1 00:00:16,558 --> 00:00:18,936 சில கேள்விகளுக்கு பதில் சொல்ல சில நிமிடங்களை ஒதுக்க முடியுமா? 2 00:00:20,187 --> 00:00:22,189 சரி, நீ என்னை கட்டிப் போட்ட, அதனால இருக்கலாம். 3 00:00:22,189 --> 00:00:23,273 பெர்ஃபெக்ட். 4 00:00:23,273 --> 00:00:25,442 ஹைவேயில உனக்கு நடந்த வழிப்பறி அனுபவத்தை இன்னும் சுவாரசியமாக ஆக்குவதற்கு 5 00:00:25,442 --> 00:00:28,070 நான் என் தரப்புல என்ன செய்ய முடியும்? 6 00:00:28,862 --> 00:00:30,822 நீ ஒரு எச்சரிக்கை ஷாட் கொடுத்திருக்கலாம்னு நான் நினைக்கிறேன். 7 00:00:30,822 --> 00:00:34,076 அந்த ரிப்பன் டான்ஸ் ஆடுவதைவிட இது இன்னும் பயமுறுத்துவதாக உள்ளது. 8 00:00:34,076 --> 00:00:35,160 கண்டிப்பாக! 9 00:00:35,160 --> 00:00:37,579 அவனைப் புறக்கணித்துவிடு, டிக். எனக்கு ரிப்பன்கள் பிடிக்கும்! 10 00:00:37,579 --> 00:00:39,456 ஆம், ஆனால் ஒரு எச்சரிக்கை ஷாட்டும் நன்றாகவே வேலை செய்யும். 11 00:00:40,082 --> 00:00:42,334 ஹானெஸ்டி, நீ அதை செய்யும் முன் எனக்கு ஒரு எச்சரிக்கை ஷாட்டை வேண்டும். 12 00:00:42,334 --> 00:00:44,002 அதுதான் எச்சரிக்கை. இதுக்கு. 13 00:00:44,628 --> 00:00:45,963 அடக் கடவுளே. 14 00:00:45,963 --> 00:00:48,549 டிக், அந்த ஓட்டுனருடன் நட்புகொள்வதை விட்டு, இங்கே வந்து சேரு. 15 00:00:48,549 --> 00:00:50,217 நான் ஓட்டுனருடன் நட்புகொள்ள முயற்சிக்கலை, நெல். 16 00:00:50,217 --> 00:00:51,718 நான் அவரது கருத்தைக் கேட்டுகிட்டு இருக்கேன். 17 00:00:51,718 --> 00:00:53,595 ஒரு ஹைவேமேனாக நான் என்னை மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். 18 00:00:54,096 --> 00:00:56,598 மன்னிக்கவும். எனக்கு இன்னும் இரு கேள்விகள் உள்ளன. 19 00:00:56,598 --> 00:00:58,809 சொல்லப்போனால், நீங்களே அதைப் பூர்த்தி செய்யலாம். 20 00:00:58,809 --> 00:01:00,853 இந்தாங்க. பென்சில். 21 00:01:00,853 --> 00:01:02,062 எனக்கு அது திரும்பவும் வேண்டும். 22 00:01:06,441 --> 00:01:09,361 இத்துடன் நான் சின்டிகேட் சந்திப்பை துவங்கி வைக்கிறேன். 23 00:01:09,361 --> 00:01:11,154 இங்கு வந்தமைக்கு மிக்க நன்றி. 24 00:01:12,072 --> 00:01:15,701 பிலிப், போன வாரமே நான் உன் தலையை சீவச் சொல்லவில்லையா? 25 00:01:17,202 --> 00:01:19,496 இல்ல, நான், அப்படி நினைக்கல, மேடம். 26 00:01:20,622 --> 00:01:21,748 அப்போ, சரி. 27 00:01:22,457 --> 00:01:25,377 இனி நம் சட்ட விரோத விஷயங்களைப் பார்ப்போம். 28 00:01:25,377 --> 00:01:28,005 இப்போது, எப்படித் தெரிகிறது... இல்லை, மன்னிக்கவும். 29 00:01:29,423 --> 00:01:32,050 இல்லை, என்னால் இதில் கவனம் செலுத்த முடியவில்லை. மன்னிக்கவும், நாம், அவரை... 30 00:01:32,551 --> 00:01:37,556 இல்லை. இல்லை. பிளீஸ், வேண்டாம், மேடம். இல்லை. எனக்கு மூன்று அழகான குழந்தைகள் உள்ளனர். 31 00:01:37,556 --> 00:01:40,601 அதில் ஒருவருக்கு சிறந்த பர்சனாலிட்டியும் உண்டு! 32 00:01:40,601 --> 00:01:41,685 மிக்க நன்றி. 33 00:01:43,145 --> 00:01:49,693 இப்போது, தங்கம் நிரம்பிய நம்முடைய திருட்டு வண்டிகளில், ஒரு வண்டி, திருடப்பட்டுவிட்டது. 34 00:01:49,693 --> 00:01:51,737 இப்போது, அப்படி நடந்திருக்கக் கூடாது, இல்லையா? 35 00:01:53,071 --> 00:01:54,239 இதை ஏற்கவே முடியாது. 36 00:01:54,239 --> 00:01:56,950 உங்களில் எந்த வடிகட்டிய மடையன் இதை நடக்க அனுமதித்தது? 37 00:01:56,950 --> 00:01:57,910 ஆம், நீதான். 38 00:01:58,744 --> 00:02:00,162 என்ன? நிஜமாகவா? 39 00:02:00,662 --> 00:02:03,916 இந்தத் திருட்டு நடந்த இடம் ஹேம்ஸ்டெட், அது உன் இடம் தானே. 40 00:02:05,125 --> 00:02:09,295 ஜொனாத்தன், இந்த சின்டிகேட், நம்முடைய கடத்தப்பட்ட பொருட்கள் பாதுகாப்புடன் 41 00:02:09,295 --> 00:02:11,089 நம் இலக்கை அடைய, உன்னைத்தான் திருடனைப் பிடிப்பவராக நியமித்திருந்தார்கள், ஞாபகம் இருக்கா? 42 00:02:11,089 --> 00:02:12,841 உன்னால் அந்த வேலையை செய்ய முடியவில்லையெனில், 43 00:02:12,841 --> 00:02:17,054 உனக்கு பதிலாக இன்னொருவரை நியமிக்க வேண்டும் போலும். 44 00:02:19,598 --> 00:02:23,852 அந்தத் தங்கத்தையும், கள்வர்களை பிடிப்பதற்கும் உனக்கு 24 மணிநேர அவகாசம் கொடுக்கிறேன். 45 00:02:27,231 --> 00:02:29,441 - தெளிவாகப் புரிகிறதா? - தெள்ளத் தெளிவாக. 46 00:02:30,317 --> 00:02:34,404 சின்டிகேட்டைத் திருடும் அளவிற்கு மடையனாக இருப்பவன் ஒருவன்தான் இருக்கிறான். 47 00:02:36,657 --> 00:02:37,783 ஓ, ஆமாம்! 48 00:02:37,783 --> 00:02:42,371 ஒருவழியாக. எந்த வகையிலும் பின்விளைவுகள் இல்லாத, முற்றிலும் வெற்றிகரமான ஒரு திருடு. 49 00:02:48,126 --> 00:02:50,671 தேடப்படுகிறார்கள் எஸ்ஸெக்ஸ் கும்பல் 50 00:03:14,069 --> 00:03:19,241 சரி. என்னால் 100 சதவிகிதம் உறுதியாகச் சொல்ல முடியலை, ஆனால் இது தங்கம்தான்னு நினைக்கிறேன். 51 00:03:19,825 --> 00:03:20,659 ஆம்! 52 00:03:20,659 --> 00:03:23,245 ஆம். அதாவது, அதை ஒவ்வொரு கட்டியிலும் எழுதி இருப்பதால, அதுவாகத்தான் இருக்கணும். 53 00:03:23,245 --> 00:03:25,455 - ஓ, ஆமாம். - அடடே, சொக்கத் தங்கம். 54 00:03:25,455 --> 00:03:26,874 சாத்தியக்கூறுகள் ஏராளம். 55 00:03:26,874 --> 00:03:29,585 நாம அதை உருக்கி, குட்டிக் குட்டி, தங்க ஹைவேமேன் தொப்பிகளைச் செய்யலாம். 56 00:03:29,585 --> 00:03:31,003 அதை வியாபாரப் பொருளாகக் கொடுக்கலாம். 57 00:03:31,003 --> 00:03:33,964 உன் அறிவு, அது ஒரு ஆற்றல் மிக்க எரிமலையைப் போல. 58 00:03:35,465 --> 00:03:37,426 அல்லது, என்னிடமிருந்து வெளியாகும் ஒரு தமாஷான எண்ணம் என்னவென்றால், 59 00:03:37,926 --> 00:03:41,680 நாம் அதை விற்று, அந்த பணத்தை வச்சு உணவெல்லாம் வாங்கி, உயிர் பிழைக்கலாம். 60 00:03:42,264 --> 00:03:44,391 அது கஷ்டம் ஏன்னா, எனக்குத் தொப்பிகள் பிடிக்கும். 61 00:03:44,391 --> 00:03:45,893 ஆனால் உயிர் பிழைப்பதும் நல்லதுதான். 62 00:03:45,893 --> 00:03:47,853 நான் வியாபாரப் பொருளாக ஆக்கலாம் என்கிறேன். 63 00:03:47,853 --> 00:03:51,648 மன்னிக்கவும், நான் கவனிக்கவில்லை. இந்த இடம் அற்புதமாக இருக்கேன்னு பார்த்தேன். 64 00:03:51,648 --> 00:03:54,526 இவங்க எலிசா. இவங்க நம்மைப் பத்தி எழுதறாங்க. நம்மைப் பத்திய சரித்திரம். 65 00:03:55,110 --> 00:03:56,320 அருமை. உங்ககிட்ட நல்ல நறுமணம் வருது. 66 00:03:56,987 --> 00:03:59,031 - ஹை. நான் கிரேய்க் த வார்லாக். - ஹலோ. 67 00:03:59,615 --> 00:04:02,868 டிக், தங்கத்தை விற்பதுதான் எல்லா பழைய ஹைவேமேனும் செய்வது, 68 00:04:02,868 --> 00:04:05,120 ஆனால், உன்னுடைய வழி தனி வழியா இருக்கணுமே. 69 00:04:05,120 --> 00:04:07,706 ஆம். நாம் கட்டாயமா ஒரு புது சிந்தனையுடன் செயல்பட வேண்டும். 70 00:04:08,373 --> 00:04:09,666 நான் கொஞ்சம் வாங்கிக்கறேன். 71 00:04:09,666 --> 00:04:12,002 நான் இப்போ ஒரு ஆல்கெமி புராஜெக்ட்டை செய்துட்டு இருக்கேன் 72 00:04:12,002 --> 00:04:15,380 அதுல தங்கத்தை என்னவாக மாத்தப் போறோன் தெரியுமா... ஈயமாக. 73 00:04:15,964 --> 00:04:17,882 ஆனால் ஈயத்தைதானே தங்கமாக மாற்றணும்? 