1 00:00:14,440 --> 00:00:15,920 காக்க வைத்ததுக்கு சாரி. 2 00:00:16,000 --> 00:00:17,600 முன்பு 3 00:00:18,160 --> 00:00:19,680 இதற்கு விலை தரணும். 4 00:00:21,200 --> 00:00:22,960 மேண்டிகோர் இத்தாலி மறுபிறப்பின்று. 5 00:00:25,160 --> 00:00:26,120 என்ன ஆச்சு? 6 00:00:33,360 --> 00:00:36,440 இந்த செய்தியை கேட்குறேன்னா, நான் செத்துட்டேன். 7 00:00:38,680 --> 00:00:40,680 ஆயுதம் என்னிடம் இருப்பதால், நம்மிடம், 8 00:00:40,760 --> 00:00:41,920 விஷயங்கள் மாறப் போகுது. 9 00:00:42,000 --> 00:00:44,040 நான் மறைந்து போகணும். 10 00:00:45,280 --> 00:00:47,960 இந்த முறை நாம நிஜமா உலகை மாற்ற முடியும். 11 00:00:53,560 --> 00:00:56,120 நான் டியானா கேவலியேரி, சிட்டடெல் ஏஜென்ட் 12 00:00:56,240 --> 00:00:59,400 மற்றும் மாண்டிகோர் ஆபரேடிவ், ஏஜென்ட் 3-0-8. 13 00:01:00,680 --> 00:01:04,280 ப்ளீஸ், யாராவது பதிலளிங்க. நான் மட்டுமே மிஞ்சலேன்னு சொல்லுங்க. 14 00:01:09,160 --> 00:01:12,040 சிட்டடெலுக்கு எதிரான தாக்குதலுக்கு பிறகு நாள் 19. 15 00:01:12,120 --> 00:01:16,040 மேண்டிகோர் இத்தாலிக்கு கூட்டாளிகளிடமிருந்து கடும் தடைகள். 16 00:01:16,120 --> 00:01:19,280 சிட்டடெலிலிருந்து திருடப்பட்ட நுட்பத்தை ஒளித்தது தெரிந்தது. 17 00:01:19,680 --> 00:01:22,840 இப்ப, தொழில்நுட்பம் மேண்டிகோர் ஃப்ரான்ஸ், ஜெர்மனியிடம். 18 00:01:25,240 --> 00:01:27,560 அதை அழிக்க முடிந்ததெல்லாம் செய்தேன். 19 00:01:27,680 --> 00:01:29,080 முடிந்ததா என தெரியலை, 20 00:01:29,160 --> 00:01:30,920 மீண்டும் உருவாக்க முடியுமாவென. 21 00:01:32,760 --> 00:01:34,880 இப்ப நான் மாண்டிகோரை விட முடியாது. 22 00:01:36,000 --> 00:01:38,440 தடைகளுக்கு பின், அதிகமா கட்டுப்படுத்தறாங்க. 23 00:01:41,680 --> 00:01:44,040 ப்ளீஸ், யாராவது பதில் சொல்லுங்க. 24 00:01:45,800 --> 00:01:48,800 நான் மட்டுமே இருக்கேன்னு நம்ப முடியலை. 25 00:01:49,560 --> 00:01:52,720 இந்த சாதனத்தை என் வீட்டில் வைத்திருப்பதே மரண தண்டனை போல. 26 00:01:55,560 --> 00:01:57,240 ப்ளீஸ், யாராவது பதிலளிங்க. 27 00:03:08,760 --> 00:03:13,880 சிட்டடெல் டியானா 28 00:03:47,240 --> 00:03:49,320 விற்பனைக்கு 29 00:04:09,440 --> 00:04:10,280 இது? 30 00:04:11,400 --> 00:04:12,760 எனக்கு ஒரு நகலை செய்தேன். 31 00:04:14,320 --> 00:04:16,000 பெற்றோர் வீட்டை மிஸ் பண்ணுவோம். 32 00:04:19,480 --> 00:04:22,600 அப்படியே, ஒரு ஷிப்பிங் நிறுவனத்தை கண்டேன். 33 00:04:23,000 --> 00:04:25,240 நீ குடியேறியதும் எல்லாத்தையும் அனுப்பறேன். 34 00:04:25,360 --> 00:04:26,800 - நன்றி. - பரவாயில்லை. 35 00:04:26,920 --> 00:04:30,440 - வீடு விற்கும்னு தோணுதா? - ஆமாம். 36 00:04:31,080 --> 00:04:32,080 அப்படிதான் தோணுது. 37 00:04:33,360 --> 00:04:34,240 அப்புறம்? 38 00:04:37,160 --> 00:04:38,000 தெரியாது. 39 00:04:38,800 --> 00:04:41,800 உனக்கு வேண்டிய போது அறை இருக்கு. காத்திருப்போம். 40 00:04:44,200 --> 00:04:46,160 - ஈடோவிடமிருந்து செய்தி? - இல்லை. 41 00:04:48,240 --> 00:04:49,800 அது சரியாகவே வந்திருக்காது. 42 00:04:51,000 --> 00:04:52,240 உன் வேலையினாலா? 43 00:04:52,320 --> 00:04:53,200 பல காரணங்கள். 44 00:04:56,720 --> 00:04:57,920 உன்னை நினைத்து பெருமை. 45 00:04:58,360 --> 00:05:01,520 நம் பெற்றோருக்காக நீ நீதி பெற்றதுக்கு நன்றி. 46 00:05:02,440 --> 00:05:03,640 வெளி வந்ததில் மகிழ்ச்சி. 47 00:05:05,080 --> 00:05:06,760 உன்னைப்பற்றியும் பெருமை. 48 00:05:07,240 --> 00:05:11,040 இவ்வளவு பெரிய விலை கொடுக்க வந்ததில் எனக்கு வருத்தம். 49 00:05:13,360 --> 00:05:17,000 புரியுது. உண்மையை கண்டுபிடிக்காமல் நீ நிறுத்தியிருக்க மாட்டே. 50 00:05:21,680 --> 00:05:22,600 போகலாம். 51 00:05:40,080 --> 00:05:41,120 நலமா இருப்போமா? 52 00:05:45,000 --> 00:05:46,400 நாம சிறப்பா இருப்போம். 