1 00:00:27,361 --> 00:00:28,487 யார் இதைச் செய்தது? 2 00:00:30,322 --> 00:00:31,490 இவனை யார் இப்படி செய்தது? 3 00:00:33,283 --> 00:00:34,326 அவர்கள் அவனுக்கு உதவ முயற்சித்தார்கள். 4 00:00:39,706 --> 00:00:41,208 நீ, நீ ஒரு டாக்டர், இல்லையா? 5 00:00:41,792 --> 00:00:42,876 அவன் தேறுவான் என சொல்லு. 6 00:00:45,504 --> 00:00:49,091 இப்போதைக்கு நலமாக இருக்கிறான், அவ்வளவு தான் சொல்ல முடியும். 7 00:00:50,634 --> 00:00:51,802 சரி. அவனோடு இரு. 8 00:00:54,221 --> 00:00:55,389 மற்றவர்கள் அனைவரும் வெளியே போங்கள். 9 00:00:59,309 --> 00:01:00,811 நான் ஃபோன் பண்ணினேன். 10 00:01:03,021 --> 00:01:04,063 அம்மாவிற்கு ஃபோன் செய்தேன். 11 00:01:05,816 --> 00:01:06,859 பரவாயில்ல, தம்பி. 12 00:01:11,154 --> 00:01:12,155 வெளியே போங்கள்! 13 00:01:21,373 --> 00:01:22,374 அப்பா இங்கே? 14 00:01:24,084 --> 00:01:25,878 உடம்பு சரியில்லாத ஒருவருக்கு உதவுகிறார், செல்லம். 15 00:01:43,812 --> 00:01:44,813 அவன் எப்படி இருக்கிறான்? 16 00:01:45,564 --> 00:01:47,316 எனக்குத் தண்ணீர் எடுத்து தர முடியுமா? 17 00:01:53,906 --> 00:01:54,907 நன்றி. 18 00:01:56,783 --> 00:01:59,286 ஆனா கோவாக்ஸ் முதன்மை அதிகாரி 19 00:01:59,369 --> 00:02:00,537 நன்றி, ஆனா. 20 00:02:00,621 --> 00:02:01,622 நகர்ந்து கொண்டே இரு. 21 00:02:10,964 --> 00:02:12,132 உன் சீட்டிற்கு போ. 22 00:02:30,692 --> 00:02:31,610 என்ன? 23 00:02:32,819 --> 00:02:34,780 என்ன நடக்கிறது என்று சொல்கிறாயா? 24 00:02:55,092 --> 00:02:56,093 இது எந்த நாட்டு கொடி? 25 00:02:57,511 --> 00:02:58,345 இத்தாலி. 26 00:02:58,428 --> 00:02:59,638 தலைகீழாகப் பார். 27 00:03:01,807 --> 00:03:04,518 ஹங்கேரி. ஏன்? 28 00:03:07,521 --> 00:03:08,522 நாம் இதை… 29 00:03:12,776 --> 00:03:14,069 முடிக்கலாம் என்று நினைக்கிறேன். 30 00:04:11,418 --> 00:04:13,629 -இல்லை, தெரியும். -இப்போதே, வந்து… 31 00:04:13,712 --> 00:04:15,797 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய… 32 00:04:15,881 --> 00:04:17,048 உள்துறை செயலாளர். 33 00:04:18,884 --> 00:04:19,968 நீல், உங்களோடு பேச முயன்றோம். 34 00:04:20,052 --> 00:04:22,429 -லூயிஸ், இப்போது எங்கே இருக்கிறீர்கள்? -காலிங்வுட் ஹவுஸ். 35 00:04:22,513 --> 00:04:24,056 அங்கே என்ன தான் செய்கிறாய்? 36 00:04:24,139 --> 00:04:25,641 இங்கே இருக்கும் போது தான் எல்லாம் தெரிய வந்தது. 37 00:04:26,558 --> 00:04:30,270 “கோரிக்கைகள்” என்ற ஒரு கடித உரை கொடுக்கப்பட்டிருக்கிறது. 38 00:04:30,354 --> 00:04:31,396 கோரிக்கைகளா? 39 00:04:31,480 --> 00:04:32,773 நாங்கள் தொலைவில் இல்லை. 40 00:04:32,856 --> 00:04:34,733 -என்ன மாதிரியான கோரிக்கைகள்? -இன்னும் இரண்டு நிமிடத்தில் 41 00:04:34,816 --> 00:04:36,235 -காலிங்வுட் வந்து விடுவோம். -நீல். 42 00:04:36,318 --> 00:04:38,612 அதன் பிறகு இதைப் பற்றி ஒன்றாக பேசலாம். 43 00:04:39,488 --> 00:04:43,784 சிசிடிவியை பார்க்குமாறு ஒயிட் ஹால் செக்யூரிட்டிக்கு நீ சொல்ல வேண்டும். 44 00:04:43,867 --> 00:04:46,912 இந்த உறையைக் கொடுத்தவன் யார் என்று எனக்குத் தெரிய வேண்டும். 45 00:04:47,496 --> 00:04:48,539 தயவுசெய்து, இப்போதே சொல்லு. 46 00:05:01,051 --> 00:05:02,052 காலிங்வுட் ஹவுஸ் சிஎச் 47 00:05:02,135 --> 00:05:04,596 உள்துறை செயலாளரிடம் ஒரு கடித உறை கொடுக்கப்பட்டிருக்கிறது. 48 00:05:04,680 --> 00:05:07,850 இதற்கு சம்பந்தமில்லாமல் இருக்கலாம், ஆனால் அவர் அதை பகிர விரும்புவதால் 49 00:05:09,309 --> 00:05:10,644 இங்கே வரச் சொன்னேன். 50 00:05:12,104 --> 00:05:15,732 நாம் கடத்தல்காரர்கள் மீது கவனம் செலுத்த வேண்டாம். அவர்கள் ஜாக்கிரதையாகத்தான் இருப்பார்கள். 51 00:05:15,816 --> 00:05:17,901 நாம் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மீது கவனம் செலுத்தலாம் 52 00:05:17,985 --> 00:05:21,655 ஏனென்றால், அவர்கள் சமூக ஊடகங்களில் இருந்தால், இவர்களின் சுயரூபம் வெளிச்சத்திற்கு வரும். 53 00:05:22,322 --> 00:05:25,325 அம்மாவின் வீடு. அதைத் தேடுங்கள். எது கிடைக்கிறதென பாருங்கள். 54 00:05:26,076 --> 00:05:27,411 நீங்கள் சேர்ந்து போகலாம். 55 00:05:28,662 --> 00:05:30,581 சரி. நல்லது. 56 00:05:41,800 --> 00:05:42,801 எல்லோருக்கும், வணக்கம். 57 00:05:43,302 --> 00:05:44,553 காலை வணக்கம், லூயிஸ். 58 00:05:45,137 --> 00:05:46,930 -சரி. என்னிடம் இது கொடுக்கப்பட்டது. -மன்னிக்கவும். 59 00:05:47,014 --> 00:05:49,349 இது மிகவும் சிறியது, எனவே முதலில் படிக்கிறேன். 60 00:05:50,184 --> 00:05:52,686 உங்களிடம் இருப்பதோடு இது ஒத்திருக்கிறதா என்று சொல்லுங்கள். 61 00:05:55,397 --> 00:05:59,943 “உள்துறை செயலாளர் மற்றும் யுகே அரசின் உறுப்பினர்களின் கவனத்திற்கு. 62 00:06:00,444 --> 00:06:03,447 2023, ஜனவரி 7-ம் தேதி அன்று, 63 00:06:03,530 --> 00:06:07,618 எட்கர் யான்சன் மற்றும் ஜான் பெய்லி-பிரவுன் தவறாக சிறை பிடிக்கப்பட்டார்கள். 64 00:06:07,701 --> 00:06:13,498 இதன் நேரடி விளைவாக, விமானம் கேஏ29 கடத்தப்பட்டிருக்கிறது.” 65 00:06:14,666 --> 00:06:18,629 “செய்த தவறை சரிசெய்ய இது உங்களுக்கு ஒரு வாய்ப்பு. 66 00:06:19,129 --> 00:06:22,174 அந்த விமானம் லண்டனை சென்று அடையும் நேரத்திற்குள் 67 00:06:22,257 --> 00:06:24,551 அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். 68 00:06:24,635 --> 00:06:29,139 இதையோ அல்லது மற்ற தொடரும் கட்டளைகளையும் செய்ய மறுப்பது 69 00:06:29,223 --> 00:06:36,063 விமானத்தில் இருக்கும் 216 பேரின் இறப்புக்கு காரணமாகும்.” 70 00:06:39,483 --> 00:06:44,363 ஆக, இதில் யோசிக்க நிறைய இருக்கிறது. 71 00:06:52,746 --> 00:06:53,872 யாருடைய அம்மா? 72 00:06:53,956 --> 00:06:55,958 இல்லை. அவன், “அம்மாவிடம் பேசினேன்” என்றான். 73 00:06:57,167 --> 00:06:59,044 “என் அம்மா” என்று சொல்லவில்லை, “அம்மா” என்றான். 74 00:06:59,127 --> 00:07:00,754 -ஆக, அவர்கள் சகோதரர்களா? -ஆமாம். 75 00:07:01,421 --> 00:07:04,091 இல்லை, அப்படி இருக்க முடியாது. அந்த இளைஞனின் அம்மா அவனுக்கு தெரிந்திருக்கலாம். 76 00:07:04,174 --> 00:07:06,218 இல்லை, இல்லை. அவர்கள் சகோதரர்கள் போல பேசினான். 