1 00:00:02,000 --> 00:00:07,000 Downloaded from YTS.MX 2 00:00:08,000 --> 00:00:13,000 Official YIFY movies site: YTS.MX 3 00:00:21,647 --> 00:00:23,607 டிரிங்! 4 00:00:43,836 --> 00:00:44,962 மன உளைச்சலுக்கான உதவி 5 00:00:45,045 --> 00:00:46,129 மருத்துவர் வெளியே போயிருக்கிறார் 6 00:01:32,426 --> 00:01:36,471 சீக்கிரம், சாலி. இந்தப் பயிற்சியைத் திட்டமிட்டதே நான் தான். நானே தாமதமாக போகக்கூடாது. 7 00:01:36,555 --> 00:01:38,390 உங்கள் பின்னாடி தான் இருக்கிறேன், அண்ணா. 8 00:01:44,188 --> 00:01:45,564 கவனம்! 9 00:01:45,647 --> 00:01:47,316 காலை வணக்கம், சார்லி பிரவுன். 10 00:01:47,399 --> 00:01:50,527 காலை வணக்கம், லைனஸ், லூசி. இன்றைய பயிற்சிக்கு நீங்கள் தயாரா? 11 00:01:50,611 --> 00:01:54,114 ஏன் பயிற்சி செய்ய வேண்டும்? எந்தப் போட்டியிலும் நாம் தான் ஜெயிக்க மாட்டோமே. 12 00:01:54,198 --> 00:01:56,658 அதனால் தான் சொல்கிறேன். தோல்வியடைந்தே சோர்ந்துவிட்டேன். 13 00:01:56,742 --> 00:01:58,535 இப்படி யோசி, சார்லி பிரவுன், 14 00:01:58,619 --> 00:02:01,580 வெற்றியைவிடத் தோல்வியிலிருந்துத் தான் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். 15 00:02:01,663 --> 00:02:04,750 அதன் மூலம் நான் இந்த உலகிலேயே, மிகப் பெரிய புத்திசாலி ஆகிவிடுவேன். 16 00:02:04,833 --> 00:02:08,503 நீ எனக்கு காலை வணக்கம் சொல்லமாட்டாயா, என் செல்ல பப்பூ? 17 00:02:08,586 --> 00:02:10,839 நான் உன்செல்ல பப்பூ கிடையாது! 18 00:02:10,923 --> 00:02:12,758 என்ன திட்டம், சார்லி பிரவுன்? 19 00:02:12,841 --> 00:02:15,928 புதிய சீருடைகளா? புதிய பிளேபுக்கா? அல்லது புதிய குவாட்டர்பேக்கா? 20 00:02:16,011 --> 00:02:18,055 இல்லை, புது பயிற்சியாளர். 21 00:02:19,014 --> 00:02:21,558 நீ அந்தளவுக்கு முட்டாள் இல்லை. 22 00:02:33,278 --> 00:02:35,322 -காலை வணக்கம், சார். -காலை வணக்கம், மார்ஸி. 23 00:02:35,405 --> 00:02:37,115 கால்பந்தாட்டத்தைப் பற்றி கற்றுக் கொண்டிருக்கிறேன். 24 00:02:37,199 --> 00:02:40,160 களத்திற்குச் சென்று பழமையான ஹாக்ஸ்கின்னை உதைக்க நான் தயார். 25 00:02:40,244 --> 00:02:43,580 அது பிக்ஸ்கின், மார்ஸி. கால்பந்தாட்டத்தில் அனைத்தும் "பழமையானது" இல்லை. 26 00:02:43,664 --> 00:02:44,915 நீங்கள் என்ன சொன்னாலும் சரி, சார். 27 00:02:44,998 --> 00:02:47,876 என்னை "சார்" எனக் கூப்பிடாதே. இன்று நான் தான் "பயிற்சியாளர்." 28 00:02:47,960 --> 00:02:49,211 சரி, கவனியுங்கள். 29 00:02:51,755 --> 00:02:57,052 இங்கிருக்கும் சக், அடுத்த சீசனில் தன் அணி திறன் பட விளையாட உதவுமாறு என்னைக் கேட்டுக்கொண்டான். 30 00:02:57,135 --> 00:02:59,429 ஆனால் அது நல்ல விஷயம் போல் தெரியவில்லை. 31 00:03:00,597 --> 00:03:02,474 பயிற்சி செய்யத் தயாரா? நல்லது. 32 00:03:02,558 --> 00:03:05,561 என் ஆயத்தப் பயிற்சிகளை, குதிக்கும் பயிற்சியுடன் ஆரம்பிக்க விரும்புகிறேன். 33 00:03:05,644 --> 00:03:06,770 மார்ஸி? 34 00:03:06,854 --> 00:03:08,814 அவள் சொன்னது கேட்டதல்லவா. குதியுங்கள்! 35 00:03:11,567 --> 00:03:14,027 ஒன்று, இரண்டு, மூன்று, 36 00:03:14,111 --> 00:03:19,783 நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, 37 00:03:19,867 --> 00:03:21,910 11,12,13... 38 00:03:21,994 --> 00:03:25,539 -தாமதத்திற்கு மன்னிக்கவும், கோச். -தகுந்த காரணத்தை சொல்லணும், பிக்பென். 39 00:03:28,917 --> 00:03:33,964 சொல்கிறேன். நாளை அன்னையர் தினத்தையொட்டி மிட்டாய் கடையில் கூட்டம் நிறைய இருந்தது. 40 00:03:35,048 --> 00:03:36,300 என்ன? 41 00:03:36,383 --> 00:03:40,012 நாளைக்கா? அன்னையர் தினத்தை மறந்துவிட்டேன் என நம்பவே முடியவில்லை. 42 00:03:40,095 --> 00:03:42,306 அன்னையர் தினமா? அன்னையர் தினம் விசேஷமானது. 43 00:03:42,389 --> 00:03:43,807 பேசுவதை நிறுத்து, சக். 44 00:03:43,891 --> 00:03:45,267 நாம் எங்கே விட்டோம், மார்ஸி? 45 00:03:45,350 --> 00:03:47,561 நான் எண்ணிக்கையை விட்டுவிட்டேன். 46 00:03:47,644 --> 00:03:49,104 விட்டுத் தள்ளு. 47 00:03:49,188 --> 00:03:52,482 ஒரு சிறிய செயல் விளக்கம். சுறுசுறுப்பாக விளையாடும் போது, 48 00:03:52,566 --> 00:03:56,570 இது போல் அழுக்காகலாம். 49 00:03:56,653 --> 00:03:57,946 அவர்களை உள்ளே அழைத்து வா, மார்ஸி. 50 00:04:02,367 --> 00:04:05,078 வேடிக்கையான மூக்குடைய அந்த குட்டியை கவனியுங்கள். 51 00:04:05,162 --> 00:04:07,122 அந்த நகர்வுகளைப் பாருங்கள். 