53 00:05:55,720 --> 00:05:56,880 பை, ஆன்ட்டி. 54 00:05:56,960 --> 00:05:58,360 பை, கண்ணு! 55 00:06:34,280 --> 00:06:35,560 நாள் 32 56 00:06:36,200 --> 00:06:38,000 சிட்டடெல் மீது தாக்குதலுக்கு பின். 57 00:06:39,840 --> 00:06:44,000 தெளிவாக இருக்கிறது, தடைகளுக்கு பிறகு, எட்டோரே ஸானியின் ஒரே குறிக்கோள் 58 00:06:44,080 --> 00:06:47,320 நாட்டை முற்றிலும் நிலையில்லாமல் ஆக்குவது. 59 00:06:47,640 --> 00:06:51,800 ஏஜென்சி பல குற்றவியல் அமைப்புகளுக்கு ஆயுதங்கள் விற்கிறது. 60 00:06:52,280 --> 00:06:54,920 எதிர்கட்சி அரசியல்வாதிகளை மிரட்டுகிறார், 61 00:06:56,080 --> 00:06:59,440 ராணுவம் மற்றும் சட்ட அமலாக்க ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. 62 00:07:01,280 --> 00:07:04,560 ஏஜென்ட்ஸ் எங்களுக்கு இனி சுதந்திரமே இல்லை. 63 00:07:05,040 --> 00:07:06,280 நாங்க ஆயுதமேந்திய கிளை. 64 00:07:11,120 --> 00:07:12,600 என்னால தூங்கவே முடியலை. 65 00:07:14,040 --> 00:07:16,480 நம் மக்களில் யாராவது என் செய்திகளை 66 00:07:16,840 --> 00:07:18,400 கேட்பாங்க என நம்பறேன். 67 00:07:22,760 --> 00:07:23,680 பயமா இருக்கு. 68 00:07:26,760 --> 00:07:28,040 தனியா இருக்கேன். 69 00:08:09,680 --> 00:08:10,680 ஹலோ. 70 00:08:11,600 --> 00:08:12,680 நான் உள்ளே வரலாமா? 71 00:08:13,240 --> 00:08:14,080 நிச்சயமா. 72 00:08:16,400 --> 00:08:17,360 வெளியே இருங்க. 73 00:08:30,040 --> 00:08:31,000 நான் யார் தெரியுமா? 74 00:08:32,000 --> 00:08:32,800 ஆமாம். 75 00:08:34,880 --> 00:08:37,040 உன்னை சில கேள்விகள் கேட்கணும். 76 00:08:37,680 --> 00:08:39,240 என்ன நடந்ததென புரிஞ்சுக்க. 77 00:08:42,840 --> 00:08:44,880 ஒரு சிட்டடெல் ஏஜென்ட் அவரை சுட்டான். 78 00:08:45,760 --> 00:08:47,080 ஆச்சரியப்படுத்தினான். 79 00:08:50,280 --> 00:08:51,640 உங்க சகோதரன் கவனம் எங்கோ. 80 00:08:53,000 --> 00:08:54,160 எங்கு? 81 00:08:55,520 --> 00:08:57,440 சிட்டடெலின் தொழில்நுட்பத்தில். 82 00:09:00,320 --> 00:09:03,520 அவரை நன்றாக தெரியாது, சில பணிகளில்தான் கூட சென்றேன். 83 00:09:06,080 --> 00:09:07,520 ஆனால் அவர் தலைவர். 84 00:09:09,960 --> 00:09:11,520 தாக்குதலுக்கு உடன்பட்டியா? 85 00:09:12,520 --> 00:09:13,760 கட்டளையை நிறைவேற்றுவேன். 86 00:09:15,480 --> 00:09:16,400 வேறேதுமில்லை. 87 00:09:17,520 --> 00:09:18,760 நான் உடன்படலை. 88 00:09:19,720 --> 00:09:21,400 இப்படி நடந்திருக்க கூடாது. 89 00:09:22,880 --> 00:09:24,720 மாண்டிகோர் இப்படி இருக்க கூடாது. 90 00:09:43,960 --> 00:09:45,480 இன்று, எதிர்பார்ப்பு தெரியும். 91 00:09:54,760 --> 00:09:55,760 வுல்ஃப்கேங்க். 92 00:09:59,080 --> 00:10:00,160 சிசில், நலமா? 93 00:10:04,760 --> 00:10:06,000 ரொம்ப பேசலை. 94 00:10:07,000 --> 00:10:08,320 உள்ளே போகலாமா? 95 00:10:08,400 --> 00:10:10,360 இன்று நிறைய விவாதிக்கணும். 96 00:10:38,000 --> 00:10:41,080 அமைதியான இந்த வாரங்கள் பயனுள்ளதாக இருந்திருக்கணும். 97 00:10:41,600 --> 00:10:43,040 அமைதியாக்கிட. 98 00:10:46,520 --> 00:10:49,040 ஆயுதத்தின் பெயர் "ஜூபிட்டர்". 99 00:10:50,520 --> 00:10:52,000 அதை முடித்தாகிவிட்டது. 100 00:10:52,080 --> 00:10:54,040 மேண்டிகோர் யூரோப்பின் எதிர்காலம். 101 00:10:54,480 --> 00:10:57,600 பொது நீர் அமைப்பை உபயோகித்து அதை பரப்புவோம். 102 00:10:58,160 --> 00:10:59,840 விரைவில் சிதறும் குணகத்தை 103 00:10:59,920 --> 00:11:02,760 கணக்கிட ஆரம்ப சோதனை நடத்துவோம், 104 00:11:03,120 --> 00:11:05,320 பிறகு உற்பத்தி தொடங்குவோம், 105 00:11:05,680 --> 00:11:08,280 தொடர்ந்து அடுத்தடுத்த அலைகளில் வெளியிடுவோம் 106 00:11:09,600 --> 00:11:11,360 முழு மக்கள்தொகையை அடையும் வரை. 