1 00:00:36,621 --> 00:00:39,874 தினமும் இளைப்பாற கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு, ஒரு நல்ல புத்தகத்திலிருந்து 2 00:00:39,958 --> 00:00:42,544 சில பக்கங்களைப் படிப்பது, ஸ்குயருக்குப் பிடிக்கும். 3 00:00:43,712 --> 00:00:45,630 உட்காருவதற்கு, அவனுக்கு மிகவும் பிடித்த இடம் இது தான். 4 00:00:45,714 --> 00:00:49,259 புத்தகம் வாசிக்க, அங்கு தான் ஜன்னலில் இருந்து வரும் வெளிச்சம் போதுமானதாக இருக்கும். 5 00:00:50,051 --> 00:00:53,305 "ஒரு நாள் அதிகாலையில், எலிக்குஞ்சு ஒன்று, ஒரு ஓநாயை சந்தித்து..." 6 00:01:06,401 --> 00:01:09,571 சரி, நீ யாரு? 7 00:01:13,199 --> 00:01:16,536 என்ன ஒரு அழகான, ஆச்சரியமான மரமாக இருக்கிறாய் நீ. 8 00:01:16,620 --> 00:01:19,539 இன்னும் சில அடிகள் வலது பக்கமா வளர்ந்து இருந்தா 9 00:01:19,623 --> 00:01:21,458 எனக்குக் கிடைக்கிற வெளிச்சம் குறையாம இருந்திருக்கும், பரவாயில்லை. 10 00:01:26,129 --> 00:01:29,841 நீ ஒரு வாழை மரமா. என் அதிர்ஷ்டத்தை என்னால நம்பவே முடியலை. 11 00:01:29,925 --> 00:01:32,636 ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரம் ஆயிடுச்சு, எனக்கு வாழைப்பழம் ரொம்ப பிடிக்கும். 12 00:01:34,387 --> 00:01:38,767 இந்த மரம் மிகவும் ஸ்பெஷலான ஒரு மரம் என்று ஸ்குயருக்குத் தெரியும். 13 00:01:38,850 --> 00:01:41,144 அந்தத் தீவில் வாழை மரங்கள் எளிதாக வளர்வதில்லை. 14 00:01:41,228 --> 00:01:44,147 பழங்களில் அவற்றுக்கு பெரும் மதிப்பு இருந்தது. 15 00:01:47,234 --> 00:01:51,404 அட, பரவாயில்லையே! ரெண்டு வாழைப்பழங்கள், எனக்காக மட்டும். 16 00:01:53,365 --> 00:01:57,577 தனக்கு மிகவும் பிடித்த பழத்தை சாப்பிடப் போகும் தருணத்தில், ஸ்குயருக்கு 17 00:01:57,661 --> 00:01:59,287 ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. 18 00:01:59,371 --> 00:02:03,541 தன்னைப் போலவே வாழைப்பழங்களை விரும்பும் இன்னொருவரை அவனுக்குத் தெரியும். 19 00:02:04,626 --> 00:02:05,669 சர்கிள். 20 00:02:06,670 --> 00:02:11,508 இந்த வாழைப்பழங்களில் ஒன்றை சர்கிளுடன் பகிர்ந்தால் என்ன? 21 00:02:11,591 --> 00:02:17,055 அது ஒரு அன்பான செயலாக இருக்குமே. மிகவும் அன்பான செயல் தான். 22 00:02:17,722 --> 00:02:20,475 "ஸ்குயரின்" மிக அன்பான செயல்." 23 00:02:21,768 --> 00:02:24,980 அட, அது என் பெருந்தன்மையை எடுத்துக் காட்டும். 24 00:02:31,778 --> 00:02:33,363 நன்றி, ஸ்குயர். 25 00:02:33,446 --> 00:02:37,867 இது ஒரு அன்பான செயல். ரொம்ப அன்பானது. 26 00:02:37,951 --> 00:02:40,662 உனக்கு நிஜமாவே, ரொம்ப பெருந்தன்மை தான். 27 00:02:40,745 --> 00:02:44,499 நீ என்னோட முக்கியமான, உற்ற நண்பன். 28 00:02:47,210 --> 00:02:49,546 ஹிப், ஹிப், ஸ்குயர்! 29 00:02:49,629 --> 00:02:51,923 நல்வாழ்த்துகள், ஸ்குயர்! 30 00:02:53,675 --> 00:02:57,429 அது தான் "பெருந்தன்மையான ஸ்குயர்" மற்றும் 31 00:02:57,512 --> 00:03:00,932 அவனுடைய அன்பான செயலின் வரலாறும். 32 00:03:05,020 --> 00:03:07,063 எல்லாமே மிகவும் அற்புதமாக அமையும். 33 00:03:07,147 --> 00:03:10,191 ஸ்குயரின் மிக அன்பான செயலை நடைமுறைப்படுத்த இனியும் ஒரு நொடியும் காத்திருக்க முடியாது. 34 00:03:12,235 --> 00:03:13,361 பெரிய கேள்வி. 35 00:03:13,445 --> 00:03:15,780 அதாவது, நாங்க ரெண்டு பேரும் ஏற்கனவே சிறந்த நண்பர்களாக இருந்தாலும், 36 00:03:15,864 --> 00:03:19,492 அந்த வாழைப்பழம் தான் சர்கிளையும் என்னையும் உற்ற நண்பர்களாக்கியது. 37 00:03:19,951 --> 00:03:21,494 டிரையாங்கிளா? ஓ, ஆமாம், நிச்சயமா. 38 00:03:21,578 --> 00:03:25,081 அவங்களுக்கும் ஒருத்தரை ஒருத்தர் தெரியும், ஆனால், சொல்லப் போனா, அவங்க நண்பர்கள் தான். 39 00:03:27,876 --> 00:03:30,128 சரி, புரியுது. புரியுது. அது நல்லது தான். 40 00:03:30,212 --> 00:03:33,173 சர்கிள், அதை கற்பனையே செய்ய முடியாது. 