1 00:00:06,006 --> 00:00:08,551 "ஸ்பைடர்-நுஆ"வில் இதுவரை 2 00:00:09,051 --> 00:00:12,345 சில்வர்மேன். 30 வருடங்களாக திட்டமிடப்பட்ட குற்றங்களின் தலைவன். 3 00:00:12,346 --> 00:00:15,181 யாரோ, அவன் வீட்டை ரெண்டு நாள் முன்ன கொளுத்தீட்டாங்க. 4 00:00:15,182 --> 00:00:16,099 ஆடிஸன்! 5 00:00:16,100 --> 00:00:18,685 என்னை பின்தொடர்ந்தனா, இது, நீ நினைக்கிற மாதிரி முடியாது. 6 00:00:18,686 --> 00:00:20,688 இவனுக்கு சூப்பர்வர்ஸ் உண்டா, உன்னை போல? 7 00:00:22,690 --> 00:00:24,607 ஒரு உதவி செய், இதை அச்சிட வேணாம். 8 00:00:24,608 --> 00:00:26,901 டானெகல் கொல்லப்படாம இருக்க அவனை எச்சரிக்கணும். 9 00:00:26,902 --> 00:00:28,361 போதும், போதும். 10 00:00:28,362 --> 00:00:29,863 இது எல்லாருக்கும் இலவசமாகும். 11 00:00:29,864 --> 00:00:31,906 மக்களுக்கு ஒரு ஹீரோ தேவை. 12 00:00:31,907 --> 00:00:33,491 அவங்களுக்கு யாராவது கிடைப்பாங்க. 13 00:00:33,492 --> 00:00:35,202 நீ இப்படி பேசறதை ரூபி கேட்டா? 14 00:00:36,328 --> 00:00:37,747 நான் இப்போ அந்த ஆள் கிடையாது. 15 00:00:38,664 --> 00:00:40,373 இது யாருனு தெரியுமா? 16 00:00:40,374 --> 00:00:43,084 அது கேட் ஹார்டி, தி ஆல்கோவ்ல அவ தான் உச்ச நட்சத்திரம். 17 00:00:43,085 --> 00:00:44,586 நாம எங்கயாவது போய் பேசலாமா? 18 00:00:44,587 --> 00:00:45,712 - தொழில் விஷயமா. - ஃப்லின்ட்? 19 00:00:45,713 --> 00:00:47,923 எனக்கு யாரையும் காயப்படுத்த விருப்பமில்ல. 20 00:00:53,220 --> 00:00:55,180 - அவனைக் காயப்படுத்தாதே. - இது என்ன கருமம்? 21 00:00:55,181 --> 00:00:56,973 எங்களை தனியா விடு, ப்ளீஸ். 22 00:00:56,974 --> 00:00:59,893 தான் யாரென்று ஒருவர் கூறினால், நீ கேட்டாகணும். 23 00:00:59,894 --> 00:01:01,479 - அவன் யார்? - அவன் ஓய்வு பெற்றவன். 24 00:01:02,605 --> 00:01:04,064 இவருக்கு ஒரு வேலை தர வந்திருக்கேன். 25 00:01:04,648 --> 00:01:06,984 என் நண்பன், நீ நேற்று பாத்தவன், அவனை இப்ப காணல. 26 00:01:34,220 --> 00:01:35,929 ஃப்லின்ட் உங்க பாடிகார்ட் அப்டினீங்க. 27 00:01:35,930 --> 00:01:40,016 ஆமா. என்னை காப்பவன், விசுவாசி. இது போன்ற ஆள் இப்பலாம் கிடைப்பது கடினம். 28 00:01:40,017 --> 00:01:42,853 உண்மைதான். என் கணவனை வெறும் தோற்றத்தை கண்டு நான் மணக்கல. 29 00:01:43,896 --> 00:01:45,980 வேற என்ன? அவனுக்கு குடும்பம், நண்பர்கள் இருக்காங்களா? 30 00:01:45,981 --> 00:01:48,234 அவனோட தனிப்பட்ட வாழ்க்கை பத்தி எதுவும் தெரியாது. 31 00:01:48,734 --> 00:01:49,693 அவன் முகவரி தெரியும். 32 00:01:50,861 --> 00:01:53,989 அவன் மணல் அரக்கனா ஆனதை பத்தி நாம பேசப் போறோமா? 33 00:01:55,908 --> 00:01:57,076 எனக்கு தெரிந்தது அவளுக்கும்தான். 34 00:01:58,494 --> 00:02:00,453 ஒரு ஆறு மாசம் ஆச்சு, இது தொடங்கி. 35 00:02:00,454 --> 00:02:04,250 முதல்ல, மெதுவா தொடங்குச்சு, ஆனா மோசமாகிட்டே போகுது. 36 00:02:05,042 --> 00:02:07,252 அது நடக்கறப்போ அவனுக்கு நினைவு இருக்கற்தில்லயா? 37 00:02:07,253 --> 00:02:08,254 எப்பவுமே நினைவுண்டு, 38 00:02:08,838 --> 00:02:11,131 அவன் இரும்பு தடியால் தலையில தாக்கப்பட்டாலொழிய. 39 00:02:12,091 --> 00:02:15,802 அவ்வளவுதானா? மணலா மாறிட்டான். அது மணல் தானே? 40 00:02:15,803 --> 00:02:17,554 பெரிய விஷயம் போல இருக்கே. 41 00:02:17,555 --> 00:02:20,223 இது எதனால் ஏற்படுதுனு ஏதாவது உங்களுக்கு தெரியுமா? 42 00:02:20,224 --> 00:02:21,933 நீங்க கொடுக்கும் விவரம் குறைவு. 43 00:02:21,934 --> 00:02:23,727 அதுக்கு தானே பணம் கொடுத்தேன்? 44 00:02:24,311 --> 00:02:26,730 நீங்க ஒரு புலனாய்வாளர். துப்பறியுங்க. 45 00:02:28,274 --> 00:02:32,735 ஒரு ஓவியக்கலைஞன் காத்தை வெச்சு வரையறதில்ல. கேன்வஸ், பிரஷ்கள், பேன்ட் தேவை. 46 00:02:32,736 --> 00:02:35,154 உன்கிட்ட இருந்து ஏதாவது மறைக்கறேன்னு நினைக்கறியா? 47 00:02:35,155 --> 00:02:37,782 - ஆமாம்னு சொன்னா? - ஏன் அந்த எண்ணம்னு கேப்பேன். 48 00:02:37,783 --> 00:02:39,826 - வாழ்நாள் அனுபவம். - வாடிக்கையாளர்களிடமா? 49 00:02:39,827 --> 00:02:41,745 அது… பெண்களிடம். 50 00:02:43,330 --> 00:02:46,792 இந்த விளையாட்டு நல்லா இருக்கு, ஆனா எனக்கு வேற வேலை இருக்கு. 51 00:02:48,085 --> 00:02:49,670 ஓவியத்தை துவங்குங்க, மிஸ்டர் ரைய்லி. 52 00:02:58,721 --> 00:03:01,849 - என்ன நினைக்கற? - நீ பச்சை தண்ணில குளிக்கணும் போல. 53 00:03:02,516 --> 00:03:03,767 ஆமா எனக்கு அது தேவை. 54 00:03:07,104 --> 00:03:09,231 ஆனா நீ சொல்றது சரி. அவ எதையோ மறைக்குறா. 55 00:03:09,857 --> 00:03:11,150 ஜாலியானவர்கள் செய்றது தான். 56 00:03:11,775 --> 00:03:14,819 நான் ஃப்லின்ட் வீட்டுக்கு போய் பாக்கறேன். நீ இங்க போயேன்… 57 00:03:14,820 --> 00:03:16,280 குற்றவியல் பதிவு அலுவலகத்துக்கா? 58 00:03:16,947 --> 00:03:19,616 ஆமா. நமக்கும் ஒரு நல்ல கேஸ் வந்து கொஞ்ச நாளாச்சு. 