1 00:01:27,754 --> 00:01:28,797 அம்மா. 2 00:02:03,582 --> 00:02:05,042 {\an8}போர் நெருங்குகிறது 3 00:02:07,753 --> 00:02:11,048 {\an8}டிக்ளரேஷன் 4 00:02:43,789 --> 00:02:44,790 {\an8}ஸ்டேசி ஷிஃப் எழுதிய 5 00:02:44,790 --> 00:02:46,458 {\an8}"ஏ கிரேட் இம்ப்ரோவைசேஷன்" என்கிற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 6 00:03:07,312 --> 00:03:08,355 ஏன்? 7 00:03:08,856 --> 00:03:13,068 நான் நன்றாக வாழ நினைக்கிறேன். ஆனால் அந்த வாழ்வை உழைத்துப் பெறுவதற்கு சோம்பேறியாக உள்ளேன். 8 00:03:14,903 --> 00:03:16,864 அவ்வளவுதான். 9 00:03:18,323 --> 00:03:20,325 நாங்கள் உன்னை இப்படி வளர்க்கவில்லை. 10 00:03:20,325 --> 00:03:22,244 என்னை மன்னிக்கணும், அம்மா, ஆனால் நீங்கள் அப்படித்தான் வளர்த்துள்ளீர்கள். 11 00:03:22,244 --> 00:03:25,455 நாம் இப்போது எந்த நிலையில் இருக்கிறோம் என்று உனக்குத் தெரியுமா? 12 00:03:26,582 --> 00:03:28,250 எனக்குப் புரிகிறது நான்... 13 00:03:28,250 --> 00:03:30,752 நீ இந்த வீட்டைவிட்டு வெளியேற வேண்டும். 14 00:03:31,753 --> 00:03:35,632 நான் இனி இந்த வளாகத்திலோ, அல்லது எனக்குச் சொந்தமான இடத்திலோ உன்னைப் பார்த்தால், 15 00:03:35,632 --> 00:03:38,552 நான் உன்னை அடித்து, சங்கிலியால் பிணைத்துப் பூட்டி வைத்துவிடுவேன். 16 00:03:41,221 --> 00:03:42,931 - அதோடு முடிந்தது. - அப்பா. 17 00:03:43,432 --> 00:03:45,684 - நான் வாக்குத் தருகிறேன்... - வேறு யாரிடமாவது கொடு, உன் வாக்குறுதியை. 18 00:03:50,606 --> 00:03:52,191 அப்போது நான் என்ன செய்வது? 19 00:03:53,692 --> 00:03:55,235 அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. 20 00:04:00,157 --> 00:04:01,825 நாங்கள் அதுக்கு ஒத்துக்கொள்ள முடியாது. 21 00:04:02,576 --> 00:04:04,620 எங்களுக்கு அதை ஏற்க மனமில்லை. 22 00:04:04,620 --> 00:04:08,498 - முதலில், கனடாவை கொடுப்பது முக்கியம் என்றீர்கள். - நாங்கள் அந்த கோரிக்கையை விட்டுவிட்டோம். 23 00:04:08,498 --> 00:04:09,583 நான் விடவில்லை. 24 00:04:09,583 --> 00:04:12,419 இப்போது மிஸ்ஸிப்பியின் கரைகளை கேட்கிறீர்கள். 25 00:04:12,419 --> 00:04:16,923 நீங்கள் நஷ்டயீடு கொடுக்கவில்லை எனில், வேறு வகையில் அதைப் பெறுவதைத் தவிர, வேறு வழியில்லை. 26 00:04:16,923 --> 00:04:19,343 இன்னும் நியூ ஃபவுண்ட்லாண்டின் காட் மீன் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்படவில்லை. 27 00:04:19,343 --> 00:04:21,512 காட் மீன் பிடிக்கும் உரிமை எங்களுடையது, ஐயா. நாங்கள் அதை விட்டுக்கொடுக்க மாட்டோம். 28 00:04:21,512 --> 00:04:24,681 அதை விட்டுக்கொடுப்பதற்கு, அது உங்கள் உரிமையில்லை, அது எங்களுடையது, ஆகவே நாங்கள் அதை வழங்கலாம். 29 00:04:24,681 --> 00:04:27,392 இது போன்ற ஆணவம் தான் போர் தொடங்குவதற்குக் காரணமாக விளங்கியது. 30 00:04:28,602 --> 00:04:30,354 - திரு ஜே. - ஐயா? 31 00:04:30,354 --> 00:04:32,981 நீங்கள் தயவுசெய்து இங்கே புகைப்பிடிக்காதீர்கள். 32 00:04:33,857 --> 00:04:36,109 எனக்கு மூச்சு திணறுகிறது. 33 00:04:39,738 --> 00:04:41,698 - உங்கள் மாகாணம்... - எங்கள் நாடு. 34 00:04:44,201 --> 00:04:45,285 அதேதான். 35 00:04:46,203 --> 00:04:50,624 உங்கள் நாடு, ஜார்ஜியாவின் தென் கோடி வரை உள்ள 36 00:04:50,624 --> 00:04:52,501 நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது. 37 00:04:52,501 --> 00:04:55,587 அப்படியிருக்க, எந்த உரிமையில் நீங்கள் அதைவிட இரு மடங்கு பரப்பளவை எங்களிடம் கேட்கிறீர்கள் 38 00:04:55,587 --> 00:04:59,132 அதோடு, நாம் பார்த்திராத நிலங்களின் அதிகாரத்தையும் கேட்கிறீர்களே? 39 00:04:59,716 --> 00:05:02,594 இது நாங்கள் உருவாக்கும் நாடு என்ற உரிமையில் கேட்கிறேன். 40 00:05:02,594 --> 00:05:05,848 அதற்காகத்தான் நாங்களும், நாம் செய்துகொள்ளும் உடன்படிக்கையின் வரையறையை குறைக்க விரும்புகிறோம். 41 00:05:05,848 --> 00:05:09,142 அலைகடலுக்கும் அல்லெகெனி மலைகளுக்கும் இடையே உள்ள குறுகிய இடத்தில் எங்களை, அடக்க நினைத்தால், 42 00:05:09,142 --> 00:05:11,061 சமாதானப் பேச்சுக்களை நாங்கள் எப்படி ஏற்பது? 43 00:05:11,061 --> 00:05:13,981 வரையறையில்லாத எல்லைகளை நீங்கள் வலியுறுத்தினால், 44 00:05:13,981 --> 00:05:16,441 எங்களுடைய வட அமெரிக்க வணிக உரிமைகளை நாங்கள் எப்படி பாதுகாக்க முடியும்? 45 00:05:16,441 --> 00:05:20,404 உங்களுக்கு வட அமெரிக்காவில் வணிக உரிமைகள் இருப்பதுதான் எங்கள் கவலைக்கு அடிப்படை காரணம். 46 00:05:20,404 --> 00:05:22,906 - எனக்கு யாராவது விளக்குங்கள்... - திரு கிரென்வில்... 47 00:05:22,906 --> 00:05:24,950 ...நியூ ஃபவுண்ட்லாண்ட், எப்படி ஒரே சமயத்தில்... 48 00:05:24,950 --> 00:05:28,370 - உங்களுக்கு அறிவு குறைவா? - ...கனடாவைச் சேர்ந்தும், சேராமலும் இருக்கும். 49 00:05:28,370 --> 00:05:30,706 உங்களுக்கு முன் உதாரணங்களின் மிக அடிப்படை 50 00:05:30,706 --> 00:05:32,916 - புரிதல் இருந்தாலும், நீங்கள்... - ஒரு ஏற்பாடு செய்து கொண்டால்... 51 00:05:32,916 --> 00:05:34,710 அடக் கடவுளே, நிறுத்துங்கள்! 52 00:05:53,562 --> 00:05:54,730 டாக்டர் பிராங்கிளின். 53 00:05:57,357 --> 00:05:58,650 திரு ஓஸ்வால்ட். 54 00:05:58,650 --> 00:06:01,695 நாம் வேறு வகை வழியை பரிசீலிக்கலாமா? 55 00:06:01,695 --> 00:06:03,280 எந்த வகையான வழி? 56 00:06:03,822 --> 00:06:07,284 வெர்சாயில் உள்ள உங்கள் நண்பர்கள், ஒரு வரைபடத்தை வரைந்துள்ளனர் 57 00:06:07,284 --> 00:06:09,912 அதில் நாங்கள் கூறியுள்ளதைவிட குறைவாகவே இருக்கிறது. 58 00:06:10,662 --> 00:06:11,663 வரைந்துள்ளார்களா? 59 00:06:12,539 --> 00:06:15,250 உங்களுக்கும் அது தெரியும். எங்களுக்கும் அது தெரியும். 60 00:06:15,250 --> 00:06:17,377 உங்களுக்கு எப்படி அது தெரியும்? 61 00:06:19,129 --> 00:06:22,633 நாம் அனைவரும் சேர்ந்துதானே இந்த நாடகத்தை நடத்துகிறோம். 62 00:06:22,633 --> 00:06:24,635 ஹம், ஒருவரிடம் திருடிவிட்டு, அந்த திருட்டை 63 00:06:24,635 --> 00:06:27,054 அவரிடம் ஒத்துக்கொள்வது எவ்வளவு நேர்மையோ அது போலத்தான் உள்ளது உங்கள் வாதம். 64 00:06:27,054 --> 00:06:29,223 திரு ஆடம்ஸ், அவரைப் பேச விடுங்கள். 65 00:06:30,224 --> 00:06:33,352 பிரெஞ்சுகாரர்கள்தான் உங்களை மலைகளுக்கு கிழக்கே கட்டுப்படுத்த நினைக்கிறார்கள். 66 00:06:33,852 --> 00:06:37,523 மற்றவை எல்லாம் ஸ்பெயினிற்கும், சிகப்பு இந்தியர்களுக்கும் போகும், ஹம்ம்? 67 00:06:38,398 --> 00:06:40,234 அதனால் நம் இருவரையுமே அவர்கள் கட்டுப்படுத்த நினைக்கிறார்கள். 68 00:06:48,158 --> 00:06:55,082 பிரெஞ்சுகாரர்களுடன் கலந்து ஆலோசனை செய்துவிட்டு தீர்வுக்கு வருவதற்கு பதிலாக, 69 00:06:56,124 --> 00:06:58,710 நாமே இங்கு உடன்பாடு செய்துகொள்வது இன்னும் லாபகரமாக இருக்காதா? 70 00:07:06,885 --> 00:07:08,887 நீங்கள் எங்களுக்குக் கனடாவைத் தருவீர்களா? 71 00:07:16,103 --> 00:07:17,396 எங்களால் தர முடியாது. 72 00:07:17,396 --> 00:07:21,358 நாங்கள் கையகப்படுத்திய சொத்துக்களின் நஷ்டயீட்டை வேண்டாம் என்பீர்களா? 73 00:07:21,358 --> 00:07:22,776 நீங்களும் அதே போல் செய்வதானால், சரி. 74 00:07:25,571 --> 00:07:29,658 நீங்கள் மிஸ்ஸிப்பியின் கிழக்குக் கரையில் உள்ள நிலப்பரப்பை எங்களுக்கு விட்டுக்கொடுத்து 75 00:07:30,367 --> 00:07:34,454 அந்த நதியில் போக்குவரத்து உரிமைகளைத் தர நீங்கள் உறுதிமொழி தருவீர்களா? 76 00:07:34,454 --> 00:07:35,497 நாங்கள் உறுதிமொழி தருகிறோம். 77 00:07:36,874 --> 00:07:41,295 நீங்கள் எங்களுக்கு நியூ ஃபவுண்ட்லாண்டின் கடற்கரைப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமைகளைத் தருவீர்களா? 78 00:07:41,295 --> 00:07:43,088 - கடற்கரையை விட்டுக்கொடுக்கும் பேச்சுே இல்லை... - எங்களுக்கு உறுதி கொடுங்கள்... 79 00:07:46,049 --> 00:07:51,054 உங்கள் சம்மதத்தை, இப்போதே, அமைச்சர் வெர்ஜெனுடன் எந்த விதக் கலந்தாலோசனையும் இல்லாமல் 80 00:07:52,306 --> 00:07:54,433 கொடுங்கள், நாங்கள் இதற்கு சம்மதிக்கிறோம். 81 00:08:07,905 --> 00:08:08,989 எனக்குத் தெரியவில்லை. 