41 00:03:33,256 --> 00:03:36,343 என் தோட்டத்துல இன்னிக்கு வாழைப்பழம் உருவாச்சு. 42 00:03:37,594 --> 00:03:41,514 எனக்கு வாழைப்பழங்கள ரொம்பப் பிடிக்கும். ரொம்ப நன்றி. 43 00:03:47,479 --> 00:03:50,899 அட, நிச்சயமா ரொம்ப நல்லாயிருக்கும். நன்றி. 44 00:03:51,566 --> 00:03:52,567 எப்படி. 45 00:03:52,651 --> 00:03:53,860 மதிய வணக்கம். 46 00:03:53,944 --> 00:03:56,404 மதிய வணக்கம். 47 00:03:56,488 --> 00:03:59,407 சரி, நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்றீங்க, நாம ஒரு சுத்துப் போகலாமா? 48 00:03:59,491 --> 00:04:02,285 "நடந்துட்டு வரலாமா" அப்படின்னு கேட்க இது இன்னொரு வழியா, என்ன? 49 00:04:02,369 --> 00:04:04,788 ஆமாம், ஆனால் இன்னும் கொஞ்சம் சாதாரணம். 50 00:04:05,372 --> 00:04:06,873 எனவே, வாழைப்பழம் எப்படி இருக்கு? 51 00:04:07,666 --> 00:04:10,085 அது, ரொம்ப நல்லாயிருக்கு. 52 00:04:10,168 --> 00:04:13,505 எனக்குப் பிடிச்ச உணவுன்னாலும், ரொம்ப நல்லாயிருக்கு. 53 00:04:13,588 --> 00:04:16,341 இதை எங்கிட்ட கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி, ஸ்குயர். 54 00:04:16,423 --> 00:04:18,634 ஒண்ணுமில்ல, சின்ன விஷயம். 55 00:04:18,718 --> 00:04:20,512 இல்லை. 56 00:04:20,595 --> 00:04:23,390 இவை ரொம்ப அரிதானவை, அழகாவை. 57 00:04:23,473 --> 00:04:28,812 நீ ரெண்டையுமே எங்கிட்ட கொடுத்துட்ட. அது சின்ன விஷயம் இல்லை. அது பெரிசு. 58 00:04:37,404 --> 00:04:38,863 கொஞ்சம் அதிகமாகிடுச்சு. 59 00:04:39,489 --> 00:04:44,202 என்ன தெரியுமா, ஸ்குயர்? உன்னுடைய பெருந்தன்மையைக் கண்டு வியந்துட்டேன். 60 00:04:45,078 --> 00:04:47,205 டிரையாங்கிள், அந்த இன்னொரு வாழைப்பழம் வேணுமா? 61 00:04:47,289 --> 00:04:48,373 இதப் பாருடா. 62 00:04:48,456 --> 00:04:52,043 நிச்சயமா, ஏன் வேண்டாம்? எனக்குத் தெரிந்தவரை, நாம ஒரு முறைதானே வாழப் போறோம். 63 00:04:55,171 --> 00:04:56,298 ஓ, சரி. 64 00:04:56,381 --> 00:04:59,593 நான் இவற்றை முன்னாடியே சாப்பிட்டிருக்கேன் என்பதை மறந்துட்டேன், எனக்குப் பிடிக்கவேயில்லை. 65 00:05:00,260 --> 00:05:01,261 ரொம்ப இனிப்பு. 66 00:05:01,344 --> 00:05:02,345 ஓ, சரி. 67 00:05:07,767 --> 00:05:10,186 எனக்கு அது பிடிக்கவேயில்லை என்றாலும், 68 00:05:10,270 --> 00:05:12,022 அதை சாப்பிட்டு முடிப்பது தான் மரியாதை. 69 00:05:15,191 --> 00:05:17,569 சரி, இனிமேல் நான் இதை சாப்பிடவே மாட்டேன். 70 00:05:19,779 --> 00:05:25,243 இது ரொம்ப... நல்லாயிருந்தது, 71 00:05:25,327 --> 00:05:26,494 ஆனால் நான் போகணும். 72 00:05:27,329 --> 00:05:28,330 உறுதியா தான் சொல்றியா? 73 00:05:28,413 --> 00:05:30,540 இந்த அழகான மலைக்கு இப்போதானே வந்தோம். 74 00:05:30,624 --> 00:05:32,918 இதுவும் இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கு. 75 00:05:33,418 --> 00:05:36,880 ஆமாம், நாம அது மேல கூட இன்னும் ஏறி நிக்கலை. இங்கேயே தான் இருக்கு. 76 00:05:38,965 --> 00:05:42,510 இல்லை. மன்னிக்கணும். நன்றி. வேண்டாம். மன்னிச்சிடு. இல்லை, என்னன்னா... 77 00:05:42,594 --> 00:05:44,971 பரவாயில்லை. போயிட்டுவரேன். நான் போகணும். 78 00:05:50,227 --> 00:05:53,897 தான் நினைத்தபடி விஷயங்கள் நடக்காதது, ஸ்குயருக்கு மிகுந்த கோபத்தைத் தந்தது. 79 00:05:54,981 --> 00:05:57,192 அதற்கு பிறகு, தன் கோபத்திற்காக வருந்தினான். 80 00:05:58,026 --> 00:06:00,946 அதன் பின், கோபப்பட்டதற்காக வருந்தினோமே, என வருத்தப்பட்டான். 81 00:06:02,113 --> 00:06:05,533 தன் அன்பான செயலுக்காக பாராட்டை மட்டும் தான் அவன் எதிர்பார்த்தான். 82 00:06:06,034 --> 00:06:08,286 ஆனால், உண்மையில் அவனுக்கு ஒரு வாழைப்பழமாவது வேண்டும் என்றிருந்தது. 83 00:06:10,413 --> 00:06:13,208 ஸ்குயர் இதை ஈடுகட்ட எண்ணினான். 84 00:06:13,291 --> 00:06:16,711 இந்த வாழைமரம் இனி குலை தள்ளினால், எனக்கு தானே கிடைக்கும். 