107 00:11:12,040 --> 00:11:14,040 இப்ப ஆயுதம் உங்களுடையது என்பதால், 108 00:11:14,480 --> 00:11:17,040 நாங்களும் எங்க ஏஜென்சிகளும் என்னாவோம்? 109 00:11:17,120 --> 00:11:19,960 எடுவார்டோ, நம் முடிவை அவர்களுக்கு சொல்ல விரும்பறியா? 110 00:11:20,440 --> 00:11:24,880 ஜூபிட்டருக்கான அணுகல் ஐரோப்பிய கவுன்சிலில் பகிரப்படும் என முடிவு செய்தோம். 111 00:11:25,880 --> 00:11:27,080 ஆனால் ஒரு நிபந்தனையில். 112 00:11:28,680 --> 00:11:31,040 முதல் ஆய்வு உரிமை மேண்டிகோர் இத்தாலிக்கே. 113 00:11:31,480 --> 00:11:33,360 - எதன் ஆய்வு? - தரவின் ஆய்வு. 114 00:11:34,680 --> 00:11:37,120 தினமும் பல கோடி தரவு துண்டுகள் கிடைக்கும். 115 00:11:37,640 --> 00:11:40,560 ஒவ்வொரு நிறுவனமும் அவங்க வழியில் அதை விளக்குவதை தடுக்க, 116 00:11:41,360 --> 00:11:42,920 நாங்க முதல் ஆய்வு செய்வோம். 117 00:11:46,040 --> 00:11:48,120 உங்களுக்கு வசதிப்பட்டதை சொல்வீங்க. 118 00:11:48,560 --> 00:11:51,080 பகிர்வது பற்றி உங்க எண்ணம் எப்போதும் அபாரம். 119 00:11:51,600 --> 00:11:54,440 மூன்றாம் கூறின் பிரத்யேக கட்டுப்பாடும் இருக்கும். 120 00:11:57,120 --> 00:11:58,200 மூன்றாம் கூறா? 121 00:11:59,200 --> 00:12:00,680 ஆயுதத்தின் இத்தாலிய பகுதி. 122 00:12:05,200 --> 00:12:06,640 ஏற்கனவே செயல்படறோமில்ல? 123 00:12:08,520 --> 00:12:10,280 நிச்சயமா. கிட்டத்தட்ட. 124 00:12:10,360 --> 00:12:14,600 சரியான நேரத்தில் அதிக விவரங்கள் கிட்டும். இப்ப ஒத்துப்போறோமா பார்ப்போம். 125 00:12:15,080 --> 00:12:15,920 [ஜெர்மன் மொழியில்] அது சரி... 126 00:12:17,440 --> 00:12:19,360 எங்களுக்கு தேர்வு இருப்பது போல. 127 00:12:20,840 --> 00:12:22,840 [ஃப்ரெஞ்சு மொழியில்] புது மேண்டிகோர் யூரோப் அமைப்பு. 128 00:12:24,200 --> 00:12:26,960 எல்லா ஏஜென்சிகளும் சமம். மற்றவைகளை விட ஒன்று உயர்வு. 129 00:12:27,600 --> 00:12:30,200 அதுதானே ஜனநாயகத்தின் அடிப்படை? 130 00:12:40,320 --> 00:12:43,720 சொல்ல போவதை முன்னால் தெரிவிக்காமல் இருப்பது வழக்கமாகுது. 131 00:12:43,800 --> 00:12:47,040 சந்திப்புகள் ஜாஸ் போல, ஓட்டத்துடன் போகணும். 132 00:12:47,120 --> 00:12:48,320 மேம்படுத்தணும். 133 00:12:48,840 --> 00:12:50,440 க்ளாசிக்கல் இசைதான் கேட்பீங்க. 134 00:12:50,840 --> 00:12:53,480 - சொல்ல சரியான நேரம் அது. - உங்க கருத்தில். 135 00:12:53,560 --> 00:12:55,000 என்னுதில்லை. 136 00:12:55,080 --> 00:12:57,680 அதை செய்ய முடியும்னு நீங்க நினைக்கிறீங்க. 137 00:12:57,760 --> 00:13:00,280 என்னிடம் பேசியிருந்தா, அப்படி இல்லையென தெரியும். 138 00:13:01,800 --> 00:13:02,880 இல்லையா? 139 00:13:02,960 --> 00:13:05,440 நாம உருவாக்கிய ஒரு உறுப்பை செருகணும் 140 00:13:06,440 --> 00:13:08,000 சிட்டடெல் உருவாக்கத்தில். 141 00:13:08,440 --> 00:13:11,200 எத்தனை நுட்ப மாறிகள் இருக்குன்னு தெரியுமா? 142 00:13:11,280 --> 00:13:15,000 ஒரு அறையில் தளபாடங்களை மாற்றுவது போலில்லை. 143 00:13:15,400 --> 00:13:17,440 இது புதிரை பிரித்தெடுப்பது போல, 144 00:13:17,880 --> 00:13:20,120 இன்னொன்றின் நூறு துண்டுகளை செருகி 145 00:13:20,640 --> 00:13:23,400 படம் அசலுடன் ஒத்துப் போகும் என எதிர்பார்ப்பது. 146 00:13:23,480 --> 00:13:27,080 தொழில்நுட்ப பிரச்சினையால் எப்பவும் நீ கைவிட மாட்டே. 147 00:13:28,200 --> 00:13:29,960 என்ன பிரச்சினைன்னு சொல்லு. 148 00:13:31,960 --> 00:13:33,080 மூன்றாவது கூறு. 149 00:13:34,240 --> 00:13:35,120 கொல்லுவதற்காக. 150 00:13:39,000 --> 00:13:40,040 ஆமாம், தெரியும். 151 00:13:40,560 --> 00:13:43,560 என்ன செய்யும்னு தெரியும். எவ்வளவு ஆபத்தென தெரியும். 152 00:13:44,040 --> 00:13:45,040 நீ சொல்றது தப்பு. 153 00:13:46,400 --> 00:13:50,360 இந்த ஆயுதத்தை போல வேறெதுவும் துல்லியமா இருக்காது. 154 00:13:51,160 --> 00:13:53,840 இணைச் சேதம் இல்லை, இலக்குகள் மட்டுமே. 