74 00:04:19,718 --> 00:04:21,178 அடக் கடவுளே. நான் நிறைய பணத்தை வீணாக்கிட்டேனே. 75 00:04:21,178 --> 00:04:23,639 எனக்குப் புரியுது. நாம வேறு எங்காவது அதை விற்க முயன்றால் என்ன? 76 00:04:23,639 --> 00:04:25,390 அப்படி செய்தால், நமக்கு பணமும் கிடைப்பது மட்டுமில்லாமல், 77 00:04:25,390 --> 00:04:27,851 நாம் அனைவரும் சேர்ந்து, சந்தோஷமா, ஒரு குழுவின் ஒற்றுமை நாளாகக் கொண்டாடலாம். 78 00:04:28,769 --> 00:04:30,729 அந்த எரிமலை மீண்டும் வெடிக்கிறது! 79 00:04:30,729 --> 00:04:33,899 அது ரொம்ப நல்ல யோசனை. சரி, நீங்க எங்கே போவீங்க? 80 00:04:34,483 --> 00:04:36,777 ஹானெஸ்டி, நீ வளர்ந்து வந்த அந்த மிகப் பெரிய இடத்தின் பெயர் என்ன? 81 00:04:36,777 --> 00:04:38,612 அந்த ஆறும், ஒரு பாலமும் இருக்குமே? 82 00:04:45,494 --> 00:04:50,165 இதோ வந்துவிட்டோம். லண்டன்! இங்கே தெருவெல்லாம் கல் பதிக்கப்பட்டிருக்கும். 83 00:04:50,165 --> 00:04:52,292 ஹேம்ஸ்டெட்டிலிருந்து வந்தவர்களுக்கு அது மிக பிரமிப்பான ஒன்று. 84 00:04:52,292 --> 00:04:55,087 எனக்குப் பிடித்துள்ளது! இதை நம்ப முடியவில்லை! 85 00:04:55,087 --> 00:05:00,759 நான் தியேட்டர், கெத்திடரல், பளப்பளக்கும் லண்டனின் சுரங்கங்கள் ஆகியவற்றைப் பார்க்கணும். 86 00:05:02,511 --> 00:05:04,304 பாரு, அவர் வேடிக்கையான தொப்பிகளை விற்கிறார்! 87 00:05:04,888 --> 00:05:06,807 அதோ அங்கே இருக்காங்க! அம்மா! அப்பா! 88 00:05:06,807 --> 00:05:09,977 - ஹானெஸ்டி! கண்ணா! - அதோ அங்கே இருக்கான். 89 00:05:14,064 --> 00:05:15,274 நீதான் டிக் டர்பினாக இருக்கணும். 90 00:05:15,274 --> 00:05:17,192 தேடுகிறார்கள் போஸ்டர்கள்ல உன்னைப் பத்திய விவரம் எல்லாம் தெரிந்தது. 91 00:05:17,192 --> 00:05:18,277 அது ஒண்ணுமில்லை. 92 00:05:18,277 --> 00:05:22,072 {\an8}ஹானெஸ்டியின் விவரங்கள் எல்லாத்தையும், அவன் சிறு வயதிலிருந்தே, சேர்த்து வச்சிருக்கோம். 93 00:05:22,072 --> 00:05:25,617 {\an8}அது அவனுக்கு ஏழு வயசுதான். மிகவும் சூட்டிகை! 94 00:05:25,617 --> 00:05:28,287 அம்மா! நிறுத்து. என் கும்பலின் முன்னாடி நீ என்னை சங்கடப்படுத்துற. 95 00:05:28,287 --> 00:05:30,414 சரி, அவனுக்கு இவ்வளவு ஆதரவான பெற்றோர்கள் இல்லையெனில், 96 00:05:30,414 --> 00:05:33,208 இன்னிக்கு இவ்வளவு பெயர்போன குற்றவாளியாக வந்திருக்கவே முடியாது. 97 00:05:34,209 --> 00:05:38,881 அது இருக்கட்டும், தங்கம் வாங்க விரும்பும் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா, என்ன? 98 00:05:39,590 --> 00:05:42,467 என்னிடம் கொடுத்துடு, மகனே. நான் சத்தம்போடாம அக்கம்பக்கம் விசாரிக்கிறேன். 99 00:05:43,093 --> 00:05:44,344 ஓய், டெரெக்! 100 00:05:44,344 --> 00:05:46,513 தேடப்பட்டு வரும் ஹைவேமேனான டிக் டர்பின்கிட்டேர்ந்து, திருட்டுத் தங்கத்தை 101 00:05:46,513 --> 00:05:48,599 வாங்க விருப்பமுள்ளவங்க யாரையாவது உனக்குத் தெரியுமா? 102 00:05:48,599 --> 00:05:50,267 எவ்வளவு தங்கம்? 103 00:05:50,267 --> 00:05:51,685 எவ்வளவு? 104 00:05:52,895 --> 00:05:54,229 சுமார் 100 கட்டிகள். நீங்க கொஞ்சம்... 105 00:05:54,229 --> 00:05:56,148 அவங்ககிட்ட 100 கட்டிகள் உள்ளன! 106 00:05:56,940 --> 00:06:00,068 ஒ, 100 கட்டிகளா? அவங்க அதிலேயே புரளுவார்களே! 107 00:06:00,068 --> 00:06:01,820 என்னால் என்ன செய்ய முடியும்னு பார்க்கிறேன்! 108 00:06:01,820 --> 00:06:06,241 ஓய், கேத்தி, தங்கம் வாங்குறவங்கள யாரையாவது உனக்குத் தெரியுமா? 109 00:06:06,241 --> 00:06:08,410 - எவ்வளவு தங்கம்? - பழைய, கிசுகிசுக்கும் நெட்வொர்க். 110 00:06:08,410 --> 00:06:09,828 ஆமாம். கிசுகிசுக்கும் நெட்வொர்க். 111 00:06:09,828 --> 00:06:12,456 - அதுசரி, மீதம் உள்ள தங்கம் எங்கே? - இதோ இப்போ வந்துவிடும். 112 00:06:12,456 --> 00:06:14,208 நம் திறமையான ஆட்கள் அதுக்கு ஏற்பாடு செய்யறாங்க. 113 00:06:14,791 --> 00:06:17,461 நான் டெலிவரி செய்கிறேன். 114 00:06:17,461 --> 00:06:20,839 இந்த பெட்டியில, தங்கம் நிரம்பியில்ல 115 00:06:20,839 --> 00:06:25,177 இதை எடுத்துச் செல்ல, ஹைவேமேனாக இல்லாத என் மகன் வருவான். 116 00:06:25,177 --> 00:06:26,553 - புரியுதா? - நிச்சயமா. 117 00:06:26,553 --> 00:06:28,180 பாருங்க. அதோ, சுவத்துல டிக். 118 00:06:31,808 --> 00:06:32,893 நல்லது. 119 00:06:33,393 --> 00:06:34,478 நாம ஏன் டிக்குக்கு உதவணும்? 120 00:06:34,478 --> 00:06:36,230 அவன் ஹைவேமேனாக இருப்பதை நீங்க வெறுக்குறீங்கன்னு நினைச்சேன். 121 00:06:36,230 --> 00:06:39,233 அது, லண்டன்ல உள்ள சுவையான இறைச்சி சந்தைகள்ல செலவழிக்க, அவன் 5 சதவிகிதம் தங்கத்தை 122 00:06:39,233 --> 00:06:42,694 எனக்குத் தரேன்னு சொல்றதுக்கு முன்னாடி. 123 00:06:42,694 --> 00:06:44,655 - நீங்க சொல்வது... - சரிதான், பென்னி. 124 00:06:44,655 --> 00:06:50,869 நாம ஒட்டகச் சிவிங்கி பர்கர்களையும், வரிக்குதிரை ரிஸ்ஸோல்களையும், சிம்ப் சாப்ஸையும்... 125 00:06:51,912 --> 00:06:54,081 கேளுங்க, மக்களே. நான் தங்கத்தை வாங்க விரும்புபவர் ஒருவரை பார்த்தேன், 126 00:06:54,081 --> 00:06:56,792 அதனால நம்ம ரகசிய சந்திப்புக்கா, இருட்டான ஒரு ஒதுக்குப்புறத்தை புக் பண்ணியிருக்கேன். 127 00:06:56,792 --> 00:06:58,794 நமக்கு 2:30 மணி வரைதான் நேரம், கவனமாக இரு. 128 00:06:58,794 --> 00:07:01,880 அதற்கு பிறகு, அங்கே ஒரு ஆறு பேர் குழு அங்கே வந்து ஒப்பியம் டீலைப் பேசப் போறாங்க. 129 00:07:02,381 --> 00:07:03,757 சரிதான், மக்களே. நான் இதை கவனிச்சுக்கறேன். 130 00:07:03,757 --> 00:07:05,300 நான் பேரம் பேசுறதுல கெட்டிக்காரன். 131 00:07:05,300 --> 00:07:06,844 அதாவது, அப்படி இருக்கலாம். நான் இதுவரை முயன்றதே இல்லை. 132 00:07:06,844 --> 00:07:09,179 பேரம் பேசத் தேவையே இருக்காது. 133 00:07:10,514 --> 00:07:11,890 ஹலோ, டர்பின். 134 00:07:11,890 --> 00:07:12,975 வைல்ட். 135 00:07:12,975 --> 00:07:14,351 கிறிஸ்டோஃபர், நீ இன்னும் விழிச்சிருக்கயா. 136 00:07:14,351 --> 00:07:15,769 நீங்க இங்கே என்ன செய்யறீங்க? 137 00:07:15,769 --> 00:07:19,273 நாங்க இந்த ஊருக்குள்ள வந்து, சில துண்டுகளை எடுத்துக்கலாம்னு வந்தோம். இல்லை, பொறு. 138 00:07:19,273 --> 00:07:21,733 நான் உங்களை வலைப் போட்டு பிடிச்சுட்டேன். தெரியலையா. 139 00:07:22,359 --> 00:07:24,111 - காவலர்களே, நகருங்க, நகருங்க. - அனைவரும் அமைதியா இருங்க. 140 00:07:24,862 --> 00:07:25,863 அமைதியா இருங்க. 141 00:07:28,282 --> 00:07:29,408 தப்பிக்க வழியே இல்லை. 142 00:07:30,826 --> 00:07:31,827 உன்னைச் சுற்றி ஆட்கள் இருக்காங்க. 143 00:07:36,164 --> 00:07:37,374 அது உண்மையாக இருக்கும். 144 00:07:37,374 --> 00:07:41,336 ஆனால் உன் திட்டத்தை முன்னரே யூகிச்சு, கடந்த வாரம் காவலாளிகளுக்கு லஞ்சம் கொடுக்கவில்லையெனில் அது, 145 00:07:41,336 --> 00:07:43,547 ஆனால் இப்போது, எதிர்பாராத ஒரு திருப்பம், 146 00:07:43,547 --> 00:07:46,383 உண்மை என்னவெனில் நான்தான் உன்னை சூழ்ந்துகொண்டுள்ளேன். 147 00:07:47,759 --> 00:07:49,428 பொறு, நீ உண்மையாவே அப்படி செய்தாயா? 