1 00:00:08,300 --> 00:00:10,719 இந்தக் கதையை நீங்க தவறவிட விரும்ப மாட்டீங்க. 2 00:00:12,804 --> 00:00:14,431 ஒரு பயணி இறந்துட்டார். 3 00:00:16,767 --> 00:00:18,602 ஒரு குண்டு வெடிப்பு. 4 00:00:22,689 --> 00:00:25,692 சரி. நான் சொன்னதா மட்டும் வெளிய சொல்லாதீங்க. 5 00:01:28,213 --> 00:01:29,423 என்ன காரியம் செஞ்சிருக்கீங்க? 6 00:01:31,258 --> 00:01:32,467 என்னை நம்பு. 7 00:01:43,896 --> 00:01:46,565 இந்த நெட்வொர்க்ல இருக்க எல்லாரையும் வெளிய அனுப்பணும். 8 00:01:47,733 --> 00:01:50,819 தண்டவாளங்களை க்ளியர் பண்ணுங்க. என்னை மறிச்சு நிக்குற அந்த ரயிலை நகர்த்துங்க. 9 00:01:56,241 --> 00:01:57,910 சரி, எங்களால அதைச் செய்ய முடியும். 10 00:02:02,414 --> 00:02:04,917 வேற யாரும் காயப்பட மாட்டாங்கன்னு நீங்க எனக்கு உத்திரவாதம் தரணும். 11 00:02:05,000 --> 00:02:08,753 அடுத்த முப்பது நிமிஷத்துக்குள்ள, பெய்லி-பிரவுன் ஜெர்மனில இருக்கார் என்ற 12 00:02:08,836 --> 00:02:11,423 விஷுவல் ஆதாரம் எனக்கு வேணும். 13 00:02:11,507 --> 00:02:14,343 ஒரு ஃபோட்டோ. அதை எந்த நம்பருக்கு அனுப்பணும்னு நான் சொல்றேன். 14 00:02:14,426 --> 00:02:18,805 கேளுங்க, அவரை கண்டுபிடிக்க முயற்சிக்குறோம். இவ்ளோ சீக்கிரம் முடியுமானு உறுதியா சொல்ல முடியாது. 15 00:02:19,306 --> 00:02:20,516 சாம், ப்ளீஸ்… 16 00:02:20,599 --> 00:02:23,227 சரி, சரி. நீங்க தோத்துட்டா என்ன நடக்கும்னு பார்த்துட்டீங்க. 17 00:02:23,310 --> 00:02:26,563 நீங்க மறுபடியும் தோத்துப்போனா என்ன நடக்கும்னு பார்க்க விரும்ப மாட்டீங்க. 18 00:02:26,647 --> 00:02:28,482 உங்களுக்கு முப்பது நிமிஷம் அவகாசம் இருக்கு. சரியா? 19 00:02:28,565 --> 00:02:30,442 இப்ப, போய் அவரைக் கண்டுபிடிங்க. 20 00:02:48,335 --> 00:02:52,798 யூ8 ஹெர்மன்ஸ்ட்ராஸ் 21 00:02:55,175 --> 00:02:57,094 சரி. இப்ப நீ, ரயில் பாதையில சின்ன தீ விபத்து 22 00:02:57,177 --> 00:02:59,429 ஏற்பட்டுருக்கிறதால, நாம வேற பாதையில திருப்பி விடப்பட்டிருக்கோம்னு 23 00:02:59,513 --> 00:03:01,515 பயணிகள்கிட்ட சொல்லு. 24 00:03:04,643 --> 00:03:05,978 சீக்கிரம்! இப்பவே சொல். 25 00:03:15,654 --> 00:03:18,115 ஹே. நிதானமா இரு. 26 00:03:26,915 --> 00:03:28,041 சார். 27 00:03:29,251 --> 00:03:30,794 சரி, எல்லாரும் கேளுங்க. 28 00:03:30,878 --> 00:03:34,715 "அனைவரின் கவனத்திற்கு, ரயில் பாதையில ஏற்பட்ட சின்ன தீ விபத்தால, 29 00:03:34,798 --> 00:03:37,217 இந்த ரயில் யூ8 பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. 30 00:03:37,301 --> 00:03:39,928 இது முழுக்க முழுக்க ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். 31 00:03:41,263 --> 00:03:43,390 முதல் பெட்டியில் உள்ள பயணிகள் தயவுசெய்து இறங்கி, 32 00:03:43,473 --> 00:03:46,185 உடனடியாக ரயிலின் பின் பகுதிக்குச் செல்லவும்." 33 00:03:46,268 --> 00:03:48,979 சரி, பசங்களா. கேட்டீங்களா? உங்க பைகளை எடுங்க. 34 00:03:49,062 --> 00:03:51,064 - பசங்களா. - நாம போலாம். கிளம்புங்க. 35 00:03:51,148 --> 00:03:52,900 ஒவ்வொருத்தரா வாங்க, ப்ளீஸ். 36 00:03:52,983 --> 00:03:54,026 மீண்டும் சொல்கிறேன்… 37 00:03:54,109 --> 00:03:55,527 சரி. முன்னாடி இருக்க எல்லாரும்… 38 00:03:55,611 --> 00:03:57,779 ப்ளீஸ் பின்னாலுள்ள பெட்டிகளில் ஒன்றிற்குச் செல்லுங்கள். 39 00:03:59,531 --> 00:04:00,365 நன்றி. 40 00:04:03,118 --> 00:04:04,161 நீங்க நலம்தானே? 41 00:04:05,287 --> 00:04:07,372 - போங்க, சீக்கிரம், சீக்கிரம், சீக்கிரம். - சரி. 42 00:04:07,456 --> 00:04:08,457 சரி, நல்லது. 43 00:04:09,249 --> 00:04:10,626 நாம கிளம்பலாம். 44 00:04:27,476 --> 00:04:28,477 ஹலோ? 45 00:04:32,356 --> 00:04:33,357 ஹலோ? 46 00:04:39,988 --> 00:04:41,865 அதோ அவன். அதோ. 47 00:04:55,254 --> 00:04:56,463 என்ன செய்யறீங்க? 48 00:04:56,547 --> 00:04:58,715 ஹேய்! நான் சொல்றத ரொம்ப கவனமாக் கேளு. 49 00:05:02,845 --> 00:05:05,180 வா, வா. உனக்கு ஒண்ணும் ஆகாது… 50 00:05:05,264 --> 00:05:06,765 நாம இங்கிருந்து போகணும். 51 00:05:09,101 --> 00:05:10,102 போ. போ. 52 00:05:17,860 --> 00:05:19,069 அவங்க கிட்ட அரை மணிநேரம் சொன்னீங்களா? 53 00:05:19,152 --> 00:05:21,321 ஆமா. ஏன்னா, அவங்க இங்கே வந்து கண்டுபிடிக்கிறதுக்குள்ள 54 00:05:21,405 --> 00:05:23,448 நமக்கு இருக்குறது அந்த அரை மணிநேரம் மட்டும்தான். 55 00:05:34,001 --> 00:05:38,463 வானம் காணும் அளவு மட்டும் என் தலை நிமிர்த்துகிறேன் 56 00:05:39,548 --> 00:05:42,176 நாம் விடைபெறுகையில், தளர்ந்து செல்ல மாட்டோம் 57 00:05:42,259 --> 00:05:44,553 கடும் போர் புரிந்தே செல்வோம் 58 00:05:45,220 --> 00:05:49,850 ஒரு நாள் வரும் அதில் நீ நீயாக இருப்பாய் 59 00:05:50,350 --> 00:05:53,020 எப்போதும் தலை நிமிர்ந்தே நில் 60 00:05:53,103 --> 00:05:55,898 உன் கரத்தை முத்தமிட்டு, ஆகாயத்தைத் தொடு 61 00:05:56,481 --> 00:06:01,069 உலகத்தின் அழிவதைத் தடுக்க காலம் கடந்துவிட்டது 62 00:06:02,279 --> 00:06:04,031 என்றாவது ஒரு நாள் 63 00:06:06,450 --> 00:06:08,410 நாம் அனைவரும் அங்கே இருப்போம் 64 00:06:10,204 --> 00:06:12,998 ஆமாம், ஆமாம், ஆமாம் ஆமாம், ஆமாம், ஆமாம் 65 00:06:30,516 --> 00:06:32,184 யாரு இந்த சாம் நெல்சன்? 66 00:06:32,267 --> 00:06:34,019 அவர் லண்டன்ல இருக்குற ஒரு வக்கீல். 67 00:06:34,102 --> 00:06:37,314 M&A-ல ஸ்பெஷலிஸ்ட். கார்ப்பொரேட் பேச்சுவார்த்தைகள். 68 00:06:41,109 --> 00:06:42,861 அவர் கிங்டம் 29-ல இருந்தாரு. 69 00:06:42,945 --> 00:06:44,112 அந்தக் கடத்தல். 70 00:06:44,196 --> 00:06:46,490 அவங்க ஏன் மருத்துவ உதவியாளர்களை கீழ விட மறுக்குறாங்க? 71 00:06:47,115 --> 00:06:48,909 நாம முதல்ல தீ விபத்தை சரிபண்ணனும். 72 00:06:48,992 --> 00:06:50,619 ஜெர்மன் போலீஸ் அவரை சீரியஸா எடுத்துக்க வைக்க 73 00:06:50,702 --> 00:06:52,454 அவர் மாதக்கணக்கா முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கார். 74 00:06:52,538 --> 00:06:56,041 GSG 9 இன்னும் ஆர்டருக்காக காத்திருக்காங்க. நான் அவங்க கிட்ட என்ன சொல்லணும்? 75 00:06:56,124 --> 00:06:58,168 காத்திருக்கச் சொல்லுங்க. இப்போதைக்கு. 76 00:06:59,336 --> 00:07:02,339 சான்சலர் மற்றும் மேயர் அலுவலகம் அன்மை தகவலுக்காக காத்திருக்காங்க. 77 00:07:02,422 --> 00:07:05,050 முப்பது லட்ச மக்கள் போக்குவரத்து வசதி இல்லாம, 78 00:07:05,133 --> 00:07:06,176 பயப்பட ஆரம்பிச்சுட்டாங்க. 79 00:07:06,260 --> 00:07:07,761 சான்சலர் காத்திருக்க மாட்டாரு. 