1 00:00:12,763 --> 00:00:17,392 நாள் 0 2 00:00:26,568 --> 00:00:28,362 அன்பே, இதைப் பிடிக்கிறீர்களா? 3 00:00:29,488 --> 00:00:30,489 சரி. 4 00:00:35,536 --> 00:00:36,954 ஃபெண்டனில் 5 00:00:38,121 --> 00:00:39,331 என்ன இது? 6 00:00:39,331 --> 00:00:41,875 மயக்க மருந்து, ஒருவேளை அவள் நம்மிடம் பிரச்சினை செய்தால். 7 00:00:43,502 --> 00:00:45,254 இது நமக்கு நிஜமாகவே தேவையா? 8 00:00:45,254 --> 00:00:48,090 அது அவள் நடந்துகொள்வதைப் பொறுத்து, இல்லையா? 9 00:00:50,884 --> 00:00:53,762 - அடடா. மன்னித்துவிடுங்கள். - பார்த்து வர முடியாதா? 10 00:00:53,762 --> 00:00:55,597 இல்லை. 11 00:00:55,597 --> 00:00:58,642 - இதோ. - நிறுத்து! நிறுத்து. 12 00:01:08,694 --> 00:01:12,114 2004-ல், பத்திரிக்கையாளர் க்வென் ஐஃபில் அறிமுகப்படுத்திய வார்த்தைதான் 13 00:01:12,114 --> 00:01:14,533 "மிஸ்ஸிங் வைட் வுமன் சிண்ட்ரோம்." 14 00:01:16,910 --> 00:01:19,872 அது ஒரு அழகான வெள்ளையினப் பெண் காணாமல் போனால் 15 00:01:19,872 --> 00:01:21,665 மொத்த உலகத்துக்கும் பித்துபிடிப்பது பற்றியது. 16 00:01:22,165 --> 00:01:24,543 {\an8}நான் அழகாக இருக்கிறேன் என்று சொல்லவில்லை. 17 00:01:25,669 --> 00:01:28,922 {\an8}பிறகு உலகம் உண்மையில் ஒருபோதும் கண்டுகொள்ளாத மனிதர்கள் இருக்கிறார்கள். 18 00:01:32,759 --> 00:01:34,094 பார்த்துப் போ. 19 00:01:39,558 --> 00:01:40,559 மேதாவிகள். 20 00:02:28,440 --> 00:02:29,942 அற்புதமான கார்தானே, ம்? 21 00:02:33,070 --> 00:02:35,906 - நீ இந்தப் பகுதியில் வசிக்கிறாயா? - ஆம். 22 00:02:36,573 --> 00:02:38,367 இங்கே எப்போதும் வினோதமாக இருக்குமா? 23 00:02:39,535 --> 00:02:41,787 நான் கற்காலத்தில் இருப்பதை போல பசும்பாலைக் குடிக்க கட்டாயப்படுத்தாமல் 24 00:02:42,454 --> 00:02:45,707 பால் அதிகமாக இருக்கும் காபி இங்கே எங்கேயாவது கிடைக்குமா? 25 00:02:47,000 --> 00:02:48,669 பிரதான வீதியில் இருக்கும் பெல்லாஸில். 26 00:02:48,669 --> 00:02:49,920 நன்றி, அன்பே. 27 00:02:50,504 --> 00:02:51,505 பரவாயில்லை. 28 00:02:57,761 --> 00:03:01,640 நீ இப்போது பேசிக்கொண்டிருந்த அந்த பெண் யார்? 29 00:03:01,640 --> 00:03:03,100 எனக்குத் தெரியாது. 30 00:03:05,102 --> 00:03:07,312 - சீக்கிரம் வந்துவிட்டாய். - ஆம். 31 00:03:07,938 --> 00:03:10,399 - போட்டி பற்றி உற்சாகமாக இருக்கிறாயா? - ஆம். 32 00:03:10,399 --> 00:03:13,318 அப்படியா? குடிக்க ஏதாவது வேண்டுமா? 33 00:03:13,318 --> 00:03:15,195 சோடா குடிக்கிறேன். 34 00:03:15,195 --> 00:03:17,990 உன் அப்பா கார்லுடன் உள்ளே இருக்கிறார். இதை அவர் பில்லில் சேர்க்கவா? 35 00:03:17,990 --> 00:03:19,241 சரி. 36 00:03:19,241 --> 00:03:21,910 - நீ வந்திருப்பதை அவரிடம் சொல்ல வேண்டுமா? - தேவையில்லை. 37 00:03:21,910 --> 00:03:22,828 சரி. 38 00:03:24,079 --> 00:03:25,914 விஷயங்கள் உனக்கு எப்படி போகின்றன? 39 00:03:25,914 --> 00:03:27,332 உனக்கு காதலி இருக்கிறாளா? 40 00:03:27,332 --> 00:03:28,750 யாரையாவது பார்த்தாயா? 41 00:03:29,626 --> 00:03:30,627 என்ன? 42 00:03:31,128 --> 00:03:32,754 பாருங்கள், பெண்களே! 43 00:03:34,423 --> 00:03:35,632 சோடா வருகிறது. 44 00:03:35,632 --> 00:03:39,219 எஸ்வி சந்தர்ஷெய்ம், எஸ்வி சந்தர்ஷெய்ம்! 45 00:03:48,228 --> 00:03:49,396 நன்றி. 46 00:03:49,396 --> 00:03:55,360 அப்பாவுடன் எல்லா கால்பந்து போட்டிக்கும் ஏன் ஓலே போக சம்மதித்தான் என்பது இப்போது புரிகிறது. 47 00:03:57,196 --> 00:04:00,616 பிரச்சினை என்னவென்றால், உங்கள் வாழ்க்கையை நீங்கள் கவனிக்கப்படாமல் வாழ்ந்து, 48 00:04:01,241 --> 00:04:05,871 கடைசியாக நீங்கள் கவனிக்கப்பட விரும்பும்போது, அது அவ்வளவு எளிதானது இல்லை. 49 00:04:07,998 --> 00:04:09,875 நாள் 0 50 00:04:12,920 --> 00:04:15,172 நாள் 70 51 00:04:26,975 --> 00:04:29,102 எனவே, கேம்ஸ் வேர்ல்டிற்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே உன்னிடம் இருக்கின்றனவா? 52 00:04:29,102 --> 00:04:30,771 சகோ, என்னிடம் பணமில்லை. 53 00:04:31,605 --> 00:04:32,606 நண்பா, பிரச்சினையை சமாளிக்க கற்றுக்கொள். 54 00:04:32,606 --> 00:04:34,858 ஷேடோஸ்ட்ரைக்தான் டோர்னமென்ட்டை நடத்துகிறது. அது அற்புதமாக இருக்கப்போகிறது. 55 00:04:34,858 --> 00:04:36,360 இப்போது என்னிடம் பணம் இல்லை. 56 00:04:38,111 --> 00:04:40,030 - அன்பே, நீ தயாரா? - ஆம். 57 00:04:40,739 --> 00:04:42,366 - நாளை ஆன்லைனில் இருப்பாயா? - இருக்கலாம். 58 00:04:42,366 --> 00:04:43,951 - 5 மணிக்கு ஏபெக்ஸ் விளையாடலாமா? - சரி. 59 00:04:43,951 --> 00:04:45,702 - மெஸ்சேஜ் அனுப்புகிறோம், சரியா? - சரி, கண்டிப்பாக. 60 00:04:48,372 --> 00:04:50,165 - என்ன விஷயம், நண்பா? - எல்லாம் நலமா? 61 00:04:50,165 --> 00:04:51,250 ஆம், முற்றிலுமாக. 62 00:04:52,960 --> 00:04:54,461 என்ன பார்க்கிறாய்? 63 00:04:57,172 --> 00:04:59,383 காதல் எப்படியும் ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் என்று சொல்வார்கள், 64 00:05:00,259 --> 00:05:03,679 ஆனால் அதற்கு கொஞ்சம் முயற்சி செய்வதில் தவறில்லை. 65 00:05:47,264 --> 00:05:50,392 இந்த வீடியோவில், ஒரு பூட்டை எப்படி திறப்பது என்று காட்டுகிறேன். 66 00:05:51,101 --> 00:05:54,313 சாவி துவாரத்தில் மெதுவாக உங்கள் கருவியை நுழையுங்கள்... 67 00:05:54,313 --> 00:05:58,317 எனவே... நடுவில் இருக்கும் துணி பெட்டியில் தொடங்கி, 68 00:05:58,317 --> 00:06:00,527 பிறகு சுற்றி வர வேண்டும் என்று நினைக்கிறேன். 69 00:06:02,362 --> 00:06:05,949 {\an8}டிவியில் மனமுடைந்து பேசியதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், 70 00:06:05,949 --> 00:06:09,661 நிறுவனம் நான் மீண்டு வர மகிழ்ச்சியோடு 30 நாள் 71 00:06:09,661 --> 00:06:13,040 ஓய்வு கொடுத்திருக்கிறது. 72 00:06:13,832 --> 00:06:15,751 ஹா! திறந்துவிட்டேன். 73 00:06:15,751 --> 00:06:20,005 நீ எப்படி? உன்னால் விடுமுறையை எடுக்க முடியுமா என்று கேட்டாயா? 74 00:06:22,841 --> 00:06:24,968 ஆம். கிடைக்கும். 75 00:06:28,263 --> 00:06:33,268 நல்லது. இப்போது கோடு வரை மீதமிருக்கும் வீடுகளுக்கு எண்களிடுகிறேன், 76 00:06:33,268 --> 00:06:35,562 பிறகு எண் இரண்டில் இருந்து தொடங்குவோம். 77 00:06:35,562 --> 00:06:37,189 - டானென்ரிங்கிலிருந்து. - சரி. 78 00:06:39,691 --> 00:06:41,235 - ஓலே, ஹேய். என்ன விஷயம், ஓலே? - ஓலே. 79 00:06:42,027 --> 00:06:44,238 கீழே என்ன செய்கிறீர்கள்? 80 00:06:44,238 --> 00:06:46,031 - ஒன்றை சரிசெய்கிறோம். - பிங்-பாங் விளையாடுகிறோம். 81 00:06:46,031 --> 00:06:48,492 ஆம், அதேதான். நான் ஒன்றை சரிசெய்தேன். 82 00:06:48,492 --> 00:06:50,869 - இப்போது, பிங்-பாங் விளையாடுகிறோம். ஆம். - ஆம். 83 00:06:50,869 --> 00:06:51,954 நான்தான் வென்றேன். 84 00:06:51,954 --> 00:06:54,081 கண்டிப்பாக. சரி. 