1 00:00:33,368 --> 00:00:36,162 இன்று, தீவில் செமி-ரெகுலர் கடற்கரையோர வடிவப் போட்டிகள் நடப்பதால் 2 00:00:36,246 --> 00:00:38,331 விளையாட்டின் உற்சாகத்தை காற்றிலேயே உணர முடிகிறது! 3 00:00:38,415 --> 00:00:40,834 இப்போது கேட்க ஆரம்பித்த நேயர்களுக்கு சுருக்கமாக, லீப்ஸ்ட்ராவகான்சா போட்டியில், 4 00:00:40,917 --> 00:00:43,545 பார்வையாளர்களின் செல்வாக்கைப் பெற்றிருக்கும் டிரையாங்கிள், தன் இலக்கை நோக்கி நகர்கிறார்! 5 00:00:47,132 --> 00:00:48,758 அவருடைய கவனத்தைக் காண வேண்டும். 6 00:00:50,719 --> 00:00:52,095 இதோ டிரையாங்கிள் புறப்பட்டுவிட்டார்! 7 00:00:59,144 --> 00:01:00,312 அவர் போவதைப் பாருங்கள்! 8 00:01:04,940 --> 00:01:07,235 மக்களே, நாம் இங்கேக் காண்பதை வர்ணிக்க 9 00:01:07,319 --> 00:01:08,862 கம்பீரம் என்ற சொல் போதாது. 10 00:01:12,449 --> 00:01:16,536 இதைக் காண வேண்டும். தனிப்பட்ட வகையில் சிறப்பான வெளிப்பாடு. 11 00:01:24,211 --> 00:01:27,214 நன்கு பயிற்சி செய்திருந்தால் தான் ஸ்குயர் இவரின் இந்த வெளிப்பாட்டிற்கு போட்டி ஆக முடியும். 12 00:01:32,260 --> 00:01:36,014 தற்போதைய சாம்பியனான ஸ்குயருக்கு டிரையாங்கிளின் தாவலைப் பற்றி கவலையில்லை. 13 00:01:39,184 --> 00:01:40,352 சிறந்த தொடக்கம்! 14 00:01:41,061 --> 00:01:43,355 இதுவரை எனது லீப்ஸ்ட்ராவகான்சா வர்ணனையில், எந்த வருடமும் 15 00:01:43,438 --> 00:01:45,232 இது போன்ற ஒரு வலிமையான அணுகுமுறையைப் பார்த்ததே இல்லை. 16 00:02:00,080 --> 00:02:02,040 வெற்றியின் இடைவெளி மிகவும் குறைவாக இருக்கப்போகிறது. 17 00:02:04,626 --> 00:02:06,127 ஸ்குயருக்கு தான் வெற்றி! 18 00:02:07,587 --> 00:02:11,841 இல்ல! 19 00:02:13,510 --> 00:02:15,971 இல்லை! எனக்கு மீண்டும் போட்டியிடணும்! 20 00:02:16,054 --> 00:02:18,682 கண்டிப்பா நீ அதைத் தான் விரும்புவ, டிரையாங்கிள். கண்டிப்பா விரும்புவ. 21 00:02:31,069 --> 00:02:32,153 நான் ஜெயிச்சுட்டேன். 22 00:02:39,661 --> 00:02:41,329 -ஹே, சர்கிள். -ஹா ஹா! 23 00:02:41,413 --> 00:02:43,415 சர்கிள்! வா, எங்களுடன் சேர்ந்துக்கோ! 24 00:02:43,498 --> 00:02:45,667 ஆம், எனக்கு இன்னும் நல்ல போட்டியாளர் வேணும். 25 00:02:46,751 --> 00:02:49,671 வேண்டாம் நன்றி. இதெல்லாம் எனக்கு வேண்டாம். 26 00:02:50,463 --> 00:02:51,965 உனக்கு வேண்டாமா? 27 00:02:54,009 --> 00:02:55,635 அவளுக்கு வேண்டாமா? 28 00:02:57,345 --> 00:03:00,265 "டிரையாங்கிள் மற்றும் ஸ்குயரின் பெரும் விளையாட்டு." 29 00:03:02,267 --> 00:03:07,314 எனக்குப் புரியலை, ஸ்குயர். அவளுக்கு வேண்டாமா? நம்ம போட்டி அற்புதம். 30 00:03:07,814 --> 00:03:10,275 எனக்கு யோசிச்சு, குழம்பிப் போய், வயித்த வலிக்குது. 31 00:03:10,358 --> 00:03:14,029 நம்முடைய அற்புதமான விளையாட்டுல பங்கெடுக்க ஏன் சர்கிளுக்கு விருப்பமில்லை? ரொம்ப அற்புதமானதாலா? 32 00:03:14,112 --> 00:03:17,157 அது மட்டும் தான் கொஞ்சம் அர்த்தமுள்ளதா எனக்குப் படுது. 33 00:03:17,240 --> 00:03:19,242 இருந்தாலும், இன்னொரு பக்கம்... 34 00:03:20,535 --> 00:03:21,661 ஓஓ, இல்லை. 35 00:03:22,162 --> 00:03:24,289 என்ன, என்ன? என்ன? 36 00:03:24,372 --> 00:03:25,790 நான் சொல்றதை கேட்க நீ விரும்ப மாட்ட. 37 00:03:25,874 --> 00:03:27,042 என்ன? 38 00:03:27,125 --> 00:03:30,253 நம்ம ஆட்டம் அவ்வளவு அற்புதமா இல்லைன்னா? 