1 00:00:12,596 --> 00:00:14,473 அது திரு. சாபிச்சின் வழக்கம்... 2 00:00:14,473 --> 00:00:16,308 விசாரணையின் இரண்டாம் நாள் தொடங்கும்போது, 3 00:00:16,308 --> 00:00:18,268 நீதிமன்றம் எதிர்பார்ப்புகளால் நிரம்பி வழிகிறது. 4 00:00:18,268 --> 00:00:20,938 அரசு வழக்கறிஞரின் வலுவான தொடக்கம் கடுமையான சட்டப் போராட்டத்திற்கான 5 00:00:20,938 --> 00:00:22,147 களத்தை அமைத்திருக்கிறது. 6 00:00:22,147 --> 00:00:25,067 மோல்டோவின் தொடக்க பேச்சில் ஒன்றும் அழுத்தம் இல்லாமல் இல்லை. 7 00:00:25,067 --> 00:00:28,570 உறுதியான இருப்பு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையுடன், நியாயமான சந்தேகத்தையும் தாண்டி... 8 00:00:28,570 --> 00:00:30,030 ...அவர் களத்தை அமைத்திருக்கிறார். 9 00:00:30,030 --> 00:00:33,033 நடுவர் குழு மற்றும் பொதுமக்களிடையே எதிரொலித்த 10 00:00:33,033 --> 00:00:35,494 உணர்ச்சிவயப்பட்ட தொடக்க பேச்சை டாமி மோல்டோ வழங்கினார். 11 00:00:35,494 --> 00:00:38,956 ...பிரபல எதிர்தரப்பு வழக்கறிஞர் ரேமண்ட் ஹோர்கனுக்கு எதிராக நேருக்கு நேராக. 12 00:00:38,956 --> 00:00:41,291 ...அல்லது அரசு தரப்பு வழக்குக்கு உறுதியான 13 00:00:41,291 --> 00:00:43,502 அடித்தளமாக தோன்றுவதை பாதுகாக்கும் விதத்தில் 14 00:00:43,502 --> 00:00:45,921 டாமி மோல்டோவின் வசீகரிக்கும் தொடக்க பேச்சு எதிரொலிப்பது தொடருமா? 15 00:00:47,422 --> 00:00:48,966 நீ ஒரு கேவலமானவன்! 16 00:00:50,717 --> 00:00:52,886 டாக்டர், நாம் இங்கே பார்ப்பதை விவரிக்க முடியுமா? 17 00:00:53,554 --> 00:00:56,098 பாதிக்கப்பட்ட கெரோலின் பொல்ஹிமஸின் மரணத்திற்கு காரணமான 18 00:00:56,098 --> 00:00:57,307 வேகமாக தாக்கப்பட்ட காயங்கள். 19 00:00:57,307 --> 00:01:00,477 ஒரு மெல்லிய, கனமான பொருளால் மூன்று முறை தாக்கப்பட்டதால் உச்சந்தலையில் ஏற்பட்ட சிதைவு... 20 00:01:01,645 --> 00:01:04,105 ...கடுமையான காயங்கள், மண்டை எலும்பு முறிவுகள், மூளை ஹெர்னியேஷன். 21 00:01:04,105 --> 00:01:05,065 ஹெர்னியேஷனா? 22 00:01:05,065 --> 00:01:07,484 மண்டையோட்டின் அழுத்தத்தால் மூளையின் பகுதிகள் இடம் மாறி, 23 00:01:07,484 --> 00:01:08,485 வெளியேற வேண்டிய கட்டாய நிலை. 24 00:01:08,485 --> 00:01:10,696 எனவே எலும்பு முறிவுகள் வழியாக கசிவது அவருடைய மூளையா? 25 00:01:10,696 --> 00:01:12,823 சரி. ஃபோரமென் மேக்னம் வழியாகவும் 26 00:01:12,823 --> 00:01:15,033 அது தள்ளப்படுவதை புகைப்படங்கள் காட்டவில்லை. 27 00:01:15,033 --> 00:01:17,077 அங்கேதான் முதுகெலும்பு மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் நுழைகிறது. 28 00:01:17,077 --> 00:01:19,246 - இதுதான் மரணத்திற்கு காரணமா? - அதுவாகத்தான் இருந்திருக்கும், 29 00:01:19,246 --> 00:01:21,540 ஆனால் ஹெர்னியேஷன் அவரைக் கொல்லும் முன் இரத்த கசிவால் இறந்திருக்கிறார். 30 00:01:21,540 --> 00:01:22,916 உத்தேசமான இறப்பு நேரம் என்ன? 31 00:01:22,916 --> 00:01:25,043 உடல் வெப்பநிலை, ரிகோர் மற்றும் லிவோர் மோர்டிஸ் நிலைகளின் படி 32 00:01:25,043 --> 00:01:26,920 இரவு 10 மணியிலிருந்து நள்ளிரவுக்குள். 33 00:01:26,920 --> 00:01:29,298 அவர் முகத்தில் இருக்கும் குறிகள்? 34 00:01:29,298 --> 00:01:30,591 அவை கீழே விழுந்ததைக் குறிக்கின்றன. 35 00:01:30,591 --> 00:01:32,217 அவர் தலையின் பின்பகுதியில் ஒருமுறை தாக்கப்பட்டு, 36 00:01:32,217 --> 00:01:33,802 முகம் தரையில் படுபடி விழுந்து, மூக்கு உடைந்திருக்கிறது, 37 00:01:33,802 --> 00:01:36,430 அதனால் அவர் கண்களுக்கு கீழும் கன்னங்களிலும் அடையாள குறிகள் இருக்கின்றன. 38 00:01:36,430 --> 00:01:39,141 பிறகு மண்டை ஓட்டின் பின்புறத்தில் இன்னும் இரண்டு முறை தாக்கப்பட்டிருக்கிறார். 39 00:01:39,141 --> 00:01:41,894 அவர் உயிருடன் இருக்கும்போதே முகத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது. 40 00:01:41,894 --> 00:01:43,604 மரண அடிகள் பிறகு விழுந்திருக்கின்றன. 41 00:01:43,604 --> 00:01:45,647 அவர் தன்னைத் தற்காத்துக்கொள்ள முயன்றதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? 42 00:01:45,647 --> 00:01:47,733 உறுதியான தற்காப்பு காயங்கள் எதுவும் இல்லை. 43 00:01:47,733 --> 00:01:50,444 பிரதிவாதியின் தோலின் தடயங்கள் பாதிக்கப்பட்டவரின் விரல் நகங்களில் ஒன்றின் கீழ் 44 00:01:50,444 --> 00:01:52,196 இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 45 00:01:52,196 --> 00:01:55,490 அவர் தன்னைத் தற்காத்துக்கொள்ள முயற்சிக்கும்போது கீறியிருக்கலாமா? 46 00:01:55,490 --> 00:01:58,660 அது சாத்தியம் தான். பெரும்பாலும், அவர் அப்படி நடப்பதை எதிர்பார்க்கவில்லை. 47 00:01:58,660 --> 00:02:00,579 அடி அவரைக் கொல்லவில்லை, அங்கே கிடக்கும்போது 48 00:02:00,579 --> 00:02:03,457 - இரத்தம் வெளியேறியதுதான் அவரைக் கொன்றதா? - ஆம், சார். 49 00:02:03,457 --> 00:02:05,000 - அவர் கஷ்டப்பட்டிருக்கிறார். - சாட்சியை தவறாக வழிநடத்துகிறார். 50 00:02:05,000 --> 00:02:07,419 - அவர் கஷ்டப்பட்டாரா? - அதை என்னால் சொல்ல முடியாது. 51 00:02:07,419 --> 00:02:10,297 மண்டையில் விழுந்த அடிகளால் அவர் சுயநினைவு இல்லாமல் இருந்திருக்கலாம். 52 00:02:10,297 --> 00:02:13,800 அவர் சுயநினைவுடன் இருந்து கஷ்டப்பட்டதை உங்களால் நிராகரிக்க முடியுமா? 53 00:02:14,301 --> 00:02:15,844 என்னால் அதை மறுக்க முடியாது, இல்லை. 54 00:02:15,844 --> 00:02:18,722 டாக்டர், செல்வி. பொல்ஹிமஸ் பற்றி வேறு ஏதாவது கண்டுபிடிப்புகள் இருக்கிறதா? 55 00:02:18,722 --> 00:02:22,726 ஆம். அவர் கொல்லப்பட்டபோது ஆறு வார கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். 56 00:02:23,727 --> 00:02:25,395 நீதிபதி அவர்களே, இந்த நேரத்தில், 57 00:02:25,395 --> 00:02:28,524 இரண்டு தரப்பும் ஏற்றுக்கொண்ட டிஎன்ஏ பகுப்பாய்வை சமர்பிக்கிறேன், 58 00:02:28,524 --> 00:02:31,860 அது பிரதிவாதிதான் அப்பா என்பதை உறுதிப்படுத்துகிறது. 59 00:02:31,860 --> 00:02:33,070 குறித்துக்கொள்ளப்பட்டது. 60 00:02:33,070 --> 00:02:35,072 எனவே பிரதிவாதி பாதிக்கப்பட்டவரை கருவுற செய்தாரா? 61 00:02:35,072 --> 00:02:36,448 ஆம், அவர் செய்திருக்கிறார். 62 00:02:38,575 --> 00:02:39,576 அவ்வளவுதான். 63 00:02:40,577 --> 00:02:41,411 திரு. ஹோர்கன். 64 00:02:41,411 --> 00:02:44,456 எதிர்தரப்பு இந்த சாட்சியை கேள்வி கேட்காது, நீதிபதி அவர்களே. 65 00:02:44,456 --> 00:02:47,167 - டாக்டர் குமகை... - உண்மையில், எனக்கு வயதாகிவிட்டது, நான்... 66 00:02:47,918 --> 00:02:50,254 எதையும் தவறவிடவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறேன். 67 00:02:50,254 --> 00:02:52,756 "ஒரு மெல்லிய, கனமான பொருள்" என்று சொன்னீர்கள். 