85 00:06:54,665 --> 00:06:57,835 கேம்ஸ் வேர்ல்டுக்கு எனக்கு ஒரு டிக்கெட் வேண்டும். 86 00:06:59,586 --> 00:07:02,130 சரி. அது என்ன "கேம்ஸ் வேர்ல்டு"? 87 00:07:02,130 --> 00:07:05,092 அது கணினி விளையாட்டுகளின் மாநாடு. நான் போகலாமா? 88 00:07:05,092 --> 00:07:07,511 சரி, டிக்கெட்டுகளின் விலை எவ்வளவு? 89 00:07:07,511 --> 00:07:09,972 - 200 யூரோக்கள். - 200 யூரோக்களா? 90 00:07:09,972 --> 00:07:14,101 கணினி விளையாட்டுகளின் நோக்கமே அதை வீட்டில் விளையாடலாம் என்பதுதானே? 91 00:07:14,101 --> 00:07:15,811 அப்பா, உங்களுக்குப் புரியவில்லை. 92 00:07:18,939 --> 00:07:22,276 என்ன? 200 யூரோக்கள். என் முதல் கார் அதைவிட மலிவானது. 93 00:07:23,443 --> 00:07:25,362 - உனக்குப் புரியவில்லை. - எனக்குப் புரிகிறது. 94 00:07:26,238 --> 00:07:29,491 வாண்டா கிளாட்டைக் கடத்தியவர்களைப் பற்றி தெரியும் என்று ஃபோனில் சொன்னீர்களா? 95 00:07:30,158 --> 00:07:33,495 நுப்பல்வோக்கன் இரவு அன்று, ஆம். 96 00:07:35,038 --> 00:07:38,917 நான் அதை என் கண்களாலேயே பார்த்தேன். 97 00:07:43,046 --> 00:07:45,465 நான் காட்டில்... 98 00:07:47,843 --> 00:07:50,012 மரங்களுடன் சந்தோஷமாக இருந்தேன், 99 00:07:50,012 --> 00:07:53,765 என்னுடைய ஆன்மீக கவசத்தைப் புதுப்பித்துக்கொண்டிருந்தேன், 100 00:07:55,017 --> 00:07:59,354 திடீரென... அது அங்கே வந்தது... 101 00:08:00,522 --> 00:08:02,357 கம்பீரமாக. 102 00:08:04,943 --> 00:08:07,696 அதை உங்களுக்காக வரைந்திருக்கிறேன். ஒருவேளை இது உதவலாம் என்பதால். 103 00:08:10,949 --> 00:08:12,159 நீங்களே இதை வரைந்தீர்களா? 104 00:08:12,159 --> 00:08:14,161 - அற்புதம். நிஜமாகவே. - நன்றி. 105 00:08:14,161 --> 00:08:15,704 நேரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். 106 00:08:16,330 --> 00:08:19,041 - நன்றி. - வரவேற்கிறேன். 107 00:08:19,041 --> 00:08:22,085 அடுத்த நுப்பல்வோக்கன் பயணம் 1:15 மணிக்கு தொடங்குகிறது. 108 00:08:22,085 --> 00:08:24,838 இந்த நிகழ்ச்சிகள் எப்பொழுதும் பைத்தியக்காரர்களை தெருவில் அலையவிடுகின்றன. 109 00:08:24,838 --> 00:08:26,840 எல்லோரும் ஏன் இந்த விஷயத்தில் மூழ்கியிருக்கிறார்கள்? 110 00:08:26,840 --> 00:08:29,593 நுப்பல்வோக்கன் விஷயத்திலா? அது நம் வரலாறு சம்பந்தப்பட்டது. 111 00:08:30,511 --> 00:08:32,638 அது வரலாறு இல்லை என்பது உனக்கு தெரியும்தானே? 112 00:08:32,638 --> 00:08:34,556 {\an8}நல்லது, அது வெறும் பழங்கதை. 113 00:08:38,393 --> 00:08:39,645 {\an8}துணிகள் + ஷூக்கள் 114 00:08:47,444 --> 00:08:49,154 சரி, இங்கிருந்து தொடங்குவோம். 115 00:08:49,154 --> 00:08:53,242 துணி பெட்டியிடம் இருந்து தொடங்குவோம், பிறகு ஒவ்வொன்றாகத் தேடுவோம். 116 00:08:55,494 --> 00:08:57,162 மீண்டும் ஒருமுறை திட்டத்தைப் பார்ப்போம். 117 00:09:03,460 --> 00:09:06,088 டீடோ, இது விளையாட்டில்லை. 118 00:09:06,088 --> 00:09:07,422 சரி. சரி. 119 00:09:08,257 --> 00:09:10,425 எனவே, பெல்லை அழுத்துகிறேன். வீட்டில் யாரும் இல்லையா என்பதை பார்க்கிறேன். 120 00:09:10,425 --> 00:09:12,678 இல்லை என்றால், உள்ளே நுழைய முயற்சிக்கிறேன்... 121 00:09:13,554 --> 00:09:15,097 ஓலே என் மெஸ்சேஜ் டோனை மாற்றிவிட்டான். 122 00:09:15,097 --> 00:09:17,891 இது வேடிக்கையாக இருக்கும் என்று நினைத்தான். திரும்ப எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை. 123 00:09:21,812 --> 00:09:25,440 ஆம், ஓலேதான் அழைத்திருக்கிறான். மீண்டும் கேம்ஸ் வேர்ல்ட் விஷயமாக. 124 00:09:26,441 --> 00:09:30,070 ஹேய், செல்லம். 200 யூரோக்கள் என்பது நிறைய பணம். 125 00:09:30,779 --> 00:09:31,780 அனுப்பு. 126 00:09:33,407 --> 00:09:35,450 சரி, நன்றி. நான்... 127 00:09:36,201 --> 00:09:37,244 இதை கொஞ்சம் பிடிக்கிறாயா? 128 00:09:40,414 --> 00:09:45,502 "ஷேடோஸ்ட்ரைக் ஒரு டோர்னமென்ட்டை நடத்துகிறது, அது அற்புதமாக இருக்கப்போகிறது" என்கிறான். 129 00:09:45,502 --> 00:09:46,879 வருந்துகிறேன், "அற்புதமாக." 130 00:09:48,714 --> 00:09:51,049 யார் அந்த ஷேடோஸ்ட்ரைக்? 131 00:09:52,134 --> 00:09:54,428 "செல்லோஸ்ட்ரைக் " இல்லை. 132 00:09:54,428 --> 00:09:57,806 ஷ்... ஷ்... ஷேடோஸ்ட்ரைக். 133 00:09:59,057 --> 00:10:00,058 அனுப்பு. 134 00:10:02,394 --> 00:10:03,395 சரி. 135 00:10:04,730 --> 00:10:07,024 நாம் முயற்சி செய்து கவனம் செலுத்தலாம் என்று நினைக்கிறாயா? 136 00:10:07,024 --> 00:10:09,359 ஆம். அன்பே, நம்மால் முடியும். 137 00:10:09,359 --> 00:10:11,862 கேள். நான் வீட்டிற்குப் போகிறேன். வீட்டில் யாரும் இல்லையா என்று பார்க்கிறேன். 138 00:10:11,862 --> 00:10:14,072 பூட்டைத் திறந்து, உள்ளே சுற்றிப் பார்க்கிறேன். 139 00:10:14,072 --> 00:10:16,950 யாராவது வந்தால், நீ ஹாரனை அழுத்து, நான் வெளியே வந்துவிடுவேன். 140 00:10:16,950 --> 00:10:18,035 சரி. 141 00:10:19,536 --> 00:10:20,913 தயாரா? 142 00:10:20,913 --> 00:10:22,122 தயார். 143 00:11:37,155 --> 00:11:40,158 சரி, என் நண்பா. திறக்கலாம். 144 00:12:06,143 --> 00:12:09,438 கேடுகெட்டதே! ஏன் முட்டாள்தனமாக இருக்கிறாய்? 145 00:12:12,274 --> 00:12:13,150 அடச்சே! 146 00:12:25,787 --> 00:12:26,830 கார்லட்டா? 147 00:12:28,582 --> 00:12:29,791 ருடிகர்? 148 00:12:31,251 --> 00:12:32,836 நீ இங்கே என்ன செய்கிறாய், சகோதரி? 149 00:12:35,130 --> 00:12:36,465 நீ இங்கே என்ன செய்கிறாய்? 150 00:12:36,465 --> 00:12:38,425 நான் இந்த பகுதியில்தான் வசிக்கிறேன். 151 00:12:39,009 --> 00:12:40,010 சரி. 152 00:12:40,886 --> 00:12:42,638 நேற்று உன்னை டிவியில் பார்த்தேன். 153 00:12:42,638 --> 00:12:44,097 எந்தப் பிரச்சினையும் இல்லையே? 154 00:12:45,474 --> 00:12:46,308 எந்தப் பிரச்சினையும் இல்லை. 155 00:12:47,434 --> 00:12:49,228 வெறும்... அது மிகவும்... 156 00:12:49,978 --> 00:12:51,355 - சரி... - என்ன? 157 00:12:52,231 --> 00:12:53,482 தீவிரமாக இருந்தது. 158 00:12:55,150 --> 00:12:57,027 விசாரித்ததற்கு நன்றி, ருடிகர். 159 00:12:57,569 --> 00:12:59,154 எப்போதும் உன்னைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. 160 00:12:59,905 --> 00:13:03,408 டோடோ சின்ன நாற்காலியில் உட்கார்ந்திருக்கும்போது அடிமுட்டாளாக தெரிந்தான். 161 00:13:03,408 --> 00:13:04,660 அவனை அப்படிச் சொல்லாதே. 162 00:13:05,244 --> 00:13:07,704 என்ன? டோடோ என்றா அடிமுட்டாள் என்றா? 163 00:13:09,122 --> 00:13:10,874 நீ அவன் மீது இன்னமும் கோபமாக இருக்கிறாய் என்று தெரியும், ஆனால்... 164 00:13:10,874 --> 00:13:12,584 அவன் என்னை போலீஸில் சிக்க வைத்தான்! 165 00:13:12,584 --> 00:13:14,837 ஆம், அது எதிர்பாரா விதமாக நடந்தது, ஆனால்... 166 00:13:14,837 --> 00:13:16,672 எதிர்பாரா விதமாக நடந்ததா? 