1 00:00:12,846 --> 00:00:13,847 என்ன? 2 00:00:18,185 --> 00:00:20,062 கைல், நாங்கள் உன்னிடம் கொஞ்சம் பேசலாமா? 3 00:00:21,688 --> 00:00:23,440 என்னுடன் உன் அம்மாவும் இருக்கிறார். 4 00:00:23,440 --> 00:00:24,608 ஹாய், செல்லம். 5 00:00:39,039 --> 00:00:40,707 கைல், மே 18-ஆம் தேதி இரவு கெரோலின் வீட்டில் 6 00:00:40,707 --> 00:00:44,253 உன் சைக்கிள் இருக்கும் புகைப்படம் இருக்கிறது. 7 00:00:44,837 --> 00:00:46,004 நீ எதற்காக அங்கே போனாய்? 8 00:00:48,340 --> 00:00:50,008 நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்றே தெரியவில்லை. 9 00:00:53,929 --> 00:00:55,097 செல்லம்... 10 00:00:56,765 --> 00:00:59,935 நான் போகவில்லை. அந்த வழியாக சைக்கிளில் போயிருப்பேன். அவ்வளவுதான்... 11 00:00:59,935 --> 00:01:02,646 - செல்லம். - சரி. கைல், மே 18-ஆம் தேதி இரவு... 12 00:01:02,646 --> 00:01:05,983 கெரோலின் பொல்ஹிமஸ் வீட்டில் நீ இருந்ததற்கான புகைப்படம் இருக்கிறது. 13 00:01:05,983 --> 00:01:07,234 நீ எதற்காக அங்கே போனாய்? 14 00:01:08,861 --> 00:01:11,780 செல்லம், இந்த புகைப்படங்கள் எங்களுக்கு போலீஸிடம் இருந்து கிடைத்தன, 15 00:01:13,073 --> 00:01:15,158 அதனால் அவர்களிடமும் இந்த ஆதாரமும் இருக்கிறது. 16 00:01:15,826 --> 00:01:17,911 நீ உண்மையைச் சொல்ல வேண்டும். அது இப்போது முக்கியம். 17 00:01:17,911 --> 00:01:22,916 அடக் கடவுளே. அடடா, கைல், நீ எதற்காக அங்கே போனாய்? 18 00:01:26,211 --> 00:01:28,338 கெரோலின் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினேன் என்று நினைக்கிறேன். 19 00:01:31,508 --> 00:01:32,926 என்ன? 20 00:01:33,552 --> 00:01:34,845 நீங்கள் போன இடத்திற்கு. 21 00:01:34,845 --> 00:01:37,222 எனவே, உன் அப்பாவுக்கும் கெரோலினுக்கும் இருந்த தொடர்பு பற்றி உனக்குத் தெரியுமா? 22 00:01:37,222 --> 00:01:39,099 நீங்கள் அதற்காக சண்டைபோட்டதைக் கேட்டேன். 23 00:01:40,267 --> 00:01:41,268 சரி. 24 00:01:41,268 --> 00:01:43,854 உன் அக்காவுக்குத் தெரியுமா? ஜேடனுக்கு... அவளுக்குத் தெரியுமா? 25 00:01:45,063 --> 00:01:47,107 நான் அவளிடம் சொல்லவில்லை. எனக்குத் தெரியாது. 26 00:01:47,107 --> 00:01:49,193 அதைப் பற்றி முதன்முதலில் எப்போது உனக்குத் தெரிந்தது? 27 00:01:49,193 --> 00:01:50,360 அது முக்கியமா? 28 00:01:50,360 --> 00:01:51,945 அது முக்கியமில்லை என்றால் உன்னைக் கேட்டிருக்க மாட்டேன். 29 00:01:53,488 --> 00:01:54,948 எனக்கு ஞாபகமில்லை. 30 00:01:55,657 --> 00:01:57,075 சில மாதங்களுக்கு முன்பு இருக்கலாம். 31 00:01:57,075 --> 00:02:02,539 சரி, எனவே அவள் எப்படி இருக்கிறாள் என்று பார்க்க நீ அங்கே போனாய் என்று புரிந்துகொள்கிறேன். 32 00:02:03,582 --> 00:02:06,335 உனக்கு கூகுளை பயன்படுத்த தெரியும், எனவே அவளது புகைப்படத்தைத் தேடியிருக்கலாம், 33 00:02:06,335 --> 00:02:09,588 ஆனால் அவள் வசிக்கும் இடத்தை நீ தெரிந்துகொள்ள விரும்பியிருக்கிறாய். 34 00:02:11,006 --> 00:02:12,925 - நீ அவள் வீட்டை நோட்டம் விட்டாயா? - ரஸ்டி. 35 00:02:12,925 --> 00:02:15,093 கைல், நீ அவள் வீட்டை நோட்டம் விட்டாயா? 36 00:02:15,093 --> 00:02:19,556 நீ எதற்காக அங்கே போனாய் என்பதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை. 37 00:02:19,556 --> 00:02:21,767 ஒருவேளை நீங்கள் போவதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முயற்சித்திருக்கலாம். 38 00:02:28,357 --> 00:02:30,567 - இதைப் பற்றி அம்மாவிடம் பேச வேண்டும். - இல்லை! நான் உன் அப்பா... 39 00:02:30,567 --> 00:02:32,236 - ரஸ்டி. - ...நீ பதில் சொல்ல வேண்டும்... 40 00:02:32,236 --> 00:02:33,695 ரஸ்டி, தயவுசெய்து. 41 00:02:34,321 --> 00:02:35,405 பரவாயில்லை. 42 00:02:36,490 --> 00:02:37,491 நல்லது. 43 00:03:04,476 --> 00:03:06,895 பன்னி டேவிஸ் ஒரு மகளாக இருந்தாள். 44 00:03:08,063 --> 00:03:13,944 பன்னி டேவிஸ் ஒரு சகோதரியாக, தோழியாக, உறவினராக இருந்தாள். 45 00:03:16,029 --> 00:03:18,240 ஒரு வெறிபிடித்தவனுடன் மோட்டல் அறையில் 46 00:03:18,824 --> 00:03:23,662 தனியாக இருந்தபோது பன்னி டேவிஸுக்கு 26 வயதுதான் இருக்கும், 47 00:03:24,246 --> 00:03:26,832 இப்படிப்பட்ட ஒருவன் தன்னைப் போகவிடுவான் என்று 48 00:03:26,832 --> 00:03:30,002 நம்பி அவள் வேண்டுகிறாள்... கெஞ்சுகிறாள். 49 00:03:32,129 --> 00:03:33,422 ஆனால் விடவில்லை. 50 00:03:33,422 --> 00:03:37,968 இந்த நபர், லியம் ரெனால்ட்ஸ், 51 00:03:38,969 --> 00:03:42,472 இதைச் செய்யக்கூடிய நபர்தான்... 52 00:03:45,976 --> 00:03:47,352 இதையும்... 53 00:03:49,897 --> 00:03:51,315 இதையும். 54 00:04:01,575 --> 00:04:02,701 நீ என்ன நினைக்கிறாய்? 55 00:04:04,703 --> 00:04:06,330 நீ அற்புதமானவள், கெரோலின். 56 00:04:33,607 --> 00:04:35,609 இந்த இடம் அலங்கோலமாக இருக்கிறது. 57 00:04:39,947 --> 00:04:41,031 ஹேய். 58 00:04:42,282 --> 00:04:44,785 ஹேய். வாசல் விளக்கு ஒன்று உடைந்திருக்கிறது. 59 00:04:44,785 --> 00:04:48,997 எனவே, அவன் சில முறைகள் அவள் வீடு வழியாக வந்திருக்கிறான், 60 00:04:49,581 --> 00:04:51,959 நீ உள்ளே போவதை ஒருமுறை பார்த்திருக்கிறான். 61 00:04:56,338 --> 00:04:59,091 வெளிப்படையாக, அவனை சீக்கிரம் சிகிச்சைக்கு அழைத்துப் போக வேண்டும். 62 00:04:59,091 --> 00:05:00,175 எதற்காக? 63 00:05:00,175 --> 00:05:02,386 ரஸ்டி, இந்த விஷயத்தை அவன் பல மாதங்களாக ரகசியமாக வைத்திருக்கிறான். 64 00:05:02,386 --> 00:05:04,972 அதன் பாதிப்பு பற்றி நமக்கு எதுவும் தெரியாது. 65 00:05:04,972 --> 00:05:07,933 சரி, கண்டிப்பாக, ஆனால் நாம் இருவரும் ஒன்றாக இதைப் பற்றி அவனிடம் பேசலாம். 66 00:05:07,933 --> 00:05:08,851 ஓ, சரி. 67 00:05:08,851 --> 00:05:11,061 - நீ இப்போது அவனிடம் பேசியது போலவா? - வேண்டியதில்லை... 68 00:05:11,061 --> 00:05:12,521 அதற்கு என்ன அர்த்தம்? 69 00:05:12,521 --> 00:05:14,064 நீ அவனை விசாரணை செய்தாய். 70 00:05:14,064 --> 00:05:15,482 நான் விசாரணை செய்தேனா? 71 00:05:15,482 --> 00:05:16,733 ஆம். 72 00:05:16,733 --> 00:05:18,986 நான் அவனிடம் கேள்விகள்தான் கேட்டேன். 73 00:05:18,986 --> 00:05:22,698 - "நீ எதற்காக அவள் வீட்டை நோட்டம் விட்டாய்?" - அவன் அங்கே இருந்திருக்கிறான், அதனால் கேட்டேன். 74 00:05:22,698 --> 00:05:24,616 ரஸ்டி, ஒரு வழக்கறிஞர் போல கேட்டாய். 75 00:05:24,616 --> 00:05:26,660 - விளையாடுகிறாயா? - அவனுக்கு 15 வயதுதான் ஆகிறது! 76 00:05:28,120 --> 00:05:30,497 - உனக்கு என்ன பிரச்சினை? - என்ன? 77 00:05:32,374 --> 00:05:35,294 - பிரச்சினையை ஏற்படுத்தியது நீதான், ரஸ்டி. நீதான். - கண்டிப்பாக. நான்தான். 78 00:05:35,294 --> 00:05:38,088 ஆம், பிரச்சினையை ஏற்படுத்தியது நான்தான். 79 00:05:38,088 --> 00:05:41,258 ஆனால் என்ன தெரியுமா. உனக்கும் அதில் ஒரு பங்கு இருக்கிறது. 80 00:05:41,258 --> 00:05:45,804 நீ, ஒரு கட்டத்தில், கொஞ்சம் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். 81 00:05:45,804 --> 00:05:48,015 என்னால் இனி இதை சமாளிக்க முடியாது. என்னால் முடியாது. 82 00:05:48,765 --> 00:05:50,225 - நான் வெறும்... - முடியாது! 