1 00:00:15,891 --> 00:00:17,893 டிஎஸ் லென்கர் யூனிட் வீ7 ஐ அழைக்கிறேன். 2 00:00:18,393 --> 00:00:21,522 நான் ஹாதர்வே ஃபிளாட்ஸின் ஒன்பதாவது தளத்திற்குள் நுழைகிறேன். 3 00:00:21,522 --> 00:00:24,274 ஃபிளாட் 942க்குச் செல்கிறேன், சந்தேகத்திற்குரியவர் இன்னும் பிடிபடவில்லை. 4 00:00:24,274 --> 00:00:26,485 - டிஎஸ் லென்கர், யூனிட் 7, புரிந்தது. - உள்ளே. 5 00:00:26,485 --> 00:00:28,654 நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம். மூன்று நிமிடங்களில் வந்துவிடுவோம். 6 00:00:29,863 --> 00:00:31,490 எச்சரிக்கையுடன் தொடருங்கள். 7 00:00:36,245 --> 00:00:37,079 போலீஸ்! 8 00:00:43,418 --> 00:00:45,921 - ஃபிளாட்டிற்குள் நுழைகிறேன். - சரி. இரண்டு நிமிடங்களில் வந்துவிடுவோம். 9 00:01:46,773 --> 00:01:47,858 போலீஸைக் கூப்பிடுங்கள். 10 00:01:56,116 --> 00:01:57,409 இல்லை, நில்! 11 00:01:59,620 --> 00:02:00,621 போலீஸ்! 12 00:02:03,081 --> 00:02:03,957 நில்! 13 00:03:59,072 --> 00:04:00,282 {\an8}குற்ற வழக்குக் கோப்பு 14 00:04:06,538 --> 00:04:07,539 இல்லை. 15 00:04:17,966 --> 00:04:19,134 இவன் தான். 16 00:04:24,014 --> 00:04:25,140 ”கிளைவ் சில்காக்ஸ்.” 17 00:04:25,140 --> 00:04:26,975 கண்டிப்பாக இவன் தான். 18 00:04:31,313 --> 00:04:33,440 இவன் டேட்டாபேஸில் இருக்கிறான் எனில், இவனது முந்தைய குற்றம் என்ன? 19 00:04:33,440 --> 00:04:36,610 பல்வேறு தாக்குதல்கள், வீட்டிற்குள்ளான தாக்குதல், 20 00:04:37,528 --> 00:04:39,655 சட்டவிரோத செயல்களில் ஈடுபாடு. 21 00:04:40,739 --> 00:04:43,325 தீவிர வலதுசாரிக் குழுவில் இருந்துள்ளான், சண்டையிடும் குழு என நினைக்கிறேன். 22 00:04:44,201 --> 00:04:45,994 ஆம், எதற்கும் வழக்கு விசாரிக்கப்படவில்லை. 23 00:04:46,578 --> 00:04:49,206 அவை எவ்வளவு பின்னோக்கிச் செல்கின்றன? தாக்குதல் கோரல்கள்? 24 00:04:49,790 --> 00:04:51,041 ஆகஸ்ட் 2009. 25 00:04:51,542 --> 00:04:54,086 மைக்கேல்ஸ் தெருவில் தொந்தரவு இருந்ததால் போலீஸ் அழைக்கப்பட்டுள்ளனர். 26 00:04:54,086 --> 00:04:56,380 மைக்கேல்ஸ் தெரு. அவன் உள்ளூர்க்காரன். 27 00:04:57,381 --> 00:05:00,133 ஏன்? உனக்கு என்ன ஆர்வம்? 28 00:05:01,134 --> 00:05:04,513 இறந்தவள், மரியா டி சோஸா. 29 00:05:07,015 --> 00:05:11,019 அவள்தான் என் ஹேய்ஸ் லேன் அழைப்பாளர் என நம்புகிறேன். செவ்வாய் இரவு. 30 00:05:12,354 --> 00:05:13,647 பெயர் தெரியாத 999? 31 00:05:13,647 --> 00:05:14,731 ஆம், சார். 32 00:05:16,108 --> 00:05:19,736 தான் தான் அடெலைட் பரோஸைக் கொன்றதாகக் கூறும் வன்முறையான காதலன். 33 00:05:21,071 --> 00:05:23,574 நான் கூடுதல் உதவி கேட்டேன், நினைவுள்ளதா? 34 00:05:23,574 --> 00:05:24,783 - ஜூன்... - இப்போது... 35 00:05:28,245 --> 00:05:33,917 அவனுக்கு அண்டைவீட்டார், வேலையில் நண்பர்கள், முன்னாள் பார்ட்னர்கள் இருக்கலாம். 36 00:05:35,169 --> 00:05:37,588 - அவன் இதற்கு முன் வற்புறுத்தி... - பார்... 37 00:05:37,588 --> 00:05:39,006 இல்லை, நான் அவனைப் பிடித்திருப்பேன். 38 00:05:41,383 --> 00:05:42,593 உன்னால் முடிந்ததை நீ செய்தாய். 39 00:05:46,763 --> 00:05:48,932 நீ நன்றாக இருக்கிறாய். 40 00:05:51,185 --> 00:05:52,561 அதுதான் முக்கியம். 41 00:05:53,312 --> 00:05:56,190 ஒன்று சொல்கிறேன், அந்த மற்றொரு கொலையில் எதுவும் இருந்தால், 42 00:05:56,190 --> 00:05:57,691 அடெலைட் பரோஸ் கொலையில்... 43 00:05:59,359 --> 00:06:00,611 நாம் விசாரிப்போம். 44 00:06:01,987 --> 00:06:03,238 நான் உறுதியளிக்கிறேன். 45 00:06:07,868 --> 00:06:09,161 எதை வேண்டுமானாலும் செய்வோம். 46 00:06:12,956 --> 00:06:15,459 கிம் மொபைல் 47 00:06:17,002 --> 00:06:18,420 அவர்கள் பெரியவர்களாக இருந்தால்... 48 00:06:18,420 --> 00:06:20,422 கிம். உனக்கு என்ன வேண்டும்? 49 00:06:20,422 --> 00:06:21,673 ...அவர்களது வீழ்ச்சி பெரிதாக இருக்கும். 50 00:06:29,264 --> 00:06:31,725 பிரை. உன் சமூகத்தில் ஒரு கொலை நடந்ததாகக் கேள்விப்பட்டேன். 51 00:06:37,648 --> 00:06:40,192 மன்னிக்கவும். ஹாய், மன்னிக்கவும். 52 00:06:40,192 --> 00:06:41,944 நான் ஜூன் லென்கர் என்பவரைப் பார்க்க வேண்டும். 53 00:06:41,944 --> 00:06:44,154 - அவர் கொஞ்ச நேரம் முன்பு கொண்டுவரப்பட்டார். - அடச்சை. 54 00:06:46,198 --> 00:06:47,199 அதோ இருக்கிறார். 55 00:06:48,450 --> 00:06:49,576 சரி, பை. 56 00:06:53,830 --> 00:06:54,998 - ஹாய். - ஹாய். 57 00:06:56,750 --> 00:06:58,001 - நன்றாக இருக்கிறாயா? - ஆம். 58 00:06:59,920 --> 00:07:01,380 - நிச்சயமாகவா? - ஆம். 59 00:07:09,263 --> 00:07:10,264 வா. 60 00:07:12,224 --> 00:07:14,518 அவர்கள் உன் உடைகளை என்ன செய்தனர்? 61 00:07:14,518 --> 00:07:17,729 அவர்கள் எடுத்துக்கொண்டனர். அது ஆதாரம், ஃபைபர்கள் மற்றும் டிஎன்ஏவுக்காக... 62 00:07:17,729 --> 00:07:18,981 - அது இயல்பானதுதான். - சரி. 63 00:07:18,981 --> 00:07:21,775 இயல்பானதா? இயல்பானது. இதில் இயல்பாக எதுவுமில்லை... 64 00:07:21,775 --> 00:07:25,404 லியோ, ஒன்றுமில்லை. இவை சிறு காயங்கள்தான். 65 00:07:28,824 --> 00:07:30,200 மன்னிக்கவும், எனக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை. 66 00:07:30,200 --> 00:07:33,036 இல்லை, பரவாயில்லை. ஒரு நிமிடம்... ஒரு நிமிடம் இரு, சரியா? 67 00:07:33,036 --> 00:07:35,539 மன்னிக்கவும். 68 00:07:35,539 --> 00:07:36,665 நன்றாக உள்ளேன், கண்ணே. 69 00:07:36,665 --> 00:07:38,292 இன்று வேலை செய்யும் டாக்டர்கள் யாரும் உள்ளனரா? 70 00:07:38,292 --> 00:07:41,920 யாரும்... ஏனெனில் என் மனைவி ஒரு போலீஸ், அவர் தாக்கப்பட்டுள்ளார். 71 00:07:41,920 --> 00:07:43,088 லியோ. 72 00:07:43,088 --> 00:07:44,756 லியோ, அவர்கள் எனக்கு எதுவுமில்லை என்று கூறிவிட்டனர். 73 00:07:44,756 --> 00:07:47,050 டாக்டர் என்னை டிஸ்சார்ஜ் செய்வதற்காகக் காத்திருக்கிறேன். 74 00:07:47,050 --> 00:07:48,594 ஆம். சரி. அவர் டாக்டரைப் பார்க்க வேண்டும். 75 00:07:48,594 --> 00:07:49,511 - சரியா? - சரி. 76 00:07:49,511 --> 00:07:51,930 - இப்போது பார்க்கலாமா? - ஆம், ஒரு நிமிடம். 77 00:07:51,930 --> 00:07:52,848 நன்றி. 78 00:07:56,560 --> 00:07:57,644 ஒன்றுமில்லை. 79 00:07:58,520 --> 00:07:59,521 ஒன்றுமில்லை. 80 00:08:01,940 --> 00:08:03,233 கண்ணே, என்ன செய்கிறாய்? 81 00:08:03,817 --> 00:08:04,735 ஒன்றுமில்லை. 82 00:08:05,819 --> 00:08:07,112 அது நான் நினைப்பதுதானா? 83 00:08:07,112 --> 00:08:09,198 - உன் சமூக ஊடகத்தில் போஸ்ட் செய்கிறாயா? - இல்லை. 84 00:08:10,407 --> 00:08:11,909 அடக் கடவுளே, அதைத்தான் செய்கிறாய். நான் பார்க்கிறேன். 85 00:08:13,160 --> 00:08:15,704 - விடுங்கள், அம்மா. - வாவ். 86 00:08:15,704 --> 00:08:17,623 ஜேக்கப். அதாவது... நீ, என்ன? 87 00:08:17,623 --> 00:08:19,875 நீ உன் அம்மாவின் காயங்களை பிறர் ரசிக்கச் செய்கிறாய். 88 00:08:19,875 --> 00:08:21,543 உன் அப்பா உன்னை ஃபாலோ செய்யவில்லை என நம்புகிறேன். 89 00:08:22,461 --> 00:08:23,837 இல்லை, அவரை பிளாக் செய்துவிட்டேன். 90 00:08:24,421 --> 00:08:28,425 இருந்தாலும், எனக்கு 13 லைக்குகளுக்கு மேல் வந்துகொண்டிருக்கிறது. அது நல்லதா? 91 00:08:29,134 --> 00:08:30,511 நீங்கள் பாட்டி போலப் பேசுகிறீர்கள். 92 00:08:30,511 --> 00:08:32,596 யாரோ என்னை தைரியசாலி என்று கூறியுள்ளனர். 