77 00:07:06,760 --> 00:07:08,262 -சரி. -நண்பர்களே, இப்போதும் ரொமேனியா மீது பறக்கிறோம். 78 00:07:08,345 --> 00:07:09,888 இன்னும் 15 நிமிடங்களுக்கு பறப்போம். 79 00:07:09,972 --> 00:07:12,349 எனவே, செய்வதென்றால், அதை இப்போதே செய்ய வேண்டும். 80 00:07:30,951 --> 00:07:32,953 நான் ஒன்று சொல்லலாமா? 81 00:07:33,036 --> 00:07:34,955 நீ எதுவும் சொல்வதற்கு முன்னால், நான் ஒன்றை விளக்குகிறேன். 82 00:07:35,455 --> 00:07:37,332 என்ன? என்ன? 83 00:07:38,125 --> 00:07:39,293 நீ விமானத்தை தரையிறக்க வேண்டும். 84 00:07:39,376 --> 00:07:41,044 உன் வேலையை செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. 85 00:07:41,128 --> 00:07:43,589 மறுபடியும் மேலே பறந்து இதை ஒட்டிக் கொண்டிருக்கலாம், 86 00:07:43,672 --> 00:07:46,049 ஆனால் அவனுக்கு மருத்துவ உதவி தேவை. 87 00:07:46,133 --> 00:07:47,509 -அவன் நலமாக இருக்கிறான். -இறந்து கொண்டிருக்கிறான். 88 00:07:48,218 --> 00:07:50,554 -டாக்டர் அவனை நலம் என்று சொன்னார். -அதைப்பற்றி யோசி. 89 00:07:50,637 --> 00:07:52,556 -அவன் சொன்னதை நீயே கேட்டாய். -ஒரு பைரோ மூலம் சுவாசிக்கிறான். 90 00:07:52,639 --> 00:07:55,642 அவன் இறக்கப் போகிறான். இப்போதில்லை என்றாலும், லண்டனை அடைவதற்கு முன் இறப்பான். 91 00:07:55,726 --> 00:07:56,560 இல்லை. 92 00:07:57,060 --> 00:07:58,395 இல்லை, ஒருவனுக்காக அது முடியாது. 93 00:07:58,478 --> 00:08:00,189 அவன் யாரோ ஒருவன் இல்லை, சரியா? 94 00:08:01,398 --> 00:08:02,524 அவன் உன் தம்பி. 95 00:08:03,650 --> 00:08:06,528 -அப்படியா? உனக்கு எப்படி தெரிந்தது? -அவனுக்கு இதில் முழு விருப்பமில்லை. 96 00:08:07,237 --> 00:08:09,573 -அவன் என் சகோதரன் என்று யார் சொன்னது? -அவன் உன்னை கைவிட விரும்பவில்லை. 97 00:08:09,656 --> 00:08:10,741 உனக்கு யார் சொன்னது? 98 00:08:10,824 --> 00:08:11,825 அவன் தான் சொன்னான், சரியா? 99 00:08:11,909 --> 00:08:14,494 ஒரு பேனா மூலம் சுவாசிக்கிறான், அதை அவன் தாக்கு பிடிக்க மாட்டான். 100 00:08:14,578 --> 00:08:16,163 அந்த டாக்டர் தான் என்னிடம் இப்படிச் சொன்னார். 101 00:08:16,246 --> 00:08:18,749 டாக்டர் அவன் நலமாகிவிடுவான் என்றான். 102 00:08:18,832 --> 00:08:22,753 நீ கேட்க விரும்பியதையே டாக்டர் சொன்னார், ஏனெனில் அவர் பயப்படுகிறார். 103 00:08:23,253 --> 00:08:25,672 அவன் நுரையீரலில் காற்று அடைபட்டு இருக்கிறது, 104 00:08:25,756 --> 00:08:28,800 இந்த பயணம் முழுவதும் அந்த பேனா உதவி செய்யாது. அது தான் உண்மை. 105 00:08:31,512 --> 00:08:32,596 ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக. 106 00:08:33,889 --> 00:08:35,140 அவன் அப்படி சொன்னானா? 107 00:08:36,015 --> 00:08:37,142 ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக. 108 00:08:38,727 --> 00:08:39,727 அப்படித்தான் சொல்கிறார். 109 00:08:41,270 --> 00:08:42,563 விமானத்தை தரை இறக்கு. 110 00:08:43,982 --> 00:08:47,653 உன் சகோதரனுக்கு தேவையான உதவியை செய்யாவிட்டால், அவனை இழப்பாய். 111 00:08:51,740 --> 00:08:52,741 அது தான் விஷயம். 112 00:08:57,037 --> 00:08:58,622 ஒரு மணி நேரத்திற்கும் குறைவு. 113 00:09:00,874 --> 00:09:02,334 அப்படித்தான் சொன்னார், இல்லையா? 114 00:09:04,253 --> 00:09:05,587 அவனையே கேட்கலாமா? 115 00:09:06,505 --> 00:09:10,133 அவனிடம் போய் இன்னும் எவ்வளவு நேரம் தாக்கு பிடிப்பான் என்று நான் கேட்கிறேன். 116 00:09:10,217 --> 00:09:11,677 இந்த முறை எதையும் பூசி முழுக வேண்டாம். 117 00:09:13,971 --> 00:09:19,768 அவன் மாற்றிச் சொன்னால், ஒருவருக்கு ஆபத்து காத்திருக்கிறது. கண்டிப்பாக. 118 00:09:22,813 --> 00:09:23,814 என்னை நம்பு. 119 00:09:25,440 --> 00:09:29,319 அதிகம் செய்தால், சுலபமாக இருக்கும். 120 00:09:32,197 --> 00:09:33,198 சரியா? 121 00:09:41,248 --> 00:09:42,332 மன்னிக்கவும். 122 00:09:46,587 --> 00:09:49,298 -ஓய்! -எப்படி திரும்ப அழைப்பது? எந்த பட்டன்? 123 00:09:49,381 --> 00:09:50,632 -ஏ-எப்-டி. -போய் உன் சீட்டில் உட்காரு. 124 00:09:50,716 --> 00:09:51,717 சரி. 125 00:09:52,718 --> 00:09:54,720 -இப்போதே போ! -ஒரு மணி நேரத்திற்கும் குறைவு. 126 00:09:59,349 --> 00:10:00,350 வருகிறேன். 127 00:10:10,903 --> 00:10:11,737 ஹலோ? 128 00:10:14,156 --> 00:10:15,115 என்ன? 129 00:10:15,199 --> 00:10:16,909 அது தான் செய்தி. ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக. அது… 130 00:10:20,162 --> 00:10:22,414 அவன் நன்றாக இருப்பதாகச் சொன்னாய், ஆனால் அப்படி இல்லை தானே? 131 00:10:29,505 --> 00:10:31,757 அவனுக்கு உதவி செய்யும் அந்த டியூப், நீடிக்கப் போவதில்லை, சரியா? 132 00:10:31,840 --> 00:10:35,093 உண்மையைச் சொல்லு. ஏமாற்றாதே. 133 00:10:36,303 --> 00:10:37,387 அவன் எவ்வளவு நேரம் தாக்கு பிடிப்பான்? 134 00:10:42,726 --> 00:10:43,977 ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக. 135 00:10:54,029 --> 00:10:56,031 இந்த நாட்டில் ஏற்கனவே இப்படி நடந்தாலும், 136 00:10:56,114 --> 00:10:59,076 தீவிரவாதிகளோடு நாம் பேரம் பேசுவதில்லை என்பது தெரிந்த விஷயம் தான். 137 00:10:59,159 --> 00:11:02,037 இங்கே வந்து அவர்களை அப்படி கூப்பிடாமல் இருக்கலாமா, தயவுசெய்து? 138 00:11:02,120 --> 00:11:03,247 என்ன சொல்லி அழைத்தாலும்… 139 00:11:03,330 --> 00:11:06,458 அவர்கள் திட்டமிட்டு குற்றங்கள் செய்யும் குழு. மிகத் திறமையானவர்கள். 140 00:11:07,751 --> 00:11:11,255 நாம் மிரட்டப்படுவதாக வெளியே தெரியக்கூடாது என்பது முக்கியமான விஷயம். 141 00:11:11,338 --> 00:11:14,716 எப்போதும் அது தான் நம் நிலைப்பாடு, இல்லையா? 142 00:11:14,800 --> 00:11:19,555 ஆமாம். நாம் மிரட்டப்படுவதாக தெரியக்கூடாது. 143 00:11:20,389 --> 00:11:21,223 தொடர்ந்து சொல்லுங்கள். 144 00:11:21,306 --> 00:11:25,811 இதுவரை இவ்வளவு யுகே குடிமக்கள் பிணைக் கைதிகளாக இருந்ததில்லை, 145 00:11:25,894 --> 00:11:28,522 இப்படிப்பட்ட குறுகிய கால அவகாசமும் இருந்ததில்லை. 146 00:11:28,605 --> 00:11:30,440 இரண்டு மணி நேரம், 49 நிமிடங்கள். 147 00:11:31,108 --> 00:11:32,776 அதை நினைத்து நாம் வருத்தப்படுகிறோம். 