52 00:04:07,206 --> 00:04:09,166 சரி, குட்டி. நகர்வுகள் போதும். 53 00:04:12,753 --> 00:04:14,505 எளிமையாக உதைத்து ஆரம்பிக்கலாம். 54 00:04:14,588 --> 00:04:16,005 சரி, பந்தை உதைக்கத் தயாராக வை! 55 00:04:23,764 --> 00:04:25,390 நன்றாக உதைத்தாய், குட்டி. 56 00:04:25,474 --> 00:04:29,144 தவறவிட்டதை நினைக்காதே. உதைப்பதை மறந்துவிடு. பந்தைக் கடத்திச் செல்லும் முறையை அறிந்துக்கொள்வோம். 57 00:04:30,020 --> 00:04:34,733 என் அம்மாவுக்கு என்ன பிடிக்குமென தெரியவில்லை. நீ அறிவாளி, லைனஸ். என்ன செய்யப் போகிறாய்? 58 00:04:34,816 --> 00:04:38,487 வந்து, தினமும் என் சாப்பாட்டுக் கூடையில் என் அம்மா சிறு குறிப்புகளை வைப்பார், 59 00:04:38,570 --> 00:04:39,696 இதோ இது போன்று. 60 00:04:41,823 --> 00:04:43,659 “அன்பு மகனே, நன்றாகப் படி. 61 00:04:43,742 --> 00:04:45,994 நினைவில்கொள், நீ தேடும் உண்மையான சந்தோஷம் 62 00:04:46,078 --> 00:04:47,746 உனக்குள்ளேயே இருக்கிறது. 63 00:04:47,829 --> 00:04:50,415 மதிய உணவு ஒரு கூடுதல் பரிசு அவ்வளவுதான். அன்புடன், அம்மா.” 64 00:04:51,375 --> 00:04:53,210 சில சமயம், ரொம்ப உணர்ச்சி வசப்படுவார். 65 00:04:53,293 --> 00:04:55,587 நேராகச் சென்று வலது பக்கம் திரும்பு. 66 00:04:56,713 --> 00:04:58,632 இப்போது இடது பக்கம். இப்போது பின்னாடித் திரும்பு. 67 00:05:03,345 --> 00:05:06,682 திரும்ப வராதே. அதில் போகத்தான் முடியும், திரும்பி வரக் கூடாது. 68 00:05:06,765 --> 00:05:10,561 இந்த வருடம், என் அம்மாவிற்கு நன்றி தெரிவிக்க ஒரு கடிதம் எழுதப் போகிறேன். 69 00:05:10,644 --> 00:05:13,564 துரதிர்ஷ்டவசமாக, என்ன எழுத வேண்டுமென இனிமேல் தான் யோசிக்கணும். 70 00:05:13,647 --> 00:05:16,191 எனக்கு அவ்வளவாக எழுத வராது. 71 00:05:16,275 --> 00:05:18,777 “ரோஜாக்கள்... வயலட் நிறம்”... 72 00:05:21,071 --> 00:05:24,283 இப்படி விளையாடக் கூடாது! அவனைச் சமாளி. 73 00:05:24,366 --> 00:05:26,034 நான் சொல்வது அவனுக்கு கேட்குமா? 74 00:05:26,618 --> 00:05:28,412 இருவரும் என்ன செய்கிறீர்கள்? 75 00:05:28,495 --> 00:05:32,541 நான் என் அம்மாவுக்கு கலைநயமிக்கப் பொருளைப் பரிசளிக்கப் போகிறேன். 76 00:05:32,624 --> 00:05:34,168 அப்படியா? என்ன அது? 77 00:05:34,251 --> 00:05:36,044 தெரிந்திருந்தால், சொல்லி இருப்பேனே! 78 00:05:36,753 --> 00:05:40,424 -நீ உன் அம்மாவுக்கு என்ன கொடுக்கப் போகிறாய்? -சமீபமாக, என் அம்மா என்னிடம் நன்றாகப் பழகுகிறார், 79 00:05:40,507 --> 00:05:44,136 எனவே அவருக்கு ஐந்து டாலர்கள் மதிப்புள்ள பரிசினை வழங்கப் போகிறேன். 80 00:05:44,219 --> 00:05:45,721 நல்ல யோசனை. 81 00:05:45,804 --> 00:05:47,139 பணமாகவே கொடுத்துவிடேன். 82 00:05:47,222 --> 00:05:49,474 உன்னிடம் பந்தே இல்லை. 83 00:05:50,184 --> 00:05:52,144 என் அம்மாவுக்கு சொனாட்டா ராகத்தில் இசையமைக்கப் போகிறேன். 84 00:05:52,227 --> 00:05:56,148 “நீங்கள் தான் சிறந்த அம்மா,” என்று எஃப் மேஜரில் வாசிக்கப் போகிறேன். 85 00:05:56,231 --> 00:05:57,399 என் அம்மாவுக்கு கட்டிப்பிடிக்க பிடிக்கும், 86 00:05:57,482 --> 00:06:00,110 எனவே அதற்கான கூப்பன் தயாரிக்கப் போகிறேன். 87 00:06:00,194 --> 00:06:02,821 நில்! உனக்குப் பின்னாடிப் பார். 88 00:06:07,409 --> 00:06:11,330 சிறுவனாக இருந்தாலும் நன்றாக விளையாடினாய். ஓடு! போ, போ! 89 00:06:15,042 --> 00:06:16,919 ஆமாம்! 90 00:06:17,002 --> 00:06:19,671 சிரமப்பட்டு விளையாடினாய், ஆனால் டச்டவுன்! 91 00:06:19,755 --> 00:06:22,090 எல்லோரும், அதை... கவனித்தீர்களா? 92 00:06:22,174 --> 00:06:23,759 -அன்னையர் தினம். -அன்னையர் தின வாழ்த்துகள். 93 00:06:23,842 --> 00:06:25,135 அன்னையர் தினம் சிறப்பு வாய்ந்ததல்லவா? 94 00:06:25,219 --> 00:06:27,346 -அன்னையர் தின வாழ்த்துக்கள். -எனக்கு அன்னையர் தினம் பிடிக்கும். 95 00:06:31,558 --> 00:06:33,060 எல்லோரும் கொஞ்சம் கவனிக்கிறீர்களா? 96 00:06:33,644 --> 00:06:37,064 எதுவுமே சிறப்பாக இருந்தால்தான் நீங்கள் செய்வீர்களா? 97 00:06:38,690 --> 00:06:41,527 உண்மையில், நான் கடைக்குச் சென்று கலைப்பொருட்கள் வாங்க வேண்டும். 98 00:06:41,610 --> 00:06:43,070 நிறைய கூப்பன்கள் தயாரிக்க வேண்டும். 99 00:06:43,153 --> 00:06:45,781 சொனாட்டா இசையின் கடைசிப் பகுதியை மேம்படுத்த வேண்டும். 100 00:06:45,864 --> 00:06:48,825 வாழ்த்து அட்டையுடன் டப்பா நிறைய சாக்லெட்டுகள் கொடுத்தால் நன்றாக இருக்கும். 