85 00:06:16,795 --> 00:06:20,590 ஒண்ணு சர்கிளுக்கு. ஒண்ணு எனக்கு. அது கொலை தள்ளும் வரை காத்திருக்க வேண்டும். 86 00:06:21,925 --> 00:06:23,802 வெகு காலம் கடந்து போனது. 87 00:06:24,344 --> 00:06:29,307 நாட்கள், வாரங்கள், மாதங்கள். 88 00:06:29,808 --> 00:06:33,478 ஒரு நாள், ஸ்குயருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. 89 00:06:46,449 --> 00:06:47,993 மதிய வணக்கம், சர்கிள். 90 00:06:48,076 --> 00:06:51,997 என் வாழை மரம் மீண்டும் குலை தள்ளியுள்ளது, ரெண்டு வாழைப்பழம் கிடைச்சுது, அப்போ நான், 91 00:06:52,080 --> 00:06:56,543 "ஹே, ஸ்குயர், நம்ம தோழி சர்கிளோட ஏன் இதை பகிரக்கூடாது?" அப்படின்னு நினைச்சேன். 92 00:06:57,127 --> 00:07:01,339 "ஸ்குயர், உனக்கு ரொம்பவே தாராள மனசு தான், ஆனால் இது ரொம்ப அதிகம். 93 00:07:01,423 --> 00:07:03,300 இது என் மனசை ரொம்ப பரவசமாக்கிடுச்சு." 94 00:07:04,342 --> 00:07:07,095 இது சின்ன விஷயம். அதாவது, சின்ன விஷயமில்லை. 95 00:07:07,178 --> 00:07:11,182 நிச்சயமா இந்த வாழைப்பழங்க ரொம்ப ஸ்பெஷல், அதோட அரிதானவை தான். 96 00:07:11,266 --> 00:07:14,436 ஆனால் என்னைப் பொறுத்தவரை, உனக்கு இதைப் பெற தகுதி இருக்கு. 97 00:07:15,186 --> 00:07:18,481 "நீ என்னோட முக்கியமான, உற்ற நண்பன்." 98 00:07:19,524 --> 00:07:23,194 "மதிய வணக்கம், ஸ்குயர்." ஓ. வணக்கம், சர்கிள். 99 00:07:23,278 --> 00:07:25,780 இப்போ, ஸ்குயர் இந்த உரையாடலை ஒரு ஆயிரம் முறை ஒத்திகை செய்திருந்ததால், 100 00:07:25,864 --> 00:07:30,410 அவனுடைய அன்பான செயலினால் எந்த வித பிரச்சினையும் எழும்ப வாய்ப்பில்லை. 101 00:07:30,493 --> 00:07:31,620 ...நல்ல தோழி, சர்கிள். 102 00:07:32,329 --> 00:07:33,705 சரி, ஒண்ணு உனக்கு. 103 00:07:33,788 --> 00:07:35,749 என் உற்ற தோழி சர்கிளுடன், ஏன் ஒரு பழத்தைப் பகிரக்கூடாது? 104 00:07:35,832 --> 00:07:37,792 என் உற்ற தோழி சர்கிளுடன், ஏன் ஒரு பழத்தைப் பகிரக்கூடாது? 105 00:07:37,876 --> 00:07:39,336 ஒண்ணு உனக்கு, ஒண்ணு எனக்கு. 106 00:07:39,419 --> 00:07:41,671 என் உற்ற தோழி, சர்கிள்... வணக்கம்! 107 00:07:41,755 --> 00:07:44,716 ஹலோ, ஸ்குயர். இனிய நாள், இல்லையா? 108 00:07:46,468 --> 00:07:48,511 நீ எனக்கு "வணக்கம்" சொல்லியிருக்கணும். 109 00:07:51,014 --> 00:07:52,140 என் உற்ற சர்கிள் தோழி. 110 00:07:52,224 --> 00:07:54,517 என் வாழைக் குலை ரெண்டு... அதாவது... 111 00:07:56,061 --> 00:07:57,062 மன்னிக்கணும்? 112 00:08:01,066 --> 00:08:03,109 நிச்சயமா. எனக்கு வாழைப்பழங்கள் பிடிக்குமே. 113 00:08:03,193 --> 00:08:04,194 ஆனால்... 114 00:08:04,277 --> 00:08:08,240 ஹே, இதோ டிரையாங்கிள் வந்தாச்சு! நாம எல்லோரும் ஒரு சுத்து போகலாமா? 115 00:08:08,323 --> 00:08:12,035 ஆனால், ஒண்ணு உனக்கு, ஒண்ணு எனக்கு. 116 00:08:20,835 --> 00:08:25,632 அடடே! இது எவ்வளவு சுவையா இருந்தது, ஆனால் எனக்கு கொஞ்சம் அதிகமாகிடுச்சு. 117 00:08:25,715 --> 00:08:27,634 டிரையாங்கிள், அந்த இன்னொரு பழம் உனக்கு வேணுமா? 118 00:08:28,134 --> 00:08:29,219 ம்ம்-ஹம், ஏன் கூடாது? 119 00:08:30,554 --> 00:08:32,806 பொறு. எனக்கு இது பிடிக்காதே, ஞாபகமில்ல? 120 00:08:34,849 --> 00:08:38,061 ஆனால் அது ரொம்ப பிடிக்கிற ஒருத்தரை எனக்குத் தெரியும். 121 00:08:39,312 --> 00:08:42,524 யாருக்கோ ரொம்ப பிடிக்கும். 122 00:08:48,446 --> 00:08:50,532 சர்கிள்! இது தானே உனக்கு ரொம்பப் பிடிச்சப் பழம், இல்ல? 123 00:08:50,615 --> 00:08:52,367 அதனால தான் ஸ்குயர் உனக்கு எப்போதும் இதையே கொடுத்துட்டு இருக்கான். 124 00:08:52,450 --> 00:08:55,537 இப்போ நானும் உனக்கு என்னுடையதைத் தரேன். 125 00:08:55,620 --> 00:09:00,375 ஆனால், இப்போதான அவளுக்கு அது ரொம்ப அதிகமாகிடுச்சுன்னு சொன்னா, டிரையாங்கிள்? 126 00:09:00,458 --> 00:09:04,004 உண்மைதான், ஆனால் அவ அதை நாளைக்கோ அப்படி எதுவும் சாப்பிடலாமே. அது நல்ல யோசனை. 