1 00:00:16,517 --> 00:00:17,684 கடுகு சேர்க்க வேண்டுமா, சார்? 2 00:00:17,684 --> 00:00:18,936 கீழே போகிறது. 3 00:00:33,158 --> 00:00:36,495 டெக்கிலா, நேரடி இசை, மரியாச்சி ஆகியவை கொண்ட 4 00:00:36,495 --> 00:00:41,041 புகழ் பெற்ற பிளாசா காரிபால்டிக்கு வரவேற்கிறேன். 5 00:00:43,168 --> 00:00:46,547 சர்வதேச சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். 6 00:00:46,547 --> 00:00:49,216 உங்கள் வலது பக்கத்தில், பிளாசா காரிபால்டி. 7 00:00:49,216 --> 00:00:52,719 சரியா? என்ன? எனக்கு ஆங்கிலம் தெரியுமா? 8 00:00:52,719 --> 00:00:55,681 உண்மையான “சிலங்கோ” யாரும், தங்கள் உடைந்த மனதிற்கு 9 00:00:55,681 --> 00:01:00,143 ஆறுதல் தேடி இங்கு வராமல் இருந்ததில்லை. 10 00:01:14,908 --> 00:01:20,873 என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்? இங்கு போதை உண்டு, ஆனால் தவறாக நினைக்க வேண்டாம்... 11 00:01:20,873 --> 00:01:22,541 இங்கு குடும்பத்திற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளது. 12 00:01:22,541 --> 00:01:27,296 ஒரு சுற்றுலப் பயணி நடைபாதையில் வாந்தி எடுத்த போதிலும். 13 00:01:30,465 --> 00:01:31,550 நான்... 14 00:01:31,550 --> 00:01:33,093 நான் இன்னொரு கிளாஸ் கொண்டு வருகிறேன். 15 00:01:34,178 --> 00:01:35,596 - சரி, சரி. - கொஞ்சம் உணவும்! 16 00:01:35,596 --> 00:01:38,473 சரி. உனக்கு... உனக்கு கொஞ்சம் பணம் வேண்டுமா? 17 00:01:54,948 --> 00:01:55,991 நன்றி. 18 00:01:58,577 --> 00:02:01,663 அங்கே இருப்பது தான் ஷாக் மெஷின். 19 00:02:01,663 --> 00:02:04,499 ஆமாம், நமக்கு நாமே மின்னதிர்ச்சி பெற பணம் கட்ட வேண்டும்... 20 00:02:04,499 --> 00:02:09,463 இது பைத்தியக்காரத்தனம், ஆனால் வேடிக்கையானது... 21 00:02:09,463 --> 00:02:11,465 நான் என்ன சொல்வது? அது தான் நம்மை மெக்ஸிகன் ஆக்குகிறது. 22 00:02:11,465 --> 00:02:13,884 உனக்கு நீயே மின்னதிர்ச்சி கொடுக்கும் கேம், ப்ரோ. 23 00:02:13,884 --> 00:02:16,470 - சரி, இப்படி செய்வோம். - எனக்கு மெக்ஸிகோ பிடிக்கும். 24 00:02:16,470 --> 00:02:18,722 - உன்னோடு! உன்னொடு! - இல்லை, எனக்கில்லை. 25 00:02:18,722 --> 00:02:20,641 வா! நாம் மின்னதிர்ச்சி பெறுவோம். மின்னதிர்ச்சி பெறுவோம். 26 00:02:20,641 --> 00:02:22,893 இல்லை, என் வயிறு வலிக்கிறது. என் உடம்பு அதற்குத் தயாராக இல்லை. 27 00:02:22,893 --> 00:02:25,896 இல்லை, என் மனைவி என்னை அதை செய்ய வேண்டாமென்று தடுத்திருக்கிறாள். 28 00:02:25,896 --> 00:02:27,189 வா! வா! 29 00:02:27,189 --> 00:02:28,899 மூன்று டாலர். இந்தா. 30 00:02:28,899 --> 00:02:30,609 - தயார். - இல்லை, இல்லை, வேண்டாம். 31 00:02:30,609 --> 00:02:32,653 - இல்லை, இல்லை. - அட, வா. 32 00:02:32,653 --> 00:02:33,779 எண்ணிய பிறகு தொடங்குவோம், ஒன்று... 33 00:02:33,779 --> 00:02:35,948 - நீ மோசம். - ...இரண்டு... 34 00:02:35,948 --> 00:02:37,741 மூன்று! 35 00:02:37,741 --> 00:02:39,535 அடச்சே! சே! இன்னும், இன்னும், இன்னும், இன்னும்! 36 00:02:39,535 --> 00:02:42,204 - இன்னும், இன்னும், இன்னும்! - அடச்சே! 37 00:02:42,204 --> 00:02:43,539 - நீ நலமா? - இன்னும்! 38 00:02:43,539 --> 00:02:46,166 இன்னும்! இன்னும்! இன்னும்! 39 00:03:27,499 --> 00:03:29,418 “மிட்நைட் ஃபேமிலி” என்ற ஆவணப்படத்தைத் தழுவியது 40 00:03:45,225 --> 00:03:47,603 நீ நலமா, நண்பா? 41 00:03:49,229 --> 00:03:50,856 யாராவது ஆம்புலன்ஸை அழையுங்கள்! 42 00:03:50,856 --> 00:03:53,150 யாராவது கூப்பிடுங்கள்! இப்போதே! 43 00:03:53,150 --> 00:03:54,693 இடைவெளி விடுங்கள்! 44 00:03:56,653 --> 00:03:58,780 அடக் கடவுளே! நிக்! 45 00:03:59,281 --> 00:04:00,574 ஜோனா! ஐயோ! 46 00:04:00,574 --> 00:04:02,284 - வேண்டாம், அருகே போகாதே! - அடக் கடவுளே! 47 00:04:08,790 --> 00:04:10,584 கவனமாக சாப்பிடு, தம்பி. 48 00:04:10,584 --> 00:04:12,044 அட, விடு. 49 00:04:12,044 --> 00:04:14,588 எலிகளைப் பார்த்தாய், இருந்தாலும் சிப்ஸ் சாப்பிடுகிறாய் 50 00:04:14,588 --> 00:04:16,964 நீ கிளாப் செய்யவில்லை என்பதால் நான் ராப் செய்கிறேன் 51 00:04:16,964 --> 00:04:20,344 மோசமான ஹுலியோ நாறுகிறான் 52 00:04:20,344 --> 00:04:23,138 இதை கவனி, தம்பி. நான் இதை கற்றுக்கொள்கிறேன். 53 00:04:23,138 --> 00:04:26,725 ஒவ்வொரு நாளும் என் மூளையில், என் ஒரே தசையில் யோசிக்கிறேன் மற்றும் 54 00:04:26,725 --> 00:04:28,977 அதை அழகான காட்சியாகப் பார்க்கிறேன் 55 00:04:28,977 --> 00:04:31,522 ஏனென்றால் எனக்கு மாறுபட்ட எண்ணம் கொண்டவன் 56 00:04:31,522 --> 00:04:34,107 அது பிடிச்சிருக்கு, அது பிடிச்சிருக்கு அது பிடிச்சிருக்கு 57 00:04:34,107 --> 00:04:36,527 அதனால் என்ன? உன் ஆங்கிலம் கேவலமாக இருக்கிறது. 58 00:04:36,527 --> 00:04:38,278 பாடல்களை கற்றுக்கொள், முட்டாளே. 59 00:04:38,278 --> 00:04:39,571 சரி, ஒரு தாளம் போட்டுக் காட்டு. 60 00:04:49,248 --> 00:04:50,541 சத்தத்தைக் குறை, செல்லம். 61 00:04:50,541 --> 00:04:52,292 மோசமான பாரில் இருப்பது போலத் தோன்றுகிறது. 62 00:04:52,292 --> 00:04:54,169 - சரி, மன்னியுங்கள், அப்பா. - ரமோன்! 63 00:04:54,920 --> 00:04:56,046 ரமோன்! கேட்கிறதா? 64 00:04:56,046 --> 00:04:57,297 எங்கே இருக்கிறாய்? நான் அழைத்து போகட்டுமா? 65 00:04:57,297 --> 00:05:00,551 - இங்கே இருக்கிறோம், செல்லக் கார்மென். - பிளாசா காரிபால்டியில் மூன்று பேருக்கு காயம். 66 00:05:00,551 --> 00:05:03,095 மறுபடியும் சொல்கிறேன். காரிபால்டியில் மூன்று ஆண்கள் காயப்பட்டுள்ளனர். 67 00:05:03,095 --> 00:05:04,721 நாங்கள் புறப்பட்டுவிட்டோம், செல்லக் கார்மென். 68 00:05:09,434 --> 00:05:10,602 போகலாம், தம்பி. 69 00:05:13,313 --> 00:05:14,398 அடிப்படை முதலுதவி 70 00:05:14,398 --> 00:05:16,233 - சீக்கிரம், தம்பி. - வருகிறேன், டாக்டர். 71 00:05:18,819 --> 00:05:20,320 எங்கே போக வேண்டும், ரமோன்? எங்கே போகிறோம்? 72 00:05:43,427 --> 00:05:45,095 நிறைய பேர் இருக்கிறார்கள், எனவே, கவனமாக இரு. 73 00:05:45,095 --> 00:05:46,805 - சரி. - நாம் போகலாம். 74 00:05:47,639 --> 00:05:50,058 நண்பா, விபத்து நடந்த இடத்தை பார்த்தீர்களா? 75 00:05:50,809 --> 00:05:52,644 - இங்கே, ரமோன்! - வாருங்கள்! 76 00:05:53,312 --> 00:05:54,396 என்ன இது? 77 00:05:55,522 --> 00:05:56,899 நீங்கள் நலமா, அப்பா? 78 00:05:56,899 --> 00:05:58,025 என்ன ஆச்சு? 79 00:05:58,859 --> 00:05:59,985 முடியவில்லை, மகனே. 80 00:06:01,361 --> 00:06:02,863 என் கால் சுளுக்கி விட்டது! 81 00:06:02,863 --> 00:06:05,574 அடச்சே. நகருங்கள், நகருங்கள், நகருங்கள்! 82 00:06:06,867 --> 00:06:08,994 - நீங்கள் நலமா? - நன்றி, மகனே. 83 00:06:09,661 --> 00:06:10,746 - நான் நலம் தான். - கண்டிப்பாக? 84 00:06:10,746 --> 00:06:13,290 வழி விடுங்கள், வழி விடுங்கள், வழி விடுங்கள்! சீக்கிரம்! 