68 00:02:52,756 --> 00:02:53,841 நான் புரிந்துகொண்டபடி, 69 00:02:53,841 --> 00:02:58,929 அந்த மெல்லிய, கனமான பொருளை சுழற்றியது யார் என்பதை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை. 70 00:02:58,929 --> 00:03:01,557 - உண்மையில், அது அதை பரிந்துரைக்கவில்லை. - சரி. 71 00:03:01,557 --> 00:03:03,392 கெரோலின் பொல்ஹிமஸை கொன்றது யார் என்ற 72 00:03:03,392 --> 00:03:05,686 எந்த மருத்துவ முடிவுகளையும் நீங்கள் எடுக்கவில்லை. 73 00:03:05,686 --> 00:03:07,688 இது ஒரு கொலை என்று மட்டுமே என்னால் 74 00:03:07,688 --> 00:03:09,231 உறுதியாக சொல்ல முடியும். 75 00:03:09,231 --> 00:03:10,566 ம். 76 00:03:11,108 --> 00:03:17,197 மெல்லிய, கனமான பொருள் அல்லது கொலை ஆயுதங்கள் எதுவும் மீட்கப்படவில்லைதானே? 77 00:03:17,197 --> 00:03:18,282 சரி. 78 00:03:18,782 --> 00:03:19,783 நன்றி. 79 00:03:23,537 --> 00:03:24,872 திரு. மோல்டோ. ஏதாவது கேட்க வேண்டுமா? 80 00:03:25,372 --> 00:03:26,248 வேண்டாம். 81 00:03:27,416 --> 00:03:31,128 - தேவையானது கிடைத்துவிட்டது... - டாக்டர், பிரேத பரிசோதனையை முடித்த பிறகு, 82 00:03:31,128 --> 00:03:33,005 பிரதிவாதியை சந்திக்க வாய்ப்பு கிடைத்ததா? 83 00:03:33,005 --> 00:03:36,592 ஆம், அவர் எங்கள் அலுவலகத்திற்கு வந்து உடலைப் பார்க்க வேண்டும் என்று ஆக்ரோஷமாக கேட்டார். 84 00:03:36,592 --> 00:03:40,012 ஒரு மாவட்ட வழக்கறிஞர் அப்படி வருவது வழக்கமானதா? 85 00:03:40,012 --> 00:03:42,306 அது நடப்பதுதான், ஆனால் நிச்சயமாக வழக்கமானது இல்லை. 86 00:03:42,306 --> 00:03:46,643 பாதிக்கப்பட்டவர்களைப் பார்ப்பதற்கு திரு. சாபிச் வருவது வழக்கமா? 87 00:03:46,643 --> 00:03:49,271 - இல்லை. - திரு. சாபிச் எப்போதாவது கொலை செய்யப்பட்டவரை 88 00:03:49,271 --> 00:03:52,482 - நேரில் பார்க்க வந்திருக்கிறாரா? - ஒருபோதும் இல்லை. 89 00:03:52,482 --> 00:03:54,735 ஆனால் அவர் அன்று வந்தார். அவருடைய நடத்தை எப்படி இருந்தது? 90 00:03:54,735 --> 00:03:58,780 - கொந்தளிப்பாக, பயமுறுத்தும் விதத்தில் இருந்தார். - பயமுறுத்துவதாகவா? 91 00:03:58,780 --> 00:04:00,115 எனக்கு அப்போது புரியவில்லை. 92 00:04:00,115 --> 00:04:01,408 ஆனால் இப்போது புரிகிறதா? 93 00:04:01,408 --> 00:04:04,786 என் உணர்வு, அவர் என் கண்டுபிடிப்புகளை மட்டும் தெரிந்துகொள்ள விரும்பவில்லை, 94 00:04:04,786 --> 00:04:06,705 அவற்றைப் பார்த்து பயந்தது போலவும் இருந்தது. 95 00:04:07,581 --> 00:04:09,166 அவரிடம் ஏதோ சரியாக இல்லை. 96 00:04:11,502 --> 00:04:12,503 அவ்வளவுதான். 97 00:04:13,420 --> 00:04:18,841 டாக்டர், கொந்தளிப்பு, பயம் அல்லது "சரியாக இல்லை" ஆகிய 98 00:04:18,841 --> 00:04:21,887 நடத்தை நோயறிதலுக்கான உளவியல் பயிற்சி ஏதாவது... 99 00:04:22,971 --> 00:04:24,056 உங்களுக்கு இருக்கிறதா? 100 00:04:24,056 --> 00:04:25,849 பிரதிவாதியுடன் எனக்கு வரலாறு இருக்கிறது, 101 00:04:25,849 --> 00:04:29,144 அவரது நடத்தையின் அடிப்படையில் சாதாரண கருத்துகள் எனக்கு ஏற்படலாம், 102 00:04:29,144 --> 00:04:31,146 அவர் வழக்கத்திற்கு மாறாக நடந்துகொண்டார். 103 00:04:31,146 --> 00:04:33,106 அவருடன் உங்களுக்கு வரலாறு இருக்கிறது. நீங்கள் நண்பர்களா? 104 00:04:33,106 --> 00:04:34,316 சக ஊழியர்கள், நண்பர்கள் இல்லை. 105 00:04:34,316 --> 00:04:37,611 நண்பர்கள் இல்லை. உண்மையில், நீங்கள் என் தரப்பு நபரை கேவலமானவன் என்று கருதுகிறீர்கள். 106 00:04:37,611 --> 00:04:40,405 - ஆட்சேபனை. - சார்பு நிலையை காட்ட சொன்னது. 107 00:04:41,573 --> 00:04:42,574 அதை அனுமதிக்கிறேன். 108 00:04:45,202 --> 00:04:48,622 சில சமயங்களில் மோதல் ஏற்படும், அவரை அப்படி அழைத்ததற்கு நான் வருந்துகிறேன். 109 00:04:48,622 --> 00:04:51,333 மாவட்ட வழக்கறிஞருக்கு எதிராக உங்களுக்கு எந்த பாரபட்சமும் இல்லையா? 110 00:04:51,917 --> 00:04:53,669 நிச்சயமாக இல்லை. அது அபத்தமானது. 111 00:04:53,669 --> 00:04:55,462 - என்னை கேவலமானவன் என்று அழைத்திருக்கிறீர்களா? - ஆட்சேபனை. 112 00:04:55,462 --> 00:04:57,589 நீதிபதி அவர்களே, இங்கே பாரபட்சம் இருந்தால்... 113 00:04:57,589 --> 00:04:58,966 விஷயத்துக்கு வாருங்கள். 114 00:04:59,675 --> 00:05:00,509 டாக்டர். 115 00:05:01,426 --> 00:05:04,096 உங்களுக்கும் எனக்கு சில முறை வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. 116 00:05:04,096 --> 00:05:05,764 அதாவது, அது எங்கள் வேலையில் நடப்பதுதான். 117 00:05:05,764 --> 00:05:08,600 இது மிகவும் சர்ச்சைக்குரிய, அதிகம் அழுத்தம் நிறைத்த செயல்முறை, 118 00:05:08,600 --> 00:05:10,978 சில சமயங்களில் சில கடினமான வார்த்தைகள் வந்துவிடும். 119 00:05:10,978 --> 00:05:14,606 ஆனால் நிச்சயமாக எனக்கு வழக்குரைஞர்களுக்கு எதிராக ஒரு சார்பு இல்லை, 120 00:05:14,606 --> 00:05:16,733 அதை நான் மிகவும் எதிர்க்கிறேன். 121 00:05:16,733 --> 00:05:18,777 எப்போதாவது டாமி மோல்டோவை கேவலமானவன் என்று அழைத்திருக்கிறீர்களா? 122 00:05:18,777 --> 00:05:20,362 - ஆட்சேபனை. - உங்களை விட அதிகமாக இல்லை. 123 00:05:20,362 --> 00:05:21,446 டாக்டர் குமகை. 124 00:05:21,446 --> 00:05:23,031 ஒருவேளை இதனால்தான் நீங்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 125 00:05:23,031 --> 00:05:24,533 - டாக்டர். - உங்கள் வேலையை விட்டுவிடாதீர்கள். 126 00:05:24,533 --> 00:05:25,868 ஓ, இல்லை, அது சரிதான். நீங்கள் நீக்கப்பட்டீர்கள், 127 00:05:25,868 --> 00:05:27,327 - சரிதானே? ஆம். - டாக்டர் குமகை. 128 00:05:27,327 --> 00:05:29,454 வழிவிடுங்கள். தலையை குனியுங்கள். 129 00:05:34,960 --> 00:05:36,461 கேட்டது. காரில் ஏறிவிட்டார். 130 00:05:48,891 --> 00:05:52,436 நமக்குத் தேவையானது கிடைத்தது. ஆனால் நீ அதோடு விடவில்லை. 131 00:05:53,020 --> 00:05:55,772 அதைத்தான் சொன்னேன்... நான் சொன்னேன். குமகையை அங்கேயே உட்காரவைத்து, 132 00:05:55,772 --> 00:05:58,650 இறப்பிற்கான நேரம், காரணம், குழந்தையின் அப்பாவைப் பற்றி மட்டும் 133 00:05:58,650 --> 00:06:00,569 சொல்லவை என்று. 134 00:06:00,569 --> 00:06:02,905 ஆனால் உன்னால் அதோடு நிறுத்த முடியவில்லை. 135 00:06:02,905 --> 00:06:07,409 இப்போது பாதிக்கப்பட்டதாக நினைக்கும், "கோபம்" கொண்ட மருத்துவ ஆய்வாளர் 136 00:06:07,409 --> 00:06:10,412 - நம்மிடம் இருக்கிறார். - அது முக்கியமான சாட்சியமாக இருந்தது. 137 00:06:10,412 --> 00:06:13,665 எல்லோருக்கும் தெரிந்த, எல்லோரும் நேசிக்கும் ரஸ்டி சாபிச் அதைச் செய்திருக்க மாட்டான் என்பதை 138 00:06:13,665 --> 00:06:16,335 எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம், ஒரு கட்டத்தில் அவன் 139 00:06:16,335 --> 00:06:19,129 அந்த ரஸ்டி சாபிச்சாக இருப்பதை நிறுத்திவிட்டான் என்று நிறுவ வேண்டும். 