155 00:13:54,600 --> 00:13:56,320 எத்தனை முறை ஒருவரை கொல்வது பலரை 156 00:13:56,400 --> 00:13:59,200 காப்பாற்றி இருக்குமென வரலாற்றை நினைவூட்டணுமா? 157 00:13:59,680 --> 00:14:01,560 வேண்டாம். நிச்சயமா வேண்டாம். 158 00:14:02,720 --> 00:14:03,720 எடுவார்டோ... 159 00:14:06,400 --> 00:14:07,680 உனக்கு அதிகாரம் உள்ளது. 160 00:14:08,840 --> 00:14:10,720 அதன் அர்த்தத்தை புரிஞ்சுக்கோ. 161 00:14:37,320 --> 00:14:39,440 உன் பெயர் நம் தரவில் இல்லை, 162 00:14:39,520 --> 00:14:41,840 நம் இணைப்பின் தடயமே இல்லை. 163 00:14:42,320 --> 00:14:45,400 நீ இருக்கே என்பதுதான் எனக்கு நம்பிக்கை தரும் ஒரே விஷயம். 164 00:14:45,480 --> 00:14:47,960 எதிரி எல்லைக்கு பின்னே கடைசி ஆள் நீ, 165 00:14:48,040 --> 00:14:50,000 நீ தைரியமாக இருக்கணும். 166 00:14:51,520 --> 00:14:53,680 - உன் பெயர் இல்லை... - மன்னிக்கணும். 167 00:14:53,760 --> 00:14:56,080 ...நம் இணைப்பின் தடயமே இல்லை. 168 00:15:27,240 --> 00:15:28,400 நாம அலுவலகம் போகலாம். 169 00:15:29,960 --> 00:15:30,800 உறுதியாகவா? 170 00:15:38,680 --> 00:15:41,560 - என் ட்ரைவர்ஸ், ஏஜென்ட்ஸ் எங்கே? - தூங்கறாங்க. 171 00:15:41,640 --> 00:15:43,240 ஈடோ, மன்னிச்சிடு, அது ஜோக். 172 00:15:43,320 --> 00:15:45,000 உனக்கு வேண்டியதை தந்தேனே! 173 00:15:45,600 --> 00:15:48,840 20 மில்லியன், சுதந்திரம் இருக்கு, போகலாம். வேற என்ன வேணும்? 174 00:15:49,240 --> 00:15:51,000 ஏன் என்னிடம் இவ்வளவு கோபம்? 175 00:15:51,080 --> 00:15:52,760 ஏன்னா ஒரு மாசமா காணாம போயிட்டே. 176 00:15:57,240 --> 00:15:58,440 ஆனால் திரும்பிட்டேனே. 177 00:15:59,640 --> 00:16:01,200 எது உன் மனதை மாற்றியது? 178 00:16:05,720 --> 00:16:07,800 நாம சொன்னதை பற்றி யோசிச்சேன். 179 00:16:09,800 --> 00:16:12,280 சாதாரண வாழ்க்கை, நல்ல வேலை, அழகான வீட்டோடு 180 00:16:13,000 --> 00:16:17,600 மகிழ்வா இருக்கிறதா நடிக்கலாம், ஆனால் அதிகமா வேணும் என்பதுதான் உண்மை. 181 00:16:20,560 --> 00:16:21,760 எனக்கு இன்னும் வேணும். 182 00:16:25,320 --> 00:16:27,040 "இன்னும்" என்பது உனக்கு என்ன? 183 00:16:31,880 --> 00:16:32,880 உன்னோடு இருக்கணும். 184 00:17:38,280 --> 00:17:40,240 ஃப்ரான்ஸ் பணிக்கு பிறகு, 185 00:17:40,760 --> 00:17:42,800 இங்கே படுத்திருந்தோம், இல்ல? 186 00:17:43,400 --> 00:17:44,920 நீ தூங்கினே, என்னால முடியலை. 187 00:17:46,760 --> 00:17:47,680 அதனால எழுந்தேன், 188 00:17:48,480 --> 00:17:51,280 ஆயுதத்திற்கு தரவுடன் கூடிய சாதனத்தை பார்த்தேன். 189 00:17:52,960 --> 00:17:54,000 உறுதியா இருந்தேன்... 190 00:17:54,640 --> 00:17:56,080 அதாவது, உறுதியா இருக்கேன் 191 00:17:57,240 --> 00:17:58,560 அது ஆபத்துனு. 192 00:17:59,720 --> 00:18:01,280 எடுத்துப் போயிருக்கலாம். 193 00:18:02,200 --> 00:18:03,640 அதை அழிக்க விரும்பினியா? 194 00:18:11,920 --> 00:18:15,320 நம்மிருவரையும் பிரச்சினையில் ஆழ்த்தியிருப்பேன் என தெரியும், 195 00:18:16,160 --> 00:18:19,000 மாண்டிகோர் எப்படியும் வேறேதும் கண்டுபிடித்திருக்கும். 196 00:18:20,480 --> 00:18:23,080 அதனால், அதை இங்கே விட்டு போயிட்டேன். 197 00:18:23,640 --> 00:18:24,960 ஏன் இதை என்னிடம் சொல்றே? 198 00:18:26,560 --> 00:18:28,560 ஏன்னா நான் யாரென உனக்கு தெரியணும். 199 00:18:30,720 --> 00:18:33,000 உலகம் பாதுகாப்பான இடமாக இருக்க 200 00:18:34,160 --> 00:18:37,200 போராடுவதை என்னால் நிறுத்த முடியாது. 201 00:18:38,200 --> 00:18:41,560 ஆனால் உன்னுடன் சேர்ந்து மட்டுமே அதை செய்ய முடியுமென தோன்றுது. 202 00:18:42,880 --> 00:18:44,000 அவ்வளவுதான். 203 00:18:57,200 --> 00:18:59,160 மாண்டிகோர் உன் பெற்றோரை கொன்றது. 204 00:19:04,640 --> 00:19:08,960 நம் ஏஜென்சி விமானம் OT9732வை அழித்தது, விமானத்தில் ஒரு... 