148 00:07:49,428 --> 00:07:51,346 இல்லை, நான் இப்போதுதான் அதை யோசித்தேன். ஆனால் நான் அதைச் செய்திருந்தால், யோசிச்சுப் பார். 149 00:07:51,346 --> 00:07:53,265 - அது ரொம்ப நல்லா இருந்திருக்கும். - தெரியும். 150 00:07:53,891 --> 00:07:55,475 இப்போ என்ன நடக்கும் பாரு: 151 00:07:56,185 --> 00:07:58,812 நீ எங்களை நேரடியாக தங்கள் உள்ள இடத்துக்குக் கூட்டிச் செல்லப் போகிறாய், 152 00:07:59,605 --> 00:08:03,025 அதோடு நான் உன்னை நேரடியாக தூக்கு மேடைக்கு அனுப்பப் போகிறேன். 153 00:08:03,025 --> 00:08:04,401 மீண்டும் வேண்டாம். 154 00:08:04,401 --> 00:08:06,320 அப்பா, நாம ஐஸ் கிரீம் வாங்கலாம் என உறுதி தந்திருக்கீங்க. 155 00:08:06,820 --> 00:08:08,822 நல்லது. போகும் வழியில், நாம் ஐஸ் கிரீம் வாங்கலாம். 156 00:08:08,822 --> 00:08:10,616 ஆம், மக்களே, உண்மையில் நான் வீகன் எனவே... 157 00:08:10,616 --> 00:08:12,117 எனக்கு குளிர் செய்யப்பட்ட யோகர்ட் போதும். 158 00:08:12,117 --> 00:08:14,453 - அடக் கடவுளே, எனக்கு ப்ரோயோ பிடிக்கும். - இல்லை! ப்ரோயோ கிடையாது. 159 00:08:14,453 --> 00:08:16,538 சரிதான், அமைதி, உங்கள் விருப்பம். எனக்கு சர்பத் போதும். 160 00:08:16,538 --> 00:08:18,457 எப்படியானாலும் ஐஸ் கிரீம் உனக்கில்லை. 161 00:08:18,457 --> 00:08:22,503 இப்போது நகரு, இல்லை என் ஆட்கள் வந்து உன் நண்பர்களைக் கொன்றுவிடுவார்கள், இவன்தான் முதலில். 162 00:08:23,587 --> 00:08:24,588 ஆம்! 163 00:08:24,588 --> 00:08:26,840 என்னை எதுக்குமே முதலில் எடுத்தக்கொள்ள மாட்டார்கள். 164 00:08:26,840 --> 00:08:28,217 அது நல்ல விஷயம் இல்லையே. 165 00:08:29,551 --> 00:08:32,136 நிதானம், சகோதரா வைல்ட். நான் "டர்பன்-ஐ" எடுத்துக்கொள்கிறேன். 166 00:08:32,136 --> 00:08:34,264 உண்மையில், அது "டர்பின்" நடுவில ஒரு பி வரும். நல்ல ஜாக்கெட். 167 00:08:34,264 --> 00:08:36,725 - நன்றி, டர்பன். - தள்ளி நில்லு, கௌ. 168 00:08:37,226 --> 00:08:39,352 இந்த காக்கா-முடியுள்ள முட்டாள் எனக்குச் சொந்தம். 169 00:08:39,352 --> 00:08:42,731 ஆம், சொந்தம்தான். ஆனால், நீ திடீரென மர்மமாக மறைந்துவிட்டால், 170 00:08:42,731 --> 00:08:45,359 இல்ல யாராவது உன்னைத் துப்பாக்கியால் சுடுவதாக இருந்தால், 171 00:08:45,943 --> 00:08:47,694 அப்புறம் சின்டிகேட் ஒரு புதிய திருடனைப் பிடிப்பவரைத் தேடணும். 172 00:08:48,278 --> 00:08:50,322 அதாவது... நான் என்னைத் தான் சொன்னேன். நான்தான் அந்த ஆள். 173 00:08:50,322 --> 00:08:51,490 ஆமாம், அது எனக்குப் புரிந்துவிட்டது. 174 00:08:51,490 --> 00:08:52,824 வைல்ட், நான் விளக்கறேன், சரியா? 175 00:08:52,824 --> 00:08:55,160 நான் உன்னைக் கொன்று, உன் இடத்தை நான் எடுத்துக்கொள்வேன். 176 00:08:55,160 --> 00:08:56,578 ஆம், உன் திட்டம் எனக்குப் புரிகிறது. 177 00:08:57,371 --> 00:08:58,205 என்னக் கண்றா... 178 00:08:58,205 --> 00:09:00,582 சரி, தள்ளிப் போங்க. "டர்பட்" எனக்குத்தான். 179 00:09:00,582 --> 00:09:02,501 "டர்பட்டா"? அது டர்பின். 180 00:09:02,501 --> 00:09:03,627 பொறு. 181 00:09:03,627 --> 00:09:05,379 சான்ட்ரா, நீயா அது? 182 00:09:06,547 --> 00:09:09,049 கௌ! வாய்ப்பே இல்லை! 183 00:09:09,049 --> 00:09:11,260 - நாம் இருவருக்கும் ஒரே யோசனைதானா... - அப்படித்தான் நினைக்கிறேன். 184 00:09:11,260 --> 00:09:13,554 - ...அவனைக் கொன்று அவன் இடத்தை எடுத்துக்கொள்ளவா? - வைல்டைக் கொன்று, பதிலாக இன்னொருவனை வைப்பதா? 185 00:09:13,554 --> 00:09:15,347 ஆம். ஆம். நாம எப்படி, ஹம்? 186 00:09:16,765 --> 00:09:18,976 எனினும், நான் சொன்னது போல்தான். 187 00:09:26,483 --> 00:09:29,194 அதை விடு. ஓடு, கிறிஸ்டோஃபர். அவர்களின் தூப்பாக்கிச் சூடை வேறு திசைத் திருப்பு. 188 00:09:29,194 --> 00:09:30,195 அடக் கடவுளே. 189 00:09:30,863 --> 00:09:32,906 - டிக் என்ன ஆவான்? - நமக்கு வேற வழியில்லை. 190 00:09:32,906 --> 00:09:35,409 - வா போகலாம்! - ஆம், மக்களே. ஓடுங்க! உங்களைக் காப்பாற்றிக்கொள்... 191 00:09:35,409 --> 00:09:36,660 அவங்க ஏற்கனவே போயாச்சு. 192 00:09:36,660 --> 00:09:38,287 வா. ஓடு, முட்டாளே! 193 00:09:44,084 --> 00:09:45,377 பொறு, என் தொப்பி! 194 00:09:54,678 --> 00:09:56,555 - என் உயிரைக் காப்பாற்றினாய். - அது என் எண்ணமில்லை. 195 00:09:59,266 --> 00:10:00,559 இந்த பக்கம், சீக்கிரம்! 196 00:10:00,559 --> 00:10:02,436 வழியை விடு! வா, நகரு! 197 00:10:14,198 --> 00:10:15,199 ஹலோ, பசங்களா. 198 00:10:19,578 --> 00:10:21,079 ஓடி ஒளிய இடமில்லை, சகோதரா வைல்ட். 199 00:10:21,580 --> 00:10:24,750 - பின்னாடி போ, கௌ. அவங்க எனக்கு. - சான்ட்ரா. அவங்களை முதலில் பார்த்தது நான். 200 00:10:24,750 --> 00:10:26,251 நாம இப்போ குதிக்கணும். 201 00:10:26,251 --> 00:10:28,003 உனக்குப் பைத்தியமா? நான் பாரீஸிய பட்டு உடுத்தியிருக்கிறேன். 202 00:10:28,003 --> 00:10:29,588 நமக்கு வேறு வழி இல்லை. 203 00:10:29,588 --> 00:10:32,257 என் ஆடைகளைக் களைவதற்கு, எனக்கு, ஒரு 15 நிமிடங்கள் கொடுங்கள். 204 00:10:32,257 --> 00:10:33,342 வா போகலாம்! 205 00:10:34,009 --> 00:10:35,427 நான் நிஜமாகவே திருடனைப் பிடிப்பவனாக இருக்க விரும்பறேன். 206 00:10:37,971 --> 00:10:38,972 உடனே! 207 00:10:40,891 --> 00:10:43,227 - ச்சே. - இது தப்பான யோசனை ஆயிடுச்சு. 208 00:10:44,728 --> 00:10:46,021 இன்னும் முடியலை, வைல்ட். 209 00:10:56,865 --> 00:10:58,575 சிறப்புதான். இன்னொரு இறந்துபோன தலைவர். 210 00:10:58,575 --> 00:11:00,160 எனக்கு எப்படி ஒரு நல்ல பரிந்துரை கிடைக்கும்? 211 00:11:00,160 --> 00:11:02,287 அவன் இறக்கவில்லை. அவன் ஐஸ் கிரீம் ஆளுடன் தப்பி ஓடுவதை நான் பார்த்தேன். 212 00:11:02,287 --> 00:11:05,249 அதனால எனக்கு மூச்சு வாங்குகிறது. என் வாழ்வில் இவ்வளவு ஓடியதே இல்லை. 213 00:11:06,875 --> 00:11:09,503 நாங்கள் சரண் அடைகிறோம்! இனிமேலும் என்னை ஓட வைக்காதே. 214 00:11:09,503 --> 00:11:11,213 ஓடுவதைத் தவிர, வேறு எதுவும் செய்வேன்! 215 00:11:14,800 --> 00:11:16,885 அதை எடுத்துக்கொள். நீ உன்னையே கேலிக்கூத்தாக ஆக்குகிறாய். 216 00:11:16,885 --> 00:11:19,721 நீ வைல்டின் மகன் தானே, இல்லையா? நான் ஜெனிஃபர்னு சொல்லணுமா? 217 00:11:19,721 --> 00:11:22,641 - என் பெயர் கிறிஸ்டோஃபர். -"என் பெயர் கிறிஸ்டோஃபர்." 218 00:11:22,641 --> 00:11:23,725 அது என்னது? 219 00:11:23,725 --> 00:11:25,727 ஆம், என்னை மன்னிக்கவும். எனக்குக் குழந்தைகளை சமாளிக்கத் தெரியாது. 220 00:11:25,727 --> 00:11:27,646 - நான் ஹைவேமேனாகவே இருந்துட்டேன்... - உனக்கு 16 வயது ஆனதிலிருந்து. 221 00:11:27,646 --> 00:11:30,190 அது உனக்கு எப்படித் தெரியும்? யார் சொன்னது? நீ யாரிடம் பேசிட்டு இருந்த? 222 00:11:30,190 --> 00:11:33,861 என் அப்பா. நான் திடுடனைப் பிடிப்பதில் கெட்டிக்காரன் ஆவதற்கு, அவருடைய ரிப்போர்ட்டுகளை படிக்க வைப்பார். 223 00:11:33,861 --> 00:11:35,237 ஆனால் எனக்கு ஹைவேமேனாகத்தான் ஆசை. 