83 00:06:05,616 --> 00:06:06,950 என்னுடைய மருத்துவக் கருத்துப்படி, 84 00:06:06,950 --> 00:06:09,328 முனை மழுங்கிய பொருளை கொண்டு தாக்கியதால் ஏற்பட்ட காயமே மரணத்திற்குக் காரணம். 85 00:06:10,621 --> 00:06:13,081 எனவே, நீ ஒரு நிபுணர் என்று நீதிபதிக்கு ஏற்கனவே சொல்லிவிட்டோம், 86 00:06:13,081 --> 00:06:14,208 அதனால் நீ தகுதி பெற தேவையில்லை. 87 00:06:14,208 --> 00:06:15,667 "என் கருத்துப்படி" என்று நீ சொல்லத் தேவையில்லை. 88 00:06:15,667 --> 00:06:17,127 - நீ நிமிர்ந்து உட்காரலாம். - சரி. 89 00:06:17,127 --> 00:06:18,879 - நிமிர்ந்து உட்காரு. - நீ... 90 00:06:18,879 --> 00:06:21,507 - எப்படி என்று சொல்ல வேண்டாம்... - உன் முடிவுகளை நடுவர் குழுவிடம் 91 00:06:21,507 --> 00:06:24,676 - கொடுக்கப் போகிறாய்தானே? உன் நிபுணத்துவத்தை. - வேண்டாம்... வெறும்... சரி, நான்... 92 00:06:24,676 --> 00:06:27,012 - ஆஹா. - இங்கே நீ உன் பெருமையைப் பேசப்போவதில்லை. 93 00:06:27,012 --> 00:06:29,348 என்ன... இல்லை. அப்படி பேசாதே. 94 00:06:29,348 --> 00:06:31,141 நான் உனக்காக இந்த அர்த்தமற்ற பயிற்சியைச் செய்கிறேன், 95 00:06:31,141 --> 00:06:33,268 - இதற்காக என்னை காலையிலேயே அழைத்து... - அதை பாராட்டுகிறேன். 96 00:06:33,268 --> 00:06:35,938 நான் ஒரு மருத்துவர். நீ என்னை மதிக்க வேண்டும். 97 00:06:35,938 --> 00:06:38,315 ஒரு மருத்துவராக உன்னை மதிக்கிறேன். 98 00:06:38,315 --> 00:06:41,777 இருந்தாலும் ஒரு சாட்சியாக, நீ அதற்கு தகுதியற்றவன். 99 00:06:42,569 --> 00:06:43,904 நீ கேவலமானவன். 100 00:06:43,904 --> 00:06:45,155 அதை விடு. 101 00:06:45,864 --> 00:06:47,824 இதற்காகத்தான் என்னை தூக்கத்திலிருந்து எழுப்பி அழைத்து வந்தாயா? 102 00:06:51,119 --> 00:06:53,497 நான் அந்த கோப்பை உன்னிடம் கொடுக்கிறேன், அயோக்கியனே. 103 00:06:56,500 --> 00:06:59,795 இந்த வழக்கின் விவரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன. 104 00:06:59,795 --> 00:07:01,380 வழக்கைப் பற்றிய தகவல்கள் கொஞ்சம் கூட கசியவில்லை. 105 00:07:01,380 --> 00:07:03,549 அதாவது, இந்த வழக்கு எவ்வளவு வலுவாக இருக்கப் போகிறது? 106 00:07:03,549 --> 00:07:04,633 அவர்களிடம் கொலைக்கான ஆயுதம் கூட இல்லை. 107 00:07:04,633 --> 00:07:06,802 ஆம், சந்தேகத்திற்கு அப்பால் செல்வதற்கான தடையை 108 00:07:06,802 --> 00:07:08,136 அவர்கள் எவ்வாறு அகற்றினார்கள் என்று தெரியவில்லை. 109 00:07:08,136 --> 00:07:10,347 இது விசாரணைக்குப் போவதை நம்புவதே கடினம். 110 00:07:10,347 --> 00:07:13,392 முன்னால் சக ஊழியர்கள் இப்போது வெளிப்படையான மோதலில்... 111 00:07:13,392 --> 00:07:15,227 சாபிச்சுக்கு இரண்டு பிள்ளைகள்... 112 00:07:15,227 --> 00:07:16,812 - ஆனால் கைல் அங்கே இருந்தான். - இல்லை. 113 00:07:16,812 --> 00:07:19,064 அவன்... நான் சொன்னது போல அந்த பக்கமாக வந்திருக்கிறான். 114 00:07:19,064 --> 00:07:21,316 அது வெறும் சில முறைகள்தான். 115 00:07:22,442 --> 00:07:24,653 - உறுதியாக அவன் அவளை கொல்லவில்லையா? - உங்கள் பேச்சு வேடிக்கையாக இல்லை. 116 00:07:24,653 --> 00:07:26,113 அது வேடிக்கையாக இல்லை. 117 00:07:26,113 --> 00:07:27,865 அது அப்படி இருக்கும் என்று நான் சொல்லவில்லை. 118 00:07:29,616 --> 00:07:33,495 எனவே, கொலை நடந்த இரவு கெரோலின் வீட்டில் மைக்கேல் கால்டுவெல் இருந்திருக்கிறான். 119 00:07:33,495 --> 00:07:36,331 கைல் அங்கே இருந்ததற்கான படக்காட்சிகள், சில வாரங்களுக்கு முன்பாக? 120 00:07:36,331 --> 00:07:37,541 கடவுளே. 121 00:07:38,667 --> 00:07:40,169 நான் இதைப் பற்றி யோசிக்க வேண்டும். 122 00:07:40,919 --> 00:07:42,004 என்னிடம் எதுவும் இல்லை. 123 00:07:44,548 --> 00:07:45,924 - ச்சே... - வேறு ஏதாவது இருக்கிறதா? 124 00:07:45,924 --> 00:07:48,677 நேற்று இரவு தூக்கமே வரவில்லை, சரியா, ரே? 125 00:07:49,636 --> 00:07:50,846 அதுதானா? 126 00:07:53,265 --> 00:07:54,516 என்ன விஷயம்? 127 00:07:55,726 --> 00:07:59,438 பார்பராவும் நானும் சண்டையிட்டோம், உன்னோடு வாழ்ந்தது போதும் என்று சொன்னாள். 128 00:07:59,438 --> 00:08:02,649 "நான் உன்னைவிட்டு பிரிக்கிறேனில்" வரும் "வாழ்ந்தது போதும்" போலவா? 129 00:08:03,692 --> 00:08:07,321 அட. அவள் உன்னை விட்டு பிரியப் போகிறாள் என்றால், அவள் அதை ஏற்கனவே செய்திருப்பாள். 130 00:08:07,321 --> 00:08:09,531 - இப்போது அதைப் பற்றி பேச வேண்டாம். - அவள் எதற்காகக் காத்திருக்கிறாள்? 131 00:08:09,531 --> 00:08:11,158 நல்ல காரணத்துக்காகவா? 132 00:08:15,412 --> 00:08:16,580 நீ அவளுக்கு துரோகம் செய்திருக்கிறாய். 133 00:08:17,164 --> 00:08:18,790 உன் பிள்ளைகளுக்கு துரோகம் செய்திருக்கிறாய். 134 00:08:18,790 --> 00:08:21,043 உண்மையில், பார்பராவை தெரியும் என்பதால், 135 00:08:21,043 --> 00:08:24,421 பிள்ளைகளுக்கு துரோகம் செய்ததுதான் இந்த இரண்டு குற்றங்களில் மோசமானது. 136 00:08:25,839 --> 00:08:27,841 ரே, அது வெறும்... அது சிக்கலானது. 137 00:08:27,841 --> 00:08:29,927 - ஆம். என்னிடம் சொல். அட. - அது... அது... 138 00:08:29,927 --> 00:08:32,971 மனச்சோர்வு, கட்டாயம், தற்பெருமை. 139 00:08:32,971 --> 00:08:34,222 அதில் எதை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வேன். 140 00:08:34,222 --> 00:08:36,933 உன்னை ஒரு டாக்டரிடம் அனுப்பி பிரச்சினையைக் கண்டுபிடிக்கலாம். 141 00:08:37,893 --> 00:08:40,520 ஆனால் அதில் நீ "அருவருப்பானவன் " என்று வந்துவிடுமோ என்பதுதான் என் பயம். 142 00:08:43,065 --> 00:08:45,234 கெரோலின் மீது உனக்கு ஆசை ஏற்பட்டது, அவளுடன் உடலுறவு கொண்டாய், 143 00:08:45,234 --> 00:08:47,027 இப்போது அதற்காக குறைவாகவே வருத்தப்படுகிறாய். 144 00:08:47,611 --> 00:08:50,197 ரஸ்டி, ஏமாற்றும் ஆண்கள் இப்படித்தான் செய்வார்கள். 145 00:08:50,781 --> 00:08:54,618 வேண்டியதை அனுபவித்துவிட்டு, அதை நியாயப்படுத்த சிக்கலான விஷயங்களை சொல்வார்கள். 146 00:08:55,327 --> 00:08:57,704 நடுவர் குழு அதை மிகவும் எளிமையாகவே பார்க்கும். 147 00:08:58,580 --> 00:09:01,124 சாதகம் என்னவென்றால், அவர்கள் அதை அசலானவை அல்ல என்பதைக் கண்டுபிடிப்பார்கள். 148 00:09:02,584 --> 00:09:04,294 அது அவர்களின் மனசாட்சியை உலுக்காது. 149 00:09:05,212 --> 00:09:08,298 ஆனால் உண்மையை சொன்னால், அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 150 00:09:09,383 --> 00:09:12,010 அது லோரெய்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, கண்டிப்பாக பார்பராவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும். 151 00:09:14,346 --> 00:09:15,764 ஆனால் அவள் இன்னும் உன்னுடன்தான் இருக்கிறாள். 152 00:09:16,807 --> 00:09:18,892 உன்னுடனான உறவை அவள் தொடர நினைக்கிறாள் என்று தெரிகிறது. 153 00:09:22,145 --> 00:09:23,772 ஒன்று சொல்லவா? கொஞ்சம் பொறுங்கள். 154 00:09:24,690 --> 00:09:25,774 என்ன தெரியுமா? நான்... 155 00:09:25,774 --> 00:09:28,068 நான் பொறுப்பேற்கவில்லை, எனக்கு அவமானமாக இல்லை, 156 00:09:28,986 --> 00:09:33,699 குற்ற உணர்ச்சி இல்லை என்று சொல்ல உங்களுக்கு எவ்வளவு தைரியம்? 157 00:09:35,868 --> 00:09:36,702 நாசமாய் போங்கள். 158 00:09:39,580 --> 00:09:45,961 40 ஆண்டுகளில், இந்த தொழிலில் நிறைய குற்ற உணர்ச்சியையும் அவமானத்தையும் பார்த்திருக்கிறேன். 