1 00:00:06,000 --> 00:00:06,840 இத்தொடர் பொழுதுபோக்கிற்கு, கற்பனையே. 2 00:00:06,920 --> 00:00:07,760 பெயர்கள், இடங்கள் எழுத்தாளர் கற்பனையே. 3 00:00:07,840 --> 00:00:08,680 ஒற்றுமை தற்செயலானது. எந்த டயலாக்கிற்கும் யாரையும் 4 00:00:08,760 --> 00:00:09,600 புண்படுத்தும் நோக்கமில்லை. எல்ஜிபிடிக்யூஐஏ+ 5 00:00:09,680 --> 00:00:10,520 சமூக போராட்டங்களை காட்டுகிறது. 6 00:00:10,600 --> 00:00:11,440 எல்ஜிபிடிக்யூஐஏ+ சமூகத்தை அவமதிக்கும் எண்ணமில்லை. 7 00:00:11,520 --> 00:00:12,360 கடினமான மொழி உண்டு. 8 00:00:12,440 --> 00:00:13,280 போதை பொருட்களை, அமானுஷ்யத்தை ஆதரிக்கப்படவில்லை. 9 00:00:13,360 --> 00:00:14,520 விலங்குகளுக்கு தீங்கிழைக்கவில்லை. அமேசான் கருத்துகளை ஆதரிக்கவில்லை. 10 00:00:14,600 --> 00:00:15,880 குழந்தை நட்சத்திரங்கள் புண்படவில்லை. பார்வையாளர்களுக்கு விவேகம் பரிந்துரை. 11 00:00:46,920 --> 00:00:48,040 ஆது! 12 00:02:59,600 --> 00:03:02,880 அதுரா 13 00:03:05,760 --> 00:03:06,880 நல்லாருக்கீயா? 14 00:03:07,040 --> 00:03:08,320 ஆமா, நல்லாருக்கேன். 15 00:03:08,400 --> 00:03:09,880 எத்தனை முறை சொல்றது? 16 00:03:10,520 --> 00:03:13,640 நல்லா இருந்திருந்தா, நீ அப்படியே போயிருக்க மாட்டே. 17 00:03:13,760 --> 00:03:16,480 உன்னை பற்றி கவலை படறோம். திரும்ப வா. 18 00:03:16,560 --> 00:03:18,960 எட்டு மாதங்களா அங்கிருக்கே. அது போதும். 19 00:03:19,040 --> 00:03:21,800 அந்த பசங்க உனக்கு அபியை நியாபக படுத்தலையா? 20 00:03:21,880 --> 00:03:23,360 நான் இப்ப போகணும். பை. 21 00:03:23,440 --> 00:03:25,960 -அப்புறம் பேசறேன். -இரு, வெச்சிடாதே! 22 00:03:33,800 --> 00:03:34,960 வா, வேதாந்த். 23 00:03:37,360 --> 00:03:38,520 உக்கார். 24 00:03:39,080 --> 00:03:40,920 இப்ப வந்திடுறேன். 25 00:04:05,000 --> 00:04:06,640 உள்ளே வரலாமா, மிஸ்? 26 00:04:13,560 --> 00:04:14,600 வா. 27 00:04:15,720 --> 00:04:19,360 தெரியுமா, உன்னைப்போல நானும் இங்கே புதுசு. 28 00:04:19,480 --> 00:04:21,960 எனக்கும் அட்ஜஸ்ட் ஆக நேரமாகுது. 29 00:04:23,240 --> 00:04:24,200 எது? 30 00:04:29,000 --> 00:04:31,160 இப்ப நான் அறையில் தனியா இருந்தபோது, 31 00:04:32,760 --> 00:04:34,320 யாரோ உள்ளே வந்து... 32 00:04:35,200 --> 00:04:38,480 இந்த நாற்காலியில் உக்காந்தது மாதிரி இருந்தது. 33 00:04:39,360 --> 00:04:41,120 ஆனா நான் யாரையும் பார்க்கலை. 34 00:04:41,760 --> 00:04:44,080 காலடி சத்தம் கேட்டது. 35 00:04:45,760 --> 00:04:47,440 இது உனக்கு நடந்திருக்கா? 36 00:04:50,480 --> 00:04:52,000 அது ஏன் நடந்தது தெரியுமா? 37 00:04:53,000 --> 00:04:55,920 என் காதுகள் கொல்கத்தாவின் சத்தத்திற்கு பழக்கமாயிருக்கு. 38 00:04:56,720 --> 00:04:58,360 சிலசமயம் எனக்கு தோணும், 39 00:04:59,560 --> 00:05:02,800 அந்த சத்தத்திற்கு நடுவே நான் அங்கே இருக்கிற மாதிரி. 40 00:05:02,880 --> 00:05:05,320 நான் வீட்டை மிஸ் பண்றேன்னு அர்த்தம். 41 00:05:06,720 --> 00:05:08,120 நீயும் வீட்டை மிஸ் பண்றியா? 42 00:05:11,360 --> 00:05:12,920 எதை ரொம்ப மிஸ் பண்றே? 43 00:05:14,360 --> 00:05:15,440 டின்னர். 44 00:05:16,360 --> 00:05:18,080 டின்னரில் என்ன சிறப்பு? 45 00:05:19,240 --> 00:05:24,120 அம்மா, அப்பா, நான் எப்பவும் சேந்து சாப்பிடுவோம். 46 00:05:24,200 --> 00:05:26,000 அப்ப நல்லா சமைப்பார். 47 00:05:26,080 --> 00:05:27,040 நிஜமாவா? 48 00:05:27,600 --> 00:05:30,880 சரி, அடுத்த முறை அவரை ரெசெபி கேட்கிறேன். 49 00:05:32,600 --> 00:05:36,120 ஆனா அப்பா நாலு மாதங்கள் கழித்துதான் கூட்டி போக வருவார். 50 00:05:39,960 --> 00:05:41,000 நான் இருக்கேன் உனக்காக. 51 00:05:46,680 --> 00:05:49,720 வேதாந்த், அன்னிக்கி ராத்திரி டீன் பங்களாவில் என்ன நடந்தது? 52 00:05:54,400 --> 00:05:56,360 அதைப்பத்தி பேசணுமா? 53 00:06:03,960 --> 00:06:08,160 நான் எப்படி, ஏன் அங்கே போனேன்னு எனக்கு நியாபகமில்லை. 54 00:06:08,240 --> 00:06:10,600 சத்தியமா, எனக்கு எதுவும் நியாபகமில்லை. 55 00:06:12,760 --> 00:06:13,720 பரவாயில்லை. 56 00:06:14,720 --> 00:06:15,560 பரவாயில்லை. 57 00:06:16,680 --> 00:06:18,800 நாம ரொம்ப பயந்திருக்கும் போது, 58 00:06:19,280 --> 00:06:21,640 நம்ம மூளை நினைவுகள் செய்வதை நிறுத்தும், 59 00:06:22,840 --> 00:06:24,960 கெட்ட நேரத்தை நமக்கு நியாபகம் வராதப்படி. 60 00:06:26,200 --> 00:06:30,000 மிஸ், நிஜமா நான் அந்த நாய்க்குட்டிகளை கொன்னேனா? 61 00:06:30,720 --> 00:06:31,960 நான் சைக்கோவா? 62 00:06:32,520 --> 00:06:33,600 இல்லை, அப்படியில்லை. 63 00:06:35,120 --> 00:06:39,080 யார் என்ன சொன்னாலும், வேதாந்த், நீ இங்கே யோசிப்பது முக்கியம். 64 00:06:41,400 --> 00:06:43,440 யாரையும் இங்கே நுழைய விடாதே. 65 00:06:54,200 --> 00:06:57,040 இந்த முறை அவங்க தப்பிக்க முடியாது. 