியூக்கு போயிருக்கார், அது நிஜம். 487 00:28:44,641 --> 00:28:48,269 அதாவது, நாங்க மொத்தமா அங்க இடமாறி போகணும். அது நிஜம். 488 00:28:48,270 --> 00:28:51,440 நீ வச்சிருக்கிறது இன்னொருத்தியோட கணவனோட ஒரு லூசுத்தனமான கற்பனை வாழ்க்கை. 489 00:28:56,904 --> 00:28:58,488 நீ ஊரவிட்டு போறியா? 490 00:28:59,406 --> 00:29:00,656 இப்ப அதுவா முக்கியம்? 491 00:29:00,657 --> 00:29:01,741 நீ என்ன சொல்ற? 492 00:29:01,742 --> 00:29:03,075 - நீ என்னோட… - “உற்ற தோழியா”? 493 00:29:03,076 --> 00:29:04,703 - ஆமா. - நான்ஸியும் தான். 494 00:29:07,831 --> 00:29:11,919 எல்லி, நீ அவ கணவன் கூட உறவு வச்சிருக்க. 495 00:29:17,508 --> 00:29:19,050 அவன் உன்னை பயன்படுத்துறான். 496 00:29:19,051 --> 00:29:20,426 - இல்ல. - ஆமா. 497 00:29:20,427 --> 00:29:21,928 இல்ல, நீ நினைக்கிறது தவறு. 498 00:29:21,929 --> 00:29:23,012 என் வீட்டை விட்டு வெளிய போ. 499 00:29:23,013 --> 00:29:25,723 மேரி, ப்ளீஸ். உனக்குப் புரியல. 500 00:29:25,724 --> 00:29:28,643 இது வேற. இது நீ நினைக்கிற மாதிரி இல்ல. இது… 501 00:29:28,644 --> 00:29:29,811 என் வீட்டை விட்டு வெளிய போ. 502 00:29:31,980 --> 00:29:33,272 மேரி? 503 00:29:33,273 --> 00:29:34,358 இப்பவே! 504 00:30:19,486 --> 00:30:21,487 - மிஸ். புஷே. - சொல்லுங்க. 505 00:30:21,488 --> 00:30:23,406 இது ஒரு கோமாளி ஆட்டமா மாறுது. இல்லையா? 506 00:30:23,407 --> 00:30:24,949 ஆமா. 507 00:30:24,950 --> 00:30:27,034 - உங்கள கூப்பிட்டேன். - நிறைய விஷயம் ஓடிட்டிருக்கு. 508 00:30:27,035 --> 00:30:28,870 - உள்ள போகலாமா? - இல்ல, ஒரு நிமிஷம் தான். 509 00:30:28,871 --> 00:30:32,624 எங்க உதவி இணைப்புல ஜோர்டன் தாமஸ்னு ஒருத்தர் வந்தார். உங்ககிட்ட வேலை பார்க்கிறாராம். 510 00:30:33,500 --> 00:30:34,584 ஆமா. 511 00:30:34,585 --> 00:30:36,961 திருமதி ஹென்னஸி கொலை அன்னைக்கு அவர் உங்கக் கூட இருந்ததா சொல்றாரு. 512 00:30:36,962 --> 00:30:39,630 உங்க ரெண்டு பேருக்குள்ள தொடர்பு இருக்கிறதா சொன்னாரு. 513 00:30:39,631 --> 00:30:42,550 அது ஆஃபீஸ் பொறுத்தவரைல தப்பு, இல்லையா? 514 00:30:42,551 --> 00:30:43,801 அது ஒண்ணும் குற்றமில்லையே? 515 00:30:43,802 --> 00:30:45,803 சரி தான், ஆனால் ஒரு பிரச்சினை இருக்கு. 516 00:30:45,804 --> 00:30:50,683 அவர் வாக்குமூலத்தில, நீங்க அவர் வீட்டுக்கு ராத்திரி 1.00 மணிக்கு வந்ததா சொல்றாரு. 