82 00:08:10,532 --> 00:08:11,658 அதற்கு என்ன பொருள்? 83 00:08:12,159 --> 00:08:16,038 எனக்குத் தெரியவில்லை என்றேன். 84 00:08:19,958 --> 00:08:22,419 நீங்கள் சம்மதிப்பீர்களா என்று தெரியவில்லை என்று பொருளா? 85 00:08:25,380 --> 00:08:26,840 அதுதான் சரி. 86 00:08:31,386 --> 00:08:34,139 எங்களுக்கு எப்போது தெரிய வரும்? 87 00:08:34,890 --> 00:08:40,479 அதைச் சொல்ல முடியாது, ஆனால், அதற்கு பதில் தெரியவில்லை என்பது மட்டும் இப்போது தெரிகிறது. 88 00:08:50,822 --> 00:08:51,865 சரி... 89 00:08:54,159 --> 00:08:55,494 இரவு உணவிற்கான நேரம். 90 00:09:04,419 --> 00:09:08,131 திரு ஆடம்ஸ். திரு ஜே உங்களுடன் சற்று பேச விரும்புகிறார், ஐயா. 91 00:09:16,014 --> 00:09:17,975 அவர் உங்களை நல்ல வகையில் நடத்துகிறாரா, பென்னுவா? 92 00:09:20,352 --> 00:09:23,689 திரு ஜே மிகவும் யதார்த்தமான எஜமானர். 93 00:09:34,575 --> 00:09:38,495 மற்ற கவலைகளை எல்லாம் விட்டுவிட்டார். புகைப்பிடிக்க வேண்டாம் என்று சொல்கிறார். 94 00:09:39,538 --> 00:09:41,790 அதைச் சொல்வதற்காகவா என்னை அழைத்தீர்கள்? 95 00:09:42,958 --> 00:09:47,671 அவர் முன்பு இருந்த மனிதராக இப்போது இல்லை. துரதிர்ஷ்டவசமாக அது இப்போது தெளிவாகிறது. 96 00:09:49,214 --> 00:09:51,133 அதற்காக நீங்கள் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? 97 00:09:51,133 --> 00:09:53,302 நீங்கள் தான் அதை ஏற்கனவே முடிவு செய்துவிட்டீர்களே. 98 00:09:55,220 --> 00:09:56,680 நான் அதற்கு என் சம்மதத்தைத் தருகிறேன். 99 00:10:13,197 --> 00:10:15,199 எனக்கு உங்களை பிடிக்கவில்லை. 100 00:10:16,825 --> 00:10:17,826 நிஜமாகவா? 101 00:10:18,368 --> 00:10:20,370 உங்களுடைய ஆணவம் எனக்குப் பிடிக்கவில்லை. 102 00:10:21,163 --> 00:10:24,750 எனக்குக் கூட நீங்கள் பணிவுள்ளவராக பாசாங்கு செய்வது பிடிக்கவில்லை. 103 00:10:25,584 --> 00:10:27,878 புத்திசாலித்தனம் என்று சொல்லிக்கொண்டு 104 00:10:27,878 --> 00:10:31,924 உங்கள் கள்ளத்தனத்தை அறிந்துக்கொள்ளும் மற்றவர்களை திசைதிருப்புவது எனக்குப் பிடிக்கவில்லை. 105 00:10:32,424 --> 00:10:34,676 உங்களுடைய ஒழுங்கற்ற விரசங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. 106 00:10:34,676 --> 00:10:36,803 உங்களைவிட வயது குறைந்தவர்களிடமே அவை ஒழுக்கமின்மையைக் குறிக்கும் எனில், 107 00:10:36,803 --> 00:10:40,599 உங்களைப் போன்ற வயது முதிர்ந்தவர்களுக்கு அது சற்றும் பொருத்தமில்லை. 108 00:10:40,599 --> 00:10:44,019 உங்களுடைய விதிகள் அற்ற குணம், தந்தை பெயர் அற்ற குலம், 109 00:10:44,019 --> 00:10:46,563 உங்கள் பழக்க வழக்கங்கள், உடை உடுத்தும் விதம், எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. 110 00:10:46,563 --> 00:10:49,775 நீங்கள் எழுதிய அந்த ஆல்மனாக் புத்தகத்தை வெறுக்கிறேன். 111 00:10:49,775 --> 00:10:54,696 சரி, பிலடெல்பியாவில் நான் ஒரு தீயணைப்புப் படை நிறுவனத்தைத் தொடங்கினேன். 112 00:10:54,696 --> 00:10:56,698 அது உங்களுக்கு என் மீது சற்று மரியாதையைப் பெற்றுத் தரலாம். 113 00:10:57,741 --> 00:10:59,159 நான் இப்போது சொன்னதெல்லாம் 114 00:11:00,494 --> 00:11:02,079 ஒரு முன்னுரை மட்டும்தான். 115 00:11:08,502 --> 00:11:12,673 "...தங்களை நாட்டுப்பற்று உடையவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், சட்ட விரோதமாக 116 00:11:12,673 --> 00:11:15,926 கலவரத்தை உருவாக்குகிறார்கள், அதனால் அவர்களை நான் வெறுக்கும்படி ஆகிவிட்டது. 117 00:11:16,510 --> 00:11:22,099 ஆனால் எந்தப் பக்கம் வெற்றி பெற்றாலும், தனக்கான வாய்ப்புக்கள் குறையக் கூடாது என்பதற்காக, 118 00:11:22,099 --> 00:11:24,977 என் கருத்துகளை யாரிடமும் கூற வேண்டாம் என தாத்தா அறிவுறுத்துகிறார். 119 00:11:24,977 --> 00:11:30,899 ஏனெனில் தெளிவற்ற நேரங்களில், நம் உண்மையை மறைத்து, வேறு ஒன்றாக பிரதிபலிப்பதே புத்திசாலித்தனம், 120 00:11:31,650 --> 00:11:36,572 ஏனெனில் முடிவு எதுவானாலும், அதிலிருந்து லாபம் பெறலாம் என்றுதான் தாத்தா எனக்கு உபதேசிக்கிறார். 121 00:11:38,407 --> 00:11:42,578 ஏமாறாதவர்கள் யாருமே இல்லை." 122 00:11:44,621 --> 00:11:45,873 நான் அதைப் பார்க்கலாமா? 123 00:11:55,924 --> 00:11:57,426 உங்கள் வழக்கமான புத்திசாலி பதிலுரைகள் எதுவும் இல்லையா? 124 00:12:00,762 --> 00:12:05,309 நான் என்ன சொல்லி என்ன பயன்? நீங்கள் ஏற்கனவே என்னைப் பற்றி தீர்மானித்துவிட்டீரே. 125 00:12:07,060 --> 00:12:09,396 ஒரு குற்றமற்ற மனிதன் தன் எதிர்ப்பைத் தெரிவிப்பான். 126 00:12:09,396 --> 00:12:11,106 அதே போலதான் குற்றம் புரிந்தவனும் செய்வான். 127 00:12:14,193 --> 00:12:16,069 இதை வைத்து நான் உங்களை அழித்துவிட முடியும். 128 00:12:19,781 --> 00:12:21,825 அதைத்தானே நீங்கள் நெடுநாட்களாக விரும்பினீர்கள். 129 00:12:23,994 --> 00:12:25,537 இது உங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு. 130 00:12:52,314 --> 00:12:55,817 நீங்கள் எந்த பாவத்தையும் செய்யக்கூடியவர்தான்... 131 00:12:57,945 --> 00:12:59,238 ஒன்றைத் தவிர, அது தேசத் துரோகம். 132 00:13:00,572 --> 00:13:04,076 நன்றி. அப்படித் தான் நினைக்கிறேன். 133 00:13:14,670 --> 00:13:16,880 நீங்கள் பிரிட்டிஷாரின் அந்த கோரிக்கையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 134 00:13:18,549 --> 00:13:21,969 நாம் நினைத்ததைவிட அவர்கள் இன்னும் அதிகமாகவே விட்டுக்கொடுக்க தயாராக உள்ளனர். 135 00:13:22,761 --> 00:13:24,471 அப்படியென்றால் நீங்கள் ஏன் தயங்கினீர்கள்? 136 00:13:25,180 --> 00:13:26,348 ஏனென்றால்... 137 00:13:28,600 --> 00:13:33,981 நான் உறுதிமொழி என்று ஒன்றைக் கொடுத்துள்ளேன், அதோடு, நான் செய்ய வேண்டியது என்று ஒன்று உள்ளது. 138 00:13:33,981 --> 00:13:36,984 நாம் இதை ஏற்றுக்கொண்டால், பிரெஞ்சுக்காரர்கள் என்ன கூறுவார்கள் என நினைக்கிறீர்கள்? 139 00:13:36,984 --> 00:13:40,320 அவர்கள் என் வார்த்தைக்கு எந்த மரியாதையும் இல்லை என நினைப்பார்கள்... 140 00:13:42,364 --> 00:13:43,699 அவர்கள் நினைப்பதும் சரியாகவே இருக்கும். 141 00:13:44,449 --> 00:13:46,326 நீங்கள் எந்த நாட்டிற்கு உதவ நினைக்கிறீர்கள்? 142 00:13:49,162 --> 00:13:51,290 நான் அமெரிக்காவிற்காகத்தான் இங்கே வந்துள்ளேன், ஐயா. 143 00:13:52,124 --> 00:13:55,294 நான் வேறு எதைப் பற்றியும் கவலைப்பட்டதே இல்லை. 144 00:14:00,465 --> 00:14:06,597 அப்படியென்றால் நீங்களும் நானும் சமாதானம் செய்துகொள்வோமா? 145 00:14:09,892 --> 00:14:11,101 செய்துகொள்ளலாமே. 146 00:14:23,655 --> 00:14:27,659 இந்தக் கடிதம் என் கைக்கு எப்படி வந்தது என்று நீங்கள் கேட்கவேயில்லையே. 147 00:14:28,702 --> 00:14:31,955 திரு பேன்கிராஃப்ட் தான் அதை கொடுத்திருப்பார் என நான் சந்தேகப்படுகிறேன். 148 00:14:33,290 --> 00:14:34,416 அவர் அதை உங்களிடம் சொன்னாரா? 149 00:14:34,416 --> 00:14:37,211 கண்டிப்பாகச் சொல்லவில்லை, ஆனால் அவர் தான் பிரிட்டிஷாரின் கைக்கூலி பெறுபவராயிற்றே. 150 00:14:37,794 --> 00:14:39,171 உங்களுக்கு இது ஏற்கனவே தெரியுமா? 151 00:14:40,339 --> 00:14:42,049 வெகு நாட்களாகத் தெரியும். 152 00:14:44,927 --> 00:14:46,929 அவரை அந்தரங்க நண்பராக வைத்திருந்தீர்களே. 153 00:14:48,180 --> 00:14:51,517 அவர் நம்முடன் உட்கார்ந்து, மிக முக்கியமான விஷயங்களை அறிந்துள்ளார். 154 00:14:52,434 --> 00:14:55,229 அவர் நமக்குள் பகையை விதைத்து, மோசடியில் ஈடுபட்டுள்ளார், 155 00:14:55,229 --> 00:14:58,357 மேலும், நாம் பாடுபட்ட வந்த நோக்கத்தை எல்லாம் முறியடிக்கும் வகையில் செயல்பட்டார். 156 00:14:58,357 --> 00:15:02,528 அதெல்லாம் உண்மைதான், ஆனால், மற்றபடி அவர் விரும்பத்தக்கவர், 157 00:15:03,570 --> 00:15:05,447 அவற்றை நான் குறையாகப் பார்க்க முடியாது. 158 00:15:15,290 --> 00:15:20,587 நான்... இப்போது என் வசிப்பிடத்திற்கு திரும்புகிறேன். 159 00:15:30,055 --> 00:15:32,808 போகலாம்! மூடர்களே, விரைந்து செயல்படுங்கள்! 160 00:15:52,995 --> 00:15:54,496 இது டுக் டி லா வாகுயொனுக்கு. 161 00:16:13,557 --> 00:16:16,185 போகலாம் வாருங்கள்! அறிவிலிகளே, விரைந்து செயல்படுங்கள்! 