66 00:07:00,680 --> 00:07:01,680 என்ன சொன்ன? 67 00:07:02,960 --> 00:07:04,640 நான் சைக்கோ இல்லேன்னா, 68 00:07:04,720 --> 00:07:07,840 என்னை ஏன் அசெம்ப்ளி ஹாலில் அனுமதிக்கலை, மிஸ்? 69 00:07:22,760 --> 00:07:25,440 தாத்தா, நானும் வரணும். 70 00:07:25,600 --> 00:07:28,160 ஆதி, பசங்களை எல்லையில் அனுமதிக்க மாட்டாங்க. 71 00:07:29,240 --> 00:07:30,560 வா, போலாம். 72 00:07:30,640 --> 00:07:34,080 ராமன் கஃபே 73 00:07:36,000 --> 00:07:37,960 சாக்லெட் மில்க்க்ஷேக் குடிப்போம். 74 00:07:38,040 --> 00:07:40,200 அப்புறம் அவங்க அவங்க பள்ளிக்கு போவோம். 75 00:07:40,880 --> 00:07:44,520 தாத்தா, நீங்களும் என்னை விட்டுட்டு போயிடுவீங்களா? 76 00:07:44,600 --> 00:07:46,120 நான் தனியா இருப்பேன். 77 00:07:46,640 --> 00:07:49,720 இல்லை, ஆதி, என்ன ஆனாலும் தொடர்ந்து செல். 78 00:07:50,080 --> 00:07:51,160 சரியா? 79 00:07:52,480 --> 00:07:55,200 இவன் ஏன் அழறான்? அழுமூஞ்சி. 80 00:07:55,280 --> 00:07:56,680 நான் அழுமூஞ்சி இல்லை. 81 00:07:57,360 --> 00:07:59,680 பள்ளியில் ஆதியின் முதல் நாள். 82 00:08:00,200 --> 00:08:02,320 ஓ, லேட்டா சேந்தியா. 83 00:08:02,400 --> 00:08:04,920 உன்னே அடிச்சி நொறுக்கிடுவாங்க. 84 00:08:05,000 --> 00:08:06,160 எந்த வகுப்பு? 85 00:08:06,240 --> 00:08:07,600 ஆதி ஐந்தாம் வகுப்பு. 86 00:08:07,680 --> 00:08:08,960 நானும். 87 00:08:10,200 --> 00:08:13,200 நான் பாத்துக்கறேன். நான் நினாத். 88 00:08:13,600 --> 00:08:17,640 பள்ளியில் முதல் நாளா? அப்ப பன் மஸ்கா என் தரப்பில். 89 00:08:18,840 --> 00:08:20,480 -ஹலோ சார். -ப்ரிகேடியர் ஜெய்சிங். 90 00:08:20,560 --> 00:08:23,880 -நான் ராமன். -பாரு, நீ என் நண்பனா இருந்தா, 91 00:08:23,960 --> 00:08:26,920 அப்ப அளவில்லாத சாக்லெட் மில்க்ஷேக், பன் மஸ்கா. 92 00:08:27,000 --> 00:08:28,040 டீலா? 93 00:08:29,000 --> 00:08:30,320 அதுக்கு பதிலா? 94 00:08:31,360 --> 00:08:33,600 பாதுகாப்பு. நீ என்னை பாதுகாக்கணும். 95 00:08:33,680 --> 00:08:35,760 நீ என்னை பார்த்துப்பேன்னே? 96 00:08:35,880 --> 00:08:38,320 நான் பன் மஸ்காவும் தர்றேன். டீல்? 97 00:08:55,280 --> 00:08:57,280 -தாத்தா. -சொல்லுப்பா. 98 00:08:57,360 --> 00:09:00,080 -என் டார்சை பேக் பண்ணீங்களா? -டார்சா? 99 00:09:00,160 --> 00:09:03,200 ராத்திரியிலே டார்ச் வேணும்னு தெரியுமேலே! 100 00:09:03,280 --> 00:09:05,640 -ட்ரைவர்... -என்னோடதை எடுத்துக்கோ. 101 00:09:05,720 --> 00:09:07,720 நான் எப்படியும் பயன்படுத்தறதில்லை. 102 00:09:12,520 --> 00:09:14,240 அப்ப, நாம ஒரு அணியா? 103 00:09:15,000 --> 00:09:18,120 பன் மஸ்காவும் சாக்லெட் மில்கும் போல. 104 00:09:24,520 --> 00:09:25,640 ஆகட்டும். 105 00:09:27,160 --> 00:09:31,160 நீங்க இருக்கிறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. 106 00:09:31,240 --> 00:09:34,400 கஃபே 107 00:09:43,640 --> 00:09:45,600 -மன்னிக்கணும். -சொல்லுங்க. 108 00:09:45,640 --> 00:09:48,200 இது ராமன் கஃபேயா இருந்ததே? 109 00:09:48,280 --> 00:09:51,240 கொஞ்ச காலம் முன்பு விற்றார். பத்து வருஷமாச்சு. 110 00:09:51,320 --> 00:09:54,720 எங்கே போனாங்கன்னு யாருக்கும் தெரியாது. பன் மஸ்கா வேணுமா? 111 00:09:54,760 --> 00:09:58,240 -அவங்களைவிட நல்லா செய்வேன். -வேண்டாம், நன்றி. 112 00:10:09,760 --> 00:10:13,280 எல்லா மாணவர்களும் மெயின் ஹாலில் காலை 8 மணிக்கு அமர்ந்திருக்கணும், 113 00:10:13,360 --> 00:10:15,520 டீன் சுவாமியின் வரவேற்புரைக்கு, 114 00:10:15,640 --> 00:10:19,600 பேட்ச் 2007 ரீயூனியன் கொண்டாட்டத்தை தொடங்கிட. 115 00:10:19,640 --> 00:10:20,960 போலாம். 116 00:10:21,040 --> 00:10:21,960 க்ளாஸ் ஆஃப் 2007 117 00:10:22,040 --> 00:10:25,640 உனக்கு ஒரு இருக்கை தேடுவோம், சரியா? இங்கே உக்கார்றியா? 118 00:10:25,720 --> 00:10:27,200 பாரு, சைக்கோ! 119 00:10:33,640 --> 00:10:34,880 பத்திரமா இருப்பீயா? 120 00:10:36,480 --> 00:10:39,080 சிறப்பு, நீங்க முன்னணியில் இருப்பீங்க. 121 00:10:39,160 --> 00:10:41,520 இல்லை, இந்த முறை மற்றவர்களையும்... 122 00:10:43,080 --> 00:10:46,120 -சார், அந்த பையன்... -நான் பாத்துக்கறேன். 123 00:10:46,720 --> 00:10:47,720 சார்த்தக், பாரு! 124 00:10:48,880 --> 00:10:49,880 சார்த்தக். 125 00:10:53,160 --> 00:10:57,640 சுப்ரியா, வேதாந்த் இங்கே வரக்கூடாதுனு நான் தெளிவா சொன்னேன். 126 00:10:57,720 --> 00:11:01,040 ஆமாம், ஆனால் அவனை எவ்வளவு தனிமை படுத்தறோமோ, தனியா ஆயிடுவான். 127 00:11:01,120 --> 00:11:02,720 அவன் நடத்தை மோசமாகலாம். 128 00:11:02,800 --> 00:11:04,480 -என்னால முடியாது-- -வேண்டாம். 129 00:11:04,560 --> 00:11:07,920 நான் வேதாந்துக்கு பொறுப்பேற்கிறேன். என்ன செய்யறேன்னு தெரியும். 130 00:11:09,040 --> 00:11:10,280 அப்படீன்னு நம்பறேன். 131 00:11:18,680 --> 00:11:21,560 திரு. ட்ரஸ்டி, இதென்ன எழுத்து பிழை? 