1 00:00:06,000 --> 00:00:06,840 இத்தொடர் பொழுதுபோக்கிற்கு, கற்பனையே. 2 00:00:06,920 --> 00:00:07,760 பெயர்கள், இடங்கள் எழுத்தாளர் கற்பனையே. 3 00:00:07,840 --> 00:00:08,680 ஒற்றுமை தற்செயலானது. எந்த டயலாக்கிற்கும் யாரையும் 4 00:00:08,760 --> 00:00:09,600 புண்படுத்தும் நோக்கமில்லை. எல்ஜிபிடிக்யூஐஏ+ 5 00:00:09,680 --> 00:00:10,520 சமூக போராட்டங்களை காட்டுகிறது. 6 00:00:10,600 --> 00:00:11,440 எல்ஜிபிடிக்யூஐஏ+ சமூகத்தை அவமதிக்கும் எண்ணமில்லை. 7 00:00:11,520 --> 00:00:12,360 கடினமான மொழி உண்டு. 8 00:00:12,440 --> 00:00:13,280 போதை பொருட்களை, அமானுஷ்யத்தை ஆதரிக்கப்படவில்லை. 9 00:00:13,360 --> 00:00:14,520 விலங்குகளுக்கு தீங்கிழைக்கவில்லை. அமேசான் கருத்துகளை ஆதரிக்கவில்லை. 10 00:00:14,600 --> 00:00:15,880 குழந்தை நட்சத்திரங்கள் புண்படவில்லை. பார்வையாளர்களுக்கு விவேகம் பரிந்துரை. 11 00:00:16,880 --> 00:00:22,280 மாணவர்களே, சாதாரண மூடிய பொருளை சுற்றிய தூரத்திற்கு பெயர் என்ன? 12 00:00:22,360 --> 00:00:24,120 நான் ஐந்து நிமிடங்களில் வர்றேன். 13 00:00:24,200 --> 00:00:26,760 ஏதாவது பிரச்சினை செய்தா, தண்டனை கிடைக்கும். 14 00:00:32,280 --> 00:00:34,960 சார்த்தக்! 15 00:00:37,280 --> 00:00:38,360 இவனுக்கு என்ன ஆச்சு? 16 00:00:38,960 --> 00:00:41,560 தெரியலை. அன்னிலிருந்து பயந்தே இருக்கான். 17 00:00:42,720 --> 00:00:44,880 சைக்கோ அவனை ஏதாவது செஞ்சானா? 18 00:00:46,880 --> 00:00:47,720 ஒரு யோசனை. 19 00:00:50,440 --> 00:00:51,440 சார்த்தக். 20 00:00:52,000 --> 00:00:53,440 என்னால பண்ண முடியறது பார். 21 00:00:55,280 --> 00:00:56,600 ப்ரோ, ரொம்ப கூல். 22 00:00:58,160 --> 00:01:00,280 எழுதுவதை நிறுத்து, கிறுக்கு! 23 00:01:00,360 --> 00:01:01,960 அவனை எழுத விடு யா. 24 00:01:02,040 --> 00:01:04,160 இதை பாத்தா பேன்டை ஈரமாக்கிடுவான். 25 00:01:24,760 --> 00:01:25,800 துருவ்! 26 00:01:36,280 --> 00:01:40,800 கஷ்டம் குடுத்தா தண்டனை கிடைக்கும். 27 00:02:17,520 --> 00:02:20,040 அதுரா 28 00:02:23,520 --> 00:02:26,160 அந்த குழந்தையோடு விசித்திரமான விஷயங்கள் நடக்குது. 29 00:02:26,280 --> 00:02:29,160 முதலில் நாய்க்குட்டிகள், இப்ப அந்த பையன். 30 00:02:29,680 --> 00:02:31,320 வேற என்னவெல்லாம் இருக்கோ. 31 00:02:31,400 --> 00:02:32,880 நீ என்ன குருடா? 32 00:02:34,160 --> 00:02:35,160 நீயா! 33 00:03:11,520 --> 00:03:12,440 நல்வருகை ஓல்ட் பாய்ஸ் 34 00:03:12,520 --> 00:03:13,760 ஹேய், இசைக்கலைஞரே. ஹலோ! 35 00:03:14,520 --> 00:03:16,280 -இசைக்கலைஞ்சா. -என்னடா? 36 00:03:16,360 --> 00:03:17,400 உனக்கென்ன பைத்தியமா? 37 00:03:17,840 --> 00:03:19,760 ஏன் இவ்வளவு கோபப் படுறே? 38 00:03:20,920 --> 00:03:22,320 நான் ஜோக்கடிச்சேன், ப்ரோ. 39 00:03:22,400 --> 00:03:25,240 இரவு ஒருத்தரை ஒருத்தர் பயமுறுத்திட்டிருந்தாங்க. 40 00:03:25,320 --> 00:03:27,520 அதான் சுயாஷ் இன்னும் தூங்குறான்லே? 41 00:03:27,600 --> 00:03:29,280 நாம நாடக ஒத்திகை பார்க்கணும். 42 00:03:29,360 --> 00:03:30,640 சீக்கிரம் தூங்க போனான் 43 00:03:30,720 --> 00:03:33,600 அவன் ப்யூட்டி விட்டுப் போனதால, ப்யூட்டி தூக்கம் தேவை, 44 00:03:36,520 --> 00:03:37,800 யார் இதை செஞ்சது? 45 00:03:38,360 --> 00:03:39,640 யாறாச்சும் செய்தீங்களா? 46 00:03:40,640 --> 00:03:42,120 ப்ரோ, நிதானி. என்ன இது? 47 00:03:43,360 --> 00:03:44,600 ஷேடோ பாய் 48 00:03:48,680 --> 00:03:49,920 என்ன இது! 49 00:03:52,200 --> 00:03:54,560 ரஜத் இதை செஞ்சிருக்க வாய்ப்பில்லை, 50 00:03:54,640 --> 00:03:57,000 ஏன்னா அவனால புத்தகத்தையே தொட முடியாது. 51 00:03:59,440 --> 00:04:02,120 கைஸ், உண்மையா சொல்றேன். என்னமோ சரியில்லை. 52 00:04:02,200 --> 00:04:03,280 அதை தொட்டுப் பாரு. 53 00:04:11,880 --> 00:04:12,840 அட, கடவுளே. 54 00:04:13,760 --> 00:04:14,920 உனக்குதான் பிரச்சனை 55 00:04:15,000 --> 00:04:16,000 அதை திருப்பி கொடு. 56 00:04:24,000 --> 00:04:25,480 எனக்கு குரல்கள் கேக்குது. 57 00:04:26,200 --> 00:04:27,120 பலதும் தெரியுது. 58 00:04:27,200 --> 00:04:29,520 -பைத்தியம் பிடிக்குது, டாக்டர். -சொல்றதை கேள். 59 00:04:29,600 --> 00:04:31,800 ரொம்ப அதிகமா ஆனா, திரும்பி வா. 60 00:04:31,880 --> 00:04:33,560 திரும்பி வர முடியாது, டாக்டர். 