159 00:09:46,545 --> 00:09:48,630 அவமானம் என்பது நாமாக உணர்ந்து அனுபவிக்கும் ஒன்று. 160 00:09:48,630 --> 00:09:51,049 நமக்கு ஏற்படுவது, நம்மைப் பற்றியது. 161 00:09:51,675 --> 00:09:55,971 நீ மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் வலியை நீயே உணருவதுதான் குற்ற உணர்ச்சி. 162 00:09:57,055 --> 00:09:58,682 நீ அவமானப்படுகிறாய் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. 163 00:10:12,446 --> 00:10:13,906 அரசு வழக்கறிஞர் குக் கவுண்டி, இல்லினாய்ஸ் 164 00:10:13,906 --> 00:10:15,199 டாமி... 165 00:10:16,283 --> 00:10:18,702 டாமி, என் பெயர் எதற்காக சாட்சிகள் பட்டியலில் இருக்கிறது? 166 00:10:18,702 --> 00:10:19,995 கெரோலினுக்கும் ரஸ்டிக்கும் இடையேயான 167 00:10:19,995 --> 00:10:22,372 உறவு பற்றிய தகவல் உன்னிடம் இருக்கிறது என்று நான் நினைப்பதால். 168 00:10:23,290 --> 00:10:26,502 அன்று இரவு என்ன நடந்தது என்பது பற்றி என்னிடம் எந்த தகவலும் இல்லை. 169 00:10:27,753 --> 00:10:31,173 ஆனால் மற்ற இரவுகளில் என்ன நடந்தது என்பது பற்றிய தகவல் உன்னிடம் இருக்கலாம். 170 00:10:32,591 --> 00:10:33,467 சரிதானே? 171 00:10:34,968 --> 00:10:39,139 இது உண்மையிலேயே HR-க்கு தெரிவிக்கப்பட வேண்டிய ஒன்று என்று எனக்குத் தோன்றுகிறது, 172 00:10:39,139 --> 00:10:42,559 எனவே நீ இங்கே உன்னுடைய குற்ற உணர்ச்சியுடன் போராடிக்கொண்டிருக்கலாம். 173 00:10:42,559 --> 00:10:45,687 ஆஹா, நீ நிஜமாகவே வெறுக்கத்தக்க நபர்தான், இல்லையா? 174 00:10:45,687 --> 00:10:46,897 ஹேய், நான் சொல்வதைக் கேள். 175 00:10:46,897 --> 00:10:51,151 நாம் இதை கெரோலினுக்காக செய்கிறோம், சரியா? அதைப் பற்றி மட்டும் யோசி. அவளுக்காக. 176 00:10:55,906 --> 00:10:56,990 ஹலோ, ஜென்டில்மென். 177 00:10:58,200 --> 00:10:59,326 வந்ததற்கு நன்றி. 178 00:10:59,910 --> 00:11:01,703 எப்படி இருக்கிறாய்? சாப்பிட ஏதாவது வேண்டுமா? 179 00:11:02,287 --> 00:11:03,288 நீங்கள் நலமா? 180 00:11:04,039 --> 00:11:06,792 இதெல்லாம் எனக்கு நிஜமாகவே அசௌகரியமாக இருக்கிறது. 181 00:11:06,792 --> 00:11:08,377 முழுமையாகப் புரிகிறது. இது மோசம்தான். 182 00:11:09,127 --> 00:11:11,421 ஆனால் திரு. சாபிச்சுக்கு எதிராக இந்த வழக்கை கட்டமைக்கும்போது, 183 00:11:11,421 --> 00:11:13,549 ஒவ்வொரு விவரமும் மிக முக்கியமானதாகிறது, 184 00:11:13,549 --> 00:11:15,801 எதிர்தரப்பு வழக்கறிஞர் உன்னிடம் இந்த கேள்விகளையெல்லாம் கேட்பார். 185 00:11:15,801 --> 00:11:18,095 எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். 186 00:11:18,929 --> 00:11:20,597 எங்களுடன் ஒரு வழக்கறிஞர் இருக்க வேண்டாமா? 187 00:11:21,890 --> 00:11:23,100 அது உங்கள் விருப்பத்தை பொறுத்தது, 188 00:11:23,100 --> 00:11:25,978 ஆனால் நாம் ஏற்கனவே விவாதித்த தகவலை உறுதிப்படுத்துகிறேன். 189 00:11:28,897 --> 00:11:30,482 இது உன் அம்மா கொல்லப்பட்ட அன்று இரவு திரு. சாபிச் 190 00:11:30,482 --> 00:11:32,359 உன் அம்மாவின் வீட்டிற்குள் நுழைந்தபோது நீ எடுத்த புகைப்படம். 191 00:11:32,359 --> 00:11:35,279 அது ஜூன் 16, இரவு 9:49 மணி. அது சரிதானே? 192 00:11:35,279 --> 00:11:36,363 ஆம். 193 00:11:36,363 --> 00:11:38,323 மற்ற எல்லா புகைப்படங்களும் அதே இரவு எடுத்ததுதானா? 194 00:11:38,323 --> 00:11:39,241 ஆம். 195 00:11:39,241 --> 00:11:43,078 நீ ஏன் அவர் வீட்டைவிட்டு போகும் புகைப்படத்தை எடுக்கவில்லை? 196 00:11:43,078 --> 00:11:44,413 அவர் உள்ளே போனதும் நான் கிளம்பிவிட்டேன். 197 00:11:46,123 --> 00:11:47,124 நீ எதற்காக அங்கே போனாய்? 198 00:11:48,542 --> 00:11:49,877 சில நேரங்களில் அங்கே போவேன். 199 00:11:52,504 --> 00:11:53,505 எதற்காக? 200 00:11:54,006 --> 00:11:55,424 இவன் அதற்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டான். 201 00:11:55,424 --> 00:12:00,512 சரி. அது... நாங்கள்... உண்மையை வெளியே கொண்டுவர இது எங்களுக்கு மிகவும் முக்கியம், 202 00:12:00,512 --> 00:12:03,390 ஏனென்றால் அவர்களும் இதே கேள்விகள்தான் கேட்பார்கள், சரியா? எதிர்த்தரப்பு வழக்கறிஞர். 203 00:12:04,391 --> 00:12:05,684 அவர் என் அம்மா என்பதால். 204 00:12:05,684 --> 00:12:08,103 சில சமயங்களில் வீட்டைப் போய் பார்ப்பேன். 205 00:12:08,854 --> 00:12:11,064 வேறு யாராவது வீட்டிற்குள் நுழைவதைப் பார்த்தாயா? 206 00:12:11,940 --> 00:12:13,358 அன்று இரவு அவர் மட்டுமே அங்கே இருந்தார். 207 00:12:14,735 --> 00:12:18,113 திரு. சாபிச் வீட்டிற்குள் நுழைந்தபோது எப்படி இருந்தார்? 208 00:12:18,113 --> 00:12:19,573 அவருடைய நடத்தை எப்படி இருந்தது? 209 00:12:21,408 --> 00:12:22,451 எனக்குத் தெரியவில்லை. 210 00:12:22,451 --> 00:12:26,788 நீ அவரை சந்தித்தபோது, அவருடைய நடத்தை எப்படி இருந்தது? 211 00:12:27,623 --> 00:12:31,376 அந்த சந்திப்பின் போது, உன் அம்மாவைக் கொன்றதாக நீ அவர் மீது குற்றம் சாட்டியதாகச் சொன்னாய். 212 00:12:31,376 --> 00:12:32,461 அது சரிதானே? 213 00:12:32,461 --> 00:12:35,672 அதாவது, அவர் அதை மறுத்தார், ஆனால் அவர் பொய் சொன்னார். 214 00:12:35,672 --> 00:12:38,425 ஏன் அப்படிச் சொல்கிறாய்? அது உனக்கு எப்படித் தெரியும்? 215 00:12:39,218 --> 00:12:40,969 அதை அவருடைய கண்களில் பார்க்க முடிந்தது. 216 00:12:43,430 --> 00:12:47,309 அதோடு, ஒருமுறை, அவரைப் பார்த்து பயப்படுவதாக அம்மா சொன்னார். 217 00:12:48,227 --> 00:12:50,854 ஆனால் நீ செய்யவில்லை என்று நினைத்தேன்... உன் அம்மாவை எப்போது தொடர்புகொண்டாய்? 218 00:12:50,854 --> 00:12:55,067 மதிய உணவுக்கு என்னை சந்திக்கும்படி அவரை சம்மதிக்க வைத்தேன். 219 00:12:55,651 --> 00:12:57,903 அவர் மன அழுத்தத்தில் இருப்பது போல தோன்றியது, 220 00:12:57,903 --> 00:13:00,739 அதற்கு காரணம் நான்தான் என்று நினைத்து எனக்கு என் மீதே கோபம் வந்தது. 221 00:13:00,739 --> 00:13:02,658 பிறகு அவரிடம் என்ன பிரச்சினை என்று கேட்டேன், 222 00:13:02,658 --> 00:13:08,455 வேலை செய்யும் இடத்தில் ஒருவரைப் பார்த்து பயப்படுவதாக அவர் சொன்னார். 223 00:13:10,582 --> 00:13:12,584 - அவர் யாரென்று என்று சொன்னாரா? - இல்லை. 224 00:13:13,585 --> 00:13:16,672 அந்த நபருடன் சேர்ந்து வழக்குகளில் வேலை செய்வதாகவும், 225 00:13:17,965 --> 00:13:19,758 அதனால்தான் அவரை தவிர்க்க முடியவில்லை என்றும் சொன்னார். 226 00:13:33,772 --> 00:13:35,315 - ஹேய். - ஹாய். 227 00:13:35,983 --> 00:13:37,067 உங்களுக்கு என்ன வேண்டும்? 228 00:13:41,446 --> 00:13:42,447 நான் நினைக்கிறேன்... 229 00:13:42,990 --> 00:13:45,868 பெல்வெடெரே மார்டினி. ஆலிவ்களோ, ஜூஸோ வேண்டாம். 230 00:13:48,453 --> 00:13:50,080 - ஹாய். - ஹாய். 231 00:13:53,166 --> 00:13:55,043 உங்களைப் பற்றிதான் வாரம் முழுக்க பேசிக்கொண்டிருந்தேன். 232 00:13:57,045 --> 00:13:59,006 இல்லை, அது அப்படி சொல்லியிருக்கக் கூடாது. 233 00:13:59,006 --> 00:14:00,591 சரி. 234 00:14:00,591 --> 00:14:02,092 வேலைநேர மது, க்லிஃப்? 235 00:14:03,218 --> 00:14:04,428 முன்பு வேண்டாம் என்றேன், இப்போது வேண்டும். 236 00:14:06,471 --> 00:14:09,016 எனக்கு இந்த பார்டெண்டர் கைகள் இருக்கின்றன. 237 00:14:09,016 --> 00:14:10,976 எப்போதும் ஏதாவது இருந்துகொண்டே இருக்கும். 