132 00:11:21,640 --> 00:11:24,840 -என்ன இது? -ஜாம்வாலையாவது ஒழுங்கா எழுதினாங்களே. 133 00:11:26,880 --> 00:11:30,000 ஹேய்! மிஸ் மாள்விகா சேட்! 134 00:11:30,480 --> 00:11:31,600 உன் ப்ளேசர் எங்கே? 135 00:11:31,680 --> 00:11:34,280 ஓல்ட் பாய்ஸுக்கு ப்ளேசர் செய்திருக்காங்க, 136 00:11:34,360 --> 00:11:37,120 வழக்கம் போல பேட்சின் ஒரே பெண்ணை மறந்துட்டாங்க. 137 00:11:37,200 --> 00:11:38,600 அடடா! 138 00:11:39,640 --> 00:11:42,920 அவங்களுக்கு நான் ப்ளஸ் ஒன் தானே. இவங்களை போல. 139 00:11:43,000 --> 00:11:44,280 இவங்களை போலவா? 140 00:11:44,360 --> 00:11:46,960 திருமதி. மாள்விகா ஜாம்வால்! 141 00:11:47,040 --> 00:11:49,400 நீங்க இந்த பேட்சின் உயர்ந்த சாதனையாளர். 142 00:11:49,480 --> 00:11:53,160 அப்ப ஆசிரியரின் மகள், இப்ப ட்ரஸ்டியின் மனைவி. 143 00:11:56,760 --> 00:11:59,200 இந்த பேட்சின் குறைந்த சாதனையாளர் நான்! 144 00:11:59,280 --> 00:12:01,240 வா, பூனை பெயருள்ள குதிரை காட்டறேன். 145 00:12:01,320 --> 00:12:04,040 என்ன? "பூனை" இல்லை, "பில்லி. " 146 00:12:04,120 --> 00:12:05,240 என்னமோ! 147 00:12:05,320 --> 00:12:06,280 திருமதி. ஜாம்வால். 148 00:12:06,360 --> 00:12:09,040 இங்கே வந்தது சந்தோஷம். அழைத்ததுக்கு நன்றி. 149 00:12:09,120 --> 00:12:11,760 மகிழ்ச்சி. உக்காருங்க. சீக்கிரமே தொடங்குவோம். 150 00:12:11,840 --> 00:12:13,360 -நன்றி. -சந்தோஷமா ரசிங்க. 151 00:12:19,280 --> 00:12:20,360 வா. 152 00:12:27,880 --> 00:12:29,600 -ஹாய். -ஹாய். 153 00:12:33,840 --> 00:12:35,360 திருமதி. ஜாம்வால்? 154 00:12:37,680 --> 00:12:41,840 உன்னை கொஞ்சம் தெரியும். அதனால நிச்சயமா 155 00:12:41,920 --> 00:12:46,600 நீ எவ்வளவு திருமதி. ஜாம்வாலா இருக்கியோ, அவன் அவ்வளவு திரு. மாள்விகா சேட். 156 00:12:48,720 --> 00:12:49,840 அது சரி. 157 00:12:49,960 --> 00:12:52,280 அவனுக்கு உன்னை பிடிக்கும்னு தெரியும். 158 00:12:53,600 --> 00:12:56,080 நீயும் அவனை விரும்புவேன்னு நினைச்சு பாக்கலை. 159 00:12:56,560 --> 00:13:00,160 நான் என்ன செய்றது? நீ அமெரிக்கா போய் என்னை மறந்துட்டே. 160 00:13:00,880 --> 00:13:04,160 ஹலோ! நீதான் என்னிடமிருந்து பிரிஞ்சே. 161 00:13:05,680 --> 00:13:09,560 ஜோக் அடிச்சது போதும், ஆதி, தாத்தா பத்தி ரொம்ப வருத்தம். 162 00:13:10,520 --> 00:13:12,360 அவருக்கு அமெரிக்கா பிடிச்சுதா? 163 00:13:12,440 --> 00:13:14,280 ஓ, இல்லை! வெறுத்தார். 164 00:13:14,360 --> 00:13:16,760 "ரொம்ப குளிருது, மக்கள் நட்பா இல்லை, 165 00:13:16,840 --> 00:13:20,200 எல்லாம் தூர இருக்கு. " அவருக்கு நான் வாய்ப்பை குடுக்கலை. 166 00:13:21,000 --> 00:13:23,800 என்ன இருந்தாலும், அவர் மட்டும்தான் இருந்தார் எனக்கு. 167 00:13:25,080 --> 00:13:26,280 அவர் மட்டுந்தான் உனக்கு, 168 00:13:27,520 --> 00:13:28,800 சின்ன வயசிலிருந்தே. 169 00:13:30,760 --> 00:13:31,640 மற்றும் நினாத். 170 00:13:35,600 --> 00:13:37,280 அவன் எங்கேன்னு உனக்கு தெரியுமா? 171 00:13:38,560 --> 00:13:41,080 ஆதி, நாம பிரிஞ்ச பிறகு, நான் முன்னேறி போனேன். 172 00:13:42,360 --> 00:13:44,720 உங்க இருவரிடமும் நான் பேசலை. 173 00:13:45,880 --> 00:13:47,920 அன்று அசெம்ப்ளி ஹாலில், 174 00:13:48,000 --> 00:13:51,800 அவன் வரும் போது அவனிடம் சாரி சொல்லணும்னுதான் நினைச்சேன். 175 00:13:52,640 --> 00:13:56,800 என் தவறுன்னு தெரியும், ஆனால் பேசி, விஷயங்களை சரி செய்திருக்கலாம். 176 00:13:56,880 --> 00:13:59,120 மறுநாள், அவன் அப்படியே போயிட்டான். 177 00:14:00,880 --> 00:14:03,080 ஒரு வார்த்தை சொல்லலை, சந்திக்கவும் இல்லை. 178 00:14:03,160 --> 00:14:04,280 அப்படியே போயிட்டான்! 179 00:14:06,520 --> 00:14:07,800 ரொம்ப கோபமா இருந்தேன். 180 00:14:08,880 --> 00:14:11,360 மீண்டும் அவனிடம் பேசக் கூடாதென முடிவெடுத்தேன். 181 00:14:11,480 --> 00:14:13,720 போன வருடம் தாத்தா இறந்தப்ப, 182 00:14:15,120 --> 00:14:17,240 அவன் எவ்வளவு முக்கியம்னு உணர்ந்தேன். 183 00:14:17,960 --> 00:14:20,320 அவனை தேட முயற்சித்தேன், 184 00:14:21,200 --> 00:14:24,160 தினமும் சமூக ஊடகத்தில், எங்கும் தேடினேன். 185 00:14:24,440 --> 00:14:27,360 இன்று காலை ராமன் கஃபே போனேன். அது மூடியாச்சு. 186 00:14:28,200 --> 00:14:30,800 இந்த ரீயூனியனை என் கடைசி வாய்ப்பா நினைக்கிறேன். 187 00:14:31,560 --> 00:14:32,960 அவனுக்காகத்தான் வந்தேன். 188 00:14:33,040 --> 00:14:34,320 வணக்கம். 189 00:14:34,400 --> 00:14:38,840 நம்ம ஓல்ட் பாய்ஸுக்கு அன்பார்ந்த வரவேற்பை அளிக்க விரும்பறேன், 190 00:14:38,920 --> 00:14:40,440 ஓல்ட் கர்லுக்கும். 191 00:14:47,600 --> 00:14:53,520 இந்த வருடம் நீலகிரி வேலி ஸ்கூல் சமூகத்தின் ஒரு முக்கியமான உறுப்பினரை இழந்தோம், 192 00:14:54,360 --> 00:14:56,280 -டீன் வியாஸ். -கோச் காஸ்! 