140 00:06:19,129 --> 00:06:20,172 அது நிகர வெற்றிதான். 141 00:06:20,172 --> 00:06:23,217 நான் அதை நிகர தோல்வி என்று சொல்வேன். 142 00:06:23,217 --> 00:06:25,886 இது ஒரு சூழ்நிலையை சார்ந்திருக்கும் வழக்கு, இதில் சிறு சிறு, மிகச்சிறிய 143 00:06:25,886 --> 00:06:28,430 விஷயங்களை வைத்துதான் வழக்கை கட்டமைக்க வேண்டும். 144 00:06:28,430 --> 00:06:30,516 அதில் குமகை முதல் நபர்தான். 145 00:06:31,099 --> 00:06:33,477 ரஸ்டி சாபிச் பித்துபிடித்தவனாக இருந்திருக்கிறான். 146 00:06:35,896 --> 00:06:39,608 கெரோலினின் விரல் நகத்தின் கீழ் இருந்த தோல் ஆரம்ப அறிக்கையில் இல்லை. 147 00:06:40,734 --> 00:06:42,110 தடயவியல் பின்தங்கியிருக்கிறது. 148 00:06:43,570 --> 00:06:46,448 குமகை பகுப்பாய்வின் அந்தப் பகுதிகளில் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டான். 149 00:06:49,493 --> 00:06:53,038 தடயவியல் பேதாலாஜிஸ்ட், மிகவும் கண்டிப்பானவர் போல. 150 00:06:53,038 --> 00:06:54,456 ஜெரமி பக். 151 00:06:54,456 --> 00:06:58,168 அவர் அநேகமாக சிறந்தவர். நான் எப்பொழுதும் அவரிடம்தான் போவேன். நீயும் கூட, ரஸ்டி. 152 00:06:58,168 --> 00:07:00,045 அவருடைய வரைகலையை போலவே துல்லியமானவர், 153 00:07:00,045 --> 00:07:04,299 எனவே நீங்கள் இருவரும் புகைப்படங்களைப் பார்க்காமல் இருந்தால் நல்லது என்று நினைக்கிறோம். 154 00:07:04,299 --> 00:07:09,179 நேர்மையாக, நடுநிலையோடு, உணர்ச்சிவசப்படாமல். சரியா? 155 00:07:11,056 --> 00:07:13,308 உடல் மொழி பற்றி ஒரு நொடி பேசலாமா? 156 00:07:13,308 --> 00:07:14,476 அது பற்றி என்ன? 157 00:07:14,476 --> 00:07:17,187 சரி, இன்று நாங்கள் பார்த்ததை நாங்கள் விரும்பவில்லை. 158 00:07:17,187 --> 00:07:18,939 நீங்கள் ஒன்றாக பார்க்கப்பட வேண்டும். 159 00:07:18,939 --> 00:07:21,400 நடுவர் குழு உங்களிடமிருந்து குறிப்புகளைப் பெறப் போகிறது, 160 00:07:21,400 --> 00:07:25,279 அவர்களுக்கு எல்லா நேரமும் "நான் அவரை நேசிக்கிறேன். நம்புகிறேன்" என்பதை பார்க்க வேண்டும். 161 00:07:25,779 --> 00:07:28,782 ஊடகங்கள் இன்று செய்தது போல மீண்டும் திரண்டால், 162 00:07:28,782 --> 00:07:32,870 ஒருவேளை, ரஸ்டி, பார்பராவைச் சுற்றி உன் கையை போட்டு அவளை பாதுகாத்திடு. 163 00:07:35,622 --> 00:07:36,623 பார்பரா? 164 00:07:39,126 --> 00:07:40,252 எனவே... 165 00:07:42,254 --> 00:07:44,464 அவர் என் பாதுகாவலர் என்று நடுவர் குழுவை நாம் நம்பவைக்க வேண்டும். 166 00:07:46,008 --> 00:07:48,969 ஆம், ஒரு வகையில். அந்த சூழ்நிலையில். 167 00:07:51,138 --> 00:07:52,139 ரேமண்ட், நான்... 168 00:07:54,808 --> 00:07:56,435 உங்கள் வேலையைப் பற்றி எனக்குத் தெரியாது, 169 00:07:57,144 --> 00:07:59,313 ஆனால் நடுவர் குழுவின் அறிவுத்திறனை அவமதிப்பது 170 00:07:59,313 --> 00:08:00,898 நல்ல விஷயம் இல்லை என்று நினைக்கிறேன். 171 00:08:02,482 --> 00:08:05,903 அவர்கள் என் முகத்தில் பார்க்க வேண்டியது அதிர்ச்சியாகத்தான் இருக்கும். 172 00:08:06,653 --> 00:08:08,697 என் கணவர் ஒரு கொடூர கொலைக்காக விசாரணையில் இருக்கிறார். 173 00:08:08,697 --> 00:08:11,074 நான் அதிர்ச்சியடைவதைத் தவிர வேறு எப்படி இருக்க முடியும்? 174 00:08:19,124 --> 00:08:21,126 விசாரணைகள் பெரும்பாலும் கதை சொல்லுவது போலத்தான். 175 00:08:22,544 --> 00:08:23,962 நன்றாக சொல்லப்படுவது வெற்றிபெரும். 176 00:08:24,546 --> 00:08:26,757 நீங்கள் இங்கே எங்கள் கதையின் ஒரு பகுதி, 177 00:08:26,757 --> 00:08:29,301 அதோடு உங்கள் கோபம் வெற்றிபெறவைக்கப் போவதில்லை. 178 00:08:38,769 --> 00:08:41,230 அந்த அறையில் இருப்பது எனக்கு மிகவும் கடினம், 179 00:08:41,855 --> 00:08:44,900 அங்கே சொல்லப்போகும் எல்லா விஷயங்களையும், சித்தரிக்கப்படும் 180 00:08:44,900 --> 00:08:46,527 எல்லா படங்களையும் பார்க்க வேண்டும். 181 00:08:50,280 --> 00:08:51,990 நான் அங்கே இருக்கிறேன் என்பதே... 182 00:08:54,868 --> 00:08:58,789 என் கணவரின் குற்றமற்ற தன்மையை நான் நம்புகிறேன் என்று நடுவர் குழுவுக்குச் சொல்லும். 183 00:09:00,290 --> 00:09:01,959 நான் நம்பகமானவளாக இருக்க வேண்டும். 184 00:09:02,459 --> 00:09:05,212 ஆனால் நான் நம்பகமானவளாக இருக்க, நான் உண்மையாக இருக்க வேண்டும். 185 00:09:07,005 --> 00:09:09,049 அப்படித்தான் நான் அந்த அறையில் இருப்பேன். 186 00:09:10,759 --> 00:09:14,888 அவர்களை என் உண்மையை பார்க்க வைப்பேன். 187 00:09:16,723 --> 00:09:18,892 நான் திகிலடைந்திருக்கிறேன், நான்... 188 00:09:20,310 --> 00:09:21,520 பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறேன், 189 00:09:22,604 --> 00:09:25,065 நான் இப்படிப்பட்ட சீர்கேட்டை வெறுக்கிறேன், 190 00:09:26,984 --> 00:09:30,529 அப்படிப்பட்ட சீர்கேட்டுக்கு என் பிள்ளைகளின் அப்பா பொறுப்பாக இருக்கலாம் என்ற... 191 00:09:32,072 --> 00:09:34,157 எண்ணத்தால் என் மனம் புண்பட்டிருக்கிறது. 192 00:09:38,120 --> 00:09:40,914 இது என் வாழ்க்கையின் இருண்ட காலம். 193 00:09:43,542 --> 00:09:45,586 நான் வேறுவிதமாக நடிக்க மாட்டேன். 194 00:09:50,299 --> 00:09:52,217 உங்கள் இருவருக்காகவும் இல்லை. அந்த நடுவர் குழுவுக்காகவும் இல்லை. 195 00:10:17,701 --> 00:10:22,414 அவருடைய வலது கையின் விரல் நகங்களுக்குக் கீழே தோல் செல்களைக் கண்டுபிடித்தோம், 196 00:10:22,414 --> 00:10:24,708 பிரதிவாதியுடன் பொருத்தும் டிஎன்ஏ உடன். 197 00:10:24,708 --> 00:10:28,378 பாதிக்கப்பட்டவரின் முகத்திலும், அவர் அணிந்திருந்த 198 00:10:28,378 --> 00:10:31,798 சட்டையின் காலரிலும் உமிழ்நீரின் தடயங்களைக் கண்டுபிடித்தோம். 199 00:10:31,798 --> 00:10:33,800 பிரதிவாதியுடன் பொருத்தும் டிஎன்ஏ உடன். 200 00:10:33,800 --> 00:10:39,306 உடலை கட்ட பயன்படுத்திய கயிற்றில் டிஎன்ஏ எதுவுமில்லை என்பது ஆர்வமூட்டுகிறது. 201 00:10:39,306 --> 00:10:40,933 ஏன் "ஆர்வமூட்டுகிறது" என்கிறீர்கள்? 202 00:10:40,933 --> 00:10:42,017 அது கவனமாக செய்யப்பட்டதாக இருந்தது. 203 00:10:42,017 --> 00:10:43,519 சிகாகோ மக்கள் VS. ரோசாட் சாபிச் 204 00:10:43,519 --> 00:10:46,563 குற்றவாளி எந்த ஆதாரத்தையும் விட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார். 205 00:10:46,563 --> 00:10:51,068 இரத்தக்களரியான, ஒழுங்கற்ற சம்பவ இடம் 206 00:10:51,652 --> 00:10:56,156 தடயங்கள் நிலைப்பாட்டில் மிகவும் சுத்தமாக இருப்பதைப் பார்ப்பது அரிது. 207 00:10:56,156 --> 00:10:57,574 அது என்ன சொல்கிறது? 