1 00:02:10,380 --> 00:02:11,965 - சரி, முடிந்தது. - ஆம். 2 00:02:14,092 --> 00:02:15,093 அவனைக் காயப்படுத்த வேண்டாம். 3 00:02:16,011 --> 00:02:17,221 அவன் ஓடிப்போனால்? 4 00:02:17,221 --> 00:02:18,972 அவனைக் காயப்படுத்தாமல் இருக்க முயற்சி செய். 5 00:02:20,307 --> 00:02:21,266 நிச்சயமாக. 6 00:02:30,359 --> 00:02:32,444 மோட்டல் அறை காலியில்லை 7 00:02:41,411 --> 00:02:44,957 மக்கள் பிரச்சினையில் இருக்கும்போது, அவர்கள் பேச வேண்டும். ஆனால் பழமொழி உனக்கே தெரியும். 8 00:02:46,250 --> 00:02:47,334 எனக்குத் தெரியாதது என்னைக் காயப்படுத்தாதா? 9 00:02:51,463 --> 00:02:52,714 - ஹேய். - ஹேய். 10 00:02:53,882 --> 00:02:54,883 எப்படி இருக்கிறாய்? 11 00:02:57,928 --> 00:03:01,640 எப்படி இருக்கிறேனா? மனிதனாக, ஆனால்... 12 00:03:03,892 --> 00:03:05,018 நன்றாக இருக்கிறேன். 13 00:03:05,018 --> 00:03:09,147 நீ படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டும் என்று ஹென்றி சொன்னார். 14 00:03:09,731 --> 00:03:11,817 நீ தரையில் மயங்கி கிடப்பதாக அவர் சொன்னதாக நான் நினைக்கவில்லை. 15 00:03:11,817 --> 00:03:13,986 நான் மயங்கவில்லை. நான் தரையில் தூங்கிக்கொண்டிருந்தேன். 16 00:03:13,986 --> 00:03:15,404 தெரிகிறது. 17 00:03:17,948 --> 00:03:19,449 நீ தூக்கத்தில் உளறிக்கொண்டிருந்தாய். 18 00:03:21,451 --> 00:03:22,870 நீ ஒருவரை பெயர் சொல்லி அழைத்தாய். 19 00:03:22,870 --> 00:03:25,497 அது வேறு மொழியில் கேட்டது. 20 00:03:28,125 --> 00:03:29,501 நீ வேறு சில மொழிகளிலும் பேசுவாயா? 21 00:03:30,085 --> 00:03:31,837 ஆம், நான் வேறு பல மொழிகளிலும் பேசுவேன். 22 00:03:35,841 --> 00:03:36,842 மணி என்ன? 23 00:03:37,384 --> 00:03:38,468 பத்து மணிக்கு மேல் இருக்கும். 24 00:03:39,178 --> 00:03:42,264 நான் குளித்துவிட்டு வேலையைத் தொடங்க வேண்டும். 25 00:03:42,264 --> 00:03:43,307 நான் காபி வாங்கி வருகிறேன். 26 00:03:43,307 --> 00:03:44,808 - இல்லை, மெலனி. - ஷுகர், 27 00:03:44,808 --> 00:03:47,686 எதற்கும் விளக்கமளிக்காமல் நடக்கும் விஷயங்களில் என்னை 28 00:03:47,686 --> 00:03:51,190 சம்பந்தப்படுத்த முடியும் என்று உறுதியாக நம்புகிறாயா? 29 00:03:53,901 --> 00:03:54,860 வெளிப்படையாக இல்லை. 30 00:03:55,652 --> 00:03:57,487 - நான் காபி வாங்கப் போகிறேன். - சரி. காபி. 31 00:04:01,825 --> 00:04:05,245 எல்லாவற்றையும் அவளிடம் சொல்ல நினைக்கிறேன், ஆனால் முடியவில்லை. சொல்லவும் மாட்டேன். 32 00:04:18,550 --> 00:04:19,551 டேவிட் சீகல் 1988 - 2023 33 00:04:19,551 --> 00:04:24,139 "மனித வாழ்க்கை மிகக்குறுகியது. இறைவனால் படைக்கப்பட்ட எல்லாவற்றுக்கும் இறப்பு உண்டு. 34 00:04:25,265 --> 00:04:26,850 வெள்ளம் போல அடித்துச் செல்லப்படுகிறது. 35 00:04:27,851 --> 00:04:32,606 அவர்கள் கனவு போல, காலையில் முளைக்கும் புல்லுக்கு ஒப்பானவர்கள். 36 00:04:34,525 --> 00:04:40,280 காலை வேளையில், அது செழிப்பாக வளரும், ஆனால் மாலை வேளையில், அது வாடிப்போகும்." 37 00:04:59,508 --> 00:05:00,843 கார்லோஸ், எங்களை தனியாக விடு. 38 00:05:05,472 --> 00:05:10,185 உன் அம்மா இறந்தபோது... அது எனக்கு கடினமாக இருந்தது. 39 00:05:11,645 --> 00:05:14,481 ஆனால் அவள் இறக்கும் நேரம் வந்துவிட்டது என்று தெரிந்ததால்... 40 00:05:16,400 --> 00:05:17,609 கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன். 41 00:05:20,320 --> 00:05:21,321 ஆனால் இது? 42 00:05:25,409 --> 00:05:26,910 இது வேறு. 43 00:05:30,163 --> 00:05:34,042 தங்கள் பிள்ளைகளைவிட அதிக காலம் வாழும் பெற்றோருக்கு. 44 00:05:38,213 --> 00:05:40,549 நான் மிகவும் வருந்துகிறேன். 