193 00:14:58,040 --> 00:15:00,280 இந்த ரீயூனியனின் மூன்றாம் மற்றும் இறுதி 194 00:15:00,360 --> 00:15:02,840 நாளன்று அவரது நினைவு சிலையை திறந்திடுவோம். 195 00:15:02,920 --> 00:15:08,360 உங்களை அவரோட அதிர்ஷ்ட பேட்ச் என்பார் என கேள்விப்பட்டேன், 196 00:15:08,440 --> 00:15:11,560 ஏன்னா நீங்க பட்டம் பெற்றதும் டீனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 197 00:15:12,000 --> 00:15:16,320 பேட்ச் ஆஃப் 2007ன் ஸோர்ட் ஆஃப் ஆனரை அழைக்க விரும்பறேன், 198 00:15:16,400 --> 00:15:17,960 ஆதிராஜ் ஜெய்சிங். 199 00:15:18,880 --> 00:15:22,880 ஆதி! ஆதி! ஆதி! 200 00:15:24,280 --> 00:15:25,760 வா, ஆதிராஜ், மை பாய்! 201 00:15:25,840 --> 00:15:27,000 பள்ளி கடைசி நாள் 202 00:15:28,400 --> 00:15:29,960 -சார். -தெரியும், கடைசி நாள். 203 00:15:30,040 --> 00:15:34,280 ஒன்று சொல்லணும். அமெரிக்காவில் தொடர்ந்து நீந்து, சரியா? 204 00:15:34,360 --> 00:15:38,040 உன்னை தொந்தரவு செய்ய உன் வெட்டி நண்பன் நினாத் இருக்க மாட்டான். 205 00:15:38,120 --> 00:15:39,360 கோச். 206 00:15:42,520 --> 00:15:45,160 யாரும் இன்று ஷூஸை சோதிக்க மாட்டாங்க, மை பாய்! 207 00:15:45,240 --> 00:15:46,280 பழக்க தோஷம். 208 00:15:47,520 --> 00:15:48,680 இன்றும் பங்கா? 209 00:15:48,760 --> 00:15:52,760 கைதட்டுங்க, எல்லாரும், உங்க சக நீலகிரி-வேலியைட்டுக்கு... 210 00:15:52,840 --> 00:15:56,880 ஃபேர்வெல் பேட்ச் 2007 211 00:15:57,000 --> 00:15:58,160 வா, ஆதி! 212 00:15:58,240 --> 00:15:59,680 ப்ளீஸ் சுருக்கமா பேசு! 213 00:16:02,400 --> 00:16:04,840 பள்ளி எனக்கு கற்றுத் தந்தது 214 00:16:04,920 --> 00:16:08,320 தனியாக இருக்கையில் யாராவது நட்புக் கரம் நீட்டினால் 215 00:16:08,400 --> 00:16:09,800 அதை ஏற்பது நல்லது. 216 00:16:11,760 --> 00:16:14,320 ஏன்னா இந்த உலகத்தில் தனியாக இருப்பது கடினம். 217 00:16:35,080 --> 00:16:38,600 சிலசமயம் ஒரு அணி தேவை, சாக்லெட் மில்க் மற்றும் பன் மஸ்கா போல 218 00:16:38,680 --> 00:16:43,440 நிஜ உலகில் நமக்காக பசியோடு காத்திருக்கும் பேய்களை சேர்ந்து போராட. 219 00:16:45,280 --> 00:16:47,680 -ஆதி! -வா, ஆதி! 220 00:16:48,080 --> 00:16:53,760 -ஆதி! -வா, ஆதி! 221 00:16:53,840 --> 00:16:56,360 வா, ஆதி! 222 00:17:02,040 --> 00:17:03,520 ஸோர்ட் ஆஃப் ஆனர்... 223 00:17:03,600 --> 00:17:04,920 ப்ரோ, சீக்கிரம் முடி! 224 00:17:07,560 --> 00:17:09,840 குழந்தையா இந்த பள்ளியில் சேர்ந்த போது, 225 00:17:09,920 --> 00:17:13,680 இந்த பேட்ஜ் அந்த அபாரமான மாணவனுக்கு வழங்குவார்கள் என்றார்கள், 226 00:17:13,760 --> 00:17:16,160 எல்லா விதத்திலும் சிறந்தவனுக்கு. 227 00:17:17,680 --> 00:17:21,080 ஆனால் இத்தனை வருடங்களுக்கு பிறகு, ஒரு விஷயம் புரிஞ்சிருக்கு. 228 00:17:22,320 --> 00:17:23,520 கௌரவம்... 229 00:17:24,400 --> 00:17:26,080 மக்களை நடத்துவதில் இருக்கு. 230 00:17:28,040 --> 00:17:32,160 நான் அங்கே உட்கார்ந்திருந்த போது, நான் என்னையே கேட்டுக்கிட்டேன், 231 00:17:34,320 --> 00:17:37,280 என் நண்பன் வருந்தமா இருந்தபோது, 232 00:17:39,200 --> 00:17:40,920 நான் போய் அவனிடம் பேசினேனா? 233 00:17:46,480 --> 00:17:50,040 கௌரவம், சிறப்பு, நேர்மை. 234 00:17:51,080 --> 00:17:55,080 அதுக்கு பளபளக்கும் பேட்ஜ் கிடைக்கலைன்னாலும்... 235 00:17:55,560 --> 00:17:56,720 சுப்ரியா! 236 00:17:57,440 --> 00:17:58,920 ...நல்லவங்களா இருப்பீங்க. 237 00:18:08,480 --> 00:18:09,520 என்னப்பா? 238 00:18:11,320 --> 00:18:13,520 ஆது, நீ திரும்பி வந்துட்டே! 239 00:18:31,560 --> 00:18:32,680 வேதாந்த்! 240 00:18:32,760 --> 00:18:33,640 வேதாந்த்! 241 00:18:33,720 --> 00:18:34,560 என்ன ஆச்சு? 242 00:18:34,640 --> 00:18:35,520 என்ன பிரச்சினை? 243 00:18:35,560 --> 00:18:36,440 வேதாந்த்! 244 00:18:36,520 --> 00:18:38,760 -டாக்டரை கூப்பிடுங்க. -டாக்டர். கிருஷ்ணனை அழைங்க. 245 00:18:38,800 --> 00:18:39,800 அவன் நலமா? 246 00:18:39,920 --> 00:18:42,080 -மூக்கில் ரத்தம் வருது, சார். -அட கடவுளே! 247 00:18:42,160 --> 00:18:44,160 நிக்காதீங்க! அவரை கண்டுபிடிங்க! 248 00:18:44,240 --> 00:18:46,160 அவர் ஃபோனை எடுக்கலை. 249 00:18:46,240 --> 00:18:48,200 சொன்னபடி ஏன் யாரும் செய்யறதில்லை! 250 00:19:01,680 --> 00:19:02,720 உனக்கு குளிருதா? 251 00:19:03,400 --> 00:19:04,640 நல்லது. ஓய்வெடு. 252 00:19:04,720 --> 00:19:06,560 -கம்பளி குடுங்க. -நிச்சயமா. 253 00:19:08,320 --> 00:19:11,080 அவன் வெப்பநிலை 96. 254 00:19:11,760 --> 00:19:14,320 கடந்த மூன்று நாட்களில் இருமுறை மயக்கமா ஆயிருக்கான். 255 00:19:14,800 --> 00:19:16,480 வலிப்பா இருக்குமா? 256 00:19:16,560 --> 00:19:19,480 அவன் மருத்துவ கோப்பையை பார்த்தேன். அதை குறிப்பிடலை. 257 00:19:20,160 --> 00:19:21,280 போலி வலிப்போ? 258 00:19:22,920 --> 00:19:24,000 மயக்கமாவது, 259 00:19:24,680 --> 00:19:27,400 பேச முடியாமல் போவது, உளவியல் மயக்கங்கள். 