1 00:00:29,238 --> 00:00:30,572 லாஸ் ஏஞ்சலஸ் புலம்பெயர்ந்தவர்களுக்கான நகரம். 2 00:00:31,532 --> 00:00:33,534 சுமாஷ்கள் முதல் பாரசீகர்கள், வியாட்நாமியர்கள், 3 00:00:33,617 --> 00:00:35,869 இவர்களுக்கு இடைப்பட்ட மற்ற எல்லோரும் வரை. 4 00:00:36,620 --> 00:00:37,746 இங்கேதான் அவர்கள் வருகிறார்கள். 5 00:00:40,916 --> 00:00:44,586 "எனக்குத் தெரிந்த நகரங்களிலேயே லாஸ் ஏஞ்சலஸ் தான் வருங்காலத்தைப் பற்றிய உணர்வை வலுவாகத் தருகிறது. 6 00:00:44,670 --> 00:00:46,463 மோசமான எதிர்காலத்தையும் கூட" என்று 7 00:00:47,005 --> 00:00:48,382 ஒருமுறை ஒரு எழுத்தாளர் சொன்னார். 8 00:00:48,465 --> 00:00:50,008 எனக்காகக் காத்திரு, சரியா? 9 00:00:50,884 --> 00:00:52,970 - உன்னிடம் சொன்னதாக நினைத்தேன்… - எல்லோரும் நாசமாய்ப் போங்கள்! 10 00:00:53,053 --> 00:00:55,222 - ஆனால், அதைப் பற்றி எனக்குத் தெரியாது. - ஹேய். 11 00:00:55,305 --> 00:00:57,015 நானும் புலம்பெயர்ந்தவன்தான் என்று நினைக்கிறேன். 12 00:00:57,599 --> 00:00:59,434 லாஸ் ஏஞ்சலஸில் நிறைய நல்லவை இருக்கின்றன என்று நினைக்கிறேன். 13 00:01:01,687 --> 00:01:02,938 அதோ இருக்கிறான். 14 00:01:03,021 --> 00:01:04,022 இதைச் செய்வோம். 15 00:01:07,943 --> 00:01:12,406 இருந்தாலும் நான் ஒப்புக்கொள்கிறேன். இது ஆபத்தான நகரம்தான், அதில் சந்தேகமே இல்லை. 16 00:02:29,399 --> 00:02:34,696 இப்போது வைகறை நேரத்து ஊதா அந்தி நேரம் 17 00:02:35,489 --> 00:02:40,452 என் இதயமெனும் புல்வெளிகளில் மெல்ல நுழைகிறது 18 00:02:42,246 --> 00:02:47,918 மேல் வானத்தில் அந்த சிறிய நட்சத்திரங்கள் தோன்றுகின்றன 19 00:02:48,502 --> 00:02:53,465 நாம் பிரிந்து இருப்பதை எப்போதும் எனக்கு நினைவூட்டுகிறது 20 00:02:56,802 --> 00:03:01,640 நீ பாதையில் அலைந்து திரிந்து தூரமாக போய்விட்டாய் 21 00:03:02,391 --> 00:03:03,392 அருமையான நீச்சல் குளம். 22 00:03:07,813 --> 00:03:10,399 ஹேய். எனவே உன் கார் மெக்கானிக் என்ன சொன்னான்? 23 00:03:10,482 --> 00:03:12,860 கேளுங்கள், பெரும்பாலான நேரங்களில், அந்த மாதிரி ஒரு கார் வரும்போது… 24 00:03:13,694 --> 00:03:17,155 மெக்கானிக் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, என்ன செலவாகுமோ அதனுடன் ஒரு சைபரை சேர்த்து சொல்வான். 25 00:03:18,365 --> 00:03:20,325 ஆனால், ஷுகர், இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாள், 26 00:03:20,409 --> 00:03:21,493 ஏனென்றால் என் ஆள் பில்லி… 27 00:03:22,536 --> 00:03:24,121 அதாவது, அவன் நேர்மையான காண்டால்ஃப் போன்றவன். 28 00:03:24,204 --> 00:03:25,664 நீங்கள் ஆயில் மாற்றப் போகிறீர்கள் என்று நினைத்தேன். 29 00:03:25,747 --> 00:03:29,168 அப்படி ஒரு காரை ஆறு மாதங்களுக்கு மேல் ஓட்டாமல் விட்டுவிட்டு, 30 00:03:29,251 --> 00:03:31,587 வெறும் ஆயில் மாற்றுவதால் மட்டும் அது ஓடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. 31 00:03:31,670 --> 00:03:33,380 சரியா? ஆனால் அது இப்போது நன்றாக ஓடுகிறது. கச்சிதமாக இருக்கிறது. 32 00:03:36,758 --> 00:03:38,010 சரி. 33 00:03:42,389 --> 00:03:43,390 பிடியுங்கள். 34 00:03:48,562 --> 00:03:50,063 எனவே இங்கேதான் தங்கியிருக்கிறீர்களா, ம்? 35 00:03:50,147 --> 00:03:51,440 இங்கேதான் வசிக்கிறேன். 36 00:03:52,524 --> 00:03:53,650 இங்கேதான் வசிக்கிறீர்களா? 37 00:03:55,652 --> 00:03:56,737 அவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பார்கள். 38 00:03:57,613 --> 00:03:59,323 எனக்குத் தெரிந்தவரை, இந்தத் துறையின் வழக்கமான கட்டணங்கள்தான். 39 00:04:00,699 --> 00:04:01,992 அருமையான துறை. 40 00:04:02,910 --> 00:04:03,911 மோசமானது இல்லை. 41 00:04:11,168 --> 00:04:13,212 ஹேய். உனக்கு ஒரு வேலை வேண்டுமா, வால்? 42 00:04:14,338 --> 00:04:17,257 இரண்டு மணிநேரத்தில் ஒரு இடத்தில் இருக்க வேண்டும், ஆனால் கண்டிப்பாக. என்ன வேலை? 43 00:04:17,341 --> 00:04:18,884 இல்லை. ஒரு வேலை இருக்கிறது. உண்மையான வேலை. 44 00:04:20,511 --> 00:04:21,678 என்னுடன் வேலை செய்வது. 45 00:04:22,221 --> 00:04:24,556 தெரியுமா? நிரந்தரமான வேலை. 46 00:04:27,100 --> 00:04:30,604 இல்லை, சீரியஸாக. இப்போதுதான் சந்தித்தோம், ஆனால் நீ ஒழுக்கத்துடன் இருக்கிறாய், நிறைய தெரிகிறது. 47 00:04:31,146 --> 00:04:33,148 நேர்மையாகச் சொன்னால், என்னால்… 48 00:04:33,899 --> 00:04:35,275 எனக்கு உதவி தேவைப்படுகிறது. 49 00:04:38,737 --> 00:04:39,738 சரி. 50 00:04:40,781 --> 00:04:42,950 இல்லை, ஆனால் நான் யூகிக்க விரும்பவில்லை. 51 00:04:43,033 --> 00:04:44,034 ஒருவேளை நீ… 52 00:04:45,869 --> 00:04:46,870 இல்லை, அதாவது நான்… 53 00:04:46,954 --> 00:04:50,499 நான் எப்போதும் புதிய விஷயங்களை, புதிய வேலை வாய்ப்புகளைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். 54 00:04:51,416 --> 00:04:53,085 - எனவே அதைப் பற்றி யோசிப்பாயா? - கண்டிப்பாக. 55 00:04:53,877 --> 00:04:55,462 சரி, அருமை. நான் அதைப் பற்றி யோசிக்கிறேன். 56 00:04:55,546 --> 00:04:56,755 நல்லது. அதைப் பற்றி யோசி. 57 00:04:57,381 --> 00:04:58,799 - நல்லது. - நல்லது. 58 00:04:58,882 --> 00:05:00,133 - நல்லது. - நல்லது. 59 00:05:00,968 --> 00:05:01,969 சரி. 