45 00:05:51,602 --> 00:05:53,270 ஒலிவியா இன்னும் உங்களை தொடர்புகொள்ளவில்லையா? 46 00:05:53,770 --> 00:05:56,148 இல்லை, நான் சொல்லி இருப்பேனே. 47 00:05:58,358 --> 00:06:01,195 கடந்த காலத்தில் அவள் மிகவும் பொறுப்பற்றவளாக இருந்தபோது கூட, 48 00:06:01,195 --> 00:06:04,072 மிகவும் கடினமான நேரத்திலும் கூட, அவள் இங்கே இருந்திருப்பாள். 49 00:06:06,366 --> 00:06:08,202 அவளுக்கு ஏதாவது நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? 50 00:06:11,079 --> 00:06:13,123 ஆம், நினைக்கிறேன். 51 00:06:17,294 --> 00:06:18,128 கார்லோஸ். 52 00:06:21,089 --> 00:06:26,762 அவர்கள் பாரில் உட்கார்ந்துகொண்டு நான் சாப்பிட பண உதவி செய்தனர் 53 00:06:26,762 --> 00:06:31,183 "அட, நீ இங்கே என்ன செய்கிறாய்?" என்பார்கள் 54 00:06:48,867 --> 00:06:51,870 வேசிமகனே, என்னைத் தொடாதே! 55 00:06:52,913 --> 00:06:54,831 என்னைத் தொடாதே! 56 00:07:09,429 --> 00:07:10,681 மாஸின் ஃபோன். 57 00:07:11,723 --> 00:07:13,100 திரும்ப அழை தொடர்பிலேயே இரு. 58 00:07:13,100 --> 00:07:14,935 யாரோ அவனைத் தேடுகிறார்கள். 59 00:07:30,409 --> 00:07:32,119 அதாவது, கேட்க நிறைய கேள்விகள் இருக்கின்றன. 60 00:07:34,121 --> 00:07:35,122 ஜென் யார்? 61 00:07:35,789 --> 00:07:38,792 உன் தூக்கத்தில் பேசியதிலிருந்து நான் தெரிந்துகொண்ட ஒரே வார்த்தை அதுதான். ஜென். யார் அவள்? 62 00:07:39,543 --> 00:07:40,836 அவள் என் சகோதரி. 63 00:07:40,836 --> 00:07:43,297 உன் சகோதரி. எங்கே இருக்கிறாள்? அவளுக்கு ஏதாவது நடந்துவிட்ட... 64 00:07:43,297 --> 00:07:44,840 யாரோ வருகிறார்கள். 65 00:07:57,269 --> 00:07:58,812 - அது மில்லர். - யார் மில்லர்? 66 00:07:58,812 --> 00:08:00,022 என் முதலாளி. 67 00:08:00,022 --> 00:08:02,691 ஷுகர், கதவைத் திற. நான் உன்னிடம் பேச வேண்டும். 68 00:08:02,691 --> 00:08:04,193 இவர்தான் உன்னைக் குத்த முயற்சி செய்தவரா? 69 00:08:05,152 --> 00:08:06,320 இல்லை. இல்லை, இவன் என் நண்பன். 70 00:08:06,320 --> 00:08:07,988 உன் நண்பர் என்றால், ஏன் கதவைத் திறக்கவில்லை? 71 00:08:09,031 --> 00:08:10,240 நான் விரும்பவில்லை என்பதால். 72 00:08:11,325 --> 00:08:13,035 உடை மாட்டும் அலமாரியில் ஒளிந்துகொள்வோமா? 73 00:08:13,035 --> 00:08:14,786 அது அவனை தடுத்து நிறுத்தாது. 74 00:08:28,258 --> 00:08:29,259 வெளியே போயிருப்பார்கள். 75 00:08:55,953 --> 00:08:56,912 போகலாம். 76 00:08:58,830 --> 00:08:59,998 ஹேய். 77 00:09:01,041 --> 00:09:04,211 அதற்காக வருந்துகிறேன். நான் உன்னிடம் பேச வேண்டும். 78 00:09:08,173 --> 00:09:10,008 காரை எடு. இதோ. 79 00:09:18,684 --> 00:09:20,352 ஏன் மில்லர் இதைச் செய்கிறான்? 80 00:09:20,352 --> 00:09:23,438 ஏதோ நடந்திருக்க வேண்டும். ஏதோ மாறியிருக்க வேண்டும். 81 00:09:28,610 --> 00:09:29,528 நிறுத்து. 82 00:09:50,132 --> 00:09:52,301 அடக் கடவுளே. இப்போது என்ன நடந்தது? 83 00:09:53,927 --> 00:09:55,721 அந்த வயதானவனால், ஒரு கையில் தூக்க முடியுமா? 84 00:09:56,680 --> 00:09:58,432 அவன் தலையில் அடித்துவிட்டேன். அடிக்க வேண்டியிருந்தது. 85 00:09:58,432 --> 00:10:00,350 - ஆம். சரி, அவனுக்கு ஒன்றும் ஆகாது. - அவனுக்கு ஒன்றும் ஆகாதுதானே? 86 00:10:00,350 --> 00:10:03,061 சரி. அவன் எப்படி உன் நண்பன் ஆனான்? 87 00:10:05,022 --> 00:10:06,690 அவனை நீண்ட காலமாகத் தெரியும். 88 00:10:06,690 --> 00:10:08,692 "நான் பேச வேண்டும்." அதற்கு என்ன அர்த்தம்? 89 00:10:08,692 --> 00:10:10,277 எதைப் பற்றி பேச வேண்டும்? நீ என்ன செய்தாய்? 90 00:10:17,451 --> 00:10:18,452 சரி, கேள். 91 00:10:19,244 --> 00:10:20,662 கேள், நான்... 92 00:10:22,039 --> 00:10:23,165 கேட்டுக்கொண்டிருக்கிறேன். 