93 00:08:33,222 --> 00:08:34,932 நான் “தைரியசாலியை“ ஏற்றுக்கொள்ள முடியும். 94 00:08:36,140 --> 00:08:37,142 மன்னித்துவிடுங்கள். 95 00:08:37,808 --> 00:08:40,062 நீ என்னை நினைத்துப் பெருமைப்பட இதுதான் தேவைப்படுமா? 96 00:08:54,618 --> 00:08:56,286 கோடீன் 30மிகி ஜூன் லென்கர் 97 00:09:41,498 --> 00:09:44,376 தூங்க முடியவில்லை வேலைக்குச் செல்கிறேன் 98 00:10:04,646 --> 00:10:05,898 காதல் காயப்படுத்தக் கூடாது 99 00:10:06,481 --> 00:10:07,816 தொடர்புகொள்ளுங்கள் 100 00:10:11,278 --> 00:10:12,362 இவன்தான் அது. 101 00:10:13,071 --> 00:10:14,406 கிளைவ் சில்காக்ஸ். 102 00:10:15,490 --> 00:10:18,327 இதுதான் அவன், கிளைவ் சில்காக்ஸ். 103 00:10:18,327 --> 00:10:20,704 யாராவது இவனுடன் பேசியிருக்கலாம். 104 00:10:21,205 --> 00:10:23,332 முன்னாள் காதலி, சகோதரி, குடும்பத்தினர். 105 00:10:26,418 --> 00:10:27,503 எதுவாக இருந்தாலும் உதவலாம். 106 00:10:29,171 --> 00:10:30,714 நிறுத்துங்கள். வீட்டுக்குள்ளான துன்புறுத்தலை 107 00:10:30,714 --> 00:10:33,091 இது என் தனிப்பட்ட மொபைல் எண். 108 00:10:33,091 --> 00:10:34,468 இது என் புதிய எண். 109 00:10:35,969 --> 00:10:37,930 நன்றி, கண்ணே. ரட்சகர். 110 00:10:37,930 --> 00:10:39,515 பாலும், ஒரு சர்க்கரையுமா? 111 00:10:39,515 --> 00:10:40,933 இரண்டு வேண்டும். நான் பழைய பழக்கத்துக்குச் செல்கிறேன். 112 00:10:40,933 --> 00:10:43,936 இல்லை, பரவாயில்லை. நீங்கள் இன்னும் இரவு நேரத்தில் வேலை பார்ப்பதை நம்ப முடியவில்லை. 113 00:10:44,520 --> 00:10:45,604 உனக்குப் பழகிவிடும். 114 00:10:47,940 --> 00:10:50,692 நான் எனக்காக வரவில்லை. வேலைதான். 115 00:10:50,692 --> 00:10:52,152 அதற்கு வாய்ப்பு குறைவுதான், 116 00:10:53,403 --> 00:10:57,074 ஆனால் இவனை நான் கண்டுபிடிக்க முயல்கிறேன். கிளைவ் சில்காக்ஸ். 117 00:11:00,953 --> 00:11:01,995 நான் கேட்டுப் பார்க்கிறேன். 118 00:11:51,128 --> 00:11:54,047 4 புதிய மெசேஜ்கள் - டிசிஐ சாம்பர்ஸ் விடுபட்ட அழைப்பு - லியோ 119 00:11:56,925 --> 00:11:58,760 ஜூன், ஹாதர்வே டவர்ஸில் 120 00:11:58,760 --> 00:12:02,181 முன்னேற்றம் கிடைத்துள்ளது. மன்னிக்கவும். எங்களுக்கு கால் செய். 121 00:12:15,152 --> 00:12:16,695 மன்னிக்கவும். 122 00:12:35,255 --> 00:12:38,675 சார். நான் அந்த இடத்திற்கு முதலில் சென்றேன் எனத் தெரியுமா? 123 00:12:39,510 --> 00:12:41,053 அங்கேயே உங்களை நிறுத்துகிறேன். 124 00:12:41,053 --> 00:12:43,263 இறுதியில், இந்த சில்காக்ஸ் ஏற்கனவே 125 00:12:43,263 --> 00:12:45,516 நடந்துகொண்டிருக்கும் விசாரணையில் தேடப்படுகிறான். 126 00:12:45,516 --> 00:12:46,600 உண்மையாகவா? 127 00:12:46,600 --> 00:12:49,728 ஆம். போன அக்டோபரில் ஒரு இளம்பெண் வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பும்போது தாக்கப்பட்டிருக்கிறாள். 128 00:12:49,728 --> 00:12:54,316 டி & சி இந்தக் கொலையை ஏற்கனவே இருக்கும் அணியிடம் ஒருங்கிணைக்கலாம் என முடிவுசெய்துள்ளனர். 129 00:12:54,316 --> 00:12:55,609 அவனைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? 130 00:12:56,276 --> 00:12:59,071 எந்தக் கேள்வியாக இருந்தாலும் என் சகப் பணியாளர் டிஐ கியரிங்கிடம் கேளுங்கள். 131 00:13:00,906 --> 00:13:03,909 அவர்தான் பொறுப்பில் இருப்பவர், நான் வெறும் தோற்றத்திற்குத்தான். 132 00:13:04,826 --> 00:13:05,911 இருங்கள், அவர்... 133 00:13:06,620 --> 00:13:08,163 அவன் இன்னும் இங்கே இருக்கிறான் என அவர் நினைக்கிறாரா? 134 00:13:08,163 --> 00:13:09,623 அந்தக் காயங்கள் நன்றாகத் தெரியவில்லை. 135 00:13:10,541 --> 00:13:13,377 சார், மரியா இறப்பதற்கு முன், 136 00:13:13,377 --> 00:13:17,256 அவள் அவசரகால ஹேண்ட்லரிடம் தன்னை ஹேய்ஸ் லேன் அழைப்பாளர் எனக் கூறியிருக்கிறாள். 137 00:13:17,256 --> 00:13:19,550 - ஹேய்ஸ் லேன் அழைப்பாளரா? - நான் கூறிய அடையாளம் தெரியாத அழைப்பு... 138 00:13:19,550 --> 00:13:21,927 - புதன்கிழமை உங்களிடம் கூறினேன். - ஓ, ஆம். 139 00:13:21,927 --> 00:13:24,137 நீங்கள் அவனைப் பிடித்தால், 140 00:13:24,137 --> 00:13:26,890 அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவனை விசாரிக்க உங்கள் அனுமதி வேண்டும். 141 00:13:26,890 --> 00:13:29,977 - குற்றச்சாட்டுகளா? - அடெலைட் பரோஸின் கொலை. 142 00:13:29,977 --> 00:13:32,354 இரண்டு அழைப்புகள், ஒரே பெண். அதுதான் உங்கள் அனுமானமா? 143 00:13:32,354 --> 00:13:34,189 - ஆம். - அது மிகவும் வசதியாக இருக்கும். 144 00:13:35,065 --> 00:13:38,652 இல்லை. மரியா டி சோஸா, அவள் கால் ஹேண்ட்லரிடம், “நாம் முன்பே பேசியுள்ளோம்...” 145 00:13:38,652 --> 00:13:42,030 ஆம், முன்பே பேசியுள்ளோம். எங்கே, எப்போது என்று சொல்லவில்லை. 146 00:13:42,030 --> 00:13:43,740 அதற்காக அதைத் தவிர்த்துவிட முடியாது. 147 00:13:44,283 --> 00:13:46,869 அதாவது, அவர்களுக்குள் உடல்ரீதியான ஒற்றுமைகளும் உள்ளன. 148 00:13:47,578 --> 00:13:50,998 ஒரேமாதிரியான உடல்வாகு. இருவரும் ஸ்பானிஷைச் சேர்ந்தவர்கள். 149 00:13:50,998 --> 00:13:52,666 அவர்களது குரல் ஒரே போல இருந்தது. 150 00:13:53,876 --> 00:13:55,335 அவள் இறந்ததை நீங்கள் பார்த்ததாகக் கூறினார்கள். 151 00:13:57,796 --> 00:13:58,797 ஆம். 152 00:13:58,797 --> 00:14:00,716 உங்களிடம் இரக்கத்துடன் பேச விரும்பவில்லை, 153 00:14:02,050 --> 00:14:05,512 ஆனால் அந்த அழைப்பின் ரெக்கார்டிங்கை நான் கேட்டேன், சரியா? 154 00:14:06,597 --> 00:14:09,975 அவளது வாழ்வின் கடைசித் தருணங்களில் நீங்கள் கொடுத்த ஆலோசனை. 155 00:14:10,976 --> 00:14:12,186 அது மிகவும் சரியானது. 156 00:14:13,437 --> 00:14:14,563 நீங்கள் சிறப்பாக முயன்றீர்கள். 157 00:14:15,147 --> 00:14:16,190 அவளை ஆதரித்துள்ளீர்கள். 158 00:14:22,696 --> 00:14:24,031 அவள்தான் அந்த அழைப்பாளர். 159 00:14:25,365 --> 00:14:27,284 - சரி. - அவள்தான் ஹேய்ஸ் லேன் அழைப்பாளர். 160 00:14:27,284 --> 00:14:29,870 - மேலும் அவள்... - நீங்கள் பார்க்க விரும்பியதைப் பார்க்கிறீர்கள். 161 00:14:29,870 --> 00:14:30,954 நாம் அனைவருமேதான். 162 00:14:30,954 --> 00:14:32,581 நான் அவனை விசாரிக்க வேண்டும். 163 00:14:32,581 --> 00:14:36,043 நாம் இருவரும்தான், டிடெக்டிவ் சார்ஜண்ட். ஆனால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 164 00:14:36,043 --> 00:14:37,878 பத்து மணிநேரம் ஆகிவிட்டது. 165 00:14:37,878 --> 00:14:39,379 நீங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள். 166 00:14:40,923 --> 00:14:43,342 உங்களுக்குக் காயம்பட்டுள்ளதால் அப்படி நடந்துகொள்கிறீர்கள். 167 00:14:43,342 --> 00:14:44,426 நான் நலமாக இருக்கிறேன். 168 00:14:44,426 --> 00:14:46,845 இல்லை. நீங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளீர்கள். 169 00:14:46,845 --> 00:14:49,264 - எதை வைத்து அவன் இங்கிருப்பதாக நினைக்கிறீர்கள்? - அது குடியால் வரும் தலைவலி இல்லை. 170 00:14:49,264 --> 00:14:50,807 நீங்கள் நேரத்தையும், வளங்களையும் வீணடிக்கிறீர்கள். 171 00:14:50,807 --> 00:14:53,227 - நீங்கள் வெளியே சென்று தேட வேண்டும். - வீட்டுக்குச் சென்று ஓய்வெடுங்கள். 172 00:14:56,855 --> 00:14:58,273 நாம் இருவரும் ஒரே பக்கத்தில்தான் இருக்கிறோம். 