167 00:13:16,672 --> 00:13:20,008 கார்லட்டா, அவர்களிடம் நான், "சிறந்த குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவன்" என்றான். 168 00:13:20,008 --> 00:13:21,718 அவன் மனமுடைந்து போயிருந்தான். 169 00:13:22,678 --> 00:13:25,931 நீ அந்த பெண் பத்திரிகையாளரிடம் பேசியதால் கோபமாகவும் இருந்தான். 170 00:13:25,931 --> 00:13:30,394 அவள் பத்திரிக்கையாளர் என்று எனக்குத் தெரியாது. டிண்டரில் பேஸ்ட்ரி சமையல்காரி என்று இருந்தது. 171 00:13:30,394 --> 00:13:32,229 - அவள் என்னை ஏமாற்றிவிட்டாள். - அட... 172 00:13:32,229 --> 00:13:33,313 கார்லட்டா? 173 00:13:34,314 --> 00:13:36,400 மீதமுள்ள வாண்டா பற்றிய தடயங்களை நானே விசாரிக்கிறேன். 174 00:13:36,400 --> 00:13:37,943 உன் நேரத்தை வீணடிக்க வேண்டாம். 175 00:13:37,943 --> 00:13:40,112 சிப்பி எப்படி வேலை செய்கிறது தெரியுமா? 176 00:13:40,112 --> 00:13:42,197 அவை வடிகட்டிகள், எனவே அவை எல்லா அழுக்குகளையும் உறிஞ்சி, 177 00:13:42,197 --> 00:13:44,658 பயனற்ற எல்லாவற்றையும் வடிகட்டுகிறது. 178 00:13:44,658 --> 00:13:45,826 சரி. 179 00:13:45,826 --> 00:13:48,745 ஆனால் அவ்வப்போது மணல் துகள் உள்ளே சிக்கிக்கொள்ளும்... 180 00:13:49,746 --> 00:13:51,248 அப்போதுதான் நமக்கு முத்து கிடைக்கிறது. 181 00:13:52,124 --> 00:13:53,208 இது என்ன உவமையா? 182 00:13:54,001 --> 00:13:55,377 ஆம். 183 00:14:04,803 --> 00:14:07,431 நீ என்ன செய்கிறாய்? 184 00:14:09,349 --> 00:14:10,601 என் சாவிகளை தொலைத்துவிட்டேன். 185 00:14:11,768 --> 00:14:13,020 அது இக்னிஷனில்தானே இருக்கிறது. 186 00:14:15,856 --> 00:14:16,857 ஆம். 187 00:14:19,526 --> 00:14:20,736 அடச்சே, திற! 188 00:15:31,139 --> 00:15:35,185 டோடோ உறவை சரிசெய்ய விரும்பினால், அவன் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 189 00:15:35,185 --> 00:15:36,562 சரி, நல்லது. அவனிடம் பேசுகிறேன். 190 00:15:36,562 --> 00:15:38,188 அவனிடம் பேசுகிறேன், சரியா? 191 00:15:40,983 --> 00:15:42,192 கொஞ்சம் பொறு. 192 00:15:43,068 --> 00:15:45,028 - எனக்கு அவனைத் தெரியும். - யாரது? 193 00:15:47,072 --> 00:15:50,617 வாண்டாவின் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறான். 194 00:15:51,368 --> 00:15:54,788 அவன் ஆசிரியரா? என்ன கற்றுக்கொடுக்கிறான்? ஸ்டீராய்டுகள் பற்றியா? 195 00:16:18,562 --> 00:16:21,190 அடச்சே. 196 00:16:27,863 --> 00:16:30,449 ஹேய்! என்ன செய்கிறீர்கள்? 197 00:16:30,449 --> 00:16:34,369 ஒரு வாத்துக் கூட்டம் தெருவைக் கடந்துகொண்டிருந்தது. 198 00:16:34,369 --> 00:16:35,954 வண்டியை பார்க்கிங் செய்திருக்கிறீர்கள்! 199 00:16:35,954 --> 00:16:37,664 நான் ஒரு விலங்கு உரிமைகள் ஆர்வலர்! 200 00:16:39,791 --> 00:16:42,336 கார்லட்டா, நிஜமாகவே கவலைப்பட ஆரம்பித்துவிட்டேன். 201 00:17:47,901 --> 00:17:49,570 ஹேய்! நீ இங்கே என்ன செய்கிறாய்? என்ன? 202 00:17:50,529 --> 00:17:52,114 பிரச்சினை செய்ய விரும்புகிறாயா? 203 00:17:58,954 --> 00:17:59,955 ஆம். 204 00:18:24,813 --> 00:18:27,441 கார்லட்டா! காரை ஸ்டார்ட் செய்! 205 00:18:34,156 --> 00:18:36,950 - நீ நலமா? - போ! சீக்கிரம்! 206 00:18:44,666 --> 00:18:46,084 டார்க்லோர் நண்பரைத் தேடு 207 00:18:46,084 --> 00:18:48,712 அலெக்ஸ் வின்சன் தேடு - நண்பரைச் சேர் - ரத்து 208 00:19:00,474 --> 00:19:01,475 - ஹாய். - ஹாய். 209 00:19:05,771 --> 00:19:07,314 உங்களுக்கு என்ன ஆனது? 210 00:19:08,398 --> 00:19:10,984 தடுக்கி விழுந்துவிட்டேன். நாய் மீது. 211 00:19:12,152 --> 00:19:13,862 எங்கே போயிருந்தீர்கள்? 212 00:19:14,655 --> 00:19:15,989 - பவுலிங் விளையாட. - கடையில் பொருட்கள் வாங்க. 213 00:19:17,407 --> 00:19:18,992 சரி, இங்கே என்ன நடக்கிறது? 214 00:19:21,620 --> 00:19:24,039 இரண்டு நாட்களுக்கு முன்பு, அம்மாவை ஒரு பாம்பு கடித்ததாக சொன்னீர்கள். 215 00:19:24,039 --> 00:19:25,832 இப்போது நீங்கள் டிரக்கில் அடிபட்டது போல தெரிகிறீர்கள், 216 00:19:25,832 --> 00:19:27,835 பவுலிங் மைதானத்தில் நாய் மீது தவறி விழுந்ததாக சொல்கிறீர்கள். 217 00:19:27,835 --> 00:19:30,254 அது வாண்டா பற்றியதுதானே? 218 00:19:33,966 --> 00:19:39,012 குடும்பத்துக்குள் ஒருவருக்கொருவர் பொய் சொல்லமாட்டார்கள் என்று எப்போதும் சொல்வீர்கள். 219 00:19:39,012 --> 00:19:42,266 எனவே உண்மையை சொல்லுங்கள். 220 00:19:46,687 --> 00:19:51,984 சரி. யாரோ வாண்டாவின் டீ-ஷர்ட்டை இங்கிருக்கும் துணி நன்கொடை பெட்டிக்குள் போட்டிருக்கிறார்கள். 221 00:19:52,734 --> 00:19:56,613 எதற்காக இந்த குறிப்பிட்ட பெட்டியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? பக்கத்தில் இருக்கிறது என்பதால்தானே? 222 00:19:58,156 --> 00:20:01,285 புள்ளிவிவரப்படி, முதல் 100 நாட்களுக்குப் பிறகு வாண்டாவை 223 00:20:01,285 --> 00:20:03,370 கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. 224 00:20:03,370 --> 00:20:04,913 இன்று என்ன நாள்? 225 00:20:04,913 --> 00:20:06,540 - நாள் 70. - எழுபது. 226 00:20:06,540 --> 00:20:09,501 எனவே அடுத்த 30 நாட்களில், அவளைக் கண்டுபிடிக்க எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம் என்று 227 00:20:09,501 --> 00:20:11,628 உன் அம்மாவும் நானும் முடிவு செய்திருக்கிறோம். 228 00:20:11,628 --> 00:20:14,840 இந்த வீடுகளில் ஒன்றில் வாண்டா அடைக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறோம். 229 00:20:15,966 --> 00:20:16,967 எனவே... 230 00:20:18,510 --> 00:20:19,720 எனவே அவற்றைத் தேடுகிறோம். 231 00:20:22,139 --> 00:20:24,558 இந்த எல்லா வீடுகளிலும் அத்துமீறி நுழைய திட்டமிடுகிறீர்களா? 232 00:20:24,558 --> 00:20:27,060 ஏற்கனவே இரண்டு வீட்டில் நுழைந்துவிட்டோம். எனவே அது இன்னொரு... 233 00:20:27,060 --> 00:20:28,770 - இன்னும் 60 வீடுகள்தான். - அறுபது. 234 00:20:28,770 --> 00:20:31,732 அறுபதா? உங்கள் நிலைமையை நீங்களே பாருங்கள். 235 00:20:31,732 --> 00:20:33,650 அதுவும் வெறும் இரண்டு வீடுகளுக்குப் பிறகு. 236 00:20:33,650 --> 00:20:35,569 இன்னும் 60 வீடுகளை முயற்சித்தால், நீங்கள் சிறையிலோ, மனநல மருத்துவமனையிலோ, 237 00:20:35,569 --> 00:20:38,030 அல்லது மயானத்திலோதான் இருப்பீர்கள். 238 00:20:38,989 --> 00:20:42,951 ஓலே, வேறு என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை. 239 00:20:49,541 --> 00:20:52,961 நம்மால் வாண்டாவைக் கண்டுபிடிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? 240 00:20:55,380 --> 00:20:56,381 ஆம். 241 00:20:57,049 --> 00:20:58,091 நல்லது. 242 00:21:01,303 --> 00:21:04,515 ஆனால் அதை பழைய பாணியில் செய்வதை நிறுத்துங்கள். 243 00:21:06,808 --> 00:21:09,728 அவர்களை பக் செய்யலாம். டிஜிட்டல் கண்காணிப்பு. 244 00:21:10,312 --> 00:21:13,607 புத்திசாலிதனமாக இருங்கள். மாட்டிக்கொள்ளாதீர்கள். 