224 00:11:35,237 --> 00:11:38,615 - உங்களுக்கெல்லாம் வணிகக் கார்டுகளைக்கூட செய்தேன். - யாருக்கு அக்கறை, உன் முட்டாள்தனமான... 225 00:11:39,825 --> 00:11:42,286 சரி. மன்னிக்கவும், நான் ரொம்ப திறமையானவன். 226 00:11:42,286 --> 00:11:45,873 {\an8}"சுடுவது: ஏழு. சூழ்ச்சி: எட்டு." வரலாறு. 227 00:11:45,873 --> 00:11:48,041 "அறிவுள்ள சொற்கள்: ஒன்று." 228 00:11:48,041 --> 00:11:50,127 நான் அறிவுள்ளவன். நான் ரொம்ப அறிவாளி. 229 00:11:50,127 --> 00:11:53,881 நான்தான், நான் இந்த நகரத்திலேயே அறிவாளி. 230 00:11:53,881 --> 00:11:55,257 எனக்கு மூன்றுமே இருக்கு. 231 00:11:55,257 --> 00:11:57,176 எனக்கு கவலைப்படுவதில் மட்டும்தான் பத்துக் கிடைத்தது. 232 00:11:57,176 --> 00:11:59,428 நான் ரொம்ப கவலைப்படறதில்ல, இல்லையா? நான் கவலைப்படுபவன் இல்லை. 233 00:11:59,428 --> 00:12:02,264 அதாவது, நீ என்னை கவலைப்படறவன்னு சொல்லிட்டயே. நான் கவலைப்படறேன்னு, கவலையா இருக்கு. 234 00:12:02,264 --> 00:12:05,225 - நீ கவலைப்படறவன்தான். - அடக் கடவுளே. நான் கவலைப்படுபவன்தான்! 235 00:12:05,225 --> 00:12:07,644 சரியே. மூஸ், நீ அந்த பையனை பிடித்துக்கொள், நாம் அவனை பிணைக் கைதியாக வச்சுப்போம். 236 00:12:07,644 --> 00:12:09,688 நேர போஸ்ட் ஆபீஸ் போ. அங்கே உள்ள தங்கத்துக்குக் காவல் இரு. 237 00:12:09,688 --> 00:12:11,273 நான் போய் டிக்கையும் ஹானெஸ்டியையும் தேடிப் பிடிக்கிறேன். 238 00:12:11,273 --> 00:12:14,026 புத்திசாலி. உனக்கு இந்த நகரத்தை நன்றாகத் தெரிந்தவரின் உதவி தேவை. 239 00:12:16,320 --> 00:12:17,613 நாம் இன்னும் லண்டனில் தானே இருக்கிறோம், இல்லையா? 240 00:12:17,613 --> 00:12:18,822 - ஆமாம். - இனிமை. 241 00:12:25,621 --> 00:12:27,998 என் துப்பாக்கி. என் சில்லறைப் பை. 242 00:12:28,624 --> 00:12:30,542 அந்த சாவிக்கொத்து. இது பயங்கரமாக இருக்கே. 243 00:12:30,542 --> 00:12:32,836 ஆமாம், அப்படித்தான் இருக்கு. என் தலை முடியின் நிலையைப் பாரு. 244 00:12:32,836 --> 00:12:34,713 நீ என்ன சொல்கிறாய்? அதுவும் இதுவும் ஒன்றுதான். 245 00:12:34,713 --> 00:12:37,216 - அது எப்படி சாத்தியம்? - நீ உலர்ந்த ஷாம்பூவைப் பற்றி கேட்டிருக்கியா? 246 00:12:37,216 --> 00:12:39,676 நீ யாரிடமிருந்து திருடியிருக்கன்னு உணர்கிறாயா? 247 00:12:39,676 --> 00:12:41,595 - த சின்டிகேட். - அவர்கள் என்ன ஒரு ரேக்கே பாண்டா? 248 00:12:41,595 --> 00:12:44,848 உலகத்திலேயே மிகவும் பயத்தை ஏற்படுத்தக்கூடிய குற்றம் செய்யும் நிறுவனம்தான் சின்டிகேட். 249 00:12:45,516 --> 00:12:46,517 என் நிறுவனம். 250 00:12:46,517 --> 00:12:48,268 அருமை, ஜே-டாக், நம்பவே முடியலை. 251 00:12:48,268 --> 00:12:49,686 எனவே நீதான் என் பிக் பாஸா? 252 00:12:49,686 --> 00:12:52,731 சரி, நான்தான்னு அப்படிச் சொல்ல முடியாது. 253 00:12:52,731 --> 00:12:53,857 எனவே நீ பிக் பாஸ் இல்லையா? 254 00:12:53,857 --> 00:12:55,108 நான் உயர் மட்ட மரியாதையைப் பெற்றவன். 255 00:12:55,108 --> 00:12:58,237 ஆனால் உண்மையான பிக் பாஸ் இல்ல. கிட்டத்தட்ட நடுத்தர நிர்வாகியைப் போல? 256 00:12:58,237 --> 00:12:59,821 இல்லை! சீனியர் நிர்வாகம். 257 00:12:59,821 --> 00:13:02,658 யாருக்கோ அவர் பிக் பாஸாக இல்லை என்ற வருத்தம் உள்ளது போலிருக்கே. 258 00:13:02,658 --> 00:13:04,993 பிக் பாஸாக இல்லை என்ற வருத்தம் எல்லாம் எனக்கில்லை. 259 00:13:04,993 --> 00:13:06,620 நான் எளிமையா சொல்றேன், டர்பின். 260 00:13:06,620 --> 00:13:09,665 தங்கம் வைத்திருக்கும் இடத்துக்கு என்னைக் கொண்டு போ, நான் உன்னை உயிருடன் விடுவதைப் பத்தி யோசிக்கிறேன். 261 00:13:09,665 --> 00:13:12,543 சரி. ஆனால் அதற்கு முன் நாம் போகும் வழியில் ஒரு நெகிழ்ச்சியான சாகஸம் செய்து, 262 00:13:12,543 --> 00:13:14,920 நமக்குள்ள அவ்வளவு வித்தியாசம் இல்லை என்று உணர்ந்த பின். 263 00:13:14,920 --> 00:13:17,256 நான் உன்னைக் கொல்லாமல் இருந்தால் போதாதா? 264 00:13:17,256 --> 00:13:18,423 நல்லது. 265 00:13:18,423 --> 00:13:22,010 ஆனால் என்னைத் தேடி கும்பல்காரர்கள் வந்தால், நாம் மாறு வேஷத்துல இருக்க வேண்டும் என நினைக்கிறேன். 266 00:13:22,010 --> 00:13:23,720 நாம் மாறு வேஷத்தில் எல்லாம் போக வேண்டாம். 267 00:13:33,772 --> 00:13:36,984 என்ன சொல்லவா, இவ்வளவு வகை வகையான துணிகளை காயவைத்த கொடியைக் கிடைக்க நம் அதிர்ஷ்டம்தான். 268 00:13:36,984 --> 00:13:38,569 அடக் கடவுளே. நாம இறக்கப் போகிறோம். 269 00:13:39,069 --> 00:13:41,488 டிக்? டிக்? 270 00:13:42,698 --> 00:13:46,118 டிக்! 271 00:13:46,118 --> 00:13:49,371 ஹானெஸ்டி, நாம் சிறிய வீதிகளில் நடந்து, டிக்கின் பெயரைக் கத்துவதே, அவனைக் கண்டுப்பிடிக்க 272 00:13:49,371 --> 00:13:50,664 சிறப்பான வழின்னு தோன்றவில்லை. 273 00:13:50,664 --> 00:13:53,500 சரி, புதிய திட்டம். அவன் சிந்திப்பதைப் போல் சிந்திக்கணும். 274 00:13:53,500 --> 00:13:55,210 அதைவிட இன்னும் கொடுமையான ஒன்றை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. 275 00:13:56,587 --> 00:13:57,588 நான் டிக். 276 00:13:58,338 --> 00:13:59,339 நான் ஒரு ஹைவேமேன். 277 00:14:00,007 --> 00:14:02,050 எனக்கு பளப்பளக்கும் ஆடைகளும் கண் மையும் ரொம்பப் பிடிக்கும். 278 00:14:02,050 --> 00:14:04,011 - அடக் கடவுளே. - ஆனால் என்னைத் துரத்துகிறார்கள். 279 00:14:04,887 --> 00:14:06,221 என்னைத் துரத்துறாங்க. 280 00:14:08,891 --> 00:14:10,434 அடுக்கப்பட்ட ஹீலைப் போட்டுகிட்டு. அவன் ஹீல்ஸை போட்டிருக்கான். 281 00:14:11,018 --> 00:14:12,227 இந்த ஆளுக்கு வலிக்குது. 282 00:14:12,227 --> 00:14:13,228 டிக்கிற்கு வலி இருக்கு. 283 00:14:15,147 --> 00:14:17,065 - வலி, சங்கிலி. - அப்புறம்? 284 00:14:17,649 --> 00:14:19,526 அவனை வெறுக்கும் எதிரியுடன் டிக் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கான். 285 00:14:20,027 --> 00:14:21,236 அவங்க இப்போ... 286 00:14:22,487 --> 00:14:23,947 அவங்க பாலங்களை அமைக்கணும். 287 00:14:23,947 --> 00:14:25,365 பாலங்களைக் கட்டணும். 288 00:14:25,866 --> 00:14:27,326 பாலங்களைக் கட்டணும்! 289 00:14:27,326 --> 00:14:29,286 நீ சொல்வதெல்லாம் எனக்கு புரிவது போல நீ ஏதேதோ சொல்கிறாய். 290 00:14:29,286 --> 00:14:31,163 அந்த ஆள் ஆற்றுக்கு போயிருக்கான். வா! 291 00:14:32,164 --> 00:14:33,373 என்ன நடக்குது? 292 00:14:37,586 --> 00:14:39,254 உன்னை அப்பட்டமா தெரியாம நடந்துக்கொள்ள முடியுமா? 293 00:14:39,254 --> 00:14:41,715 பதற வேண்டாம், ஜே-விஸ்ஸில், நான் இயல்பாகத்தான் இருக்கிறேன். 294 00:14:41,715 --> 00:14:43,800 நான் சிஸ்டர் ஔநிட்டா ஓமாலி. 295 00:14:43,800 --> 00:14:45,677 பகலில் கன்னியாஸ்திரீ, இரவில் காளையை அடக்கும் வீராங்கனை. 296 00:14:45,677 --> 00:14:48,514 எனக்கென்று ஒரு தனி வாக்கியம் கூட இருக்கு, "ஓலே, பிரார்த்தனை செய்வோம்." 297 00:14:48,514 --> 00:14:51,266 எனக்கும் ஒரு வாக்கியம் இருக்கு. "வாயை மூடு, முட்டாளே." 298 00:14:51,266 --> 00:14:52,809 அதை உன் டீ-ஷர்ட்டில் பார்க்க முடியலையே. 