80 00:07:08,554 --> 00:07:10,514 இந்த இடம் இப்போ ஒரு ஆபரேஷனல் கமாண்ட் சென்டரா மாறுது. 81 00:07:10,597 --> 00:07:13,684 எனக்குக் கீழே இல்லாதவங்க, வேற இடத்துல ஆஃபீஸ் அமைச்சிக்கோங்க. 82 00:07:13,767 --> 00:07:16,186 மத்தவங்க எல்லாரும் வெளியே போங்க. 83 00:07:20,649 --> 00:07:22,442 - திரு. டீயல். - சொல்லுங்க. 84 00:07:22,985 --> 00:07:24,152 அந்த வரைபடம். 85 00:07:24,236 --> 00:07:26,530 அவர் எங்கே இருக்கார், எங்க போறார்னு நான் பார்க்கணும். 86 00:07:27,614 --> 00:07:29,783 - வேற எதுவும் வேணாம். - சரி. 87 00:07:55,851 --> 00:07:57,019 சரி, நல்லது. 88 00:07:58,187 --> 00:08:01,148 எல்லா தந்திரப் பிரிவுகளுக்கும் நேரடி இணைப்பு வேணும். 89 00:08:01,231 --> 00:08:02,274 நிச்சயமாக. 90 00:08:02,357 --> 00:08:05,235 மற்றும் முழு நெட்வொர்க்கும் காலி செய்யப்பட்டது என்ற உறுதிப்படுத்தல் வேணும். 91 00:08:05,319 --> 00:08:07,571 - அது இன்னைக்கு தான். - என்னது? 92 00:08:08,071 --> 00:08:09,198 நெல்சனோட மகன், கைய், 93 00:08:09,281 --> 00:08:11,658 சரியா ஒரு வருஷத்துக்கு முன், கார் விபத்துல இறந்துட்டான். 94 00:08:12,910 --> 00:08:14,578 கைய்-ஐ ஜான் பெய்லி-பிரவுன்தான் 95 00:08:15,120 --> 00:08:16,580 கொன்னதாக அவர் நம்புறார். 96 00:08:17,831 --> 00:08:21,084 இப்ப அவருக்கு என்ன வேணுமாம், நீதியா? 97 00:08:21,835 --> 00:08:23,170 இல்லன்னா… 98 00:08:25,881 --> 00:08:26,882 பழிவாங்குதல். 99 00:09:13,262 --> 00:09:16,223 கைய் ஸ்மித்-நெல்சன் மார்ஷா ஸ்மித் 100 00:09:16,306 --> 00:09:18,892 பிறந்த தேதி: 22-03-2006 101 00:09:27,234 --> 00:09:31,029 சரி, சாம் தன்னோட மகனைக் கொன்னவன்னு நம்புறது இவனைத்தான். 102 00:09:31,613 --> 00:09:32,990 அதுல தேதி ஜூலை 25ன்னு போட்டுருக்கு. 103 00:09:33,073 --> 00:09:34,741 ஹாம்பர்க் துறைமுகத்தில் குடியேற்றம். 104 00:09:34,825 --> 00:09:36,994 இவர்தான் ஜான் பெய்லி-பிரவுன்னு அவர் நினைக்கிறாரா? 105 00:09:37,494 --> 00:09:38,662 அவர் இவரை மாதக்கணக்கா டிராக் பண்ணியிருக்கார். 106 00:09:39,580 --> 00:09:42,332 பெய்லி-பிரவுன் ஜெர்மனில இருக்கிறதுக்கு இதுதான் ஆதாரம்னு அவர் சொல்றார். 107 00:09:42,416 --> 00:09:44,751 இப்ப திரு. நெல்சனும் ஒரு கொலைகாரனா ஆயிட்டார். 108 00:09:46,587 --> 00:09:49,006 ஹாம்பர்க் எல்லை பதிவுகள், சிசிடிவியைப் பாருங்க. 109 00:09:49,089 --> 00:09:51,008 நான் அவரிடம் திரும்பவும் பேசப் போறேன். 110 00:09:51,091 --> 00:09:52,801 அந்தப் பெண்ணை பயன்படுத்தப் போறீங்களா? 111 00:09:52,885 --> 00:09:54,386 உங்ககிட்ட இதைவிட நல்ல யோசனை இல்லன்னால் மட்டும்தான். 112 00:09:54,970 --> 00:09:58,182 என்னால உதவ முடியும். அவளுக்கு வழிகாட்ட முடியும். 113 00:09:59,808 --> 00:10:03,687 இதுமாதிரி ஆட்களையும், எல்லா வகையான தீவிரவாதிகளையும் 114 00:10:04,354 --> 00:10:05,355 ஆராய்வதுதான் என் வேலை. 115 00:10:05,939 --> 00:10:07,858 அவனோட மனசுல நாம இறங்கிட்டோம்னா, 116 00:10:07,941 --> 00:10:09,234 ஒருவேளை நாம இதை முடிச்சிடலாம். 117 00:10:22,748 --> 00:10:23,707 யன்னோவிட்ஸ்புரூக்கே. 118 00:10:33,050 --> 00:10:35,093 இந்த கேமராவை யாரால் பார்க்க முடியும்? 119 00:10:35,802 --> 00:10:37,888 யாருமில்லை. இது உள் பயன்பாட்டிற்கானது. 120 00:10:37,971 --> 00:10:39,056 உறுதியாவா? 121 00:10:40,182 --> 00:10:42,100 - இது கட்டுப்பாட்டு அறைக்குப் போகாதா? - போகாது. 122 00:10:42,184 --> 00:10:43,352 நாம இங்கிருந்தால் அவங்களால நம்மை பார்க்க முடியாதா? 123 00:10:43,435 --> 00:10:45,103 முடியாது, அது இந்த ஹார்ட் டிரைவுக்குத்தான் போகும். 124 00:10:45,187 --> 00:10:47,064 - எங்கே? - அங்கே ஒரு ஹார்ட் டிரைவ் இருக்கு. 125 00:10:48,190 --> 00:10:49,191 அங்கே தான். 126 00:10:50,234 --> 00:10:51,443 சாம்? 127 00:10:54,154 --> 00:10:55,239 எப்படிப் போகுது, கிளாரா? 128 00:10:55,322 --> 00:10:58,450 மன்னிச்சிடுங்க, நீங்கள் தேடுற மனிதரை எங்களால இன்னும் கண்டுபிடிக்க முடியல. 129 00:10:59,034 --> 00:11:00,202 நாங்க முயற்சி செய்யுறோம். 130 00:11:00,285 --> 00:11:02,829 சரி, அவருக்கு பின்னாடி ரொம்ப சக்தி வாய்ந்த ஆள்கள் வேலை செய்யுறாங்க. 131 00:11:02,913 --> 00:11:05,874 அது யாருன்னு நீங்களே யோசிச்சிப் பாருங்க. 132 00:11:07,042 --> 00:11:08,043 தாமதம் 133 00:11:08,126 --> 00:11:11,296 நாங்க ஹாம்பர்க் சிசிடிவியைப் பார்கிறோம். ஆனா எங்களுக்கு இன்னும் நேரம் வேணும். 134 00:11:11,380 --> 00:11:13,340 வேற யாரும் காயப்பட மாட்டாங்கன்னு நீங்க எனக்கு உத்திரவாதம் தரணும். 135 00:11:13,423 --> 00:11:15,384 முதல்ல ஃபோட்டோ அனுப்புங்க. 136 00:11:17,970 --> 00:11:18,971 குடும்பம் 137 00:11:19,054 --> 00:11:20,264 சரி. 138 00:11:22,015 --> 00:11:23,475 நீங்க ஒரு அப்பான்னு எனக்குத் தெரியும், சாம். 139 00:11:29,815 --> 00:11:31,733 இந்த ரயிலிலும் குடும்பங்கள் இருக்கு. 140 00:11:32,317 --> 00:11:33,402 குழந்தைகள் இருக்காங்க. 141 00:11:33,485 --> 00:11:35,445 அவங்க ரொம்ப பயப்படுவாங்க. 142 00:11:38,198 --> 00:11:39,199 உங்க கூட அங்கே யார் இருக்காங்க? 143 00:11:44,663 --> 00:11:47,749 எங்களுக்குப் புரியணும். அப்பத்தான் எங்களால உதவ முடியும். 144 00:11:49,251 --> 00:11:51,253 ஏன்னா, நீங்க யாரையும் காயப்படுத்த நினைக்குறவர்னு எனக்குத் தோணலை. 145 00:11:52,796 --> 00:11:54,381 - உண்மையிலேயே இல்ல. - நீங்க… 146 00:11:54,464 --> 00:11:58,177 உங்களுக்கு என்னைப் பத்தி எதுவும் தெரியாது, சரியா? 147 00:11:58,260 --> 00:11:59,261 நோக்கம் 148 00:12:07,186 --> 00:12:09,354 ஜான் பெய்லி-பிரவுன் ஏன் உங்களுக்கு வேணும்னு எங்களுக்குத் தெரியும். 149 00:12:11,899 --> 00:12:13,525 அவன் உங்க மகனுக்கு என்ன செய்தான் என்பதும் எங்களுக்குத் தெரியும். 150 00:12:19,489 --> 00:12:20,532 நான் வருத்தப்படுறேன்… 151 00:12:23,035 --> 00:12:24,203 கைய் பத்தி. 152 00:12:32,419 --> 00:12:35,672 உங்க கூட யாரு இருந்தாலும் சரி, நான் அவங்களோட பேசணும். இப்பவே. 153 00:12:53,273 --> 00:12:54,399 ஹலோ, சாம். 154 00:12:55,442 --> 00:12:57,152 என் பெயர் பீட்டர் ஃபேபர். 155 00:12:57,736 --> 00:12:59,696 நான் பிரிட்டிஷ் உளவுத்துறையில இருக்கேன். 156 00:13:00,197 --> 00:13:03,200 வேற யாரும் சாகாம நான் இதை முடிக்கணும்னு விரும்புறேன். 157 00:13:03,283 --> 00:13:05,452 சரி, ஃபேபர், உங்களுக்கு என்னைப் பத்தி ஒண்ணும் தெரியாது 158 00:13:05,536 --> 00:13:08,580 இல்லன்னா என்னால என்ன செய்ய முடியும்னு தெரியாது. சரியா? 