59 00:03:19,617 --> 00:03:20,784 ஆனா ரொம்ப நாள் ஆகலையே. 60 00:03:22,453 --> 00:03:24,371 ஹில்ஹர்ஸ்ட் ஹோட்டெல் 61 00:03:27,166 --> 00:03:28,500 த ஹில்ஹர்ஸ்ட் ஹோட்டல் 62 00:04:01,533 --> 00:04:04,286 நாளைக்கு ஹார்பர்ல புது சப்ளையரை சந்திக்கப் போறேன். 63 00:04:05,621 --> 00:04:06,455 கனடகாரர். 64 00:04:07,247 --> 00:04:09,583 - அதை நீங்க சொல்லவே இல்லையே. - இப்ப சொல்றேன். 65 00:04:11,085 --> 00:04:14,672 உங்களை கொல்ல நினைச்சவனை பிடிக்கற வரை நீங்க வெளில போறது உசிதமில்ல. 66 00:04:15,255 --> 00:04:16,423 நான் எங்கே வேண்ணா போவேன். 67 00:04:17,007 --> 00:04:18,174 எடுத்தெறிஞ்சு பேசல, 68 00:04:18,175 --> 00:04:21,053 ஆனா நீங்க பணம் தர்றது, என் வசீகரத்துக்கோ பண்புகளுக்கோ இல்ல. 69 00:04:21,637 --> 00:04:24,973 நீங்க சாகாம பாத்துக்கதான், இது எனக்கு நல்ல யோசனையா படல. 70 00:04:24,974 --> 00:04:28,394 நீங்க சாவது பலனளிப்பதா இருந்தா, அதை பத்து வருடம் முன்னரே செய்திருப்பேன். 71 00:04:28,894 --> 00:04:31,479 ஆனா நான் எதில் கில்லாடி, எதில் இல்லனு எனக்கு தெரியும், 72 00:04:31,480 --> 00:04:33,607 நீங்க உயிரோட, அதிகாரத்தோட இருப்பதையே விரும்பறேன். 73 00:04:34,233 --> 00:04:36,193 அதனால தயவு செஞ்சு, கெஞ்சி கேட்டுக்குறேன், 74 00:04:36,819 --> 00:04:39,654 முதலில் ஹார்பர் போறேன், எதுவும் பிரச்சனை இல்லனு தெரிஞ்சதும், 75 00:04:39,655 --> 00:04:42,533 நீங்க குதிச்சு வந்து உங்க மயில் தோகையை விரித்து காட்டலாம். 76 00:04:44,201 --> 00:04:45,035 முடிச்சுட்டியா? 77 00:04:48,580 --> 00:04:50,665 அந்த ஆள் இன்னும் இருக்கிறது பிரச்சனையில்ல. 78 00:04:50,666 --> 00:04:53,627 அவங்க என்னை கொல்லலாம்னு எண்ணியது தான் பிரச்சனை. 79 00:04:54,211 --> 00:04:58,215 த ஸ்பைடர் காணாம போனதிலிருந்து, எல்லாம் சௌகரியமா போயிட்டிருக்கு. 80 00:04:58,716 --> 00:05:02,761 எனக்கு அலட்சியம் வந்துடுச்சு, மென்மையாகிட்டேன்னு யாரோ நினைக்கறாங்க போல. 81 00:05:03,637 --> 00:05:04,763 அதில் நீயும் ஒருத்தன் போல. 82 00:05:06,557 --> 00:05:08,392 என்னைக் கொல்லலாம்னு நினைக்கறியோ? 83 00:05:09,393 --> 00:05:13,354 ஆடிஸன் போல் நீயே உன்னை எரிச்சுகிட்டா வேண்ணா அதுக்கு வாய்ப்பிருக்கு. 84 00:05:13,355 --> 00:05:16,400 அந்த மாதிரி சக்திய கட்டுப்படுத்தறதுனா, நினைச்சு பார். 85 00:05:17,067 --> 00:05:20,611 இப்போ ஃப்லின்ட்டை காணல, அது நடந்த உடனே. 86 00:05:20,612 --> 00:05:22,865 சமீபமா ரொம்ப விசித்திரமா நடந்துக்கிறான். 87 00:05:23,574 --> 00:05:25,659 இப்போ, இவை இரண்டுக்கும் தொடர்பு இருக்குனா… 88 00:05:26,702 --> 00:05:27,661 ஃப்லின்ட்டை கண்டுபிடி. 89 00:05:32,416 --> 00:05:34,084 அப்புறம் பசங்க கண்டுபிடிச்சா, அந்த பிஐ… 90 00:05:34,752 --> 00:05:35,586 ரைய்லி. 91 00:05:36,086 --> 00:05:37,421 …அவனை நேரா என்கிட்ட கூட்டிவா. 92 00:06:54,164 --> 00:06:56,916 {\an8}மார்வெல் காமிக்ஸ் அடிப்படையில் 93 00:06:56,917 --> 00:07:01,046 "ஸ்பைடர்-நுஆ" 94 00:07:33,954 --> 00:07:35,163 கெச்சப் 95 00:07:35,164 --> 00:07:35,998 அருமை. 96 00:07:47,843 --> 00:07:49,468 ஹை, ராபி ராபர்ட்சென் பேசறேன். 97 00:07:49,469 --> 00:07:52,138 மிஸ்டர் ராபர்ட்சென், எத்தனை முறை உங்ககிட்ட சொல்றது? 98 00:07:52,139 --> 00:07:54,182 உங்க வேலை உங்களுக்கு திருப்பி கிடைக்காது. 99 00:07:54,183 --> 00:07:56,976 கெஸெட்டில் என் கட்டுரையை வால்டர்ஸ் பாத்தாரானு தெரியல, 100 00:07:56,977 --> 00:07:58,728 - ஆனா நான்… நான்… - மிஸ்டர் ராபர்ட்சென், 101 00:07:58,729 --> 00:08:02,356 - இந்த உரையாடல் அர்த்தமில்லாதது. - நான் அவரோட உக்காந்தா போதும். 102 00:08:02,357 --> 00:08:04,609 - மிஸ்டர் ராபர்ட்சென், ப்ளீஸ். - ஆனா நீங்க… 103 00:08:04,610 --> 00:08:06,777 - எனக்கு ஒரு வாய்ப்பு தந்தா… - ஃபோனை வைக்க போறேன். 104 00:08:06,778 --> 00:08:10,364 அற்புதமான ஒரு விஷயம் பிடிச்சிருக்கேன்! இது போன்ற கதை கிடைச்சு ரொம்ப காலமாச்சு. 105 00:08:10,365 --> 00:08:12,576 த ஸ்பைடருக்கு பின் இது போன்ற பெரிய விஷயம் சிக்கியதில்ல. 106 00:08:15,287 --> 00:08:18,248 சத்தியமா, அவருக்கு பலனுள்ளதா இருக்கும். 107 00:08:21,752 --> 00:08:22,920 என்ன செய்யணும்னு பாக்கறேன். 108 00:08:25,589 --> 00:08:26,423 நன்றி. 109 00:08:27,507 --> 00:08:28,342 நன்றி. 110 00:08:31,094 --> 00:08:32,221 ஃப்லின்ட் மார்க்கோ? 111 00:08:32,888 --> 00:08:33,972 ஒரு டெலிவெரி வந்திருக்கு. 112 00:08:34,598 --> 00:08:35,641 வீட்டுல இருக்கீங்களா? 113 00:09:13,262 --> 00:09:14,846 மூஸ்-ஆர்கோன், ஃப்ரான்ஸ் 114 00:09:22,646 --> 00:09:23,689 ஃபிலின்ட். 115 00:09:28,402 --> 00:09:29,236 ஆடிஸன்! 116 00:09:33,365 --> 00:09:35,950 ஃப்லின்ட்? இது வின்ஸ்டன். 117 00:09:35,951 --> 00:09:37,577 சில்வர்மேன் உன்கிட்ட பேசணுமாம். 118 00:09:38,370 --> 00:09:39,454 சாவியை கொடு. 