162 00:16:29,823 --> 00:16:31,283 இது பேரன் டி ரோமன்வில்லுக்கு. 163 00:16:36,496 --> 00:16:38,373 சீக்கிரம். அவர் அழைக்கிறார். 164 00:16:44,296 --> 00:16:45,756 இது மார்கீ டி காஸ்ட்ரீஸுக்கு. 165 00:16:52,179 --> 00:16:53,472 காம்ட் டி மோன்ட்பாரிக்கு. 166 00:16:56,225 --> 00:16:57,518 சான்சிலர் மோபூக்கு. 167 00:17:08,444 --> 00:17:09,613 என்ன? 168 00:17:11,823 --> 00:17:12,991 இன்னும் கடினமாக முயற்சி செய். 169 00:18:05,169 --> 00:18:06,420 உங்களுக்கு என்ன வேண்டும்? 170 00:18:07,087 --> 00:18:08,088 எனக்கு ஒரு மெஸ்ஸேஜ் வந்துள்ளது. 171 00:18:11,842 --> 00:18:12,968 "என் புலியே." 172 00:18:12,968 --> 00:18:14,511 நான் இங்கே கவனம் செலுத்த விரும்புகிறேன். 173 00:18:14,511 --> 00:18:16,138 அது அவ்வளவு கடினமாக இல்லை, போலும். 174 00:18:21,018 --> 00:18:25,147 "உங்கள் அண்ணன் அரசராக இருக்கலாம், ஆனால் நீங்கள் என்னை ஆளுகிறீர்கள்." 175 00:18:26,899 --> 00:18:31,945 "மேலேயும் கீழேயும் உள்ள என் பிரதேசங்கள் உங்களுக்கு சொத்துக்களைத் தர தயாராக உள்ளன"... 176 00:18:34,156 --> 00:18:37,201 ஏதேதோ உளறல்களை எழுதத் துடிக்கும் பெண்களுக்கு எல்லாம் நான் பொறுப்பில்லை. 177 00:18:38,577 --> 00:18:39,745 பாவம் பையன். 178 00:18:40,537 --> 00:18:42,039 எவ்வளவு வேதனையாக இருக்க வேண்டும். 179 00:18:42,039 --> 00:18:44,833 கோபப்படுவதை விட்டுவிட்டு, தோற்றதை ஒப்புக்கொள்ளுங்கள். 180 00:18:48,795 --> 00:18:50,047 நான் தோற்றுப் போனதாக யார் சொன்னது? 181 00:18:51,048 --> 00:18:52,216 20,000 லீவர்கள் சொல்கின்றன. 182 00:18:55,344 --> 00:18:56,512 செஸ்ஸின் மீது பணயமா? 183 00:18:57,054 --> 00:18:58,263 அது விளையாட்டில்லையே. 184 00:19:03,268 --> 00:19:04,269 நல்லது. 185 00:19:06,104 --> 00:19:07,147 அப்படியே ஆகட்டும். 186 00:19:08,982 --> 00:19:09,983 இருபதாக இருக்கட்டும். 187 00:19:22,496 --> 00:19:23,497 என்ன? 188 00:19:24,665 --> 00:19:25,666 நான்... எதுவுமில்லை. 189 00:19:26,250 --> 00:19:27,376 நீ யார் சொல்லு? 190 00:19:31,421 --> 00:19:33,882 உங்கள் பணிவான சேவகன், மிஸ்யூர் ல காம்ட். 191 00:19:33,882 --> 00:19:35,843 உனக்குச் செஸ்ஸைப் பற்றி தெரியுமா? 192 00:19:36,426 --> 00:19:37,678 கொஞ்சம். 193 00:19:38,971 --> 00:19:39,972 சரி? 194 00:19:40,722 --> 00:19:42,182 நான் என்ன செய்ய வேண்டும் என்கிறாய்? 195 00:19:43,725 --> 00:19:45,602 உங்கள் சிப்பாயை எடுத்து... 196 00:20:39,781 --> 00:20:40,908 நியாயமில்லை. 197 00:20:40,908 --> 00:20:42,743 தோற்றவர்கள் அனைவரும் அதைத்தான் சொல்வார்கள். 198 00:20:46,622 --> 00:20:47,831 மீண்டும் உன் பெயரைச் சொல். 199 00:20:49,249 --> 00:20:50,542 கிலாம் டெம்பிள். 200 00:20:51,210 --> 00:20:52,586 மக்களே, 201 00:20:53,670 --> 00:20:57,341 நான் அறிமுகப்படுத்துகிறேன், மிஸ்யூர் கிலாம் டி டெம்பிள். 202 00:20:58,634 --> 00:20:59,801 என் புதிய... 203 00:21:00,761 --> 00:21:01,845 விளையாட்டு அமைச்சர். 204 00:21:17,778 --> 00:21:19,655 இன்று எப்படி இருக்கிறீர்கள், டாக்டர்? 205 00:21:20,781 --> 00:21:22,616 நீங்கள் பார்ப்பது போலவே இருக்கிறேன், ஐயா. 206 00:21:23,575 --> 00:21:26,828 இந்த பேச்சு வார்த்தைகள் உங்களை மிகவும் சிரமப்படுத்தி இருக்கும் என நினைக்கிறேன். 207 00:21:27,871 --> 00:21:29,289 ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? 208 00:21:29,790 --> 00:21:31,583 நான் புண்படுத்த விரும்பவில்லை. 209 00:21:31,583 --> 00:21:33,710 நான் அதெற்கெல்லாம் அப்பாற்பட்டவன். சொல்லுங்கள். 210 00:21:35,337 --> 00:21:38,757 கடந்த முறை நாம் சந்தித்தபோது, ஒரு கோரிக்கை ஒன்று நம் முன் வைக்கப்பட்டது. 211 00:21:38,757 --> 00:21:41,093 நாம் அதை வைத்து முன்னேறி இருக்க முடியும். 212 00:21:42,135 --> 00:21:43,762 நீங்கள் அதை குழப்பத்துடன் 213 00:21:45,097 --> 00:21:46,139 கையாண்டீர்கள். 214 00:21:47,057 --> 00:21:50,143 நான் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டேன் என்று நினைக்கிறீர்கள். 215 00:21:50,644 --> 00:21:51,645 அது உண்மையா? 216 00:21:52,271 --> 00:21:54,648 இருக்கலாம், ஆனால் அதை அறியும் கடைசி மனிதனாகத் தான் நான் இருப்பேன். 217 00:21:56,108 --> 00:21:58,277 நீங்கள் புதிர்களை விரும்புபவர், ஐயா. 218 00:21:59,236 --> 00:22:00,737 தெளிவாக இருப்பதே என் விருப்பம். 219 00:22:00,737 --> 00:22:04,116 டாக்டர் பிராங்கிளின் ஒரு குறிப்பிட்ட விதியை மீறியதால் சிக்கிக்கொண்டார். வேறு எதுவுமில்லை. 220 00:22:04,908 --> 00:22:07,035 நாங்கள் அனைத்தையும் பேசி சரிசெய்துவிட்டோம், எனக்குத் திருப்தி. 221 00:22:07,035 --> 00:22:11,206 நீங்களும் நானும் கூட ஏதோ ஒன்றை விவாதித்ததாக நினைவு உள்ளது. 222 00:22:11,206 --> 00:22:14,293 அந்த விஷயத்திற்கும் தீர்வு காணப்பட்டுவிட்டது. 223 00:22:23,093 --> 00:22:24,553 ஆகையால் நாம் இப்போது எந்த நிலையில் இருக்கிறோம்? 224 00:22:24,553 --> 00:22:27,306 நமக்கு நான்கு விஷயங்கள் கிடைக்க வேண்டும். 225 00:22:28,307 --> 00:22:30,934 நமது சுதந்திரம், நமது எல்லைகள், நமக்கு கிடைக்க வேண்டிய நஷ்ட ஈடுகள்... 226 00:22:30,934 --> 00:22:33,520 அந்த புனித காட் மீன் உட்பட. 227 00:22:33,520 --> 00:22:36,440 ஆம். அந்த காட் மீனும்தான். 228 00:22:37,900 --> 00:22:41,153 ஒருவழியாக, கடைசியில் நாம் ஒருமித்த கருத்துடன் பேசினால் நல்லது. 229 00:22:42,404 --> 00:22:43,655 யார் பேச வேண்டும்? 230 00:22:43,655 --> 00:22:45,490 நான் பேச விரும்புகிறேன். 231 00:22:47,201 --> 00:22:48,452 நான் அதை விரும்பவில்லை. 232 00:22:49,077 --> 00:22:50,120 மன்னிக்கணும், என்ன? 233 00:22:50,829 --> 00:22:54,458 நீங்கள் உணர்ச்சிகளின்றி பேசுகிறீர்கள், ஐயா. உங்களால் எந்த நன்மையும் வரப் போவதில்லை. 234 00:22:55,042 --> 00:22:56,960 நீங்கள் அதில் நிபுணர் என்று நினைக்கிறீர்களோ? 235 00:22:58,045 --> 00:23:03,217 நான் அதிக உணர்ச்சிவசப்படுபவன்... அப்படித்தான் சொல்கிறார்கள். 236 00:23:05,802 --> 00:23:08,639 சரி, அப்படியென்றால், மீதம் உள்ளது நான்தான். 237 00:23:08,639 --> 00:23:11,642 உங்களுடைய பெயர்போன இனிமை, அது இங்கே கை கொடுக்கும் என நினைக்கிறேன். 238 00:23:15,020 --> 00:23:16,438 அவர்கள் வந்துவிட்டார்கள். 239 00:23:18,357 --> 00:23:21,777 நீங்கள் எனக்காக ஒரு நாற்காலியைப் போட முடியுமா? 240 00:23:21,777 --> 00:23:24,696 நான் இதை நிமிர்ந்து உட்கார்ந்தபடி செய்ய விரும்புகிறேன். 241 00:23:31,328 --> 00:23:33,497 உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உள்ளதா, டாக்டர்? 242 00:23:33,997 --> 00:23:35,624 மிகவும் நல்ல முன்னேற்றம், ஐயா. 243 00:23:36,667 --> 00:23:40,671 அப்படியென்றால், இன்று அனைவரும் விரும்பும் ஒரு உடன்படிக்கையை நாம் எட்டலாம் என நம்புவோம். 244 00:23:40,671 --> 00:23:43,590 நாங்களும் அதே எண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் தான் அணுகுகிறோம். 245 00:23:43,590 --> 00:23:45,217 திரு கிரென்வில் எங்கே? 246 00:23:46,635 --> 00:23:47,678 அவர் மீன் பிடிக்கப் போயிருக்கிறார். 247 00:23:55,644 --> 00:23:59,022 எந்த முன்நிபந்தனையும் இன்றி எங்கள் சுதந்திரத்தை ஏற்கிறீர்களா? 248 00:23:59,022 --> 00:24:00,941 நாங்கள் அதை ஏற்கிறோம். 249 00:24:01,775 --> 00:24:05,028 நாம் ஒத்துக்கொள்ளும்படியாக எங்கள் நாட்டின் எல்லைகள் அமையும், 250 00:24:05,028 --> 00:24:08,031 மிஸ்ஸிப்பி ஆற்றங்கரையின் கிழக்குப் பகுதி வரையில் அது நீண்டிருக்கும். 251 00:24:08,782 --> 00:24:09,783 ஒத்துக்கொள்கிறோம். 252 00:24:09,783 --> 00:24:13,495 நியூ ஃபவுண்ட்லாண்ட் கடற்கரையில் மீன் பிடிக்கும் உரிமைகளும் 253 00:24:13,495 --> 00:24:15,956 எங்களிடம் தான் இருக்கும். 254 00:24:16,456 --> 00:24:17,291 அப்படியே ஆகட்டும். 255 00:24:18,208 --> 00:24:21,962 - அதன்பின், குறிப்பாக சில விஷயங்கள்... - ஒரே ஒரு விவாதிக்க வேண்டிய விஷயம். 