148 00:11:34,862 --> 00:11:39,116 வேறு எதையும் செய்வதற்கு முன் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். 149 00:11:39,199 --> 00:11:40,033 இந்த தீ… 150 00:11:41,159 --> 00:11:45,956 இந்த ஓசிஜி தாங்கள் மிரட்டுவது போல செய்வார்களா? 151 00:11:46,540 --> 00:11:48,792 அவர்கள் இதை செய்து முடிப்பார்கள் என்பதை உறுதிப்படுத்தும் 152 00:11:48,876 --> 00:11:52,754 ஏதாவது ஆதாரங்கள் நம்மிடம் இருக்கிறதா? 153 00:11:52,838 --> 00:11:55,674 அவர்கள் ஏற்கனவே ஒரு விமானத்தை கடத்தியிருக்கிறார்களா என்று கேட்டால்… 154 00:11:55,757 --> 00:11:58,969 நான் அப்படி கேட்கவில்லை, அது உனக்கும் தெரியும். 155 00:12:00,554 --> 00:12:01,805 எனக்கு விவரம் வேண்டும். 156 00:12:02,389 --> 00:12:05,559 அவர்கள் இதை யோசிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் இருந்தால், 157 00:12:05,642 --> 00:12:07,519 நாம் இதைப் பற்றி யோசிக்கலாம். 158 00:12:07,603 --> 00:12:08,604 கோரிக்கைகள். 159 00:12:09,938 --> 00:12:11,315 அது தான் எனக்குத் தெரிய வேண்டும். 160 00:12:29,917 --> 00:12:30,959 காலா. 161 00:12:35,589 --> 00:12:36,590 காலா. 162 00:12:50,020 --> 00:12:52,481 காலா விளையாட வருவாளா? 163 00:12:53,398 --> 00:12:54,441 என்ன, குட்டி? 164 00:12:55,984 --> 00:12:57,694 தவறான வீட்டிற்கு வந்திருக்கிறாய், செல்லம். 165 00:12:58,195 --> 00:12:59,196 நாளைக்கு திரும்பி வா. 166 00:14:33,957 --> 00:14:35,626 ஹாய். நான் சாம் நெல்சன். 167 00:14:35,709 --> 00:14:37,294 செய்தி பதிவு செய்தால், திரும்ப அழைக்கிறேன். 168 00:14:38,754 --> 00:14:42,424 கேளுங்கள், அப்பா. நான் உங்கள் வீட்டிற்கு வந்து, உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன். 169 00:15:14,414 --> 00:15:17,876 அதை செய்யலாம் என சொல்லவில்லை, அப்படி ஒரு வாய்ப்பும் இருக்கு. 170 00:15:17,960 --> 00:15:19,294 எந்த வாய்ப்புகளோ விருப்பங்களோ இல்லை. 171 00:15:19,795 --> 00:15:22,172 நாம் செய்வோம் என சொல்லியபடி செய்து முடிப்போம். அவ்வளவு தான். 172 00:15:22,256 --> 00:15:25,634 அவன் என் தம்பி. உன் நண்பன். 173 00:15:26,885 --> 00:15:28,345 நீயும் அவனும் ஒன்றாக இருப்பீர்கள். 174 00:15:30,013 --> 00:15:30,973 அது முக்கியமில்லை. 175 00:15:32,057 --> 00:15:33,141 அவனுக்கு அப்படி இல்லை. 176 00:15:37,145 --> 00:15:38,105 ஓய். 177 00:15:40,190 --> 00:15:41,984 என் மேலிருந்து கையை எடு. 178 00:15:42,568 --> 00:15:43,485 அவன் இறக்கிறான். 179 00:15:43,986 --> 00:15:45,112 இப்போதே எடு. 180 00:15:47,614 --> 00:15:49,241 தவறாக போகக்கூடியவற்றை பற்றி யோசி. 181 00:15:50,117 --> 00:15:53,412 இந்த விமானத்தை தரையிறக்கி, மறுபடியும் பறக்க வைப்பது பற்றி 182 00:15:53,495 --> 00:15:56,206 உனக்கு எதுவும் தெரியாது, அது தவறாகவும் முடியலாம். 183 00:15:56,290 --> 00:15:59,293 உன் முன் என் தம்பி இறப்பதை விட வேறு என்ன தவறாக நடக்கும்? 184 00:16:16,602 --> 00:16:17,644 வா. 185 00:16:22,649 --> 00:16:23,901 -நாம் இதைச் செய்தால்… -சரி. 186 00:16:23,984 --> 00:16:26,486 …ஒருவேளை செய்தால், இது எப்படி வேலை செய்யும்? 187 00:16:28,113 --> 00:16:28,947 என்ன… 188 00:16:31,200 --> 00:16:33,076 முதலில் சீக்கிரமாக முடிவெடுக்க வேண்டும். 189 00:16:33,160 --> 00:16:35,454 எச்சரிக்கை இல்லாமல் இந்த விமானத்தை தரையிறக்க முடியாது. 190 00:16:35,537 --> 00:16:37,164 முதலில், நீ மற்றவர்களிடம் கேட்க வேண்டும். 191 00:16:37,247 --> 00:16:40,209 -தரையிலுள்ள நிலைய அதிகாரிகளிடம் பேச வேண்டும். -நான் சொன்னது கேட்கவில்லையா? 192 00:16:40,292 --> 00:16:43,003 ஒரு நிமிடத்துக்கு, ஸ்க்ரீனை ஆன் செய், நான் மேப்பை பார்க்க வேண்டும். 193 00:16:43,086 --> 00:16:45,214 எந்த விமான நிலையத்தை வற்புறுத்தலாம் என்று முடிவு செய்வதற்கு. 194 00:16:45,881 --> 00:16:46,798 வற்புறுத்துவதா? 195 00:16:46,882 --> 00:16:47,883 நாம் தரை இறங்க அனுமதி கோரி. 196 00:16:48,967 --> 00:16:51,303 கடத்தப்பட்ட விமானத்தை தரையிறக்க யாரும் விரும்ப மாட்டார்கள். 197 00:16:59,770 --> 00:17:01,480 விமானத்தை தரை இறக்க நமக்கு உதவி தேவை. 198 00:17:03,315 --> 00:17:04,483 நாம் ஹங்கேரியின் மீது பறக்கிறோம். 199 00:17:04,566 --> 00:17:06,193 -நீங்கள் ஹங்கேரிய மொழி பேசுவீர்கள் தானே? -ஆம், ஆனால்… 200 00:17:06,276 --> 00:17:09,570 இந்த விமானத்தை தரையிறக்க ஹங்கேரியர்களிடம் நாம் வற்புறுத்த வேண்டும். 201 00:17:09,655 --> 00:17:12,199 ஹங்கேரிய விமான கட்டுப்பாட்டு மையத்தில் ஆங்கிலம் பேசுவார்கள். 202 00:17:12,281 --> 00:17:14,785 -எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும். -ஹங்கேரியன் பேச தேவையில்லை. 203 00:17:14,867 --> 00:17:17,704 தேவை தான்... ஏனெனில் கடத்தல்கார்களுக்கு அது தெரியாது. 204 00:17:17,788 --> 00:17:22,917 எனவே நீங்கள் அவர்களுக்கு ஹங்கேரியனில் தகவல் சொன்னால், இது முடிவுக்கு வரும். 205 00:17:28,214 --> 00:17:29,591 இங்கே பார், நண்பா. 206 00:17:30,175 --> 00:17:32,219 பேசிக் கொண்டே, பார்த்துக் கொண்டே இரு. 207 00:17:32,302 --> 00:17:36,139 இங்கே பார். எதைப் பற்றி பேசலாம்? இசை பற்றி பேசலாமா? 208 00:17:36,765 --> 00:17:37,766 கால்பந்து? 209 00:17:38,350 --> 00:17:41,436 ஏன் கால்பந்து என்றேன் என தெரியவில்லை. எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது. 210 00:17:41,520 --> 00:17:43,981 இருந்தாலும் நீ லீட்ஸ் ரசிகனாக இருக்க வேண்டும் என்று கேள்விப்பட்டேன். 211 00:17:44,064 --> 00:17:45,357 நீ லீட்ஸ் ரசிகன் இல்லை என்றால், 212 00:17:45,440 --> 00:17:48,360 நீ ரசிகனாக இருப்பதற்கே தகுதி இல்லை. 213 00:17:51,238 --> 00:17:53,824 நீ லீட்ஸ் ஆள் இல்லை, சரியா? லண்டன்காரன் போல பேசுகிறாய். 214 00:17:54,575 --> 00:17:56,910 அதுதான் உன் ஊரா? கென்ட்? அல்லது லண்டனா? 215 00:17:56,994 --> 00:17:57,995 எனக்கு உதவு. 216 00:18:00,122 --> 00:18:01,665 என்ன சொன்னாய், நண்பா? மறுபடியும் சொல்லு. 217 00:18:04,918 --> 00:18:05,919 எனக்கு உதவு. 218 00:18:09,214 --> 00:18:11,341 எனக்கு உதவு. 