205 00:19:10,000 --> 00:19:11,240 சிட்டடெல் ஏஜென்ட். 206 00:19:14,560 --> 00:19:16,160 சிசிலியில் சொல்ல விரும்பினேன், 207 00:19:17,880 --> 00:19:18,960 ஆனால் முடியலை. 208 00:19:21,960 --> 00:19:24,280 நான் யாரென உனக்கும் தெரிய உரிமை இருக்கு. 209 00:19:32,560 --> 00:19:34,400 நீ அந்த முடிவில் பங்கேற்றியா? 210 00:19:35,160 --> 00:19:36,440 நினைக்க கூட செய்யாதே. 211 00:19:41,160 --> 00:19:42,160 மன்னிச்சிடு. 212 00:20:05,080 --> 00:20:08,160 8 வருடங்கள் முன்பு 213 00:20:34,000 --> 00:20:35,560 ஸானி குடும்பம் 214 00:21:36,320 --> 00:21:38,280 அவனை விடு, வேலையா இருப்பான். 215 00:21:38,320 --> 00:21:39,560 அவனைப் போலவே இல்லை. 216 00:21:41,400 --> 00:21:43,560 என்ன அவ்வளவு அவசரமா அவனிடம் சொல்லணும்? 217 00:21:44,400 --> 00:21:45,320 ஒன்னு தெரியுமா. 218 00:21:47,760 --> 00:21:51,400 யாரையும் எந்நேரமும் கட்டுப்படுத்தும் சக்தி இருக்கும், 219 00:21:51,480 --> 00:21:53,440 வாழ்வின் ஆரம்பம் முதல் முடிவு . 220 00:21:54,280 --> 00:21:55,280 எப்படி? 221 00:21:55,360 --> 00:21:58,320 ஃப்ரெஞ்சு பாதி ஒரு நுண்ணிய இடைமறிப்பு அமைப்பு, 222 00:21:58,840 --> 00:22:01,680 பயோடெக்னாலஜி உறுப்பான ஜெர்மன் பாதியில் செருகி 223 00:22:01,760 --> 00:22:04,040 மனித உடலில் உட்பொதிக்கலாம். 224 00:22:04,120 --> 00:22:05,400 ஒட்டுண்ணி போலா? 225 00:22:06,840 --> 00:22:09,040 ஃபோன் டாப், கணினி ஹாக் செய்ய வேண்டாம், 226 00:22:09,120 --> 00:22:11,320 மக்களே தகவல் ஆதாரமாக இருப்பார்கள். 227 00:22:12,360 --> 00:22:13,840 ட்ரான்ஸ்மிட்டர்களாக இருப்பர். 228 00:22:14,240 --> 00:22:17,360 அவங்க தரவை நாம கட்டுப்படுத்தலாம். 229 00:22:19,840 --> 00:22:22,440 டியானா, இது பெரும் சக்தியென தெரியும். 230 00:22:23,200 --> 00:22:24,440 ஆனா நன்றாக உபயோகித்தால், 231 00:22:25,600 --> 00:22:28,160 அமைதி, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வாய்ப்புள்ளது. 232 00:22:28,240 --> 00:22:32,600 எல்லாத்துக்கும் மேல், நாம் இருக்க வேண்டிய ஏஜென்சியாக ஆகலாம். 233 00:22:36,960 --> 00:22:39,160 ஆனால் அது எங்கப்பாவுக்கு போதலை. 234 00:22:39,240 --> 00:22:42,160 அதனால் மூன்றாவது கூற்றை செருக யோசிக்கிறோம். 235 00:22:44,280 --> 00:22:46,120 இது தொலைதூர கொல்லும் அமைப்பு. 236 00:22:53,400 --> 00:22:54,600 நீ அதை வடிவமைச்சியா? 237 00:22:54,680 --> 00:22:56,040 ஆயுத வடிவமைப்பு என் வேலை. 238 00:22:57,440 --> 00:23:00,200 மாண்டிகோருக்கு யார்மீதும் அதிகாரம் இருக்கும். 239 00:23:00,760 --> 00:23:03,160 எந்த நொடியிலும் ஒரு பட்டனை அழுத்தினால், 240 00:23:03,240 --> 00:23:06,000 ஹோஸ்ட் சப்ஜெக்ட் உடனே இயற்கையான காரணத்தால் இறப்பார். 241 00:23:07,520 --> 00:23:09,240 அப்ப அது அணுகுண்டு போலத்தான். 242 00:23:11,320 --> 00:23:14,360 எல்லாம் பட்டனை அழுத்தும் கையை பொறுத்தது. 243 00:23:17,400 --> 00:23:20,280 உங்கப்பா அதை சேர்க்கச் சொல்லி உன்னை தூண்டறார். 244 00:23:26,280 --> 00:23:28,480 இது என்னது? வினோதமான வடிவமா இருக்கே. 245 00:23:32,760 --> 00:23:35,240 நான் வாழ்ந்த ஒரு வீட்டிலிருந்து. 246 00:23:37,160 --> 00:23:38,440 இது அதிர்ஷ்டத்துக்கு. 247 00:23:39,640 --> 00:23:42,080 இன்னும் உன்னைப்பற்றி நிறைய தெரிந்து கொள்ளணும். 248 00:23:48,520 --> 00:23:51,600 முதலில், உத்தரவாதத்தோடும், நிறைய பணத்தோடும் கிளம்பறா. 249 00:23:51,680 --> 00:23:53,640 இப்ப திரும்பி வர விரும்பறா. 250 00:23:55,360 --> 00:23:58,280 பாரிஸில் எடுத்த ஆபத்திற்கு பிறகு இடைவேளை தேவைப்பட்டது. 251 00:23:59,200 --> 00:24:01,720 அவளால நமக்கு என்ன கிடைச்சதுன்னு நினைவூட்டணுமா? 252 00:24:03,240 --> 00:24:04,520 இரவு அவளோட இருந்தியா? 253 00:24:05,560 --> 00:24:06,440 ஆமாம். 