60 00:05:19,361 --> 00:05:21,905 டேனி! கைகளை மேலே தூக்கு, டேனி. தூக்கு. 61 00:05:23,657 --> 00:05:24,658 உன் கால்களை நகர்த்து. 62 00:05:26,994 --> 00:05:28,245 அப்படித்தான். நகரு. 63 00:05:31,123 --> 00:05:32,457 இதோ. 64 00:05:33,750 --> 00:05:34,960 அப்படித்தான். அடி. 65 00:05:37,462 --> 00:05:39,131 உன் கால்களை நகர்த்து. 66 00:05:46,972 --> 00:05:48,765 அதை ஸ்வீட் சயின்ஸ் என்று அழைக்கிறார்கள். 67 00:05:49,349 --> 00:05:51,727 அது கொடூரமானது, ஆனால் அதை விளையாட்டு என்று அழைக்கிறார்கள். 68 00:05:52,436 --> 00:05:53,478 டேனி. 69 00:05:55,272 --> 00:05:56,273 டேனி! 70 00:05:56,815 --> 00:05:58,358 நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும், 71 00:05:58,442 --> 00:06:01,278 நீங்கள் அதை எப்படி அழைக்க விரும்பினாலும், அதிலிருந்து பார்வையைத் திருப்ப முடியாது. 72 00:06:01,361 --> 00:06:03,280 அவன் மருத்துவமனையிலிருந்து போதைப்பொருளைத் திருடுகிறானா? 73 00:06:04,031 --> 00:06:05,490 அவனை கடைசியாகப் பார்த்த இடம் அதுதான். 74 00:06:06,366 --> 00:06:09,119 கடவுளே. அவன் எப்போதும் இப்படி இல்லை. 75 00:06:09,203 --> 00:06:11,663 - அதாவது, இப்போதெல்லாம் அவன், ஆனால்… - நீ விளக்க வேண்டியதில்லை. 76 00:06:11,747 --> 00:06:14,416 நான் எதையும் விளக்கவில்லை, உள்ளதை உள்ளபடியே சொல்கிறேன். 77 00:06:15,501 --> 00:06:16,502 நிச்சயமாக. 78 00:06:18,879 --> 00:06:21,798 அதோடு போலீஸ் அவனைத் தேடவில்லையா? 79 00:06:22,508 --> 00:06:23,675 எனக்குத் தெரிந்தவரை. 80 00:06:25,260 --> 00:06:26,261 - இதோ வருகிறேன். - நினைவிருக்கட்டும், 81 00:06:26,345 --> 00:06:28,096 நீ அங்கே இருக்கும்போது, உன் கால்களை நகர்த்திக்கொண்டே இரு. 82 00:06:28,180 --> 00:06:29,515 ஹேய், டாம். என்ன தகவல் இருக்கிறது? 83 00:06:30,474 --> 00:06:32,726 கைகளை மேலே தூக்கு. தைரியமாக இரு. கைகளை இறக்காதே. 84 00:06:32,809 --> 00:06:34,019 என்ன விஷயம், பயிற்சியாளரே? 85 00:06:34,102 --> 00:06:35,562 - ஏஜென்டா? - இருந்திருக்கலாம். 86 00:06:36,271 --> 00:06:38,232 இல்லை, ஜி விஷயத்தில் உதவி செய்யும் ஒருவர். 87 00:06:38,315 --> 00:06:40,359 - ஜி. உன் வினோதமான சகோதரன் ஜியா? - ஆம். 88 00:06:40,442 --> 00:06:41,527 டஃப் டஃப் 89 00:06:41,610 --> 00:06:43,403 கேள், அன்று இரவு நன்றாக சண்டைப் போட்டாய். 90 00:06:43,487 --> 00:06:47,491 எடி பானேஃபோ உன்னைவிட இரண்டு பிரிவுகள் அதிகம். 91 00:06:47,574 --> 00:06:50,619 இப்போது, அவன் ஒரு கல் பன்றி போல மெதுவாக நகர்கிறான், ஆனால் லேசுபட்டவன் இல்லை. 92 00:06:51,787 --> 00:06:53,080 நன்றி, டெட்டி. 93 00:06:53,163 --> 00:06:54,164 அவன் மெதுவாக செயல்பட்டான். 94 00:06:54,248 --> 00:06:55,958 அவனுடைய வயிற்றுப் பகுதியைத் தாக்கி கால்களை நகர விடாமல் தடுத்து, 95 00:06:56,041 --> 00:06:57,876 பிறகு திடீரென முகத்தைப் பார்த்து குத்த வேண்டும். 96 00:06:58,544 --> 00:07:00,379 உனக்கு பெரிய வாய்ப்புகள் வர இருக்கின்றன, டேனி. 97 00:07:00,462 --> 00:07:02,172 - கவனமாக இரு. - சரி. 98 00:07:02,256 --> 00:07:04,132 - சரி, நான் அங்கே வரும்போது மெசேஜ் செய்கிறேன். - சரி. 99 00:07:04,842 --> 00:07:06,218 சரி, பை. 100 00:07:07,386 --> 00:07:08,720 - மன்னித்துவிடு. - எனவே நமக்குப் பிரச்சினையில்லைதானே? 101 00:07:08,804 --> 00:07:11,807 நீங்கள் எனக்கு… தொடர்ந்து தகவலைச் சொல்வீர்களா? 102 00:07:11,890 --> 00:07:15,769 நிச்சயமாக, ஆம். நான் போக வேண்டும். என்னை வர அனுமதித்ததற்கு நன்றி. 103 00:07:15,853 --> 00:07:16,854 கண்டிப்பாக. 104 00:07:16,937 --> 00:07:19,606 யோ, அந்த அழைப்பு. அது ஜி பற்றியதா? 105 00:07:21,400 --> 00:07:23,026 நான் உனக்குத் தெரியப்படுத்துகிறேன். 106 00:07:23,110 --> 00:07:24,111 சரி. 107 00:07:32,578 --> 00:07:34,204 எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. 108 00:07:36,290 --> 00:07:38,083 சில நேரங்களில் நீங்கள் நினைப்பதைவிட சீக்கிரமாக. 109 00:07:41,128 --> 00:07:44,882 ஆண்ட்ரோமெடாவின் பக்கவாட்டு சூரியன்கள் முதல், பலோமாவில் இருக்கும் டெட்டாமார்ஃப்கள் வரை. 110 00:07:47,801 --> 00:07:48,886 எல்லாமே அழியக்கூடியவைதான். 111 00:07:48,969 --> 00:07:51,138 ட்ரைவ்-இன் தியேட்டர் 112 00:07:53,098 --> 00:07:54,099 ஆனால் இன்னமும்… 113 00:07:57,144 --> 00:07:59,229 ஜி இங்கே இருக்கக் கூடாது என்று நம்புகிறேன். 114 00:08:05,235 --> 00:08:06,737 அவர்கள் அவனைக் கொண்டு வருகிறார்கள். 115 00:08:10,616 --> 00:08:12,451 - டாம் ஃப்ளைபெர்க். - ஓ… 116 00:08:12,534 --> 00:08:15,537 சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய மனைவி ஒஹாயில் மலையேற்றத்தில் காணாமல் போனபோது உதவினேன். 117 00:08:15,621 --> 00:08:17,623 இன்ஸ்டாகிராமில் எப்படி பதிவிடுவது என்று உனக்குத் தெரியுமா? 118 00:08:17,706 --> 00:08:20,000 அவர் டாமிடமிருந்து மட்டும்தான் தொலைந்துப் போனது பிறகு தெரிய வந்தது. 119 00:08:21,919 --> 00:08:23,587 ஹேய், ஃப்ளைபெர்க், உள்ளே வாருங்கள். 120 00:08:23,670 --> 00:08:24,671 போகலாம். 121 00:08:28,675 --> 00:08:30,511 இருபதுகளின் தொடக்கத்தில் இருக்கும் ஆசிய ஆண். 122 00:08:36,642 --> 00:08:37,643 நல்ல ஒற்றுமை இருக்கிறது. 