159 00:13:09,540 --> 00:13:12,209 எனக்குத் தேவையானது எனக்குக் கிடைக்கலன்னா, அந்த பயணிக்கு நடந்தது, 160 00:13:12,292 --> 00:13:15,838 அது வேற யாருக்கு வேணாலும் நடக்கலாம். 161 00:13:34,565 --> 00:13:35,566 அலெக்சாண்டர்பிளாட்ஸ் 162 00:13:41,780 --> 00:13:44,074 அவங்களால தீயைக் கட்டுப்படுத்த முடியல. நாம கீழே போக முடியாது. 163 00:13:45,325 --> 00:13:46,326 அப்ப ரோபோ? 164 00:13:55,544 --> 00:13:56,753 நன்றி. 165 00:14:12,811 --> 00:14:13,812 இங்கே பாருங்க… 166 00:14:15,272 --> 00:14:16,273 நன்றி. 167 00:14:22,946 --> 00:14:24,907 கிரேட் பிரிட்டன் மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய இராஜ்ஜியம் 168 00:14:24,990 --> 00:14:25,991 பாஸ்போர்ட் 169 00:14:30,787 --> 00:14:33,248 உங்களை இடைமறித்து ஒரு முக்கியச் செய்தி சொல்ல வேண்டும். 170 00:14:33,665 --> 00:14:36,543 போலீஸ் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்க மறுப்பதால்… 171 00:14:37,711 --> 00:14:40,631 …ஒரு அநாமதேய சோர்ஸிடமிருந்து செய்திகள் வந்துள்ளன: 172 00:14:41,048 --> 00:14:43,342 …அலெக்சாண்டர்பிளாட்ஸில் ஏற்பட்ட வெடிப்புக்குப் பிறகு ஒரு உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 173 00:14:43,425 --> 00:14:45,511 அருமை, இப்போ நமக்கு தகவல் கசிவு பிரச்சனை வந்துடுச்சு. 174 00:14:45,594 --> 00:14:47,888 உங்க வேலையை ஒழுங்கா பாருங்க. 175 00:14:51,850 --> 00:14:55,896 பயணிகளுக்குத் தெரிந்தால், நெல்சன் பதட்டப்பட நேரிடலாம். 176 00:14:56,563 --> 00:14:57,898 இது சோஷியல் மீடியா முழுக்க பரவிடுச்சு. 177 00:14:58,607 --> 00:15:00,859 நீங்க கட்டுப்பாடு பற்றி சொன்னீங்க, அதற்கு என்ன அர்த்தம்? 178 00:15:01,860 --> 00:15:03,445 அவரோட கோப்பில் இருந்த விஷயங்கள். 179 00:15:04,196 --> 00:15:07,950 ஒவ்வொரு விவரமும் ரொம்ப துல்லியமானது. 180 00:15:08,033 --> 00:15:10,077 அவர் இதைச் சேகரிக்க ஒரு வருடம் செலவழிச்சிருக்கார். 181 00:15:10,911 --> 00:15:12,204 அப்படின்னா அவர் புத்திசாலி. 182 00:15:13,372 --> 00:15:14,498 பொறுமையான ஆள். 183 00:15:15,082 --> 00:15:17,751 ஆனா ஒரு அப்பாவிப் பயணியை காரணமின்றி கொல்கிறார், 184 00:15:18,585 --> 00:15:19,586 அதுவும் ஒரு மணி நேரத்தில். 185 00:15:20,254 --> 00:15:21,421 திரும்பிப் போக வழியே இல்லை. 186 00:15:21,505 --> 00:15:22,965 உங்களுக்கு இது விசித்திரமா தெரியலையா? 187 00:15:24,132 --> 00:15:25,801 அவர் கோபத்திலும், நெருக்கடியிலும் இருக்கிறார். 188 00:15:27,135 --> 00:15:28,262 ஆனா அவர் கலங்கல. 189 00:15:29,471 --> 00:15:30,764 நாம் எல்லாரும் அதைப் பார்த்தோம். 190 00:15:31,723 --> 00:15:34,852 அவர் தன்னையே முழுக்க கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார். 191 00:15:36,228 --> 00:15:38,730 முதல் முறை ஒருவரைக் கொலை செய்வது, அதுக்கு ஒரு பெரிய விளைவு இருக்கும். 192 00:15:38,814 --> 00:15:39,815 நான் பார்த்திருக்கேன். 193 00:15:41,066 --> 00:15:42,401 அவரிடம் அது தெரியல. 194 00:15:42,484 --> 00:15:44,027 பெய்லி-பிரவுன் விஷயத்தில நம்ம நிலை என்ன? 195 00:15:44,987 --> 00:15:46,196 நம்மிடம் ஹாம்பர்க் நுழைவுப் பட்டியல்கள் இருக்கு. 196 00:15:46,280 --> 00:15:48,115 சரி, அப்புறம்? 197 00:15:48,198 --> 00:15:50,742 போலிப் பெயராகவோ, அல்லது போலியானதாகவோ எதுவும் இல்லை. 198 00:15:51,410 --> 00:15:53,078 நாங்க ஃபுட்டேஜுக்காக காத்திருக்கோம், 199 00:15:53,161 --> 00:15:55,998 ஆனா உறுதியான எதையும் கண்டுபிடிப்போம்னு தோணலை. 200 00:15:56,081 --> 00:15:57,708 நமக்கு நேரம் குறைந்து கொண்டே இருக்கு. 201 00:16:06,008 --> 00:16:07,134 அடச்சே. 202 00:16:08,010 --> 00:16:09,303 மன்னிக்கவும், இது யாருடைய சைக்கிள்? 203 00:16:09,970 --> 00:16:14,349 அவர் உங்கள் பெட்டிக்குள் சென்றார். ஃப்ரெடின்னு நினைக்கிறேன். 204 00:16:15,559 --> 00:16:16,977 அந்த மாண்டரின் ஆள். 205 00:16:17,060 --> 00:16:20,105 அவர் யாராக இருந்தாலும். அவர்… டிரைவரைப் பார்க்க போயிருக்கார். 206 00:16:21,190 --> 00:16:23,233 அப்ப அவருக்கு சைக்கிள் தேவையில்லை. நான் நகர்த்தவா? மன்னிக்கவும். 207 00:16:24,443 --> 00:16:28,238 சாமும் போனார். அந்த இங்கிலீஷ் ஆள். 208 00:16:29,198 --> 00:16:30,199 என்ன? 209 00:16:30,782 --> 00:16:32,784 யூ-பாஹ்ன்ல்ஒரு சம்பவம் நடந்திருக்கு. 210 00:16:32,868 --> 00:16:34,786 - மன்னிக்கவும், என்ன சொன்ன? - என்ன? 211 00:16:35,287 --> 00:16:36,705 யூ8-ல் வெடிகுண்டு மிரட்டல் என்கிறார்கள். 212 00:16:36,788 --> 00:16:38,040 அது நம் ரயில் பாதை இல்லை. 213 00:16:38,123 --> 00:16:40,083 இப்போது அது நம் பாதைதான். நம் பாதை திருப்பி விடப்பட்டதால். 214 00:16:45,005 --> 00:16:46,548 அந்த சம்பவம் நம் ரயிலில் நடந்தால் என்ன செய்வது? 215 00:16:53,472 --> 00:16:54,890 பெர்லினில் இதை நீங்கள் பார்த்தீர்களா? 216 00:16:56,183 --> 00:16:57,184 எதை? 217 00:16:57,267 --> 00:16:59,269 பயங்கரவாத சம்பவம் நடந்ததாக அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன… 218 00:16:59,353 --> 00:17:01,480 - சுரங்கப்பாதை கடத்தல். - …பெர்லினின் யூ-பாஹ்னில். 219 00:17:02,397 --> 00:17:05,317 வெடிப்பு பற்றிய வதந்திகள் உள்ளன. முழு நெட்வொர்க்கும் மூடப்பட்டுள்ளது… 220 00:17:25,546 --> 00:17:26,547 என்ன இது? 221 00:17:26,630 --> 00:17:27,756 ஹலோ! 222 00:17:29,049 --> 00:17:30,050 ஹலோ! 223 00:17:33,846 --> 00:17:35,681 ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது. சரியா? 224 00:17:43,105 --> 00:17:44,857 - என்ன? ஹேய். - ஹேய். 225 00:17:45,440 --> 00:17:47,818 ரயிலில்… ஏதும் பிரச்சனை இல்லையே? 226 00:17:47,901 --> 00:17:49,319 பயணிகள் கொஞ்சம் கவலைப்படுறாங்க. 227 00:17:49,403 --> 00:17:51,530 இல்ல, எல்லாம் கட்டுப்பாட்டுலதான் இருக்கு. 228 00:17:51,613 --> 00:17:53,282 டிரைவர் என் உதவியைக் கேட்டார். 229 00:17:54,825 --> 00:17:55,909 - சரி. - ஆமா. 230 00:17:56,869 --> 00:17:58,412 சும்மா கேட்டேன், ஏன்னா, 231 00:17:59,246 --> 00:18:04,376 செய்திகளில் பயங்கரவாத எச்சரிக்கை பற்றி சில விஷயங்கள் வருகின்றன. 232 00:18:04,459 --> 00:18:05,460 அப்படியா? 233 00:18:08,297 --> 00:18:09,506 அதைப் பத்தி நான் எதுவும் கேள்விப்படலை. 234 00:18:10,007 --> 00:18:11,341 நீங்க உங்க இருக்கைக்குத் திரும்புங்க, சரியா? 235 00:18:11,425 --> 00:18:12,843 - சரியா? - சரி. 236 00:18:12,926 --> 00:18:14,094 ஒண்ணும் பிரச்சனை இல்லை. 237 00:18:23,061 --> 00:18:24,897 - சரி. - சரி. 238 00:18:25,898 --> 00:18:26,899 சரி. 