93 00:10:23,165 --> 00:10:25,959 சரி, ஆனால்... அவன் பெயர் மில்லர். 94 00:10:25,959 --> 00:10:30,714 அவனும், இன்னும் சிலரும், நாங்கள் ஒன்றாக வேலை செய்கிறோம். 95 00:10:30,714 --> 00:10:32,883 நீ என்ன சொல்கிறாய்? தனியார் புலனாய்வாளர்கள் போலவா? 96 00:10:32,883 --> 00:10:35,344 இல்லை, இல்லை... அதாவது... அது என் பகல் நேர வேலை, 97 00:10:35,344 --> 00:10:38,138 ஆனால் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கென்று தனிப்பட்ட பகல் நேர வேலை இருக்கிறது. 98 00:10:42,392 --> 00:10:43,560 நான் ஒரு குழுவின் உறுப்பினர்கள். 99 00:10:44,394 --> 00:10:48,065 எங்களைப் பற்றி யாரும் எதுவும் தெரிந்துகொள்ள அனுமதிக்கப்படாத ஒரு அமைப்பு. 100 00:10:50,108 --> 00:10:53,487 நான்... உன்னிடம் சொல்ல முடியாத ஒன்று. 101 00:10:53,487 --> 00:10:56,490 நான் துண்டு மாட்டும் கம்பியால் ஒருவன் மண்டையை உடைத்திருக்கிறேன். 102 00:10:56,490 --> 00:10:58,408 - எனவே நீ என்னிடம் சொல்லப் போகிறாய். - அதைப் பாராட்டுகிறேன். 103 00:10:58,408 --> 00:11:00,285 ஆனால் அது மிகவும் ஆபத்தானது என்பதால் அதை உன்னிடம் சொல்ல முடியவில்லை. 104 00:11:01,495 --> 00:11:02,955 உனக்கு மட்டும் இல்லை, 105 00:11:02,955 --> 00:11:06,041 அது எனக்கும், என் பல நண்பர்களுக்கும் ஆபத்தானது. நான் அக்கறைக்காட்டுபவர்களுக்கும். 106 00:11:07,709 --> 00:11:10,170 அது கொஞ்ச காலமாக நான் பாதுகாக்கும் ஒரு இரகசியம். 107 00:11:12,548 --> 00:11:13,715 நாங்கள் எல்லோரும். 108 00:11:17,094 --> 00:11:19,137 நான் உன்னிடம் சொல்ல விரும்பும் அளவுக்கு 109 00:11:20,347 --> 00:11:24,226 அதை யாரிடமும் சொல்ல விரும்பியதில்லை, ஆனால்... என்னால் முடியாது. 110 00:11:31,650 --> 00:11:32,484 நீ ஒரு உளவாளி. 111 00:11:34,152 --> 00:11:35,362 பல மொழிகள் தெரிந்திருக்கிறது. 112 00:11:35,362 --> 00:11:36,822 எப்போதும் விழிப்புடன் இருக்கிறாய், கவனமாக கேட்கிறாய். 113 00:11:36,822 --> 00:11:39,700 உன்னைப் பற்றி சொல்வதை விட... மற்றவர்கள் சொல்வதை கேட்பதில் ஆர்வம் காட்டுகிறாய். 114 00:11:39,700 --> 00:11:42,870 அதாவது, அடக் கடவுளே. எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். 115 00:11:42,870 --> 00:11:45,038 கன்னி ராசி தரத்தின்படி கூட, நான் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். 116 00:11:45,038 --> 00:11:47,124 நான் உன்னிடம் கேள்விகள் கேட்டதற்கு ஒரே காரணம், 117 00:11:47,124 --> 00:11:49,126 நானே அதற்கான பதில்களை தெரிந்துகொள்ள விரும்பியதால்தான். 118 00:11:49,710 --> 00:11:51,003 நீ ஒரு உளவாளி. 119 00:11:52,379 --> 00:11:55,424 அதாவது, விஷயம் அதுதான், இல்லையா? நீ ஒரு அயல்நாட்டு உளவாளி. 120 00:12:00,429 --> 00:12:01,763 நாங்கள் இங்கே கண்காணிப்பதற்காக வந்திருக்கிறோம். 121 00:12:03,724 --> 00:12:05,142 அடச்சே. 122 00:12:05,893 --> 00:12:07,519 அது எங்கள் பணி. அதுதான் எங்கள் ஒரே பணி. 123 00:12:07,519 --> 00:12:09,313 அடக் கடவுளே. என்னிடம் ஒரு சிகரெட் இருந்திருக்கலாம். 124 00:12:12,065 --> 00:12:13,233 - தோர்ப் பற்றி சொல்வாயா? - அவனைப் பற்றி என்ன? 125 00:12:13,233 --> 00:12:14,568 அவனும் உங்களில் ஒருவன், சரியா? 126 00:12:15,360 --> 00:12:16,403 ஆம். 127 00:12:16,403 --> 00:12:18,655 - ஆனால் உன்னை அவர் துரத்தவில்லை. உதவுகிறாரா? - அடடா. 128 00:12:18,655 --> 00:12:19,740 என்ன? 129 00:12:19,740 --> 00:12:21,283 ஹென்றி. அடுத்ததாக அவனிடம்தான் போவார்கள். 130 00:12:21,283 --> 00:12:22,951 நாம் போக வேண்டும். பல்கலைக்கழகத்துக்குப் போக வேண்டும். 131 00:12:23,869 --> 00:12:28,373 எனவே, ஆம், அந்த லார்சன் அத்தியாயத்தில் சிலவற்றைப் பார்ப்போம். 