1 00:00:30,656 --> 00:00:35,118 எங்களை விட்டு பிரிந்துச் செல்லும் தேவதையே 2 00:00:35,202 --> 00:00:39,748 எங்களை விட்டுப் போகிறாய் 3 00:00:41,416 --> 00:00:45,462 மனதைக் கஷ்டப்படுத்திவிட்டுப் போகிறாய் 4 00:00:45,546 --> 00:00:50,467 என் மனம் வலிக்கிறது 5 00:00:51,677 --> 00:00:53,846 நீ போகிறாய்… 6 00:00:53,929 --> 00:00:55,556 அதை சளியால் நிரப்பப் போகிறாய். 7 00:00:57,391 --> 00:00:58,392 அழுவதை நிறுத்து. 8 00:01:02,312 --> 00:01:09,319 மறக்க முடியாத நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறாய் 9 00:01:14,658 --> 00:01:16,743 அம்மா, அப்பா, நாம் இங்கு என்ன செய்கின்றோம்? 10 00:01:16,827 --> 00:01:17,828 ஹலோ… 11 00:01:20,747 --> 00:01:23,333 -சரி… -மீண்டு வர கடினமாக இருந்தது… 12 00:01:23,417 --> 00:01:25,419 இது அவர் ஓய்வெடுக்க உதவலாம். 13 00:01:31,717 --> 00:01:33,719 -நீங்கள் நலம் தானே, அப்பா? -ஆமாம், அன்பே. 14 00:01:34,219 --> 00:01:35,846 நன்றி. எனக்கு ஒன்றுமில்லை. 15 00:01:37,014 --> 00:01:38,891 இப்போது எல்லோரும் கவனிக்கிறீர்கள் என்பதால், 16 00:01:39,558 --> 00:01:41,727 என் நண்பனைப் பற்றி பேச விரும்புகிறேன். 17 00:01:42,936 --> 00:01:46,064 ஹோஸெ லூயிஸ் மந்தமானவன். 18 00:01:46,148 --> 00:01:47,065 நல்ல அர்த்தத்தில் தான் சொல்கிறேன்… 19 00:01:47,149 --> 00:01:49,902 தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், நண்பா. 20 00:01:50,444 --> 00:01:55,199 அவன் நிதானமாகத் தன் வாழ்க்கையை வாழ்ந்தான். 21 00:01:55,741 --> 00:01:58,202 அவன் ஆம்புலன்ஸின் சைரனைக் கூட 22 00:02:00,162 --> 00:02:01,246 இந்த ஒலியில் மாற்றியமைத்தான்… 23 00:02:06,210 --> 00:02:07,586 அவனை மாதிரியே மெதுவாக இருக்கிறது. 24 00:02:07,669 --> 00:02:11,173 அவன் வாழ்க்கை மெதுவாக இருந்ததினால் தான் அவன் குழந்தைகளை அவனால் வளர்க்க முடிந்தது. 25 00:02:12,174 --> 00:02:16,470 அகப்புல்கோவிற்கு 100 முறைக்கு மேல் சென்று வர முடிந்தது. 26 00:02:16,553 --> 00:02:18,347 நான் கடற்கரையைப் பார்த்தே ரொம்ப நாட்களாகின்றன… 27 00:02:18,430 --> 00:02:19,681 அவர் நம்மை அழைத்துச் சென்றதே இல்லை. 28 00:02:19,765 --> 00:02:24,061 கிட்டத்தட்ட மரணத்தைத் தொட்டு வந்திருக்கும் நான், என் நண்பனைப் பற்றியும்… 29 00:02:24,811 --> 00:02:27,814 ஒரு மருத்துவ உதவியாளராக அவன் செய்த ஒப்பற்ற பணியைப் பற்றியும் யோசித்துப் பார்க்கிறேன். 30 00:02:27,898 --> 00:02:30,150 நீ பல உயிர்களைக் காப்பாற்றிவிட்டு இறந்திருக்கிறாய், நண்பா. 31 00:02:32,110 --> 00:02:33,654 எப்போது ஓய்வு பெறணும் என நாம்தான் முடிவு செய்யணும். 32 00:02:37,115 --> 00:02:40,452 உண்மையான போராளிக்கு ஒரு விஷயத்தை எப்போது முடிக்க வேண்டும் எனத் தெரியும். 33 00:02:40,536 --> 00:02:42,496 அப்படியென்றால் ஆம்புலன்ஸ் பணியிலிருந்து ஓய்வு பெறப் போகிறாரா? 34 00:02:42,579 --> 00:02:44,790 அவர் ஓய்வு பெற வேண்டும். 35 00:02:44,873 --> 00:02:49,169 என் இருதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு, 36 00:02:49,920 --> 00:02:53,173 கிட்டத்தட்ட மரணத்தைப் பார்த்தப் பிறகு, 37 00:02:54,800 --> 00:02:56,510 உங்களிடம் ஒன்றை அறிவிக்கப் போகிறேன். 38 00:02:57,135 --> 00:02:58,595 இல்லை, இல்லை, இல்லை… 39 00:03:04,059 --> 00:03:05,269 நான் திரும்பவும் வந்துவிட்டேன். 40 00:03:05,352 --> 00:03:07,020 அடடா. எப்படிப்பட்ட மனிதர். 41 00:03:07,104 --> 00:03:09,690 என் நண்பனைக் கௌரவப்படுத்தும் விதமாக, 42 00:03:10,941 --> 00:03:13,443 மீண்டும் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கப் போகிறேன். 43 00:03:13,527 --> 00:03:14,820 ஐயோ. 44 00:03:14,903 --> 00:03:16,196 அப்படி சொல்லுங்கள் அப்பா! 45 00:03:16,780 --> 00:03:18,282 வாயை மூடு, குட்டி. 46 00:03:58,322 --> 00:04:00,240 “மிட்நைட் ஃபேமிலி” என்ற ஆவணப்படத்தைத் தழுவியது 47 00:04:21,011 --> 00:04:22,596 நீ உடல் வலிமை பெறுவாய், ரமோன். 48 00:04:23,889 --> 00:04:25,098 திடகாத்திரமாவாய். 49 00:04:26,308 --> 00:04:27,518 மிகவும் வலிமை ஆவாய்! 50 00:05:05,931 --> 00:05:08,809 ஆசையில் விழுந்துவிடாதே, ரமோன். 51 00:05:10,060 --> 00:05:11,061 என்ன விஷயம்? 52 00:05:11,562 --> 00:05:13,897 நீயும் லெட்டியும் மாலை நேரங்களில் ஓட்டப் பயிற்சி செய்கிறீர்கள் தானே? 53 00:05:13,981 --> 00:05:15,399 ஆம், எப்போதுமே போவோம்! 54 00:05:15,482 --> 00:05:17,609 அதை தினசரி வேலையாக மாற்றிவிட்டால், 55 00:05:17,693 --> 00:05:19,987 நான் காலையிலும் வெளியே சென்று வருவேன், ரமோன். 56 00:05:20,070 --> 00:05:22,823 நான் ஜிம்மிற்குப் போவதால், பளு தூக்குதல், குத்துச் சண்டை ஆகியவற்றை பயில்கிறேன். 57 00:05:23,824 --> 00:05:26,076 ஹே, நீயும் என்னுடன் வரலாம். 58 00:05:26,577 --> 00:05:29,288 பளு தூக்குதல் பயிற்சி செய்யலாம். 59 00:05:29,788 --> 00:05:32,040 நீ ஏன் உன் ஓய்வு நேரத்தில் ஓட்டப் பயிற்சி செய்யக் கூடாது? 60 00:05:32,541 --> 00:05:34,585 குண்டாக இருப்பதால் ஏற்கனவே சோர்ந்திருக்கிறேன். 61 00:05:36,670 --> 00:05:38,380 உன்னைப் பற்றி நீயே அப்படி சொல்ல வேண்டாம்! 62 00:05:40,132 --> 00:05:42,885 உனக்குப் புரியவில்லையா, என்ன? அல்லது என்னுடன் விளையாடுகிறாயா? 63 00:05:43,594 --> 00:05:46,430 நம் எல்லோருக்குமே கஷ்டம் வரும், ரமோன். 64 00:05:46,513 --> 00:05:47,723 அதிலுள்ள நல்ல விஷயம் என்ன தெரியுமா? 65 00:05:47,806 --> 00:05:49,224 முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? 66 00:05:49,308 --> 00:05:51,810 ஒரு கஷ்டம் வந்துவிட்டால், அது தீருமே தவிர, மோசமாகாது. 67 00:05:52,311 --> 00:05:54,563 கடவுள் எனக்கு உதவினார், நிறைய உதவினார். 68 00:05:54,646 --> 00:05:55,898 எல்லா புகழும் இறைவனுக்கே! 69 00:05:55,981 --> 00:05:58,317 உனக்கும் அவர் உதவுவார், நீ விரும்பிக் கேட்டாலொழிய. 70 00:05:58,817 --> 00:06:00,986 நீங்கள் எனக்கு ஏற்கனவே ஞானஸ்நானம் கொடுத்துவிட்டீர்கள், ஃபாதர்? 71 00:06:01,069 --> 00:06:02,988 இன்னும் உனக்கு என்ன வேண்டும்? என்னைத் தனியாக விடு. 72 00:06:04,573 --> 00:06:06,283 நான் லெட்டிக்காகச் செய்தேன், நண்பா. 73 00:06:16,126 --> 00:06:18,295 நீ பெரிய முட்டாள், நிச்சயம் தேர்ச்சி பெறமாட்டாய்! 74 00:06:18,795 --> 00:06:20,547 நீ எனக்கு உதவ வேண்டும் என பிரின்சிபல் கூறினார். 75 00:06:20,631 --> 00:06:22,466 நான் பள்ளியில் நன்றாகத்தான் படிக்கிறேன். 76 00:06:22,549 --> 00:06:25,219 ஆனால் எனக்குத்தான் தண்டனை கிடைக்கிறது. 77 00:06:25,761 --> 00:06:27,596 அதை அவரிடம் சொல். என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? 78 00:06:29,932 --> 00:06:33,310 நீ ஆரம்பப் பள்ளியிலேயே பெருக்கல் முறையைக் கற்றிருக்க வேண்டும், 79 00:06:33,393 --> 00:06:34,937 நடுநிலைப் பள்ளியில் கற்கக் கூடாது! 80 00:06:35,020 --> 00:06:38,065 நான் ஏழாம் வகுப்பு தான் படிக்கிறேன். எனவே நான் போகிறேன். 81 00:06:38,148 --> 00:06:39,566 நீ போகக் கூடாது. 82 00:06:40,108 --> 00:06:42,152 நீ தேர்ச்சி பெறாவிட்டால் எனக்குக் கூடுதல் புள்ளிகள் கிடைக்காது! 