238 00:14:13,437 --> 00:14:14,605 விஷயம் எப்படி போகிறது? 239 00:14:15,606 --> 00:14:18,483 - பழைய கதைதான். - அப்படியா? சரி. நான் உங்களுடன் உட்காரலாமா? 240 00:14:19,902 --> 00:14:21,653 - கண்டிப்பாக, சரி. - அப்படியா? 241 00:14:23,322 --> 00:14:24,656 க்லிஃப்டன். 242 00:14:26,074 --> 00:14:27,910 - பார்பரா. - பார்பரா. 243 00:14:27,910 --> 00:14:29,620 அதிகாரப்பூர்வமாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. 244 00:14:32,080 --> 00:14:33,665 அது என்ன பொருள், அது கிரீமா? 245 00:14:33,665 --> 00:14:36,293 ஆம். இந்த பொருள். ஜெனீன் இதைச் செய்கிறாள். 246 00:14:37,211 --> 00:14:39,671 ஆம், இது கஞ்சாவுடன் கொக்கோ வெண்ணெய் கலந்தது. 247 00:14:39,671 --> 00:14:41,381 உங்கள் விரல்களை வாயில் வைக்காதீர்கள். 248 00:14:41,381 --> 00:14:42,758 - அதிக போதையாகிவிடும். - சரி. 249 00:14:42,758 --> 00:14:46,178 - எச்சரித்ததற்கு நன்றி. - கண்டிப்பாக. 250 00:14:47,888 --> 00:14:49,348 அது மிகவும் தாராளமானது. நன்றி. 251 00:14:49,348 --> 00:14:52,935 எனவே உன் டேட்டூக்களைப் பற்றி சொல். 252 00:14:53,727 --> 00:14:57,064 ஒருவரின் டேட்டூக்களைப் பற்றி கேட்பது மிகவும் நாடகத்தனமானது என்பதால் கேட்கிறேன். 253 00:14:57,064 --> 00:14:58,815 ஆம். எனக்குப் புரிகிறது. 254 00:14:59,483 --> 00:15:02,486 இது. நானும் ஒரு விதத்தில் கலைஞன்தான். 255 00:15:03,320 --> 00:15:07,199 முக்கியமாக, முப்பரிமான ஓவியம், ஆனால் நான் இதை என் இளமைக்கால முட்டாள்தன வயதில் வடிவமைத்தேன். 256 00:15:07,199 --> 00:15:08,742 இது ஈஜிங். 257 00:15:09,785 --> 00:15:10,911 அதைப் பற்றி தெரியுமா? 258 00:15:12,538 --> 00:15:14,164 எனக்கு ஜான் கேஜ், பிரையன் ஈனோ 259 00:15:14,915 --> 00:15:18,752 மற்றும் விஷயங்களின் சீரற்ற படைப்பு செயல்பாடு பற்றி தெரியும். 260 00:15:18,752 --> 00:15:19,920 சரி. 261 00:15:22,631 --> 00:15:25,717 எனக்கும் இளமைகால முட்டாள்தனம் மிகவும் பரிச்சயமானதுதான். 262 00:15:29,513 --> 00:15:30,848 - சியர்ஸ். - சியர்ஸ். 263 00:15:39,815 --> 00:15:40,858 ரிகோ. 264 00:15:40,858 --> 00:15:42,025 என்னிடம் என்ன இருக்கிறது என்று யூகி. 265 00:15:43,110 --> 00:15:45,696 பன்னி டேவிஸ் வழக்கில் இரண்டாவது மாதிரியில் குறிப்பிடத்தக்க தகவல்கள். 266 00:15:45,696 --> 00:15:48,031 என்ன? அதை எப்படி செய்தாய்? 267 00:15:48,031 --> 00:15:50,200 மொத்த தரவுத்தளத்திலும் ஏதும் பொருந்திப் போகவில்லை. 268 00:15:50,200 --> 00:15:53,495 ஆம். இந்த முட்டாள் அவன் டிஎன்ஏ மாதிரியை Ancestry.com தளத்திற்கு கொடுத்திருக்கிறான். 269 00:15:53,495 --> 00:15:54,621 பிரையன் ராட்ஸர். 270 00:15:55,581 --> 00:15:58,375 ராட்ஸர். விலாசம்? 271 00:16:04,339 --> 00:16:05,966 அவனைப் பற்றி நமக்கு ஏதாவது தெரியுமா? 272 00:16:05,966 --> 00:16:10,179 இறந்த விபச்சாரி சம்பந்தப்பட்ட ஒரு கொலை சம்பவ இடத்தில் அவன் விந்தணு மாதிரியை விட்டது 273 00:16:10,179 --> 00:16:11,638 தவிர வேறொன்றுமில்லை. 274 00:16:12,848 --> 00:16:15,559 கேள், இதைச் செய்ததற்காக உனக்கு நன்றி. 275 00:16:15,559 --> 00:16:17,394 நீ உன் வேலையை பணயம் வைக்கிறாய் என்று தெரியும். 276 00:16:17,895 --> 00:16:20,189 நான் அதை உனக்காக செய்யவில்லை. அதை கெரோலினுக்காக செய்கிறேன். 277 00:16:20,189 --> 00:16:22,482 ரஸ்டி, நீ அங்கே அமைதியாக இருக்க வேண்டும், சரியா? 278 00:16:22,983 --> 00:16:24,026 எதுவும் பேசாதே. 279 00:16:35,621 --> 00:16:36,955 - ஹலோ, மேடம். - ஹாய். 280 00:16:36,955 --> 00:16:39,249 தொந்தரவுக்கு மன்னிக்கவும். நாங்கள் சிகாகோ காவல்துறை. 281 00:16:39,249 --> 00:16:42,002 பிரையன் ராட்ஸரை பார்க்க வந்திருக்கிறோம். அவர் வீட்டில் இருக்கிறாரா? 282 00:16:43,086 --> 00:16:44,171 அன்பே! 283 00:16:45,923 --> 00:16:47,007 அவர் பேஸ்மென்டில் இருக்கிறார். 284 00:16:47,508 --> 00:16:49,927 நான் சென்று அவரை அழைத்து வருகிறேன், உள்ளே வருகிறீர்களா? 285 00:16:49,927 --> 00:16:51,011 கண்டிப்பாக. 286 00:16:52,346 --> 00:16:53,347 அன்பே. 287 00:17:00,437 --> 00:17:01,605 அன்பே? 288 00:17:01,605 --> 00:17:04,148 - ஆம். - போலீஸ் வந்திருக்கிறது. 289 00:17:05,400 --> 00:17:07,069 தயவுசெய்து, உட்காருங்கள். வந்துவிடுவார். 290 00:17:07,069 --> 00:17:08,945 - அருமை. நன்றி. - காபி? 291 00:17:08,945 --> 00:17:10,030 நிச்சயமாக. 292 00:17:27,589 --> 00:17:28,715 ஹேய். 293 00:17:29,424 --> 00:17:31,343 - ஹாய். - உங்களுக்கு என்ன வேண்டும்? 294 00:17:31,885 --> 00:17:34,888 இந்த பகுதியில் நடந்த சில சம்பவங்கள் பற்றி விசாரிக்கிறோம், 295 00:17:34,888 --> 00:17:36,849 ஜூன் 16, 2019. 296 00:17:37,724 --> 00:17:39,643 அன்று இரவு. நாங்கள் பொதுவாக விசாரிக்கிறோம். 297 00:17:40,477 --> 00:17:42,271 என்ன சம்பவம் பற்றி விசாரிக்கிறீர்கள்? 298 00:17:42,271 --> 00:17:43,856 சில அத்துமீறி நுழைதல் பற்றி. 299 00:17:43,856 --> 00:17:47,234 இந்தத் தெருவில் இல்லை. சில மைல்கள் கிழக்கே, ராபர்ட்சனில். 300 00:17:47,234 --> 00:17:49,778 அது ஒரு வியாழன் இரவு. ரொம்ப நாட்கள் ஆனதால் யோசிப்பது கஷ்டம்தான், ஆனால்... 301 00:17:49,778 --> 00:17:53,448 நான் யோசிக்க வேண்டியதில்லை. எனக்கு அந்த தெருவை தெரியாது. 302 00:17:53,448 --> 00:17:57,411 அது இரவில் நடந்திருந்தால், நான் இரவுகளில் வேலை செய்கிறேன். 303 00:17:59,121 --> 00:18:00,122 எங்கே வேலை செய்கிறீர்கள்? 304 00:18:01,915 --> 00:18:03,458 ஹேய், உங்கள் பேட்ஜைப் பார்க்கலாமா? 305 00:18:03,458 --> 00:18:04,543 நிச்சயமாக. 306 00:18:06,712 --> 00:18:07,713 அது 307 00:18:07,713 --> 00:18:10,591 - ஒரு பாலியல் தொழிலாளி கொல்லப்பட்டார், அதனால்... - இதோ. 308 00:18:11,091 --> 00:18:13,177 ஆம். இப்போது வேண்டாம், அன்பே, சரியா? 309 00:18:14,178 --> 00:18:15,387 இப்போது வேண்டாம் என்றேன். 310 00:18:16,305 --> 00:18:17,347 சரி. 311 00:18:23,145 --> 00:18:24,897 இது சரியாக எதைப் பற்றியது? 312 00:18:25,606 --> 00:18:26,690 நான் சொன்னேனே. 313 00:18:27,191 --> 00:18:28,650 எங்கே வேலை செய்கிறீர்கள், திரு. ராட்ஸர்? 314 00:18:29,276 --> 00:18:30,569 கேள்விக்கு பதில் சொன்னீர்களா? 315 00:18:30,569 --> 00:18:31,904 நான் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. 316 00:18:31,904 --> 00:18:34,448 சீக்கிரமோ அல்லது பிறகோ, கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். 317 00:18:35,782 --> 00:18:38,493 அதாவது, நீங்கள் ஒரு கட்டத்தில் பேச வேண்டியிருக்கும். 318 00:18:42,706 --> 00:18:44,541 நமக்கு எங்கோ பரிச்சயம் உண்டா? 319 00:18:49,546 --> 00:18:50,714 இதோ என் அட்டை. 320 00:18:51,798 --> 00:18:53,342 நீங்கள் பேசத் தயாரானதும் அழையுங்கள். 321 00:18:53,342 --> 00:18:55,093 இல்லை என்றால்? 322 00:18:55,093 --> 00:18:56,720 நீங்கள் பேச வேண்டியிருக்கும். 323 00:18:57,763 --> 00:18:59,223 ஏன் என்று உங்களுக்குத் தெரியும். 324 00:19:01,141 --> 00:19:02,726 அல்லது உங்கள் மனைவியிடம் கேட்கலாம். 325 00:19:03,727 --> 00:19:05,521 - ஹேய், லாரா. - ஹேய். 