61 00:04:34,200 --> 00:04:38,360 இந்த ரீயூனினை நம்பி இருந்தேன். அவன் இங்கே இல்லை. நினாத் வரலை. 62 00:04:38,480 --> 00:04:41,680 ஆதிராஜ், வீடியோ காலில் பேசலாம். பக்க விளைவா இருக்கலாம். 63 00:04:41,760 --> 00:04:43,240 அவன் இன்னும் என்னை மன்னிக்கலை. 64 00:04:43,360 --> 00:04:47,160 நீ தேடும் "இறுதி முற்றம்" நினாதிடம் இல்லை, உன்னிடம் இருக்கு-- 65 00:04:52,920 --> 00:04:54,080 நான்தான். 66 00:04:55,360 --> 00:04:59,240 மன்னிக்கணும், ஒட்டுக் கேக்கலை. நீ நல்லா இருக்கியான்னு பாக்க வந்தேன். 67 00:05:00,240 --> 00:05:01,320 உனக்கு கவலை இருக்கா? 68 00:05:08,000 --> 00:05:09,600 இது நினைவிருக்கா, மாள்விகா? 69 00:05:11,720 --> 00:05:12,920 நினாதோட கிராஃபிக் நாவல். 70 00:05:16,320 --> 00:05:17,920 எனக்கு பைத்தியமில்லைன்னு சொல்லு. 71 00:05:18,000 --> 00:05:21,560 அவங்க எப்படின்னு தெரியும்லே. மறந்துடு. வெரும் குறும்பு. 72 00:05:21,640 --> 00:05:23,040 சரி, அது குறும்பு. 73 00:05:23,800 --> 00:05:25,200 ஆனா அவன் ஏன் வரலை? 74 00:05:26,360 --> 00:05:28,720 ஆதி, 15 வருஷம் முன் நீ ஒரு தவறு செஞ்சே. 75 00:05:29,160 --> 00:05:31,280 அதை திருத்த முடிஞ்சா அதை செஞ்சிருப்பே. 76 00:05:31,360 --> 00:05:34,040 எவ்வளவு காலம் அதுக்கு உன்னையே தண்டிப்பே? 77 00:05:36,440 --> 00:05:38,680 அவன் ஏன் வரலைங்கிறது முக்கியமில்லை. 78 00:05:38,760 --> 00:05:39,920 அதை விடு. 79 00:05:40,000 --> 00:05:41,640 என்னால விட முடியாது, மாள்விகா. 80 00:05:42,320 --> 00:05:44,000 நான் நேசித்த அனைவரையும் இழந்தேன். 81 00:05:45,080 --> 00:05:46,760 அவங்களை திருப்ப முடியாது. 82 00:05:48,200 --> 00:05:50,080 ஆனால் நினாதை திருப்ப முடியும். 83 00:05:54,240 --> 00:05:55,280 பதில்கள் தேவை. 84 00:06:02,840 --> 00:06:04,560 சாஸ்திரத்தில் எழுதப்பட்டிருக்கு. 85 00:06:05,080 --> 00:06:08,480 நம் ஆத்மா ஒரு உடலிலிருந்து இன்னொன்றுக்கு போகும். 86 00:06:09,160 --> 00:06:10,720 ஆயுதங்களால் அதை வெட்ட முடியாது, 87 00:06:11,280 --> 00:06:13,120 தீயால் எரிக்கவும் முடியாது. 88 00:06:14,480 --> 00:06:19,000 நாம் இறப்போம், ஆனால் ஆன்மா வாழ்ந்து கொண்டிருக்கும். 89 00:06:23,040 --> 00:06:24,680 நாம் இறக்கும் போது, இறப்போம். 90 00:06:25,440 --> 00:06:26,560 அவ்வளவுதான். 91 00:06:29,880 --> 00:06:31,400 ஆங்கிலத்தில் சொல்வாங்க, 92 00:06:32,280 --> 00:06:35,520 "கோட்பாட்டில் எல்லாமே சாத்தியமற்றது, 93 00:06:36,080 --> 00:06:37,040 "செய்யப்படும்வரை. " 94 00:06:38,120 --> 00:06:40,720 உளவியலாளராக, உங்களுக்கே தெரிந்திருக்கும் 95 00:06:40,800 --> 00:06:45,360 சாத்தியமற்றதுக்குகூட சாத்திய இடைவெளியை அறிவியல் ஆராய்ச்சி தருகிறது. 96 00:06:47,320 --> 00:06:51,040 ஆனால் அதை கண்களால் பார்க்கும்போதுதான் நம்புவீங்க. 97 00:06:53,720 --> 00:06:56,800 அப்படீன்னா டீன் வ்யாஸோட ஆத்மாவை பார்த்திருக்கீங்களா? 98 00:06:58,200 --> 00:07:01,880 நான் பார்த்ததை என்னால் விளக்க முடியவில்லை, 99 00:07:01,960 --> 00:07:03,320 புரிந்து கொள்ளவும் இல்லை 100 00:07:03,400 --> 00:07:04,520 ஆனால் இன்று, 101 00:07:04,600 --> 00:07:06,560 உங்க வகுப்பில் நடந்தது... 102 00:07:06,640 --> 00:07:09,080 ஒரு மாணவன் தானே காம்பஸால் குத்திக் கொண்டான். 103 00:07:09,680 --> 00:07:14,480 நாமும் கூட சுத்திகரிப்பு சடங்குகள் செய்யாமல் காலில் சுட்டுக்கறோம். 104 00:07:15,160 --> 00:07:17,080 நினாத் ராமன், 2007. 105 00:07:19,800 --> 00:07:21,640 இந்த பெயர்தான்னு உறுதியா? 106 00:07:21,720 --> 00:07:23,840 நிச்சயமா, மேடம். அதே பேருத்தான். 107 00:07:25,240 --> 00:07:26,840 சர்வர் டவுன் ஆயிடுச்சு போல. 108 00:07:29,080 --> 00:07:31,760 ஆனால் மாணவர்கள் பதிவுகளில் ஏதாவது கோப்பிருக்கணுமே. 109 00:07:31,840 --> 00:07:32,840 ஆமாம், இருக்கு. 110 00:07:32,920 --> 00:07:36,680 2010 பேட்சுக்கு முந்தையதெல்லாம் காப்பக அறையில் இருக்கு. 111 00:07:37,240 --> 00:07:38,960 நிர்வாகி இன்று பிஸி. 112 00:07:39,600 --> 00:07:41,400 ஊழியர்கள் நிகழ்ச்சி செய்யறாங்கலே. 113 00:07:42,200 --> 00:07:43,040 நன்றி. 114 00:07:49,400 --> 00:07:50,480 பாப்போம். பை. 115 00:07:53,800 --> 00:07:57,120 பழைய கோப்புகளில் முகவரியோ தொலைபேசி எண்ணோ கிடைக்கலாம். 