208 00:10:57,574 --> 00:11:02,204 சுத்தம் செய்யவும், தடயங்களை மறைக்கவும் பெரும் சிரத்தை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 209 00:11:02,204 --> 00:11:05,874 தடயவியல் பேதாலாஜிஸ்டாக ஏறக்குறைய 20 ஆண்டுகள் பணியாற்றியதன் அடிப்படையில், 210 00:11:05,874 --> 00:11:07,751 நடந்தது பற்றி உங்கள் கருத்து என்ன? 211 00:11:07,751 --> 00:11:13,215 என் கருத்து என்னவென்றால், திடீரென்று ஒரு கொலைவெறி ஆத்திரம் ஏற்பட்டிருக்கிறது... 212 00:11:13,215 --> 00:11:14,216 திட்டமிடப்படாதது... 213 00:11:14,216 --> 00:11:17,094 அதைத் தொடர்ந்து மிக நுணுக்கமாக, 214 00:11:17,094 --> 00:11:20,681 முறையான, போஸ்ட்மார்ட்டம் போல அவரைக் கட்டிப்போடும் செயல் நடந்திருக்கிறது. 215 00:11:20,681 --> 00:11:22,516 அவ்வளவுதான். நன்றி. 216 00:11:22,516 --> 00:11:25,269 இதற்கு முன் எப்பொழுதாவது உடல் இப்படி கட்டப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறீர்களா? 217 00:11:25,269 --> 00:11:30,399 ஆம், பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில் வினோதமான இதே மாதிரி 218 00:11:30,399 --> 00:11:33,026 அதில் உடல் கட்டப்பட்டிருந்தது. 219 00:11:33,026 --> 00:11:37,698 அந்த கொலை வழக்கை விசாரித்த மாவட்ட வழக்கறிஞர் யார்? 220 00:11:37,698 --> 00:11:41,201 {\an8}இருவர், கெரோலின் பொல்ஹிமஸ், ரஸ்டி சாபிச். 221 00:11:41,201 --> 00:11:44,496 {\an8}அந்த வழக்கில் கொலையாளி, அவர் பெயர் லியம் ரெனால்ட்ஸ். 222 00:11:46,540 --> 00:11:48,333 - அவர்தான் குற்றவாளி. - சரி. 223 00:11:48,333 --> 00:11:50,085 கெரோலின் பொல்ஹிமஸ் மற்றும் ரஸ்டி சாபிச் 224 00:11:50,085 --> 00:11:52,671 {\an8}- ஆகிய வழக்கறிஞர்களால் தண்டிக்கப்பட்டார். - சரி. 225 00:11:52,671 --> 00:11:56,884 {\an8}கெரோலின் பொல்ஹிமஸ் மற்றும் ரஸ்டி சாபிச் ஆகியோரால் தண்டிக்கப்பட்டதும், 226 00:11:56,884 --> 00:11:58,677 {\an8}அவர்களை பழிவாங்குவேன் என்று மிரட்டினார். 227 00:11:58,677 --> 00:12:00,512 {\an8}- அது உங்களுக்குத் தெரியுமா? - தெரியும். 228 00:12:00,512 --> 00:12:05,058 {\an8}இப்போது, பழிவாங்குவதில் நான் நிபுணர் இல்லை, ஆனால் நான் சந்தேகிக்கிறேன், 229 00:12:05,058 --> 00:12:07,352 - ஒருவரை கொன்று, மற்றொருவரை சிக்கவைப்பது... - ஆட்சேபனை. 230 00:12:07,352 --> 00:12:09,897 - ...மிகவும்... - ஏற்றுக்கொள்ளப்பட்டது. இங்கே வாருங்கள். 231 00:12:20,574 --> 00:12:21,491 இது பற்றி விவாதித்தோம். 232 00:12:21,491 --> 00:12:23,702 இந்த அலுவலகம் திரு. ரெனால்ட்ஸை விசாரிக்கவில்லை... 233 00:12:23,702 --> 00:12:25,370 எனக்குத் தெரிந்தவரை என்னை கூட விசாரிக்கவில்லை. 234 00:12:25,370 --> 00:12:27,331 எல்லோரையும் விசாரிப்பது அவர்கள் வேலை இல்லை. 235 00:12:27,331 --> 00:12:30,000 - அவர்கள் எதிர்மறையை நிரூபிக்க வேண்டியதில்லை. - அவர் பகிரங்கமாக கெரோலினுக்கும் ரஸ்டிக்கும் 236 00:12:30,000 --> 00:12:32,169 - மிரட்டல் விடுத்தார். - ஆம், வெற்று மிரட்டல்... 237 00:12:32,169 --> 00:12:34,213 - அது நடுவர் குழுவுக்கு தெரிவது முக்கியம். - ...விடுத்தார். 238 00:12:34,213 --> 00:12:36,173 - நான் ஏன் அதை... - அதை நீங்கள் பயன்படுத்தக் கூடாது. 239 00:12:36,173 --> 00:12:37,424 ...பதிவில் குறிப்பிடக்கூடாது. 240 00:12:37,424 --> 00:12:40,093 எனக்கு உறுதியான ஒன்றைக் கொடுங்கள், அதை விசாரிக்க அனுமதிக்கிறேன். 241 00:12:41,512 --> 00:12:44,515 மற்றபடி, உங்கள் அபத்தம் எதுவும் கூடாது. இப்போது போங்கள். 242 00:12:54,650 --> 00:12:59,571 திரு. பக், பிரதிவாதியும் இறந்தவரும் காதல் ரீதியாக நெருக்கமாக இருந்தது உங்களுக்குத் 243 00:12:59,571 --> 00:13:01,782 - தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. - ஆம். 244 00:13:01,782 --> 00:13:05,077 "அவர் விரல் நகங்களுக்குக் கீழே தோல் காணப்பட்டது" என்று நீங்கள் சொல்லும்போது, 245 00:13:05,077 --> 00:13:09,039 அவர் கீறப்பட்டது போல, தோலின் துண்டுகளைப் போல 246 00:13:09,039 --> 00:13:10,791 நிஜ தோலைக் குறிப்பிடுகிறீர்களா? 247 00:13:10,791 --> 00:13:14,962 இல்லை, கண்ணால் பார்க்கக்கூடிய தோலின் துண்டுகள் இல்லை. உயிரணுக்கள். 248 00:13:14,962 --> 00:13:18,090 என் முகத்தை இப்படி சொறிந்தால், 249 00:13:18,090 --> 00:13:20,592 என் நகங்களுக்கு அடியில் தோல் உயிரணுக்கள் இருக்குமா? 250 00:13:21,260 --> 00:13:22,427 அது சாத்தியம். 251 00:13:22,427 --> 00:13:26,431 எனவே, ரஸ்டி சாபிச் கெரோலின் பொல்ஹிமஸை முத்தமிட்டிருந்தால், முத்தமிடும்போது, 252 00:13:26,431 --> 00:13:32,354 கெரோலின் தன் விரல் நகங்களால் கழுத்தில் அல்லது முதுகில் வருடியிருந்தால், 253 00:13:32,354 --> 00:13:36,859 அவர் மீது கண்டுபிடிக்கப்பட்ட உமிழ்நீர், அவரது விரல் நகங்களுக்கு அடியில் காணப்படும் டிஎன்ஏவுக்கு 254 00:13:36,859 --> 00:13:40,904 அதை கணக்கில்கொள்ள முடியாதா? அது சாத்தியமில்லையா? 255 00:13:42,614 --> 00:13:43,699 சாத்தியம் என்று நினைக்கிறேன். 256 00:13:43,699 --> 00:13:46,577 எனவே நீங்கள் அவர் கெரோலினைக் கொன்றதற்கு சாட்சியாக சொல்லும் டிஎன்ஏ, 257 00:13:47,160 --> 00:13:52,249 எளிதாக அவர் கெரோலினை முத்தமிட்டதாக சொல்லவும் முடியும். 258 00:14:00,299 --> 00:14:02,134 உங்களுக்கு வித்தியாசம் புரிகிறதா? 259 00:14:56,855 --> 00:14:57,981 நீ போக வேண்டும். 260 00:15:32,558 --> 00:15:35,811 பிரதிவாதிக்கும் செல்வி. பொல்ஹிமஸுக்கும் தொடர்பு இருப்பது உங்களுக்குத் தெரியுமா? 261 00:15:35,811 --> 00:15:38,105 - எனக்குத் தெரியும், ஆம். - உங்களுக்கு எப்படி தெரியவந்தது? 262 00:15:38,689 --> 00:15:42,317 எனக்கு சந்தேகம் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருந்தன. 263 00:15:42,317 --> 00:15:44,528 எனக்கு நிஜமாக தெரிந்தபோது... 264 00:15:46,363 --> 00:15:48,532 நான் ஒரு கோப்பை ரஸ்டியின் அலுவலகத்தில் கொடுக்க வேண்டியிருந்தது. 265 00:15:48,532 --> 00:15:51,034 அது தாமதமான நேரம். அவர் போய்விட்டார் என்று நினைத்தேன். அவர் போகவில்லை. 266 00:15:51,034 --> 00:15:53,579 நான் உள்ளே போனேன். அவர் கெரோலினை முத்தமிட்டுக் கொண்டிருந்தார். 267 00:15:56,123 --> 00:15:57,082 என்ன? 268 00:15:57,624 --> 00:16:01,044 - என்னிடம் ராபர்ட்ஸின் வழக்கு இருக்கிறது. - சரி. 269 00:16:01,044 --> 00:16:02,129 - சரி. - ஆம். 270 00:16:03,213 --> 00:16:05,424 - நன்றி. ஆம். - இதோ. நாளை பார்க்கலாம். 271 00:16:05,424 --> 00:16:08,051 நான் உடனே வந்துவிட்டேன், கெரோலின் என்னைப் பின்தொடர்ந்தார். 272 00:16:08,051 --> 00:16:13,724 அது மிகவும் சங்கடமாக இருந்தது, நான் கிளம்பிவிட்டேன். 273 00:16:13,724 --> 00:16:15,684 - இது எப்போது? - கடந்த பிப்ரவரி. 