83 00:06:42,236 --> 00:06:46,406 -நான் வேலைக்குப் போகணும். எனக்கு நேரமில்லை. -வேலைக்கா? நிஜமாகவா? என்ன வேலை? 84 00:06:46,990 --> 00:06:50,786 அது ரகசியம், ரகசியங்களை மற்றவர்களிடம் சொல்பவரிடம், என் ரகசியங்களைச் சொல்ல மாட்டேன். 85 00:06:50,869 --> 00:06:52,079 நான் ரகசியங்களை மற்றவர்களிடம் சொல்ல மாட்டேன். 86 00:06:52,162 --> 00:06:54,122 அப்படியென்றால் அந்த நர்ஸும், உடற்பயிற்சியாளரும் 87 00:06:54,206 --> 00:06:55,707 ஸ்டோர் ரூமில் ஒன்றாக இருந்ததை பிரின்சிபலிடம் யார் சொன்னது? 88 00:06:56,959 --> 00:07:00,295 நானாவது பொய் சொல்ல மாட்டேன், அல்லது என் அம்மாவை வருத்தப்பட வைக்க மாட்டேன். 89 00:07:00,921 --> 00:07:02,172 நானும் தான் பொய் சொல்ல மாட்டேன்! 90 00:07:03,215 --> 00:07:04,466 அதாவது எப்போதாவது சொல்வேன்… 91 00:07:05,425 --> 00:07:07,678 என் அம்மாவைப் பற்றி பேசாதே. நீ விஷயம் தெரியாமல் பேசுகிறாய். 92 00:07:07,761 --> 00:07:09,930 நீ என்ன வேலை செய்கிறாய் எனச் சொன்னால் 93 00:07:10,013 --> 00:07:11,265 நான் உனக்கு உதவியாக இருப்பேன். 94 00:07:12,140 --> 00:07:13,475 யாரிடமும் சொல்ல மாட்டாயே? 95 00:07:14,226 --> 00:07:15,227 சத்தியமாகச் சொல்ல மாட்டேன். 96 00:07:18,814 --> 00:07:20,649 மருத்துவ உதவியாளர்… 97 00:07:21,149 --> 00:07:22,776 மருத்துவ உதவியாளரா? 98 00:07:24,862 --> 00:07:27,072 நிலநடுக்கத்தின் போது சிலரைக் காப்பாற்றியிருக்கிறேன். 99 00:07:29,616 --> 00:07:32,494 எனக்குக் காண்பி 100 00:07:38,917 --> 00:07:43,297 தனக்கு பதில், இந்த வேலையைச் செய்யும் படி என் நண்பர் சொன்னார். 101 00:07:44,256 --> 00:07:47,050 நான் ஓட்டவில்லையென்றால் அவர்கள் எப்படி நம்மை நம்புவார்கள்? 102 00:07:47,676 --> 00:07:50,262 விடுங்கள், அப்பா! இங்கு அப்படியொன்றும் சலிப்பாக இல்லை. 103 00:07:50,345 --> 00:07:51,930 மேலும் நீங்கள் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். 104 00:07:53,473 --> 00:07:55,225 நான் எடுத்து வருகிறேன். 105 00:07:55,309 --> 00:07:56,727 பாருங்கள், தண்ணீரும் கொண்டு வந்திருக்கிறேன். 106 00:07:57,227 --> 00:08:01,273 உங்களைப் பார்த்துக்கொண்டால் தான் வீட்டிற்கு வர வேண்டும் என அம்மா சொன்னார், அதைத்தான் செய்கிறேன். 107 00:08:01,356 --> 00:08:04,067 பொறுமையாக இருங்கள், அப்பா. இப்போதுதான் சக்கர நாற்காலியிலிருந்து எழுந்திருக்கிறீர்கள். 108 00:08:04,151 --> 00:08:05,986 பக்கவாதம் ஏற்படக்கூடாதென்றால் அமைதியாக இருங்கள். 109 00:08:06,069 --> 00:08:07,487 டாக்டர் சொன்னதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். 110 00:08:07,571 --> 00:08:09,573 -அந்த டாக்டர். -அந்த டாக்டரா? 111 00:08:10,324 --> 00:08:11,950 -உனக்கு அந்த டாக்டரை பிடிக்கும், இல்லையா? -ரவுல்! 112 00:08:12,034 --> 00:08:13,493 -பேசாமல் ஓட்டு! -அவர் எங்கிருந்து வந்தார்? 113 00:08:13,577 --> 00:08:14,828 கண்டிப்பாக அவர் உன் ஆசிரியராகத் தான் இருப்பார். 114 00:08:14,912 --> 00:08:16,914 -டாக்டர் ரவுல்! -அட, உன்னைப் பாரேன்? 115 00:09:07,130 --> 00:09:09,466 அவள் முகமூடியை எடு! 116 00:09:14,263 --> 00:09:16,390 இவள் அவளைத் தோற்கடித்து விடுவாள் எனச் சொன்னேன் தானே! 117 00:09:19,810 --> 00:09:21,979 நாம் இருவரும் ஒரே மாதிரி தான்! 118 00:09:22,062 --> 00:09:23,939 எனக்கிருக்கும் பிரச்சினைகளை நீ உனக்கு வராமல் பார்த்துக்கொள்… 119 00:09:25,023 --> 00:09:28,068 இப்போதிருந்து கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளையும் டாக்கோஸ்களையும் சாப்பிடுவதை நிறுத்து. 120 00:09:42,708 --> 00:09:43,959 வாருங்கள், அறிவாளிகளே! தொடங்கலாம்! 121 00:09:58,849 --> 00:09:59,850 நீ விளையாடுகிறாய். 122 00:10:09,568 --> 00:10:12,446 அவளை முடித்துவிடு, அவளை முடித்துவிடு! 123 00:10:19,119 --> 00:10:21,205 -வா, அழகே. -அவளை விடு, கேவலமானவனே! 124 00:10:21,288 --> 00:10:23,874 -அவளைத் தனியாக விடு! -அவளை ஏன் பிடிக்கிறாய்? 125 00:10:24,541 --> 00:10:26,585 -அவனை விடு! -அவர்கள் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்! 126 00:10:26,668 --> 00:10:28,629 நீ இதில் தலையிடாதே! 127 00:10:31,256 --> 00:10:32,424 பார்த்தாயா? 128 00:10:32,508 --> 00:10:35,010 அற்புதமாக இருக்கிறது. இது நிகழ்ச்சியின் ஒரு அங்கம், தம்பி. 129 00:10:35,552 --> 00:10:38,138 -நிஜமாகவா? -ஆமாம், நண்பா! 130 00:10:48,690 --> 00:10:50,317 இது நிகழ்ச்சியின் அங்கம் மாதிரி தெரியவில்லை. 131 00:10:50,400 --> 00:10:52,444 ஆம்புலன்ஸில் ஏறுங்கள். சீக்கிரம், ஆம்புலன்ஸில் ஏறுங்கள். 132 00:10:52,528 --> 00:10:55,072 அப்பாவிற்கு யார் உதவி செய்வார்கள்? 133 00:10:59,785 --> 00:11:01,078 அவர் அங்கு என்ன செய்கிறார்? 134 00:11:01,161 --> 00:11:03,330 சரி, இவனை ஆம்புலன்ஸில் ஏற்று. நான் ரமோனை அழைத்து வருகிறேன்! 135 00:11:03,413 --> 00:11:04,873 -ஏன் அவரைப் போகவிட்டாய், நண்பா? -சீக்கிரம், ஓடு! 136 00:11:04,957 --> 00:11:06,458 -என் அப்பா! -இந்த ஒருமுறை மட்டும் 137 00:11:06,542 --> 00:11:08,627 நான் சொல்வதைக் கேள், இங்கிருந்து நகராதே, புரிந்ததா? 138 00:11:12,464 --> 00:11:16,760 வழிவிடுங்கள். வழிவிடுங்கள். கொஞ்சம் வழி விடுங்கள்! 139 00:11:18,512 --> 00:11:21,181 -குத்துப் படுவதிலிருந்து ஜாக்கிரதையாக இரு. -இவர்கள் என்னிடம் வம்பிழுக்கிறார்கள், நண்பா. 140 00:11:21,265 --> 00:11:22,933 அமைதியாக இரு. அந்தப் பையனுக்கு உதவி செய். 141 00:11:23,016 --> 00:11:24,935 அந்தப் பையனுக்கு உதவி செய். அதோ அங்கே! 142 00:11:33,193 --> 00:11:34,736 வருகிறோம், வருகிறோம்! 143 00:11:34,820 --> 00:11:36,488 ஹே, கேவலமானவர்களே! 144 00:11:36,572 --> 00:11:41,076 வழிவிடுங்கள். வழிவிடுங்கள். மருத்துவ உதவியாளர் வருகிறேன். 145 00:11:44,329 --> 00:11:46,331 ஹாய், நான் அவசர சிகிச்சையாளர், நான் உங்களுக்கு உதவட்டுமா? 146 00:11:46,415 --> 00:11:48,792 பயப்படாதே, அன்பே. இரத்தத்தைப் பார்த்து பயப்படாதே. 147 00:11:48,876 --> 00:11:50,544 இது ஆன்டிகோவாகுலண்ட் மருந்தினால். 148 00:11:50,627 --> 00:11:52,921 உங்களுக்கு இதய நோய் போன்ற எதுவும் இல்லை தானே? 149 00:11:53,005 --> 00:11:55,090 -என் வேலைக்காக அதை பயன்படுத்துவேன். -சரி. 150 00:11:55,174 --> 00:11:56,466 பார்வையாளர்கள் மீது படவேண்டும் என்பதற்காக சாப்பிடுவேன். 151 00:11:56,550 --> 00:11:58,844 சரி, அப்படியே இருங்கள். தலையை அசைக்காதீர்கள், சரியா? 152 00:11:58,927 --> 00:12:00,137 அசையாதீர்கள், அப்படியே இருங்கள். 153 00:12:02,347 --> 00:12:03,932 உங்கள் முகமூடியை அகற்ற வேண்டும், சரியா? இல்லை என்றால்… 154 00:12:04,016 --> 00:12:05,767 ஐயோ! வேண்டாம்! வேண்டாம், வேண்டாம், வேண்டாம்! 155 00:12:05,851 --> 00:12:07,644 அதை அகற்றினால் தான் இரத்தம் வெளியே வரும்! 156 00:12:07,728 --> 00:12:08,770 என்னால் அதை எடுக்க முடியாது. 157 00:12:08,854 --> 00:12:10,564 சரி, நீங்கள் சொன்ன மாதிரியே செய்யலாம். 158 00:12:10,647 --> 00:12:12,024 நான் வெட்டுகிறேன். சரியா… 159 00:12:12,107 --> 00:12:14,985 ஆன்டிகோவாகுலன்ட்ஸா? என்ன இது…? 160 00:12:15,068 --> 00:12:18,864 போட்டி விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இதையெல்லாம் செய்வார்கள்… 161 00:12:18,947 --> 00:12:21,450 அதாவது, நாம் எல்லோரும் இதைத்தானே செய்வோம். 