123 00:08:39,061 --> 00:08:40,812 சரி. நல்ல செய்தி. 124 00:08:40,895 --> 00:08:41,938 அவனுக்கு இல்லை. 125 00:08:43,106 --> 00:08:45,526 ஒரு ரௌடி கும்பல் கொலை செய்ததாக சொன்னீர்களா? இவனைப் பார்த்தால் அவர்களின் ஒருவனாகத் தெரியவில்லை. 126 00:08:45,609 --> 00:08:48,695 பொதுமக்களில் ஒருவனாக இருக்கலாம். தவறான இடம், தவறான நேரம் போன்ற விஷயமாக இருக்கலாம். 127 00:08:49,655 --> 00:08:51,281 - அவை இவனுடைய பொருட்களா? - ஆம். 128 00:08:51,365 --> 00:08:54,826 பணப்பை, புகைப்படங்கள், சில பில்கள், ஃபோன் அட்டை. ஆனால் புகைப்பட அடையாள அட்டை இல்லை. 129 00:08:54,910 --> 00:08:55,911 - நான் பார்க்கலாமா? - ஆம். 130 00:09:01,959 --> 00:09:03,252 வேர்ல்ட் ஆக்சஸ் 131 00:09:03,335 --> 00:09:07,172 இவன் புலம்பெயர்ந்தவன். சமீப காலத்தில். ஒருவேளை இன்னமும் ஆவணங்களுக்காக காத்திருக்கலாம். 132 00:09:07,840 --> 00:09:10,634 இந்த ஃபோன் அட்டையின் விவரங்களைத் தேடினால், இவனுடைய பெற்றோர்களைக் கண்டுபிடிக்கலாம். 133 00:09:10,717 --> 00:09:12,970 அவன் திரும்பத் திரும்ப அழைத்த ஒரு எண் அதில் இருக்கும். 134 00:09:13,595 --> 00:09:14,596 நியாயமான விஷயம். 135 00:09:14,680 --> 00:09:15,889 நல்ல விஷயம் என்னவென்றால், 136 00:09:15,973 --> 00:09:18,725 "வரலாற்றின் வளைவு நீதியை நோக்கிதான் சாயும்" என்ற வகையில், 137 00:09:18,809 --> 00:09:19,935 கேட்டி, சுட்டவன் எங்கே? 138 00:09:20,018 --> 00:09:21,019 இங்கே. 139 00:09:22,312 --> 00:09:24,231 இங்கே மார்டி கிரா கொண்டாட்டம் நடந்தது போல இருக்கிறது. 140 00:09:25,357 --> 00:09:27,901 லாஸ் ஏஞ்சலஸ் காவல்துறை இரண்டு பிளாக்குகள் தள்ளி இவனைக் கைது செய்திருக்கிறது. 141 00:09:35,659 --> 00:09:36,702 "ஈஸி4"? 142 00:09:36,785 --> 00:09:39,204 கும்பலின் டாட்டூவாக இருக்கலாம். நான் விசாரிக்கிறேன். 143 00:09:42,249 --> 00:09:44,293 ஒரு ரௌடி பொதுமக்களில் ஒருவனை கொன்றிருக்கிறானா? 144 00:09:45,002 --> 00:09:46,003 இது நடப்பதுதான். 145 00:09:47,171 --> 00:09:49,464 தொடக்கம், திறமையை நிரூபிப்பது மாதிரியானது. 146 00:09:50,299 --> 00:09:53,260 அல்லது வெறும் முட்டாளாக இருக்கலாம், தவறான நபரை சுட்டிருக்கலாம். 147 00:09:55,679 --> 00:09:56,680 ஈஸி4 148 00:09:59,224 --> 00:10:00,517 பார்க்கலாமா? 149 00:10:00,601 --> 00:10:01,602 பாருங்கள். 150 00:10:10,527 --> 00:10:14,990 இவன்… இறந்திருந்தாலும் சில நேரங்களில் இது வேலை செய்யும். 151 00:10:17,409 --> 00:10:18,911 அதை எப்படி கற்றுக்கொண்டோம் என்று கேட்காதே. 152 00:10:24,583 --> 00:10:26,126 நீங்கள் சொல்வது சரிதான். 153 00:10:26,210 --> 00:10:27,377 எதைப் பற்றி? 154 00:10:27,461 --> 00:10:28,670 அவர்கள் தவறான நபரைச் சுட்டிருக்கிறார்கள். 155 00:10:30,005 --> 00:10:33,258 ஜி தானாக போய் சிக்கிய பிரச்சினை எதுவாக இருந்தாலும், அது அவனே ஏற்படுத்திக் கொண்டதாகத்தான் 156 00:10:33,342 --> 00:10:35,093 இருக்கும் என்று நான் இன்னும் நம்பிக்கொண்டிருந்தேன். 157 00:10:36,011 --> 00:10:38,055 ஆனால் நிஜமாகவே அவனை யாரோ தேடுகிறார்கள். 158 00:10:38,138 --> 00:10:39,181 சீரியஸான யாரோ. 159 00:10:42,768 --> 00:10:43,936 அவன் பயப்படுவது சரிதான். 160 00:10:45,062 --> 00:10:46,188 செயின்ட் ஆண்டனி நகர மருத்துவமனை 161 00:10:46,271 --> 00:10:48,649 இருந்தாலும், அடுத்து எங்கே தேட வேண்டும் என்ற யோசனையை அது கொடுத்தது. 162 00:10:49,816 --> 00:10:50,984 அல்லது மீண்டும் எங்கே தேடுவது என்று. 163 00:10:56,740 --> 00:10:57,741 ச்சே! 164 00:11:00,661 --> 00:11:01,662 ஹேய். 165 00:11:02,162 --> 00:11:03,288 நீங்கள் நலமா? 166 00:11:03,372 --> 00:11:06,959 நன்றாக இருக்கிறேன். இப்போதுதான் வேலையிலிருந்து நீக்கப்பட்டேன், எனவே, மோசமான நாளாக இருக்கிறது. 167 00:11:07,876 --> 00:11:09,586 வருந்துகிறேன். அது ரொம்ப மோசம். 168 00:11:10,337 --> 00:11:11,588 - நான் உதவுகிறேன். - நன்றி. 169 00:11:12,589 --> 00:11:13,674 நன்றி. 170 00:11:15,676 --> 00:11:17,177 - நன்றி. சரி. - சரி. சரி. 171 00:11:19,263 --> 00:11:20,597 ஹேய். வாழ்த்துகள். 172 00:11:20,681 --> 00:11:21,682 நன்றி. 173 00:11:23,392 --> 00:11:27,980 ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தம் இந்த மாதத்தின் சிறந்த பணியாளர் 174 00:11:29,857 --> 00:11:31,024 ப்ளேயின். 175 00:11:31,108 --> 00:11:32,109 பாதுகாவலர் 176 00:11:32,192 --> 00:11:35,237 "காசாபிளாங்காவில் டிசம்பர் 1941 என்றால், அப்போது நியூயார்க்கில் என்ன நேரம்?" 177 00:11:37,322 --> 00:11:38,323 "என் கைகடிகாரம் நின்றுவிட்டது." 178 00:11:39,408 --> 00:11:40,409 - படத்தைப் பார்த்தீர்களா? - ஆம்! 179 00:11:40,492 --> 00:11:42,160 - என்ன நினைக்கிறீர்கள்? - அற்புதமான படம். 180 00:11:42,244 --> 00:11:43,245 நல்லது. 181 00:11:44,037 --> 00:11:45,747 ஒரு உதவி கேட்க வேண்டும். 182 00:11:51,086 --> 00:11:52,087 தீவிபத்துத்தின்போது வெளியேறும் வழி 183 00:11:52,754 --> 00:11:53,755 அது அவன்தான். 184 00:11:54,840 --> 00:11:56,008 ம். 185 00:11:56,091 --> 00:11:57,384 - அவன்தான் நீங்கள் தேடிக்கொண்டிருப்பவனா? - ஆம். 186 00:11:57,467 --> 00:11:58,927 நான்காவது தளத்திலிருந்து வெளியேறுகிறான். 