173 00:15:16,291 --> 00:15:17,417 {\an8}தேங்காய் 174 00:15:25,884 --> 00:15:31,056 அவனுக்கு நீண்ட காலம் முன்பு ஒரு காதலி இருந்தாள். 175 00:15:31,056 --> 00:15:32,349 என்னைப் போலவே. 176 00:15:32,891 --> 00:15:35,769 அவன், “முட்டாள் பெண். சொல்வதைக் கேட்கவில்லை” என்றான். 177 00:15:36,311 --> 00:15:38,522 அவனை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவில்லை. 178 00:15:39,481 --> 00:15:43,193 - உங்கள் பெயரைச் சொல்கிறீர்களா? - மரியா. 179 00:15:43,193 --> 00:15:45,612 மரியா. சரி, மரியா. 180 00:15:47,739 --> 00:15:51,368 நான் உங்களை அழைத்துள்ளேன். உங்களிடம் முன்பே பேசியுள்ளேன். 181 00:15:51,368 --> 00:15:53,745 ஆம், நினைவுள்ளது. 182 00:15:54,663 --> 00:15:56,164 ஹேய்ஸ் லேன் 999 அழைப்பு 183 00:15:56,164 --> 00:16:00,752 அவன் என்னைக் குத்திய அதே கத்தியால் அவளை பல முறை குத்தியுள்ளான். 184 00:16:01,545 --> 00:16:07,134 அவளைக் கொன்றதற்காக ஒருவர் 24 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். 185 00:16:07,885 --> 00:16:12,973 மேலும் அவன் ஒயிட்கிராஸில் இருக்கும் அவர்... 186 00:16:14,933 --> 00:16:17,311 அவர் தோல்வியுற்றவர் என்றும்... 187 00:16:18,937 --> 00:16:21,315 முட்டாள் பெண்ணே. 188 00:16:21,315 --> 00:16:23,650 - புரிகிறது என்று சொல்லுங்கள். - புரிகிறது. 189 00:16:23,650 --> 00:16:27,446 - அவளை... -“முட்டாள். சொல்வதைக் கேட்கவில்லை.” 190 00:16:28,030 --> 00:16:30,157 அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லை. 191 00:16:40,167 --> 00:16:43,420 தேசிய தரவுத்தளத்தில் உங்கள் வாகனத் தேடல்களைப் பதிவுசெய்துள்ளோம். 192 00:16:43,420 --> 00:16:47,716 நீங்கள் பார்ப்பது போல, இவற்றுக்கான கேஸ் எண்கள் இல்லை. அதற்கான குற்றமும் இல்லை. 193 00:16:49,218 --> 00:16:53,138 அதனால் அந்த ஒவ்வொரு தேடலையும் ஆய்வு செய்து, அதற்கான 194 00:16:53,138 --> 00:16:56,266 கேஸ் எண்ணை உள்ளிடுங்கள். 195 00:16:56,266 --> 00:16:59,186 நிச்சயமாக உங்களுக்குத் தெரிந்திருக்கும், அது ஒரு விதிமீறல்... 196 00:17:05,733 --> 00:17:07,152 உங்கள் வேலைப் பதிவை ஆய்வு செய்து, 197 00:17:07,152 --> 00:17:10,196 கேஸ் எண்களைக் கண்டறிந்து, இவை அனைத்தையும் ஒழுங்கமையுங்கள், சரியா? 198 00:17:10,196 --> 00:17:14,785 சார், அந்த இரண்டு அவசர அழைப்புகளையும் சோதிக்க தடவியல் குரல் பகுப்பாய்வைக் கோர வேண்டும். 199 00:17:14,785 --> 00:17:16,244 ஹேய்ஸ் லேன் மற்றும் நேற்றிரவு இறந்தவர், 200 00:17:16,244 --> 00:17:19,039 அது ஒரே பெண்ணா இல்லையா என்பதை உறுதிசெய்ய. 201 00:17:19,039 --> 00:17:21,208 அது நம் கேஸ் இல்லை, ஜூன். அதைத் தெளிவாகக் கூறிவிட்டனர். 202 00:17:21,208 --> 00:17:24,837 சார். ஹேய்ஸ் லேன் அழைப்பாளர், அதை கட்டளை மற்றும் கட்டுப்பாடு கொடியிட்டுள்ளது. 203 00:17:24,837 --> 00:17:27,130 அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளும்படி கேட்டீர்கள். 204 00:17:27,714 --> 00:17:30,300 அந்த அழைப்பாளர் மரியா டி சோஸாவாக இருந்தால், 205 00:17:30,300 --> 00:17:31,927 எனில் இந்த ஃபைலை மூடலாம். அவ்வளவுதான் கேட்கிறேன். 206 00:17:31,927 --> 00:17:33,053 சரி, பார். 207 00:17:34,471 --> 00:17:35,681 நீ கோபமாக இருப்பது தெரிகிறது. 208 00:17:36,932 --> 00:17:37,933 சரியா? 209 00:17:39,059 --> 00:17:42,604 உண்மையில், ஜிம் பற்றி கொஞ்சம் யோசி. 210 00:17:42,604 --> 00:17:44,606 அவர் ஓக்மூர் கொள்ளையில் தனியாக வேலை செய்கிறார். இல்லையா, நண்பா? 211 00:17:44,606 --> 00:17:48,694 - எனவே அதைச் செய். சரியா? - சரி, சார். 212 00:17:54,950 --> 00:17:56,243 {\an8}கேஸ் ஃபைல் 213 00:18:07,087 --> 00:18:09,256 எரோல் மேதிஸுக்கான மேல்முறையீட்டில் அவரது காதலியைக் கொன்றது நிரூபிக்கப்பட்டது 214 00:18:09,965 --> 00:18:11,133 டோரிஸ் மேதிஸ் மேல்முறையீடு கோருகிறார் 215 00:18:39,536 --> 00:18:40,746 மீட்பின் தேவாலயம் 216 00:18:42,080 --> 00:18:43,373 தயாரா? 217 00:18:49,505 --> 00:18:52,466 மீண்டும்! செய்யலாம்! ஹேய், ஹேய்! 218 00:18:55,594 --> 00:18:56,845 இப்போது, செய்யுங்கள். 219 00:19:08,398 --> 00:19:09,733 பக்கவாட்டில். அப்படித்தான். 220 00:19:14,905 --> 00:19:18,534 - உனக்கு எல்லாமே நன்றாக இருக்கப் போகிறது. - பிறர் பார்த்துக்கொண்டே இருப்பதை விரும்பவில்லை. 221 00:19:18,534 --> 00:19:22,371 ஓ, கமான். நீதான் மணப்பெண், கண்ணே. இது உன் முக்கியமான நாள். 222 00:19:22,955 --> 00:19:24,039 நீ இதைக் காட்ட வேண்டும். 223 00:19:26,041 --> 00:19:27,668 நீங்கள்தான் டோரிஸ் மேதிஸா? 224 00:19:27,668 --> 00:19:31,463 ஆம். நாங்கள் கிட்டத்தட்ட முடித்துவிட்டோம். உள்ளே இருங்கள். 225 00:19:31,463 --> 00:19:33,632 எனக்குத் தெரியவில்லை. 226 00:19:33,632 --> 00:19:35,592 வந்து கண்ணாடியில் பார். 227 00:19:38,095 --> 00:19:40,389 - வாவ். - ஆம், பார்த்தாயா? 228 00:19:53,277 --> 00:19:55,988 - அடுத்த வாரம் சந்திக்கலாம். - சரி. அடுத்த வாரம் சந்திக்கலாம். 229 00:19:55,988 --> 00:19:57,155 பை. 230 00:20:03,871 --> 00:20:06,373 - நான் என்ன உதவி செய்ய வேண்டும்? - அவர் அற்புதமாகத் தோற்றமளிப்பார். 231 00:20:06,373 --> 00:20:07,708 நன்றி. 232 00:20:07,708 --> 00:20:11,295 என் பெயர் டிஎஸ் ஜூன் லென்கர். உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். 233 00:20:11,295 --> 00:20:12,379 சரி. 234 00:20:13,672 --> 00:20:16,091 லடிஷா, எங்களைத் தனியாக விடுகிறாயா, கண்ணே? 235 00:20:16,091 --> 00:20:17,176 சரி. 236 00:20:17,968 --> 00:20:20,929 நாங்கள் இவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறோம். 237 00:20:21,889 --> 00:20:23,390 இவன் பெயர் கிளைவ் சில்காக்ஸ். 238 00:20:23,390 --> 00:20:24,725 இவனை போலீஸ் தேடுகின்றனர். 239 00:20:25,225 --> 00:20:28,687 இவன் எங்கே இருக்கலாம் என்று தகவல் பெற முயல்கிறோம்? இவன் இந்தப் பகுதியைச் சேர்ந்தவன். 240 00:20:29,354 --> 00:20:31,982 இவனைச் சந்தித்த அல்லது இவனுடன் பழகியிருக்கும் 241 00:20:31,982 --> 00:20:33,859 அனைவரையும் தொடர்புகொள்கிறோம். 242 00:20:33,859 --> 00:20:35,777 - எனவே அவன்... - சொல், 243 00:20:36,528 --> 00:20:40,449 உன்னைப் போன்ற இனிமையான பெண் போலீஸில் என்ன செய்கிறாய்? 244 00:20:43,744 --> 00:20:44,995 உங்கள் மகன் பற்றி? 245 00:20:44,995 --> 00:20:47,623 கடந்தகாலத்தில் அவர்களுக்கு ஒருவரையொருவர் தெரிந்திருக்கலாம். 246 00:20:48,540 --> 00:20:49,958 நீ என் எரோலிடம் பேசினாயா? 247 00:20:49,958 --> 00:20:51,793 இல்லை. அதாவது, ஏன்? நீங்கள்... 248 00:20:52,669 --> 00:20:54,505 அவர்களுக்கு ஒருவரையொருவர் தெரியும் என நினைக்கிறீர்களா? 249 00:20:54,505 --> 00:20:57,424 அதாவது, அவன் எரோலின் ஃபிளாட்டுக்குச் சென்றிருக்கலாமா? அடெலைடைத் தெரிந்திருக்குமோ? 250 00:20:57,424 --> 00:21:01,178 அடெலைட்? ஏன் அடெலைட் பற்றிப் பேசுகிறாய்? 251 00:21:02,763 --> 00:21:04,431 கேள், கண்ணே. 252 00:21:05,265 --> 00:21:09,019 நான் இதற்குப் புதிதல்ல. யாராவது பொய் சொன்னால் எனக்குத் தெரியும். 253 00:21:09,019 --> 00:21:11,146 நான் உதவி பெறத்தான் முயல்கிறேன். 254 00:21:12,397 --> 00:21:14,858 உங்களிடம் கார்டு உள்ளதா, மிஸ் டிஎஸ்? 255 00:21:14,858 --> 00:21:16,777 லென்கர். ஜூன் லென்கர். 256 00:21:19,112 --> 00:21:21,573 சொல்வதைக் கேள், டிஎஸ் லென்கர். 