1 00:00:14,600 --> 00:00:20,040 அமேசான் மழைக்காடுகள் பிரேசில் 2 00:00:21,760 --> 00:00:25,520 ஆக்ஸல் ரோஸ் வார்த்தைகளில், "காட்டுக்கு நல்வரவு." 3 00:00:26,920 --> 00:00:29,200 இப்போதான் ஆரம்பிக்குது, இல்ல? நல்ல அனுபவம். 4 00:00:32,960 --> 00:00:35,720 அதை சாதனையாக்க முயற்சி செய்றாரா? அந்த குரல்காரர். 5 00:00:35,760 --> 00:00:37,360 அவரோட பேச ஆர்வமா இருக்கு. 6 00:00:40,080 --> 00:00:41,120 இப்ப அது தொடங்குது. 7 00:00:41,520 --> 00:00:44,240 திரும்ப அதேபோல நடக்கும், சகோதரா. நடக்கும். 8 00:00:52,600 --> 00:00:55,200 போன் சகோதரர்கள் நிலை 3 க்கு வந்துள்ளனர். 9 00:00:56,520 --> 00:00:58,880 -சரி. தொடங்குவோம். -சரி. 10 00:00:58,960 --> 00:01:00,680 அவர்களுக்கு 50 ஆயிரம் தரவேண்டும். 11 00:01:00,760 --> 00:01:02,080 வெளியே இறங்கலாம்பா. 12 00:01:02,160 --> 00:01:05,120 -அடுத்த கேள்வி அதை இரட்டிப்பாக்க கூடும். -குட்பை. 13 00:01:07,960 --> 00:01:09,360 ஆகட்டும். 14 00:01:09,440 --> 00:01:13,000 பொறு, மெதுவா! சுழல்விசிறியை கவனி. 15 00:01:14,560 --> 00:01:17,400 -சரி. -நாம எதுக்காக இதையெல்லாம் செய்யணும்? 16 00:01:17,480 --> 00:01:18,640 நண்பா. 17 00:01:21,280 --> 00:01:24,320 -அங்கே பார் படகு, இங்கே சிக்குது. -ஆமா. களிமண், கவனி. 18 00:01:29,960 --> 00:01:31,920 -இதில் என்ன இருக்கு? -இங்கே பார். 19 00:01:32,000 --> 00:01:34,280 மோட்டார் வேலை செய்யும். துடுப்பு வேணாம்... 20 00:01:34,360 --> 00:01:35,720 -இங்கே பார். -ஓ, ஆமா. 21 00:01:35,800 --> 00:01:37,360 நமக்கு ஒரு பெரிய பொதி... 22 00:01:37,440 --> 00:01:38,720 தூக்கு. அதை வெளியே இழு. 23 00:01:38,800 --> 00:01:40,880 கரைக்கு போயிடலாம். பொருட்களை எடு. 24 00:01:45,240 --> 00:01:46,360 அதில் என்ன இருக்கு? 25 00:01:47,320 --> 00:01:50,560 -ஓ, சே. -இது ஒரு வகை டிரான்ஸ்மிட்டர் போல தோணுது. 26 00:01:51,000 --> 00:01:53,280 ஹலோ. நமக்கு தொலைபேசி இருக்கு. 27 00:01:55,479 --> 00:01:56,920 ஒரு நிமிடம் இரு. 28 00:01:57,039 --> 00:01:58,200 நம்ம உயிர்காப்பு பொதி. 29 00:01:58,280 --> 00:02:01,080 -அது பட்டா கத்தி போல தோணுது. -ஆமா, அதை கையில் வை. 30 00:02:01,160 --> 00:02:02,360 இரு கயிறு தொட்டில்கள். 31 00:02:04,000 --> 00:02:05,360 -லாந்தர். -லாந்தர். 32 00:02:05,440 --> 00:02:06,440 சில லாந்தர்கள். 33 00:02:08,320 --> 00:02:09,880 -இரு. இரு. -என்ன... 34 00:02:13,160 --> 00:02:15,680 உங்கள் கேள்வியை கண்டுபிடிப்பது எளிதல்ல. 35 00:02:15,760 --> 00:02:16,600 அடச்சே. 36 00:02:16,720 --> 00:02:19,240 -இரண்டு நாள் காட்டில் பயணம்... -இரண்டு நாள். 37 00:02:19,320 --> 00:02:21,120 ...அடர்ந்த பகுதிக்குள். 38 00:02:23,400 --> 00:02:26,440 வழி காணும் சாதனத்தில் உள்ள சமிக்ஞையை தொடருங்கள். 39 00:02:27,240 --> 00:02:32,040 உங்கள் கேள்வி £100,000 க்கானது. 40 00:02:35,560 --> 00:02:37,000 இரண்டு நாள் பயணம். 41 00:02:38,600 --> 00:02:39,760 இதை நம்பமுடியல. 42 00:02:40,360 --> 00:02:42,680 -காட்டில் இரண்டு நாட்களா? -நீ என்ன சொல்றே? 43 00:02:45,120 --> 00:02:46,640 -ஆபத்தை கவனி நண்பா. -சரி. 44 00:02:46,720 --> 00:02:49,320 -ஆமா, அது தேவைப்படும். -தொலைபேசி அழைப்பு வரும். 45 00:02:49,400 --> 00:02:52,480 இத பார்க்கலாம். கூலிங் கிளாஸை கழட்டு, கண்ணாடியை மாட்டு. 46 00:02:52,560 --> 00:02:53,920 எதுவும் இருக்கா? இல்லையா? 47 00:02:54,000 --> 00:02:56,079 பார்க்கலாம். நீ இதுபோல பயன்படுத்தினியா? 48 00:02:56,160 --> 00:02:58,040 -இது எதுக்கு? பார். -வெளியே இழு. 49 00:02:58,120 --> 00:03:01,480 வெளியே இழுத்தா விரியுது, அவ்வளவுதான்னு நினைக்கிறேன். 50 00:03:01,960 --> 00:03:04,600 பிறகு மூடிக்குது. அதை ஆன் செய்யணும். இப்ப ஆன். 51 00:03:04,680 --> 00:03:07,360 -சத்தத்தை கூட்டணும். -ஆமா, முழுசா கூட்டு. 52 00:03:07,440 --> 00:03:08,440 -அதிகபட்சம். -சரி. 53 00:03:08,520 --> 00:03:09,800 அனேகமா, 54 00:03:11,120 --> 00:03:12,680 நாம் ஒரு சமிக்ஞையை கேட்போம். 55 00:03:12,760 --> 00:03:15,360 ஒருவித குறி இருக்கும், நாம அதை கண்டுபிடிக்கணும். 56 00:03:15,440 --> 00:03:18,000 தூக்கி பிடி. தூக்கி பிடி. இருக்கா பாரு... 57 00:03:18,079 --> 00:03:20,720 -நீ அதை சீரமைக்கணும். பார். -அப்படியே பிடி. 58 00:03:21,360 --> 00:03:23,640 -இதோ பார், பார். ஆமா. -அது கேட்குதா? 59 00:03:25,680 --> 00:03:29,480 நாம படகில் ஏறி கொஞ்சம் நகர்ந்து, எதுவும் கிடைக்குதா பார்க்கலாம்... 60 00:03:29,560 --> 00:03:32,640 இடப்பக்கம் கொண்டு போனா சத்தம் கூடுது, ஏதோ ஒண்ணுக்கு 61 00:03:33,120 --> 00:03:35,240 அருகில் கொண்டு போகுது. 62 00:03:38,920 --> 00:03:40,560 நாம காட்டுக்குள்ள போறோம். 63 00:03:47,400 --> 00:03:49,280 நில்லு. ஒரு நிமிடம் நில்லு. 64 00:03:53,040 --> 00:03:54,800 ஐயோ. நீரில் விழ பார்த்தது. 65 00:03:54,880 --> 00:03:56,720 ஒரு நிமிடம் இரு. இதை எடுக்கிறேன். 66 00:03:56,800 --> 00:03:58,560 -என்ன, செய்தியா? -ஆமா, ஆமா. 67 00:03:59,960 --> 00:04:01,400 அது சொல்லுது... 68 00:04:02,160 --> 00:04:03,080 செய்தி: டி-ஆர்-ஏ-எக்ஸ் 69 00:04:03,160 --> 00:04:06,000 டி-ஆர்-ஏ-எக்ஸ். டிராக்ஸ். 70 00:04:06,120 --> 00:04:09,000 -டிராக்ஸா? -அவ்வளவுதான். அவ்வளவுதான் சொல்லுது. 71 00:04:09,080 --> 00:04:11,760 -அது என்ன? ஆயங்களா? -தெரியாது. 72 00:04:11,840 --> 00:04:13,960 -எனக்கு துப்பு கிடைக்கல, உனக்கு? -இல்ல. 73 00:05:00,480 --> 00:05:03,480 007: ரோட் டு எ மில்லியன் 74 00:05:15,160 --> 00:05:16,920 டிரான்ஸ்மிட்டர் என்ன சொல்லுது? 75 00:05:17,000 --> 00:05:19,360 -வலது பக்கமா போ, ஜேம்ஸ். -அப்படியா? சரி. 76 00:05:19,440 --> 00:05:21,200 ஆமா. அங்கே நேரா, ஜிம்மி பையா. 77 00:05:21,600 --> 00:05:24,480 போன் சகோதரர்கள் காட்டில் பீப் ஒலியை தொடரும்போது, 78 00:05:27,040 --> 00:05:29,600 இதில் இன்னும் ஏழு ஜோடிகள் உள்ளனர். 79 00:05:32,480 --> 00:05:36,320 அதில் அவசர சேவை செவிலியர் பெத் மற்றும் ஜென், இவர்களும் அடங்குவர். 80 00:05:36,400 --> 00:05:37,600 பெயர்: பெத் & ஜென் 81 00:05:38,000 --> 00:05:40,480 நிலை 1 82 00:05:40,640 --> 00:05:43,520 அவர்களுக்கான முதல் கேள்வி பின்னோக்கிய காலத்தையது. 83 00:05:43,600 --> 00:05:45,560 ஆப்பிள்கிராஸ் தீபகற்பம் ஸ்காட்லாந்து 84 00:05:47,960 --> 00:05:53,560 நார்த்வெஸ்ட் ஹைலேண்ட்ஸில் உள்ளீர்கள், உங்கள் கீழே உள்ள பாறை சிறப்பானது. 