260 00:19:27,800 --> 00:19:29,400 மன அழுத்தத்தால் வரும். 261 00:19:30,680 --> 00:19:32,560 மன அழுத்தம் ஏன் வருது? 262 00:19:33,720 --> 00:19:36,240 புதிய பள்ளி, புதிய சூழலா இருக்கலாம். 263 00:19:37,480 --> 00:19:39,160 உண்மையில், எதுவாவும் இருக்கலாம். 264 00:19:40,480 --> 00:19:42,680 -நர்ஸ். -சொல்லுங்க, டாக்டர்? 265 00:19:43,040 --> 00:19:44,160 வேறு ஆவணங்கள்? 266 00:19:44,240 --> 00:19:47,880 இல்லை, டாக்டர், ஒரு கோப்புதான். 267 00:19:48,080 --> 00:19:49,080 சரி. 268 00:19:51,560 --> 00:19:53,920 மேடம், தூக்கிட்டு வந்தப்ப அடி பட்டிருக்கலாம். 269 00:20:21,040 --> 00:20:22,040 ஆதி! 270 00:20:22,080 --> 00:20:23,720 ஆதி! நினாத்! 271 00:20:24,320 --> 00:20:25,800 சீக்கிரம் வாங்க. 272 00:20:26,720 --> 00:20:30,760 அவன் கையை கொடுத்து, சொன்னான், "நீ இனி பயப்பட வேண்டாம். " 273 00:20:30,800 --> 00:20:33,960 "ஷேடோ பாய், பள்ளியின் நிழலில் தங்கினான். " 274 00:20:34,040 --> 00:20:37,400 "பசியோடு இருந்த அரக்கர்களிடமிருந்து எப்போதும் ஒளிந்தபடி. " 275 00:20:38,720 --> 00:20:40,400 நாங்க அரக்கர்களா, நினா? 276 00:20:40,480 --> 00:20:41,560 நிறுத்துங்க, கைஸ். 277 00:20:44,400 --> 00:20:47,000 "ஒருநாள் ஃபீனிக்ஸ் பாய் வரும்வரை. " 278 00:20:47,080 --> 00:20:48,560 உன் காதலன். 279 00:20:49,560 --> 00:20:50,880 நிறுத்து, சுயாஷ்! 280 00:20:54,000 --> 00:20:55,280 -அட, ஆதி! -நாசமா போ! 281 00:20:55,320 --> 00:20:57,400 -படிக்க விடு! தமாஷா இருக்கு. -அவனை விடுங்க. 282 00:20:57,480 --> 00:20:59,040 "அவன் கையை கொடுத்து, சொன்னான், 283 00:20:59,080 --> 00:21:01,640 -நீ இனி பயப்பட வேண்டாம். " -நிறுத்துங்க! 284 00:21:01,720 --> 00:21:05,560 "ஷேடோ பாய் இறுதியாக, தன் நிழலிலிருந்து வெளியே வந்து 285 00:21:05,680 --> 00:21:09,520 தான் மக்களின் மனங்களை கட்டுப்படுத்த முடியுமென கண்டுபிடித்தான். " 286 00:21:13,520 --> 00:21:16,320 சிறுநீர்ப்பை கட்டுப்பாடு இல்லாதவன் எப்படி எங்க 287 00:21:16,400 --> 00:21:18,280 மனசை கட்டுப்படுத்த முடியும், நினா? 288 00:21:18,640 --> 00:21:20,240 நிறுத்து, சுயாஷ்! 289 00:21:21,240 --> 00:21:22,720 விளையாடறதை நிறுத்துடா! 290 00:21:22,800 --> 00:21:24,160 அதை திருப்பி குடு. 291 00:21:26,560 --> 00:21:27,560 நகரு! 292 00:21:29,560 --> 00:21:30,680 -அவனிடம் சொல். -ஹேய்... 293 00:21:31,040 --> 00:21:32,320 அவனிடம் காட்டு! 294 00:21:32,440 --> 00:21:33,320 பாரு, 295 00:21:33,880 --> 00:21:35,960 உன் காமிக் புத்தகத்தின் உத்வேகத்தால், 296 00:21:36,040 --> 00:21:38,680 -நான் வரைஞ்சிருக்கேன். -சுயாஷ், வேண்டாம்! 297 00:21:42,040 --> 00:21:42,960 பாரு. 298 00:21:43,520 --> 00:21:44,400 எச் 299 00:21:45,560 --> 00:21:46,480 ஓ 300 00:21:48,440 --> 00:21:50,240 -எம்... -அது எம். 301 00:21:52,080 --> 00:21:55,840 -ஓ... ஹோமோ. -ஆமா. 302 00:21:56,160 --> 00:21:57,000 ஹோமோ. 303 00:21:59,680 --> 00:22:00,600 ஹோமோ! 304 00:22:02,160 --> 00:22:03,920 அந்த சொல்லை வெறுக்கிறேன். 305 00:22:05,280 --> 00:22:07,360 வரைவது உனக்கு உதவாது, நினாத். 306 00:22:08,800 --> 00:22:10,160 நீ எதிர்த்து போராடணும். 307 00:22:10,960 --> 00:22:11,800 இந்த... 308 00:22:12,800 --> 00:22:14,360 உன் 'ஷேடோ பாய்' போல. 309 00:22:15,200 --> 00:22:16,480 நிழலிலிருந்து வெளியே வா. 310 00:22:21,280 --> 00:22:22,760 அவ்வளவு சுலபமில்லை, ஆது. 311 00:22:24,640 --> 00:22:26,360 போராடி என்ன கிடைக்க போகுது? 312 00:22:27,840 --> 00:22:31,520 டீன் அவர்களை எச்சரிப்பார், ஆனால் நான் பள்ளியிலிருந்து நீக்கப்படுவேன். 313 00:22:32,240 --> 00:22:34,760 நான் உன்னை போலில்லை. பயந்துருவேன். 314 00:22:35,280 --> 00:22:36,200 டூட், 315 00:22:38,760 --> 00:22:40,040 நானும் பயப்படுவேன். 316 00:22:42,200 --> 00:22:44,440 அமெரிக்கா விஷயத்தை மீண்டும் யோசிக்கிறேன். 317 00:22:44,520 --> 00:22:46,240 தாத்தா இங்கே தனியா இருப்பார். 318 00:22:48,760 --> 00:22:50,960 நான் அதை மறந்துடணும். 319 00:22:51,040 --> 00:22:52,280 நான் விட மாட்டேன். 320 00:22:53,640 --> 00:22:56,920 ராத்திரி கண் முழிச்சு உன் ஸ்காலர்ஷிப் படிவம் நிரப்பினேன். 321 00:22:57,880 --> 00:23:02,880 நான் தாத்தாவுக்கு இருக்கேன், நீ எனக்கு இருக்கிற மாதிரி. 322 00:23:03,800 --> 00:23:05,640 உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன். 323 00:23:09,160 --> 00:23:10,720 சுயாஷ் உன்னை தேடுறான். 324 00:23:32,520 --> 00:23:33,360 ஹாய். 325 00:23:34,720 --> 00:23:35,880 ஹலோ. 326 00:23:36,720 --> 00:23:38,880 நான் அந்த பையனை தேடினேன். 327 00:23:38,960 --> 00:23:41,920 வேதாந்த். அவன் மருத்துவமனையில் ஓய்வெடுக்கறான். 328 00:23:42,480 --> 00:23:43,760 அங்கே என்ன நடந்தது? 