39 00:03:30,337 --> 00:03:36,218 நம்ம ஆட்டம் மோசமானா? 40 00:03:36,968 --> 00:03:38,678 ஸ்குயர்! நம்பிக்கையோட இரு. 41 00:03:38,762 --> 00:03:41,932 நம்ம ஆட்டம் மோசமானதெல்லாம் இல்லை. அதுல எல்லாமே இருக்கு. 42 00:03:42,015 --> 00:03:46,645 குதிக்குறது, தாவுறது, காகிள்ஸ். அதுல எதை விரும்ப மாட்ட சொல்லு? 43 00:03:46,728 --> 00:03:48,021 என்ன நடந்ததுன்னு எனக்குப் புரிஞ்சு போச்சு. 44 00:03:48,104 --> 00:03:49,898 இந்த ஆட்டத்தின் சிறப்பான தன்மையைப் பத்தி யோசிக்க 45 00:03:49,981 --> 00:03:52,692 சர்கிளுக்கு போதுமான நேரம் கிடைச்சிருக்காது. 46 00:03:53,235 --> 00:03:55,111 இப்போது, அது உண்மையா எனத் தெரியவில்லை. 47 00:03:56,529 --> 00:03:58,448 ஆமாம், நீ சொல்றது சரியா இருக்கலாம். 48 00:03:59,074 --> 00:04:00,450 எனவே, நாம என்ன செய்யலாம்? 49 00:04:11,795 --> 00:04:13,922 சரி, ஹலோ உங்களத்தான், ஸ்குயர் நண்பனே. 50 00:04:14,881 --> 00:04:16,591 ஹலோ, டிரையாங்கிள். 51 00:04:16,675 --> 00:04:17,759 ஒண்ணு கேட்கணும், 52 00:04:17,841 --> 00:04:22,556 எங்களுடைய இந்த ரொம்ப நல்ல ஆட்டத்தை இன்னொரு சுற்று ஆட நீ தயாரா இருக்கியா? 53 00:04:24,516 --> 00:04:29,020 அதாவது கொஞ்சமும் சலிப்புத் தட்டாத, நாம கற்பனை செய்த அந்த 54 00:04:29,104 --> 00:04:31,439 சூப்பர் அற்புதமான ஆட்டத்தை சொல்றயா? 55 00:04:31,523 --> 00:04:34,776 கண்டிப்பா. அதே தான், இப்போ பாரு! 56 00:04:39,948 --> 00:04:42,617 அவங்களோட மிகச் சிறப்பான வெளிப்பாடு இல்ல, ஆனாலும் பரவாயில்லை. 57 00:04:43,159 --> 00:04:44,911 நல்வாழ்த்துக்கள். 58 00:04:44,995 --> 00:04:46,913 அடடே, என்ன ஒரு வேகம். 59 00:04:46,997 --> 00:04:51,042 சர்கிள். நான் அங்கே உன்னைப் பார்க்கலை. வா. வந்து முயற்சி பண்ணு. 60 00:04:51,126 --> 00:04:52,627 நான் சீக்கிரமா விதிகளைச் சொல்லிடறேன். 61 00:04:52,711 --> 00:04:55,380 சில சமயத்துல, சில விஷயங்கள் ரொம்ப அற்புதமானாலும், 62 00:04:55,463 --> 00:04:57,257 அதுவே குழப்பிவிடும். 63 00:04:58,300 --> 00:04:59,509 வேண்டாம், எனக்குத் தேவையில்லை. 64 00:05:00,093 --> 00:05:04,639 சர்கிள், எங்க ஆட்டம் மோசமா இருக்குன்னு நீ நினைக்குறயா? 65 00:05:06,516 --> 00:05:08,268 இல்லை. 66 00:05:08,351 --> 00:05:11,980 அது கொஞ்சம்... கிறுக்குத்தனமா இருக்கு. 67 00:05:12,981 --> 00:05:14,149 கிறுக்குத்தனமாவா? 68 00:05:14,232 --> 00:05:15,483 நீங்க ரெண்டு பேரும் ஜாலியா இருங்க. 69 00:05:21,990 --> 00:05:23,158 அவள் சொன்னதைக் கேட்டயா? 70 00:05:23,241 --> 00:05:26,369 "கிறுக்குத்தனம்," என்கிறாளே. இதுல என்ன கிறுக்குத்தனம் இருக்கு? 71 00:05:28,413 --> 00:05:30,790 சர்கிளுக்கு, அவள் என்ன பேசுறான்னு, அவளுக்கேத் தெரியலை. 72 00:05:30,874 --> 00:05:33,209 அவளுக்கு அவ என்ன பேசுறான்னு தெளிவாத் தெரியுது. 73 00:05:33,293 --> 00:05:35,545 அவளுக்கு நம்ம ஆட்டம் பிடிக்கலை. 74 00:05:35,629 --> 00:05:37,505 ஆம், அதுக்காக நாம என்ன செய்யணும்? 75 00:05:37,589 --> 00:05:39,591 வெறுமனே நம்ம ஆட்டத்தை நாம அமைதியா என்ஜாய் பண்ணலாம் 76 00:05:39,674 --> 00:05:42,135 மத்தவங்க நம்ம ஆட்டத்தைப் பத்தி என்ன நினைக்கிறாங்கன்னு, நமக்கென்ன கவலை? 77 00:05:44,846 --> 00:05:49,059 இல்ல! இல்ல, இல்ல. நாம இந்த ஆட்டத்தை இன்னும் நல்லதாக்கணும். 