219 00:18:20,100 --> 00:18:21,894 அவற்றையெல்லாம், பொடி செய்து, 220 00:18:21,977 --> 00:18:25,063 கொஞ்சம் தண்ணீரில், அதை கலக்கலாம், சரியா? 221 00:18:25,147 --> 00:18:26,356 பிறகு அவனை குடிக்க வைக்கலாம். 222 00:18:29,193 --> 00:18:30,903 -எத்தனை? -எல்லாவற்றையும். 223 00:18:31,570 --> 00:18:32,571 அது பாதுகாப்பானதா? 224 00:18:50,631 --> 00:18:51,632 அம்மா, பாருங்கள். 225 00:19:18,825 --> 00:19:21,286 அவர்கள் ஆங்கிலம் பேசுவார்கள், ஆனால் தெளிவாக அல்ல. 226 00:19:21,370 --> 00:19:23,914 நாம் கேட்கும் அனுமதி, 227 00:19:23,997 --> 00:19:25,624 தரையிறங்கும் நடைமுறைகள், எல்லாம் தொழில்நுட்ப வார்த்தைகள். 228 00:19:25,707 --> 00:19:27,042 விளக்கம் கொடுக்க ஆனா நமக்கு உதவுவாள். 229 00:19:27,543 --> 00:19:29,294 நாங்கள் கேட்கிறோம். 230 00:19:29,378 --> 00:19:31,004 தரையிறங்குவதற்கு முன் மருத்துவர்கள் தயாராக இருப்பதை 231 00:19:31,088 --> 00:19:32,756 அவர்கள் உறுதி செய்ய வேண்டும். 232 00:19:32,840 --> 00:19:35,759 எல்லா பயணிகளும் நலம் என்று முதலில் சொல்லலாம், சரியா? 233 00:19:36,343 --> 00:19:38,720 வன்முறையான சூழ்நிலையை அவர்கள் விரும்ப மாட்டார்கள். 234 00:19:39,805 --> 00:19:41,890 இது மருத்துவ உதவி பெறுவதற்கு செய்யப்படுகிறது. 235 00:19:41,974 --> 00:19:43,684 நாம் மறுபடியும் பறக்க வேண்டும். 236 00:19:46,436 --> 00:19:47,312 இதைச் சொல்லு. 237 00:19:48,772 --> 00:19:52,901 ஹங்கேரியன் மொழியில், “எங்களுக்கு மருத்துவ உதவி தேவை.” 238 00:19:54,653 --> 00:19:56,154 எங்களுக்கு மருத்துவ உதவி தேவை. 239 00:19:58,365 --> 00:19:59,992 இதைத்தான் நீ அவர்களிடம் சொல்லணும். 240 00:20:00,075 --> 00:20:02,911 எதையும் உறுதி செய்யக் கூடாது, சரியா? முதலில் என்னிடம் கேட்க வேண்டும். 241 00:20:04,705 --> 00:20:05,789 உங்களுக்கு சம்மதமா… 242 00:20:06,707 --> 00:20:08,125 இதைச் செய்வதில் உங்களுக்கு சம்மதமா? 243 00:20:09,668 --> 00:20:10,669 சம்மதம். 244 00:20:12,171 --> 00:20:13,213 ஆனால், இவர் இங்கிருக்க கூடாது. 245 00:20:18,093 --> 00:20:19,761 என் அருகிலேயே இருக்கக் கூடாது. 246 00:20:25,017 --> 00:20:28,145 சீப்சைட் ஃபெர்ம் என்னும் அமைப்பிற்கு, இடப் பக்கம் இருக்கும் எட்கர் யான்சன் மற்றும் 247 00:20:28,228 --> 00:20:29,104 ஜான் பெய்லி-பிரவுன் தான் தலைவர்கள். 248 00:20:29,188 --> 00:20:32,482 சர்வதேச போதை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள, திட்டமிட்டு குற்றங்கள் செய்யும் கும்பல். 249 00:20:32,566 --> 00:20:34,735 அவர்கள் டீலர்களோ கடத்துபவர்களோ இல்லை. 250 00:20:34,818 --> 00:20:38,697 அவர்கள் இந்த கும்பலை நடத்துபவர்கள். அவர்கள் வெறும் அம்பு தான், அதை எய்துபவர்கள் அல்ல. 251 00:20:38,780 --> 00:20:41,241 ஆங்கிலேய போதை கடத்தல்காரர்கள் உள்ளே நுழைவதில் திறமையானவர்கள். 252 00:20:41,325 --> 00:20:44,494 ஒரு கும்பல் உள்ளே நுழைந்த பிறகு, அங்கேயே இருப்பார்கள். 253 00:20:44,578 --> 00:20:47,581 இந்த எல்லா நுழைவு இடங்களையும் சீப்சைட் ஃபெர்ம் கட்டுப்படுத்துகிறதா? 254 00:20:47,664 --> 00:20:49,499 ஆம். ஆனால் போதை பொருள் மட்டும் கிடையாது. 255 00:20:49,583 --> 00:20:51,001 பாலியல் தொழிலாளர்கள், ஆயுதங்கள் கொண்ட, 256 00:20:51,084 --> 00:20:55,797 ஐரோப்பா முழுவதும் இருக்கும் ஒரு கும்பல் நவம்பர் வரை கண்டுபிடிக்கப்படவில்லை. 257 00:20:55,881 --> 00:21:00,135 இவர்கள் இருவருக்கும் 35 வருட சிறை தண்டனை கிடைத்தது. அவர்கள் கருணை இல்லா மனிதர்கள். 258 00:21:00,219 --> 00:21:02,638 சரி. இங்கே நாங்கள் தலைமை ஏற்போம். 259 00:21:03,222 --> 00:21:04,139 அவர்கள் யாரு? 260 00:21:04,223 --> 00:21:08,727 எந்த ஏஜென்சிகள், டேட்டாபேஸ்கள், பிஎன்சி, ஹோம்ஸ் 2-களிடம் அவர்கள் ரெக்கார்டுகள் உள்ளன? 261 00:21:09,311 --> 00:21:11,188 முக்கியமாக, அவர்கள் இப்போது எங்கே? 262 00:21:11,271 --> 00:21:13,023 ஹெச்எம்பி தோர்ப், லண்டனுக்கு சற்று வெளியே. 263 00:21:13,106 --> 00:21:15,317 அந்த உறையை உங்களிடம் கொடுத்த நபரின் அடையாளத்தை 264 00:21:15,400 --> 00:21:16,944 ஒயிட்ஹால் சிசிடிவியில் தேடிக் கொண்டிருக்கிறோம். 265 00:21:17,027 --> 00:21:17,861 நன்றி. 266 00:21:17,945 --> 00:21:20,739 இதை நாம் கருத்தில்கொள்ளவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். 267 00:21:20,822 --> 00:21:24,535 இல்லை, நான் புரிந்துகொள்ள முயல்கிறேன். 268 00:21:25,494 --> 00:21:26,662 நாம் தயாராக இருக்க வேண்டும். 269 00:21:42,219 --> 00:21:43,929 இவை உடைந்துவிட்டன. என்னுடையது வேண்டும். 270 00:21:51,895 --> 00:21:54,189 பூடாபெஸ்ட், இது கிங்டம் 2-9. பேசுவது கேட்கிறதா? 271 00:21:55,774 --> 00:21:58,777 புத்திசாலித்தனமாக எதுவும் செய்யாதே. உன்னால் மக்கள் இறந்து போவார்கள். 272 00:21:58,861 --> 00:22:01,363 கிங்டம் 2-9, உங்களுக்கு எதிராக எச்சரிக்கை இருக்கிறது. 273 00:22:01,864 --> 00:22:03,031 உங்கள் நிலைப்பாட்டை சொல்லுங்கள். 274 00:22:03,615 --> 00:22:05,284 பூடாபெஸ்ட், விமானத்தில் ஒரு சம்பவம் நடந்தது. 275 00:22:05,868 --> 00:22:09,037 பயணிகள் எல்லோரும் நலம். ஆனால் உங்கள் ஒத்துழைப்பு தேவை. 276 00:22:10,998 --> 00:22:13,667 -ஒத்துழைப்பா? -நான் இப்போது ஹங்கேரியன் மொழியில் பேச போகிறேன். 277 00:22:15,127 --> 00:22:16,336 பூடாபெஸ்ட்… 278 00:22:17,254 --> 00:22:19,006 எங்களுக்கு மருத்துவ உதவி தேவை. 279 00:22:20,549 --> 00:22:21,633 கிங்டம் 2-9? 280 00:22:22,259 --> 00:22:24,136 உங்கள் நிலைமையை உறுதிப்படுத்துங்கள். 281 00:22:27,347 --> 00:22:28,599 ஆங்கிலம் பேசுபவர்கள் விமானத்தில் இருக்கிறார்கள், 282 00:22:28,682 --> 00:22:32,978 அவர்களுக்கும், உங்களுக்கும் புரிவதற்காக சொல்கிறேன் விமானத்தில் நடந்த சம்பவம் சரியாகிவிட்டது, 283 00:22:33,061 --> 00:22:36,148 ஆனால் எங்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவை. 284 00:22:36,231 --> 00:22:37,524 டாக்டர்கள் காத்திருக்க வேண்டும். 285 00:22:38,317 --> 00:22:41,945 -கியர் விமானநிலையத்தில் டாக்டர்கள் காத்திருக்கணும். -ரன்வேயில் ஆம்புலன்ஸ் நிற்க வேண்டும் 286 00:22:42,029 --> 00:22:43,697 ரன்வேயில் ஆம்புலன்ஸ் நிற்க வேண்டும். 