1 00:00:18,393 --> 00:00:21,021 {\an8}கடரினா வின்சன் 2 00:00:24,691 --> 00:00:27,653 {\an8}யுனாஸ் வின்சன் 3 00:00:31,698 --> 00:00:33,992 {\an8}அலெக்ஸ் வின்சன் 4 00:00:38,288 --> 00:00:41,041 {\an8}லூஸி வின்சன் 5 00:00:42,084 --> 00:00:44,628 {\an8}அதோடு அறிமுகப்படுத்துகிறோம்... 6 00:00:46,922 --> 00:00:49,091 {\an8}கார்லட்டா கிளாட் 7 00:01:02,271 --> 00:01:03,771 வின்சன் குடும்பத்தினர் 8 00:01:03,772 --> 00:01:05,774 கார்லட்டா கிளாட்டால் உருவாக்கப்பட்டது 9 00:01:07,818 --> 00:01:09,110 காலை உணவு, பிள்ளைகளே! 10 00:01:09,111 --> 00:01:11,029 நியூ யார்க் டெய்லி போஸ்ட் புயலில் இருந்து தப்பித்தது 11 00:01:13,574 --> 00:01:15,951 வ்வோ. அவசரம் வேண்டாம். 12 00:01:16,660 --> 00:01:19,287 எல்லோருக்கும் போதுமான பேன்கேக்குகள் இருக்கின்றன. 13 00:01:19,288 --> 00:01:21,540 - நன்றி, அம்மா. உங்களை நேசிக்கிறோம். - நன்றி, அம்மா. உங்களை நேசிக்கிறோம். 14 00:01:22,708 --> 00:01:24,084 நானும்தான். 15 00:01:26,962 --> 00:01:28,005 எனக்கு? 16 00:01:29,756 --> 00:01:31,091 - உங்களையும்தான், அப்பா. - உங்களையும்தான், அப்பா. 17 00:01:33,927 --> 00:01:36,596 அன்பே, உன் தலைமுடியை ஏதாவது செய்தாயா? 18 00:01:36,597 --> 00:01:38,098 அழகாக இருக்கிறாய். 19 00:01:39,016 --> 00:01:40,392 கொஞ்சம் டிரிம் செய்தேன். 20 00:01:42,561 --> 00:01:44,813 ஹனி பாப்ஸ் தீர்ந்துவிட்டது. 21 00:01:45,397 --> 00:01:46,315 என்ன சொன்னாய்? 22 00:01:49,318 --> 00:01:50,319 ஹனி பாப்ஸ் தீர்ந்துவிட்டது. 23 00:01:53,071 --> 00:01:54,281 கார்லட்டா? 24 00:01:54,948 --> 00:01:55,949 ஹனி பாப்ஸ். 25 00:01:57,117 --> 00:01:58,577 ஹனி பாப்ஸ் தீர்ந்துவிட்டது. 26 00:02:00,204 --> 00:02:01,580 கார்லட்டா? 27 00:02:02,831 --> 00:02:04,374 கார்லட்டா! 28 00:02:06,460 --> 00:02:07,461 ஹனி பாப்ஸ்? 29 00:02:08,503 --> 00:02:10,047 அதற்கு நான் என்ன செய்யட்டும்? 30 00:02:14,384 --> 00:02:15,719 நீ நலமா? 31 00:02:16,428 --> 00:02:17,596 சோர்வாக இருக்கிறாய். 32 00:02:18,347 --> 00:02:20,015 ஆம். நன்றாக இருக்கிறேன். 33 00:02:24,853 --> 00:02:26,230 எதுவும் நடக்காதது போல இருக்கும் 34 00:02:27,272 --> 00:02:30,943 இந்த மக்களை, அவர்களின் வாழ்க்கையை 35 00:02:32,694 --> 00:02:34,404 பார்த்துக்கொண்டிருக்கிறேன்... 36 00:02:41,286 --> 00:02:44,206 டீடோ, நாம் இதை பல வாரங்களாக செய்கிறோம். 37 00:02:45,415 --> 00:02:47,668 நாம் இன்னமும் வாண்டாவை நெருங்கவில்லை என்ற உணர்வு வருகிறது. 38 00:02:48,752 --> 00:02:51,504 துப்பறிவாளர் ரவுஷ் தொடர்ந்து என்னை நிராகரித்துக்கொண்டே இருக்கிறார். 39 00:02:51,505 --> 00:02:54,633 எனவே போலீஸ் நம்மைப் போலவே கண்டுபிடிப்பதற்கு பக்கத்தில் கூட இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. 40 00:02:55,342 --> 00:02:56,592 சீக்கிரம் தெரிந்துவிடும். 41 00:02:56,593 --> 00:02:59,137 சீக்கிரம் திருப்புமுனையான செய்தி கிடைக்கும், என்னால் உணர முடிகிறது. 42 00:03:01,431 --> 00:03:05,102 தெர்மல் இமேஜிங் கேமரா கொண்ட ட்ரோனை பயன்படுத்தலாம் என ஓலே பரிந்துரைத்தான். 43 00:03:05,602 --> 00:03:07,354 அதை வாங்குவோமா? என்ன நினைக்கிறாய்? 44 00:03:07,938 --> 00:03:09,147 பலன் தருமா? 45 00:03:12,609 --> 00:03:13,610 சரி, வாங்கலாம். 46 00:03:15,529 --> 00:03:16,737 சரி. 47 00:03:16,738 --> 00:03:22,410 நீ ஏன் இன்று ஓய்வு எடுக்கக்கூடாது? ஆசுவாசப்படுத்திக்கொள், நல்ல குளியல் போடு. 48 00:03:22,411 --> 00:03:25,163 பிறகு நாளை மீண்டும் தொடங்குவோம். 49 00:03:25,747 --> 00:03:27,499 இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கப் போகிறேன். 50 00:03:29,960 --> 00:03:32,421 நான் ஏதோ செய்கிறேன் என்று அது என்னை நினைக்கவைக்கிறது. 51 00:03:33,422 --> 00:03:34,423 சரி. 52 00:03:35,549 --> 00:03:37,551 நான் சாண்ட்விச் செய்யப் போகிறேன். 53 00:03:40,053 --> 00:03:40,887 ருடிகர் 54 00:03:40,888 --> 00:03:42,598 டீடோ, என்னைத் தவிர்ப்பதை நிறுத்து. அவளிடம் நீயே சொல், இல்லையென்றால் நான் சொல்வேன். 55 00:04:54,795 --> 00:04:56,421 {\an8}நாள் 0 56 00:05:05,097 --> 00:05:08,766 நூறு ஆண்டுகளுக்கு முன்பு, சி.ஜி. யுங் என்ற சுவிஸ் நபர் 57 00:05:08,767 --> 00:05:11,143 ஒத்திசைவை ஒரே நேரத்தில் 58 00:05:11,144 --> 00:05:14,730 தற்செயலாக நடக்கும் நிகழ்வுகள் என்றும், 59 00:05:14,731 --> 00:05:17,191 ஆனால் அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை, 60 00:05:17,192 --> 00:05:19,444 அவற்றை ஒன்றாக பார்த்தால் மட்டுமே அர்த்தப்படும் என்றும் வரையறுத்தார். 61 00:05:20,028 --> 00:05:21,654 நேர்மையாகச் சொன்னால், அவர் கொஞ்சம் மிகைப்படுத்தியிருக்கலாம். 62 00:05:21,655 --> 00:05:22,655 20 மீ - இரண்டாவது வெளியேறும் வழி ஃபார்ஸ்ட்ஸ்ராஸ் - 10:38 63 00:05:22,656 --> 00:05:24,867 ஆனால் இன்னமும், அந்த யோசனை சுவாரசியமானதுதான். 64 00:05:25,450 --> 00:05:28,619 அதாவது, முடிவில், எல்லாம் நடக்க வேண்டியபடி அப்படியே நடக்க, ஒரே நேரத்தில் 65 00:05:28,620 --> 00:05:30,371 எத்தனை விஷயங்கள் ஒன்றாக நடக்க வேண்டியிருக்கும் 66 00:05:30,372 --> 00:05:33,959 என்பதை நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா? 67 00:05:34,626 --> 00:05:38,921 ஒரேயொரு சின்ன விவரம் வித்தியாசமாக இருந்தால் என்ன செய்வது? 68 00:05:38,922 --> 00:05:41,883 உங்கள் வாழ்க்கை முற்றிலும் திசை மாறி போய்விடும். 69 00:05:41,884 --> 00:05:45,386 எங்கள் பக்கத்து வீட்டுக்காரி கரின் என் தலைமுடியை வெட்டுவது 70 00:05:45,387 --> 00:05:47,763 நல்ல யோசனையாக இருக்கும் என்று என் அம்மா நினைத்தது போல, 71 00:05:47,764 --> 00:05:51,809 நெற்றியில் தொங்கும் முடியின் ஒரு பகுதியை அவள் முற்றிலும் அபத்தமாக வெட்டி 72 00:05:51,810 --> 00:05:54,855 என் மூன்றாவது வகுப்பு மொத்தத்தையும் கெடுத்தது போல. 73 00:05:55,564 --> 00:05:58,609 ஹேய், விதி சில சமயங்களில் விரும்பத்தகாததாக இருக்கும். 74 00:05:59,193 --> 00:06:00,902 நாள் 96 75 00:06:00,903 --> 00:06:02,904 வாண்டா வீட்டைவிட்டு வெளியேறிய இடம் இது. 