187 00:11:59,011 --> 00:12:00,470 படிக்கட்டுகளில் கேமராக்கள் இருக்கின்றனவா? 188 00:12:00,554 --> 00:12:01,555 இல்லை. 189 00:12:01,638 --> 00:12:04,016 சரி, இந்தப் படிக்கட்டுகள் வழியாக வெளியேறும் அந்த இடத்தைக் காட்ட முடியுமா? 190 00:12:04,099 --> 00:12:05,100 சரி. 191 00:12:06,685 --> 00:12:07,686 படிக்கட்டு 1 192 00:12:16,069 --> 00:12:17,237 அவன் எங்கே போனான்? 193 00:12:17,988 --> 00:12:22,326 அதாவது, ஒன்பது, 10 நிமிடங்கள் ஆகிவிட்டன, அவன் இன்னும்… 194 00:12:23,911 --> 00:12:24,912 அங்கிருக்கிறான். 195 00:12:28,373 --> 00:12:30,459 படிக்கட்டுகள் வழியாக கீழே வர அவனுக்கு ஏன் இவ்வளவு நேரம் ஆனது? 196 00:12:31,001 --> 00:12:32,753 அவன் வேறொரு தளத்திற்குப் போயிருக்க வேண்டும். 197 00:12:34,880 --> 00:12:36,590 - கேமராக்களைப் பார்க்கிறீர்களா? - சரி. 198 00:12:38,175 --> 00:12:39,510 நீங்கள் சொன்னது சரிதான். இதோ இருக்கிறான். 199 00:12:41,428 --> 00:12:43,722 ஐந்தாவது தளத்தின் படிக்கட்டு வழியாக வெளியேறுகிறான். 200 00:12:47,893 --> 00:12:49,603 சில நிமிடங்களுக்குப் பிறகு இங்கே இருக்கிறான். 201 00:12:49,686 --> 00:12:50,896 வ்வோ, நிறுத்துங்கள். பின்னால் போங்கள். 202 00:12:52,397 --> 00:12:54,900 சரி, முன்னால் போங்கள், மெதுவாக. மெதுவாக, நிறுத்துங்கள். 203 00:12:56,568 --> 00:12:57,569 ஐந்தாவது தளம் 204 00:13:00,447 --> 00:13:01,698 ஏதோ அவனைப் பயமுறுத்தியிருக்கிறது. 205 00:13:01,782 --> 00:13:02,783 ஆம். 206 00:13:05,869 --> 00:13:09,790 அவன் லிஃப்ட் அல்லது செவிலியர் நிலையத்துக்கு வரவில்லை, எனவே 207 00:13:09,873 --> 00:13:15,629 அந்த சில நிமிடங்களுக்கு எங்கே போயிருந்தாலும் அது ஹாலோடு இணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். 208 00:13:16,255 --> 00:13:17,548 ஐந்தாவது மாடி ஹால். 209 00:13:40,195 --> 00:13:43,657 "ஹெசூஸ் அலஹான்ட்ரோ ஹக்கேஸ், 22 வயது. 210 00:13:44,741 --> 00:13:46,493 ஏப்ரல் 27 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டான்." 211 00:13:46,577 --> 00:13:48,161 ஜி இங்கே வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு. 212 00:13:49,079 --> 00:13:51,164 "நோயாளி பல துப்பாக்கிச்சூடுக் காயங்களுடன் கொண்டுவரப்பட்டார். 213 00:13:51,248 --> 00:13:54,751 பல இரத்தமாற்றங்கள். துளையிடப்பட்ட நுரையீரல் காரணமாக இண்டுபேஷன். 214 00:13:54,835 --> 00:13:56,545 அவசர மண்ணீரல் அறுவை சிகிச்சை." 215 00:14:05,679 --> 00:14:06,680 பாவப்பட்ட பையன். 216 00:14:07,514 --> 00:14:08,515 அவன் உயிர் பிழைக்கவில்லை. 217 00:14:13,812 --> 00:14:15,314 நீ என்ன செய்து கொண்டிருந்தாய், ஜி? 218 00:14:42,758 --> 00:14:44,718 இறந்த மனிதன் எப்படி புகைப்படம் எடுப்பான்? 219 00:14:48,680 --> 00:14:49,681 வேறு யாராவது… 220 00:14:51,225 --> 00:14:52,434 அங்கே இருந்தாலொழிய. 221 00:14:54,895 --> 00:14:56,813 சரி. இப்போது வேறு ஒருவனைத் தேடுகிறோம். 222 00:14:56,897 --> 00:14:59,024 பார்வையாளர், ஐந்தாவது மாடி, அந்தப் பையன் இருந்த அதே நேரம். 223 00:14:59,107 --> 00:15:03,111 அது தாமதமான நேரம், எனவே செவிலியர்கள், ஆர்டர்லிகள்… 224 00:15:14,915 --> 00:15:16,166 அவன். 225 00:15:24,049 --> 00:15:26,176 அவன் தன் முகத்தை கேமராக்களிடம் இருந்து மறைக்கிறான். 226 00:15:28,804 --> 00:15:29,888 அவன் யார்? 227 00:15:36,812 --> 00:15:37,855 ஹக்கேஸ் ஹெசூஸ் அலஹான்ட்ரோ 228 00:15:45,028 --> 00:15:46,029 யார் அவன்? 229 00:16:19,938 --> 00:16:21,565 ஜி-ஹோ! அதோ வந்திருக்கிறான்! 230 00:16:21,648 --> 00:16:22,774 ஹேய், நண்பர்களே. 231 00:16:22,858 --> 00:16:24,318 ராக்கியும் தான்! 232 00:16:24,401 --> 00:16:25,402 ஹேய், லூசி. 233 00:16:25,485 --> 00:16:26,612 ஹாய், டேனி. 234 00:16:26,695 --> 00:16:28,947 பசிக்கிறதா? கொஞ்சம் சுண்டுபு ஜிகே மீதம் இருக்கிறது. 235 00:16:29,031 --> 00:16:30,324 பரவாயில்லை, நன்றி. 236 00:16:30,407 --> 00:16:32,242 குட் நைட் சொல்ல விரும்பினேன். 237 00:16:32,326 --> 00:16:33,327 குட் நைட். 238 00:16:33,994 --> 00:16:34,995 ஒரு விஷயம். 239 00:16:35,996 --> 00:16:37,289 எனவே, வாடகை? 240 00:16:38,332 --> 00:16:39,333 சீக்கிரம் தந்துவிடுவாயா? 241 00:16:40,125 --> 00:16:41,919 எங்கள் வாடகை இன்னும் உங்களுக்குக் கிடைக்கவில்லையா? 242 00:16:42,961 --> 00:16:45,214 ஜி-சியோக் உங்களிடம் பணம் கொடுக்கவில்லையா? 243 00:16:45,297 --> 00:16:47,216 நிஜமாகத்தானா, ஜி? 244 00:16:47,299 --> 00:16:50,093 நீ எங்கே இருக்கிறாய்? உடனே என்னைத் திரும்ப அழை! 245 00:16:51,303 --> 00:16:52,679 நாசமாய்ப் போனவனே! ச்சே! 246 00:16:56,016 --> 00:16:58,810 சில நேரங்களில் சொந்தக் காலில் நிற்பது எளிதில்லை. 247 00:16:59,978 --> 00:17:01,813 முன்பு, நாங்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருந்தோம். 248 00:17:01,897 --> 00:17:06,276 நான் எப்போதும் வீட்டிற்கு வந்து, பேசுவதற்கு யாரையாவது கண்டுபிடிப்பேன். இப்போது? 249 00:17:06,359 --> 00:17:07,819 உங்களுக்கு புதிய மெசேஜ்கள் எதுவும் இல்லை. 250 00:17:07,903 --> 00:17:09,946 சரி, இப்போது எனக்கு வேலை இருக்கிறது. 