119 00:09:52,801 --> 00:09:53,719 பெட்ரூம்ல போய் பாரு. 120 00:10:47,647 --> 00:10:48,648 நல்ல வீடு. 121 00:10:50,650 --> 00:10:52,611 ஆனா எனக்கு கொஞ்சம் ஆடம்பரமா படுது. 122 00:10:53,737 --> 00:10:55,530 ஏன்னு எனக்கு நல்லா தெரியும். 123 00:10:56,823 --> 00:10:58,867 - ஏன்? - போவோம். 124 00:10:59,701 --> 00:11:01,744 புதுசா பொண்ணு, கின்னு புடிச்சிருப்பானோ? 125 00:11:01,745 --> 00:11:04,039 அதான் இப்பெல்லாம் போக்கர் ஆட வர்றதில்லையோ? 126 00:11:20,180 --> 00:11:21,973 ஜானெட்! ரொம்ப நாளாச்சே. 127 00:11:22,724 --> 00:11:24,600 புத்தி வந்து வேலையை விட்டிருப்பனு நினைச்சேன். 128 00:11:24,601 --> 00:11:28,063 வாய்ப்பில்ல, ஹேங்க். வருத்தமான உண்மை, எப்பவும் போல இப்பவும் நான் முட்டாள்தான். 129 00:11:30,190 --> 00:11:33,692 {\an8}இது வெளியே இருந்தது. யாருடையதுனு எனக்கு தெரியல. 130 00:11:33,693 --> 00:11:35,362 பக்லி சகோதரர்கள் உணவு வகைகள் 131 00:11:38,949 --> 00:11:40,950 இதை நான் சாப்பிடறத என் மனைவி நிறுத்திட்டா. 132 00:11:40,951 --> 00:11:45,122 - சரி, அப்படின்னா… - ஹேய்! ஆனா நீ என் மனைவி இல்லயே. 133 00:11:47,207 --> 00:11:49,208 - பெயர்? - ஃப்லின்ட் மார்க்கோ. 134 00:11:49,209 --> 00:11:52,461 சரி, இதோ வர்றேன். அந்த பையை மட்டும் தொட்டுடாதே. 135 00:11:52,462 --> 00:11:54,589 என்னால் ரசிச்சு சாப்பிட முடியலனா அப்புறம் என்ன லஞ்சம்? 136 00:11:56,466 --> 00:11:58,175 ஜானெட், சந்திச்சதுல மகிழ்ச்சி. 137 00:11:58,176 --> 00:11:59,636 ஹேய், சார்லி, எப்படி இருக்க? 138 00:12:03,056 --> 00:12:05,600 நம்ம மிஸ்டர் மார்க்கோ, சுவாரஸ்யமான வாழ்க்கை தான். 139 00:12:06,101 --> 00:12:09,353 ப்ரூக்லினில் வளர்ந்தான், ஏழை குடும்பம், ஒளிமயமான எதிர்காலம் இல்ல. 140 00:12:09,354 --> 00:12:11,605 சின்ன குற்றங்கள், பின் பெரியது. 141 00:12:11,606 --> 00:12:14,316 கைது, கைது, கைது. 142 00:12:14,317 --> 00:12:16,945 - இப்போ, அடியாள்… - சில்வர்மேனுக்கு. 143 00:12:17,821 --> 00:12:20,157 நான் ஃப்லின்ட் வீட்டுல இருந்தப்போ அந்த வின்ஸ்டன் வந்தான். 144 00:12:20,991 --> 00:12:23,326 - பீரோல ஒளிஞ்சுகிட்டியா? - ஆமா, பீரோல. 145 00:12:25,120 --> 00:12:28,205 "மூஸ்-ஆர்கோன்." நீயும் அந்த யுத்தத்துல ஈடுபட்ட தானே? 146 00:12:28,206 --> 00:12:30,791 அந்த போரில் நடந்த மிகப்பெரிய யுத்தங்கள்ல் இது ஒண்ணு. 147 00:12:30,792 --> 00:12:32,293 அங்கே பத்து லட்சம் பேர் இருந்தோம். 148 00:12:32,294 --> 00:12:34,588 - இரு. அது… - ஆடிஸன். 149 00:12:35,213 --> 00:12:39,383 - போரில் சேர்ந்து ஈடுபட்டனர் போல. - கேட் இதைத்தான் மறைக்கிறாளா? 150 00:12:39,384 --> 00:12:42,386 ஃப்லின்டுக்கு சூப்பர்பவர்ஸ் தோழன் இருந்தது நிச்சயம் அவளுக்கு தெரிஞ்சிருக்கும். 151 00:12:42,387 --> 00:12:44,889 தெரியும். ஆனா அவ அதை ஏன் என்னிடம் சொல்லலைனு தெரியல. 152 00:12:44,890 --> 00:12:46,765 சொன்னா நீ கேஸை எடுத்துக்க மாட்டியோன்னு தான். 153 00:12:46,766 --> 00:12:48,268 அது உண்மை தான். 154 00:12:53,773 --> 00:12:58,612 ஆல்கோவ் 155 00:13:24,387 --> 00:13:27,516 - இதை நான் கேட்டதே இல்லயே. - கேட்டிருக்க மாட்டீங்க. 156 00:13:28,558 --> 00:13:29,518 என் சொந்த படைப்பு. 157 00:13:31,978 --> 00:13:34,064 ஃப்லின்ட்டின் வீட்டிற்கு இன்று போனேன். 158 00:13:36,733 --> 00:13:37,817 ஏதாவது புலப்படுதா? 159 00:13:38,360 --> 00:13:39,611 அவன் போருக்கு போனது தெரியும். 160 00:13:40,695 --> 00:13:42,572 அவன் இவ்வளவு இளம் வயதினவனா இருந்தத நம்ப முடியல. 161 00:13:43,114 --> 00:13:46,451 இவன்? இவனைத் தெரியுதா? இங்க, சின்னவனா இருக்கானே? 162 00:13:46,993 --> 00:13:49,454 இவன் தி ஆல்கோவிற்கு வந்திருக்கானா, மார்க்கோவை சந்திக்க? 163 00:13:51,373 --> 00:13:52,457 இவனை நான் பாத்ததில்ல. 164 00:13:53,833 --> 00:13:56,461 அவன் பெயர்… ஆடிஸன். 165 00:13:57,462 --> 00:13:59,297 சில்வர்மேனோட வீட்டை எரிச்சான். 166 00:14:00,257 --> 00:14:03,343 இப்ப செத்துட்டான். இவனை சுட்ட பிஐயும் செத்துட்டான். 167 00:14:04,177 --> 00:14:05,011 என்னத்த சொல்ல? 168 00:14:06,179 --> 00:14:07,681 இந்த உலகம் ஆபத்தான இடம். 169 00:14:12,269 --> 00:14:15,187 - நெருக்கடியிலும் அமைதியா இருக்கியே. - நெருக்கடி இருப்பதே தெரியாது. 170 00:14:15,188 --> 00:14:18,482 - அவன் சில்வர்மேனின் ஆளுனு சொல்லலையே. - சொல்லிருந்தா எடுத்துருப்பியா? 171 00:14:18,483 --> 00:14:21,152 - ஆச்சரியங்கள் பிடிக்காது. - உங்க பிறந்தநாளன்று நினைவில வைக்கிறேன். 172 00:14:25,240 --> 00:14:26,949 பத்திரம் என் பெயர்ல இருக்கு, 173 00:14:26,950 --> 00:14:29,244 ஆனா இந்த இடம் சில்வர்மேனோடது என்பது தெரிஞ்சது தானே. 174 00:14:29,953 --> 00:14:32,454 அவனது முதலீட்டை காக்க ஃப்லின்ட் ஒரு நல்ல வழி. 175 00:14:32,455 --> 00:14:34,332 - உன் மீது. - என் மீது செய்ததை. 