287 00:22:44,364 --> 00:22:46,033 தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்… 288 00:22:46,116 --> 00:22:48,243 கடத்தல் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. 289 00:23:11,975 --> 00:23:14,228 112. அதோ. குப்பைத்தொட்டியில் எழுதியிருக்கு. 290 00:23:19,608 --> 00:23:21,610 சார்லி 2, இடத்திற்கு வருகிறேன். 291 00:23:38,627 --> 00:23:39,711 அதைப் பாரு. 292 00:23:39,795 --> 00:23:42,464 இருநூறு உயிர்களுக்கு ஆபத்து, ஆனாலும் அவள் இரவு உடையில் இருக்கிறாள். 293 00:23:42,548 --> 00:23:43,590 சொல்லு. 294 00:23:43,674 --> 00:23:44,842 எலைனை பார்த்துக் கொண்டிருக்கிறோம். 295 00:23:44,925 --> 00:23:47,135 அந்த வீட்டில் வேறு யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கிறோம். 296 00:23:47,219 --> 00:23:50,472 சரி. நீங்கள் தயாரானவுடன், நேரே உள்ளே போக வேண்டும். புரிகிறதா? 297 00:23:50,973 --> 00:23:51,974 புரிகிறது. 298 00:24:04,862 --> 00:24:06,655 அவர்கள் விமானிகளை மீண்டும் அழைத்து போனார்கள். 299 00:24:07,239 --> 00:24:08,407 -யாரு? -நாம் தான். 300 00:24:10,075 --> 00:24:15,956 அந்த பெண் விமானியை, அவளது இருக்கையிலிருந்து கொண்டு போனார்கள். 301 00:24:19,334 --> 00:24:21,086 கிங்டம் 2-9… 302 00:24:21,170 --> 00:24:23,672 தரையிறங்க நாங்கள் அனுமதிக்க முடியாது. 303 00:24:23,755 --> 00:24:25,507 எங்கள் மேலதிகாரிகளிடம் பேசும் வரை அது முடியாது. 304 00:24:25,591 --> 00:24:27,467 -என்ன சொல்கிறாள்? -கயர் ஏர்போர்ட்டில் நாம் 305 00:24:27,551 --> 00:24:28,802 தரையிறங்க அவள் அனுமதி கேட்கிறாளாம். 306 00:24:30,387 --> 00:24:31,805 இனிமையான நிதானமான குரல். 307 00:24:31,889 --> 00:24:33,140 நீங்கள் நிதானமாக இருக்கிறீர்கள் போலும். 308 00:24:33,223 --> 00:24:35,559 கிங்டம் 2-9, இதற்கு எனக்கு அதிகாரம் கிடையாது. 309 00:24:35,642 --> 00:24:37,144 அவள் ஏன் இன்னும் பேசுகிறாள்? 310 00:24:37,227 --> 00:24:39,563 200 பேர் இருக்கிறார்கள். இது எங்களுக்கு ஒரே வாய்ப்பு. 311 00:24:39,646 --> 00:24:41,356 -நீ ஏன் பேசுகிறாய்? -சிக்கலானது என நினைக்கிறேன். 312 00:24:41,440 --> 00:24:42,441 உன்னைக் கேட்டேனா? 313 00:24:46,695 --> 00:24:47,654 ஆங்கிலத்தில் பேசு. 314 00:24:51,617 --> 00:24:53,368 எங்கள் கோரிக்கையை கேட்டதற்கு நன்றி, பூடாபெஸ்ட். 315 00:24:53,452 --> 00:24:56,580 கயர் ஏர்போர்ட்டில் இருந்து 19 நிமிடங்கள் தொலைவில் இருக்கிறோம், 316 00:24:57,539 --> 00:24:58,832 உங்கள் முடிவிற்காக காத்திருக்கிறோம்… 317 00:25:02,669 --> 00:25:04,129 மெதுவாக தரை இறங்க ஆரம்பிக்கிறோம். 318 00:25:06,715 --> 00:25:09,468 “ஆயுத படைகள்” தேவை என்று சொல்லுங்கள். 319 00:25:10,093 --> 00:25:11,720 தரை நிலையத்தில் இராணுவ வீரர்கள் வேண்டும். 320 00:25:11,803 --> 00:25:13,472 இது… ஒரு திட்டமிடப்படாத தரை இறங்கல்! 321 00:25:27,819 --> 00:25:29,571 ஹே, இதை உணர முடிகிறதா? 322 00:25:36,662 --> 00:25:38,038 நாம் கீழே இறங்குகிறோம். 323 00:25:39,081 --> 00:25:41,375 பாரு, மேகங்கள் மேலே போகின்றன. 324 00:25:56,807 --> 00:25:57,850 என்ன? 325 00:25:59,518 --> 00:26:00,519 நாம் தரை இறங்குகிறோம். 326 00:26:03,564 --> 00:26:04,648 கடைசி பகுதி. 327 00:26:09,528 --> 00:26:10,362 சரி குடி. 328 00:26:13,115 --> 00:26:14,116 சரி. 329 00:26:22,207 --> 00:26:25,419 நாம் தரையிறங்குவது, நல்லது. 330 00:26:26,044 --> 00:26:27,337 உனக்கு உதவ டாக்டர்கள் இருப்பார்கள். 331 00:26:32,092 --> 00:26:33,093 எனக்குப் புரியவில்லை. 332 00:26:36,805 --> 00:26:37,848 எலைன் அட்டர்டன்? 333 00:26:38,891 --> 00:26:41,476 நீங்கள் லூயிஸ் மற்றும் ஸ்டூவர்ட் அட்டர்டனின் அம்மா, இல்லையா? 334 00:26:41,560 --> 00:26:43,478 நீங்கள் இங்கே இப்படி வரக்கூடாது. 335 00:26:43,562 --> 00:26:45,189 அவர்களுக்கு யாருடன் தொடர்பு இருக்கிறது என சொல்லுங்கள்? 336 00:26:45,272 --> 00:26:46,773 அவர்கள் இப்போது யாரோடு தொடர்பில் இருக்கிறார்கள்? 337 00:26:46,857 --> 00:26:47,858 அதை கீழே வையுங்கள். 338 00:26:47,941 --> 00:26:51,278 எங்களிடம் சொல்லுங்கள், எலைன். கைதாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 339 00:26:51,361 --> 00:26:52,779 நீங்கள் சொல்வது புரியவில்லை. 340 00:26:54,781 --> 00:26:56,033 உட்காருங்கள். 341 00:26:56,116 --> 00:26:58,577 எனக்கு எது பற்றியும் எதுவும் தெரியாது. 342 00:26:59,786 --> 00:27:00,787 உட்காரு. 343 00:27:10,506 --> 00:27:13,550 கவனமாக கேளுங்கள். நமக்கு அவகாசம் இல்லை. 344 00:27:14,593 --> 00:27:16,470 நாங்கள் எதற்காக வந்தோம் என உங்களுக்கு புரிகிறது தானே, எலைன். 345 00:27:16,553 --> 00:27:18,889 உங்கள் மகன்கள் ஈடுபட்டிருக்கும், இந்த விஷயம் மிக ஆபத்தானது. 346 00:27:18,972 --> 00:27:22,059 அதை நிரூபிக்கும் விஷயங்களை நாங்கள் கண்டுபிடிக்கப் போகிறோம். 347 00:27:22,142 --> 00:27:25,938 -நீங்கள் தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள். -ஒன்று நீங்கள் பேச தொடங்க வேண்டும், 348 00:27:26,021 --> 00:27:29,775 அல்லது தீவிரவாத சட்டம் செக்ஷன் 41-ன் கீழ் உங்களை கைது செய்வோம். 349 00:27:30,609 --> 00:27:33,362 அது ஒரு நல்ல இடமாக இருக்காது, எலைன். 350 00:27:33,862 --> 00:27:35,989 பாருங்கள், இதுதான் விஷயம். 351 00:27:36,490 --> 00:27:41,161 நாங்கள் காப்பாற்ற நினைக்கும் எல்லோருக்கும் கூட… குடும்பங்கள் உண்டு. 352 00:27:46,458 --> 00:27:48,001 பிரதமர் அழைப்பில் தயாராக இருக்கிறார். 353 00:27:48,085 --> 00:27:49,878 அவர் ஃபோன், வீடியோ, அல்லது வேறு எதிலும் தொடர்பு கொள்ளலாம். 354 00:27:49,962 --> 00:27:51,630 இப்போது, எஃப்பிசிசி தயார். 355 00:27:51,713 --> 00:27:53,257 முதலில், எஃப்பிசிசி கொடுங்கள். 356 00:27:53,340 --> 00:27:54,633 நீங்காள் விளையாடுகிறீர்களா? 357 00:27:54,716 --> 00:27:56,552 எனக்கு சமீபத்திய தகவல் தேவை. 358 00:27:56,635 --> 00:27:59,888 -பிரதமரைக் காக்க வைக்கிறீர்களா? -அவர் ஒன்றும் சொல்ல மாட்டார். 359 00:28:00,639 --> 00:28:01,765 நன்றி. 360 00:28:02,266 --> 00:28:03,475 ஸ்பீக்கரில் போடுகிறேன். 361 00:28:05,978 --> 00:28:08,105 தரையிறங்க கோருகிறார்கள். 