329 00:23:44,600 --> 00:23:46,440 அவன் சில சமயம் மயங்கிடுவான். 330 00:23:47,920 --> 00:23:50,080 எனக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயத்தை சொன்னான். 331 00:23:51,600 --> 00:23:52,640 உங்களை தெரியுமா? 332 00:23:53,680 --> 00:23:54,760 இல்லை. 333 00:23:54,840 --> 00:23:58,040 அவன் சொன்னது, நீங்க கேட்க விரும்பியதா? 334 00:24:02,760 --> 00:24:05,640 ஏதோ ஒரு வாக்கியத்தை தனிப்பட்ட செய்தியா 335 00:24:05,720 --> 00:24:07,880 எடுத்துக்கிறதை உளவியலில் பார்னம் விளைவு என்போம். 336 00:24:07,960 --> 00:24:12,400 அப்படித்தான் ஜாதகம் சொல்வாங்க. "இன்று சிறப்பானவரை சந்திப்பீங்க. " 337 00:24:13,120 --> 00:24:14,800 யார் அதை நம்ப மாட்டாங்க? 338 00:24:14,880 --> 00:24:17,560 அன்று சந்திக்கும் யாருமே சிறப்பா தெரிவாங்க. 339 00:24:20,000 --> 00:24:22,440 -நான் ஒரு முட்டாள்.. -இல்லை, இல்லை! 340 00:24:23,000 --> 00:24:27,520 டீன் வியாஸ் பேய் வேதாந்த் மேல இருக்குன்னு நினைக்கலையே. 341 00:24:28,520 --> 00:24:30,520 பள்ளியில் பிரபலமான கருத்து அது. 342 00:24:31,480 --> 00:24:32,760 கோச் கேஸ். 343 00:24:33,840 --> 00:24:35,480 அவரை நல்லா தெரியும். 344 00:24:36,480 --> 00:24:39,880 உயிரோட இருக்கும்போதே சோம்பேறி, அவர் பேயா சுத்தி வர மாட்டார். 345 00:24:42,200 --> 00:24:45,120 அந்த பையன். மயங்கினானே அவன். 346 00:24:45,200 --> 00:24:48,080 -அவனை சைக்கோ நாய்க்குட்டி கொன்றவன்றாங்க. -ஹேய்! 347 00:24:48,160 --> 00:24:51,600 இன்று மதியம் நான் சொன்னதுக்கு மன்னிக்கணும். 348 00:24:51,680 --> 00:24:53,560 நீதான் என் உயர்ந்த சாதனை. 349 00:24:53,640 --> 00:24:55,120 நான் ட்ராஃபி மனைவி இல்லை. 350 00:25:01,680 --> 00:25:02,680 அவ கவர்ச்சியானவளா? 351 00:25:03,200 --> 00:25:04,560 நீந்தும் போது பட்டுது. 352 00:25:05,160 --> 00:25:07,280 கேவலமாத்தான் யோசிப்பே, சுயாஷ். 353 00:25:07,920 --> 00:25:10,240 இன்றிரவு மணிக்கூண்டில் மது அருந்துவோம். 354 00:25:10,320 --> 00:25:11,680 அது பூட்டப்படலையா? 355 00:25:11,760 --> 00:25:15,640 இருக்கும், ஆனா குமாரன் என் ரசிகன். 356 00:25:15,720 --> 00:25:18,120 உன் ரசிகனா? உன் முகத்தை கண்ணாடியில் பார்த்திருக்கியா? 357 00:25:19,040 --> 00:25:23,440 தினம் இரவு 9 மணிக்கு, இந்தியாவில் இல்லத்தரசிகள் 358 00:25:23,520 --> 00:25:25,480 இந்த முகத்தை பார்க்க டிவி போடறாங்க. 359 00:25:25,560 --> 00:25:26,760 போட்டிருந்தாங்க. 360 00:25:28,520 --> 00:25:31,240 உண்மையில், நான்தான் நிகழ்ச்சியை விட்டேன். 361 00:25:31,320 --> 00:25:34,240 என் திரைப்பட வாழ்க்கையில் கவனம் செலுத்த பார்க்கிறேன். 362 00:25:34,320 --> 00:25:37,640 எனக்கு நிறைய வாய்ப்புகள் வருது, ஆனா இதெல்லாம் எப்படின்னு தெரியும்லே.. 363 00:25:39,240 --> 00:25:40,680 என்னடா டேய்? 364 00:25:40,760 --> 00:25:44,400 சும்மா, ப்ரோ. நிதானி. ஏன் இவ்வளவு கோபப்படறே? 365 00:25:44,480 --> 00:25:46,320 -வளருப்பா! -அருவருப்பானவனே. 366 00:25:46,400 --> 00:25:49,760 பேபி, இங்கே நெட்வர்க் இல்லை. எனக்கு போரடிக்குது. உள்ளே போகலாம். 367 00:25:50,560 --> 00:25:52,640 இல்லை, இங்கே இருக்கலாம். நல்லா இருக்கு. 368 00:25:52,720 --> 00:25:53,560 உள்ளே போறேன். 369 00:25:53,640 --> 00:25:55,800 எனக்கு போக வேண்டாம். இங்கே இருக்கலாம். 370 00:25:55,880 --> 00:25:57,000 சரி. 371 00:25:57,080 --> 00:26:00,480 அடுத்த முறை நானே விருதுக்கும் பார்ட்டிக்கும் போறேன். 372 00:26:00,560 --> 00:26:02,920 எப்படியும், என்னை பார்க்கத்தான் வர்றாங்க. 373 00:26:03,720 --> 00:26:04,560 சரி. 374 00:26:06,280 --> 00:26:09,880 இப்ப நீ எழுந்து என்னோட வரலைன்னா, நான் போறேன். 375 00:26:09,960 --> 00:26:11,640 ட்ரைவர் வெளியே இருக்கான். 376 00:26:12,240 --> 00:26:13,120 வெளியே போ. 377 00:26:16,880 --> 00:26:18,320 என்ன தெரியுமா? போடா. 378 00:26:21,560 --> 00:26:23,320 ஹீரோ மாதிரி நடந்துக்குறான். 379 00:26:23,400 --> 00:26:27,000 ஆனா இரண்டு நிமிஷத்துல அவ பின்னாடி, அவளை மயக்க ஓடுவே. 380 00:26:27,080 --> 00:26:30,720 ஆமாம். நீ பெண்களை மயக்குவதில் நிபுணன், இல்ல? 381 00:26:30,800 --> 00:26:33,240 அப்படித்தான் மனமுடைந்த மாள்விகாவை மயக்கினே. 382 00:26:35,640 --> 00:26:37,600 கடைசி நாளன்று பாத்தோமே. பரவாயில்லை. 383 00:26:37,680 --> 00:26:38,680 கடைசி நாளன்றா? 384 00:26:38,760 --> 00:26:40,880 தேவ் மாள்விகா கண்ணீரை துடைச்சானே. 385 00:26:40,960 --> 00:26:42,440 என்ன சொல்லிட்டு இருந்தான்? 386 00:26:43,000 --> 00:26:46,960 "ஆதிராஜ் ஒரு முட்டாள். டேட்டுக்கு வராம இருந்துட்டானே! 387 00:26:47,040 --> 00:26:50,560 தேவ் அப்படி செய்ய மாட்டான். " அப்புறம் என்ன ஆச்சு? 388 00:26:51,160 --> 00:26:53,520 மாள்விகா உள்ளே அசெம்ப்ளி ஹாலுக்கு போய்-- 389 00:26:53,600 --> 00:26:55,080 என்னிடமிருந்து பிரிஞ்சா. 390 00:26:56,800 --> 00:26:57,960 இப்ப எனக்கு புரியுது. 