299 00:14:52,809 --> 00:14:55,187 - சிறந்த உடுப்பு. இலவச ஆப்பிள் டாஃபி வேணுமா? - நன்றி, தோழா. 300 00:14:55,854 --> 00:14:59,525 பார்த்தாயா? ஆனால் உனக்கு நல்ல எண்ண அலைகள் இருந்தால் அண்டம் அதற்காக உன்னை மெச்சும். 301 00:14:59,525 --> 00:15:00,776 சில சமயம் ஆப்பிள் டாஃபிகளைக் கொடுக்கும். 302 00:15:00,776 --> 00:15:02,736 எனக்கு தோழமை கொள்வதற்கெல்லாம் நேரம் இல்லை, டர்பின். 303 00:15:02,736 --> 00:15:04,571 என் மகன் அங்கே தனியா இருக்கான். 304 00:15:05,155 --> 00:15:08,992 ஆம், யோசித்துப் பார்த்தால், திருட்டுத் தங்க டீல் போடும்போது, அவனைக் கொண்டு வந்தது சரியில்லை 305 00:15:08,992 --> 00:15:10,202 அதுவும் அதிகாலை 2:00 மணிக்கு. 306 00:15:10,202 --> 00:15:13,747 அவன் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு நாள், திருடனைப் பிடிக்கும் இந்த சாம்ராஜ்ஜியம் அவனுக்கு வரும். 307 00:15:13,747 --> 00:15:15,916 எனக்கு சைக்கிள் இருந்தால் பரவாயில்லை. அதாவது, அவனுக்கு ஒன்பது வயதுதானே, இல்லையா? 308 00:15:15,916 --> 00:15:17,125 எனக்கு ஆறு வயசு ஆகும்போதே, 309 00:15:17,125 --> 00:15:19,878 நான் ஒரு அனுமதியில்லாத பெட்டிக்கடையையும், மூன்று வேசி விடுதிகளையும் நடத்தி வந்தேன். 310 00:15:19,878 --> 00:15:21,171 அவனுக்கு அது பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வாய்? 311 00:15:21,171 --> 00:15:23,715 அவன் ஒரு கலைஞனாக விரும்பினால்? அல்லது ஒரு காபி கடை ஆளாக ஆக விரும்பினால்? 312 00:15:23,715 --> 00:15:25,342 அல்லது காபிக் கடையில் உள்ள கலைஞனாக விரும்பினால், 313 00:15:25,342 --> 00:15:27,386 ஏன்னா யாருக்கு அவனுடைய உதவாக்கரை கலையை வாங்குவதில் ஆர்வமிருக்கும்? 314 00:15:27,970 --> 00:15:29,513 நீ அவனிடம் கேட்டாயா? 315 00:15:31,849 --> 00:15:33,267 ஹைய்யா, அன்பே. 316 00:15:33,267 --> 00:15:35,811 அவள் என்ன கண்டுப்பிடிச்சாளா, அல்லது கன்னியாஸ்த்ரீகளை அவள் வெறுக்கிறாளா? 317 00:15:35,811 --> 00:15:36,854 ஓடு! 318 00:15:41,984 --> 00:15:44,069 ஹா, நீ மீண்டும் தோற்றாய். 319 00:15:44,069 --> 00:15:46,029 இதில் நியாயமே இல்லை. 320 00:15:46,029 --> 00:15:48,031 எப்போதும் எனக்கு மோசமான கார்டே கிடைத்தால் நான் எப்போது வெற்றி பெறுவேன்? 321 00:15:48,031 --> 00:15:49,449 நான்தான் மிக மோசமானவன். 322 00:15:49,449 --> 00:15:50,742 நான் இங்கே இருக்கவே கூடாது. 323 00:15:50,742 --> 00:15:53,745 நான் டிக்கையும் அவனுடைய அழகான கிருதாவையும் தேடணும். 324 00:15:53,745 --> 00:15:56,206 - அவன் நல்லாதான் இருப்பான், மூஸ். - ஆமாம், தெரியும். 325 00:15:56,206 --> 00:15:58,959 ஆனால் உன் கார்டுகள் அனைத்தும் சரிதான். என்னால் கவலைப் படாமல் இருக்க முடியவில்லை. 326 00:15:58,959 --> 00:16:00,961 - உனக்குப் புரியாது. - என் தந்தையும் தான் அங்கே இருக்கிறார். 327 00:16:01,753 --> 00:16:02,880 அது கொஞ்சம் ஒரே மாதிரிதான் இருக்கு. 328 00:16:02,880 --> 00:16:05,382 நாம கவனத்தைத் திசைத்திருப்ப, ஊர் சுத்திப் பார்க்கலாம். 329 00:16:05,382 --> 00:16:07,426 லண்டனில் என்னை வேடிக்கைகளைக் காண விடவே மாட்டார், அப்பா. 330 00:16:07,426 --> 00:16:10,679 நான் அதை விரும்புவேன், ஆனால் நாம் இங்கே இருந்து தங்கத்தைக் காவல் காக்க வேண்டுமே. 331 00:16:10,679 --> 00:16:12,598 அவரைப் போலதான் நீயும் சலிப்பூட்டுகிறாய். 332 00:16:12,598 --> 00:16:15,559 நான் சலிப்பூட்டுபவன் இல்லை. உண்மையில் நான் மிக உற்சாகமானவன். 333 00:16:15,559 --> 00:16:18,020 அப்போது உனக்கு ஏன் உற்சாக குணத்திற்கு, மூன்று புள்ளிகள்தான் கிடைத்தது? 334 00:16:18,020 --> 00:16:19,521 "அப்போது உனக்கு ஏன்..." 335 00:16:21,481 --> 00:16:23,400 சரி, யார் சலிப்பூட்டுகிறார்கள் என்று காண்பிக்கிறேன். போவோம், வா. 336 00:16:23,400 --> 00:16:24,860 ஊரைச் சுத்தி வருவோம் வா. 337 00:16:26,111 --> 00:16:28,071 உன் கோட்டை மறக்காமல் எடுத்து வா. வெளியே குளிர் அடிக்கிறது. 338 00:16:28,739 --> 00:16:29,865 வா போகலாம், கிறிஸ்டோஃபர்! 339 00:16:34,745 --> 00:16:36,038 பாரு, டிக்கின் ஸ்கார்ஃப். 340 00:16:36,538 --> 00:16:38,332 அவன் ஆற்றினுள் குதித்திருப்பான். 341 00:16:38,332 --> 00:16:40,042 சரி. மிகையாகச் சொன்னால், இது தற்செயலாக நடந்த ஒன்று. 342 00:16:40,042 --> 00:16:42,920 அவன் விழுந்ததிலிருந்து உயிர் பிழைத்திருந்தாலும், கரையிலே எங்கே அடித்துத் தள்ளப்பட்டான்னு தெரியாதே? 343 00:16:43,712 --> 00:16:45,464 எனக்கு அதை கண்டுப்பிடிக்க ஒரு வழி தெரியும். 344 00:16:45,464 --> 00:16:47,674 இல்லை, இல்லை! 345 00:16:47,674 --> 00:16:49,009 இதோ வருகிறோம், டிக்! 346 00:16:51,762 --> 00:16:55,599 சரி. எனக்கு குளிருது, நான் ஈரமா இருக்கேன், என் மேக்கப் எல்லாம் கலைகிறது. 347 00:16:58,852 --> 00:16:59,853 அவன் தொலைந்துவிட்டான். 348 00:17:00,938 --> 00:17:01,939 இவன் களைத்துவிட்டான். 349 00:17:03,106 --> 00:17:04,107 இவன்... 350 00:17:05,025 --> 00:17:06,151 இவன்... 351 00:17:07,736 --> 00:17:09,820 அடக் கடவுளே, வேஷம்! 352 00:17:10,948 --> 00:17:12,699 வேஷத்தைத் தேடிப் போயிருக்கிறான்! 353 00:17:14,117 --> 00:17:15,117 பாரு! 354 00:17:16,411 --> 00:17:17,538 டிக்கின் ஆடைகள். 355 00:17:19,289 --> 00:17:20,290 அவன் அந்தப் பக்கம் போயிருக்கான். 356 00:17:21,415 --> 00:17:22,960 இது சரியாக இருப்பது எனக்கு கோபத்தைத் தருகிறது. 357 00:17:24,211 --> 00:17:25,462 ஹே, நாம எங்கிருக்கிறோம் என எனக்குத் தெரியும். 358 00:17:26,088 --> 00:17:27,089 இங்கே உள்ளே. 359 00:17:29,132 --> 00:17:31,385 வெற்றி பெற்றவர் ஆல்பியன் ஆல்ஃப்! 360 00:17:31,385 --> 00:17:33,804 அடடே, இது ஒரு சட்ட அனுமதியில்லாத ஃபைட் கிளப். ரொம்ப கூல். 361 00:17:33,804 --> 00:17:37,057 அடுத்தது, பெண்களின் சீனியர் பிரிவு. 362 00:17:37,057 --> 00:17:40,686 ஹெல்காட் ஹில்டாவுக்கு எதிராக... 363 00:17:41,645 --> 00:17:45,649 டாரிஸ் த டெஸ்ட்ராயர், பணயம் வையுங்கள்! 364 00:17:48,151 --> 00:17:49,111 நீ என்ன செய்யற? 365 00:17:49,111 --> 00:17:51,864 எனக்கு டாரிஸைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இருக்கு. உன்னிடம் ஐந்து ஷில்லிங்குகள் இருக்கா? 366 00:17:51,864 --> 00:17:54,116 இந்த சங்கிலையை எங்கே எடுக்கணும் என எனக்குத் தெரியும். வா! 367 00:18:01,832 --> 00:18:03,542 இந்த உரிமையாளர் என்னுடைய வாடிக்கையாளர்தான். 368 00:18:04,209 --> 00:18:05,836 ஒரு சிறிய கட்டணத்திற்கு, 369 00:18:05,836 --> 00:18:09,006 நான் அவனுக்கு பாதுகாப்பு திட்டம் ஒன்றை வழங்கியுள்ளேன். 370 00:18:09,006 --> 00:18:10,632 - யாரிடமிருந்து? - பெரும்பாலும் என்னிடமிருந்து. 371 00:18:11,425 --> 00:18:14,136 - அது இங்கேதான் இருக்க வேண்டும். - ஒருவேளை மேலுள்ள டிராயர்ல இருக்கலாம். 372 00:18:14,136 --> 00:18:15,429 வாயை மூடு. நான் என்ன செய்கிறேன் என எனக்குத் தெரியும். 373 00:18:15,429 --> 00:18:18,098 - கீழே உள்ள டிராயரில் பார், இருக்கலாம். - தெரியும். அனைத்திலும் தேடுவேன். 