85 00:05:55,120 --> 00:05:57,520 இவை பூமியின் பழமையானவற்றில் சில. 86 00:05:58,680 --> 00:06:00,760 £5,000 க்கு, 87 00:06:00,840 --> 00:06:05,880 தோராயமாக எவ்வளவு காலம் முன்பு இந்த மலைகள் முதலில் உருவாயின? 88 00:06:13,600 --> 00:06:16,120 ஏ 25,000 ஆண்டுகள் முன் -பி 250,000 ஆண்டுகள் முன் சி 2.5 பில்லியன் ஆண்டு முன் 89 00:06:17,640 --> 00:06:22,160 2.5 பில்லியன் ஆண்டுகள் அதிகமாக தோணுது. 90 00:06:22,240 --> 00:06:25,120 இல்ல, அது இரண்டு... இது மிக பழையதுன்னு நினைக்கிறேன். 91 00:06:25,680 --> 00:06:27,320 -நீ எதுன்னு நினைக்கிறே? -சி. 92 00:06:27,400 --> 00:06:28,680 சி ன்னு நினைக்கிறியா? 93 00:06:31,120 --> 00:06:33,520 இது தப்பானா, என்கிட்ட கோவிச்சுப்பியா? 94 00:06:33,640 --> 00:06:35,159 -இல்ல. -உறுதியாவா? 95 00:06:35,240 --> 00:06:37,680 ஆமா. உண்மையா எனக்கு எந்த யோசனையும் இல்ல. 96 00:06:37,760 --> 00:06:41,200 அதனால, நான் கொஞ்சமும் உதவாத மாதிரி தோணுது. 97 00:06:41,280 --> 00:06:42,640 -சி யா? -ஆமா. 98 00:06:42,720 --> 00:06:43,640 சரி, சம்மதமா? 99 00:06:44,480 --> 00:06:46,080 -குட் லக். -இழக்க என்ன இருக்கு? 100 00:06:46,159 --> 00:06:48,560 சரி. நான் அதை எடுக்க போறேன். 101 00:06:48,640 --> 00:06:50,520 -நீ தயாரா? -சரி. சரி. 102 00:06:50,600 --> 00:06:51,560 ஜென். 103 00:06:55,600 --> 00:06:56,640 -சரி. -சரியா? 104 00:06:56,720 --> 00:06:57,800 -ஆமா. -அதை செய்வோம். 105 00:06:58,880 --> 00:07:00,000 சரி... 106 00:07:03,320 --> 00:07:04,240 என்ன நிறம்? 107 00:07:07,520 --> 00:07:08,440 ஓ, தோழி. 108 00:07:10,960 --> 00:07:11,840 வங்கியில் செலுத்தப்பட்டது: £5,000 109 00:07:11,960 --> 00:07:12,800 அற்புதம். 110 00:07:13,760 --> 00:07:14,760 அதை நேசிக்கிறேன். 111 00:07:14,840 --> 00:07:16,360 கடவுளுக்கு நன்றி. 112 00:07:25,960 --> 00:07:29,960 உங்கள் இரண்டாவது கேள்வி £10,000 க்கானது. 113 00:07:30,480 --> 00:07:34,800 இந்த மலைகளை கடந்து எட்டு மைல் தூரத்தில் அது உள்ளது. 114 00:07:34,880 --> 00:07:37,640 லாக்கேரன் கேரஜில். 115 00:07:40,040 --> 00:07:43,640 தெரியுமா? அந்த நிகழ்வு முழுவதிலும், நாம எவரும் பதட்டம் அடையல. 116 00:07:44,320 --> 00:07:45,920 முழு நேரமும் அமைதியா இருந்தோம். 117 00:07:46,040 --> 00:07:47,320 ஆம். அது ரொம்ப உண்மை. 118 00:07:47,400 --> 00:07:50,680 நம்மைப் பற்றி தெரியும். பதட்டத்திலும் அமைதி. எனவே... 119 00:07:50,760 --> 00:07:52,360 ஆமா. அப்படியே செய்வோம். 120 00:07:55,040 --> 00:07:57,040 நீ ஒரு அவசர சூழலில் வேலை செய்றப்ப, 121 00:07:57,120 --> 00:08:00,160 சகாக்களை நம்பவும் ஒருவரை ஒருவர் நம்பவும் கற்கிறோம். 122 00:08:00,240 --> 00:08:03,200 விஷயங்கள் கவலை அளித்தாலும் அட்ரினல் உடலில் பாய்ந்து 123 00:08:03,280 --> 00:08:05,760 பரபரப்பூட்டி நம்மை பயமுறுத்தினாலும் கூட. 124 00:08:05,840 --> 00:08:10,120 நான் வெளியில் ஒரு நிதானமான உணர்வை கொடுப்பதில் மிகவும் திறமையானவள். 125 00:08:11,360 --> 00:08:13,720 25 ஆண்டுகள் அப்படி இருந்து அது பழகி போச்சு. 126 00:08:13,800 --> 00:08:14,920 பெத் 127 00:08:15,000 --> 00:08:17,040 நான் அதை அழுத்தமா நினைக்கல, ஏன்னா 128 00:08:17,120 --> 00:08:20,200 அழுத்தமா நினைச்சா, நாம நிதானத்தை இழக்க தொடங்குவோம். 129 00:08:22,600 --> 00:08:24,160 மான்செஸ்டர் குண்டுவீச்சில் 130 00:08:24,240 --> 00:08:27,160 பாதிக்கப்பட்டவர்களை எடுத்த 2ஆம் மருத்துவமனை எங்களுது. 131 00:08:27,760 --> 00:08:30,400 அப்போ, ஏகப்பட்ட குழந்தைகள் எங்ககிட்ட வந்தாங்க. 132 00:08:32,039 --> 00:08:33,720 நாங்க நிதானமா இல்லன்னா, எங்களை 133 00:08:33,760 --> 00:08:36,200 சுற்றியுள்ள அனைவரையும் அது பாதிக்கும். 134 00:08:37,280 --> 00:08:39,760 ஒருவர் வாழ்வை காப்பாற்றுவது பெரிய விஷயம். 135 00:08:41,960 --> 00:08:44,760 லாக்கேரன் ஸ்காட்லாந்து 136 00:08:45,880 --> 00:08:50,040 அது ஒரு எரிபொருள் அடையாளம். அதுவாக இருக்கலாமா? 137 00:08:50,120 --> 00:08:51,640 ஆமா, பார். லாக்கேரன் கேரஜ். 138 00:08:52,240 --> 00:08:54,000 மற்றும் கடை. சரி. 139 00:08:54,080 --> 00:08:55,200 இறங்கலாம். 140 00:08:56,640 --> 00:08:59,640 லாக்கேரன் கேரஜ் 141 00:09:09,080 --> 00:09:11,040 அங்கே இருக்கை மேல ஒரு பெட்டி இருக்கு. 142 00:09:16,640 --> 00:09:17,600 ஏதாவது? 143 00:09:18,760 --> 00:09:20,720 இல்ல, இவை எல்லாம் கருவிகள்தான். 144 00:09:24,440 --> 00:09:26,320 -பின்னால ஒரு நல்ல கார். -ஆமா. 145 00:09:26,640 --> 00:09:29,280 சரி. எப்படி கீழ இறக்கலாம்னு கண்டுபிடிப்போம். 146 00:09:30,040 --> 00:09:32,200 அது ஹைட்ராலிக். நாம நெம்புகோல் தேடணும். 147 00:09:34,480 --> 00:09:35,400 கீழே. 148 00:09:38,160 --> 00:09:39,400 அதில் "என்னை இயக்கு." 149 00:09:41,360 --> 00:09:43,600 இது டெய்ம்லர் சாவரின் 4.2. 150 00:09:47,520 --> 00:09:52,600 ஒரு பயங்கரவாத குண்டு தாக்குதலை தொடர்ந்து இதனை ஒரு பிரதம மந்திரி பயன்படுத்தினார். 151 00:09:53,640 --> 00:09:55,520 அவரது கார் கவச தகடு கொண்டது. 152 00:09:57,760 --> 00:10:01,520 குட்டி தூக்கத்திற்காக பிரத்யேக தலை தாங்கியையும் பொருத்தினார். 153 00:10:05,120 --> 00:10:06,840 £10,000 க்கு, 154 00:10:08,720 --> 00:10:11,320 இது எந்த பிரதமரின் கார்? 155 00:10:13,520 --> 00:10:16,160 ஏ, டோனி பிளேர். 156 00:10:17,520 --> 00:10:19,960 பி, வின்ஸ்டன் சர்ச்சில். 157 00:10:21,720 --> 00:10:24,160 சி, மார்கரெட் தாட்சர். 158 00:10:29,160 --> 00:10:32,640 சர்ச்சில் காலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்ததா நினைவில்லை. 159 00:10:32,720 --> 00:10:34,640 வின்ஸ்டன் சர்ச்சில் கிடையாது. 160 00:10:34,720 --> 00:10:38,080 இது சர்ச்சிலுக்கு பொருத்தமா தெரிந்தாலும், அவர் 161 00:10:38,160 --> 00:10:39,240 -கிடையாது. -ஆமா. 162 00:10:39,320 --> 00:10:41,280 காரை பார்த்தா பிரயோஜனம் இருக்குமா? 163 00:10:43,320 --> 00:10:45,200 ஒரு பிரதமரின் அடையாளத்தை அறியலாம். 164 00:10:45,280 --> 00:10:47,640 ஏதாவது தகவல் இருக்கும். 165 00:10:47,760 --> 00:10:51,520 ஆனா இது ரொம்ப பழைய கார். டோனி பிளேர் காலத்து காரா இருக்காது. 166 00:10:52,880 --> 00:10:56,080 மார்கரெட் தாட்சரை இந்த காரில் நினைச்சு பார்க்க முடியல. 167 00:11:02,040 --> 00:11:04,760 அங்கே ஏதாவது துப்பு கிடைக்கும்னு நம்பினேன். 168 00:11:07,080 --> 00:11:08,560 ஆனா டோனி பிளேர். 169 00:11:12,480 --> 00:11:15,600 அந்த வயதில் நான் அரசியலில் அதிக கவனம் செலுத்தல. 170 00:11:17,960 --> 00:11:19,560 அப்படி இருந்திருக்கணும். 171 00:11:24,480 --> 00:11:26,320 பயங்கரவாத தாக்குதலை யோசிச்சேன்... 172 00:11:27,320 --> 00:11:29,480 அந்த கேள்வியில அது முக்கிய வார்த்தை. 