116 00:07:57,200 --> 00:08:01,200 2010க்கு முந்தைய பதிவுகள் காப்பக அறையில் இருப்பதா நிர்வாகி சொன்னாங்க. 117 00:08:01,760 --> 00:08:04,360 ஆனால் எல்லாரும் நாடகத்தில் பிஸி. அதனால... 118 00:08:06,600 --> 00:08:07,560 என்னஆச்சு? 119 00:08:08,720 --> 00:08:09,800 நேற்றிரவு, 120 00:08:11,240 --> 00:08:13,960 பயந்த வேதாந்த் தனியா உட்கார்ந்திருந்ததை... 121 00:08:14,760 --> 00:08:17,960 டைனிங் ஹால்ல பார்த்தேன். சாப்பிடாம, யாருடணும் பேசாம. 122 00:08:20,360 --> 00:08:21,800 எனக்கு நினாத் நினைவு வந்தது. 123 00:08:23,760 --> 00:08:24,840 ஷேடோ பாய். 124 00:08:26,960 --> 00:08:28,520 அவனுக்காகத்தான் வந்தேன். 125 00:08:30,880 --> 00:08:34,040 ஆனால் என்னாலத்தான் அவன் இங்கே வரலைன்னு நினைக்கிறேன். 126 00:08:35,160 --> 00:08:39,280 சுப்ரியா, உங்க வாழ்க்கையின் பெரிய தவறை சரி செய்யும் வாய்ப்பு கிடைத்தால்? 127 00:08:40,520 --> 00:08:42,880 நினாதிடம் பேசுவதுதான் எனக்கு அந்த வாய்ப்பு. 128 00:08:44,480 --> 00:08:45,400 ப்ளீஸ் உதவுங்க. 129 00:08:47,840 --> 00:08:48,720 ப்ளீஸ். 130 00:08:49,200 --> 00:08:50,360 அவன் முழு பெயரென்ன? 131 00:08:51,480 --> 00:08:52,600 நினாத் ராமன். 132 00:09:02,520 --> 00:09:04,600 மீண்டும் செய்தீங்க, இல்லையா? 133 00:09:05,720 --> 00:09:06,720 என்ன? 134 00:09:07,480 --> 00:09:09,720 உணர்ச்சிப்பூர்வமா என்னையும் மடக்கிட்டீங்க. 135 00:09:09,760 --> 00:09:11,320 பரவாயில்லையே. போலாம். 136 00:09:12,400 --> 00:09:13,480 நன்றி. 137 00:09:14,040 --> 00:09:15,040 சார்த்தக்! 138 00:09:15,720 --> 00:09:17,000 ஹேய், சார்த்தக். 139 00:09:17,520 --> 00:09:20,000 துருவுக்கு உள்ளே கட்டு போடறாங்க. போ! 140 00:09:32,200 --> 00:09:34,400 மிஸ், துருவ் அதை செய்யலை. 141 00:09:45,160 --> 00:09:46,240 சார்த்தக், என்ன.. 142 00:09:50,000 --> 00:09:53,160 மருத்துவர் உன்னை மாலை பார்ப்பார். சரியா? ஓய்வெடு. 143 00:09:57,400 --> 00:09:59,200 மருத்துவமனை 144 00:10:20,040 --> 00:10:21,040 சுயாஷ்! 145 00:10:27,080 --> 00:10:28,080 சே! 146 00:10:28,640 --> 00:10:30,160 டூட், என்னடா? 147 00:10:30,240 --> 00:10:32,440 இப்ப மக்களை தாழ்வாரத்தில் பயமுறுத்தறியா? 148 00:10:32,520 --> 00:10:33,760 -என்ன? -வளருப்பா! 149 00:10:34,320 --> 00:10:36,640 -அருவருப்பு. -ஏன் இவ்வளவு கோபம்? 150 00:10:37,280 --> 00:10:39,040 சரியான பாப்பா. 151 00:10:47,520 --> 00:10:48,520 சுயாஷ்! 152 00:11:09,440 --> 00:11:10,640 எங்கே அவன்? 153 00:11:16,280 --> 00:11:17,320 குட் மார்னிங். 154 00:11:17,400 --> 00:11:21,760 இன்று உங்க ஆசிரியர்கள் உங்களுக்கு ஒரு நாடகம் வழங்குவாங்க. 155 00:11:22,480 --> 00:11:26,200 நாடகத்தின் பெயர் நாம தோற்றால்? 156 00:11:26,280 --> 00:11:27,440 நீலகிரி வேலி ஸ்கூல் 157 00:11:27,520 --> 00:11:29,840 இனியும் காத்திருக்க வேண்டாம். 158 00:11:29,920 --> 00:11:31,320 நாம தொடங்குலாம். 159 00:11:31,400 --> 00:11:33,680 ஹேய், சோமு சந்திரா ஆங்கிலத்திலே பேசறார். 160 00:11:35,240 --> 00:11:38,480 இவை உன் வரிகள். பிறகு நான் வந்து இதை சொல்வேன். 161 00:11:38,560 --> 00:11:40,600 கைஸ், நான் சோர்ந்துட்டேன். 162 00:11:42,080 --> 00:11:43,400 எல்லா டார்மிலும் தேடினேன். 163 00:11:43,880 --> 00:11:46,520 சுயாஷை காணலை. அவன் எங்கேன்னு எனக்கு தெரியலை. 164 00:11:48,000 --> 00:11:50,120 நீ என்ன சொல்றே? 165 00:11:50,200 --> 00:11:51,800 இதைப்பாரு, என்ன நடக்குது? 166 00:11:51,880 --> 00:11:53,920 -தேவ், ப்ளீஸ்? -நான் அழைக்கிறேன். 167 00:11:54,000 --> 00:11:55,160 பாரு. மாலு. 168 00:11:55,600 --> 00:11:57,880 அது மோசமா இருக்கு. அவனிடம் காட்டு. 169 00:11:58,400 --> 00:11:59,920 -பாரு. -முதலில் கையை கழுவு. 170 00:12:00,000 --> 00:12:01,040 சே! 171 00:12:01,360 --> 00:12:02,240 இவன்... 172 00:12:02,320 --> 00:12:05,200 -நெட்வர்க் பிரச்சினை. -நேன்ஸி பின்னே போயிருப்பான். 173 00:12:05,280 --> 00:12:06,880 நமக்கு சொல்லியிருக்கலாமே. 174 00:12:06,960 --> 00:12:08,960 ஹோ! பழைய மாள்விகா வந்துட்டா. 175 00:12:09,040 --> 00:12:11,040 ஹேய்! நிதானி. 176 00:12:11,560 --> 00:12:12,400 மாள்விகா. 177 00:12:12,960 --> 00:12:15,560 யாராவது சுயாஷுக்கு பதில் நடிக்க முடியுமா? 178 00:12:18,360 --> 00:12:19,360 யாராவது உண்டா? 