176 00:14:35,792 --> 00:14:38,919 இந்த கதவு வழியா வரும் மக்கள் கேட்பதை கொடுப்பதால தான் 177 00:14:38,920 --> 00:14:40,839 இந்த க்ளப் ஓடிட்டிருக்கு. 178 00:14:44,217 --> 00:14:46,011 என்னை மாட்ட வைக்குறீங்களா, மிஸ்டர் ரைய்லி? 179 00:14:46,511 --> 00:14:48,178 உங்களையா? 180 00:14:48,179 --> 00:14:49,014 புரிஞ்சுதா? 181 00:14:49,723 --> 00:14:51,181 என் எண்ணம் தெரிஞ்சுருக்கு போல. 182 00:14:51,182 --> 00:14:53,309 இது மாதிரி நிறைய பாத்தாச்சு. 183 00:14:53,310 --> 00:14:55,604 அது எல்லா அப்பன், சுப்பனுக்குமா? 184 00:14:57,272 --> 00:14:58,314 நீங்க சுவாரஸ்யமானவர். 185 00:14:58,315 --> 00:14:59,733 அப்படியா? அதெப்படி? 186 00:15:00,358 --> 00:15:03,236 அன்றிரவு நாம சந்திச்சப்போ, உங்கள கோழைனு சொல்லிக்கிட்டீங்க. 187 00:15:03,862 --> 00:15:05,989 ஆனா நீங்க உண்மையிலேயே தைரியசாலி தான். 188 00:15:06,948 --> 00:15:08,158 நல்லா பேசறீங்களே. 189 00:15:09,034 --> 00:15:12,537 - ஆனா ஏமாறும் அளவுக்கு இல்ல. - நிலைமைக்கு ஏற்ப பேச வேண்டியதை பேசுவேன். 190 00:15:13,163 --> 00:15:17,333 சில்வர்மேனுடன் எனக்கு வேலை இருக்கு, உங்களுடனும் இருக்கு, மிஸ்டர் ரைய்லி. 191 00:15:17,334 --> 00:15:18,877 ஆனா இரண்டுக்கும் சம்பந்தமில்ல. 192 00:15:19,461 --> 00:15:22,339 திரும்பித் தர வந்த பணத்தை இப்ப நீங்களே வெச்சுக்கலாம் தானே? 193 00:15:23,548 --> 00:15:24,758 இல்ல தப்பா மதிப்பிட்டேனா? 194 00:15:25,467 --> 00:15:27,052 இல்ல, நான் புலனாய்வை தொடருறேன். 195 00:15:27,969 --> 00:15:29,095 நான் தைரியசாலி என்பதால அல்ல. 196 00:15:30,221 --> 00:15:31,056 பின்ன எதனால? 197 00:15:31,640 --> 00:15:33,807 ஒரு பாடகிக்கு நிறைய பாடல்கள் தெரியணும். 198 00:15:33,808 --> 00:15:37,145 ஆனா புலனாய்வாளருக்கோ எல்லா விடைகளும் தெரியணுமே. 199 00:16:37,080 --> 00:16:37,914 இது… 200 00:16:39,541 --> 00:16:40,582 டாய் சி. 201 00:16:40,583 --> 00:16:42,292 ஆமா, இது டாய் சி. 202 00:16:42,293 --> 00:16:43,545 நல்லது. 203 00:16:44,045 --> 00:16:47,840 மூச்சு விட, இளைப்பாற ரொம்ப நல்லது. 204 00:16:47,841 --> 00:16:48,675 நான் பரிந்துரைக்குறேன். 205 00:16:50,093 --> 00:16:52,761 நீ என்ன பேசறன்னே எங்களுக்கு புரியல. 206 00:16:52,762 --> 00:16:53,972 அதைப்பத்தி கவலையும் இல்ல. 207 00:17:02,230 --> 00:17:03,856 டோஸ்டரா? நிஜம்மாவா? 208 00:17:03,857 --> 00:17:05,859 அவ்வளவு கடுமையா அதை நான் எறிஞ்சிருக்க கூடாது. 209 00:17:16,161 --> 00:17:18,371 - வா! - ஒரு ட்ரைவ் போகலாம். 210 00:17:27,547 --> 00:17:29,715 ஏன் இங்க இருக்கேன்னு சொல்ல முடியுமா? 211 00:17:29,716 --> 00:17:31,425 சில்வர்மேன் உன்னை பாக்க விரும்புறான். 212 00:17:31,426 --> 00:17:33,635 அது புரிஞ்சுது. ஏன்னு கேட்கறேன். 213 00:17:33,636 --> 00:17:35,512 "ஏன்" ஆட்கள் நாங்க இல்ல. 214 00:17:35,513 --> 00:17:38,767 எங்க பாஸை ஏமாத்தாம இருந்திருந்தா நீயும் இங்க இருக்க மாட்ட. 215 00:17:39,267 --> 00:17:42,478 டானெகல். அவனது திட்டத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்ல. 216 00:17:42,479 --> 00:17:44,146 அதில் ஈடுபட வேணாம்னு சொல்லி பாத்தேன். 217 00:17:44,147 --> 00:17:46,774 பாஸ் உன்கிட்ட பேசதான் போறார். 218 00:17:46,775 --> 00:17:50,444 உங்க பாஸின் வீட்டை எரிக்க ஆடிஸனை அனுப்பியது யார்னு சத்தியமா தெரியாது. 219 00:17:50,445 --> 00:17:51,987 உனக்கு ஏனும் தெரியாதா? 220 00:17:51,988 --> 00:17:54,114 இலக்கணப் பிழை, ஆனா அதை அப்புறம் பாத்துப்போம். 221 00:17:54,115 --> 00:17:57,493 - நான் பெரிய புலனாய்வாளர்லாம் இல்ல. - அப்ப நீ கவலைப் படவே வேணாம். 222 00:17:57,494 --> 00:17:58,745 டானெகல் போல தானே? 223 00:17:59,370 --> 00:18:01,456 ஆமா. டானெகல் போலவே தான். 224 00:18:01,956 --> 00:18:04,125 மூக்குல அடிப்பட்டதுக்கு வருந்துறேன். 225 00:18:04,709 --> 00:18:05,543 எனக்கா? 226 00:18:06,044 --> 00:18:06,878 அது அவனுக்கு. 227 00:18:12,675 --> 00:18:13,885 வெளியே போ! 228 00:18:21,309 --> 00:18:22,185 எங்கே போனான்? 229 00:18:22,852 --> 00:18:23,770 அந்த பக்கம் பாரு. 230 00:18:30,944 --> 00:18:32,611 பாஸ்க்கு இது பிடிக்காது. 231 00:18:32,612 --> 00:18:34,364 ஆமா, இவனை கூட்டி வரச் சொன்னாரே. 232 00:18:35,824 --> 00:18:36,866 காரில் ஏறு! 233 00:18:37,742 --> 00:18:38,785 கூமுட்டை! 234 00:18:47,168 --> 00:18:49,003 இது கஷ்டகாலம். 235 00:18:49,879 --> 00:18:54,633 {\an8}கஷ்டகாலத்துல எதிர்வினையாற்றுவதை வெச்சு ஒரு நகரத்தை நாம் மதிப்பிட முடியாது. 236 00:18:54,634 --> 00:18:57,219 {\an8}- இது டொபீகாவோ காலமஸூவோ இல்லை. - நான் நம்பமாட்டேன். 237 00:18:57,220 --> 00:18:58,470 {\an8}மேயர் மோரிஸை தேர்வு செய் 238 00:18:58,471 --> 00:18:59,680 {\an8}இது நியூ யார்க். 