101 00:06:49,368 --> 00:06:51,203 நான் கடிதம் எழுத வேண்டும். 102 00:06:54,373 --> 00:06:57,000 மன்னித்துவிடு, கோச். நானும் போக வேண்டும். 103 00:06:57,084 --> 00:06:59,628 விரைவில் அடுத்த பயிற்சிக்கு உன்னை அழைக்கிறேன். 104 00:07:02,130 --> 00:07:04,007 சரி, எல்லோரும் போய்த் தொலையுங்கள். 105 00:07:04,091 --> 00:07:06,760 ஆனால் அடுத்த சீசனில் தோற்றுவிட்டால் என்னைக் குறை சொல்லாதீர்கள். 106 00:07:13,016 --> 00:07:16,228 குறைந்தபட்சம் ஒருவனாவது அன்னையர் தினத்தில் கவனம் சிதறாமல் இருக்கிறானே. 107 00:07:21,441 --> 00:07:24,152 நீயுமா? எல்லோரும் என்னை விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். அடச்சே. 108 00:07:25,320 --> 00:07:27,531 நான் இருக்கிறேனே, கோச். சார். 109 00:09:47,462 --> 00:09:49,256 இப்போது தான் தந்திரமான விஷயத்தை சொல்லப் போகிறேன். 110 00:09:49,339 --> 00:09:52,759 நான் திரும்பி நின்று, பந்தைக் கடத்திச் செல்வது போல போலியாக நடிக்கிறேன். 111 00:09:52,843 --> 00:09:55,137 ஆனால் பந்தை நானே வைத்துக்கொண்டு, 112 00:09:55,220 --> 00:09:57,973 தந்திரமாக நகர்ந்து மறு பக்கத்தினைத் தவிர்த்துவிட்டு, 113 00:09:58,056 --> 00:10:00,934 டச்டவுன் இடத்திற்கு ஓடி சென்றுவிடுவேன். 114 00:10:01,018 --> 00:10:02,227 சார்... 115 00:10:03,729 --> 00:10:05,772 இதெல்லாமே சுவாரஸ்யமானவை தான், சார், 116 00:10:05,856 --> 00:10:08,692 ஆனால் நாம் இதை மற்ற வீரர்கள் இருக்கும் போது செய்ய வேண்டும். 117 00:10:08,775 --> 00:10:12,613 இல்லை. என் திட்டத்தை அன்னையர் தினத்திற்காக மாற்றிக்கொள்ள மாட்டேன். 118 00:10:13,447 --> 00:10:16,450 சந்தோஷம் தரும் வேறெதாவது விஷயத்தைச் செய்யலாம். 119 00:10:16,533 --> 00:10:18,493 நான் சந்தோஷமாக இல்லையென யார் சொன்னது? 120 00:10:18,577 --> 00:10:21,955 சந்தோஷமாக இல்லாவிட்டால் முகம் இப்படியா இருக்கும்? 121 00:10:24,166 --> 00:10:26,668 -அதைப் பற்றி பேசலாமா, சார்? -வேண்டாம். 122 00:10:33,217 --> 00:10:36,011 உங்களுக்கு அம்மா இல்லாதது எனக்கு வருத்தம் தான், சார். 123 00:10:36,094 --> 00:10:39,014 அன்னையர் தினத்தை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என்றே தெரியவில்லை. 124 00:10:39,097 --> 00:10:41,391 அன்னையர் தினம் என்பது... மடத்தனம்! 125 00:10:51,318 --> 00:10:54,988 இது பற்றி மனம் திறந்து பேசியது நல்லது தான், சார். 126 00:11:10,629 --> 00:11:12,548 நீ வீட்டிற்குப் போ, மார்ஸி. 127 00:11:12,631 --> 00:11:15,634 நாளைய தினத்திற்காக நீ ஏதாவது தயார் செய்ய வேண்டியிருக்கலாம். 128 00:11:15,717 --> 00:11:19,096 முடிந்துவிட்டது, சார். கப்கேக்குகள் செய்துள்ளேன். 129 00:11:19,179 --> 00:11:21,265 நான் இங்கு உங்களுடனேயே இருக்கிறேன். 130 00:11:23,475 --> 00:11:25,435 எல்லா வருடமும் ஒரே மாதிரி தான் இருக்கும். 131 00:11:25,519 --> 00:11:29,523 நன்றாகத் தான் இருப்பேன், ஆனால் யாராவது அன்னையர் தினத்தைப் பற்றி பேசுவர். 132 00:11:29,606 --> 00:11:33,986 உடனே எனக்கு மட்டும் தான் அம்மா இல்லை என்ற ஞாபகம் வந்துவிடும். 133 00:11:34,653 --> 00:11:36,780 கஷ்டமாகத் தான் இருக்கும், சார். 134 00:11:36,864 --> 00:11:38,490 ஆமாம், மார்ஸி. 135 00:11:46,957 --> 00:11:48,917 போன வருடம், அந்த வாரம் முழுவதும் 136 00:11:49,001 --> 00:11:51,253 பள்ளிக்கு போகாமலிருக்க உடம்பு சரியில்லாதது போல நடித்தேன். 137 00:11:51,336 --> 00:11:54,673 ஞாபகமிருக்கிறது. மருந்துப் பெட்டியுடன் வந்தீர்கள். 138 00:11:57,885 --> 00:12:00,888 வேண்டுமானால், அன்னையர் தினத்தை என் வீட்டில் கொண்டாடுங்களேன். 139 00:12:00,971 --> 00:12:02,639 என் அம்மாவை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன். 140 00:12:03,307 --> 00:12:06,727 உன் அம்மா அன்பானவர், ஆனால் அது சரிவராது. 141 00:12:07,227 --> 00:12:09,313 நான் வேறெந்த வகையிலாவது உதவ முடியுமா? 142 00:12:11,106 --> 00:12:12,357 தெரியவில்லை, மார்ஸி. 143 00:12:12,441 --> 00:12:16,028 அன்னையர் தினத்தைப் போக வைத்து மீண்டும் வராத மாதிரி செய்ய முடியுமா? 144 00:12:16,820 --> 00:12:18,739 அது முடியாது, சார். 145 00:12:19,448 --> 00:12:21,033 எனக்கு அப்படி தோன்றவில்லை. 146 00:12:25,162 --> 00:12:27,122 சக்கின் கால்பந்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வரலாம். 147 00:12:29,416 --> 00:12:32,753 “என் அம்மாவிற்கு.” வேண்டாம். 