85 00:06:13,290 --> 00:06:15,709 தயவு செய்து, வழி விடுங்கள்! மருத்துவ உதவியாளர்கள்! 86 00:06:15,709 --> 00:06:17,294 நகருங்கள்! நகருங்கள்! 87 00:06:17,294 --> 00:06:19,546 - மருத்துவ உதவியாளர்கள் வருகிறோம்! - நகருங்கள்! 88 00:06:20,547 --> 00:06:23,133 நகருங்கள்! நகருங்கள்! மருத்துவ உதவியாளர்கள் வந்திருக்கிறோம்! 89 00:06:23,133 --> 00:06:24,968 கேளு, சகோதரா. சுற்றிலும் விசாரி. 90 00:06:24,968 --> 00:06:26,845 அடச்சே. என்ன நடந்தது என யாருக்காவது தெரியுமா? 91 00:06:26,845 --> 00:06:28,514 இதோ! இதோ! இதோ! இவளுக்கு அவர்களைத் தெரியுமாம். 92 00:06:28,514 --> 00:06:29,848 - என்ன நடந்தது? - சார், நீங்கள் நலமா? 93 00:06:29,848 --> 00:06:32,434 தெரியவில்லை. வந்து... இங்கே வந்தேன்... 94 00:06:32,434 --> 00:06:33,727 ஒன்றுமில்லை. 95 00:06:33,727 --> 00:06:36,271 அப்பா, அவருக்கு மாரடைப்பு. மருத்துவமனைக்கு அழைத்து போக வேண்டும். 96 00:06:36,271 --> 00:06:38,065 மெதுவாக, நண்பா, சரியா? 97 00:06:38,065 --> 00:06:40,192 நான் உதவுகிறேன், என்னை பிடித்துகொள்ளுங்கள். அப்படித்தான். 98 00:06:40,192 --> 00:06:42,486 நான் உதவுகிறேன். பொறுங்கள். ஆமாம். 99 00:06:43,278 --> 00:06:44,905 என்ன நடந்ததென யாருக்காவது தெரியுமா? 100 00:06:46,281 --> 00:06:50,369 மெதுவாக, சரியா? அப்படித்தான். 101 00:06:51,578 --> 00:06:54,498 நான் மருத்துவ உதவியாளர். நான் உங்களுக்கு உதவுகிறேன். சரியா? 102 00:06:54,498 --> 00:06:56,124 உங்கள் பெயர் என்ன? 103 00:06:56,124 --> 00:06:57,626 நீங்கள் சொல்வது புரியவில்லை. 104 00:06:57,626 --> 00:07:00,128 - அட, உங்களுக்கு ஸ்பானிஷ் தெரியுமா? - அவர்களுக்கு எப்படியாவது உதவு! 105 00:07:00,128 --> 00:07:02,047 மிஸ், அவர்களை யாராவது தாக்கினார்களா? 106 00:07:02,047 --> 00:07:03,423 உங்களிடம் யாராவது திருடினார்களா? 107 00:07:03,423 --> 00:07:04,508 மெஸ்க்கல், போதை மருந்துகள்? 108 00:07:04,508 --> 00:07:06,510 தெரியவில்லை. எனக்குப் புரியவில்லை. 109 00:07:06,510 --> 00:07:08,679 ஹுலியோ, காலர் கொண்டு வா. 110 00:07:08,679 --> 00:07:10,347 சீக்கிரமாக கொண்டு வா! 111 00:07:10,347 --> 00:07:12,391 இல்லை, வந்து... 112 00:07:12,391 --> 00:07:14,351 இதோ வருகிறேன். சரியா, மிஸ்? 113 00:07:14,351 --> 00:07:16,854 அந்த பெண்ணின் மின்சார ஷாக் மெஷினில் அவர்கள் விளையாடினார்கள், 114 00:07:16,854 --> 00:07:19,690 - மூன்று பேரையும் மின்சாரம் தாக்கியது. - மோசமான சுற்றுலா பயணிகள். 115 00:07:19,690 --> 00:07:21,859 அப்படியே இருங்கள். நகராதீர்கள். 116 00:07:21,859 --> 00:07:24,903 இல்லை, இல்லை! அவரைத் தொடாதே! அவரைத் தொடாதே, மின்சாரம் பாய்ந்திருக்கிறது. 117 00:07:24,903 --> 00:07:25,988 அதோ அது தான். 118 00:07:25,988 --> 00:07:28,365 எப்படி? அது இப்படி செய்யாது. ஒன்றுமே புரியவில்லை. 119 00:07:28,365 --> 00:07:29,825 அந்தப் பெண் தான் அப்படி சொன்னாள். 120 00:07:29,825 --> 00:07:33,412 பரவாயில்லை. அது எலக்ட்ரிக் ஷாக், நாங்கள் மின்சாரத்தை அணைத்து விட்டோம். 121 00:07:33,412 --> 00:07:34,788 தூக்கு, அண்ணா. தூக்கு. 122 00:07:36,832 --> 00:07:38,750 - என்ன ஆச்சு, அப்பா? - சீக்கிரம், ரமோன்! 123 00:07:39,418 --> 00:07:40,919 ஹுலியோ! 124 00:07:40,919 --> 00:07:43,380 - நீங்கள் நலமா? - ஆம். 125 00:07:43,380 --> 00:07:44,464 வா, அண்ணா. 126 00:07:45,507 --> 00:07:48,635 இரு. இரு. ஒன்று, இரண்டு, மூன்று. 127 00:07:51,013 --> 00:07:53,265 கவலைப்படாதீர்கள். கவலைப்படாதீர்கள். 128 00:07:53,265 --> 00:07:56,393 - நிக்! - அவர் நலமாகிவிடுவார். 129 00:07:56,935 --> 00:07:58,312 அவருக்கு உதவுவார்கள். 130 00:08:00,314 --> 00:08:02,274 சரி, மிஸ். கேளுங்கள். கவலைப்படாதீர்கள். 131 00:08:02,274 --> 00:08:04,693 உங்கள் நண்பர்களுக்கு அவசர உதவி தேவை என்பதால் அவர்களை அழைத்துச் செல்கிறேன். 132 00:08:04,693 --> 00:08:06,111 தெரியவில்லை. 133 00:08:06,111 --> 00:08:08,530 மருத்துவமனைக்கு. நான் உங்களை அங்கு அழைத்துப் போகிறேன். 134 00:08:08,530 --> 00:08:10,741 - சரி. - சரியா? மருத்துவமனைக்கு. 135 00:08:10,741 --> 00:08:12,576 - போகலாம். சீக்கிரம். - சரி, தயவுசெய்து! 136 00:08:16,538 --> 00:08:20,125 தயவுசெய்து, நகருங்கள்! நகருங்கள்! இது அவசரம்! 137 00:08:27,841 --> 00:08:29,426 - பாரு! - எப்படி இருக்கிறீர்கள், சார்? 138 00:08:29,426 --> 00:08:30,511 மோசமாக. 139 00:08:30,511 --> 00:08:31,887 - பாரு, இது நன்றாக இருக்கு. - கவனி, தம்பி. 140 00:08:31,887 --> 00:08:33,679 இதை கனெக்ட் செய். சீக்கிரம். 141 00:08:33,679 --> 00:08:35,307 பிறகு ரத்தக்கசிவை நிறுத்து, சரியா? 142 00:08:35,307 --> 00:08:38,809 தலை சுற்றுகிறது. என் கைகளில் உணர்ச்சி இல்லை. 143 00:08:38,809 --> 00:08:41,647 ஹே, அவர் நலமாக இருக்கிறாரா? 144 00:08:43,273 --> 00:08:44,399 நாம் எங்கே போகிறோம்? 145 00:08:44,399 --> 00:08:45,984 ஆமாம், மிஸ். 146 00:08:47,277 --> 00:08:50,072 ஜோனா, நம்மை எங்கே அழைத்துப் போகிறார்கள் தெரியுமா? 147 00:08:50,822 --> 00:08:52,074 ஜோனா. 148 00:08:52,074 --> 00:08:54,826 தெரியவில்லை. நீயே கண்டுபிடி. 149 00:08:54,826 --> 00:08:58,789 அவர் ஏன் சோர்வாக இருக்கிறார்? நீங்கள் உண்மையான மருத்துவர்களா? 150 00:08:58,789 --> 00:09:00,415 அப்பா, நீங்கள்... 151 00:09:00,415 --> 00:09:02,042 நீங்கள் நலமா, அப்பா? 152 00:09:03,877 --> 00:09:05,045 அவருக்கு உதவு. 153 00:09:06,171 --> 00:09:08,715 - வேண்டாம். நானே செய்கிறேன். - அப்பா, நான் உதவுகிறேன். 154 00:09:08,715 --> 00:09:11,009 ஒன்று இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, 155 00:09:11,009 --> 00:09:13,512 ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது... என்ன பிரச்சினை? 156 00:09:14,638 --> 00:09:15,889 நான் நலம் தான், சரியா? 157 00:09:17,641 --> 00:09:19,059 இருபத்தி ஒன்று, இருபத்தி இரண்டு, இருபத்தி மூன்று, 158 00:09:19,059 --> 00:09:21,395 இருபத்தி நான்கு, இருபத்தி ஐந்து, இருபத்தி ஆறு, இருபத்தி ஏழு... 159 00:09:21,395 --> 00:09:23,605 {\an8}ஆல்மென்ட்ரோஸ் கிளினிக் 160 00:09:23,605 --> 00:09:26,775 {\an8}- என்ன கொண்டு வந்திருக்கிறோம் பாரு. - கிரிஸ், காலி படுக்கைகள் இருக்கிறதா? 161 00:09:26,775 --> 00:09:28,861 {\an8}நாங்கள் வருகிறோம். சக்கர நாற்காலி தேவை. 162 00:09:28,861 --> 00:09:31,154 - சரி, நான் பார்த்துக்கொள்கிறேன். - நல்லது. 163 00:09:31,864 --> 00:09:33,240 ஆண் நோயாளி. வயது 60. 164 00:09:33,240 --> 00:09:34,616 மின் அதிர்ச்சியினால் ஏற்பட்ட மாரடைப்பு. 165 00:09:34,616 --> 00:09:36,368 இவருக்கு அவசர சிகிச்சை தேவை, சரியா? 166 00:09:36,869 --> 00:09:38,412 ஆண் நோயாளி. 