257 00:21:22,282 --> 00:21:24,368 நீ இங்கே வந்து, என் எரோலுக்கு 258 00:21:24,368 --> 00:21:27,079 புதிய பிரச்சினைகளைக் கொடுக்கலாம் என நினைத்தால்... 259 00:21:27,079 --> 00:21:29,540 - இல்லை, அதற்காக வரவில்லை. - வெளியே போ. 260 00:21:39,132 --> 00:21:40,133 உன்னை யார் அனுப்பியது? 261 00:21:41,301 --> 00:21:42,386 அவன் அனுப்பினானா? 262 00:21:43,387 --> 00:21:44,721 - யார்? - ஹெகர்ட்டி. 263 00:21:45,305 --> 00:21:47,057 அவனது ஆட்கள். 264 00:21:47,057 --> 00:21:51,144 அவனது குழுவினர் பொய் மட்டுமே சொல்வார்கள். 265 00:21:51,645 --> 00:21:52,646 மேலும் அவர்கள்... 266 00:21:54,523 --> 00:21:56,859 என் மகனைப் பிரித்துவிட்டனர். 267 00:21:57,401 --> 00:22:00,904 மிகவும் பணிவாக நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும்போது, 268 00:22:01,530 --> 00:22:03,490 ”மன்னிக்கவும், நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள்.” 269 00:22:03,490 --> 00:22:05,576 தவறு! அவ்வளவுதான். 270 00:22:07,703 --> 00:22:10,664 நான் கூறியதாக அவனிடம் சொல், 271 00:22:12,165 --> 00:22:13,584 ”நான் இன்னும் இங்குதான் இருக்கிறேன்.” 272 00:22:15,919 --> 00:22:18,922 ஆம். கிளைவ் சில்காக்ஸ். 273 00:22:18,922 --> 00:22:21,884 மார்ச் 2011, அவன் 24பி லேக் தெருவில் வசிக்கிறான். 274 00:22:21,884 --> 00:22:23,468 லேக் தெருவின் முனையில். 275 00:22:24,052 --> 00:22:25,762 ரூடின்’ஸில் டெலிவரி செய்யும் வேலை பார்த்தான். 276 00:22:25,762 --> 00:22:28,056 அந்தப் பழைய யிட்டிஷ் கடையா? கடவுளே, பழைய நினைவுகள் வருகின்றன. 277 00:22:29,183 --> 00:22:30,350 அவன் வேறிடத்தில் இருந்ததற்கான ஆதாரம்? 278 00:22:30,350 --> 00:22:31,643 எனக்குத் தெரிந்து இல்லை. 279 00:22:31,643 --> 00:22:35,105 பாவம். அப்போது நாம் அவனை விசாரிக்கவில்லையா? 280 00:22:35,105 --> 00:22:36,481 கண்டிப்பாக இல்லை. 281 00:22:36,481 --> 00:22:39,902 என்ன? லண்டனில் இருக்கும் அனைவரையும் விசாரிக்க வேண்டுமா? 282 00:22:39,902 --> 00:22:41,195 ஆம், நம் குற்றவாளியைப் பிடித்துவிட்டோம். 283 00:22:43,572 --> 00:22:48,869 சில்காக்ஸுக்கும் அடெலைட், எரோல் மேதிஸ் அல்லது அந்த ஃபிளாட்டுக்கும் தொடர்பிருப்பதாக இருக்கும்... 284 00:22:49,870 --> 00:22:53,624 எனக்கெதிராகவோ விசாரணைக்காகவோ அவள் பயன்படுத்தக்கூடிய எதுவாக இருந்தாலும், 285 00:22:54,833 --> 00:22:55,834 எனக்குத் தெரிய வேண்டும். 286 00:22:57,294 --> 00:22:58,295 சரியா? 287 00:22:58,295 --> 00:22:59,713 நான் அவரை அச்சுறுத்தவில்லை. 288 00:22:59,713 --> 00:23:01,548 அவர் அதை அப்படித்தான் உணர்ந்திருக்கிறார். 289 00:23:01,548 --> 00:23:04,593 எனவே கிளைவ் சில்காக்ஸுக்கும் என் கிளையன்டுக்கும் என்ன தொடர்பு என்று சொல்கிறீர்களா? 290 00:23:04,593 --> 00:23:08,138 அல்லது சத்தியமாக நான் அடுத்து போலீஸ் புகார்கள் ஆணையத்திற்கு கால் செய்வேன். 291 00:23:08,138 --> 00:23:11,350 அடெலைடின் கொலை தொடர்பான தகவல் சில்காக்ஸுக்குத் 292 00:23:11,350 --> 00:23:13,310 தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. 293 00:23:13,310 --> 00:23:17,731 எனவே சில்காக்ஸையும் அடெலைட் அல்லது எரோலையும் இணைக்கும் எதுவும்... 294 00:23:17,731 --> 00:23:19,316 "தொடர்புடைய தகவலா?" 295 00:23:19,942 --> 00:23:22,152 என்ன சொல்கிறீர்கள்? அவன் சாட்சியா? 296 00:23:22,945 --> 00:23:24,279 அல்லது சந்தேகத்திற்குரியவனா? 297 00:23:26,240 --> 00:23:28,325 சொல்ல முடியாது. அது ரகசியம். 298 00:23:28,325 --> 00:23:29,493 கடவுளே. அடச்சை. 299 00:23:39,127 --> 00:23:40,546 - க்ளோயி? - என்ன? 300 00:23:40,546 --> 00:23:42,881 ஹேக்னி டௌன்ஸில் உனக்கு நண்பர்கள் உள்ளனர்தானே? 301 00:23:43,757 --> 00:23:45,008 ஆம்? 302 00:23:45,551 --> 00:23:46,552 எனக்கு ஒரு உதவி வேண்டும். 303 00:23:47,636 --> 00:23:50,180 இது உனது கொலை கேஸ் பற்றியது எனில்... 304 00:23:50,180 --> 00:23:52,391 - நான் தலையிட மாட்டேன். - கமான், க்ளோயி. 305 00:23:52,391 --> 00:23:55,102 என்னால் அதில் ஈடுபட முடியாது, சரியா? அது ரகசியமானது. 306 00:23:55,102 --> 00:23:59,064 தயவுசெய்து. இது முக்கியமில்லை எனில் நான் கேட்க மாட்டேன். 307 00:24:03,110 --> 00:24:04,611 இது எவ்வளவு பெரிய உதவி? 308 00:25:22,189 --> 00:25:23,273 - இந்தாருங்கள். - நன்றி. 309 00:25:23,273 --> 00:25:26,151 டால்ஸ்டனில் மிகவும் ஸ்ட்ராங்கான ஜாவா காஃபி. இதை முயலாமல் நன்றி சொல்லாதீர்கள். 310 00:25:27,236 --> 00:25:32,699 நான் டோரிஸிடம் பேசினேன், எரோல் அவனுடன் பள்ளியில் படித்துள்ளார். 311 00:25:34,034 --> 00:25:35,953 - யாருடன்? - கிளைவ் சில்காக்ஸ். 312 00:25:35,953 --> 00:25:37,704 செயிண்ட் ஜோசஃப்’ஸ் அகாடமி. 313 00:25:39,790 --> 00:25:43,418 ஆனால் கிளைவ் இரண்டு ஆண்டுகள் சீனியர், அதனால் நண்பர்கள் இல்லை. 314 00:25:43,418 --> 00:25:45,671 ஆனால் அவனது குடும்பத்தைத் தெரியும் என்று டோரிஸ் கூறினார். கிட்டத்தட்ட. 315 00:25:45,671 --> 00:25:48,090 கிட்டத்தட்ட என்றால்? 316 00:25:48,090 --> 00:25:51,510 எரோலுக்கு ஒரு கசின் இருந்துள்ளான், ஜமீல், அவன் சில்காக்ஸின் சகோதரியை நேசித்துள்ளான். 317 00:25:52,261 --> 00:25:54,137 ஆனால் டோரிஸ் மறுத்துவிட்டார், எனவே... 318 00:25:56,223 --> 00:25:57,683 எரோலுக்கு அவனைத் தெரியுமா? 319 00:25:58,475 --> 00:25:59,476 எரோலுக்கு அவனைத் தெரியும். 320 00:26:02,855 --> 00:26:03,856 நன்றி. 321 00:26:04,898 --> 00:26:05,899 பரவாயில்லை. 322 00:26:14,199 --> 00:26:18,078 நான் உங்களிடம் மூர்க்கமாக நடந்துகொள்கிறேனா? 323 00:26:20,205 --> 00:26:22,374 மூர்க்கமாகவா? எப்படி? 324 00:26:22,374 --> 00:26:23,834 அமைதியின்றி. 325 00:26:24,751 --> 00:26:29,464 பிடிவாதமாக. கத்துவதாக. கிறுக்குத்தனமாக. எங்கு வேண்டுமானாலும் குறுக்கிடலாம். 326 00:26:30,924 --> 00:26:32,467 நான் கோபமாக இருந்தேன் என்று ராய் கூறினார். 327 00:26:33,260 --> 00:26:36,054 ஆனால் அதுதான் முறை, இல்லையா? பேச முடியாத பெண்ணிடம் பேசும் முறை. 328 00:26:36,555 --> 00:26:38,223 - ஜூன். - என்ன? 329 00:26:38,223 --> 00:26:42,269 நீ அதிர்ச்சியை அனுபவித்திருக்கிறாய். அவருக்குக் கேட்க உரிமை உள்ளது. 330 00:26:45,814 --> 00:26:47,024 நான் அதிகமாக யோசிக்கிறேன். 331 00:26:58,869 --> 00:27:00,370 நீ அருமையாக பார்க் செய்கிறாய், தெரியுமா? 332 00:27:01,079 --> 00:27:03,248 அது விநோதமான பாராட்டு. 333 00:27:09,505 --> 00:27:11,215 - அப்படியா? - இல்லை. 334 00:27:11,924 --> 00:27:13,467 - அப்படியா? - அடச்சை. 335 00:27:15,469 --> 00:27:17,054 - நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமா? - இல்லை. 336 00:27:17,054 --> 00:27:18,805 வேண்டுமெனில் ஐஸ் க்ரீம் வாங்கி வருகிறேன். 337 00:27:23,644 --> 00:27:24,645 நீ நன்றாக இருக்கிறாயா? 338 00:27:30,359 --> 00:27:32,027 நான் கொஞ்சம் சிக்கலில் இருக்கிறேன். 339 00:27:37,908 --> 00:27:38,909 கமான். 340 00:27:39,868 --> 00:27:40,869 இதோ! 341 00:27:45,123 --> 00:27:47,501 எனக்குப் புரியவில்லை. நீ டேட்டாபேஸில் தேடியுள்ளாய், அதற்கென்ன? 342 00:27:47,501 --> 00:27:51,421 எல்லாத் தேடல்களும் பணி நிமித்தமாக இருக்க வேண்டும். அதனுடன் கேஸ் எண்ணை இணைக்க வேண்டும். 343 00:27:52,464 --> 00:27:53,465 அதற்கு? 