148 00:12:33,295 --> 00:12:36,924 “அன்புள்ள அம்மா.” வேண்டாம். 149 00:12:38,383 --> 00:12:40,093 “ஓ, என் அம்மாவே.” 150 00:12:43,305 --> 00:12:44,473 “ஹே, அம்மா.” 151 00:12:46,350 --> 00:12:48,227 கடிதம் எழுதுவது, அழிந்துப்போன கலை. 152 00:12:49,853 --> 00:12:50,854 “அம்மா.” 153 00:12:51,355 --> 00:12:53,065 நகரு, லைனஸ். 154 00:12:53,148 --> 00:12:56,443 அன்னையர் தின பரிசை தயார் செய்ய, எனக்கு இந்த மேஜை வேண்டும். 155 00:13:02,074 --> 00:13:05,410 வாட்டர்கலரில் அம்மாவின் வரைபடத்தை வரையப் போகிறேன். 156 00:13:05,494 --> 00:13:07,996 அவர் அதை ஒருமுறை பார்த்துவிட்டு, 157 00:13:08,080 --> 00:13:10,707 “இந்தப் படத்தை குளிர்சாதனப் பெட்டியின் மேல் வைக்க வேண்டும்” என சொல்வார். 158 00:13:10,791 --> 00:13:12,501 நல்ல யோசனை. 159 00:13:12,584 --> 00:13:15,254 சிறந்த பரிசுகள் எல்லாம் ஆத்மார்த்தமானவை. 160 00:13:15,337 --> 00:13:18,131 இதயம், இருதயம். இது கலைநயம். 161 00:13:18,632 --> 00:13:24,179 சிறந்த கலைஞர் ஒழுங்காகவும், கவனமாகவும், 162 00:13:24,263 --> 00:13:27,349 தனது தலைசிறந்த படைப்பை அவசரப்படாமலும் செய்வார். 163 00:13:27,432 --> 00:13:28,684 முடிந்துவிட்டது! 164 00:13:31,103 --> 00:13:33,021 சரி, நீ அம்மாவைப் பார்த்தாயா? 165 00:13:36,191 --> 00:13:40,612 நான் வேறெதாவது செய்யலாம் என நினைக்கிறேன். ஈர்க்கும் வகையில். 166 00:13:41,238 --> 00:13:45,117 நேர்மையாக இருப்பதற்கும், ரொம்ப நேர்மையாக இருப்பதற்கும் நூல் அளவு வித்தியாசம் தான். 167 00:13:47,870 --> 00:13:49,872 அழைப்புமணியை அடிக்க மாட்டீர்களா? 168 00:13:49,955 --> 00:13:51,707 நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை. 169 00:13:53,667 --> 00:13:55,669 கைக்குட்டை வேண்டுமா? 170 00:13:56,670 --> 00:13:59,214 நான் அழவில்லை, யோசிக்கிறேன். 171 00:13:59,298 --> 00:14:02,426 சில நேரங்களில் இரண்டும் ஒன்று போலவே இருக்கிறது. 172 00:14:02,509 --> 00:14:04,678 சரி, தேவைப்பட்டால் சொல்லுங்கள். 173 00:14:08,932 --> 00:14:11,101 நான் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறேன் என்றே தெரியவில்லை. 174 00:14:11,685 --> 00:14:13,854 உங்கள் அம்மாவிற்காக ஏங்குகிறீர்களோ என்னமோ? 175 00:14:13,937 --> 00:14:16,940 எனக்கு அம்மாவே இல்லை. எப்படி அம்மாவிற்காக ஏங்குவேன்? 176 00:14:17,608 --> 00:14:19,943 வந்து, அம்மாக்கள் செய்யும் விஷயங்களுக்காக ஏங்கலாம், 177 00:14:20,027 --> 00:14:22,070 அதாவது உங்களுக்குப் பிடித்த ரொட்டிகளை சமைப்பது, 178 00:14:22,154 --> 00:14:24,656 கையில் காயம் ஏற்பட்டால் கட்டுப் போடுவது 179 00:14:24,740 --> 00:14:26,200 உங்களுக்குப் பிடித்த பாடலைப் பாடுவது? 180 00:14:26,283 --> 00:14:27,618 இதற்காகவெல்லாம் நான் ஏங்கவில்லை. 181 00:14:27,701 --> 00:14:31,747 அம்மா செய்ய வேண்டியவற்றை என் அப்பா செய்வார். என் அப்பா சிறந்தவர். 182 00:14:32,748 --> 00:14:34,499 உங்கள் அப்பா ரொம்ப அன்பானவர். 183 00:14:35,375 --> 00:14:37,461 உங்களுக்கு ஒன்றுமில்லையே, சார்? 184 00:14:38,003 --> 00:14:41,256 மார்ஸி, எல்லா வகையான அம்மாக்களும் இருக்கின்றனர் தானே? 185 00:14:41,798 --> 00:14:44,593 கண்டிப்பாக. வளர்ப்பு குழந்தைகளின் அம்மாக்கள் மோசமாக இருப்பார்கள். 186 00:14:44,676 --> 00:14:48,180 தத்தெடுத்தக் குழந்தைகளுக்கும் அப்படித் தான். சில குழந்தைகளுக்கு இரண்டு அம்மாக்கள் கூட இருப்பார்கள். 187 00:14:48,263 --> 00:14:53,560 சரி. என்னைப் போன்ற அம்மா இல்லாத குழந்தைகளுக்கு அம்மாவைப் போல் ஒருவர் இருப்பார். 188 00:14:54,144 --> 00:14:57,898 எல்லா அம்மாக்களும் கொண்டாடப்பட வேண்டியவர்கள், இல்லையா? 189 00:14:57,981 --> 00:14:59,233 நிச்சயமாக. 190 00:14:59,733 --> 00:15:01,610 நான் அதைத் தான் செய்ய போகிறேன். 191 00:15:01,693 --> 00:15:04,738 அன்னையர் தினத்திற்கு, நான் என் அப்பாவை கொண்டாடப் போகிறேன். 192 00:15:04,821 --> 00:15:06,198 ரொம்ப சுலபம். 193 00:15:06,281 --> 00:15:09,826 அன்னையர் தினத்திற்கான பரிசுகளுள் ஒன்றை வாங்கினால் போதும். 194 00:15:11,787 --> 00:15:12,996 வாழ்த்து அட்டை போன்றா? 195 00:15:13,080 --> 00:15:15,707 ஆமாம், அதே தான்! வாழ்த்து அட்டை! 196 00:15:15,791 --> 00:15:20,128 நான் அப்பாவிற்கு வாழ்த்து அட்டை வாங்கப் போகிறேன். சிறப்பு! பிரச்சனை முடிந்தது. 197 00:15:20,212 --> 00:15:22,589 நீ ஒரு மேதை, மார்ஸி! 198 00:15:23,090 --> 00:15:24,091 நானா? 