173 00:11:30,480 --> 00:11:32,760 -அது ஐஆர்ஏ வா இருக்கும் இல்லையா? -ஆமா. 174 00:11:34,840 --> 00:11:38,000 ஆமா. நான் ஒரு குழந்தையா இருந்தப்போ ஐஆர்ஏ நிறைய இருந்தது, 175 00:11:38,080 --> 00:11:40,920 -அது '80 களா இருக்கும். -ஆமா. 176 00:11:42,200 --> 00:11:46,000 டோனி பிளேர் காலத்தில் நிறைய குண்டுவெடிப்பு பற்றி கேள்விப்படல. 177 00:11:49,280 --> 00:11:51,760 -சரி. -அது தாட்சர்தான்னு எனக்கு தோணுது 178 00:11:51,840 --> 00:11:54,480 அவர் பெரிதாக விரும்பப்படவில்லை என்பதால், 179 00:11:54,560 --> 00:11:56,880 நிச்சயமா மக்கள் கொல்ல நினைச்சிருப்பாங்க. 180 00:11:56,960 --> 00:11:58,120 அது கடுமையா தெரியுதா? 181 00:11:59,280 --> 00:12:01,480 தாட்சர் நான்கு மணி நேரத்திற்கு மேல் 182 00:12:01,560 --> 00:12:03,880 தூங்கலன்னு பிரபலமா சொன்னாங்க, இல்லையா? 183 00:12:03,960 --> 00:12:04,880 ஆமா, அது உண்மை. 184 00:12:05,400 --> 00:12:07,920 அப்ப, நாலு மணிநேரத்துக்கு மேல தூங்கலன்னா... 185 00:12:08,000 --> 00:12:10,360 அது மருத்துவ பிரச்சினைன்னு நமக்கு தெரியும். 186 00:12:10,440 --> 00:12:11,920 ஒரு பகல் தூக்கம் போடணும். 187 00:12:12,000 --> 00:12:13,360 அப்போ சி தான் தேர்வா? 188 00:12:14,000 --> 00:12:15,080 சியை தேர்வு செய்யவா? 189 00:12:16,480 --> 00:12:17,400 ஆமா. 190 00:12:17,880 --> 00:12:19,640 -அதை செய்? ஆமா. ஆமா. -அதானா? 191 00:12:19,720 --> 00:12:21,520 -நம் இருவருக்கும் சரியா? -ஆமா. 192 00:12:22,200 --> 00:12:24,000 -எப்பவும்போல இருவருக்கும் சரி. -சரி. 193 00:12:28,120 --> 00:12:28,960 -சி. -சரி. 194 00:12:29,040 --> 00:12:30,720 -மார்கரெட் தாட்சர், அதானே? -ஆமா. 195 00:12:33,160 --> 00:12:35,320 எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு. தயாரா? 196 00:12:35,400 --> 00:12:37,120 -சரி, செய்ய போறேன். -சரி, செய். 197 00:12:38,400 --> 00:12:41,880 £10,000 க்கு, நீங்கள் தேர்ந்தெடுத்தது சி, 198 00:12:42,560 --> 00:12:43,800 மார்கரெட் தாட்சர். 199 00:12:45,120 --> 00:12:46,360 உங்கள் பதில்... 200 00:12:51,680 --> 00:12:52,600 சரியானது. 201 00:12:52,800 --> 00:12:54,480 -ஆமா! ஜெயிச்சோம்! -ஓ, கடவுளே. 202 00:12:56,120 --> 00:12:58,040 வங்கியில் செலுத்தப்பட்டது: £10,000 203 00:12:58,120 --> 00:12:59,400 அது அபாரம். 204 00:13:14,680 --> 00:13:17,600 நிலை 2 205 00:13:19,720 --> 00:13:25,520 இஸ்தான்புல் துருக்கி 206 00:13:34,960 --> 00:13:36,240 சரி, இது ரொம்ப பிஸி. 207 00:13:36,360 --> 00:13:40,280 -எதை தேடணும்னு எப்படி நமக்கு தெரியும்? -எனக்கு தெரியாது. 208 00:13:41,600 --> 00:13:44,400 ஒருவேளை யாராவது நமக்கு தகவல் கொடுப்பாங்களா? 209 00:13:46,400 --> 00:13:47,560 ஒருவேளை தரலாம். 210 00:13:52,040 --> 00:13:57,680 அமேசான் மழைக்காடுகள் பிரேசில் 211 00:13:58,400 --> 00:14:00,920 இந்த ட்ராக்கர் காட்டுக்குள்ள கூட்டி போகுது. 212 00:14:01,000 --> 00:14:02,520 -அதானா? -ஆமா, நண்பா. 213 00:14:06,320 --> 00:14:07,560 முச்சந்தி. 214 00:14:13,280 --> 00:14:14,280 இடமா வலமா, பிறகு? 215 00:14:15,200 --> 00:14:17,240 -வலது பக்கம் போவோம், சரி. -சரியா? 216 00:14:20,000 --> 00:14:23,120 கத்தி கையில் இருப்பது உனக்கு மகிழ்ச்சியா? ராம்போ போல. 217 00:14:25,680 --> 00:14:26,920 இப்போ... ஓ, கடவுளே. 218 00:14:28,600 --> 00:14:30,520 -இது ஒரு இடுகாடு. -ஓ, கடவுளே. 219 00:14:31,480 --> 00:14:34,920 இந்த குரலை கேட்டு வந்தவங்க கதி கடைசியாக இதுதான். 220 00:14:40,800 --> 00:14:42,440 ஒரு நிமிடம் இரு. பாரு. 221 00:14:45,920 --> 00:14:48,000 ஆமா, இங்கே மனித நடமாட்டம் இருக்கு. 222 00:14:49,120 --> 00:14:50,320 ஆமா. இது ஏதோ ஒண்ணு. 223 00:14:51,760 --> 00:14:53,960 நாம ஏதாவது கண்டுபிடிக்கணும் போல. 224 00:15:02,600 --> 00:15:04,040 இங்கே வா, இதை பாரு. 225 00:15:04,120 --> 00:15:06,120 நில்லு, நான் இதை முறையா வைக்கிறேன். 226 00:15:07,560 --> 00:15:11,160 இது நமக்கு தேவையான அமைப்பு பற்றி சொல்லுது, அப்புறம்... 227 00:15:11,320 --> 00:15:13,840 நீ தொடங்குறதுக்கு தேவையான விஷயம் இதுதானா? 228 00:15:13,920 --> 00:15:15,560 எல்லாம் ஒரே மாதிரி இருக்கு. 229 00:15:16,640 --> 00:15:17,760 அது தலைகீழா இருக்கு. 230 00:15:18,520 --> 00:15:22,160 டிரான்ஸ்மிட்டர், செலெக்டர், காந்தம். நான் சொல்றது... 231 00:15:22,320 --> 00:15:25,880 இந்த பொருள் இயக்கத்தில் இருக்கா? 232 00:15:25,960 --> 00:15:28,880 -இது ஒரு... -அது என்னன்னு தெரியல. நான் ஒரு... 233 00:15:28,960 --> 00:15:31,640 இது டர்பைன் போல இருக்கு, நான் பார்த்ததில்ல. 234 00:15:32,520 --> 00:15:35,560 -எனவே, இங்கே பார், உண்மையில் அதுவேதான். -ஆமா. ஆமா. 235 00:15:36,400 --> 00:15:39,360 நாம அங்கே தான் வேலை செய்யணும். அது ஒரு கட்டிடம். பார். 236 00:15:39,440 --> 00:15:41,800 ஆமா. அந்த அமைப்பின் கட்டுப்பாட்டு பேனல். 237 00:15:41,880 --> 00:15:44,160 பெரிய பழைய சிவப்பு சக்கரம், உதவும். 238 00:15:44,240 --> 00:15:47,280 ஓ, ஆமா. வெளியே ஏதாவது இருக்கா? 239 00:15:47,360 --> 00:15:48,240 சரி. 240 00:15:49,360 --> 00:15:52,280 இந்த ட்ராக்கர்ல இன்னும் பீப் ஒலி, சரியா தான் போறோம். 241 00:15:56,000 --> 00:15:58,800 வெளிச்சம் குறையுது, இல்ல? சீக்கிரமா. அதனால... 242 00:15:58,880 --> 00:16:00,920 இது இன்னும் கொஞ்சம் ஆபத்தாகிடும். 243 00:16:01,000 --> 00:16:04,040 நாம இதை கொஞ்சம் விலக்கணும்னு நினைக்கிறேன். 244 00:16:04,560 --> 00:16:05,520 ஆமா. 245 00:16:07,720 --> 00:16:11,040 ஹேய், இது சரிவரும், நண்பா. இது சரியானது. 246 00:16:12,680 --> 00:16:16,200 ஒண்ணு ஒரு முடிச்சு போடுறது, இன்னொன்னு ஒரு முடி போடுறது. 247 00:16:19,000 --> 00:16:21,760 நம்மில் ஒருவர் கீழே விழப்போறோம், இல்லையா? 248 00:16:27,040 --> 00:16:28,360 இன்று இரவுக்கு இதுதான் 249 00:16:29,560 --> 00:16:33,160 என் படுக்கையாக போகுதுன்னு நம்புறேன். 250 00:16:35,040 --> 00:16:36,600 எப்போதும் பெறாத சிறந்தது. 251 00:16:45,200 --> 00:16:46,240 உனக்கு என்ன தோணுது? 252 00:16:47,200 --> 00:16:50,600 அவர் அந்த விஸ்கியை பையில போட்டார். இல்லையா? 253 00:16:50,680 --> 00:16:51,680 அதாவது... 254 00:16:52,600 --> 00:16:54,720 -நண்பா, நிஜமா. -ஓட்டு மொத்தமா பார்த்தா, 255 00:16:54,800 --> 00:16:56,160 இதுதான் நேரம்னு தோணுது... 256 00:16:57,440 --> 00:16:58,480 ஆமா. 257 00:16:58,880 --> 00:17:00,360 உனக்கு பிறகு, சகோதரா. 258 00:17:04,640 --> 00:17:05,760 ஓ, அன்பே. 259 00:17:05,839 --> 00:17:08,119 -நியாயமா பார்த்தா அது பிடிக்கல. -சியர்ஸ். 