239 00:18:59,681 --> 00:19:04,143 {\an8}நாம கைகள் கோர்த்து பெருகும் வெள்ளத்திற்கு அணையாவோம். 240 00:19:05,186 --> 00:19:07,604 இங்கே நிற்பது சுலபமாக இருந்தது, தெருக்கள்ல… 241 00:19:07,605 --> 00:19:08,772 தலைப்புச்செய்தி என்ன? 242 00:19:08,773 --> 00:19:10,023 குடிக்க விடு 243 00:19:10,024 --> 00:19:13,277 "செய்வதறியா மோரிஸின் மதியற்ற உரை." 244 00:19:13,278 --> 00:19:17,490 எனக்கு நாலு ம தெரியுது. "மேயரின் மந்தமான மக்கள் மீட்டிங்." 245 00:19:18,074 --> 00:19:20,033 என் துணி துவைக்க கூட ஹட்சனிடம் நம்பி தர மாட்டேன், 246 00:19:20,034 --> 00:19:22,327 அவன் மோரிஸை பத்து வாக்குகளில் வெல்லப் போறான். 247 00:19:22,328 --> 00:19:25,206 சில சமயம், வேறு வேட்பாளர் தேவைப்படுது. 248 00:19:25,915 --> 00:19:28,751 முகத்துக்கு என்ன ஆச்சுனு சொல்ல திட்டம் இருக்கா? 249 00:19:29,460 --> 00:19:32,213 ஆடிஸன் பத்திய அறிக்கைகள கொஞ்சம் நிறுத்திக்கோனு சொல்லுவேன். 250 00:19:34,048 --> 00:19:35,048 சில்வர்மேனா? 251 00:19:35,049 --> 00:19:36,842 ஆடிஸன் விஷயத்துல செம்ம கடுப்புல இருக்கான். 252 00:19:36,843 --> 00:19:40,597 அவனை குறி வைப்பது யார்னு தெரிஞ்சுக்க எண்ணுறான், எனவே அடக்கி வாசி. 253 00:19:41,180 --> 00:19:43,683 அடி வாங்கின சொம்பு மாதிரி இருப்பது என் முகம் இல்லயே. 254 00:19:44,559 --> 00:19:46,269 இவனோட நான் கும்மி அடிச்சிருக்கேனே. 255 00:19:46,728 --> 00:19:48,937 முகமூடி, கண்ணாடி போட்ட ஆளுடனும் தான், 256 00:19:48,938 --> 00:19:51,773 நியூ யார்க்கின் பிரபல ஹீரோ. 257 00:19:51,774 --> 00:19:52,817 பென் ரைய்லியா இல்ல. 258 00:19:53,318 --> 00:19:54,943 ஒண்ணு சொல்லட்டுமா? அதைக் கொடுங்க. 259 00:19:54,944 --> 00:19:56,904 நான் ஒரு அறிக்கை வெளியிடுகிறேன். 260 00:19:56,905 --> 00:19:57,863 {\an8}மதுவிலக்கை நிறுத்து 261 00:19:57,864 --> 00:20:02,869 {\an8}ஆமா. நான் மீண்டும் தேர்வானால், மதுவிலக்குக்கு விடை கூறலாம்! 262 00:20:03,453 --> 00:20:06,663 - இவனுக்கு மக்களை ஈர்க்க தெரிஞ்சிருக்கு. - கடவுள் சாட்சியாக, 263 00:20:06,664 --> 00:20:08,833 உங்களுக்கு இனி தாகமே எடுக்காது! 264 00:20:10,043 --> 00:20:13,004 இப்ப சில்வர்மேன் விஷயத்துல நீயும் ஈடுபட்டாச்சு. 265 00:20:13,504 --> 00:20:15,465 ரெண்டே வழி, முகமூடி அணியணும் இல்ல சாகணும். 266 00:20:15,965 --> 00:20:17,674 ஆட்டத்துக்கு நேரம் மீண்டும் வந்துடுச்சு. 267 00:20:17,675 --> 00:20:20,135 நீ நகரத்துக்கு நல்லது பண்ணுவ. 268 00:20:20,136 --> 00:20:21,595 என்ன, ராபி. 269 00:20:21,596 --> 00:20:22,554 போதுமே. 270 00:20:22,555 --> 00:20:24,473 - இதுக்கு பின் என்ன செய்வேன் தெரியுமா? - என்ன? 271 00:20:24,474 --> 00:20:25,308 அமைதியா உக்காந்து, 272 00:20:25,892 --> 00:20:27,936 ஆடிஸன் கதையை தொடர்வேன். 273 00:20:28,728 --> 00:20:31,189 நான் பிரசுரிக்கலனா, எனக்கு சோறில்லை, நண்பா. 274 00:20:33,691 --> 00:20:35,777 கனடியர்கள் பத்தி யோசிச்சுட்டிருந்தேன். 275 00:20:37,070 --> 00:20:38,529 அதை நான் கையாளட்டுமா? 276 00:20:39,030 --> 00:20:40,031 நான் பாத்துக்கறேன். 277 00:20:41,407 --> 00:20:42,742 அதே திட்டம் தான், ஆனா… 278 00:20:44,160 --> 00:20:45,995 நீ முன்னே போ. போய் முதலில் பாரு. 279 00:20:52,377 --> 00:20:54,503 ஆனா இது நல்ல வசீகரமா இருக்குனு தோணுது. 280 00:20:54,504 --> 00:20:56,089 நீ என்ன நினைக்கற, வின்ஸ்டன்? 281 00:20:57,340 --> 00:20:58,757 எனக்கும் ஃபேஷனுக்கும் ரொம்ப தூரம். 282 00:20:58,758 --> 00:21:00,885 ஆனா இது எல்லாமே கொஞ்சம்… 283 00:21:02,011 --> 00:21:03,011 சோர்வூட்டுது. 284 00:21:03,012 --> 00:21:05,682 வின்ஸ்டன், அவகிட்ட உனக்கு ஏதாவது பிரச்சனையா? 285 00:21:07,517 --> 00:21:11,229 இல்லை, பொம்மைகளுக்கு உடையணிவிப்பதை விட முக்கியமான வேலைகள் நிறைய இருக்கு. 286 00:21:12,355 --> 00:21:14,524 எனக்கு உடை பிடிச்சிருக்கு. 287 00:21:15,274 --> 00:21:16,525 பேக் பண்ணிடுங்க. 288 00:21:16,526 --> 00:21:17,735 உனக்கும் பிடிச்சிருக்கு தானே? 289 00:21:18,820 --> 00:21:21,072 - உண்மைல, எனக்கு தோணுது… - ஆமா. மிக அருமையா இருக்கு. 290 00:21:40,466 --> 00:21:42,802 மேடம், ஆடிஸனோட வீடு எங்க இருக்கு? 291 00:21:55,815 --> 00:21:56,649 திருமதி ஆடிஸன். 292 00:22:20,715 --> 00:22:22,633 ஜேம்ஸ் ஆடிஸன் 293 00:22:28,681 --> 00:22:29,682 யார் நீ? 294 00:22:34,729 --> 00:22:36,689 - ஹேய், சகோ. - இந்த "சகோ"லாம் வேணாம். 295 00:22:37,231 --> 00:22:38,399 ஒரு கேள்வி கேட்டேன். 296 00:22:39,108 --> 00:22:40,192 கேட்டே, சரிதான். 297 00:22:40,193 --> 00:22:44,155 உன்னை பாக்க ஆள் பெருசா, கோபக்காரனா இருப்பதால், 298 00:22:44,822 --> 00:22:45,740 பதில் சொல்லிடறேன். 299 00:22:46,324 --> 00:22:47,533 வேரா ஆடிஸனை தேடி வந்தேன். 300 00:22:48,367 --> 00:22:50,495 - எங்கே இருப்பாங்க? - ஏன் தெரிஞ்சுக்கணும்? 