78 00:05:49,142 --> 00:05:51,519 சரியாதான் சொல்ற. நாம இதை நிஜமாவே இன்னும் நல்லதாக்கிட்டால், 79 00:05:51,603 --> 00:05:54,522 அவ நம்முடன் ஆட்டம் ஆட அவளே விரும்பி வருவாள். 80 00:05:54,606 --> 00:05:56,691 ஆமாம். ஒவ்வொரு தாவலுக்கு அப்புறமும் பல போஸ்கள். 81 00:05:56,775 --> 00:05:58,109 ஒரு டான்ஸ் ரூடீன். 82 00:05:58,193 --> 00:06:01,279 பரிசுக்கோப்பையில் இன்னும் அதிகமான சீவீட்! 83 00:06:01,363 --> 00:06:03,323 இப்போது தான் உனக்கு புரியுது. வேற என்ன? 84 00:06:03,406 --> 00:06:05,367 வேறென்ன? வேற என்ன? இன்னும், இன்னும். 85 00:06:23,593 --> 00:06:24,844 இதைப் பாரு. 86 00:06:33,812 --> 00:06:34,896 என்ன? நீ என்ன நினைக்கிறாய்? 87 00:06:35,313 --> 00:06:36,606 ரொம்ப நல்லாயிருக்கு. 88 00:06:38,567 --> 00:06:39,568 சரி. 89 00:06:40,235 --> 00:06:41,236 பை. 90 00:06:50,537 --> 00:06:54,958 சரி, சில குறைபாடுகளை சரி செய்வோம், ஆனால், புதிய போஸ்களுக்கு நல்ல வரவேற்பு தான். 91 00:06:55,041 --> 00:06:57,294 -நான் நினைக்கிறேன், அடுத்த முயற்சிக்கு... -இல்லை. 92 00:06:57,794 --> 00:07:00,547 -என்ன? "இல்ல"ன்னா என்ன அர்த்தம்? -"இல்ல"ன்னு அர்த்தம். 93 00:07:00,630 --> 00:07:03,758 தீவுலயே, சர்கிள் தான் மூத்தவள், அதோட அவள் தான் புத்திசாலியும் கூட, 94 00:07:03,842 --> 00:07:07,053 அதனால அவள் நம்ம ஆட்டம் கிறுக்குத்தனமா இருக்குன்னா, அவ சொல்றது சரியாயிருக்கலாம். 95 00:07:07,596 --> 00:07:12,017 அதுவுமில்லாம, நாம தான் அதை உருவாக்கினோம் என்பதால, நாமும் கிறுக்கா இருக்கலாம். 96 00:07:12,767 --> 00:07:14,603 அப்போ நாம என்ன செய்யலாம்? என்ன... 97 00:07:15,103 --> 00:07:16,938 நாம என்ன மாதிரி ஆட்டம் ஆதணும்? 98 00:07:17,439 --> 00:07:21,568 ஆட்டங்கள் எல்லாம் கொஞ்சம் கிறுக்குத்தனம் தான், டிரையாங்கிள். நாம இனிமேல ஆட்டம் ஆட வேண்டாம். 99 00:07:21,651 --> 00:07:23,528 இப்போ, நாம வெறுமனே விஷயங்களைப் பார்ப்போம். 100 00:07:24,529 --> 00:07:27,782 அப்படி தான் இருக்கணும்னா அப்படித் தான் இருக்கும். 101 00:07:30,076 --> 00:07:31,161 தோற்பவன். 102 00:07:33,872 --> 00:07:38,376 அடடே. நாம விளையாடின அந்த மோசமான ஆட்டத்தை விட இது எவ்வளவு நல்லாயிருக்கு. 103 00:07:38,793 --> 00:07:41,254 ஆமாம், ஆமாம். இன்னும் ரொம்ப சீரியஸ் தான். 104 00:07:41,338 --> 00:07:44,507 முற்றிலும் சீரியஸ். இதுல கிறுக்குத்தனமே கிடையாது. 105 00:07:44,591 --> 00:07:47,761 ஒரு துளியும் இல்லை. அது ரொம்ப நல்லது, இல்லையா? 106 00:07:48,303 --> 00:07:49,346 ரொம்ப நல்லது தான். 107 00:08:00,899 --> 00:08:02,359 நாம அந்த மோசமான ஆட்டத்தை ஆடுறோம்னு 108 00:08:02,442 --> 00:08:05,904 சர்கிள் நினைக்கிறான்னு தெரிஞ்சுக்கிட்டு, இங்கே சும்மா உட்கார்ந்திருக்க முடியலை! 109 00:08:05,987 --> 00:08:08,031 நாம அதை விட்டுட்டோம்னு அவகிட்டச் சொல்லணும். 110 00:08:08,114 --> 00:08:11,743 ஆமாம். நாம இந்த தருணத்துல அதை தான் விளையாடிட்டு இருக்கோம்னு அவ நினைக்கலாம். 111 00:08:12,619 --> 00:08:15,288 இல்ல, இல்லயில்ல. உன்னால கற்பனை செய்ய முடியுதா? 112 00:08:15,830 --> 00:08:18,166 நாம அங்கே மேலே நடந்துப் போய், அப்புறம்... 113 00:08:18,250 --> 00:08:22,254 சர்கிளிடம் போய், நாங்க இனி அந்த ஆட்டத்தை விளையாடப் போறதில்லைன்னு சொல்றதை. 