1 00:00:06,000 --> 00:00:06,840 இத்தொடர் பொழுதுபோக்கிற்கு, கற்பனையே. 2 00:00:06,920 --> 00:00:07,760 பெயர்கள், இடங்கள் எழுத்தாளர் கற்பனையே. 3 00:00:07,840 --> 00:00:08,680 ஒற்றுமை தற்செயலானது. எந்த டயலாக்கிற்கும் யாரையும் 4 00:00:08,760 --> 00:00:09,600 புண்படுத்தும் நோக்கமில்லை. எல்ஜிபிடிக்யூஐஏ+ 5 00:00:09,680 --> 00:00:10,520 சமூக போராட்டங்களை காட்டுகிறது. 6 00:00:10,600 --> 00:00:11,440 எல்ஜிபிடிக்யூஐஏ+ சமூகத்தை அவமதிக்கும் எண்ணமில்லை. 7 00:00:11,520 --> 00:00:12,360 கடினமான மொழி உண்டு. 8 00:00:12,440 --> 00:00:13,280 போதை பொருட்களை, அமானுஷ்யத்தை ஆதரிக்கப்படவில்லை. 9 00:00:13,360 --> 00:00:14,520 விலங்குகளுக்கு தீங்கிழைக்கவில்லை. அமேசான் கருத்துகளை ஆதரிக்கவில்லை. 10 00:00:14,600 --> 00:00:15,880 குழந்தை நட்சத்திரங்கள் புண்படவில்லை. பார்வையாளர்களுக்கு விவேகம் பரிந்துரை. 11 00:00:17,640 --> 00:00:19,920 சரி, பசங்களா. தூங்கும் நேரம். விளக்கணைங்க. 12 00:00:29,040 --> 00:00:30,960 அவன் ஏன் அப்படி செஞ்சான்? 13 00:00:31,680 --> 00:00:35,680 அவன் பிரபலமான ஸ்டார். நமக்குகூட வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கு. 14 00:00:35,760 --> 00:00:38,320 பள்ளியில் என்ன நடக்குதோ கடவுளுக்கு தான் தெரியும். 15 00:00:38,400 --> 00:00:42,600 ...சுயாஷ் வர்மா ரீயூனியனுக்காக நீலகிரி வேலி ஸ்கூலுக்கு போனார். 16 00:00:42,680 --> 00:00:45,400 எல்லாமே இந்த பையனிடம் தொடங்கினதா தோணுது. 17 00:00:46,000 --> 00:00:49,600 வேதாந்த் அந்த நாய்க்குட்டிகளை நிஜமா கொன்னானு தோணுதா? 18 00:00:50,640 --> 00:00:51,480 தெரியலை. 19 00:00:52,640 --> 00:00:56,280 நான் அங்கே போன போது நாய்க்குட்டிங்க ஏற்கனவே செத்து போச்சு. 20 00:00:57,600 --> 00:00:59,680 அவன் அதுங்களை முறைச்சதை பாத்தா, 21 00:01:00,640 --> 00:01:04,640 அதுங்க கஷ்டப்படறதை பார்த்து இவன் சந்தோஷப்பட்ட மாதிரி இருந்தது. 22 00:01:06,640 --> 00:01:09,000 ஆனா என்னை பார்த்ததும் பயந்துட்டான். 23 00:01:11,160 --> 00:01:15,200 அப்பதான் அங்கே இருவேறு வேதாந்த் இருந்தது போல தோணிச்சு. 24 00:01:16,560 --> 00:01:18,040 எப்பவும் பயப்படும் ஒருத்தன். 25 00:01:18,880 --> 00:01:22,760 நாய்க்குட்டிகளை கொன்னவன் இன்னொருத்தன். 26 00:01:27,520 --> 00:01:28,760 வேதாந்த். 27 00:01:30,720 --> 00:01:36,720 நாய்க்குட்டி கொலையான இரவு 28 00:02:54,680 --> 00:02:56,280 உனக்கு என்ன வேணும்? 29 00:03:00,240 --> 00:03:01,800 உன்னை கொடுமை படுத்த மாட்டாங்க. 30 00:03:01,880 --> 00:03:04,000 -விட்டா, நான் உதவறேன். -என்னை போக விடு. 31 00:03:04,080 --> 00:03:05,960 உன்னை கொடுமை படுத்த மாட்டாங்க. 32 00:03:08,320 --> 00:03:10,360 என்னை அனுமதிச்சா, நான் உதவறேன். 33 00:03:10,720 --> 00:03:12,720 உன்னை கொடுமை படுத்த மாட்டாங்க. 34 00:04:46,160 --> 00:04:48,200 நாய்க்குட்டிங்க இறக்க வேண்டியிருந்தது 35 00:04:48,240 --> 00:04:50,920 ஏன்னா தாய்க்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டியிருந்தது. 36 00:04:51,760 --> 00:04:54,920 யாரும் உன்னை காயப்படுத்த விட மாட்டேன். 37 00:06:15,080 --> 00:06:18,960 அதுரா 38 00:06:32,560 --> 00:06:34,600 ஆது, நான் எதிர்த்து போராடறேன். 39 00:07:02,320 --> 00:07:03,520 ஷேடோ பாய். 40 00:07:42,840 --> 00:07:44,440 ந்யூஸ் டுடே 41 00:07:44,520 --> 00:07:47,880 சுயாஷ் வர்மா மன அழுத்தத்தில் இருந்தாரென தெரிந்தது. 42 00:07:47,960 --> 00:07:52,760 டிஆர்பியினால் அவர் நிகழ்ச்சி "கஸம் தேரி கஸம்" சமீபத்தில் ரத்தானது. 43 00:07:52,840 --> 00:07:55,080 நாளை மரண அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது. 44 00:07:55,160 --> 00:07:58,480 நீலகிரி வேலி ஸ்கூல், அவர் இறந்த பள்ளி, 45 00:07:58,560 --> 00:08:01,560 சம்பவத்தை பற்றி இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. 