167 00:09:39,037 --> 00:09:40,330 வயது 24. 168 00:09:40,831 --> 00:09:42,332 தீக்காயங்கள். 169 00:09:43,292 --> 00:09:44,710 இரண்டு கைகளிலும். 170 00:09:45,377 --> 00:09:47,045 14 ஜிசிஎஸ். 171 00:09:47,045 --> 00:09:48,755 ரத்த அழுத்தம் 132. 172 00:09:57,931 --> 00:10:00,559 - ஆண் நோயாளி. - அவர் நலம்தான், மிஸ். 173 00:10:02,644 --> 00:10:04,521 ...கிளாஸ்கோ ஸ்கேலில் பதிமூன்று புள்ளிகள்... 174 00:10:07,274 --> 00:10:09,985 ஒன்றுமில்லை. எல்லாம் சரியாகிவிடும். 175 00:10:09,985 --> 00:10:13,405 நிக்கின் கையைப் பார்த்தாயா? நிக்கிற்கு என்ன செய்வார்கள்? 176 00:10:14,406 --> 00:10:15,657 என்ன, தம்பி? 177 00:10:19,328 --> 00:10:21,872 அவர்களை எப்படி பணம் கட்ட வைத்தாய்? 178 00:10:21,872 --> 00:10:24,249 - என்ன சொல்கிறாய்? - உனக்குத் தான் ஆங்கிலம் தெரியாதே. 179 00:10:24,249 --> 00:10:27,002 வண்டியை ஓட்டி உன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வேன் 180 00:10:27,002 --> 00:10:29,046 நான் கற்றுக்கொண்ட ராப்பில் இருந்து. 181 00:10:29,588 --> 00:10:31,048 பாரு. 182 00:10:32,883 --> 00:10:34,760 அமெரிக்கர்கள் சொல்லும் டிப்ஸ். 183 00:10:35,844 --> 00:10:36,845 யாரிடமும் எதுவும் சொல்லக் கூடாது. 184 00:10:38,472 --> 00:10:39,973 யாரிடமும் எதுவும் சொல்லக் கூடாது. 185 00:10:39,973 --> 00:10:41,350 முடிந்துவிட்டது. போகலாம். 186 00:10:41,350 --> 00:10:43,143 - நீங்கள் நலமா, அப்பா? - நலம் தான். 187 00:10:44,853 --> 00:10:47,231 - போய் நம் பணத்தை வாங்கலாம், ரமோன். - வேண்டாம், நான் வாங்குகிறேன். 188 00:10:47,231 --> 00:10:49,525 - நான் டாக்டரிடம் பேச வேண்டும். - எதைப் பற்றி? 189 00:10:50,359 --> 00:10:51,443 பிறகு சொல்கிறேன். 190 00:10:51,443 --> 00:10:54,321 - ரமோன், அவர்கள் அமெரிக்கர்கள். நிறைய... - நான் பார்த்துக்கொள்கிறேன். 191 00:11:04,581 --> 00:11:05,874 இப்போது என்ன? 192 00:11:11,338 --> 00:11:15,551 இந்த நோயாளிகளைக் கொண்டு வந்ததன் மூலம், உன் ஈஜிக்கு கட்டணம் கொடுத்ததாக எடுத்துக்கொள்ளலாம். 193 00:11:16,802 --> 00:11:18,595 என் இரத்த சோதனைகளுக்கும் கூட? 194 00:11:20,222 --> 00:11:21,557 அட, என்ன இது? 195 00:11:27,521 --> 00:11:31,441 இன்னும் இரண்டு முறை நீ ஆட்களை கொண்டு வர வேண்டும். 196 00:11:31,441 --> 00:11:33,318 ஆனால் அவர்கள் அமெரிக்கர்கள். 197 00:11:34,778 --> 00:11:37,155 - அதனால் என்ன? - டாலர்களில் பணம் கொடுப்பார்கள். 198 00:11:41,869 --> 00:11:44,246 மரியோ, மாலை வணக்கம். 199 00:11:45,080 --> 00:11:47,374 - மாலை வணக்கம். - என்ன நடக்கிறது, ரமோன்? 200 00:11:48,542 --> 00:11:50,502 உனக்கு யோசனை சொல்ல வேண்டாம் என உன் மகனிடம் சொல்லு. 201 00:11:50,502 --> 00:11:52,296 என்ன இது, ரமோன். அவர் உங்களுக்கு பணம் தர வேண்டும். 202 00:11:52,296 --> 00:11:56,216 மேலும், அவர்கள் இறந்தால், நமக்கு பிரச்சினை தான். 203 00:12:03,599 --> 00:12:05,684 கரோனரி ஆர்ட்டரி பைபாஸ் கிராஃப்ட். 204 00:12:06,685 --> 00:12:08,937 இங்கே கிளினிக்கில் அதற்கு நேரமில்லை. 205 00:12:09,980 --> 00:12:12,316 ஆனால் வேறு மாற்றுகள் உண்டு. 206 00:12:12,316 --> 00:12:13,734 எது போல? 207 00:12:13,734 --> 00:12:15,444 மாற்று சிகிச்சைகள். 208 00:12:16,320 --> 00:12:17,779 ஆன்டிஅரித்மிக்ஸ். 209 00:12:17,779 --> 00:12:20,616 என்னை முட்டாள் என்று நீ நினைப்பது போலத் தோன்றுகிறது. 210 00:12:20,616 --> 00:12:22,326 நீ எப்படி மக்களை ஏமாற்றுகிறாய் என எனக்குத் தெரியும். 211 00:12:22,326 --> 00:12:23,702 ஆனால் உன்னை ஏமாற்றவில்லை. 212 00:12:24,328 --> 00:12:25,954 நீ என் குடும்பம் போல. 213 00:12:27,789 --> 00:12:28,790 கேளு. 214 00:12:29,875 --> 00:12:33,003 இந்த பாட்டில் ஒரு மாதத்திற்கு வரும். 215 00:12:34,213 --> 00:12:36,006 ஐந்து முறை நோயாளிகளைக் கொண்டு வந்ததற்கு கைமாறாக... 216 00:12:36,673 --> 00:12:38,217 இதை உனக்குக் கொடுக்கிறேன். 217 00:12:39,092 --> 00:12:41,386 நீ விளையாடுகிறாய். நாங்கள் எப்படி சாப்பிடுவது? 218 00:12:43,972 --> 00:12:45,682 ஏப்ரல் 28 மற்றும் 29. 219 00:12:45,682 --> 00:12:47,518 பாரு, முட்டாளாக இருக்காதே. 220 00:12:47,518 --> 00:12:49,728 வசந்த காலத்தில் திருமணம் செய்ய வேண்டாமா? 221 00:12:49,728 --> 00:12:51,730 நீ சந்திக்கும் எல்லா பெண்ணிடமும் நிச்சயம் இதைத்தான் சொல்வாய். 222 00:12:51,730 --> 00:12:54,816 - இப்போது உண்மையாகச் சொல்கிறேன். - சரி, வாயை மூடு. 223 00:12:54,816 --> 00:12:56,902 என்னிடமும் கோடை காலத்தில் திருமணம் செய்யலாம் என்றான். 224 00:12:57,736 --> 00:12:58,904 அட, விடு. 225 00:12:58,904 --> 00:13:01,865 நீங்கள் எல்லோரும் அழகாக இருப்பது என் தவறா? 226 00:13:01,865 --> 00:13:03,158 அடச்சே. 227 00:13:03,158 --> 00:13:05,953 - ஒரு நிமிடம் இரு. - திட்டு வாங்க போகிறான். 228 00:13:05,953 --> 00:13:09,248 அன்பே, எல்லாம் நலம் தானே. உன்னைப் பற்றியே நினைக்கின்றேன். 229 00:13:09,248 --> 00:13:11,834 சரி. ஒரு காரணத்திற்காக என்னை திட்டுவார்கள். 230 00:13:12,501 --> 00:13:13,710 அது உன் நஷ்டம், என் லாபம். 231 00:13:13,710 --> 00:13:16,421 இந்த முறை உண்மையாகச் சொல்கிறேன், என்றாவது ஒருநாள் கிரிஸிஸுடன் போவேன். 232 00:13:16,421 --> 00:13:17,506 இது சத்தியம். 233 00:13:18,590 --> 00:13:21,176 பெர்னி உன்னைப் பார்க்க விரும்புகிறேன் 234 00:13:21,176 --> 00:13:24,596 {\an8}எங்கே இருக்கிறாய்? உன்னைப் பார்க்க வேண்டும் நானே வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன் 235 00:13:24,596 --> 00:13:29,184 {\an8}நான் இன்னொரு பார்ட்டிக்கு போனேன் 236 00:13:42,114 --> 00:13:43,365 இப்போது என்ன செய்தாய்? 237 00:13:46,201 --> 00:13:47,411 உன் முகத்துடிப்பு, தம்பி. 238 00:13:48,036 --> 00:13:51,331 பதட்டமாக இருக்கும் போது, நாக்கை நக்கி கடிப்பாய். 239 00:13:51,874 --> 00:13:54,126 அது உண்மையில்லை. அந்த சாஸை நக்குகிறேன். 240 00:13:57,838 --> 00:13:59,840 மறுபடியும் உனக்கு தண்டனை கொடுக்கப்பட்டதா என்ன? 241 00:13:59,840 --> 00:14:01,258 இல்லை. 242 00:14:01,258 --> 00:14:02,718 வகுப்பில் தேர்ச்சி பெறவில்லையா? 243 00:14:04,761 --> 00:14:06,555 பிறகு, என்ன செய்தாய்? என்ன பிரச்சினை? 244 00:14:10,184 --> 00:14:12,853 எல்லோருக்கும் ரகசியங்களுண்டு, இல்லையா? 245 00:14:16,857 --> 00:14:19,860 நீ டமாயோவாக இருக்க வேண்டும். 246 00:14:22,070 --> 00:14:23,488 இங்கே இரு. 247 00:14:37,503 --> 00:14:39,630 அந்த ரகசியங்கள் உன்னைக் கஷ்டப்படுத்தினால், 248 00:14:40,339 --> 00:14:42,341 வெளியே சொல்லிவிடு, செல்லம். 249 00:14:44,968 --> 00:14:46,261 என்னை நம்பு. 250 00:14:47,679 --> 00:14:48,972 என்னைப் பாரு. 251 00:14:48,972 --> 00:14:50,766 மூச்சை உள்ளிழு. இது வலிக்கும். 