132 00:12:28,373 --> 00:12:31,210 நாம் கடைசியாக சந்தித்தபோது, கற்காலத்தின் பிற்பகுதியைப் பார்த்தோம். 133 00:12:32,586 --> 00:12:35,839 அடுத்து நாம் பார்க்கப் போவது இடைக் கற்காலம். 134 00:12:37,049 --> 00:12:41,929 சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முந்தை காலத்தைப் பற்றி பார்க்கும்போது, நியாண்டர்தால்கள், ஹோமோ சேபியன்கள், 135 00:12:41,929 --> 00:12:44,181 இனங்களின் வேறுபாடு. 136 00:12:44,181 --> 00:12:45,390 எடு, ஹென்றி. 137 00:12:47,601 --> 00:12:48,602 அவன் அழைப்பை எடுக்கவில்லை. 138 00:12:49,603 --> 00:12:51,855 சிக்கலானது, முரண்பாடு கொண்டது. 139 00:12:51,855 --> 00:12:55,359 ஒரே நேரத்தில் பலவிதமான எதிர் உணர்வுகளையும் 140 00:12:55,359 --> 00:12:58,403 எண்ணங்களையும் தாங்கும் திறன். 141 00:12:59,696 --> 00:13:04,201 அதனால்தான் நீங்கள் இன்னும் இங்கே இருக்கிறீர்கள், உங்கள் மூதாதையர்கள் இல்லை. 142 00:13:07,913 --> 00:13:08,997 உங்களுக்கு என்ன வேண்டும்? 143 00:13:08,997 --> 00:13:12,125 ஆம், நான் ஒரு நண்பரைத் தேடுகிறேன். பேராசிரியர் ஹென்றி தோர்ப், மானுடவியல். 144 00:13:12,125 --> 00:13:13,627 அவரைத்தான் இன்று எல்லோரும் தேடுகிறீர்கள். 145 00:13:13,627 --> 00:13:15,087 ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? 146 00:13:37,359 --> 00:13:38,485 ஒருவேளை அவரை தவறவிட்டோமோ? 147 00:13:38,485 --> 00:13:40,153 ச்சே. அது மில்லராக இருக்க வேண்டும். 148 00:13:52,457 --> 00:13:53,458 ஒரு மணி நேரத்தில் அங்கே இரு. 149 00:13:53,458 --> 00:13:55,127 யாரோ அவர்களின் தடயங்களை அழிக்கிறார்கள். 150 00:13:56,378 --> 00:13:59,173 ஸ்டாலிங்ஸுடன் தொடர்புடைய எல்லோரையும் அப்புறப்படுத்துகிறார்கள். 151 00:13:59,173 --> 00:14:00,465 அதனால்? 152 00:14:01,091 --> 00:14:05,053 அவர்களுக்கு முன்னால் நான் மாஸிடம் செல்ல வேண்டும். ஹென்றி காத்திருக்கட்டும். 153 00:14:05,846 --> 00:14:06,889 சரி, போகலாம். 154 00:14:18,400 --> 00:14:20,152 உன்னைக் கோபப்படுத்தும் ஒன்றை நான் சொல்ல வேண்டும். 155 00:14:20,152 --> 00:14:21,695 ஆனால் அதைப் பொறுத்தவரை எனக்கும் கோபம்தான். 156 00:14:21,695 --> 00:14:23,030 என்ன? 157 00:14:23,030 --> 00:14:25,616 என் மக்கள்... மில்லரும் இன்னும் சிலரும்... 158 00:14:27,409 --> 00:14:29,453 அவர்கள் நான் ஒலிவியாவைக் கண்டுபிடிப்பதைத் தடுக்க முயற்சிக்கிறார்கள். 159 00:14:30,621 --> 00:14:32,915 பொறு. உன் ஆட்கள் ஒலிவியாவைக் கடத்தினார்களா? 160 00:14:32,915 --> 00:14:34,666 இல்லை. இல்லை. இல்லை, அவர்கள்... 161 00:14:34,666 --> 00:14:35,876 அவளை என்ன செய்தார்கள்? 162 00:14:35,876 --> 00:14:37,628 - ஒன்றுமில்லை. - கடவுளே. 163 00:14:37,628 --> 00:14:40,506 நாங்கள் மக்களைக் காயப்படுத்துவதில்லை. நாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. சரியா? சத்தியமாக. 164 00:14:41,507 --> 00:14:43,759 - நான் இதைச் சரிசெய்வேன். - கடவுளே. 165 00:15:14,164 --> 00:15:15,541 அவள் அங்கே இருப்பதாக நினைக்கிறாயா? 166 00:15:15,541 --> 00:15:17,960 இல்லை, அவன் ஸ்டாலிங்ஸ் குழுவின் ஒருவன். 167 00:15:18,585 --> 00:15:20,671 அங்கே வசிக்கிறான், நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் அவனுக்கு தெரிந்திருக்கலாம். 168 00:15:24,007 --> 00:15:25,175 நீ இங்கேயே இரு. சரியா? 169 00:15:26,552 --> 00:15:28,011 பரவாயில்லை, ஏனென்றால் எனக்கு அங்கே செல்ல பிடிக்கவில்லை. 170 00:15:28,011 --> 00:15:29,429 சரி. 171 00:16:06,049 --> 00:16:07,050 நீ என்ன செய்கிறாய்? 172 00:16:07,050 --> 00:16:09,511 என் மனதை மாற்றிக்கொண்டேன். உன்னுடன் வருகிறேன். 173 00:16:11,555 --> 00:16:12,890 - அருகிலேயே இரு. - சரி. 