162 00:12:21,533 --> 00:12:25,495 நமக்குச் சரியென்று தோன்றுவதை தான் நம் வாழ்க்கையிலும், வேலையிலும் செய்கிறோம். 163 00:12:25,579 --> 00:12:28,457 நாம் அடி வாங்கும்போது அதைச் சமாளித்து, முகத்தைச் சந்தோஷமாக வைத்துக்கொள்ளணும், இல்லையா? 164 00:12:29,458 --> 00:12:30,626 ரமோன்! 165 00:12:31,126 --> 00:12:32,294 அமைதி, அமைதி. 166 00:12:32,377 --> 00:12:33,962 வாருங்கள் போகலாம், அப்பா! 167 00:12:38,050 --> 00:12:39,635 -எப்படியிருக்கிறீர்கள்? மயக்கம் வருகிறதா? -ரொம்பவே. 168 00:12:39,718 --> 00:12:42,304 ஒன்றும் பிரச்சினையில்லையே? உங்களைத் தூக்கிவிடுகிறேன், சரியா? 169 00:12:42,387 --> 00:12:43,805 கவனமாக எழுந்திருங்கள். 170 00:12:43,889 --> 00:12:45,057 ஸ்ட்ரெச்சர் கொண்டு வா, நண்பா! 171 00:12:46,642 --> 00:12:49,394 கீழே, கீழே, முழுவதுமாகக் கீழே இறக்கு! அவரை அதில் படுக்க வை. 172 00:12:49,478 --> 00:12:50,771 -ஒரு நொடி! -என் நண்பருக்கு உதவுங்கள். 173 00:12:50,854 --> 00:12:52,481 அவரைப் பாருங்கள். 174 00:12:52,564 --> 00:12:54,107 சரி. நன்றி, அன்பே! 175 00:12:54,191 --> 00:12:56,151 -தயவுசெய்து, அவருக்கு உதவுங்கள். -இதோ வருகிறோம். 176 00:12:56,235 --> 00:12:58,487 -மூன்று எண்ணுகையில்… ஒன்று, இரண்டு, மூன்று! -தயவுசெய்து. 177 00:12:58,570 --> 00:13:00,197 நகர்த்து! நகர்த்து! 178 00:13:00,280 --> 00:13:02,741 ஒன்றும் பிரச்சினையில்லை. அவரை ஏற்றிவிட்டீர்களா? 179 00:13:02,824 --> 00:13:05,410 -கொஞ்சம் பொறுங்கள்! இதோ வருகிறேன். -அவருக்கு இரத்தம் வருகிறது. உதவுங்கள். 180 00:13:05,494 --> 00:13:07,913 கொஞ்சம் பொறுங்கள், நண்பா! 181 00:13:08,580 --> 00:13:10,749 -கொஞ்சம் அமைதியாக இருங்கள். -கேவலமானவர்களே. 182 00:13:10,832 --> 00:13:12,918 இதோ வந்துவிடுகிறோம், ப்ரோ. கொஞ்ச நேரத்தில் பார்க்கலாம், நண்பா. 183 00:13:13,001 --> 00:13:15,504 பதட்டப்படாதீர்கள், நண்பா. இங்கு ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. 184 00:13:15,587 --> 00:13:18,549 போகலாம், நண்பா. போகலாம். எங்கே அந்த ஹுலியோ? 185 00:13:18,632 --> 00:13:21,009 -ஹுலிடோ! -ஹுலியோ எங்கே போய்த் தொலைந்தான்? 186 00:13:21,093 --> 00:13:23,011 டாக்டர், நாம் இப்போது கிளம்ப வேண்டும்! 187 00:13:23,095 --> 00:13:24,429 பொறுங்கள்! 188 00:13:24,513 --> 00:13:25,931 -ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை! -வேகமாக போ, அண்ணா! 189 00:13:26,515 --> 00:13:28,058 பீக்காவைத் தொலைத்துவிட்டேன்! 190 00:13:28,141 --> 00:13:29,601 எதை தொலைத்துவிட்டாய்? 191 00:13:31,144 --> 00:13:32,479 அவளைக் கண்டுபிடித்துவிட்டேன்! 192 00:13:33,105 --> 00:13:33,939 என்ன இது… 193 00:13:53,417 --> 00:13:54,543 சீக்கிரம் ஏறு, நண்பா! 194 00:14:21,195 --> 00:14:23,071 அடிப்படை முதலுதவி 195 00:14:29,036 --> 00:14:30,871 சிமெனா மான்டெமயோ… 196 00:14:32,039 --> 00:14:33,081 அங்கிருந்து கீழே இறங்கு! 197 00:14:43,050 --> 00:14:44,218 உனக்கு என்ன ஆச்சு? 198 00:14:45,344 --> 00:14:46,470 என்ன இதெல்லாம்? 199 00:14:47,304 --> 00:14:48,889 -மன்னியுங்கள். -இது உன்னுடையதா? 200 00:14:50,474 --> 00:14:51,475 மன்னியுங்கள். 201 00:14:53,560 --> 00:14:56,772 மன்னித்துவிடுங்கள், மேடம். உங்கள் மகள் ஆம்புலன்ஸில் இருந்தது எங்களுக்குத் தெரியாது. 202 00:14:56,855 --> 00:14:59,525 என் மகள் உங்கள் மகனுக்குப் படிப்பு சொல்லித் தருகிறாள். 203 00:14:59,608 --> 00:15:01,193 ஆனால் அவளை நீங்கள் கெடுக்கிறீர்கள். 204 00:15:01,276 --> 00:15:03,654 மேடம், புரிந்துக்கொள்ளுங்கள்… 205 00:15:03,737 --> 00:15:07,407 அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளைக் கைவிட்டால், இப்படித்தான் நடக்கும். 206 00:15:10,327 --> 00:15:11,703 வா போகலாம். 207 00:15:13,372 --> 00:15:15,165 திரும்பிப் பார்க்காதே. 208 00:15:15,249 --> 00:15:16,875 மறுபடியும் இது போன்ற எதையும் செய்யாதே. 209 00:15:24,508 --> 00:15:27,511 ஆனால், கடத்துகிறோம் எனத் தெரியாமலேயே ஒரு குழந்தையை எப்படி கடத்தினீர்கள்? 210 00:15:27,594 --> 00:15:30,222 நான் அவளைக் கடத்தவில்லை. உங்கள் மகன் தான் யாருக்கும் தெரியாமல் அழைத்து வந்திருக்கிறான். 211 00:15:30,305 --> 00:15:31,682 -விளையாடுகிறீர்கள். -நான் அவளைக் கடத்தவில்லை. 212 00:15:31,765 --> 00:15:34,142 பீக்கா உள்ளே வருவதற்கு 100 பெஸோஸ்கள் கொடுத்தாள். 213 00:15:34,726 --> 00:15:36,103 -என்ன? -நீ சரியான முட்டாள், இழிவானவனே. 214 00:15:36,186 --> 00:15:38,313 -பீக்கா, “போய் வங்கியை கொள்ளையடி” என்றால்… -அவள் விரும்பினாள். 215 00:15:38,397 --> 00:15:39,398 …அங்கு போய் கொள்ளையடிப்பாயா? 216 00:15:39,481 --> 00:15:43,235 உன்னைப் பள்ளியிலிருந்து நீக்க வேண்டாம் என பிரின்சிபலிடம் கெஞ்சினேன், ஆனால் இப்போது பார். 217 00:15:43,318 --> 00:15:45,195 நல்ல பிள்ளையாக இருப்பாய் என உறுதியளித்தாய்! 218 00:15:45,279 --> 00:15:46,989 இப்போது நீங்கள் அம்மா ஆகிவிட்டீர்களா, லெட்டி? 219 00:15:47,072 --> 00:15:49,825 நல்ல பிளையாகத்தான் இருக்கிறேன். அவரைப் பார்த்துக்கொள்ள சொல்லி என்னை அனுப்புனீர்கள். 220 00:15:49,908 --> 00:15:53,036 பார்த்துக்கொள்ளச் சொல்லி! நண்பர்களுடன் விளையாடச் சொல்லவில்லை. 221 00:15:53,120 --> 00:15:55,831 வாயை மூடுங்கள், உங்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தும் பேசாமல் இருந்துவிட்டீர்கள். 222 00:15:56,915 --> 00:15:58,709 -உங்களுக்குத் தெரியுமா? -என்ன இது, ரமோன்? 223 00:15:58,792 --> 00:16:00,169 உங்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தும் ஹுலியோவைத் திட்டுகிறீர்களா? 224 00:16:00,252 --> 00:16:01,837 ஒரு சிறுமியைப் பார்த்த பிறகும் எதுவும் கேட்கவில்லையா? 225 00:16:01,920 --> 00:16:05,591 -நீங்கள் பெரிய மனுஷன், ரமோன்! கடவுளே! -அவன் மீதும் தவறு சொல்ல முடியாது. 226 00:16:05,674 --> 00:16:07,009 நீங்காள் பெரிய மனுஷன். 227 00:16:07,092 --> 00:16:10,053 நீங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்திருக்கக் கூடாது. நீங்கள் பிரிந்திருப்பது தான் நல்லது. 228 00:16:16,643 --> 00:16:17,728 அவன் சொல்வது சரிதான். 229 00:16:18,312 --> 00:16:20,814 நான் போகிறேன். வேறெங்காவது சந்திக்கலாம். 230 00:16:53,138 --> 00:16:54,264 மூடப்பட்டுள்ளது 231 00:17:19,122 --> 00:17:21,083 என்ன சாப்பிடுகிறாய்? சொல்லு, நான் ஆர்டர் செய்கிறேன். 232 00:17:22,251 --> 00:17:25,753 அன்றே சொன்னேனே, எனக்கு டாக்கோஸ் சாப்பிட வேண்டும் போல இருக்கிறது. 233 00:17:25,838 --> 00:17:27,256 நாம் சாப்பிடலாம். 234 00:17:28,674 --> 00:17:32,761 ஆனால் நீ வேலைக்குப் போக வேண்டும், நான் மீண்டும் மருத்துவமனைக்குப் போக வேண்டும். 235 00:17:33,595 --> 00:17:36,223 இரண்டு மணிநேர அவகாசம் தான் உள்ளது, அதை நன்கு பயன்படுத்திக்கொள்ளணும், இல்லையா? 236 00:17:37,099 --> 00:17:39,351 ம். நீங்கள் மருத்துவ பயிற்சியை முடிக்கும் வரை 237 00:17:39,434 --> 00:17:41,395 இதுதான் நிலைமை என நினைக்கிறேன். 