239 00:18:28,817 --> 00:18:30,444 அங்கே ஒண்ணும் பிரச்சனை இல்லையே? 240 00:18:31,028 --> 00:18:33,030 - இப்பதானே சொன்னேன். - நான் சரி பார்க்கிறேன். 241 00:18:38,202 --> 00:18:40,162 ஒண்ணும் பிரச்சனை இல்லை, நன்றி. 242 00:18:43,749 --> 00:18:44,750 சரி. 243 00:18:59,515 --> 00:19:00,599 என்ன நடக்குது? 244 00:19:01,975 --> 00:19:03,477 இந்த ரயில்ல ஏதோ நடக்குது. 245 00:19:04,937 --> 00:19:06,021 சாம் நல்லா இருக்கிறாரா? 246 00:19:08,232 --> 00:19:10,108 எனக்குத் தெரியாது, ஆனா ஏதோ விசித்திரமாக நடக்குது. 247 00:19:10,817 --> 00:19:14,446 சரி. நாம போகலாம். குழந்தைகளே, யார் வினாடி வினாவுக்குத் தயாரா இருக்கீங்க? 248 00:19:31,088 --> 00:19:32,464 அலெக்சாண்டர்பிளாட்ஸ் 249 00:19:37,219 --> 00:19:38,679 நீங்கள் வெடி சத்தத்தைக் கேட்டீங்களா? 250 00:19:39,680 --> 00:19:42,432 தெரியல. அதுக்கப்புறம் எனக்கு எதுவும் கேக்கல. 251 00:19:43,684 --> 00:19:46,436 அது வெடிச்சிருச்சுன்னு அவங்க சொன்னப்பவே, நாங்க ஸ்டேஷனை விட்டு பாதி தூரம் வெளியே வந்துட்டோம். 252 00:19:48,021 --> 00:19:49,690 எல்லாம் கொஞ்சம் குழப்பமா இருக்கு. 253 00:19:53,652 --> 00:19:56,321 சரி, கொஞ்சம் தெளிவாக்க முயற்சிப்போம்… 254 00:20:00,534 --> 00:20:01,994 அவங்க இப்போ ரோபோவை உள்ளே அனுப்புறாங்க. 255 00:20:02,578 --> 00:20:04,246 நல்லது, அது ஜான் பெய்லி-பிரவுனை கண்டுபிடிக்க நமக்கு உதவாதுன்னாலும். 256 00:20:04,830 --> 00:20:05,998 நமக்கு அதிக நேரம் இல்லை… 257 00:20:06,081 --> 00:20:09,293 நான் நீதித்துறையில ஒருத்தரிடம் பேசினேன். 258 00:20:09,376 --> 00:20:12,421 ஜான் பெய்லி-பிரவுன் பத்தி ரெக்கார்ட் இல்லாததுக்கு காரணம் என்னன்னா, 259 00:20:12,504 --> 00:20:15,382 ஜூலை 25 அன்னைக்கு காலையில 8:00 மணியில இருந்து 9:00 மணி வரைக்கும் 260 00:20:15,465 --> 00:20:17,968 ஹாம்பர்க் துறைமுகத்துல யாருமே உள்ளே வரலை என்பதுதான். 261 00:20:18,051 --> 00:20:20,721 அது நடக்காத காரியம்னு நான் சொல்வேன். 262 00:20:21,388 --> 00:20:22,639 யாரோ நீக்கி இருப்பாங்களா? 263 00:20:23,307 --> 00:20:26,435 உங்க அமைப்புக்கு வெளியே உள்ள ஒரு ஐபி அட்ரஸ்ல இருந்து டேட்டா எடுக்கப்பட்டிருக்கு 264 00:20:26,518 --> 00:20:29,688 ஷ்வாபிட்ச் ஸ்ட்ராஸ்ஸா வரைக்கும் கண்டுபிடிச்சிருக்காங்களா? 265 00:20:29,771 --> 00:20:31,607 ஷ்வேபிஷே ஸ்ட்ராஸ்ஸாவா? 266 00:20:33,066 --> 00:20:34,318 ஷ்வேபிஷே ஸ்ட்ராஸ்ஸா. 267 00:20:44,494 --> 00:20:45,495 ஆமா. 268 00:20:48,582 --> 00:20:49,583 ஆமா. 269 00:20:51,460 --> 00:20:52,586 நான் உங்களை அப்புறம் கூப்பிடுறேன். 270 00:20:54,963 --> 00:20:57,549 ஹாம்பர்க்ல உள்ள ரெக்கார்ட்ஸ நீக்கினது நீங்கதான். 271 00:21:02,721 --> 00:21:05,307 - இது அவள் பாதுகாப்பு அனுமதிக்கு மேல உள்ள… - ஷ்வேபிஷே ஸ்ட்ராஸ்ஸா. 272 00:21:05,390 --> 00:21:07,809 அது ஜெர்மன் அரசாங்கத்தால பிரிட்டிஷ்காரங்களுக்கு 273 00:21:07,893 --> 00:21:10,103 இரகசிய நடவடிக்கைகளுக்காகக் கொடுக்கப்பட்ட, 274 00:21:10,187 --> 00:21:14,274 சாதாரணமாகத் தெரியுற ஒரு கட்டிடத்தோட இடம், அப்படித்தானே? 275 00:21:14,942 --> 00:21:16,777 அதனாலதான் நீங்க இங்க ஜெர்மனில இருக்கீங்க, இல்லையா? 276 00:21:17,694 --> 00:21:19,780 MI5-கிட்ட ஜான் பெய்லி-பிரவுன் இருக்காரு. 277 00:21:19,863 --> 00:21:22,157 நீங்க அவரைப் பாதுகாக்குறீங்க. 278 00:21:23,242 --> 00:21:24,243 ஏன்? 279 00:21:24,326 --> 00:21:26,245 உங்களுக்கு நிலைமை புரியலன்னு நினைக்கிறேன். 280 00:21:26,328 --> 00:21:28,163 ஒருத்தர் இறந்துட்டார், 281 00:21:28,247 --> 00:21:32,417 உங்களால நாங்க உலக அளவுல செய்தி ஆகப் போறோம். 282 00:21:34,670 --> 00:21:36,046 எனக்குத் தேவையானதை இப்பவே கொடுங்க, 283 00:21:36,129 --> 00:21:39,216 இல்லன்னா பிரிட்டிஷ் உளவுத்துறைகிட் ட பெய்லி-பிரவுன் இருக்கார் என்றும் 284 00:21:39,299 --> 00:21:42,261 அவங்க அப்பாவி மக்களின் உயிரோட விளையாடுறாங்க என்றும் மீடியாவில சொல்லிடுவேன். 285 00:21:48,058 --> 00:21:49,518 இன்னும் சில நிமிஷங்கள்தான் இருக்கு, கிளாரா. 286 00:21:50,686 --> 00:21:52,020 எனக்குத் தேவையானது உங்களுக்கு கிடைச்சுடுச்சா? 287 00:21:59,403 --> 00:22:01,280 மன்னிச்சிடுங்க, சாம். நாங்க இன்னும் முயற்சி செஞ்சுட்டுதான் இருக்கோம். 288 00:22:06,451 --> 00:22:08,370 - லேங். - அவர் நம்மிடம் இருப்பது அவங்களுக்குத் தெரியும். 289 00:22:09,621 --> 00:22:10,622 எப்படி? 290 00:22:11,290 --> 00:22:13,292 அவரை சிறைபிடித்து, ஒரு ஃபோட்டோ எடு. 291 00:22:14,209 --> 00:22:15,878 யாரு தகவலை உளறுனதுன்னு கண்டுபிடி. 292 00:22:15,961 --> 00:22:17,754 சரிங்க, சீஃப். 293 00:22:38,400 --> 00:22:40,485 - விருந்தாளி வந்திருக்காரு. - சரி. 294 00:22:59,421 --> 00:23:04,092 சரி, ஜெர்மன் உளவுத்துறை எப்படி கையாளுதுன்னு பார்க்க எம்ஐ5 வந்திருக்கு. 295 00:23:13,352 --> 00:23:14,561 அவர் எங்கே? 296 00:23:19,316 --> 00:23:21,068 நிம்மதியா சிறுநீர் கூட கழிக்க முடியல. 297 00:23:30,077 --> 00:23:31,078 என்ன? 298 00:23:34,206 --> 00:23:35,249 என்ன? 299 00:23:36,542 --> 00:23:37,543 சாம்? 300 00:23:38,669 --> 00:23:39,711 நீங்க சொன்னது சரிதான். 301 00:23:41,338 --> 00:23:44,883 ஜான் பெய்லி-பிரவுன் இங்கதான் இருக்காரு. பெர்லின்ல. 302 00:23:48,887 --> 00:23:50,806 நான் கொடுத்த நம்பருக்கு ஒரு போட்டோ அனுப்புங்க. 303 00:23:51,431 --> 00:23:55,602 அது எனக்குக் கிடைச்சவுடனே இதை முடிக்கிறதப் பத்தி பேசலாம். 304 00:24:14,955 --> 00:24:16,081 இந்தா. 305 00:24:24,673 --> 00:24:26,133 உண்மையிலேயே ரொம்ப கேவலமா இருக்கு. 306 00:24:26,925 --> 00:24:30,429 சரி, இதுக்கப்புறம் உங்களுக்கு ஒரு பீர் அப்புறம் டபுள் சீஸ்பர்கர் கிடைக்கும். 307 00:24:31,722 --> 00:24:33,015 இது முடிஞ்சதுக்கு அப்புறம். 308 00:24:34,308 --> 00:24:35,601 நான் காய்கறி மட்டும்தான் சாப்பிடுவேன். 309 00:24:37,311 --> 00:24:39,563 நீங்க உங்க முக்கியமான மீட்டிங்குக்கு கூட போயிடலாம். 310 00:24:40,105 --> 00:24:41,648 நான் ஒரு நிலைத்தன்மை ஆலோசகர். 311 00:24:43,817 --> 00:24:45,527 ஆனா இது சுத்த வேஸ்ட், நிஜமா. வந்து… 312 00:24:47,654 --> 00:24:49,531 பணக்கார கம்பெனிகளுக்கு சும்மா நல்ல பேர் வாங்கி கொடுக்கிற வேலை. 313 00:24:50,157 --> 00:24:51,575 சரி, இந்த ஃபோட்டோ எனக்குக் கிடைச்சவுடனே… 314 00:24:54,536 --> 00:24:55,996 நீங்க விரும்பியதைச் செய்ய முடியும். 315 00:25:02,669 --> 00:25:03,754 எனக்கு ஏதோ மெசேஜ் வந்திருக்கு. 316 00:25:09,510 --> 00:25:10,469 உங்களுக்கு தேவையானது கிடைச்சுதா? 