252 00:14:51,934 --> 00:14:54,561 தெரியும், தெரியும், தெரியும். ஒன்றும் சொல்லாதே. 253 00:14:54,561 --> 00:14:57,523 நான் சிறப்பாக அறிவுரை சொல்வேன். எனக்கே சொல்லிக்கொள்ள மாட்டேன். 254 00:14:57,523 --> 00:14:59,858 இது ஒன்று, இரண்டு, மூன்று முறை நடந்துவிட்டது, 255 00:14:59,858 --> 00:15:02,194 பணம் எங்கே என யாருக்கும் தெரியவில்லை. 256 00:15:02,194 --> 00:15:04,112 நாம் முட்டாள்களைப் போல இங்கு வேலை செய்கிறோம், 257 00:15:04,112 --> 00:15:07,032 பணம் கொடுக்க மறுக்கும் இந்த சுற்றுலா பயணிகளைக் காப்பாற்றுகிறோம். 258 00:15:07,032 --> 00:15:09,493 இந்த பையன் பள்ளியில் இருக்க வேண்டும், இப்போது. 259 00:15:09,493 --> 00:15:11,119 புரிந்துகொள்ளுங்கள், அப்பா. 260 00:15:11,119 --> 00:15:13,288 நாம் முயற்சிக்கிறோம். நாம் கடுமையாக உழைக்கிறோம், 261 00:15:13,288 --> 00:15:16,041 ஆனால் நீங்கள் அவர்களின் முட்டாள்தனமான பொய்களை நம்புகிறீர்கள், ரமோன். 262 00:15:16,041 --> 00:15:18,418 நீங்கள் அவனை நன்றாக அடித்திருக்க வேண்டும்! 263 00:15:18,418 --> 00:15:20,045 எவ்வளவு காலமாக இலவசமாக வேலை செய்கிறோம்? 264 00:15:20,045 --> 00:15:21,672 கொஞ்சம் பணம் கூட இல்லை, ரமோன். 265 00:15:21,672 --> 00:15:23,715 - அலுவலகம் மூடியிருந்தது... - எனக்கு அக்கறையில்லை... 266 00:15:23,715 --> 00:15:25,634 - அவர்கள் “பிறகு” கொடுப்பார்கள்! -”பிறகு” என்பது எப்போது? 267 00:15:25,634 --> 00:15:27,678 ஏற்கனவே தாமதமாகிவிட்டது, ரமோன். 268 00:15:27,678 --> 00:15:30,138 ஹே, ஹே. பாஸிற்கு மரியாதைக் கொடு. 269 00:15:30,138 --> 00:15:31,265 வா வேலையைத் தொடரலாம். 270 00:15:31,265 --> 00:15:33,684 வாயை மூடு! உன்னை உற்சாகப்படுத்துபவளிடம் போ. 271 00:15:33,684 --> 00:15:35,102 உனக்காகப் பேசினேன். 272 00:15:35,102 --> 00:15:36,687 சிறப்பாகச் செய்தாய், தம்பி. சிறப்பு. 273 00:15:36,687 --> 00:15:39,314 - உன் வேலையைப் பார். - உள்ளே ஏறு. 274 00:16:05,632 --> 00:16:06,884 காலை வணக்கம்! எப்படி இருக்கிறாய்? 275 00:16:06,884 --> 00:16:08,802 ஹாய், திருமதி. ஜோஸெஃபா. நான் நலம். நீங்கள்? 276 00:16:08,802 --> 00:16:10,596 நலம்தான். நல்ல நாளாக அமையட்டும். 277 00:16:10,596 --> 00:16:11,889 உங்களுக்கும். 278 00:16:13,557 --> 00:16:14,850 பிளாஸ்ட்... 279 00:16:17,853 --> 00:16:18,854 கொலோபிலாஸ்ட்... 280 00:16:20,314 --> 00:16:21,773 அடச்சே! 281 00:16:22,441 --> 00:16:23,650 மார்கஸ்! 282 00:16:24,359 --> 00:16:25,611 மார்கஸ்! 283 00:16:27,487 --> 00:16:28,614 முட்டாளே! 284 00:16:30,574 --> 00:16:32,326 போய் தரையைத் துடை, குரங்கே. 285 00:16:32,326 --> 00:16:34,411 சத்தத்தை குறைவாக வை, நான் படிக்கிறேன். 286 00:16:34,411 --> 00:16:36,079 ஐயோ, டாக்டர். 287 00:16:36,079 --> 00:16:38,207 காலை உணவிற்கு ஏதாவது சமை. 288 00:16:38,207 --> 00:16:39,875 சரி, சரி. 289 00:16:39,875 --> 00:16:41,251 என்ன இது! 290 00:16:52,513 --> 00:16:54,223 - வா போகலாம். - ஓ, இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே. 291 00:16:54,223 --> 00:16:56,016 - இல்லை, போகலாம். வா. - இன்னும் கொஞ்ச நேரம். 292 00:16:56,016 --> 00:16:57,100 வா. 293 00:17:01,355 --> 00:17:02,648 வழிவிடுங்கள், வழிவிடுங்கள். 294 00:17:03,607 --> 00:17:05,358 தயவு செய்து, எங்களுக்கு உதவுங்கள். 295 00:17:07,236 --> 00:17:10,280 வழிவிடுங்கள், வேன் ஓட்டுனரே! வழிவிடுங்கள். 296 00:17:10,948 --> 00:17:13,492 சைரன் ஏன் ஆனில் இருக்கு, அப்பா? 297 00:17:13,492 --> 00:17:15,202 இவர்களுக்கு அவசரம் இல்லை. 298 00:17:16,994 --> 00:17:19,830 நோயாளிகள் இருப்பதாக நினைத்தால் காவலர்கள் நம்மை நிறுத்த மாட்டார்கள். 299 00:17:19,830 --> 00:17:21,834 இரண்டு சடலங்களுக்கு பதிலாக. 300 00:17:21,834 --> 00:17:23,292 சைரனை நான் அணைத்தால், 301 00:17:23,961 --> 00:17:26,505 திடீரென்று ஆயிரம் பேட்ரோல்கள் வந்துவிடும். 302 00:17:26,505 --> 00:17:27,589 இந்தா, இதை வைத்துக்கொள். 303 00:17:28,799 --> 00:17:30,968 சரி. நம் ரகசியம். 304 00:17:34,304 --> 00:17:37,015 ஆம். அவள் கர்ப்பமாக இருந்தாள். 305 00:17:37,015 --> 00:17:38,892 உனக்கு அது ரொம்ப பிடிக்கும். 306 00:17:38,892 --> 00:17:40,435 உனக்கு ரொம்ப பிடிக்கும், கண்ணே. 307 00:17:40,435 --> 00:17:43,522 இல்லை, இனி எப்போதும் மெஸ்கால் குடிக்க மாட்டேன். என்றுமே மாட்டேன். 308 00:17:43,522 --> 00:17:45,274 போன வார கடைசியில் கூட இப்படித்தான் சொன்னாய். 309 00:17:45,274 --> 00:17:48,068 - ஹே, செக் தான் எனக்கு நினைவு படுத்தியிருக்கணும். - இல்லை, இல்லை, இல்லை. 310 00:17:48,068 --> 00:17:49,403 “செக்?” 311 00:17:49,403 --> 00:17:51,071 - ஆம், அதுதான் நம் செல்லப்பெயர். - ஆம், செக். 312 00:17:51,071 --> 00:17:53,282 - எப்போதிலிருந்து? - போன வெள்ளிக்கிழமை நடந்த பார்ட்டியில் இருந்து. 313 00:17:53,282 --> 00:17:56,285 - அது அற்புதமான பார்ட்டி. - சனிக்கிழமையைப் பற்றி சொல்கிறாய், இல்லையா? 314 00:17:56,285 --> 00:17:58,161 இல்லை, அது வேடிக்கையாக இருந்தது. 315 00:17:58,161 --> 00:18:00,664 மேலும் மேலும் நீ குடித்தது நினைவிருக்கிறது. 316 00:18:00,664 --> 00:18:01,874 மேலும் மேலும். 317 00:18:01,874 --> 00:18:04,626 பாத்ரூமில், பாடிக்கொண்டே கிடந்தாய்... 318 00:18:04,626 --> 00:18:07,087 - ஆடிக் கொண்டே அழு - அதை ஆட்டு, அதை ஆட்டு 319 00:18:07,087 --> 00:18:09,298 - ஆடிக்கொண்டே அழு - அதை ஆட்டு, அதை ஆட்டு 320 00:18:09,298 --> 00:18:11,300 அழுகையை நிறுத்த முடியவில்லை நான் சாக வேண்டும் 321 00:18:11,300 --> 00:18:13,719 ஆனால் டான் உமாருக்கு எல்லாவற்றையும் கொடுத்த பிறகு! 322 00:18:14,887 --> 00:18:17,514 அது அருமையாக இருக்கு, அந்த செக் பெயர். அருமையாக இருக்கு. 323 00:18:17,514 --> 00:18:19,266 - பெண்ணே எங்கே போகிறாய்? - இரு! 324 00:18:19,266 --> 00:18:21,059 உனக்கும் செல்ல பெயர் வேண்டுமா? 325 00:18:21,059 --> 00:18:24,897 “வரலாறு மேதை மற்றும் நிபுணர்” என்று சொல்லலாமா? 326 00:18:24,897 --> 00:18:25,981 அது நல்ல பெயர். 327 00:18:25,981 --> 00:18:27,316 - அருமை, கண்ணே. - ஆம். 328 00:18:27,316 --> 00:18:28,567 நீ எந்த பார்ட்டிக்கு போனாய், டமாயோ? 329 00:18:28,567 --> 00:18:31,528 ஆமாம், கண்ணே. உன் கண்ணுக்கு கீழே பெரிய கருவளையம் இருக்கிறது. 330 00:18:31,528 --> 00:18:33,655 ஆனால், உன் கண்ணுக்கு கீழ் இருக்கும் வளையம் அழகாக இருக்கு, பெண்ணே. 331 00:18:33,655 --> 00:18:37,492 உனக்கு பிடித்தவர்களோடு வெளியே போயிருப்பாய் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரியும். 332 00:18:37,492 --> 00:18:40,662 - அங்கே பாரு, அழகான டாக்டர் லூனா வருகிறார். - யாரது? 333 00:18:40,662 --> 00:18:42,497 ஹே, ரவுல். காலை வணக்கம். 