301 00:22:50,995 --> 00:22:54,916 நான் ஒரு பத்திரிகையாளர், ஜேம்ஸ் ஆடிஸன் மரணத்தை பத்தி ஒரு உரை எழுதப் போறேன். 302 00:22:56,000 --> 00:22:57,502 அவன் மனைவிகிட்ட பேசணும். 303 00:23:01,089 --> 00:23:02,256 ஜிம்மி செத்துட்டானா? 304 00:23:04,634 --> 00:23:06,677 மன்னிக்கணும். நீங்க நண்பர்களா? 305 00:23:08,262 --> 00:23:09,347 எப்படி இறந்தான்? 306 00:23:10,598 --> 00:23:12,058 ஒரு வெடி விபத்து… 307 00:23:14,060 --> 00:23:15,770 ஸ்டாண்டர்ட் ஆயில் டிப்போல. 308 00:23:16,813 --> 00:23:18,230 ஏன் அவனைப் பத்தி எழுதற? 309 00:23:18,231 --> 00:23:21,067 அவன் இறக்கும் முன், சீண்ட கூடாத வீட்டை எரிச்சான். 310 00:23:21,567 --> 00:23:22,401 யாருடையது? 311 00:23:23,152 --> 00:23:23,986 சில்வர்மேன். 312 00:23:32,620 --> 00:23:35,373 - நீ கிளம்பணும் இப்போ. - இருங்க, இருங்க, இருங்க. 313 00:23:36,290 --> 00:23:38,959 இந்த நகரத்தின் மிக ஆபத்தான நபரின் வீட்டை 314 00:23:38,960 --> 00:23:41,963 ஆடிஸன் தானா எரிக்கல. அதை செய்ய யாரோ பணம் கொடுத்திருக்காங்க. 315 00:23:42,630 --> 00:23:45,508 அவன் உன் நண்பனா, மோசமானவனா இருக்க வாய்ப்பில்ல. 316 00:23:46,175 --> 00:23:47,134 அவனுக்கு உடம்பு சரியில்ல. 317 00:23:47,135 --> 00:23:50,679 அதை பயன்படுத்தி இப்பலாம் பிழைச்சுக்குறாங்க. 318 00:23:50,680 --> 00:23:54,099 - அவர்களின் வியாதி அவர்களையே தின்னும் வரை. - இருங்க. அவருக்கு வியாதினா? 319 00:23:54,100 --> 00:23:55,476 அவனை பணித்தது யார்னு தெரியல. 320 00:23:57,270 --> 00:23:59,856 ஆனா, அவன் மனைவிக்கு தெரிஞ்சிருக்கலாம். 321 00:24:00,356 --> 00:24:01,983 அவங்க எங்க இருப்பாங்க தெரியுமா? 322 00:24:02,608 --> 00:24:03,734 ஜெஃப்ரி ஹோட்டெல் போய் பாரு. 323 00:24:04,318 --> 00:24:06,361 பணம் கிடைச்சா அவ போற இடம் அதுதான். 324 00:24:06,362 --> 00:24:08,614 அங்கிருந்து அவ திரும்பி வந்தா, பணம் காலி. 325 00:24:09,907 --> 00:24:10,908 கண்டுபிடிச்சுக்கோ. 326 00:24:11,659 --> 00:24:12,493 நன்றி. 327 00:24:13,619 --> 00:24:14,704 அவங்கள சந்திக்கறேன். 328 00:24:17,832 --> 00:24:19,124 பி. ரைய்லி தனியார் துப்பறிவாளர் 329 00:24:19,125 --> 00:24:22,043 சொன்னேனே. அவர் ஆபிஸுக்கே வர்றதில்லை. 330 00:24:22,044 --> 00:24:23,754 அவரை கடைசியா எப்ப பாத்தேன்னு கூட தெரியல. 331 00:24:24,338 --> 00:24:26,549 இது உனக்கு நினைவு படுத்தலாம். 332 00:24:27,258 --> 00:24:28,968 ப்ளீஸ், உண்மையை தான் சொல்றேன். 333 00:24:31,512 --> 00:24:33,014 உண்மையை சொன்னா உனக்கு நல்லது. 334 00:24:34,182 --> 00:24:35,057 திரும்பி வருவோம். 335 00:24:50,656 --> 00:24:53,159 ஜானெட்! உன்னைக் காயப்படுத்தினாங்களா? 336 00:24:54,535 --> 00:24:57,538 இல்ல, இந்த முறை இல்ல. ஆனா திரும்பி வருவதா சொன்னாங்க. 337 00:24:58,998 --> 00:25:00,583 என் தலையில துப்பாக்கி வெச்சாங்க. 338 00:25:01,584 --> 00:25:03,627 டானெகல் நிலை தான் எனக்கும்னாங்க. 339 00:25:03,628 --> 00:25:06,379 நீ இருக்குமிடத்த சொல்லலனா, 340 00:25:06,380 --> 00:25:08,716 நானும் அவனும் ஸ்டிக்ஸ் நதியை சேர்ந்து கடப்போம்னு சொன்னாங்க. 341 00:25:09,884 --> 00:25:10,718 என்ன அர்த்தம்? 342 00:25:12,053 --> 00:25:13,304 டானெகல் செத்துட்டான்னு. 343 00:25:14,263 --> 00:25:15,389 சில்வர்மேன் கொன்னான். 344 00:25:16,265 --> 00:25:17,641 ஆனா நான் பாத்துக்கறேன். 345 00:25:17,642 --> 00:25:21,229 ரூபி இறந்ததிலிருந்து, நீ மீண்டும் பழைய மாதிரி மாறுவேனு காத்துட்டிருக்கேன். 346 00:25:21,729 --> 00:25:24,941 உனக்குள் புதைஞ்சிருக்கும் எனக்கு நல்லா தெரிஞ்ச அந்த ஆளா. 347 00:25:25,900 --> 00:25:26,734 ஐந்து வருடங்கள்… 348 00:25:28,945 --> 00:25:29,946 இப்படிதான் முடியணும் போல. 349 00:25:31,113 --> 00:25:34,241 ஜானெட், வீட்டுக்கு போ, ஓய்வெடு, 350 00:25:34,242 --> 00:25:36,911 உன் நிலை சரியாகும், எப்ப ஆபத்தில்லையோ ஃபோன் பண்றேன். 351 00:25:38,079 --> 00:25:39,288 ஆமா, வீட்டுக்கு போறேன். 352 00:25:41,332 --> 00:25:42,708 ஆனா திரும்பி வரப் போறதில்ல. 353 00:25:43,542 --> 00:25:45,543 உன் மீது அக்கறை உண்டு, பென். 354 00:25:45,544 --> 00:25:46,504 ரொம்ப ஆழமா. 355 00:25:48,839 --> 00:25:50,383 ஆனா நான் சாகும் அளவு இல்ல. 356 00:25:51,467 --> 00:25:52,301 ஜானெட். 357 00:25:54,011 --> 00:25:54,887 ஜானெட்! 358 00:26:37,346 --> 00:26:41,350 பராமரிப்பு 359 00:26:44,979 --> 00:26:48,315 ஹை! நான் பராமரிப்புலருந்து பீட். கசிவுக்கு மன்னிக்கணும். இதோ சரி செய்றேன். 360 00:26:48,316 --> 00:26:52,319 இதோ இப்போ… பாவம், கீழ் வீடு. ஒரே நாசம். எங்க பாத்தாலும் தண்ணி. 361 00:26:52,320 --> 00:26:54,112 - என்ன ஆச்சு? - ஏதோ கசிவாமே? 362 00:26:54,113 --> 00:26:55,822 வீட்டை அழகா வெச்சிருக்கீங்க. 363 00:26:55,823 --> 00:26:57,991 ஆயினும், இந்த மேஜையை ஜன்னல் பக்கம் வெச்சீங்கனா, 364 00:26:57,992 --> 00:27:00,119 இரவு உணவின் போது, அஸ்தமனத்த அனுபவிக்கலாம். 