114 00:08:22,337 --> 00:08:24,881 அப்புறம் நாம புத்தியுள்ளவங்கன்னு அவ மீண்டும் நினைப்பாளா? 115 00:08:24,965 --> 00:08:26,424 அதைக் கண்டுப்பிடிக்க, ஒரே ஒரு வழி தான் இருக்கு. 116 00:08:29,928 --> 00:08:30,929 ஷ்ஷ், ஷ்ஷ். கேளுங்க. 117 00:08:31,471 --> 00:08:32,556 நான் நினைக்கிறேன் அது... 118 00:08:39,813 --> 00:08:40,855 சர்கிள்? 119 00:08:42,023 --> 00:08:45,944 டிரையாங்கிள்! ஸ்குயர்! ஹே! 120 00:08:47,404 --> 00:08:49,072 நீ என்ன... நீ என்ன... 121 00:08:49,155 --> 00:08:50,865 நீ இங்கே என்ன செய்யற? 122 00:08:50,949 --> 00:08:54,786 நாங்க அந்த கிறுக்குத்தனமான ஆட்டத்தை விட்டுட்டோம்னு சொல்லலாம்னு வந்தோம். 123 00:08:54,869 --> 00:08:58,999 ஆம். என்ன... மன்னிக்கணும்... நீ என்ன செய்யற? 124 00:08:59,958 --> 00:09:02,878 இதுவா... ஒண்ணுமில்லை. 125 00:09:02,961 --> 00:09:06,506 அதாவது, சரி, சில சமயத்துல நான் அதுபோல சின்ன விளையாட்டுகளை ஆடுவேன். 126 00:09:06,590 --> 00:09:10,093 தலையைச் சுத்தும் வரை, இப்படி உருண்டு போறது, அப்போ எல்லாமே பார்க்க... 127 00:09:11,887 --> 00:09:12,888 விசித்திரமா இருக்கும். 128 00:09:15,640 --> 00:09:19,269 ஆமாம். நீங்க ரேண்டு பேரும்... நீங்களும் செய்து பார்க்குறீங்களா? 129 00:09:20,312 --> 00:09:23,690 இல்லை, இல்ல. அது... இல்ல, பரவாயில்லை. 130 00:09:23,773 --> 00:09:27,944 நாங்க தொந்தரவு செய்ய விரும்புல, இது. 131 00:09:28,653 --> 00:09:31,239 நல்லது. எனக்குப் புரியுது. எனவே... 132 00:09:33,408 --> 00:09:35,118 நாம போகப்போறோம். 133 00:09:35,201 --> 00:09:36,369 ஆமாம். 134 00:09:36,453 --> 00:09:42,042 உறுதியா தான் சொல்றீங்களா? இங்கே உருளுவதுக்கு நிறைய இடம் இருக்கு... 135 00:09:42,125 --> 00:09:43,919 இல்ல, இல்ல. நாங்க வரலை. 136 00:09:44,002 --> 00:09:45,503 ஆமாம், ஆம். அது வந்து... 137 00:09:45,587 --> 00:09:47,005 எங்களுக்கானது இல்லை இது. 138 00:09:47,088 --> 00:09:48,590 அதே தான். பொறு. 139 00:09:48,673 --> 00:09:52,219 -என்ன? -இது எங்களுக்கு வேண்டாம். 140 00:09:52,302 --> 00:09:55,430 ஆமாம். இது எங்களுக்கு வேண்டாம். 141 00:09:55,513 --> 00:09:58,892 எங்களுக்கு இது வேண்டாம். தேவையில்லை. 142 00:09:58,975 --> 00:10:00,393 சரி, விடு. 143 00:10:00,477 --> 00:10:03,980 -சரி, ஒருவேளை உங்க மனசு மாறினால்... -வேண்டாம். வேண்டாம். 144 00:10:04,064 --> 00:10:06,149 எங்களுக்கு வேண்டாம். இது வேண்டாம். தேவையில்லை... 145 00:10:06,233 --> 00:10:08,109 வந்து, எனக்கு இது நல்ல வேடிக்கை எனத் தோன்றியது. 146 00:10:15,575 --> 00:10:17,994 -ஹே! -அப்படி தான்! 147 00:10:26,545 --> 00:10:29,839 இன்றிரவு, சர்கிள், ஸ்குயர் மற்றும் டிரையாங்கிள் 148 00:10:29,923 --> 00:10:33,468 எல்லோரும் ரொம்ப ஸ்பெஷலான ஒரு வான்வெளி நிகழ்வை காணப்போகிறார்கள். 149 00:10:35,345 --> 00:10:39,224 நான் ஒரு வால் நட்சத்திரத்தைப் பார்த்ததாக ஞாபகமே இல்லை. 150 00:10:39,307 --> 00:10:41,893 எனக்கும் தான். இத்தனைக்கும் நான் எல்லாத்தையும் சிறப்பா கவனிப்பேன். 151 00:10:41,977 --> 00:10:43,645 நான் எல்லா வகையான விஷயத்தையும் எப்போதும் பார்க்குறேன். 152 00:10:46,523 --> 00:10:48,817 இதுக்கு மீட்டியோர் ஷவர்னு பேர் வச்சிருக்காங்க. 153 00:10:48,900 --> 00:10:54,489 237 வருஷங்களா, இந்தத் தீவுல இதுப் போல ஒண்ணை யாரும் பார்த்ததேயில்லை. 