334 00:18:42,497 --> 00:18:44,917 - ஹே. - சரி, சாப்பிட வருகிறீர்களா? 335 00:18:45,751 --> 00:18:47,794 நன்றி, ஆனால் முடியாது. வேறு ஒரு வகுப்பிற்கு போக வேண்டும். 336 00:18:47,794 --> 00:18:49,630 சரி, நாளை சந்திக்கலாம். 337 00:18:49,630 --> 00:18:51,340 - சரி. - பை-பை. 338 00:18:51,340 --> 00:18:53,550 - அட, ரெஜினா. என்ன ஆச்சு? - ஹே, என்ன? எனக்கு கவலை இல்லை. 339 00:18:53,550 --> 00:18:55,177 இலக்கின் மீது கவனம் வைப்பேன். 340 00:18:55,177 --> 00:18:57,513 இன்று ரெஜியின் குகையில் படிக்கப் போகிறோமா? 341 00:18:57,513 --> 00:19:00,140 - ஆம், போகலாம். - நீ வருகிறாயா? 342 00:19:00,140 --> 00:19:03,101 ச்சரி, பிறகு சந்திக்கலாம். எனக்கு வேலை இருக்கிறது. 343 00:19:03,101 --> 00:19:04,853 - அட, வா. - சத்தியமாக. 344 00:19:05,437 --> 00:19:06,980 - நான் வருகிறேன். - சரி. 345 00:19:06,980 --> 00:19:08,148 சரி. 346 00:19:26,917 --> 00:19:28,168 நீ பரிதாபத்திற்குரியவன் 347 00:19:28,168 --> 00:19:30,838 இந்த சூழ்நிலையில் மட்டுமல்ல, நான் வலிமையானவன் 348 00:19:30,838 --> 00:19:33,507 ஆண்மை நிறைந்தவன் அது நெறிமுறை இல்லை 349 00:19:33,507 --> 00:19:36,343 நான் திமிராக இருக்க முடியும் அப்பாடா, நீ ஒரு மருத்துவ உதவியாளர் 350 00:19:36,343 --> 00:19:38,011 நீ வீட்டிற்கு உன் ஆம்புலன்ஸில் போகலாம் 351 00:19:38,011 --> 00:19:40,389 எனக்கு பதட்டம் வருகிறது ஆனால் நீ வெறும் பொய் மூட்டை 352 00:19:40,389 --> 00:19:42,975 இது போர் என்கிறார்கள் ஆனால் நீ வலிமையாக இல்லை 353 00:19:42,975 --> 00:19:45,602 என் ஆம்புலன்ஸில் போகிறேன் சக்கரங்களின் சத்தத்தோடு 354 00:19:45,602 --> 00:19:48,313 நான் வண்டி ஓட்டுகிறேன் அந்த பாதை கடினமல்ல 355 00:19:48,313 --> 00:19:51,066 நீ வண்டி ஓட்டுவது அந்தளவு தேவையான விஷயம் அல்ல 356 00:19:51,066 --> 00:19:53,819 உன்னை போல் புதியவர் வந்து போவார்கள் அடிக்கடி மாறுவார்கள் 357 00:19:53,819 --> 00:19:56,363 அவன் பயில்வான் போல நினைக்கிறான் ஆனால் மென்மையாக இருக்கிறான் 358 00:19:56,363 --> 00:19:59,491 அழகான முகம் இருப்பது உன்னை பகைவனாக்காது 359 00:19:59,491 --> 00:20:01,952 கேளு, என் நண்பா வா, நாம் கைகுலுக்கலாம் 360 00:20:01,952 --> 00:20:04,371 எனக்கு வெல்ல விருப்பமில்லை ஆனால் என் பாடல் வெல்லும் 361 00:20:04,371 --> 00:20:06,999 பள்ளியில் நான் அழகானவன் என்பதால் அவனுக்கு பொறாமை 362 00:20:06,999 --> 00:20:10,169 இவன் ஒரு முட்டாள் என்று என் தங்கை சொன்னதால் இவனுக்கு கோபம் 363 00:20:13,422 --> 00:20:14,965 வாழ்த்துக்கள், நண்பா. 364 00:20:16,049 --> 00:20:18,969 - வாழ்த்துக்கள், நண்பா. - கிரிஸிஸ் எங்கே? 365 00:20:18,969 --> 00:20:20,304 அங்கே இருக்கிறாள் போலிருக்கிறது. 366 00:20:21,013 --> 00:20:23,432 சரி, பெருமைப்படாதே, திரு. ரேக். 367 00:20:24,850 --> 00:20:26,810 நான் சற்று சௌகரியமாக இருக்கிறேன் 368 00:20:26,810 --> 00:20:28,854 அட்டைகள் போல அவர்கள் விழுகிறார்கள் 369 00:20:28,854 --> 00:20:29,938 கிரிஸிஸ்! 370 00:20:29,938 --> 00:20:32,649 திரு. ரேக்-ஐ வைத்து தரையைத் துடைத்துவிட்டேன். 371 00:20:33,400 --> 00:20:35,444 இப்போது தான் நான் எஸ்தோபாஸை-ஐ தோற்கடித்தேன், அன்பே. 372 00:20:37,738 --> 00:20:39,072 நீ நலமா? 373 00:20:45,245 --> 00:20:46,663 இது என்னது? 374 00:20:52,336 --> 00:20:54,796 இரண்டு கோடுகள் வந்தால் என்ன அர்த்தம்? 375 00:20:57,132 --> 00:20:59,676 நாம் சொதப்பி விட்டோம். நான் கர்ப்பமாக இருக்கிறேன். 376 00:21:01,345 --> 00:21:03,472 விளையாடுகிறாய் தானே, கிரிஸிஸ். 377 00:21:07,768 --> 00:21:10,437 அன்பே, குழந்தையைப் பெற்றெடுத்தாலும்... 378 00:21:10,437 --> 00:21:13,690 என்னோடு யுஎஸ் வருவாயா மாட்டாயா? 379 00:21:19,905 --> 00:21:23,325 எனக்கு இந்த நாட்டில் இருக்க விரும்பவில்லை. 380 00:21:23,325 --> 00:21:25,744 இங்கே அல்லது எங்கேயும் இருக்க எனக்கும், என் பெற்றோருக்கும் விருப்பமில்லை. 381 00:21:25,744 --> 00:21:27,829 நான் கண்டிப்பாக இங்கே இருக்க மாட்டேன். 382 00:21:32,668 --> 00:21:34,920 அமெரிக்காவில் நாம் யார்? 383 00:21:35,712 --> 00:21:37,130 எல்லாம் இதே மாதிரி தான் இருக்கும், கிரிஸிஸ். 384 00:21:38,507 --> 00:21:40,634 அங்கே எல்லாம் நல்லபடியாக இருக்கும். 385 00:21:40,634 --> 00:21:42,469 இல்லாமலும் போகலாம். 386 00:21:43,428 --> 00:21:46,265 குறைந்தது, மாறுபட்டதாக இருக்கும். நான்... 387 00:21:46,265 --> 00:21:48,100 நான் இங்கிருக்க விரும்பவில்லை. 388 00:21:48,100 --> 00:21:49,643 அது உனக்கே தெரியும். 389 00:21:52,479 --> 00:21:55,524 நீ போனால், நானும் வருவேன். கண்டிப்பாக வருவேன். 390 00:21:55,524 --> 00:21:58,193 ஆனால், என் அம்மா செய்ததை நான் என் குடும்பத்திற்கு செய்ய முடியாது. 391 00:21:58,193 --> 00:22:00,195 எதுவும் சொல்லாமல் அவங்க போயிட்டாங்க. 392 00:22:00,946 --> 00:22:02,489 நான் என் குடும்பத்திடம் சொல்ல வேண்டும். 393 00:22:17,546 --> 00:22:18,755 நீ நலம் தானே? 394 00:22:19,548 --> 00:22:20,883 ஆமாம், நலம் தான். 395 00:22:21,800 --> 00:22:23,093 நீ முற்றிலும் சரியாகச் சொன்னாய். 396 00:22:24,428 --> 00:22:28,515 நாம் இப்போது... பெற்றோர்களாக முடியாது, இல்லையா? 397 00:22:28,515 --> 00:22:30,058 சரி. 398 00:22:30,058 --> 00:22:31,727 என்ன இது? தவறாக பேசிவிட்டேனா? 399 00:22:31,727 --> 00:22:35,480 கிரிஸிஸ்! இரு, கொஞ்சம் நேரம் கொடு. 400 00:22:51,288 --> 00:22:52,664 இறுதிச் சடங்கு நிலையம் டோரெஸ் 401 00:22:56,001 --> 00:22:58,879 - அது எப்படி இருக்கும்? - இறப்பதா? 402 00:23:01,298 --> 00:23:02,966 ஒருத்தரிடம் காசு இல்லாமல் இருப்பது. 403 00:23:05,260 --> 00:23:06,553 - அவருக்கு குடும்பம் இருந்ததா? - ஆம்... 404 00:23:06,553 --> 00:23:09,139 ஆனால், சடலம் எடுத்து செல்லும் வண்டி வைக்கக் கூட முடியவில்லை. 405 00:23:11,308 --> 00:23:14,311 எனக்கு உதவி செய்து, இங்கே அழைத்து வந்ததிற்கு நன்றி. 406 00:23:14,311 --> 00:23:15,729 இவ்வளவு குறைத்த பணத்திற்கு. 407 00:23:18,815 --> 00:23:20,984 அதுதான் நண்பர்களின் கடமை, கீமோ. 408 00:23:22,277 --> 00:23:23,278 என்ன பிரச்சினை? 409 00:23:23,904 --> 00:23:24,905 நான் ஏதாவது உதவட்டுமா? 410 00:23:27,699 --> 00:23:31,495 ஆம்புலன்ஸிற்கு ஒரு சைரன் வாங்க விரும்புகிறேன். 411 00:23:32,162 --> 00:23:34,665 சிறப்பு. இப்படி சத்தம் செய்பவையா? 412 00:23:36,875 --> 00:23:39,211 இல்லை, அவை அமெரிக்கன் சைரன். இது, இப்படி சத்தம் கொடுக்கும்... 413 00:23:42,005 --> 00:23:43,340 தெரியுமா, 414 00:23:44,132 --> 00:23:46,051 காலை வேளைகளில் நீ உதவ விரும்பினால், 415 00:23:46,051 --> 00:23:47,886 எனக்கு மிக மகிழ்ச்சி. 416 00:23:49,346 --> 00:23:51,890 உனக்கு உண்மையைச் சொல்ல விருப்பமிருந்தால்... 