76 00:06:02,905 --> 00:06:05,823 அவளுடைய செல் ஃபோன் கிடைத்த காபி கடை இருக்கும் இடம் இது. 77 00:06:05,824 --> 00:06:08,409 அவளுடைய டி-ஷர்ட் மறுசுழற்சி பெட்டியில் எறியப்பட்ட இடம் இது, 78 00:06:08,410 --> 00:06:11,163 அதோடு லென்காவின் இன்ஸ்டாகிராம் போஸ்டில் அவள் தோன்றிய இடம் இது. 79 00:06:13,749 --> 00:06:16,918 லென்காவுடைய செல் ஃபோனின் மொபைல் டேட்டா தரவு, 80 00:06:16,919 --> 00:06:19,086 அவள் செக் குடியரசிற்கு திரும்பிப் போவதற்கு முன்பு 81 00:06:19,087 --> 00:06:22,882 இங்கே, இங்கே, இங்கே, இங்கே 82 00:06:22,883 --> 00:06:24,676 நிறுத்தப்பட்டதைக் காட்டுகிறது, 83 00:06:25,511 --> 00:06:31,641 பிறகு ஒரு மலை ஓரத்திலேயே 84 00:06:31,642 --> 00:06:33,769 நிறுத்தாமல் வண்டியை ஓட்டியிருக்கிறாள். 85 00:06:34,937 --> 00:06:37,940 ஒருவேளை அவள் தூங்கிவிட்டாளோ? 86 00:06:39,107 --> 00:06:40,609 அவ்வளவு நேரம் வண்டி ஓட்டியதால். 87 00:06:48,116 --> 00:06:49,868 இது கொஞ்சம் எலி போல தெரிகிறதா? 88 00:06:51,787 --> 00:06:54,164 மூக்கு, அங்கே காதுகள், பிறகு வால். 89 00:07:01,672 --> 00:07:05,551 எனவே, சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்ததுதான் லென்காவின் கடைசி போஸ்ட். 90 00:07:06,218 --> 00:07:08,971 அதற்கு முந்தைய போஸ்ட் இங்கிருந்து போட்டது. 91 00:07:10,556 --> 00:07:12,808 {\an8}லென்கா-விசாரிக்கிறார் #இன்வெஸ்டிகேடிவ்இன்ஃப்ளூயன்ஸர் 92 00:07:13,392 --> 00:07:14,433 ஹலோ. 93 00:07:14,434 --> 00:07:16,478 எனவே, குற்றவாளியைக் கண்டுபிடித்தீர்களா? 94 00:07:19,231 --> 00:07:21,108 உங்கள் பறவைகளை எது சாப்பிடுகிறது என்று. 95 00:07:21,984 --> 00:07:23,569 சரி, பறவைகள். ஆம். 96 00:07:24,736 --> 00:07:29,867 அது ஒரு பேட்ஜர் என்று நினைக்கிறோம். 97 00:07:30,659 --> 00:07:36,330 பேட்ஜர்! எப்படிப்பட்ட கம்பீரமான விலங்குகள். 98 00:07:36,331 --> 00:07:40,543 ஆனால் அவை பறவைகளை தாக்குவது அபூர்வமானது. 99 00:07:40,544 --> 00:07:41,628 அப்படியா? 100 00:07:42,212 --> 00:07:45,965 அது மிகவும் மோசமானதாக இருக்கிறது. 101 00:07:45,966 --> 00:07:47,300 சரி. 102 00:07:47,301 --> 00:07:52,013 எப்படியோ, காட்டில் அதன் பொந்தை 103 00:07:52,014 --> 00:07:54,098 தேடலாம் என்று நினைத்தோம். 104 00:07:54,099 --> 00:07:58,520 தெர்மல் இமேஜிங் ட்ரோன்களைப் பற்றி என் மகன் சொன்னான். 105 00:07:59,855 --> 00:08:02,107 உங்களுக்கான சரியான பொருள் என்னிடம் இருக்கிறது. 106 00:08:04,109 --> 00:08:05,902 பேட்ஜரா? 107 00:08:05,903 --> 00:08:06,987 நிஜமாகவா? 108 00:08:28,300 --> 00:08:31,302 லூஸி, ஒளிந்து வருகிறாயா? 109 00:08:31,303 --> 00:08:34,347 நீ ஒளிந்து வருவது எனக்குப் பிடிக்கவில்லை. 110 00:08:34,932 --> 00:08:37,726 - எல்லாம் நலமா? - ஆம். 111 00:08:43,649 --> 00:08:44,650 என்ன? 112 00:08:47,653 --> 00:08:50,656 மன்னித்துவிடு, செல்லம். ஒரு நிமிடம் காத்திரு. 113 00:08:55,202 --> 00:08:56,410 என்ன? 114 00:08:56,411 --> 00:08:58,914 நாம் இதை ஏற்கனவே பேசி முடித்துவிட்டோம் என்று நினைத்தேன்? 115 00:09:00,249 --> 00:09:01,875 அது சரியானதைவிட குறைவு... 116 00:09:04,253 --> 00:09:06,296 ஹேய். நான்தான். 117 00:09:08,257 --> 00:09:11,926 திரும்ப என் அம்மாவிடம் பேச முயற்சி செய்தேன், ஆனால் அவர் பிஸியாக இருக்கிறார். 118 00:09:11,927 --> 00:09:14,971 கொஞ்சம் பயமாக இருக்கிறது, ஆனால் அது பரவாயில்லை, சரியா? 119 00:09:14,972 --> 00:09:17,014 அதாவது, இரண்டு வாரங்களாக லினாவுக்கு மாதவிடாய் ஏற்படவில்லை, 120 00:09:17,015 --> 00:09:19,351 அதற்கு காரணம் அவளுக்குள் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்திருப்பதுதான். 121 00:09:20,894 --> 00:09:21,895 என்னை திரும்ப அழை. 122 00:09:25,107 --> 00:09:26,316 அடடா. 123 00:09:38,954 --> 00:09:41,456 - சரி. இதோ. - நன்றி. 124 00:09:49,673 --> 00:09:52,341 எப்போதாவது ஒருவரின் மனதை காயப்படுத்தி இருக்கிறாயா? 125 00:09:52,342 --> 00:09:55,012 ஹரால்ட்! வாடிக்கையாளர்களை பயமுறுத்துவது பற்றி நாம் என்ன பேசியிருக்கிறோம்? 126 00:09:57,514 --> 00:09:58,723 - மன்னித்துவிடு. - சரி. 127 00:09:58,724 --> 00:09:59,808 மன்னித்துவிடு. 128 00:10:02,644 --> 00:10:04,729 அவருடைய மனைவி இப்போதுதான் மறதி நோய்க்காக ஒரு காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 129 00:10:04,730 --> 00:10:06,230 அடப் பாவமே. 130 00:10:06,231 --> 00:10:08,150 பிறகு அவருடைய காதலி அவரைவிட்டு போய்விட்டாள். 131 00:10:10,569 --> 00:10:12,321 - ஒன்றும் பிரச்சினை இல்லையே, ஹரால்ட்? - ஆம். 132 00:10:15,073 --> 00:10:16,283 உங்களுக்கு என்ன வேண்டும்? 133 00:10:17,159 --> 00:10:19,703 ஒரு இளம்பெண் காணாமல் போனதைப் பற்றி விசாரிக்கிறேன். 134 00:10:20,996 --> 00:10:22,247 வாண்டா கிளாட். ஆம், 135 00:10:22,998 --> 00:10:24,999 அந்த குடும்பத்தை எனக்குத் தெரியும். அது மிகவும் கொடுமையானது. 136 00:10:25,000 --> 00:10:26,667 அனிடா! 137 00:10:26,668 --> 00:10:27,961 ஹரால்ட்! 138 00:10:29,338 --> 00:10:30,713 இன்னொரு பெண்ணைப் பற்றி பேசுகிறேன். 139 00:10:30,714 --> 00:10:31,798 சரி. 140 00:10:37,554 --> 00:10:38,679 இல்லை, அவளை எனக்குக் தெரியாது. 141 00:10:38,680 --> 00:10:40,933 - யார் அவள்? - செக் குடியரசின் சோஸியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர். 142 00:10:42,100 --> 00:10:45,394 இன்ஃப்ளூயன்ஸர்கள் எங்கள் வழக்கமான வாடிக்கையாளர்கள் கிடையாது. 143 00:10:45,395 --> 00:10:47,021 கடந்த நுப்பல்வோக்கன் இரவன்று அவள் எங்கே இருந்திருக்கிறாள். 144 00:10:47,022 --> 00:10:49,565 நுப்பல்வோக்கன் இரவன்று நிறைய பேர் இங்கே வருவார்கள். 145 00:10:49,566 --> 00:10:52,068 அதுதான் ஆண்டின் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும், 146 00:10:52,069 --> 00:10:54,363 அணிவகுப்பு மற்றும் கால்பந்து போன்றவற்றுடன்... 147 00:10:54,988 --> 00:10:56,865 - எதற்காக அவளைத் தேடுகிறீர்கள்? - அவள் இறந்துவிட்டாள். 148 00:10:57,449 --> 00:10:59,493 - இறந்துவிட்டாளா? - அவளுக்கு கார் விபத்து ஏற்பட்டது. 