251 00:17:11,740 --> 00:17:13,951 ஜியை துரத்தும் இவர்கள் யார்? 252 00:17:16,286 --> 00:17:18,622 லாஸ் ஏஞ்சலஸில் ரௌடி கும்பல்கள் இருக்கின்றன. அது எல்லோருக்கும் தெரியும். 253 00:17:18,704 --> 00:17:20,915 பதினெட்டாவது தெருவில் இருந்து க்ளெண்டேல் வரை. 254 00:17:20,999 --> 00:17:22,751 லாங் பீச்சிலிருந்து வென்ச்சுரா வரை. 255 00:17:22,835 --> 00:17:24,461 ஆர்ட்ஸ் மாவட்டத்தில் லாஸ் ஏஞ்சலஸ் போலீஸின் திடீர் சோதனை துப்பாக்கிச்சூட்டில் முடிவடைந்தது 256 00:17:24,545 --> 00:17:27,881 போதைப்பொருட்கள், துப்பாக்கிகள், வண்டியில் வந்து சுடுவது என்பவை செய்திகளில் சொல்லப்பட்டவை. 257 00:17:29,091 --> 00:17:30,676 ஆனால் அது இல்லை முழு கதை. 258 00:17:31,718 --> 00:17:34,555 சரியோ தவறோ, கும்பல் குடும்பங்கள் போன்றவை. 259 00:17:35,222 --> 00:17:36,765 குடும்பங்கள் உங்களை ஏதோவொன்றின் ஒரு பகுதியாக உணர வைக்கும். 260 00:17:36,849 --> 00:17:37,891 சட்டசபைப் பெண்மணி தலைமையிலான வீட்டுவசதிக்கான முன்னெடுப்பு 261 00:17:37,975 --> 00:17:39,393 அது ஒரு சக்திவாய்ந்த விஷயம். 262 00:17:41,311 --> 00:17:44,606 நான் சொன்னது போல, சொந்தக் காலில் நிற்பது கடினம். 263 00:18:11,884 --> 00:18:13,093 மீண்டும் ஹலோ. 264 00:18:16,138 --> 00:18:17,139 ஹலோ. 265 00:18:20,642 --> 00:18:22,936 - முடிவு செய்துவிட்டீர்ளா? - வழக்கமானது, தயவுசெய்து, எரிக். 266 00:18:23,020 --> 00:18:24,980 நெய்யோடு கூடிய பாசிப் பயறு, பாதி பப்பாளி. 267 00:18:25,063 --> 00:18:26,190 நான் கேட்க நினைத்தேன். 268 00:18:27,608 --> 00:18:29,234 அந்த இரண்டாவது ஆடிஷன் எப்படிப் போனது? 269 00:18:30,068 --> 00:18:31,195 எனக்கு அது கிடைக்கவில்லை. 270 00:18:31,278 --> 00:18:32,321 இல்லை! 271 00:18:32,404 --> 00:18:34,656 - அட, நீ அதற்கு ஆசைப்பட்டது எனக்குத் தெரியும். - எனக்குத் தெரியும். 272 00:18:34,740 --> 00:18:36,158 நானும் கிடைக்கும் என்று நினைத்தேன். 273 00:18:36,241 --> 00:18:38,827 அது வெறுப்பானது. சிட்னி கிரீன்ஸ்ட்ரீட் எனக்கு ஞாபகம் வருகிறார், 274 00:18:38,911 --> 00:18:41,163 தி மால்டிஸ் ஃபால்கன் வரை அவருக்குப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை, 275 00:18:41,246 --> 00:18:42,706 அப்போது அவருக்கு வயது என்ன, 61? 276 00:18:43,665 --> 00:18:45,501 அடுத்து என்ன நடக்கும் என்று ஒருபோதும் தெரியாது, தெரியுமா? 277 00:18:50,005 --> 00:18:51,381 நீங்கள் செய்தது நன்றாக இருந்தது. 278 00:18:52,966 --> 00:18:54,051 என்ன? எது? 279 00:18:55,552 --> 00:18:58,096 நீங்கள் சொன்னது. அது நிச்சயமாக அவனுடைய கண்ணோட்டத்தை மாற்றியிருக்கும். 280 00:19:03,268 --> 00:19:05,521 ஆண்களுக்குப் பொதுவாக நல்லவர் என்று சொல்லப்படுவது பிடிக்காது. 281 00:19:06,355 --> 00:19:08,857 எல்லா ஆண்களுக்கும் இல்லை. ஆண்கள் மட்டுமில்லை, 282 00:19:09,816 --> 00:19:11,860 ஆனால் அது பலவீனத்தின் அடையாளம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். 283 00:19:12,528 --> 00:19:13,862 நான் மட்டும், அது நேர் எதிரானது என்று நினைக்கிறேன். 284 00:19:14,446 --> 00:19:16,073 அது ஒரு சக்திவாய்ந்த பண்பு. 285 00:19:16,657 --> 00:19:18,367 அது இந்த உலகத்துக்கு இன்னும் நிறைய தேவைப்படுகிறது. 286 00:19:20,452 --> 00:19:21,995 குறைந்தபட்சம் அதுதான் என் அனுபவம். 287 00:19:25,374 --> 00:19:27,793 - இன்றிரவு எல்லாம் எப்படி இருந்தது? - நன்றி. சுவையாக. 288 00:20:14,006 --> 00:20:15,465 நீங்களும் நல்லவர்தான். 289 00:20:21,930 --> 00:20:22,931 நீங்கள் நல்லவர் இல்லையா? 290 00:20:25,350 --> 00:20:28,270 மக்கள் என்னைப் பற்றி சொல்லும் முதல் விஷயம் அதுவாக இருக்கும் என்று நினைக்கவில்லை. 291 00:20:33,108 --> 00:20:34,735 என்ன சொல்வார்கள்? 292 00:20:38,071 --> 00:20:41,783 கடின உழைப்பாளி, உணர்ச்சிமிக்கவள், மனிதாபிமானி. 293 00:20:41,867 --> 00:20:42,868 ஆஹா. 294 00:20:42,951 --> 00:20:44,661 கடவுளே. நான் பேசுவது ரொம்ப சலிப்பாக இருக்கிறது. 295 00:20:45,370 --> 00:20:46,538 அப்படி இல்லை. 296 00:20:46,622 --> 00:20:48,123 சரி, மீண்டும் முயற்சிக்கிறேன். 297 00:20:49,416 --> 00:20:50,834 அவர்கள் சொல்வார்கள்… 298 00:20:51,710 --> 00:20:55,047 அவளுக்கு உணவகங்களில் நல்ல ஆண்களுடன் பேசுவது பிடிக்கும் என்று. 299 00:21:02,846 --> 00:21:04,306 வருந்துகிறேன், நான் இதை எடுக்க வேண்டும். 300 00:21:04,389 --> 00:21:05,390 நிச்சயமாக. 301 00:21:06,308 --> 00:21:07,684 தொடரும். 302 00:21:12,773 --> 00:21:13,857 அது வினோதமாக இருந்தது. 303 00:21:17,903 --> 00:21:19,071 இல்லை. 304 00:21:19,154 --> 00:21:20,781 அதற்கு அனுமதி இல்லை. 305 00:21:28,705 --> 00:21:29,706 ச்சே. 306 00:21:42,511 --> 00:21:44,847 யோ! எனவே என்ன, சாம்பியனே? நீ வருகிறாயா இல்லையா? 307 00:21:46,974 --> 00:21:48,642 அடுத்ததில் எனக்கு இடம் இருக்கிறதா? 308 00:21:48,725 --> 00:21:51,061 ஆம், அன்பே! உண்மையில் நாளை இரவு ஒரு வேலை இருக்கிறது. 309 00:21:51,144 --> 00:21:53,897 நீ அந்தப் பணத்தை சம்பாதிக்க விரும்புகிறாயா? நான் வந்து உன்னைக் கூட்டிப் போகிறேன். 310 00:21:53,981 --> 00:21:56,024 - சரி, கீழே வருகிறேன். - அருமை. 311 00:21:56,108 --> 00:21:57,526 உன்னைப் பிறகு பார்க்கிறேன். 