46 00:08:03,160 --> 00:08:06,840 இந்த டிவி நிருபர்கள் சமையல் நிகழ்ச்சிகளில் இருக்கணும். 47 00:08:07,760 --> 00:08:09,440 எல்லாத்துக்கு மசாலா போடுறாங்க. 48 00:08:10,240 --> 00:08:11,720 ட்ரஸ்டி கூப்டாங்களா? 49 00:08:12,680 --> 00:08:15,960 எனக்கு புரியலை. சுயாஷ் தேர்ந்தெடுத்து இருக்கணுமா இந்த... 50 00:08:16,600 --> 00:08:17,480 ரீயூனியனை... 51 00:08:17,920 --> 00:08:19,560 சீக்கிரமே எல்லாம் தணியும். 52 00:08:20,480 --> 00:08:22,400 இந்த பள்ளி நிறைய பாத்தாச்சு. 53 00:08:23,240 --> 00:08:25,680 இந்த கட்டடங்களும் பழசு. 54 00:08:27,000 --> 00:08:30,440 ஓல்ட் பாய்ஸை ஒத்துழைக்க சொல்லுங்க. 55 00:08:31,040 --> 00:08:32,360 மத்ததை பார்த்துப்போம். 56 00:08:33,160 --> 00:08:34,520 மிக்க நன்றி, எஸ்எஸ்பி. 57 00:08:34,920 --> 00:08:37,640 டீன் வியாஸ் காலத்திலிருந்து சிறப்பான உறவிருக்கு. 58 00:08:38,600 --> 00:08:40,960 எப்பவும் தாராளமானவர். 59 00:08:41,040 --> 00:08:42,480 நீங்களும் அப்படிதானே. 60 00:08:49,520 --> 00:08:52,000 யார் என்ன யோசிக்கிறாங்கன்னு சொல்றது கடினம். 61 00:09:11,160 --> 00:09:12,280 நீங்க நலமா? 62 00:09:13,200 --> 00:09:14,280 ஆமா, சாரி. 63 00:09:16,520 --> 00:09:17,440 மாள்விகா. 64 00:09:17,520 --> 00:09:18,520 சுப்ரியா. 65 00:09:18,600 --> 00:09:20,600 உங்ககிட்ட பேச நினைச்சிட்டு இருந்தேன். 66 00:09:22,320 --> 00:09:24,400 ஆதிராஜை பற்றி ரொம்ப கவலை படறேன். 67 00:09:26,080 --> 00:09:28,040 -அவன் சொன்னானா... -நினாத்? 68 00:09:31,000 --> 00:09:34,200 பல வருடங்கள் முன்னால் நடந்த சண்டையை இன்னும் மறக்கலை. 69 00:09:34,280 --> 00:09:36,040 நினாத் கோப்பை தேடிட்டு இருந்தார். 70 00:09:36,120 --> 00:09:38,760 -பிறகு கோத்தகிரி போனான்-- -நான்தான் அணுகு தந்தேன். 71 00:09:38,880 --> 00:09:40,280 சரி, ஆனா ஏன்? 72 00:09:43,080 --> 00:09:46,080 தன் வாழ்வின் கெட்ட அத்தியாயத்திற்கு நிவர்த்தியை தேடறார். 73 00:09:46,160 --> 00:09:48,760 ஆனா இன்னும் அதில ஐக்கியமாகுறான். 74 00:09:49,440 --> 00:09:51,640 தெரியுது, சுப்ரியா. அவன் நல்லா இல்லை. 75 00:09:53,720 --> 00:09:54,880 பதகளிப்பு இருக்கு. 76 00:09:57,360 --> 00:09:59,880 சிறு வயசிலிருந்தே அவன் நிறைய அனுபவிச்சிட்டான். 77 00:10:00,480 --> 00:10:03,720 நிறைய விஷயத்தை அவன் விடணும், பிடிச்சிட்டு இருக்க கூடாது. 78 00:10:03,760 --> 00:10:06,840 இல்லேன்னா, எனக்கு பயமா இருக்கு நேத்து மாதிரி ஏதாவது-- 79 00:10:09,000 --> 00:10:12,760 நான் ஆதிராஜை காப்பாத்தி இருக்கலாமேனு யோசிக்க கூடாது. 80 00:10:12,880 --> 00:10:16,120 அறிகுறிகள் தெரிந்தாலும் என்னால எதுவும் செய்ய முடியலைன்னு. 81 00:10:16,760 --> 00:10:19,200 அதனால, அவனை ஊக்குவிக்காதீங்க. 82 00:10:21,600 --> 00:10:22,440 ப்ளீஸ். 83 00:10:45,160 --> 00:10:46,520 எனக்கு வயிறு வலிக்குது. 84 00:10:50,520 --> 00:10:51,880 குளிர் போலிருக்கு. 85 00:10:52,280 --> 00:10:54,960 ராத்திரி, ஒரு நிமிஷம் விட்டுட்டு இன்னொரு 86 00:10:55,040 --> 00:10:57,080 மாணவனை பார்க்க போனேன், இவனை காணும். 87 00:10:57,160 --> 00:11:00,840 தூக்கத்தில நடப்பது போல திரும்பி வந்து படுத்துட்டான். 88 00:11:01,520 --> 00:11:03,360 -எங்கே போனான்? -எனக்கு தெரியாது. 89 00:11:06,640 --> 00:11:07,600 வேதாந்த். 90 00:11:08,520 --> 00:11:11,960 நீ என்னிடம் மனம் திறக்கலைன்னா என்னால உதவ முடியாது. 91 00:11:12,480 --> 00:11:14,280 உனக்கு ஏதாவது நடந்திருந்தா? 92 00:11:15,520 --> 00:11:16,920 சூப்பர் பவர்ஸ் இருக்கு. 93 00:11:18,600 --> 00:11:19,600 சூப்பர் பவர்ஸா? 94 00:11:20,800 --> 00:11:22,360 யாரும் பயமுறுத்த முடியாது. 95 00:11:23,600 --> 00:11:24,960 யார் பயமுறுத்தறாங்க? 96 00:11:25,920 --> 00:11:29,400 சில சமயம் பசியோடு இருக்குற மான்ஸ்டர்ஸ்கு பாடம் கத்துத்தரணும். 97 00:11:29,480 --> 00:11:31,520 நாய்க்குட்டிகளை கொல்ல நினைக்கலை, மிஸ். 