238 00:17:41,478 --> 00:17:43,146 நான் பள்ளியிலிருந்து வெளியேறிவிட்டேன், இல்லையா? 239 00:17:44,314 --> 00:17:45,816 என்ன? 240 00:17:46,733 --> 00:17:49,152 அதாவது, நாம் மருத்துவமனையில் சந்திக்கிறோம், உறவு கொள்கிறோம். 241 00:17:49,236 --> 00:17:51,822 உங்கள் இடத்தில் சந்தித்தாலும், உறவு கொள்கிறோம். 242 00:17:51,905 --> 00:17:54,241 என் இடத்தில் தான், உன் அப்பாவிற்கு அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்தேன். 243 00:17:58,537 --> 00:18:00,122 மன்னித்துவிடு அப்படி சொல்லியிருக்கக் கூடாது. 244 00:18:00,205 --> 00:18:01,290 பரவாயில்லை. 245 00:18:03,333 --> 00:18:05,669 நீங்கள் என் அப்பாவிற்குச் செய்த உதவிக்கு ரொம்ப நன்றி. 246 00:18:05,752 --> 00:18:07,254 மன்னித்துவிடு. நான் பேசியது தவறு. 247 00:18:07,337 --> 00:18:09,131 ஆம். தவறுதான். 248 00:18:10,507 --> 00:18:12,217 ஹே, போகாதே. என்னை மன்னித்துவிடு. 249 00:18:17,264 --> 00:18:19,099 இங்கு ரொம்ப குளிராக இருக்கிறது. 250 00:18:19,183 --> 00:18:20,767 குறை சொல்வதை நிறுத்து. 251 00:18:20,851 --> 00:18:23,395 நீ நன்றாக தான் இருக்கிறாய்! நிறுத்து. 252 00:18:23,478 --> 00:18:25,189 -தெரியும்… -மாரேயை தானே பார்க்க வந்திருக்கிறோம்? 253 00:18:25,272 --> 00:18:28,442 தெரியும், அவள் என்னைப் பார்க்கும் போது நான் அழகாக இருக்க வேண்டும். 254 00:18:28,525 --> 00:18:29,985 நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். 255 00:18:30,068 --> 00:18:32,696 இந்தப் பெண் ரொம்ப திறமைசாலி! 256 00:18:32,779 --> 00:18:35,908 அந்தப் பாடல் வரிகள். அவள் அதை எனக்காக எழுதியது போல இருக்கிறது. 257 00:18:35,991 --> 00:18:37,659 நிஜமாகவா? 258 00:18:37,743 --> 00:18:40,537 அவளால் வெற்றிகரமாக வாழ முடியுமென்றால், நம்மாலும் முடியும். 259 00:18:40,621 --> 00:18:42,247 நீ அவளுக்கு ரசிகையாகிவிட்டாயா, கிரிஸிஸ்? 260 00:18:42,331 --> 00:18:43,957 உனக்கு மாரேயை யார் அறிமுகப்படுத்தியது? 261 00:18:44,041 --> 00:18:45,375 ஒரு பாட்டுப் பாடு பார்க்கலாம். 262 00:18:45,459 --> 00:18:46,710 நீ முதலில் பாடு. 263 00:18:48,337 --> 00:18:50,339 எனக்கு இது தான் ஞாபகம் வருகிறது: 264 00:18:50,422 --> 00:18:53,509 “நீ செல்லும் பாதையைப் பாராட்டுவேன், ஆனால் உன் வழியைப் பின்பற்ற மாட்டேன்.” 265 00:18:53,592 --> 00:18:54,593 அற்புதம். 266 00:18:54,676 --> 00:18:57,387 இது வீணாய்ப்போன ரமோனுக்கு! எக்கேடோ கெட்டுப் போகட்டும்! 267 00:18:58,514 --> 00:18:59,932 அவர் இன்னும் வீட்டிற்கு வரவில்லையா? 268 00:19:01,558 --> 00:19:04,353 இல்லை, லெட்டி செய்ததைத்தான் அவரும் செய்தார். 269 00:19:04,436 --> 00:19:05,604 கோபப்பட்டார், பிறகு வெளியே சென்றுவிட்டார். 270 00:19:05,687 --> 00:19:07,189 அவரது குழந்தைகள்? அவர்களுக்கு பிரச்சினையில்லை தானே? 271 00:19:07,272 --> 00:19:08,273 நன்றாக இருக்கிறார்கள். 272 00:19:08,357 --> 00:19:10,526 -அன்பே. -அவரை விட்டுத்தள்ளு. 273 00:19:11,610 --> 00:19:13,612 -ஆனால் நான் அப்படியில்லை. -தெரியும்! 274 00:19:13,695 --> 00:19:15,739 இல்லை, நிஜமாகத்தான் சொல்கிறேன், கிரிஸிஸ், நான் பின்வாங்க மாட்டேன்! 275 00:19:15,822 --> 00:19:18,450 -தெரியும், தெரியும் நீ பின்வாங்க மாட்டாய்! -உனக்கும், உன்… 276 00:19:19,493 --> 00:19:21,662 வந்து, நான் பின்வாங்க மாட்டேன் எனச் சொல்ல வந்தேன். 277 00:19:21,745 --> 00:19:25,499 நமக்குக் குழந்தை வேண்டுமென்றால், வந்து, நீ ஆசைப்பட்டால்… 278 00:19:26,208 --> 00:19:29,461 இப்போது, அது ஒரு குழந்தை இல்லை, அது ஒரு கரு தான் 279 00:19:29,545 --> 00:19:32,005 இருந்தாலும் உன் விருப்பப்படி செய்யலாம், கிரிஸ். 280 00:19:32,089 --> 00:19:34,800 -என்ன சொல்ல வருகிறேன் என்றால்… -ஹே, எங்கே போகிறாய்? 281 00:19:34,883 --> 00:19:38,178 ஹே, பெரிய பையா, வரிசையில் நிற்காமல் போகிறாய்? இவன் வரிசையில் நிற்காமல் போகிறான்! 282 00:19:39,930 --> 00:19:41,473 அயோக்கியன்! 283 00:19:41,557 --> 00:19:44,685 -நீ ஒரு நல்ல அம்மாவாக இருப்பாய், செல்லம். -ஹே, நாம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும், அன்பே. 284 00:19:44,768 --> 00:19:45,936 சரி! 285 00:19:46,019 --> 00:19:47,771 அவர்கள் நம்மைப் பார்த்துவிட்டால், நம் கவனம் சிதறும், நம்மை முந்திவிடுவார்கள். 286 00:19:47,855 --> 00:19:50,399 -அடுத்த அணியினர்! -நாம் போக வேண்டும், மாரே. 287 00:19:50,482 --> 00:19:51,692 வருகிறோம்! 288 00:19:52,651 --> 00:19:53,902 ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா? 289 00:19:55,529 --> 00:19:56,905 நன்றி! 290 00:20:00,659 --> 00:20:02,077 அவ்வளவுதான், நண்பர்களே. 291 00:20:02,160 --> 00:20:05,163 இல்லை, ஏமாற்றாதே நண்பா. நாங்கள் ரொம்ப நேரமாக காத்திருக்கிறோம். 292 00:20:05,247 --> 00:20:07,457 -மன்னிக்கவும். என்னால் ஒன்றும் செய்ய முடியாது. -ஆக? நாங்கள் உள்ளே செல்ல முடியாதா? 293 00:20:07,541 --> 00:20:09,001 உங்களால் ஒன்றும் செய்ய முடியாதென்றால் என்ன அர்த்தம்? 294 00:20:09,084 --> 00:20:10,794 உங்களால் முடியாதென்றால், வேறு யாரால் முடியும்? 295 00:20:10,878 --> 00:20:12,421 என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? 296 00:20:12,504 --> 00:20:14,423 “என்ன செய்யச் சொல்கிறீர்கள்” என்றால்? எனக்குப் புரியவில்லை. 297 00:20:14,506 --> 00:20:16,383 அவரையே நேராக வந்து எங்களிடம் சொல்லச் சொல்லுங்கள். 298 00:20:16,466 --> 00:20:18,343 நீங்கள் ஒரு காரணத்திற்காகத் தானே இங்கு வேலை செய்கிறீர்கள்? 299 00:20:18,427 --> 00:20:20,971 அவர்கள் நம்மை மாரேயைப் பார்க்க விட மாட்டார்களாம். 300 00:20:21,054 --> 00:20:24,057 பாருங்கள், சார், நான் மாரேயை பார்க்கத் தான் வந்திருக்கிறேன், அவரைப் பார்க்காமல் போக மாட்டேன். 301 00:20:24,141 --> 00:20:26,143 -நீங்களே பார்ப்பீர்கள். -அவர் போய்விட்டார். 302 00:20:46,455 --> 00:20:47,789 ஐயோ! 303 00:20:47,873 --> 00:20:49,958 இதை இனி நான் போட்டுக்கொள்ள முடியாது. 304 00:20:51,668 --> 00:20:53,462 இதற்காகத்தான் என்னைக் காப்பாற்றினாயா? 305 00:20:54,046 --> 00:20:57,299 ஒட்டகச்சிவிங்கி முகமூடியால் மூச்சுத் திணறுவதற்காகவா? 306 00:20:57,382 --> 00:20:59,092 இல்லை! மன்னிக்கவும். வந்து… 307 00:20:59,176 --> 00:21:02,137 ஒரு நடிகைக்கு ஏற்ற வேறொரு பரிசு பற்றி நான் யோசிக்கவில்லை, மன்னிக்கவும். 308 00:21:02,221 --> 00:21:05,807 பாருங்கள், இதனால் நிச்சயம் உங்களுக்கு மூச்சுத் திணறாது. 309 00:21:07,434 --> 00:21:09,603 “விரைவாக நலம் பெறுவதற்கான யோகா.” 310 00:21:12,981 --> 00:21:14,983 அதைப்பற்றி நீ யோசிக்கவில்லை, இல்லையா? 311 00:21:15,901 --> 00:21:17,945 இல்லை, நீங்கள் நலமான பிறகு யோசிப்பேன். 312 00:21:19,112 --> 00:21:20,697 நான் அப்படி நினைக்கவில்லை. 313 00:21:20,781 --> 00:21:22,824 சரி, என்னுடைய டிராமாடாலஜிஸ்ட்க்கு இதைக் கொடுக்கிறேன். 314 00:21:25,994 --> 00:21:28,622 -பிரச்சினையில்லை, இல்லை, அதாவது… -பரவாயில்லை. 315 00:21:29,248 --> 00:21:32,125 சமீபமாக எனக்கு கிண்டலாகப் பேச வருவதில்லை. 316 00:21:33,377 --> 00:21:35,170 -அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். -பரவாயில்லை, நலே. 