199 00:15:30,138 --> 00:15:33,016 நாளையே அன்னையர் தினம் என்பதை நம்பவே முடியவில்லை. 200 00:15:33,100 --> 00:15:35,644 போன வருடம் அன்னையர் தினம் வரவில்லையா? 201 00:15:35,727 --> 00:15:37,354 எல்லா வருடமும் தான் வருகிறது. 202 00:15:37,437 --> 00:15:40,983 கவனத்துடன் இரு, சாலி. நாம் ஒரு சிறந்த பரிசை யோசிக்க வேண்டும். 203 00:15:56,957 --> 00:15:59,084 சாலி, ஒரு யோசனை. 204 00:15:59,168 --> 00:16:01,587 அம்மாவிற்கு பிடித்த சாப்பாடு என்ன? 205 00:16:01,670 --> 00:16:03,505 அம்மா சமைக்காத உணவு. 206 00:16:03,589 --> 00:16:04,631 அதே தான். 207 00:16:04,715 --> 00:16:08,468 சரி, நாளை காலை உணவை அம்மா எழும் போதே, நாம் தரப் போகிறோம். 208 00:16:08,552 --> 00:16:10,596 மெத்தை விரிப்புகள் ஈரமாகிவிடாதா? 209 00:16:10,679 --> 00:16:15,184 மெத்தையில் வழங்கப்படும் உணவைப் பற்றிய நுணுக்கங்கள் உனக்குத் தெரியவில்லை. 210 00:16:15,267 --> 00:16:18,395 தட்டில் தான் பரிமாறுவோம், நேர்த்தியாக இருக்கும். 211 00:16:18,478 --> 00:16:20,105 இது ஏதோ சொதப்பலான விஷயமாகத் தெரிகிறது. 212 00:16:20,189 --> 00:16:22,524 என்னை நம்பு, அம்மாவிற்கு இது நிச்சயம் பிடிக்கும். 213 00:16:22,608 --> 00:16:24,693 ஆனால் நாம் முதலில் ஒத்திகை பார்க்க வேண்டும். 214 00:16:24,776 --> 00:16:27,446 நல்ல பீங்கான் தட்டுகளைக் கொண்டுவா. 215 00:16:27,529 --> 00:16:29,239 சரி, அண்ணா. 216 00:16:39,666 --> 00:16:41,418 மாவு 217 00:17:05,776 --> 00:17:07,194 என்ன... 218 00:17:14,159 --> 00:17:17,496 மெத்தையில் காலை உணவு கொடுப்பது குளறுபடி இல்லாமல் நடக்குமெனச் சொன்னீர்களே. 219 00:17:19,665 --> 00:17:21,165 கடவுளே. 220 00:20:15,632 --> 00:20:17,885 நாம் வந்துவிட்டோம். சரி. 221 00:20:17,968 --> 00:20:20,220 “ஒரு நல்ல அம்மாவாக இருப்பதற்கு, நன்றி, அப்பா” என 222 00:20:20,304 --> 00:20:23,015 எழுதியிருக்கும், அன்னையர் தின வாழ்த்து அட்டையை வாங்க வேண்டும். 223 00:20:23,098 --> 00:20:25,601 அர்த்தமுடையதாக... இருக்கிறது. 224 00:20:26,560 --> 00:20:30,355 “அன்புள்ள அம்மா, உங்கள் சிரிப்பு என் நாளை பிரகாசமாக்குகிறது” வேண்டாம். 225 00:20:30,439 --> 00:20:32,941 “அன்புள்ள அம்மா, உங்களுக்கு என் அன்பு”... 226 00:20:33,984 --> 00:20:37,404 “இனிப்பை விட இனிப்பான என் அம்மாவிற்கு.” இதுவும் வேண்டாம். 227 00:20:37,487 --> 00:20:39,698 அப்பாவுக்குப் பிடித்தமான வாழ்த்து அட்டைகள் எங்கிருக்கும்? 228 00:20:39,781 --> 00:20:43,452 ஏதாவது வண்டிகள், விளையாட்டுப் பொருட்கள் அல்லது ஃப்லேனல் சட்டை போன்றவை? 229 00:20:43,535 --> 00:20:45,996 இதெல்லாம் பூக்களாகவும், உணர்ச்சிவசமாகவும் இருக்கின்றன. 230 00:20:46,079 --> 00:20:48,624 “அம்மா, என் அம்மா!” அடக் கடவுளே. 231 00:20:48,707 --> 00:20:50,375 இல்லை. வேண்டவே வேண்டாம். 232 00:20:55,714 --> 00:20:58,926 என்னால் நம்ப முடியவில்லை. இங்கு என் அப்பாவிற்கு ஏற்றது போல ஒரு அட்டைக் கூட இல்லை. 233 00:20:59,009 --> 00:21:00,594 “உலகிலேயே மிகச்சிறந்த பாட்டிக்கு 234 00:21:00,677 --> 00:21:03,764 அன்னையர் தின வாழ்த்துகள்” என எழுதியிருக்கும் அட்டைகள் ஏதாவது பார்த்தாயா? 235 00:21:03,847 --> 00:21:07,226 அவரைப் போன்றே அந்த அட்டையும் சிறியதாகவும், இனிமையாகவும் இருக்க வேண்டும். 236 00:21:08,018 --> 00:21:09,228 கிடைப்பதற்கு வாழ்த்துக்கள். 237 00:21:11,688 --> 00:21:14,525 “என் பாட்டியைப் போல் வேறு யாரும் இல்லை. 238 00:21:14,608 --> 00:21:17,861 உலகத்திலேயே மிகச்சிறந்த பாட்டிக்கு அன்னையர் தின வாழ்த்துகள்.” 239 00:21:17,945 --> 00:21:19,696 இது பொருத்தமாக இருக்கும். 240 00:21:19,780 --> 00:21:22,407 நன்றி. மார்ஸி. 241 00:21:24,493 --> 00:21:25,827 மன்னிக்கவும். 242 00:21:25,911 --> 00:21:29,665 என் அப்பாவிற்கு தர அன்னையர் தின வாழ்த்து அட்டைகள் எங்கிருக்கும் எனச் சொல்ல முடியுமா? 243 00:21:32,167 --> 00:21:34,753 வந்து, நீங்கள் அட்டைகளை இன்னும் விரிவாகத் தேர்வு செய்ய வேண்டும். 244 00:21:34,837 --> 00:21:38,632 அனைவருக்கும் ஒரே மாதிரியான குடும்பம் இருப்பதில்லை, தெரியுமா. அடச்சே. 245 00:21:39,341 --> 00:21:40,384 மார்ஸி. 246 00:21:41,885 --> 00:21:43,053 மன்னிக்கவும். 247 00:21:44,429 --> 00:21:45,430 அட. 248 00:21:46,306 --> 00:21:47,474 நான் அப்படியே கைவிட மாட்டேன். 249 00:21:48,016 --> 00:21:49,017 போகலாம். 250 00:21:50,185 --> 00:21:51,895 பனிச் சறுக்கு பலகை பரவாயில்லையா? 