344 00:27:54,007 --> 00:27:56,677 அது எனக்காக இல்லை. என் அம்மாவுக்காக. 345 00:27:56,677 --> 00:27:58,345 சரி, எத்தனை முறை? 346 00:27:59,263 --> 00:28:00,806 தெரியவில்லை. எட்டு? 347 00:28:01,890 --> 00:28:05,352 எட்டா? ஜூன். ஏன் என்னிடம் சொல்லவில்லை? 348 00:28:05,352 --> 00:28:06,979 ஏனெனில் நீங்கள் என்ன சொல்வீர்கள் எனத் தெரியும். 349 00:28:06,979 --> 00:28:09,064 அவரை மீண்டும் மருத்துவமனையில் சேர்க்க முடியாது, சரியா? 350 00:28:09,064 --> 00:28:10,566 இனியும் அவருக்கு அதைச் செய்ய மாட்டேன். 351 00:28:10,566 --> 00:28:13,360 சரி, இதுதான் தீர்வா? நீ சட்ட விரோதமான டேட்டாபேஸ் தேடல்களைச் செய்வதா? 352 00:28:13,360 --> 00:28:17,239 அந்த ஆள் இல்லையெனில் இது எதுவுமே நடந்திருக்காது. 353 00:28:17,239 --> 00:28:19,908 - ஹெகர்ட்டி. ப்ளா ப்ளா ப்ளா. - அது ஒரு ரேண்டமான ஆய்வு என்றாய். 354 00:28:19,908 --> 00:28:23,328 அவர் பல இடங்களுக்குச் செல்பவர். அவருக்கு எல்லோரையும் தெரியும். 355 00:28:23,328 --> 00:28:25,455 சரி, அதை தொடக்கத்திலேயே தீர்த்துவிடு. உன் லைன் மேனேஜரிடம் பேசு. 356 00:28:25,455 --> 00:28:27,332 - ராயா? - ஆம். நீ செய்ததைக் கூறு. 357 00:28:27,332 --> 00:28:29,626 அதுதான் நான் செய்யக்கூடிய மோசமான விஷயம். 358 00:28:29,626 --> 00:28:30,878 - ஏன்? - ஏனெனில் அவர் மிகவும் கண்டிப்பானவர். 359 00:28:30,878 --> 00:28:33,088 அதைப் புகாரளிப்பது அவரது கடமை என நினைக்கிறார். 360 00:28:33,088 --> 00:28:36,008 சரி. எனில் உயர் அதிகாரியிடம் செல். உதவி கமிஷனரிடம் பேசு. 361 00:28:36,008 --> 00:28:38,677 நீ ஒருவரைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தாயே. சிஐடியில் சேர உன்னை ஊக்குவித்தவர். 362 00:28:38,677 --> 00:28:40,053 ஃபோனில் கூறவா? 363 00:28:40,053 --> 00:28:41,513 ”யோ, என்னை நினைவுள்ளதா? 364 00:28:41,513 --> 00:28:45,184 ஹௌன்ஸ்லோவில் பணியமர்த்தல் வாரயிறுதியில் நீங்கள் கனிவாகப் பேசிய பெண் நான்தான்.” 365 00:28:45,184 --> 00:28:48,061 - ஏன் கூடாது? - ஏனெனில் நான் நீங்கள் இல்லை, சரியா? 366 00:28:49,688 --> 00:28:52,191 என்னால் சாதாரணமாக எடுத்துக்கொண்டு தினசரி வாழ்க்கையை வாழ முடியாது. 367 00:28:52,191 --> 00:28:54,193 உறுதியாக இருப்பதில் குற்றமில்லை. 368 00:28:54,193 --> 00:28:55,652 உறுதியாகவா? 369 00:28:56,612 --> 00:28:58,822 அதற்கு என்ன அர்த்தம் என்று எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. 370 00:28:59,781 --> 00:29:02,159 சரி. இது இனச் சலுகை பற்றியது. 371 00:29:02,159 --> 00:29:03,702 தெரியவில்லை, லியோ. 372 00:29:03,702 --> 00:29:07,998 என் மன அழுத்தத்தைப் போக்க நினைக்கும்போது அங்கிருக்கும் அவசரப் பிரிவு நர்ஸிடம் 373 00:29:07,998 --> 00:29:10,876 நான் கத்த மாட்டேன் என்று எனக்குத் தெரியும். 374 00:29:10,876 --> 00:29:12,836 - அது உறுதியாக இருப்பதா? தெரியவில்லை. - என்ன? 375 00:29:12,836 --> 00:29:14,880 இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. 376 00:29:18,592 --> 00:29:20,886 - ரெஃப்! - மீண்டும். அது ஃபௌல். 377 00:29:20,886 --> 00:29:22,095 என்ன நடக்கிறது? 378 00:29:22,930 --> 00:29:24,389 - அவனுக்கு ஃபௌல் கொடுத்துவிட்டார். - அவன் செய்தானா? 379 00:29:24,389 --> 00:29:26,600 ஆம். அவனைத் தள்ளிவிட்டான். 380 00:29:28,519 --> 00:29:29,895 ஜேக், அவர் சொல்வதைக் கேள். 381 00:29:34,191 --> 00:29:37,194 உனக்கு இப்போது எச்சரிக்கை தருகிறேன், சரியா? இனியும் செய்தால் வெளியேற்றப்படுவாய். சரியா? 382 00:29:37,194 --> 00:29:38,362 சரி. வந்து விளையாடுங்கள். 383 00:29:39,738 --> 00:29:41,865 கமான், ஜேக்கி. விட்டுவிடாதே, நண்பா. 384 00:29:42,950 --> 00:29:44,576 கேள். 385 00:29:45,536 --> 00:29:47,746 நான் மன்னிப்பு கேட்கிறேன், சரியா? 386 00:29:47,746 --> 00:29:50,999 நான் அந்த நர்ஸிடம் அவமரியாதையாக நடந்திருந்தால், ஆனால் நான் மோசமான நிலையில் இருந்தேன். 387 00:29:50,999 --> 00:29:54,586 நான் வருத்தத்தில் இருந்தேன், ஏனெனில் எனக்கு ஃபோன் வந்தது. 388 00:29:54,586 --> 00:29:56,338 ஒரு நிமிடத்திற்கு... நீ கேட்கிறாயா? 389 00:29:59,967 --> 00:30:01,093 நீ இறந்துவிட்டாய் என நினைத்தேன். 390 00:30:08,225 --> 00:30:12,437 கமான், நண்பா. 391 00:30:13,856 --> 00:30:15,023 அது... 392 00:30:17,442 --> 00:30:20,153 நாம் ஒரே கண்ணோட்டத்தில் இருக்கிறோமா என்று சில நேரம் எனக்குத் தெரியவில்லை. 393 00:30:21,822 --> 00:30:23,240 - ஹலோ? - ஹாய், ஜூன். 394 00:30:23,240 --> 00:30:26,201 ஷெல்டர் மூர் தெருவில் இருந்து பெக்கா பேசுகிறேன். 395 00:30:26,201 --> 00:30:29,621 - ஆம். ஹாய். - நீங்கள் கிளைவ் சில்காக்ஸ் பற்றி விசாரித்தீர்களே? 396 00:30:29,621 --> 00:30:31,123 - ஜே? - என்னவெனில், நாங்கள்... 397 00:30:31,123 --> 00:30:32,249 வேலை விஷயம். 398 00:30:32,249 --> 00:30:34,501 சரி. நாங்கள் பஸ்ஸில் செல்கிறோம், சரியா? 399 00:30:34,501 --> 00:30:36,295 ஒருவர் முன்வந்துள்ளார்... 400 00:30:36,295 --> 00:30:37,504 பரவாயில்லை. 401 00:30:55,272 --> 00:30:57,983 ஹாய், நீங்கள் டானா? டான் டேய்லரா? 402 00:30:57,983 --> 00:30:59,651 - ஆம். - தொந்தரவுக்கு மன்னிக்கவும். 403 00:30:59,651 --> 00:31:02,112 என் பெயர் டிஎஸ் ஜூன் லென்கர். 404 00:31:02,112 --> 00:31:05,199 நீங்கள் பழகிய கிளைவ் சில்காக்ஸைக் கண்டுபிடிக்க முயன்று வருகிறேன்? 405 00:31:05,782 --> 00:31:07,993 2018 இல் உங்களுக்கு ஒருவரையொருவர் தெரியும் என நினைக்கிறேன். 406 00:31:08,785 --> 00:31:10,746 அவர் எங்கே இருக்கலாம் எனத் தெரியுமா? 407 00:31:11,413 --> 00:31:13,790 அல்லது நண்பர்கள்? அவர் இருக்கக்கூடிய... 408 00:31:15,876 --> 00:31:18,879 - இல்லை. - இல்லையா? சரி. 409 00:31:19,671 --> 00:31:20,923 என்னுடன் வாருங்கள். 410 00:31:23,091 --> 00:31:24,635 சரி. உங்கள் நேரத்திற்கு நன்றி. 411 00:31:25,302 --> 00:31:26,303 ஏன்? 412 00:31:26,303 --> 00:31:27,513 என் அம்மா. 413 00:31:51,328 --> 00:31:53,789 ஜீரோ யான்கீ டெல்டா. நான் டிஎஸ் ஜூன் லென்கர். 414 00:31:53,789 --> 00:31:56,083 நான் 70 வெர்லைன் சாலையில் இருக்கிறேன். 415 00:31:56,583 --> 00:31:59,002 கிளைவ் சில்காக்ஸைப் பார்த்தேன் என நினைக்கிறேன். 416 00:31:59,002 --> 00:32:00,879 சரி, ஓவர். 417 00:32:00,879 --> 00:32:02,589 உதவி வாகனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. 418 00:32:02,589 --> 00:32:03,966 எவ்வளவு தூரத்தில்? 419 00:32:04,633 --> 00:32:06,593 ஜீரோ, டெல்டா, பிராவோ. வந்துசேரும் நேரம் ஆறு நிமிடங்கள். 420 00:32:07,094 --> 00:32:09,805 ஆறு நிமிடங்கள். அங்கேயே இருங்கள். 421 00:32:09,805 --> 00:32:11,557 உதவிக் குழுவுக்காகக் காத்திருங்கள், ஓவர். 422 00:32:12,391 --> 00:32:13,433 காபி. 423 00:32:37,040 --> 00:32:39,251 உன்னை நேசிக்கிறேன். 424 00:32:45,007 --> 00:32:46,008 லியோ 425 00:32:55,184 --> 00:32:59,104 ஜீரோ டெல்டா யான்கீ. வீட்டிற்குள் ஏதோ தொந்தரவு தெரிகிறது, ஓவர். 426 00:32:59,688 --> 00:33:01,940 தயாராக இருங்கள். உதவிக் குழு வந்துகொண்டிருக்கிறது. 427 00:33:03,650 --> 00:33:04,651 அடச்சை. 428 00:33:13,410 --> 00:33:15,078 போலீஸ்! கதவைத் திறங்கள். 429 00:33:16,205 --> 00:33:17,206 போலீஸ்! 430 00:33:17,915 --> 00:33:20,667 ஜீரோ டெல்டா யான்கீ. வீட்டிற்குள் தாக்குதல் நடக்கிறது. 