98 00:11:31,600 --> 00:11:36,360 ஆனா நாய் என்னை காயப்படுத்தாம இருக்க அதுதான் ஒரு வழின்னு சொன்னான். 99 00:11:37,120 --> 00:11:38,840 பாடம் கத்து தர வேண்டியிருந்தது. 100 00:11:39,320 --> 00:11:41,520 எல்லாருக்கும் பாடம் கத்துக் குடுக்கணும். 101 00:11:42,920 --> 00:11:44,080 இதை யார் சொன்னது? 102 00:11:48,400 --> 00:11:49,960 யார் இதை சொன்னது, வேதாந்த்? 103 00:11:51,000 --> 00:11:52,520 நான் உன்னை ஒன்னு கேக்குறேன். 104 00:11:54,880 --> 00:11:58,160 உன்னிடம் இதெல்லாம் யார் சொல்றாங்க? சொல்லு. வேதாந்த்! 105 00:11:58,240 --> 00:12:01,040 மிஸ். கோஷ், அவனுக்கு ஓய்வு தேவை. 106 00:12:20,360 --> 00:12:25,920 மேடம், உங்க தப்பில்லை. நாங்க எல்லாருமே நேத்திலிருந்து கவலையா இருக்கோம். 107 00:12:26,000 --> 00:12:28,680 அதிர்ச்சியில் இருக்கோம், மேடம், இந்த பசங்களும். 108 00:12:29,280 --> 00:12:31,440 நேற்றைய தற்கொலை... 109 00:12:32,120 --> 00:12:34,040 அதை மறக்கிறது கஷ்டம், மேடம். 110 00:12:37,400 --> 00:12:38,480 நாம மறந்தாகணும். 111 00:12:43,760 --> 00:12:44,600 மறக்கணும். 112 00:12:48,760 --> 00:12:52,560 பசங்க இன்று படம் பார்க்கட்டும். ப்ரொஜெக்டரை தயார் பண்ணிடுங்க. 113 00:12:53,280 --> 00:12:54,320 சரிங்க, மேடம். 114 00:13:06,800 --> 00:13:09,320 -இது என்ன நடவடிக்கை? -ஒரு நிமிஷம். ப்ளீஸ். 115 00:13:09,400 --> 00:13:12,920 -உங்களுக்கு புரியலை. -பாருங்க, எல்லார் பிரச்சினையும் புரியுது. 116 00:13:13,600 --> 00:13:17,800 ஆனால் எல்லாரும் துரதிர்ஷ்டவசமான, எதிர்பாராத நிலையில் இருக்கோம். 117 00:13:17,880 --> 00:13:22,280 ஆரம்ப விசாரணையில் எஸ்எஸ்பி உங்க ஒத்துழைப்பை கோரியிருக்கார். 118 00:13:22,360 --> 00:13:25,080 இது சட்டப்பூர்வ முறை. நாளைக்கு வீட்டுக்கு போகலாம். 119 00:13:25,160 --> 00:13:28,400 -என்ன விசாரணை? -எங்க கண் முன்னால நடந்தது. 120 00:13:28,480 --> 00:13:31,480 -எல்லாரும் பாத்தாங்க. அது தற்கொலை. -ஆமாம். 121 00:13:31,560 --> 00:13:36,000 எல்லாம் கட்டுப்பாட்டில் இருக்கிறதா எஸ்எஸ்பி உறுதி கூறியிருக்கார். 122 00:13:36,080 --> 00:13:39,280 ஒரு நாள் கேட்டிருக்கார். ப்ளீஸ் ஒத்துழைங்க. 123 00:13:40,560 --> 00:13:42,720 விதிகள் ட்ரஸ்டீக்கு பொருந்தாதா? 124 00:13:46,640 --> 00:13:48,000 சே. 125 00:13:51,280 --> 00:13:52,120 நிறுத்துங்க. 126 00:13:55,840 --> 00:13:59,920 யாரும் பள்ளியை விட்டு போகக் கூடாது, சார். எஸ்எஸ்பி உத்தரவு. 127 00:14:02,480 --> 00:14:07,680 எஸ்எஸ்பி, ஒரு கான்ஸ்டபிள் இங்கே என்னை பள்ளியிலிருந்து போக விடலை. 128 00:14:08,240 --> 00:14:09,600 அவரிடம் பேசுங்க. 129 00:14:14,600 --> 00:14:16,000 சரி, சார். சரி, சார். 130 00:14:19,440 --> 00:14:20,520 சாரி, சார். 131 00:14:22,360 --> 00:14:23,360 போக விடுங்க. 132 00:14:47,040 --> 00:14:48,400 போயிட்டான்னு நம்ப முடியலை. 133 00:14:49,520 --> 00:14:52,880 நம்ப நண்பன். அவன் இறந்ததை நம்ப முடியலைப்பா. 134 00:15:01,000 --> 00:15:02,040 சே. 135 00:15:03,080 --> 00:15:03,960 என்னது அது? 136 00:15:08,080 --> 00:15:09,040 நீ நலமா? 137 00:15:11,080 --> 00:15:12,400 இங்கேயே இரு. 138 00:15:49,440 --> 00:15:50,280 நாம போகலாம். 139 00:15:57,560 --> 00:15:59,240 ரஜத், வா. 140 00:16:12,440 --> 00:16:13,760 மானை இடிச்சிட்டோம். 141 00:16:13,840 --> 00:16:14,880 அட, கடவுளே. 142 00:16:15,160 --> 00:16:16,240 இப்பவா? 143 00:16:16,960 --> 00:16:19,920 இது ஸ்டார்ட் ஆகும்னு தோணலை. நாம திரும்பி நடக்கணும். 144 00:16:30,680 --> 00:16:34,520 -தீடீர்னு, அப்படியே... -ரஜத், பரவாயில்லை. வா. 145 00:16:44,200 --> 00:16:46,400 அண்ணே. மிஸ். சுப்ரியா கோஷ் ஆபீஸ்? 146 00:16:46,480 --> 00:16:48,080 -அந்த பக்கம், சார். -சரி. 147 00:17:26,040 --> 00:17:26,880 யாரது? 148 00:17:28,800 --> 00:17:29,800 யார் உள்ளே? 