517 00:30:50,684 --> 00:30:54,312 திருமதி ஹென்னஸி கொலை பன்னிரெண்டு மணியளவில நடந்திருக்குன்னு ஃபாரன்சிக்ஸ் சொல்றாங்க. 518 00:30:54,313 --> 00:30:57,064 திரு. ஹென்னஸி எங்க இருந்தாருங்கிறதுக்கு சாட்சி யாருமில்ல. 519 00:30:57,065 --> 00:30:59,358 பேச மறுக்கிறாரு. வீட்ல இருந்தேன்னு சொல்றாரு. 520 00:30:59,359 --> 00:31:00,776 நீங்க வீட்ல இருந்தேன்னு சொல்றீங்க. 521 00:31:00,777 --> 00:31:04,488 இப்ப உங்க ரெண்டு பேருக்கும் இடையே தொடர்பு இருந்ததுன்னு குற்றச்சாட்டு இருக்கு? 522 00:31:04,489 --> 00:31:05,907 நாம இங்கேயே நின்னு, 523 00:31:05,908 --> 00:31:08,451 நான் யார் கூட உறவு வச்சிக்கலாம், கூடாதுன்னு பேசிகிட்டு இருக்கப் போறோமா? 524 00:31:08,452 --> 00:31:10,828 இல்ல, நான்ஸியோட காதலன் டேவிடைத் தேடப் போறீங்களா? 525 00:31:10,829 --> 00:31:14,498 திருமதி ஹென்னஸிக்குத் தெரிஞ்சவங்க எல்லார் கிட்டயும் பேசிட்டோம். 526 00:31:14,499 --> 00:31:16,292 யாரும் டேவிட் பத்தி கேள்விப்படவே இல்ல. 527 00:31:16,293 --> 00:31:19,212 எனக்குத் தெரிஞ்சு, அவங்களுக்கு காதலன் இருக்கான்னு முதல்ல சொன்னது நீங்க தான். 528 00:31:19,213 --> 00:31:21,714 அதனால், ஒண்ணு நீ உங்ககிட்ட இருந்து திசை திருப்ப அதை பண்ணி இருக்கணும், 529 00:31:21,715 --> 00:31:25,301 இல்ல, டேவிட்ன்னு தன் பேரை சொல்லிக்கிற ஆளை நாங்க தேடணும். 530 00:31:25,302 --> 00:31:27,304 இதுல எது சரி, மிஸ். புஷே? 531 00:31:32,559 --> 00:31:34,602 என்னோட வக்கீல் இல்லாம நான் எதுவும் பேசக்கூடாதுன்னு 532 00:31:34,603 --> 00:31:36,854 - நினைக்கிறேன். - நல்லது. 533 00:31:36,855 --> 00:31:39,608 இந்த நேரத்துல, உங்களுக்கு கண்டிப்பா ஒரு வக்கீல் வேணும். 534 00:31:53,163 --> 00:31:54,289 மிஸ். புஷே. 535 00:31:58,794 --> 00:32:00,962 எதிர்பார்த்தது தான். 536 00:32:00,963 --> 00:32:03,589 - காயப்படுத்தாம உன்னால பேச முடியாது. - கிட். 537 00:32:03,590 --> 00:32:05,299 இவ இங்க இருக்கக்கூடாது. அது உனக்குத் தெரியும். 538 00:32:05,300 --> 00:32:07,052 உனக்கு ஏற்கனவே நிறைய வேலை இருக்கு. 539 00:32:09,596 --> 00:32:10,847 மன்னிச்சுக்கோ. 540 00:32:10,848 --> 00:32:12,932 ரொம்ப நேரமா இப்படித் தான் போயிட்டிருக்கு. 541 00:32:12,933 --> 00:32:14,101 நாம எங்க போய் பேசலாம்? 542 00:32:31,910 --> 00:32:33,161 கோரா எப்படி இருக்கா? 543 00:32:34,204 --> 00:32:36,747 கோபமா இருக்கா அப்படின்னு சொல்லலாம். 544 00:32:36,748 --> 00:32:39,209 அவ இன்னும் வீடியோவை எடுக்க மாட்டேன்னு சொல்றா. 