362 00:28:09,106 --> 00:28:11,066 விமானத்தில் ஒருவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது. 363 00:28:11,149 --> 00:28:12,943 இப்போது, இவை எல்லாம் இரண்டாம் கட்ட தகவல், 364 00:28:13,026 --> 00:28:14,695 ஆனால் ஹங்கேரியர்கள் பொய் சொல்ல எந்த காரணமும் இல்லை. 365 00:28:15,320 --> 00:28:17,781 நீங்கள் பார்ப்பது ரோமானிய காட்சிகள் தான், 366 00:28:18,824 --> 00:28:22,828 ஆனால் விமானம் கயரை நோக்கிச் செல்வதை நீங்களே பார்க்கலாம். 367 00:28:22,911 --> 00:28:24,746 அவர்களுக்கு கடத்தல் பற்றி தெரியுமா? 368 00:28:24,830 --> 00:28:26,748 ஆம். நாங்கள் உறுதி செய்துவிட்டோம். 369 00:28:27,291 --> 00:28:29,877 ஆனாலும், தரை இறங்க அனுமதிப்பார்களா? 370 00:28:29,960 --> 00:28:31,461 இப்போது பேசுகிறார்கள். 371 00:28:32,045 --> 00:28:34,131 இது மறுப்பதற்கு ஒரு சுலபமான கோரிக்கை. 372 00:28:34,214 --> 00:28:36,633 ஒரு வாய்ப்பு இருக்கலாம் என்று இங்கே தோன்றுகிறது. 373 00:28:37,467 --> 00:28:39,511 அதனால் நாம் அமைதியாக இருக்கிறோம். 374 00:28:39,595 --> 00:28:43,599 சிறையில் இருந்து விடுவிப்பதற்கு முன்னர் அந்த குற்றவாளிகளைப் பற்றி தெரிந்துகொள்வோம். 375 00:28:58,197 --> 00:28:59,907 அந்தக் குடும்பம் உள்ளே செல்வதைப் பார்த்தேன். 376 00:28:59,990 --> 00:29:02,242 பிறகு இந்தத் துப்புரவாளர்கள் வெளியே வந்தார்கள். 377 00:29:02,326 --> 00:29:03,327 அவர்கள் கதவைப் பூட்டிக்கொண்டனர். 378 00:29:03,410 --> 00:29:04,870 பிறகு வண்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். 379 00:29:05,537 --> 00:29:08,624 நாங்கள் கதவைத் தட்டினோம் ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை. 380 00:29:08,707 --> 00:29:10,542 ஏதோ சரியில்லை. 381 00:30:03,887 --> 00:30:05,848 கவனியுங்கள்! எல்லோரும் சுற்றி நில்லுங்கள். 382 00:30:05,931 --> 00:30:08,809 வெடி மருந்துகள் தயாராகவுள்ளன. இன்னொரு கூடுதல் துப்பாக்கியும் தயாராகயிருக்கிறது. 383 00:30:08,892 --> 00:30:10,936 பேருந்தின் ஓடுபாதையில் 384 00:30:11,019 --> 00:30:13,355 அடுத்தக்கட்ட ஆணைகளுக்காகக் காத்திருப்போம். 385 00:30:13,438 --> 00:30:15,941 மருத்துவ உதவியாளர்கள் எந்த வழியாக அழைக்கப்படுகிறார்களோ, 386 00:30:16,024 --> 00:30:18,026 அதன் எதிர்முனையிலிருந்து தாக்குவோம். 387 00:30:18,110 --> 00:30:19,820 -சொன்னது புரிந்ததா? -புரிந்தது, கேப்டன்! 388 00:30:19,903 --> 00:30:21,154 சரி, போகலாம்! 389 00:30:21,655 --> 00:30:23,115 ஐஎல்எஸ் தடை செய்யப்பட்ட பகுதி 390 00:30:23,198 --> 00:30:24,992 12,000 அடி உயரத்திலிருக்கிறோம், பூடாபெஸ்ட். 391 00:30:25,075 --> 00:30:26,076 உங்கள் முடிவைச் சொல்லுங்கள். 392 00:30:27,661 --> 00:30:29,913 எங்கள் முடிவு வந்துகொண்டிருக்கிறது. 393 00:30:31,039 --> 00:30:31,874 முடிவு வந்துகொண்டிருக்கிறது. 394 00:30:31,957 --> 00:30:36,670 நமக்கு அனுமதி கிடைக்கும். மற்றவர்களிடம் கேளுங்கள். எல்லோருமே ஒப்புக்கொள்ள வேண்டும். 395 00:30:37,671 --> 00:30:38,672 ஸ்டூவர்ட்! 396 00:30:55,731 --> 00:30:57,107 கிங்டம் 2-9… 397 00:31:00,569 --> 00:31:03,655 கடத்தல்காரர்கள் மீண்டும் விமானத்தைப் பறக்க வைக்க நினைக்கிறார்களா? 398 00:31:06,408 --> 00:31:07,242 ஆம், சரிதான். 399 00:31:13,832 --> 00:31:15,584 ஆனால் அவர்கள் அப்படி செய்யக் கூடாது என்பது… 400 00:31:15,667 --> 00:31:17,544 உங்கள் தனிப்பட்ட விருப்பம் என புரிந்துகொள்கிறோம். 401 00:31:17,628 --> 00:31:18,504 நாம் தரையிறங்குகிறோமா, என்ன? 402 00:31:19,588 --> 00:31:20,923 அது சரியா? 403 00:31:22,090 --> 00:31:23,300 சரிதான். 404 00:31:27,971 --> 00:31:30,349 நீங்கள் தரையிறங்க அனுமதி கொடுக்கிறோம். 405 00:31:32,351 --> 00:31:33,894 நன்றி, பூடாபெஸ்ட். 406 00:31:33,977 --> 00:31:36,563 இதை விமானத்திலுள்ள அனைவரும் கேட்டால் சந்தோஷப்படுவார்கள். 407 00:31:36,647 --> 00:31:39,525 ஆயுதங்களுடன் வீரர்கள் கீழே காத்திருக்கின்றனர். 408 00:31:39,608 --> 00:31:40,859 அவள் என்ன சொல்கிறாள்? 409 00:31:40,943 --> 00:31:42,319 ஆம்புலன்ஸ் காத்திருக்கிறதாம். 410 00:31:44,071 --> 00:31:45,489 தரையிறங்க அனுமதி கிடைத்துவிட்டது. 411 00:31:46,365 --> 00:31:47,199 தரையிறங்கு. 412 00:31:47,282 --> 00:31:49,243 -நீ அதை முடிவு செய்யக்கூடாது. -தரையிறங்கு. 413 00:31:54,248 --> 00:31:57,709 பூடாபெஸ்ட், நாங்கள் 10,000 அடி உயரத்தில் உள்ளோம். தரையிறங்குவதற்கான இறுதி பயணத்தை மேற்கொள்கிறோம். 414 00:32:00,754 --> 00:32:02,005 இது அவன் எடுக்க வேண்டுய முடிவல்ல. 415 00:32:02,840 --> 00:32:04,216 அவன் அப்படியே தரையிறக்க முடியாது. 416 00:32:05,509 --> 00:32:06,510 அவனிடம் சொல்லுங்கள்! 417 00:32:17,437 --> 00:32:19,898 -இது ஒரு தற்கொலை தாக்குதல். -இவன் இறக்கின்றான். 418 00:32:19,982 --> 00:32:21,233 நம் எல்லோருக்காக. 419 00:32:21,316 --> 00:32:23,861 ஏன்? நம்மிடம் தான் பணயக்கைதிகள் இருக்கிறார்களே. 420 00:32:23,944 --> 00:32:25,946 கீழே யார் இருந்தாலும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. 421 00:32:26,029 --> 00:32:29,157 நமக்கு வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் அதைச் செய்து முடிப்போம். 422 00:32:29,241 --> 00:32:31,368 நாம் நிச்சயம் அதைச் செய்து முடிப்போம். 423 00:32:31,451 --> 00:32:33,912 சொன்ன மாதிரியே செய்து முடிப்போம். 424 00:32:36,081 --> 00:32:37,457 இல்லாவிட்டால் என்னவாகும்? 425 00:32:42,004 --> 00:32:43,505 இல்லாவிட்டால் என்னவாகும்? 426 00:32:46,216 --> 00:32:47,676 லூயிஸ் மறுபடியும் அழைக்கிறார். 427 00:32:47,759 --> 00:32:50,512 விமானத்திலிருந்து உங்கள் தொலைபேசிக்கு தொடர்புகொண்ட அதே எண். 428 00:32:53,265 --> 00:32:56,602 திட்டம் என்னவென்று எங்களிடம் சொல்லுங்கள், உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள். 429 00:32:56,685 --> 00:32:59,563 எனக்கு என்ன தெரியும் என முக்கியமில்லை, அவர்கள் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருப்பார்கள். 430 00:32:59,646 --> 00:33:01,899 அவர்கள் முடிவு செய்துவிட்டால், யாராலும் அவர்களைத் தடுக்க முடியாது. 