149 00:17:39,040 --> 00:17:40,240 கதவை திறங்க. 150 00:17:41,560 --> 00:17:42,760 நீங்க நலமா? 151 00:17:44,160 --> 00:17:45,080 உள்ளே யார்? 152 00:18:02,920 --> 00:18:03,920 நீ என்ன பாத்தே? 153 00:18:06,240 --> 00:18:07,320 நான்... 154 00:18:17,160 --> 00:18:20,520 நான் மிஸ். சுப்ரியாவை தேடி வந்தேன். அவங்களை பார்த்தீங்களா? 155 00:18:21,800 --> 00:18:23,880 அவங்க மருத்துவமனை போறதை பார்த்தேன். 156 00:18:23,960 --> 00:18:25,280 சரி. 157 00:18:40,280 --> 00:18:41,800 அதை காப்பாத்தியிருக்கலாம். 158 00:18:43,400 --> 00:18:45,640 ரஜத், முடிஞ்சிருக்காதுபா. 159 00:18:46,480 --> 00:18:48,560 மானும் இல்லை, சுயாஷும் இல்லை. 160 00:18:51,520 --> 00:18:53,080 நான் போலீஸிடம் பேசறேன். 161 00:18:55,240 --> 00:18:56,760 -ஹலோ, சார். -ஹலோ. 162 00:18:56,800 --> 00:18:57,920 எல்லாம் நலமா? 163 00:18:59,560 --> 00:19:02,560 தெரியுமா, பள்ளி நாட்களில், 164 00:19:03,640 --> 00:19:07,200 சுயாஷும் நானும் எப்பவும் தேவை கவர விரும்பினோம். 165 00:19:09,000 --> 00:19:11,000 அவன் எங்க நண்பனா இருக்க விரும்பினோம், 166 00:19:12,160 --> 00:19:14,320 சுயநலம்னு தெரியும், ஆனால் அவனை பார். 167 00:19:15,240 --> 00:19:19,800 போன வருஷம், ஏதோ சொத்து பிரச்சினை, ஒரு ஃபோன் கால், வேலை முடிஞ்சுது. 168 00:19:21,480 --> 00:19:23,640 அப்ப தேவ் உன் நண்பனா ஆயிட்டான். 169 00:19:24,760 --> 00:19:27,240 ஆமாம். நீயும் வித்தியாசமில்லை. 170 00:19:27,320 --> 00:19:29,320 யாரும் உனக்கு இல்லைன்னு சொல்ல முடியாது. 171 00:19:30,080 --> 00:19:32,520 லானின் எல்லா ரோஜாக்களும் 172 00:19:32,920 --> 00:19:34,800 உன் வீட்டு வாசப்படியில்தான் இருந்தது. 173 00:19:39,320 --> 00:19:44,320 கோச்சிடமிருந்து திருடிய ரம்மை குடித்த போது, சுயாஷ் ஒன்று வெச்சான். 174 00:19:52,800 --> 00:19:55,920 ஆனா உன் கண்ணு ஆதிராஜை மட்டும்தான் பாத்தது. என்ன? 175 00:19:57,040 --> 00:19:58,800 நீ எப்பவாவது யோசிப்பியா 176 00:19:59,680 --> 00:20:03,000 நீயும் ஆதியும் பிரியலைன்னா என்ன ஆயிருக்கும்னு? 177 00:20:05,920 --> 00:20:08,440 -ப்ளீஸ் அழைங்க. நன்றி. -நன்றி, சார். 178 00:20:09,680 --> 00:20:11,960 எதுவும் செய்ய முடியலைல்லே? 179 00:20:12,040 --> 00:20:17,800 இன்னொரு இரவு இங்கே தங்கி அவனுக்கு "சீர்ஸ்" சொல்லணும்னு சுயாஷ் விரும்பியிருப்பான். 180 00:20:21,560 --> 00:20:23,640 குடிக்கு வேண்டாம்னு சொல்ல மாட்டேனே. 181 00:20:26,920 --> 00:20:29,280 சுப்ரியா, ப்ளீஸ் நான் வேதாந்திடம் பேசணும். 182 00:20:29,760 --> 00:20:32,800 நினாத் காணாம போனதுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? 183 00:20:33,320 --> 00:20:36,320 ராத்திரி, சுயாஷ் பாக்கெட்டிலிருந்து சீட்டுகள் விழுந்தன. 184 00:20:36,800 --> 00:20:39,240 நினாத் மீது 15 வருஷம் முன்பு அவன் எறிஞ்சது. 185 00:20:40,080 --> 00:20:41,400 அது எப்படி சாத்தியம்? 186 00:20:43,520 --> 00:20:45,960 புத்தகங்கள் இன்னும் அதேதான், குறும்புகளும். 187 00:20:47,040 --> 00:20:50,440 ஓல்ட் பாய் யாராவது குறும்பு செய்திருக்கலாம். 188 00:20:52,400 --> 00:20:55,560 அல்லது குறும்பு செய்ய நினைத்து பாக்கெட்டில் வைத்திருக்கலாம். 189 00:20:55,680 --> 00:20:59,080 ஆனா வேதாந்த் என்னிடம் வந்து அவன் எதிர்த்து போராடுவதா சொன்னான். 190 00:21:00,520 --> 00:21:03,480 நினாதிடம் 15 வருஷம் முன் நான் சொன்ன அதே வார்த்தைகள். 191 00:21:03,560 --> 00:21:05,520 சுயாஷ் அவன் மீது சீட்டுகளை எறிஞ்ச போது. 192 00:21:06,160 --> 00:21:10,000 நினாத் மட்டுமல்ல. அதையே கஃபேடேரியாவில் வேதாந்திடமும் சொன்னீங்க. 193 00:21:10,080 --> 00:21:12,000 நினைவிருக்கா, ஷேடோ பாய், போராடு? 194 00:21:14,920 --> 00:21:18,160 எல்லாத்துக்கும் தர்க்க விளக்கம் இருக்கிறதா நினைக்கிறீங்க. 195 00:21:18,720 --> 00:21:19,800 ஆனா... 196 00:21:21,000 --> 00:21:23,320 இங்கே வேறு ஏதாவது நடந்து கொண்டிருந்தா? 