154 00:10:54,573 --> 00:10:56,866 இன்னிக்கி ராத்திரி ரொம்ப ஸ்பெஷல் தான். 155 00:10:56,950 --> 00:11:00,203 சர்கிள்? எதனால வால் நட்சத்திரம் வானத்துலேர்ந்து விழுது? 156 00:11:00,287 --> 00:11:05,208 -உண்மையில அதெல்லாம் நட்சத்திரம் இல்லை, ஆனால்... -நிச்சயமா வால் நட்சத்திரங்கள் ரொம்ப வேகமாப் போகும்! 157 00:11:05,292 --> 00:11:07,127 -ஆமாம், ஆனால்... -இப்படி... 158 00:11:09,296 --> 00:11:10,297 ஆமாம்! 159 00:11:12,841 --> 00:11:16,011 ஆமாம், நிச்சயமா, அது "எனக்கு வழியை விடு! நான்..." 160 00:11:16,094 --> 00:11:18,096 "வால்நட்சத்திரம்." 161 00:11:18,680 --> 00:11:20,849 -அதாவது, என்னால் வேகமா விழ முடியும், ஆனால்... -சரி. அருமை. 162 00:11:20,932 --> 00:11:22,225 ஒரு வால் நட்சத்திரம்! 163 00:11:24,686 --> 00:11:25,812 அடடா, அடடா! 164 00:11:26,897 --> 00:11:29,649 பார்க்கறதுக்கு, வால் நட்சத்திரங்கள் முக்காலும், முட்டைகளைப் போல தான் இருக்கும். 165 00:11:29,733 --> 00:11:31,151 இது ஒரு முட்டை. 166 00:11:31,234 --> 00:11:32,360 எனக்குத் தெரியும். 167 00:11:33,570 --> 00:11:35,488 இப்போது, அது எங்கிருந்து வந்தது? 168 00:11:37,240 --> 00:11:38,950 உன்னை வீடு சேர்க்கிறோம், குட்டி. 169 00:11:44,039 --> 00:11:46,124 ஆமாம், இதுக்கும் உனக்கும் பொருத்தம் தான். 170 00:11:47,167 --> 00:11:48,335 எல்லோரும் ஒரே கூட்டிலிருந்தவர்கள் தான். 171 00:11:50,921 --> 00:11:55,050 திடீரென, சர்கிள் தனிமையை உணர்ந்தாள். 172 00:11:55,133 --> 00:11:58,094 இங்கிருந்து தான் நீ வந்த. இது தான் உன் வீடு. 173 00:11:59,429 --> 00:12:02,224 சர்கிள்! டிரையாங்கிள் மீண்டும் விழுந்துட்டான். 174 00:12:02,307 --> 00:12:04,309 அந்த மரத்தின் வேர் என்னைத் தாக்கியது! 175 00:12:05,977 --> 00:12:07,437 உன்னை பத்திரமா பார்த்துக்கொள், குட்டி. 176 00:12:08,230 --> 00:12:12,192 டிரையாங்கிள் எத்தனை முறை உனக்கு சொல்றது? 177 00:12:12,275 --> 00:12:15,111 மரங்களை உதைச்சதால பிரச்சினைகள் தீராது. 178 00:12:17,864 --> 00:12:19,658 அது யாரோட முட்டையா இருக்கும்னு 179 00:12:21,868 --> 00:12:23,495 ரொம்ப அழகான கோழிக் குஞ்சோ? 180 00:12:26,248 --> 00:12:28,208 பறக்குற ஆமையா இருக்கலாம். 181 00:12:30,043 --> 00:12:31,503 அதெல்லாம் கடற்பறவைகளின் முட்டைகள். 182 00:12:31,586 --> 00:12:33,296 ஆனால் உங்க ஐடியாக்களும் நல்லா தான் இருக்கு. 183 00:12:35,632 --> 00:12:36,925 பாரு. 184 00:12:43,306 --> 00:12:44,307 அடடே! 185 00:12:44,849 --> 00:12:47,352 அட, என்ன ஆச்சரியம்! 186 00:12:47,435 --> 00:12:51,690 ஸ்குயரும் டிரையாங்கிளும் அதைப்போல இதுவரை பார்த்ததே இல்லை. 187 00:12:55,443 --> 00:12:57,571 இது அற்புதம் தான். 188 00:12:57,654 --> 00:13:00,407 ஆம். நல்லா தான் இருக்குன்னு நினைக்கிறேன். அவை இன்னும் நெருக்கமா இருக்கும்னு நினைச்சேன். 189 00:13:02,784 --> 00:13:03,994 நல்லது! 190 00:13:06,371 --> 00:13:08,206 -அடடே! -அது அற்புதமா இருந்தது! 191 00:13:10,458 --> 00:13:13,253 சர்கிளுக்கு மட்டும் ஏனோ இது சரியாகப் படவில்லை. 192 00:13:14,004 --> 00:13:15,005 ஜாக்கிரதை! 193 00:13:23,889 --> 00:13:26,558 சரி, அது ரொம்ப கிட்டத்துல வந்திடுச்சே! 