317 00:21:35,254 --> 00:21:36,380 இந்தளவுக்கு எதிர்மறையாக நினைக்காதீர்கள். 318 00:21:37,256 --> 00:21:39,049 சில சமயங்கள் பிரச்சினைகள் தீராது, 319 00:21:39,758 --> 00:21:42,344 மற்றும் எப்போதும் நம்பிக்கையாக இருப்பது சோர்வு கொடுக்கும். 320 00:21:43,512 --> 00:21:44,930 சிறிது காலத்திற்கு, 321 00:21:45,931 --> 00:21:47,224 தோல்வியை ஒப்புக்கொள்வது நல்லது தான். 322 00:21:48,517 --> 00:21:51,103 அது எனக்கு இன்னும் புரியவில்லை. நிறைய விஷயங்கள் நடந்து விட்டன! 323 00:21:57,609 --> 00:21:59,695 ஓட்டப் பயிற்சிக்காக எவ்வளவு ஏங்குகிறேன் தெரியுமா, 324 00:22:00,320 --> 00:22:02,072 அது எனக்கு மிகவும் புத்துணர்ச்சி கொடுக்கும். 325 00:22:02,823 --> 00:22:05,117 ஒவ்வொரு நாளும் அப்படித்தான் தொடங்கும். 326 00:22:12,207 --> 00:22:13,333 கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்! 327 00:22:13,417 --> 00:22:14,835 -ஏன்? -கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்! 328 00:22:14,918 --> 00:22:17,671 ஏனென்றால், சீக்கிரமே நாம் ஓடப் போகிறோம், சரியா? போகலாம், போகலாம்! 329 00:22:18,172 --> 00:22:21,341 ஆமாம், ஆமாம்! உன்னால் முடியும் தெரியும் 330 00:22:21,925 --> 00:22:25,929 இருவருக்கு எதிராக ஒருவர் என்பது நியாயம் கிடையாது 331 00:22:27,431 --> 00:22:28,974 நாமும் பாடலாம். 332 00:22:29,057 --> 00:22:30,434 நல்ல விஷயம். 333 00:22:41,528 --> 00:22:43,322 அட வா, பிளாண்டி, பாடு. 334 00:22:46,158 --> 00:22:48,535 உன் கண்களுக்குள் பார்த்தால் ஏதோ எதிர்பார்ப்பு தெரிகிறது 335 00:22:48,619 --> 00:22:51,205 அந்தப் பார்வை ஏமாற்றாது அது என் கனவில் விரிவடைகிறது 336 00:22:51,288 --> 00:22:53,498 அது மௌனமாக என்னோடு பேசுகிறது நான் பொய் சொல்லப் போவதில்லை 337 00:22:53,582 --> 00:22:56,668 உன் மேல் பைத்தியமாக இருக்கிறேன் எது நடந்தாலும் அதற்குத் தயாராக இருக்கிறேன் 338 00:22:56,752 --> 00:22:59,046 விதியை மாற்றும் யோசனை உனக்கு எங்கிருந்து வருகிறது? 339 00:22:59,129 --> 00:23:01,590 நாளை என்பது உறுதி இல்லை நான் எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதில்லை 340 00:23:01,673 --> 00:23:03,926 திடீரென்று வந்த மாற்றத்தினால் எல்லாம் குழப்பமாகி விட்டது 341 00:23:04,009 --> 00:23:07,221 நான் வழிகாட்டுப் பலகைகளை நம்ப மாட்டேன் என் சொந்த பாதையை அமைப்பேன் 342 00:23:07,304 --> 00:23:09,973 நாம் எங்கு இருக்கிறோம் எனப் பாரு எங்கு இருக்கிறோம் 343 00:23:10,057 --> 00:23:12,726 நாம் தோற்று விட்டால் என்ன செய்வது? 344 00:23:12,809 --> 00:23:15,062 நாம் எங்கு இருக்கிறோம் எனப் பாரு எங்கு இருக்கிறோம் 345 00:23:15,145 --> 00:23:18,440 நெருப்பு மன்னிக்காது நான் நெருப்பில் எரிகிறேன் 346 00:23:18,524 --> 00:23:21,360 நான் உனக்கு ஆதரவாக இருப்பேன் எனக்கு பயமில்லை என உனக்கே தெரியும் 347 00:23:21,443 --> 00:23:23,403 என்னைத் தடுக்கும் பைத்தியக்காரத்தனமான விஷயமே கிடையாது 348 00:23:23,487 --> 00:23:26,323 இன்னும் பிறக்காத ஒருவனிடம் என்ன சொல்வதென்று எனக்குத் தெரியும் 349 00:23:26,406 --> 00:23:28,700 சிறப்பானவற்றினால் நீ உருவாக்கப்பட்டுள்ளாய் 350 00:23:28,784 --> 00:23:31,203 நாம் எங்கு இருக்கிறோம் எனப் பாரு எங்கு இருக்கிறோம் 351 00:23:31,286 --> 00:23:33,580 நாம் தோற்று விட்டால் என்ன செய்வது? 352 00:23:33,664 --> 00:23:36,416 நாம் எங்கு இருக்கிறோம் எனப் பாரு எங்கு இருக்கிறோம் 353 00:23:36,500 --> 00:23:39,378 நெருப்பு மன்னிக்காது நான் நெருப்பில் எரிகிறேன் 354 00:23:43,340 --> 00:23:46,009 உன்னை நேசிக்கிறேன்! ரொம்பவே நேசிக்கிறேன்! 355 00:23:53,058 --> 00:23:55,185 ஒரு சிறு ஓய்வு, சரியா? 356 00:24:09,241 --> 00:24:11,493 ஆக்சோலோடில் சுற்றுச்சூழல் காப்பகம் ஆக்சோலோடில்களின் புகலிடம் 357 00:24:11,577 --> 00:24:12,828 நாம் இங்கு என்ன செய்கிறோம்? 358 00:24:12,911 --> 00:24:14,246 கொஞ்சம் உதவ முடியுமா? 359 00:24:23,714 --> 00:24:25,966 -உண்மையாகவே என்னிடம் சொல்ல மாட்டாயா? -பொறுமையாக இரு, டமாயோ. 360 00:24:26,550 --> 00:24:27,718 கொஞ்சம் உதவி செய். 361 00:24:27,801 --> 00:24:30,387 -பெர்னார்டோ! -என்ன விஷயம்? எல்லாம் எப்படி போகிறது? 362 00:24:30,470 --> 00:24:31,638 எல்லாம் நல்லபடியாக போகிறது! 363 00:24:31,722 --> 00:24:33,223 பாரு, பாஞ்சோ, மேரிகபி. மேரிகபி, பாஞ்சோ. 364 00:24:33,307 --> 00:24:35,392 -எப்படி இருக்கிறாய்? உன்னைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. -மகிழ்ச்சி. 365 00:24:35,475 --> 00:24:37,019 அது வந்து… ஜாக்கிரதை. 366 00:24:37,102 --> 00:24:38,645 இரு. இன்னொன்று தருகிறேன். 367 00:24:47,279 --> 00:24:48,405 ஹாய்! 368 00:24:48,488 --> 00:24:50,908 பாரு! இங்கே வா. 369 00:24:52,993 --> 00:24:54,620 இது பிக்ஸி. எனக்கு இதை ரொம்ப பிடிக்கும். 370 00:24:55,746 --> 00:24:57,956 பாரு, இது என்னைப் பார்த்ததும் சிரிக்கிறது. 371 00:24:58,040 --> 00:25:01,251 மன்னித்துவிடு. அதிகம் நம்பாதே. அது எல்லாரைப் பார்த்தும் சிரிக்கும். 372 00:25:01,335 --> 00:25:02,711 ஆக, இது உன்னைப் போன்றதா? 373 00:25:02,794 --> 00:25:03,795 புரியவில்லை. என்னைப் போலவா? 374 00:25:03,879 --> 00:25:05,714 ஆமாம், பள்ளியில் உன்னை “அலைபாயும் கண்கள்” என்பார்கள். 375 00:25:05,797 --> 00:25:06,882 -என்னையா? -ஆமாம். 376 00:25:06,965 --> 00:25:07,966 நீ எப்படி சொல்லக்கூடாது. 377 00:25:08,050 --> 00:25:09,301 -என் நடத்தை கண்ணியமானது. -அப்படியா. ஓ, சரி. 378 00:25:09,384 --> 00:25:11,011 இல்லை, இல்லை. நிறுத்து, நிறுத்து. 379 00:25:11,094 --> 00:25:12,554 இவை மிக மென்மையானவை. 380 00:25:12,638 --> 00:25:14,348 -உன்னைப் போலவா? -அதுவுமா? 381 00:25:14,431 --> 00:25:18,185 -அவையும் உன்னைப் போல தான்! நல்லவை. -அதே தான். ஆம், என்னைப் போல. 382 00:25:24,691 --> 00:25:26,276 -ஹே, ஹே! -உங்களுக்கு என்ன வேண்டும்? 383 00:25:26,360 --> 00:25:27,736 எங்களுக்கு எல்லாம் தெரியும்! 384 00:25:27,819 --> 00:25:29,279 எனக்கு ஃபோட்டோக்கள், வீடியோக்கள், ரத்தம்… 385 00:25:29,363 --> 00:25:31,615 எலும்புகள் வேண்டும். எனக்கு என்ன காட்டணும் என உனக்கே தெரியும். நடிக்காதே. 386 00:25:32,199 --> 00:25:34,993 சரி, போதும். இப்போது, நகருங்கள்! 387 00:25:35,077 --> 00:25:36,245 ஆனால் நீ… 388 00:25:36,328 --> 00:25:37,746 -எனக்குத் தெரியும்… -அவர்களிடம் என்ன சொன்னாய்? 389 00:25:37,829 --> 00:25:39,831 பொறு. அமைதியாக இரு, சரியா? 390 00:25:40,916 --> 00:25:42,459 ஹே, ஹே, ஹே. என்ன இது? 391 00:25:42,543 --> 00:25:44,294 ஹே, பீக்கா கோபப்படுகிறாள்! 392 00:25:44,378 --> 00:25:46,338 அவள் சின்னப் பொண்ணு தான், ஆனால் புத்திசாலி. 393 00:25:50,968 --> 00:25:52,261 அதைப் புரிந்துகொள்! 394 00:25:52,344 --> 00:25:53,595 எதைப் புரிந்துகொள்ளணும்? 395 00:25:53,679 --> 00:25:57,558 நாம் பிரபலமானவர்கள், முட்டாளே. 396 00:25:57,641 --> 00:26:00,060 நீ என்னோடு இருப்பது உன் அம்மாவிற்குப் பிடிக்காது. 397 00:26:00,978 --> 00:26:02,938 நாம் நிறைய பணம் சம்பாதிக்கலாம்! 