545 00:32:41,503 --> 00:32:42,837 நான் அவள கூப்பிடணும். 546 00:32:42,838 --> 00:32:44,131 வேண்டாம். 547 00:32:44,756 --> 00:32:47,092 நான் அவகிட்ட எல்லாத்தையும் விளக்குறேன். 548 00:32:47,759 --> 00:32:49,719 கொஞ்ச நாள் போகட்டும். 549 00:32:49,720 --> 00:32:53,724 அவ கிட் கூட தங்கியிருக்கா. இது எல்லாம் அடங்குற வரைக்கும். 550 00:32:54,933 --> 00:32:56,935 இந்த பருந்துகள் கிட்ட இருந்து அவளைத் தள்ளி வைக்கணும். 551 00:33:00,105 --> 00:33:01,106 நீ எப்படி இருக்க? 552 00:33:02,149 --> 00:33:03,358 நீ அதுக்காக வரல. 553 00:33:04,109 --> 00:33:05,360 சரி தான். 554 00:33:06,987 --> 00:33:09,030 நான் இதை முழுசா யோசிச்சு பார்க்கல, 555 00:33:09,031 --> 00:33:12,074 ஆனால் நாம சேர்ந்து ஒரு ஸ்டேட்மென்ட் கொடுக்கலாமா? 556 00:33:12,075 --> 00:33:13,743 நாம இந்த வதந்திகளை மறுக்கலாம். 557 00:33:13,744 --> 00:33:16,704 கண்டிப்பா, கோராவை காயப்படுத்துற மாதிரி எதுவும் சொல்ல வேண்டாம். 558 00:33:16,705 --> 00:33:19,165 ஆனால் நான்ஸியைக் கொன்னவன் வெளியில இருக்கான், 559 00:33:19,166 --> 00:33:22,668 அவனைத் தான் எல்லாரும் நினைக்கணும் என்கிற உண்மையை மக்கள் நினைக்க வைக்கணும். 560 00:33:22,669 --> 00:33:24,295 அதுக்கெல்லாம் இப்போ நேரம் கடந்திடுச்சு. 561 00:33:24,296 --> 00:33:25,588 ஏன்? 562 00:33:25,589 --> 00:33:28,591 நம்ம வக்கீல்கள் நம்ம கூட்டு ஸ்டட்மென்டைத் தயாரிக்கலாம், அப்போ நமக்கு நேரம் இருக்கும். 563 00:33:28,592 --> 00:33:31,345 நாம ரெடியாகுற வரைக்கும் நாம வெளியில போய் நின்னு பேச வேண்டாம். 564 00:33:37,267 --> 00:33:38,602 என்ன நடக்குது? 565 00:33:39,770 --> 00:33:45,108 உன் கூட, ம், எல்லா தொடர்புகளையும் துண்டிக்கணும்னு என் வக்கீல்கள் சொல்றாங்க. 566 00:33:52,407 --> 00:33:56,453 நீ அவங்க அறிவுரையைக் கேட்கப் போற? 567 00:33:58,872 --> 00:34:01,375 - இது உன் குடும்பத்தை பத்தின்னா… - இல்ல. 568 00:34:03,919 --> 00:34:05,337 நேத்து ராத்திரி, நாம… 569 00:34:06,171 --> 00:34:07,255 அது என்ன… 570 00:34:07,256 --> 00:34:08,714 கடவுளே. 571 00:34:08,715 --> 00:34:12,134 நீ அது நிஜம்னு என்னை நம்ப வச்ச. 572 00:34:12,135 --> 00:34:15,721 இத்தனை வருஷம் கழிச்சு நாம… 573 00:34:15,722 --> 00:34:17,265 உன்னை நம்ப வச்ச. 574 00:34:17,266 --> 00:34:18,516 நான் என் மனைவியை இழந்திருக்கேன். 575 00:34:19,101 --> 00:34:21,060 அது தான் நடந்தது. அவ்வளவு தான். 576 00:34:21,061 --> 00:34:23,312 இது நியாயமில்ல. நான்… நான் அங்க இருந்தேன். 