312 00:22:37,649 --> 00:22:39,484 காலை வணக்கம், செனட்டர் பாவிச். 313 00:22:45,157 --> 00:22:47,159 மகெல்லன் பல்கலைக்கழகம் - பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் கல்லூரி 314 00:22:47,242 --> 00:22:49,036 முன்னாள் செனட்டர், நான் சொல்ல வேண்டும். 315 00:22:51,038 --> 00:22:53,874 அவன் இப்போது ஒரு புதிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி. 316 00:22:55,250 --> 00:22:56,710 பழைய பிரச்சினைகளுக்குப் புத்தம் புதிய 317 00:22:57,211 --> 00:23:01,048 தீர்வுகளை உருவாக்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்டதாக ஒரு செய்திக்குறிப்பை அவர்கள் வெளியிட்டார்கள். 318 00:23:04,176 --> 00:23:07,012 எனவே, அவன் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆய்வில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது… 319 00:23:09,097 --> 00:23:10,098 அல்லது என்ன? 320 00:23:32,913 --> 00:23:34,039 உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 321 00:23:34,540 --> 00:23:36,041 எதுவாக இருந்தாலும், 322 00:23:36,625 --> 00:23:37,960 அவன் ஆட்சேர்க்கை செய்வது போல தெரிகிறது. 323 00:23:42,798 --> 00:23:44,216 அநேகமாக நான் போக வேண்டும். 324 00:23:45,092 --> 00:23:46,468 ஜி மூனை சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும். 325 00:23:52,224 --> 00:23:54,977 டேனி மூனை அழைத்திருக்கிறீர்கள். செய்தியைப் பதிவிடுங்கள். 326 00:23:55,060 --> 00:23:56,186 டேனி, ஷுகர் பேசுகிறேன். 327 00:23:56,270 --> 00:23:58,438 உன்னோடு பேச முயற்சிக்கிறேன். இதைப் பார்த்தவுடன் என்னை அழை. 328 00:23:59,439 --> 00:24:02,860 ஜியுடன் அந்த மருத்துவமனை அறையில் இறந்த ஹெசூஸ் ஹக்கேஸைப் பற்றி ஏதாவது தெரிந்துகொள்ள 329 00:24:03,443 --> 00:24:05,779 முயற்சிப்பதுதான் என்னுடைய சிறந்த வழி என்று நினைத்தேன். 330 00:24:06,655 --> 00:24:08,532 ஹானாவிடமிருந்து எனக்கு உறவினரின் முகவரி கிடைத்தது. 331 00:24:08,615 --> 00:24:10,617 முதல் தெரு பாலம் வழியாக வெளியேறவும் டவுன்டவுன் 332 00:24:52,326 --> 00:24:55,746 ஈஸிஸிஸிஸி 333 00:25:01,835 --> 00:25:02,836 திருமதி. ஹக்கேஸ். 334 00:25:03,253 --> 00:25:04,254 என்ன? 335 00:25:04,338 --> 00:25:06,173 ஹெசூஸுக்காக என்னுடைய அனுதாபங்கள். 336 00:25:06,256 --> 00:25:07,466 என் பெயர் ஜான். 337 00:25:08,258 --> 00:25:11,053 நான் உள்ளே வந்து அவனைப் பற்றி சில கேள்விகளைக் கேட்கலாமா? 338 00:25:12,346 --> 00:25:13,555 கொஞ்ச நேரம்தான் ஆகும். 339 00:25:16,225 --> 00:25:17,434 உள்ளே வா. 340 00:25:27,069 --> 00:25:28,362 பாவப்பட்ட பெண்மணி. 341 00:25:28,862 --> 00:25:31,240 துக்கம். எனக்குப் பரிட்சியமானது. 342 00:25:32,324 --> 00:25:35,702 நான் முதலில் என் சகோதரியை இழந்தபோது, என்னால் நகர முடியவில்லை. 343 00:25:51,134 --> 00:25:52,135 மேடம். 344 00:25:52,970 --> 00:25:56,056 ஹெசூஸின் அறையைப் பார்க்க முடியுமா? 345 00:25:57,015 --> 00:25:58,016 நன்றி. 346 00:26:17,035 --> 00:26:18,412 ஏஸ்டெக் கலை. 347 00:26:23,667 --> 00:26:24,877 அவனுக்கு ஆர்வங்கள் இருந்திருக்கின்றன. 348 00:26:29,464 --> 00:26:30,465 ஒரு வீடு. 349 00:26:34,887 --> 00:26:36,013 அவன் நேசிக்கப்பட்டிருக்கிறான். 350 00:26:52,863 --> 00:26:54,907 இதற்கு மேலும் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன், 351 00:26:54,990 --> 00:26:58,785 ஆனால் நீங்கள் படும் வேதனையில் இருந்து வேறு ஒருவரை காப்பாற்றுவேன் என்று நம்புகிறேன். 352 00:26:59,745 --> 00:27:00,746 கேள். 353 00:27:01,747 --> 00:27:02,748 நன்றி. 354 00:27:07,377 --> 00:27:08,670 இந்த நபரை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா? 355 00:27:09,129 --> 00:27:11,465 எப்போதாவது இவனை ஹெசூஸுடன் பார்த்திருக்கிறீர்களா? 356 00:27:16,803 --> 00:27:17,804 இவன்? 357 00:27:30,484 --> 00:27:31,902 படுக்கையறையில் இருக்கும் 358 00:27:31,985 --> 00:27:33,028 அந்தப் படம். 359 00:27:33,111 --> 00:27:34,112 அந்தப் பெண்? 360 00:27:34,196 --> 00:27:36,031 சாண்ட்ரா. 361 00:27:37,115 --> 00:27:38,116 அவனுடைய அம்மா. 362 00:27:39,034 --> 00:27:40,035 உங்கள் மகளா? 363 00:27:40,118 --> 00:27:41,370 ஆம். 364 00:27:42,120 --> 00:27:43,121 அவர் எங்கே? 365 00:27:43,205 --> 00:27:44,206 தெருக்களில். 366 00:27:44,289 --> 00:27:45,749 போதைப்பொருட்கள். 367 00:27:46,166 --> 00:27:47,209 பைத்தியம். 368 00:27:50,212 --> 00:27:52,548 ஹெசூஸ் அவருடன் தொடர்பில் இருந்தானா? 369 00:27:53,048 --> 00:27:54,800 ஆம், அவர்கள் உற்ற நண்பர்களாக இருந்தார்கள். 370 00:27:54,883 --> 00:27:56,218 ஒருவருக்கு ஒருவர் நம்பகமானவர்கள். 371 00:27:58,011 --> 00:28:00,222 அவள் அவனை "சுயி" என்று கூப்பிடுவாள். 372 00:28:00,681 --> 00:28:01,682 "சுயி?" 373 00:28:18,115 --> 00:28:20,117 நான் உங்களுக்காக ஏதாவது செய்யலாமா? 374 00:28:21,743 --> 00:28:23,203 என்ன மாதிரி? 375 00:29:29,186 --> 00:29:30,187 ஹேய். 376 00:29:34,107 --> 00:29:35,108 ஹேய். 377 00:29:37,319 --> 00:29:40,447 நீ முன்பு செய்ததைப் போல, நீ உன் முதலாளிக்கு ஃபோன் செய்ய விரும்புகிறேன். 