245 00:21:14,399 --> 00:21:15,442 சத்தியமாக? 246 00:21:15,943 --> 00:21:16,985 ஆம். 247 00:21:18,987 --> 00:21:20,489 சரி, உங்கள் நேர்மையை மதிக்கிறேன். 248 00:21:21,698 --> 00:21:26,370 நாம் புதிய அளவிலான நம்பிக்கையை அடைந்துவிட்டது போல தோன்றுகிறது... 249 00:21:26,370 --> 00:21:27,829 ஒரு குடும்பமாக. 250 00:21:28,413 --> 00:21:31,458 அதுபோல, கேம்ஸ் வேர்ல்டுக்குச் செல்வதற்கு உங்கள் ஆசீ எனக்கு உண்டு என்று எடுத்துக்கொள்கிறேன். 251 00:21:33,585 --> 00:21:34,586 அருமையான உரையாடல். 252 00:21:38,549 --> 00:21:40,676 - அது நன்றாக இருந்தது. - அது... அது... 253 00:21:43,887 --> 00:21:46,348 - அதற்கு 200 யூரோக்கள் செலவாகும். - ஆம். 254 00:21:46,348 --> 00:21:47,683 ஆம், அது பிரச்சினை இல்லை. 255 00:21:50,310 --> 00:21:53,814 ஹேய். கடைசியாக நன்கொடை பெட்டியிடம் இருந்த கண்காணிப்பு கேமரா சம்பந்தமாக 256 00:21:53,814 --> 00:21:55,983 - ஒருவரைப் பிடித்தேன். - பிறகு? 257 00:21:55,983 --> 00:21:59,611 ஒவ்வொரு ஆறு நாட்களுக்கும் மெமரி கார்டு டெலீட் செய்யப்படும் என்று பாதுகாப்புச் சேவை சொல்கிறது, 258 00:22:00,612 --> 00:22:03,198 ஏனென்றால் மாற்று கார்டை முதலாளி தன்னுடைய மகளிடம் இடைவெளி வருடத்தில் 259 00:22:03,198 --> 00:22:04,575 பயன்படுத்த கொடுத்துவிட்டாராம். 260 00:22:06,326 --> 00:22:07,911 அது என்ன? 261 00:22:07,911 --> 00:22:11,665 ஒரு பழைய பீட்டில். வாண்டா காணாமல் போன அந்த நாளில் சிலர் இதைப் பார்த்திருக்கிறார்கள். 262 00:22:13,625 --> 00:22:15,252 {\an8}B-L-B. அது எங்கே இருக்க வேண்டும்? 263 00:22:15,252 --> 00:22:17,838 {\an8}பேட் பெர்ல்பர்க். வடக்கு ரைன்-வெஸ்ட்பேலியாவில். 264 00:22:17,838 --> 00:22:21,008 உரிமையாளரைத் தேடினேன், எதுவும் கிடைக்கவில்லை. 265 00:22:21,842 --> 00:22:24,303 ஒருவேளை அவர்கள் லைசன்ஸ் பிளேட்டை தவறாக சொல்லியிருப்பார்களா? 266 00:22:24,303 --> 00:22:27,347 அநேகமாக. இங்கிருப்பவர்களுக்கு நிறைய விஷயங்கள் சரியாகத் தெரியவில்லை. 267 00:22:28,307 --> 00:22:29,725 எனக்காக இதைப் பற்றி விசாரி. 268 00:22:31,310 --> 00:22:34,646 ஒரு கருப்பு வேன் தெருக்களில் இலக்கில்லாமல் ஓட்டுவது பற்றிய பல தகவல்கள். 269 00:22:35,564 --> 00:22:36,607 பார்க்கிறேன். 270 00:22:53,040 --> 00:22:56,001 ஹலோ. நான் உங்களுக்கு உதவலாமா? 271 00:22:56,001 --> 00:22:57,336 எங்களுக்கு வேண்டியது... 272 00:22:57,336 --> 00:23:01,965 நாங்கள் ரெக்கார்டிங் சாதனங்களைத் தேடுகிறோம். 273 00:23:02,549 --> 00:23:05,636 வீடியோ ரெக்கார்டர்களா அல்லது மைக்ரோஃபோன்கள் போலவா? 274 00:23:06,512 --> 00:23:07,513 ஆம், அதேதான். 275 00:23:09,181 --> 00:23:10,766 அவற்றை வைத்து என்ன செய்ய விரும்புகிறீர்கள்? 276 00:23:10,766 --> 00:23:12,267 - பாட்காஸ்ட் தயாரிக்க. - பறவைகளை கவனிக்க. 277 00:23:13,101 --> 00:23:15,270 எங்கள் முற்றத்தில் பறவைகளைப் பார்ப்பது எங்களுக்குப் பிடிக்கும். 278 00:23:15,896 --> 00:23:17,898 ஆனால் திடீரென்று, அவை இறப்பதை கவனித்தோம். 279 00:23:17,898 --> 00:23:19,858 - இறக்கின்றன, ஆம். - எனவே எங்கள் 280 00:23:19,858 --> 00:23:22,819 முற்றத்தை கண்காணிக்க ஒன்றைத் தேடுகிறோம். 281 00:23:22,819 --> 00:23:25,405 ஆம், அதைப் பற்றி ஒரு பாட்காஸ்ட் செய்கிறேன். 282 00:23:27,407 --> 00:23:28,742 புரிந்தது. சரியான பொருள் என்னிடம் இருக்கிறது. 283 00:23:29,326 --> 00:23:32,120 இது ஒரு நிலையான வனவிலங்கு கேமரா. 284 00:23:32,120 --> 00:23:34,039 இது மோஷன் டிடெக்டருடன் வேலை செய்யும். 285 00:23:34,039 --> 00:23:37,709 சென்சாரில் ஏதாவது படும்போது, அது படத்தை மெமரி கார்டில் பதிவு செய்யும், 286 00:23:37,709 --> 00:23:40,462 அதை பிறகு நீங்கள் உங்கள் கணினியில் எளிதாக பார்க்கலாம். 287 00:23:42,714 --> 00:23:45,384 தொலைவிலிருந்து பார்க்கக்கூடிய ஏதாவது இருக்கிறதா? 288 00:23:45,968 --> 00:23:48,971 நிச்சயமாக, ஆனால் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். 289 00:23:48,971 --> 00:23:50,347 - ஆம், அது... - ஷ். 290 00:23:50,347 --> 00:23:51,515 - பிரச்சினை இல்லை. - பிரச்சினை இல்லை. 291 00:23:51,515 --> 00:23:53,976 உங்களிடம் இருக்கும் சிறந்தது எது? 292 00:23:54,476 --> 00:23:55,602 சிறந்ததா? 293 00:23:57,396 --> 00:24:00,065 அல்ட்ரா HD, 32-பிட் கலர் டெப்த், 294 00:24:00,065 --> 00:24:02,025 20 மீட்டர் வயர்லெஸ் ரேஞ்சு. 295 00:24:02,025 --> 00:24:05,612 இதுதான் கண்காணிப்பு கேமராக்களின் ரோல்ஸ் ராய்ஸ். 296 00:24:06,196 --> 00:24:07,823 சின்னதாக... ஏதாவது இருக்கிறதா? 297 00:24:09,032 --> 00:24:10,033 நிச்சயமாக. 298 00:24:12,327 --> 00:24:14,788 இது. XR-098. 299 00:24:16,373 --> 00:24:19,251 நாங்கள் மிகவும் சிறியதாக எதிர்பார்க்கிறோம். 300 00:24:21,962 --> 00:24:23,881 ஓ, பக் போன்ற ஒன்றைச் சொல்கிறீர்களா? 301 00:24:28,302 --> 00:24:31,889 சரி, நேர்மையாகச் சொல்வதென்றால், அந்த பொருள் இன்னும் கொஞ்சம் சிறப்பு வாய்ந்தது, 302 00:24:31,889 --> 00:24:34,183 மற்றும் சட்டவிரோதமானது. 303 00:24:38,187 --> 00:24:40,105 ஆனால் ஒரு பொருள் இருக்கிறது. 304 00:24:46,820 --> 00:24:49,031 "திசைவழி மைக்ரோஃபோன்கள் இரண்டாம் உலகப் போரின்போது 305 00:24:49,031 --> 00:24:51,450 உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டன" என்று இதில் போட்டிருக்கிறது. 306 00:24:52,492 --> 00:24:54,786 எனவே இதை ஏன் பொம்மை பிரிவில் வைத்திருந்தார்கள்? 307 00:24:54,786 --> 00:24:57,581 வெறும்... வீட்டை நோக்கி அதைக் காட்டு, 308 00:24:57,581 --> 00:24:59,082 என்ன நடக்கிறது என்று பார்ப்போம், சரியா? 309 00:25:12,638 --> 00:25:14,139 சரி, நான் பேசுவது கேட்கிறதா? 310 00:25:14,139 --> 00:25:15,599 சத்தமாகவும் தெளிவாகவும்! 311 00:25:15,599 --> 00:25:16,517 அருமை! 312 00:25:17,184 --> 00:25:18,644 ஆம், அருமை! 313 00:25:19,186 --> 00:25:23,774 கடத்தல்காரர்கள் தங்கள் வீட்டுக் கதவைத் திறந்து நேரடியாக நம்மை நோக்கிக் கத்தும் வரை, 314 00:25:24,358 --> 00:25:25,400 பிரச்சினை இல்லை! 315 00:25:26,026 --> 00:25:28,070 நீ கிண்டல் செய்கிறாய். 316 00:25:28,654 --> 00:25:29,655 நான் உள்ளே போகிறேன். 317 00:25:34,159 --> 00:25:35,661 சரி, நான் பேசுவது கேட்கிறதா? 318 00:25:35,661 --> 00:25:39,081 சோதனை, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு. 319 00:25:39,706 --> 00:25:41,542 நான் படியேறிப் போகிறேன். 320 00:25:41,542 --> 00:25:42,876 சோதனை. 321 00:25:45,212 --> 00:25:47,714 சூப்பர்மேன், நிஜமாகவே நீ பேசுவது கேட்கிறது! 322 00:25:48,382 --> 00:25:50,384 நிஜமாகவா? பிரமாதம்! 323 00:25:50,384 --> 00:25:52,594 சரி, நான் மீண்டும் கீழே போகிறேன். சமையலறைக்குள். 324 00:25:52,594 --> 00:25:54,304 மீண்டும் சொல்கிறேன், சமையலறைக்குள் போகிறேன். 