256 00:24:22,754 --> 00:24:25,924 நாங்கள் நஷ்ட ஈடு கொடுக்கும் விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கிறோம். 257 00:24:25,924 --> 00:24:29,845 சர்ச்சைக்குரிய உங்கள் செயல்களில் கலந்துகொள்ளாமல் இருக்க விரும்பி, 258 00:24:29,845 --> 00:24:33,557 அரசருக்கு விசுவாசமாக இருந்த மக்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்தே ஆக வேண்டும். 259 00:24:33,557 --> 00:24:37,102 எனில் அமெரிக்கர்களின் நஷ்டங்களுக்கு ஈடாக, நீங்கள் பொருளாகவோ, சேவைகளாகவோ கொடுக்க வேண்டும். 260 00:24:37,102 --> 00:24:38,896 அதை எங்களால் ஏற்க முடியாது. 261 00:24:44,151 --> 00:24:45,611 திரு ஓஸ்வால்ட். 262 00:24:47,654 --> 00:24:50,199 இது நான் தனித்து எடுக்கும் முடிவல்ல, ஐயா. 263 00:24:50,782 --> 00:24:53,869 மேலும் இதில் சந்தோஷப்படும்படியாக நிறைய விஷயங்கள் உள்ளன. 264 00:24:54,453 --> 00:24:55,871 இருக்கலாம். 265 00:24:56,622 --> 00:25:00,375 ஆனால் நீங்கள், எங்களை துன்புறுத்திய கொடுமைக்கு நாங்கள் கட்டணம் கட்ட மாட்டோம். 266 00:25:02,211 --> 00:25:03,921 நாம் உடன்படிக்கைக்கு மிக நெருங்கி வந்துவிட்டோம், டாக்டர். 267 00:25:04,796 --> 00:25:06,965 போதுமான அவளவு நெருங்கி வரவில்லை எனத் தோன்றுகிறது. 268 00:25:08,550 --> 00:25:10,344 ஒரு இடைவேளை எடுத்துக்கொள்வோமா? 269 00:25:16,141 --> 00:25:19,520 இந்த விஷயத்தில் நீங்கள் சற்றும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் என்று சொல்லவேயில்லையே. 270 00:25:19,520 --> 00:25:21,271 நீங்கள் அதைப் பற்றிக் கேட்கவில்லையே. 271 00:25:21,271 --> 00:25:24,316 இன்னும் சலுகைகளைப் பெற, இதை விட்டுக்கொடுக்கலாம் எனத் தோன்றுகிறது. 272 00:25:24,316 --> 00:25:27,611 யதார்த்தத்தை கருத்தில்கொண்டு கொள்கையை விட்டுவிட முடியாது. 273 00:25:27,611 --> 00:25:30,447 வழக்கமாக நீங்கள் அதைப் பற்றி அதிக அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. 274 00:25:30,948 --> 00:25:33,784 என்னைப் பற்றியோ, எனது கொள்கைகளைப் பற்றியோ, உங்களுக்கு என்னத் தெரியும், ஐயா? 275 00:25:33,784 --> 00:25:37,579 தனி நபரின் கொள்கைகளை நாட்டின் கொள்கைகளாகக் கருதும் நேரம் இதுவல்ல என்று தெரியும். 276 00:25:37,579 --> 00:25:38,997 அதற்கு என்ன அர்த்தம்? 277 00:25:38,997 --> 00:25:41,542 உங்கள் மகனுடன் உங்களுக்குள்ள பிரச்சினை, உங்களுடைய சொந்த விஷயம். 278 00:25:41,542 --> 00:25:42,918 திரு ஜே. 279 00:25:42,918 --> 00:25:47,631 - இதனால் அவனைத் தண்டிக்க நினைக்கிறேன் என்கிறீர்களா? - நீங்கள் குழப்பத்தில் இருப்பதாக நினைக்கிறேன். 280 00:25:47,631 --> 00:25:52,678 சண்டையிடுவது முட்டாள்தனம் என நினைத்திருந்தேன், ஆனால் இப்போது நீங்கள் யோசிக்க வைக்கிறீர்கள். 281 00:25:52,678 --> 00:25:55,347 - உங்களால் நிற்கக் கூட முடியாது. - கண்டிப்பாக முயற்சி செய்வேன்! 282 00:25:55,347 --> 00:25:56,557 பெரியோர்களே! 283 00:25:58,058 --> 00:26:02,187 சொற்களை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை பரிந்துரைக்கிறேன். 284 00:26:05,941 --> 00:26:08,277 அதை மீண்டும் ஒரு முறை படிக்க முடியுமா? 285 00:26:14,908 --> 00:26:16,535 "காங்கிரஸ் பரிந்துரை செய்வது"... 286 00:26:16,535 --> 00:26:19,288 - ஆவலுடன் பரிந்துரை செய்வது -"ஆவலுடன் பரிந்துரை செய்வது, 287 00:26:19,288 --> 00:26:23,166 மாநிலங்கள் தங்கள் பிரதேசத்தில், அரசருக்கு விசுவாசமாக இருந்தவர்களைக் 288 00:26:23,750 --> 00:26:27,713 கண்டறிந்து, அவர்களிடமிருந்து கைப்பற்றிய சொத்துகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்." 289 00:26:29,006 --> 00:26:30,841 முடிந்தால். 290 00:26:32,885 --> 00:26:36,430 அவை பொறுப்பு எதுவும் ஏற்காத, ஒப்புதலுக்காக சேர்க்கப்பட்ட வார்த்தைகள். 291 00:26:40,058 --> 00:26:42,394 எங்களுக்குக் கொஞ்சம் அவகாசம் தர முடியுமா, பிளீஸ்? 292 00:26:55,699 --> 00:26:58,619 இவர்களுக்கு மாநிலங்களைக் கட்டாயப்படுத்த அவற்றின் மீது எந்த அதிகாரமும் இல்லை. 293 00:26:58,619 --> 00:27:02,789 வரிகள் கட்ட விருப்பம் இன்மையும், எதிர்ப்புணர்வும் தான் இவர்களை ஒரு நாடாக இணைக்கிறது. 294 00:27:02,789 --> 00:27:05,167 அவர்களின் கூட்டமைப்பைப் பற்றி நான் அறிவேன். 295 00:27:05,167 --> 00:27:07,294 எனில், நீங்கள் இந்த சலுகைகள் அர்த்தமற்றவை எனப் புரிந்துகொண்டிருப்பீர்கள். 296 00:27:07,294 --> 00:27:12,925 இல்லை, அதைக்கொண்டு நாம் பிரெஞ்சுகாரர்களைத் தோற்கடிப்போம். நாம் வந்த நோக்கமே அதுதானே. 297 00:27:17,221 --> 00:27:20,766 - குறைந்த பட்சமாக ஃபுளோரிடாவை தக்க வைப்போம். - அதை ஸ்பெயின் எடுத்துக்கொள்ளப் போகிறது. 298 00:27:23,185 --> 00:27:24,770 இதைப் பேசி முடிப்போம். 299 00:27:29,942 --> 00:27:31,151 ச்சே, மோசம். 300 00:27:31,151 --> 00:27:35,906 டாக்டர் பிராங்கிளின், திரு ஆடம்ஸ், திரு ஜே. 301 00:27:35,906 --> 00:27:42,329 நஷ்ட ஈடைப் பற்றி நீங்கள் கூறியிருப்பதை பரிசீலித்தோம், நாங்கள் அதை ஏற்கிறோம். 302 00:27:50,337 --> 00:27:53,799 அதை புரிந்துகொண்டதற்காக நாங்களும் உங்களுக்கு நன்றி கூறுகிறோம். 303 00:27:54,299 --> 00:27:56,927 மற்ற விஷயங்களில் நாம் கருத்து ஒருமித்து இருப்பதால், 304 00:27:58,428 --> 00:28:05,102 நாம் ஐவரும், இந்தத் தருணத்தில், சமாதான உடன்படிக்கையை ஏற்றதாகக் கூறலாமா? 305 00:28:05,853 --> 00:28:07,479 கண்டிப்பாகக் கூறலாம். 306 00:28:08,647 --> 00:28:09,898 அப்போது, பெரியோர்களே... 307 00:28:30,502 --> 00:28:32,337 இதோ உங்கள் அமெரிக்கா. 308 00:28:45,726 --> 00:28:47,227 இன்னொரு கோப்பை வேண்டுமா, டாக்டர்? 309 00:28:47,227 --> 00:28:48,770 அப்படித்தான் நினைக்கிறேன். 310 00:28:48,770 --> 00:28:51,231 நீங்கள் மதுவே அருந்தக் கூடாது என்று நினைத்தேன். 311 00:28:51,732 --> 00:28:55,360 யுனைடெட் ஸ்டேஸை வாழ்த்துவதற்காக என்னால் மது அருந்த முடியாதெனில், 312 00:28:55,903 --> 00:28:57,779 நான் இப்போதே உயிர் துறப்பது நல்லது. 313 00:28:59,865 --> 00:29:03,452 காங்கிரஸ் நம்மை சிறையில் அடைக்காமல் இருப்பதற்கு. 314 00:29:04,494 --> 00:29:06,955 நாம் அவர்களுடைய அறிவுரைகளைப் புறக்கணித்தோம் என அவர்களிடம் யார் சொல்லப் போகிறார்கள்? 315 00:29:06,955 --> 00:29:09,791 நீங்கள் தான் அதைச் செய்வதில் முனைப்புடன் இருந்ததாக நினைத்தேன். 316 00:29:09,791 --> 00:29:12,461 நான் அவர்களுக்கு சந்தோஷமாக அறிவிப்பேன். 317 00:29:13,587 --> 00:29:16,423 அப்படி ஒரு தரமற்ற ஆணையை மீறுவதில் பெருமை உள்ளது. 318 00:29:17,174 --> 00:29:20,761 ஒரு பிரெஞ்சு அரசரின் விருப்பத்தை பேணுவதற்காக நம்மை நாமே அவமானப்படுத்திக்கொள்ள வேண்டுமா என்ன? 319 00:29:20,761 --> 00:29:25,807 அந்த கடிதத்தை கடுமையாக எழுதுங்கள், திரு ஆடம்ஸ், மரியாதையைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை. 320 00:29:25,807 --> 00:29:28,977 சரிதான், நீங்கள் படிப்படியாக மரியாதை இழக்கச் செய்கிறீர்கள், ஐயா. 321 00:29:30,103 --> 00:29:32,898 ஆனால் இந்த முறை நான் அதை செய்யப் போவதில்லை. 322 00:29:33,607 --> 00:29:35,400 மதுபானத்தையாவது பருகுங்கள். 323 00:29:37,819 --> 00:29:39,029 அதில் என்ன உள்ளது? 324 00:29:39,863 --> 00:29:41,365 அது நல்ல போர்ட் ஒயின். 325 00:29:42,115 --> 00:29:43,951 எனக்கு கிளாரெட் தான் விருப்பம். 326 00:29:43,951 --> 00:29:46,828 சரி, அப்போது கிளாரெட்டே கொடுப்போம். திரு ஜே அதை எடுங்களேன். 327 00:29:51,917 --> 00:29:53,919 அதை நிரப்பிவிடுங்கள். 328 00:30:01,301 --> 00:30:02,469 நாம் வாழ்த்து சொல்வோமா? 329 00:30:03,262 --> 00:30:04,596 நீங்களே சொல்லுங்கள். 330 00:30:06,682 --> 00:30:12,145 நற்பண்பு, நேர்மை, மக்கள் கல்வி 331 00:30:12,145 --> 00:30:13,814 மற்றும் ஒழுங்கான ஆட்சியைப் பெறுவதற்கு. 332 00:30:15,315 --> 00:30:17,359 இவை எல்லாம் இல்லாமல் எந்த நாடும் இருக்க முடியாது. 333 00:30:18,986 --> 00:30:21,154 அது நல்ல நாடாகவும் இராது. 334 00:30:24,449 --> 00:30:26,285 - ஆமென், ஐயா. - அப்படியே ஆகுக. அப்படியே ஆகுக. 335 00:30:34,751 --> 00:30:40,257 டாக்டர் பிராங்கிளின், இன்று உங்களிடம் கடுமையாக நடந்துகொண்டேன், மன்னிக்கவும். 