179 00:12:31,120 --> 00:12:32,080 நான் சொன்னேலே, 180 00:12:32,760 --> 00:12:35,000 இதுக்கு குழு முயற்சி தேவை. ! 181 00:12:35,840 --> 00:12:37,600 கடவுளே! இதுல லேபிள் கூட இல்லை. 182 00:12:38,000 --> 00:12:40,960 எல்லாரும் நாடகத்தில் பிஸியா இருக்காங்களே. 183 00:12:41,640 --> 00:12:42,800 எங்கே தொடங்கணும்? 184 00:12:44,600 --> 00:12:46,360 நான் இங்கே தொடங்கறேன். 185 00:12:46,440 --> 00:12:47,920 நீங்க ஏன் நாடகத்தில் இல்லை? 186 00:12:48,440 --> 00:12:51,880 ஆசிரியர்கள் அறையில் இரண்டு நிமிடம் இருந்தா தலை வலிக்கும். 187 00:12:52,440 --> 00:12:53,920 அவங்களோட நாடகமா? 188 00:12:54,400 --> 00:12:56,880 நீலகிரி வேலி பள்ளியின் ரசிகை இல்லையா? 189 00:12:57,920 --> 00:12:59,800 ஓல்ட் பாய்ஸ் போலில்லை. 190 00:13:01,440 --> 00:13:03,960 நீங்க பள்ளியை பற்றி உயர்வா பேசறீங்க. 191 00:13:04,040 --> 00:13:06,000 இங்கே எல்லாம் சரியா இருக்கிற மாதிரி. 192 00:13:07,680 --> 00:13:11,520 உலகிலிருந்து தள்ளி, மலை மீது, இவ்வளவு குளிரில். 193 00:13:11,640 --> 00:13:14,120 ஊழியர்களின் அதிக பிரசங்க பேச்சு வேற. 194 00:13:14,800 --> 00:13:17,720 பேய்கள், ஆவிகள், சடங்குகள்.. 195 00:13:19,160 --> 00:13:20,160 ஆதிராஜ்? 196 00:13:32,920 --> 00:13:34,040 ஆதிராஜ்? 197 00:13:41,760 --> 00:13:42,880 ஆதிராஜ்! 198 00:13:51,400 --> 00:13:52,360 ஆதிராஜ்! 199 00:13:57,920 --> 00:13:58,800 பூ! 200 00:14:03,880 --> 00:14:04,960 பயமுறுத்திட்டீங்க! 201 00:14:05,560 --> 00:14:08,560 முட்டாள் ஆசிரியர்கள்தானே பேய்களுக்கு பயப்படுவாங்க. 202 00:14:10,200 --> 00:14:11,280 இது சும்மா 203 00:14:11,840 --> 00:14:14,400 பழைய வேடிக்கையான நீல்கிரி வேலி பள்ளி குறும்பு. 204 00:14:14,480 --> 00:14:17,960 இந்த குறும்புகளாலதான் போர்டிங் பள்ளிகளில் ஆலோசகர்கள் தேவை. 205 00:14:18,760 --> 00:14:21,000 நம்ம குழந்தை பருவ துயரங்களை மறப்பதே இல்லை. 206 00:14:22,120 --> 00:14:25,600 பெரியவங்க குழந்தைப்பருவ வடுக்களை குணப்படுத்த உளவியலாளர்களிடம் போவோம். 207 00:14:27,600 --> 00:14:30,200 என்னைவிட இது யாருக்கும் நல்லா தெரியாது. 208 00:14:32,160 --> 00:14:34,080 என் பெற்றோரை 10 வயதில் இழந்தேன். 209 00:14:37,800 --> 00:14:38,920 வருந்தறேன். 210 00:14:42,000 --> 00:14:43,200 என்னைபற்றி போதும். 211 00:14:44,160 --> 00:14:48,160 நீங்க ஏன் இங்கிருக்கீங்க, உலகிலிருந்து தள்ளி, இந்த குளிரில், 212 00:14:48,720 --> 00:14:50,560 பள்ளிக்கு ஆலோசகரா? 213 00:14:51,280 --> 00:14:53,080 யாரிடமிருந்து ஓடறீங்க? 214 00:14:57,680 --> 00:15:00,240 மன்னிக்கணும், மனசை புண்படுத்திட்டேனா? 215 00:15:01,480 --> 00:15:02,480 இல்லை. 216 00:15:04,320 --> 00:15:05,440 என் மகன், அபி, 217 00:15:06,760 --> 00:15:08,080 அவனுக்கு ஐந்து வயது. 218 00:15:09,440 --> 00:15:10,920 அவன் அப்பாவோட இருக்கான். 219 00:15:12,960 --> 00:15:17,400 பொருளாதார சக்தி இருப்பதாக நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாமல் பொருப்பை இழந்தேன். 220 00:15:17,880 --> 00:15:19,200 இந்த வேலையோடு... 221 00:15:20,080 --> 00:15:21,640 மகனை அடிக்கடி பாப்பீங்களா? 222 00:15:28,080 --> 00:15:29,200 அடிக்கடி இல்லை. 223 00:15:32,680 --> 00:15:34,480 வாங்க, அந்த கோப்பை தேடுவோம். 224 00:16:06,600 --> 00:16:08,280 ராமன் நினாத் பேட்ச் 2007 225 00:16:14,880 --> 00:16:15,760 அலும்னை விவரங்கள் 226 00:16:29,120 --> 00:16:31,040 பொருள்: விடுப்பு விண்ணப்பம் 227 00:16:33,440 --> 00:16:34,400 அதிர்ஷ்டம் இல்லை. 228 00:16:37,840 --> 00:16:39,240 ஏதாவது கிடைச்சுதா? 229 00:16:41,960 --> 00:16:43,480 -கிடைச்சாச்சு. -நிஜமாவா? 230 00:16:50,480 --> 00:16:54,560 தற்போதைய முகவரி, ராமன் கஃபே. ஆனால் 2007லிருந்து இதை புதுப்பிக்கலை. 231 00:16:54,640 --> 00:16:56,480 ரமன் கஃபே பல வருடங்களா மூடியிருக்கு. 232 00:16:57,160 --> 00:16:59,080 இரண்டாம் முகவரி கோத்தகிரி. 233 00:17:00,000 --> 00:17:03,400 அவன் தாத்தா பாட்டி வீடு. விடுமுறையில் பாக்க போவான். 234 00:17:03,920 --> 00:17:06,200 அவங்களுக்கு நினாதை பற்றி தெரிஞ்சிருக்கலாம். 235 00:17:07,240 --> 00:17:10,160 அல்லது நினாதை அங்கே பாக்கலாம். 236 00:17:13,320 --> 00:17:15,400 கோத்தகிரி ஒரு மணி நேர தூரம்தான். 237 00:17:17,680 --> 00:17:18,520 ஆமாம். 