317 00:25:13,263 --> 00:25:14,264 ஆமா. 318 00:25:18,769 --> 00:25:22,439 அதுதானே, சாம்? இதுதானே உங்களுக்குத் தேவைப்பட்டது? 319 00:25:23,857 --> 00:25:27,402 ஆமா. நன்றி, கிளாரா. 320 00:26:01,645 --> 00:26:02,646 அப்போ… 321 00:26:03,522 --> 00:26:06,608 நெல்சன் உங்களை தூதரகத்துல நேரா தொடர்பு கொண்டாரா? 322 00:26:06,692 --> 00:26:08,235 சிசிடிவி ஃபோட்டோவோடவா? 323 00:26:10,195 --> 00:26:11,196 ஆமா. 324 00:26:16,368 --> 00:26:18,078 நீங்க இதுக்கெல்லாம் புதுசு. 325 00:26:18,871 --> 00:26:22,749 நான் யூகிக்குறேன், அங்க இருக்குற யாரும் உங்களை சீரியஸா எடுத்துக்கல. 326 00:26:23,792 --> 00:26:27,129 விசித்திரமான ஆளுங்க எல்லாரையும் உங்ககிட்ட தள்ளிவிட்டிருக்காங்க. 327 00:26:28,881 --> 00:26:32,676 பெய்லி-பிரவுன் ஏன் உங்ககிட்ட இருக்காருன்னு சொல்லுங்க. ஏன் இன்னும் அவர் ஜெயில்ல இல்லை. 328 00:26:37,764 --> 00:26:40,809 அவரை ஜெயில்ல அடைக்க நாங்க ஜெர்மன் உளவுத்துறையோட சேர்ந்து வேலை செஞ்சுட்டு இருக்கோம். 329 00:26:41,393 --> 00:26:42,895 அவர் தப்பிச்சு ஓடக்கூடிய ஆளுன்னு தெரியும்… 330 00:26:42,978 --> 00:26:44,771 அதனால அதை ரகசியமா வைக்க வேண்டியிருந்துச்சு. 331 00:26:45,981 --> 00:26:49,234 அவரை இங்கிலாந்துக்கு அனுப்புவோம், அங்க அவர் ஜெயிலுக்குப் போவார். 332 00:26:51,028 --> 00:26:53,363 முதல்ல என் வேலைகளை ஒழுங்கா முடிக்கணும். 333 00:26:54,114 --> 00:26:55,115 சரி. 334 00:26:55,741 --> 00:26:59,036 எப்படியிருந்தாலும், நீங்க நினைச்சு கூட பார்க்க முடியாத அளவுக்கு நெல்சன் ஒரு சுவாரஸ்யமான 335 00:26:59,119 --> 00:27:00,621 நாளைக் கொடுத்திருக்கார். 336 00:27:01,330 --> 00:27:05,626 அப்புறம், இந்த முரண்பாட்டை நீங்க பாராட்டுவீங்க, மிஸ் தாட்சர். 337 00:27:07,920 --> 00:27:08,921 சாம்மும் நானும். 338 00:27:10,047 --> 00:27:11,673 நாங்க ரெண்டு பேரும் ஒரே விஷயத்தைத்தான் விரும்புறோம். 339 00:27:14,259 --> 00:27:17,721 தான் செஞ்ச தப்புக்கு பெய்லி-பிரவுன் நீதியின் முன் நிறுத்தப்படணும். 340 00:27:54,132 --> 00:27:55,717 நான் நிலையில இருக்கேன். 341 00:27:56,301 --> 00:27:57,761 இப்போ அவளைப் பார்க்கிறேன். 342 00:28:01,181 --> 00:28:02,975 ஆமா, சரி. 343 00:28:11,483 --> 00:28:15,320 வெடிகுண்டு நிபுணர் 344 00:28:29,626 --> 00:28:30,460 இதப் பாருங்க. 345 00:28:40,762 --> 00:28:42,598 ஏதாவது பிரச்சனையா இருக்குமா? 346 00:28:44,766 --> 00:28:45,684 எப்படி? 347 00:28:52,316 --> 00:28:54,318 சரி, புகை எங்கிருந்து வருது? 348 00:29:09,666 --> 00:29:12,794 நான் ஒரு பைக் கடை அல்லது ஒரு ஜூஸ் பார் திறக்கலாம். 349 00:29:14,755 --> 00:29:15,756 ஆமா. 350 00:29:15,839 --> 00:29:17,633 பெர்லினுக்கு அவை இன்னும் அதிகம் தேவை. 351 00:29:17,716 --> 00:29:20,052 உள்ளே ஒரு ஜூஸ் பார் இருக்குற ஒரு பைக் கடை. 352 00:29:22,262 --> 00:29:26,266 சரி, சாம். உங்களுக்கு ஃபோட்டோ கிடைச்சிடுச்சு. இப்ப என்ன செய்யணும்? 353 00:29:27,017 --> 00:29:28,018 நான்… 354 00:29:28,727 --> 00:29:29,937 நல்லது. இப்போ அவரை ரயிலில் ஏத்துங்க. 355 00:29:30,020 --> 00:29:31,021 சாம்? 356 00:29:34,441 --> 00:29:35,442 இணைப்பில் இருக்கீங்களா? 357 00:29:45,577 --> 00:29:46,870 சாம்? 358 00:29:55,796 --> 00:29:57,047 சாம்? 359 00:29:59,049 --> 00:30:00,050 இணைப்பில் இருக்கீங்களா? 360 00:30:04,930 --> 00:30:07,182 இப்போ ஜான் பெய்லி-பிரவுனை என்கிட்ட கொண்டு வரணும். 361 00:30:09,643 --> 00:30:10,978 இல்லன்னா ஃப்ரெடிக்கு நடந்தது… 362 00:30:14,022 --> 00:30:15,357 வேற யாருக்காவது நடக்கும். 363 00:30:15,941 --> 00:30:17,067 அது தேவையில்லை. 364 00:30:17,150 --> 00:30:18,569 ஏன்னா என்கிட்ட ஒரு நல்ல ஆஃபர் இருக்கு. 365 00:30:18,652 --> 00:30:19,862 அடச்சே. 366 00:30:22,364 --> 00:30:24,283 நான் ஜான் பெய்லி-பிரவுனை அரசு வழக்கறிஞர் அலுவலகத்துக்கு 367 00:30:24,366 --> 00:30:27,369 - இன்னைக்கு கூட்டிட்டு வருவேன். - ஏடா. என்ன? 368 00:30:29,496 --> 00:30:30,956 மொத்த மீடியா முன்னிலையில. 369 00:30:31,707 --> 00:30:33,000 அவர் நீதியை எதிர்கொள்வார். 370 00:30:33,500 --> 00:30:35,836 அவர் செஞ்சதுக்கான உண்மையான நீதியை. 371 00:30:38,255 --> 00:30:39,798 உங்களுக்காக இதைச் செய்வேன்னு சத்தியம் பண்றேன். 372 00:30:41,633 --> 00:30:42,634 உங்க மகனுக்காக. 373 00:30:43,677 --> 00:30:45,262 அதுதானே உங்களுக்கு வேணும்? 374 00:30:51,185 --> 00:30:52,728 ஆனா நான் கேட்டது அது இல்ல. 375 00:30:54,563 --> 00:30:55,689 இப்போ அவரை என்கிட்ட கொண்டு வாங்க. 376 00:31:01,361 --> 00:31:03,488 இது ஒரு நல்ல முடிவுதானே? 377 00:31:04,615 --> 00:31:07,910 இந்த ஆளு நிஜமாவே உங்க மகனைக் கொன்னிருந்தால், அது உங்களை பைத்தியமாக்கிடுச்சுன்னு சொல்லலாம். 378 00:31:07,993 --> 00:31:10,245 - அவங்க உங்களை பெருசா தண்டிக்க மாட்டாங்க. - உனக்குப் புரியல. 379 00:31:10,329 --> 00:31:12,039 அவள் சொல்றத ஏத்துக்கோங்க. 380 00:31:17,294 --> 00:31:19,755 இதை நான்தான் செய்றேன்னு நினைக்கிறியா? 381 00:31:22,299 --> 00:31:25,969 நான் உன்னை அப்படியே போக விடணும்னு நினைச்சாலும் என்னால அது முடியாது. 382 00:31:26,720 --> 00:31:29,056 ஏன்னா இதைச் செய்றது நான் இல்ல. 383 00:31:36,813 --> 00:31:38,440 அது என் மகனோட அம்மா. 384 00:31:47,115 --> 00:31:49,117 - சரியா? - இந்த ஆளுங்க… 385 00:31:50,118 --> 00:31:52,162 இதையெல்லாம் நீங்கதான் செஞ்சீங்கன்னு போலீஸ் நம்பணும்னு விரும்புறாங்களா? 386 00:31:52,246 --> 00:31:53,580 அதனாலதான் அவங்க இன்றைய நாளை தேர்ந்தெடுத்தாங்க. 387 00:31:55,457 --> 00:31:56,667 அந்த நினைவு நாள். 388 00:31:59,169 --> 00:32:02,256 இந்த மக்கள் என் மகனைக் கொன்னாங்க, இப்போ அவனோட அம்மாவையும் கொல்லப் போறாங்க. 389 00:32:47,134 --> 00:32:49,845 - ஏதும் பிரச்சனையா, நண்பா? - வழி தெரியாம வந்துட்டீங்களா? 390 00:32:51,013 --> 00:32:53,932 இல்ல, இல்ல. சும்மா வேடிக்கை பார்க்கிறேன். 391 00:33:32,554 --> 00:33:34,515 அலெக்சாண்டர்பிளாட்ஸ் 392 00:33:36,266 --> 00:33:38,268 குப்பைத் தொட்டியில்தான் தீ ஆரம்பிச்சதுன்னு தீயணைப்புத் துறையினர் சொல்றாங்க. 393 00:33:40,062 --> 00:33:41,063 சரி. 394 00:34:03,919 --> 00:34:05,921 அவர் கேமராக்களை அணைச்சுட்டாரா? 395 00:34:09,507 --> 00:34:10,509 வெடிகுண்டு இல்லயா? 396 00:34:11,176 --> 00:34:13,136 அப்படித்தான் தெரியுது. சீக்கிரம் இன்னும் தகவல் தெரியும். 397 00:34:18,183 --> 00:34:19,184 அன்மைய தகவல் என்ன? 398 00:34:19,851 --> 00:34:21,018 இது எல்லாமே அவரோட நாடகம். 