336 00:30:41,133 --> 00:30:42,885 நான் இதை ஏற்க முடியும். 337 00:30:43,552 --> 00:30:45,262 இருந்தாலும் கேட்க வேண்டும், 338 00:30:45,888 --> 00:30:48,056 வெர்சாயுடன் கலந்தாலோசிக்காமல், 339 00:30:49,808 --> 00:30:52,603 இதில் கையெழுத்திட நீங்கள் தீர்மானித்துள்ளீர்களா? 340 00:30:54,730 --> 00:30:58,108 சரி, வெர்ஜெனிடமாவது கூறிவிட வேண்டும். 341 00:30:59,067 --> 00:31:00,611 அந்தப் பொறுப்பு உங்களுடையது. 342 00:31:05,532 --> 00:31:07,910 சரி, அரசவையில் எனக்கு ஒருவன் இருக்கிறான். 343 00:31:18,504 --> 00:31:20,422 சொல்லவே தேவையில்லை. லெனுவார் தானே. 344 00:31:20,422 --> 00:31:21,965 இல்லை. வேறு ஒருவன். 345 00:31:22,633 --> 00:31:23,634 யார்? 346 00:31:24,134 --> 00:31:26,220 எனக்குத் தெரியாது. வெர்சாயிலிருந்து. 347 00:31:27,262 --> 00:31:28,931 நான் காலை சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். 348 00:31:28,931 --> 00:31:30,098 அவர் இது மிகவும் அவசரம் என்கிறார். 349 00:31:33,060 --> 00:31:36,188 இவர்களை எல்லாம் யார் உள்ளே விடுவது? நான் சரியான உடையில் இல்லை. 350 00:31:45,572 --> 00:31:48,992 அப்படி என்ன முக்கியமான விஷயம்... 351 00:31:51,828 --> 00:31:53,372 பிரதம மந்திரி. 352 00:31:53,914 --> 00:31:56,416 - நீ இங்கு என்ன செய்கிறாய்? - உங்களிடம் கொடுக்க ஒன்று உள்ளது. 353 00:31:56,416 --> 00:31:58,961 இங்கு அரசவையிலிருந்து வந்த யாரையாவது பார்த்தாயா? 354 00:31:59,461 --> 00:32:01,880 - நான்தான். - என்ன? 355 00:32:01,880 --> 00:32:03,340 நான் தான் அரசவையில் இருந்து வந்தவன். 356 00:32:04,925 --> 00:32:06,844 என்ன நடக்கிறதென்றே விளங்கவில்லை. 357 00:32:06,844 --> 00:32:09,096 நான் காம்ட் டி ஆர்ட்டுவாவின் சேவகன். 358 00:32:09,096 --> 00:32:11,139 - இது எப்போதிலிருந்து? - சமீபகாலமாகத் தான். 359 00:32:11,139 --> 00:32:12,850 அவர்தான் உன்னை அனுப்பி வைத்தாரா? 360 00:32:12,850 --> 00:32:14,434 இல்லை, என் தாத்தா. 361 00:32:14,434 --> 00:32:17,104 - உன் தாத்தாவை அனுப்பினாரா? - என் தாத்தா என்னை அனுப்பினார். 362 00:32:17,104 --> 00:32:19,273 உன் தாத்தாவிற்கு ஆர்ட்டுவாவை எப்படித் தெரியும்? 363 00:32:19,273 --> 00:32:20,524 - அவருக்குத் தெரியாது. - அப்போது ஏன்... 364 00:32:20,524 --> 00:32:23,569 இதன் நகலை உங்களுக்கு மிக விரைவாக அனுப்பி வைக்க விரும்பினார். 365 00:32:24,486 --> 00:32:25,487 இது என்னது? 366 00:32:27,656 --> 00:32:29,157 அமெரிக்காவிற்கும் பிரான்ஸுக்கும் உள்ள நட்பு 367 00:32:29,157 --> 00:32:33,495 என்றும் குறையக் கூடாது என்று அவர் விரும்புகிறார், அதோடு, நீங்களும் அதைத்தான் விரும்புவீர்கள் 368 00:32:33,495 --> 00:32:35,831 என நம்புவதாக, தாத்தா கூறினார். 369 00:32:50,554 --> 00:32:52,306 கேடுகெட்டவன். 370 00:32:58,812 --> 00:33:00,105 மிஸ்யூர் ல காம்ட்? 371 00:33:00,105 --> 00:33:01,481 மிஸ்யூர் ல காம்ட்! 372 00:33:02,524 --> 00:33:03,942 நான் லண்டனிலிருந்து திரும்பி வந்துவிட்டேன். 373 00:33:04,943 --> 00:33:06,278 பிரதம மந்திரி! 374 00:33:10,115 --> 00:33:12,951 நான் ஷெல்பர்ன் பிரபுவின் உதவியாளரை நேரடியாகச் சந்தித்துப் பேச முடிந்தது. 375 00:33:12,951 --> 00:33:16,914 நம்முடன் அவர்கள் தனியாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளனர். 376 00:33:16,914 --> 00:33:18,332 அவர் மிகவும் தெளிவுப்படக் கூறிவிட்டார்... 377 00:33:18,874 --> 00:33:19,875 என்ன... 378 00:33:25,297 --> 00:33:26,590 ஆனால்... 379 00:33:32,679 --> 00:33:33,722 இது என்ன... 380 00:33:39,144 --> 00:33:40,812 பிராங்கிளின் நம்மிடம் முழுமையாக உறுதிமொழிக் கொடுத்தது... 381 00:33:41,855 --> 00:33:43,315 அவர் உறுதிமொழிக் கொடுத்தாரே... 382 00:33:47,486 --> 00:33:48,987 அவர் நம்மை ஏமாற்றிவிட்டார். 383 00:34:08,297 --> 00:34:10,759 ஓஹோ! ஓஹோ, ஓஹோ. 384 00:34:18,559 --> 00:34:22,728 டாக்டர் பிராங்கிளின், திரு ஆடம்ஸ். தாமதத்திற்கு மன்னிக்கவும். 385 00:34:22,728 --> 00:34:24,356 மேலே அவர்கள் தயாராக உள்ளனர். 386 00:34:24,857 --> 00:34:26,400 - உங்கள் சேவகனை இன்று எங்கே காணவில்லை? - யாரு? 387 00:34:26,900 --> 00:34:27,985 பென்னுவா. 388 00:34:28,569 --> 00:34:29,820 அவன் ஓடிவிட்டான். 389 00:34:30,487 --> 00:34:34,199 நான் அவனை விடுதலை செய்கிறேன் என்றேன், ஆனால் கருப்பனால் காத்திருக்க முடியவில்லை. 390 00:34:51,507 --> 00:34:53,135 உங்களில் யார் முதலில் பேசுவீர்கள்? 391 00:34:54,887 --> 00:34:56,554 டாக்டர் பிராங்கிளின் பேசுவார். 392 00:35:16,450 --> 00:35:20,204 விடுதலை, அரசுரிமை... 393 00:35:22,247 --> 00:35:23,957 மற்றும் சுதந்திரம். 394 00:35:25,250 --> 00:35:26,710 அப்படித்தான் இதில் சொல்லப்பட்டுள்ளது. 395 00:35:48,649 --> 00:35:52,736 பி பிராங்கிளின் 396 00:36:28,146 --> 00:36:31,316 அவருடைய சடலத்தின் முதல் பிம்பம் அவருக்குத் திருப்தி அளிப்பதாக இருக்கவில்லை. 397 00:36:33,527 --> 00:36:36,321 அது அவரை மிகவும்... 398 00:36:36,321 --> 00:36:37,447 உயிரற்று காண்பித்தது என்று நினைத்தாரா? 399 00:36:39,950 --> 00:36:42,286 ஆகையால் இன்னொன்றைச் செய்யும்படி உத்தரவிட்டார். 400 00:36:42,286 --> 00:36:44,246 இது மிகவும் அமைதியாக இருப்பது போல் காணப்பட்டது. 401 00:36:45,455 --> 00:36:48,000 ஒரு அழகு பதுமையின் உறக்கம் போல். 402 00:36:48,542 --> 00:36:50,961 நானும் அப்படிப்பட்ட ஒரு உறக்கத்தை வரவேற்பேன். 403 00:36:52,671 --> 00:36:55,757 நீங்கள் அரசக் குடும்பமாக இருந்தால், நீங்கள் இறந்தப் பிறகும் கூட, எப்படிக் காணப்பட வேண்டும் 404 00:36:55,757 --> 00:36:57,551 என்பதை தீர்மானிக்கலாம். 405 00:36:57,551 --> 00:36:59,261 ஆனால் நம்மைப் போல் உள்ளவர்களால்... 406 00:37:00,804 --> 00:37:03,640 நாம் சந்திப்பதற்கு இவ்வளவு சோகமான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். 407 00:37:05,309 --> 00:37:07,144 நான் உங்களை பேஸ்ஸியில் சந்திக்கவே முடியாது. 408 00:37:07,144 --> 00:37:09,563 எதுவும் அப்படி நடப்பதில்லை. 409 00:37:10,063 --> 00:37:13,567 நீங்களோ, என் கணிப்பின்படி, வெர்சாயிக்கு வர மாட்டீர்கள். 410 00:37:14,568 --> 00:37:17,821 அதோடு, எனக்கு இந்த இடம் விருப்பமானது. 411 00:37:17,821 --> 00:37:20,908 ஆயிரம் வருடங்களாக ஆண்டு வந்த பிரெஞ்சு அரசர்கள். 412 00:37:21,408 --> 00:37:26,121 அவர்களின் பிழைகள் மறக்கப்படும், அவர்கள் பெயர் மட்டுமே நிலைக்கும். 413 00:37:26,121 --> 00:37:28,540 ஆனால் இதெல்லாம் உங்களுக்குப் புரியாது. 414 00:37:29,041 --> 00:37:31,251 அது என் வரலாறு இல்லையே. 415 00:37:32,961 --> 00:37:37,257 அந்த புதிய உலகம், அனைத்தும் சாத்தியம் என்ற அந்த புதிய உலகம். 416 00:37:37,257 --> 00:37:41,887 உலகம் அதே பழைய உலகம்தான், மனிதர்களும் அதை வகை மனிதர்கள்தான். 417 00:37:42,596 --> 00:37:45,265 அதில் உள்ள சிந்தனை தான் வித்தியாசமானது. 418 00:37:45,849 --> 00:37:50,521 என்ன சிந்தனை அது? என்னால் இதுவரை புரிந்துகொள்ள முடியவில்லை. 419 00:37:51,438 --> 00:37:54,983 அதாவது பொதுநலனை கருத்தில்கொண்டு, சமயோசித புத்தியுடன் 420 00:37:54,983 --> 00:38:00,405 செயல்படுவதால், சுதந்திரமான மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகிக்க முடியும் என்பதுதான் அது. 421 00:38:00,948 --> 00:38:04,826 அவர்களுக்கு சமயோசித புத்தி இல்லாமலே போனால் என்னவாகும்? 422 00:38:04,826 --> 00:38:07,829 அப்படியென்றால், அவர்கள் தகுதியுள்ளது கிடைக்கும் என்று நினைக்கிறேன். 423 00:38:13,794 --> 00:38:16,255 நாம் முதலில் சந்தித்தப்போது, நான் நினைத்தேன், 424 00:38:16,255 --> 00:38:20,384 "இவர் புத்திசாலி மனிதர் தான், ஆனால் என்னைப் போல் புத்திசாலி இல்லை." 425 00:38:22,052 --> 00:38:26,849 இப்போது நீங்கள் அப்படி என்னை நினைக்க வைத்தது எவ்வளவு பெரிய புத்திசாலித்தனம் என உணர்கிறேன். 426 00:38:27,641 --> 00:38:28,892 நீங்கள் அதிகம் புகழ்கிறீர்கள். 