398 00:26:03,021 --> 00:26:05,148 உன் ஆம்புலன்ஸ் ஒரு தங்கச் சுரங்கம். 399 00:26:05,649 --> 00:26:07,067 அது என்னுடையதில்லை. 400 00:26:07,860 --> 00:26:09,236 நீ சொல்வது சரி… 401 00:26:09,319 --> 00:26:10,988 அது நம் ஆம்புலன்ஸ். 402 00:26:12,155 --> 00:26:15,701 நீ சம்மதித்தால், உனக்கு எல்லா பாடத்தையும் சொல்லித் தருகிறேன். 403 00:26:16,201 --> 00:26:18,161 நீ பிரச்சிசனையில் மாட்ட மாட்டாய். 404 00:26:21,331 --> 00:26:23,625 சம்மதமா இல்லையா? 405 00:26:24,626 --> 00:26:26,003 சம்மதம். 406 00:26:29,298 --> 00:26:32,009 நான் வேறெங்கிருந்தும் வரவில்லை மேலே இருக்கும் மலையில் இருந்து வருகிறேன் 407 00:26:32,092 --> 00:26:34,678 பூமியில் இருந்து வந்தேன் கஞ்சா மற்றும் கொக்கைன் உலகில் 408 00:26:34,761 --> 00:26:37,431 என்னைப் பார்க்கும் போது அப்படித்தான் நினைப்பீர்கள். ஓ சகோதரி, சரிதானே? 409 00:26:37,514 --> 00:26:39,641 நான் பேசும் தொனியைக் கேட்டு நீங்கள், “ஹ்ம்ம்” என்பீர்கள் 410 00:26:39,725 --> 00:26:42,519 நான் கொலம்பியன் நான் கொலம்பியன் இல்லை 411 00:26:42,603 --> 00:26:46,190 ஒரு கடத்தல்காரரும், சிலரும் நடிக்காமல் வெளியேறுவார்கள் 412 00:26:46,273 --> 00:26:49,234 அவர்கள் “நான் உன்னைச் சோதிக்க வேண்டும், மன்னித்துவிடு, அன்பே” என்பார்கள் 413 00:26:51,153 --> 00:26:53,822 நான் பாடும் ஊரிலிருந்து வருகிறேன் பணக்கார ஊரில் இருந்து வருகிறேன் 414 00:26:53,906 --> 00:26:56,491 நான் யாரையும் முந்த வேண்டியது இல்லை திரு. தளபதி 415 00:26:56,575 --> 00:26:58,285 என் மக்கள் அழுதிருந்தால் நான் வெற்றி பெற்றிருக்க முடியாது 416 00:26:58,368 --> 00:27:00,037 நீ என்னைக் கொன்றிருக்கணும், ஏனெனில் வாழ்ந்தால், பாடல் வரிகள் எழுதுவேன் 417 00:27:00,120 --> 00:27:02,122 உன்னால் என்னைக் காயப்படுத்த முடியாது, மெக்சிகன் முட்டாளே 418 00:27:02,664 --> 00:27:03,874 மாரே வந்திருக்கிறார். 419 00:27:04,374 --> 00:27:05,667 அவள் தான் மாரே, ப்ரோ! 420 00:27:06,251 --> 00:27:07,336 என்ன? 421 00:27:09,087 --> 00:27:11,298 மாரே அட்வெர்ட்டென்ஷியா லிரிக்கா! 422 00:27:14,051 --> 00:27:16,303 ஹே, நீ பாடியது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அது சிறப்பாக இருந்தது! 423 00:27:16,386 --> 00:27:18,597 சியர்ஸ், அது அற்புதமாக இருந்தது! 424 00:27:18,680 --> 00:27:19,848 நான் உங்களை கட்டியணைக்கலாமா? 425 00:27:19,932 --> 00:27:21,391 கண்டிப்பாக! 426 00:27:24,186 --> 00:27:25,521 உன்னிடம் ஃபோன் இருக்கிறதா? 427 00:27:26,021 --> 00:27:27,731 மன்னிக்கவும்! 428 00:27:27,814 --> 00:27:29,525 நான் கிளம்ப வேண்டும், ஆனால், 429 00:27:29,608 --> 00:27:31,735 எனக்கு இது பிடிச்சிருக்கு. இன்னும் நிறைய கேட்க விரும்புகிறேன். 430 00:27:31,818 --> 00:27:33,111 உன்னிடம் நல்ல திறமை இருக்கிறது. 431 00:27:33,195 --> 00:27:35,697 நான் நாளைக்கு எல்.ஏ. போகிறேன். கொஞ்ச காலம் ரெக்கார்ட் செய்வேன். 432 00:27:35,781 --> 00:27:37,616 நீ அங்கே வந்தால், என்னை வந்து பார்க்கிறாயா? 433 00:27:38,450 --> 00:27:39,493 கண்டிப்பாக வருகிறோம்! 434 00:27:40,994 --> 00:27:42,287 ஒரு பரிசு. 435 00:27:42,371 --> 00:27:44,164 சரி, மாரே, நாம் கிளம்ப வேண்டும். வா போகலாம். 436 00:27:44,248 --> 00:27:45,332 என்னை வந்து பாரு! 437 00:27:45,415 --> 00:27:47,209 மிக்க நன்றி, மாரே. 438 00:27:50,671 --> 00:27:53,090 ஹே, நான் ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாமா? மாரே! 439 00:27:53,173 --> 00:27:54,007 பார்க்கலாம்… 440 00:27:54,091 --> 00:27:56,760 எல்.ஏ. அன்பே! 441 00:27:58,762 --> 00:27:59,847 அடக் கடவுளே! 442 00:28:02,140 --> 00:28:04,852 இன்னும் வேலை முடியவில்லை. நிறைய நீச்சல் குளங்கள், 443 00:28:04,935 --> 00:28:06,687 அங்கே காய்கறி விதைக்க, பிறகு உரம் வைக்க இதற்கெல்லாம் இடம் வேண்டும். 444 00:28:06,770 --> 00:28:07,771 அது அற்புதம். 445 00:28:08,272 --> 00:28:09,773 இதையெல்லாம் நீயே செய்தாயா? 446 00:28:09,857 --> 00:28:12,067 நிறைய பேர் சேர்ந்து செய்தோம். பெரும்பாலும் போன்ச்சோ மற்றும் இருவர். 447 00:28:12,860 --> 00:28:14,862 நான் சேமித்த பணத்தைக் கொடுத்து உதவினேன். 448 00:28:14,945 --> 00:28:16,405 ஏன் அப்படி? 449 00:28:18,323 --> 00:28:21,326 எனக்கு கால்நடை மருத்துவராக ஆசை, இதைக் கேட்டால் என் குடும்பத்திற்கு மாரடைப்பு வந்துவிடும். 450 00:28:23,328 --> 00:28:24,621 சரி, கால்நடை மருத்துவரே. 451 00:28:24,705 --> 00:28:25,998 ஆமாம்! 452 00:28:28,333 --> 00:28:29,543 -இது என்ன ஜோக்கா? -இல்லை. 453 00:28:30,335 --> 00:28:32,546 பிறகு ஏன் மருத்துவம் படிக்கிறாய்… 454 00:28:33,213 --> 00:28:35,549 கடைசியில், ஒருவர் தன் பெற்றோரோடு பேசி புரிய வைக்கலாம், இல்லையா? 455 00:28:35,632 --> 00:28:36,925 ஆனால் அது நீ எடுக்க வேண்டிய முடிவு. இல்லையா? 456 00:28:37,467 --> 00:28:38,969 சரிதான்… ஆனால்… 457 00:28:41,054 --> 00:28:42,389 நீ இதை எப்படி செய்கிறாய்? 458 00:28:43,640 --> 00:28:45,767 அதாவது, இப்போது நலேலியோடு இருந்த போது… 459 00:28:47,352 --> 00:28:49,855 அவள் கஷ்டப்பட்டு உயிர்பிழைத்தாள் என்ற எண்ணம் தோன்றியது. 460 00:28:52,065 --> 00:28:54,902 இது மோசம், அன்பே, அதாவது, எனக்கு இதைச் செய்ய தைரியம் இல்லை. 461 00:28:57,487 --> 00:28:58,780 எனக்குத் தெரியவில்லை. 462 00:28:58,864 --> 00:28:59,865 சரி… 463 00:29:01,366 --> 00:29:05,245 நான் இங்கே வேலை செய்த காலத்தில்… 464 00:29:07,706 --> 00:29:09,791 ஒருவரை மட்டும் காப்பாற்ற முடியவில்லை. 465 00:29:10,375 --> 00:29:11,710 அண்மையில் தான். 466 00:29:13,462 --> 00:29:15,297 அது ஒரு தீ விபத்தின் போது நடந்தது 467 00:29:15,380 --> 00:29:19,259 இப்போது அவர் மனைவியும், குழந்தையும் தனியாக வாழ்கிறார்கள். 468 00:29:20,219 --> 00:29:21,553 அது மிக மோசம். 469 00:29:22,346 --> 00:29:24,848 பாரு… இங்கே இருக்கும் சிறு கிரிட்டர்கள்… 470 00:29:25,349 --> 00:29:26,808 அழிந்து வரும் உயிரினங்கள், 471 00:29:27,309 --> 00:29:31,063 அதனால் இங்கே அவை இனப்பெருக்கம் செய்யும் வழிகளை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். 472 00:29:31,146 --> 00:29:33,315 பிறகு, மறுபடியும் அவற்றை வெளியே விடலாம். 473 00:29:34,149 --> 00:29:36,401 பாதி நேரங்களில், அவை உயிர் பிழைப்பதில்லை. 474 00:29:37,319 --> 00:29:39,238 ஏனெனில் அவற்றின் சூழல் மாற்றப்பட்டிருக்கிறது. 475 00:29:41,240 --> 00:29:42,950 இருந்தாலும், முயற்சி செய்வது நல்லது. 476 00:29:44,701 --> 00:29:46,078 டமாயோ… 477 00:29:47,579 --> 00:29:49,289 நீ ரொம்பவே நல்ல உள்ளம் கொண்டவள். 478 00:29:49,373 --> 00:29:51,542 என் குடும்பத்தில் இந்த குணத்தைப் பார்த்திருக்கிறேன். 479 00:29:51,625 --> 00:29:52,960 சத்தியமாகச் சொல்கிறேன், 480 00:29:53,043 --> 00:29:55,754 உன்னைப் போன்ற நிறைய டாக்டர்களும், அவர்களைப் போன்றவர்கள் குறைவாகவும் எங்களுக்கு வேண்டும். 481 00:29:57,589 --> 00:30:00,342 அவர்கள் அதிக திறமைசாலிகள் இல்லை, சரியா? 482 00:30:00,425 --> 00:30:02,344 அதாவது, அவர்கள் எல்லோருமே பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்கள். 