326 00:19:05,521 --> 00:19:06,813 என்ன? 327 00:19:06,813 --> 00:19:08,565 - அது பரவாயில்லை, அன்பே. - என்ன? 328 00:19:11,777 --> 00:19:14,112 என்ன நடக்கிறது? உங்களுக்கு ஏதாவது வேண்டுமா? 329 00:19:15,572 --> 00:19:17,324 காபிக்கு நன்றி சொல்ல நினைத்தேன். 330 00:19:18,200 --> 00:19:20,953 பரவாயில்லை. எல்லாம் சரிதானே? 331 00:19:20,953 --> 00:19:22,204 ஆம். 332 00:19:24,289 --> 00:19:25,290 சரி. 333 00:19:33,465 --> 00:19:34,842 இங்கிருந்து வெளியே போ. 334 00:19:36,969 --> 00:19:38,971 அவனைக் கோபப்படுத்தாதே என்று சொன்னேன். 335 00:19:38,971 --> 00:19:41,014 அவனிடம் ஒரு கேள்விதான் கேட்டேன். 336 00:19:42,391 --> 00:19:44,434 உன்னை நம்பவே முடியவில்லை. 337 00:19:59,950 --> 00:20:01,243 ஏன் இப்படி பயப்படுவது போல இருக்கிறாய்? 338 00:20:10,419 --> 00:20:11,837 ஏன் இப்படி பயப்படுவது போல இருக்கிறாய்? 339 00:20:54,796 --> 00:20:57,132 B, என்ன செய்கிறாய்? 340 00:20:57,716 --> 00:20:59,510 ரிஸ்க் எடுக்க மாட்டேன். 341 00:20:59,510 --> 00:21:01,595 அவன் அவள் வீட்டு பக்கம் போயிருக்கிறான். 342 00:21:02,429 --> 00:21:05,307 அவள் தோட்டத்தில் நடக்கவில்லை, அவள் ஜன்னல் வழியே பார்க்கவில்லை, 343 00:21:05,307 --> 00:21:09,520 அவள் வீட்டு கால் மிதியில் நிற்கவில்லை... 344 00:21:09,520 --> 00:21:11,730 - ஹேய். - ...கதவு மணியை அடிக்கவில்லை என்று யார் சொல்வது? 345 00:21:11,730 --> 00:21:13,524 வா. 346 00:21:14,441 --> 00:21:16,860 கைல் சந்தேகத்துக்குரிய நபர் என்று நான் நினைக்கவில்லை. 347 00:21:18,904 --> 00:21:20,239 ரஸ்டி. 348 00:21:28,622 --> 00:21:31,708 சில நேரங்களில் நீ நம் மகன் கறுப்பினத்தவன் என்பதை மறந்துவிடுகிறாய். 349 00:21:48,934 --> 00:21:52,813 உன் அப்பா அவர் வீட்டிற்குள் போவதை பார்க்க எப்படி இருந்தது? 350 00:21:54,982 --> 00:21:56,233 அதைப் பற்றி பேச விரும்புகிறாயா? 351 00:21:58,402 --> 00:21:59,403 இல்லை. 352 00:22:01,822 --> 00:22:04,324 - ஏதாவது தோன்றியிருக்கும். - ஆனால் அவர்களைப் பற்றி பேச விரும்பவில்லை. 353 00:22:07,703 --> 00:22:08,704 கைல். 354 00:22:14,042 --> 00:22:16,962 அவர் அவள் வீட்டிற்குப் போவதை நான் பார்த்ததில் இருந்து நிறைய மோசமானவை நடந்திருக்கின்றன. 355 00:22:23,093 --> 00:22:24,219 விளையாடுகிறீர்களா? 356 00:22:30,392 --> 00:22:31,768 இது அபத்தம். 357 00:22:32,561 --> 00:22:37,149 எந்த முன்னேற்றமும் இல்லை, பெரும்பாலும் முதல் அமர்விலேயே அது நடக்காது. 358 00:22:37,149 --> 00:22:39,860 ஆரம்ப அமர்வுகள் அதிகம் நம்பிக்கையை ஏற்படுத்துவது பற்றியதாக இருக்கலாம், 359 00:22:39,860 --> 00:22:43,280 நான் அதிலும் தோற்றுவிட்டேன் என்று நினைக்கிறேன். 360 00:22:44,615 --> 00:22:46,325 பாருங்கள்... 361 00:22:47,242 --> 00:22:51,914 பெரிய பிரச்சினைகளைப் பற்றி பேசும்போது, மீண்டும் சில எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டும். 362 00:22:53,040 --> 00:22:54,625 சரி. என்ன சொல்கிறீர்கள்? 363 00:22:54,625 --> 00:22:58,253 நீ, ரஸ்டி, ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கும் விதம் 364 00:22:58,253 --> 00:23:03,800 மிகவும் சிக்கலானதாகவும், கஷ்டமானதாகவும் ஆகிவிட்டது, இப்போது அதற்கிடையில் கைல்... 365 00:23:03,800 --> 00:23:06,386 இது உண்மையில் ஒருவருக்கு ஒரு சிகிச்சையாளராக இருக்க வேண்டும். 366 00:23:06,386 --> 00:23:09,139 என்ன? எங்களிடம் அவ்வளவு பணம் இருப்பது போல. 367 00:23:09,723 --> 00:23:11,683 நான் உங்களை மட்டும்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 368 00:23:13,602 --> 00:23:14,603 எனக்குத் தெரியும். 369 00:23:16,355 --> 00:23:17,564 நீங்கள்... 370 00:23:21,735 --> 00:23:25,030 நீங்கள் ரஸ்டியை மன்னித்துவிட்டு, அவரோடு திருமண உறவில் இருக்க விரும்புவது 371 00:23:25,030 --> 00:23:26,615 சாத்தியம் என்று நினைக்கிறேன். 372 00:23:26,615 --> 00:23:28,575 இதுவும் சாத்தியம் என்று நினைக்கிறேன்... 373 00:23:28,575 --> 00:23:32,329 நான் இன்னும் அதிகமாக சந்தேகப்படுவது... உங்கள் உணர்வுகள்... 374 00:23:32,329 --> 00:23:35,040 கொந்தளிப்பில் இருக்கலாம். 375 00:23:35,040 --> 00:23:38,961 நீங்கள் தற்காப்பு மனநிலையில் இருக்கிறீர்கள், உங்கள் பிள்ளைகளுக்காக உங்கள் திருமண உறவைக் காப்பாற்ற 376 00:23:39,461 --> 00:23:43,799 தெரிந்தோ தெரியாமலோ தேவை என்று நினைப்பதை செய்ய முயற்சிக்கிறீர்கள். 377 00:23:43,799 --> 00:23:46,760 நீங்கள் எப்போதும் குடும்பத்தைப் பாதுகாப்பதில் முனைப்போடு இருக்கிறீர்கள். 378 00:23:47,427 --> 00:23:51,849 ஆனால், பிள்ளைகள் பெரியவர்களாகிவிட்டாலோ கல்லூரிக்குச் போய்விட்டாலோ 379 00:23:51,849 --> 00:23:55,978 இந்த மன்னிக்க வேண்டிய கட்டாயம் 380 00:23:56,562 --> 00:23:58,897 வேறு ஏதாவதாக மாறுவது சாத்தியம் என்று நினைக்கிறேன், 381 00:24:00,148 --> 00:24:04,236 கோபம் அல்லது வெறுப்பு போன்றவையாக கூட. 382 00:24:05,487 --> 00:24:07,322 அது ஏற்கனவே நடந்துகொண்டிருக்கலாம். 383 00:24:10,075 --> 00:24:15,205 பாருங்கள், உங்கள் கணவர் வேறொரு பெண்ணைக் காதலித்திருக்கிறார். 384 00:24:15,205 --> 00:24:17,833 அவளைக் கொன்றதற்காக இப்போது அவர் விசாரணையை எதிர்கொள்கிறார். 385 00:24:19,084 --> 00:24:20,878 உங்களுக்கு தனியாக ஒரு சிகிச்சையாளர் தேவை. 386 00:24:29,595 --> 00:24:32,306 எனவே, யூஜினியா முன்பு என் அலுவலகத்திற்கு வந்தாள். 387 00:24:32,306 --> 00:24:34,433 அவள் என்ன சொன்னாள்? ஏன்? என்ன சொன்னாள்? 388 00:24:34,433 --> 00:24:35,350 ஹேய். 389 00:24:35,350 --> 00:24:37,769 நீ அவளை சாட்சியாக்குவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, சரியா? 390 00:24:37,769 --> 00:24:40,189 அது... அவள் உன் சாட்சியாக இருக்கப் போகிறாள் என்றால், 391 00:24:40,189 --> 00:24:41,940 அவள் உனக்கு ஆதரவாக இருப்பது உதவியாக இருக்கும். 392 00:24:41,940 --> 00:24:43,025 அவள் என்ன சொன்னாள் என்று சொல். 393 00:24:44,151 --> 00:24:45,444 அவள் சொன்னாள்... 394 00:24:45,986 --> 00:24:47,654 நீ ஒரு அயோக்கியன் என்று சொன்னாள், சரியா? 395 00:24:47,654 --> 00:24:49,323 ஆனால் நமக்கு தெரியும் நீ கொஞ்சம்... 396 00:24:49,323 --> 00:24:52,784 சரி. கேள், நான் கோபமாக இருக்கும்போது சிறந்த வழக்கறிஞராக இருக்கிறேன். 397 00:24:52,784 --> 00:24:53,702 அது உனக்கே தெரியும். 398 00:24:53,702 --> 00:24:58,081 ஆம், ஆனால் உன் வழக்கை முன்வைக்க விரோதத்தோடு இருக்கும் சாட்சிகளை நம்பியிருக்கிறாய் என்றால்... 399 00:24:58,081 --> 00:25:01,502 ரஸ்டிக்கு எந்த வழியிலெல்லாம் முடியுமோ அந்த வழியிலெல்லாம் யூஜினியா உதவுவாள். 400 00:25:01,502 --> 00:25:05,088 அவள் அவனை கொஞ்சம் காதலிக்கிறாள் என்று நினைக்கிறேன். 401 00:25:05,088 --> 00:25:07,299 நான் அவளிடம் உறுதிப்படுத்த சொல்ல வேண்டும். 402 00:25:07,883 --> 00:25:11,970 இல்லை. நீ உறுதிப்படுத்த வேண்டியது ஒரு வலுவான ஆதாரத்தை, சரியா? 403 00:25:11,970 --> 00:25:14,139 பேரை கெடுப்பது அதைச் செய்யப் போவதில்லை. 404 00:25:14,139 --> 00:25:16,308 வலுவான ஆதாரத்தை தருகிறேன். கவலைப்படாதே. 405 00:25:17,100 --> 00:25:19,853 நான் கவலைப்படுகிறேன். 406 00:25:20,521 --> 00:25:22,439 ரேமண்ட் சந்திக்க கேட்டிருக்கிறார். 407 00:25:23,649 --> 00:25:24,650 ஏன்? எதைப் பற்றி? 