427 00:38:29,643 --> 00:38:32,813 ஒவ்வொரு அடி எடுத்துவைக்கும் போதும், ஒரு யூகத்தில் செய்தது, 428 00:38:33,313 --> 00:38:37,568 எனவே அது எதிர்பார்த்தப் பலனைத் தந்தப்போது, நான் தான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். 429 00:38:39,528 --> 00:38:43,490 நீங்கள் என் கண்களைப் பார்த்து நேரடியாக உறுதிமொழி கொடுத்தீர்கள். 430 00:38:43,490 --> 00:38:46,118 ஆனால் நீங்களும் ஜெரார்டை உடனே இங்கிலாந்திற்கு அனுப்பினீர்கள். 431 00:38:47,744 --> 00:38:49,121 ஆம், நான் அப்படிச் செய்தேன். 432 00:38:49,121 --> 00:38:52,457 எனவே, யார், யாரிடம் பொய் சொன்னார்கள் என்பதல்ல கேள்வி... 433 00:38:52,457 --> 00:38:54,793 யார் அதிகத் திறமையாக பொய் சொன்னார்கள் என்பது தான் விஷயம். 434 00:38:58,422 --> 00:39:00,883 என் மனைவி என்ன சொல்கிறாள், தெரியுமா? 435 00:39:01,800 --> 00:39:08,182 உண்மையில் அது தோல்வி என்றாலும், வெற்றி என்றே அதை அறிவித்து, நற்பெயரைப் பெற்றுவிடுங்கள், என்கிறாள். 436 00:39:08,182 --> 00:39:10,517 அவர் மிகவும் புத்திசாலிதான். 437 00:39:11,560 --> 00:39:13,729 அவர்கள் அரசவைக்கு வர அனுமதியில்லை, தெரியுமா. 438 00:39:14,688 --> 00:39:17,107 அவளுடைய தந்தை ஒரு வணிகர்தான். 439 00:39:17,691 --> 00:39:20,444 நாங்கள் அரசரின் அனுமதியின்றி திருமணம் செய்துகொண்டோம். 440 00:39:21,987 --> 00:39:24,448 இதெல்லாம் அமெரிக்காவில் ஒரு பொருட்டாக இருக்காது, இல்லையா? 441 00:39:25,574 --> 00:39:28,660 நீங்கள் உருவாக்க உதவிய நாட்டை நீங்கள் ஒரு முறையாவது வந்து காண வேண்டும். 442 00:39:29,203 --> 00:39:32,664 எங்களுடைய ஒரு பில்லியன் லீவர்கள் முதலீட்டிற்கு எங்களுக்கு என்ன கிடைத்தது? 443 00:39:33,290 --> 00:39:36,001 ஆழ்ந்த நன்றிக்கடனை உணரும் ஒரு நாட்டின் நிரந்தர அபிமானம். 444 00:39:36,001 --> 00:39:37,085 போதும். 445 00:39:37,586 --> 00:39:41,215 நீங்கள் ஆங்கிலேயர்களுடன் வாணிபம் செய்துவிட்டு, எங்களை வெறும் கையுடன் விட்டுச் செல்வீர்கள். 446 00:39:41,840 --> 00:39:44,384 அந்த சமாதானத்தைத் தானே அவர்கள் பெற வந்தார்கள். 447 00:39:44,384 --> 00:39:49,264 மிஸ்யூர் ல காம்ட், உங்களைக் காயப்படுத்துவது என் எண்ணமில்லை. 448 00:39:50,474 --> 00:39:53,685 நீங்கள் என்னைக் காயப்படுத்தவில்லை. நீங்கள் என்னை சாமர்த்தியமாகத் தோற்கடித்து விட்டீர்கள். 449 00:39:53,685 --> 00:39:55,270 அது இன்னும் விபரீதம். 450 00:39:55,938 --> 00:40:00,275 அரசியல் கலையில் முன்னனுபவமில்லாத காரணத்தால் ஏற்பட்ட பிழைக்காக 451 00:40:00,275 --> 00:40:03,487 நான் மன்னிப்புக் கேட்கிறேன். 452 00:40:05,447 --> 00:40:07,282 உங்கள் பெருந்தன்மையான அரசருக்கும், பிரான்ஸ் நாட்டிற்கும், 453 00:40:07,282 --> 00:40:11,578 உங்களுக்கும், நாங்கள் பட்டுள்ள கடன், அதற்கு ஒரு முடிவே இல்லை. 454 00:40:13,664 --> 00:40:15,332 மேலும், இந்த ஒரு சிறிய கருத்து வேறுபாட்டை 455 00:40:15,332 --> 00:40:19,503 நம் நட்பிற்கு தடையாக இருக்க அனுமதிப்பது, அது ஒரு பாவம் அல்லவா? 456 00:40:20,212 --> 00:40:24,174 ஆங்கிலேயர்கள் இரு நேச நாடுகளை வெற்றியுடன் பிரித்துவிட்டதாக நினைத்துக்கொள்ளட்டும்... 457 00:40:26,134 --> 00:40:27,135 என்ன? 458 00:40:30,514 --> 00:40:32,641 நாம் எதைக் குறித்துச் சிரிக்கிறோம்? 459 00:40:34,309 --> 00:40:37,312 நீங்கள் மீண்டும் என்னிடம் நிதியுதவி கேட்கப் போகிறீர்கள், அப்படித் தானே? 460 00:40:38,272 --> 00:40:40,524 வெறும் இன்னொரு ஆறு மில்லியன்தான். 461 00:40:41,567 --> 00:40:42,943 அது மிகவும் உதவியாக இருக்கும். 462 00:40:42,943 --> 00:40:45,821 நிச்சயமாக உங்கள் காங்கிரஸ் இந்தக் கடனைத் திருப்பித் தரும் அல்லவா. 463 00:40:45,821 --> 00:40:47,030 கண்டிப்பாக. 464 00:40:49,658 --> 00:40:51,785 நீங்கள் உள்ளே இறங்குவதற்கு பயப்படுகிறீர்கள் என்றால் நம்பமுடியவில்லை. 465 00:40:52,953 --> 00:40:59,209 அந்தப் பக்கம் செல்ல, நீரில் பயணிக்க வேண்டிய நேரத்தை மட்டும் அதில் செலவழித்தால் போதும் என்கிறேன். 466 00:40:59,209 --> 00:41:01,670 நீங்கள் விளிம்புக் கம்பியைப் பிடித்துக்கொண்டு, கப்பலில் பீதியுடன் பயணிக்கும்போது, 467 00:41:01,670 --> 00:41:04,548 இந்த அழகான படகுச் சவாரியை தவறவிட்டோமே என்று வருந்துவீர்கள். 468 00:41:24,776 --> 00:41:27,321 இது எனக்குச் சொந்தமான ஒரு அழகான குட்டி இடம். 469 00:41:28,238 --> 00:41:30,532 இதில் நிச்சயம் ஒரு அமைதியான ஈர்ப்பு உள்ளது. 470 00:41:31,241 --> 00:41:34,745 முப்பது அறைகளோ, நாற்பதோ. ஞாபகம் இல்லை. 471 00:41:35,621 --> 00:41:38,290 வயல்கள், குதிரை லாயங்கள்... 472 00:41:40,083 --> 00:41:43,545 நீங்கள் ஒரு காட்டில், மரங்களால் ஆன வீட்டில் வசிக்க வேண்டும். 473 00:41:44,213 --> 00:41:47,132 அது நகரத்தில் உள்ளது, செங்கற்களால் கட்டப்பட்டது. 474 00:41:49,259 --> 00:41:51,637 அது இப்போது எப்படியுள்ளது என்று என்னால் யூகிக்கத்தான் முடியும். 475 00:41:51,637 --> 00:41:54,056 பிரிட்டிஷ்காரர்கள் அதை எடுத்துக்கொண்டனர். 476 00:41:54,681 --> 00:41:57,351 போகிறது, அதற்குத்தான் பழி தீர்த்துக்கொண்டீர்களே. அவர்களை வென்றுவிட்டீர்களே. 477 00:41:59,937 --> 00:42:01,563 அப்படித்தான் சொல்ல வேண்டும். 478 00:42:03,565 --> 00:42:06,568 ஆனால் ஏனோ திருப்தியாக இல்லை. 479 00:42:08,320 --> 00:42:10,447 இதைவிட என்ன எதிர்பார்க்கிறீர்கள்? 480 00:42:11,698 --> 00:42:14,701 இன்னும் அதிகமாக. 481 00:42:15,994 --> 00:42:18,539 எதுவாக இருந்தாலும் சரி, இன்னும் அதிகம் வேண்டும். வந்து... 482 00:42:19,581 --> 00:42:20,958 இன்னும் அதிகம் வேண்டும். 483 00:42:23,085 --> 00:42:25,462 நமக்கு வயதாகிவிட்டதை உணர்கிறோம். 484 00:42:29,591 --> 00:42:31,134 நான் உணர்கிறேன்... 485 00:42:34,513 --> 00:42:39,017 நான் உருவாக்க உதவியுள்ளேன் என்று எந்த நாட்டைச் சொல்லலாமோ, 486 00:42:40,143 --> 00:42:44,523 அந்த நாட்டிற்கு சுமார் 20 வருடங்களாக நான் செல்லவில்லை. 487 00:42:45,065 --> 00:42:47,150 அப்போது எதற்காகத் திரும்பிச் செல்ல வேண்டும்? 488 00:42:49,653 --> 00:42:54,616 இந்த அமெரிக்கா எப்படிப்பட்ட நாடாக இருக்கும் என்று பார்க்க விரும்புகிறேன். 489 00:42:55,617 --> 00:42:58,203 நீங்கள் பார்ப்பது உங்களுக்கு பிடிக்காமல் போனால் என்ன செய்வீர்கள்? 490 00:43:04,334 --> 00:43:05,335 மேடம். 491 00:43:11,717 --> 00:43:13,177 என்னைத் திருமணம் செய்துகொள்வாயா? 492 00:43:18,974 --> 00:43:20,434 நீங்கள் ஒரு கள்வர். 493 00:43:25,314 --> 00:43:26,690 நீங்கள் நிஜமாகத்தான் கேட்கிறீர்களா? 494 00:43:28,483 --> 00:43:30,944 நீங்கள் நிஜமாகத்தான் கேட்கிறீர்களா? 495 00:43:33,572 --> 00:43:34,740 நான் நிஜமாகக் கேட்கிறேனா? 496 00:43:38,869 --> 00:43:40,495 உங்கள் அமெரிக்கா என்ன ஆகும்? 497 00:43:42,456 --> 00:43:47,628 அவளுக்கு என் விசுவாசத்தை அளிக்க கடமைப்பட்டுள்ளேன், என் சந்தோஷத்தை தியாகம் செய்ய அவசியமில்லை. 498 00:43:58,805 --> 00:44:01,099 சரி, அப்படியென்றால் அபே அதற்கான ஏற்பாடுகளைச் செய்வார். 499 00:44:01,099 --> 00:44:03,310 நான் அந்த தேவாலயத்தின் சடங்குகளை எல்லாம் வெறுக்கிறேன். 500 00:44:03,310 --> 00:44:05,395 நீ சம்மதிக்கிறாய் என்று பொருளா? 501 00:44:17,616 --> 00:44:20,160 எனக்கு உங்கள் மீது மிகவும் அன்பு உண்டு. 502 00:44:22,037 --> 00:44:26,416 ஆனால் நீங்கள் மனிதர்களில் மிகச் சிக்கலான வகையைச் சேர்ந்தவர் என்பதை, நாம் இருவருமே அறிவோம். 503 00:44:28,085 --> 00:44:29,378 அது எந்த வகை? 504 00:44:30,462 --> 00:44:35,300 எவ்வளவு தான் அன்பு காட்டினாலும், ஓடித் திரிந்து சென்றுவிடும் வகையைச் சேர்ந்தவர். 505 00:44:56,196 --> 00:44:58,198 அங்கே என்ன நடக்கின்றது என்று புரிகிறதா? 506 00:45:01,660 --> 00:45:04,037 அவர் காலையில் இங்கிருந்து போய்விடுவார். 507 00:45:06,915 --> 00:45:07,916 ஆனால் நீங்களோ? 508 00:45:08,876 --> 00:45:13,046 இங்கே ஒளிந்து உட்காருவதைத் தவிர, அதைப் பற்றி என்ன செய்தீர்கள்? 509 00:45:16,133 --> 00:45:18,093 நாம் இந்த வீட்டை இழந்துவிடப் போகிறோம். 510 00:45:19,678 --> 00:45:21,263 நாம் அனைத்தையும் இழந்துவிடுவோம். 