399 00:34:21,520 --> 00:34:24,313 வெடிபொருள் எதுவும் இல்லை, அதனால நீங்க தொடரலாம். 400 00:34:24,815 --> 00:34:26,567 "நான் அப்பவே சொன்னேனே"னு நீங்க சொல்லிக்கலாம். 401 00:34:27,067 --> 00:34:29,485 அடுத்த ஸ்டேஷன்ல எங்க ஆட்கள் தயாரா இருக்காங்க. 402 00:34:33,907 --> 00:34:37,244 அவர் நிஜமாவே ஏமாத்துறாருன்னா, இது கட்டுப்பாட்டை திரும்ப எடுக்க வேண்டிய நேரம். 403 00:34:50,007 --> 00:34:51,175 ஒண்ணும் பிரச்சனை இல்லயே? 404 00:34:52,217 --> 00:34:54,428 எனக்கு மட்டும் இதுல ஏதோ புரியலையா? 405 00:34:54,928 --> 00:34:56,722 அதுக்கு செயின்சான்னு பேரு. 406 00:34:58,140 --> 00:35:00,017 நீங்க டாக்ஸி வரச் சொல்லலையே? 407 00:35:02,060 --> 00:35:03,437 - இல்ல, ஏன்? - ஓ. சும்மா கேட்டேன். 408 00:35:03,520 --> 00:35:05,189 வந்து… அந்த சந்துல இருக்குற அந்த ஆளு. 409 00:35:06,940 --> 00:35:09,151 - எந்த ஆளு? - கருப்பு SUV-ல ஒரு முட்டாள், 410 00:35:09,234 --> 00:35:10,652 ரொம்ப சுத்தமா இருக்கான், உள்ளூர்வாசி மாதிரி தெரியல. 411 00:35:11,278 --> 00:35:12,988 ஒண்ணும் பிரச்சனையா இருக்காது. 412 00:36:00,160 --> 00:36:02,412 பெர்லின் ஹௌப்ட்பான்ஹோஃப் 413 00:36:02,496 --> 00:36:04,456 - நான் வின்டர் பேசுறேன். - வெடிகுண்டு செஞ்சவன் 414 00:36:04,540 --> 00:36:06,083 வீட்டுல எங்களுக்கு ஒரு ஃபோன் கிடைச்சது. 415 00:36:06,166 --> 00:36:08,710 கடைசியா சாம் நெல்சன் நம்பருக்குத்தான் கால் பண்ணிருக்காங்க. 416 00:36:11,588 --> 00:36:13,924 அலெக்சாண்டர்ப்ளாட்ஸ்ல நடந்தது தீ வைப்பு. 417 00:36:14,007 --> 00:36:15,551 எல்லாம் ஒரு பொய்யாட்டம் மாதிரி தெரியுது. 418 00:36:15,634 --> 00:36:17,219 இல்ல, இல்ல, இல்ல. அப்படி இருக்க முடியாது. 419 00:36:17,302 --> 00:36:19,847 பிணைக் கைதி எடுத்துட்டு வந்த சூட்கேஸ்ல வெடிகுண்டு இல்லை. 420 00:36:20,347 --> 00:36:22,474 நான் சொல்றத கேளுங்க. ஒரு வெடிகுண்டு இருக்கு. 421 00:36:22,558 --> 00:36:25,394 அந்த சூட்கேஸ்ல இல்லன்னா, வேற எங்காவது இருக்கும். 422 00:36:32,860 --> 00:36:34,862 இதை முடிக்கிறதுக்கு இதுதான் உங்களுக்கான வாய்ப்பு. 423 00:36:34,945 --> 00:36:36,071 நான் சுடும் வீரர்களை அனுப்பல. 424 00:36:36,154 --> 00:36:38,407 - இன்னொரு வெடிகுண்டு இருந்தா… - சுடும் வீரர்கள் இல்ல. 425 00:36:40,409 --> 00:36:42,536 என்னை நேருக்கு நேர் அவனிடம் பேச விடுங்க. 426 00:36:43,453 --> 00:36:45,831 வேற யாரும் சாகாம இதை முடிக்க விடுங்க. 427 00:36:47,624 --> 00:36:48,625 அது ரொம்ப ரிஸ்க். 428 00:36:50,127 --> 00:36:52,921 ஒரு வயசான ஒற்றனை தன் வேலையைச் செய்ய விடுங்க. 429 00:36:55,424 --> 00:36:57,676 நான் 30 வருஷமா கொலைகாரங்களோட வேலை செஞ்சிருக்கேன். 430 00:36:58,886 --> 00:37:00,971 சாம் நெல்சன் அந்தக் கூட்டத்துல ஒருத்தன் இல்ல. 431 00:37:16,612 --> 00:37:17,613 முப்பத்தி ஐந்து நிமிடங்கள். 432 00:37:19,489 --> 00:37:20,365 என்ன? 433 00:37:20,449 --> 00:37:23,035 நீங்க பொய் சொல்றீங்கன்னு அவங்க கண்டுபிடிக்க முப்பது நிமிஷம் ஆகும்னு சொன்னீங்க. 434 00:37:23,118 --> 00:37:24,494 ஆனா முப்பத்தி அஞ்சு நிமிஷம் ஆயிடுச்சு. 435 00:37:27,956 --> 00:37:28,999 நமக்கு எப்படித் தெரியும்? 436 00:37:30,125 --> 00:37:31,585 அவங்க கண்டுபிடிச்சுட்டாங்கன்னு. 437 00:37:42,596 --> 00:37:44,932 - எனக்கு இதெல்லாம் பிடிக்கலை. - என்ன இது? 438 00:37:45,015 --> 00:37:46,517 இதோ இதுதான் உன் கேள்விக்கான பதில். 439 00:38:00,030 --> 00:38:02,115 எல்லாரும் அமைதியா இருங்க, சரியா? பசங்களா, அமைதியா இருங்க. 440 00:38:03,283 --> 00:38:04,409 உங்ககிட்ட ஃபோன் இருந்தா பயன்படுத்துங்க. 441 00:38:06,453 --> 00:38:08,163 எல்லோரும்… நாம அமைதியா இருக்கப் போறோம். 442 00:38:09,164 --> 00:38:10,749 சார், சார், என்ன நடக்குது? நாம மாட்டிக்கிட்டோமா? 443 00:38:10,832 --> 00:38:12,417 நாம அமைதியா இருக்கோம். 444 00:38:12,501 --> 00:38:14,002 மின்சாரத்துக்கு என்ன ஆச்சு? 445 00:38:15,212 --> 00:38:17,464 அது ஒரு ஃபெயில்-சேஃப். தானா நடக்கும். 446 00:38:18,465 --> 00:38:20,342 தீ பரவுறதால. 447 00:38:22,135 --> 00:38:24,304 நாங்க உங்களுக்கு பவரை திரும்ப ஆன் பண்ண முயற்சிக்கிறோம். 448 00:38:24,388 --> 00:38:26,682 எவ்வளவு சீக்கிரம் பவரை திரும்ப ஆன் பண்ண முடியும்? 449 00:38:27,516 --> 00:38:28,600 ஒரு சில நிமடங்கள்ல. 450 00:38:29,726 --> 00:38:33,230 நான் சொல்றத கேளுங்க. இந்த ரயில் ரொம்ப சீக்கிரம் நகரலனா, 451 00:38:33,313 --> 00:38:36,400 இந்த விஷயத்தை பெருசாக்கினதுக்கு உங்களைத்தான் காரணம் சொல்வேன். 452 00:38:40,445 --> 00:38:41,446 புரிஞ்சுது. 453 00:38:42,281 --> 00:38:43,949 சரி, உங்க எல்லா கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். 454 00:38:45,117 --> 00:38:48,120 பவரை சரி பண்ண எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் வேணும். 455 00:38:54,209 --> 00:38:55,294 அவங்க அதைத் திரும்ப ஆன் பண்ண மாட்டாங்க. 456 00:38:55,377 --> 00:38:57,337 பவர் கட், அது எல்லாத்தையும் நிறுத்திடுமா? 457 00:38:57,421 --> 00:38:59,506 ஆமா. வைஃபை இருக்காது, லைவ் ஃபீட்ஸ் இருக்காது. 458 00:39:00,007 --> 00:39:01,383 இது ஒரு முழுமையான பிளாக் ஹோல். 459 00:39:04,511 --> 00:39:05,596 ஒரே ஒரு விஷயம்… 460 00:39:05,679 --> 00:39:07,139 ஹேய், ஹேய், ஹேய். என்ன பண்ணுற? 461 00:39:07,639 --> 00:39:10,601 இது அவசர விளக்குக்கான ஸ்விட்ச் மட்டும்தான். இங்கே பாருங்க. 462 00:39:18,025 --> 00:39:20,152 - வைஃபையும் ஃபோன் சிக்னலும் போயிடுச்சு. - வாய்ப்பே இல்ல. 463 00:39:20,235 --> 00:39:21,361 அடச்சே. 464 00:39:21,445 --> 00:39:23,822 பவரை நாமே ஆன் பண்ண வழியே இல்லையா? 465 00:39:24,865 --> 00:39:26,742 இல்ல. வாய்ப்பே இல்ல. எல்லாம் மையப்படுத்தப்பட்டு இருக்கு. 466 00:39:27,534 --> 00:39:30,996 நம்மகிட்ட பயன்படுத்த ஏதாவது இருக்கா? 467 00:39:31,079 --> 00:39:34,291 நிஜமான குண்டு மாதிரி? ஆயுதம்? 468 00:39:34,374 --> 00:39:37,002 அவங்க மாட்டிவிடப் பார்க்குற ஒருத்தனுக்கு ஆயுதம் கொடுக்க மாட்டாங்க. 469 00:39:37,586 --> 00:39:38,587 உங்களுக்கு எதுவும் கொடுக்கலையா? 470 00:39:39,796 --> 00:39:41,089 இது ஒரு போக்கர் விளையாட்டு. 471 00:39:42,090 --> 00:39:45,302 ஜெயிக்க நல்ல கார்டு இருக்கணும்னு இல்ல, சாமர்த்தியமா ஏமாத்தினா போதும். 472 00:39:47,513 --> 00:39:49,181 ஆனா அவங்க அந்த ஏமாற்று வேலையை கண்டுபிடிச்சாங்கன்னா? 