577 00:34:23,313 --> 00:34:25,774 - இது… நமக்குள்ள ஏதோ இருக்கு. - நாமன்னு சொல்றதுல ஒண்ணுமில்ல. 578 00:34:30,152 --> 00:34:32,572 எனக்கு என்னோட கடிதம் திருப்பி வேணும். 579 00:34:34,366 --> 00:34:38,285 சே. நீ தான் குடிக்காம இருக்கியா? 580 00:34:38,286 --> 00:34:40,706 உன் வாயில விஸ்கி நாத்தம் தெரியுது. 581 00:34:54,553 --> 00:34:58,640 எங்க அப்பா இறந்த அன்னைக்கு நான் என் அம்மாவோட ஆஸ்பத்திரியில இருந்தேன். 582 00:35:00,184 --> 00:35:01,935 அவங்க கண்கள்ல கண்ணீரே இல்ல. 583 00:35:03,478 --> 00:35:07,064 எங்க அம்மா சொன்னாங்க. அழறது ஒரு இன்பம். 584 00:35:07,065 --> 00:35:10,818 இழப்பையும் துக்கத்தையும் பெண்களான நாம ஏத்துக்கணும். 585 00:35:10,819 --> 00:35:14,239 நாம முடிஞ்ச எல்லாத்தையும் கிரகிச்சுக்கணும். 586 00:35:15,365 --> 00:35:17,910 ஆனால் நான் இன்னும் எவ்வளவைத் தான் தாங்குறது? 587 00:35:25,959 --> 00:35:27,252 ஹே. 588 00:35:36,929 --> 00:35:37,930 ஹே. 589 00:35:45,979 --> 00:35:46,980 சாரி. 590 00:35:50,442 --> 00:35:52,653 “உன்னை ரொம்ப பயமுறுத்துனதுக்கு மன்னிச்சுடு.” 591 00:35:54,780 --> 00:35:55,781 சே. 592 00:35:58,242 --> 00:36:02,996 ஒவ்வொரு வருஷமும் அப்பா நினைவு நாள் அன்னைக்கு 593 00:36:03,705 --> 00:36:06,959 நாங்க ரெண்டு பேரும் மீன் பிடிக்க ஒரு பயணத்துக்கு ராபர்ட் திட்டமிடுவான். 594 00:36:09,419 --> 00:36:14,090 அவனை ஞாபகப்படுத்தத் தேவையில்ல. அவன் வருவான், நாங்க போவோம். 595 00:36:14,091 --> 00:36:19,887 இத நாங்க, ஒரு பத்து வருஷம் பண்ணிருப்போம்னு நினைக்கிறேன். 596 00:36:19,888 --> 00:36:23,517 அதாவது அந்த சமயம் எல்லாரும் அப்பா பத்தி பேசுறதை நிறுத்திட்டாங்க. 597 00:36:25,269 --> 00:36:28,814 நான்ஸியும் கண்டுக்கல. 598 00:36:29,982 --> 00:36:32,651 அவ பரிதாபப்பட்டு அதை ஊக்குவிச்சிருக்கலாம்னு… 599 00:36:34,111 --> 00:36:35,404 நினைக்கிறேன். 600 00:36:37,030 --> 00:36:40,742 அவளோட வாழ்க்கையில ஒரு குட்டி துண்டை, ஒரு நாளைக்கு மட்டும் எனக்கு 601 00:36:41,243 --> 00:36:42,870 இரவல் கொடுக்கிற மாதிரி இருந்துச்சு. 602 00:36:47,958 --> 00:36:53,964 என்னோட 18 வயசில இருந்து ராபர்ட் ஹென்னஸியை நான் விரும்புறேன். 603 00:36:55,340 --> 00:36:56,967 இப்ப முடிஞ்சது. 604 00:36:58,260 --> 00:36:59,761 அது முடிஞ்சது. 605 00:37:10,981 --> 00:37:13,692 அவன் இதை பண்ணான்னு நினைக்கிறியா? 