197 00:21:24,520 --> 00:21:26,080 ஆதிராஜ், பதட்டப் படறீங்க. 198 00:21:26,160 --> 00:21:28,480 உங்க தோழி மாள்விகா கவலை படறாங்க. 199 00:21:30,000 --> 00:21:33,080 நினாதை தவிர உங்களுக்காக கவலை படறவங்க இருக்காங்க. 200 00:21:34,200 --> 00:21:35,560 பாத்தது எனக்கு தெரியும். 201 00:21:35,640 --> 00:21:37,800 வேறு யாராவது சீட்டுகளை பாத்தாங்களா? 202 00:21:40,800 --> 00:21:44,440 சுப்ரியா, இருங்க. நினாத் 15 வருஷமா காணாம போயிட்டான். 203 00:21:44,520 --> 00:21:48,440 பள்ளி அதிகாரிகள் அவன் பேட்ச் நண்பர்களிடம் தகவல் தெரிவிக்கலை. 204 00:21:48,520 --> 00:21:51,280 நாங்க விசாரணையில் உதவியிருக்கலாம். 205 00:21:51,360 --> 00:21:55,440 கடைசி நாளை பத்தி எங்க யாருக்காவது தெரிஞ்சிருக்கலாம். அவன் ஆவணங்களே இல்லை. 206 00:21:56,000 --> 00:22:00,840 நினாத் பெற்றோரிடம் பேசினதாக கோச் வியாஸ் அவர் அறிக்கையில் பொய் சொன்னார். 207 00:22:01,360 --> 00:22:03,680 வியாஸ் ஒரே இரவில் டீன் ஆனார். 208 00:22:04,440 --> 00:22:06,760 போலீஸ் உடனே வழக்கை மூடிட்டாங்க. 209 00:22:07,800 --> 00:22:10,160 இதெல்லாம் ரொம்ப விநோதமா தோணலையா? 210 00:22:12,280 --> 00:22:13,360 யோசிங்க, சுப்ரியா. 211 00:22:14,040 --> 00:22:18,440 பெற்றோருக்கு காணாமல் போன மகன் திரும்ப கிடைக்க வாய்ப்பிருந்தா, 212 00:22:18,520 --> 00:22:20,760 அதுக்காக போராட வேண்டாமா? 213 00:22:23,600 --> 00:22:24,440 நான்... 214 00:22:25,920 --> 00:22:27,880 நினாத் பெற்றோருக்காக வருந்தறேன்... 215 00:22:28,600 --> 00:22:29,800 உங்களுக்காக வருந்தறேன். 216 00:22:31,000 --> 00:22:32,800 வேதாந்த் பாதிக்க பட்டிருக்கான். 217 00:22:34,480 --> 00:22:36,640 அவனை இதில் நீங்க ஈடுபடுத்த விட முடியாது. 218 00:22:36,720 --> 00:22:39,280 சாரி, நீங்களே உங்க பதில்களை தேடணும். 219 00:22:51,680 --> 00:22:53,680 -சிரிக்கவாவது செய்யறாங்க. -ஆமா. 220 00:22:54,440 --> 00:22:56,640 திரைப்படம் நல்ல யோசனை, சுப்ரியா. 221 00:23:07,720 --> 00:23:09,800 -வேதாந்தை கவனிப்பீங்களா? -சரி. 222 00:23:21,840 --> 00:23:25,120 நாம இங்கே மாட்டியிருக்கோம், அவங்க மட்டும் வெளிய போலாமா? 223 00:23:28,480 --> 00:23:30,080 சுத்திட்டு வந்தாச்சா? 224 00:23:31,080 --> 00:23:33,720 எங்களை கேட் அருகே கூட அனுமதிக்கலை. 225 00:23:33,800 --> 00:23:36,520 ஹேய், பார்த், சுயாஷ் எங்க நண்பன். 226 00:23:37,360 --> 00:23:40,520 மாள்விகா ஆடிப்போயிட்டா. அவ சரி ஆகணும்னு விரும்பினேன். 227 00:23:40,600 --> 00:23:44,160 -ஒரு ட்ரைவ் போயிட்டு திரும்பினோம். -அப்படியா? 228 00:23:45,160 --> 00:23:46,000 அவ நலமா? 229 00:23:46,520 --> 00:23:48,360 கொஞ்ச நேரம் தனியா இருக்க விரும்பறா. 230 00:23:48,880 --> 00:23:49,800 புரியுது. 231 00:23:50,640 --> 00:23:52,560 சரி, நீ ஆதிராஜை பாத்தியா? 232 00:23:52,640 --> 00:23:55,400 ஆமா. ஐந்து நிமஷம் முன்பு அவன் அறைக்கு போனான். 233 00:23:56,280 --> 00:23:58,400 தனியா அறையில் என்ன செய்றான்? 234 00:24:00,440 --> 00:24:02,280 பசங்களுக்கு நான் தேவை, அப்பு. 235 00:24:02,360 --> 00:24:03,840 வேதாந்துக்கு நான் தேவை. 236 00:24:03,920 --> 00:24:07,000 உனக்கே உதவி தேவைன்னும்போது எப்படி இன்னொருத்தருக்கு உதவுவே? 237 00:24:07,080 --> 00:24:08,400 கொல்கத்தாவுக்கு திரும்பு 238 00:24:08,480 --> 00:24:10,040 இப்பவே நீ வீட்டுக்கு வா. 239 00:24:35,800 --> 00:24:36,920 மிஸ். 240 00:24:37,000 --> 00:24:39,480 மிஸ். சுப்ரியா கோஷ் பள்ளி ஆலோசகர் 241 00:25:09,560 --> 00:25:13,280 ஜாம்வால் 242 00:25:20,840 --> 00:25:25,600 ஆதிராஜ் ஜெய்சிங் 243 00:25:29,680 --> 00:25:30,680 மாள்விகா! 244 00:25:31,600 --> 00:25:32,520 மாள்விகா! 245 00:25:34,760 --> 00:25:36,040 நினாதை பாத்தியா? 246 00:25:36,120 --> 00:25:38,560 பள்ளியின் கடைசி நாள் 247 00:25:41,120 --> 00:25:42,760 மாள்விகா, நான் உன்னிடம் பேசறேன். 