149 00:11:00,244 --> 00:11:01,245 அப்படித்தான் சொல்லப்படுகிறது. 150 00:11:02,246 --> 00:11:03,663 - செக் குடியரசு நாட்டு எல்லையில். - சரி. 151 00:11:03,664 --> 00:11:06,999 - அவள் இங்கு வந்த 24 மணிநேரத்திற்குள். - அடக் கடவுளே. 152 00:11:07,000 --> 00:11:08,085 ஓ, சரி. 153 00:11:11,213 --> 00:11:12,548 இல்லை. 154 00:11:13,632 --> 00:11:15,634 இல்லை. எனக்கு அவளை ஞாபகமில்லை. வருந்துகிறேன். 155 00:11:16,927 --> 00:11:17,928 சரி. 156 00:11:20,055 --> 00:11:22,224 - ஒருவேளை ஏதாவது ஞாபகம் வந்தால். - நான் அழைக்கிறேன். 157 00:11:23,100 --> 00:11:24,351 - குட்பை. - பை. 158 00:11:27,813 --> 00:11:29,564 - ஹரால்ட், நிஜமாக, திரும்பவுமா? - அனிடா. 159 00:11:29,565 --> 00:11:30,858 ஆம், அனிடா. 160 00:11:35,195 --> 00:11:36,863 - ஹேய். - நீ என்ன செய்கிறாய்? 161 00:11:36,864 --> 00:11:39,156 என்ன? இன்று டெலிவரி நாள். 162 00:11:39,157 --> 00:11:40,658 கடைசி தவணையை இன்று செலுத்த வேண்டும் என்றாய். 163 00:11:40,659 --> 00:11:41,826 இங்கே இல்லை. 164 00:11:41,827 --> 00:11:42,994 வா. 165 00:11:42,995 --> 00:11:44,204 {\an8}நாள் 96 166 00:11:54,131 --> 00:11:57,134 {\an8}நாள் 0 167 00:12:02,806 --> 00:12:04,307 ஹாய். உனக்கு என்ன வேண்டும்? 168 00:12:04,308 --> 00:12:06,685 அன்னாசி பழச்சாறில் ஒரு ஷாட் டெக்கீலா கலந்து வேண்டும். 169 00:12:07,352 --> 00:12:08,896 ஆனால் அன்னாசி பழச்சாறு புதிதாக இருக்க வேண்டும். 170 00:12:12,524 --> 00:12:14,776 நல்லது, அதில் ஒன்றைக் கொடுங்கள். 171 00:12:17,029 --> 00:12:18,404 அருமையான உடை. 172 00:12:18,405 --> 00:12:20,865 என்ன வேடம்? வைக்கோல் பொம்மை போலவா? 173 00:12:20,866 --> 00:12:22,826 நான்தான் நுப்பல்வோக்கன். 174 00:12:23,702 --> 00:12:25,411 இன்று நுப்பல்வோக்கன் இரவு. 175 00:12:25,412 --> 00:12:26,580 வுப்பல்நோக்கனா? 176 00:12:27,956 --> 00:12:29,415 நுப்பல்வோக்கன்! 177 00:12:29,416 --> 00:12:30,583 புப்பன்-டோக்கலா? 178 00:12:30,584 --> 00:12:33,086 - நுப்பல்வோக்கன். - என்ன சொல்கிறீர்கள் என்றே புரியவில்லை. 179 00:12:34,796 --> 00:12:36,881 அது ஒரு பழங்கதை. 180 00:12:36,882 --> 00:12:39,592 பார்த்தாயா? அதுதான் நுப்பல்வோக்கன். 181 00:12:39,593 --> 00:12:41,260 இது காட்டில் வாழும் ஒரு அரக்கன், 182 00:12:41,261 --> 00:12:44,388 நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மிக அழகான கன்னிப் பெண்ணை இழுத்துப் போக ஊருக்குள் வருகிறது. 183 00:12:44,389 --> 00:12:47,058 அது பிடித்திருக்கிறது. அப்படியென்றால் நான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பேன். 184 00:12:47,059 --> 00:12:48,143 அதைச் செய். 185 00:12:48,810 --> 00:12:51,188 - வேறு ஏதாவது வேண்டுமா? - ஓ, ஆம். 186 00:12:53,982 --> 00:12:55,817 எறும்புண்ணி என்றால் என்ன தெரியுமா? 187 00:12:56,610 --> 00:12:58,819 - என்ன? - அவை அழகானவை. 188 00:12:58,820 --> 00:13:03,074 ஆனால் சென்ற வருடம் மட்டும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட எறும்புண்ணிகள் வேட்டையாடப்பட்டிருக்கின்றன. 189 00:13:03,075 --> 00:13:04,242 தயவுசெய்து, படம் பிடிப்பதை நிறுத்து. 190 00:13:04,243 --> 00:13:06,202 ஐரோப்பாவின் மிகப்பெரிய வனவிலங்கு 191 00:13:06,203 --> 00:13:08,996 கடத்தல் கும்பலின் மூளையாக செயல்படுபவனைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். 192 00:13:08,997 --> 00:13:10,706 படம் பிடிப்பதை நிறுத்து என்று நல்லவிதமாக சொன்னேன். 193 00:13:10,707 --> 00:13:12,125 அவன் தன்னை கிங் என்று சொல்லிக்கொள்கிறான். 194 00:13:13,085 --> 00:13:15,253 - படம் பிடிப்பதை நிறுத்து என்றார். - ஹேய். 195 00:13:15,254 --> 00:13:19,257 என் பொருளை மீண்டும் தொட்டால், வோல்ட்மார்ட், உன் முகத்தில் பேப்பர் ஸ்ப்ரே அடித்துவிடுவேன். 196 00:13:19,258 --> 00:13:20,716 பார். 197 00:13:20,717 --> 00:13:23,302 நான் எந்த கிங்கையும் பற்றி கேள்விப்பட்டதில்லை. சரியா? 198 00:13:23,303 --> 00:13:24,846 எனவே குடித்துவிட்டு கிளம்பு. 199 00:13:24,847 --> 00:13:26,473 - கேள்விப்பட்டதில்லையா? - இல்லை. 200 00:13:26,974 --> 00:13:28,432 அது வினோதமாக இருக்கிறது. 201 00:13:28,433 --> 00:13:31,686 ஏனென்றால் அவன் இந்த இடத்தின் மூலம்தான் ஏகப்பட்ட பணப்பரிமாற்றம் செய்கிறான். 202 00:13:31,687 --> 00:13:33,730 பிளாக் சூக். கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 203 00:13:34,439 --> 00:13:36,900 அது டார்க் நெட்டில் செயல்படும் ஒரு சந்தை. 204 00:13:37,776 --> 00:13:39,652 இப்போது, பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு 205 00:13:39,653 --> 00:13:42,655 டார்க் வெப் நூறு சதவிகிதம் அநாமதேயமானது என்று நினைப்பதுதான். 206 00:13:42,656 --> 00:13:45,826 ஆனால் அது அவர்களை பலவீனமாக்குகிறது. 207 00:13:47,369 --> 00:13:48,579 இங்கேயே காத்திரு. 208 00:13:59,173 --> 00:14:00,256 என்ன? 209 00:14:00,257 --> 00:14:01,841 என்னை அப்படி பார்க்காதே. 210 00:14:01,842 --> 00:14:04,760 எனக்கு 1,25,000 ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். 211 00:14:04,761 --> 00:14:07,014 அவர்கள் எல்லோரும் உன்னை ட்ரோல் செய்ய வைத்துவிடாதே. 212 00:14:07,764 --> 00:14:09,141 பூ! 213 00:14:13,937 --> 00:14:15,730 கிங் உன்னிடம் பேச வேண்டுமாம். 214 00:14:15,731 --> 00:14:16,856 உன்னுடைய தகவல்களை எழுது. 215 00:14:16,857 --> 00:14:18,441 எக்ஸா, டிக்டாக்கா, இன்ஸ்டாவா? 216 00:14:18,442 --> 00:14:20,194 உன்னுடைய ஃபோன் எண்ணை. 217 00:14:21,236 --> 00:14:22,446 சரி, பூமர். 218 00:14:28,911 --> 00:14:30,787 இது மிகவும் கேவலமாக இருக்கிறது. 219 00:14:39,838 --> 00:14:41,548 ஆம், நான்தான். நீ இங்கே வர வேண்டும். இப்போதே. 220 00:14:46,595 --> 00:14:48,722 நாள் 96 221 00:15:02,152 --> 00:15:05,113 - ஹேய், எப்படி இருக்கிறாய்? - ஹேய்! உன்னைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. 222 00:15:21,129 --> 00:15:22,129 இல்லை, நன்றி. 223 00:15:22,130 --> 00:15:23,840 இந்த நிறுத்தத்தில் நிற்கும் ஒரே பேருந்து இதுதான். 