417 00:24:15,706 --> 00:24:16,957 நாம் போகலாம். 418 00:24:19,418 --> 00:24:21,170 புனித நீர் குடிநீர் 419 00:24:49,198 --> 00:24:51,033 நீங்கள் நிறைய ஓடியது போலத் தெரிகிறீர்கள். 420 00:24:51,033 --> 00:24:52,659 எப்போதும் உங்களுக்கு வேர்க்கிறது. 421 00:24:52,659 --> 00:24:54,453 வெளியே வெப்பமாக இருக்கிறது. 422 00:24:58,457 --> 00:25:00,209 உனக்கு பசிக்கிறது அல்லவா? 423 00:25:01,335 --> 00:25:03,253 இங்கே வினோத வாசம் வருகிறது, இல்லையா? 424 00:25:03,253 --> 00:25:06,632 - இந்த வாசம்... - சடலங்களா? 425 00:25:06,632 --> 00:25:07,966 இல்லை. 426 00:25:08,509 --> 00:25:09,968 அந்த சொரிசோவாக இருக்கலாம். 427 00:25:10,594 --> 00:25:11,803 அதன் வாசம் திடமாக இருக்கும். 428 00:25:13,847 --> 00:25:15,015 அது நல்லது தான். 429 00:25:21,688 --> 00:25:25,943 அப்பா, இறந்தவரின் ஆன்மாக்கள் இங்கே மாட்டிக்கொண்டிருக்குமா? 430 00:25:28,362 --> 00:25:31,532 கூரையில் அவை மாட்டியிருக்கலாம். 431 00:25:31,532 --> 00:25:33,951 அதனால் அவற்றால் சொர்க்கத்திற்கு போக முடியாது. 432 00:25:33,951 --> 00:25:35,744 அதனால் தான், அவற்றின் வாசம் தொடர்கிறது. 433 00:25:35,744 --> 00:25:37,204 கேளு... 434 00:25:37,913 --> 00:25:39,831 உனக்கு கவலையாக இருந்தால், 435 00:25:39,831 --> 00:25:43,001 நாம் புனித நீரால் இந்த ஆம்புலன்ஸை சுத்தம் செய்யலாம். 436 00:25:43,001 --> 00:25:45,337 கெட்ட விஷயங்களைப் போக்க. 437 00:25:45,337 --> 00:25:46,421 சரி. 438 00:26:06,984 --> 00:26:10,904 நிச்சயமாக, ரகசியமாக இருந்தால், நீ இன்னும் மகிழ்ச்சியாக உணர்வாய். 439 00:26:12,698 --> 00:26:14,491 டாக்டர் ரவுல். 440 00:26:15,993 --> 00:26:19,329 அவை நமக்கு மட்டும் சொந்தம் என்ற உணர்வே ரொம்ப மகிழ்ச்சியைத் தரும். 441 00:26:22,416 --> 00:26:23,667 அப்படித்தானே? 442 00:26:36,263 --> 00:26:37,681 அவனுக்கு உன்னைப் பிடிக்கும். 443 00:26:37,681 --> 00:26:38,849 என்ன? 444 00:26:39,433 --> 00:26:40,475 உன் நண்பன். 445 00:26:41,560 --> 00:26:43,103 இல்லை, நண்பா. அது அப்படி இல்லை. 446 00:27:14,134 --> 00:27:16,678 இன்று நீயும் நானும் மட்டும் தான், இல்லையா? 447 00:27:16,678 --> 00:27:18,180 பொருட்களைக் கொண்டு வா. 448 00:27:20,015 --> 00:27:21,391 சீக்கிரம். 449 00:27:21,391 --> 00:27:23,018 வழி விடுங்கள். வழி விடுங்கள். 450 00:28:05,352 --> 00:28:06,353 அப்பா! 451 00:28:07,354 --> 00:28:10,148 - புனித நீர் காலியாகிவிட்டது! - என்ன? 452 00:28:10,983 --> 00:28:13,694 புனித நீர் இல்லை... 453 00:28:36,717 --> 00:28:38,135 மூன்று துளிகள்... 454 00:28:39,344 --> 00:28:42,097 குளோரின் மற்றும் இரண்டு துளிகள் புனித நீரை அங்கே தெளி. 455 00:28:42,097 --> 00:28:44,349 அப்போது தான், ஆன்மாக்கள் சொர்க்கத்திற்கு நேராகப் போகும். 456 00:28:57,196 --> 00:28:58,822 ஹே, நீ வந்து விட்டாயே! 457 00:28:58,822 --> 00:29:01,283 - நான் வருவேன் என்று சொன்னேனே. - நீ எப்போதும் அப்படித்தான் சொல்வாய். 458 00:29:01,283 --> 00:29:02,701 மோசமான ரெஜினா. அட, நிறுத்து. 459 00:29:02,701 --> 00:29:03,952 வா. 460 00:29:05,370 --> 00:29:06,455 - நீ கிளம்புகிறாயா? - ஆமாம். 461 00:29:06,455 --> 00:29:09,041 வா, இப்போது காலியாக இருக்கும் அறையை காண்பிக்கிறேன். 462 00:29:09,041 --> 00:29:10,125 உனக்குத் தேவைப்படலாம். 463 00:29:10,125 --> 00:29:11,293 நல்ல விஷயம். 464 00:29:12,419 --> 00:29:14,129 யாரோ ஆக்கிரமித்து விட்டார்கள் போலத் தோன்றுகிறது. 465 00:29:15,923 --> 00:29:17,466 - எப்படி இருக்கிறாய்? - நலமாக இருக்கிறேன், நீ? 466 00:29:17,466 --> 00:29:21,136 - நாம் படிக்க வேண்டாமா? - மயக்கத்தை கலைக்க. 467 00:29:23,430 --> 00:29:25,766 மரிகெபி, என்ன அதிசயம் இது? 468 00:29:25,766 --> 00:29:27,142 என்ன விஷயம்? 469 00:29:27,684 --> 00:29:29,436 ஹே, உனக்கு பீர் வேண்டாமா? 470 00:29:29,436 --> 00:29:31,063 - இல்லை, வேண்டாம். - நிச்சயமாக? 471 00:29:31,063 --> 00:29:32,314 ஆமாம். 472 00:29:39,988 --> 00:29:41,448 காபி இருக்கிறதா? 473 00:29:41,448 --> 00:29:43,408 - காபியா, கண்ணே? - காபி தான், கண்ணே. 474 00:29:44,034 --> 00:29:45,994 - கிச்சனில் எப்போதும் கொஞ்சம் இருக்கும். - சிறப்பு. 475 00:29:45,994 --> 00:29:47,996 கிச்சனில் எப்போதும் காபி இருக்கும். 476 00:29:47,996 --> 00:29:49,164 ஆம், மற்றும் என்... 477 00:29:56,505 --> 00:29:58,799 உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, செல்லம். 478 00:30:00,300 --> 00:30:02,928 உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, நண்பா. 479 00:30:02,928 --> 00:30:06,473 உனக்கு நடனமாடப் பிடிக்கும் என்று என்னிடம் சொல்லவே இல்லை. 480 00:30:07,516 --> 00:30:08,600 நான் என்ன சொல்வது? 481 00:30:10,060 --> 00:30:13,856 - நான் ஒரு விசித்திர ஸ்பானிஷ் மனிதன். - அட. 482 00:30:17,651 --> 00:30:18,777 உண்மையாகவா? 483 00:30:20,571 --> 00:30:22,281 எனக்கு நேரமே இல்லை. 484 00:30:22,281 --> 00:30:24,950 நான் சென்று என் குடும்பத்தோடு, வேலை செய்ய வேண்டும். 485 00:30:26,243 --> 00:30:27,244 என்ன வேலை? 486 00:30:28,495 --> 00:30:30,414 வேலை, பணம் சம்பாதிப்பது... 487 00:30:31,623 --> 00:30:33,876 வீட்டில் நிலைமை சரியில்லை. 488 00:30:35,878 --> 00:30:37,379 நான் உதவலாமா? 489 00:30:40,382 --> 00:30:41,633 வேண்டாம், நன்றி. 490 00:30:43,010 --> 00:30:44,595 ஆனால், என்ன தெரியுமா? 491 00:30:44,595 --> 00:30:47,639 எனக்கு ஓய்வாக, 492 00:30:47,639 --> 00:30:49,224 எல்லோரையும் விட்டு விலகி, 493 00:30:49,224 --> 00:30:50,893 மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 494 00:30:50,893 --> 00:30:52,686 நீ அங்கே இருப்பது போல. 495 00:30:52,686 --> 00:30:55,063 நீ அதிக பிஸியாக இருந்தாய். 496 00:30:57,649 --> 00:30:59,735 இப்போது இங்கே இருக்கிறேன். 497 00:31:00,569 --> 00:31:01,862 உனக்கும் கொஞ்சம் வேண்டுமா? 498 00:31:08,243 --> 00:31:09,286 சிறப்பு. 499 00:31:10,204 --> 00:31:11,622 இதைக் குடிப்போம். 500 00:31:15,584 --> 00:31:17,920 சரி... சியர்ஸ். 501 00:31:18,670 --> 00:31:20,047 சியர்ஸ். 502 00:31:24,051 --> 00:31:25,928 - அங்கே என்ன செய்தாய்... - ம்-ஹ்ம்? 503 00:31:26,678 --> 00:31:28,222 அது நடனம் இல்லை. 504 00:31:28,805 --> 00:31:30,516 என்ன சொல்கிறாய்? 505 00:31:30,516 --> 00:31:32,768 - அது நடனமே கிடையாது. - ஆனால் நீ என்னைப் பார்த்தாய். 506 00:31:32,768 --> 00:31:34,436 அது நடனமே கிடையாது. நான் கற்றுத் தருகிறேன். 507 00:31:34,436 --> 00:31:36,813 - நடனமாட நீ எனக்குக் கற்று தருகிறாயா? - அல்லது நீ பயப்படுகிறாயா? 508 00:31:36,813 --> 00:31:38,148 எனக்கு பயமில்லை. 