606 00:37:15,110 --> 00:37:19,489 ஒண்ணுமே நடக்காத மாதிரி கோரா கிட்ட பொய் சொல்றதைப் பார்த்தேன். 607 00:37:20,532 --> 00:37:23,034 ஈஸியா பண்ணான். 608 00:37:23,035 --> 00:37:26,121 ரொம்ப இயல்பா வந்தது அவனுக்கு. 609 00:37:27,831 --> 00:37:32,127 சரி, இப்ப நீ எல்லாத்தையும் என் கிட்ட சொல்லு. 610 00:37:33,545 --> 00:37:38,425 நான்ஸி இறந்த அன்னைக்கு நீ செய்ததை ஒண்ணு விடாம சொல்லு. 611 00:37:42,930 --> 00:37:44,805 சாப்பாடு 9.00 மணிக்கு முடிஞ்சது. 612 00:37:44,806 --> 00:37:50,102 அந்த சமயத்துல, நான் வரேன்னு ஜோர்டன் தாமஸூக்கு மெசேஜ் பண்ணேன். 613 00:37:50,103 --> 00:37:52,314 திரு. தாமஸ் என் ப்ராஜெக்ட் மானேஜரா வேலை பார்க்கிறார். 614 00:37:52,814 --> 00:37:58,569 கடந்த ஆறு மாசமா நாங்க கமிட் ஆகாம உறவில இருக்கோம். 615 00:37:58,570 --> 00:38:01,406 இருந்தோம். இப்ப இல்ல. 616 00:38:01,907 --> 00:38:05,953 தாமஸ் வீட்டுக்கு 10.15 ஒட்டி போனேன். ஆனால் உள்ள போகல. 617 00:38:06,828 --> 00:38:09,830 மார்கஸ் சிம்ப்ஸன் கிட்ட இருந்து ஒரு மெசேஜ் வந்தது. 618 00:38:09,831 --> 00:38:13,836 மார்கஸ் என் நெருங்கின தோழி மேரி சிம்ப்ஸனோட மகன். அவனுக்கு ஒரு பிரச்சினை. 619 00:38:14,670 --> 00:38:15,795 அவனுக்கு என் உதவி தேவைப்பட்டது. 620 00:38:15,796 --> 00:38:17,630 அவன் சில புக்கிகள் கிட்ட பணம் வாங்கியிருந்தான். 621 00:38:17,631 --> 00:38:19,131 அவனை கூட்டி வரப் போனேன். 622 00:38:19,132 --> 00:38:21,134 அந்த முகவரியை நான் உங்களுக்குத் தரேன். 623 00:38:21,760 --> 00:38:24,053 அதுக்குப் பிறகு, நான் திரு. தாமஸோட வீட்டுக்குப் போனேன். 624 00:38:24,054 --> 00:38:26,139 அப்போ ராத்திரி சுமார் 1.00 மணி இருக்கும். 625 00:38:28,267 --> 00:38:34,146 ஒரு சில மணி நேரம் கழிச்சு, ராபர்ட் ஹென்னஸி, நான்ஸி பத்தி கூப்பிட்டார். 626 00:38:34,147 --> 00:38:35,940 மிச்சமெல்லாம் ஏற்கனவே போலீஸ் பதிவுல இருக்கு. 627 00:38:35,941 --> 00:38:37,024 ஹாரிஸ், ரைட் & ஆலென். 628 00:38:37,025 --> 00:38:40,778 ஆனால் மார்கஸ் சிம்ப்ஸன் தண்டனை காலத்தில இருக்கான். 629 00:38:40,779 --> 00:38:43,489 இதனால அவனுக்கு பிரச்சினை வரலாம். 630 00:38:43,490 --> 00:38:48,077 எனக்கான ஆதாரத்துக்கு எதை வேணா பயன்படுத்துங்க, ஆனால் தயவு செஞ்சு அவன் பெயரை விட்ருங்க. 631 00:38:48,078 --> 00:38:53,916 அவனை இதுக்குள்ள இழுத்தா, அது மேரியை நாசப்படுத்திடும். 632 00:38:53,917 --> 00:38:56,878 அது பிரச்சினை இல்ல, அவன் பெயரை ரகசியமா வச்சிக்கிறோம். 633 00:38:56,879 --> 00:38:57,963 சரி. 