325 00:25:55,055 --> 00:25:58,517 டெல்டா ஒன்று சார்லி ஒன்றுக்கு சொல்கிறேன். சமையலறைக்கு வந்துவிட்டேன். 326 00:25:58,517 --> 00:26:00,561 மீண்டும் சொல்கிறேன், சமயலறைக்கு வந்துவிட்டேன். 327 00:26:02,062 --> 00:26:03,981 எதைப் பற்றி பேசுகிறாய்? 328 00:26:04,690 --> 00:26:08,026 சரி, அங்கே போகிறேன். நான் பேசுவது இன்னும் கேட்கிறதா. 329 00:26:09,403 --> 00:26:11,238 நான் இப்போது வாண்டாவின் அறையில் இருக்கிறேன். 330 00:26:17,744 --> 00:26:21,164 ஆஹா. கொஞ்ச நாட்களாக நான் இங்கே வரவில்லை. 331 00:26:37,306 --> 00:26:38,724 அவளுடைய படுக்கையில் உட்கார்ந்திருக்கிறேன். 332 00:26:43,312 --> 00:26:47,191 இங்கேதான் நான் அவளுக்கு எல்லா ஹாரி பாட்டர் புத்தகங்களையும் படித்துக்காட்டினேன். 333 00:26:49,318 --> 00:26:50,652 மூன்று முறை. 334 00:26:51,987 --> 00:26:56,992 நான் வெவ்வேறு குரல்களில் படிக்காதபோது அவளுக்கு மிகவும் கோபம் வரும். 335 00:26:59,119 --> 00:27:00,787 ஆனால் பல குரல்களில் படிப்பேன். 336 00:27:05,417 --> 00:27:07,836 ப்ரிசனர் ஆஃப் ஆஸ்கபானுக்கு வந்தபோது, 337 00:27:07,836 --> 00:27:09,755 எனக்கு உத்வேகம் போவிட்டது. 338 00:27:20,390 --> 00:27:21,808 நான் அவளை மிகவும் மிஸ் செய்கிறேன். 339 00:27:29,066 --> 00:27:31,151 எல்லா முட்டாள்தனமான சிறிய விஷயங்களையும்தான். 340 00:27:36,281 --> 00:27:38,659 நான் ஒரு நகைச்சுவையை சொல்லும்போது அவள் கண்களை உருட்டும் விதம், 341 00:27:39,535 --> 00:27:42,454 ஆனாலும் ஒரு அசட்டு சிரிப்பு சிரிப்பாள். 342 00:27:47,334 --> 00:27:48,544 நீ என்னைத் திட்டும்போது, 343 00:27:49,545 --> 00:27:52,840 அவள் எவ்வளவு குறும்புத்தனமாக என்னைப் பார்ப்பாள் என்பதையும் மிஸ் செய்கிறேன். 344 00:27:54,216 --> 00:27:57,219 அவள் என்னை சிரிக்கவைத்து அதன்மூலம் என்னை 345 00:27:57,219 --> 00:27:59,137 இன்னும் பெரிய சிக்கலில் மாட்டிவிட முயற்சிப்பது போல. 346 00:28:08,355 --> 00:28:10,357 {\an8}நானும் அவளை மிஸ் செய்கிறேன். 347 00:28:15,279 --> 00:28:16,613 அதோடு உன்னையும் மிஸ் செய்கிறேன். 348 00:28:48,520 --> 00:28:50,314 - சரி, அடுத்த வீடு. - சரி. 349 00:28:50,314 --> 00:28:51,982 கேட்கிறாயா இல்லையா? 350 00:28:51,982 --> 00:28:53,483 - நான் அதை அசைக்காமல் பிடித்துக்கொள்கிறேன். - சரி. 351 00:28:58,530 --> 00:28:59,948 - சரி. - தயாரா? 352 00:28:59,948 --> 00:29:01,617 - இது நன்றாக இருக்கும். - சரி. 353 00:29:03,035 --> 00:29:04,453 இன்னும் கொஞ்சம் வலதுபக்கம். 354 00:29:04,453 --> 00:29:06,371 மெதுவாக. ஆம். 355 00:29:07,039 --> 00:29:09,583 ஒரு நாய் இருக்கிறது... 356 00:29:10,709 --> 00:29:13,170 அது கணுக்காலை கடிக்கும் உன் உறவினரின் நாய் போல கத்துகிறது. 357 00:29:14,421 --> 00:29:16,215 சரி. தொடரவா? 358 00:29:16,215 --> 00:29:18,800 ஆம், சரி... இன்னும் கொஞ்சம் இடதுபக்கம். 359 00:29:19,593 --> 00:29:21,720 இன்னும் கொஞ்சம். நிறுத்து. நிறுத்து! 360 00:29:22,971 --> 00:29:25,265 சரி. ஏதோ கேட்கிறது. 361 00:29:26,266 --> 00:29:28,685 டிவி ஓடுவது கேட்கிறது. 362 00:29:29,603 --> 00:29:31,271 அது... ஆம். 363 00:29:31,855 --> 00:29:35,442 அது உறுதியாக ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படங்களில் ஒன்று என்று நம்புகிறேன். 364 00:29:35,442 --> 00:29:37,861 - டீடோ, இப்போது அதைப் பற்றி யோசிக்கிறாயா... - பொறு! நிறுத்து. 365 00:29:37,861 --> 00:29:40,697 எனக்கு நண்பர்கள் இல்லை, குடும்பம் இருக்கிறது. 366 00:29:40,697 --> 00:29:42,658 அது உறுதியாக ஃபியூரியஸ் 6 தான். 367 00:29:42,658 --> 00:29:43,951 - என்னுடைய முறை. - ஐயோ! 368 00:29:43,951 --> 00:29:46,912 அது நிஜமாகவே மிகவும் பொறுப்பற்ற செயல். 369 00:29:46,912 --> 00:29:48,830 ஆஹா. நீ என் காது சவ்வுகளை கிழித்திருப்பாய். 370 00:29:49,748 --> 00:29:51,834 எனக்கு நினைவிருக்கிறது, பள்ளி காலத்தில், ஹெல்முட் ரோடர் திரு. மாத்தூஸின் 371 00:29:51,834 --> 00:29:53,836 காருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தான், ஒரே சத்தம்! 372 00:29:53,836 --> 00:29:56,547 அது தவறாகி, அவனுடைய இடது காது முழுவதுமாக செவிடாகிவிட்டது 373 00:29:56,547 --> 00:29:58,757 பெரிய கட்டு வேறு போட வேண்டியிருந்தது... 374 00:29:58,757 --> 00:30:00,759 ...அது பார்க்க அபத்தமாக... 375 00:30:00,759 --> 00:30:03,512 ...கேவலமாக இருந்தது, எல்லோரும் அவனை கேலி செய்தார்கள். 376 00:30:13,063 --> 00:30:15,148 - சரி. - கொண்டுவந்து விட்டதற்கு நன்றி. 377 00:30:15,148 --> 00:30:16,692 அம்மா உன்னைக் கூட்டிப்போக வருவாள். 378 00:30:16,692 --> 00:30:18,485 சரி. பிறகு பார்ப்போம். 379 00:30:22,155 --> 00:30:23,156 அலெக்ஸ்? 380 00:30:26,910 --> 00:30:27,911 ஜாலியாக இரு. 381 00:30:34,710 --> 00:30:35,752 மன்னித்துவிடு! மன்னித்துவிடு. 382 00:30:36,295 --> 00:30:37,796 - மன்னித்துவிடு. - பொறு. 383 00:30:38,547 --> 00:30:41,300 பரவாயில்லை, நான்தான் பார்த்து கவனமாக வரவில்லை. நன்றி. 384 00:30:41,300 --> 00:30:42,342 கேம்ஸ் வேர்ல்ட் 385 00:30:42,342 --> 00:30:43,886 ஆஹா. நீ கேம்ஸ் வேர்ல்டுக்குப் போகிறாயா? 386 00:30:43,886 --> 00:30:46,847 ஆம். ஷேடோஸ்ட்ரைக் ஒரு டோர்னமென்ட்டை நடத்துகிறது. 387 00:30:46,847 --> 00:30:49,892 நானும் அதை கேள்விப்பட்டேன். ஷேடோஸ்ட்ரைக் பிரமாதமானது. நீ கேமரா? 388 00:30:49,892 --> 00:30:53,437 - ஆம், 100%. - அருமை. நாம் ஒன்றாக விளையாட வேண்டும்! 389 00:30:53,437 --> 00:30:56,648 என் நண்பன் கிறிஸும் நானும் எப்போதும் விளையாடுவோம். மூன்றாவது நபரை சேர்த்துக்கொள்ள முடியும். சரியா? 390 00:30:56,648 --> 00:30:57,733 நிஜமாகவா? அருமை. 391 00:30:57,733 --> 00:31:01,361 அதாவது, ஆம், நிச்சயமாக, உங்களுக்கு மூன்றாவது நபர் தேவைப்பட்டால். நான் இருக்கிறேன். 392 00:31:01,361 --> 00:31:04,239 கஞ்சா புகைப்பதும், NPC-களை சுடுவதையும்விட எதுவும் சிறந்ததில்லைதானே? 393 00:31:04,948 --> 00:31:06,825 - நிச்சயமாக. - நீ புகை பிடிப்பாயா? 394 00:31:07,534 --> 00:31:10,704 ஓ, ஆம், அதிகமாக. "போதையில் வாழ்வது" எனக்குப் பிடிக்கும், சரியா? 395 00:31:11,205 --> 00:31:12,039 ஆம். 396 00:31:14,333 --> 00:31:18,295 சமீபத்தில்தான் டார்க் வெப்பில் இருந்து அருமையான கஞ்சா வாங்கினேன். 397 00:31:18,295 --> 00:31:22,049 நீ ஒருநாள் வந்து அதை முயற்சிக்க வேண்டும். 398 00:31:22,049 --> 00:31:23,217 உன்னிடம் பேனா இருக்கிறதா? 399 00:31:25,385 --> 00:31:26,595 சரி, அது... 400 00:31:28,263 --> 00:31:29,389 என் கேமர் டேக். 401 00:31:30,182 --> 00:31:33,852 இன்று இரவு 7 மணிக்குப் பிறகு ஆன்லைனில் இருப்பேன். என்னைச் சேர்த்துக்கொள், சரியா? 402 00:31:33,852 --> 00:31:35,145 - சரி. - சரி. 403 00:31:59,461 --> 00:32:00,796 என்ன செய்வதென்றே தெரியவில்லை. 