431 00:33:20,667 --> 00:33:22,711 - என்ன நடக்கிறது? - உங்கள் தோட்டத்திற்குள் செல்லலாமா? 432 00:33:22,711 --> 00:33:24,671 - ஆம். - யூனிட் உதவிக்குக் காத்திருங்கள். 433 00:33:25,672 --> 00:33:27,007 அனைத்து யூனிட்களும். 434 00:33:34,515 --> 00:33:37,809 ஜீரோ டெல்டா யான்கீ. அவசரத் தீயணைப்பு உதவி தேவை. 435 00:33:39,353 --> 00:33:41,230 ஜீரோ டெல்டா யான்கீ, மீண்டும் சொல்லுங்கள். 436 00:33:44,942 --> 00:33:46,985 ஜீரோ டெல்டா யான்கீ, மீண்டும் சொல்லுங்கள். 437 00:33:50,531 --> 00:33:52,783 ஜீரோ டெல்டா யான்கீ, மீண்டும் சொல்லுங்கள். 438 00:33:52,783 --> 00:33:54,493 வீடு எரிந்துகொண்டிருக்கிறது! 439 00:33:55,118 --> 00:33:57,371 அவசரத் தீயணைப்பு உதவி கோரப்படுகிறது. 440 00:34:02,918 --> 00:34:04,044 ஹலோ? 441 00:34:04,586 --> 00:34:05,587 டான்? 442 00:34:12,719 --> 00:34:13,719 ஹலோ? 443 00:34:19,726 --> 00:34:24,106 - இங்கே யாராவது உள்ளீர்களா? - உதவி! இங்கே இருக்கிறோம்! 444 00:34:25,065 --> 00:34:26,440 கதவைவிட்டுத் தள்ளிச் செல்லுங்கள்! 445 00:34:31,321 --> 00:34:33,447 வெளியே போங்கள்! கீழே செல்லுங்கள்! 446 00:34:33,949 --> 00:34:34,949 செல்லுங்கள்! 447 00:35:51,068 --> 00:35:52,069 ஜூன். 448 00:35:53,195 --> 00:35:54,029 ஜூன். 449 00:35:54,029 --> 00:35:55,113 என்ன? 450 00:35:57,074 --> 00:35:58,367 இதை நான் கொடுக்கவில்லை. 451 00:36:00,410 --> 00:36:01,453 சத்தியம் செய். 452 00:36:02,412 --> 00:36:03,830 நோயியல் அறிக்கை கிடைத்துவிட்டதா? 453 00:36:04,331 --> 00:36:05,457 சத்தியம் செய். 454 00:36:05,457 --> 00:36:06,542 சத்தியம். 455 00:36:06,542 --> 00:36:08,210 பார்த்து முடித்தவுடன் அழித்துவிடு. 456 00:36:08,836 --> 00:36:09,837 சரி. 457 00:36:14,925 --> 00:36:16,844 நோயியல் அறிக்கை மரியா டி சோஸா 458 00:36:16,844 --> 00:36:19,221 இது ரகசியமான அறிக்கை 459 00:36:35,654 --> 00:36:36,488 தயாரா? 460 00:36:37,489 --> 00:36:38,490 ஆம். 461 00:36:41,326 --> 00:36:43,620 நான் இந்தச் சந்திப்பில் பங்கேற்பது அவருக்குத் தெரியுமா? 462 00:36:43,620 --> 00:36:46,039 ஆம். உண்மையில், அவர் அதைப் பரிந்துரைத்தார். 463 00:36:51,044 --> 00:36:54,089 நேரம் ஒதுக்கியதற்கு இருவருக்கும் நன்றி... 464 00:36:54,089 --> 00:36:56,800 - உதவுவதில் மகிழ்ச்சி. - முக்கியச் செய்தி. 465 00:36:57,843 --> 00:36:59,595 கிளைவ் சில்காக்ஸ் கொலையை ஒப்புக்கொண்டான். 466 00:36:59,595 --> 00:37:01,013 அற்புதம். 467 00:37:01,013 --> 00:37:02,806 அவன் எளிதில் ஒப்புக்கொண்டான், இல்லையா? 468 00:37:03,432 --> 00:37:06,643 மரியா டி சோஸாவின் கொலை. தப்பித்து ஓடியது. 469 00:37:06,643 --> 00:37:09,146 அவன் தவறான அதிகாரியுடன் மோதியுள்ளான். 470 00:37:09,146 --> 00:37:10,314 நிச்சயமாக. 471 00:37:12,024 --> 00:37:13,859 ”அவளை ஏன் கொன்றாய்?” எனக் கேட்டோம். அவன் என்ன சொன்னான் தெரியுமா? 472 00:37:14,818 --> 00:37:16,236 அவள் விரிப்பின் மீது பெயின்டைக் கொட்டிவிட்டாள். 473 00:37:16,236 --> 00:37:17,613 - இல்லை. - விரிப்பின் மீது பெயின்டைக் கொட்டிவிட்டாள். 474 00:37:18,113 --> 00:37:20,115 நம்ப முடியாத காரணம். 475 00:37:20,115 --> 00:37:23,118 சிபிஸ் அனுமதி கொடுத்துவிட்டது, அதனால் மூன்று மணிநேரத்திற்கு முன் வழக்குப்பதிவு செய்தோம். 476 00:37:23,118 --> 00:37:24,453 அதனால் நாம் தயார். 477 00:37:25,037 --> 00:37:26,997 சில்காக்ஸை விசாரிக்க உங்கள் அனுமதி தேவை. 478 00:37:27,581 --> 00:37:29,666 - எதற்காக? - அடெலைட் பரோஸ் கொலை தொடர்பாக. 479 00:37:31,877 --> 00:37:34,922 அது பழைய கேஸ். அது இரு... இரண்டாயிரத்து... 480 00:37:35,506 --> 00:37:40,010 2011. பதினொன்று. அது பழைய கொலை கேஸ். 481 00:37:40,594 --> 00:37:43,263 காதலன், எரோல் மேதிஸ், சிறைத் தண்டனை... 482 00:37:43,263 --> 00:37:45,557 - இருபத்து நான்கு ஆண்டுகள். - ஆம். நான் அவனிடம் பேச வேண்டும். 483 00:37:46,558 --> 00:37:49,186 சரி. நாம் கோபத்தைக் குறைக்க வேண்டும், சரியா? 484 00:37:49,186 --> 00:37:50,437 இதை விவரமாகப் பேசுவோம். 485 00:37:50,979 --> 00:37:52,898 சரி, டிடெக்டிவ் லெ... உங்களை ஜூன் என்று கூப்பிடலாமா? 486 00:37:53,941 --> 00:37:55,817 - நிச்சயமாக. - சரி, ஜூன். 487 00:37:55,817 --> 00:38:00,781 கிளைவ் சில்காக்ஸ் அடெலைட் பரோஸுடன் அந்த ஃபிளாட்டில் இருந்ததற்கு 488 00:38:00,781 --> 00:38:01,865 புதிதாக என்ன தகவல் உள்ளது? 489 00:38:01,865 --> 00:38:04,201 அவன் அப்போது அந்தப் பகுதியில் இருந்துள்ளான். 490 00:38:04,201 --> 00:38:05,619 24பி லேக் தெரு. 491 00:38:06,912 --> 00:38:07,913 அதேதான். 492 00:38:08,455 --> 00:38:11,500 - டவர்ஸிலிருந்து 500 மீட்டர் தொலைவில். - அந்தப் பெரிய சுற்றுப் பகுதியில். 493 00:38:12,209 --> 00:38:15,212 சில்காக்ஸ் மீது பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றச்சாட்டுகள் உள்ளன. 494 00:38:15,712 --> 00:38:17,548 2009 இல் ஒன்று, பிறகு... 495 00:38:17,548 --> 00:38:19,258 மே 2011. ஆம். வேறென்ன? 496 00:38:19,258 --> 00:38:22,302 அவர்கள் ஒன்றாக பள்ளியில் படித்துள்ளனர். சில்காக்ஸும் எரோல் மேதிஸும். 497 00:38:22,845 --> 00:38:24,680 செயிண்ட் ஜோசஃப்’ஸ். 2000க்கும் அதிகமான குழந்தைகள். 498 00:38:25,389 --> 00:38:26,723 இரண்டு வருடங்கள் வித்தியாசம். 499 00:38:26,723 --> 00:38:30,352 சில்காக்ஸின் சகோதரி லியான் எரோலின் கசினுடன் நெருக்கமாக இருந்திருக்கிறாள். 500 00:38:30,352 --> 00:38:33,397 கசினா? ஆம், அனைவருக்கும் கசின் உள்ளனர். சிலருக்கு நிறைய இருப்பார்கள். 501 00:38:33,397 --> 00:38:34,648 அவனை நீங்கள் விசாரிக்கவாவது செய்தீர்களா? 502 00:38:36,066 --> 00:38:38,652 - ஜூன்... - உங்கள் விசாரணையிலிருந்து அவனை அகற்ற? 503 00:38:38,652 --> 00:38:43,782 சொல்லுங்கள், ஜூன், “ஆழ்மனதின் பாரபட்சம்” என்பதைக் கேள்விப்பட்டுள்ளீர்களா? 504 00:38:46,034 --> 00:38:48,871 என் பாவங்களுக்கு, நான் விடுமுறையில் திட்டமிட்டேன். அதைச் செய்து முடித்தேன். 505 00:38:49,788 --> 00:38:51,415 அது தகவல் நிறைந்ததாக இருந்தது. 506 00:38:52,416 --> 00:38:54,835 இப்போது, உங்கள் ஆழ்மனதின் பாரபட்சம் பற்றியது... 507 00:38:54,835 --> 00:38:56,837 எனக்கு ஆழ்மனதின் பாரபட்சம் என்பது தெரியும். 508 00:38:56,837 --> 00:38:59,131 ஆம், புரியாதவர்களுக்காகச் சொல்கிறேன். தவறாக நினைக்காதீர்கள், ராய். 509 00:39:00,382 --> 00:39:03,969 சில நேரம், ஓர் அதிகாரி ஒரு கேஸை சிதைந்த கண்ணோட்டத்தில் பார்க்க முடியும். 510 00:39:04,678 --> 00:39:09,224 நீங்கள் கோபப்படலாம், ஆனால் ஏற்கனவே இருக்கும் முன்முடிவின் காரணமாக. 511 00:39:09,224 --> 00:39:11,852 முன்முடிவு. முன்முடிவா? 512 00:39:12,477 --> 00:39:15,606 சரி. சமாதானத்திற்கு வருவோம். நம்பிக்கை? 513 00:39:17,274 --> 00:39:19,276 தீர்மானம்? அது எப்படி உள்ளது? 514 00:39:20,694 --> 00:39:25,824 இந்த எரோல் மேதிஸ் பற்றி ஜூன் கொண்டிருக்கும் தீர்மானம், 515 00:39:25,824 --> 00:39:30,162 பதிவிற்காக, மேற்கு ஆப்பிரிக்கப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர், சரியா? 516 00:39:31,413 --> 00:39:36,084 தெரியாத காரணங்களுக்காக கடுமையாக நடத்தப்பட்டுள்ளார். 517 00:39:36,084 --> 00:39:37,669 ஆனால் அதில் ஒரு அவசர அழைப்பு உள்ளது. 