238 00:17:24,240 --> 00:17:26,720 நாம தோற்றால்? 239 00:17:28,560 --> 00:17:33,400 சவுஹான் லான்ஸில் மாலை 5 மணிக்கு பார்ப்போம் டீன் வியாஸ் சிலையை திறந்து வைக்க. 240 00:17:33,480 --> 00:17:34,680 மிக்க நன்றி. 241 00:17:40,920 --> 00:17:43,080 வாங்க, கைஸ், கடைசி இரவு. நாம குடிக்கலாம். 242 00:17:43,200 --> 00:17:44,560 -ஆனா-- -வா! 243 00:17:44,680 --> 00:17:46,960 ஹேய்! உனக்கு விஸ்கி ஆன் த ராக்ஸ் தரேன். 244 00:17:47,040 --> 00:17:48,320 -உறுதியாவா? -வா. 245 00:17:48,960 --> 00:17:51,080 சீக்கிரம். அவன் இலவசமா விஸ்கி தர்றான்! 246 00:17:52,440 --> 00:17:53,280 ஹேய். 247 00:17:53,320 --> 00:17:54,760 விளையாட்டா ஒரு நாடகம். 248 00:17:55,440 --> 00:17:56,280 பெரிய விஷயமா? 249 00:17:57,000 --> 00:18:00,160 "விளையாட்டு". நாடகம் விளையாட்டு, நானும் விளையாட்டு, இல்ல? 250 00:18:00,800 --> 00:18:02,280 நான் அப்படி சொல்லலை. 251 00:18:03,040 --> 00:18:04,800 நீ அப்படித்தான் சொன்னே. 252 00:18:04,920 --> 00:18:07,720 இங்கே வந்திருக்கவே கூடாது. ஏன் கூட்டிட்டு வந்தே? 253 00:18:07,800 --> 00:18:09,680 ட்ரஸ்டி, உன்னை சந்திக்க வந்தாங்க. 254 00:18:09,760 --> 00:18:12,200 -நான் இங்க முக்கியம் இல்லை. -சரி, நான்-- 255 00:18:12,320 --> 00:18:16,760 இப்ப என்னால முடியாது. டீன் சுவாமியை சந்திக்கணும். பிறகு பேசறேன். சரியா? 256 00:18:27,040 --> 00:18:28,320 தேவ், என்னை விடு. 257 00:18:39,000 --> 00:18:40,480 தேவ், நான் சொன்னேன்-- 258 00:19:45,160 --> 00:19:46,920 சாரி! நல்லாருக்கீயா? 259 00:19:48,440 --> 00:19:50,400 என்ன ஆச்சு? பயந்திருக்கே. 260 00:19:51,560 --> 00:19:52,960 நீ நலமா, மாள்விகா? 261 00:19:56,320 --> 00:19:57,760 உன்னிடமும் குறும்பா? 262 00:20:03,520 --> 00:20:04,720 குறும்பு செஞ்சாங்களா? 263 00:20:05,320 --> 00:20:06,320 அதுவா இருக்கும். 264 00:20:08,080 --> 00:20:09,400 இவனுங்க இருக்காங்களே... 265 00:20:10,280 --> 00:20:11,280 நீ எங்கிருந்தே? 266 00:20:11,320 --> 00:20:13,280 ஏன் உன் ஃபோனை எடுக்கலை? 267 00:20:13,320 --> 00:20:15,080 பள்ளி கடைசி நாள் நினைவிருக்கா? 268 00:20:17,520 --> 00:20:18,760 இந்த கடிதத்தை பார். 269 00:20:19,960 --> 00:20:21,320 இது நினாத் கையெழுத்து. 270 00:20:22,040 --> 00:20:26,520 அவங்க தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை, அவன் பெற்றோர் அவனை அன்றிரவு 271 00:20:26,560 --> 00:20:30,560 பஸ்ஸில் கோத்தகிரி அனுப்பும்படி கேட்டதாக எழுதியிருக்கான். 272 00:20:30,640 --> 00:20:32,240 அங்கே அவங்க கூட்டிப்பாங்க. 273 00:20:32,320 --> 00:20:35,080 கோச் வியாஸ்தான் அவனை பஸ் ஏத்தி விடறதா இருந்தது. 274 00:20:35,200 --> 00:20:39,200 அந்த கடிதத்தில் கையெழுத்திட்டு, முத்திரையிட்டு அவனை கூட்டிக்கிட்டார். 275 00:20:39,280 --> 00:20:41,760 அவர் நினாத் பெற்றோரிடம் பேசினதா சொல்லுது. 276 00:20:41,800 --> 00:20:43,200 அப்ப என்ன பிரச்சினை? 277 00:20:43,280 --> 00:20:46,560 தாத்தாவுக்கு சுகமில்லைன்னா, என்னிடம் சொல்லியிருப்பான். 278 00:20:46,640 --> 00:20:49,320 ஆமாம், ஆனால் சொல்லலை. நீங்க சண்டை போட்டீங்கல்ல? 279 00:20:50,280 --> 00:20:52,800 எங்க தாத்தாவை அழைச்சிருந்தா கார் அனுப்பியிருப்பார். 280 00:20:52,920 --> 00:20:57,400 அவன் பெற்றோர் கஃபே உரிமையாளர்கள். உங்க தாத்தா உயர் அதிகாரி. 281 00:20:57,480 --> 00:21:00,080 அவர் உதவியை கேட்க அவங்க தயங்கியிருக்கலாம். 282 00:21:00,160 --> 00:21:02,280 -அர்த்தமாகலை. -ஆகுது. 283 00:21:03,560 --> 00:21:05,800 அவன் கையெழுத்து, ஆதி. 284 00:21:07,280 --> 00:21:09,240 இதில் என்ன ஏற்றுக்கொள்ள முடியலை? 285 00:21:10,160 --> 00:21:13,200 அவன் பை சொல்லாம கிளம்பிட்டான்னா? உன்னை மறந்துட்டான்னா? 286 00:21:13,960 --> 00:21:16,040 அல்லது உன்னை சந்திக்க இங்கே வரலைன்னா? 287 00:21:18,800 --> 00:21:21,280 நீ எனக்கு செஞ்சதெல்லாம் இல்லே? 288 00:21:26,560 --> 00:21:28,240 வேடிக்கை என்னென்னா? 289 00:21:29,280 --> 00:21:33,320 15 வருஷம் முன்னால நான் உன்னிடமிருந்து பிரிஞ்ச அதே இடத்தில் நிக்கறோம், 290 00:21:35,760 --> 00:21:39,320 ஏன்னா உறவில் தேவையில்லாதவன் அவன் இல்லைனு உணர்ந்தேன். 291 00:21:42,760 --> 00:21:43,880 அது நான்தான். 292 00:21:48,880 --> 00:21:50,080 மன்னிச்சிடு, மாள்விகா. 293 00:21:53,600 --> 00:21:54,800 ஆனா... 