194 00:13:26,641 --> 00:13:28,393 நாம இன்னும் உயிரோட தான் இருக்கோமா? 195 00:13:28,476 --> 00:13:31,396 அடக் கடவுளே! நாம என்ன பேய்களா? 196 00:13:32,063 --> 00:13:33,732 உன்னைப் பிடிச்சுக்க ஆவலா இருக்கு! 197 00:13:33,815 --> 00:13:36,860 டிரையாங்கிள்! ஒரு பேய் இன்னொரு பேயைப் பிடிக்க முடியாது. 198 00:13:36,943 --> 00:13:39,571 ஒரு பேய் தனக்கு வேண்டிய எதை வேணும்னாலும் பிடிச்சுக்கலாம். 199 00:13:39,654 --> 00:13:42,282 ஒரு பாறையைக் கூட பிடிச்சுக்கலாம். ஒரு காயைப் பிடிச்சுக்கலாம்... 200 00:13:42,365 --> 00:13:43,950 நாம பேய்கள் இல்லை. 201 00:13:44,451 --> 00:13:46,036 -எலிகள். -நான் சொல்றதக் கேளு. 202 00:13:46,119 --> 00:13:50,123 பெரும்பாலான வால் நட்சத்திரங்கள் நம்ம தரைக்கு பக்கத்துல கூட வருவதில்லை. 203 00:13:50,206 --> 00:13:53,293 அவை எரிந்து விடும், இல்லை விண்வெளியில பறந்து போய்விடும். 204 00:13:53,376 --> 00:13:55,503 எனவே, இந்த முறை என்ன ஆச்சு? 205 00:14:02,302 --> 00:14:08,183 ரொம்ப, ரொம்ப, ரொம்ப காலமா நடக்காதது ஏதோ ஒண்ணு நடந்திருக்கு. 206 00:14:10,227 --> 00:14:15,148 நான் யோசிக்கிறேன், இடிச்சதுல ஆவியாகிடுச்சோ? இல்ல, இன்னும் ஆழமா, அந்த வாய்குள்ள இருக்கா? 207 00:14:18,026 --> 00:14:19,402 அது ஒரு கூடு மாதிரி இருக்கு. 208 00:14:19,486 --> 00:14:23,198 அதோட, அது இங்கே என்னுடைய தீவுலேயே இருக்கு. அதோ அந்த தொடுவானத்துக்கு அப்புறம். 209 00:14:24,783 --> 00:14:27,577 சர்கிள், உனக்கு என்னவோ அதைத் தேடிக் கண்டுப்பிடிக்கணும் போல இருக்குற மாதிரி தோணுது. 210 00:14:28,161 --> 00:14:29,204 சரி, நான்... 211 00:14:29,287 --> 00:14:32,457 உங்களுக்கு வேண்டுமா? உங்களுக்கு களைப்பா இல்லையா? 212 00:14:32,540 --> 00:14:34,918 எனக்கு களைப்பே கிடையாது. 213 00:14:35,418 --> 00:14:38,088 அதோட, நல்ல ஏறுகிற மாதிரிஇருந்தால் என் பதட்டத்தைக் குறைக்கும். 214 00:14:38,171 --> 00:14:41,508 வால் நட்சத்திரத்தைத் தேடும் படலத்தில் போகலாம் வாங்க. 215 00:14:42,551 --> 00:14:43,969 ஆமாம் போகலாம்! 216 00:14:44,052 --> 00:14:45,929 எனக்கு இதுபோன்ற சாகஸப்பயணங்கள் பிடிக்கும். 217 00:14:46,972 --> 00:14:49,558 தீவின் அந்தக் கோடியை அடைய, 218 00:14:49,641 --> 00:14:52,644 நம்ம ஹீரோக்கள் மூன்று வகையான நிலப்பரப்புகளைக் கடந்துச் செல்ல வேண்டும். 219 00:14:52,727 --> 00:14:54,729 முதலில், அவர்கள் பாறைகள் நிறைந்த ராக்கி பீச்சை கடக்கணும். 220 00:14:55,188 --> 00:14:58,191 அதைத் தொடர்ந்து அவர்கள் குதித்து ஓடும் ஸ்பார்கிளிங் ஸ்ட்ரீமை கடந்துப் போக வேண்டும். 221 00:15:00,068 --> 00:15:02,445 அதன் பின், டால் பீக் என்னும் உச்சிக்கு ஏறிப் போக வேண்டும். 222 00:15:03,989 --> 00:15:06,491 இன்னொரு பக்கத்தில் என்னப் பார்க்கப் போகிறார்கள்? 223 00:15:13,915 --> 00:15:15,625 நீ எதைப் பத்தி யோசித்துக் கொண்டிருக்கிறாய், சர்கிள்? 224 00:15:16,126 --> 00:15:18,587 நான் அந்த மீட்டியோர் எப்படி இருக்கும்னு யோசிச்சிட்டு இருக்கேன். 225 00:15:19,129 --> 00:15:20,422 நான் சிலவற்றை யோசிச்சு வச்சிருக்கேன். 226 00:15:21,006 --> 00:15:23,341 நான் அவற்றை எல்லாம் சொல்லேன், கேட்போம். 227 00:15:24,050 --> 00:15:25,760 சரி, எனக்கு உறுதியாத் தெரியாது. 228 00:15:25,844 --> 00:15:28,597 ஆனால் அது ரொம்ப அழகா இருக்கும்னு நினைக்கிறேன். 