518 00:39:37,669 --> 00:39:40,255 மீண்டும் உணர்வு சார்ந்தது. இரண்டு அழைப்புகள். இரண்டு பெண்கள். 519 00:39:41,673 --> 00:39:43,759 இரண்டு அழைப்புகள். ஒரு பெண். 520 00:39:44,676 --> 00:39:47,221 நாம் அதைத் தவிர்க்க முடியாது. 521 00:39:47,221 --> 00:39:50,474 இந்த நகரத்தில், கடந்த ஆண்டில் மட்டும் எத்தனை பெண்கள் வீட்டிற்குள்ளான 522 00:39:50,474 --> 00:39:53,352 துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் தெரியுமா? கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். 523 00:39:53,352 --> 00:39:55,896 - கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேர். - ஆம். வாவ், கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேர். 524 00:39:55,896 --> 00:39:57,564 இருவரும் போர்ச்சுகீஸ் பேசுபவர்கள். 525 00:39:57,564 --> 00:39:59,274 போர்ச்சுகீஸ், நிறைய பேர் பேசுகின்றனர். 526 00:39:59,274 --> 00:40:01,318 இப்போது, இந்தப் பகுதியில் 80,000, 90,000 பேர் இருக்கின்றனர். 527 00:40:01,318 --> 00:40:03,737 அதனால்தான் நாம் தடவியல் நிபுணர் பகுப்பாய்வை... 528 00:40:03,737 --> 00:40:05,113 அடக் கடவுளே. 529 00:40:05,113 --> 00:40:08,283 ...இரண்டு அழைப்புகளிலும் இருந்தது ஒரே பெண்ணா இல்லையா என்பதை அறிய கோர வேண்டும்? 530 00:40:08,283 --> 00:40:09,201 சரி. 531 00:40:11,870 --> 00:40:13,997 இவரது மரணத்திற்கு என்ன சொல்கிறீர்கள்? மரியா? 532 00:40:15,123 --> 00:40:18,377 யார்? இறந்தவர். ஆய்வகச் செலவை விடுங்கள். 533 00:40:18,377 --> 00:40:20,337 ஏற்கனவே நாம் பட்ஜெட்டைத் தாண்டி செலவு செய்துவருகிறோம். 534 00:40:20,337 --> 00:40:24,091 இவரது கொலைக்கு குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவன் நம்மிடம் இருக்கிறான். 535 00:40:26,009 --> 00:40:30,806 வழக்கு விசாரணையில் அவரது அம்மா, சகோதரன், இரண்டு அனாதை மகன்களின் வேதனையைப் போக்கலாம். 536 00:40:30,806 --> 00:40:34,601 அவரது உடல் ஏற்கனவே சாவ் பாலோவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. இது நல்ல செய்தி. 537 00:40:35,727 --> 00:40:38,438 ஆனால் மாறிக்கொண்டே இருக்கும் காரணத்திற்காக இவை அனைத்தையும் நாசமாக்க விரும்புகிறீர்கள். 538 00:40:38,438 --> 00:40:43,110 மரியாவுக்கு இரண்டு கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. 539 00:40:43,986 --> 00:40:45,946 தோள்பட்டையிலும் வயிற்றிலும். 540 00:40:47,906 --> 00:40:51,743 ஹேய்ஸ் லேன் அழைப்பாளரும் தன் காதலனால் குத்தப்பட்டதாகக் கூறினார். 541 00:40:51,743 --> 00:40:54,997 மேலும் அவர், “அவளை பல முறை குத்தியுள்ளான்” அதாவது அடெலைடை, 542 00:40:54,997 --> 00:40:57,624 ”அவன் என்னைக் குத்திய அதே கத்தியால் அவளை பல முறை குத்தியுள்ளான்” என்றார். 543 00:40:57,624 --> 00:40:59,418 மன்னிக்கவும், இந்தத் தகவல் எங்கிருந்து வந்தது? 544 00:41:00,502 --> 00:41:02,921 - இவை அவர் அழைப்பில் கூறியது. - நான் அழைப்பைப் பற்றிப் பேசவில்லை. 545 00:41:03,797 --> 00:41:06,508 நான் மிஸ் டி சோஸாவின் காயங்கள் பற்றிக் கேட்கிறேன். 546 00:41:10,470 --> 00:41:12,347 ஜூன், நீங்கள் நோயியல் அறிக்கையைப் பார்த்தீர்களா? 547 00:41:13,473 --> 00:41:15,726 இதில் முக்கியமானது... 548 00:41:15,726 --> 00:41:17,269 இல்லை. இதைப் பற்றி தொடர்ந்து பேசுவதற்கு மன்னிக்கவும், 549 00:41:17,269 --> 00:41:20,439 ஆனால் அந்த அறிக்கை ரகசியமாக விவ் மற்றும் அவரது குழுவுக்கு அனுப்பப்பட்டது, சரியா? 550 00:41:21,023 --> 00:41:24,109 இல்லையா? எனவே... விவ், நீங்கள் அதை டிஎஸ் லென்கருடன் பகிர்ந்தீர்களா? 551 00:41:24,109 --> 00:41:25,277 - இல்லை, சார். -”இல்லை, சார்.” 552 00:41:25,277 --> 00:41:28,697 அதனால் நான் இதைக் கேட்க வேண்டும், அது எப்படி உங்களிடம் வந்தது? 553 00:41:28,697 --> 00:41:29,865 அது வரவில்லை. 554 00:41:31,074 --> 00:41:32,492 அதை யாராவது உங்களுடன் பகிர்ந்தனரா? 555 00:41:32,492 --> 00:41:33,744 இல்லை. 556 00:41:33,744 --> 00:41:36,622 என்ன? நீங்கள் ஹேக்கரா, வட கொரியாவுடன் தொடர்பு வைத்துள்ளீர்களா? 557 00:41:40,083 --> 00:41:42,836 நீங்கள் அந்த அறிக்கையைப் படிக்கவில்லை என்கிறீர்களா? 558 00:41:43,754 --> 00:41:44,796 இல்லை, சார். 559 00:41:45,380 --> 00:41:46,840 எனில் இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? 560 00:41:48,383 --> 00:41:49,468 அவற்றை நான் பார்த்தேன். 561 00:41:52,513 --> 00:41:53,639 பார்த்தீர்களா? 562 00:41:57,559 --> 00:41:58,894 நான்தான் முதலில் அங்கே சென்றேன். 563 00:42:01,605 --> 00:42:05,400 மரியாவைப் பார்த்தபோது, அவளது உடல் செயல்பாடுகளைச் சரிபார்த்தேன். 564 00:42:06,235 --> 00:42:07,277 அவற்றைப் பார்த்தேன். 565 00:42:08,820 --> 00:42:10,155 அவரது காயங்களைப் பார்த்தேன். 566 00:42:12,449 --> 00:42:15,327 மறைந்து போன இரண்டு காயங்கள். கொஞ்ச நேரத்தில். 567 00:42:19,081 --> 00:42:21,625 இரண்டு அழைப்புகள். பொருந்தும் கத்தியால் குத்திய காயங்கள். 568 00:42:23,502 --> 00:42:24,962 அது வாய்ப்புகளை அதிகரிக்கிறதா? 569 00:42:31,593 --> 00:42:32,594 பிடி. 570 00:42:33,136 --> 00:42:34,930 தெளிவான கான்டாக்ட். சரி, நேரம் தான் முக்கியம். 571 00:42:34,930 --> 00:42:36,807 நீ... பார்த்தாயா? 572 00:42:36,807 --> 00:42:37,891 சரி. 573 00:42:38,517 --> 00:42:40,102 மீண்டும். கச்சிதம். 574 00:42:43,105 --> 00:42:44,898 அப்படித்தான்! அருமை. 575 00:42:45,899 --> 00:42:47,192 - மீண்டும் முயற்சி செய். - சரி. 576 00:42:47,192 --> 00:42:49,611 என்னைத் தடு. ஆம், அருமை. 577 00:42:49,611 --> 00:42:51,530 என்ன இது? கூடுதல் பயிற்சியா? 578 00:42:51,530 --> 00:42:53,156 சரி. வாருங்கள். அதோ. 579 00:42:53,156 --> 00:42:55,075 இருங்கள். சரி. 580 00:42:56,785 --> 00:42:58,078 என்னவொரு கோல்! 581 00:42:59,496 --> 00:43:00,914 என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். 582 00:43:00,914 --> 00:43:03,876 - என்னிடமிருந்து. - அம்மா, அது ஃபௌல். 583 00:43:03,876 --> 00:43:05,127 உங்களையே அவமானப்படுத்திக்கொள்கிறீர்கள். 584 00:43:07,171 --> 00:43:08,172 மீண்டும் ஆடலாம். 585 00:43:09,882 --> 00:43:11,008 ஹலோ? 586 00:43:11,008 --> 00:43:12,509 உன் ஆசை நிறைவேறிவிட்டது. 587 00:43:15,721 --> 00:43:19,725 ”சூழ்நிலைகளின் விதிவிலக்கான தன்மையால்.” 588 00:43:21,810 --> 00:43:22,811 கைதி வெளியே வருகிறார். 589 00:43:22,811 --> 00:43:24,771 இவனை நீ விசாரிக்கலாம். 590 00:43:26,148 --> 00:43:27,149 நன்றி. 591 00:43:27,649 --> 00:43:30,986 ஆம், ஆனால், விசாரணைத் திட்டம் முன்னரே ஆய்வு செய்யப்படும், சரியா? 592 00:43:30,986 --> 00:43:32,237 சரி. 593 00:43:33,780 --> 00:43:35,991 அடெலைட் பரோஸின் கொலை பற்றிய குறிப்பிட்ட தகவல்கள் 594 00:43:35,991 --> 00:43:37,826 தடைசெய்யப்பட்டுள்ளன. புரிந்ததா? 595 00:43:38,410 --> 00:43:39,411 சரி. 596 00:43:40,579 --> 00:43:42,372 அதைத் தவிர்த்து, நீ எது வேண்டுமானாலும் விசாரிக்கலாம். 597 00:43:42,873 --> 00:43:43,957 நன்றி, சார். 598 00:44:05,562 --> 00:44:08,941 கிளைவ் சில்காக்ஸ், நீங்கள் மரியா டி சோஸாவின் கொலையை ஒப்புக்கொண்டுள்ளீர்கள். 599 00:44:10,067 --> 00:44:13,237 ஆனால் இன்னொரு விஷயத்தில் உங்கள் ஒத்துழைப்புக்காக இங்கே வந்துள்ளேன். 