391 00:26:58,760 --> 00:26:59,760 நல்லா செஞ்சே, தேவ். 392 00:27:00,440 --> 00:27:01,400 சியர்ஸ். 393 00:27:01,480 --> 00:27:02,800 அதுக்கு சியர்ஸ். 394 00:27:18,800 --> 00:27:21,280 வாங்க, ஃபைனல் இயர்ஸ். டின்னருக்கு நேரமாச்சு. 395 00:27:22,720 --> 00:27:24,760 சுயாஷ், நீ எங்கே போறே? 396 00:27:25,560 --> 00:27:28,160 -மன்னிப்பு கேட்க. -தேவுக்கு அவ கிடைக்க கூடாதுன்னா? 397 00:27:29,080 --> 00:27:31,360 நல்லா சிரிங்க. பிறகு பாப்போம். 398 00:27:31,440 --> 00:27:33,200 -சுயாஷ்! -தோத்தாங்குளிகளா! 399 00:27:33,640 --> 00:27:34,800 நான்சி. 400 00:27:39,440 --> 00:27:40,400 சே! 401 00:27:41,720 --> 00:27:43,600 ஒவ்வொன்றாக சம்பவங்கள். 402 00:27:44,920 --> 00:27:48,040 மாலை முழுதும் நான் பதில் சொல்லிட்டே இருக்கேன். 403 00:27:48,960 --> 00:27:52,320 "அந்த குழந்தைக்கு என்னாச்சு?" "அவனுக்கு சுகமில்லையா?" 404 00:27:52,400 --> 00:27:56,680 "உங்க மாணவர்களை நீங்க நல்லா கவனிக்கிறது இல்லையா?" என்ன சொல்றது, சுப்ரியா? 405 00:27:56,760 --> 00:28:00,000 அது உளவியல் பிரச்சினை, கண்டறிவது எளிதல்ல. 406 00:28:00,080 --> 00:28:01,320 ஆனா நான் சொல்லலையா 407 00:28:01,400 --> 00:28:04,760 அவனை ரீயூனியன் நடவடிக்கைகளிலிருந்து தள்ளி வைக்கும்படி. என்ன? 408 00:28:04,840 --> 00:28:07,280 அவன் என்னை நம்பி பேசணும்னு விரும்பினேன். 409 00:28:07,360 --> 00:28:10,320 சுப்ரியா, உங்களுக்கு நான் தெளிவான, எளிதான உத்தரவிட்டேன். 410 00:28:11,400 --> 00:28:14,640 நீங்க அதை பின்பற்றாததால, விஷயங்கள் கைமீறிப் போச்சு. 411 00:28:16,320 --> 00:28:18,120 எனவே இப்ப, 412 00:28:18,200 --> 00:28:21,400 நான் முடிவு செய்யும்வரை, வேதாந்த் மருத்துவமனையில் இருப்பான். 413 00:28:22,640 --> 00:28:24,200 -அது உதவாது. -முடிஞ்சுது. 414 00:28:24,280 --> 00:28:26,280 எல்லா ஏற்பாடுகளும் செஞ்சாச்சு. 415 00:28:26,360 --> 00:28:28,760 -தண்டனையா நினைப்பான். -இது அவன் நல்லதுக்கு. 416 00:28:28,840 --> 00:28:30,280 -இது நல்லதில்லை. -ஆகும். 417 00:28:30,680 --> 00:28:33,480 ஒரு நர்ஸாவது அவனை கவனிப்பாங்க. 418 00:28:34,640 --> 00:28:35,480 முடிஞ்சுது. 419 00:28:36,200 --> 00:28:37,160 நன்றி. 420 00:28:42,720 --> 00:28:45,320 நீங்கள் அழைக்க முயற்சிக்கும் எண் கிடைக்கவில்லை. 421 00:28:45,400 --> 00:28:46,760 பிறகு பார்ப்போம். 422 00:28:46,840 --> 00:28:48,720 நீங்கள் அழைக்க முயற்சிக்கும் எண்-- 423 00:28:48,800 --> 00:28:50,280 எடு! 424 00:28:52,560 --> 00:28:55,720 -என்ன ஆச்சு? -அவ நிஜமா கிளம்பிட்டா! 425 00:28:55,800 --> 00:28:58,880 சுயாஷ், உன் டிவி தொடர் நின்னுடுச்சுல்ல? 426 00:28:59,520 --> 00:29:01,480 இப்ப உன் காதலியும் போயிட்டா. 427 00:29:01,560 --> 00:29:02,960 யார் பேசறது பாரு? 428 00:29:03,560 --> 00:29:05,600 வேலையில்லாத இசைக் கலைஞன்! 429 00:29:05,680 --> 00:29:08,400 ஹேய், கைஸ்! நிதானிங்க. சில்! 430 00:29:08,480 --> 00:29:09,680 பரவாயில்லை, டூட். 431 00:29:09,760 --> 00:29:13,240 கோபமாக, எரிச்சலாகிறது சகஜம்தான்... 432 00:29:13,320 --> 00:29:15,560 அழுத்தத்தில் இருக்கையில். 433 00:29:15,640 --> 00:29:17,280 ஏன், ட்யூட்? 434 00:29:17,360 --> 00:29:21,320 நீ தெரபிஸ்டை பார்க்கிறதா நான் எங்கேயோ படிச்சேன். 435 00:29:21,400 --> 00:29:23,640 -ஆமாம், பாக்குறேன். அதனால-- -கைஸ்! 436 00:29:23,720 --> 00:29:24,840 கைஸ், வாங்க! 437 00:29:26,560 --> 00:29:29,200 -நீ நலமா? -நான் நலம், அவன் நலமா? 438 00:29:29,280 --> 00:29:33,360 தன் பிரச்சினைகளை மறைக்க மற்றவர்களை கொடுமை படுத்துவாங்களே அது போல. 439 00:29:33,440 --> 00:29:35,400 அதனால என்னை கொடுமை படுத்தினே. இல்ல? 440 00:29:35,480 --> 00:29:37,480 15 வருஷமாச்சு. அதை மறந்துடு! 441 00:29:37,560 --> 00:29:39,720 -கைஸ், நிறுத்துங்க! -என்னை கொடுமை படுத்தறதை ரசிச்சே! 442 00:29:41,560 --> 00:29:43,440 சுயாஷ், அமைதியாகு. 443 00:29:44,080 --> 00:29:47,800 சுயாஷ், நான்சியை மறக்க ஒரு யோசனை இருக்கு. 444 00:29:47,880 --> 00:29:50,760 ஆசிரியர்கள் நாளை நமக்கு ஒரு நாடகம் வழங்குவாங்க. 445 00:29:51,360 --> 00:29:53,440 நாம ஏன் அதையே செய்யக் கூடாது? 446 00:29:53,520 --> 00:29:56,120 -சுயாஷுக்கு முன்னணி பாத்திரம். -தெளிவா. 447 00:29:59,120 --> 00:30:00,920 வேதாந்துக்கு டின்னர் கொடுங்க. 448 00:30:01,480 --> 00:30:02,960 -ஹாய். -ஹலோ. 449 00:30:03,040 --> 00:30:06,120 பாரு, ஒரு ஆசிரியர் இன்னொரு ஆசிரியரிடம் வழியறான். 450 00:30:07,640 --> 00:30:08,720 எப்படி இருக்கான்? 451 00:30:09,720 --> 00:30:13,240 கொஞ்சம் பரவாயில்லை, ஆனால் நிறைய பேச மாட்டான். 452 00:30:13,320 --> 00:30:16,000 அதனால அவனுக்கு என்ன பிரச்சினை என சொல்வது கடினம். 453 00:30:17,160 --> 00:30:18,480 ஒருவேளை யாரோ. 