251 00:21:51,979 --> 00:21:53,105 அப்பாவின் கால்கள் பலவீனமானவை. 252 00:21:53,188 --> 00:21:55,649 -பூக்கள் கொடுத்தால் என்ன? -அவருக்கு ஒவ்வாமை இருக்கிறது. 253 00:21:55,732 --> 00:21:56,650 காதல் 254 00:21:56,733 --> 00:21:59,611 -ஏதாவது நகைகள்? -அருமை, ஆனால் விலை அதிகமாக இருக்குமே. 255 00:21:59,695 --> 00:22:00,696 கேக் கொடுத்தால் என்ன? 256 00:22:00,779 --> 00:22:03,031 உப்பு பொருட்களைத்தான் அதிகம் சாப்பிடுவார். 257 00:22:03,115 --> 00:22:04,408 ஒருநாள் அவரை நீங்கள் பார்த்துக்கொள்கிறீர்களா? 258 00:22:04,491 --> 00:22:05,951 அவருக்கு வெள்ளரிக்காய் பிடிக்காது. 259 00:22:10,205 --> 00:22:11,582 அவருக்காக ஒரு பாடல் எழுதுகிறீர்களா? 260 00:22:11,665 --> 00:22:15,586 நான் கைவிடுகிறேன். இது முடியாது. 261 00:24:49,448 --> 00:24:52,826 சமையலறையைச் சுத்தம் செய்வது பரிசாக ஏற்றுக்கொள்ளப்படாதா? 262 00:24:52,910 --> 00:24:55,787 நேரமாகிறது. சீக்கிரம் பார்ப்போம். 263 00:24:58,582 --> 00:25:00,375 ஐஸ் க்ரீம் கேக் கொடுத்தால் என்ன? 264 00:25:02,252 --> 00:25:04,713 உண்மையில், இது நல்ல யோசனை தான். 265 00:25:10,886 --> 00:25:12,721 ஒரு ஐஸ் க்ரீம் கேக், கொடுங்கள். 266 00:25:14,681 --> 00:25:16,141 -ஸ்ட்ராபெர்ரி. -ஸ்ட்ராபெர்ரி. 267 00:25:16,934 --> 00:25:18,185 அதன் அளவு... 268 00:25:18,268 --> 00:25:19,978 -பெரியது. -பெரிதாக செய்யுங்கள். 269 00:25:24,107 --> 00:25:28,070 பணம் கொஞ்சம் குறைகிறது, சாலி. உன்னிடம் பணம் இருக்கிறதா? 270 00:25:30,155 --> 00:25:31,990 ஒரு குளறுபடியிலிருந்து இன்னொன்று. 271 00:25:36,787 --> 00:25:39,998 தெரியுமா, அன்னையர் தினம் என்பது வியாபார ரீதியான ஊழல். 272 00:25:41,542 --> 00:25:42,543 நன்றி, சார். 273 00:25:43,085 --> 00:25:46,797 நீ இந்த வியாபார ரீதியிலான ஊழல் கேக்கை சாப்பிட மாட்டாயா? 274 00:25:46,880 --> 00:25:48,465 கண்டிப்பாகச் சாப்பிடுவேன். 275 00:25:48,549 --> 00:25:52,511 ஐஸ் க்ரீம் என்று வந்துவிட்டால், என் கொள்கைகள் அனைத்தையும் தள்ளி வைத்துவிடுவேன். 276 00:26:01,854 --> 00:26:05,732 நான் இந்த அழகான கிரீடத்தை எங்கு வாங்கினேன் என ஆச்சரியப்படுகிறாயா? 277 00:26:05,816 --> 00:26:07,276 நிச்சயமாக யோசித்தேன். 278 00:26:07,359 --> 00:26:09,319 நாளைக்கு என் அம்மாவிற்குத் தர, இதை நானே செய்தேன், 279 00:26:09,403 --> 00:26:12,197 ஒரு நாள் ராணியாக இருந்தால் எப்படியிருக்கும் என்பதை அவர் உணர்வார். 280 00:26:12,281 --> 00:26:15,075 சும்மா போட்டுப் பார்த்தேன், ரொம்ப நன்றாக இருக்கிறது. 281 00:26:16,159 --> 00:26:18,287 என் அப்பாவிற்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லை... 282 00:26:20,914 --> 00:26:24,877 அன்னையர் தினம், அன்னையர் தினம்... எங்குப் போனாலும், இதைத் தான் கேட்கிறேன். 283 00:26:24,960 --> 00:26:29,965 இன்னொரு முறை “அன்னையர் தினம்” எனக் கேட்டது, நான்... கத்திவிடுவேன். 284 00:26:30,048 --> 00:26:32,301 அன்னையர் தினத்திற்காக, எங்கள் அம்மாவிற்காக ஐஸ் க்ரீம் கேக் வாங்கியுள்ளோம். 285 00:26:32,384 --> 00:26:36,471 அன்னையர் தினத்திற்காக, வென்னிலா அல்லது சாக்லெட் கேக் தான் வாங்க நினைத்தேன். 286 00:26:37,639 --> 00:26:39,766 ஆனால் சாலி ஸ்ட்ராபெர்ரி வாங்கச் சொன்னாள். 287 00:26:39,850 --> 00:26:42,686 அது தான் அன்னையர் தினத்திற்கு ஏற்ற வகைப் போலத் தெரிந்தது. 288 00:26:42,769 --> 00:26:47,107 அன்னையர் தினம். அன்னையர் தினம். அன்னையர் தினம். அன்னையர் தினம். 289 00:27:05,959 --> 00:27:08,504 வீணாகிவிட்டது! நீ என்ன செய்திருக்கிறாய் பார்! 290 00:27:10,547 --> 00:27:12,883 ம-மன்னித்துவிடு, லூசியெல். 291 00:27:12,966 --> 00:27:15,427 சக். அது வந்து... 292 00:27:17,262 --> 00:27:18,430 விளக்குவதற்கு நேரமில்லை. 293 00:27:19,598 --> 00:27:21,016 திரும்பி வாருங்கள், சார். 294 00:27:21,517 --> 00:27:24,728 அன்னையர் தின கொண்டாட்டம் அவளுக்குப் பிடிக்கவில்லையென வெளிப்படையாகத் தெரிகிறது. 295 00:27:30,234 --> 00:27:32,861 -சார்? எங்கே போகிறீர்கள்? -வீட்டுக்கு. 296 00:27:36,490 --> 00:27:40,702 நான் என் அப்பாவிற்கு அன்னையர் தின பரிசு வாங்க நினைத்தேன். அது முடியவில்லை. 297 00:27:40,786 --> 00:27:42,412 -நாம் வேண்டுமானால்... -இல்லை, மார்ஸி. 298 00:27:42,496 --> 00:27:44,915 நீ சொல்ல வருவதை என்னால் கேட்க முடியாது. 299 00:27:44,998 --> 00:27:47,960 நீ ஒவ்வொரு முறை உதவ முயலும் போதும், அது மோசமாகத் தான் முடிகிறது. 