174 00:16:53,639 --> 00:16:54,640 ஷுகர். 175 00:17:03,524 --> 00:17:05,733 சரி. போகலாம். வா 176 00:17:14,785 --> 00:17:16,244 விஷயங்கள் கையை மீறி போய்விட்டன. 177 00:17:16,869 --> 00:17:20,165 இது நாம் எல்லோரும் பொறுமைகாக்க வேண்டிய நேரமாக இருக்கலாம். ஆசுவாசப்படுத்திக்கொள். 178 00:17:21,208 --> 00:17:23,669 அந்த "பொறுமையாக இருக்க வேண்டிய" விஷயம் போல. 179 00:17:23,669 --> 00:17:26,003 நான் மிகவும் திறமையானவன் என்று நிறைய பேர் என்னிடம் சொல்கிறார்கள். 180 00:17:26,713 --> 00:17:28,464 ஆனால் இன்னும் என்னால் நடக்கப்போவதை கணிக்க முடிவதில்லை. 181 00:17:29,466 --> 00:17:31,927 நிச்சயமாக. அது ஒரு வழி. 182 00:17:37,599 --> 00:17:39,518 கிளிண்டன் வந்து உன்னை வேறு அறைக்கு மாற்றுவான், 183 00:17:39,518 --> 00:17:41,478 தேவைப்பட்டால். நான் மீண்டும் வருவேன்... 184 00:17:42,896 --> 00:17:44,523 எனக்குத் தெரியவில்லை. ஆனால் திரும்பி வருவேன். 185 00:17:45,023 --> 00:17:46,149 - சரி. - சரி. 186 00:17:49,069 --> 00:17:50,904 ஹேய். நீ நலமா? 187 00:17:52,739 --> 00:17:54,032 அவள் இல்லாமல் நான் திரும்பி வரமாட்டேன். 188 00:17:56,869 --> 00:17:57,703 நல்லது. 189 00:18:20,726 --> 00:18:21,727 இதுதான். 190 00:18:23,770 --> 00:18:25,522 இன்றிரவுதான் எனக்கு சில பதில்கள் கிடைக்கும் இரவு. 191 00:18:28,108 --> 00:18:29,484 ஏதோவொரு வழியில். 192 00:18:43,832 --> 00:18:47,002 மில்லர் 193 00:19:10,817 --> 00:19:12,694 நான் அவளிடம் நிஜமாகத்தான் சொன்னேன். 194 00:19:12,694 --> 00:19:13,904 நாங்கள் இப்படிப்பட்டவர்கள் இல்லை. 195 00:19:14,738 --> 00:19:16,823 கடத்தல். கொலை. 196 00:19:18,534 --> 00:19:20,577 மாஸ் மோசமானவனா என்பது ஒரு விஷயமே இல்லை. 197 00:19:21,954 --> 00:19:24,039 நாங்கள் மக்களை காயப்படுத்தக் கூடாது. 198 00:19:26,250 --> 00:19:30,379 இங்கே இருப்பதற்கான ஒரே காரணம், எங்கள் அமைதியான வாழ்க்கை முறையைப் பாதுகாப்பதுதான். 199 00:19:32,840 --> 00:19:34,341 ஆனால் இந்த இடம் எங்களை மாற்றுகிறது. 200 00:19:36,093 --> 00:19:37,177 இது எங்கள் எல்லோரையும் மாற்றுகிறது. 201 00:20:38,488 --> 00:20:39,656 என்ன நடக்கிறது? 202 00:20:44,828 --> 00:20:45,662 வேலை முடிந்தது. 203 00:20:47,789 --> 00:20:48,999 நம்மை திரும்ப அழைக்கிறார்கள். 204 00:20:50,125 --> 00:20:51,460 என்ன? 205 00:20:51,460 --> 00:20:53,337 - உண்மைதான். - ஹென்றி. 206 00:20:54,213 --> 00:20:57,049 நான் நன்றாக இருக்கிறேன். நான்... நீ அவள் சொல்வதைக் கேட்பது நல்லது. 207 00:20:57,049 --> 00:20:59,092 பொறு. பொறு. என்ன? 208 00:20:59,885 --> 00:21:01,512 இன்று காலை வீட்டிலிருந்து தகவல் வந்தது. 209 00:21:01,512 --> 00:21:02,930 அதனால்தான் மில்லர் உன்னுடன் பேச விரும்பினான். 210 00:21:02,930 --> 00:21:03,889 அதனால்தான் இங்கே இருக்கிறோம். 211 00:21:03,889 --> 00:21:05,933 - வெளியேறும் திட்டங்கள் பற்றி விவாதிக்கிறோம். - வேலை முடியவில்லை. 212 00:21:05,933 --> 00:21:07,184 ஆம், முடிந்தது. 213 00:21:07,684 --> 00:21:11,438 இன்னும் ஓரிரு நாளில், நீயும் இந்த அறையில் இருக்கும் எல்லோரும், 214 00:21:11,438 --> 00:21:13,232 நம் கூட்டாளிகள் எல்லோரும், கிரகத்தை விட்டு கிளம்பிவிடுவோம். 215 00:21:13,232 --> 00:21:14,942 - யார் சொன்னது? - வீட்டிலிருந்து செய்தி வந்தது. 216 00:21:15,817 --> 00:21:17,945 இப்போது, வெளியேறும் விவரங்களைப் பற்றி மில்லருடன் பேசு. 217 00:21:17,945 --> 00:21:20,197 இல்லை. நல்ல முயற்சி. ஆனால் அவள் இல்லாமல் நான் போகப் போவதில்லை. 218 00:21:20,864 --> 00:21:22,115 ஆம், நீ போகிறாய். 219 00:21:24,660 --> 00:21:25,786 அவள் இல்லாமல் நான் போகப் போவதில்லை. 