224 00:15:23,841 --> 00:15:25,926 நான் அடுத்த பேருந்தில் வருகிறேன். நன்றி. 225 00:15:26,426 --> 00:15:28,511 அடுத்த பேருந்து வர ஒரு மணிநேரம் ஆகும். 226 00:15:28,512 --> 00:15:29,888 பரவாயில்லை, நன்றி. 227 00:15:35,644 --> 00:15:37,437 சரி, பை. வருகிறேன். 228 00:15:49,032 --> 00:15:50,075 ஆஹா. 229 00:15:56,915 --> 00:16:00,043 - முயற்சிக்கிறீர்களா? - அது நல்ல யோசனையாக தெரியவில்லை. 230 00:16:01,086 --> 00:16:03,088 இது என்ன செய்கிறது என்று பார்ப்போம். 231 00:16:14,725 --> 00:16:16,226 நீ எப்படி இருக்கிறாய்? 232 00:16:17,186 --> 00:16:18,812 நீ நலமா? 233 00:16:20,147 --> 00:16:22,065 சமீப காலமாக விஷயங்கள் வினோதமாக நடக்கின்றன. 234 00:16:23,901 --> 00:16:26,111 திடீரென்று அப்படி வாண்டா காணாமல் போனது. 235 00:16:27,237 --> 00:16:28,447 எந்த விளக்கமும் இல்லை. 236 00:16:29,489 --> 00:16:30,657 அது உன் மனதை பாதிக்கும். 237 00:16:33,493 --> 00:16:34,995 இந்த மாபெரும், 238 00:16:35,746 --> 00:16:40,375 குழப்பமான பிரபஞ்சத்தில் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை அது உணர்த்தும். 239 00:16:42,294 --> 00:16:45,923 ரயில் தண்டவாளத்தில் ஓடும் சின்ன எலிகள் போல. 240 00:16:46,632 --> 00:16:50,385 எந்த நேரத்திலும் அவை நசுக்கப்படலாம் என்பது தெரியாமல். 241 00:16:53,263 --> 00:16:55,307 ஒருமுறை உலகை அந்த கண்ணோட்டத்தில் பார்த்துவிட்டால், 242 00:16:56,183 --> 00:16:57,726 அதை உன்னால் மாற்றிக்கொள்ள முடியாது. 243 00:16:58,352 --> 00:16:59,811 இது எப்படி முடியும்? 244 00:17:02,147 --> 00:17:03,232 என்ன கேட்கிறாய்? 245 00:17:05,233 --> 00:17:07,861 நாம் அவளைக் கண்டுபிடிக்கவில்லை என்றால்? 246 00:17:14,785 --> 00:17:15,786 அவளைக் கண்டுபிடிப்போம். 247 00:17:18,288 --> 00:17:19,373 கண்டுபிடித்தாக வேண்டும். 248 00:17:20,207 --> 00:17:21,208 ம்? 249 00:17:23,042 --> 00:17:24,877 சரி, நான் பார்க்கிறேன். எங்கே இருக்கிறது? 250 00:17:26,463 --> 00:17:27,797 அது பரிச்சயமானது போல தெரிகிறது. 251 00:17:27,798 --> 00:17:30,633 அதுதான் இப்போது திறக்கப்பட்ட புதிய கபாப் கடை. 252 00:17:30,634 --> 00:17:32,469 நாம் பிறகு அங்கே போய் மதிய உணவு சாப்பிடுவோமா? 253 00:17:33,095 --> 00:17:34,512 அங்கே என் வகுப்பில் இருந்து ஒருவன் போயிருக்கிறான். 254 00:17:34,513 --> 00:17:35,721 நன்றாக இருந்ததாமாம்? 255 00:17:35,722 --> 00:17:38,183 பிறகு சினிமாவுக்குப் போன அவனுக்கு வயிற்றை கலக்கிவிட்டதாம். 256 00:17:39,059 --> 00:17:40,393 அப்போது பர்கர்கள்? 257 00:17:40,394 --> 00:17:41,478 சரி. 258 00:17:42,145 --> 00:17:46,190 எனவே இங்கிருந்து, வடக்கே குறுக்குவெட்டு சாலைக்குப் போ. 259 00:17:46,191 --> 00:17:50,821 பிரதான சாலையைப் பின்தொடர்ந்து ரவுண்டானாவுக்குப் போ. 260 00:17:51,530 --> 00:17:53,447 எல்லா அபார்ட்மெண்ட் கட்டடங்களையும் தாண்டி. 261 00:17:53,448 --> 00:17:55,449 போய்க்கொண்டே இரு. 262 00:17:55,450 --> 00:17:58,077 அந்த மூலையில் நிறுத்து. நிறுத்து. சரி, அதேதான். 263 00:17:58,078 --> 00:18:00,788 அதுதான் நம் தொடக்கப்புள்ளி. 264 00:18:00,789 --> 00:18:02,248 எல்லாம் தொடங்கிய இடம். 265 00:18:02,249 --> 00:18:06,044 வாண்டாவின் டி-ஷர்ட் கிடைத்த துணிப் பெட்டி. 266 00:18:07,254 --> 00:18:08,629 சரி. 267 00:18:08,630 --> 00:18:10,799 இப்போது அது எவ்வளவு உயரம் போகுமோ அவ்வளவு மேலே கொண்டுபோ. 268 00:18:11,633 --> 00:18:12,885 சரி. 269 00:18:16,138 --> 00:18:17,847 ஆஹா. சரி. 270 00:18:17,848 --> 00:18:18,931 நன்கொடை பெட்டி 271 00:18:18,932 --> 00:18:21,893 எனவே, இவற்றையெல்லாம் முடித்துவிட்டோம். இவற்றையும். 272 00:18:21,894 --> 00:18:25,606 மீதமிருப்பவை இவையும், காடுகளின் ஓரத்தில் இருக்கும் இந்த வீடுகளும்தான். 273 00:18:26,899 --> 00:18:30,359 ஓ. வாண்டா, செல்லம், நீ இங்கேதான் எங்கேயோ இருக்கிறாய் என்று எங்களுக்குத் தெரியும். 274 00:18:30,360 --> 00:18:31,820 எங்களுக்கு ஒரு சிக்னல் கொடு. 275 00:18:36,867 --> 00:18:38,619 வாண்டா! 276 00:18:41,330 --> 00:18:44,207 - வாண்டா! - வாண்டா! 277 00:18:44,208 --> 00:18:45,626 - நீ எங்கே இருக்கிறாய்? - வாண்டா! 278 00:18:54,134 --> 00:18:56,219 - இது நன்றாக இருக்கிறதுதானே? - அதாவது... 279 00:18:56,220 --> 00:18:57,845 பார். இது? 280 00:18:57,846 --> 00:19:00,349 - ஓ, தெரியவில்லை. - நான் நினைக்கிறேன் இது... 281 00:19:06,730 --> 00:19:08,856 - அது போலவா? - ஆம். அதை செய். 282 00:19:08,857 --> 00:19:10,608 - சர்க்கரை இல்லாமலா? - ஆம், கண்டிப்பாக. 283 00:19:10,609 --> 00:19:12,361 ஒப்புக்கொள்கிறேன், இது கொஞ்சம் விலை அதிகம்தான். 284 00:19:20,369 --> 00:19:22,454 - ஹாய், லூஸி. - ஹாய். 285 00:19:24,873 --> 00:19:26,708 அவள் என் வகுப்பில் இருப்பவள். 286 00:19:34,883 --> 00:19:36,051 ஆரம்பகால கர்ப்ப பரிசோதனை 287 00:19:44,685 --> 00:19:46,395 அவை எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைதான். 288 00:19:48,397 --> 00:19:49,897 நான் இதை எடுத்துக்கொள்வேன். 289 00:19:49,898 --> 00:19:51,275 அது இரட்டை பேக்கில் வரும். 290 00:19:52,818 --> 00:19:53,861 மிகவும் எளிதானது. 291 00:19:57,781 --> 00:19:59,116 நான் ஒரு தோழிக்காக வாங்குகிறேன். 292 00:20:01,952 --> 00:20:06,206 அப்படியென்றால் உன் தோழியிடம் அவள் வெட்கப்பட வேண்டியதில்லை என்று சொல். 293 00:20:08,083 --> 00:20:09,334 கிட்டத்தட்ட ஒவ்வொரு பெண்ணும் 294 00:20:10,878 --> 00:20:12,588 ஏதாவது ஒரு கட்டத்தில் இதைக் கடந்து வந்திருப்பாள். 295 00:20:13,881 --> 00:20:15,382 நாம் அதைப் பற்றி பேசுவது மட்டும் இல்லை. 296 00:20:21,054 --> 00:20:23,182 நானும் என் மகளிடம் அதைப் பற்றி பேசியதில்லை. 297 00:20:23,682 --> 00:20:25,976 நான் அதைப் பற்றி பேசவில்லை என்றால்... 298 00:20:27,144 --> 00:20:28,937 அது நடக்கவில்லை என்று நினைத்தேன். 299 00:20:29,855 --> 00:20:31,148 முட்டாள்தனம், சரிதானே? 300 00:20:33,692 --> 00:20:36,569 நான் என் அம்மாவிடம் இதைப் பற்றி பேச முயற்சிக்கும் போதெல்லாம், பிஸியாகவே இருக்கிறார். 