600 00:44:14,738 --> 00:44:19,493 மார்ச் 2011 இல், நீங்கள் 24பி லேக் தெருவில் வசித்தீர்கள். சரியா? 601 00:44:20,744 --> 00:44:21,745 ஆம். 602 00:44:23,330 --> 00:44:24,790 இவரை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா? 603 00:44:30,128 --> 00:44:31,255 இவரைத் தெரியுமா? 604 00:44:36,468 --> 00:44:37,469 எரோல். 605 00:44:37,469 --> 00:44:42,182 எரோல் மேதிஸ். நீங்கள் செயிண்ட் ஜோசஃப்’ஸ் பள்ளியில் ஒன்றாகப் படித்தீர்களா? 606 00:44:43,141 --> 00:44:44,142 ஆம். 607 00:44:44,977 --> 00:44:46,436 அவரது குடும்பத்தை உங்களுக்குத் தெரியுமா? 608 00:44:46,436 --> 00:44:47,521 ராய். 609 00:44:48,647 --> 00:44:50,065 எரோல் மேதிஸ் சிறையில் நீண்ட 610 00:44:50,065 --> 00:44:52,651 - தண்டனையில் இருப்பது தெரியுமா? - நன்றி. 611 00:44:53,569 --> 00:44:55,237 இருபத்தி நான்கு ஆண்டுகள், சரியா? 612 00:44:55,237 --> 00:44:57,406 சரி. எங்கே என்று தெரியுமா? 613 00:44:58,448 --> 00:45:01,618 - ஒயிட்கிராஸ்? - ஒயிட்கிராஸ் சிறை, சரிதான். 614 00:45:01,618 --> 00:45:03,287 - அதற்கென்ன? - டிஎஸ் லென்கர். 615 00:45:04,955 --> 00:45:06,039 ஏனென்று தெரியுமா? 616 00:45:07,124 --> 00:45:08,125 ஆம். 617 00:45:08,125 --> 00:45:10,002 - மன்னிக்கவும்... - அது அனைவருக்கும் தெரியும். 618 00:45:10,002 --> 00:45:11,837 நீங்கள் என் கிளையன்டை சிக்கவைக்க... 619 00:45:11,837 --> 00:45:15,799 இல்லை. அவர் அதைக் கூற விரும்புகிறேன். 620 00:45:20,470 --> 00:45:21,722 இவரது பெயர் என்ன? 621 00:45:21,722 --> 00:45:23,724 - சரி. - இவரது பெயரைச் சொல்லுங்கள். 622 00:45:23,724 --> 00:45:25,976 இந்த விசாரணையை முடிக்கிறேன். 623 00:45:25,976 --> 00:45:28,228 இப்போது நேரம் 14:36. 624 00:45:31,523 --> 00:45:33,275 இவள் எதைப் பற்றிப் பேசுகிறாள்? 625 00:45:38,030 --> 00:45:40,199 - அவனுக்கு அவர்கள் இருவரையும் தெரிந்திருந்தது. - ஜூன். 626 00:45:42,034 --> 00:45:44,119 - டேன், நீங்கள்... - இல்லை. நீங்களே சொல்லுங்கள். 627 00:45:47,706 --> 00:45:51,793 உன் கோரிக்கையின்படி, டிசிஐ ஹெகர்ட்டி தேவையானதைவிட அதிகம் செய்வது விவேகம் என 628 00:45:52,586 --> 00:45:55,589 நினைத்து, அந்த இரு அழைப்புகளுக்கும் தடவியல் பகுப்பாய்வைச் செய்துள்ளார். 629 00:45:57,758 --> 00:45:58,800 அது தீர்மானமானது. 630 00:46:01,220 --> 00:46:03,889 ஒலியியல் நிபுணரும் பொறியியலாளரும் ஒரே முடிவுக்கு வந்துள்ளனர். 631 00:46:03,889 --> 00:46:07,059 வெவ்வேறு அழுத்தங்கள். வெவ்வேறு உயிரெழுத்து ஒலிகள். 632 00:46:08,143 --> 00:46:09,144 வெவ்வேறு பெண்கள். 633 00:46:09,728 --> 00:46:11,563 - என்ன? - அதில் சந்தேகமே இல்லை. 634 00:46:12,147 --> 00:46:14,316 உன் ஹேய்ஸ் லேன் அழைப்பாளர் மரியா டி சோஸா இல்லை. 635 00:46:16,610 --> 00:46:22,074 கிளைவ் சில்காக்ஸை இந்தக் கொலையுடன் தொடர்புபடுத்தும் எதுவும் இல்லை. 636 00:46:22,074 --> 00:46:23,158 சரியா? 637 00:46:24,618 --> 00:46:25,619 ஏற்கிறாயா? 638 00:46:26,662 --> 00:46:28,664 இதை ஏற்றுக்கொண்டு, நிரந்தரமாக முடித்துக்கொள்வோம். 639 00:46:34,086 --> 00:46:35,087 சரியா? 640 00:46:46,849 --> 00:46:49,434 உனக்கு என்ன ஆயிற்று? அதாவது, க்ளோயியைப் பார். 641 00:46:50,018 --> 00:46:51,687 அவளுக்குப் பிரச்சினையே இல்லை. 642 00:46:51,687 --> 00:46:52,896 அவள் கடமையைச் செய்கிறாள். 643 00:46:54,648 --> 00:46:57,734 தொழில்முறைத் தரநிலைகள் பற்றி என்னவானது? நீ அவர்களைத் தொடர்புகொண்டாயா? இல்லையா? 644 00:46:58,944 --> 00:46:59,945 அதைச் செய்து முடி. 645 00:47:00,529 --> 00:47:01,989 அவர்கள் உன் தவறான நடத்தைக்காக தொல்லை கொடுப்பார்கள். 646 00:47:38,317 --> 00:47:39,318 ஜூன். 647 00:47:53,582 --> 00:47:55,417 அவர் கூறியது சரி. நான் கூறியது தவறு. 648 00:47:57,544 --> 00:47:59,755 அடச்சை. அதை நான் வெறுக்கிறேன். 649 00:48:02,549 --> 00:48:03,550 பார்... 650 00:48:05,135 --> 00:48:07,346 ஒரு வதந்தி நிலவுகிறது. 651 00:48:08,805 --> 00:48:12,017 சில்காக்ஸ் மரியா டி சோஸாவைக் கொன்றதற்கு அடுத்த நாள்... 652 00:48:14,561 --> 00:48:17,940 ஹெகர்ட்டி அந்த இரண்டு அழைப்புகளுக்கான தடவியல் அறிக்கையை ஒரே இரவில் விரைவாக வாங்கியுள்ளார். 653 00:48:19,691 --> 00:48:20,776 என்ன? 654 00:48:22,819 --> 00:48:24,655 அவருக்கு அந்த இரண்டு அழைப்பாளர்களும் வெவ்வேறானவர்கள் எனத் தெரிந்துள்ளது... 655 00:48:24,655 --> 00:48:25,781 அவர் அந்த அறிக்கையைத் தாமதப்படுத்தியுள்ளார். 656 00:48:27,741 --> 00:48:28,742 இரு. 657 00:48:29,868 --> 00:48:31,161 அந்தச் சந்திப்பு. 658 00:48:32,329 --> 00:48:33,914 விசாரணைக்கு ஒப்புக்கொண்டது. 659 00:48:34,998 --> 00:48:37,292 ஏன்? அவர் ஏன் அதைச் செய்ய வேண்டும்? 660 00:48:46,134 --> 00:48:47,845 மோசமான சூழ்நிலையை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 661 00:48:51,431 --> 00:48:52,516 அவர் என்னை ஏமாற்றியுள்ளார். 662 00:48:57,938 --> 00:49:00,065 அது ஒரு பொறி, நான் அதில் நேராகச் சென்று மாட்டிக்கொண்டேன். 663 00:49:07,239 --> 00:49:11,493 என்னை பலமாக வீழ்த்தினால், நான் மீண்டும் எழ மாட்டேன் என அவர் நினைக்கிறார். 664 00:49:16,665 --> 00:49:17,499 இல்லை. 665 00:49:21,962 --> 00:49:22,963 இல்லை. 666 00:49:26,925 --> 00:49:27,926 நான் அப்படி இல்லை. 667 00:49:30,220 --> 00:49:34,975 அவனுக்கு நீண்ட காலம் முன்பு ஒரு காதலி இருந்தாள். 668 00:49:36,185 --> 00:49:39,062 அவன் “முட்டாள் பெண். சொல்வதைக் கேட்கவில்லை” என்றான். 669 00:49:39,605 --> 00:49:41,857 அவனை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவில்லை. 670 00:49:44,693 --> 00:49:49,239 அவன் என்னைக் குத்திய அதே கத்தியால் அவளை பல முறை குத்தியுள்ளான். 671 00:49:50,157 --> 00:49:56,038 அவளைக் கொன்றதற்காக ஒருவர் 24 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். 672 00:49:58,832 --> 00:50:04,213 மேலும் அவன் ஒயிட்கிராஸில் இருக்கும் அவர்... 673 00:50:04,796 --> 00:50:06,882 அவர் தோல்வியுற்றவர் என்றும்... 674 00:50:07,841 --> 00:50:08,926 இது எப்போது நடந்தது? 675 00:50:09,551 --> 00:50:10,594 போன செவ்வாய்க்கிழமை. 676 00:50:12,846 --> 00:50:14,932 இந்த அழைப்புகள் ரகசியமானவை. 677 00:50:17,351 --> 00:50:21,813 இதைப் பற்றி யாரிடமாவது கூறினால், அவர்கள் என்னை நாசமாக்கிவிடுவார்கள். 678 00:50:30,906 --> 00:50:31,740 இந்தாருங்கள். 679 00:50:33,867 --> 00:50:35,285 நீங்கள் இஸ்லாமியர் என நினைத்தேன். 680 00:50:35,285 --> 00:50:38,664 நான் சீக்கியர், முட்டாளே. சிங்? சோன்யா சிங்? 681 00:50:39,414 --> 00:50:40,958 நாங்கள் இதை காஃபி போலக் குடிப்போம். 682 00:50:48,590 --> 00:50:50,676 சரி. நீங்கள் கூறியது தவறு. 683 00:50:51,760 --> 00:50:53,720 நீங்கள் தோற்றுவிட்டீர்கள். 684 00:50:53,720 --> 00:50:55,180 ஒன்று சொல்லவா? 685 00:50:56,223 --> 00:50:57,516 அவள் உயிரோடிருக்கிறாள். 686 00:51:08,986 --> 00:51:13,490 எரோலைக் காப்பாற்ற அவளால்தான் முடியும், அவள் உயிரோடிருக்கிறாள். 687 00:51:16,034 --> 00:51:17,035 ஆம். 688 00:51:19,621 --> 00:51:20,831 நாம் அவளைக் கண்டுபிடிக்கப் போகிறோம். 689 00:52:31,860 --> 00:52:33,862 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்