378 00:29:41,907 --> 00:29:43,492 எனக்கு முதலாளி இல்லை, ஜி. 379 00:29:43,575 --> 00:29:45,619 நான் ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்ட ஒரு தலைமை நிர்வாக அதிகாரி. 380 00:29:45,702 --> 00:29:47,496 இதைப் பார்த்திருக்கிறாயா? 381 00:29:51,792 --> 00:29:52,876 பார்த்திருக்கிறாய். 382 00:29:52,960 --> 00:29:54,211 நீ இந்தப் புகைப்படத்தை எடுத்தாயா? 383 00:29:59,216 --> 00:30:00,217 இல்லை, நீ எடுக்கவில்லை. 384 00:30:00,843 --> 00:30:03,637 சரி. நான் கேட்பது என்னவென்றால், அதைச் செய்தவனிடம் நான் பேச விரும்புகிறேன் என்று 385 00:30:03,720 --> 00:30:05,472 உன் முதலாளியிடம் சொல். 386 00:30:07,182 --> 00:30:08,183 இதோ. 387 00:30:08,809 --> 00:30:10,227 இதை வாங்கிக்கொள். நான் போலீஸ் இல்லை. 388 00:30:10,894 --> 00:30:13,480 ஒரு தவறான புரிதல் இருப்பதாக கேள்விப்பட்டேன். அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். 389 00:30:15,232 --> 00:30:16,233 சரி. 390 00:30:17,401 --> 00:30:18,610 அப்போது தெளிவுபடுத்திவிடுவோம். 391 00:30:21,446 --> 00:30:24,616 அதற்கிடையில், ஜி? ஒருவேளை நீ நேராக இங்கிருந்து வெளியேற வேண்டும். 392 00:31:14,208 --> 00:31:15,709 ஹேய். உன்னை அழைத்துக்கொண்டிருந்தேன். 393 00:31:15,792 --> 00:31:17,711 என் தவறுதான். நான் பிஸியாக இருந்தேன். 394 00:31:18,921 --> 00:31:20,589 உன்னிடம் கேட்க வேண்டிய ஒரு தகவல் கிடைத்தது. 395 00:31:21,173 --> 00:31:22,424 சரி, ஆனால் எனக்கு வேலை இருக்கிறது. 396 00:31:22,508 --> 00:31:24,301 கொஞ்ச நேரத்தில் ஒரு நண்பன் என்னைக் கூட்டிப் போக வருவான், அதனால்… 397 00:31:24,384 --> 00:31:25,761 சரி. சீக்கிரம் கேட்டு விடுகிறேன். 398 00:31:29,223 --> 00:31:33,602 ஈஸி4எஸ் பற்றி ஜி குறிப்பிட்டு எப்போதாவது கேட்டிருக்கிறாயா? 399 00:31:33,685 --> 00:31:35,854 - என்ன? - ஈஸி4எஸ், லாஸ் ஏஞ்சலஸ் ரௌடி கும்பல். 400 00:31:36,480 --> 00:31:38,565 ஆம், சில காரணங்களுக்காக உன் அண்ணன் அவர்கள் கண்காணிப்பில் இருந்திருக்கிறான். 401 00:31:39,191 --> 00:31:41,693 ரௌடி கும்பலா? நிஜமாகவா கேட்கிறீர்கள்? 402 00:31:42,653 --> 00:31:45,405 அவனுடைய ஈடுபாடு என்னவென்று இன்னும் தெரியவில்லை. அவன் எந்தத் தவறும் செய்யாமலும் இருக்கலாம்… 403 00:31:45,489 --> 00:31:47,574 அவன் ஒரு மருத்துவமனையில் இருந்து போதை மருந்துகளை திருடியதாக சொன்னீர்கள்தானே? 404 00:31:48,700 --> 00:31:49,993 - அவன் செய்தான். - அவன் எந்தத் தவறும் 405 00:31:50,077 --> 00:31:53,163 செய்யவில்லை என்று என்ன சொல்கிறீர்கள்? ஜி பல வருடங்களாக தவறு செய்து வருகிறான். 406 00:31:55,582 --> 00:31:56,583 வருந்துகிறேன். 407 00:32:00,754 --> 00:32:01,755 ச்சே. 408 00:32:07,135 --> 00:32:08,136 நீ நலமா? 409 00:32:12,474 --> 00:32:14,309 வேறு ஏதாவது என்னிடம் சொல்ல விரும்புகிறாயா? 410 00:32:17,312 --> 00:32:21,275 நீங்கள் என்ன, இப்போது மனநல மருத்துவரா? தனியார் புலனாய்வாளர் வேலைக்கே உங்களுக்கு பணம் தரவில்லை. 411 00:32:22,401 --> 00:32:23,652 பணத்தைப் பற்றிக் கவலைப்படாதே. 412 00:32:24,736 --> 00:32:26,905 ஆம், சரி, நீங்கள் பணக்காரர், அதனால் நீங்கள் அப்படிச் சொல்லலாம். 413 00:32:26,989 --> 00:32:27,990 அதனால் இல்லை. 414 00:32:28,866 --> 00:32:29,867 இல்லையா? 415 00:32:31,743 --> 00:32:34,204 அது மாதிரி எத்தனை விலையுயர்ந்த சூட்களை வைத்திருக்கிறீர்கள்? 416 00:32:34,288 --> 00:32:35,289 சரியாக எத்தனை? 417 00:32:36,707 --> 00:32:37,708 எனக்குத் தெரியாது. 418 00:32:38,792 --> 00:32:40,210 ஏனென்றால் நீங்கள் பணக்காரர், சகோ. 419 00:32:41,086 --> 00:32:43,380 பாருங்கள், என் நண்பன் இங்கே வரப்போகிறான். வந்து பார்த்ததற்கு நன்றி. 420 00:32:48,844 --> 00:32:50,554 கேள், டேனி. என்ன நடந்தாலும்… 421 00:32:52,097 --> 00:32:53,974 என்ன நடந்துகொண்டிருந்தாலும்… 422 00:32:55,559 --> 00:32:56,560 என்னை உனக்கு உதவவிடு. 423 00:32:58,687 --> 00:32:59,688 வேண்டாம். 424 00:33:07,696 --> 00:33:09,156 நாசமாய்ப் போன ஜி. 425 00:33:12,618 --> 00:33:14,953 ஹேய், அவன் வந்துவிட்டான். 426 00:33:15,037 --> 00:33:16,330 மீண்டும் வரவேற்கிறேன், சேம்பியன். 427 00:33:34,932 --> 00:33:36,016 சரி, இடம் வருகிறது. 428 00:33:45,734 --> 00:33:47,653 சரி. வேலையில் இறங்குவோம். 429 00:33:54,034 --> 00:33:56,828 யோ, வா, பொறுமை! பொறுமை, சகோ! என்ன? 430 00:33:57,996 --> 00:33:59,873 - பின்னால் போ. - நீங்கள் எல்லோரும் என்ன செய்கிறீர்கள்? 431 00:34:01,416 --> 00:34:03,669 என்னை விடு! ச்சே! 432 00:34:06,129 --> 00:34:07,130 யோ, பொறுமை! 433 00:34:11,051 --> 00:34:12,261 போகலாம். 434 00:34:13,887 --> 00:34:15,013 யே, யோ, போகலாம். 435 00:34:15,681 --> 00:34:16,723 போகலாம், வாருங்கள். 436 00:34:17,224 --> 00:34:19,059 அதையெல்லாம் டிரக்கில் ஏற்றுங்கள். போகலாம். 437 00:34:30,112 --> 00:34:31,905 யோ, அந்தப் பாதுகாவலன் எங்கிருந்து வந்தான்? 438 00:34:32,406 --> 00:34:35,409 நான் அவனைப் பார்க்கவில்லை, பிறகு அவன்… திடீரென என்னைப் பிடித்தான். 439 00:34:35,492 --> 00:34:38,328 பரவாயில்லை, பொறுமையாக இரு. நீ அவனை நன்றாக கையாண்டாய். 440 00:34:38,411 --> 00:34:39,663 ச்சே. 