274 00:16:15,684 --> 00:16:17,769 நீங்கள் கவனித்த வேறு ஏதாவது சம்பவங்கள் உண்டா? 275 00:16:17,769 --> 00:16:20,230 வெளிப்படையான பாலியல் ரீதியாக இல்லை, வெறும் அலுவலக வதந்திகள். 276 00:16:20,230 --> 00:16:24,651 ஆனால், அதாவது, நிச்சயமாக, அது பற்றிய பேச்சுகள் இருந்தன. 277 00:16:25,986 --> 00:16:27,029 எது போல? 278 00:16:27,529 --> 00:16:31,575 ஒரு முறை பேஸ்மெண்ட் வாகன நிறுத்துமிடத்தில், அவர்களைப் பார்த்தேன். 279 00:16:31,575 --> 00:16:34,661 அவர்கள்... நான் நினைக்கிறேன், தெரியவில்லை... அவர்கள் வாதிட்டதாக நினைக்கிறேன். 280 00:16:34,661 --> 00:16:37,998 - ...ஒன்றாக. எனக்குத் தெரியாது. என்ன? - விலகி இரு. 281 00:16:37,998 --> 00:16:40,542 ஆனால் நான் ஒரு கேள்விதான் கேட்கிறேன். எனவே உன்னால் முடிந்தால்... 282 00:16:40,542 --> 00:16:42,044 அதுதான். அடச்சே. 283 00:16:42,044 --> 00:16:44,755 கெரோலின் காரில் இருந்தார், அவர் கெரோலின் கார் கண்ணாடியை தட்டினார், 284 00:16:44,755 --> 00:16:45,714 கெரோலின் வேகமாக கிளம்பிவிட்டார். 285 00:16:45,714 --> 00:16:47,090 ச்சே. 286 00:16:47,090 --> 00:16:49,927 திரு. சாபிச்சுடன் இது பற்றி விவாதிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததா? 287 00:16:49,927 --> 00:16:51,220 விவாதித்தேன். 288 00:16:52,638 --> 00:16:53,722 என்ன சொன்னீர்கள்? 289 00:16:54,973 --> 00:16:56,600 நான் அவரிடம் சொன்னேன்... 290 00:16:56,600 --> 00:17:01,355 அவர் தன்னையே இழப்பதாக, நான் கவலைப்படுகிறேன் என்று. 291 00:17:01,355 --> 00:17:03,941 - தன்னையே இழப்பதாகவா? - கெரோலினிடம். 292 00:17:04,525 --> 00:17:08,945 அவர் கொஞ்சம் செயலிழந்து, பித்துப்பிடித்தது போல 293 00:17:09,695 --> 00:17:10,696 மாறிக்கொண்டிருந்தார். 294 00:17:14,201 --> 00:17:18,664 திரு. சாபிச் மற்றும் செல்வி. பொல்ஹிமஸ் இடையேயான உறவை நீங்கள் ஏற்கவில்லையா? 295 00:17:18,664 --> 00:17:20,165 - நீங்கள் அங்கீகரிக்கவில்லையா? - இல்லை, நான் செய்யவில்லை. 296 00:17:20,165 --> 00:17:23,042 நீங்கள் கெரோலின் பொல்ஹிமஸின் செயலையும் அங்கீகரிக்கவில்லை, இல்லையா? 297 00:17:23,042 --> 00:17:26,380 இது அதைப் பற்றியது இல்லை. அது தொழில்முறை சாராதது. 298 00:17:27,089 --> 00:17:29,258 உங்களுக்கு கெரோலினை பிடிக்காது, இல்லையா? 299 00:17:29,258 --> 00:17:30,801 இல்லை, எனக்குப் பிடிக்காமல் இல்லை. 300 00:17:30,801 --> 00:17:35,556 இது பற்றிய உங்கள் கவலைகளை HR-க்கு எப்போதாவது தெரிவித்தீர்களா? 301 00:17:35,556 --> 00:17:37,432 இல்லை, நான் தெரிவிக்கவில்லை. 302 00:17:40,227 --> 00:17:43,939 உங்களுக்குத் தெரிந்தவரை, செல்வி. பொல்ஹிமஸ் திரு. சாபிச் பற்றி HR-ரிடம் 303 00:17:43,939 --> 00:17:45,190 புகார் செய்யவில்லையா? 304 00:17:45,190 --> 00:17:46,233 அது சரி. 305 00:17:46,733 --> 00:17:51,488 உங்களுக்கு தெரிந்தவரை, அவர் யாரை பற்றியாவது எப்போதாவது HR-க்கு புகார் செய்திருக்கிறாரா? 306 00:17:52,823 --> 00:17:53,824 ஆம். 307 00:17:55,325 --> 00:17:56,201 யாரைப் பற்றி? 308 00:17:58,370 --> 00:17:59,538 டாமி மோல்டோ. 309 00:18:16,930 --> 00:18:17,931 சரி. 310 00:18:21,101 --> 00:18:25,147 உங்களுக்குத் தெரிந்தவரை நான் தொழில்ரீதியாக அல்லது விரும்பத்தகாத முறையில் செல்வி. பொல்ஹிமஸிடம் 311 00:18:25,147 --> 00:18:26,899 நடந்துகொண்டிருக்கிறேனா? 312 00:18:26,899 --> 00:18:28,984 இல்லை, எனக்குத் தெரிந்தவரை இல்லை. 313 00:18:28,984 --> 00:18:31,111 மனித வளத் துறையில் தாக்கல் செய்யப்பட்ட புகார் குறித்து 314 00:18:31,111 --> 00:18:32,487 உங்களுக்கு ஏதாவது தெரியுமா? 315 00:18:32,487 --> 00:18:35,824 எனக்குத் தெரிந்ததெல்லாம் அவர் உங்களுடன் எந்த வழக்குகளிலும் வேலை செய்ய விரும்பவில்லை. 316 00:18:35,824 --> 00:18:38,827 அவர் உங்களைக் கண்டு வெறுப்பதாக சொன்னார். 317 00:18:43,624 --> 00:18:49,046 சரி. பாதிக்கப்பட்டவரிடம் நான் எப்போதாவது தொழில்முறையை மீறி நடப்பதை பார்த்திருக்கிறீர்களா? 318 00:18:49,046 --> 00:18:50,214 உண்மையில் இல்லை. 319 00:18:50,214 --> 00:18:52,549 ரஸ்டி சாபிச் எப்படி? 320 00:19:00,390 --> 00:19:05,687 ஆம். பிரதிவாதி பித்துபிடித்தது போலவும், அவரிடம் தன்னை இழப்பது போலவும் நடந்திருக்கிறார். 321 00:19:05,687 --> 00:19:07,272 அதுதானே உங்கள் வாக்குமூலம்? 322 00:19:07,272 --> 00:19:08,649 அதுதான் என் வாக்குமூலம். 323 00:19:11,235 --> 00:19:12,653 மிக்க நன்றி. 324 00:19:34,633 --> 00:19:35,968 ஹேய். 325 00:19:37,636 --> 00:19:38,720 பரவாயில்லை. 326 00:19:42,391 --> 00:19:44,977 நான் கிட்டத்தட்ட அவனுக்காக வருந்துகிறேன், டாமி. 327 00:19:48,647 --> 00:19:49,898 நானும் வருத்தப்பட்டேன், 328 00:19:50,482 --> 00:19:54,361 ஆனால் அவன் கரப்பான்பூச்சி போன்றவன் என்பது நினைவுக்கு வந்தது. 329 00:19:54,361 --> 00:19:57,614 அவனை நசுக்க முடியாது. திரும்பி வந்து கொண்டே இருப்பான். 330 00:19:59,366 --> 00:20:03,203 அவன் தன் கருத்துக்களை சொல்லிவிட்டான். 331 00:20:03,787 --> 00:20:05,038 நீங்கள் கவலைப்படுகிறீர்கள். 332 00:20:05,038 --> 00:20:09,501 சரி, நடுவர் குழு... அவர்கள்... ஆதாரத்தின் மீது குறியாக இருந்தால், 333 00:20:09,501 --> 00:20:11,253 நாம் இருக்கும் இடம் சாதகமானது, ஆனால்... 334 00:20:12,880 --> 00:20:17,467 அவர்கள் யாரையாவது குற்றவாளியாக்க நினைத்தால், அது ரஸ்டியாகத்தான் இருக்கும். 335 00:20:36,320 --> 00:20:37,196 நீ நலமா? 336 00:20:39,239 --> 00:20:40,240 நீங்கள் நலமா? 337 00:20:53,712 --> 00:20:54,713 என் உளவியல் வகுப்பில், 338 00:20:54,713 --> 00:20:58,175 அதிர்ச்சி, தொடர்பற்ற நிலை பற்றிய சில விஷயங்களைப் படித்து வருகிறோம். 339 00:20:58,759 --> 00:21:02,054 மூளை எப்படி மக்களை தங்களிடம் இருந்தே பாதுகாக்கும் என்று. 340 00:21:02,054 --> 00:21:03,639 தன்னிச்சையாக... 341 00:21:05,933 --> 00:21:08,310 யதார்த்தத்தில் இருந்து தொடர்பில்லாமல் இருப்பது. 342 00:21:10,187 --> 00:21:11,230 நீங்கள் எப்போதாவது அதை உணர்ந்திருக்கிறீர்களா? 343 00:21:13,857 --> 00:21:14,858 எப்படி சொல்கிறாய்? 344 00:21:18,111 --> 00:21:19,112 வெறும்... 345 00:21:25,077 --> 00:21:27,496 மக்கள் தங்கள் நினைவுகளுடன் தொடர்பில்லாமல் இருக்கலாம். 346 00:21:29,831 --> 00:21:30,832 ஒருவேளை... 347 00:21:33,001 --> 00:21:35,879 மக்களால் சமரசம் செய்துகொள்ள முடியாத ஒன்றை செய்யும்போது அல்லது... 348 00:21:37,923 --> 00:21:40,050 தங்களை தாங்கள் என்னவாக உணர்கிறார்களோ... 349 00:21:42,970 --> 00:21:44,888 அது ஒரு தொடர்பில்லாத நிலையை ஏற்படுத்தும். 350 00:21:44,888 --> 00:21:46,265 என் நினைவு நன்றாக இருக்கிறது. 