511 00:45:22,931 --> 00:45:24,141 உங்களுக்கு ஏன் என்று தெரியுமா? 512 00:45:25,642 --> 00:45:30,230 நீங்கள் ஒருநாளும் போகாத ஒரு நாட்டைப் பற்றி அந்த மாயக்காரர் பேசுவதைக் கேட்டு 513 00:45:30,230 --> 00:45:32,941 உங்கள் புத்தி மயங்கியதால் வந்த வினை. 514 00:45:34,318 --> 00:45:35,569 நீங்கள் எதுவுமே சொல்ல மாட்டீர்களா? 515 00:45:37,446 --> 00:45:41,116 முதற்கண் அரசியார் அந்த கழுத்து மாலையை வாங்கவே இல்லையாம். 516 00:45:41,116 --> 00:45:47,164 அந்த சம்பவம் எல்லாமே ஒரு நம்பிக்கை இழக்கச் செய்ய ஒரு தந்திரம், அவர் மீது எந்த குற்றமும் இல்லை. 517 00:45:49,833 --> 00:45:50,834 நல்லது. 518 00:45:51,710 --> 00:45:53,170 இந்த விஷயத்தை நானே கவனித்துக்கொள்கிறேன். 519 00:46:05,057 --> 00:46:08,936 - இவற்றை விட்டுச் செல்கிறீர்களா? - அவை இனி தேவையில்லை. 520 00:46:10,062 --> 00:46:13,065 நீங்கள் வேண்டுமானால், அதைப் பற்றி அறிய ஆர்வமுள்ளவர்களுக்குக் கொடுக்கலாம் 521 00:46:13,065 --> 00:46:16,610 அல்லது சுவற்றில் உள்ள விரிசல்களை அடைக்க உபயோகிக்கலாம். 522 00:46:19,905 --> 00:46:23,158 நீங்கள் நான் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 523 00:46:23,784 --> 00:46:27,538 கடலில் ஆறு வாரங்கள் இருக்கும்போது, சர்க்கரையோ அல்லது மதுவோ இல்லாமல் இருக்க வேண்டுமா? 524 00:46:27,538 --> 00:46:30,832 தினமும் டெக்கில் நடை பயிற்சி. அப்படிச் செய்தால் நீங்கள் நலமடைவீர்கள். 525 00:46:30,832 --> 00:46:32,584 அப்படிச் செய்தால் நான் உங்களைத் திட்டுவேன். 526 00:46:32,584 --> 00:46:35,128 சரி, நல்லவேளையாக, அதைக் கேட்க நான் அருகில் இருக்க மாட்டேன். 527 00:46:36,213 --> 00:46:41,468 அதோடு, தேவைப்பட்டால் மட்டும் இதை எடுத்துக்கொள்ளுங்கள். 528 00:46:41,468 --> 00:46:43,762 ஆனால் குறைந்த அளவில். 529 00:46:51,311 --> 00:46:58,193 ஆட்டோமன் மதகுருமார்கள், இந்த ஓபியத்தை சந்தோஷம் தரும் ஒன்று எனப் புகழ்கிறார்கள். 530 00:46:59,862 --> 00:47:01,363 அதற்கு அவசியம் இல்லாமல் போகுமா என்ன? 531 00:47:01,947 --> 00:47:04,867 ஆனால் அது போன்ற சந்தோஷம் கிடைக்குமா? 532 00:47:05,576 --> 00:47:06,660 அமெரிக்காவிற்கா? 533 00:47:08,161 --> 00:47:11,582 - அது மக்களைப் பொறுத்தது. - எனக்கு. 534 00:47:11,582 --> 00:47:14,585 அதுதானே எப்போதும் என் கவலையாக இருந்துள்ளது. 535 00:47:16,211 --> 00:47:19,089 நீங்கள் இல்லாமல் அந்த நாட்டின் நிலை என்னவாக இருந்திருக்கும், ஹம்ம்? 536 00:47:19,089 --> 00:47:21,967 நீங்கள்தான் மிகவும் முக்கியமானவர் என்று உங்களைக் கொண்டாடுவார்கள். 537 00:47:21,967 --> 00:47:23,260 அப்படியா? 538 00:47:24,845 --> 00:47:25,971 தெரியவில்லை. 539 00:47:27,514 --> 00:47:30,017 இருக்கட்டும், உங்கள் கதி என்னவாகும்? 540 00:47:35,397 --> 00:47:39,318 நான், வழக்கம் போல எப்படியோ சமாளித்து விடுவேன். 541 00:47:39,860 --> 00:47:41,445 வீடு திரும்பப் போவதில்லையா? 542 00:47:42,821 --> 00:47:46,325 சரி, நான் நாட்டைவிட்டு வெளியேறி பல வருடங்கள் ஆகிவிட்டதால், எது வீடு எனப் புரியவில்லை. 543 00:47:46,325 --> 00:47:48,493 இங்கிலாந்தாக இருக்கலாமோ? 544 00:47:49,244 --> 00:47:52,080 ஆம், அவர்களுடன்தான் இப்போது சமாதானம் ஆகிவிட்டதே. 545 00:47:53,916 --> 00:47:56,001 நாம் அதற்காகத் தானே முயற்சி செய்தோம்? 546 00:47:56,585 --> 00:47:58,170 அதைத் தான் செய்தோம். 547 00:47:58,170 --> 00:48:00,547 ஆனால் வெவ்வேறு வழிகளில். 548 00:48:08,597 --> 00:48:11,183 மிகச் சிறந்த மடீரா ஒயினின் ஒரு பெட்டி, உங்களுக்காக. 549 00:48:11,725 --> 00:48:14,019 அதை அப்படியே வீணாக்குவதில் அர்த்தமில்லை. 550 00:48:22,444 --> 00:48:23,612 நீங்கள் பெருந்தன்மையானவர். 551 00:48:24,154 --> 00:48:25,781 அப்படியே என்னை நினைவுகொள்ளுங்கள். 552 00:48:34,206 --> 00:48:35,958 நான் உங்கள் பிரிவை உணர்வேன், நண்பரே. 553 00:48:37,501 --> 00:48:41,255 எனக்கு எப்போதுமே நீங்கள் மிகப் பிரியமுள்ள ஒரு நண்பராக இருந்துள்ளீர்கள். 554 00:48:47,386 --> 00:48:48,846 உங்களுக்கு ஒரு விருந்தாளி வந்துள்ளார். 555 00:49:06,822 --> 00:49:07,990 இது உங்களுக்குத்தான். 556 00:49:07,990 --> 00:49:09,449 மேடம். 557 00:49:10,868 --> 00:49:11,869 எல்லாம் இதில் உள்ளது. 558 00:49:11,869 --> 00:49:13,412 மாத வரிசையில் செய்யப்பட்டச் செலவுகள். 559 00:49:13,412 --> 00:49:16,039 எங்களுடைய விருந்தோம்பலின் ஒவ்வொரு நிகழ்வும் அதில் உள்ளது. 560 00:49:16,623 --> 00:49:20,085 விருந்தோம்பல் என்பது இயல்பாகவே எந்த கட்டணமும் இல்லாமல் தரப்படுவதுதானே? 561 00:49:21,128 --> 00:49:22,671 அதற்காக வருடக்கணக்கில் அதை நீட்டிக்க முடியாது. 562 00:49:23,839 --> 00:49:27,968 23,654 லீவர்கள். 563 00:49:27,968 --> 00:49:29,761 அதை ஒவ்வொரு வரியாகப் படித்துப் பாருங்கள். 564 00:49:29,761 --> 00:49:32,306 அது சரியாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 565 00:49:33,056 --> 00:49:35,100 அப்படியென்றால் நீங்கள் அதைக் தரும் வரை நான் இங்கேயே காத்திருக்கிறேன். 566 00:49:35,851 --> 00:49:37,978 என் கையில் அவ்வளவு பெரியத் தொகை இல்லை. 567 00:49:38,562 --> 00:49:41,982 நாங்கள் மில்லியன்களை இழந்துள்ளோம். அவை எல்லாம் எங்கே போயின? 568 00:49:41,982 --> 00:49:45,319 யுனைடெட் ஸ்டேட்ஸிற்குப் போனது. மிஸ்யூர் ஷௌமோனுக்கு அதெல்லாம் தெரியுமே. 569 00:49:45,319 --> 00:49:49,239 நீங்கள் அவரை சுதந்திரத்தையும், லாபத்தையும் பற்றிப் பேசி, அவர் மனதை மயக்கினீர்கள், எனவே அவர்... 570 00:49:49,823 --> 00:49:51,158 அவரால் சரியாக யோசிக்க முடியவில்லை. 571 00:49:51,158 --> 00:49:54,411 என்னிடம் இல்லாத ஆற்றல்களை நீங்கள் எனக்கு இருப்பதாகக் கூறுகிறீர்கள். 572 00:49:54,411 --> 00:49:56,079 இப்போது அவர் சொல்வதைக் கேளுங்கள். 573 00:49:56,079 --> 00:50:00,083 ஆனால் நான் காங்கிரஸிடம் வலியுறுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன்... 574 00:50:00,083 --> 00:50:01,335 உங்களிடம் எவ்வளவு உள்ளது? 575 00:50:03,754 --> 00:50:06,256 உங்கள் பாக்கெட்டில் இப்போது எவ்வளவு உள்ளது? 576 00:50:06,256 --> 00:50:07,341 இப்போது. 577 00:50:19,520 --> 00:50:21,188 இது யானைக்குக் கொடுத்தச் சோளப் பொறியைப் போல். 578 00:50:35,369 --> 00:50:37,663 நீ இடைமறித்திருக்கலாம். 579 00:50:37,663 --> 00:50:39,623 அதிலிருந்து விலகி இருப்பதே நல்லது எனத் தோன்றியது. 580 00:50:40,123 --> 00:50:41,625 அது உன்னுடையதா? 581 00:50:42,125 --> 00:50:43,502 ஆர்ட்டுவாவுடையது. 582 00:50:44,127 --> 00:50:45,879 வேறு எதுவெல்லாம் அவருடையது? 583 00:50:45,879 --> 00:50:47,798 இதெல்லாம் முன்னேற்றத்திற்கான ஒரு வழி தான். 584 00:50:48,924 --> 00:50:50,342 எந்த இலக்கை நோக்கிய முன்னேற்றம்? 585 00:50:50,342 --> 00:50:52,302 எனக்கென்று ஒரு இடத்தைத் தேடிக்கொள்ளச் சொன்னீர்கள். 586 00:50:53,637 --> 00:50:55,389 ஆனால் நான் இதைக் கருதிச் சொல்லவில்லை. 587 00:50:55,389 --> 00:50:57,182 ஆனால் நான் தேர்ந்தெடுத்துள்ள பாதை அதுதான். 588 00:50:58,892 --> 00:51:00,894 நான் நாளை உங்களுடன் ல ஹாவ்ர் வரை பயணிக்கிறேன். 589 00:51:00,894 --> 00:51:02,312 அதற்கு அவசியம் இல்லை. 590 00:51:02,312 --> 00:51:03,939 அந்த சாலையில் நீங்கள் தனியாகச் செல்லக் கூடாது. 591 00:51:03,939 --> 00:51:05,732 சரி, அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். 592 00:51:05,732 --> 00:51:09,444 மிஸ்யூர் லெனுவார் என்னை பல வருடங்களாகப் பின்தொடர்ந்துள்ளார். 593 00:51:09,444 --> 00:51:14,283 நான் நாட்டைவிட்டு வெளியேறும் போது, அவர் அதைச் செய்யாமல் இருக்க மாட்டார். 594 00:51:19,371 --> 00:51:21,790 உன் தந்தை லண்டனில் வசிக்கிறார். 595 00:51:23,166 --> 00:51:25,002 - எனக்குத் தெரியும். - தெரியுமா? 596 00:51:25,002 --> 00:51:29,173 சரியான நபரை மட்டும் கேட்டால், எதையும் வெர்சாயில் தெரிந்துகொள்ளலாம். 597 00:51:32,134 --> 00:51:34,636 நீ அவரைச் சென்று பார்ப்பாயா? 598 00:51:35,762 --> 00:51:37,598 நீங்கள் அவரிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? 