634 00:39:01,341 --> 00:39:02,717 இப்ப என்ன நடக்கும்? 635 00:39:02,718 --> 00:39:04,344 நாங்க உங்க வாதத்தை தயார் பண்றோம். 636 00:39:04,887 --> 00:39:06,679 நம்ம பிரைவெட் இன்வெஸ்டிகேட்டர் குற்றம் நடந்த இடத்தில கிடைச்ச 637 00:39:06,680 --> 00:39:08,639 விஷயங்களை ஆராய்ந்து பார்த்து ஆரம்பிப்பாங்க. 638 00:39:08,640 --> 00:39:10,726 இதனால, போலீஸூக்கு என்ன தெரியும்னு நமக்குத் தெரியும். 639 00:39:13,353 --> 00:39:16,939 உத்தம மனிதாபிமானிகள் அவங்க கீழ வேலைப் பார்க்குறவங்க கிட்ட உறவு வச்சிக்க மாட்டாங்க. 640 00:39:16,940 --> 00:39:18,233 ஆமா, நீ பிஸியா இருந்திருக்க. 641 00:39:19,902 --> 00:39:21,110 உன்னை நினைச்சா பெருமையா இருக்கு. 642 00:39:21,111 --> 00:39:22,653 இப்ப நீ கிண்டல் பண்ற. 643 00:39:22,654 --> 00:39:23,864 இல்ல, உண்மையா சொல்றேன். 644 00:39:24,448 --> 00:39:25,574 நீ ஓடல. 645 00:39:26,158 --> 00:39:27,618 நீ எங்கள உள்ள அனுமதிச்சிருக்க. 646 00:39:31,705 --> 00:39:34,123 இப்ப உன் கேள்வியைப் பத்தி யோசிட்டிருக்கேன். 647 00:39:34,124 --> 00:39:35,208 எந்த கேள்வி? 648 00:39:35,209 --> 00:39:36,502 நான் பண்ணதிலேயே மோசமான விஷயம். 649 00:39:37,002 --> 00:39:38,836 நிறைய குடிச்சதா? 650 00:39:38,837 --> 00:39:40,171 நீ தான் குடிக்க மாட்டியே? 651 00:39:40,172 --> 00:39:45,761 நான் பண்ண தப்புகள் ஒரு பெரிய பட்டியலே இருக்கு, எல். நீ… 652 00:39:47,513 --> 00:39:48,847 பெரும்பாலான மக்கள விட நல்லவ. 653 00:39:49,473 --> 00:39:53,810 நீ ஒண்ணும் சுத்தம் இல்ல, நீ பண்ணதும் துரதிஷ்டவசமானது. 654 00:39:56,396 --> 00:40:00,107 ஒண்ணு உறுதியா தெரியும், உன் தோழிகள் உன் நல்ல குணங்களை வெளி கொண்டு வராங்க. 655 00:40:00,108 --> 00:40:06,823 நீ எவ்வளவு நான்ஸியை நேசிச்சேன்னு அவளுக்கு நிச்சயம் தெரியும். 656 00:40:09,493 --> 00:40:11,620 அதை சொன்னதுக்கு நன்றி. 657 00:40:16,250 --> 00:40:18,377 - ஏர்போர்ட் போயிட்டு கூப்பிடுறேன். - சரி. 658 00:40:26,635 --> 00:40:30,472 நான்ஸி எனக்கு எவ்வளவு முக்கியம்னு நான் அவகிட்ட சொல்லியிருக்கேன். அடிக்கடி சொல்லியிருக்கேன். 659 00:40:31,932 --> 00:40:34,977 ஆனால் நேசம் என்கிறது நாம என்ன பேசுறோம் அப்படிங்கிறதில்ல. நாம என்ன செய்றோம் அப்படிங்கிறது. 660 00:40:35,602 --> 00:40:40,274 அன்னைக்கு ராத்திரி நான்ஸிக்கு நான் போதுமானதா செய்யல. 661 00:40:43,026 --> 00:40:45,654 நான்ஸி இறப்பதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன் 662 00:40:46,238 --> 00:40:47,488 நல்லவேளை நீ இன்னும் இங்க இருக்க. 663 00:40:47,489 --> 00:40:48,614 நீ போயிட்டேன்னு நினைச்சேன். 