473 00:39:50,307 --> 00:39:51,308 ஹஹ், அப்புறம் என்ன? 474 00:39:52,017 --> 00:39:53,769 நான் நிஜமாவே சாகணுமா? 475 00:40:08,075 --> 00:40:09,243 மன்னிக்கவும். 476 00:40:11,245 --> 00:40:12,996 ரயில்களை இரவுல எங்கே நிறுத்தி வைப்பாங்க? 477 00:40:13,080 --> 00:40:15,290 தொலைந்த பொருட்கள் பிரிவு ருடால்ஃப்ஸ்ட்ராஸ்ஸேல இருக்கு. 478 00:40:19,545 --> 00:40:20,963 நான் ஒரு வெடிகுண்டைத் தேடுறேன். 479 00:40:34,017 --> 00:40:37,646 மக்களே, இந்த ஸ்டேஷன் மூடப்பட்டுள்ளது. 480 00:40:37,729 --> 00:40:39,481 தயவுசெய்து அருகிலுள்ள வெளியேறும் வழியை நோக்கிச் செல்லுங்கள். 481 00:40:55,539 --> 00:40:58,959 மக்களே, இந்த ஸ்டேஷன் மூடப்பட்டுள்ளது. 482 00:40:59,042 --> 00:41:01,128 தயவுசெய்து அருகிலுள்ள வெளியேறும் வழியை நோக்கிச் செல்லுங்கள். 483 00:41:16,143 --> 00:41:19,062 நேத்து ராத்திரி அது இங்கேதான் நிறுத்தப்பட்டதுன்னு உறுதியா தெரியுமா? 484 00:41:19,521 --> 00:41:20,647 ஆமா. 485 00:41:43,879 --> 00:41:45,881 அது பனியா? 486 00:42:18,539 --> 00:42:19,748 சார், நான் ரயிலை விட்டு இறங்கணும். 487 00:42:19,831 --> 00:42:21,708 - இப்பவே. - கொஞ்ச நேரம்தான் ஆகும். 488 00:42:21,792 --> 00:42:24,002 ரெண்டு மணிநேரமா அதையேதான் சொல்றிங்க, அது பொய்னு எங்க எல்லாருக்கும் தெரியும். 489 00:42:24,586 --> 00:42:27,714 அவங்க குண்டு பத்தி பேசுறாங்க, சார். எனக்கு பயமா இருக்கு. 490 00:42:27,798 --> 00:42:29,967 கேளு, எங்க… எங்க எல்லாருக்கும் பயமாத்தான் இருக்கு. 491 00:42:30,050 --> 00:42:31,885 சரியா? எங்க எல்லாருக்கும் பயமா இருக்கு. 492 00:42:34,513 --> 00:42:35,806 அடச்சே. 493 00:42:37,391 --> 00:42:38,392 நான்… 494 00:42:39,810 --> 00:42:40,811 நான் உன்னிட்ம பேசணும். 495 00:42:41,520 --> 00:42:42,938 வெளிய டன்னல்-ல. 496 00:42:46,024 --> 00:42:47,109 அப்போ நான்? 497 00:42:48,402 --> 00:42:50,487 நாங்க டன்னல் பாதுகாப்பா இருக்கான்னு பார்க்கப் போறோம். 498 00:42:50,571 --> 00:42:53,824 அவங்க போன முறை மாதிரி நம்மை பிளாக் பண்ணல. சரி, நீ இன்னும் கொஞ்ச நேரம் 499 00:42:53,907 --> 00:42:55,576 இங்கேயே இரு. சரியா? 500 00:42:56,410 --> 00:42:57,619 சீக்கிரம் எல்லாம் முடிஞ்சுடும், சரியா? 501 00:42:58,495 --> 00:42:59,496 ஹேய். 502 00:43:00,956 --> 00:43:03,333 நான் உன்னைக் காயப்படுத்த மாட்டேன். இந்த ரயில்ல இருக்க யாரையும் காயப்படுத்த மாட்டேன். 503 00:43:04,251 --> 00:43:06,211 சரி, ஆனா நீ என்னை நம்பணும். 504 00:43:06,295 --> 00:43:10,799 நீ அதைச் செஞ்சன்னா, எல்லாரும் வீட்டுக்கு… பத்திரமா போறதை நான் உறுதி செய்வேன். 505 00:43:32,905 --> 00:43:36,200 சரி, அவங்க நம்மை திரும்பவும் இடைமறிக்க முயற்சிக்கலன்னு நீங்க செக் பண்ணனுமா? 506 00:43:36,700 --> 00:43:40,037 இல்ல. ரயில்ல அவங்க நம்மை எப்படியோ பார்க்குறாங்க. 507 00:43:41,288 --> 00:43:42,497 எப்படின்னு எனக்குத் தெரியல… 508 00:43:42,998 --> 00:43:44,082 ஆனா அவங்க நாம பேசுறத கேக்குறாங்க. 509 00:43:47,002 --> 00:43:49,546 பவர் கட் ஆகி இருட்டா இருப்பதால, நாம இதை முடிக்கலாம்னு நினைக்கிறேன். 510 00:43:50,255 --> 00:43:51,298 இதை எப்படி செய்யணும்னு நினைக்கிறீங்க? 511 00:43:51,381 --> 00:43:52,925 உன்கிட்ட லேண்ட்லைன் இருக்குல்ல? 512 00:43:53,926 --> 00:43:54,927 டன்னல்குள்ள? 513 00:43:55,010 --> 00:43:56,220 ஆமா. அவை 514 00:43:56,303 --> 00:43:58,514 - 500 மீட்டருக்கு ஒண்ணு இருக்கும். - சரி. 515 00:43:58,597 --> 00:44:01,475 நீ ஓடிப் போய் அந்த லேண்ட்லைன்ல ஒண்ணுல பேசணும். 516 00:44:01,558 --> 00:44:04,144 சரி, பிரிட்டிஷ் போலீஸை லைன்ல வர சொல்லு. 517 00:44:04,228 --> 00:44:08,607 சரி. மார்ஷா ஸ்மித்-நெல்சன் ஆபத்துல இருக்காங்கன்னு சொல்லு. 518 00:44:08,690 --> 00:44:10,943 சரி, மார்ஷா ஸ்மித்-நெல்சன். 519 00:44:11,026 --> 00:44:12,444 அவங்கதான் உங்க… 520 00:44:13,153 --> 00:44:15,489 - உங்க மகனோட அம்மாவா? - ஆமா, அவங்கதான். 521 00:44:18,283 --> 00:44:21,578 நாம மார்ஷாவை பத்திரமான இடத்துக்கு கொண்டு போயிட்டா, எல்லாரும் வீட்டுக்குப் போகலாம். 522 00:44:22,412 --> 00:44:23,413 சரி. 523 00:44:23,497 --> 00:44:25,165 - சரி. - சரி. 524 00:44:27,000 --> 00:44:28,710 - அடச்சே. - மன்னிச்சிடுங்க. 525 00:44:32,214 --> 00:44:33,340 அது என்ன? 526 00:44:33,423 --> 00:44:34,424 என்ன சொல்றீங்க? 527 00:44:36,677 --> 00:44:40,222 சாம், பேசுங்க. இணைப்பில் இருக்கீங்களா? சாம்? 528 00:44:42,558 --> 00:44:43,934 ஆட்டோ, என்ன நடக்குது? 529 00:44:54,278 --> 00:44:55,279 அடச்சே. 530 00:44:57,698 --> 00:44:59,199 அது என்னது? 531 00:44:59,283 --> 00:45:00,284 அது என்னது? 532 00:45:07,833 --> 00:45:10,002 நான் தோத்துட்டா, மார்ஷா செத்துடுவாள்னு சொன்னாங்க. 533 00:45:11,253 --> 00:45:12,921 அது… அதுதான் நம்ம எல்லாருடைய கதியும். 534 00:45:15,591 --> 00:45:18,051 - நாம கதவுகளை திறக்கலாம்னு சொல்றேன். - அது பாதுகாப்பானது இல்லை, பசங்களா. 535 00:45:19,344 --> 00:45:20,637 பவர் திரும்ப வந்துட்டா… 536 00:45:20,721 --> 00:45:22,222 நான் ரிஸ்க் எடுத்துக்கிறேன், நன்றி. 537 00:45:22,306 --> 00:45:24,016 சரி, ஃப்ரான். உன் நகத்தை அதுல போடு… 538 00:45:24,641 --> 00:45:28,061 - ஹேய். ஹேய். நீ மக்களை சாகடிச்சுடுவ. - போய்த் தொலை! 539 00:45:28,145 --> 00:45:30,397 ஹேய்! ஓய், என்ன பண்ணுற? 540 00:45:47,414 --> 00:45:49,708 பொறு. ஆட்டோ, இங்க வா. 541 00:45:49,791 --> 00:45:50,792 ஆட்டோ. 542 00:45:54,213 --> 00:45:55,631 ஆட்டோ, உங்களுக்கு கேட்குதா? 543 00:45:56,965 --> 00:45:58,383 ஏன் பதில் சொல்ல மாட்டேங்குறீங்க? 544 00:46:04,640 --> 00:46:06,058 அங்கே யாராவது இருக்காங்களா? 545 00:46:06,141 --> 00:46:07,768 - ஹலோ? - ஹலோ? 546 00:46:09,186 --> 00:46:10,354 - ஹலோ? - ஹலோ? 547 00:46:10,896 --> 00:46:13,690 - என்ன பண்ணுற? - நான் போகணும்னு சொன்னீங்க. என்னால போக முடியும். 548 00:46:13,774 --> 00:46:16,944 - போலீஸுக்கு தகவல் கொடுக்கணும். - இல்ல. வாய்ப்பே இல்ல. சரியா? 549 00:46:17,027 --> 00:46:19,655 அந்த ரயில்ல இருக்குற அந்த மக்கள் எல்லாரும் தெரியுறாங்களா? உன் பயணிகள்? 550 00:46:20,239 --> 00:46:21,615 சரியா? 551 00:46:23,116 --> 00:46:24,660 நாம போய்கிட்டே இருக்கணும். 552 00:46:26,537 --> 00:46:28,622 எப்படி? ஃப்ரெடியைக் கொல்வதாலா? 553 00:46:28,705 --> 00:46:30,082 அதுக்கு எனக்கு போதுமான சம்பளம் கொடுக்கல. 554 00:46:30,832 --> 00:46:32,376 - என்னைப் போக விடுங்க. - ஹேய். கேளு. 