301 00:20:36,570 --> 00:20:40,991 லூஸி, என்னை நம்பு, இந்த மாதிரியான உரையாடலுக்கு அவருக்கு எப்போதும் நேரம் இருக்கும். 302 00:20:41,742 --> 00:20:43,452 என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்? 303 00:20:46,163 --> 00:20:49,040 நீயும் என் பிள்ளைகள் படிக்கும் அதே பள்ளியில்தான் படிக்கிறாய். 304 00:20:49,041 --> 00:20:53,712 நான்... நான் ஓலே மற்றும் வாண்டாவின் அம்மா. 305 00:20:55,672 --> 00:20:57,089 நீங்கள் தெரிந்தவர் போல இருக்கும்போதே நினைத்தேன். 306 00:20:57,090 --> 00:20:58,300 சரி. 307 00:21:00,969 --> 00:21:03,305 வாண்டாவுக்கு நடந்த விஷயத்திற்கு வருந்துகிறேன். 308 00:21:03,931 --> 00:21:04,972 சரி. 309 00:21:04,973 --> 00:21:06,975 அருமையானவள். திரும்பி வருவாள் என நம்புகிறேன். 310 00:21:08,227 --> 00:21:09,353 நான் நினைக்கவில்லை... 311 00:21:11,146 --> 00:21:12,523 நீங்கள் உட்கார வேண்டுமா? 312 00:21:13,732 --> 00:21:15,817 நாம் ஒரு காபி அல்லது ஏதாவது குடிக்கலாம். 313 00:21:16,860 --> 00:21:19,112 நிச்சயமாக. காபி குடிப்போம். 314 00:21:20,364 --> 00:21:21,365 சரி. 315 00:22:08,036 --> 00:22:10,288 ஆஹா, நன்றாக இருக்கிறது, இல்லையா? 316 00:22:10,289 --> 00:22:14,458 ஸ்பைஸி ஸ்நாக்ஸை யாருக்கு பரிந்துரைக்கலாம் தெரியுமா? 317 00:22:14,459 --> 00:22:15,544 ருடிகர் மாமாவுக்கு. 318 00:22:16,211 --> 00:22:18,172 அவர் அதற்கு சந்தோஷப்படுவார் என்று நினைக்கிறேன். 319 00:22:23,343 --> 00:22:24,469 இன்று உன்னோடு சுற்றியது ஜாலியாக இருந்தது. 320 00:22:25,470 --> 00:22:28,515 நாம் இதை அடிக்கடி செய்ய வேண்டும். 321 00:22:29,808 --> 00:22:30,934 இது எளிது இல்லை. 322 00:22:31,727 --> 00:22:34,855 நீங்களும் அம்மாவும் எப்போதும் வாண்டா விஷயத்திலே பிஸியாக இருக்கிறீர்கள். 323 00:22:37,774 --> 00:22:40,568 ஆனால் உனக்காகவும் எங்களிடம் எப்போதும் நேரம் இருக்கிறது. 324 00:22:40,569 --> 00:22:41,778 அது உனக்குத் தெரியும்தானே? 325 00:22:48,368 --> 00:22:50,913 நீங்களும் அம்மாவும் விவாகரத்து பெறப் போகிறீர்களா? 326 00:22:51,872 --> 00:22:52,998 என்ன? இல்லை. 327 00:22:55,459 --> 00:22:56,752 ஏன் அப்படி நினைக்கிறாய்? 328 00:22:58,128 --> 00:22:59,587 அம்மா ஏதாவது சொன்னாளா? 329 00:22:59,588 --> 00:23:00,671 இல்லை. 330 00:23:00,672 --> 00:23:02,215 அவர் எப்போதும் கோபமாக இருக்கிறார், 331 00:23:02,216 --> 00:23:05,969 அவரை கோபப்படுத்தும் விஷயங்களையே நீங்களும் செய்கிறீர்கள். 332 00:23:09,598 --> 00:23:11,517 நான் நிஜமாகவே முயற்சி செய்கிறேன். 333 00:23:12,976 --> 00:23:13,977 எனக்குத் தெரியும். 334 00:23:16,563 --> 00:23:17,856 என்ன அது? 335 00:23:20,234 --> 00:23:21,567 அடச்சே. 336 00:23:21,568 --> 00:23:22,653 அவர் பக்கைக் கண்டுபிடித்துவிட்டார். 337 00:23:24,446 --> 00:23:25,948 அது நல்லதில்லை. 338 00:23:33,789 --> 00:23:36,874 போலீஸா? யாரோ என் வீட்டிற்குள் புகுந்திருக்கிறார்கள். 339 00:23:36,875 --> 00:23:37,959 அது கொஞ்சமும் நல்லதில்லை. 340 00:23:37,960 --> 00:23:40,378 - நாம் அம்மாவை அழைக்க வேண்டுமா? - கூடாது. நாமே சமாளிப்போம். 341 00:23:40,379 --> 00:23:41,713 வா. 342 00:23:42,422 --> 00:23:44,883 நாம் கேமராக்களை அங்கிருந்து எடுக்க வேண்டும். 343 00:23:56,562 --> 00:23:58,188 நீ மிகவும் இனிமையானவள். 344 00:23:59,982 --> 00:24:01,483 நான் ஏற்கனவே நன்றாக உணர்கிறேன். 345 00:24:02,818 --> 00:24:04,486 என்ன ஆனது என்று தெரியவில்லை. 346 00:24:05,070 --> 00:24:06,572 பரவாயில்லை. எனக்குப் புரிகிறது. 347 00:24:08,365 --> 00:24:09,658 அது கடினமாக இருக்க வேண்டும். 348 00:24:16,248 --> 00:24:18,750 வாண்டா எனக்கு மேல் வகுப்பு, ஆனால் எனக்கு அவளை நினைவிருக்கிறது. 349 00:24:19,793 --> 00:24:22,254 அவள் எப்பொழுதும் மிகவும் ஈர்க்கக்கூடியவளாகவும் தைரியமானவளாகவும் இருப்பாள். 350 00:24:23,922 --> 00:24:25,256 ஆம். 351 00:24:25,257 --> 00:24:26,633 அதுதான் அவள். 352 00:24:29,845 --> 00:24:32,556 அவள் காணாமல் போன அன்று காலையில் நான் ஒருவரை சந்தித்தேன். 353 00:24:33,515 --> 00:24:34,349 காடுகளில். 354 00:24:36,351 --> 00:24:37,394 தாமதமாக வந்திருக்கிறீர்கள். 355 00:24:38,187 --> 00:24:40,438 யாரும் என்னைப் பார்க்காதபடி மாற்றுப்பாதையில் வந்தேன். 356 00:24:40,439 --> 00:24:42,065 இன்று எல்லோரும் வெளியே இருக்கிறார்கள். 357 00:24:42,691 --> 00:24:44,275 யாரும் உன்னைப் பார்க்கவில்லைதானே? 358 00:24:44,276 --> 00:24:45,360 அமைதி. 359 00:24:46,028 --> 00:24:47,404 நீங்கள் மிகவும் பயப்படுகிறீர்கள். 360 00:24:49,156 --> 00:24:50,157 கேள், நான் என் வேலையை இழக்கலாம். 361 00:24:51,325 --> 00:24:52,450 உனக்கு 15 வயது. 362 00:24:52,451 --> 00:24:54,036 நான் சிறைக்குப் போகலாம். 363 00:24:55,078 --> 00:24:56,079 என்னை யாரும் பார்க்கவில்லை. 364 00:24:57,331 --> 00:24:58,624 சத்தியமாக. 365 00:25:05,339 --> 00:25:06,507 நான் வாண்டாவைப் பார்த்தேன். 366 00:25:13,096 --> 00:25:14,723 போலீஸிடம் சொன்னாயா? 367 00:25:15,474 --> 00:25:17,517 கடவுளே, ஏன் சொல்லவில்லை? அது முக்கியமானது. 368 00:25:17,518 --> 00:25:20,728 மன்னித்துவிடுங்கள். நிஜமாகவே வருந்துகிறேன். நான் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும். 369 00:25:20,729 --> 00:25:22,606 நான் ஏதாவது சொல்ல நினைத்தேன், ஆனால் நான்... 370 00:25:23,565 --> 00:25:25,316 கூடாது என்று அவர் என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டார். 371 00:25:25,317 --> 00:25:27,277 யார் உன்னிடம் சத்தியம் வாங்கியது? 372 00:25:34,201 --> 00:25:35,202 அவர் ஒரு ஆசிரியர். 373 00:25:37,621 --> 00:25:38,622 ஆஹா. 374 00:25:40,207 --> 00:25:42,209 சரி. எனக்குப் புரிகிறது. 375 00:25:44,086 --> 00:25:46,171 நான் நினைக்கிறேன் இதுவும் இதைப் பற்றியதுதானே? 376 00:25:47,089 --> 00:25:48,090 ஓ, லூஸி. 377 00:25:49,258 --> 00:25:52,052 - லூஸி... - தயவுசெய்து என் அம்மாவிடம் சொல்லாதீர்கள். 