127 00:09:04,838 --> 00:09:08,550 அடடே, நீ சொல்றது சரிதான். என்னால நாளைக்கு அதை சாப்பிட முடியும். 128 00:09:08,633 --> 00:09:10,051 என்ன ஒரு அன்பான செயல். 129 00:09:10,135 --> 00:09:12,220 நிச்சயமா, டிரையாங்கிள், 130 00:09:12,304 --> 00:09:17,142 நீ என்னோட முக்கியமான, உற்ற நண்பன். 131 00:09:24,107 --> 00:09:25,108 சிறப்பு, ஸ்குயர். 132 00:09:35,493 --> 00:09:37,871 பாவம், ரொம்ப பாவம், ஸ்குயர். 133 00:09:39,331 --> 00:09:43,793 அது தான் நான் செய்யும் கடைசி செயலா இருந்தாலும், சரியாச் செய்யப் போறேன். 134 00:09:44,961 --> 00:09:47,380 ஸ்குயர் ஏற்கனவே நான்கு வாழைப்பழங்களை இழந்துவிட்டான். 135 00:09:47,464 --> 00:09:50,675 ஆனால் அடுத்த முறை கண்டிப்பாக அதை சரியாகச் செய்வதாக தீர்மானித்தான். 136 00:09:50,759 --> 00:09:54,638 இன்னும் குலை தள்ளும் வரை, கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும், அவ்வளவுதானே. 137 00:10:28,004 --> 00:10:31,466 வணக்கம். என் மரம் திரும்பவும் குலை தள்ளியுள்ளது மீண்டும் ரெண்டு வாழைப்பழங்கள், 138 00:10:31,550 --> 00:10:36,388 மீண்டும் "ஹே, ஸ்குயர், நம்ம தோழி சர்கிளோட ஏன் இதை பகிரக்கூடாது?" அப்படின்னு நினைச்சேன். 139 00:10:36,471 --> 00:10:39,099 ஒண்ணு உனக்கு, ஒண்ணு எனக்கு. 140 00:10:40,559 --> 00:10:44,938 நன்றி, ஸ்குயர். நீ என்னோட முக்கியமான, உற்ற நண்பன். 141 00:11:13,633 --> 00:11:15,427 அதிசுவை. 142 00:11:15,510 --> 00:11:16,803 ஹே, ஸ்குயர்! 143 00:11:17,304 --> 00:11:19,723 நாங்க பிக்னிக் போறோம். நீயும் வா. 144 00:11:20,473 --> 00:11:21,474 வரேனே. 145 00:11:22,893 --> 00:11:25,270 இப்போ, அவன் தன் வாழைப்பழத்தை உண்டிருந்ததால், 146 00:11:25,353 --> 00:11:29,566 ஸ்குயரால், தன் தோழி சர்கிளுடன் தாராளமாக அந்த இன்னொரு பழத்தை பகிர முடிந்தது. 147 00:11:30,692 --> 00:11:31,693 சரியா? 148 00:11:44,205 --> 00:11:46,791 அந்த தீவில் வாரக் கடைசியாகிவிட்டது. 149 00:11:46,875 --> 00:11:51,671 அப்படி என்றால் அது வெள்ளிக்கிழமை வேடிக்கை இரவு, அந்த மாலை முழுவதும் உணவும், விளையாட்டும் தான். 150 00:11:51,755 --> 00:11:55,050 ஸ்குயர், டிரையாங்கிள்... 151 00:11:58,136 --> 00:11:59,512 ...மற்றும் சர்கிளின் சந்திப்பு. 152 00:12:02,224 --> 00:12:05,894 சர்கிளின் சந்திப்பா? சர்கிள் எங்கே? 153 00:12:07,938 --> 00:12:09,022 இதோ இங்கே இருக்கிறாள். 154 00:12:09,105 --> 00:12:12,108 இன்று இரவு, சர்கிளுக்கு வேறு ஏதோ திட்டம் இருப்பது போன்று தெரிகிறது. 155 00:12:14,736 --> 00:12:16,196 நான் ரொம்ப உற்சாகமா இருக்கேன். 156 00:12:17,989 --> 00:12:20,408 இப்போது தான் வேளை வந்திருக்கு... 157 00:12:22,369 --> 00:12:23,662 "கிரகணம்." 158 00:12:27,207 --> 00:12:29,626 சர்கிளுக்கு தாமதமாகுதே. நாம போய் அவ என்ன செய்யறான்னு பார்த்துட்டு வரலாமா? 159 00:12:29,709 --> 00:12:32,504 நிச்சயமா, அவ வெள்ளிக்கிழமை வேடிக்கை இரவை தவர விட்டதில்லையே. 160 00:12:34,548 --> 00:12:39,302 அடக் கடவுளே! சந்திரனுக்கு என்ன ஆச்சு? 161 00:12:44,099 --> 00:12:45,517 அடக் கடவுளே. என்ன நடக்குது? 162 00:12:45,600 --> 00:12:46,977 என்ன நடக்குது? 163 00:12:47,060 --> 00:12:48,478 நான் அதிகமா குட்டி காரெட்டுகள சாப்பிட்டுட்டேனா? 164 00:12:48,562 --> 00:12:50,480 காரெட்டுகள் சாப்பிட்டா, சூப்பர்-பார்வை கிடைக்கும்னு எல்லோருக்கும் தெரிஞ்சது தான். 165 00:12:51,648 --> 00:12:56,444 இது தான் உலகத்தோட இறுதிக் காலம், இல்லையா? என்னைப் பிடி. என்னைப் பிடி! 166 00:12:58,029 --> 00:13:00,365 ஒரு பூரண சந்திர கிரகணம். 167 00:13:00,949 --> 00:13:04,286 இதைப் பாரக்க டிரையாங்கிளும், ஸ்குயரும் என்னுடன் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும். 168 00:13:04,744 --> 00:13:06,997 சர்கிள், நீ எதையோ மறந்துட்டயா? 169 00:13:09,624 --> 00:13:13,086 ஓ, அடடா, நான்... வெள்ளிக்கிழமை வேடிக்கை இரவை மறந்துட்டேனே! 