260 00:17:16,680 --> 00:17:18,240 நெருப்பில் விழும், பார். 261 00:17:25,319 --> 00:17:27,319 அப்பாவோட கேம்பிங் போனது நினைவிருக்கா? 262 00:17:27,440 --> 00:17:28,480 ஆமா. ஆமா, ஆமா. 263 00:17:28,560 --> 00:17:31,720 அப்பதான் அம்மா, அப்பா விவாகரத்து ஆனதா நினைக்கிறேன். 264 00:17:33,160 --> 00:17:39,160 கேம்ப்ஃபயர் முன் அப்பா, நான், நீ உட்கார்ந்து ரொம்ப நேரம் பேசினோம். 265 00:17:41,720 --> 00:17:43,880 ஆமா, அதாவது நீ பழய கதையை சொல்லுறே, என்ன? 266 00:17:43,960 --> 00:17:45,560 நீ மூத்தவன் என்பதால, 267 00:17:46,560 --> 00:17:49,520 அம்மாவும் அப்பாவும் விவாகரத்து பெற்றபோது, நாம... 268 00:17:50,440 --> 00:17:53,280 நான் உன்னை விட ரொம்ப சின்னவன், அது உனக்கு... 269 00:17:53,320 --> 00:17:54,960 -ஆமா. ரொம்ப வருத்தம். -அப்படியா? 270 00:17:55,080 --> 00:17:57,440 -நூறு சதவிகிதம். நான்... -அப்போ உனக்கு வயதென்ன? 271 00:17:57,520 --> 00:17:58,480 பதினொண்ணு. 272 00:17:59,240 --> 00:18:00,800 சீனியர் ஸ்கூல் தொடக்கம். 273 00:18:04,080 --> 00:18:05,640 ஆமா, அது என்னை பாதித்தது. 274 00:18:05,720 --> 00:18:09,760 அதனால்தான், ஒரு சில ஆண்டுகளுக்கு, நான் மிகவும் குறும்பா இருந்தேன். 275 00:18:10,800 --> 00:18:13,520 -நிஜமா நடப்பது என்னன்னு தெரியாது. -புரியாத நிலை. 276 00:18:13,560 --> 00:18:14,720 ஆமா, கொஞ்சம். 277 00:18:16,280 --> 00:18:19,440 ஆமா, நிஜமாவே புரிஞ்சிக்கல, நிஜமாவே. 278 00:18:22,640 --> 00:18:25,400 இது எனக்கு இரண்டாவது வாய்ப்பு போல. 279 00:18:27,400 --> 00:18:30,080 நான் இளமையாக இருந்தப்போ வாய்ப்பு கிடைக்கல. 280 00:18:31,160 --> 00:18:36,440 "நான் ஒரு வீடு வாங்கணும்" என்பது போல பல்வேறு ஆசைகள், சிந்தனைகள். 281 00:18:38,040 --> 00:18:40,320 பிறகு வாழக்கை... எப்படி போச்சுன்னு தெரியல, 282 00:18:40,440 --> 00:18:42,960 ஆனா அதை அறியும்போது, "நான் 30 ஐ கடந்தவன்." 283 00:18:43,760 --> 00:18:46,720 தெரியுமா? அது எப்படியோ எனக்கு கடந்து சென்றது. 284 00:18:46,800 --> 00:18:49,960 இப்போ, அது என் கண்களை திறந்து விட்டது 285 00:18:51,080 --> 00:18:53,280 நான் எதையும் ஆழமா சிந்திக்கிறேன். 286 00:18:53,320 --> 00:18:55,480 வெளியே போய் உலகை பார்க்க நினைக்கிறேன். 287 00:18:56,040 --> 00:18:58,320 அதில் முழுமையா ஈடுபட நினைக்கிறேன். 288 00:18:59,280 --> 00:19:01,440 இறுதியில் பார்த்தா, மற்றவற்றை காட்டிலும் 289 00:19:02,000 --> 00:19:05,000 பணம்தான் நமக்கு அவசியமான தேவை. 290 00:19:05,080 --> 00:19:07,200 அதனால, நாம இந்த சாகசத்தை தொடரணும். 291 00:19:07,280 --> 00:19:09,040 ஒ, இது நீண்ட காலம் தொடரலாம். 292 00:19:14,800 --> 00:19:16,400 சரி, நான் தூங்க போறேன். 293 00:19:18,800 --> 00:19:21,280 -காலையில் பார்க்கலாம். -நல்லா தூங்கு. 294 00:19:21,320 --> 00:19:22,320 நாளை, நாம போகலாம். 295 00:19:23,080 --> 00:19:24,280 நாம மீண்டும் போவோம். 296 00:19:32,400 --> 00:19:36,400 இஸ்தான்புல் துருக்கி 297 00:19:38,520 --> 00:19:40,800 சத்தம் கேட்குதா? ஆச்சரியம்தான். 298 00:19:41,560 --> 00:19:42,880 -தயாரா? -ஆமா. 299 00:19:42,960 --> 00:19:43,960 சரி. 300 00:19:45,680 --> 00:19:48,480 இஸ்தான்புல்லுக்கு வரவேற்கிறோம். 301 00:19:48,560 --> 00:19:52,560 £25,000 க்கான உங்கள் அடுத்த கேள்வி. 302 00:19:52,680 --> 00:19:54,720 £25,000 க்கான அடுத்த கேள்வி. 303 00:19:54,800 --> 00:19:57,080 நீங்கள் அதை மெட்ரோ நிலையத்தில் 304 00:19:57,160 --> 00:20:00,280 டாக்சிம் சதுக்கத்தின் அடியில் காணலாம். 305 00:20:00,880 --> 00:20:02,160 மெட்ரோ நிலையத்தில். 306 00:20:02,240 --> 00:20:04,320 ஒரு பராமரிப்பு சுரங்கப்பாதையில் உள்ளது. 307 00:20:04,960 --> 00:20:06,640 உங்களுக்கு 90 நிமிடங்கள் உள்ளன. 308 00:20:07,480 --> 00:20:08,880 நமக்கு 90 நிமிடங்கள் உள்ளன. 309 00:20:16,440 --> 00:20:17,800 நாம எதையும் கேட்கணுமா? 310 00:20:18,480 --> 00:20:20,320 -இங்கே நிறைய குறிகள் உள்ளன. -சரி. 311 00:20:26,720 --> 00:20:29,080 என் பணியில் ஆபத்தான நேரங்கள் இருந்தன. 312 00:20:30,640 --> 00:20:34,320 2010 இல், நான் விமானப்படையில் சேர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு போனேன். 313 00:20:34,440 --> 00:20:35,440 ஜென் 314 00:20:35,560 --> 00:20:38,480 ஏரோமெட் வீட்டிற்கு கொண்டு செல்லும் பணி 315 00:20:38,560 --> 00:20:41,480 பயங்கரமான காயங்களுடன் இளைஞர்களை பார்ப்பது 316 00:20:41,560 --> 00:20:43,800 மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. 317 00:20:46,440 --> 00:20:48,720 அது வந்து... கஷ்டமா இருந்தது. 318 00:20:53,320 --> 00:20:57,560 ஒரு குறிப்பிட்ட அளவு மன அழுத்தத்தில வேலை செய்ய பழகி போனதா நினைக்கறேன். 319 00:21:01,240 --> 00:21:03,440 காபூலில் பிரிட்டிஷ் தூதரக வளாகத்தில 320 00:21:03,520 --> 00:21:05,640 ஒரு செவிலியரா நான் கிளினிக் நடத்தினப்ப 321 00:21:05,720 --> 00:21:08,800 மிக அருகில் ஒரு பெரிய குண்டுவெடிப்பு சத்தம் கேட்டது, 322 00:21:08,880 --> 00:21:11,200 யாரோ மருத்துவமனைக்குள்ள போய் தனக்கு தானே 323 00:21:11,280 --> 00:21:13,720 வெடி வச்சு ஏராளமான பொதுமக்களைக் கொன்றதாக 324 00:21:13,800 --> 00:21:15,320 பின்னர் நான் அறிந்தேன். 325 00:21:15,440 --> 00:21:18,680 அது... ஆபத்துக்கு நெருக்கமா இருப்பது. நினைக்கவே பயமா இருந்தது. 326 00:21:20,920 --> 00:21:23,000 அந்த வகையான வேலை செய்ய, 327 00:21:23,080 --> 00:21:26,280 நீங்க ஒரு அமைதியான நபராக இருக்கணும். 328 00:21:26,320 --> 00:21:29,920 உயர் அழுத்த சூழலில் வேலை செய்ய, நீங்க விரைவா சிந்திக்கணும், 329 00:21:30,000 --> 00:21:32,080 நீங்களே யோசிச்சு விரைவா தீர்மானிக்கணும். 330 00:21:33,720 --> 00:21:36,280 அங்கே மாடிப்படி இருக்கு, பாரு, மெட்ரோ அடையாளம். 331 00:21:36,320 --> 00:21:38,480 சரியா. அதில் "டாக்சிம்..." இருக்கா? 332 00:21:38,560 --> 00:21:41,400 -"டாக்சிம்..." இருக்கு. -பாரு, அதேதான். மெட்ரோ. 333 00:21:41,480 --> 00:21:42,880 அது மூடியிருக்கு. 334 00:21:42,960 --> 00:21:44,800 ஆமா. இல்ல. 335 00:21:45,560 --> 00:21:47,800 -வேற வழி இருக்கும். -ஆமா, சுற்றி போகலாம். 336 00:21:48,560 --> 00:21:49,720 பாரு, அது லிஃப்டா? 337 00:21:56,760 --> 00:21:57,800 அது வேலை செய்யுதா? 338 00:21:58,840 --> 00:22:01,800 தெரியல ஆனா எல்லா கேபிள்களும் நகருது. 339 00:22:04,600 --> 00:22:05,600 ஓ, ஆமா. 340 00:22:15,400 --> 00:22:17,000 ஓ, கடவுளே. பெருசா இருக்கு. 341 00:22:20,640 --> 00:22:21,800 ரொம்ப பெரியது. 