254 00:24:07,040 --> 00:24:08,040 பழகிக்கோங்க. 255 00:24:09,120 --> 00:24:10,200 அவ இப்ப எங்கே? 256 00:24:10,920 --> 00:24:14,160 ஜூபிட்டரின் முதல் வெளிப்பாடு சோதனையை தொடங்க தயார் செய்யறா. 257 00:24:14,240 --> 00:24:16,200 நேற்று, அவளிடம் எல்லாம் சொன்னேன். 258 00:24:18,040 --> 00:24:19,120 அப்படியேவா? 259 00:24:19,480 --> 00:24:20,640 என்னிடம் ஆலோசிக்காமலா? 260 00:24:21,600 --> 00:24:25,520 அப்பா, ஒரு விஷயத்தை புரிஞ்சுக்குவோம். நான் உங்க அனுமதி கேட்கலை. 261 00:24:26,560 --> 00:24:28,640 - நான் பொறுப்பு, உங்க மாதிரி. - மிகச்சரி. 262 00:24:29,360 --> 00:24:30,360 என் மாதிரி. 263 00:24:37,280 --> 00:24:38,880 எல்லாத்தையும் சொந்தமா செய்யறே. 264 00:24:41,040 --> 00:24:42,280 மூன்றாம் கூறு என்னாச்சு? 265 00:24:43,160 --> 00:24:44,240 கிட்டத்தட்ட ஆச்சு. 266 00:24:46,600 --> 00:24:48,280 நான் ஒரு அழைப்பு செய்யணும். 267 00:24:48,360 --> 00:24:49,880 ஆயுத சட்டம் நிறைவேறப் போகுது, 268 00:24:49,960 --> 00:24:52,280 ஆனால் அந்த முட்டாள் மந்திரியை தூண்டணும். 269 00:25:32,920 --> 00:25:35,600 இதில் 10 மில்லியன் ஜூபிட்டர் துகள்கள் இருக்கு. 270 00:25:35,680 --> 00:25:37,480 முதல் சோதனைக்கு சின்ன அளவு. 271 00:25:39,480 --> 00:25:40,440 சின்னதா? 272 00:25:40,520 --> 00:25:42,840 ஒரு பகுதிதான் ஹோஸ்ட் சப்ஜெக்ட்ஸை போய் சேரும். 273 00:25:42,920 --> 00:25:44,960 எத்தனை? நமக்கு தெரியும். 274 00:25:45,560 --> 00:25:49,920 உள்ளே அவற்றை செயல்படுத்த குறியீடு இருக்கு. மனப்பாடம் செய்து அழிச்சிடு. 275 00:25:51,040 --> 00:25:52,760 நம் இருவருக்கு மட்டுமே தெரியணும். 276 00:25:57,960 --> 00:26:00,480 குடும்பம் சீக்கிரமே பெரிதாகும் போல. 277 00:26:01,880 --> 00:26:02,760 நிஜமாவா? 278 00:26:03,360 --> 00:26:05,480 நடந்தது அவனே கணிக்க முடியாத விதத்தில் 279 00:26:05,560 --> 00:26:07,640 அவர்களை ஒன்றிணைத்தது. 280 00:26:08,400 --> 00:26:10,360 அவனோடு சமநிலை வேணும்னா, 281 00:26:10,440 --> 00:26:12,200 அவங்க உறவை நீ ஏற்கணும். 282 00:26:13,040 --> 00:26:14,880 எனக்கு அந்த பெண்ணை பிடிக்கலை. 283 00:26:16,040 --> 00:26:17,360 அவளைப்பற்றி ஏதோ இருக்கு. 284 00:26:18,480 --> 00:26:20,280 அவ எதையோ மறைக்கிறா. 285 00:26:22,080 --> 00:26:23,080 அவ உளவாளி. 286 00:26:23,760 --> 00:26:25,600 - மறைக்கிறது அவ வேலை. - அட வா. 287 00:26:26,560 --> 00:26:28,000 சொல்றது புரியுதுலே, ஜூலியா. 288 00:26:29,800 --> 00:26:32,040 ஏற்கனவே காதில் கிசுகிசுப்பதை பார்க்கிறேன், 289 00:26:33,400 --> 00:26:34,480 ஆலோசனை சொல்லிகிட்டு. 290 00:26:37,720 --> 00:26:39,040 [ஆங்கிலத்தில்] நான் கிசுகிசுத்திருக்கேனா? 291 00:26:40,200 --> 00:26:42,080 நான் என் சாதாரண குரலில் பேசுவேன். 292 00:26:42,440 --> 00:26:43,960 உன்னை அவளோட ஒப்பிடாதே. 293 00:26:44,040 --> 00:26:44,920 [இத்தாலியன்] ஏன்? 294 00:26:45,000 --> 00:26:46,560 ஏன்னா நீ குடும்பம். 295 00:26:47,040 --> 00:26:47,960 ஆமாம். 296 00:26:48,640 --> 00:26:51,600 ஈடோ பாரிஸிலிருந்து உயிரோட திரும்பியதால்தான் இருக்கேன். 297 00:26:52,520 --> 00:26:53,760 [ஆங்கிலத்தில்] நான் உன்னிடம் பேசலாம். 298 00:26:54,680 --> 00:26:56,000 நீ எப்பவும் கவனிப்பதில்லை. 299 00:26:56,880 --> 00:26:58,960 சமீபத்திய நிகழ்வுகள் அதை தெளிவாக்கிச்சு. 300 00:27:01,040 --> 00:27:02,320 அப்ப, சந்தேகமே இல்லையா? 301 00:27:04,280 --> 00:27:05,120 ஏதுமில்லையா? 302 00:27:05,920 --> 00:27:09,240 [இத்தாலியன்] எனக்கு தெரிந்து ஈடோவை பல வருடமா இப்படி பார்க்கலை. 303 00:27:09,880 --> 00:27:10,960 எப்படி? 304 00:27:11,600 --> 00:27:12,480 மகிழ்ச்சியா. 305 00:27:23,800 --> 00:27:25,520 கட்டம் மூன்று 306 00:27:31,960 --> 00:27:34,040 இல்லாத கூறு 307 00:27:34,600 --> 00:27:36,960 நிறைவு பெற்றது 308 00:27:37,040 --> 00:27:39,040 நிறைவு பெற்றது 309 00:27:54,040 --> 00:27:56,520 மூன்றாம் கூறு சோதனையில் தேர்ச்சி பெற்றது. 