220 00:21:27,204 --> 00:21:28,205 ஒலிவியா சீகல். 221 00:21:29,331 --> 00:21:32,459 நான் தேடிக்கொண்டிருக்கும் பெண். 222 00:21:34,169 --> 00:21:36,755 மர்மமான முறையில், சந்தேகத்திற்கு இடமில்லாமல் இந்த அறையில் இருக்கும் சிலருக்கு 223 00:21:36,755 --> 00:21:38,674 நான் கண்டுபிடிப்பதை விரும்பாத அந்த பெண்! 224 00:21:39,258 --> 00:21:40,259 இப்போது என்ன? 225 00:21:40,259 --> 00:21:42,344 இவ்வளவு காலம் கழித்து, திடீரென்று, எச்சரிக்கை இல்லாமல், 226 00:21:42,344 --> 00:21:44,054 நாம் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போக வேண்டுமா? இல்லை! 227 00:21:44,054 --> 00:21:46,348 ஒலிவியா சீகல் நம்முடைய திட்டம் இல்லை, ஷுகர். 228 00:21:47,182 --> 00:21:48,976 நீ இங்கே முக்கிய நோக்கத்தை மறந்துவிட்டாய். 229 00:21:48,976 --> 00:21:50,310 அவள் எங்கே இருக்கிறாள்? 230 00:21:50,310 --> 00:21:52,855 - ஜான். - பொறு. இனி மழுப்பல்கள் கூடாது. பொய் கூடாது. 231 00:21:52,855 --> 00:21:55,148 - ஜான். - பொறு, ஹென்றி! தயவுசெய்து. 232 00:21:58,610 --> 00:22:00,946 அவள் எங்கே என்று யாராவது உடனே சொல்லுங்கள். 233 00:22:00,946 --> 00:22:02,614 இந்த அறையில் இருக்கும் ஒருவருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும். 234 00:22:02,614 --> 00:22:04,116 ஒப்புக்கொள்கிறேன். நான் சொல்கிறேன். 235 00:22:04,116 --> 00:22:06,285 இல்லை. நீ அப்படி எதுவும் செய்யக் கூடாது, ஹென்றி. 236 00:22:06,285 --> 00:22:08,745 நீ வென்றாய். நாம் எல்லோரும் புறப்படுகிறோம். எனவே இப்போது என்ன? 237 00:22:08,745 --> 00:22:10,414 நான் சொல்கிறேன். வா. 238 00:22:16,170 --> 00:22:17,504 இன்றுதான் இதையெல்லாம் தெரிந்துகொண்டேன். நான்... 239 00:22:17,504 --> 00:22:20,507 - அவள் எங்கே என்று தெரியுமா? சொல். - எனக்கு ஒரு முகவரியைக் கொடுத்தார்கள். ஆம். 240 00:22:20,507 --> 00:22:21,675 சரி. அதைக் காட்டு. 241 00:22:22,634 --> 00:22:23,844 நல்லது. அதை எழுதித்தருகிறேன். 242 00:22:24,720 --> 00:22:27,973 முகவரி. இத்தனைக்கும் பிறகு ஒரு முகவரி இருக்கிறது. நான்... 243 00:22:37,274 --> 00:22:38,901 என்னால் முடிந்தவரை விளக்கவா? 244 00:22:40,777 --> 00:22:42,112 தயவுசெய்து. 245 00:22:42,112 --> 00:22:44,656 சரி. எனவே... 246 00:22:44,656 --> 00:22:48,035 அவர்கள் நம்மைப் பற்றி கண்டுபிடித்துவிட்டார்கள்... மனிதர்கள். 247 00:22:48,035 --> 00:22:49,912 ஆம். சிலருக்குத் தெரிந்துவிட்டது. 248 00:22:55,417 --> 00:22:56,919 அவனைத்தான் நாம் பாதுகாக்கிறோமா? 249 00:23:01,173 --> 00:23:02,257 அவர்கள் சக்தி வாய்ந்த மனிதர்கள். 250 00:23:02,257 --> 00:23:03,300 உறுதியாகச் சொல்கிறேன். 251 00:23:03,926 --> 00:23:05,010 எனவே நாம் கண்டும் காணாமல் விட்டுவிடுவதா? 252 00:23:05,010 --> 00:23:06,970 நாம் எதுவும் செய்யாமல், இந்த மாதிரியான காரியம் நடக்க அனுமதிக்கிறோமா? 253 00:23:06,970 --> 00:23:08,263 நம் மக்களைப் பாதுகாக்க. 254 00:23:09,139 --> 00:23:11,642 அவர்கள் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் நம்மை அழித்துவிடலாம். 255 00:23:11,642 --> 00:23:13,060 இப்போது வேலை முடிந்தது. 256 00:23:13,060 --> 00:23:14,478 - ஆம். - இப்போது என்னிடம் சொல்லலாம். 257 00:23:14,478 --> 00:23:15,979 ஒலிவியாவுக்கு என்ன நடந்திருந்தாலும் பரவாயில்லை. 258 00:23:15,979 --> 00:23:17,648 அவள் எப்படி கஷ்டப்பட்டிருந்தாலும் பரவாயில்லை. 259 00:23:20,859 --> 00:23:22,027 அது... அது யாராக இருந்தாலும்... 260 00:23:23,028 --> 00:23:24,655 ஒருவரின் மகன். ஒரு அரசியல்வாதி. 261 00:23:24,655 --> 00:23:26,323 இந்த கேவலமானவன் ஸ்டாலிங்ஸின் வாடிக்கையாளரா? 262 00:23:27,032 --> 00:23:28,158 - ஆம். - அது எப்படி நடந்தது? 