342 00:22:24,720 --> 00:22:25,720 இல்ல. 343 00:22:35,960 --> 00:22:37,400 டாக்சிம் சதுக்கம், 344 00:22:37,480 --> 00:22:40,240 துருக்கியின் பிஸியான மெட்ரோ நிலையங்களில் ஒன்று. 345 00:22:41,920 --> 00:22:44,040 இன்றிரவுக்கு மூடப்பட்டது. 346 00:22:44,120 --> 00:22:46,800 ஏதாவது இருக்கா? நமக்கு இங்கே அனுமதி இருக்குமா? 347 00:22:59,160 --> 00:23:00,160 என்ன இது, பெத்? 348 00:23:00,800 --> 00:23:04,000 நான் இந்த படங்களில் ஏதாவது இருக்கான்னு பார்க்கிறேன். 349 00:23:04,080 --> 00:23:06,400 பராமரிப்பு சுரங்கப்பாதை. 350 00:23:06,480 --> 00:23:10,200 சரி. அது என்ன சொல்லுது? பிளாட்பாரம் ஒண்ணா? 351 00:23:11,000 --> 00:23:12,760 அங்கே நாம போகலாம். 352 00:23:18,720 --> 00:23:21,360 -இது பயமுறுத்துது. -ரொம்ப மோசமா பயமுறுத்துது. 353 00:23:22,480 --> 00:23:23,560 ரயில்வண்டி அணுகல். 354 00:23:25,440 --> 00:23:27,280 -பாரு, ஒரு ரயில் இருக்கு. -ஆமா. 355 00:23:27,360 --> 00:23:28,800 நாம அங்கே போகலாம், போகலாம். 356 00:23:38,880 --> 00:23:41,160 ஜென், நமக்கு 15 நிமிடங்கள் இருக்கு. 357 00:23:41,240 --> 00:23:42,440 சரி. 358 00:23:45,360 --> 00:23:46,480 இங்கு கேட் இருக்கு. 359 00:23:47,360 --> 00:23:48,640 பராமரிப்பு சுரங்கப்பாதை. 360 00:23:52,800 --> 00:23:53,760 ஓ, இல்ல. 361 00:23:57,160 --> 00:23:58,960 சரி, இது பயமா இருக்கு. 362 00:23:59,560 --> 00:24:01,000 நிஜமாவே பயமா இருக்கு. 363 00:24:01,080 --> 00:24:02,920 நாம ரயில்பாதையில் போகணுமா என்ன? 364 00:24:04,000 --> 00:24:05,960 சரி, இரு சுரங்கபாதைகள் உள்ளன, எனவே... 365 00:24:12,120 --> 00:24:14,400 -இங்கே, அது என்ன? -இங்கே ஒரு ரயில் இருக்கு. 366 00:24:15,840 --> 00:24:17,320 நாம ரயிலுக்கு போகணும் போல. 367 00:24:23,760 --> 00:24:25,320 -திறந்திருக்கா? -ஆமா. 368 00:24:25,400 --> 00:24:27,040 உள்ளே செல்லலாம். சரி. 369 00:24:33,560 --> 00:24:36,600 கடவுளே, நமக்கு நாலு நிமிடங்கள் தான் இருக்கு, ஜென். 370 00:24:39,640 --> 00:24:42,960 ஐயோ, இது முழுவதும் காலியாக இருக்கு. 371 00:24:43,640 --> 00:24:45,120 இது ஒரு நீளமான ரயில். 372 00:24:45,200 --> 00:24:46,480 -சீக்கிரம். -சரி. 373 00:24:55,200 --> 00:24:57,080 பெட்டி! கிடைச்சது. 374 00:24:57,200 --> 00:24:58,120 பொறு, பொறு. 375 00:24:59,120 --> 00:25:00,640 நாம அதை திறக்கலாமா? 376 00:25:01,760 --> 00:25:03,800 -நீ தயாரா? உனக்கு ஒண்ணா? -ஆமா. 377 00:25:18,120 --> 00:25:19,280 ஓ, ஒரு மண்டை ஓடு. 378 00:25:22,640 --> 00:25:26,480 நீங்கள் உலகின் பழைய மெட்ரோக்களில் ஒன்றில் நின்றுகொண்டிருக்கிறீர்கள். 379 00:25:27,680 --> 00:25:29,920 இந்த பகுதியில் சமீபத்தில் தோண்டியபோது, 380 00:25:30,440 --> 00:25:34,360 விலங்குகளின் எலும்புக்கூடுகள் ஒரு புதையலாக தோண்டி எடுக்கப்பட்டன, 381 00:25:35,160 --> 00:25:38,200 இதில் ஒரு சர்க்கஸின் எஞ்சியவையும் அடங்கும். 382 00:25:40,400 --> 00:25:42,760 £25,000 க்கு, 383 00:25:44,240 --> 00:25:48,640 இந்த மண்டை ஓடு எந்த சர்க்கஸ் விலங்கை சேர்ந்தது? 384 00:25:50,120 --> 00:25:51,160 ஒரு சிம்பன்சி, 385 00:25:52,880 --> 00:25:54,000 ஒரு யானை, 386 00:25:55,520 --> 00:25:56,680 ஒரு கரடி. 387 00:26:01,120 --> 00:26:04,120 -நிச்சயமா ஒரு யானை இல்ல. -நூறு சதவிகிதம் யானை இல்ல. 388 00:26:06,000 --> 00:26:08,040 -நான் அதை பார்க்கட்டுமா? -சரி. 389 00:26:09,640 --> 00:26:12,760 இதுக்கு பெரிய கோரைப் பற்கள் இருக்கு. 390 00:26:13,760 --> 00:26:15,440 இதுக்கு நீண்ட மண்டை ஓடு. 391 00:26:15,560 --> 00:26:17,320 ஒரு நாய் போல தெரியுது. 392 00:26:18,960 --> 00:26:21,640 -சிம்பன்சிக்கு மண்டை ஓடு நம்மை போன்றது. -ஆமா. 393 00:26:21,760 --> 00:26:23,880 -இது நம்மை போல இல்ல. -நிச்சயமா இல்ல. 394 00:26:23,960 --> 00:26:27,320 -எனவே கரடி? -ஆமா. ஆமா, கரடின்னுதான்னு நினைக்கிறேன். 395 00:26:27,400 --> 00:26:28,880 பார்ப்போம். 396 00:26:29,840 --> 00:26:31,520 -சரி. -தயாரா? 397 00:26:31,600 --> 00:26:34,080 ஒன்று, இரண்டு, மூன்று. 398 00:26:39,240 --> 00:26:42,640 நீங்கள் சி விருப்பத்தை தேர்வு செய்தீர்கள். 399 00:26:46,320 --> 00:26:47,560 உங்கள் பதில்... 400 00:26:59,720 --> 00:27:01,200 சரி... 401 00:27:01,280 --> 00:27:02,640 இது நீண்ட காத்திருப்பு. 402 00:27:05,360 --> 00:27:06,440 கடவுளே, பிளீஸ். 403 00:27:07,680 --> 00:27:08,720 சரியானது. 404 00:27:08,800 --> 00:27:09,960 தோழி. 405 00:27:11,360 --> 00:27:12,880 -அருமை. -எனக்கு அது தெரியும். 406 00:27:18,560 --> 00:27:22,000 வங்கியில் செலுத்தப்பட்டது: £25,000 407 00:27:36,600 --> 00:27:38,360 நண்பா, இங்கே ஏற்கனவே சூடா இருக்கு. 408 00:27:42,200 --> 00:27:44,560 இப்ப ட்ராக்கர் வேகமா துடிக்குது. 409 00:27:44,640 --> 00:27:46,360 சரி, அது ஒரு நல்ல அறிகுறி. 410 00:27:46,440 --> 00:27:49,960 சிக்னலில் உள்ள ஊசி தீவிரமா முன்னே பின்னே நகருது. 411 00:27:50,040 --> 00:27:50,920 நிஜமாவா? 412 00:27:51,000 --> 00:27:53,160 இப்போதான் முதன்முறையா அப்படி செய்யுது. 413 00:27:53,280 --> 00:27:54,720 -சரி, அது... -உள்ளதை சொன்னா. 414 00:27:54,800 --> 00:27:57,520 -அப்ப, நாம நெருக்கமா இருக்கோம். -இங்கே ஏதோ இருக்கு. 415 00:27:57,680 --> 00:28:00,120 -இப்ப அது சத்தமா இருக்கா? -ஆமா. நல்ல சத்தம். 416 00:28:02,320 --> 00:28:03,840 இல்ல, அது இருக்க முடியாது. 417 00:28:09,080 --> 00:28:11,400 அந்த பக்கமா, நேராகவா? 418 00:28:11,480 --> 00:28:15,960 சரி, இப்ப அதிக சத்தமாக இருக்கு, அதனால நாம இங்கே இருக்கணும். 419 00:28:19,480 --> 00:28:20,480 ஆமா, ஆமா. 420 00:28:25,720 --> 00:28:27,600 இதோ இங்கே. மண்வாரி. 421 00:28:30,480 --> 00:28:31,360 ஆமா. 422 00:28:31,960 --> 00:28:32,880 பாரு அந்த... 423 00:28:38,720 --> 00:28:41,760 -அவ்வளவுதான். தோண்டு. -இரு. ட்ராக்கரை தள்ளி வை. 424 00:28:42,520 --> 00:28:45,440 ஆமா. நாம... அதன் மேல நிக்கிற. 425 00:28:46,560 --> 00:28:48,640 -நண்பா. -அது ரொம்ப ஆழமா இருக்கு... 426 00:28:48,760 --> 00:28:50,400 அவர் அதை எளிதா வைக்கல, இல்ல? 427 00:28:50,520 --> 00:28:53,480 முயற்சி செய், ஜோ. அதே போல ஒரு வழி செய்து தோண்டு. 428 00:28:55,240 --> 00:28:57,640 -அது மரத்தோட வேரா இல்ல... -அது வேர் தான். 429 00:28:57,720 --> 00:29:00,440 ஆமா, நிச்சயமா அவர் இத ரொம்ப ஆழமா தோண்டியிருக்கார். 430 00:29:02,520 --> 00:29:05,240 -அங்கே கீழே ஏதோ இருக்கு. -கீழே ஏதோ இருக்கு. 431 00:29:05,320 --> 00:29:06,560 இன்னும் கூட தோண்டணும். 432 00:29:09,600 --> 00:29:10,960 -அதோ. -ஆமா, கிடைச்சது. 433 00:29:11,120 --> 00:29:13,000 -ஆமா, கிடைச்சது. -அது கைப்பிடியா? 