454 00:30:20,200 --> 00:30:24,760 பிள்ளைங்க தேர்வுகளை எண்ணி பயப்படுவதாக நினைக்கிறோம், 455 00:30:24,840 --> 00:30:26,400 ஆசிரியர்கள், வார்டன்களை. 456 00:30:27,520 --> 00:30:28,720 ஆனால் உண்மையில், 457 00:30:29,720 --> 00:30:32,080 பிள்ளைகள் ஒருவரை ஒருவர் பார்த்து பயப்படுறாங்க. 458 00:30:32,920 --> 00:30:35,480 விளக்கணைத்த பிறகு ஹாஸ்டலில் நிறைய நடக்கும். 459 00:30:37,760 --> 00:30:39,320 கொடுமை படுத்தறதா நினைக்கிறீங்க. 460 00:30:41,080 --> 00:30:42,160 சாத்தியம் தான். 461 00:30:45,280 --> 00:30:46,600 நான் அவனிடம் பேசலாமா? 462 00:30:48,680 --> 00:30:50,240 அவன் பேசினா, முயற்சி செய்ங்க. 463 00:31:00,960 --> 00:31:02,440 குலாப் ஜாமூன் பிடிக்காதா? 464 00:31:04,360 --> 00:31:08,160 அப்போ பாக்கெட் மணியை என்ன செய்வே? 465 00:31:09,320 --> 00:31:10,960 அதை சேமிப்பேன். 466 00:31:11,560 --> 00:31:15,760 நான் வீடு திரும்பியதும் ட்ரெவர் சாக்லெட் ஃபாக்டரியில் மிட்டாய் வாங்குவேன். 467 00:31:15,840 --> 00:31:18,080 அவங்க பர்கர் பிடிக்கும். 468 00:31:21,480 --> 00:31:23,480 சூப்பர் ஹீரோ மிட்டாய் கூட இருக்கு. 469 00:31:23,560 --> 00:31:24,800 சூப்பர்ஹீரோ பிடிக்குமா? 470 00:31:26,200 --> 00:31:28,680 'ஷேடோ பாய்' கூட தெரிஞ்சிருக்குமே. 471 00:31:29,800 --> 00:31:30,960 தெரியாதா? 472 00:31:31,040 --> 00:31:33,360 இந்த பள்ளி மாணவன்தான் ஷேடோ பாய். 473 00:31:37,080 --> 00:31:38,640 அவன் இங்கிருந்த... 474 00:31:40,120 --> 00:31:42,280 பசி அரக்கர்களை பார்த்து பயப்படுவான். 475 00:31:43,600 --> 00:31:45,240 அதுங்க தின்னுடும்னு நினைப்பான். 476 00:31:47,240 --> 00:31:51,080 அதனால இருட்டில் ஒளிஞ்சுப்பான். 477 00:31:51,760 --> 00:31:52,920 நிழலில். 478 00:31:54,240 --> 00:31:55,160 என்னைப் போலவா? 479 00:32:01,120 --> 00:32:02,320 இன்னும் இருக்கு. 480 00:32:02,400 --> 00:32:06,600 ஒரு நாள், அவன் வருத்தமா, இருட்டில் தனியா அழுத போது, 481 00:32:08,000 --> 00:32:09,800 ஃபீனிக்ஸ் பாய் காப்பாற்ற வந்தான். 482 00:32:10,600 --> 00:32:12,440 அவனிடம் கையை கொடுத்து சொன்னான், 483 00:32:12,520 --> 00:32:16,480 "இருட்டிலிருந்து வெளியே வா. சேர்ந்து இந்த அரக்கர்களை எதிர்ப்போம். " 484 00:32:17,480 --> 00:32:18,960 வெளிச்சத்துக்கு வந்ததும், 485 00:32:19,680 --> 00:32:22,560 அவனுக்கு எப்போதும் சூப்பர்பவர்ஸ் இருந்தது புரிந்தது. 486 00:32:24,360 --> 00:32:28,200 அவன் தன் மனதால் யாரையும் கட்டுப்படுத்த முடியும். 487 00:32:29,920 --> 00:32:35,600 அதனால் பசியோடு இருந்த எல்லா அரக்கர்களையும் ஒரு அறையில் பூட்டி பட்டினி போட்டான், 488 00:32:36,320 --> 00:32:41,040 ஒன்றை ஒன்று தின்று எல்லாம் அழிந்து போயின. 489 00:32:43,360 --> 00:32:45,480 கதையின் நீதி தெரியுமா? 490 00:32:46,960 --> 00:32:51,080 நீ 'ஷேடோ பாயாக' இருந்து, எந்த ஃபினிக்ஸ் பாயாவது உதவினால், 491 00:32:52,160 --> 00:32:53,400 நீ அதை ஏற்கணும். 492 00:32:55,160 --> 00:32:57,200 உனக்கும் சூப்பர்பவர்ஸ் கிடைக்கும். 493 00:32:59,480 --> 00:33:00,480 அதன் பிறகு... 494 00:33:02,040 --> 00:33:03,600 நீ எதிர்த்து போராடலாம், நினா-- 495 00:33:09,280 --> 00:33:10,880 எதிர்த்து போராடலாம், வேதாந்த். 496 00:33:20,760 --> 00:33:21,760 கதகதப்பா இருக்கா? 497 00:33:22,360 --> 00:33:23,680 சரி, இப்ப தூங்கு. 498 00:33:28,000 --> 00:33:28,960 அம்மா? 499 00:33:30,680 --> 00:33:31,920 மேடம், சாரி. 500 00:33:34,920 --> 00:33:37,200 நானும் நிழலை விட்டு வெளியே வர முடியுமா? 501 00:33:42,280 --> 00:33:45,000 அரக்கர்கள் உன்னையும் தொந்தரவு செய்யறாங்களா? 502 00:33:48,320 --> 00:33:50,000 சத்தியமா, நீ விட்டா... 503 00:33:51,880 --> 00:33:53,720 அவர்களை உன்னிடம் வர விட மாட்டேன். 504 00:34:04,480 --> 00:34:07,120 -மறந்துடு, வா. -பிரச்சினை ஆகும். 505 00:34:07,200 --> 00:34:10,040 -நான் யாரையும் தூங்க விட மாட்டேன். -இல்லை, ப்ரோ... 506 00:34:10,120 --> 00:34:12,320 எல்லார் அறைக்கும் போய் குறும்பு செய்வோம். 507 00:34:12,440 --> 00:34:13,680 இல்லை. புரிய வை-- 508 00:34:13,760 --> 00:34:17,040 இன்றிரவு படுக்கையை ஆட்டும் பேய் ஓல்ட் பாய்ஸை சந்திக்கும். 509 00:35:00,080 --> 00:35:04,000 ஷேடோ பாய் 510 00:35:35,840 --> 00:35:37,480 நிறுத்துங்க கைஸ், ப்ளீஸ்! 511 00:35:39,520 --> 00:35:42,080 என் குறும்பை வச்சு என்னையே பயமுறுத்த பார்க்கறீங்க. 512 00:35:44,600 --> 00:35:46,440 நிறுத்துங்க கைஸ், ப்ளீஸ்! 513 00:35:58,440 --> 00:35:59,960 ப்ளீஸ், கைஸ்! 514 00:36:00,040 --> 00:36:02,160 என்னால மூச்சு விட முடியலை. 515 00:36:02,800 --> 00:36:04,280 வேடிக்கையா இல்லை, கைஸ்! 516 00:36:05,000 --> 00:36:06,200 ப்ளீஸ் என்னை விடுங்க. 517 00:39:11,160 --> 00:39:13,160 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 518 00:39:13,200 --> 00:39:15,200 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்