378 00:25:56,431 --> 00:25:57,432 சரி. 379 00:25:58,684 --> 00:26:00,060 நான் உன் அம்மாவிடம் சொல்லப் போவதில்லை. 380 00:26:04,398 --> 00:26:05,899 திரு. ஹெஸ்ஸெல், போலீஸ். 381 00:26:13,949 --> 00:26:15,450 என்னிடமிருந்து உங்களுக்கு என்ன வேண்டும்? 382 00:26:17,494 --> 00:26:18,870 உதவி! 383 00:26:18,871 --> 00:26:20,163 ஹேய்! 384 00:26:22,749 --> 00:26:25,001 ஏன் இப்படிப் போராடுகிறான்? 385 00:26:25,002 --> 00:26:26,711 அது நல்லதில்லை. அது நல்லதே இல்லை. 386 00:26:26,712 --> 00:26:28,755 - கேமராக்களை எடு. - என்னை விடு, நாயே! 387 00:26:29,756 --> 00:26:31,842 நீங்கள் பெரும் கோழைகள். 388 00:26:33,010 --> 00:26:36,054 நீங்கள் தவறான ஆளுடன் மோதுகிறீர்கள். நான் இராணுவத்தில் இருந்தவன். 389 00:26:40,934 --> 00:26:42,811 என்ன செய்தீர்கள்? 390 00:26:44,271 --> 00:26:45,897 ஏன் இவ்வளவு பலமாக அடித்தீர்கள்? 391 00:26:45,898 --> 00:26:47,524 அது தற்காப்புக்காக. 392 00:26:49,693 --> 00:26:52,487 - அவர் இறந்துவிட்டாரா? - இல்லை, அவன் இறக்கவில்லை. 393 00:26:59,786 --> 00:27:01,622 அவர் மூச்சு விடுவது போல தெரியவில்லை. 394 00:27:05,918 --> 00:27:07,252 ஓ, இல்லை. 395 00:27:07,961 --> 00:27:09,879 அவர் ஏன் என்னைப் பார்த்து அப்படி கத்த வேண்டும்? 396 00:27:09,880 --> 00:27:12,591 - கடவுளே. நாம் என்ன செய்தோம்? - இப்போது? 397 00:27:13,342 --> 00:27:15,511 ...நான் சமூக ஊடகங்களில் வாண்டாவின் விசாரணையைப் பின்தொடர்கிறேன். 398 00:27:16,428 --> 00:27:17,971 அதைப் பற்றி ஏராளமானவர்கள் போஸ்ட் செய்கிறார்கள். 399 00:27:19,473 --> 00:27:20,516 நிஜமாகவா? 400 00:27:21,558 --> 00:27:23,060 டார்க் ஹவுஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 401 00:27:25,145 --> 00:27:26,270 டார்க் ஹவுஸா? 402 00:27:26,271 --> 00:27:28,439 இது ஃபார்ஸ்ட்ஸ்ராஸில் இருக்கும் ஒரு வீடு. 403 00:27:28,440 --> 00:27:30,275 இடதுபுறத்தில் இருக்கும் கடைசி ஒன்று. 404 00:27:32,903 --> 00:27:35,072 யாரும் உள்ளே போகவும் மாட்டார்கள், வெளியே வரவும் மாட்டார்கள். 405 00:27:36,198 --> 00:27:39,409 அது அழுகும் இறைச்சி போல மோசமான சாம்பல் நிறத்தில் இருக்கும். 406 00:27:40,869 --> 00:27:44,081 "அத்துமீறி நுழைய வேண்டாம்," "நாய் ஜாக்கிரதை" என்ற பலகைகள் எல்லாம் இருக்கும். 407 00:27:46,708 --> 00:27:48,126 ஆனால் நாய் குரைப்பதை இதுவரை யாரும் கேட்டதில்லை. 408 00:27:53,799 --> 00:27:57,469 அங்கே வசிக்கும் மக்கள் இரவில் காட்டில் சுற்றித் திரிவதாக சிலர் சொல்கிறார்கள். 409 00:27:58,846 --> 00:28:02,182 பௌர்ணமி அன்று இருட்டில் மட்டுமே வெளியே வருவதாக. 410 00:28:04,268 --> 00:28:06,937 சாப்பிடுவதற்கு அடுத்த பலியைத் தேடுவதற்காக. 411 00:28:12,109 --> 00:28:14,236 - பொறு. - சரி, பல கதைகளில் அதுவும் ஒன்று. 412 00:28:15,320 --> 00:28:18,156 வாண்டா தன் விருப்பப்படி வீட்டைவிட்டு ஓடிவிட்டதாக மற்றவர்கள் நினைக்கிறார்கள். 413 00:28:23,912 --> 00:28:24,955 என்ன தெரியுமா, 414 00:28:25,956 --> 00:28:28,500 நீ விரும்பினால், இங்கேயே அந்த சோதனை செய்து பார்க்கலாம்தானே? 415 00:28:29,501 --> 00:28:31,836 எந்த பிரச்சினையும் இருக்காது என்று உறுதியாக நம்புகிறேன். 416 00:28:31,837 --> 00:28:36,008 இல்லையென்றால், நீ ஒன்றாக என்ன செய்ய விரும்புகிறாய் என்பதை கண்டுபிடிக்கலாம். 417 00:28:37,885 --> 00:28:38,760 சரி. 418 00:28:49,521 --> 00:28:51,690 நாள் 96 419 00:28:53,859 --> 00:28:55,067 நாள் 0 420 00:28:55,068 --> 00:28:57,987 கிங். ஆஹா, நான் எதிர்பார்த்தது போல நீ இல்லை. 421 00:28:57,988 --> 00:29:01,324 பார், நீ ஒரு பிஸியான கடத்தல்காரன் என்பது எனக்குத் தெரியும், 422 00:29:01,325 --> 00:29:03,702 எனவே நேராக விஷயத்திற்கு வருகிறேன். 423 00:29:04,328 --> 00:29:07,371 எனக்குத் தெரிந்ததை போலீஸிடம் சொல்கிறேன், 424 00:29:07,372 --> 00:29:10,626 அல்லது நீ உன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு எனக்கு ஒரு பிரத்தியேக நேர்காணலை கொடு. 425 00:29:14,254 --> 00:29:16,130 நான் ஏற்கனவே ஒரு வீடியோ தயாரித்திருக்கிறேன், 426 00:29:16,131 --> 00:29:18,716 அது போஸ்ட் செய்யப்பட தயாராக 427 00:29:18,717 --> 00:29:20,260 என் டிராஃப்டில் இருக்கிறது. 428 00:29:20,928 --> 00:29:22,596 கேள்வி என்னவென்றால், 429 00:29:23,263 --> 00:29:25,349 நான் கதையின் போக்கைக் கட்டுப்படுத்த வேண்டுமா? 430 00:29:27,976 --> 00:29:28,977 என்ன? 431 00:29:30,020 --> 00:29:31,437 நிஜமாகவா? 432 00:29:31,438 --> 00:29:33,357 சரி, உன் லொகேஷனை அனுப்பு, நான் அங்கே இருப்பேன். 433 00:29:52,626 --> 00:29:55,045 {\an8}காடு டி-ஷர்ட் 434 00:30:17,276 --> 00:30:18,277 இங்கே வா. 435 00:30:19,444 --> 00:30:20,445 ஹேய். 436 00:30:27,035 --> 00:30:28,745 லூஸி, கேள். 437 00:30:31,415 --> 00:30:33,834 நீயும் அந்த ஆளும், அது நல்ல யோசனையாக எனக்குத் தெரியவில்லை. 438 00:30:37,421 --> 00:30:38,422 ஹேய். 439 00:30:38,922 --> 00:30:41,550 உன் வயதிலேயே மிகவும் அருமையான பையன்கள் இருக்கிறார்கள். 440 00:30:42,885 --> 00:30:44,386 என் மகன் ஓலேவைப் போல. 441 00:30:47,764 --> 00:30:50,309 நான் ஓலே போன்றவள் என்று நினைக்கவில்லை. 442 00:31:04,281 --> 00:31:07,491 கர்ப்பம் இல்லை 443 00:31:07,492 --> 00:31:08,410 ஸ்பைஸி ஸ்நாக்ஸ் 444 00:31:19,922 --> 00:31:21,882 என் கண்காணிப்பில் நடக்காது, தம்பி. 445 00:31:42,361 --> 00:31:43,320 அடடா. 446 00:31:45,614 --> 00:31:48,824 இறந்த இன்ஃப்ளூயன்ஸரையும், காணாமல் போன பெண்ணையும் பற்றி விசாரிக்கிறோம். 447 00:31:48,825 --> 00:31:51,787 நிச்சயமாக வேறு யாராவது அந்த அழைப்பை எடுத்திருப்பார்களா? 448 00:31:55,832 --> 00:31:57,459 நாம் செய்ய இன்னும் முக்கியமான... 449 00:31:58,961 --> 00:32:00,128 விஷயம் இருக்கிறது. 450 00:32:08,720 --> 00:32:10,973 திரு. ஹெஸ்ஸெல். நீங்கள் அழைத்தீர்களா? 451 00:32:12,599 --> 00:32:14,725 நான் காவல் துறையைச் சேர்ந்த ரவுஷ். தயவுசெய்து கதவைத் திறங்கள். 452 00:32:14,726 --> 00:32:18,271 - அமைதி. நாம் என்ன செய்வது? - திரு. ஹெஸ்ஸெல்? இருக்கிறீர்களா? 