170 00:13:14,045 --> 00:13:15,505 என் கண்ணெல்லாம் வலிக்குது. 171 00:13:16,006 --> 00:13:17,841 கண்ணை சிமிட்டாதே. கண்ணை சிமிட்டாதே. 172 00:13:17,924 --> 00:13:20,510 முக்கியமான விஷயங்கள், கண் மூடி திறக்கும் முன் நடந்துடுது. 173 00:13:27,100 --> 00:13:29,019 முடிஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன். 174 00:13:30,478 --> 00:13:33,189 -முடிஞ்சிடுச்சு! இருக்கோம்! -உயிர் இருக்கு! 175 00:13:34,107 --> 00:13:36,109 நடந்தது என்னன்னு புரியலையே? 176 00:13:36,192 --> 00:13:40,906 எனக்கும் எதுவும் புரியலை. ஆனால் யாருக்குத் தெரியும், தெரியுமா? சர்கிள். அவள கேட்கலாம். 177 00:13:40,989 --> 00:13:43,491 ஸகுயர் பொறு. யோசிச்சுப் பாரு. 178 00:13:43,575 --> 00:13:48,705 அந்த சிகப்புச் சந்திரன் நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தான் தெரிஞ்சுது. அது நம்மை தேர்வு செய்திருக்கு. 179 00:13:49,539 --> 00:13:52,334 என் வாழ்க்கையில நான் எதுக்குமே அப்படி தேர்ந்து எடுக்கப்பட்டதில்லை. 180 00:13:52,417 --> 00:13:55,128 நாம இன்னிக்கு பார்த்தது ரொம்ப ஸ்பெஷல். 181 00:13:55,212 --> 00:13:58,256 கற்பனையே செய்ய முடியாதது. சர்கிள் இங்கே இல்லை. 182 00:13:58,340 --> 00:14:02,761 அவளுக்கு அதெல்லாம் புரியாது. இந்த சிகப்புச் சந்திரன், நமக்குள்ள இருக்குற ரகசியம். 183 00:14:02,844 --> 00:14:04,846 -நம்ம ரகசியம். -டீலா? 184 00:14:11,019 --> 00:14:14,356 எனக்குப் புரியாதா? அது தான் சந்திரக் கிரகணம். 185 00:14:14,439 --> 00:14:19,027 நான் அதை 178 முறை பார்த்திருக்கேன். அவங்க கிட்ட அதைச் சொல்லணும். 186 00:14:19,527 --> 00:14:22,489 ஆனால் அவங்க அந்த ரகசியத்தால ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. 187 00:14:22,572 --> 00:14:24,866 அதை நாம ஏன் கெடுக்கணும்? 188 00:14:24,950 --> 00:14:25,992 அப்படி தான் நடந்தது. 189 00:14:26,076 --> 00:14:29,746 இல்லை! எனக்கு கிரகணங்களைப் பத்தி மிக அதிகமான அறிவு இருந்தாலும், 190 00:14:29,829 --> 00:14:32,207 நான் அவங்களோட ரகசியத்தை மதிக்கிறேன். 191 00:14:32,290 --> 00:14:34,417 இப்போது சர்கிளுக்கும் ஒரு ரகசியம் தெரிந்தது. 192 00:14:36,920 --> 00:14:42,509 -ஹே. நேத்து இரவைப் பத்தி வருந்துறேன். நான்... -நேத்து இரவு அற்புதமா இருந்தது. 193 00:14:42,592 --> 00:14:45,845 நாங்க பார்த்தது... அதாவது, நாங்க பார்த்தது... 194 00:14:45,929 --> 00:14:49,266 நாங்க... ஒரு கழிவு வண்டைப் பார்த்தோம். 195 00:14:50,141 --> 00:14:53,103 ஓ, நிஜமாவா? நல்லது. 196 00:14:53,186 --> 00:14:57,107 அதுக்கு எவ்வளவு நல்ல கழுத்து இருந்தது தெரியுமா. 197 00:14:58,191 --> 00:15:00,443 இந்த கழிவு வண்டைப் பத்திய பேச்சால, எனக்கு பசிக்குது. 198 00:15:03,697 --> 00:15:05,532 நீ என்ன பண்ணற? 199 00:15:05,615 --> 00:15:08,451 நான் பேச்சை மாத்தப் பார்க்குறேன். 200 00:15:09,536 --> 00:15:11,997 அடடே! இந்த டோனட் ஓட்டைகளைப் பார்த்தால்... 201 00:15:12,080 --> 00:15:17,002 ஆமாம், இல்ல? நான் அதை ஸ்பெஷலா ஏன் செய்தேன்னா, அதைப் பார்த்து நினைவுக்கு... 202 00:15:20,630 --> 00:15:26,595 அந்த கழிவுகளை... அந்த வண்டுகள் கழிவுகளை உருட்டுமே. அது தான். 203 00:15:31,808 --> 00:15:34,561 அவங்களால ரகசியங்களை வைத்துக் கொள்ளவே முடியாது, இல்லையா? 204 00:15:34,644 --> 00:15:36,313 இந்த டோனட் ஓட்டைகளுக்கு நன்றி. 205 00:15:36,396 --> 00:15:40,150 நாங்க கிளம்பணும், கொஞ்சம் வேலை இருக்கு. 206 00:15:40,233 --> 00:15:41,359 இல்லையா? 207 00:15:41,443 --> 00:15:45,655 சாதாரண, தினசரி, ரகசியமெல்லாம் இல்லாத விஷயங்கள். 208 00:15:48,658 --> 00:15:51,620 ஒருவேளை சந்திரன், சூரியனுக்கு ரொம்ப நெருங்கி வந்து, நெருப்புப் பத்திக்கிட்டு இருக்கலாம். 209 00:15:51,703 --> 00:15:54,247 ஆமாம். ஆம், ஆமாம். நான் தீயைப் பார்த்தேன்னு நினைக்கிறேன். 