374 00:18:18,932 --> 00:18:20,559 இதைத்தான் தேடுகிறாயா? 375 00:18:21,852 --> 00:18:24,521 இங்கே வருவதற்கு, உனக்கு தைரியம்தான் என சொல்ல வேண்டும், வைல்ட். 376 00:18:26,315 --> 00:18:27,691 மதிய வணக்கம் சிஸ்டர். 377 00:18:27,691 --> 00:18:28,775 ஹோல, செனார். 378 00:18:28,775 --> 00:18:31,737 இப்போ, நான் உன்னை கடந்த முறை பார்த்தபோது, சரியாகச் சொன்னால், 379 00:18:32,613 --> 00:18:34,281 என் கட்டை விரலை வெட்டினாய். 380 00:18:35,657 --> 00:18:38,577 நீ எனக்குப் பணம் தர வேண்டியிருந்தது. எனக்கு வேறு வழி இல்லை. 381 00:18:38,577 --> 00:18:40,537 ஆனால் நான் அதை திரும்பவும் தைத்துவிட்டேனே. 382 00:18:40,537 --> 00:18:43,498 ஆமாம், தப்பான கையில். 383 00:18:45,334 --> 00:18:46,502 அது வெறும் வேலை நிமித்தமானதுதான். 384 00:18:46,502 --> 00:18:48,003 எங்களை இந்த சங்கிலியிலிருந்து விடுவித்துவிடு 385 00:18:48,003 --> 00:18:50,964 அப்போது அந்தக் கட்டை விரலை மீண்டும் சரியான கையில் தைத்து விடுகிறேன். 386 00:18:52,049 --> 00:18:53,926 அதாவது, உனது வலது கையில். 387 00:18:55,802 --> 00:18:57,888 ஆம், நீ எனக்குச் செய்துள்ள அனைத்தையும் பார்க்கும்போது, 388 00:18:59,223 --> 00:19:01,141 உனக்கு உதவுவதில் எனக்கு மிக்க சந்தோஷம்தான். 389 00:19:04,686 --> 00:19:08,357 இப்போது முக்கியமான நிகழ்வுக்கு வருவோம். 390 00:19:08,357 --> 00:19:13,403 இப்போது சிவந்த மூலையில்... இன்னும் ரத்தம் பெருகி சிகப்பாகப் போகிறது, 391 00:19:13,403 --> 00:19:20,452 அங்கே ஜோனத்தன் வைல்ட் மற்றும் சிஸ்டர் ஔநிட்டா ஓமாலி. 392 00:19:21,286 --> 00:19:23,914 நீல மூலையில், 393 00:19:23,914 --> 00:19:29,753 ஜாக் "இரும்புக் கை" பிரௌட்டன்! 394 00:19:29,753 --> 00:19:31,880 நான் அவனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அவன் திறமைசாலி என நினைக்கிறேன். 395 00:19:43,725 --> 00:19:46,061 - பொறு, நிஜமாகவே அவனுக்கு இரும்புக் கரம். - எனக்குத் தெரியும். 396 00:19:47,855 --> 00:19:49,314 பயங்கரமான எஃகாலை விபத்து. 397 00:19:55,904 --> 00:20:00,951 நான் எண்ணியவுடன், மரணத்திற்கான சண்டை துவங்கும். 398 00:20:02,452 --> 00:20:06,373 இறக்காதவர்தான் வெற்றி பெற்றவர். 399 00:20:07,791 --> 00:20:09,293 ஒருவேளை நாம் அவனை வெற்றி பெறச் செய்ய வேண்டுமோ. 400 00:20:09,293 --> 00:20:11,545 அவன் வெற்றி பெறட்டுமே? இது இறுதிவரை போராட்டம்தான், முட்டாளே. 401 00:20:11,545 --> 00:20:15,591 - மூன்று, இரண்டு, ஒன்று. - இரண்டு, ஒன்று. 402 00:20:21,638 --> 00:20:22,764 ஓடு! 403 00:20:44,244 --> 00:20:46,705 ஓய்! மரணக்குழியில் சுடக்கூடாது. 404 00:20:51,835 --> 00:20:52,836 ஓ, ஆமாம். 405 00:20:56,173 --> 00:20:57,966 - நீ என்ன செய்கிறாய்? - என் நண்பனை இறக்க விட முடியாது. 406 00:20:57,966 --> 00:21:00,260 - நாம் நண்பர்கள் இல்லையே. - உன் காலம் முடிந்தது, சகோதரன் வைல்ட். 407 00:21:01,512 --> 00:21:02,804 அப்படியென்றால் நான் உன்னைக் கொல்லப் போகிறேன். 408 00:21:03,388 --> 00:21:04,765 எவ்வளவு முறை... ஆம், எனக்குத் தெரியும். 409 00:21:04,765 --> 00:21:07,351 - உன் இடத்தைப் பிடிக்கப் போகிறேன். - ஆம், இப்போதும் உன் திட்டம் புரிகிறது. 410 00:21:07,351 --> 00:21:08,268 ஷ்ஷ்ஷ். 411 00:21:10,938 --> 00:21:12,940 நீங்க எதற்காக காத்துட்டிருக்கீங்க, முட்டாள்களே? 412 00:21:12,940 --> 00:21:14,024 ஓடு! 413 00:21:14,024 --> 00:21:15,817 உன்னைப் பத்தி நல்ல அபிப்பிராயம் எனக்கு அப்போதே இருந்தது, டாரிஸ். 414 00:21:16,652 --> 00:21:17,945 தொடர்பில் இரு, சரியா? 415 00:21:18,862 --> 00:21:20,030 அவர்கள் உயிர் பிழைப்பார்கள். 416 00:21:22,741 --> 00:21:25,118 சட்ட விரோத குற்றவாளிகள் அனைவருமே அவர்களைத் துரத்துவதால், 417 00:21:25,118 --> 00:21:27,329 டிக்கைப் போல மாறு வேஷம் போடுவது அவ்வளவு நல்ல யோசனையாகத் தெரியவில்லை. 418 00:21:27,329 --> 00:21:30,123 நெல், அவனைப் போல சிந்திக்க அது எனக்கு உதவுகிறது. 419 00:21:31,291 --> 00:21:32,876 முயற்சி செய்! முயன்று பார், உனக்குத் தெரியும். 420 00:21:33,794 --> 00:21:34,795 நல்லது. 421 00:21:35,587 --> 00:21:37,631 - ஆம். - இதைச் செய்யறேன். 422 00:21:41,760 --> 00:21:43,262 - நான் டிக். - நான் டிக். ஆமாம். ஆமாம். 423 00:21:43,804 --> 00:21:45,764 - மடையனைப் போல் திரிகிறான். - கச்சிதம். 424 00:21:45,764 --> 00:21:47,266 மடத்தனமான பேச்சுக்கள் கூட இருக்கலாம். 425 00:21:47,266 --> 00:21:50,936 பின்னுவது, நட்பு, வீகனிஸம். 426 00:21:50,936 --> 00:21:52,479 மக்கள் என்னைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள் 427 00:21:52,479 --> 00:21:55,023 ஆனால் நான் ரொம்ப வேடிக்கையாக நடக்கிறேன் சற்று நின்று ஏதாவது சாப்பிடலாம், 428 00:21:55,023 --> 00:21:57,943 ஏனெனில் எதற்காக அவசரம், இல்ல எதற்காக ஒன்றை நன்றாகச் செய்ய வேண்டும்? 429 00:21:57,943 --> 00:21:59,778 - ஹே! - என்னால் இனிமையாகவும், அன்பாகவும் இருக்க முடியும் 430 00:21:59,778 --> 00:22:01,822 ஆனால் அதெல்லாம் பொருட்டல்ல. 431 00:22:03,991 --> 00:22:05,409 அடக் கடவுளே. பொறு. 432 00:22:06,326 --> 00:22:07,744 பாரு. தோட்டா மோதி ஏற்பட்ட ஒரு பள்ளம். 433 00:22:08,537 --> 00:22:09,538 பாரு! 434 00:22:11,206 --> 00:22:12,875 - இங்கே பார். - ஓ, கடவுளே. 435 00:22:12,875 --> 00:22:15,836 யாரோ இந்த ஆப்பிள் டாஃபியை கொன்னுட்டாங்க. அதற்கு என்ன பொருள்னு தெரியுமா? 436 00:22:16,879 --> 00:22:20,048 - இலையுதிர்கால இனிப்புகளை வெறுக்கிறார்களா? - நாம சரியான பாதையில் தான் இருக்கிறோம். 437 00:22:20,048 --> 00:22:21,466 - இல்ல அது, ஆம். - ஆம். 438 00:22:21,466 --> 00:22:23,468 சரி, நான் இதைச் சொல்கிறேன் என நம்ப முடியவில்லை, ஆனால்... 439 00:22:23,468 --> 00:22:24,845 தொடர்ந்து டிக்காக இருக்க வேண்டும். 440 00:22:24,845 --> 00:22:26,680 ஆம்! வா, வா. 441 00:22:32,186 --> 00:22:35,272 நல்ல வேளை, பக்கத்தில் தையல்காரன் இருந்தான். என் உடையைப் பார். 442 00:22:35,272 --> 00:22:36,523 ஓ, கிறிஸ்துவே. 443 00:22:36,523 --> 00:22:38,358 அதோடு, உன்னை தைக்க இதுவும் கிடைத்தது. 444 00:22:38,984 --> 00:22:41,195 நீ இதற்கு முன் ஆபரேஷன்களை செய்திருக்கிறாயா? 445 00:22:41,195 --> 00:22:42,988 இல்லை. ஆனால் அதை மாற்றி தைத்துள்ளேன். 446 00:22:43,488 --> 00:22:45,032 எல்லாம் ஒன்றுதான். 447 00:22:45,032 --> 00:22:47,117 நான் ஒரு பிளைண்ட் ஹெம் தையல் போடுகிறேன். 448 00:22:50,037 --> 00:22:51,997 ஆம், இது கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும். 449 00:22:51,997 --> 00:22:54,333 நீ ஏன் என்னிடம் அரட்டை அடிக்கக் கூடாது? உன் மனதைத் திசைத்திருப்பலாமே. 450 00:22:54,333 --> 00:22:55,709 நமக்கு இடையில் பொதுவாக பல விஷயம் உள்ளது. 451 00:22:55,709 --> 00:22:57,127 நமக்குள் பொதுவாக எதுவும் இல்லை. 452 00:22:57,127 --> 00:22:58,962 நிஜமாவா? உனக்கு பிடித்தமான உணவு எது? 