453 00:32:18,272 --> 00:32:20,356 தெரியவில்லை... பின் கதவை திறந்து பார். 454 00:32:20,357 --> 00:32:21,733 நல்ல யோசனை. 455 00:32:23,443 --> 00:32:25,028 திரு. ஹெஸ்ஸெல்? 456 00:32:32,578 --> 00:32:33,912 வேன் எங்கே? 457 00:32:34,454 --> 00:32:35,831 அங்கேதான் இருந்தது. 458 00:32:36,331 --> 00:32:38,083 சரி, திரு. ஹெஸ்ஸெல். நாங்கள் உள்ளே வருகிறோம். 459 00:32:39,251 --> 00:32:41,003 நாம் என்ன செய்வது? தப்பிக்க வேண்டும். சீக்கிரம். 460 00:32:48,135 --> 00:32:49,386 மெதுவாக, மிகவும் மெதுவாக. 461 00:32:57,811 --> 00:32:59,563 வா. வா! 462 00:33:10,949 --> 00:33:12,993 ஹேய். ஹேய்! 463 00:33:13,744 --> 00:33:14,745 ஹேய்! 464 00:33:16,663 --> 00:33:17,664 ச்சே. 465 00:33:37,684 --> 00:33:39,061 நன்றி... 466 00:33:41,146 --> 00:33:42,146 உங்களுக்கே தெரியும். 467 00:33:42,147 --> 00:33:43,440 பரவாயில்லை. 468 00:33:44,024 --> 00:33:46,443 ஒரே ஒரு விஷயம். 469 00:33:47,694 --> 00:33:50,863 நீ வாண்டாவைப் பார்த்த அன்று காலை, 470 00:33:50,864 --> 00:33:53,367 அவள் எந்த பக்கம் போய்க்கொண்டிருந்தாள்? 471 00:33:57,412 --> 00:33:58,956 அவள் இந்த பக்கமாக போய்க்கொண்டிருந்தாள். 472 00:33:59,456 --> 00:34:00,457 ஆனால் அவள் தனியாக இருந்தாள். 473 00:34:01,124 --> 00:34:02,251 ஓ, தெரிந்தது நல்லது. 474 00:34:03,877 --> 00:34:05,294 நன்றி. 475 00:34:05,295 --> 00:34:06,630 லூஸி? 476 00:34:08,172 --> 00:34:09,882 - நீ இங்கே என்ன செய்கிறாய்? - ஹலோ. 477 00:34:11,510 --> 00:34:12,968 நாம் சந்தித்திருக்கிறோம். 478 00:34:12,969 --> 00:34:14,595 நான் கார்லட்டா கிளாட். 479 00:34:14,596 --> 00:34:16,098 ஓலேவின் அம்மா? 480 00:34:16,764 --> 00:34:19,268 - வாண்டாவின் அம்மாவும் கூட. - கடவுளே, நிச்சயமாக. 481 00:34:19,851 --> 00:34:22,102 உங்களை பள்ளி நிகழ்வுகளில் பார்த்திருக்கிறேன். 482 00:34:22,103 --> 00:34:23,688 நீங்கள்தான் உருளைக்கிழங்கு சாலட் செய்வதில் திறமையானவர். 483 00:34:24,481 --> 00:34:25,607 ஆம். 484 00:34:29,777 --> 00:34:31,612 ஆம், லூஸி... 485 00:34:32,155 --> 00:34:33,573 அவள் என்னைப் பார்த்தாள், 486 00:34:33,574 --> 00:34:36,576 தன்னுடைய அனுதாபத்தை வெளிப்படுத்தினாள். 487 00:34:36,577 --> 00:34:39,495 என் மகள் இவ்வளவு பரிவு காட்டுவாள் என்று எனக்குத் தெரியாது. 488 00:34:39,496 --> 00:34:41,373 அதை என்னிடமிருந்து மறைக்க முயற்சிக்கிறாள். 489 00:34:44,418 --> 00:34:46,085 நான் கொஞ்சம் ஐஸ்கிரீம் வாங்க விரும்பினேன். 490 00:34:47,212 --> 00:34:49,130 பிறகு சேர்ந்து படம் பார்க்கலாமா? 491 00:34:49,797 --> 00:34:51,131 அருமையான யோசனை. 492 00:34:51,132 --> 00:34:53,968 நீ ஏன் உள்ளே சென்று வாங்கிவரக் கூடாது? 493 00:34:53,969 --> 00:34:56,096 நான் உள்ளே வருகிறேன், பிறகு ஒன்றாக வீட்டிற்குப் போவோம். 494 00:35:02,603 --> 00:35:05,271 நீங்கள் அனுபவிப்பதை என்னால் 495 00:35:05,272 --> 00:35:09,193 கற்பனை கூட செய்ய முடியாது என்பதை சொல்ல நினைத்தேன். 496 00:35:10,068 --> 00:35:12,069 நீங்கள் எப்போதாவது ஒரு காபி சாப்பிடவோ, 497 00:35:12,070 --> 00:35:15,072 அல்லது யாரிடமாவது பேசவோ நினைத்தால், 498 00:35:15,073 --> 00:35:17,284 நான் பக்கத்து தெருவில்தான் இருக்கிறேன். 499 00:35:19,536 --> 00:35:22,122 - நான் அதைச் செய்வேன். மிக்க நன்றி. - அப்படியா? அருமை. 500 00:35:22,831 --> 00:35:26,960 உங்கள் எண்ணை உள்ளிடுங்கள், நான் உங்களுக்கு மெஸ்சேஜ் அனுப்புகிறேன். 501 00:35:28,337 --> 00:35:29,338 அப்படியா? 502 00:35:34,134 --> 00:35:35,218 கடவுளே. 503 00:35:35,219 --> 00:35:37,721 - சிலர் முட்டாள்களைப் போல ஓட்டுகிறார்கள். - ஆம். 504 00:35:47,606 --> 00:35:49,065 அவர்கள் நம்மைப் பின்தொடர்கிறார்களா? 505 00:35:49,066 --> 00:35:50,275 நான் அப்படி நினைக்கவில்லை. 506 00:35:58,492 --> 00:35:59,743 நான் எடுக்கட்டுமா? 507 00:36:04,039 --> 00:36:07,583 அம்மாவுக்கு இதைப் பற்றி ஒருபோதும் தெரியக்கூடாது, சரியா? 508 00:36:07,584 --> 00:36:08,918 சரியாக எதைப் பற்றி? 509 00:36:08,919 --> 00:36:12,213 திரு. ஹெஸ்ஸெலின் வீட்டிற்குள் புகுந்து, முகத்தில் குத்தியதையா? 510 00:36:12,214 --> 00:36:15,759 அல்லது வேனைத் திருடிக்கொண்டு போலீஸிடம் இருந்து ஓடியதையா? 511 00:36:19,721 --> 00:36:21,181 அடக் கடவுளே. 512 00:36:23,475 --> 00:36:25,351 என்னை பைத்தியம் என்று நினைத்தீர்களா? நிச்சயமாக சொல்ல மாட்டேன். 513 00:36:25,352 --> 00:36:26,602 அவள் என்னைக் கொன்றுவிடுவாள். 514 00:36:26,603 --> 00:36:28,563 - ஆம், உங்களைக் கொன்றுவிடுவார். - நிஜமாகவே என்னைக் கொன்றுவிடுவாள். 515 00:36:28,564 --> 00:36:30,356 பிறகு அவர் உங்களை மீண்டும் கொல்வதற்காக உங்களை மருத்துவமனைக்கு 516 00:36:30,357 --> 00:36:32,316 - தூக்கிச்சென்று பிழைக்க வைப்பார். - ஆம். 517 00:36:32,317 --> 00:36:34,402 பிறகு எல்லோரும் லத்தீன் மொழி பேசும், ஹாரி பாட்டர் போல 518 00:36:34,403 --> 00:36:37,531 உடையணியும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் உறைவிடப் பள்ளியில் அவர் உங்களை சேர்த்துவிடுவார். 519 00:36:47,291 --> 00:36:49,418 இங்கே இடதுபுறம் திரும்புகிறீர்களா? 520 00:36:57,467 --> 00:36:59,219 இங்கே நிறுத்தலாம். 521 00:37:16,320 --> 00:37:17,321 {\an8}நாய்கள் ஜாக்கிரதை! 522 00:37:24,328 --> 00:37:26,580 சரி, ஹேய். அருமை, நன்றி. நன்றி. 523 00:37:38,008 --> 00:37:40,676 வேனை காட்டில் விட்டுவிடுவோம், சரியா? 524 00:37:40,677 --> 00:37:41,762 சரி. 525 00:37:47,518 --> 00:37:48,519 அது என்ன? 526 00:37:51,188 --> 00:37:52,897 டெலிவரி குறிப்பு பெறுநர்: ருடிகர் ஷேஃபர் 527 00:37:52,898 --> 00:37:54,315 ருடிகரா? 528 00:37:54,316 --> 00:37:56,193 என்ன? 529 00:37:59,279 --> 00:38:00,322 அப்பா! 530 00:38:05,869 --> 00:38:07,287 இல்லை, அப்பா, இல்லை! 531 00:38:26,181 --> 00:38:27,181 கார்லட்டாவிடமிருந்து 3 மிஸ்டு கால்கள் 532 00:38:27,182 --> 00:38:28,933 இரகசிய கண்காணிப்பு கேமராவா? 533 00:38:28,934 --> 00:38:30,810 ஆம், அதேதான். 