263 00:23:28,158 --> 00:23:30,702 நாம் எப்படி... அவர்கள் எப்படி நம்மைப் பற்றி கண்டுபிடித்தார்கள்? 264 00:23:30,702 --> 00:23:33,372 அந்தப் பகுதி எனக்குத் தெரியாது. இந்த கட்டத்தில், அது முக்கியமா? 265 00:23:33,372 --> 00:23:34,873 நிச்சயமாக அது முக்கியம்தான். 266 00:23:36,542 --> 00:23:39,753 எல்லாவற்றையும் விட. நாம் இப்படிபட்டவர்கள் அல்ல, ஹென்றி. 267 00:23:39,753 --> 00:23:43,674 இதைப் பற்றி உனக்கு மட்டும் வருத்தம் இல்லை. வெளியே இருக்கும் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. 268 00:23:43,674 --> 00:23:46,969 மகிழ்ச்சியா? ஒலிவியா இதைப் பற்றி மகிழ்ச்சியடைவாள் என்று நினைக்கிறாயா? 269 00:23:47,678 --> 00:23:49,471 இது ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது, ஹென்றி! 270 00:23:53,183 --> 00:23:55,769 சரி. ஆனால் நடந்துவிட்டது. 271 00:24:00,691 --> 00:24:04,111 இப்போது, நாம் புறப்படுகிறோம். எனவே முயற்சி செய்து, அதை சரிசெய். 272 00:24:06,321 --> 00:24:08,448 ஏனென்றால் அவள் உயிருடன் இருந்தால், அங்கேதான் அவளைக் கண்டுபிடிப்பாய். 273 00:24:16,331 --> 00:24:21,962 பொறு. ஸ்டாலிங்ஸ் வீட்டில் என்ன நடந்தது என்று என்னிடம் சொன்னார்கள். 274 00:24:23,338 --> 00:24:26,049 நீ மூன்று பேரைக் கொன்றதாகச் சொன்னார்கள். 275 00:24:27,885 --> 00:24:29,970 - அது உண்மையா? - நான் என்னை தற்காத்துக்கொண்டேன். 276 00:24:29,970 --> 00:24:31,054 எனவே நீ செய்ய வேண்டியிருந்ததா? 277 00:24:43,358 --> 00:24:44,860 முதல் இருவரை நான் கொல்ல வேண்டியிருந்தது. 278 00:24:46,486 --> 00:24:47,905 ஒரு ஆணையும் பெண்ணையும். 279 00:24:50,282 --> 00:24:51,533 அது தற்காப்புக்காக. 280 00:24:55,329 --> 00:24:56,496 ஆனால் மூன்றாவது நபர், அது... 281 00:24:58,665 --> 00:24:59,750 அவசியமானது இல்லை. 282 00:25:02,127 --> 00:25:04,129 ஒரு எண்ணம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. 283 00:25:05,631 --> 00:25:08,133 "நான் ஆபத்தில் இருக்கிறேன்." "அவன் ஒரு கெட்டவன்." "அவன் ஒருவேளை..." 284 00:25:09,968 --> 00:25:10,802 "ஒருவேளை அது நீதியாக இருக்கலாம். 285 00:25:12,012 --> 00:25:15,474 அல்லது குறைந்தபட்சம் நியாயப்படுத்தப்படுகிறது." 286 00:25:20,312 --> 00:25:21,980 ஆனால் அதற்கு முன்பு நான்... 287 00:25:23,440 --> 00:25:25,150 நான் ட்ரிகரை அழுத்துவதற்கு கொஞ்சம் முன்பு... 288 00:25:27,194 --> 00:25:30,280 அந்த எண்ணங்கள் எல்லாம் போய்விட்டது, எல்லாம் அமைதியாகிவிட்டது. 289 00:25:32,699 --> 00:25:33,534 ம்... 290 00:25:37,371 --> 00:25:38,664 எனக்குத் தோன்றியதால் அவனைக் கொன்றேன். 291 00:25:49,550 --> 00:25:50,759 அது பைத்தியக்காரத்தனம். தெரியும். 292 00:25:55,222 --> 00:26:01,019 நாம் எவ்வளவு காலம் இங்கே தங்குகிறோமோ, அவ்வளவு மனிதனாக மாறுவோம் என்று நினைக்கிறேன். 293 00:26:03,897 --> 00:26:05,023 நான் போக வேண்டும். 294 00:26:05,023 --> 00:26:09,695 உன் வேலையில்... நீ இங்கே இருந்த காலத்தில்... நீ என்ன, டஜன் கணக்கானவர்களை கண்டுபிடித்திருப்பாயா? 295 00:26:10,487 --> 00:26:12,406 குறைந்தபட்சம். அதிகமாக இருக்கலாம். 296 00:26:13,615 --> 00:26:16,910 நீ... நீ எப்போதும் ஆண்களையோ அல்லது பெண்களையோ, குழந்தைகளையோ தேடுகிறாய். 297 00:26:19,329 --> 00:26:22,958 ஒருவேளை இன்று இந்த ஒலிவியா. நீ அவளைக் கண்டுபிடிப்பாய் என்று நம்புகிறேன். 298 00:26:26,587 --> 00:26:31,758 ஆனால் உன் தங்கை இல்லாமல், நீ நிரந்தரமாக தொலைந்துவிடுவாயோ என்று பயப்படுகிறேன். 299 00:26:52,738 --> 00:26:54,907 எனவே இந்த அதிகாரமும் செல்வாக்கும் பெற்ற மனிதர்கள், 300 00:26:54,907 --> 00:26:56,950 ஒலிவியா காணாமல் போனதற்குக் காரணமாக இருந்தவர்கள். 