434 00:29:13,080 --> 00:29:15,520 -அது கைப்பிடிதான். -ஓ, இல்ல. 435 00:29:15,600 --> 00:29:16,960 அது உடைஞ்சு போச்சு. 436 00:29:17,040 --> 00:29:19,640 -அதன் வாரை இழு. -பிளாஸ்டிக் சுத்தி இருக்கு. 437 00:29:19,720 --> 00:29:21,360 -வாரை இழுக்கலாமே. -அது முடியல. 438 00:29:21,480 --> 00:29:24,040 சரியா தான் செய்றோம், தொடரலாம். 439 00:29:25,600 --> 00:29:28,160 -நண்பா. அதோ. கிடைச்சது. -அதை உடைச்சிட்டியா? 440 00:29:28,240 --> 00:29:29,480 அவ்வளவுதான், அது வரும். 441 00:29:29,560 --> 00:29:31,480 ஆமா! 442 00:29:32,280 --> 00:29:34,960 அபாரம், அற்புதம். அபாரம். 443 00:29:35,640 --> 00:29:36,760 இதோ பார். 444 00:29:44,720 --> 00:29:45,640 ஹலோ. 445 00:29:47,240 --> 00:29:48,560 "ரியோவுக்கு நல்வரவு." 446 00:29:53,760 --> 00:29:55,920 ஜோயி மற்றும் ஜேம்ஸ், 447 00:29:56,360 --> 00:29:58,560 நீங்கள் ஒரு கேள்வியை எதிர்பார்ப்பீர்கள். 448 00:29:59,240 --> 00:30:01,840 -ஆமா. -£100,000 க்கு, அது அவ்வளவு சுலபமில்லை. 449 00:30:01,920 --> 00:30:03,040 ஓ, கடவுளே. 450 00:30:04,600 --> 00:30:08,960 உங்கள் கேள்வி 2,000 மைல்களுக்கும் அப்பால் உள்ளது. 451 00:30:09,400 --> 00:30:10,600 இது என்ன சோதனை? 452 00:30:10,680 --> 00:30:11,880 என்ன? இதுக்கு பிறகு. 453 00:30:13,040 --> 00:30:15,480 நாம செய்யணும்னு எப்படி அவர் எதிர்பார்க்கிறார்? 454 00:30:22,760 --> 00:30:25,760 சரி, எப்படி நாம... 2,000 மைல்களுக்கு அப்பாலா? 455 00:30:28,120 --> 00:30:30,040 அதை கொஞ்சம் பார்க்கலாம். 456 00:30:30,120 --> 00:30:31,800 "ரியோவுக்கு நல்வரவு." 457 00:30:32,240 --> 00:30:33,400 அதன் பின்னால ஏதாவது? 458 00:30:35,160 --> 00:30:36,520 "இது எங்கே எடுத்தது?" 459 00:30:38,320 --> 00:30:39,720 நாம ரியோவுக்கு போகணும். 460 00:31:13,640 --> 00:31:15,320 ரியோ டி ஜெனிரோ, பேபி. 461 00:31:15,400 --> 00:31:17,600 நண்பா. அப்ப, இது கோபகபானா கடற்கரையா? 462 00:31:17,680 --> 00:31:19,000 இது கோபகபானாதான். ஆமா. 463 00:31:19,520 --> 00:31:21,880 இங்க வருவேன்னு நினைக்கல. உன்கிட்ட சொல்றேன். 464 00:31:23,200 --> 00:31:26,240 அப்ப, என்ன சொல்றோம்? அந்த போஸ்ட்கார்டை எடு. 465 00:31:26,320 --> 00:31:27,400 சரி. 466 00:31:28,080 --> 00:31:29,280 "இது எங்கு எடுத்தது?" 467 00:31:30,840 --> 00:31:32,880 அது மீட்பர் இயேசுன்னு தோணுது. 468 00:31:32,960 --> 00:31:34,160 அப்படியா? 469 00:31:36,360 --> 00:31:38,560 இப்போ நான் பார்க்கிறேன், அப்படி நினைக்கல. 470 00:31:38,640 --> 00:31:40,440 நீ இங்கிருந்து பார்க்க முடியாது. 471 00:31:41,560 --> 00:31:43,880 -இந்த கட்டடம் இங்கே இருக்கா? -ஆமா. 472 00:31:44,000 --> 00:31:45,800 -அது இல்லையா? -அங்கே உள்ள கட்டடம். 473 00:31:45,880 --> 00:31:47,760 -த ஹில்டன். அது ஹில்டன்தானே? -ஆமா. 474 00:31:48,680 --> 00:31:51,480 எனவே, அது ஷுகர்லோஃப் மலை. 475 00:31:51,560 --> 00:31:53,160 சரி. நமக்கு நிச்சயமா தெரியுமா? 476 00:31:53,240 --> 00:31:55,640 -ஆமா, 100%. கேபிள் கார்கள் தெரியுதா? -ஆமா. 477 00:31:55,720 --> 00:31:58,040 அதுக்குத்தான் அந்த கப்பிகள் இருக்கு. 478 00:31:58,120 --> 00:32:00,000 -படம்? கட்டுப்பாட்டு அறையில். -ஆமா. 479 00:32:00,080 --> 00:32:01,360 -நூறு சதவீதம். -ஆமாப்பா. 480 00:32:01,440 --> 00:32:03,480 நாம அங்கே போக வழி தேடணும். 481 00:32:03,600 --> 00:32:05,080 சரி, நடக்கலாம். 482 00:32:05,160 --> 00:32:07,200 -முதல்ல நடக்க ஆரம்பிப்போம். -போவோம். 483 00:32:12,360 --> 00:32:13,240 கொஞ்சம் பொறு. 484 00:32:20,000 --> 00:32:22,440 வாழ்த்துக்கள், ஜோயி மற்றும் ஜேம்ஸ். 485 00:32:22,520 --> 00:32:24,240 நீங்கள் கண்டுபிடித்தீர்கள். 486 00:32:24,320 --> 00:32:25,560 சுற்றிலும் பாருங்கள். 487 00:32:26,320 --> 00:32:29,240 உங்களை அங்கே கொண்டு செல்ல ஒரு கருப்பு ஜாகுவார் உள்ளது. 488 00:32:32,280 --> 00:32:34,360 -அந்த ஜாகா? -கார் பற்றி சொல்லலையே. 489 00:32:34,440 --> 00:32:36,240 -கருப்பு ஜாக். -அது ஜாக்தானே? 490 00:32:36,320 --> 00:32:39,720 -அது ஒரு ஜாக்தான். -என்ன, இந்த உடையிலா? 491 00:32:47,640 --> 00:32:51,120 இந்த அமைப்பு பிடிக்குது... நாம ஒரு பிஸியான நகரில் இருக்கோம். 492 00:32:51,200 --> 00:32:52,080 ஆமா. 493 00:32:52,200 --> 00:32:55,320 ஒரு கடற்கரை, மலைகளுடன். 494 00:32:55,400 --> 00:32:58,600 தெரியுமா, இது உண்மை இல்ல. 495 00:33:00,400 --> 00:33:03,720 இந்த உடைக்காக நிச்சயம் போலீஸ் கேஸ் போடமாட்டாங்க. 496 00:33:03,800 --> 00:33:06,360 இங்கே எல்லாம் நீச்சல் உடை பிகினிதான், நண்பா. 497 00:33:06,440 --> 00:33:07,800 இது வழக்கமா போச்சு. 498 00:33:07,880 --> 00:33:10,040 நீ பைஜாமா போட்ட ஆள் போல தெரியுறே. 499 00:33:10,120 --> 00:33:12,320 நான் புத்துணர்வு வாசத்தோட இல்ல. 500 00:33:18,720 --> 00:33:19,880 சரி ஆரம்பிப்போம். 501 00:33:29,880 --> 00:33:31,840 -ஆரம்பிக்கலாம். -செய்யலாம்பா. 502 00:33:42,240 --> 00:33:43,480 அங்கே என்ன தெரியுது? 503 00:33:44,120 --> 00:33:45,920 பொறு. போன் திரும்ப ஒலிக்குது. 504 00:33:48,840 --> 00:33:50,600 செய்தி: காட்டு பாதையில் செல்க 505 00:33:50,680 --> 00:33:52,520 "காட்டு பாதையில் செல்க." 506 00:33:52,600 --> 00:33:55,200 -அது தானா? நேரா அங்கே. -அப்ப அதுவா இருக்கும். 507 00:33:55,280 --> 00:33:57,280 இது ரொம்ப கஷ்டமானதா இருக்கும். 508 00:33:57,360 --> 00:34:01,160 உன்னை போல, இளம் கன்று பயமறியாது, எல்லாத்தையும் சமாளிச்சிடுவ இல்ல? 509 00:34:01,240 --> 00:34:02,360 ஓ, ஆமா! 510 00:34:08,840 --> 00:34:11,600 ஜாகுவார் சவாரியை விட்டு ரொம்ப தூரம் வந்தாச்சு. 511 00:34:11,679 --> 00:34:12,600 ஆமாம்பா. 512 00:34:13,520 --> 00:34:16,159 கடைசி முயற்சியில ஜெயிக்கணும். சொதப்பிட கூடாது. 513 00:34:22,960 --> 00:34:25,199 ஷுகர்லோஃப் மலைக்கு வரவேற்கிறோம். 514 00:34:25,840 --> 00:34:26,960 தேவனே. 515 00:34:30,440 --> 00:34:32,000 ஓ, நண்பா. 516 00:34:37,760 --> 00:34:39,440 நாம் இதில் மேலே ஏறப்போறோம். 517 00:34:39,520 --> 00:34:41,159 அவர் சிரிப்பார், இல்ல? 518 00:34:41,199 --> 00:34:43,159 இதுல நாம என்னத்த செய்யப்போறோம்? 519 00:34:43,920 --> 00:34:47,159 வேண்டியதை போட்டுட்டு சக்தியை திரட்டி முடிந்ததை செய்வோம். 520 00:34:47,800 --> 00:34:49,520 இது ரொம்ப கொடுமையானது, நண்பா. 521 00:34:49,600 --> 00:34:51,960 இது செங்குத்தான பாறை. 522 00:34:53,040 --> 00:34:55,159 ரொம்ப கடுமையாகிட்டு வருது. 