483 00:30:02,427 --> 00:30:04,054 அதுவும் சரி தான். 484 00:30:05,138 --> 00:30:07,266 ஐந்து நிமிடத்தில் வருகிறேன், பிறகு நாம் கிளம்பலாம், சரியா? 485 00:30:07,349 --> 00:30:08,433 சரி! 486 00:30:12,855 --> 00:30:15,607 இது ஒரு ரைட் ஆங்கிள். 487 00:30:15,691 --> 00:30:18,360 இது 90 டிகிரி… 488 00:30:18,443 --> 00:30:19,820 ஒரு மூலை போல இருக்கும். 489 00:30:19,903 --> 00:30:22,531 பிறகு அக்கியூட் ஆங்கிள் இருக்கிறது. 490 00:30:22,614 --> 00:30:24,908 இது தான். நீ கவனித்தால்… 491 00:30:25,534 --> 00:30:27,369 ஹுலிடோ, நீ கவனிக்கிறாயா? 492 00:30:27,452 --> 00:30:29,204 ஆம், ஆம், ஆமாம்! 493 00:30:30,080 --> 00:30:31,665 இது, என்னவென்று சொல்லு? 494 00:30:33,834 --> 00:30:35,460 அப்டியூஸ் ஆங்கிளா? 495 00:30:36,670 --> 00:30:37,713 சரி. 496 00:30:45,762 --> 00:30:46,680 ஹுலிடோ = முட்டாள். 497 00:30:46,763 --> 00:30:48,140 இது சரியாக இருக்கிறதா? 498 00:30:50,184 --> 00:30:52,186 ரைட் ஆங்கிளா? 499 00:30:59,484 --> 00:31:01,528 நண்பா, நீ முட்டாள் இல்லை. 500 00:31:02,237 --> 00:31:03,864 உனக்குக் கண் தெரியவில்லை! 501 00:31:15,167 --> 00:31:18,378 நான் பிக்ஸியை அழைத்து போயிருப்பேன். 502 00:31:18,879 --> 00:31:20,255 கண்டிப்பாக இல்லை! 503 00:31:22,549 --> 00:31:24,176 இல்லை, ஆனால் உண்மையில்… 504 00:31:25,219 --> 00:31:26,470 நன்றி! 505 00:31:28,096 --> 00:31:29,223 எதற்காக? 506 00:31:31,225 --> 00:31:32,643 இங்கே இருந்து… 507 00:31:33,352 --> 00:31:34,811 கேள்விகள் கேட்டதற்காக. 508 00:31:47,199 --> 00:31:48,534 ஐயோ. 509 00:31:49,117 --> 00:31:53,288 நான் ரவுல் பற்றி நினைக்காத போது, நீங்களும் நினைக்கக் கூடாது. புரிந்ததா? 510 00:31:54,998 --> 00:31:58,168 நிறுத்த விரும்பவில்லை, ஆனால் நான் போக வேண்டும். 511 00:32:01,630 --> 00:32:02,631 நன்றி. 512 00:32:05,425 --> 00:32:06,468 ஹே! 513 00:32:11,765 --> 00:32:16,687 ஹே, விலங்குகளின் விஷயத்தில் நீ மிகவும் அன்பாக இருக்கிறாய் என்பது ரொம்ப நல்ல விஷயம். 514 00:32:20,274 --> 00:32:21,149 பை! 515 00:32:27,072 --> 00:32:29,283 நாம் புதிதாக ஒன்று வாங்கலாமே? 516 00:32:29,366 --> 00:32:31,660 இந்த இணையதளத்தில் சிறப்பானவை இருக்கின்றன. 517 00:32:31,743 --> 00:32:33,620 ஏற்கனவே என்னிடம் இருக்கும் விஷயத்தை நான் மறுபடியும் வாங்க மாட்டேன். 518 00:32:33,704 --> 00:32:35,122 இது மார்கஸின் சைக்கிள், இல்லையா? 519 00:32:35,706 --> 00:32:37,040 அவன் இதை ஓட்டுவதே இல்லை. 520 00:32:39,835 --> 00:32:42,754 மார்கஸ் எங்கே? நான் தேடும் போது இருக்க மாட்டான். 521 00:32:45,299 --> 00:32:47,759 தன் வாழ்க்கையை வாழ்கிறான் போல. 522 00:32:48,260 --> 00:32:49,511 வந்து… 523 00:32:52,264 --> 00:32:53,515 இரு. 524 00:32:56,143 --> 00:32:57,603 ரமோன்… 525 00:32:58,103 --> 00:32:59,563 நான் பிரச்சினைகளை சரிசெய்ய வந்திருக்கிறேன். 526 00:33:00,272 --> 00:33:03,275 அந்த பாதிரியார் மற்றும் உன்னோடு சேர்ந்து வாழ நான் வரமாட்டேன். 527 00:33:03,775 --> 00:33:05,611 நீங்கள் தனியாக இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. 528 00:33:06,111 --> 00:33:09,740 கவலைப்படாதே, நான் இப்போது மாறிவிட்டேன். 529 00:33:12,284 --> 00:33:13,785 பாரு… 530 00:33:13,869 --> 00:33:15,245 எனக்கு இறக்க ஆசை இல்லை, லெட்டி. 531 00:33:15,329 --> 00:33:16,371 நான் வாழ விரும்புகிறேன். 532 00:33:16,872 --> 00:33:18,457 என் குழந்தைகளையும்… 533 00:33:20,209 --> 00:33:21,210 உன்னையும் நேசிக்கிறேன். 534 00:33:24,546 --> 00:33:25,881 எல்லா வழிகளிலும். 535 00:33:27,466 --> 00:33:29,301 இப்போது நான் தேவாலயத்திற்குப் போக விரும்பினால்? 536 00:33:30,093 --> 00:33:33,722 நீ தேவாலயத்திற்குப் போக விரும்பினாலும். 537 00:33:35,974 --> 00:33:37,476 சரி பார்க்கலாம்… 538 00:33:37,559 --> 00:33:41,146 இதை நீக்கலாம். இது தவறானது. 539 00:33:45,234 --> 00:33:47,069 அத்தியாவசிய பொருட்கள் சேகரிக்கும் இடம் 540 00:33:48,445 --> 00:33:50,948 டோனா மேண்டி, நான் போர்வைகளை பிறகு கொண்டு வருகிறேன், சரியா? 541 00:33:56,870 --> 00:33:57,996 நண்பா! 542 00:33:58,747 --> 00:33:59,915 என்ன விஷயம், டாக்? 543 00:33:59,998 --> 00:34:01,333 எப்படி இருந்தது? 544 00:34:04,002 --> 00:34:06,672 உனக்கு உதவி தேவையா? 545 00:34:08,257 --> 00:34:10,132 பார்க்கலாம். அதையெல்லாம் கொண்டு வா. 546 00:34:21,436 --> 00:34:22,603 என்ன இது…? 547 00:34:23,897 --> 00:34:25,607 அது கிரிஸுடையது. 548 00:34:25,690 --> 00:34:27,693 அட, இது மாரே! அண்ணா… 549 00:34:28,193 --> 00:34:29,235 ஆமாம். 550 00:34:29,735 --> 00:34:32,739 அவளுடைய ஆல்பங்களா? விலை என்ன? 551 00:34:32,822 --> 00:34:34,533 அதை கிரிஸிற்குக் கொடுத்தார்கள், அன்பே. 552 00:34:34,616 --> 00:34:37,034 -யார் கொடுத்தது? -யாரென்று நினைக்கிறாய்? மாரேயிடம் இருந்து. 553 00:34:37,119 --> 00:34:39,079 -அட இது நஜம் தானே? -ஆமாம்! 554 00:34:39,161 --> 00:34:41,373 அவள் இப்போது உன் தோழியா? அவளை எங்கே சந்தித்தாய்? 555 00:34:41,456 --> 00:34:43,958 கிரிஸும் நானும் ஒரு நிகழ்ச்சிக்குப் போனோம். 556 00:34:44,042 --> 00:34:45,960 அவள் பாடியதைக் கேட்டாள். 557 00:34:47,170 --> 00:34:48,672 அவளுக்கு வேறு வழி இல்லை. 558 00:34:48,755 --> 00:34:49,755 அருமை! 559 00:34:49,840 --> 00:34:52,217 எங்களை எல்.ஏ.விற்கு அழைத்திருக்கிறாள். 560 00:34:52,301 --> 00:34:53,467 எதற்காக? 561 00:34:54,887 --> 00:34:56,013 ரெக்கார்ட் செய்வதற்காக. 562 00:34:56,889 --> 00:34:59,516 அதைப்பற்றி ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்? என்ன செய்யப் போகிறாய்? 563 00:35:07,608 --> 00:35:09,943 என் வாழ்வில் பெரும்பாலும் இதை ஒட்டிக்கொண்டே கழிக்கிறேன், டாக். 564 00:35:11,236 --> 00:35:13,614 சில சமயம் இதை விட்டு விலக முடியாது என்று தோன்றுகிறது. 565 00:35:14,698 --> 00:35:16,742 அதாவது, என்னிடம் வேறு ஏதோ திறமை இருந்தால் என்ன செய்வது? 566 00:35:19,661 --> 00:35:21,997 நான் வேறு இடத்தில் வாழ விரும்புகிறேன். 567 00:35:22,080 --> 00:35:23,081 கிரிஸுடன். 568 00:35:24,875 --> 00:35:26,084 நாங்கள் மூவரும். 569 00:35:28,754 --> 00:35:29,880 அதை எப்படி போகிறது? 570 00:35:32,424 --> 00:35:33,425 பார்க்கலாம். 571 00:35:34,384 --> 00:35:36,053 அவள் நாட்டை விட்டு போக விரும்புகிறாள், இல்லையா? 572 00:35:36,136 --> 00:35:37,721 ஆமாம், அவள் போக விரும்புகிறாள். 573 00:35:39,515 --> 00:35:41,016 பல காலமாக விரும்புகிறாள். 574 00:35:42,226 --> 00:35:43,310 உன் விருப்பம் என்ன? 575 00:35:44,353 --> 00:35:45,687 ரமோனின் வாழ்க்கை முடிந்துவிட்டது, செல்லம். 576 00:35:46,563 --> 00:35:48,857 ஹுலிடோ ஆம்புலன்ஸில் இருப்பதை மட்டும் தான் விரும்புகிறான். 577 00:35:49,358 --> 00:35:52,152 அவன் எதை வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் இங்கே தான் இருக்கிறான். 578 00:35:52,653 --> 00:35:54,238 அவன் என்னைப் போல் இருக்கக்கூடாது. 