351 00:22:42,196 --> 00:22:43,906 ரஸ்டி, உன்னிடம் பேச வேண்டும். 352 00:22:51,788 --> 00:22:52,915 சரி. 353 00:22:54,458 --> 00:22:57,169 எனவே இரண்டு மாதங்களுக்கு முன்பு... 354 00:23:00,130 --> 00:23:03,884 நான் கேலரியில் இருந்து வெளியேற்றப்பட்ட நேரத்தில், 355 00:23:04,635 --> 00:23:09,264 பகலில் ஒரு பாருக்குப் போக ஆரம்பித்தேன். 356 00:23:12,142 --> 00:23:13,477 ம்... 357 00:23:14,853 --> 00:23:18,106 பாரில் ஒரு பார்டெண்டர் இருந்தான், அவன்... 358 00:23:19,525 --> 00:23:21,360 கலையில் முனைவர் பட்டம் பெற்றவன். 359 00:23:21,360 --> 00:23:23,862 எனவே நாங்கள் பேசினோம்... 360 00:23:27,115 --> 00:23:29,701 எங்களுக்குள் நிஜமாகவே ஒரு பிணைப்பு ஏற்பட்டது... 361 00:23:32,996 --> 00:23:36,458 நாங்கள் முத்தமிட்டோம். நான் அவனை முத்தமிட்டேன். 362 00:23:41,505 --> 00:23:43,090 ஆனால் அவ்வளவுதான் நடந்தது. 363 00:24:21,962 --> 00:24:25,632 அது ஒரு மனதை திசைதிருப்பும் செயல். அது... 364 00:24:27,509 --> 00:24:29,136 அது ஒரு முத்தம்தான். 365 00:24:30,971 --> 00:24:32,139 அது எங்கு நடந்தது? 366 00:24:34,933 --> 00:24:36,518 அவன் வீட்டில். 367 00:24:38,478 --> 00:24:41,023 - நான் அவனுடைய கலையைப் பார்க்க விரும்பினேன். - அவன் வீட்டிலா? 368 00:24:42,608 --> 00:24:44,568 - அவ்வளவுதான். - நீ அவனுடைய கலையை... 369 00:24:45,194 --> 00:24:47,571 - பார்க்க விரும்பினாய்? - வேண்டாம், ரஸ்டி. 370 00:25:00,792 --> 00:25:02,419 - அவனோடு உடலுறவு கொண்டாயா? - இல்லை. 371 00:25:04,505 --> 00:25:05,589 இல்லை. 372 00:25:10,302 --> 00:25:12,012 அதை ஏன் இப்போது சொல்கிறாய்? 373 00:25:14,348 --> 00:25:16,934 நான் உன்னிடம் நேர்மையாக இருக்க விரும்புகிறேன். 374 00:25:20,395 --> 00:25:23,607 நாம் ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்கிறோம் என்று நினைத்தேன். 375 00:25:23,607 --> 00:25:27,486 நான் விசாரணையில் இருக்கிறேன்... என் வாழ்க்கைக்காக. 376 00:25:29,613 --> 00:25:30,614 நேர்மையா? 377 00:25:33,450 --> 00:25:34,535 எனக்குத் தெரியும். 378 00:25:35,452 --> 00:25:38,121 நீ தினமும் என்னைக் கேள்விகளால் துளைக்கிறாய். 379 00:25:38,705 --> 00:25:40,040 என்னைக் கேள்விகளால் துளைக்கிறாய். 380 00:25:40,040 --> 00:25:42,668 "இங்கே என்ன நடந்தது?" "அங்கே என்ன நடந்தது?" 381 00:25:42,668 --> 00:25:44,545 "உன்னையும் அவளையும் பற்றி இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை?" 382 00:25:45,128 --> 00:25:46,839 கேள்விக்கு பின் கேள்வி. 383 00:25:47,422 --> 00:25:50,467 நான் உன்னிடம், "நான் நேர்மையாக இருக்க முயற்சிக்கிறேன். 384 00:25:50,467 --> 00:25:54,388 என்ன நடந்தது என்று என்னால் முடிந்தவரை நினைவுபடுத்தி சொல்ல முயற்சிக்கிறேன். 385 00:25:54,388 --> 00:25:57,724 எல்லா நேரத்திலும் என்னால் காரணம் சொல்ல முடியாது," என்று சொல்லும்போது, 386 00:25:58,350 --> 00:26:01,687 நீ என்னை மீண்டும் மீண்டும் கேள்விகளால் துளைக்கிறாய். 387 00:26:01,687 --> 00:26:03,188 - அது நியாயமில்லை. - மீண்டும் மீண்டும். 388 00:26:03,188 --> 00:26:07,276 அது நியாயமில்லையா? அது நியாயமில்லையா பார்பரா? எது நியாயம்? 389 00:26:07,276 --> 00:26:08,652 இப்போது எது நியாயம்? 390 00:26:08,652 --> 00:26:09,987 அது எப்படி இருக்கிறது? 391 00:26:10,487 --> 00:26:11,488 என்ன? 392 00:26:11,488 --> 00:26:14,575 எப்படி இருக்கிறது? ஒரு தப்பு செய்வது? 393 00:26:15,450 --> 00:26:16,535 ச்சே. 394 00:26:17,661 --> 00:26:21,081 - நாசமாய் போ, ரஸ்டி. - நாசமாய் போகவா? 395 00:27:58,136 --> 00:28:00,639 - நான் கிளம்புகிறேன். - என் சாவிகள் சமையலறையில் இருக்கிறதா? 396 00:28:04,852 --> 00:28:06,103 உங்கள் கிண்ணங்களை கழுவுகிறீர்களா? 397 00:28:06,103 --> 00:28:07,312 - செய்கிறேன். - இங்கே இருக்கிறது. 398 00:28:07,312 --> 00:28:10,023 - உன் ஜியோமெட்ரி வீட்டுப்பாடத்தை மறந்துவிடாதே. - என் பையில் இருக்கிறது. 399 00:28:10,023 --> 00:28:12,985 - நீ வருகிறாயா? - இல்லை, நான் லோரெய்னை சந்திக்கிறேன். 400 00:28:12,985 --> 00:28:14,319 - தாமதமாகிவிட்டது. - பார்பரா? 401 00:28:16,405 --> 00:28:17,990 கைல், மதிய உணவை எடுத்துக்கொண்டாயா? 402 00:28:17,990 --> 00:28:19,074 ஆம். 403 00:28:34,506 --> 00:28:37,342 என்னால் வர முடியும். நான் நல்ல துணையாக இருப்பேன். 404 00:28:39,636 --> 00:28:44,308 செல்லம். இல்லை, பரவாயில்லை. நான் ஒன்றுமில்லை. நிஜமாகவே ஒன்றுமில்லை. 405 00:28:55,235 --> 00:28:57,362 நேற்றிரவு நான் உங்களை வருத்தப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். 406 00:29:25,057 --> 00:29:27,309 இப்போது, ஏன் அவனிடம் சொன்னாய்? 407 00:29:27,309 --> 00:29:30,062 - தெரியவில்லை, லோரெய்ன். - அது மோசமான யோசனை. 408 00:29:30,062 --> 00:29:31,146 எனக்குத் தெரியும். 409 00:29:32,397 --> 00:29:34,399 சமீபகாலமாக நாங்கள்... 410 00:29:36,109 --> 00:29:37,236 நான் நினைத்தேன்... 411 00:29:38,612 --> 00:29:41,198 நாங்கள் மீண்டும் இணைவதாகத் தோன்றியது. 412 00:29:41,198 --> 00:29:42,449 - எனக்குத் தோன்றியது... - ம். 413 00:29:44,076 --> 00:29:45,619 ...நெருக்கமாகவும், பாதுகாப்பாகவும். 414 00:29:45,619 --> 00:29:47,329 - அதோடு... - சரி. 415 00:29:49,039 --> 00:29:52,084 ...மொத்த க்லிஃப்டன் விஷயமும் திடீரென பெரும் சுமையாக தோன்றியது, 416 00:29:52,084 --> 00:29:55,754 அதோடு எனக்கு... நான்... 417 00:29:56,338 --> 00:29:57,673 யோசிக்காமல் சொல்லிவிட்டாய். 418 00:29:59,383 --> 00:30:00,384 ஆம். 419 00:30:00,384 --> 00:30:02,219 அது சரியாக நடக்கவில்லையா? 420 00:30:06,181 --> 00:30:07,182 இல்லை. 421 00:30:08,559 --> 00:30:11,603 அதனால்தான் நீ இனி தனியாக நீதிமன்றத்திற்குப் போகக்கூடாது. 422 00:30:11,603 --> 00:30:13,230 நான் உனக்கு பக்கத்திலேயே இருப்பேன். 423 00:30:13,230 --> 00:30:15,607 நான் மீண்டும் போவேன், இன்று மட்டும் இல்லை. 424 00:30:17,025 --> 00:30:22,531 இன்று, அவர்கள் இருவரின் கணினியில் இருந்து சேகரித்த எல்லா தகவல்கள் பற்றி வாதிடுவார்கள். 425 00:30:22,531 --> 00:30:23,574 ஆம். 426 00:30:23,574 --> 00:30:28,328 அவன் காதலித்த விஷயங்களை எல்லாம் கேட்டுக்கொண்டு என்னால் சும்மா... 427 00:30:28,328 --> 00:30:30,581 - கடவுளே. - ...உட்கார முடியும் என்று நினைக்கவில்லை. 428 00:30:31,707 --> 00:30:34,918 அவள் கொல்லப்பட்ட இரவு, அவன் அவளுக்கு 30 முறை மெஸ்சேஜ் செய்திருக்கிறான்? 429 00:30:35,711 --> 00:30:36,712 அடக் கடவுளே. 