404 00:32:00,796 --> 00:32:03,841 - அவள் சாப்பிட மறுக்கிறாள். - என்ன? 405 00:32:03,841 --> 00:32:06,969 அவன் “அவள் சாப்பிட மறுக்கிறாள்” என்றான். 406 00:32:06,969 --> 00:32:09,012 - யார் மறுக்... - அவளை கட்டாயப்படுத்த வேண்டும். 407 00:32:09,721 --> 00:32:11,223 அல்லது அவள் பட்டினி கிடக்கட்டுமா? 408 00:32:11,223 --> 00:32:14,601 இப்போது அவர்கள் அவளை கட்டாயப்படுத்த வேண்டும் என்று அந்தப் பெண் சொல்கிறாள். 409 00:32:14,601 --> 00:32:15,894 உனக்கும் அது தெரியும். 410 00:32:15,894 --> 00:32:17,646 அடக் கடவுளே. 411 00:32:18,689 --> 00:32:22,192 ஆனால், பன்னி, அவளை அறையைவிட்டு வெளியே போக... 412 00:32:22,192 --> 00:32:24,695 - அவள் சொன்னாள்... - ...அனுமதிக்கும் வரை சாப்பிட மாட்டேன் என்றாள். 413 00:32:24,695 --> 00:32:28,448 அவளை அறையைவிட்டு வெளியேற அனுமதித்தால்தான் சாப்பிடுவேன் என்கிறாள் என்று அவன் சொல்கிறான். 414 00:32:28,448 --> 00:32:30,993 ஒருவேளை நாம் அவளை கொஞ்சம் வெளியே விடலாம். சமையலறை வரை. 415 00:32:30,993 --> 00:32:35,205 எனக்குக் கவலையில்லை, அவள் வெளியே வரக்கூடாது. யாராவது அவளைப் பார்த்துவிட்டால்? 416 00:32:35,205 --> 00:32:39,585 அவள் நடப்பதற்கு கொஞ்ச நேரம் அவளை வெளியேவிட்டால் என்ன? 417 00:32:40,377 --> 00:32:43,046 அவளை பல வாரங்களாக அடைத்து வைத்திருக்கிறோம். 418 00:32:43,046 --> 00:32:45,841 இல்லை, அவள் அங்கேயே இருக்கட்டும். விவாதம் முடிந்தது. 419 00:32:48,135 --> 00:32:50,095 - நீ என்ன செய்கிறாய்? - உள்ளே போகிறேன். 420 00:32:50,095 --> 00:32:53,056 - நீ உள்ளே திடீரென்று போகக்கூடாது. - யாரையோ பிடித்து வைத்திருக்கிறார்கள்! 421 00:32:53,056 --> 00:32:54,516 நீ என்ன சொல்லப் போகிறாய்? 422 00:32:54,516 --> 00:32:57,352 "மன்னியுங்கள், நாங்கள் ஒட்டுக்கேட்டோம், உங்களிடம் எங்கள் மகள் இருப்பதாக நினைக்கிறோம்." 423 00:32:57,352 --> 00:32:58,604 கார்லட்டா! 424 00:33:00,814 --> 00:33:04,193 நாம் இதை புத்திசாலித்தனமாக செய்வோம் என்று ஓலேவுக்கு சத்தியம் செய்தோம். 425 00:33:06,695 --> 00:33:07,821 நமக்கு பக்கள் தேவை. 426 00:33:11,491 --> 00:33:14,661 எங்களுக்கு உன் உதவி தேவை. 427 00:33:14,661 --> 00:33:16,288 இந்த பழமொழி போல: 428 00:33:16,288 --> 00:33:19,708 இணையத்திலிருந்து சட்டவிரோதமானது ஏதாவது தேவைப்பட்டால், ஒரு இளைஞரிடம் கேளுங்கள். 429 00:33:23,504 --> 00:33:24,796 - ஹலோ. - ஹலோ. 430 00:33:24,796 --> 00:33:28,300 நான் ஓலே, அலெக்ஸின் நண்பன். அவன் இருக்கிறானா? 431 00:33:29,092 --> 00:33:30,886 ஆம். நீ ஏன் உள்ளே வரக்கூடாது? 432 00:33:33,597 --> 00:33:34,598 அலெக்ஸ்! 433 00:33:37,100 --> 00:33:39,520 - குடிக்க ஏதாவது வேண்டுமா? - ஆம், நன்றி. 434 00:33:41,688 --> 00:33:43,565 - அலெக்ஸ்! - வருகிறேன்! 435 00:33:54,576 --> 00:33:57,371 - நன்றி. - கேட்பதற்கு மன்னித்துவிடு, ஆனால் நீ 436 00:33:57,371 --> 00:33:59,081 வாண்டா கிளாட்டின் தம்பிதானே? 437 00:33:59,081 --> 00:34:03,126 நீ இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பது மிக கொடுமையானது. அது பயங்கரமாக இருக்க வேண்டும். 438 00:34:03,126 --> 00:34:05,546 ஷஸ்டர்கள் ஏன் இங்காவை 439 00:34:05,546 --> 00:34:08,674 பாலே கற்க வற்புறுத்துகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. 440 00:34:08,674 --> 00:34:11,717 அவளுக்கு ஆறு வயதுதான், ஆனால் அவள் பெரிதாக இருக்கிறாள். 441 00:34:11,717 --> 00:34:14,471 அதாவது, அவர்கள் மதிய உணவுக்கு புரோட்டீன் ஷேக் கொடுக்கிறார்களா? 442 00:34:14,471 --> 00:34:16,556 யுனாஸ், இது ஓலே. 443 00:34:17,516 --> 00:34:19,141 வாண்டா கிளாட்டின் தம்பி. 444 00:34:23,522 --> 00:34:24,523 ஓலே. 445 00:34:26,315 --> 00:34:28,777 ஹலோ. சந்தித்ததில் மகிழ்ச்சி. 446 00:34:30,152 --> 00:34:35,324 நீண்ட காலத்திற்கு முன்பு வாண்டாவுக்கு ஆசிரியராக இருந்தேன். 447 00:34:35,826 --> 00:34:38,078 அவள் கொஞ்சம் திறமையானவளாக இருந்தாள். 448 00:34:38,078 --> 00:34:40,998 என்னிடம் இங்கே எங்கோ புகைப்படம் இருப்பதாக நினைக்கிறேன்... 449 00:34:42,498 --> 00:34:44,626 ஆ, ஆம். இதோ இருக்கிறாள். 450 00:34:46,335 --> 00:34:49,255 ரிஸோ, 2009 கிரீஸ் மெகா-மிக்ஸ். 451 00:34:49,255 --> 00:34:51,382 அவ்வளவு திறமை இருந்தது. 452 00:34:52,092 --> 00:34:53,719 - அலெக்ஸ்! - ஆம். 453 00:34:54,344 --> 00:34:56,471 ஆனால், கடரினா எப்போதும் சொல்வது போல... 454 00:34:59,099 --> 00:35:00,559 எல்லோரையும் என்னால் வைத்துக்கொள்ள முடியாது. 455 00:35:01,727 --> 00:35:02,936 என்ன? 456 00:35:04,563 --> 00:35:06,315 - ஓலே. - ஹாய். 457 00:35:06,899 --> 00:35:08,442 எப்படி இருக்கிறாய்? 458 00:35:16,450 --> 00:35:19,203 டார்க் வெப் பற்றி நீ அன்று சொன்னாய். 459 00:35:20,787 --> 00:35:22,122 எனக்குக் காட்ட முடியுமா? 460 00:35:24,124 --> 00:35:26,710 பிளாக் சூக்கிற்கு வரவேற்கிறேன். 461 00:35:26,710 --> 00:35:28,921 போதைப்பொருட்கள், ஆயுதங்கள், மிகவும் வினோதமான ஆபாசப்படங்கள். 462 00:35:28,921 --> 00:35:31,173 ஒருமுறை நான் புலியை கூட இதில் விற்பதை பார்த்தேன். 463 00:35:31,173 --> 00:35:33,675 நீ எதை தேடினாலும், அது இங்கே கிடைக்கும். 464 00:35:34,259 --> 00:35:36,011 எனவே, உனக்கு என்ன வேண்டும்? 465 00:35:39,431 --> 00:35:42,601 குவான்டெக்ஸ் MF-317. 466 00:35:42,601 --> 00:35:43,685 சரி. 467 00:35:44,686 --> 00:35:47,481 குவான்டெக்ஸ்... M, F, 3, 1. 468 00:35:47,481 --> 00:35:48,982 அது என்ன? 469 00:35:48,982 --> 00:35:50,984 அவை கண்காணிப்பு கேமராக்கள். 470 00:35:52,152 --> 00:35:53,153 சரி... 471 00:35:54,196 --> 00:35:58,325 என் அப்பா தன்னை ஏமாற்றுவதாக என் அம்மா நினைக்கிறார். 472 00:36:01,203 --> 00:36:02,204 வருந்துகிறேன். 473 00:36:02,871 --> 00:36:05,499 என் அப்பாவும் ஏமாற்றினார், எங்களுக்கு ஆறு வயது இருக்கும்போது. 474 00:36:06,500 --> 00:36:09,962 ஆம். எங்களுக்குத் தெரியும் என என் பெற்றோருக்குத் தெரியாது, ஆனாலும் மோசமான சூழ்நிலைதான். 475 00:36:09,962 --> 00:36:12,506 அவர் ஒரு மாதம் போய் தாத்தா பாட்டியுடன் இருந்தார். 476 00:36:12,506 --> 00:36:14,842 தன்னை ஏற்றுக்கொள்ளும்படி அம்மாவிடம் கெஞ்சினார். 477 00:36:16,009 --> 00:36:18,220 ஆம், அப்போதிருந்து அவர் அம்மா சொல்வதையெல்லாம் கேட்பார். 478 00:36:18,220 --> 00:36:19,680 நாய்க்குட்டி போல அவர் பின்னால் ஓடுவார். 479 00:36:19,680 --> 00:36:21,974 அவர் தன்னை விவாகரத்து செய்துவிட்டு, எல்லாவற்றையும் 480 00:36:21,974 --> 00:36:24,184 எடுத்துக்கொள்வாரோ என்று மிகவும் பயப்படுகிறார். வருத்தமான விஷயம். 481 00:36:24,977 --> 00:36:29,606 மிகவும் வருந்துகிறேன். உன் அப்பா தொடர்பு வைத்திருந்த பெண் யாரென்று தெரியுமா? 482 00:36:29,606 --> 00:36:30,983 ஆம், அவர் பெயர் ஃப்ரெடெரிக். 483 00:36:31,483 --> 00:36:32,776 இதோ இருக்கிறது! 