441 00:35:02,769 --> 00:35:03,770 ஹேய். 442 00:35:05,189 --> 00:35:06,190 நன்றி. 443 00:35:15,490 --> 00:35:17,534 அதனால், குளத்திலிருந்து சில குளியல் உடைகளைத் திருடினேன். 444 00:35:19,411 --> 00:35:21,163 நிறைய திருடினேன். அவற்றைக் குவித்துவைத்தேன். 445 00:35:22,289 --> 00:35:24,833 நேராக நடந்து வந்தேன். அதாவது, யாரும் எதுவும் சொல்லவில்லை. 446 00:35:25,417 --> 00:35:26,752 நான் அவற்றை ஈபேயில் விற்கப் போகிறேன். 447 00:35:29,213 --> 00:35:30,214 அருமை. 448 00:35:30,297 --> 00:35:31,423 சரி. 449 00:35:34,009 --> 00:35:35,135 இங்கே என்ன நடக்கிறது? 450 00:35:38,222 --> 00:35:40,557 நான் சில நேரங்களில் தவறு செய்வேன், ஆனால் பெரும்பாலான நேரங்களில் 451 00:35:41,725 --> 00:35:43,435 நான் மக்களை நன்றாக கவனிப்பேன். 452 00:35:47,523 --> 00:35:48,565 நீங்கள் மக்களை கவனிக்கிறீர்கள். 453 00:35:53,779 --> 00:35:55,447 என்னிடம் என்ன பார்க்கிறீர்கள்? 454 00:35:55,531 --> 00:35:56,823 ஒரு திருடியைவிட அதிகமாக. 455 00:35:59,910 --> 00:36:01,954 ஆம். நீங்கள் சொல்வது சரிதான். 456 00:36:02,037 --> 00:36:03,247 எனக்கு ஒரு கூட்டாளி வேண்டும். 457 00:36:04,706 --> 00:36:07,709 தனியார் விசாரணையில். எனக்கு என்னவென்று கூட தெரியாது… 458 00:36:07,793 --> 00:36:09,127 நான் கற்றுக்கொடுக்கிக்றேன். 459 00:36:09,628 --> 00:36:12,381 சரி, உன்னிடம் கேமரா இருக்கிறதா? ஃபோன் கேமரா இல்லை. நிஜ கேமரா. 460 00:36:12,464 --> 00:36:14,258 இல்லை. என்ன சொல்கிறீர்கள் என்று புரிகிறது. ஆம், என்னால் ஒன்றை ஏற்பாடு செய்ய முடியும். 461 00:36:15,217 --> 00:36:16,468 உன்னிடம் கார் இருக்கிறதா? 462 00:36:17,135 --> 00:36:18,428 திருடப்படாத ஒன்றா? 463 00:36:18,929 --> 00:36:20,264 நிச்சயமாக. 464 00:36:20,347 --> 00:36:21,348 சரி. 465 00:36:27,980 --> 00:36:29,356 அந்த தொகை பரவாயில்லையா? 466 00:36:35,028 --> 00:36:36,613 - ம்? - ஒரு வாரத்திற்கா? 467 00:36:39,575 --> 00:36:40,784 சரி. 468 00:36:40,868 --> 00:36:42,619 சரி. நீ நாளை தொடங்கு. 469 00:36:44,079 --> 00:36:45,414 நான் சில விஷயங்களைச் செய்திருக்கிறேன். 470 00:36:47,958 --> 00:36:50,043 குளியல் உடைகளையும் கார்களையும் விட அதிகமாக. 471 00:36:50,794 --> 00:36:52,129 நானும் சில விஷயங்களைச் செய்திருக்கிறேன். 472 00:36:56,592 --> 00:36:57,593 சரி. 473 00:36:58,635 --> 00:36:59,678 போகலாம். 474 00:37:00,554 --> 00:37:01,680 - சரி. - சரி. 475 00:37:06,018 --> 00:37:07,394 சீசர் சாலட், நியூயார்க் ஸ்ட்ரிப். 476 00:37:08,228 --> 00:37:09,646 இதை உங்கள் அறையில் வைத்துவிடுகிறேன். 477 00:37:44,348 --> 00:37:46,683 உங்களுக்கு புதிய மெசேஜ்கள் எதுவும் இல்லை. 478 00:38:00,864 --> 00:38:01,865 ஷுகர். 479 00:38:01,949 --> 00:38:04,743 அந்தப் புகைப்படத்தை எடுத்த நபருடன் நீ பேச விரும்புவதாக கேள்விப்பட்டேன். 480 00:38:05,869 --> 00:38:06,870 ஆம். 481 00:38:07,538 --> 00:38:09,039 ஒரு பேனாவை எடுத்துக்கொள். இதோ ஒரு முகவரி. 482 00:38:12,626 --> 00:38:13,627 சொல்லுங்கள். 483 00:38:18,090 --> 00:38:20,384 இந்தக் கேஸைப் பற்றி எனக்கு ஒரு மோசமான உணர்வு இருக்கிறது. 484 00:38:20,926 --> 00:38:23,470 இதுவரை எடுக்கப்பட்ட எல்லா தனியார் புலனாய்வாளன் பற்றிய படத்திலும் ஹீரோ இப்படிச் சொல்வான். 485 00:38:27,599 --> 00:38:29,226 அதோடு அவன் பொதுவாக கவலைப்படுவது சரிதான். 486 00:38:30,936 --> 00:38:34,147 அந்தக் கட்டத்திலிருந்து அது மோசம் என்பதிலிருந்து படுமோசதுக்குப் போகும். 487 00:38:35,816 --> 00:38:36,817 ஆனால் அவன் தொடர்ந்து போவான். 488 00:38:37,860 --> 00:38:38,861 அவன் நிறுத்த மாட்டான். 489 00:38:39,611 --> 00:38:41,154 இது மாதிரியான ஒரு கேஸில் மாட்டான். 490 00:38:43,365 --> 00:38:44,366 அவனால் முடியாது. 491 00:38:45,325 --> 00:38:47,452 அவன் ஒரு தனியார் புலனாய்வாளன். தனியார் புலனாய்வாளனுக்குத் தெரிய வேண்டும். 492 00:38:51,540 --> 00:38:52,791 அதனால் அவன் தொடர்ந்து போவான்… 493 00:38:55,502 --> 00:38:56,879 போவான்… 494 00:39:04,845 --> 00:39:06,471 கடைசி வரை. 495 00:40:20,504 --> 00:40:22,422 இப்போது வைகறை நேரத்து ஊதா அந்தி நேரம் 496 00:40:26,552 --> 00:40:30,722 என் இதயமெனும் புல்வெளிகளில் மெல்ல நுழைகிறது 497 00:40:33,392 --> 00:40:38,480 மேல் வானத்தில் அந்த சிறிய நட்சத்திரங்கள் தோன்றுகின்றன 498 00:40:39,523 --> 00:40:46,113 நாம் பிரிந்து இருப்பதை எப்போதும் எனக்கு நினைவூட்டுகிறது 499 00:40:47,823 --> 00:40:52,286 நீ பாதையில் அலைந்து திரிந்து தூரமாக போய்விட்டாய் 500 00:40:54,663 --> 00:40:59,751 சாகாத ஒரு பாடலை எனக்கு விட்டுச் சென்றுவிட்டு 501 00:41:03,046 --> 00:41:09,052 காதல் இப்போது கடந்த காலத்தின் மங்கலான நினைவாக ஆவிட்டது 502 00:41:10,721 --> 00:41:17,561 பல ஆண்டுகளின் இசை போய்விட்டது 503 00:41:20,230 --> 00:41:24,651 சில நேரங்களில் நான் வியப்பேன் 504 00:41:25,652 --> 00:41:27,905 தனிமையான இரவை 505 00:41:28,822 --> 00:41:32,618 நான் ஏன் 506 00:41:33,285 --> 00:41:35,996 ஒரு பாடலை நினைத்து கழிக்கிறேன் என்று 507 00:41:36,079 --> 00:41:38,081 வசனத் தமிழாக்கம் அருண்குமார்