248 00:25:43,280 --> 00:25:44,280 நினாத் எங்கே? 249 00:25:45,160 --> 00:25:47,720 நினாத், நினாத். பெயரை கேட்டு வெறுத்து போச்சு! 250 00:25:49,000 --> 00:25:51,120 என்னை முட்டாளாக்கிட்டே, ஆதி. 251 00:25:51,200 --> 00:25:54,760 தனியா அங்கே உட்காந்திருந்தேன் உனக்காக. நீ போறதை பாத்திட்டு. 252 00:25:55,840 --> 00:25:59,160 கடைசி நாளை என்னோடு செலவழிக்க விரும்புவேன்னு நினைச்சேன். 253 00:25:59,840 --> 00:26:01,120 தப்பா நினைச்சிட்டேன். 254 00:26:01,600 --> 00:26:04,480 -மாள்விகா, கேளு. -என்னைப்பத்தி கவலையே இல்லை, ஆதி. 255 00:26:04,560 --> 00:26:06,120 -நிச்சயமா இருந்தது. -இல்லை. 256 00:26:06,200 --> 00:26:09,040 மாள்விகா, கேளு. என்னால இப்ப இது முடியாது, சரியா? 257 00:26:09,640 --> 00:26:11,040 நினாதை கண்டுபிடிக்கணும். 258 00:26:11,120 --> 00:26:13,440 அவனிடம் சாரி சொல்லணும். கண்டுபிடிக்கிறேன். 259 00:26:13,520 --> 00:26:16,200 -பிறகு பேசுவோம். -என் சாரி எங்கே? 260 00:26:16,840 --> 00:26:20,560 மன்னிப்பு கேட்பதற்கு பதிலா, என்னிடம் நினாத் எங்கேன்னு கேக்குறே? 261 00:26:21,600 --> 00:26:22,680 என் சாரி எங்கே? 262 00:26:22,760 --> 00:26:25,440 மாள்விகா, அது வெறும் டேட் தானே! 263 00:26:26,080 --> 00:26:27,760 வேறு ஒரு நாள் போகலாம்! 264 00:26:28,200 --> 00:26:32,280 ப்ளீஸ், ஒரு முறை, எல்லாத்தையும் உன்னைப்பத்தி என ஆக்காதேயேன்? 265 00:26:32,360 --> 00:26:34,160 -என்ன? -மாள்விகா! 266 00:26:34,240 --> 00:26:35,280 தேவ்! 267 00:26:36,040 --> 00:26:38,840 இப்ப இல்லை. என் காதலிகிட்ட பேச முயற்சிக்கிறேன். 268 00:26:43,160 --> 00:26:44,600 நான் உன் காதலி இல்லை. 269 00:26:45,880 --> 00:26:47,240 நினாத், நீ, நாசமா போங்க! 270 00:27:12,680 --> 00:27:15,360 பள்ளியின் கடைசி நாளிலிருந்து நினாதை காணவே இல்லை. 271 00:27:15,440 --> 00:27:16,800 அவ வீடு திரும்பலை. 272 00:27:27,400 --> 00:27:28,560 சுயாஷுக்கு. 273 00:27:28,640 --> 00:27:30,760 -சியர்ஸ். -சியர்ஸ். 274 00:27:31,880 --> 00:27:34,360 ஆதி, போலீஸால கண்டுபிடிக்க முடியலை, நீ எப்படி? 275 00:27:34,440 --> 00:27:36,800 போலீஸ் எதுவும் செய்யலை, மாள்விகா. 276 00:27:37,520 --> 00:27:39,320 வழக்கை திரும்ப திறக்கணும். 277 00:27:40,640 --> 00:27:42,080 ஒரு துப்புதான் வேணும். 278 00:27:43,880 --> 00:27:46,880 கடைசி நாளன்று என்ன நடந்ததென யாருக்காவது நினைவிருக்குமா? 279 00:27:47,760 --> 00:27:50,240 15 வருஷம் முன்ன நடந்தது யாருக்கு நினைவிருக்கு? 280 00:27:51,280 --> 00:27:53,160 எனக்கு பைத்தியம்னு நினைக்கிறேல்ல? 281 00:27:54,760 --> 00:27:56,520 சுப்ரியாவும் நினைக்குறாங்க. 282 00:28:01,560 --> 00:28:04,360 மன்னிச்சிடு, ஆதி, நான் எல்லை மீறிட்டேனு நீ நினைச்சா. 283 00:28:09,040 --> 00:28:10,800 உன்னை பத்தி கவலைப் பட்டேன். 284 00:28:13,800 --> 00:28:16,400 நீ என்னை பாக்க இங்கே வரலைன்னு தெரியும். 285 00:28:17,800 --> 00:28:20,440 ஆனா ரீயூனியனுக்கு வந்ததே உனக்காகத்தான். 286 00:28:22,040 --> 00:28:24,840 கடந்த 15 வருஷத்தை இப்படி யோசிச்சு கழிச்சேன்... 287 00:28:27,520 --> 00:28:28,560 என்ன ஆயிருக்கும்... 288 00:29:34,720 --> 00:29:37,160 என்ன ஆச்சு? நான் கழிப்பறையில் இருந்தேன். 289 00:29:38,240 --> 00:29:39,400 அங்க வந்திட்டிருந்தேன் 290 00:29:44,240 --> 00:29:45,240 நன்றி. 291 00:29:53,680 --> 00:29:56,200 யாராவது நினாதை கடைசி நாளன்று பாத்தீங்களா? 292 00:29:57,880 --> 00:29:59,040 ஆமாம். 293 00:29:59,440 --> 00:30:04,000 உன் உரைக்கு பிறகு எங்க நிகழ்ச்சி இருந்தது. ட்ரம் கிட்டும் கிடாரும் எடுக்க போனேன். 294 00:30:04,080 --> 00:30:05,840 நுழைவாயிலில் சந்தித்தேன். 295 00:30:05,960 --> 00:30:08,480 எனக்கு சாமான் எடுக்க உதவ கேட்டேன், 296 00:30:08,560 --> 00:30:11,760 ஆனால் அசெம்ப்ளி ஹாலுக்கு அவசரமாக போகணும்னான். 