453 00:22:58,962 --> 00:23:00,297 எனக்கு வறுத்த காலிஃபிளவர் பிடிக்கும். 454 00:23:00,297 --> 00:23:03,300 நான் ஒவ்வொரு உணவின்போதும் மாட்டிறைச்சி உண்பேன், நான் பல வெட்டும் இடங்களுக்குச் சொந்தக்காரன். 455 00:23:03,300 --> 00:23:05,385 சரி. உனக்குப் பிடித்த பானம் எது? 456 00:23:05,385 --> 00:23:07,471 எனக்கு ஒரு எல்டர்ஃபிளவர் கார்டியல் மிகவும் பிடிக்கும். 457 00:23:07,471 --> 00:23:10,140 நான் நீரும் ரம்மும் குடிப்பேன், இரண்டுமே மகிழ்ச்சியைத் தராது. 458 00:23:10,724 --> 00:23:13,143 - உனக்கு அழகான குட்டி முள்ளம்பன்றிகள் பிடிக்குமா? - அழகான குட்டி முள்ளம்பன்றிகளை நான் வெறுக்கிறேன். 459 00:23:13,143 --> 00:23:15,270 - நானும் தான். - நான் விளையாட்டிற்குச் சொன்னேன். 460 00:23:15,270 --> 00:23:17,147 நிஜமா எனக்கு அழகான குட்டி முள்ளம்பன்றிகளை பிடிக்கும். 461 00:23:17,147 --> 00:23:19,900 - அழகாக இருந்தால் இன்னும் பிடிக்கும். - எனக்கும்தான். அது இரட்டைப் பொய். 462 00:23:21,151 --> 00:23:22,236 நமக்குள்ள பொதுவா ஏதோ ஒண்ணு இருக்குன்னு தெரியும் 463 00:23:22,236 --> 00:23:24,404 அதுதான், அழகான குட்டி முள்ளம்பன்றிகள். 464 00:23:25,531 --> 00:23:26,907 வா, ஜானி. ஒத்துக்கொள். 465 00:23:26,907 --> 00:23:29,785 எங்கோ, உனக்குள், என்னைப் போலவே, ஒரு கனவுகாணும் குட்டி உருவம் உள்ளது. 466 00:23:31,245 --> 00:23:33,205 ஒரு காலத்தில் கனவுகாணும் குட்டி உருவம் இருந்திருக்கலாம், 467 00:23:33,705 --> 00:23:36,500 ஆனால் வாழ்க்கையில் அவை எல்லாம் அடிப்பட்டு சிதைந்து போய்விடும் 468 00:23:36,500 --> 00:23:42,339 இறுதியில் உயிர் பிழைக்க மனிதர்கள் செய்ய வேண்டிய தீயச் செயல்கள் மட்டுமே மஞ்சும். 469 00:23:42,339 --> 00:23:43,549 அது ரொம்ப சோகமா இருக்கே. 470 00:23:44,466 --> 00:23:45,884 சரி, நான் முடித்துவிட்டேன். எப்படி இருக்கு? 471 00:23:46,677 --> 00:23:47,761 எனக்குச் சொல்ல விருப்பமில்லை, 472 00:23:47,761 --> 00:23:50,264 ஆனால் உனக்கு நான் நன்றிக் கடன் பட்டிருப்பது போலத் தோன்றுகிறது. 473 00:23:50,973 --> 00:23:53,183 நீ எனக்கு நன்றி சொல்லத் தேவை இல்லை, ஜே-டாக். நாம ஒரே அணிதான். 474 00:23:55,018 --> 00:23:57,980 நாம் அந்த தங்கத்தை எடுத்துக்கொண்டு, என் கும்பலுடன் உன் மகனை கண்டுப்பிடிப்போம். 475 00:23:57,980 --> 00:23:59,481 கிறிஸ்டோஃபர், கண்டிப்பாக. 476 00:23:59,481 --> 00:24:02,526 அவனைப் போல இளம் குழந்தைக்கு லண்டன் உகந்த இடமில்லை. 477 00:24:02,526 --> 00:24:05,821 அவனுடைய தந்தை பக்கத்தில் இல்லாமல் அவன் பயத்தில் தவித்துப் போவான். 478 00:24:09,199 --> 00:24:10,450 இது ரொம்ப சந்தோஷமா இருக்கு. 479 00:24:10,450 --> 00:24:12,536 நான் வளர்ந்து ஆளாகும்போது, உன்னைப் போலவே இருக்க விரும்புறேன், மூஸ். 480 00:24:12,536 --> 00:24:17,082 நீ ரொம்ப மோசமாக பள்ளியில் படி, அப்போது உனக்கு என்ன ஆகும் என்பதே தெரியாது. 481 00:24:27,342 --> 00:24:29,052 சரி, ரத்தக் கசிவு இங்கே நிற்கிறது, ஆனால் சடலம் எதையும் காணவில்லை. 482 00:24:29,052 --> 00:24:30,679 எனவே, யாரும் அவனைக் கொல்லவில்லை. 483 00:24:31,388 --> 00:24:32,389 - ஆமாம். - அதோ பாரு. 484 00:24:33,640 --> 00:24:35,100 - ஊசியும் நூலுமா? - ஆம், அது ஒரு தடயம். 485 00:24:35,100 --> 00:24:36,351 கண்டிப்பாக, ஆம். 486 00:24:37,936 --> 00:24:39,605 - மன்னிக்கணும், ஏன்? - ஒரு ஊசி. 487 00:24:40,314 --> 00:24:41,690 ஒரு தேவை. 488 00:24:42,316 --> 00:24:44,401 எனக்குத் தேவை. டிக்குக்கு என்ன வேணடும்? நூல் தேவை. 489 00:24:44,401 --> 00:24:46,195 - சரி. - அது மஞ்சள் நிறம். 490 00:24:46,195 --> 00:24:47,988 - மஞ்சள் என்பது தங்க நிறத்திற்கு நெருங்கியது. - ஆம். 491 00:24:47,988 --> 00:24:49,323 அவன் தங்கத்திற்கு பக்கத்தில் இருக்கிறான். 492 00:24:49,323 --> 00:24:51,909 அவன் தங்கத்தைத் தேடி போயிருக்கிறான். ஆமாம். 493 00:24:52,576 --> 00:24:54,578 பொறுங்க, தங்கம் வைத்திருப்பவர் யாரையாவது நமக்குத் தெரியுமா? 494 00:24:54,578 --> 00:24:57,331 - நாமதானே தங்கத்தை வச்சிருக்கோம். - ஆம்! ஆமாம், ஆமாம், நெல்! 495 00:24:57,331 --> 00:24:59,374 - நெல், நீ ஒரு அறிவாளி. - நீ ஒரு அறிவாளி. 496 00:24:59,374 --> 00:25:01,001 - அப்படியா? - உண்மையில், நீ இல்லை. 497 00:25:01,001 --> 00:25:03,420 எனக்கு நீ என்னன்னு தெரியாது, ஆனால்... வா போகலாம். 498 00:25:03,420 --> 00:25:06,048 - ஆம், நான்... நாம் எங்கே போறோம்? - அந்த போஸ்ட் ஆஃபீஸ்! 499 00:25:08,634 --> 00:25:09,635 இதோ இங்கே இருக்கு. 500 00:25:11,803 --> 00:25:14,014 கண்ணாற பார்த்துக்கொள். 501 00:25:15,307 --> 00:25:16,808 மன்னிக்கவும், தப்பான பெட்டி. 502 00:25:17,726 --> 00:25:19,770 இதைப் பார்த்து இன்புறு. 503 00:25:23,357 --> 00:25:24,399 அது ஒரு ஷுஹார்னா? 504 00:25:24,399 --> 00:25:26,860 இதைப் பார்த்து சந்தோஷப்படு. 505 00:25:26,860 --> 00:25:28,070 எவ்வளவு பளப்பளக்குது. 506 00:25:28,070 --> 00:25:29,154 ஹைய்யா, அன்பே. 507 00:25:30,489 --> 00:25:31,823 மீண்டும் நான். 508 00:25:31,823 --> 00:25:34,201 இப்போ, நீங்க இப்போதுதான் சந்தோஷமா இருக்கீங்கன்னு தெரியும், 509 00:25:34,201 --> 00:25:36,453 ஆனால், நான் உங்களை சீக்கிரமா கொலை செய்யணும். 510 00:25:36,453 --> 00:25:38,163 ஒரு வினாடிதான். சரியா? 511 00:25:38,163 --> 00:25:39,831 ஓ, அப்படியா? எங்கே பார்க்கலாம். 512 00:25:43,836 --> 00:25:45,170 அது ரொம்ப சங்கடமா இருந்தது, இல்லையா? 513 00:25:45,170 --> 00:25:47,089 ஆம், பாவம். அதுல நான் மிக மோசம் என மறந்துட்டேன். 514 00:25:51,635 --> 00:25:52,553 ஓ, ச்சே! 515 00:25:55,722 --> 00:25:56,807 இல்ல நானா? 516 00:25:57,391 --> 00:25:59,059 உண்மையில் மோசம்தான். அது ஏதோ தற்செயலா நடந்தது. 517 00:26:00,435 --> 00:26:01,728 கவனம். 518 00:26:01,728 --> 00:26:04,940 உனக்குத் தெரியுமான்னு தெரியலை, ஆனால் நீ அதை நேர என்னை பார்த்து வச்சிருக்க. 519 00:26:05,941 --> 00:26:07,109 நீ எனக்குத் துரோகம் செய்யறயா. 520 00:26:07,109 --> 00:26:08,652 உன்னை கொன்றுவிட்டு, தங்கம் கிடைக்கவில்லை 521 00:26:08,652 --> 00:26:11,697 என்று சொல்வதற்கு வாய்ப்பு உள்ளபோது, நான் ஏன் தங்கத்தைத் தர வேண்டும்? 522 00:26:11,697 --> 00:26:14,032 அதற்காகத்தான் நான் இந்த நாடகம் முழுவதையும் நடத்தினேன். 523 00:26:14,032 --> 00:26:16,910 நாடகம் முழுவதையுமா? என்ன, கௌவும், சான்ட்ராவும் நம்மை கொல்லப் பார்த்தார்களா? 524 00:26:16,910 --> 00:26:18,245 சரி, அந்த பாகம் எல்லாம் இல்லை, ஆனால்... 525 00:26:18,245 --> 00:26:19,580 நாம நதியில குதித்தப் பகுதியையா? 526 00:26:19,580 --> 00:26:20,956 இல்லை, அதுவும் இல்லை. 527 00:26:20,956 --> 00:26:23,208 நிச்சயமா ஃபைட் கிளப்பில்லையே? அதுக்கு நிறைய பணம் செலவாகியிருக்கும். 528 00:26:23,208 --> 00:26:24,668 நான் பொதுவான திட்டத்தை திட்டமிட்டேன். 529 00:26:24,668 --> 00:26:26,461 உன்னைக் கொன்று விட்டு, தங்கத்தைத் திருடுவது என்பது, சரியா? 