365 00:27:00,703 --> 00:27:02,996 - சொன்னேன்ல. - இங்கே வந்திருக்கீங்களா? 366 00:27:02,997 --> 00:27:05,290 இந்த வீடு எனக்கு பரிச்சயம், ஆமா. 367 00:27:05,291 --> 00:27:06,417 பாத்ரூம் அங்கே தானே? 368 00:27:26,145 --> 00:27:28,314 இங்கேயே நிக்காதே, ஏதாவது சொல்லு, போ. 369 00:27:29,148 --> 00:27:31,484 சார், நீங்க என்ன சரி செய்றீங்க? 370 00:27:32,568 --> 00:27:36,906 பிரச்சனையை கண்டுபிடிச்சுட்டேன். ஒரு பைப் உடைஞ்சிருக்கு. 371 00:27:37,490 --> 00:27:40,993 இணைப்பு சரியா இல்ல. 372 00:28:03,516 --> 00:28:05,601 மன்னிக்கணும், அங்கே என்ன நடக்குது? 373 00:28:06,811 --> 00:28:09,522 உண்மைய சொல்லணும்னா, இருத்தலியல் குழப்பம். 374 00:28:11,190 --> 00:28:12,274 என் கழிவறையிலா? 375 00:28:30,126 --> 00:28:32,002 அவன் ப்ளம்மரே இல்லனு நினைக்கறேன். 376 00:28:44,140 --> 00:28:45,558 த ஜெஃப்ரி ஹோட்டெல் வெள்ளையர் மட்டும் 377 00:28:54,692 --> 00:28:55,651 படிக்கட்டு இடப்பக்கம். 378 00:28:57,903 --> 00:28:59,113 உன் உதவிக்கு நன்றி. 379 00:29:00,781 --> 00:29:01,781 டாலருக்கு நன்றி. 380 00:29:01,782 --> 00:29:02,616 டெலிவெரிகள் 381 00:29:05,035 --> 00:29:05,870 திருமதி ஆடிஸன்? 382 00:29:09,790 --> 00:29:10,791 எதுவும் ஆர்டர் செய்யலையே. 383 00:29:11,375 --> 00:29:13,461 என் பெயர் ராபி ராபர்ட்சென், பத்திரிகையாளர். 384 00:29:14,545 --> 00:29:18,173 இரு… இரு, இரு, நான் உன்னோட பேசணும். 385 00:29:18,174 --> 00:29:20,758 உனக்கு மூணு நொடி தர்றேன், கிளம்பு, இல்லனா கத்துவேன். 386 00:29:20,759 --> 00:29:23,428 ஒரு கருப்பன் அத்துமீறி அறைக்குள் நுழையறான்னு 387 00:29:23,429 --> 00:29:25,097 வெள்ளை பெண் கத்தினா என்ன ஆகும்? 388 00:29:26,974 --> 00:29:28,392 ஒண்ணு யூகிச்சேன், 389 00:29:29,059 --> 00:29:32,312 தன்னை கொல்ல கொடுக்கப்பட்ட பணத்துல நீ லாப்ஸ்டரும், ஆடம்பர உடைகளும் 390 00:29:32,313 --> 00:29:35,441 வாங்கியது இந்நகரின் கொடூர கேங்ஸ்டருக்கு தெரிய வேண்டாம்னு 391 00:29:35,941 --> 00:29:40,237 நினைக்கறே தானே? 392 00:29:40,821 --> 00:29:42,113 வேணும்னா கத்திக்கோ. 393 00:29:42,114 --> 00:29:44,741 நான் வேண்ணா கத்தவா? நல்ல கனமான குரல் எனக்கு. 394 00:29:44,742 --> 00:29:45,868 ரொம்ப தூரம் கேட்கும். 395 00:30:09,391 --> 00:30:10,601 அவ்வளவுதானா? 396 00:30:11,101 --> 00:30:12,436 - அப்படின்னா? - அழுகை வரலையா? 397 00:30:13,020 --> 00:30:14,730 உன் கணவன் இறந்தாட்டான்னு சொன்னேனே. 398 00:30:15,439 --> 00:30:17,316 ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி துக்கப்படுவாங்க. 399 00:30:19,568 --> 00:30:20,653 உனக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு. 400 00:30:22,863 --> 00:30:26,283 ஜேம்ஸ்கிட்ட நிறைய பிரச்சனை உண்டு, ஆனா விட்டுட்டு ஓடுற ஆள் இல்லை. 401 00:30:26,867 --> 00:30:29,703 அவன் வீட்டுக்கு வராதப்பவே வரமாட்டான்னு புரிஞ்சுடுச்சு. 402 00:30:30,287 --> 00:30:32,580 - எப்ப தீ வைக்க தொடங்கினான்? - ஆறு மாசமா. 403 00:30:32,581 --> 00:30:35,291 தனக்கு ஒரு சிறப்பு சக்தி இருப்பதை திடீர்னு தெரிஞ்சுகிட்டான். 404 00:30:35,292 --> 00:30:36,919 சில்வர்மேன் வேலைக்கு அவனை வச்சது யார்? 405 00:30:38,212 --> 00:30:41,298 நான் கத்தாததால ஓட்டை வாய்னு அர்த்தம் இல்ல. 406 00:30:42,216 --> 00:30:43,508 என்னைப் பொறுத்தவரை, 407 00:30:43,509 --> 00:30:46,011 ஜேம்ஸ் தானே குழி தோண்டிகிட்டான், இப்ப அதில் கிடக்கிறான். 408 00:31:03,070 --> 00:31:04,655 இந்த இடம் அமானுஷ்ய உணர்வைத் தருது. 409 00:31:05,406 --> 00:31:06,490 அது உண்மை தான். 410 00:31:09,285 --> 00:31:10,494 பேய்கள் பத்தி பேசுகையில்… 411 00:31:12,746 --> 00:31:13,956 ஜிம்மி ஆடிஸன் செத்துட்டான். 412 00:31:14,832 --> 00:31:15,666 என்ன? 413 00:31:16,875 --> 00:31:17,959 எப்போ? 414 00:31:17,960 --> 00:31:20,879 2 நாட்களுக்கு முன். ஒரு பத்திரிகையாளன் அவனை பத்தி விசாரிக்க வந்தான். 415 00:31:21,380 --> 00:31:23,340 சில்வர்மேனை கொல்ல அவனை ஏவியது யார்னு கேட்டான். 416 00:31:27,303 --> 00:31:30,180 - உனக்கு தெரியாது. - தெரிஞ்சிருந்தா, அவனை தடுத்திருப்பேனே. 417 00:31:39,189 --> 00:31:42,109 ஃப்லின்ட்… நீ பாக்க சுகமில்லாத மாதிரி இருக்கே. 418 00:31:43,569 --> 00:31:44,570 அது மீண்டும் ஆச்சு. 419 00:31:45,821 --> 00:31:47,281 இந்த முறை முழுசா மாறினேன். 420 00:31:47,906 --> 00:31:48,949 திரும்பி மாற முடியல. 421 00:31:49,742 --> 00:31:50,618 முழுசா மாற முடியல. 422 00:31:52,828 --> 00:31:54,121 டாக்டர் சொன்னது போல. 423 00:31:55,289 --> 00:31:56,457 நமக்கு நேரம் குறைவா இருக்கு. 424 00:31:58,709 --> 00:31:59,960 இப்ப இன்னும் வேகமா. 