664 00:40:48,615 --> 00:40:51,702 என்னால… என்னால இதை தனியாச் செய்ய முடியாது. 665 00:40:53,287 --> 00:40:54,538 நீ என் கூட வரியா? 666 00:40:55,289 --> 00:40:57,832 உன் காதலனோட முறிக்கிறதுக்கா? 667 00:40:57,833 --> 00:40:59,125 - என்ன விளைாடுறியா? - அது… 668 00:40:59,126 --> 00:41:01,502 அது நீ நினைக்கிற மாதிரி இல்ல. அதை விட மோசமானது. 669 00:41:01,503 --> 00:41:02,670 என்னால தனியா பண்ண முடியாது. 670 00:41:02,671 --> 00:41:05,631 நீ இதை விட சவாலான விஷயங்களைச் சமாளிச்சிருக்க. 671 00:41:05,632 --> 00:41:06,925 உனக்கு ஒண்ணும் ஆகாது. 672 00:41:08,260 --> 00:41:10,303 உன்னால இது முடியும். ரொம்ப நன்றி. 673 00:41:10,304 --> 00:41:11,597 நாளைக்கு என்னைக் கூப்பிடு. 674 00:41:17,019 --> 00:41:18,312 நீ என்ன பண்ற? 675 00:41:18,812 --> 00:41:20,646 ஏன் இப்படி என் கிட்ட மோசமா நடந்துக்குற? 676 00:41:20,647 --> 00:41:21,939 நான் மோசமா நடக்கல. 677 00:41:21,940 --> 00:41:26,402 இவனைப் பத்தி நீ பேசுறதை ரொம்ப நாளா கேட்டுட்டிருக்கேன். போதும். 678 00:41:26,403 --> 00:41:27,778 மேரி கூப்பிட்டா என் கூட வருவா. 679 00:41:27,779 --> 00:41:29,989 - அப்படின்னா, மேரியைக் கூப்பிடு. - நீ தான் எனக்கு வேணும். 680 00:41:29,990 --> 00:41:32,992 நீ உன் வாழ்க்கையைச் சரி பண்ணணும். 681 00:41:32,993 --> 00:41:35,204 உனக்கு அழகான ஒரு திருமண வாழ்க்கை இருக்கு. 682 00:41:35,829 --> 00:41:37,288 அதுக்குத் தான் இப்படி பேசுறியா? 683 00:41:37,289 --> 00:41:39,624 - வேண்டாம். - வாவ், எல்லி. 684 00:41:39,625 --> 00:41:41,376 எனக்குப் பரிதாபமா இருக்கு. 685 00:41:42,419 --> 00:41:44,086 எது பரிதாபம் தெரியுமா? 686 00:41:44,087 --> 00:41:49,259 உன் கணவனுக்கு துரோகம் பண்ணிட்டு, அதை சொல்றதுக்கு பயப்படுறது. 687 00:41:50,552 --> 00:41:51,719 என் காரிலிருந்து இறங்கு. 688 00:41:51,720 --> 00:41:53,263 - தயவு செஞ்சு என்னோட வா. - முடியாது. 689 00:41:53,889 --> 00:41:55,848 - தயவு செஞ்சு வா. - காரிலிருந்து கீழ இறங்கு. 690 00:41:55,849 --> 00:41:57,476 - தயவு செஞ்சு வா. - காரிலிருந்து கீழ இறங்கு! 691 00:42:31,802 --> 00:42:33,011 எனக்கு டேவிட் யாருன்னு தெரியும். 692 00:43:24,229 --> 00:43:26,231 தமிழாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்