509 00:31:38,148 --> 00:31:40,859 - சரி, போகலாமா? - சரி. போகலாம். 510 00:31:41,944 --> 00:31:44,071 அடச்சே, நான் சிறந்த கலைஞன். 511 00:31:44,738 --> 00:31:46,198 இது அதி பயங்கரமாக இருக்கு. 512 00:31:46,698 --> 00:31:49,326 இந்த குடும்பத்தில் யாராவது ஒருவராவது திறமைசாலியாக இருக்கிறார்களே. 513 00:31:50,577 --> 00:31:51,954 அது சூனியம், இல்லையா? 514 00:31:51,954 --> 00:31:53,372 ஹே. 515 00:31:53,372 --> 00:31:56,291 இதை மறுபடியும் செய்யாதே. ஒரு வேலை பெறுவதற்காக. 516 00:31:58,043 --> 00:32:01,171 ஆம்புலன்ஸை புனித நீரால் சுத்தம் செய்தாய், இல்லையா? 517 00:32:02,130 --> 00:32:03,715 நாம் பாதுகாக்கப்படுகிறோம். 518 00:32:06,552 --> 00:32:08,762 - இதை கொளுத்து, தம்பி. - எதற்காக? 519 00:32:08,762 --> 00:32:10,806 சாத்தானிடம் ஒரு வரம் கேட்போம். 520 00:32:10,806 --> 00:32:12,599 அவ்வளவு தான். 521 00:32:12,599 --> 00:32:14,643 சாத்தானே, ஓ சாத்தானே, வா, சாத்தானே. 522 00:32:14,643 --> 00:32:17,145 எங்களுக்கு உதவு. யாருக்காவது கஷ்டம் வரட்டும். 523 00:32:17,729 --> 00:32:19,106 அடச்சே. 524 00:32:27,114 --> 00:32:29,157 இப்போது புனித நீரைக் கொண்டு அதை அணை. 525 00:32:31,201 --> 00:32:33,036 சிறு விபத்துக்கள் நிறைய வேண்டும். 526 00:32:33,036 --> 00:32:35,163 கொஞ்சம் பணம் கிடைக்கும், எல்லோரும் பாதுகாப்பாக இருப்பார்கள். 527 00:32:36,999 --> 00:32:38,083 அதை அணைத்து விடு. 528 00:32:40,711 --> 00:32:43,130 இது புனித நீர் இல்லை என்றால் என்ன செய்வது? 529 00:32:43,755 --> 00:32:45,924 அப்படி சொல்லாதே. ஏன் இருக்காது? 530 00:32:45,924 --> 00:32:47,009 உன்னையே புனிதப்படுத்திக்கொள். 531 00:32:51,805 --> 00:32:52,890 என்ன விஷயம், அப்பா? 532 00:32:52,890 --> 00:32:54,349 ஹாய், அன்பே! 533 00:32:56,977 --> 00:33:00,230 ஹே, ஏதாவது பிரார்த்தனை செய்கிறீர்களா? 534 00:33:00,981 --> 00:33:04,151 உன் வாசம் இங்கேயே வருகிறது. யாரோ ஜாலியாக இருந்திருக்கிறார்கள். 535 00:33:09,031 --> 00:33:10,199 உனக்கு மின்ட் தேவை, தங்கையே. 536 00:33:11,617 --> 00:33:13,076 வா டா, குட்டி பயலே! 537 00:33:23,337 --> 00:33:24,838 பார்த்தாயா, தம்பி? நான்தான் சொன்னேனே. 538 00:33:24,838 --> 00:33:26,465 சாத்தானுக்கு நன்றி சொல்லு! 539 00:33:26,465 --> 00:33:27,966 ஒரு அவசர உதவி வேண்டும்... 540 00:33:27,966 --> 00:33:29,843 உங்களுக்கு கிடைக்காது, முட்டாள்களே! 541 00:33:31,512 --> 00:33:32,596 போகலாம், ரமோன்! 542 00:33:34,640 --> 00:33:37,351 நகர்ந்து வழி விடுங்கள் நான் போக வேண்டும் 543 00:33:37,351 --> 00:33:40,395 நான் ஒரு மருத்துவ உதவியாளர் குற்றவாளி இல்லை 544 00:33:46,693 --> 00:33:48,070 ரமோன், நீங்கள் வழி தவறி விட்டீர்கள்! 545 00:33:50,155 --> 00:33:51,490 ரமோன்? 546 00:33:52,491 --> 00:33:53,534 ரமோன்! 547 00:33:54,034 --> 00:33:55,577 ரமோன்! 548 00:33:57,120 --> 00:33:58,413 என்ன இது? 549 00:33:59,414 --> 00:34:01,208 - என்ன நடக்கிறது? - என்னது? 550 00:34:07,881 --> 00:34:10,050 என்ன நடக்கிறது? 551 00:34:15,681 --> 00:34:16,764 அடச்சே. 552 00:34:16,764 --> 00:34:17,975 என்ன விஷயம்? 553 00:34:19,184 --> 00:34:20,643 - நீ நலமா? - ஆமாம். 554 00:34:20,643 --> 00:34:23,146 ரமோன்! 555 00:34:23,146 --> 00:34:24,731 ஐயோ, ரமோன்! 556 00:34:24,731 --> 00:34:26,942 அவர் பதிலளிக்கவில்லை. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கு. 557 00:34:26,942 --> 00:34:28,735 அவரை இறக்க உதவி செய். 558 00:34:28,735 --> 00:34:30,195 என்ன இது? 559 00:34:31,487 --> 00:34:33,156 ஸ்ட்ரெச்சரை தயார் செய். 560 00:34:33,156 --> 00:34:35,284 - நீ நலமா? நலமா? - ரமோன்! உதவி! 561 00:34:35,284 --> 00:34:36,409 எங்களுக்கு உதவி வேண்டும்! 562 00:34:38,203 --> 00:34:40,330 - ஐயோ, மரிகெபி! உதவி செய்! - நான் வருகிறேன்! 563 00:34:40,330 --> 00:34:42,416 ஸ்ட்ரெச்சர்! அதைக் கொண்டு வருகிறேன். 564 00:34:43,166 --> 00:34:44,168 கொஞ்சம் பொறு. 565 00:34:44,960 --> 00:34:46,420 ஸ்ட்ரெச்சர், ஹுலியோ! 566 00:34:46,420 --> 00:34:49,172 இப்போதே ஸ்ட்ரெச்சர் கொண்டு வா! நான் அவரைப் பிடித்துவிட்டேன். 567 00:34:49,172 --> 00:34:50,257 இங்கேயே இரு. 568 00:34:50,257 --> 00:34:52,926 - தயவுசெய்து, ஸ்ட்ரெச்சரைக் கொண்டு வா! - ஐயோ! ரமோன்! 569 00:34:53,886 --> 00:34:56,429 உதவி செய்! உதவி செய்! ஹுலியோ! 570 00:34:58,849 --> 00:34:59,892 அடச்சே. 571 00:35:02,102 --> 00:35:03,937 கீழே வை! கீழே வை! கீழே வை! 572 00:35:05,230 --> 00:35:06,899 - உதவி செய்! - சீக்கிரம்! 573 00:35:07,691 --> 00:35:09,026 சரி. வாருங்கள், ரமோன். 574 00:35:11,737 --> 00:35:12,988 சரி. 575 00:35:12,988 --> 00:35:14,948 - சீக்கிரம்! - ஒன்று... 576 00:35:14,948 --> 00:35:16,033 இரண்டு... 577 00:35:16,033 --> 00:35:17,117 மூன்று... 578 00:35:18,076 --> 00:35:19,745 - கிளம்பலாம். - போகலாம். 579 00:35:19,745 --> 00:35:21,997 மூன்று எண்ணும் போது இவரை தூக்கலாம். 580 00:35:21,997 --> 00:35:24,333 - ஒன்று... இரண்டு... - ஒன்று... இரண்டு... 581 00:35:26,376 --> 00:35:28,879 அவரைத் தள்ளு! அவரை உள்ளே தள்ளு! சரி. 582 00:35:28,879 --> 00:35:29,963 தண்ணீர். 583 00:35:29,963 --> 00:35:31,423 நாம் போகலாம்! நன்றி! 584 00:35:31,423 --> 00:35:33,258 நன்றி! உள்ளே ஏறு, ஹுலியோ! உள்ளே வா. 585 00:35:34,718 --> 00:35:36,470 - நாம் போகலாம். - நாம் போகலாம். 586 00:35:44,853 --> 00:35:46,897 வெள்ளை வேன்! தயவு செய்து, நகருங்கள்! 587 00:35:46,897 --> 00:35:48,106 தயவு செய்து, நகருங்கள்! இது அவசரம்! 588 00:35:48,106 --> 00:35:50,692 எனக்கு உதவு. ஆக்சிஜனை எடுத்து அவருக்குக் கொடு. சரியா? 589 00:35:50,692 --> 00:35:51,777 போ! 590 00:35:52,819 --> 00:35:54,238 போ, ஹுலியோ! 591 00:35:55,239 --> 00:35:56,406 அவருக்கு நினைவிருக்கிறதா? 592 00:35:57,866 --> 00:36:01,119 கேன்யுலேஷன் செய்வதற்கு எல்லாவற்றையும் தயாராக வை. சரியா, ஹுலியோ? 593 00:36:01,119 --> 00:36:02,621 நாம் சென்ட்ரல் மருத்துவமனைக்கு போகலாம். 594 00:36:02,621 --> 00:36:04,414 முடியாது! அது மிக தூரம். 595 00:36:04,414 --> 00:36:06,458 சென்ட்ரல் மருத்துவமனைக்கு போகலாம் என்றேன். 596 00:36:07,125 --> 00:36:10,337 சிகப்பு கார்! நகருங்கள்! இது ஒரு அவசரம்! 597 00:36:12,089 --> 00:36:14,341 என் அப்பாவிற்கு மாரடைப்பு என்று இந்த நம்பருக்கு மெசேஜ் செய். 598 00:36:14,341 --> 00:36:16,885 - அடச்சே. மாரடைப்பு. - தயவு செய்து, அதைச் செய்! 599 00:36:17,636 --> 00:36:20,430 - தயவுசெய்து! தயவுசெய்து நகருங்கள்! - அட, அப்பா. நலமாகிவிடுவீர்கள். 600 00:36:20,430 --> 00:36:21,849 நலமாகிவிடுவீர்கள். 