484 00:36:33,277 --> 00:36:34,945 ஓ, நண்பா, ஒன்றின் விலை 600 யூரோக்கள். 485 00:36:35,654 --> 00:36:37,781 ஓ, கவலை வேண்டாம். 486 00:36:37,781 --> 00:36:40,784 என் அம்மா தன்னுடைய கிரெடிட் கார்டை கொடுத்தார். 487 00:36:41,493 --> 00:36:43,787 அதை இங்கே பயன்படுத்த முடியாது. இது எல்லாமே கிரிப்டோ. 488 00:36:43,787 --> 00:36:45,455 உன்னிடம் பிட்காயின் வாலட் இருக்கிறதா? 489 00:36:46,373 --> 00:36:47,374 இல்லை. 490 00:36:48,125 --> 00:36:49,126 மிகவும் மோசம். 491 00:36:49,668 --> 00:36:54,006 பொறு. எனக்கு உதவி செய்தால் ஐந்து சதவீதம் கமிஷன் தருகிறேன். 492 00:36:55,174 --> 00:36:56,216 நிஜமாகவா? 493 00:36:56,216 --> 00:36:57,301 ஆம். 494 00:36:59,887 --> 00:37:00,929 சரி. 495 00:37:01,722 --> 00:37:03,307 மீண்டும் விஷயத்துக்கு வருவோம், நண்பா. 496 00:37:05,058 --> 00:37:07,186 முதலில் நாம் ஒரு கணக்கைத் தொடங்க வேண்டும். 497 00:37:11,356 --> 00:37:12,357 ஹெஸ்ஸெல் 498 00:37:15,277 --> 00:37:17,654 - ஹலோ? - ஹலோ, நான் பாதிரியார் ஷேஃபர். 499 00:37:17,654 --> 00:37:18,947 நான் ஒரு மதகுரு, 500 00:37:18,947 --> 00:37:20,991 ஆனால் நம்பிக்கை நெருக்கடியில் இருக்கிறேன். 501 00:37:20,991 --> 00:37:23,035 இருந்தாலும், வாடிகனை தவிர 502 00:37:23,035 --> 00:37:24,620 - நான் சிறந்த பேயோட்டுபவராகவும்... - நிறுத்து. 503 00:37:24,620 --> 00:37:25,537 என்ன? 504 00:37:25,537 --> 00:37:27,915 பாதிரியார் ஷேஃபர் வேஷம் வேண்டாம் என்று ஒப்புக்கொண்டோம். 505 00:37:27,915 --> 00:37:29,166 சரி, நான் நினைத்தேன்... 506 00:37:29,166 --> 00:37:31,502 அப்பா, இல்லை. அம்மா சொல்வது சரிதான். அது முட்டாள்தனமானது. 507 00:37:31,502 --> 00:37:33,337 நல்லது. அப்போது நான்... 508 00:37:33,337 --> 00:37:36,131 ஹலோ, என் கார் பழுதடைந்துவிட்டது, என் செல்ஃபோனில் சார்ஜ் இல்லை. 509 00:37:36,131 --> 00:37:38,008 தயவுசெய்து நான் ஒரு அழைப்பு செய்துகொள்ளலாமா? 510 00:37:38,884 --> 00:37:40,135 - ஆம், நிச்சயமாக. - ஆம். 511 00:37:40,135 --> 00:37:41,720 - இது பரவாயில்லை. - இது பரவாயில்லை. 512 00:37:41,720 --> 00:37:44,973 நீ உள்ளே நுழைந்ததும், அவனை எப்படியாவது அறையிலிருந்து வெளியே போகவைத்துவிட்டு, 513 00:37:44,973 --> 00:37:46,266 பிறகு பக்கை பொருத்த வேண்டும். 514 00:37:49,144 --> 00:37:50,646 அதுதான் கேமரா. 515 00:37:51,188 --> 00:37:53,774 - சரி. - அதை இலக்கை நோக்கி பொருத்த வேண்டும். 516 00:37:53,774 --> 00:37:56,527 - புரிகிறதா? - ஒரு பிரச்சினையும் இல்லை. 517 00:38:04,451 --> 00:38:05,452 நன்றி. 518 00:38:09,081 --> 00:38:10,415 ஓ, ஆம், சரி. 519 00:38:10,415 --> 00:38:13,210 எட்டு, மூன்று, பூஜ்யம்... 520 00:38:15,629 --> 00:38:18,131 நீங்கள் டயல் செய்த எண் சேவையில் இல்லை. 521 00:38:18,131 --> 00:38:22,678 என்ன? ஹலோ? என் கார் பழுதடைந்ததால் அழைக்கிறேன். 522 00:38:22,678 --> 00:38:24,221 ...தற்போது கிடைக்கவில்லை. 523 00:38:24,972 --> 00:38:26,181 என் பெயரா? 524 00:38:26,682 --> 00:38:28,267 என் பெயர்... 525 00:38:29,059 --> 00:38:30,394 பாதிரியார் ஷேஃபர். 526 00:38:32,271 --> 00:38:35,399 நல்லது. நன்றி. நான் காத்திருப்பேன். 527 00:38:37,776 --> 00:38:39,111 இதற்கு கொஞ்சம் நேரம் ஆகலாம். 528 00:38:51,290 --> 00:38:52,749 கொஞ்சம் தொண்டை உலர்ந்துவிட்டது. 529 00:38:59,298 --> 00:39:00,799 ச்சே. மன்னித்துவிடுங்கள். 530 00:39:02,342 --> 00:39:04,553 - ஒரு கிளாஸ் தண்ணீர் கிடைக்குமா? - நிச்சயமாக. 531 00:39:04,553 --> 00:39:06,763 - ஆம், நன்றி. - மன்னியுங்கள். 532 00:39:16,231 --> 00:39:17,566 சீக்கிரம். 533 00:39:41,715 --> 00:39:42,716 சீக்கிரம். 534 00:39:46,261 --> 00:39:47,721 என்ன செய்கிறீர்கள்? 535 00:39:48,388 --> 00:39:50,516 நானா? நான்... 536 00:39:50,516 --> 00:39:52,768 உண்மையில் நான்... 537 00:39:52,768 --> 00:39:54,144 நான்... 538 00:39:55,229 --> 00:39:57,105 நான் சீக்கிரம் உங்கள் குளியலறையை பயன்படுத்தலாமா? 539 00:40:07,616 --> 00:40:10,160 பூட்டுகளுடன் ஒரு அறை இருக்கிறது. 540 00:40:10,786 --> 00:40:14,915 - என்ன சொன்னீர்கள்? - உங்கள் வீடு நன்றாக இருக்கிறது என்று சொன்னேன். 541 00:40:15,832 --> 00:40:16,667 ச்சே. 542 00:40:18,126 --> 00:40:19,711 உன்னால் உள்ளே போக முடியுமா? 543 00:40:19,711 --> 00:40:21,505 நான் அப்படி நினைக்கவில்லை. 544 00:40:22,923 --> 00:40:24,299 எல்லாம் நலமா? 545 00:40:25,467 --> 00:40:28,011 நான் மலம் கழிக்கிறேன்! 546 00:40:29,304 --> 00:40:30,848 மனைவி என்னைச் சந்தேகப்படுகிறாள். 547 00:40:33,267 --> 00:40:34,351 அவர் என்ன சொன்னார்? 548 00:40:34,351 --> 00:40:40,941 "மனைவி என்னை சந்தேகப்படுவதால் நான் மலம் கழிப்பதாக நினைக்கவில்லை." 549 00:40:41,775 --> 00:40:43,527 "மனைவி என்னை சந்தேகப்படுகிறாள்." 550 00:40:43,527 --> 00:40:47,030 வேலை செய்கிறது. இரண்டு கேமராக்களுமே. 551 00:40:47,531 --> 00:40:49,783 வீட்டுக்குள் அந்நியர்களை உள்ளேவிடாதே என்றேன். 552 00:40:49,783 --> 00:40:51,660 அவர் பாதிரியார் என்று நினைக்கிறேன். 553 00:40:51,660 --> 00:40:53,620 அவர் பாதிரியார் போல தெரியவில்லை. 554 00:40:53,620 --> 00:40:55,455 ஒருவேளை அவர் நம்பிக்கை நெருக்கடியில் இருக்கிறாரா? 555 00:40:56,665 --> 00:40:57,666 பிடித்துவிட்டேன். 556 00:40:58,792 --> 00:40:59,918 என்ன? 557 00:41:00,460 --> 00:41:01,670 நீங்கள் இங்கே நிறுத்தக் கூடாது. 558 00:41:04,423 --> 00:41:05,966 நான் என் கணவனுக்காக காத்திருக்கிறேன். 559 00:41:05,966 --> 00:41:07,467 தெரிகிறது. 560 00:41:07,467 --> 00:41:10,220 ஆனால் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை இங்கே நிறுத்தக் கூடாது. 561 00:41:11,013 --> 00:41:13,098 எனவே, உடனே உங்கள் வண்டியை எடுங்கள். 562 00:41:13,098 --> 00:41:14,683 இல்லையென்றால் வண்டியை டோ செய்வேன். 563 00:41:16,143 --> 00:41:18,562 டோ செய்வீர்களா? ஆனால் நான் உள்ளே இருக்கிறேன். 564 00:41:18,562 --> 00:41:21,523 நீங்கள் இங்கே நிறுத்தியிருப்பதைப் பார்த்து, "ஓ, எவ்வளவு சௌகரியம். அங்கே நிறுத்த 565 00:41:21,523 --> 00:41:24,401 அனுமதி உண்டு என்பது எனக்குத் தெரியாது" என்று யாராவது நினைத்தால்? 566 00:41:24,401 --> 00:41:27,905 பிறகு அவர் தன்னுடைய நண்பர்களிடம் சொல்வார், அவர்கள் அவர்களுடைய நண்பர்களிடம் சொல்வார்கள். 567 00:41:27,905 --> 00:41:30,032 திடீரென்று கார்களால் குழப்பம் ஏற்பட்டுவிடும். 568 00:41:32,284 --> 00:41:35,621 எனவே உடனடியாக நிறுத்தக் கூடாத மண்டலத்திலிருந்து 569 00:41:36,121 --> 00:41:38,957 உங்கள் வாகனத்தை நகர்த்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 570 00:41:42,961 --> 00:41:43,962 அங்கேயா? 571 00:41:58,810 --> 00:42:00,103 அதோடு அடுத்த முறை சீட் பெல்ட்டை அணியுங்கள்! 