300 00:27:48,043 --> 00:27:51,547 என்னை மன்னித்துவிடுங்கள், சார். அது என் நோக்கம் இல்லை. 301 00:27:51,630 --> 00:27:55,592 அன்னையர் தினம் எனக்கு எப்போதுமே மோசமாகத் தான் இருந்திருக்கிறது, அது மாறாது. 302 00:27:55,676 --> 00:27:58,136 எனவே, தயவுசெய்து என்னைத் தனியாக விடு. 303 00:30:15,899 --> 00:30:18,735 நிச்சயம், எறும்புகள் அன்னையர் தினம் கொண்டாடத் தேவையில்லை. 304 00:30:20,988 --> 00:30:22,823 கொடுத்து வைத்த எறும்புகள். 305 00:30:23,365 --> 00:30:25,284 எறும்புகள் கொடுத்து வைத்தவை தான். 306 00:30:25,784 --> 00:30:28,287 அவற்றிற்கு எது தமக்குத் தகுந்தது எனத் தெரிகிறது. 307 00:30:30,122 --> 00:30:33,417 எப்பவும், என் அப்பா, என்னிடம் 308 00:30:33,500 --> 00:30:36,336 “பெப்பெர்மின்ட் பேட்டி, நீ யாரென்று தெரியுமா?” எனக் கேட்பார். 309 00:30:36,420 --> 00:30:38,088 நான் தெரியாது எனச் சொல்வேன். 310 00:30:38,172 --> 00:30:44,428 அதற்கு அப்பா, “நீ ஒரு அரிய பொக்கிஷம்” என்பார். பிறகு நாங்கள் அதை நினைத்துச் சிரிப்போம். 311 00:30:44,511 --> 00:30:47,931 சில சமயங்களில் நான் வித்தியாசமாக இருந்திருக்க வேண்டாமெனத் தோன்றும். 312 00:30:48,432 --> 00:30:49,933 புரிகிறது. 313 00:30:50,475 --> 00:30:54,605 இன்று அனைவருமே உற்சாகமாக இருக்கின்றனர். ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றனர். 314 00:30:54,688 --> 00:30:58,025 அவர்களின் அம்மாவைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகின்றனர். 315 00:30:58,108 --> 00:31:03,488 என்ன செய்தாலும், அந்த உணர்வை என்னால் ஒருபோதும் அனுபவிக்க முடியாது. 316 00:31:03,572 --> 00:31:05,073 நானோ கோபமாக இருந்தேன். 317 00:31:05,657 --> 00:31:09,661 உங்கள் கோபம் வருத்தத்தின் வெளிப்பாடு தான் என யோசித்திருக்கிறீர்களா? 318 00:31:21,006 --> 00:31:22,633 அழுவது தவறில்லை, சார். 319 00:31:25,969 --> 00:31:27,763 ஒரே ஒரு கண்ணீர் துளி அழுகையாகாது. 320 00:31:33,810 --> 00:31:36,480 உங்கள் அப்பாவிற்கு, நீங்கள் வேறெதாவது வாங்கித் தரலாமே. 321 00:31:37,064 --> 00:31:38,607 மீண்டும் அதை ஆரம்பிக்காதே. 322 00:31:38,690 --> 00:31:41,777 நான் யோசித்தேன், சார். நாம் வழக்கமான பொருள்களைத் தானே தர நினைத்தோம். 323 00:31:41,860 --> 00:31:42,861 ஆனால் நீங்கள் அபூர்வமானவள். 324 00:31:42,945 --> 00:31:46,657 உங்களிடம் மட்டும் இருக்கும் சிறந்த விஷயத்தை அப்பாவுக்குப் பரிசாகத் தர முடியுமா? 325 00:31:46,740 --> 00:31:48,325 எனக்குத் தெரியவில்லை. 326 00:31:48,408 --> 00:31:52,120 சரி, நீங்கள் ஒன்றாக விரும்பி செய்யும் விஷயங்கள் என்ன? 327 00:31:53,705 --> 00:31:54,957 எல்லாமே. 328 00:31:55,040 --> 00:31:59,211 பேஸ்பால் விளையாடுவோம். அப்பா தான் எனக்கு கால்பந்தாட்டம் சொல்லிக்கொடுத்தார். 329 00:31:59,294 --> 00:32:04,466 மொக்கையான ஜோக்குகள் சொல்லி விளையாடுவோம். எந்தளவிற்கு மொக்கையோ, அந்தளவிற்குச் சிரிப்போம். 330 00:32:04,967 --> 00:32:08,720 என் சிரிப்பு அப்பாவுக்குப் பிடிக்கும். அது அவருக்கு என் அம்மாவை ஞாபகப்படுத்துமாம். 331 00:32:11,807 --> 00:32:13,851 அன்னையர் தினத்தை கொண்டாட வழி தெரிந்துவிட்டது. 332 00:32:13,934 --> 00:32:16,603 நாளைய நாள் முழுவதும் என் அப்பாவுடன் செலவிடப் போகிறேன். 333 00:32:16,687 --> 00:32:20,649 நாங்கள் பேசுவோம், விளையாடுவோம், நான் அப்பாவை சிரிக்க வைக்கப் போகிறேன். 334 00:32:20,732 --> 00:32:22,192 அப்புறம் அப்பா என்னைச் சிரிக்க வைப்பார். 335 00:32:22,276 --> 00:32:25,404 இருவரும் என்றுமில்லாத அளவிற்கு சந்தோஷமாகச் சிரிப்போம். 336 00:32:25,487 --> 00:32:29,408 ஒரு அப்பாவிற்கு அன்னையர் தினத்தன்று கிடைக்கும் மிகச்சிறந்த பரிசு இது தான். 337 00:32:29,491 --> 00:32:32,286 ஆமாம்! ஜாலி! நான் கிளம்புகிறேன்! 338 00:32:33,954 --> 00:32:39,251 உன் மனம் கஷ்டப்படும்படி ஏதாவது பேசியிருந்தால் என்னை மன்னித்துவிடு, மார்ஸி. 339 00:32:39,334 --> 00:32:42,004 -நீ ஒரு உண்மையான தோழி. -நீங்களும் தான், சார். 340 00:32:45,090 --> 00:32:47,801 என் சார்பில், உன் அம்மாவிற்கு அன்னையர் தின வாழ்த்துச் சொல்! 341 00:32:49,178 --> 00:32:50,387 சொல்கிறேன், சார். 342 00:32:55,100 --> 00:32:57,269 அம்மாவிற்கு 343 00:32:58,520 --> 00:33:01,732 அருமையாக இருக்கு. ஆனால் ஃப்ரிட்ஜின் மேல் வைக்கும் அளவிற்கு நன்றாக இருக்கிறதா? 