534 00:38:30,811 --> 00:38:32,562 ஹாலில் இருக்கும் விளக்கில் ஒளித்துவைக்கப்பட்டிருந்தது. 535 00:38:32,563 --> 00:38:34,397 - பிறகு இரண்டு ஆட்கள் வந்தார்கள். - பை. 536 00:38:34,398 --> 00:38:36,649 ஒரு குள்ளமான, குண்டானவன், ஒரு ஒல்லியானவன். 537 00:38:36,650 --> 00:38:38,776 தலையில் ஃபாஸ்ட் ஃபுட் பையை மாட்டியிருந்தார்களா? 538 00:38:38,777 --> 00:38:39,862 ஆம். 539 00:38:40,696 --> 00:38:44,408 உள்ளே புகுந்து என்னைத் தாக்கினார்கள். என்னை மயக்கமடைய செய்தார்கள். 540 00:38:44,992 --> 00:38:46,660 நான் சுயநினைவுக்கு வந்தபோது, 541 00:38:47,411 --> 00:38:50,413 கேமரா, ஆட்கள் இருவரும் காணாமல் போய்விட்டார்கள். 542 00:38:50,414 --> 00:38:51,790 சரி. 543 00:38:53,458 --> 00:38:55,878 அதிசயமாக மறைந்துவிட்டார்கள், சரிதானே? 544 00:38:57,504 --> 00:38:58,964 இப்போது எல்லாம் புரிகிறது. 545 00:39:00,048 --> 00:39:02,467 அப்படித்தான் அவர்களுக்கு மார்கரெட் பற்றித் தெரிந்திருக்கிறது. 546 00:39:04,887 --> 00:39:07,388 அனிடா என்னைவிட்டு போனது அவர்களுடைய தவறுதான். 547 00:39:07,389 --> 00:39:10,559 திரு. ஹெஸ்ஸெல், ஒருநாள் நாம் ஏற்கனவே சந்தித்தது நினைவிருக்கிறதா? 548 00:39:13,103 --> 00:39:14,770 கபிடானில்? 549 00:39:14,771 --> 00:39:15,856 இல்லை. 550 00:39:16,857 --> 00:39:18,524 நீங்கள் அதிக நேரம் அங்கே இருந்தீர்களா? 551 00:39:18,525 --> 00:39:20,067 தொடர்ந்து குடித்துக்கொண்டே இருந்தீர்களா? 552 00:39:20,068 --> 00:39:22,154 என் துக்கத்தைப் போக்க கொஞ்சமாக. 553 00:39:24,281 --> 00:39:25,698 அனிடா போய்விட்டாள். 554 00:39:25,699 --> 00:39:27,117 C. கிளாட் 555 00:39:28,744 --> 00:39:29,995 அவள் போய்விட்டாள். 556 00:39:30,746 --> 00:39:32,122 - அவள் போய்விட்டாள். - ரவுஷ் பேசுகிறேன். 557 00:39:32,789 --> 00:39:35,791 போய்விட்டாள். அனிடா போய்விட்டாள். 558 00:39:35,792 --> 00:39:37,793 செல்வி. ரவுஷ், கார்லட்டா கிளாட் பேசுகிறேன். 559 00:39:37,794 --> 00:39:40,839 ஒருவர் வாண்டாவைப் பார்த்திருக்கிறார்கள் என்பதை சொல்ல நினைத்தேன். 560 00:39:41,507 --> 00:39:46,219 அவள் காணாமல் போன அன்று, காட்டுக்குள் போவதை. 561 00:39:46,220 --> 00:39:47,470 என்ன? உங்களுக்கு எப்படி தெரியும்? 562 00:39:47,471 --> 00:39:49,972 ஒரு சாட்சியிடம் பேசினேன். 563 00:39:49,973 --> 00:39:51,474 எப்படிப்பட்ட சாட்சி? 564 00:39:51,475 --> 00:39:53,601 - மன்னியுங்கள், என்னால் சொல்ல முடியாது. - என்ன? 565 00:39:53,602 --> 00:39:56,604 அது முக்கியமில்லை. இதுவரை உங்களிடம் இல்லாத புதிய தகவல் இது. 566 00:39:56,605 --> 00:39:58,731 திருமதி. கிளாட், தகவல் நம்பத்தகுந்ததாக இருந்தால், 567 00:39:58,732 --> 00:40:00,984 அந்த சாட்சி வந்து வாக்குமூலம் கொடுத்தாக வேண்டும். 568 00:40:01,735 --> 00:40:04,403 ஏற்கனவே டார்க் ஹவுஸை பார்த்திருக்கிறீர்களா? 569 00:40:04,404 --> 00:40:06,822 - என்ன? - ஃபாஸ்ட்பிளாட்ஸ் பக்கத்தில் இருக்கும் அந்த பெரிய, 570 00:40:06,823 --> 00:40:08,200 பயமுறுத்தும் வீட்டையா? 571 00:40:08,700 --> 00:40:11,410 இணையத்தில் அதைப் பற்றி பல கதைகள் சுற்றுகின்றன. 572 00:40:11,411 --> 00:40:15,122 நான் ஒப்புக்கொள்கிறேன், அவற்றில் சில ரொம்ப அதீதமானவைதான்... 573 00:40:15,123 --> 00:40:18,709 சரி, அப்படியே நிறுத்துங்கள். ஏனென்றால் எனக்கு நிஜ போலீஸ் வேலை இருக்கிறது. 574 00:40:18,710 --> 00:40:21,045 ஆனால் இணையத்தில் வாண்டாவை தேடாதீர்கள் என்று நான் சொல்வேன். 575 00:40:21,046 --> 00:40:22,588 அங்கே நல்லது எதுவும் கிடைக்காது. 576 00:40:22,589 --> 00:40:23,715 குட்பை. 577 00:40:24,591 --> 00:40:26,218 - முட்டாள். - முட்டாள். 578 00:40:30,889 --> 00:40:32,474 ஃபாஸ்ட்பிளாட்ஸ் 579 00:41:01,795 --> 00:41:04,422 ஓலே! ஓலே, தயவுசெய்து! 580 00:41:04,423 --> 00:41:05,841 ஓலே! 581 00:41:06,341 --> 00:41:08,050 எழுந்திரு! நீ நலமா? 582 00:41:08,051 --> 00:41:10,429 ஓலே. ஹேய். ஓலே! 583 00:41:11,013 --> 00:41:12,306 நீ நலமா? 584 00:41:15,017 --> 00:41:17,477 நன்றாக இருக்கிறாயா? 585 00:41:18,395 --> 00:41:20,772 - ஆம், நான் நன்றாக இருக்கிறேன். - கடவுளுக்கு நன்றி. 586 00:41:23,567 --> 00:41:25,402 மன்னித்துவிடு, என்ன நடந்தது என்று தெரியவில்லை. 587 00:41:25,903 --> 00:41:27,695 - நீ நலமா? - பரவாயில்லை அப்பா. 588 00:41:27,696 --> 00:41:29,156 - நான் நன்றாக இருக்கிறேன். - அடக் கடவுளே. 589 00:41:30,532 --> 00:41:33,160 நாம் இங்கிருந்து போக வேண்டும். சரியா? 590 00:41:33,660 --> 00:41:34,661 சரி. 591 00:41:41,502 --> 00:41:42,711 அடச்சே. 592 00:41:43,504 --> 00:41:44,838 ச்சே. 593 00:41:45,380 --> 00:41:46,715 அடக் கடவுளே. 594 00:41:49,384 --> 00:41:50,636 கடவுளே. 595 00:42:02,356 --> 00:42:03,731 அப்பா? 596 00:42:03,732 --> 00:42:05,483 ஏன் ஒரு கூண்டு இருக்கிறது? 597 00:42:05,484 --> 00:42:08,237 எனக்கு எதுவும் தெரியாது, நான் தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. 598 00:42:09,029 --> 00:42:11,281 அதை என்னிடம் கொடு. இங்கிருந்து போகலாம். 599 00:42:12,449 --> 00:42:13,575 ஓலே, வா! 600 00:42:15,452 --> 00:42:17,578 - நீ நலமா? - ஆம், நன்றாக இருக்கிறேன். 601 00:42:17,579 --> 00:42:18,914 எங்காவது வலிக்கிறதா? 602 00:42:19,498 --> 00:42:20,957 இல்லை. 603 00:42:20,958 --> 00:42:22,042 ச்சே. 604 00:42:23,043 --> 00:42:26,964 {\an8}நாள் 0 605 00:42:48,026 --> 00:42:50,320 நீ தொலைந்துவிட்டாயா? 606 00:42:54,408 --> 00:42:57,202 - நீ பத்திரிகையாளர்தானே? - இன்வெஸ்டிகேட்டிவ் இன்ஃப்ளூயன்ஸர். 607 00:42:58,745 --> 00:43:01,665 பத்திரிக்கையாளரைப் போலத்தான், ஆனால் அதிக லைக்குகளுடன். 608 00:43:04,251 --> 00:43:05,668 நீ கிங்கிடம் பேச வேண்டும்தானே? 609 00:43:05,669 --> 00:43:06,879 ஆம். 610 00:43:08,297 --> 00:43:09,298 அப்போது என்னுடன் வா. 611 00:43:16,471 --> 00:43:17,598 வா. 612 00:43:19,683 --> 00:43:20,684 நான் கடித்துவிட மாட்டேன். 613 00:43:34,990 --> 00:43:35,991 இல்லை! 614 00:44:57,406 --> 00:44:59,408 வசனத் தமிழாக்கம் அருண்குமார்