408 00:25:24,650 --> 00:25:28,862 சரி, ஒரு வேண்டுகோளுக்கான ஒரு வாய்ப்பு இருப்பதாக அவர் நினைப்பதால்தான் என்று தோன்றுகிறது. 409 00:25:28,862 --> 00:25:32,407 அவர் அப்படி நினைத்தால், நம் குடுமி அவரிடம் இருப்பதாக அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும். 410 00:25:33,158 --> 00:25:34,952 என் குடுமி அவரிடம் இல்லை, டாமி. 411 00:25:36,119 --> 00:25:37,120 உன் குடுமி இருக்கிறதா? 412 00:25:39,623 --> 00:25:40,874 எந்த வேண்டுகோளுக்கும் வாய்ப்பே இல்லை. 413 00:25:45,379 --> 00:25:48,340 இல்லை. அந்தப் பகுதியில் வேறு பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்களா, அவர்களுக்கு ராட்ஸரை 414 00:25:48,340 --> 00:25:50,300 அடையாளம் தெரிகிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும். 415 00:25:50,300 --> 00:25:52,803 அதாவது, அவனுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. அதில் உறுதியாக இருக்கிறேன். 416 00:25:52,803 --> 00:25:54,388 - நிச்சயமாக. - நீங்கள் தயாரா? 417 00:25:54,388 --> 00:25:56,640 - ஆம். பார், திரும்ப அழைக்கிறேன். - நிச்சயமாக. 418 00:25:59,685 --> 00:26:01,812 அந்த இரவு நடந்ததை மீண்டும் செல்ல முடியுமா? 419 00:26:01,812 --> 00:26:04,398 அன்று இரவு அலுவலகத்தில் இருந்ததாகச் சொன்னீர்கள். 420 00:26:07,568 --> 00:26:08,652 ஆம். 421 00:26:08,652 --> 00:26:10,863 எங்களில் சிலர் ரேமண்டுக்கான பிரச்சாரத்தில் கூடுதல் நேரம் வேலை செய்தோம், 422 00:26:10,863 --> 00:26:13,991 ரேமண்டுக்கான பிரச்சாரத்தில் வெளிப்படையாக வேலை செய்தோம். 423 00:26:15,576 --> 00:26:16,994 வெளிப்படையாகவா? 424 00:26:18,287 --> 00:26:19,663 நான் பெரும்பாலும் மெஸ்சேஜ் அனுப்பிக்கொண்டிருந்தேன். 425 00:26:21,790 --> 00:26:26,336 மெஸ்சேஜுகளுக்கு எந்த பதிலும் வரவில்லை... 426 00:26:28,505 --> 00:26:30,549 நான் அதை நன்றாகக் கையாளவில்லை. 427 00:26:31,508 --> 00:26:36,805 அவள் என்னை தவிர்த்துக் கொண்டிருந்தாள், அதனால் எனக்கு எங்காவது போக வேண்டியிருந்தது. 428 00:26:41,768 --> 00:26:43,979 எத்தனை மணிக்கு அலுவலகத்தை விட்டு கிளம்பினீர்கள்? 429 00:26:43,979 --> 00:26:45,647 8:30-க்குப் பிறகு கொஞ்ச நேரத்தில். 430 00:26:45,647 --> 00:26:49,193 நான் சில நேரங்களில் வெளியே சாப்பிடுவேன், ஏனென்றால் நான்... 431 00:26:50,652 --> 00:26:52,571 நான் வீட்டிற்குப் போகும் நிலையில் இல்லை. 432 00:27:03,415 --> 00:27:06,251 எனக்கு பாரில் நடந்தது அதிகம் நினைவில் இல்லை. 433 00:27:12,216 --> 00:27:14,927 ஒரு சில பானங்கள் குடித்தேன் என்று நினைக்கிறேன். 434 00:27:16,512 --> 00:27:18,096 ஒருவேளை இன்னொன்றை ஆர்டர் செய்திருக்கலாம். தெரியவில்லை. 435 00:27:26,647 --> 00:27:28,232 பிறகு அவள் மெஸ்சேஜ் அனுப்பினாள், 436 00:27:28,982 --> 00:27:30,192 {\an8}நான் உற்சாகமடைந்தேன். 437 00:27:30,192 --> 00:27:31,276 {\an8}கடவுளே, ரஸ்டி, வீட்டுக்கு வா. 438 00:27:32,653 --> 00:27:37,699 எனவே அவரிடமிருந்து இரவு 9:24 மணிக்கு மெஸ்சேஜ் வருகிறது. 439 00:27:37,699 --> 00:27:42,788 மைக்கேல் கால்டுவெல்லின் புகைப்படங்கள் நீங்கள் 9:49-க்கு வந்ததை காட்டுகின்றன. 440 00:27:45,374 --> 00:27:46,583 என்ன நடந்தது? 441 00:27:49,711 --> 00:27:53,173 அதாவது, இதைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு விவரம் வேண்டும் என்று... 442 00:27:56,593 --> 00:27:57,803 ஹேய். 443 00:28:00,430 --> 00:28:01,932 என்ன நடந்தது என்றால்... 444 00:28:04,226 --> 00:28:05,561 - என்ன? - நான்... 445 00:28:06,937 --> 00:28:07,938 என்ன நடந்தது? 446 00:28:07,938 --> 00:28:09,481 நீ ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறாய் என்று தெரியவில்லை. 447 00:28:10,524 --> 00:28:11,984 என்ன நடந்தது? 448 00:28:13,318 --> 00:28:16,154 உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன். 449 00:28:23,412 --> 00:28:24,788 பெரும்பாலும், வாக்குவாதம் செய்தோம். 450 00:28:25,956 --> 00:28:26,957 வாக்குவாதம் செய்தீர்களா? 451 00:28:26,957 --> 00:28:29,334 நான் மீண்டும் ஒன்று சேர விரும்பினேன், அவளுக்குப் பிடிக்கவில்லை, 452 00:28:29,334 --> 00:28:31,420 - அதாவது, அவ்வளவுதான். - நிறுத்து 453 00:28:31,420 --> 00:28:33,380 - ஹேய். - போய்விடு! 454 00:28:37,926 --> 00:28:43,015 ஃபோனின் மெட்டாடேட்டா சரியாக 11 மணிக்கு வீட்டிற்கு வந்ததாக சொல்கிறது. 455 00:28:44,183 --> 00:28:50,439 அவர் வீட்டிலிருந்து உங்கள் வீட்டிற்கு 20 நிமிட பயணம், அதாவது 10:40 மணிக்கு புறப்பட்டீர்கள். 456 00:28:51,815 --> 00:28:54,318 நீங்கள் 51 நிமிடங்கள் அவர் வீட்டில் இருந்தீர்கள். 457 00:28:56,695 --> 00:28:57,821 நீண்ட வாக்குவாதம். 458 00:29:04,661 --> 00:29:06,079 இங்கிருந்து வெளியே போ. 459 00:29:08,916 --> 00:29:11,919 அதன் பிறகு உடனே கிளம்பிவிட்டீர்களா? 460 00:29:14,671 --> 00:29:16,089 பிறகு முத்தமிட்டு விடைபெற்றோம். 461 00:29:17,925 --> 00:29:18,759 நீங்கள் முத்தமிட்டீர்களா? 462 00:29:20,719 --> 00:29:22,012 ஆம், பிறகு வீட்டிற்கு சென்றேன். 463 00:29:23,805 --> 00:29:29,353 அவள் என்னை முத்தமிட்டபோது, அது எனக்கு நம்பிக்கையைத் தரும் என்பது அவளுக்குத் தெரியும். 464 00:29:38,070 --> 00:29:39,905 அதாவது, அந்த முத்தம் என்னை காருக்கு போக வைத்தது. 465 00:29:39,905 --> 00:29:41,657 அது என்னை வீட்டிற்குப் போக வைத்தது. 466 00:29:41,657 --> 00:29:45,744 ஆனால் நான் வீட்டிற்குப் போனதும், நான் உணர்ந்தேன்... 467 00:29:45,744 --> 00:29:48,580 அந்த நம்பிக்கைதான் குரூரமாக மாறியது என்று. 468 00:29:50,624 --> 00:29:52,292 அவள் என்ன செய்கிறாள் என்று அவளுக்குத் தெரியும். 469 00:29:55,128 --> 00:29:56,880 அவள் குரூரமானவள். 470 00:30:06,557 --> 00:30:08,892 எனவே, இதுவரை உன் அபிப்பிராயம் என்ன? 471 00:30:09,476 --> 00:30:12,980 சரி, வழக்கு விஷயத்தில், நாம் இருக்கும் இடம் எனக்குப் பிடித்திருக்கிறது. 472 00:30:13,730 --> 00:30:15,607 அவர்கள் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க மிகவும் சிரமப்படுவார்கள். 473 00:30:15,607 --> 00:30:18,527 அதே நேரத்தில், 51 நிமிடங்கள். 474 00:30:18,527 --> 00:30:21,196 அவரைக் கட்டவும், தடயங்களை அழிக்கவும் அது போதும் என்று வாதிடுவார்கள். 475 00:30:21,196 --> 00:30:24,867 அல்லது உடலுறவுகொள்ள, வாதிட, சண்டையிட, மாற்றங்கள் செய்ய. 476 00:30:26,118 --> 00:30:27,411 ரஸ்டி எப்படி? 477 00:30:27,953 --> 00:30:29,663 அவனை கூண்டில் ஏற்றுவது பற்றி எண்ணங்கள்? 478 00:30:30,247 --> 00:30:33,166 விசாரணை கூண்டுக்கு பக்கத்தில் கூட அந்த மனிதரை விட முடியாது. 479 00:30:36,211 --> 00:30:37,212 ஒப்புக்கொள்கிறேன். 480 00:30:38,672 --> 00:30:40,257 ராட்ஸரைப் பற்றி என்ன தெரிந்தது? 481 00:30:40,257 --> 00:30:41,633 ஏதாவது இருக்க வேண்டும். 482 00:30:41,633 --> 00:30:43,051 அவன் இருந்த இடத்தை யாராவது சொன்னார்களா? 483 00:30:43,051 --> 00:30:44,595 சரி, அதற்கு முந்தைய கைதுகள் இல்லையா? 484 00:30:45,804 --> 00:30:47,764 இல்லினாய்ஸ் மாநிலத்தில் சிகாகோ போலீஸை பயன்படுத்துகிறோமா? 485 00:30:47,764 --> 00:30:50,976 எதுவும் கிடைக்கவில்லை. சரி. அவன் ரெனால்ட்ஸ் உடன் இருந்தான், இல்லையா? 