579 00:35:56,114 --> 00:35:59,409 அப்புறம், நீ படிக்கிறாய். உண்மையாகவே, நீ சிறப்பானவள், டாக்டர். 580 00:36:02,913 --> 00:36:04,915 இங்கிருக்கும் ஒரே முட்டாள், நான்தான். 581 00:36:06,041 --> 00:36:07,167 சரி, கொஞ்சம் பொறு. 582 00:36:07,709 --> 00:36:11,255 இது நமக்கு வேண்டுமா என்று யாரும் நம்மை கேட்காதது மோசம் தான். 583 00:36:11,880 --> 00:36:15,217 ஆனால், இந்தக் கப்பலில், நான் உன்னோடு இருக்கிறேன். 584 00:36:17,886 --> 00:36:19,304 கப்பலா? 585 00:36:20,681 --> 00:36:22,599 சாங்கோ. என்னை அணைத்துக்கொள். 586 00:36:22,683 --> 00:36:23,851 நீங்கள் தயாரா? 587 00:36:24,518 --> 00:36:25,936 நேரமாகிவிட்டது. 588 00:36:26,645 --> 00:36:28,647 இது உங்கள் மகனின் தவறு. 589 00:36:38,365 --> 00:36:40,284 கார்மென்சீடா, அந்த போலீஸ் அழைப்பு உனக்கு வந்ததா? 590 00:36:40,367 --> 00:36:43,120 ஆம், அது ஒரு 10-31, அது ஆபத்தானதாக இருக்கலாம். 591 00:36:43,203 --> 00:36:46,248 நாங்கள் மட்டும் தான் அருகில் இருக்கும் ஆம்புலன்ஸா என கொஞ்சம் பார்க்கிறாயா? 592 00:36:46,331 --> 00:36:47,833 கொஞ்ச நேரம் பொறுங்கள், பார்க்கிறேன்… 593 00:36:50,627 --> 00:36:52,963 நிச்சயமாகவா, ரமோன்? 594 00:36:53,046 --> 00:36:55,591 ஆமாம், ரமோன், நீங்கள்தான் அருகில் இருக்கிறீர்கள். 595 00:36:56,925 --> 00:36:58,218 -சைரனை ஒலிக்க விடு. -ரமோன்… 596 00:36:58,302 --> 00:36:59,469 அதை ஒலிக்கச் செய்! 597 00:37:26,413 --> 00:37:27,831 நன்றி! 598 00:37:38,842 --> 00:37:40,552 அதிகாரி, இங்கே என்ன பிரச்சினை? 599 00:37:40,636 --> 00:37:44,681 கடை மூடும் நேரத்தில், இரண்டு டீனேஜர்கள் உள்ளே நுழைந்து திருடப் பார்த்தார்கள். 600 00:37:44,765 --> 00:37:47,226 ஒரு ஊழியர் அவசர பட்டனை அழுத்திவிட்டார். 601 00:37:47,809 --> 00:37:50,604 தனியார் செக்யூரிட்டி உள்ளே வந்தார்கள். அவர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்கள். 602 00:37:50,687 --> 00:37:52,648 உள்ளே ஒரு பெண்ணிற்கு அடிபட்டிருக்கிறது. 603 00:37:52,731 --> 00:37:55,192 -எவ்வளவு நேரத்திற்கு முன்? -அரை மணிக்கு முன்னால் இருக்கலாம். 604 00:37:55,275 --> 00:37:56,944 ஆனால் நாங்கள் திருடர்களோடு பேசி இரண்டு மருத்துவ உதவியாளர்களை 605 00:37:57,027 --> 00:37:58,862 உள்ளே அனுப்பி அவளை வெளியே கொண்டு வர முயற்சிக்கிறோம். 606 00:37:58,946 --> 00:38:01,281 மேரிகபி, நாங்கள் ஸ்ட்ரெச்சர் மட்டும் ஹார்ட்மேன் உடன் உள்ளே போகிறோம். 607 00:38:01,365 --> 00:38:04,618 இல்லை, ஒரு போலீஸ் மருத்துவ உதவியாளர் போல வேஷம் போட்டு போக வேண்டும். 608 00:38:04,701 --> 00:38:06,578 காயப்பட்டவர்களை எப்படி கவனிப்பது என்று அவர்களுக்குத் தெரியுமா? 609 00:38:07,663 --> 00:38:10,457 யாரோ சுடப்பட்டார் என்று சொன்னீர்கள், வேறு சிலர் கூட இருக்கக்கூடும். 610 00:38:10,541 --> 00:38:12,084 அதோடு, எங்களில் ஒருவர் 611 00:38:12,167 --> 00:38:14,586 மருத்துவ உதவியாளர் இல்லை என்று அவர்கள் கண்டுபிடித்தால் என்ன ஆகும்? 612 00:38:16,964 --> 00:38:18,841 சரி, உள்ளே போய், அவளை வெளியே அழைத்து வாருங்கள். 613 00:38:19,466 --> 00:38:21,176 மார்கஸும் நானும் போகிறோம், உன்னால் சமாளிக்க முடியாது. 614 00:38:21,260 --> 00:38:24,054 இல்லை. இதுவரை மார்கஸ் துப்பாக்கி காயத்தை கவனித்ததில்லை. நான் வருகிறேன். 615 00:38:24,137 --> 00:38:25,556 எனக்கு ஹீரோக்கள் தேவை இல்லை. 616 00:38:25,639 --> 00:38:27,724 கவலைப்படாதீர்கள், அவர்கள் விடுப்பில் இருக்கிறார்கள். 617 00:38:27,808 --> 00:38:29,393 அந்த ஆள் உள்ளே போகிறார். யாரும் நகராதீர்கள். 618 00:38:31,353 --> 00:38:33,564 அமைதியாக இருப்பீர்கள் என்று சத்தியம் செய்யுங்கள். 619 00:38:33,647 --> 00:38:35,440 எல்லா கடின வேலையையும் நானே செய்கிறேன். 620 00:38:35,524 --> 00:38:36,733 தயாரா? 621 00:38:36,817 --> 00:38:38,068 தயார்! 622 00:38:54,418 --> 00:38:55,419 கதவைத் திற. 623 00:39:03,260 --> 00:39:04,595 மூடு. சீக்கிரம்! 624 00:39:05,512 --> 00:39:06,889 இப்போது, போ. 625 00:39:06,972 --> 00:39:08,265 சீக்கிரம்! 626 00:39:08,932 --> 00:39:10,684 சொதப்பி விடாதீர்கள். 627 00:39:10,767 --> 00:39:13,395 நாங்கள் ஒன்றும் இந்த நகைக்கடையைத் திருடவில்லை. 628 00:39:14,313 --> 00:39:17,441 நீங்கள் கேட்டது போல, உதவ வந்திருக்கிறோம், சரியா? 629 00:39:26,742 --> 00:39:28,160 ஹே, பெண்ணே. நீங்கள் நலமா? 630 00:39:34,958 --> 00:39:37,252 அவள் உயிரோடிருக்க மருத்துவமனைக்கு அழைத்துப் போக வேண்டும். 631 00:39:41,089 --> 00:39:43,008 இல்லை, இல்லை, இல்லை, பொறு. 632 00:39:43,091 --> 00:39:45,969 நீங்கள் போன பிறகு, ஸ்வாட் குழுவினர் வருவார்கள். உங்கள் திட்டம் எனக்குப் புரிகிறது. 633 00:39:46,053 --> 00:39:48,931 இது ஒன்றும் திரைப்படமில்லை, சரியா? அவள் இறக்கப் போவது தெரியவில்லையா? 634 00:39:49,014 --> 00:39:50,807 இதை யோசி, நண்பா. அவள் மரணத்திற்கு நீதான் காரணம் என்ற 635 00:39:50,891 --> 00:39:53,352 -பழியை கடைசிவரை சுமக்கப் போகிறாயா? -வாயை மூடு! 636 00:39:54,144 --> 00:39:55,729 இது ஒரு குழப்பம். 637 00:39:56,480 --> 00:39:58,982 அவள் இறந்தால், எல்லாம் முடிவுக்கு வரும். எல்லாம் முடிந்து விடும். 638 00:39:59,066 --> 00:40:01,068 உனக்கும், எல்லோருக்கும். 639 00:40:03,028 --> 00:40:06,323 நாம் எல்லோரும் உயிரோடு வெளியே போக வேண்டும், இல்லையா? 640 00:40:07,950 --> 00:40:10,244 இவர்கள் முட்டாள்கள். 641 00:40:10,327 --> 00:40:13,372 ஒரு நபரின் உயிரைக் காட்டிலும், கொஞ்ச நகைகள் மதிப்புடையது கிடையாது. தயவுசெய். 642 00:40:13,914 --> 00:40:17,626 எங்கள் வேலையை செய்ய நாங்கள் இவ்வளவு கஷ்டப்படக் கூடாது. 643 00:40:18,126 --> 00:40:20,671 நான் பேசுவதை கவனியுங்கள், அன்பே. ஹே. ஹே, ஹே, ஹே. ஹே! 644 00:40:24,132 --> 00:40:25,467 எப்படி போகிறது, சொல்? 645 00:40:25,551 --> 00:40:26,885 நண்பா, மார்கஸ்! 646 00:40:27,636 --> 00:40:29,763 நாங்கள் ரேடியோவில் கேள்விப்பட்டோம், என்ன நடக்கிறது? 647 00:40:29,847 --> 00:40:33,016 நாங்கள் காத்திருக்கிறோம். இது பெரிய குழப்பம், அவர்கள் எதுவும் பேசவில்லை. 648 00:40:33,100 --> 00:40:35,811 -5 நிமிடங்களில் ஸ்வாட் வந்துவிடும். -சரி, சார். 649 00:40:35,894 --> 00:40:37,104 இரு, என்னோடு வா. 650 00:40:37,187 --> 00:40:39,273 -கேப்டன், கேப்டன். -நீ போகக் கூடாது! 651 00:40:39,356 --> 00:40:41,441 கேப்டன், என் அப்பாவும், தங்கையும் உள்ளே இருக்கிறார்கள். 652 00:40:41,525 --> 00:40:43,735 என்னை உள்ளே அனுப்புங்கள். நான் அவனிடம் பேச மட்டும் தான் செய்வேன். 653 00:40:46,446 --> 00:40:47,948 இவளை வெளியே அழைத்து போகணும், சரியா? 654 00:40:48,031 --> 00:40:49,825 இல்லை, இல்லை! முடியாது! 655 00:40:49,908 --> 00:40:51,285 அவளுக்கு இங்கேயே சிகிச்சை கொடு. 656 00:40:51,368 --> 00:40:52,452 யாரும் வெளியே போக முடியாது. 657 00:40:52,536 --> 00:40:54,413 நீ பதட்டத்தில் இருக்கிறாய். ஒன்றும் புரியாமல் பேசுகிறாய். 658 00:40:54,496 --> 00:40:55,747 வாயை மூடு. வாயை மூடு என்றேன்! 659 00:42:22,626 --> 00:42:24,628 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்