310 00:27:56,600 --> 00:27:58,280 அதை மாஸ்டர் நகலில் செருகினேன். 311 00:27:58,360 --> 00:27:59,360 நல்ல வேலை! 312 00:28:00,040 --> 00:28:01,280 அது அற்புதம், ஈடோ. 313 00:28:02,040 --> 00:28:02,880 நன்றி. 314 00:28:02,960 --> 00:28:06,600 உன்னைப்போல் அல்லாமல், வெற்றி பெறுவேன்னு எனக்கு சந்தேகமே இல்லை. 315 00:28:06,680 --> 00:28:08,280 அது எளிதல்ல என தெரியும். 316 00:28:08,760 --> 00:28:10,720 உன்னைப்பற்றி பெருமை. 317 00:28:12,800 --> 00:28:14,320 எனக்கு வருத்தமே 318 00:28:14,400 --> 00:28:16,320 நம்ம மிகப்பெரிய வெற்றி 319 00:28:17,760 --> 00:28:20,080 இவ்வளவு பதட்டமான நாளில் அடையப்பட்டதென. 320 00:28:20,480 --> 00:28:21,640 ஆனால் பரவாயில்லை. 321 00:28:22,240 --> 00:28:25,560 இப்ப நீ என்னைவிட 3-0-8க்கு நெருக்கம். 322 00:28:25,640 --> 00:28:27,120 அவளோட கொண்டாட நினைப்பே. 323 00:28:27,200 --> 00:28:31,040 அவ உனக்கு அவ்வளவு முக்கியம்னா, அப்ப அவளை ஏற்க நான் தயார். 324 00:28:32,160 --> 00:28:33,640 அவளை டியானா என அழைக்கவும். 325 00:28:36,640 --> 00:28:37,480 நன்றி. 326 00:28:39,200 --> 00:28:40,320 நம்மை பொறுத்தவரை, 327 00:28:41,320 --> 00:28:43,120 நாம் சமநிலையை அடைய விரும்பறேன். 328 00:28:44,120 --> 00:28:47,600 நீயும் பொறுப்பு என்பதால் அதற்கு வழி கண்டுபிடிப்பேன்னு தெரியும். 329 00:28:54,400 --> 00:28:56,640 ஜூபிட்டருக்கான குறியீட்டை அனுப்பப் போறேன். 330 00:28:56,720 --> 00:28:58,480 உங்களிடமும் இருப்பதுதான் சரி. 331 00:28:59,440 --> 00:29:00,480 ஆனால் ஒரு நிபந்தனை. 332 00:29:02,320 --> 00:29:03,440 நீ விடுவதே இல்லை. 333 00:29:04,960 --> 00:29:07,400 அம்மா சொல்றது சரி, நீ என்னை போல. என்ன வேணும்? 334 00:29:07,920 --> 00:29:10,000 மேண்டிகோர் இத்தாலியின் மேலாளராக டியானா. 335 00:29:12,280 --> 00:29:13,680 மட்டேயோ இடத்திலா? 336 00:29:14,160 --> 00:29:16,400 மட்டேயோ ஏஜென்சியை 13 வருடமா நிர்வகிக்கிறார். 337 00:29:16,480 --> 00:29:17,600 மாற்றத்துக்கான நேரம். 338 00:29:22,920 --> 00:29:25,400 உன் உறவு அவ்வளவு முக்கியம்னா, 339 00:29:26,680 --> 00:29:28,400 அவளே ஏஜென்சியை நிர்வகிக்கட்டும். 340 00:29:29,520 --> 00:29:30,880 மட்டேயோவிடம் பேசறேன். 341 00:29:31,280 --> 00:29:32,600 வாக்குறுதி தரீங்களா? 342 00:29:32,680 --> 00:29:33,760 உறுதி தர்றேன். 343 00:29:34,280 --> 00:29:36,320 இன்றிரவு அதிகாரப்பூர்வமாக்குவோம். 344 00:29:45,160 --> 00:29:46,240 அனுப்பிட்டேன். 345 00:29:47,080 --> 00:29:48,120 பிறகு பார்ப்போம். 346 00:30:05,280 --> 00:30:06,480 மட்டேயோ. 347 00:30:06,560 --> 00:30:09,600 3-0-8ன் தொடர்பு சமிக்ஞைகளை தடுத்திடு. 348 00:30:09,680 --> 00:30:13,480 குறியீடு இருக்கு, ஆனால் செயல்முறையை மனப்பாடம் செய்யலைன்னா பயனில்லை. 349 00:30:14,760 --> 00:30:16,040 அவ வேலையை செய்யட்டும். 350 00:30:17,160 --> 00:30:18,560 பின் என்ன செய்வதென தெரியுமே. 351 00:30:21,600 --> 00:30:22,600 அவன் என்ன செய்யணும்? 352 00:30:25,600 --> 00:30:26,560 எட்டோரே. 353 00:30:27,760 --> 00:30:30,120 தாய்ப்பாசம் உன் கண்ணை மறைக்குது. 354 00:30:30,600 --> 00:30:32,240 நீ நேராக பார்க்கலை. 355 00:30:45,680 --> 00:30:48,800 நீர் கோபுரம் எண். 14 356 00:31:16,240 --> 00:31:17,360 இங்கே காவல் இருங்க. 357 00:31:27,400 --> 00:31:29,400 அம்மா, அப்பாவிடம் பேசினேன். 358 00:31:30,560 --> 00:31:32,560 ஒரு ஒப்பந்தம் செய்தோம். 359 00:31:35,040 --> 00:31:36,400 [ஆங்கிலத்தில்] நிறுத்த பார்த்தேன், ஈடோ. 360 00:31:38,520 --> 00:31:39,640 நிஜமா முயன்றேன். 361 00:31:42,120 --> 00:31:43,200 மன்னிச்சிடு. 