486 00:30:50,976 --> 00:30:53,312 அங்கே அவன் ரெனால்ட்ஸ் உடன், பன்னி டேவிஸுடன் இருந்தான். 487 00:30:53,312 --> 00:30:55,564 நாம் அதை நிரூபிக்க வேண்டும். 488 00:30:55,564 --> 00:30:57,441 ஆம், அப்படியே... தொடர்ந்து விசாரி. 489 00:30:57,441 --> 00:30:58,567 இன்னும் தீவிரமாக. 490 00:31:00,235 --> 00:31:01,069 ச்சே. 491 00:31:08,243 --> 00:31:09,411 ஹேய், மோல்டோ. 492 00:31:22,341 --> 00:31:23,842 சரி. நன்றி. 493 00:31:58,794 --> 00:31:59,962 என்ன? 494 00:31:59,962 --> 00:32:01,046 ஹேய்... 495 00:32:04,341 --> 00:32:08,220 அன்றிரவு நாம் நிறைய பேசிவிட்டோம் என்று எனக்குத் தெரியும். ம்... 496 00:32:09,930 --> 00:32:14,184 நான் உன்னைப் புரிந்துகொண்டேன் என்று நீ தெரிந்துகொள்ள வேண்டும்... உன்னைப் புரிந்துகொண்டேன். 497 00:32:15,727 --> 00:32:19,606 ரஸ்டி, நான் வீட்டிற்கு வந்ததும் இதைப் பற்றி பேசலாமா? 498 00:32:19,606 --> 00:32:22,943 நான் சந்தைக்கு போகப் போகிறேன். 499 00:32:25,779 --> 00:32:27,823 - ஆம், நிச்சயமாக. - சரியா? 500 00:32:30,951 --> 00:32:32,077 நான் உன்னைக் காதலிக்கிறேன். 501 00:32:35,247 --> 00:32:36,248 உன்னைக் காதலிக்கிறேன். 502 00:32:41,420 --> 00:32:45,841 பகல் குடிப்பழக்கத்தின் கவர்ச்சியை நான் நிஜமாகவே புரிந்துகொள்ளத் தொடங்குகிறேன். 503 00:32:45,841 --> 00:32:47,009 எப்போதாவது இரவில் குடிப்பீர்களா? 504 00:32:47,009 --> 00:32:49,469 எனக்கான பொறுப்புகள் இருக்கின்றன. 505 00:32:50,220 --> 00:32:51,221 என்ன மாதிரியானவை? 506 00:32:52,097 --> 00:32:54,600 அம்மா. மனைவி. 507 00:32:54,600 --> 00:32:57,269 நீ அநேகமாக கேட்க விரும்பாத எல்லா அபத்தங்களும். 508 00:32:57,811 --> 00:32:59,021 ஓ, அப்படியில்லை. 509 00:32:59,521 --> 00:33:02,399 ஆம், இப்போது நீங்களாக இருப்பது எப்படி இருக்கும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். 510 00:33:03,066 --> 00:33:04,193 நேர்மையாகச் சொன்னால்... 511 00:33:06,195 --> 00:33:07,279 எனக்குத் தெரியவில்லை. 512 00:33:12,159 --> 00:33:19,082 சரி, நீங்கள் எப்போதாவது பேச விரும்பினால், நான் இங்கே இல்லை என்றால்... 513 00:33:26,006 --> 00:33:27,049 நன்றி. 514 00:34:20,060 --> 00:34:21,061 - ஹேய், கிறிஸ். - ஹேய், ரேமண்ட். 515 00:34:21,061 --> 00:34:22,312 - ஹெலென். - ஹேய். 516 00:34:23,938 --> 00:34:25,190 யூஜினியா. 517 00:34:25,940 --> 00:34:29,862 அடக் கடவுளே. ஹாய். ரேமண்ட். கடவுளே. எப்படி இருக்கிறீர்கள்? 518 00:34:29,862 --> 00:34:31,196 நன்றாக இருக்கிறேன். நீ? 519 00:34:32,197 --> 00:34:33,447 நான் சாட்சி பட்டியலில் இருக்கிறேன். 520 00:34:33,447 --> 00:34:35,284 - நான் அதைப் பார்த்தேன். - ஆம். 521 00:34:35,284 --> 00:34:38,036 அவர்கள் இருவரையும் பற்றி எனக்குத் தெரியும். 522 00:34:39,036 --> 00:34:40,496 எனக்கு அதுபற்றி கவலையில்லை. 523 00:34:40,496 --> 00:34:42,040 நாங்கள் உறவை மறுக்கவில்லை. 524 00:34:42,040 --> 00:34:43,375 சரி. 525 00:34:43,375 --> 00:34:44,918 எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? 526 00:34:44,918 --> 00:34:49,965 ரஸ்டியிடம் சொல்லுங்கள், அவனுக்கு எதிராக சாட்சியம் அளிக்கும் எண்ணம் எனக்கு இல்லை, சரியா? 527 00:34:49,965 --> 00:34:52,134 - நான் சொல்கிறேன். - நன்றி. 528 00:34:56,471 --> 00:34:58,140 - ஹாய், நண்பர்களே. - ரேமண்ட். 529 00:34:58,140 --> 00:35:00,058 எப்பொழுதும் போல உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. 530 00:35:01,935 --> 00:35:02,769 ஆம். 531 00:35:04,146 --> 00:35:05,647 சரி, நேராக விஷயத்துக்கு வருவோம். 532 00:35:06,231 --> 00:35:09,943 உங்கள் இருவரிடமும் மிகவும் பலவீனமான வழக்கு இருக்கிறது, அது உங்களுக்கே தெரியும். 533 00:35:10,736 --> 00:35:12,446 அதாவது, நோக்கம் நிறைவேறாமல் இல்லை. 534 00:35:12,446 --> 00:35:14,156 அவன் அங்கே இருந்தான், கடைசியாக அவளுடன் பார்த்திருக்கிறார்கள். 535 00:35:14,156 --> 00:35:16,325 அது ஒன்றுதான், ஆனால் அதில் சாரம் இல்லை. 536 00:35:16,325 --> 00:35:17,242 நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. 537 00:35:17,242 --> 00:35:21,622 ரஸ்டியின் காரில் அவளுடைய ஒரு துளி ரத்தம் கூட இல்லை, அவளது டிஎன்ஏ எதுவும் இல்லை. 538 00:35:21,622 --> 00:35:23,957 அவள் வீட்டில் எங்கே பார்த்தாலும் இரத்தமும் குடலும், 539 00:35:23,957 --> 00:35:26,793 அவனுடைய காரில் ஒரு நுண்ணிய துளி கூட இல்லை. 540 00:35:26,793 --> 00:35:28,712 - அதை சுத்தம் செய்திருக்கிறான். - அல்லது அவனுடைய உடையில். 541 00:35:28,712 --> 00:35:30,297 - அதையும் சுத்தம் செய்திருக்கிறான். - கொலை ஆயுதம் இல்லை. 542 00:35:30,297 --> 00:35:31,215 அதை அப்புறப்படுத்தியிருக்கிறான். 543 00:35:31,215 --> 00:35:33,300 அதை வைத்துக்கொண்டு குற்றத்தை நிரூபிக்க முடியாது, தெரியுமா? 544 00:35:33,884 --> 00:35:37,262 அப்படிக் கட்டப்பட்டிருப்பது, அது திட்டமிட்டு செய்யப்பட்டதை சொல்கிறது. 545 00:35:37,846 --> 00:35:40,599 இரும்பு கம்பியால் மரணம்? உணர்ச்சி வேகத்தில் செய்யப்பட்டதை சொல்கிறது. 546 00:35:40,599 --> 00:35:43,185 ஆரம்பத்திலிருந்தே, உங்கள் வழக்கு குழப்பமாக இருக்கிறது. 547 00:35:43,185 --> 00:35:44,520 எங்களுக்கு சவால் பிடிக்கும். 548 00:35:44,520 --> 00:35:46,188 தீவிரம் குறைந்த குற்றச்சாட்டை 549 00:35:46,188 --> 00:35:48,857 கொண்டுவரும்போதே ஒரு காரணம் இருப்பது எனக்குத் தெரியும், 550 00:35:48,857 --> 00:35:50,317 நானும் அதைத்தான் செய்திருப்பேன், 551 00:35:50,317 --> 00:35:53,737 அதன்மூலம் ஏதாவது ஒன்றுக்காக விசாரணை நடத்தலாம். ஏனென்றால் குற்றம் நிரூபிக்கப்படாமல் போவது... 552 00:35:53,737 --> 00:35:55,197 உங்கள் நோக்கம் என்ன? 553 00:35:55,197 --> 00:35:58,867 யாரோ பேசக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதை என்னால் பார்க்க முடிகிறது. 554 00:36:01,578 --> 00:36:03,956 - புத்திசாலித்தனம். - சரி, அருமை. தயவுசெய்து... 555 00:36:03,956 --> 00:36:08,126 ரஸ்டி தன் வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்கும் அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியாது, 556 00:36:08,126 --> 00:36:10,212 அதோடு நிரபராதி என்று விடுவிக்கப்பட்டு, 557 00:36:10,212 --> 00:36:13,674 உன் அரசியல் மூலதனம் எல்லாம் வீணாய் போகும் அளவுக்கு நீயும் ரிஸ்க் எடுக்க முடியாது. 558 00:36:13,674 --> 00:36:16,343 நாங்கள் குற்றச்சாட்டை ஏற்கிறோம், மூன்று ஆண்டுகள். 559 00:36:19,680 --> 00:36:24,059 ரே, நிஜமாகவே நீங்கள் குற்றச்சாட்டின் பேரில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று நினைத்தீர்களா? 560 00:36:24,059 --> 00:36:25,894 நிகோ, நீ மிகவும் அவசரப்பட்டது உனக்கே தெரியும். 561 00:36:25,894 --> 00:36:28,397 டாமி, அவன் ஒரு சந்தேகத்துக்குரிய நபருக்காக ஏங்குகிறான். 562 00:36:28,397 --> 00:36:31,316 அது ஒருவேளை ரஸ்டியாக இருக்கலாம் என்ற எண்ணம்... 563 00:36:31,316 --> 00:36:33,151 அது சரியா? நாசமாய் போங்கள். 564 00:36:33,151 --> 00:36:36,697 இங்கே உட்கார்ந்திருக்கும் உன் பெரிய பிரச்சினையைப் பற்றி பேசலாம். 