430 00:30:37,337 --> 00:30:40,132 நேர்மையாகச் சொன்னால், அதுதான் மொத்த வழக்கிலும் மிகவும் மோசமான பகுதி என்று நினைக்கறேன். 431 00:30:40,132 --> 00:30:41,383 முப்பது முறையா? 432 00:30:44,261 --> 00:30:46,638 அவனுடைய அப்பா தன் மகன் சாட்சியமளிப்பதைத் தடுக்கும் முயற்சியில் 433 00:30:46,638 --> 00:30:48,682 ஒரு பாதுகாப்பு ஆணையை தாக்கல் செய்திருக்கிறார். 434 00:30:48,682 --> 00:30:50,934 - நீங்கள் விளையாடுகிறீர்கள். - நான் கோரிக்கையை மறுக்கிறேன். 435 00:30:50,934 --> 00:30:52,728 ஆனால் அவர் எங்கிருந்து வருகிறார் என்பது எனக்குத் தெரியும். 436 00:30:52,728 --> 00:30:55,147 இந்த நாள் ஏற்கனவே அதிக கஷ்டம் அனுபவித்த ஒரு பையனுக்கு நிறைய 437 00:30:55,147 --> 00:30:56,857 உணர்ச்சி கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று பயப்படுகிறேன். 438 00:30:56,857 --> 00:30:59,359 - அவன் ஒரு முக்கிய சாட்சி. எனவே... - நான் பேசி முடிக்கிறேன். 439 00:30:59,359 --> 00:31:02,529 தேவையில்லாததோ இல்லையோ, இந்த குடும்பம் தேவையில்லாத கஷ்டத்தை 440 00:31:02,529 --> 00:31:04,948 அனுபவிக்க வேண்டாமென்று விரும்புகிறேன். 441 00:31:05,532 --> 00:31:10,579 இப்போது, இந்த வழக்கு திட்டமிடப்படாத கொலை, அது உங்களுக்கே தெரியும். 442 00:31:11,079 --> 00:31:14,458 இது திட்டமிடப்படாத கொலையாக இருக்கலாம் என்று உங்கள் சாட்சியே கூட சாட்சியமளித்திருந்தார். 443 00:31:14,458 --> 00:31:15,709 இதை திட்டமிட்டு செய்த கொலையாக கருத முடியாது. 444 00:31:15,709 --> 00:31:18,504 இலக்கை அடைய என்னுடைய அறிவுரை உங்களுக்கு உதவாது. 445 00:31:19,796 --> 00:31:23,258 நீங்கள் நிரபராதியாக வெளியேறுவது மிகவும் கஷ்டமான காரியம் என்று எனக்குத் தோன்றுகிறது. 446 00:31:23,258 --> 00:31:25,844 {\an8}உணர்ச்சி வேகத்தில் செய்த வழக்காக கருதுவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. 447 00:31:25,844 --> 00:31:26,970 - வாய்ப்பே இல்லை. - இல்லை. 448 00:31:29,515 --> 00:31:31,058 குற்றம் நிரூபணமாகும். 449 00:31:31,058 --> 00:31:33,060 எட்டு வருடங்களில் உங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடரலாம். 450 00:31:33,060 --> 00:31:35,437 - அது நல்ல பேரம் போல தெரிகிறது. - நான் குற்றத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன். 451 00:31:35,437 --> 00:31:37,856 வழக்கு தள்ளுபடியாகி மன்னிப்பு கேட்பதை மட்டுமே நான் ஏற்றுக்கொள்வேன். 452 00:31:39,316 --> 00:31:40,901 கடைசி வாய்ப்பு. 453 00:31:42,903 --> 00:31:44,905 யாராவது பின்வாங்க விரும்புகிறீர்களா? 454 00:31:48,325 --> 00:31:49,326 நல்லது. 455 00:31:50,744 --> 00:31:53,997 நீங்கள் இருவரும் பையனை கவனமாக விசாரிப்பீர்கள். 456 00:32:12,349 --> 00:32:13,350 ஜே? 457 00:32:21,650 --> 00:32:22,818 ஹேய், செல்லம். 458 00:32:24,069 --> 00:32:26,738 ஹேய். ஹேய், செல்லம். 459 00:32:27,698 --> 00:32:29,116 மாடிப் படுக்கைக்குப் போகிறாயா? 460 00:32:30,492 --> 00:32:32,244 மாடிப் படுக்கைக்கு தூக்கிச் செல்கிறேன். 461 00:33:25,005 --> 00:33:26,340 அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது... 462 00:33:27,758 --> 00:33:31,136 அவர்கள் தூங்குவார்கள், நாம் மணிக்கணக்காக அவர்களை பார்த்துக் கொண்டிருப்போம். 463 00:33:33,305 --> 00:33:34,765 காவல் தெய்வங்கள் போல. 464 00:34:10,132 --> 00:34:11,385 நீ ஏன் இன்னமும் இங்கே இருக்கிறாய்? 465 00:34:30,696 --> 00:34:35,117 நீ இங்கே இருக்கும்... அதே காரணம்தான். 466 00:34:53,969 --> 00:34:57,890 மைக்கேல், நீயும் நானும் முன்பு சந்தித்தபோது என் வருத்தங்களை தெரிவித்தேன். 467 00:34:57,890 --> 00:34:59,516 இப்போது மீண்டும் தெரிவிக்கிறேன். 468 00:34:59,516 --> 00:35:02,477 உன் அம்மாவின் இழப்புக்காகவும், அதோடு நீ இன்று நீதிமன்றத்துக்கு வந்ததால் ஏற்பட்ட 469 00:35:02,477 --> 00:35:04,771 மன உளைச்சலுக்காகவும். 470 00:35:04,771 --> 00:35:06,648 நாங்கள் உன்னை சாட்சி சொல்ல கேட்பது மோசமான விஷயம்தான், 471 00:35:06,648 --> 00:35:10,777 ஆனால் உன் அம்மாவுக்கு மிகவும் மோசமான விஷயம் நடந்தது என்பதால்தான். 472 00:35:10,777 --> 00:35:11,945 திரு. மோல்டோ. 473 00:35:11,945 --> 00:35:15,407 உன் அம்மா கொலை செய்யப்பட்ட இரவுக்கு உன் கவனத்தை கொண்டுவர விரும்புகிறேன். 474 00:35:15,407 --> 00:35:17,075 நீ எங்கே இருந்தாய் என்று சொல்ல முடியுமா? 475 00:35:17,075 --> 00:35:18,327 வீட்டில் இரவு உணவு சாப்பிட்டேன். 476 00:35:18,327 --> 00:35:21,455 டிவியோ ஏதோ பார்த்துக் கொண்டிருந்தேன். வீடியோ கேம்கள் விளையாடி இருக்கலாம். 477 00:35:21,455 --> 00:35:23,457 பிறகு வீட்டிலிருந்து கிளம்பி அங்கே போனேன். 478 00:35:23,457 --> 00:35:26,043 எனவே தெளிவுபடுத்திக்கொள்ள கேட்கிறேன், உன் அப்பா டால்டன் கால்டுவெல் உடன் 479 00:35:26,043 --> 00:35:28,378 நீ வசிக்கும் வீட்டிலிருந்து கிளம்பி இருக்கிறாய், 480 00:35:28,378 --> 00:35:31,340 பிறகு நீ சொன்னது போல அங்கே போயிருக்கிறாய். அந்த இடம் என்றால்? 481 00:35:31,340 --> 00:35:32,508 என் அம்மாவின் வீட்டிற்கு. 482 00:35:32,508 --> 00:35:34,259 எதற்காக? 483 00:35:34,259 --> 00:35:36,345 என் அம்மாவும் நானும் சரியாக பேசிக்கொள்வதில்லை. 484 00:35:36,345 --> 00:35:37,596 நான் அவரோடு இருப்பதை அவர் விரும்பவில்லை. 485 00:35:38,180 --> 00:35:41,767 என்னை அழைக்க மாட்டார். அது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. 486 00:35:41,767 --> 00:35:45,187 சில நேரங்களில் சும்மா பார்க்க வீட்டிற்குப் போவேன். 487 00:35:46,146 --> 00:35:46,980 சும்மா பார்க்காவா? 488 00:35:46,980 --> 00:35:50,234 நான் ஒரு அங்கமாக இல்லாத அவர் விரும்பிய வாழ்க்கையைப் பார்க்க. 489 00:35:50,234 --> 00:35:53,237 அதையெல்லாம் முன்பே உங்களிடம் விளக்கிவிட்டேன் என்று நினைக்கிறேன். 490 00:35:54,238 --> 00:35:55,906 நீ உன் அம்மா வீட்டிற்கு அடிக்கடி போவாயா? 491 00:35:55,906 --> 00:35:59,660 அவ்வப்போது. எனக்குத் தெரியவில்லை. மாதம் ஓரிருமுறை. 492 00:35:59,660 --> 00:36:01,703 நீ அங்கே இருக்கும்போது என்ன செய்வாய்? 493 00:36:01,703 --> 00:36:04,331 பெரும்பாலும், அவர் என்னை பார்க்க முடியாதபடி இருட்டில் தூரமாக இருந்து 494 00:36:04,331 --> 00:36:05,791 வீட்டைப் பார்த்துக்கொண்டிருப்பேன். 495 00:36:06,291 --> 00:36:09,586 சில நேரங்களில் சிலர் உள்ளே வருவதைப் பார்ப்பேன். பெரும்பாலும் அவராகத்தான் இருப்பார். 496 00:36:09,586 --> 00:36:13,674 சாட்சி பிரதிவாதியான ரஸ்டி சாபிச்சை சுட்டிக்காட்டியுள்ளார் என்பதை குறித்துக்கொள்ளுங்கள். 497 00:36:13,674 --> 00:36:14,716 அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். 