599 00:51:39,516 --> 00:51:42,269 ஏற்கனவே சொல்லாதது எதுவும் இல்லை. 600 00:51:43,187 --> 00:51:44,938 நீங்கள் இவ்வளவு கடுமையாக இருப்பது அவசியம் தானா? 601 00:51:45,856 --> 00:51:47,399 நீங்கள் பிரிட்டனுடன் சமாதானம் செய்துகொண்டீர்கள். 602 00:51:47,399 --> 00:51:50,152 உங்கள் ரத்தத்துடன் அதைச் செய்துகொள்ள உங்களால் முடியாதா? 603 00:51:52,321 --> 00:51:54,573 மனதை பேரம் பேச முடியாதப்பா. 604 00:51:55,157 --> 00:51:57,576 "மன்னிப்புதான் நீ உன் எதிரிக்கு கொடுக்கக்கூடிய சிறப்பான விஷயம்." 605 00:51:59,578 --> 00:52:01,747 அதை யார் எழுதினாரோ, அவர் வடிகட்டிய முட்டாள். 606 00:52:08,003 --> 00:52:10,547 நீ உறுதியாக இதைத்தான் செய்ய விரும்புகிறாயா? 607 00:52:11,256 --> 00:52:12,716 இது ஒரு விளையாட்டு. 608 00:52:13,467 --> 00:52:14,593 செஸ்ஸைப் போல. 609 00:52:15,135 --> 00:52:16,970 நான் அதை ஆடுவதில் களிப்படைகிறேன். 610 00:52:19,056 --> 00:52:21,433 அப்படியென்றால் விடைகொடு, மகனே. 611 00:52:23,560 --> 00:52:25,103 நாம் மீண்டும் ஒருவரையொருவர் சந்திப்போம். 612 00:52:26,104 --> 00:52:27,272 சந்திக்கலாம். 613 00:52:28,690 --> 00:52:30,859 ஆனால், இந்த ஜென்மத்தில் இல்லை என்று நினைக்கிறேன். 614 00:52:32,945 --> 00:52:34,238 என் பிரியமான தாத்தா. 615 00:52:39,701 --> 00:52:41,495 சந்தோஷத்தையேத் தேடு. 616 00:52:42,579 --> 00:52:44,373 ஆனால் நாம் யார் என்பதை மறக்காதே. 617 00:53:06,979 --> 00:53:10,566 அந்த வேடிக்கையான மனிதர் யார்? 618 00:53:13,819 --> 00:53:15,612 ஒரு சிறந்த அமெரிக்க மகான். 619 00:54:42,241 --> 00:54:43,742 இரு உலகிலும் ஹீரோவாகத் திகழ்பவருக்கு நல்வாழ்த்துகள் 620 00:54:48,372 --> 00:54:51,625 வெ ரி டாஸ் - ஹார்வர்டு 621 00:57:28,907 --> 00:57:31,827 நாம் எவ்வளவு குதூகலமாக இருந்தோம் - என் இனிய அப்பாவிற்கு 622 00:57:38,625 --> 00:57:40,085 டாக்டர் பிராங்கிளின். 623 00:57:41,879 --> 00:57:43,380 உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும், 624 00:57:43,380 --> 00:57:48,552 ஆனால் இவ்வளவு நடந்ததற்குப் பிறகு, நாம் இருவரும் சேர்ந்து பயணிப்போம் என நினைக்கவில்லை. 625 00:57:49,219 --> 00:57:50,929 யாரெனத் தெரியவில்லையே, ஐயா, நான்... 626 00:57:50,929 --> 00:57:52,055 ஜாக் ஷௌமோன். 627 00:57:53,557 --> 00:57:54,558 ஜாக். 628 00:57:55,726 --> 00:57:57,436 ஜாக், ஆமாம். 629 00:57:58,687 --> 00:57:59,688 நீங்கள்... 630 00:57:59,688 --> 00:58:02,191 யுனைடெட் ஸ்டேட்ஸிக்குப் பயணிக்கிறேன், ஆம். 631 00:58:06,069 --> 00:58:07,779 என் பெற்றோர்களிடம் பேசினீர்களா? 632 00:58:09,031 --> 00:58:11,575 உன் தாயார் என்னை வெளிப்படையாகவே விடைப் பெறச் சொன்னார். 633 00:58:12,576 --> 00:58:14,161 அவர்கள் என்னை துரத்திவிட்டார்கள். 634 00:58:14,161 --> 00:58:15,495 அதைக் கேட்க வருத்தமாக உள்ளது. 635 00:58:15,996 --> 00:58:17,122 நான் அவர்களைக் குறை கூற மாட்டேன். 636 00:58:18,207 --> 00:58:19,750 உண்மையில், நான் அதை வரவேற்கிறேன். 637 00:58:22,169 --> 00:58:23,879 நான் அங்கே பிரான்ஸில் செய்யக்கூடியது எதுவும் இல்லை. 638 00:58:24,379 --> 00:58:26,590 அதாவது, நான் அழிக்காதது எதுவும் இல்லை எனச் சொல்லலாம். 639 00:58:27,758 --> 00:58:28,800 அதன் பின் நான் எப்படி அங்கே இருக்க முடியும்? 640 00:58:29,676 --> 00:58:30,761 நீ என்ன செய்வாய்? 641 00:58:33,013 --> 00:58:34,056 எனக்குத் தெரியாது. 642 00:58:35,140 --> 00:58:36,225 என்னிடம் நிதி எதுவும் இல்லை. 643 00:58:37,267 --> 00:58:39,478 நான் உடுத்தியுள்ள உடையும், கொஞ்சம் சில்லறையும் தான் உள்ளன. 644 00:58:41,647 --> 00:58:43,899 என் வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கலாம் என்பது மட்டும் தான் எனக்குத் தோன்றுகிறது. 645 00:58:45,275 --> 00:58:46,652 எந்த வகையில் அப்படி இருந்திருக்கலாம் என்கிறாய்? 646 00:58:47,986 --> 00:58:49,738 உலகில் என் பாதையை நான் வகுத்துக்கொள்ளும்படியாக. 647 00:58:51,114 --> 00:58:52,157 என்னால் முடிந்தால். 648 00:58:52,824 --> 00:58:54,451 எனக்குள்ள புத்தியை உபயோகித்து. 649 00:58:55,577 --> 00:58:56,620 சுதந்திரமாகச் செயல்பட்டு. 650 00:59:01,416 --> 00:59:03,669 மன்னிக்கவும். நான் உளறுகிறேன். 651 00:59:05,629 --> 00:59:08,590 எனக்குத் தெரிந்த ஒருவரைப் போலவேதான் நீ பேசுகிறாய். 652 00:59:10,342 --> 00:59:13,720 கையில் சல்லி காசின்றி, அவரும் வீட்டைவிட்டு வெளியேறினார். 653 00:59:15,597 --> 00:59:16,682 அவருடைய கதி என்னவாயிற்று? 654 00:59:18,392 --> 00:59:21,186 அவர் ஓரளவிற்கு வெற்றி பெற்றார் 655 00:59:21,937 --> 00:59:24,398 ஆனால் சிறு சிறு தவறுகளையும் செய்திருக்கிறார். 656 00:59:25,941 --> 00:59:32,114 எப்போதுமே உண்மையைப் பேசியும், புத்திசாலித்தனமாகவும், அன்பாகவும் நடக்கவில்லை, 657 00:59:33,699 --> 00:59:37,619 ஆனால் மிகவும் கடினமாக உழைத்து, இந்த உலகில், மக்களுக்கு உபயோகத்திற்காக, 658 00:59:38,120 --> 00:59:40,122 உள்ள அறிவை மேம்படுத்த விழைந்துள்ளார். 659 00:59:42,541 --> 00:59:46,170 இறைவன் அவரை மிகவும் கடுமையாக நடத்தக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறார். 660 00:59:48,463 --> 00:59:50,090 அப்படியென்றால் எனக்கும் நம்பிக்கை உள்ளது என நினைக்கிறேன். 661 00:59:52,217 --> 00:59:54,052 உனக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 662 00:59:54,845 --> 00:59:56,263 மற்றவற்றை நீ தான் தீர்மானிக்க வேண்டும். 663 00:59:59,391 --> 01:00:03,020 ஐயா, உங்கள் நேரத்திற்கு நன்றி கூறுகிறேன், அதோடு உங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்கட்டும். 664 01:00:06,940 --> 01:00:07,941 ஜாக். 665 01:00:11,069 --> 01:00:16,200 என்னுடைய அறையில் நல்ல தரமான பிராண்டி உள்ளது, ஆனால் நான் அதைப் பருகக் கூடாது. 666 01:00:17,034 --> 01:00:18,410 இன்று மாலை அந்தப் பக்கம் வா. 667 01:00:19,036 --> 01:00:20,412 நாம் அதைத் திறந்து... 668 01:00:22,122 --> 01:00:23,665 அமெரிக்காவைப் பற்றிப் பேசுவோம். 669 01:01:16,134 --> 01:01:18,220 அவர் யுனைடெட் ஸ்டேட்ஸுக்குத் திரும்பிய இரண்டு வருடங்களுக்குப் பின், 670 01:01:18,220 --> 01:01:21,849 81 வயதான பிராங்கிளின், அரசியல் சாசனக் குழுவில், மிக வயதான பிரதிநிதியாக பணியாற்றினார். 671 01:01:21,849 --> 01:01:24,518 அவர் பாரீஸைப் பற்றியும், மேடம் ஹெல்வேடியோஸுடன் கழித்த இன்பமான நாட்களையும் பற்றி 672 01:01:24,518 --> 01:01:26,728 எண்ணும்போதெல்லாம், சற்றே வருத்தத்துடன் இருந்தார். 673 01:01:27,729 --> 01:01:30,232 1790-ல் அவர் மறைந்தபோது, 20,000 மக்கள் அவருடைய இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டனர். 674 01:01:30,232 --> 01:01:32,818 பிரான்ஸ், புரட்சியின் பிடியில் இருந்தபோதிலும், 675 01:01:32,818 --> 01:01:36,905 அவர் நினைவாக மூன்று தின தேசிய துக்கம் அனுசரித்தது. 676 01:01:37,865 --> 01:01:40,033 அமெரிக்கச் சுதந்திரத்தைப் பெறுவதற்கு முக்கியமாக இருந்த பிரெஞ்சு நாட்டின் 677 01:01:40,033 --> 01:01:42,244 ஆதரவைப் பெறுவதிலும், பிரிட்டிஷ்காரர்களுடன் சமாதான உடன்படிக்கையை எட்டவும் 678 01:01:42,244 --> 01:01:46,039 அவர் ஆற்றிய முக்கிய பங்கிற்கு, அவர் தகுந்த பாராட்டை பெறவேயில்லை. 679 01:01:47,666 --> 01:01:50,502 "நாங்கள் ஈடுபட்டிருந்த மகத்தான ஆனால் ஆபத்தான முயற்சி, 680 01:01:50,502 --> 01:01:52,045 இறைவனின் அருளால் நல்லவிதமாக முடிந்தது, 681 01:01:52,045 --> 01:01:54,131 ஆனால் அது வெற்றிகரமாக முடிவதைப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. 682 01:01:54,131 --> 01:01:57,718 சில வருட சமாதானம், எங்கள் வலிமையை மீட்டு எடுக்கவும், அதிகரிக்கவும், மேம்படுத்தவும் உதவும், 683 01:01:57,718 --> 01:02:01,138 ஆனால் எதிர்காலப் பாதுகாப்பு, நிச்சயம் எங்கள் ஒற்றுமையிலும், நற்பண்பிலும்தான் அடங்கும்." 684 01:02:01,972 --> 01:02:08,437 {\an8}பென்ஜமின் பிராங்கிளின் 685 01:03:59,339 --> 01:04:01,341 தமிழாக்கம் அகிலா குமார்