565 00:36:36,697 --> 00:36:39,950 எனக்கு எதிராக ஒரு திறமையற்றவனால் கட்டுப்படுத்தப்படும் 566 00:36:39,950 --> 00:36:44,872 ஒரு மோசமான, சூழ்நிலையை சார்ந்த வழக்கு உங்களிடம் இருக்கிறது. 567 00:36:44,872 --> 00:36:46,540 நீ முட்டாள் இல்லை, நிகோ. 568 00:36:46,540 --> 00:36:48,417 நான் உனக்கு குற்ற நிரூபணத்தை தருகிறேன். 569 00:36:48,417 --> 00:36:50,711 நீதிபதி லிட்டில் உடன், 570 00:36:50,711 --> 00:36:54,631 நான் குற்றவாளி இல்லை என்று நிரூபிக்க ஒரு மிகவும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. 571 00:36:54,631 --> 00:36:57,134 அது ஒருவனுடைய அரசியலுக்கான சாவு மணி. 572 00:36:57,968 --> 00:37:00,137 அதிலிருந்து தப்பிக்க நான் உனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன். 573 00:37:04,975 --> 00:37:07,436 - இது என்ன? - படித்துப் பாருங்கள். அதைப் பாருங்கள். 574 00:37:19,072 --> 00:37:20,657 நான் ஏன் இதை இப்போதுதான் பார்க்கிறேன்? 575 00:37:22,034 --> 00:37:23,702 எங்களுக்கே அது இப்போதுதான் கிடைத்தது. 576 00:37:41,303 --> 00:37:43,764 நாம் அது மாதிரி உடலுறவு கொண்டதில்லை. 577 00:37:44,264 --> 00:37:46,600 சரி, நீண்ட காலமாக இல்லை, எப்படியும். 578 00:37:50,020 --> 00:37:52,189 அவளுடன் நீ கொண்ட உடலுறவு அப்படியானதா? 579 00:37:56,485 --> 00:37:57,486 இல்லை. 580 00:38:00,656 --> 00:38:01,865 அவள் நீ இல்லை. 581 00:38:04,076 --> 00:38:05,077 அவள் நீ இல்லை. 582 00:38:08,580 --> 00:38:11,500 புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது என்று நான் நினைப்பது... 583 00:38:14,461 --> 00:38:16,380 உன்னை நீயே கேட்டுக்கொண்டாயா... 584 00:38:18,382 --> 00:38:20,551 நீ எதை இழக்கத் தயாராக இருந்தாய்? 585 00:38:27,099 --> 00:38:29,643 உணர்வு ரீதியாக நாம் மிகவும் விலகியிருந்தோம், நீயும் நானும். 586 00:38:30,143 --> 00:38:33,230 அந்த நேரத்தில், நம்மால் பேசிக்கொள்ளக் கூட முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது. 587 00:38:35,232 --> 00:38:37,693 ஆனால் அவள் என் மனதுக்குள் உற்சாகத்தை ஏற்படுத்தினாள், தெரியுமா? 588 00:38:37,693 --> 00:38:38,777 ஏதோ... 589 00:38:40,153 --> 00:38:41,822 நான் இழந்துவிட்டதாக நினைத்த ஒன்றை. 590 00:38:46,535 --> 00:38:49,621 நான் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீ சொன்னபோது... 591 00:38:49,621 --> 00:38:51,790 B, நான் அதை மனதார சொன்னதாக நினைக்கவில்லை... 592 00:38:51,790 --> 00:38:54,418 ரஸ்டி, நீ தவறாக சொன்னதாக நினைக்கவில்லை. 593 00:38:55,627 --> 00:38:57,671 நாம் விலகிச் செல்ல நாமே அனுமதித்தோம் என்று... 594 00:39:01,425 --> 00:39:02,843 நினைக்கிறேன். 595 00:39:05,262 --> 00:39:10,517 இப்போது நாம் கொண்ட உடலுறவு கூட, நாம் எதையோ நிரூபிக்க முயற்சிப்பது போல இருந்தது. 596 00:39:10,517 --> 00:39:15,606 நம்மிடம் இருந்தது இன்னும் இருக்கிறது. 597 00:39:18,984 --> 00:39:19,985 அப்படியா? 598 00:39:27,367 --> 00:39:28,577 ரேமண்ட். 599 00:39:30,621 --> 00:39:31,705 நான் இதை எடுக்கிறேன். 600 00:39:35,542 --> 00:39:36,376 ஹேய். 601 00:39:37,878 --> 00:39:39,463 - ரஸ்டி. - ஆம். 602 00:39:41,924 --> 00:39:43,300 நம் வழக்கு தவறான திசையில் போகிறது. 603 00:39:46,637 --> 00:39:49,348 கெரோலினின் விரல் நகங்களுக்கு அடியில் உன் தோல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 604 00:39:50,140 --> 00:39:52,017 என்ன? அது... பொறுங்கள். அதற்கு வாய்ப்பே இல்லை. 605 00:39:52,017 --> 00:39:54,394 அது அறிக்கையில் இருக்கிறது. அதைப் பற்றி இப்போதுதான் தெரியவந்தது. 606 00:39:54,394 --> 00:39:57,606 இல்லை. அது... நான்... ரே, அவள் என்னைக் கீறியதே இல்லை. 607 00:39:57,606 --> 00:39:59,900 அது... அது ஒரு அப்பட்டமான பொய். 608 00:39:59,900 --> 00:40:01,860 டிஎன்ஏ டிஎன்ஏதான், ரஸ்டி. 609 00:40:01,860 --> 00:40:04,321 இல்லை, அது பொய். நான்... அடக் கடவுளே. 610 00:40:06,031 --> 00:40:07,741 அவர்கள் இதைச் செய்கிறார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. 611 00:40:07,741 --> 00:40:09,034 யார்? 612 00:40:09,034 --> 00:40:12,496 மோல்டோ, டிலே, குமகை, அவர்கள் எல்லோருமே. 613 00:40:12,496 --> 00:40:13,789 - அட. - என்ன சொல்கிறீர்கள்? 614 00:40:13,789 --> 00:40:15,457 நான்... அவள் என்னை கீறியதே இல்லை. 615 00:40:15,457 --> 00:40:18,335 அது திட்டமிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அவர்களிடம் வழக்கு இல்லை. 616 00:40:18,335 --> 00:40:21,588 அவர்களிடம் எந்த வழக்கும் இல்லை, எனவே என்னை சிக்கவைக்க முயற்சிக்கிறார்கள். 617 00:40:21,588 --> 00:40:23,006 அப்பா! 618 00:40:23,006 --> 00:40:24,842 வா! திற! நீ உள்ளே இருப்பது எனக்குத் தெரியும்! 619 00:40:24,842 --> 00:40:26,802 - ச்சே. என்ன? - இதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். 620 00:40:26,802 --> 00:40:27,886 - அப்பா! - இல்லை, நான்... 621 00:40:27,886 --> 00:40:29,930 - என்ன? என்ன நடக்கிறது? - வாசலில் யாரோ இருக்கிறார்கள்! 622 00:40:29,930 --> 00:40:32,015 ரேமண்ட், பொறுங்கள். என்ன பிரச்சினை? 623 00:40:32,015 --> 00:40:33,851 - எனக்குத் தெரியாது. - ஹேய், அமைதியாக இரு. 624 00:40:33,851 --> 00:40:35,477 - நான் டிவி பார்த்துக்கொண்டிருந்தேன்... - சரி. 625 00:40:35,477 --> 00:40:36,895 செல்லம், அமைதியாயிரு. பரவாயில்லை. 626 00:40:36,895 --> 00:40:39,356 ஹேய்! என் கதவைத் தட்டுவதை நிறுத்து! 627 00:40:39,356 --> 00:40:41,149 - யார் அது? - எனக்குத் தெரியாது! 628 00:40:41,149 --> 00:40:42,484 ரஸ்டி. ஜேடன்! 629 00:40:42,484 --> 00:40:44,570 - குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறாய்! - அப்பா, யார் அது? 630 00:40:44,570 --> 00:40:46,321 - நிறுத்து! நிறுத்து! - நான் போலீஸை அழைக்கப் போகிறேன். 631 00:40:46,321 --> 00:40:48,657 இல்லை! பார்பரா, போலீஸை அழைக்காதே. என்னை யோசிக்க விடு. 632 00:40:48,657 --> 00:40:49,783 இந்தக் கதவைத் திற. 633 00:40:49,783 --> 00:40:51,660 - ஜேடன், கதவை விட்டு விலகு! - விலகு! 634 00:40:51,660 --> 00:40:53,203 - கதவைத் திற! - பொறு... 635 00:40:53,203 --> 00:40:54,830 - ரஸ்டி. - திரு. ராட்ஸர்! நான் சொல்வதைக் கேள். 636 00:40:54,830 --> 00:40:56,874 - நீ என் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துகிறாய்... - நான்தான் உனக்கு வேண்டும். 637 00:40:56,874 --> 00:40:59,126 - என் வீட்டை விட்டு விலகு. - ...நான் உன் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துகிறேன்! 638 00:40:59,126 --> 00:41:01,420 - செல்லம், இங்கே வா. செல்லம். - திரு. ராட்ஸர்! 639 00:41:01,420 --> 00:41:04,214 - நான் சொல்வதைக் கேள்... - ரஸ்டி. ஹலோ? 640 00:41:05,507 --> 00:41:07,885 இன்னொரு முறை! கடவுளின் மேல் ஆணை! 641 00:41:07,885 --> 00:41:10,596 - ரஸ்டி! - அப்பா! 642 00:41:10,596 --> 00:41:12,014 - ரஸ்டி, நிறுத்து! - போதும்! என்னைப் பார்! 643 00:41:12,014 --> 00:41:15,100 - தயவுசெய்து! அப்பா. - ரஸ்டி! 644 00:41:28,780 --> 00:41:30,741 ஸ்காட் டூரோ எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 645 00:42:51,780 --> 00:42:53,782 வசனத் தமிழாக்கம் அருண்குமார்