431 00:33:01,982 --> 00:33:03,400 அவர்களைத் தடுத்து நிறுத்துவது எங்கள் வேலை. 432 00:33:03,483 --> 00:33:05,611 எனக்குத் தெரிந்ததைச் சொல்ல சொன்னதால் சொல்கிறேன். 433 00:33:06,195 --> 00:33:09,531 என்னைத் தேடி வருவது போல, உங்களையும் தேடி வருவார்கள். 434 00:33:10,490 --> 00:33:12,034 அவர்கள் பீட்டரைத் தேடி வந்த மாதிரி. 435 00:33:14,203 --> 00:33:16,580 பீட் அவர்களுடன் இருபது வருடங்கள் நம்பிக்கையுள்ளவனாக வேலை செய்திருக்கிறார். 436 00:33:18,123 --> 00:33:20,125 ஆனால் அவர் எல்லை மீறியபோது, அவர்களின் ஆள் ஒருவரை அனுப்பி 437 00:33:20,209 --> 00:33:21,502 அவரை சுடச் சொன்னார்கள். 438 00:33:23,420 --> 00:33:24,880 லூயிஸ் தான் அவனைக் கண்டுபிடித்தது, 439 00:33:24,963 --> 00:33:27,341 ஆனால் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவன் அப்பா இறந்திருந்தார். 440 00:33:30,636 --> 00:33:32,638 இங்கு என்ன நடக்கிறது என யாராவது சொல்கிறீர்களா? 441 00:33:33,222 --> 00:33:35,098 வாயை மூடு. 442 00:33:46,151 --> 00:33:49,530 நீ இதை நிறுத்த வேண்டும். நாம் தரையிறங்க வேண்டாம் என அவர்களிடம் சொல். 443 00:33:49,613 --> 00:33:53,325 -நானா? -அவன் சரியாகிவிடுவான் என அவர்களிடம் சொல். 444 00:33:57,871 --> 00:33:59,373 நாம் தரையிறங்குவதை நிறுத்தியாக வேண்டும். 445 00:33:59,873 --> 00:34:02,334 -தரையிறங்கியதும், மீண்டும் பயணத்தை மேற்கொள்ளலாம். -முடியாது, அவர்கள் விட மாட்டார்கள். 446 00:34:02,417 --> 00:34:03,836 நாங்கள் திட்டப்படி செயல்படவில்லை என்றால், 447 00:34:03,919 --> 00:34:05,796 எங்களையும், எங்கள் குடும்பத்தையும், உன் குடும்பத்தையும் கொன்றுவிடுவார்கள். 448 00:34:05,879 --> 00:34:08,507 -என் குடும்பத்தையா? -உன் பாஸ்போர்ட் விவரங்களை அனுப்பியிருக்கிறோம். 449 00:34:09,299 --> 00:34:11,802 -ஏன் என் குடும்பத்தைக் கொல்வார்கள்? -பிரச்சினை தரும் எல்லா பயணிகளையும் கொல்வார்கள். 450 00:34:11,885 --> 00:34:14,804 அவர்களின் திட்டத்திற்கு யார் குறுக்கே வந்தாலும், இதைத்தான் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். 451 00:34:14,888 --> 00:34:17,933 அவர்கள் என்ன செய்ய சொல்கிறார்களோ, அதைத்தான் நாங்கள் எப்போதும் செய்வோம். செய்ய வேண்டும். 452 00:34:18,433 --> 00:34:19,434 இல்லையென்றால், எல்லாம் முடிந்துவிடும். 453 00:34:21,687 --> 00:34:22,896 உனக்கு எப்படித் தெரியும்? 454 00:34:22,980 --> 00:34:26,483 நாங்கள் யாரிடம் வேலை பார்க்கிறோமோ அவர்கள் தான், இவன் அப்பாவை கொன்றுவிட்டனர். 455 00:34:27,400 --> 00:34:30,152 இவன் அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டதால், அதற்கான தண்டனையைப் பெற்றான். சரியா? 456 00:34:31,362 --> 00:34:32,531 உனக்கு எப்படி தெரியும்? 457 00:34:34,449 --> 00:34:35,909 அவர்கள் ஆபத்தானவர்கள் என்பதற்கு உதாரணமாக இப்படி செய்கிறார்கள். 458 00:34:36,534 --> 00:34:38,120 அவர்கள் ஆபத்தானவர்கள் என எல்லோரும் அறிய இதைச் செய்திருக்கிறார்கள். 459 00:34:38,203 --> 00:34:40,831 அவர்கள் கொலை செய்ய ஆள் அனுப்பியிருந்தனர். 460 00:34:40,914 --> 00:34:42,708 யார் அந்த அவர்கள்? அது அவர்கள்தான் என உனக்கு எப்படி தெரியும்? 461 00:34:44,083 --> 00:34:45,918 ஏனென்றால் அவர்கள் கொலை செய்ய அனுப்பிய ஆளே நான்தான். 462 00:34:50,382 --> 00:34:54,844 நான் இதைச் செய்யவில்லை என்றால், என்னைக் கொன்றுவிட்டு வேறொருவரை அனுப்பியிருப்பார்கள். 463 00:34:58,765 --> 00:35:02,811 ஏதாவது தவறு செய்தால், அவர்கள் உன் குடும்பத்தையும் கொன்றுவிடுவார்கள். 464 00:35:04,104 --> 00:35:05,397 சாம் நெல்சன். 465 00:35:10,027 --> 00:35:12,946 இவர்கள் ஆபத்தானவர்கள். 466 00:35:15,157 --> 00:35:16,450 இவர்கள் இந்தத் தெருவில் தான் வசிக்கிறார்கள். 467 00:35:18,368 --> 00:35:23,707 அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், எல்லோரும் இந்தத் தெருவில் தான் இருக்கிறார்கள். 468 00:35:26,001 --> 00:35:28,295 இப்பகுதி முழுவதும் எட்கருக்கும், ஜானிக்கும் சொந்தமானது. 469 00:35:30,047 --> 00:35:32,132 அவர்கள் இதைச் சுத்தம் செய்ய ஆட்களை அனுப்புவார்கள். 470 00:35:38,639 --> 00:35:41,099 நீங்கள் இங்கு வந்ததை யாராவது பார்த்திருப்பார்கள். இங்குதான் இருக்கிறேர்கள் என அவர்களுக்கு தெரியும். 471 00:35:43,644 --> 00:35:45,604 பீட்டின் விஷயத்திற்குப் பிறகு, அவர்கள் என்னை நம்புவதில்லை. 472 00:35:45,687 --> 00:35:51,235 அவர் போலீஸிடம் அவர்களைக் காட்டிக்கொடுத்ததாக நினைத்தார்கள், ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. 473 00:35:53,403 --> 00:35:54,905 நானும் காட்டிக் கொடுக்கவில்லை. 474 00:35:57,324 --> 00:35:58,408 நீ காட்டிக்கொடுக்கவில்லை எனத் தெரியும். 475 00:35:59,409 --> 00:36:00,536 இருந்தும் என்னைத் தேடி வந்தீர்கள். 476 00:36:01,954 --> 00:36:02,829 எனக்குத் தெரியும். 477 00:36:03,830 --> 00:36:05,749 எனக்கு என் பசங்கள் வேண்டும். 478 00:36:11,672 --> 00:36:14,550 திசு காகிதம் எடுத்துக்கொள்ளவா? 479 00:36:17,302 --> 00:36:18,136 கண்டிப்பாக. 480 00:36:27,771 --> 00:36:29,398 அவள் உன்னிடம் என்ன சொன்னாள்? 481 00:36:31,483 --> 00:36:34,486 அவள் அந்த விமானத்திலுள்ள அட்டர்டன் சகோதரர்களில் இளையவனிடம் பேசியிருக்கிறாள். 482 00:36:35,070 --> 00:36:36,071 அவள் அதை ஒப்புக்கொண்டாள். 483 00:36:36,154 --> 00:36:38,282 அவளை அங்கிருந்து வெளியேற்றி, வீட்டைப் பத்திரப்படுத்தி, 484 00:36:38,365 --> 00:36:40,576 காரில் ஏற்றி, நான் சொல்லும் இடத்திற்கு அழைத்துச் செல். 485 00:36:41,243 --> 00:36:44,621 உன்னுடைய மேப் அல்லது சாட்நவ் செயலியை பயன்படுத்தாதே. 486 00:36:44,705 --> 00:36:46,874 -நாம் அவளை எங்கு அழைத்துச் செல்கிறோம்? -தெரியாத மாதிரி பேசாதே, எரிக்கா. 487 00:36:46,957 --> 00:36:49,001 அவர்கள் பணயக் கைதிகளைப் பிடித்து வைத்திருந்தால், நாமும் பிடித்து வைக்கலாம். 488 00:37:01,513 --> 00:37:02,681 அவங்க எங்கே? 489 00:37:02,764 --> 00:37:04,516 திசு காகிதம் எடுக்கச் சென்றிருக்கிறார். 490 00:37:19,865 --> 00:37:21,783 மைக்கேல், பின்னாடி வா. பின்னாடி. 491 00:37:25,537 --> 00:37:26,914 ஹே! 