344 00:33:11,241 --> 00:33:13,744 கண்டிப்பாக ஃப்ரிட்ஜின் மேல் வைக்கும் அளவிற்கு தரமாக இருக்கிறது. 345 00:33:13,827 --> 00:33:15,871 அப்பாடா. 346 00:33:15,954 --> 00:33:18,624 என் திறமை மீதே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. 347 00:33:18,707 --> 00:33:22,252 -ஆனால் இன்னும் ஏதோ ஒன்று குறைகிறது. -என்ன? இப்போது தானே... 348 00:33:22,336 --> 00:33:25,047 எல்லா அட்டையிலும் ஏதாவது ஒரு செய்தி இருக்க வேண்டும். அது ஒரு விதி. 349 00:33:26,590 --> 00:33:29,551 சரி, அறிவாளியே. உன் கடிதம் என்ன சொல்கிறது? 350 00:33:30,344 --> 00:33:31,345 இதோ. 351 00:33:37,309 --> 00:33:42,940 லைனஸ். வந்து... இவற்றைத் தான் நானும் சொல்ல நினைக்கிறேன். 352 00:33:43,774 --> 00:33:47,611 வந்து, என் கடிதத்திலும் ஏதோ ஒன்று குறைகிறது. 353 00:33:47,694 --> 00:33:50,197 வேண்டுமானால், இதை உன் அட்டையில் வைத்து 354 00:33:50,280 --> 00:33:52,282 இருவரும் சேர்ந்து அம்மாவிடம் கொடுக்கலாம். 355 00:33:52,366 --> 00:33:53,867 நீ அதைச் செய்வாயா? 356 00:33:55,369 --> 00:33:58,288 இந்த இடத்தில் மட்டும் சிறிய மாற்றம் செய்தால் போதும். 357 00:34:04,711 --> 00:34:07,381 “அன்புள்ள அம்மா, நீங்கள் என் மதிய உணவுடன் வைக்கும் 358 00:34:07,464 --> 00:34:09,675 சிறு குறிப்புகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் இக்கடிதத்தை எழுதுகிறேன். 359 00:34:09,757 --> 00:34:14,721 என் மதிய உணவிற்காகவும், குறிப்பாக, டூனா மீன் சாண்ட்விச்சை தவிர்த்துவிட்டு, 360 00:34:14,804 --> 00:34:16,639 பொலோனி சாண்ட்விச் வைப்பதற்காகவும் நன்றி.” 361 00:34:17,599 --> 00:34:21,436 “நீங்கள் எனக்குச் செய்யும் அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். 362 00:34:22,062 --> 00:34:25,482 நான் பயப்படும்போது, என்னைக் கட்டியணைத்து அன்பாக நடந்துக்கொள்வீர்கள். 363 00:34:27,650 --> 00:34:30,654 நான் தனியாக உணரும்போது, என்னிடம் 'எப்போதுமே நீதான் என் சிறந்த நண்பர்' எனச் சொல்வீர்கள். 364 00:34:30,737 --> 00:34:31,947 எனக்கு அது பிடிக்கும். 365 00:34:34,408 --> 00:34:37,494 என் புதிய யோசனைகளைக் கேட்டுத் தெரிந்துக்கொள்ள நேரம் ஒதுக்குவீர்கள்.” 366 00:34:40,914 --> 00:34:41,956 தழுவல்கள் 367 00:34:42,040 --> 00:34:45,168 “நீங்கள் என் நண்பர்கள் முன்பு என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பீர்கள், 368 00:34:45,252 --> 00:34:48,505 சில நேரங்களில் எனக்குக் கூச்சமாக இருந்தாலும், அதை நான் ரசிப்பேன். 369 00:34:49,547 --> 00:34:53,969 நான் தவறு செய்யும் போதெல்லாம், மீண்டும் முயற்சி செய் என உற்சாகப்படுத்துவீர்கள். 370 00:35:00,434 --> 00:35:02,561 ஒவ்வொரு இரவும் நான் பத்திரமாக இருக்கிறேனா என உறுதிசெய்வீர்கள். 371 00:35:03,645 --> 00:35:06,648 உங்களின் தனித்துவமான வழியில் எனக்குச் சிறந்ததையே செய்கிறீர்கள்.” 372 00:35:12,029 --> 00:35:13,322 தூரமாகச் செல்லுங்கள், அப்பா. 373 00:35:14,573 --> 00:35:15,908 அற்புதமான கேட்ச். 374 00:35:16,658 --> 00:35:18,452 அதற்கு குட்பை சொல்லிவிடுங்கள், அப்பா. 375 00:35:18,535 --> 00:35:21,747 இன்னொன்று சொல்கிறேன். அந்த முட்டை, செஃபிடம் என்ன சொன்னது? 376 00:35:22,331 --> 00:35:23,874 “என்னைக் கிராக் செய்து விட்டாய்.” 377 00:35:24,458 --> 00:35:26,376 “நான் சோகமாக இருக்கும் போது, என்னைச் சிரிக்க வைப்பீர்கள். 378 00:35:26,460 --> 00:35:29,796 நீங்களும் சிரிப்பீர்கள், அது என்னை இன்னும் சிரிக்க வைக்கும்.” 379 00:35:31,924 --> 00:35:36,595 “நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள், எனக்காக எப்போதும் இருப்பீர்கள் என எனக்குத் தெரியும். 380 00:35:36,678 --> 00:35:40,516 அதைத்தான் எல்லா அம்மாக்களும் செய்வார்கள். ஆனால் நீங்கள் அதை சிறப்பாகச் செய்கிறீர்கள். அதனால் தான்”... 381 00:35:40,599 --> 00:35:42,809 இப்போது நீயும் சேர்ந்துப் படிக்க வேண்டும். 382 00:35:42,893 --> 00:35:48,524 நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம். அன்னையர் தின வாழ்த்துக்கள். 383 00:35:51,944 --> 00:35:54,947 அம்மாவிற்கு 384 00:36:34,194 --> 00:36:36,738 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 385 00:37:54,608 --> 00:37:57,110 ராப் கிப்ஸ் 1964-2020 அவர்களின் நினைவாக 386 00:37:57,194 --> 00:37:59,196 தமிழாக்கம் மேனகா மணிகண்டன் 387 00:38:02,282 --> 00:38:04,243 நன்றி, ஸ்பார்க்கி. என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.