601 00:36:53,505 --> 00:36:56,300 உங்களால் முடியும், அப்பா. சரியா? 602 00:37:00,596 --> 00:37:01,805 அவர் நாடித்துடிப்பை சரிசெய்தேன். 603 00:37:03,265 --> 00:37:04,933 நீங்கள் நலமாகிவிடுவீர்கள். 604 00:37:20,157 --> 00:37:21,617 சீக்கிரம்! 605 00:37:22,117 --> 00:37:23,410 ரமோன்! 606 00:37:23,410 --> 00:37:26,830 ஒன்றுமில்லை. நலமாகிவிடுவீர்கள், அப்பா. மருத்துவமனைக்கு வந்துவிட்டோம். சரியா? 607 00:37:26,830 --> 00:37:28,081 ஒன்றுமில்லை. 608 00:37:31,251 --> 00:37:32,294 ஹே! 609 00:37:32,294 --> 00:37:33,378 அமைதியாக இரு. 610 00:37:33,879 --> 00:37:35,130 அவருக்கு என்ன ஆச்சு? 611 00:37:35,130 --> 00:37:39,343 அவர் நாடித்துடிப்பை சரிசெய்தேன். 60, 40, மற்றும் 50 பிபிஎம் இருக்கிறது. 612 00:37:39,343 --> 00:37:41,303 எவ்வளவு நேரம் அவர் மாரடைப்பில் இருந்தார்? 613 00:37:42,137 --> 00:37:44,139 கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள். 614 00:37:44,932 --> 00:37:46,683 நாங்கள் பார்த்துகொள்கிறோம். 615 00:37:48,936 --> 00:37:51,855 சாத்தானை அழைத்தது என்னுடைய தவறு. 616 00:37:51,855 --> 00:37:53,857 இல்லை, யாருக்கும் சொல்லாமல் 617 00:37:53,857 --> 00:37:57,110 புனித நீரை குடித்தது என்னுடைய தவறு. 618 00:37:57,110 --> 00:37:58,195 என்ன? 619 00:37:59,363 --> 00:38:03,700 இறுதிச் சடங்கு நிலையத்தில் கால்பந்தாட்டம் விளையாடிய பிறகு அதைக் குடித்தேன். 620 00:38:05,369 --> 00:38:06,453 இறுதிச் சடங்கு நிலையமா? 621 00:38:08,330 --> 00:38:11,625 - அந்த மருந்திற்காக... - என்ன மருந்து, ஹுலியோ? 622 00:38:11,625 --> 00:38:14,002 அவருக்கு இதயப் பிரச்சினை இருப்பது உனக்கு முன்னரே தெரியுமா? 623 00:38:14,002 --> 00:38:16,880 அது எங்கள் ரகசியம் என்று சொன்னார். எல்லாம் சரியாகிவிடும் என்றார். 624 00:38:16,880 --> 00:38:18,966 இல்லை, தம்பி. குடும்பத்திற்குள் ரகசியங்கள் கூடாது. 625 00:38:18,966 --> 00:38:20,884 ஹுலியோ, நீ இந்த விஷயங்களைச் சொல்ல வேண்டும். 626 00:38:20,884 --> 00:38:22,719 சத்தியம் செய்திருந்தாலும் பரவாயில்லை. 627 00:38:23,345 --> 00:38:25,222 இது வாழ்வுக்கும் சாவிற்குமான ஒரு விஷயம் மற்றும் 628 00:38:25,222 --> 00:38:26,682 நாம் அதை தடுத்திருக்கலாம் தெரியுமா? 629 00:38:28,100 --> 00:38:29,101 அவர் நலமாகிவிடுவாரா? 630 00:38:32,437 --> 00:38:34,857 ஆமாம், தம்பி. அவர் ரமோன் டாமாயோ, இல்லையா? 631 00:38:37,818 --> 00:38:38,819 மன்னித்துவிடு. 632 00:38:54,835 --> 00:38:56,253 யாரை அழைக்கிறாய்? 633 00:38:57,171 --> 00:39:00,799 - உன் அம்மாவை. - அடச்சே. உண்மையாகவா? 634 00:39:01,925 --> 00:39:03,802 எதற்காக லெட்டிஷியாவை அழைக்கிறாய்? 635 00:39:04,595 --> 00:39:07,139 - அவங்களுக்கு அக்கறை இல்லை. - இது அவங்களுடைய பொறுப்பு. 636 00:39:07,139 --> 00:39:08,599 இல்லை, அப்படியில்லை. 637 00:39:09,391 --> 00:39:11,852 கடந்த மூன்று வருடங்களாக அவங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை. 638 00:39:12,394 --> 00:39:14,104 நம்மைப் பற்றி அக்கறை இல்லை. 639 00:39:14,104 --> 00:39:15,647 அவங்களுக்கு நம்மீது அக்கறை உண்டு. 640 00:39:16,315 --> 00:39:20,444 நான் அவங்களோடு சென்று வாழ்ந்தால் என் அப்பாவிற்கு பணம் கொடுப்பதாக சொன்னாங்க, 641 00:39:20,444 --> 00:39:24,198 ஆனால் நான் பயந்து, புறக்கணித்து விட்டேன். 642 00:39:25,616 --> 00:39:27,784 அவங்களை எப்போது பார்த்தாய், ஹுலியோ? 643 00:39:27,784 --> 00:39:29,411 எங்களிடம் ஏன் சொல்லவில்லை? 644 00:39:30,746 --> 00:39:32,831 தம்பி, அவங்களுக்கு வெட்கமே கிடையாது. அதாவது... 645 00:39:33,916 --> 00:39:35,375 அப்பா பற்றி செய்தி இருக்கிறது. 646 00:39:50,724 --> 00:39:51,725 ஹே. 647 00:40:05,447 --> 00:40:06,823 நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கு? 648 00:40:08,158 --> 00:40:10,744 உன் அப்பாவிற்கு வென்ட்ரிகுலர் ஃபிப்ரிலேஷன் இருக்கிறது. 649 00:40:13,372 --> 00:40:15,541 அவருக்கு இதய நோய் உண்டு. 650 00:40:17,042 --> 00:40:19,419 மருந்து கொடுத்திருக்கிறோம், ஆனால் இது சுலபமான விஷயமில்லை. 651 00:40:21,839 --> 00:40:23,799 - நான் சொல்வது புரிகிறதா? - ஆம், புரிகிறது. 652 00:40:25,467 --> 00:40:28,720 அவரை இதயவியல் துறையில் சேர்க்க வேண்டும். 653 00:40:33,517 --> 00:40:34,726 அவருக்கு காப்பீடு இருக்கிறதா? 654 00:40:36,395 --> 00:40:37,688 இல்லை. 655 00:40:38,564 --> 00:40:40,941 அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். வேறு வழி இல்லை, சரியா? 656 00:40:41,942 --> 00:40:43,861 அவருக்கு கத்தீடரைசேஷன் தேவைப்படுகிறது. 657 00:40:46,613 --> 00:40:48,949 அதற்குப் பிறகு தான், பைபாஸ் தேவையா என்று தெரிய வரும். 658 00:40:52,870 --> 00:40:56,206 அவருக்கு நாள்பட்ட கடுமையான அதெரோசெலெரோஸிஸ் இருந்திருக்கிறது. 659 00:40:59,751 --> 00:41:01,420 இதற்கு பணம் அதிகம் செலவாகும்... 660 00:41:02,004 --> 00:41:04,173 மற்றும் நேஷனல் காப்பீடு எடுத்த பிறகு அவருக்கு 661 00:41:04,173 --> 00:41:06,758 எப்போது அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. 662 00:41:06,758 --> 00:41:08,760 அதற்கிடையில், நம்மால் என்ன செய்ய முடியும்? 663 00:41:10,179 --> 00:41:13,765 ரத்தம் உறையாமல் தடுக்கும் மருந்துகள் மற்றும் நைட்ரோக்ளிசரின் கொடுக்கலாம். 664 00:41:16,310 --> 00:41:17,895 ஆனால் இது ஆபத்தான அறுவை சிகிச்சை. 665 00:41:19,730 --> 00:41:22,900 சிறு வேலை செய்தாலும் இன்னொரு ஆஞ்சைனா அல்லது 666 00:41:22,900 --> 00:41:24,318 மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 667 00:41:24,318 --> 00:41:25,986 கண்டிப்பாக படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டும். 668 00:41:27,696 --> 00:41:30,073 சரி. சரி. 669 00:41:31,408 --> 00:41:34,870 வருத்தமாகத்தான் இருக்கு. நான் இதயவியல் மருத்துவர் இல்லை என்பதால் எதுவும் செய்ய முடியவில்லை. 670 00:41:36,121 --> 00:41:38,498 எங்களுக்கு உதவியதற்கு நன்றி. 671 00:41:43,170 --> 00:41:44,171 ஆனால்... 672 00:41:47,257 --> 00:41:48,675 அவர் உயிரோடு இருப்பார், இல்லையா? 673 00:41:52,596 --> 00:41:54,056 என்னால் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. 674 00:42:13,242 --> 00:42:16,537 இருந்தாலும்... ரகசியங்கள் பிரச்சினையானவை அல்ல. 675 00:42:17,496 --> 00:42:20,582 நமக்கான முடிவுகளை எடுக்க, நாம் தயாராக இல்லை என்ற உண்மையை 676 00:42:21,625 --> 00:42:24,545 மற்றவர்களால் கையாள முடியாது என்று நினைப்பதுதான் பிரச்சினை. 677 00:42:25,420 --> 00:42:27,923 உண்மையிலேயே... 678 00:42:28,966 --> 00:42:34,721 என் அப்பா இல்லாமல் வாழ நாங்கள் தயாரா என்று தெரியவில்லை. 679 00:44:31,922 --> 00:44:33,924 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்