229 00:15:32,434 --> 00:15:33,643 நாம அங்கே போனதும், 230 00:15:33,727 --> 00:15:35,979 முதல்ல பார்க்கவே கஷ்டமா இருக்கலாம். 231 00:15:37,063 --> 00:15:39,524 அதோட, அதுக்கு ரொம்ப தூரம் கீழே இறங்கணும், ஆனால் எனக்குப் பரவாயில்லை. 232 00:15:40,108 --> 00:15:41,568 உனக்குப் படிகளைப் பிடிக்கும் இல்லையா. 233 00:15:42,277 --> 00:15:43,278 ஷ்ஷ், டிரையாங்கிள்! 234 00:15:46,323 --> 00:15:49,784 அடடே! உன்னைப் பாரு. 235 00:15:50,660 --> 00:15:52,787 அது எப்படி சத்தம் எழுப்புதுன்னு பார்க்கலாமா? 236 00:15:52,871 --> 00:15:53,872 ஆமாம். 237 00:16:06,051 --> 00:16:08,386 அது ரொம்ப அழகா இருந்தது, ஸ்குயர். 238 00:16:10,972 --> 00:16:12,265 நிஜமாவே அழகா இருந்ததா? 239 00:16:12,349 --> 00:16:13,516 நான் அப்படி தான் நினைச்சேன். 240 00:16:13,600 --> 00:16:16,645 அது எங்கிருந்து வந்ததுன்னு நினைக்கிற, ஸ்குயர்? அந்த பெரிய கிறிஸ்டல்? 241 00:16:17,979 --> 00:16:20,482 என்ன தெரியுமா? நான் அவ்வளவு எல்லாம் யோசிக்கலை. 242 00:16:20,565 --> 00:16:22,108 யாருக்குக் கவலை, அது எங்கிருந்து வந்தால் என்ன? 243 00:16:22,192 --> 00:16:26,947 அது ஏன் ஒரு பெரிய தீக்காடா இருக்கக்கூடாதுன்னு எனக்குத் தெரியணும்! 244 00:16:31,451 --> 00:16:33,745 அது பெரிய தீப்பந்தம் தான்! 245 00:16:36,998 --> 00:16:39,000 ஒரு ஆர்கனோடு இருப்பது! 246 00:16:43,129 --> 00:16:44,130 இன்னும்! 247 00:16:45,173 --> 00:16:47,884 இன்னும் வேண்டும்! 248 00:16:57,936 --> 00:17:02,482 சரி, உன் கதை ரொம்ப அருமையானது தான். 249 00:17:02,566 --> 00:17:04,776 அதோட, ரொம்ப திரைப்படம் போலவே இருக்கு. 250 00:17:04,859 --> 00:17:05,986 அதோடு பரபரப்பாகவும் தான். 251 00:17:06,069 --> 00:17:07,070 எனக்குத் தெரியும். 252 00:17:08,905 --> 00:17:11,074 அந்தத் தீப்பந்தம் ஏன் இங்கே வந்தது, டிரையாங்கிள்? 253 00:17:11,741 --> 00:17:14,995 -என்ன? -அதாவது, ஏன் இந்த தீவுன்னு கேட்குறேன்? 254 00:17:15,078 --> 00:17:17,330 ஒருவேளை அது எதையோ இங்கே தேடிட்டு வந்திருக்குமா? 255 00:17:18,331 --> 00:17:21,083 தீப்பந்தங்களுக்கு தேர்வு செய்ய முடியாது, சர்கிள். 256 00:17:21,167 --> 00:17:24,004 அவை பத்தி எரியும். 257 00:17:30,510 --> 00:17:31,595 ஹே, அங்கே பாரு. 258 00:17:34,347 --> 00:17:36,892 சர்கிள், நீ ஒரு வால் நட்சத்திரத்தைப் பத்தி என்ன கற்பனை செய்திருக்க? 259 00:17:38,018 --> 00:17:40,020 சரி. நான் சொல்றேன். 260 00:17:41,396 --> 00:17:44,065 தனியா ஒரே ஒரு விண்வெளிப் பாறையின் படம். 261 00:17:45,066 --> 00:17:50,196 அது தனிமையாவும், குளிராகவும் இருக்கும் விண்வெளி சராசரத்தின் வேக்யூமை வேகமா கடந்து வந்து தேடுது. 262 00:17:52,032 --> 00:17:53,491 எல்லா இடத்துக்கும் போகுது. 263 00:17:56,494 --> 00:17:58,496 எல்லாத்தையும் பார்க்குது. 264 00:18:02,709 --> 00:18:07,214 ஆனால் அந்தப் பாறை எப்போதும் தனியாகத் தான் இருக்கும். விண்வெளியே பெரும்பாலும் காலிதானே. 265 00:18:07,297 --> 00:18:09,132 வெறுமனே, ஒரு பெரிய, அகன்ற வெற்று வெளி. 266 00:18:11,009 --> 00:18:13,136 ஆனால் அப்போ ஏதோ ஒன்றை அது ஸ்பெஷலாகப் பார்க்கிறது. 267 00:18:15,472 --> 00:18:18,058 ஒரு சின்ன கிரகத்தில் உள்ள ஒரு சின்னத் தீவு. 