210 00:15:54,331 --> 00:15:57,709 இல்ல, மிக பிரம்மாண்டாமான அளவு சிகப்புப் பூக்கள் எல்லாம் ஒரே சமயத்துல மலர்ந்து, 211 00:15:57,792 --> 00:16:00,337 அங்கே ரொம்ப குளிர் அதிகமா இருந்ததால வாடிப் போச்சோ. 212 00:16:00,420 --> 00:16:05,050 ஒருவேளை சந்திரனுக்கு கோபம் வந்து, அதனால அது சிகப்பா மாறியிருந்தால்? 213 00:16:06,051 --> 00:16:09,137 என்ன. இருக்கலாம். இருந்தாலும் எனக்கென்னவோ அது வெக்கத்துல முகம் சிவந்தது போல இருந்தது. 214 00:16:09,221 --> 00:16:12,432 சர்கிள் நாணி முகம் சிவந்து பார்த்திருக்கயா? அது போல தான் இருந்தது. 215 00:16:12,515 --> 00:16:17,437 அட, ஆமாம், சர்கிள். சர்கிள் அதைப் பார்க்கலையேன்னு எனக்கு வருத்தமா இருக்கு. 216 00:16:17,520 --> 00:16:21,775 இன்னிக்கு காலையில ரொம்ப சோகமா இருந்தா. நமக்கு ரகசியம் இருக்குன்னு அவளுக்குத் தெரியுமா? 217 00:16:21,858 --> 00:16:24,861 இல்ல. அதுமட்டுமில்ல, அவளுக்கு எப்போதும் எல்லாமே தெரியும். 218 00:16:24,945 --> 00:16:28,949 முதல் தடவையா, நான் அவளைவிட கொஞ்சம் புத்திசாலியா உணர்ந்தேன். 219 00:16:29,032 --> 00:16:31,368 என் ஆற்றலை உணர்கிறேன். 220 00:16:33,787 --> 00:16:35,038 என்னை விட்டுட்டு, அவங்க தனியா 221 00:16:35,121 --> 00:16:39,834 ஒரு சந்திர கிளப்பை உருவாக்குறாங்களா இருக்கும். 222 00:16:40,335 --> 00:16:45,131 என்னன்னா, அவங்க மட்டும் என் கிட்ட ஒரு வார்த்தை கேட்டால், கிரணத்தைப் பத்தி சொல்லியிருப்பேனே. 223 00:16:45,215 --> 00:16:49,928 எங்கிட்ட புத்தகங்கள் எல்லாம் இருக்கு. சார்ட்டுகள். ஒரு டெலிஸ்கோப்பு, எல்லாம் இருக்கே. 224 00:16:50,428 --> 00:16:52,097 என் கிட்ட அது சம்மந்தமான புதிரும் இருக்கு. 225 00:16:52,180 --> 00:16:53,598 அவளுடைய நண்பர்களுக்குத் 226 00:16:53,682 --> 00:16:56,685 தெரிந்த்து தனக்கு தெரியவில்லை என்று அவர்கள் நினைப்பதை, அவளால் பொறுத்துக் கொள்ள முடியலை. 227 00:17:00,105 --> 00:17:02,732 என்ன? ஸ்குயர்? நீ ஏன் ஒரு பாக்ஸை மாட்டிட்டு இருக்க? 228 00:17:04,609 --> 00:17:07,195 நான் தான்னு யாருக்கும் தெரியக்கூடாது. 229 00:17:07,279 --> 00:17:08,988 ஓ, கடவுளே. நான் இங்கே வந்திருக்கக்கூடாது. 230 00:17:09,072 --> 00:17:12,033 ஆனால் என்னால இனிமேலும் இந்த ரகசியங்களின் பாரத்தை தாங்க முடியாது. 231 00:17:12,117 --> 00:17:14,660 நான் தப்பை ஒத்துக்க வந்தேன். 232 00:17:15,661 --> 00:17:17,372 அதுக்கு அவசியம் இல்லை. 233 00:17:17,455 --> 00:17:19,541 எப்போதும் தரையிலே இருக்கணும்னு அவசியமில்லைன்னு தெரியும், 234 00:17:19,623 --> 00:17:22,669 ஆனால் மனசு கவலையில, அந்த நிலைல இருந்தா அமைதி கிடைக்கும். 235 00:17:23,253 --> 00:17:27,424 சரி. டிரையாங்கிளுக்கும் எனக்கு ஒரு ரகசியம் இருக்கு. 236 00:17:27,507 --> 00:17:30,093 நான் இதை உங்கிட்ட சொல்லக்கூடாது, ஆனால், போன வெள்ளிக்கிழமை வேடிக்கை இரவுல, 237 00:17:30,176 --> 00:17:32,095 நானும் டிரையாங்கிளும் வயலில் இருந்தபோது, 238 00:17:32,178 --> 00:17:37,976 ஒரு தீ பத்தி எரியுற சந்திரன் திடீருன்னு எழுந்து வந்து, நம்ம நிலாவை சாப்பிடறதை பாத்தோம்! 239 00:17:39,853 --> 00:17:41,229 சற்று நேரம் அதை மென்று விழுங்கியது. 240 00:17:41,313 --> 00:17:43,899 அதுக்கு வயிறு ரொம்பியதுக்கு அப்புறம், மீண்டும் அதை ஏப்பம் விட்டு வெளியே வந்துடுச்சு. 241 00:17:43,982 --> 00:17:47,402 நடந்ததைப் பத்தி, எனக்கு அவ்வளவு தான் புரிஞ்சுது. ஓ, சந்திரனுக்கு கெட்ட சகோதரன் உண்டா என்ன? 242 00:17:47,485 --> 00:17:49,613 இருக்கா? அது என்னவா இருந்திருக்கும்? 243 00:17:50,322 --> 00:17:53,950 என் பிரியமான ஸ்குயரே, நீ கேட்டது பத்தி சந்தோஷம். 244 00:17:54,034 --> 00:17:55,535 நீங்க பார்த்தது... 245 00:17:55,619 --> 00:17:58,330 அற்புதமான காட்சி! தெரியும்I 246 00:17:58,413 --> 00:18:02,334 உலகத்திலேயே டிரையாங்கிளும் நானும் மட்டும் தான் அதைப் பார்த்தோம்! 