498 00:36:14,716 --> 00:36:16,552 - ஆட்சேபனை. - ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 499 00:36:16,552 --> 00:36:18,720 மைக்கேல், உன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல். 500 00:36:18,720 --> 00:36:21,473 நீ எப்போது இடைவெளி எடுக்க வேண்டும் என்றாலும், 501 00:36:21,473 --> 00:36:22,891 என்னிடம் சொல், சரியா? 502 00:36:23,851 --> 00:36:25,769 - சரி. - விஷயத்திற்கு வாருங்கள். 503 00:36:25,769 --> 00:36:26,854 சரி. 504 00:36:28,480 --> 00:36:29,731 எனவே நீதான் இந்த வீடியோக்களை எடுத்தாயா? 505 00:36:30,315 --> 00:36:31,316 ஆம். 506 00:36:32,568 --> 00:36:33,902 ஜூன் 16 அன்று. 507 00:36:33,902 --> 00:36:37,155 வீடியோவின் மேலே இருக்கும் நேரத்தை படிக்கிறாயா? 508 00:36:37,155 --> 00:36:39,074 ஆம். "இரவு 9:49." 509 00:36:49,543 --> 00:36:53,881 மீண்டும் கேட்கிறேன், உன் அம்மா கொலை செய்யப்பட்ட அன்று இரவு 9:49 மணிக்கு, 510 00:36:53,881 --> 00:36:56,258 - நீ எடுத்த வீடியோ இதுதானா? - ஆம். 511 00:36:59,469 --> 00:37:02,222 உன் அம்மாவின் மரணத்திற்குப் பிறகு, நீ பிரதிவாதிக்கு மெஸ்சேஜ் அனுப்பினாயா? 512 00:37:02,806 --> 00:37:03,682 ஆம். 513 00:37:03,682 --> 00:37:04,892 என்ன மெஸ்சேஜ் அனுப்பினாய்? 514 00:37:04,892 --> 00:37:07,853 "நீ அங்கே இருந்தாய். நான் உன்னைப் பார்த்தேன்" என்று மெஸ்சேஜ் அனுப்பினேன். 515 00:37:07,853 --> 00:37:09,730 நீ என்ன பார்த்தாய்? 516 00:37:09,730 --> 00:37:11,440 நான் அந்த வீடியோவை எடுத்தபோது வீட்டில். 517 00:37:12,524 --> 00:37:14,193 பிரதிவாதியை உன்னை சந்திக்கச் சொன்னாயா? 518 00:37:14,735 --> 00:37:16,737 - ஆம். - அவரை ஏன் சந்திக்கச் சொன்னாய்? 519 00:37:17,446 --> 00:37:22,117 என் அம்மாவைக் கொன்றவனின் கண்களைப் பார்க்க விரும்பினேன் என்பதால். 520 00:37:22,117 --> 00:37:23,827 - ஆட்சேபனை. - ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 521 00:37:25,662 --> 00:37:29,249 எனவே நீ சந்திக்க வரச் சொன்ன பிறகு, நீயும் பிரதிவாதியும் நிஜமாகவே சந்தித்தீர்களா? 522 00:37:29,249 --> 00:37:31,543 - ஆம். - நீ எதைப் பற்றி பேசினாய்? 523 00:37:31,543 --> 00:37:34,588 நான் எதற்காக அவரை சந்திக்க வரச் சொன்னேன் என்று கேட்டார், நான் 524 00:37:34,588 --> 00:37:37,341 என் அம்மாவைக் கொன்றவனின் கண்களைப் பார்க்க விரும்புவதால் என்று சொன்னேன். 525 00:37:37,341 --> 00:37:38,425 ஆட்சேபனை, நீதிபதி அவர்களே. 526 00:37:38,425 --> 00:37:42,554 ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சாட்சி தன் கருத்தை மட்டுமே சொல்கிறார். 527 00:37:43,430 --> 00:37:45,849 உன் அம்மாவைக் கொலை செய்ததாக நீ பிரதிவாதியை குற்றம் சாட்டினாயா? 528 00:37:45,849 --> 00:37:47,935 - குற்றம் சாட்டினேன். - அவர் என்ன சொன்னார்? 529 00:37:49,269 --> 00:37:50,312 அவர் அதை மறுத்தார். 530 00:37:51,188 --> 00:37:52,523 ஆனால் பொய் சொல்கிறார் என்பதை என்னால் பார்க்க முடிந்தது. 531 00:37:52,523 --> 00:37:54,066 - ஆட்சேபனை. - ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 532 00:37:54,066 --> 00:37:56,401 மைக்கேல், உன் கருத்துக்களை நீ சொல்லலாம் 533 00:37:56,401 --> 00:37:58,904 ஆனால் தயவுசெய்து அவற்றை நடந்த உண்மைகளாக சொல்லாதே, சரியா? 534 00:37:59,988 --> 00:38:00,989 சரி. 535 00:38:00,989 --> 00:38:04,660 பிரதிவாதியைப் பற்றி உன் அம்மாவுடன் எப்போதாவது பேசியிருக்கிறாயா? 536 00:38:04,660 --> 00:38:06,745 நான் சொன்னது போல, நாங்கள் நெருக்கமாக இல்லை. 537 00:38:06,745 --> 00:38:08,622 அவர் அதிகம் பகிர்ந்துகொள்ள மாட்டார். 538 00:38:08,622 --> 00:38:10,707 ஆனால் அவர் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, 539 00:38:10,707 --> 00:38:13,794 வேலை செய்யுமிடத்தில் ஒரு ஆணுடன் தனக்கு சில பிரச்சினைகள் இருப்பதாக சொன்னார். 540 00:38:13,794 --> 00:38:15,754 அந்த நபர் அவர் காதலித்த 541 00:38:15,754 --> 00:38:18,423 அதே ஆண்தான் என்பது என் கருத்து. 542 00:38:18,423 --> 00:38:20,133 அவர் வேறு எதையாவது சொன்னாரா? 543 00:38:21,218 --> 00:38:22,928 அவர் அவரைப் பார்த்து பயப்பட தொடங்குவதாகச் சொன்னார். 544 00:38:22,928 --> 00:38:24,847 அது யாராக இருக்கும் என்று உனக்கு ஏதாவது யோசனை இருக்கிறதா? 545 00:38:24,847 --> 00:38:27,349 - ஆட்சேபனை. யூகத்தைக் கேட்கிறார். - அதை அனுமதிக்கிறேன். 546 00:38:29,893 --> 00:38:32,312 அவரை கொன்றதாக நான் கருதும் அதே நபர்தான் 547 00:38:32,312 --> 00:38:34,523 - அவரும் என்பதுதான் என் கருத்து. - ஆட்சேபனை. 548 00:38:34,523 --> 00:38:37,150 அவர் கொல்லப்பட்ட இரவு நான் புகைப்படம் எடுத்த அதே நபர்தான். 549 00:38:37,150 --> 00:38:38,360 - ஆட்சேபனை. - ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 550 00:38:38,360 --> 00:38:41,154 மைக்கேல், கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல். கேட்காத விஷயங்களை சொல்லாதே. 551 00:38:43,490 --> 00:38:45,242 மைக்கேல், நன்றி. அவ்வளவுதான். 552 00:38:46,743 --> 00:38:47,744 மைக்கேல். 553 00:38:51,957 --> 00:38:53,834 உன்னிடம் ஏகப்பட்ட கருத்துகள் இருக்கின்றன, இல்லையா? 554 00:38:54,501 --> 00:38:57,087 உன் அம்மா பயந்துவிட்டதாக உனக்கு ஒரு கருத்து இருக்கிறது. 555 00:38:57,087 --> 00:39:03,093 உன் அம்மாவுடன் உறவு வைத்திருந்தவரைப் பார்த்துதான் அவர் பயப்பட்டதாக 556 00:39:03,093 --> 00:39:04,511 உனக்கு ஒரு கருத்து இருக்கிறது. 557 00:39:04,511 --> 00:39:07,014 கருத்து. கருத்து, அது ஒரு வேடிக்கையான வார்த்தை. 558 00:39:07,014 --> 00:39:08,974 அந்த வார்த்தையைப் பற்றி ஒரு நிமிடம் பேசுவோம். 559 00:39:10,767 --> 00:39:12,311 அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்? அதற்கு அர்த்தம்... 560 00:39:14,354 --> 00:39:19,234 பார்க்காத ஒன்றை நம்புவது அல்லது நம்பிக்கை வைப்பது, 561 00:39:20,444 --> 00:39:21,695 சரிதானே? 562 00:39:27,034 --> 00:39:28,035 வழக்கறிஞரே? 563 00:39:29,995 --> 00:39:32,331 திரு. ஹோர்கன், கேட்க கேள்வி இருக்கிறதா? 564 00:39:37,878 --> 00:39:38,962 ரே? 565 00:39:41,924 --> 00:39:44,843 - ரே? - நான் அவருடைய மனைவி. 566 00:40:23,173 --> 00:40:24,883 - இன்னமும் துடிப்பு இல்லை. - மீண்டும். 567 00:40:24,883 --> 00:40:26,301 தயாரா? 568 00:40:26,301 --> 00:40:28,720 - மூன்று, இரண்டு, ஒன்று, பின்னால் செல்லுங்கள். - பரவாயில்லை. 569 00:40:35,853 --> 00:40:37,813 ஸ்காட் டூரோ எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 570 00:41:58,852 --> 00:42:00,854 வசனத் தமிழாக்கம் அருண்குமார்