425 00:32:01,128 --> 00:32:02,504 நாம் அனுபவிச்சதுக்கெல்லாம்… 426 00:32:05,341 --> 00:32:07,176 நாம இருவரும் நல்லா வாழணும். 427 00:32:08,594 --> 00:32:11,263 இங்கிருந்து கிளம்புவோம். என் வீட்டில் நீ தூங்கிக்கோ. 428 00:32:12,181 --> 00:32:13,932 இப்போ நாம சேர்ந்து இருப்பதே நல்லது. 429 00:32:16,310 --> 00:32:17,144 ஆமா. 430 00:32:18,479 --> 00:32:21,939 எல்லா பெட்டியையும் பாக்கணுமா? நாங்க கனடியர்கள் என்பதாலா? 431 00:32:21,940 --> 00:32:23,608 ஆமா, நீங்க கனடியர்கள் என்பதால். 432 00:32:23,609 --> 00:32:25,818 இல்ல! பாஸ் யாரையும் நம்புறதில்ல. 433 00:32:25,819 --> 00:32:26,862 என்னையும் சேர்த்து. 434 00:32:27,488 --> 00:32:29,239 அதான் இந்த நகரத்தை இன்னும் ஆள்கிறார். 435 00:32:29,990 --> 00:32:33,242 சரக்கு சரியா இருக்கு, பாஸ். நீங்க வரலாம். 436 00:32:33,243 --> 00:32:34,828 சரி. வந்துட்டிருக்கேன். 437 00:33:08,654 --> 00:33:09,530 என்னது அது? 438 00:33:16,286 --> 00:33:17,496 ஒருத்தர் போய் பாருங்க! 439 00:33:17,996 --> 00:33:19,289 போ! போ, போ, போ, போ, போ! 440 00:33:21,208 --> 00:33:22,418 அவன் கூரை மேலே இருக்கான்! 441 00:33:27,965 --> 00:33:28,882 அவனைச் சுடு! 442 00:33:40,269 --> 00:33:41,228 ஹலோ. 443 00:34:00,873 --> 00:34:02,124 எங்கே போனான்? 444 00:34:09,923 --> 00:34:11,133 இல்ல. அந்த பக்கம். 445 00:34:13,302 --> 00:34:14,553 சரி, இங்க வா. 446 00:34:16,221 --> 00:34:17,055 நன்றி. 447 00:34:21,143 --> 00:34:22,519 உன் புல்லட்டுகள் தீரவே தீராதா? 448 00:34:23,228 --> 00:34:24,271 ஆமா, தீரும்! 449 00:34:34,239 --> 00:34:36,825 எதுக்கு காத்துட்டிருக்கீங்க? 450 00:34:38,702 --> 00:34:41,454 - உனக்கு அப்புறம். - இல்ல, வாய்ப்பில்ல. 451 00:34:41,455 --> 00:34:42,664 வெளியே போங்க! 452 00:34:52,925 --> 00:34:54,009 இன்னொரு அடி எடுக்காதே. 453 00:34:57,846 --> 00:34:59,598 பாரு? டாய் சி. 454 00:35:12,611 --> 00:35:13,737 கொஞ்ச நாளாச்சு. 455 00:35:14,321 --> 00:35:16,990 நான் இல்லாம ஜம்முனு இருக்க போல? 456 00:35:17,574 --> 00:35:21,078 நீ கொலை வேலைலாம் செய்வேனு தெரியாது. உன்னை பணித்தது யார்னு சொல்றியா? 457 00:35:21,578 --> 00:35:24,456 யாரும் என்னை பணிப்பதில்ல. பென் ரைய்லி காரணமா வந்திருக்கேன். 458 00:35:25,415 --> 00:35:26,541 துப்பறியும் ரைய்லியா? 459 00:35:26,542 --> 00:35:28,752 ஆமா. அவனுக்கு கடன் பட்டிருக்கேன். 460 00:35:29,336 --> 00:35:31,420 மன்னிக்கணும், உபசரிக்க மறந்தேன். பானம்? 461 00:35:31,421 --> 00:35:34,507 இல்ல! நீயும் உன் ரௌடிகளும் ரைய்லியை தொந்தரவு செய்யக் கூடாது. 462 00:35:34,508 --> 00:35:36,425 உன்னை கொல்ல முயன்றவனை அவனுக்கு தெரியாது. 463 00:35:36,426 --> 00:35:39,929 அவனது உதவியாளரை மிரட்டினாலும் அது மாறப் போவதில்ல. 464 00:35:39,930 --> 00:35:43,058 அந்த துப்பறிவாளனை ஒண்ணும் செய்யக் கூடாது, அவ்வளவு தானே? 465 00:35:43,642 --> 00:35:47,144 ஏன்னா முன்னலாம், என்னை அவ்வளவு சீக்கிரம் விட்டுட மாட்டியே, இல்ல? 466 00:35:47,145 --> 00:35:50,439 நான் சொல்வதை நீ சரியா கேக்கல போல, சில்வர்மேன். 467 00:35:50,440 --> 00:35:52,692 இது உனக்கு ஒரே எச்சரிக்கை. 468 00:35:52,693 --> 00:35:58,198 ரைய்லியையோ அவனது ஆட்களையோ படுத்தினனா, உன்னை கொன்னுடுவேன். 469 00:36:49,833 --> 00:36:52,627 - ரைய்லி. - இது நீயா? உன் வேலையா? 470 00:36:52,628 --> 00:36:54,086 என்ன சொல்றே? 471 00:36:54,087 --> 00:36:55,797 சில்வர்மேனின் காரை நிறுத்தினது நீயா? 472 00:36:56,465 --> 00:36:57,882 நீ கேள்விப்பட்டியா? 473 00:36:57,883 --> 00:36:59,800 உனக்கு ஒரு கெட்ட செய்தி சொல்றேன். 474 00:36:59,801 --> 00:37:02,011 சில்வர்மேனை பிடிக்க போலீஸ் பதுங்கி இருந்தாங்க. 475 00:37:02,012 --> 00:37:04,472 ஏதோ மதுபான பரிமாற்றம் பத்தி யாரோ தகவல் தந்துருக்காங்க. 476 00:37:04,473 --> 00:37:07,391 சில்வர்மேனின் மதுபான பரிமாற்றம் பத்தி யாரோ போலீஸுக்கு சொன்னாங்களா? 477 00:37:07,392 --> 00:37:09,810 ஆமா, அவனோட ஒரு டஸன் ஆட்களை சுத்தி வளைச்சிருக்காங்க. 478 00:37:09,811 --> 00:37:13,272 அவனை பிடிக்க போலீஸ் காத்திருந்தாங்க, ஆனா அவன் வரல. 479 00:37:13,273 --> 00:37:15,983 அவன் ஏன் வரலைனு அவங்களுக்கு தெரியுமா? 480 00:37:15,984 --> 00:37:16,943 இல்ல, கவலை வேண்டாம். 481 00:37:16,944 --> 00:37:21,114 யாரோ அவனைத் தடுத்தது போலீஸுக்கு தெரியும், ஆனா அது நீன்னு தெரியாது. 482 00:37:21,698 --> 00:37:24,158 நான் போகணும். ஃபோன் பூத்தில் உயிரிழக்க விரும்பல. 483 00:37:24,159 --> 00:37:25,160 கிளம்பலாம்! 484 00:37:51,019 --> 00:37:52,896 நான் என்ன பண்ணி தொலைச்சேன்? 485 00:40:05,570 --> 00:40:07,655 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 486 00:40:07,656 --> 00:40:09,658 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்