530 00:26:27,045 --> 00:26:28,130 நமக்குள்ள இருந்த சிறந்த புரிதல் என்ன ஆனது? 531 00:26:28,130 --> 00:26:30,549 - நமக்குள் இருந்தது மோசமான புரிதல். - மோசமான புரிதல் இருந்ததுன்னு நினைக்கிறாயா? 532 00:26:30,549 --> 00:26:34,136 ஆம், அது மோசமான புரிதல், மேலும் நான் மோசமான புரிதலை வெறுக்கிறேன். 533 00:26:34,136 --> 00:26:36,763 நிரந்தரமாக, குட்பை, டிக் டர்பின். 534 00:26:38,307 --> 00:26:40,350 ஓய்! திருடனைப் பிடிப்பவனே! 535 00:26:40,350 --> 00:26:43,520 நீ ஏன் அவன் மீதிலிருந்து திருட்டுக் கையை எடுக்க மாட்டேன் என்கிறாய்? 536 00:26:44,521 --> 00:26:46,190 - என்னது? - சரி, பரவாயில்லை, எனக்கு அறிவு இல்லை. 537 00:26:46,190 --> 00:26:49,193 பின்னாடி போ, இல்லையேல், அவன் மடத்தலையை சுட்டு விடுவேன். 538 00:26:51,778 --> 00:26:54,573 சிறப்பான நாளாக இருந்தது. நான் பார்த்ததிலேயே அந்த தொப்பிகள்தான் மிக வேடிக்கையானவை. 539 00:26:54,573 --> 00:26:56,450 - அவங்க பைத்தியக்காரங்களா இருந்தாங்க. - என்ன நடக்குது? 540 00:26:56,450 --> 00:26:58,744 வைல்ட், டிக்கின் மடத்தலையைச் சுடப் போகிறானாம். 541 00:26:58,744 --> 00:27:00,245 இல்லை, எனக்கு உன் மடத்தலையைப் பிடிக்கும். 542 00:27:00,245 --> 00:27:01,955 அனைவரும் என் மடத்தலையைப் பற்றிப் பேசுவதை நிறுத்துகிறீர்களா? 543 00:27:01,955 --> 00:27:04,374 - கிறிஸ்டோஃபர், நீ என்ன செய்கிறாய்? - அவன் லண்டனில் தொலைந்துவிட்டான் 544 00:27:04,374 --> 00:27:06,418 அவனைப் பார்த்துக்கொள்ள ஒருவர் தேவையாக இருந்தது. 545 00:27:06,418 --> 00:27:07,628 அதாவது என்னை பிணைக்கைதியாக வைத்துக்கொள்வதற்கா? 546 00:27:07,628 --> 00:27:09,546 அதாவது அவனை பிணைக்கைதியாக வைத்துக்கொள்வதற்கா? 547 00:27:09,546 --> 00:27:10,964 அவன் மேல் ஒரு விரலை வைத்துப் பார், 548 00:27:10,964 --> 00:27:14,134 அதன்பின் டிக்கிற்கு உள்ள கொஞ்சம் மூளையும் சுவரில் தெறித்து விடும். 549 00:27:14,134 --> 00:27:17,846 என்ன? அப்புறம் நான் தலைவன் ஆகிடுவேனா? ரொம்ப மோசமா இருக்கே. 550 00:27:18,555 --> 00:27:19,723 இல்லை! 551 00:27:19,723 --> 00:27:21,725 அதற்கு பதிலாக ஜெனிஃபர் எப்படி? 552 00:27:22,309 --> 00:27:23,769 அவன்தானே உன் ஒரே மகன். 553 00:27:25,479 --> 00:27:28,607 நூறு தங்கக்கட்டிகளைவிட நான் ஒரு குழந்தையைப் பத்தி அக்கறைகொள்வேன்னு நினைக்கிறயா? 554 00:27:29,274 --> 00:27:30,359 நான் இன்னொரு மகனை பெற்றுக்கொள்வேன். 555 00:27:30,359 --> 00:27:33,362 வியாழக்கிழமைகளில் ஒழுங்காக தன் வீட்டுப் பாடத்தைச் செய்யும் மகனாக. 556 00:27:33,362 --> 00:27:36,156 நீச்சல் பயிற்சியில் தன் கண்ணாடிகளை மறந்துவிடாத ஒரு மகனை. 557 00:27:36,156 --> 00:27:40,118 அதோடு பிணைக்கைதியாகும்போது என்ன செய்ய வேண்டும் என நான் கற்பித்ததை மறக்காமல் இருப்பவனை. 558 00:27:40,118 --> 00:27:41,662 கிறிஸ்டோஃபர், கோட் சிகப்பு! 559 00:27:58,804 --> 00:28:00,806 ரொம்ப சங்கடமா இருக்கு. 560 00:28:06,645 --> 00:28:07,813 என்னை விடு. 561 00:28:08,981 --> 00:28:10,482 நானும் உன்னை மிஸ் பண்ணுவேன், கனவுகாணும் குட்டி உருவமே. 562 00:28:10,482 --> 00:28:12,442 உன் மகனுடன் இன்னும் அதிக நேரம் கழிக்கலாம், இல்லையா? 563 00:28:14,111 --> 00:28:16,822 உன் தந்தையை சங்கிலியால் கட்டிப் போட்டு, உன்னை கொலை செய்வதாக மிரட்டியதற்கு மன்னிக்கவும். 564 00:28:16,822 --> 00:28:17,865 பரவாயில்லை. 565 00:28:17,865 --> 00:28:20,367 ஒரு ஹைவேமேன் தன் ஹைவேமேன் வேலைகளைச் செய்யதானே வேண்டும். 566 00:28:20,993 --> 00:28:21,994 இதோ. 567 00:28:24,413 --> 00:28:26,164 {\an8}உற்சாகத்துக்கு பத்து. 568 00:28:27,833 --> 00:28:28,834 உள்ளே வருகிறது. 569 00:28:33,213 --> 00:28:36,758 கேள், மனிதர்கள் இறந்தால்தான் நான் அவர்களைப் புகழ முயற்சிப்பேன், 570 00:28:36,758 --> 00:28:40,596 ஆனால், இன்று நீ வேண்டிய அளவு செய்ததாக நான் நினைக்கிறேன். 571 00:28:40,596 --> 00:28:42,848 நன்றி. நீ என்னிடம் சொன்வற்றில் இதுவே இனிமையானது. 572 00:28:42,848 --> 00:28:44,850 - மறுபடி அப்படிச் செய்யாதே. - சரி. 573 00:28:47,102 --> 00:28:49,605 ஏன் முகத்தைத் தூக்குற, மூஸ்? உனக்கு இன்று நல்லநாளாகத்தானே இருந்தது. 574 00:28:49,605 --> 00:28:51,231 நாம் இன்னும் அடிக்கடி லண்டன் வர வேண்டும். 575 00:28:51,231 --> 00:28:52,774 ஆம், நானும் நன்றாகவே நேரத்தை கழித்தேன். 576 00:28:53,358 --> 00:28:55,694 ஒரு குட்டி நண்பனைத் தொலைத்ததுபோல தோன்றியது. 577 00:28:56,361 --> 00:28:57,362 எனக்கும்தான், நண்பா. 578 00:28:57,362 --> 00:29:00,741 இருந்தாலும், நம்மிடம் தங்கம் உள்ளதே, அதை வைத்து என்ன செய்ய வேண்டும் எனத் தெரியும். 579 00:29:00,741 --> 00:29:02,034 அப்படியா! 580 00:29:02,034 --> 00:29:05,412 ராட்கிளிஃப், டாரிஸ் மேல் நூறு தங்கக் கட்டிகள். 581 00:29:05,412 --> 00:29:08,248 அவள் சரியான வைல்ட்காட், என்னை நம்பு. 582 00:29:10,125 --> 00:29:11,126 வெற்றி கிடைக்கட்டும், டாரிஸ். 583 00:29:13,754 --> 00:29:16,215 ஜோனத்தன் வைல்ட், அன்பே. 584 00:29:16,215 --> 00:29:18,175 என் தங்கத்தை நீ கண்டுப்பிடிக்கத் தவறிவிட்டாய், 585 00:29:18,175 --> 00:29:22,846 மேலும், அந்த துண்டுச்சீட்டின்படி, நீ சின்டிகேட்டுக்கு துரோகம் செய்ய திட்டமிட்டாய். 586 00:29:22,846 --> 00:29:24,598 என் சொற்களைத் தவறாகக் கூறியுள்ளார்கள். 587 00:29:24,598 --> 00:29:27,392 பத்திரிகையாளர்கள், அவர்கள்தான் உண்மையில் குற்றவாளிகள். 588 00:29:30,354 --> 00:29:33,690 இனிமேல், உனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது 589 00:29:33,690 --> 00:29:36,485 இந்த நாட்டில் நடக்கும் எந்தக் குற்றச் செயல்களிலும் நீ பங்குபெற முடியாது. 590 00:29:36,485 --> 00:29:37,945 சிறிய சிறிய ஏமாற்று வேலைகளையும் செய்யக் கூடாதா? 591 00:29:37,945 --> 00:29:39,738 ஒரு அடிதடிகூட செய்ய அனுமதியில்லை. 592 00:29:40,697 --> 00:29:42,115 ரொம்ப வருத்தமாக உள்ளது. 593 00:29:42,658 --> 00:29:43,825 இப்போது பை-பை. 594 00:29:45,661 --> 00:29:46,995 என் கையை விடு, முடனே. 595 00:29:48,080 --> 00:29:49,581 திரும்பி வர வேண்டாம், வைல்ட். 596 00:29:51,792 --> 00:29:52,709 அப்பா? 597 00:29:54,044 --> 00:29:56,630 சரி, நான் இப்போது என் வேலையை விட்டு 598 00:29:56,630 --> 00:29:59,383 ஒரு தந்தையாக இருக்க நேரம் ஒதுக்கலாம். 599 00:30:00,509 --> 00:30:02,970 நான் உனக்காக இதைக் கொண்டு வந்தேன். 600 00:30:05,597 --> 00:30:06,807 வா, வீட்டுக்குப் போகலாம், கிறிஸ்டோஃபர். 601 00:30:07,808 --> 00:30:10,394 போய், டிக் டர்பினின் மரணத்தைத் திட்டமிடுவோம். 602 00:30:11,478 --> 00:30:13,522 அது ஜோக்தான். நாம் ஐஸ் கிரீம் சாப்பிடலாம். 603 00:30:15,023 --> 00:30:16,900 லண்டனில் வைல்டை டிக் ஓடுக்கிவிட்டார் எழுதியது எலிசா பீன் 604 00:30:16,900 --> 00:30:21,321 இந்த டர்பினைப் பொறுத்தவரை, அவனுக்கு ஒரு சிறிய தகவலை அனுப்பலாம், சரியா? 605 00:30:22,823 --> 00:30:23,824 கிராஸ்வொர்டு! 606 00:31:04,781 --> 00:31:06,783 தமிழாக்கம் அகிலா குமார்