294 00:21:57,360 --> 00:21:58,880 இது எனக்கு முக்கியம். 295 00:22:00,240 --> 00:22:01,320 நான்... 296 00:22:05,520 --> 00:22:06,640 நான் கோத்தகிரி போறேன். 297 00:22:13,720 --> 00:22:15,080 இன்றிரவு வந்துடுவேன். 298 00:22:26,760 --> 00:22:31,240 கோத்தகிரி 299 00:22:52,520 --> 00:22:54,520 -நாம செய்த விநியோகம்-- -ராமன் அங்கிள்! 300 00:23:08,640 --> 00:23:09,640 ஆதிராஜ்? 301 00:23:10,120 --> 00:23:11,120 ஹேய்! 302 00:23:13,120 --> 00:23:14,560 எப்படி இருக்கேப்பா? 303 00:23:15,320 --> 00:23:16,600 ரொம்ப நாளாச்சு! 304 00:23:18,680 --> 00:23:21,400 அங்கிள், நினாத் எங்கே? அவனை சந்திக்கவே வந்தேன். 305 00:23:22,600 --> 00:23:23,600 அவன் எங்கே? 306 00:23:24,760 --> 00:23:25,800 உனக்கு தெரியாதா? 307 00:23:27,400 --> 00:23:28,320 நினாத்... 308 00:23:30,080 --> 00:23:32,600 காணாம போய் 1 5 வருஷமாச்சுப்பா. 309 00:23:37,480 --> 00:23:38,720 காணாம போயிட்டானா? 310 00:23:39,400 --> 00:23:42,320 அன்னிக்கி உனக்கும் நினாதுக்கும் காத்திருந்தோம். 311 00:23:43,400 --> 00:23:45,960 தாமதம் ஆனதும், உங்க தாத்தாவை அழைச்சோம். 312 00:23:46,840 --> 00:23:50,200 நீ வீட்டுக்கு வந்துட்டே, ஆனா கோபமா இருந்தேனு சொன்னார். 313 00:23:50,280 --> 00:23:52,920 ஏன்னா நினாத் பை சொல்லாம கிளம்பிட்டான். 314 00:23:54,480 --> 00:23:55,800 அதனால பள்ளியை அழைச்சோம். 315 00:23:56,280 --> 00:23:58,040 நினாத் எங்கேன்னு கேட்டோம். 316 00:23:58,120 --> 00:24:00,720 ஆனா எங்களை கத்த ஆரம்பிச்சாங்க. 317 00:24:02,480 --> 00:24:06,000 "நினாத் தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை, அவசரமாக கோத்தகிரி 318 00:24:06,080 --> 00:24:08,800 "போகணும். நினாதை கோத்தகிரி பஸ்ஸில் ஏத்தி விடுங்க, 319 00:24:08,880 --> 00:24:13,080 "அங்கே அழைச்சுக்கறோம்னு நீங்க அழைச்சு சொன்னீங்க. " 320 00:24:13,160 --> 00:24:15,560 நினாதிடமிருந்து கடிதம் கூட காட்டினாங்க. 321 00:24:16,920 --> 00:24:18,080 இந்த கடிதமா பாருங்க? 322 00:24:22,080 --> 00:24:24,480 இன்னும் இந்த கடிதம் எனக்கு புரியலை. 323 00:24:25,480 --> 00:24:27,320 இது நினாத் கையெழுத்து. 324 00:24:27,400 --> 00:24:29,240 ஆனா ஏன் நினாத் இதை எழுதணும்? 325 00:24:31,400 --> 00:24:33,520 தாத்தா உடம்பு சரியில்லாம இல்லை. 326 00:24:34,000 --> 00:24:35,600 அப்படி இருந்திருந்தாலும், 327 00:24:35,680 --> 00:24:37,640 நினாத் இல்லாம ஏன் கிளம்ப போறோம்? 328 00:24:38,920 --> 00:24:41,920 நீங்க வ்யாஸை அவனுக்கு பாதுகாவலரா போடவே மாட்டீங்க. 329 00:24:42,000 --> 00:24:42,960 ஒரு போதுமில்லை. 330 00:24:44,000 --> 00:24:47,080 தாத்தாவுக்கு எல்லாமே தெரிஞ்சும் என்னிடம் சொல்லலை. 331 00:24:48,640 --> 00:24:50,640 இத்தனை வருடங்கள் என்னிடம் சொல்லலை. 332 00:24:51,120 --> 00:24:52,120 ஏன்? 333 00:24:52,200 --> 00:24:56,200 ஆதிராஜ், நீ சின்ன வயசிலேயே நிறைய இழந்துட்டே. 334 00:24:56,840 --> 00:24:59,920 நினாதின் இழப்பு உன்னை முழுசா உடைச்சிருக்கும். 335 00:25:06,400 --> 00:25:08,040 எப்படி அப்படியே காணாம போவான்? 336 00:25:09,400 --> 00:25:11,840 பள்ளியில் யாருக்கும் எதுவும் தெரியலை. 337 00:25:11,920 --> 00:25:14,480 நீங்க ஏன் விசாரணை கேக்கலை? 338 00:25:15,040 --> 00:25:16,160 கேட்டோம்! 339 00:25:17,200 --> 00:25:19,000 எல்லாமே செய்தோம், ஆதிராஜ். 340 00:25:20,440 --> 00:25:23,240 போலீஸ் எஸ்எஸ்பி அனில் ஜோஷியை வழக்கில் போட்டாங்க. 341 00:25:23,840 --> 00:25:28,960 எஃப்ஐஆர், காணாமல் போனவர் அறிக்கை. ஊட்டி முழுக்க, என் மகன் படத்தை ஒவ்வொரு சுவரிலும் 342 00:25:29,040 --> 00:25:30,480 நடந்தே போய் ஒட்டினேன். 343 00:25:31,600 --> 00:25:33,520 நினாத் ஏறின பஸ் ஓட்டுனரிடமும் 344 00:25:34,520 --> 00:25:36,320 நாங்க பேசினோம். 345 00:25:37,560 --> 00:25:41,480 நினாத் கோத்தகிரிக்கு சில நிறுத்தங்கள் முன்பே இறங்கினதா சொன்னார். 346 00:25:42,720 --> 00:25:45,720 பிறகு அவனை நிறுத்த முயன்றப்ப வன்முறைக்கு மாறினானாம். 347 00:25:46,840 --> 00:25:48,960 பள்ளியிலும் விசாரிச்சாங்க. 348 00:25:49,520 --> 00:25:54,000 கோச் வ்யாஸை கூட விசாரிச்சாங்க. ஆனால் அவர் இந்த கடிதத்தை காட்டினார். 349 00:25:55,800 --> 00:25:57,320 போலீஸ் அவரை நம்பியது. 