247 00:18:02,918 --> 00:18:04,961 நான் இவ்வளவு அதிர்ஷ்டசாலியா இருப்பேன்னு நினைக்கவேயில்லை! 248 00:18:05,045 --> 00:18:08,965 எனக்கு டிரையாங்கிளைப் போல திறமைகளோ, அல்லது உன்னைப் போல மாய சக்திகளோ கிடையாது. 249 00:18:09,049 --> 00:18:11,676 நான் ஒரு சாதாரண, நம்பகரமான ஸ்குயர். 250 00:18:11,760 --> 00:18:15,513 ஆனால், சிகப்புச் சந்திரனைப் பார்க்கக் கொடுத்து வச்சது, எனக்குள்ள என்னவோ செய்துடுச்சு. 251 00:18:17,015 --> 00:18:21,102 முதல் முறையா, என்னால எதையும் செய்ய முடியும்னு தோணுது! 252 00:18:21,186 --> 00:18:25,649 என்னாலும் புரியாத புதிர்களுக்கு விடை காண முடியும்னு தோணுச்சு. பாரு! புதிரோட பகுதி. 253 00:18:25,732 --> 00:18:28,109 ஓ, இல்ல. ஸ்குயர் புதிரைப் பார்த்ததும், 254 00:18:28,193 --> 00:18:29,694 அவளுக்குத் தெரியும்னு அவனுக்குத் தெரியும்... 255 00:18:32,447 --> 00:18:34,157 ஓ, இல்லை. 256 00:18:34,241 --> 00:18:39,996 அடடா. நீ தவறவிட்டதைப் பத்தி உனக்கு தெரிஞ்சா வருந்துவன்னு டிரையாங்கிள் சொன்னான், ஆனால், அடடா. 257 00:18:40,080 --> 00:18:42,749 அட. அட. நான் இப்போ கிளம்பணும், சர்கிள். 258 00:18:45,210 --> 00:18:47,754 டிரையாங்கிளிடம் நான் எங்க ரகசியத்தை சொன்னேன்னு சொல்லாதே. 259 00:18:50,423 --> 00:18:52,467 சர்கிளுக்கு சற்று அவகாசம் தர வேண்டும் போலும். 260 00:18:56,137 --> 00:18:57,138 ரகசியம். 261 00:18:58,682 --> 00:19:02,602 எனக்குத் தோன்றுகிறது, சர்கிளுக்கு தனித்து இருக்க வாய்ப்பு கிடைத்தால், 262 00:19:03,311 --> 00:19:05,480 டிரையாங்கிளிடமிருந்தும், ஸ்குயரிடமிருந்தும், சிறிது காலம் ஒதுங்கியிருக்கணும். 263 00:19:05,564 --> 00:19:06,731 ஹலோ, சர்கிள். 264 00:19:08,358 --> 00:19:10,360 நீ அத்தியாயமுள்ள புத்தகங்களைப் படிக்கிறன்னு தெரியுது. 265 00:19:10,443 --> 00:19:17,367 என்னன்னா உண்மையான அறிவு, அனுபவத்திலேர்ந்து தான் கிடைக்கும். 266 00:19:18,493 --> 00:19:20,954 நீ எதையோ எங்கிட்ட சொல்ல வந்திருக்க. அது தானே? 267 00:19:21,037 --> 00:19:23,748 யாரு, நானா? ஹா! இல்ல, சொல்றதுக்கு எதுவுமில்லை. 268 00:19:23,832 --> 00:19:27,836 அதாவது, என்னுடைய சூப்பர் அற்புதமான ஸ்பெஷல் ரகசிய அனுபவத்தைத் தவிர. 269 00:19:27,919 --> 00:19:30,005 ஆனால் நான் ரகசியங்களச் சொல்ல மாட்டேன். 270 00:19:34,134 --> 00:19:36,553 சரிதான். அப்போ சரி, நான் சொல்றேன். சரி, இதோச் சொல்றேன் கேளு. 271 00:19:36,636 --> 00:19:39,639 போன வெள்ளிக்கிழமை இரவு, ஸ்குயரும் நானும் வழக்கம் போல, புல்வெளியில இருந்தோம், 272 00:19:39,723 --> 00:19:43,643 நான் ஒரு நூறு குட்டி கேரட்டுகளைச் சாப்பிட்டதுக்கு அப்புறம், சரியா தலைகீழா நின்னேன், 273 00:19:43,727 --> 00:19:46,771 அப்போது நான் இதுவரை பார்க்காததைப் பார்த்தேன். 274 00:19:46,855 --> 00:19:50,442 திடீருன்னு ஒரு ராட்சஸன் வந்து, ஒரு பெரிய சிகப்பு மார்க்கரால 275 00:19:50,525 --> 00:19:52,235 சந்திரனுக்கு வர்ணம் பூச ஆரம்பிச்சிடுச்சு! 276 00:19:52,319 --> 00:19:55,196 சீக்கிரமே சந்திரன் முழுவதும் சிகப்பாயிடுச்சு. 277 00:19:56,531 --> 00:19:59,326 தெரியும். கதை விடுவது மாதிரி இருக்கு, இல்ல? 278 00:19:59,409 --> 00:20:01,411 ஆனால் அதுல சிறப்பான விஷயம் இனிமே தான் வருது, கேட்க நீ தயாரா? 279 00:20:01,912 --> 00:20:04,539 அது கிட்ட ஒரு அழிக்கிற ரப்பர் இருந்தது. 280 00:20:04,623 --> 00:20:08,960 எனவே, அந்த சிகப்பை அழிச்சுடுச்சு, மறுபடியும் சந்திரன் பழைய நிலைக்கே வந்துடுச்சு. 281 00:20:09,044 --> 00:20:10,837 உன்னால நம்ப முடியுதா? 282 00:20:15,300 --> 00:20:18,553 சரி. வந்து, நான் இப்போ கிளம்பணும். 283 00:20:19,721 --> 00:20:21,514 ஸ்குயரிடம் நான் இங்கே வந்தேன்னு சொல்லாதே. 284 00:20:23,183 --> 00:20:25,560 ஸ்குயர்? அவை என் கேரட்டுகளா? 285 00:20:25,644 --> 00:20:26,811 உன்னால எப்படி இப்படிச் செய்ய முடிந்தது? 