362 00:31:44,840 --> 00:31:46,160 என்ன சொல்றீங்க? 363 00:31:47,280 --> 00:31:49,640 [இத்தாலியன்] இனி ஏதும் நீ செய்ய முடியாது. 364 00:32:11,120 --> 00:32:12,000 மட்டேயோ. 365 00:32:13,680 --> 00:32:16,040 நான் உடனே டியானாவிடம் பேசணும். 366 00:32:21,720 --> 00:32:22,880 சொல்றது கேட்குதா? 367 00:32:24,560 --> 00:32:25,600 பதில் சொல்லு. 368 00:32:27,320 --> 00:32:29,920 அதுதான் நீர் விநியோகத்திற்கு நுழைவு. 369 00:32:40,920 --> 00:32:42,160 பதில் சொல்லு! 370 00:32:43,440 --> 00:32:44,920 மட்டேயோ, பதில் சொல்லு! சே! 371 00:33:21,920 --> 00:33:24,480 - நீரில் கரைஞ்சிடுமா? - ஆமாம். 372 00:33:26,800 --> 00:33:29,160 பாராளுமன்ற உறுப்பினர்களிடையே பரபரப்பான, 373 00:33:29,240 --> 00:33:31,320 கிட்டத்தட்ட ஆக்ரோஷமான விவாதத்தை கண்டோம். 374 00:33:31,400 --> 00:33:34,960 பெரும்பான்மை தலைவர்கள் ஒன்றாக இணைந்ததாக தெரியவில்லை. 375 00:33:35,040 --> 00:33:37,800 உண்மையில், ஆயுதங்களை தாராளமயமாக்கும் சட்டத்திற்கு 376 00:33:37,880 --> 00:33:41,640 வாக்களித்த பிறகு அரசாங்கம் நிலையாக இல்லை. 377 00:33:41,720 --> 00:33:43,960 அவங்க வேலையை செய்தாங்க, ஆனால் முடிந்தது. 378 00:33:44,040 --> 00:33:45,440 அவங்களை அனுப்பிடுவோம். 379 00:33:46,360 --> 00:33:50,320 ஜூபிட்டரை வைத்து நாம் செய்ய வேண்டியதற்கு புதிய அரசாங்கம் தேவை. 380 00:33:52,640 --> 00:33:53,720 சரி. 381 00:33:54,520 --> 00:33:56,240 நமக்கு போக்குவரத்து ஆதரவு தேவை. 382 00:33:59,280 --> 00:34:00,320 உங்கம்மா? 383 00:34:01,040 --> 00:34:02,280 தோட்டத்தில் இருக்காங்க. 384 00:34:03,640 --> 00:34:04,680 சோதனை பற்றிய செய்தி? 385 00:34:05,160 --> 00:34:06,000 நடக்குது. 386 00:34:08,080 --> 00:34:12,280 முதல் அலையில் எத்தனை சப்ஜெக்ட்ஸை அடைவோம்னு பார்க்க ஆவலா இருக்கேன். 387 00:34:16,760 --> 00:34:17,600 நானும். 388 00:34:22,160 --> 00:34:24,200 நான் செயல்பாட்டு குறியீட்டை போடறேன். 389 00:34:28,160 --> 00:34:29,000 சரி. 390 00:34:29,960 --> 00:34:32,160 துகள்கள் செயல்படுத்தப்பட்டு பரவுது. 391 00:35:02,360 --> 00:35:04,000 ஒரு விஷயம் மறந்துட்டேன், அப்பா. 392 00:35:06,640 --> 00:35:09,480 இன்று, மூன்றாம் கூற்றோடு முதல் மாதிரியை செய்தேன். 393 00:35:09,560 --> 00:35:11,840 - நல்லது. - உங்களுக்கு பிடிக்கும்னு தெரியும். 394 00:35:12,840 --> 00:35:14,840 தண்ணீர் குடிப்பது போல அது ரொம்ப சுலபம். 395 00:35:33,080 --> 00:35:34,120 செய்யாதே. 396 00:35:35,000 --> 00:35:36,640 நரம்பு மண்டலத்தை பாதிக்கும். 397 00:35:37,640 --> 00:35:39,160 வலி ஏதும் தெரியக்கூடாது. 398 00:35:58,160 --> 00:35:59,640 உன் நல்லதுக்காக செய்தேன். 399 00:36:01,040 --> 00:36:02,800 அவளிடம் ஏதோ பிரச்சினை. 400 00:36:02,880 --> 00:36:05,320 அவ உன் கண்ணை மறைக்கலைன்னா, உனக்கே தெரியும். 401 00:36:15,680 --> 00:36:16,920 மூளையை உபயோகி. 402 00:36:17,640 --> 00:36:19,480 மட்டேயோவை அழைங்க. இப்பவே. 403 00:36:20,280 --> 00:36:21,320 எடுவார்டோ. 404 00:36:21,400 --> 00:36:22,400 அவ எதையோ மறைக்கிறா. 405 00:36:22,480 --> 00:36:24,000 என்னவோ தெரியாது, ஆனா நான் சரி. 406 00:36:24,080 --> 00:36:24,920 அவரை அழைங்க. 407 00:36:26,280 --> 00:36:27,360 இல்ல நீங்க செத்தீங்க. 408 00:36:34,000 --> 00:36:35,040 இல்லை. 409 00:36:36,520 --> 00:36:37,840 நீ ஒரு ஸானி. 410 00:36:37,920 --> 00:36:40,080 கடின முடிவுகளை எடுக்க கத்துக்கணும். 411 00:36:45,040 --> 00:36:46,400 நீ என் போல, எடுவார்டோ. 412 00:36:46,880 --> 00:36:49,000 இல்லை, நான் உங்களை போல இல்லை. 413 00:38:30,760 --> 00:38:31,800 ஹாய், டியானா. 414 00:40:11,760 --> 00:40:13,760 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 415 00:40:13,840 --> 00:40:15,840 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்