523 00:34:57,840 --> 00:35:01,360 முறையான காலணிகள் இங்கே இருக்குப்பா, யாருக்கு எதுன்னு தெரியல. 524 00:35:01,440 --> 00:35:02,480 தெரியல. 525 00:35:03,160 --> 00:35:04,520 நீ முன்ன அணிந்த 526 00:35:04,600 --> 00:35:07,040 காலணிகளை விட இவை கூர்மையா இருக்கு. 527 00:35:07,120 --> 00:35:11,000 இப்ப, அது போல கூரான முனையுள்ள காலணிகளை ப்ளூ ஆர்கிட் இரவு விடுதிக்கு 528 00:35:11,640 --> 00:35:14,320 முன்ன அணிவோம். இப்ப எல்லாம் வரலாறு ஆகிப்போச்சு. 529 00:35:24,080 --> 00:35:26,920 -நான், இங்கே கட்டுப்பாட்டை எடுக்கவா? -சரி. 530 00:35:27,000 --> 00:35:29,280 -நான் மூத்தவன் இல்லையா? -தாரளமா செய் அண்ணா. 531 00:35:30,680 --> 00:35:33,280 சரி, எதுவும் இழக்க போறதில்லை, நண்பா. 532 00:35:33,360 --> 00:35:34,200 ஜெயிக்கணும். 533 00:35:42,360 --> 00:35:43,360 நிதானமா செய். 534 00:35:52,000 --> 00:35:53,640 பிடிமானம் கிடைக்கல. 535 00:36:05,040 --> 00:36:06,560 -நீ நலம்தானே, ஜேம்ஸ்? -ஆமா. 536 00:36:20,760 --> 00:36:22,880 கேளு, நண்பா. இதில் சில வழுக்குது. 537 00:36:24,640 --> 00:36:25,760 ஓ, நண்பா. 538 00:36:32,520 --> 00:36:35,360 -ஓ, கடவுளே! -இது கஷ்டமான வேலை, ஜேம்ஸ். 539 00:36:42,840 --> 00:36:44,320 என்னிடம் வலு இல்ல. 540 00:36:44,960 --> 00:36:46,000 இயேசுவே! 541 00:37:06,200 --> 00:37:07,480 இது முட்டாள்தனம். 542 00:37:09,080 --> 00:37:10,920 என் விரல்களில் வலிமை இல்ல. 543 00:37:12,640 --> 00:37:16,000 கையில் வலு இல்லன்னு மூளை சொல்லுது. 544 00:37:16,080 --> 00:37:17,960 இது ஒரு நல்ல வழியா இல்ல. 545 00:37:18,480 --> 00:37:20,200 "இதை சும்மா விட முடியாது"ன்னு 546 00:37:20,840 --> 00:37:23,040 நினைக்கிறேன், கலக்கமாவும் இருக்கு. 547 00:37:23,480 --> 00:37:26,120 எனக்கு உயரத்தை பார்த்து பயமெல்லாம் இல்ல. 548 00:37:26,160 --> 00:37:29,160 ஆனா அது தோல்வி உணர்வு... 549 00:37:30,400 --> 00:37:33,600 யதார்த்தத்தை விட்டு விலகி இருப்பது. தெரியுமா? 550 00:37:39,000 --> 00:37:40,160 நீ நலமா, நண்பா? 551 00:37:52,400 --> 00:37:53,520 நண்பா. 552 00:37:56,640 --> 00:37:57,760 ரொம்ப கஷ்டம்தான்! 553 00:38:00,920 --> 00:38:02,160 இங்கே போராட்டம்தான். 554 00:38:15,160 --> 00:38:17,320 சரி! ஆமா! 555 00:38:19,600 --> 00:38:21,920 நீ நலமா ஜிம்மி? கிட்ட வந்தாச்சு, பையா. 556 00:38:24,800 --> 00:38:25,960 ஆகட்டும். 557 00:38:35,120 --> 00:38:36,800 -அபாரம்பா. -ஆமா, நண்பா. 558 00:38:37,840 --> 00:38:39,840 -தேவனே. -ஓ, கடவுளே! 559 00:38:42,960 --> 00:38:44,680 இதை செய்வேன்னு நினைக்கவே இல்ல. 560 00:38:44,800 --> 00:38:46,560 என் கைகள் இத்து போச்சு. 561 00:38:49,640 --> 00:38:53,400 இதை செய்றப்ப நமக்கு பெரிய கெத்து இருக்கணும், நான் சொல்றது புரியுதா? 562 00:38:59,320 --> 00:39:02,080 நண்பா, இதை நம்ப முடியல, இல்லையா? 563 00:39:03,640 --> 00:39:04,680 அருமையான காட்சி. 564 00:39:06,040 --> 00:39:08,840 அந்த அழகு தோற்றத்தை பார். 565 00:39:11,160 --> 00:39:12,600 போஸ்ட் கார்ட் இருக்கா? 566 00:39:13,880 --> 00:39:16,640 இருக்கு, ஆனா கந்தலானதால முழுசா இல்ல. 567 00:39:18,920 --> 00:39:22,440 சரி பண்ணலாம், ஆனா பாரு, அது அச்சு அசல் அப்படியே இருக்கு. 568 00:39:22,520 --> 00:39:23,800 ஆமா. 569 00:39:24,440 --> 00:39:25,640 இது சரியான இடம்தான். 570 00:39:31,440 --> 00:39:33,160 இங்கதான், கட்டுப்பாட்டு... 571 00:39:33,280 --> 00:39:34,600 பார்த்தது, கட்டுப்பாட்டறை. 572 00:39:34,680 --> 00:39:38,800 பொறு. அது அந்த போட்டோவில் இருப்பது போல தெரியுது. 573 00:39:40,000 --> 00:39:41,400 ஆமா. கப்பிகள். 574 00:39:43,600 --> 00:39:45,600 நாம சரியான இலக்கில் இருக்கோம். 575 00:39:45,640 --> 00:39:47,040 ஓ, நண்பா. 576 00:39:47,120 --> 00:39:49,680 ஷுகர்லோஃப் கேபிள் கார் ஷுகர்லோஃப் கேபிள் கார் பார்க் 577 00:39:49,840 --> 00:39:50,760 ஆமா! 578 00:39:52,680 --> 00:39:54,080 அது அருகேதான் இருக்கணும். 579 00:39:54,160 --> 00:39:56,320 அவர் மேற்கொண்டு போக வைக்கணும் இல்லையா? 580 00:39:58,480 --> 00:40:01,600 நமக்கு ஒரு முக்கிய கட்டுப்பாட்டு பகுதி தேவை. 581 00:40:07,160 --> 00:40:09,400 அதோ அங்கே தாம்பா. அது தான். 582 00:40:14,920 --> 00:40:17,680 ஆமா, நீ சொல்றது சரி. அதில்... நாம உள்ளே போகலாமா? 583 00:40:18,560 --> 00:40:20,360 இல்ல, அது பூட்டி இருக்கு, நண்பா. 584 00:40:21,920 --> 00:40:24,560 ஆமா, மூலையில் உள்ளது கட்டுப்பாட்டு பேனலா தோணுது. 585 00:40:24,640 --> 00:40:26,760 போனை பார்? போன், சிவப்பு கதவு. சரியா? 586 00:40:26,840 --> 00:40:28,840 ஆமா, ஆமா. ஆமா. 587 00:40:31,000 --> 00:40:31,920 கொஞ்சம் இரு. 588 00:40:33,280 --> 00:40:35,600 செய்தி: கேபிள் காரில் ஏறவும் 589 00:40:35,640 --> 00:40:38,160 -"கேபிள் காரில் ஏறவும்" -கேபிள் கார் எங்கே? 590 00:40:38,200 --> 00:40:39,920 "கேபிள் காரில் ஏறவும்." 591 00:40:41,800 --> 00:40:43,440 ஆனா கேபிள் கார் இங்கே இல்ல. 592 00:40:43,520 --> 00:40:44,880 இல்ல. சுத்தி பார்க்கலாம். 593 00:40:45,800 --> 00:40:46,920 கேபிள் கார் இங்க இல்ல. 594 00:40:48,600 --> 00:40:51,320 ஆமா, கேபிள் கார் கீழே தான் இருக்கு. 595 00:40:52,400 --> 00:40:54,560 அப்ப நாம அங்கே போயி மேல கொண்டு வரணுமா? 596 00:40:54,640 --> 00:40:55,760 ஒருவேளை இருக்கலாம். 597 00:40:56,760 --> 00:40:58,160 அந்த கதவு... 598 00:41:03,960 --> 00:41:06,040 கதவு எப்படி திறக்கும்னு யோசிக்கணும்பா. 599 00:41:08,800 --> 00:41:11,160 -நம்மிடம் எண்கள் இருக்கா? -டிராக்ஸ்? 600 00:41:11,280 --> 00:41:13,840 -நமக்கு எண் தந்தாரா? -டிராக்ஸ் இருக்கே? அது... 601 00:41:13,920 --> 00:41:16,320 ஆமா. டி-ஆர்-ஏ-எக்ஸ்-ன்னு தட்டச்சு செய். 602 00:41:16,440 --> 00:41:17,440 டி. 603 00:41:20,880 --> 00:41:21,800 ஏ. 604 00:41:25,200 --> 00:41:27,000 நல்லா நினைவு வச்சிருக்க, நண்பா. 605 00:41:29,040 --> 00:41:30,680 அபாரமான வேலை. 606 00:41:34,320 --> 00:41:37,000 அவர் கேபிள் காரில் ஏற சொல்றார். எனவே, எப்படியாவது... 607 00:41:37,080 --> 00:41:39,600 இப்ப, இதை திறக்க வழி பார்க்கணும்... 608 00:41:40,200 --> 00:41:42,480 எனக்கு அது பத்தி எதுவும் தெரியாது. 609 00:41:42,560 --> 00:41:44,840 நாம அழுத்த ஏதோ ஒரு பட்டன் இருக்கணும். 610 00:41:44,920 --> 00:41:46,400 அது ரொம்ப சிக்கலா தோணுது. 611 00:41:47,160 --> 00:41:49,120 தப்பானா, பெரிய குளறுபடி ஆகலாம். 612 00:41:50,000 --> 00:41:52,600 -கதவை தகர்க்கலாம். -ரொம்ப சரி. அங்கே ஒரு... 613 00:41:52,680 --> 00:41:56,400 பச்சை பட்டன், போன்னு அர்த்தம். ஒரு பச்சை ப்ட்டனை அழுத்தலாம். 614 00:41:56,480 --> 00:41:58,600 அப்படி ஏதோ ஒண்ணு. அல்லது அங்கே ஒண்ணா? 