350 00:25:58,840 --> 00:26:03,120 பிறகு, தினமும் வந்து பிரச்சினை பண்றதை நிறுத்தும்படி பள்ளியில் சொன்னாங்க. 351 00:26:03,960 --> 00:26:06,520 பள்ளி கொடுத்த அழுத்தத்தினால், 352 00:26:06,600 --> 00:26:08,720 போலீஸ்கூட நினாத் வழக்கை மூடிடுச்சு. 353 00:26:09,800 --> 00:26:12,400 நினாத் காணாமல் போகலைன்னு சொன்னாங்க. 354 00:26:14,280 --> 00:26:15,560 அவன் ஓடி போயிட்டானாம். 355 00:26:16,600 --> 00:26:18,640 முடிஞ்சதை எல்லாம் செய்தோம். 356 00:26:19,800 --> 00:26:21,600 பணத்தை எல்லாம் இதில் போட்டோம். 357 00:26:22,400 --> 00:26:24,080 ராமன் கஃபேயும் வித்தோம். 358 00:26:26,120 --> 00:26:28,480 ஆனால் எனக்கு இன்னும் ஒரு விஷயம் புரியலை. 359 00:26:28,600 --> 00:26:31,000 அன்று நினாதுக்கு என்ன ஆச்சு, 360 00:26:32,440 --> 00:26:35,680 எங்களை விட்டு ஓடும் அளவு? 361 00:27:24,360 --> 00:27:28,920 படங்கள் உங்களை 50 நொடிகளில் படம்பிடிங்க 362 00:27:38,600 --> 00:27:40,440 -வந்து படம் எடுத்துக்கோ. -ஆது! 363 00:27:41,000 --> 00:27:42,680 -அப்புறம் எடுத்துக்கலாம். -ஏன்? 364 00:27:42,760 --> 00:27:45,000 உன்னை 2 மணிக்கு லிங்ஸ் கூட்டிப் போகணும். 365 00:27:45,080 --> 00:27:45,920 ஆனா ஏன்? 366 00:27:46,000 --> 00:27:47,040 பள்ளியின் கடைசி நாள் 367 00:27:47,120 --> 00:27:50,080 பாரு, நான் ஏதாவது சொன்னா, உன் காதலி என்னை கொன்னுடுவா. 368 00:27:51,360 --> 00:27:52,760 எவ்வளவு பாஸின்னு தெரியுமே. 369 00:27:53,240 --> 00:27:55,600 அவ ஆச்சரிய டேட் திட்டமிட்டிருக்கா. 370 00:27:55,680 --> 00:27:58,040 உன் பரிசுக்கு என்னை ரிப்பன்கூட வாங்க வெச்சா. 371 00:27:59,080 --> 00:27:59,960 சே! 372 00:28:00,560 --> 00:28:03,880 நிறைய சொல்லிட்டேன். அவளை பாக்கும் போது ஆச்சரியமா நடி. 373 00:28:04,960 --> 00:28:05,880 நினாத். 374 00:28:07,520 --> 00:28:09,560 நானும் கஷ்டமா உணரணும்லே? 375 00:28:09,640 --> 00:28:11,800 மாள்விகாவை விட்டு நான் போறதால? 376 00:28:12,760 --> 00:28:14,320 அதாவது, ஐ லவ் ஹர். 377 00:28:15,640 --> 00:28:18,680 ஆனா, அவ அளவுக்கு ஏன் சோகமா உணரலை? 378 00:28:21,520 --> 00:28:22,520 ஆது, 379 00:28:23,760 --> 00:28:25,680 கிளம்பறவங்க சோகமா ஆக மாட்டாங்க. 380 00:28:26,520 --> 00:28:28,560 விடப்படறவங்களுக்குத் தான் அது. 381 00:28:31,200 --> 00:28:33,680 நீ சோகமா ஆக வேண்டிய தேவை இல்லை, ப்ரோ. 382 00:28:34,760 --> 00:28:37,080 ஏற்கனவே போதுமான அளவு சோகம் அனுபவிச்சாச்சு. 383 00:28:37,760 --> 00:28:39,800 இப்ப நீ மகிழ்ச்சியா இருக்கணும். 384 00:28:40,320 --> 00:28:42,120 அமெரிக்கால போய் பார்ட்டி பண்ணு. 385 00:28:43,400 --> 00:28:44,560 உன்னை மிஸ் பண்ணுவேன். 386 00:28:45,080 --> 00:28:46,200 என்னை பாக்க வருவியா? 387 00:28:46,280 --> 00:28:49,160 -நிச்சயமா, எனக்கு டிக்கட் வாங்குவேல்ல? -போடா! 388 00:28:49,240 --> 00:28:52,160 உன் க்ராஃபிக் நாவல் பயங்கரமா சம்பாதிக்கும். 389 00:28:52,240 --> 00:28:53,720 உன் ப்ளேனை வாங்கிட்டு வா. 390 00:28:56,040 --> 00:28:58,400 வா, இன்னும் கொஞ்சம் நேரமிருக்கு. 391 00:28:59,960 --> 00:29:02,160 நாம எப்போ சந்திப்போம்னு தெரியாது. 392 00:29:03,600 --> 00:29:06,040 குறைந்து, இப்படி உன் முகமாவது நினைவிருக்கும். 393 00:29:06,120 --> 00:29:07,640 ரொம்ப யோசிக்காதே, வா! 394 00:29:12,720 --> 00:29:13,920 வா! 395 00:30:11,280 --> 00:30:12,680 ஆது, நில்லு! 396 00:30:12,760 --> 00:30:15,080 -பாரு. -நீ என்னை முத்தமிட்டியா? 397 00:30:16,160 --> 00:30:17,960 உனக்கென்ன பிரச்சினை? 398 00:30:18,520 --> 00:30:20,640 ஆது, இங்கே பிரச்சினை பண்ண வேண்டாம். 399 00:30:21,320 --> 00:30:22,160 ஓ, கடவுளே. 400 00:30:24,520 --> 00:30:25,600 ஆது, சொல்றதை கேளு! 401 00:30:26,560 --> 00:30:27,880 சொல்றதை கேளு, ப்ளீஸ். 402 00:30:27,960 --> 00:30:29,440 ஆது, நான் செய்ய நினைக்கலை... 403 00:30:30,280 --> 00:30:32,720 ஆது, செய்ய நினைக்கலை. நான் சொல்றதை கேளு! 404 00:30:32,800 --> 00:30:33,880 ஆது, சொல்றதை கேளு. 405 00:30:34,360 --> 00:30:35,320 ஆது! 406 00:30:35,400 --> 00:30:37,320 -ஆதி! -ஆது, சொல்றதை கேளு, ப்ளீஸ். 407 00:30:39,080 --> 00:30:40,040 நினாத். 408 00:30:40,120 --> 00:30:42,680 மாள்விகா, சாரி. சத்தியமா இதை சரி பண்றேன். 409 00:30:42,760 --> 00:30:43,800 ஆது! 410 00:30:46,760 --> 00:30:48,080 ஆது, சொல்றதை கேளு! 