555 00:46:33,168 --> 00:46:35,879 இன்னைக்கு யாரும் சாக மாட்டாங்க. 556 00:46:54,106 --> 00:46:57,818 உங்களுக்கு உதவி தேவைப்பட்டு பேச முடியலன்னா… 557 00:46:57,901 --> 00:47:00,904 பச்சை நிற பட்டனை அழுத்துங்க. 558 00:47:11,623 --> 00:47:15,085 ஹேய்! பொறு… வேணாம்… வேணாம்… 559 00:47:22,050 --> 00:47:24,344 அடச்சே! ஹே! 560 00:47:27,181 --> 00:47:28,140 பொறு! 561 00:47:35,439 --> 00:47:36,565 செஞ்சுத் தொலை! 562 00:47:36,648 --> 00:47:38,859 என்னை கொன்னுடு! எனக்கு கவலையில்ல! 563 00:47:38,942 --> 00:47:43,030 நீ நான் சொல்றத கேட்டன்னா, இது ரொம்ப சுலபமா முடியும். 564 00:47:43,113 --> 00:47:44,698 உன்னை யாரு அனுப்புனாங்க? 565 00:47:50,829 --> 00:47:52,122 என்ன நடக்குது? 566 00:48:13,894 --> 00:48:15,020 வா! 567 00:48:15,938 --> 00:48:17,648 - வா! - சரி. 568 00:48:31,537 --> 00:48:32,538 அடச்சே. 569 00:48:33,622 --> 00:48:34,790 என்ன இது? 570 00:48:37,000 --> 00:48:39,586 - ஏன் நீங்க… நீங்க ஏன் இப்படி செஞ்சீங்க? - உன் இருக்கைக்கு திரும்பு. 571 00:48:39,670 --> 00:48:41,088 இல்ல. இல்ல, நீங்க ஏன்… 572 00:49:09,241 --> 00:49:10,367 என்னை மன்னிச்சிடு. 573 00:49:15,038 --> 00:49:18,876 நாம என்ன செய்யப் போறோம்? 574 00:49:47,029 --> 00:49:49,239 U-BHF ஷோன்லீன்ஸ்ட்ராஸ்ஸே 575 00:50:06,798 --> 00:50:08,342 அந்த ரயில் எங்கே? 576 00:50:08,425 --> 00:50:10,886 டன்னலுக்குள்ளே. நூறு மீட்டர் தூரத்தில். 577 00:50:10,969 --> 00:50:12,971 - போங்க, டீம். - பின்தொடந்து வாங்க. 578 00:50:14,097 --> 00:50:15,682 பக்கத்துலேயே இருங்க. நெருக்கமான அமைப்பு. 579 00:50:17,851 --> 00:50:19,102 என் பின்னாடியே வாங்க. 580 00:50:19,645 --> 00:50:21,230 ஏதாவது நடந்தா, உங்களை வெளிய இழுத்துடுவோம். 581 00:50:24,399 --> 00:50:25,484 இந்தப் பக்கம். 582 00:50:33,158 --> 00:50:34,785 அவங்க தயாராக இருக்காங்க. 583 00:50:37,079 --> 00:50:38,705 ஃபேபர் இப்போ ரயிலை நெருங்குறார். 584 00:50:38,789 --> 00:50:41,124 GSG 9 அவருக்கு பாதுகாப்புக் கொடுக்க பொசிஷனுக்குப் போறாங்க. 585 00:50:43,710 --> 00:50:45,420 இது சரியான முடிவா இருக்கும்னு நம்புறேன். 586 00:50:47,923 --> 00:50:51,009 வுல்ஃப்-ஐ கூப்பிடுங்க. ஃபேபர் அங்கே இருக்கலாம், ஆனா இது என் ஆபரேஷன். 587 00:50:51,093 --> 00:50:51,969 அப்புறம் சாம்? 588 00:50:53,804 --> 00:50:54,930 அவருக்கு என்ன ஆகும்? 589 00:50:58,851 --> 00:51:01,812 என் முதல் கவலை, அந்த ரயிலில் இருக்கிற 200 பயணிகள் தான். 590 00:51:08,527 --> 00:51:09,528 பின்னாடி நில்லுங்க. 591 00:51:11,029 --> 00:51:12,030 பரவாயில்லை. 592 00:51:28,881 --> 00:51:30,007 சாம். 593 00:51:30,507 --> 00:51:32,217 நான்தான் பீட்டர் ஃபேபர் பேசுறேன். 594 00:51:32,301 --> 00:51:34,261 வந்து என்கிட்ட பேசுங்க, சாம். 595 00:51:35,679 --> 00:51:37,264 நாம இதை தீர்த்துடலாம். 596 00:51:38,265 --> 00:51:40,350 நீங்க கொலைகாரன் இல்லைன்னு எனக்குத் தெரியும், சாம். 597 00:51:45,105 --> 00:51:46,857 நீங்க யாரையும் காயப்படுத்த விரும்ப மாட்டீங்க. 598 00:51:51,987 --> 00:51:55,449 நீங்க உங்க மகனுக்காக வருத்தப்படுற ஒரு அப்பான்னு எனக்குத் தெரியும். 599 00:51:55,532 --> 00:51:57,743 அப்படித்தான், வந்துட்டே இருங்க… 600 00:52:02,873 --> 00:52:04,041 ரயில் மேடையில… 601 00:52:04,499 --> 00:52:05,334 அது என்னது? 602 00:52:06,001 --> 00:52:07,878 இங்கேயே இருங்க, நாங்க போய் என்னன்னு பாக்குறோம். 603 00:52:09,338 --> 00:52:11,340 ஒரு காட்சி தெரியுது. ரயில் மேடையில யாரோ இருக்காங்க. 604 00:52:12,007 --> 00:52:13,967 என்ன சொல்றீங்க? யாரு அது? 605 00:52:14,051 --> 00:52:15,886 முன்னாடி போங்க. என்னை கவர் பண்ணுங்க. 606 00:52:16,595 --> 00:52:18,722 வுல்ஃப், கேட்குதா? அது யாரு? 607 00:52:19,389 --> 00:52:22,017 அது அந்த பயணி. சூட்கேஸ் வச்சிருந்த அந்த பயணி. 608 00:52:23,977 --> 00:52:25,479 என்ன? அவர் உயிரோட இருக்காரா?! 609 00:52:28,273 --> 00:52:29,566 இல்லை. 610 00:52:31,568 --> 00:52:32,653 இப்ப என்ன பண்ணுறது? 611 00:52:37,866 --> 00:52:42,996 கிளாரா, விஷயங்களை பெரிசு படுத்தினா என்ன நடக்கும்னு நான் எச்சரிச்சேன். 612 00:52:43,705 --> 00:52:44,706 சாம். 613 00:52:45,541 --> 00:52:47,084 நான் இதை இப்பவே முடிக்க விரும்புறேன். 614 00:52:47,167 --> 00:52:48,335 நீங்களும் அப்படித்தான் விரும்புவீங்கன்னு நினைக்கிறேன். 615 00:52:48,418 --> 00:52:50,128 அது அவ்வளவு சுலபமா இருந்தா நல்லா இருக்கும். 616 00:52:50,921 --> 00:52:53,966 இந்த ரயில்ல வெடிபொருள் நிரப்பப்பட்டிருக்கு. 617 00:52:54,591 --> 00:52:56,635 பவரை திரும்ப ஆன் பண்ணி என்னை போக விடுங்க, 618 00:52:57,219 --> 00:53:00,097 இல்லன்னா உங்க கையில ஒரு பிணத்தை விட நிறைய இருக்கும். 619 00:53:08,188 --> 00:53:09,189 என்ன ஆச்சு? 620 00:53:11,358 --> 00:53:13,777 ஹலோ? என்ன ஆச்சு? 621 00:53:18,115 --> 00:53:19,700 நல்லவேளை. 622 00:53:49,396 --> 00:53:50,939 நாம் பின்வாங்க ஆர்டர் வந்துருக்கு. 623 00:53:53,442 --> 00:53:54,443 கேளுங்க! 624 00:53:55,444 --> 00:53:57,863 நாம ரயிலைப் போக விடணும். 625 00:54:57,589 --> 00:54:59,967 என்னை மிஸ்டர் பிட்டிஃபுல் என்று கூப்பிடுங்கள் 626 00:55:02,052 --> 00:55:04,179 அன்பே, இப்போது அதுதான் என் பெயர் 627 00:55:05,806 --> 00:55:08,350 என்னை மிஸ்டர் பிட்டிஃபுல் என்று கூப்பிடுங்கள் 628 00:55:09,268 --> 00:55:11,895 அப்படிதான் எனக்குப் புகழ் கிடைத்தது 629 00:55:13,021 --> 00:55:15,858 ஆனால் மக்களுக்கு அதைப் புரிந்துகொள்ள விருப்பமில்லை 630 00:55:16,733 --> 00:55:19,903 ஒரு மனிதனை இவ்வளவு சோகமாக உணர வைப்பது எது? 631 00:55:21,446 --> 00:55:23,991 அவர்கள் என்னை மிஸ்டர் பிட்டிஃபுல் என்று அழைக்கிறார்கள் 632 00:55:24,074 --> 00:55:27,411 ஏனெனில் உன்னைப் போன்ற ஒருவரை நான் இப்போது இழந்துவிட்டேன் 633 00:55:28,453 --> 00:55:31,415 அவர்கள் என்னை மிஸ்டர் பிட்டிஃபுல் என்று அழைக்கிறார்கள் 634 00:55:32,457 --> 00:55:35,043 இப்போது இது எல்லோருக்கும் தெரியும் 635 00:55:36,170 --> 00:55:38,839 அவர்கள் என்னை மிஸ்டர் பிட்டிஃபுல் என்று அழைக்கிறார்கள் 636 00:55:40,048 --> 00:55:42,968 நான் போகும் பெரும்பாலான இடங்களில் 637 00:55:44,052 --> 00:55:46,763 ஆனால் யாரும் அதைப் புரிந்துகொள்ள விரும்புவது போலத் தெரியவில்லை 638 00:55:47,514 --> 00:55:50,684 ஒருவனால் எப்படி இவ்வளவு சோகமான பாடலைப் பாட முடியும்? 639 00:55:50,767 --> 00:55:52,769 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்