615 00:41:58,640 --> 00:42:00,000 அந்த பேனலில் இருப்பதா? 616 00:42:00,640 --> 00:42:01,960 நீ அதை அழுத்த போறியா? 617 00:42:02,560 --> 00:42:06,360 அழுத்துறேன். நான் காரில் இல்லை. விழுவேனா என்ன, இல்லையே? 618 00:42:06,480 --> 00:42:08,600 -சரி. அப்ப செய். செய்வோம். -அது... ஆமா? 619 00:42:08,680 --> 00:42:10,120 சரி, தயாரா? 620 00:42:13,520 --> 00:42:15,160 சரி, ஏதோ நடக்குது. 621 00:42:16,400 --> 00:42:18,600 ஆமா, வேலை செய்யுது. நல்ல வேலை. 622 00:42:20,160 --> 00:42:21,680 -அருமை. -சரி. மகிழ்ச்சிதான். 623 00:42:21,880 --> 00:42:23,440 நாம மேடைக்கு போகலாம். 624 00:42:23,520 --> 00:42:26,040 ஆமா, அது மேலே வருது. அதோ பார். 625 00:42:26,160 --> 00:42:27,200 சரி, அங்கே போகலாம். 626 00:42:27,320 --> 00:42:28,520 ரொம்ப சந்தோஷம். 627 00:42:30,680 --> 00:42:33,920 அதில் கேள்வி கிடைக்கும் அல்லது நாம வேற எங்காவது போகணும். 628 00:42:34,040 --> 00:42:36,880 நமக்கு சொன்னது, "கேபிள் காரில் ஏறவும்." 629 00:42:36,960 --> 00:42:39,520 அதனால, அவர் சொன்னதை படிப்படியா செய்றதா தோணுது. 630 00:42:46,000 --> 00:42:48,880 கதவுகள் திறந்திருக்கு. அது திறந்திருக்கு. அருமை. 631 00:42:48,960 --> 00:42:51,760 சரி, போகலாம், பிறகு முடிந்ததை செய்யலாம். 632 00:42:51,840 --> 00:42:53,160 அதை நிதானமா செய். 633 00:42:56,680 --> 00:42:57,920 இங்கே ஒரு ஏணி இருக்கு. 634 00:43:00,600 --> 00:43:02,040 நாம கீழே போகணும். 635 00:43:03,320 --> 00:43:05,840 -ஏய், ஓ! -அப்ப, அது வந்து... ஓ, இங்கே பார். 636 00:43:07,320 --> 00:43:08,520 நாம மீண்டும் போறோம். 637 00:43:09,440 --> 00:43:11,160 நாம மீண்டும் போறோம். 638 00:43:11,200 --> 00:43:13,080 எங்கே? இனிமேல். 639 00:43:17,440 --> 00:43:18,920 -நகர்ந்தாச்சு. -நகர்ந்தாச்சு. 640 00:43:24,640 --> 00:43:26,560 எனக்கு பதட்டமா இருக்கு. 641 00:43:26,640 --> 00:43:28,120 நூறு சதவிகிதம். பதட்டம் தான். 642 00:43:28,160 --> 00:43:30,480 அது... ஏதோ சரியல்ல. 643 00:43:31,760 --> 00:43:35,080 எனக்கு ஒரு விசித்திரமான உணர்வு இருக்கு. 644 00:43:49,720 --> 00:43:52,040 -ஏதோ நடக்க போகுதுனு தெரியும். -எப்படி... 645 00:43:52,120 --> 00:43:54,400 -ஏதோ ஒரு விஷயம். -அங்கே ஒரு ஏணி இருக்கு. 646 00:43:54,480 --> 00:43:56,960 ஆமா. நான் அப்படி நினைக்கல. 647 00:44:00,600 --> 00:44:01,800 அது... 648 00:44:04,080 --> 00:44:06,880 ஓ, ஆமா! அச்சோடா! 649 00:44:08,000 --> 00:44:09,360 இயேசுவே! 650 00:44:18,760 --> 00:44:19,760 அவர் என்ன செய்றார்? 651 00:44:20,880 --> 00:44:22,880 எனக்கு தெரியும். எனக்கு தெரியும். 652 00:44:25,560 --> 00:44:26,720 போனில் செய்தி வருது. 653 00:44:30,800 --> 00:44:33,720 கடவுளே. இன்னொரு செய்தி. 654 00:44:34,560 --> 00:44:37,960 செய்தி: உங்கள் கேள்வி வெளியே உள்ளது 655 00:44:39,680 --> 00:44:41,440 நிச்சயமா. எனக்கு தெரியும். 656 00:44:41,520 --> 00:44:44,320 இங்கே, பாரு, ஏணியில் உள்ள கொக்கிகள் அதை இணைக்குது. 657 00:44:44,400 --> 00:44:47,560 ஆமா. நான் சொல்றேன், அந்த கிழவர் தொல்லையா இருக்கார். 658 00:44:47,640 --> 00:44:49,480 சரி, கொஞ்சம் அதை மீண்டும் போடு. 659 00:44:49,560 --> 00:44:50,920 -அது வந்து... -மாட்டிட்டேயா? 660 00:44:51,000 --> 00:44:52,840 அவ்வளவுதான். பூட்டியாச்சு. 661 00:44:54,040 --> 00:44:56,400 சரி. வெளியே போவோம். 662 00:44:57,160 --> 00:44:59,280 -சரி, எப்படி திறக்கும்? -பட்டுனு திறக்கும். 663 00:45:08,880 --> 00:45:11,000 அது திரும்ப மூடாமல் பார்த்துக்கோ. 664 00:45:11,920 --> 00:45:13,400 அதை பிடிச்சிக்கோ. 665 00:45:17,120 --> 00:45:18,400 அடேங்கப்பா. 666 00:45:18,480 --> 00:45:21,760 இங்கே கொஞ்சம் பயமா இருக்கே தவிர, இந்த காட்சி ஆளை மயக்குது. 667 00:45:21,840 --> 00:45:23,080 நிச்சயம் சொல்லணும். 668 00:45:27,840 --> 00:45:29,600 -அய்யய்யோ. -என்ன கிடைச்சது? 669 00:45:31,720 --> 00:45:34,160 இது வண்டியின் மேல்பகுதி. வேற ஒண்ணும் இல்ல. 670 00:45:34,240 --> 00:45:37,120 இது ஒரு மயக்கும் காட்சி, ஆனால் நிலைமை வேற மாதிரி. 671 00:45:37,240 --> 00:45:39,440 அந்தரத்தில் 2,000 அடி மேல இருக்கப்பா. 672 00:45:39,560 --> 00:45:40,720 நில்லு! 673 00:45:40,800 --> 00:45:42,400 என்ன கிடைச்சது? 674 00:45:42,480 --> 00:45:44,880 அந்த கைப்பெட்டி, சட்டத்தில் தொங்குது. 675 00:45:50,200 --> 00:45:52,200 நீ அங்கே போய் அதை எடுக்க முடியுமா? 676 00:45:52,280 --> 00:45:55,080 -எனக்கு வேற வழி இல்ல போல. -இல்ல, நிஜமாவே இல்ல. 677 00:45:56,360 --> 00:45:58,360 கவனி, இது கொஞ்சம் ஆடுது. 678 00:46:03,920 --> 00:46:06,760 நான் இப்போ சுமார் 2,000 மீட்டர் மேலே, கேபிள் கார் மேல 679 00:46:06,840 --> 00:46:08,880 அந்தரத்தில் நிக்கிறேன். 680 00:46:18,960 --> 00:46:20,040 அச்சோடா. 681 00:46:22,480 --> 00:46:23,560 நீ நலம்தானா? 682 00:46:24,160 --> 00:46:26,640 -அதை எடுத்துட்டேன். -நல்லது, அதை கீழே கொடு. 683 00:46:26,720 --> 00:46:28,200 -இந்தா, பிடி. -கீழே கொடு. 684 00:46:28,280 --> 00:46:30,160 -அவ்வளவுதான். கிடைச்சது. -கிடைச்சதா? 685 00:46:30,240 --> 00:46:31,960 ஆமா, கிடைச்சது. நல்ல பையன். 686 00:46:32,680 --> 00:46:35,400 -நீ வரும்வரை காத்திருக்கேன். -சரி, இதோ வர்றேன். 687 00:46:37,360 --> 00:46:38,680 ஸ்டூல் வச்சிருக்கேன். 688 00:46:38,760 --> 00:46:40,680 ஆமா. எடுத்து அதன்மேல் வைக்கலாம். 689 00:46:40,800 --> 00:46:42,640 நாம சேர்ந்து செய்யலாம்பா. 690 00:46:43,560 --> 00:46:46,120 ஒண்ணு, ரெண்டு, மூணு. 691 00:47:07,640 --> 00:47:10,040 உங்கள் கீழே ரியோ டி ஜெனிரோ உள்ளது. 692 00:47:10,760 --> 00:47:15,600 உலகின் மிக பிரமிப்பான, ஆனால் சில நேரம் ஆபத்தான இடங்களில் இதுவும் ஒன்றாகும். 693 00:47:22,680 --> 00:47:26,240 இந்த நகரத்தின் குழப்பத்துக்கு இடையே பாஸ நோவா உருவானது. 694 00:47:26,320 --> 00:47:29,800 சாம்பாவின் ஒரு ஆழமான தூண்டுதல் மற்றும் உணர்ச்சி வகை... 695 00:47:34,600 --> 00:47:37,440 ...நீங்கள் இப்போது அதை கேட்கிறீர்கள். 696 00:47:48,400 --> 00:47:50,680 £100,000 க்கு, 697 00:47:52,680 --> 00:47:56,080 இந்த இசை என்ன உணர்வை தூண்டுவதாக கூறப்படுகிறது? 698 00:47:58,680 --> 00:47:59,560 மகிழ்ச்சியா, 699 00:48:00,960 --> 00:48:02,080 பொறாமையா, 700 00:48:03,600 --> 00:48:04,680 ஏக்கமா? 701 00:49:21,040 --> 00:49:23,040 வசனங்கள் மொழிபெயர்ப்பு ரவீந்திரன் அருணாசலம் 702 00:49:23,160 --> 00:49:25,120 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்