297 00:30:13,000 --> 00:30:16,200 அவன் சொன்னான்னு உறுதியா தெரியுமா? ஏன்னா அவன் வரவே இல்லை. 298 00:30:16,720 --> 00:30:18,280 மனசை மாத்திக்கிட்டான் போல. 299 00:30:18,360 --> 00:30:20,760 -அவன் சொன்னானா-- -ஹேய், இதைப்பாரு. 300 00:30:21,920 --> 00:30:24,240 என் தோலுக்கு கீழே ஏதோ ஊர்ந்து போகுதுல்ல? 301 00:30:25,520 --> 00:30:26,360 என்ன? 302 00:30:27,040 --> 00:30:27,920 ஒரு கையிலா? 303 00:30:28,000 --> 00:30:29,040 ஆமாம். 304 00:30:30,080 --> 00:30:32,440 செகன்டரி பாமர் எரிதீமா போலிருக்கு. 305 00:30:32,520 --> 00:30:33,360 என்ன? 306 00:30:33,440 --> 00:30:36,480 -குடிக்கிறதை நிறுத்து. -இது ஆதிராஜ் புத்தகத்தினால. 307 00:30:36,880 --> 00:30:38,280 நான் தினமும் குடிக்கிறேன். 308 00:30:39,320 --> 00:30:41,480 -போகலாம். -நான் உன்னோடு வரலை. 309 00:30:43,440 --> 00:30:44,480 ஹேய், ஆதி. 310 00:30:49,320 --> 00:30:51,760 மாள்விகா நினாத் பற்றி சொன்னா. 311 00:30:52,760 --> 00:30:54,040 என்னால நம்ப முடியலை. 312 00:30:55,360 --> 00:30:57,560 அன்று நீயும் அசெம்ப்ளிக்கு வரலைதானே? 313 00:30:57,640 --> 00:30:59,640 அவனை பள்ளியில் எங்கேயாவது பாத்தியா? 314 00:30:59,720 --> 00:31:00,720 எனக்கு நினைவில்லை. 315 00:31:01,600 --> 00:31:02,840 அவங்களை கேட்டியா? 316 00:31:02,920 --> 00:31:05,720 ஆமாம், எல்லாரிடமும் பேசினேன், யாருக்கும் தெரியலை. 317 00:31:06,680 --> 00:31:08,680 நம்ம நண்பர்களுக்கு என்ன நடக்குது. 318 00:31:08,760 --> 00:31:10,320 நமக்கு தெரியலை. 319 00:31:11,280 --> 00:31:12,440 சுயாஷின் தற்கொலை. 320 00:31:13,320 --> 00:31:17,000 -நினாத் வீட்டிலிருந்து ஓடினது. -நினாத் ஓடியிருப்பான்னு நான் நம்பலை. 321 00:31:17,080 --> 00:31:18,840 ஆமா, யார் நம்புவாங்க? 322 00:31:18,920 --> 00:31:21,560 நான் இதையும் நம்பலை, சுயாஷ் வந்து, தெரியுமா... 323 00:31:23,200 --> 00:31:24,440 ஆனா அதுதான் உண்மை. 324 00:31:25,440 --> 00:31:27,760 ஒரு நிமிஷம் நினாத் நிலைமையில் யோசித்து பார். 325 00:31:27,840 --> 00:31:30,800 16 வயசு பையன் சிறுவர் பள்ளியில் படிக்கிறான். 326 00:31:30,880 --> 00:31:33,480 ஒரு நாள் அவன் கேன்னு புரியுது. 327 00:31:33,560 --> 00:31:36,320 அதுக்கும் மேல, அவனோட நெருங்கின நண்பன் மீது காதல். 328 00:31:36,400 --> 00:31:41,560 பாவம், நெருங்கின நண்பனா தன் உணர்ச்சிகளை புரிஞ்சுப்பான்னு நினைக்கிறான். 329 00:31:41,640 --> 00:31:46,600 ஆனா அவனை புரிஞ்சுக்கவும் இல்லை, அவனோட நெருங்கின நண்பன் அவனை நிராகரித்து 330 00:31:46,680 --> 00:31:49,400 முழு பள்ளிக்கு முன்னால அவனை கேலி பண்றான். 331 00:31:50,240 --> 00:31:53,120 யார் ஓடறதை பத்தி நினைக்க மாட்டாங்க, ஆதி? 332 00:31:53,200 --> 00:31:55,000 இது எல்லாத்திலிருந்து தூர. 333 00:31:55,520 --> 00:31:57,600 பாரு, அவன் நிச்சயம் நல்லா இருப்பான். 334 00:31:58,960 --> 00:31:59,800 அதை விடு. 335 00:32:00,800 --> 00:32:03,280 இந்த விஷயத்தை பத்தி யோசிக்கிறதில் அர்த்தமில்லை. 336 00:32:03,360 --> 00:32:05,240 எனக்கு ஓய்வு வேணும். 337 00:32:05,320 --> 00:32:06,760 ஆதி... 338 00:32:15,640 --> 00:32:18,440 -குழந்தைங்க நல்லா இருக்காங்க. -பசங்களுக்கு நல்ல படம். 339 00:32:19,280 --> 00:32:21,360 மிஸ். ஸ்நேஹா, வேதாந்த் எங்கே? 340 00:32:24,320 --> 00:32:25,560 இங்கேதான் இருந்தான். 341 00:32:26,880 --> 00:32:28,280 நான் போய் பார்க்கிறேன். 342 00:32:35,640 --> 00:32:36,480 வேதாந்த்! 343 00:32:37,080 --> 00:32:38,240 வேதாந்த்! 344 00:32:40,520 --> 00:32:42,440 எங்கே போறே? இங்கே திரும்பி வா. 345 00:32:46,760 --> 00:32:48,040 நான் சொல்றது கேக்கலையா? 346 00:32:55,000 --> 00:32:57,200 பசங்களை வெளியே கூட்டி போங்க. 347 00:32:58,440 --> 00:33:00,680 ப்ளீஸ்! 