286 00:20:26,895 --> 00:20:30,440 நீ எங்கிட்ட குட்டை உடைக்காதேன்னு சொல்லிட்டு, நீயே இப்போ குட்டை உடைச்சுட்டயே? 287 00:20:32,609 --> 00:20:35,153 உணவை வீணாக்குறதை நிறுத்து. நான் விளக்கிச் சொல்றேன். 288 00:20:35,779 --> 00:20:36,947 அட, நிறுத்து! 289 00:20:37,030 --> 00:20:40,951 ஸ்குயர், உனக்கும் எனக்கும் நல்லா தெரியும் நீ தான் முதல்ல குட்டை உடைச்சன்னு. 290 00:20:41,660 --> 00:20:45,413 சர்கிள்! அது நமக்குள்ள இருக்குற ரகசியம் இல்லையா. 291 00:20:45,497 --> 00:20:50,168 பொறு. என்ன? நான் ரகசியத்தை சொல்றதுக்கு முன்னாடியே நீ சொன்னயா? 292 00:20:52,045 --> 00:20:55,173 நிறுத்துங்க! 293 00:20:55,882 --> 00:20:58,552 இனிமேலும் நீங்க ரெண்டு பேரும் செய்யற கண்ராவிய தாங்க முடியாது. 294 00:20:58,635 --> 00:21:01,054 நான் ரொம்ப காலமா வாயை மூடிட்டு இருந்துட்டேன். 295 00:21:01,137 --> 00:21:03,765 என் ரகசியத்தைச் சொல்ல இது தான் நேரம். 296 00:21:05,183 --> 00:21:09,187 நீங்க இருவரும் பார்த்தது வேற எதுவுமில்ல, அது... 297 00:21:10,230 --> 00:21:13,400 நினைச்சேன், உனக்குத் தெரியும். உனக்கு தான் எல்லாம் தெரியுமே. 298 00:21:15,277 --> 00:21:18,572 என்ன? நீ எனக்கு எல்லாம் தெரியும்னு நினைக்கிறயா? 299 00:21:19,155 --> 00:21:21,950 ஆமாம், அப்படி தான். எங்களுக்குத் தெரிந்த வடிவங்கள்ல, நீ தான் புத்திசாலி. 300 00:21:22,450 --> 00:21:25,078 கடைசியா, உனக்குத் தெரியாத விஷயம் ஒண்ணு எங்களுக்குத் தெரியும்னு நினைச்சேன். 301 00:21:25,579 --> 00:21:29,291 இருக்கட்டும், மேலே சொல்லு, நீ என்ன பார்த்தன்னு சொல்லலாமே. 302 00:21:29,374 --> 00:21:33,420 திடீரென, தான் நினைத்ததெல்லாம் எவ்வளவு முட்டாள்தனமென சர்கிளுக்கு புரிந்தது. 303 00:21:33,503 --> 00:21:36,715 ஸ்குயரும், டிரையாங்கிளும் இத்தனை காலமாக அவள் புத்திசாலிதனத்தை மதித்திருக்கிறார்கள். 304 00:21:36,798 --> 00:21:38,508 அவள் ஆசைப்பட்டதுபோலவே. 305 00:21:40,260 --> 00:21:43,597 நான் சொல்ல வந்தது, ஒரு காலத்துல இருந்த 306 00:21:43,680 --> 00:21:45,682 ஒரு அற்புதமான சிகப்பு சந்திரனைப் பத்தி. 307 00:21:46,600 --> 00:21:48,518 ரொம்ப அரிதாகத் தான் அதைப் பார்க்க முடியும் 308 00:21:48,602 --> 00:21:51,980 அதுவும் சந்திரன் நம்ம கிரகத்தின் நிழலுக்குள் வரும் போது மட்டும் தான் அது நடக்கும். 309 00:21:52,063 --> 00:21:54,232 நம்ம கிரகத்துக்கு நிழல் உண்டா? 310 00:21:54,316 --> 00:21:59,446 ம்ம்-ஹம்ம்? ஆம், ஆனால், அதுல ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா? 311 00:21:59,529 --> 00:22:00,530 ம்ம்-ம்ம். 312 00:22:00,614 --> 00:22:05,535 அந்த சிகப்புச் சந்திரனை தேர்ந்து எடுக்கப்பட்ட சிலரால மட்டும் தான் பார்க்க முடியும் 313 00:22:05,619 --> 00:22:07,829 ஏன்னா அவங்களுக்கு எல்லாம் வெள்ளை மனசு இருப்பதால. 314 00:22:09,664 --> 00:22:15,045 நீங்க இருவரும் அதைத்தான் பார்த்திருக்கீங்கன்னு நினைக்கிறேன், ஆனால் சொல்லலை, நான்... 315 00:22:15,128 --> 00:22:19,382 எனக்கு பொறாமை. பொறாமையா இருந்தது. ஆம், அது தான் என் ரகசியம். 316 00:22:20,759 --> 00:22:23,845 ஆஆ. கடவுளே! எனக்கும் அதைப் பார்க்க ஆசை தான். 317 00:22:27,015 --> 00:22:28,016 ஸ்குயர். 318 00:22:30,477 --> 00:22:34,272 சர்கிள், முன்பைப் போலவே நீ மேலே மிதந்து, ஒளி வீசணும். 319 00:22:38,276 --> 00:22:40,528 கண்களைத் திற. 320 00:22:43,448 --> 00:22:48,370 பார்க்க இப்படித் தான் அந்த சிகப்பு சந்திரன் இருந்தது. இப்போ நாம மூணு பேரும் பார்த்துட்டோம். 321 00:22:48,870 --> 00:22:51,581 எங்களுடைய நண்பர்கள் கிளப்பிற்கு, உன்னை முற்றிலும் அன்புடன் வரவேற்கிறோம், சர்கிள். 322 00:23:10,058 --> 00:23:11,059 "டிரையாங்கிள்," "ஸ்குயர்" மற்றும் "சர்கிள்" மூன்றயும் அடிப்படையாகக் கொண்டது 323 00:23:11,142 --> 00:23:12,143 எழுதியவர்கள் மெக் பார்நெட், ஜான் கிளாஸ்ஸென் 324 00:24:09,534 --> 00:24:11,536 தமிழாக்கம் அகிலா குமார்