572 00:42:02,981 --> 00:42:03,982 சரி. 573 00:42:05,817 --> 00:42:07,194 ஆசீர்வதிக்கப்பட்ட... 574 00:42:22,084 --> 00:42:23,669 என்னவொரு நேர விரயம். 575 00:42:42,229 --> 00:42:43,730 பதிவுசெய்யப்பட்ட உரிமையாளரைத் தேடுகிறது 576 00:42:43,730 --> 00:42:45,858 1 முடிவு கிடைத்தது 577 00:42:59,329 --> 00:43:01,915 - அன்பே? ஷாப்பிங் போகிறேன். - நான் அவளைப் பார்த்திருக்கிறேன். 578 00:43:05,627 --> 00:43:07,337 இந்த மாதம் நமக்கு... 579 00:43:07,337 --> 00:43:10,090 பணப் பற்றாக்குறை இருப்பதால் கொஞ்சம் வியந்து, 580 00:43:10,090 --> 00:43:14,386 ஷாப்பிங் செய்வதை கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாமா? 581 00:43:14,386 --> 00:43:15,929 அது அவனுடைய மனைவியா? 582 00:43:17,556 --> 00:43:20,392 உன் சின்ன பன்னி மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? 583 00:43:20,976 --> 00:43:23,729 நிச்சயமாக என் முயல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 584 00:43:27,816 --> 00:43:30,819 ஷாப்பிங். ஷாப்பிங் உன் முயலை மகிழ்ச்சியடைய செய்யும். 585 00:43:48,378 --> 00:43:52,257 - செல்லகுட்டி எலியே. கார்டை கொடு. - தயவுசெய்து. 586 00:43:53,050 --> 00:43:54,051 பை. 587 00:43:59,223 --> 00:44:00,390 சரி, இப்போது என்ன செய்வது? 588 00:44:03,268 --> 00:44:05,938 அவர்களில் ஒருவர் கதவைத் திறக்கும் வரை காத்திருக்க வேண்டும். 589 00:44:08,857 --> 00:44:10,359 நாம் மாறி மாறி கண்காணிக்கலாம். 590 00:44:22,246 --> 00:44:25,707 அந்த நீல நிறத்தில் இருப்பது ஏன் என்னைப் பின்தொடர்கிறது? 591 00:44:25,707 --> 00:44:28,252 அப்பா, அமைதியாக இருங்கள், அது நான்தான். நான் உங்களுக்கு உதவ வந்தேன். 592 00:44:28,836 --> 00:44:29,837 சரி. 593 00:44:33,006 --> 00:44:34,049 பிரச்சினை இல்லையே? 594 00:44:36,218 --> 00:44:38,929 கதவு. அவன் கதவைத் திறக்கிறான். அவன் கதவைத் திறக்கிறான்! 595 00:44:44,393 --> 00:44:45,769 - என்ன? - அவன் கதவைத் திறக்கிறான்! 596 00:44:45,769 --> 00:44:48,564 ஒரு உணவு தட்டு இருக்கிறது. 597 00:44:48,564 --> 00:44:50,232 கண்டிப்பாக உள்ளே யாரோ இருக்கிறார்கள். 598 00:44:51,483 --> 00:44:52,568 அடக் கடவுளே. 599 00:44:53,151 --> 00:44:54,361 ஏதாவது தெரிகிறதா? 600 00:44:55,279 --> 00:44:58,115 சரி, நீ கொஞ்ச நேரம் வெளியே வரலாம். 601 00:44:58,115 --> 00:45:00,534 நாம் தனியாக இருக்கிறோம். 602 00:45:00,534 --> 00:45:02,828 - யார் அது? - அது வாண்டாவா? 603 00:45:02,828 --> 00:45:04,872 அது வாண்டா மாதிரி தெரியவில்லை. 604 00:45:06,832 --> 00:45:08,041 அது யார்? 605 00:45:09,418 --> 00:45:10,961 முட்டாள்தனமாக எதையும் செய்யாதே. 606 00:45:14,173 --> 00:45:18,093 அனிடாவுக்குத் தெரிந்தால் மிகவும் கோபப்படுவாள். 607 00:45:18,093 --> 00:45:19,178 அவன் என்ன சொன்னான்? 608 00:45:19,178 --> 00:45:21,597 "அனிடா ரொம்ப கோபப்படுவாள்" அல்லது அப்படியா ஏதோவா? 609 00:45:21,597 --> 00:45:23,557 அவள் மீண்டும் அந்த மயக்க மருந்தை தருவாள். 610 00:45:23,557 --> 00:45:25,767 அதனால்தான் அவள் எனக்கு மிகவும் பரிச்சயமானவளாகத் தெரிந்தாள்! 611 00:45:26,560 --> 00:45:29,730 அவள் மருத்துவமனையில் பேலியேட்டிவ் பராமரிப்பு செவிலியராக வேலை செய்கிறாள். 612 00:45:31,940 --> 00:45:33,317 என்ன? எனக்குப் புரியவில்லை. 613 00:45:33,317 --> 00:45:36,737 எனவே முன்பு இருந்த பெண்ணும் அந்த வயதானவனும் ஒன்றாக வாழ்கிறார்கள், 614 00:45:36,737 --> 00:45:38,739 நிஜ மனைவியை அடைத்து வைத்திருக்கிறார்கள். 615 00:45:38,739 --> 00:45:39,865 ஏன்? 616 00:45:39,865 --> 00:45:43,452 தெரியவில்லை, அவர்கள் அவளுடைய பராமரிப்பு பணத்தை பெறலாம்... 617 00:45:46,455 --> 00:45:49,333 எதையும் முயற்சிக்காதே. நாம் தனியாக இருக்கிறோம். 618 00:45:51,001 --> 00:45:53,462 - நாம் போலீஸை அழைக்க வேண்டும், சரியா? - இல்லை. 619 00:45:54,254 --> 00:45:58,425 நாம் போலீஸை அழைத்தால், பக் பொருத்தியது நாம்தான் என்று அவர்களுக்குத் தெரிந்துவிடும். 620 00:45:58,425 --> 00:46:00,636 நாம் பெரிய பிரச்சினையில் சிக்கிவிடுவோம். 621 00:46:00,636 --> 00:46:03,555 பிறகு நம்மால் வாண்டாவை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. 622 00:46:03,555 --> 00:46:07,351 ஆனால் அவரை அங்கேயே விட்டுவிட முடியாது. இப்போது என்ன செய்யப் போகிறோம்? 623 00:46:15,067 --> 00:46:17,110 - அது எட்டுகள். - என்ன? 624 00:46:17,110 --> 00:46:19,071 பீட்டில் லைசன்ஸ் பிளேட்டில் இருந்தது. 625 00:46:19,071 --> 00:46:20,989 8L8, BLB இல்லை. 626 00:46:21,657 --> 00:46:24,826 அது பெர்ல்பர்கைச் சேர்ந்தது இல்லை, செக் குடியரசைச் சேர்ந்தது. 627 00:46:24,826 --> 00:46:26,745 செக் குடியரசா? சரி. 628 00:46:26,745 --> 00:46:28,830 இதற்கும் வாண்டா கிளாட்டிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கும் என்று நினைக்கிறாயா? 629 00:46:28,830 --> 00:46:30,832 தெரியவில்லை, ஆனால் நான் கண்டுபிடிப்பேன். 630 00:46:39,716 --> 00:46:42,302 திருமதி. ஹெஸ்ஸெல் எப்படி இருக்கிறார் என்று பார்க்க போலீஸ் ஒருவரை அனுப்பியிருக்கிறது. 631 00:46:43,053 --> 00:46:45,138 ஆனால் நீ உன் பெயரை சொல்லவில்லைதானே? 632 00:46:45,138 --> 00:46:47,850 இல்லை, நிச்சயமாக இல்லை. நான் அக்கறையுள்ள பக்கத்துவீட்டுகாரர் என்றேன். 633 00:46:50,811 --> 00:46:53,480 அம்மா. அப்பா. 634 00:46:54,648 --> 00:46:56,400 அது அவளாக இல்லாமல் போனதற்கு வருந்துகிறேன். 635 00:46:58,318 --> 00:47:00,195 ஆம். நானும்தான். 636 00:47:03,532 --> 00:47:06,326 நீங்கள் சிறுவயதில் எப்போதாவது கண்ணாமூச்சி விளையாடி, அப்போது உலகின் சிறந்த 637 00:47:06,326 --> 00:47:09,580 மறைவிடத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று நினைத்து மிகவும் உற்சாகம் அடைந்திருக்கிறீர்களா? 638 00:47:10,372 --> 00:47:14,960 பிறகு ஒரு கட்டத்தில் அது மிகவும் நல்ல மறைவிடம் என்பதால் ஒருவேளை நம்மை யாரும் கண்டுபிடிக்காமல்... 639 00:47:14,960 --> 00:47:16,962 போய்விடுவார்களோ என்று பதற்றமடைந்திருக்கிறீர்களா? 640 00:47:19,840 --> 00:47:21,175 அதோ இருக்கிறது. 641 00:47:21,175 --> 00:47:23,468 {\an8}எனவே ஒரு கட்டத்தில் நீங்கள் வேண்டுமென்றே மாட்டிக்கொள்வீர்கள். 642 00:47:26,346 --> 00:47:28,348 "சந்தர்ஷெய்மில் அசுர வேட்டை." 643 00:47:35,814 --> 00:47:39,443 {\an8}ஏனென்றால் விளையாட்டின் அழகு நிஜத்தில் மறைந்துகொள்வதில் இல்லை... 644 00:47:39,443 --> 00:47:41,153 {\an8}- வாண்டா. - ...அது... 645 00:47:42,279 --> 00:47:43,530 குடும்பம் - நாள் 0 - சுற்றுச்சூழல் 646 00:47:43,530 --> 00:47:44,865 ...கண்டுபிடிக்கப்படுவதில் இருக்கிறது. 647 00:48:02,174 --> 00:48:04,635 ஸோல்டன் ஸ்பிராண்டெல்லியின் கதையை அடிப்படையாகக் கொண்டது 648 00:48:40,128 --> 00:48:42,130 வசனத் தமிழாக்கம் அருண்குமார்