268 00:18:18,141 --> 00:18:22,354 அப்படியே மரங்களும், பறவைகளும், மீன்களும் அங்கே துள்ளிக் குதிக்கின்றன. 269 00:18:23,813 --> 00:18:29,027 பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின், அந்த ஸ்பேஸ் ராக் முதல் முறையாக வேகத்தை குறைக்கிறது 270 00:18:29,110 --> 00:18:30,862 இந்த கிரகத்தை நோக்கித் திரும்புகிறது. 271 00:18:30,946 --> 00:18:32,656 -ஏன்? -புவி ஈர்ப்பு தான். 272 00:18:33,156 --> 00:18:35,283 சரி. ஆனால், வந்து, கிராவிட்டி எப்படி செயலாற்றுகிறது? 273 00:18:35,659 --> 00:18:38,328 ஹா! அவனுக்கு விளக்கு, சர்கிள். 274 00:18:38,411 --> 00:18:41,873 அது ஒரு ஈர்ப்பு. ஒரு அவா. 275 00:18:41,957 --> 00:18:45,669 அந்த மீட்டியோர் அந்த கிரகத்தைப் பார்த்ததும் அதுக்கு தன் நடுவுல, ஏதோ இழுத்தது. 276 00:18:49,172 --> 00:18:51,716 அந்த ஸ்பேஸ் ராக் தீர்மானிக்கிறது. 277 00:19:00,934 --> 00:19:03,853 அப்புறம் என்ன? நீ இப்போ நிறுத்த முடியாது! 278 00:19:04,354 --> 00:19:05,647 நாம கிட்டதட்ட வந்துட்டோம்! 279 00:19:06,147 --> 00:19:08,692 அவர்கள் டால் பீக்கின் அருகிலேயே வந்துவிட்டார்கள். 280 00:19:08,775 --> 00:19:10,777 அந்த குன்றுக்கு மறு பக்கமா இருக்கும். 281 00:19:10,860 --> 00:19:12,988 அடக் கடவுளே! 282 00:19:13,071 --> 00:19:15,323 பொறு, உன் கதை எப்படி முடியும்னு எங்களுக்குச் சொல்ல மாட்டாயா? 283 00:19:15,907 --> 00:19:17,784 இல்லை! நாம தயாரா? 284 00:19:17,867 --> 00:19:19,077 -நாங்க தயார். -தயார். 285 00:19:24,082 --> 00:19:26,751 அடடா. அடடா. 286 00:19:30,630 --> 00:19:32,132 ஓஓ, சர்கிள். 287 00:19:32,215 --> 00:19:35,677 அவளுக்கு ஆழ் மனதில் தெரியும், அது வெறும் காலிப் பள்ளம் தான் என. 288 00:19:35,760 --> 00:19:38,388 ஆனால் இன்னும் எதுவும் இருக்கும் என நம்பினாள். 289 00:19:41,558 --> 00:19:43,476 சர்கிள், நீ நலமா இருக்கயா? 290 00:19:46,730 --> 00:19:48,440 தவழ்ந்து-எழுந்து, எல்லோரும் 291 00:19:50,275 --> 00:19:51,276 கவனிக்கவும். 292 00:19:51,359 --> 00:19:56,489 இதோடு நான் நம்ம வால் நட்சத்திரத்தைத் தேடும் படலம் வெற்றி ்அடைந்ததுன்னு அறிவிக்கிறேன். 293 00:19:58,199 --> 00:20:01,286 அது வெறுமனே ஒரு பெரிய ஓட்டை, இல்லையா? இல்ல, அவள் இன்னும் வேறு எதுவும் பார்க்கிறாளா? 294 00:20:01,870 --> 00:20:04,664 இல்லை, டிரையாங்கிள். எனக்கு வேற எதுவும் தெரியலை. 295 00:20:04,748 --> 00:20:09,169 நாம தீவின் மறு பக்கத்துக்கு பயணம் செய்து, ஒரு அரிதான எரிமலை பள்ளத்தைக் கண்டுபிடித்தோம் 296 00:20:09,252 --> 00:20:12,255 அதுவும் வால் நட்சத்திரத்தை மோதியதால் ஆவியானதின் மிச்சம். 297 00:20:12,756 --> 00:20:15,217 இது ரொம்ப ஸ்பெஷல்னு நினைக்கிறேன். 298 00:20:15,842 --> 00:20:16,968 ஆம், இந்த இடத்துல கிட்டாரின் தனி வாசிப்பு இருக்கணும். 299 00:20:22,098 --> 00:20:25,268 ஹே, டிரையாங்கிள். நிச்சயமா அந்த பைன் மரத்தை தொடுவதுல உன்னை ஜெயிப்பேன். 300 00:20:25,352 --> 00:20:27,437 இல்ல, உன்னால முடியாது! 301 00:20:30,607 --> 00:20:32,734 அட, ஆமாம், என்னால முடியுது! ஆம், என்னால முடியும்! 302 00:21:18,738 --> 00:21:19,739 "டிரையாங்கிள்," "ஸ்குயர்" மற்றும் "சர்கிள்" மூன்றயும் அடிப்படையாகக் கொண்டது 303 00:21:19,823 --> 00:21:20,824 எழுதியவர்கள் மெக் பார்நெட், ஜான் கிளாஸ்ஸென் 304 00:22:16,213 --> 00:22:18,215 தமிழாக்கம் அகிலா குமார்