411 00:30:50,040 --> 00:30:51,000 ஆது. 412 00:30:51,080 --> 00:30:54,360 ஆது, என்னை விளக்க விடு. சொல்றதையாவது கேளு. மன்னிச்சிடு, ஆது. 413 00:30:54,880 --> 00:30:55,760 ஆது! 414 00:31:00,600 --> 00:31:01,760 ஹேய், ஹோமோ! 415 00:31:05,080 --> 00:31:07,200 -ஆது, ப்ளீஸ்! -எப்படி பண்ணே, நினாத்? 416 00:31:07,960 --> 00:31:09,720 நீ என் நண்பன்னு நினைச்சேன். 417 00:31:09,800 --> 00:31:12,480 இவ்வளவு நாளா.. 418 00:31:15,400 --> 00:31:16,520 ஆது, ப்ளீஸ் கேளு. 419 00:31:17,200 --> 00:31:18,520 ஆது, விளக்க விடு! 420 00:31:18,600 --> 00:31:22,280 இப்ப நான் உரையாற்றணும், எனக்கு சங்கடமா இருக்கு! 421 00:31:24,080 --> 00:31:25,640 என் உரையை எங்கே வெச்சேன்? 422 00:31:29,200 --> 00:31:30,440 எங்கே அது? 423 00:31:30,960 --> 00:31:33,320 எங்கே அது? என்னிடமிருந்து தள்ளி நில்லு! 424 00:31:34,480 --> 00:31:36,800 ஏன் செஞ்சே? என்ன நினைச்சுட்டு இருந்தே? 425 00:31:37,280 --> 00:31:39,320 -ஏன் கடைசி நாள்ல? -அதனாலத்தான். 426 00:31:40,400 --> 00:31:43,440 நாம திரும்ப சந்திக்க மாட்டோமோன்னு திடீர்னு புரிஞ்சுது. 427 00:31:44,320 --> 00:31:48,240 நான் எப்படி உணர்றேன்னு தெரியாம உன்னை போக விட முடியலை, ஆது. 428 00:31:49,200 --> 00:31:50,080 ஆது, சாரி, 429 00:31:50,160 --> 00:31:52,760 -ஒருவேளை முன்னால சொல்லியிருக்கணும்-- -ஒருவேளையா? 430 00:31:53,400 --> 00:31:54,720 ஒருவேளையா, நினாத்? 431 00:31:55,560 --> 00:31:57,160 உனக்கு புரியும்னு நினைச்சேன். 432 00:31:58,880 --> 00:32:01,800 -நீ இப்படி கிளம்ப-- -தள்ளி இரு, ஹோமோ! 433 00:32:10,840 --> 00:32:12,400 நீயும் மத்தவங்க மாதிரிதான். 434 00:32:14,720 --> 00:32:17,600 நாம மறுபடியும் சந்திக்க மாட்டோம்னு நினைச்சேன். 435 00:32:19,480 --> 00:32:20,480 ஆனால் இப்ப, 436 00:32:22,320 --> 00:32:23,600 வேண்டாம்னு நம்பறேன். 437 00:32:25,200 --> 00:32:26,160 நல்லது. 438 00:33:05,320 --> 00:33:06,880 நல்லா பாடுறாங்க. 439 00:33:20,080 --> 00:33:21,480 மாள்விகா, நான்-- 440 00:33:22,280 --> 00:33:23,480 தேவ், 441 00:33:23,560 --> 00:33:25,400 நான் அதெல்லாம் சொல்லியிருக்க கூடாது. 442 00:33:26,560 --> 00:33:29,440 விரும்பறேன்னு தெரியும். இல்லேன்னா இங்கிருக்க மாட்டேன். 443 00:33:31,360 --> 00:33:32,680 அதை பத்தி யோசிக்காதே. 444 00:33:40,120 --> 00:33:41,400 வானம்! 445 00:33:44,920 --> 00:33:46,400 திரு. ஜாம்வால், ப்ளீஸ். 446 00:33:47,600 --> 00:33:48,560 நன்றி. 447 00:34:17,440 --> 00:34:18,480 ரஜத். 448 00:34:30,640 --> 00:34:32,000 -சுயாஷ்! -சுயாஷ்! 449 00:34:32,080 --> 00:34:33,640 சுயாஷ், கீழே வா! 450 00:34:33,760 --> 00:34:35,120 சுயாஷ், கீழே வாடா! 451 00:34:35,640 --> 00:34:37,160 -சுயாஷ்! -கீழே வா! 452 00:34:38,200 --> 00:34:39,440 சுயாஷ்! 453 00:35:07,640 --> 00:35:10,160 பசங்களா! உள்ள போங்க! 454 00:35:10,280 --> 00:35:11,480 -ஆசிரியர்களே! -வாங்க! 455 00:35:43,000 --> 00:35:44,000 திரு. ஜாம்வால், 456 00:35:44,440 --> 00:35:46,640 -எஸ்எஸ்பி ஜோஷி பேச விரும்பறார். -நிச்சயமா. 457 00:35:47,200 --> 00:35:49,520 பரவாயில்லை. நான் இருக்கேன் உன்னோட. 458 00:36:02,120 --> 00:36:03,320 இது எப்படி நடந்தது? 459 00:36:03,800 --> 00:36:05,440 நாள் முழுக்க காணலை. 460 00:36:05,520 --> 00:36:07,280 நான்சி தேடி போயிருப்பானு இருந்தோம் 461 00:36:07,360 --> 00:36:08,840 மணி கூண்டில் இருந்திருக்கான். 462 00:36:09,640 --> 00:36:11,800 சாவியை பியோன்கிட்டேர்ந்து வாங்கினான். 463 00:36:11,880 --> 00:36:13,680 அங்கே குடிக்க விரும்பினான். 464 00:36:16,640 --> 00:36:20,000 நேற்றிரவு அவனிடம் அதை எல்லாம் சொல்லியிருக்க கூடாது. 465 00:36:20,600 --> 00:36:23,960 கொடுமை எப்படி இருக்கும்னு தெரியும். நான் அதை செய்தேன். 466 00:36:24,040 --> 00:36:25,400 அவனுக்கு மனஅழுத்தம்... 467 00:37:03,680 --> 00:37:06,760 எச் ஓ எம் ஓ 468 00:37:44,400 --> 00:37:45,360 சே. 469 00:37:48,400 --> 00:37:49,480 சே! 470 00:38:05,440 --> 00:38:06,640 வேதாந்த்! 471 00:38:15,160 --> 00:38:17,520 ஆது, நான் எதிர்த்து போராடறேன். 472 00:40:38,440 --> 00:40:40,440 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 473 00:40:40,520 --> 00:40:42,520 படைப்பு மேற்பார்வை நந்தினி ஸ்ரீதர்