492 00:37:31,793 --> 00:37:35,339 பயணிகளே, உங்கள் இருக்கையின் பெல்ட்கள் போடப்பட்டிருக்கிறதா என உறுதிசெய்து கொள்ளுங்கள். 493 00:37:35,422 --> 00:37:39,259 மருத்துவ காரணங்களுக்காகத் தான் விமானம் தரையிறங்குகிறது. 494 00:37:39,343 --> 00:37:41,512 மறுபடியும் சொல்கிறேன், நாம் மருத்துவ காரணத்திற்காக தான் தரையிறங்குகிறோம். 495 00:37:41,595 --> 00:37:44,932 உங்கள் இருக்கைகளிலேயே இருங்கள். சூழ்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. 496 00:37:53,315 --> 00:37:55,442 விமானம் தெளிவாகத் தெரிகிறதா என உறுதி செய்யுங்கள். 497 00:37:55,526 --> 00:37:56,860 தெளிவாகத் தெரிகிறது. 498 00:37:58,028 --> 00:38:01,657 பயணிகளே, தளர்வான பொருள்களை அப்புறப்படுத்துங்கள். 499 00:38:01,740 --> 00:38:03,867 -அங்கே பாருங்கள். -உங்கள் மேசையை மடக்குங்கள். 500 00:38:04,493 --> 00:38:07,204 இருக்கையை மறுபடியும் மேல் நோக்கியவாறு வையுங்கள். 501 00:38:07,287 --> 00:38:09,748 நாம் இறுதிக்கட்ட பயணத்தை மேற்கொள்ளப் போகிறோம். 502 00:38:11,583 --> 00:38:12,584 தயவுசெய்து. 503 00:38:13,919 --> 00:38:14,837 ஹே. 504 00:38:19,466 --> 00:38:20,467 தரையிறக்க வேண்டாம். 505 00:38:22,010 --> 00:38:23,011 தரையிறக்க வேண்டாம். 506 00:38:27,015 --> 00:38:28,016 அடச்சே. 507 00:38:41,280 --> 00:38:42,281 ஹே! 508 00:39:01,967 --> 00:39:03,260 எலைன், வேண்டாம்! 509 00:39:17,524 --> 00:39:20,652 நாம் தரையிறங்குவதை நிறுத்தியாக வேண்டும். 510 00:39:21,403 --> 00:39:23,030 -நாம் எதையும் நிறுத்தப் போவதில்லை. -ஆம். 511 00:39:23,113 --> 00:39:24,489 அவன் இறந்துகொண்டிருக்கிறான். அவர்கள் காத்திருக்கின்றனர். 512 00:39:24,573 --> 00:39:25,741 அவர்கள் விமானத்தைத் தரையிறக்கட்டுமே. 513 00:39:27,367 --> 00:39:28,619 இது உன் திட்டம் தானே. 514 00:39:30,162 --> 00:39:31,371 என் தம்பி இறந்து கொண்டிருக்கிறான். 515 00:39:31,455 --> 00:39:34,082 உன் சகோதரன் தான் தரையிறங்க வேண்டாம் எனச் சொல்கிறான். 516 00:39:36,793 --> 00:39:39,254 தயவுசெய்து, நீயே அவனிடம் வந்து கேளு. 517 00:39:55,604 --> 00:39:56,772 எங்கே அது? 518 00:39:58,106 --> 00:40:01,026 எங்கே போய் தொலைந்தது அந்தப் பேனா? நீ என்ன செய்து வைத்திருக்கிறாய்? 519 00:40:01,109 --> 00:40:02,903 -ஹே! நிறுத்து! -நீ என்ன செய்திருக்கிறாய்? 520 00:40:02,986 --> 00:40:04,154 பார்! பார். 521 00:40:05,072 --> 00:40:08,158 நாங்கள் எதுவும் செய்யவில்லை. அது அவன் கையில்தான் இருக்கிறது. 522 00:40:11,828 --> 00:40:13,163 அவன்தான் இதைச் செய்திருக்கிறான். 523 00:40:22,548 --> 00:40:23,966 நீ அவனைக் காப்பாற்ற வேண்டாம் என நினைத்திருக்கிறான். 524 00:40:27,010 --> 00:40:28,220 அவன் உன்னைக் காப்பாற்ற நினைத்திருக்கிறான். 525 00:41:16,101 --> 00:41:17,311 தரையிறங்குவதை நிறுத்துங்கள். 526 00:41:17,936 --> 00:41:19,855 நிறுத்த வேண்டுமா? முடியாது… 527 00:41:19,938 --> 00:41:23,108 ஆம். இல்லை, இல்லை. நிறுத்துங்கள். 528 00:41:25,736 --> 00:41:27,112 நாம் தொடர்ந்து போகின்றோம். 529 00:42:21,291 --> 00:42:24,086 அனைவரும்… சற்று பொறுங்கள். 530 00:42:24,169 --> 00:42:25,754 திரும்பச் சொல்கிறேன். எல்லா பிரிவினரும் சற்று பொறுங்கள். 531 00:42:39,560 --> 00:42:43,397 கிங்டம் 2-9 6,000 அடி உயரத்திலிருக்கிறது, ஆனால் தரையிறங்கவில்லை. 532 00:42:43,480 --> 00:42:46,483 மறுபடியும் உயரப் பறக்க ஆரம்பிக்கிறது. 533 00:42:47,818 --> 00:42:51,029 கிங்டம் 2-9ஐ தரையிறங்காததுக் குறித்துக் கேட்க பூடாபெஸ்ட் தொடர்புகொண்டது, 534 00:42:51,113 --> 00:42:55,158 ஆனால் இதுவரை கிங்டம் 2-9 பதிலளிக்கவில்லை. 535 00:42:57,035 --> 00:42:59,454 கிங்டம் 2-9ஐ நேரடியாகத் தொடர்புகொள்ளும் எல்லையைவிட 536 00:42:59,538 --> 00:43:02,666 இப்போது அது 90 நிமிடங்கள் தள்ளி இருக்கிறது. 537 00:43:03,166 --> 00:43:05,419 ஒரு நிமிடம். பிரதமரின் அலுவலகத்திலிருந்து பாட்ரிக் பேசுகிறார். 538 00:43:06,879 --> 00:43:08,672 சூழ்நிலை இன்னும் அப்படியே தான் இருக்கிறது. 539 00:43:08,755 --> 00:43:10,382 விமானத்தில் உயிராபத்து இருக்கிறது, 540 00:43:10,465 --> 00:43:12,593 மருத்துவ உதவியளிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டு, பிறகு தரையிறங்குதல் ரத்து செய்யப்படுகிறது. 541 00:43:12,676 --> 00:43:15,554 ஆனால், விமானம் இன்னும் பறந்துகொண்டிருக்கிறது 542 00:43:15,637 --> 00:43:18,307 கீழிருந்து தொடர்புகொள்ள முயலும் எல்லா அழைப்புகளும் நிராகரிக்கப்படுகின்றன. 543 00:43:19,099 --> 00:43:21,226 -நாம் இதைப் பார்க்க வேண்டும். -கொஞ்சம் பொறு. 544 00:43:21,977 --> 00:43:23,061 எல்லோரும் பார்க்க வேண்டும். 545 00:43:24,479 --> 00:43:26,148 பாட்ரிக், தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கிறோம். 546 00:43:29,776 --> 00:43:31,069 கேஏ29-ன் பயணிகளைச் சோதனை செய்த 547 00:43:31,153 --> 00:43:33,614 பாதுகாப்பு அலுவலர்களுள் ஒருவர் 548 00:43:33,697 --> 00:43:35,199 அவரது வீட்டில் இறந்து கிடந்துள்ளார். 549 00:43:35,282 --> 00:43:37,117 அவரது குடும்பத்தினரும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், 550 00:43:37,201 --> 00:43:39,786 பாதுகாப்பு அலுவலர், கடத்தல்காரர்களை விமானத்தில் அனுமதிக்கும் பொருட்டு 551 00:43:39,870 --> 00:43:42,080 அவரின் குடும்பத்தைப் பிணைக்கைதிகளாக வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 552 00:43:42,164 --> 00:43:45,584 துபாய் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் அவரைத் தேடிச் சென்றார். அவரும் கொல்லப்பட்டுள்ளார். 553 00:43:46,084 --> 00:43:49,963 யாருக்காவது இதைப் பார்க்க பிடிக்கவில்லையென்றால், வேறங்காவது பாருங்கள். 554 00:43:51,715 --> 00:43:52,549 கடவுளே. 555 00:43:52,633 --> 00:43:54,801 அவர்களுக்கு வேண்டியதைச் செய்தால் இது தான் நடக்கும். 556 00:43:55,844 --> 00:43:57,304 நீங்கள் என்ன கேட்டீர்கள்? 557 00:43:58,138 --> 00:43:59,681 அவர்கள் மிரட்டுவது போல செய்வார்களா என்று தானே? 558 00:44:00,641 --> 00:44:02,768 அந்தக் கேள்விக்கான பதில் இதோ இருக்கிறது. 559 00:46:16,610 --> 00:46:18,612 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்