348 00:33:06,400 --> 00:33:07,280 வெளியே போங்க. 349 00:33:10,880 --> 00:33:12,240 வாங்க. 350 00:33:15,360 --> 00:33:16,960 திரு. மனோஹர், கூட்டி போங்க. 351 00:33:18,080 --> 00:33:19,280 கவனமா இருங்க. 352 00:33:20,880 --> 00:33:22,680 டார்முக்கு போகலாம். சீக்கிரம். 353 00:33:22,760 --> 00:33:24,320 போயிட்டே இருங்க. 354 00:33:27,280 --> 00:33:28,280 சீக்கிரம். 355 00:33:34,280 --> 00:33:36,120 கூகிள் தேடல்: சிறுவன் காணவில்லை ஊட்டி 2007 356 00:33:39,960 --> 00:33:43,400 நீலகிரி வேலி ஸ்கூலின் 16 வயது முன்னாள் மாணவன் காணாமல் போகிறான் 357 00:33:43,480 --> 00:33:45,920 நினாதை கடைசியாக கோத்தகிரி பஸ்ஸில் பார்த்திருக்காங்க. 358 00:33:50,320 --> 00:33:51,600 நீலகிரி வேலி ஸ்கூல் 359 00:33:51,680 --> 00:33:52,800 எந்த முடிவுகளும் இல்லை 360 00:34:41,840 --> 00:34:42,640 சார்த்தக்? 361 00:34:45,120 --> 00:34:46,880 -என்ன ஆச்சு? -மிஸ்... 362 00:34:48,160 --> 00:34:49,040 சொல்லு. 363 00:34:51,000 --> 00:34:52,520 எல்லாரையும் கொல்லுவான். 364 00:34:54,000 --> 00:34:54,840 யார்? 365 00:34:56,640 --> 00:34:58,600 வேதாந்துக்குள் இருக்கும் பையன். 366 00:35:05,000 --> 00:35:06,000 மிஸ் சுப்ரியா! 367 00:35:06,080 --> 00:35:08,000 ப்ரொஜெக்டர் அறை தீ பிடிச்சிடுச்சு. 368 00:35:08,080 --> 00:35:11,280 குழந்தைகளை டார்மிடரிக்கு அனுப்பினேன். ஆனா வேதாந்த் இல்லை. 369 00:35:11,360 --> 00:35:12,160 என்ன? 370 00:35:12,920 --> 00:35:16,320 அவனை பாத்துக்க சொன்னேனே. அவனையும் இழக்க முடியாது! 371 00:35:40,760 --> 00:35:42,040 என்ன இது! 372 00:36:11,440 --> 00:36:12,560 வேதாந்த், அமைதியாகு! 373 00:36:12,640 --> 00:36:14,040 வேதாந்த், அமைதியாகு! 374 00:36:14,120 --> 00:36:15,880 அமைதியாகு! 375 00:36:15,960 --> 00:36:17,560 -அமைதி. -கால்களை பிடிங்க. 376 00:36:17,640 --> 00:36:19,000 அவனை மயக்கமாக்கணும். 377 00:36:19,800 --> 00:36:20,800 உதவுங்க. 378 00:36:26,840 --> 00:36:27,760 அமைதி. 379 00:36:27,840 --> 00:36:28,880 பரவாயில்லை. 380 00:36:29,600 --> 00:36:30,920 வேதாந்த், பரவாயில்லை. 381 00:36:31,000 --> 00:36:33,040 பரவாயில்லை! 382 00:36:37,280 --> 00:36:38,600 வேதாந்த், அமைதியாகு. 383 00:36:39,160 --> 00:36:40,360 அவன் கால்களை பிடிங்க. 384 00:36:42,840 --> 00:36:43,880 நிறுத்து. 385 00:36:47,960 --> 00:36:49,440 நிறுத்து, வேதாந்த். நிதானி. 386 00:37:13,880 --> 00:37:14,680 அவன் நலமா? 387 00:37:14,800 --> 00:37:16,160 ஆமாம். மயக்கமாக்கினோம். 388 00:37:17,640 --> 00:37:18,880 கம்பளியை எடுங்க. 389 00:37:18,960 --> 00:37:19,800 சரி. 390 00:37:33,680 --> 00:37:35,760 இங்க என்னமோ நடக்குது. 391 00:37:35,840 --> 00:37:37,320 மாள்விகா தூங்கிட்டு இருக்கா. 392 00:37:37,400 --> 00:37:40,200 உனக்கு புரியலை. யாரோ என் கழுத்தை நெறிச்சாங்க. 393 00:37:40,320 --> 00:37:41,880 அதாவது, நானேதான்... 394 00:37:41,960 --> 00:37:44,480 ப்ரோ, யாரோ-- என்னால சுவாசிக்க முடியலை. 395 00:37:44,560 --> 00:37:45,840 நிதானி. 396 00:37:46,360 --> 00:37:48,600 நீ நிறைய குடிச்சிருக்கே. 397 00:37:49,280 --> 00:37:51,280 உள்ளே வா. ஆனா அமைதியா இரு. 398 00:37:52,400 --> 00:37:53,440 வா. 399 00:38:03,920 --> 00:38:05,160 அவன் கோள்மூட்ட கூடாது. 400 00:38:06,560 --> 00:38:08,920 கவலை படாதே. மாட்டான். 401 00:38:30,200 --> 00:38:31,080 உதவி! 402 00:38:31,160 --> 00:38:32,640 யாராவது உதவுங்க! 403 00:38:35,840 --> 00:38:37,080 வேதாந்த். 404 00:38:39,440 --> 00:38:40,400 உதவுங்க! 405 00:38:54,960 --> 00:38:56,280 வேதாந்திடமிருந்து விலகு. 406 00:38:56,840 --> 00:39:00,520 இல்லே மத்தவங்க போல நீயும் சாவே. 407 00:41:19,880 --> 00:41:21,880 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 408 00:41:21,960 --> 00:41:23,960 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்