301 00:27:02,623 --> 00:27:03,624 எனக்கு இப்போது புரிகிறது. 302 00:27:04,791 --> 00:27:07,252 உங்களைப் பற்றி வெளியே சொல்லிவிடுவோம் என்று பயமுறுத்தியிருக்கிறார்கள். 303 00:27:09,087 --> 00:27:13,217 "ஷுகரை அவனுடைய வழக்கிலிருந்து பின்வாங்கச்சொல், அல்லது உங்கள் ரகசியத்தை உலகிற்குச் சொல்லுவோம். 304 00:27:14,259 --> 00:27:17,763 'ஏலியன்கள் நம்மிடையே நடமாடுகிறார்கள்.' அதுதான் தலைப்புச் செய்தியாக இருக்கும்." 305 00:27:20,307 --> 00:27:21,350 அது மோசமாக இருக்கும். 306 00:27:23,268 --> 00:27:25,103 அது எனக்குப் பிடிக்கவில்லை, ஆனால் எனக்குப் புரிகிறது. 307 00:27:30,776 --> 00:27:35,781 ஹென்றி சொல்வது சரிதான். நீண்ட காலம் தங்கிவிட்டோம். வீடு திரும்ப வேண்டிய நேரம் இது. 308 00:27:53,841 --> 00:27:55,342 {\an8}பாவிச்சுக்கு வாக்களியுங்கள் - அமெரிக்க செனட் "உங்கள் பக்கம்" 309 00:28:20,492 --> 00:28:22,619 {\an8}பாவிச் அமெரிக்க செனட் 310 00:29:10,167 --> 00:29:13,253 - அசையாதே! கைகளைத் தூக்கு. - கைகளைத் தூக்கிவிட்டேன். 311 00:29:14,838 --> 00:29:15,964 பார். என் கைகள் மேலே இருக்கின்றன. 312 00:29:15,964 --> 00:29:17,090 துப்பாக்கியை கீழே போடு. 313 00:29:17,090 --> 00:29:18,842 - சரி. எடுத்துக்கொள்... - துப்பாக்கியை தரையில் போடு. 314 00:29:18,842 --> 00:29:20,469 சரி. நானும் உன் பக்கம்தான். துப்பாக்கியை போடுகிறேன்... 315 00:29:20,469 --> 00:29:21,595 "அசையாதே!" என்றேன். 316 00:29:22,638 --> 00:29:24,598 நீ நான் சொல்வதைக் கேள். நாம் போகக் கூடாது. 317 00:29:24,598 --> 00:29:26,934 நான் தனியார் புலனாய்வாளர். காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடிக்க பணியமர்த்தப்பட்டேன். 318 00:29:26,934 --> 00:29:28,852 அத்துமீறி உள்ளே நுழைவதற்கு நிறைய காரணங்களைக் கேட்டிருக்கிறேன். 319 00:29:28,852 --> 00:29:30,479 நான் திருடன் போல தெரிகிறேனா? சொல்வதைக் கேள். 320 00:29:30,479 --> 00:29:33,106 என் பர்ஸ், என் தனியார் புலனாய்வாளர் உரிமம், ஓட்டுநர் உரிமம், 321 00:29:33,106 --> 00:29:34,608 என் அடையாள அட்டை, எல்லாம் என் பர்ஸில் இருக்கிறது. 322 00:29:34,608 --> 00:29:36,860 - இடது பாக்கெட்டில். உள்ளே இருக்கிறது. ஆம். - இடது பாக்கெட்டிலா? 323 00:29:37,778 --> 00:29:40,489 -"ஜான் ஷுகர்." அதுதான் உன் நிஜ பெயரா? - என் நிஜ... ஆம், சார். 324 00:29:40,489 --> 00:29:42,324 - அந்த நீல நிற கார் உன்னுடையதா? - ஆம், சார். 325 00:29:42,324 --> 00:29:44,535 பார், ஒருவேளை முகவரி தவறானதாக இருக்கலாம். தெரியவில்லை. ஒருவேளை நான் தவறாக இருக்கலாம். 326 00:29:44,535 --> 00:29:46,495 ஆனால் எப்போதாவது இந்த வீட்டில் ஒரு பெண் மிருகத்தனமாக சித்திரவதை செய்யப்படுவதைப் பற்றி 327 00:29:46,495 --> 00:29:47,663 நீ கேள்விப்பட்டால், 328 00:29:47,663 --> 00:29:49,957 அவளுக்கு உதவு முயற்சிப்பதற்கு ஒரு நிமிடம் கூட செலவிடவில்லை... 329 00:29:49,957 --> 00:29:52,125 நீ சரிபார்க்காமல் விட்டுவிட்டாய்... 330 00:29:52,125 --> 00:29:53,836 அப்படிப்பட்ட குற்ற உணர்வு உனக்கு வேண்டாம். என்னை நம்பு. 331 00:29:53,836 --> 00:29:55,128 இதுதான் நேரம். "அந்த தருணங்கள் திரும்ப கிடைத்தால், 332 00:29:55,128 --> 00:29:57,130 மீண்டும் அந்த நேரத்துக்கு செல்ல முடிந்தால்" என்று நீ யோசிக்க வேண்டியதில்லை. 333 00:30:00,008 --> 00:30:01,009 நகராதே. 334 00:30:05,681 --> 00:30:06,890 {\an8}நான் பேஸ்மண்டை பார்க்கிறேன். 335 00:30:10,269 --> 00:30:11,270 {\an8}ஹலோ? 336 00:30:13,772 --> 00:30:15,107 {\an8}கீழே யாராவது இருக்கிறீர்களா? 337 00:30:19,194 --> 00:30:20,654 கீழே யாராவது இருக்கிறீர்களா? 338 00:30:24,157 --> 00:30:28,120 - சரி. செனட்டரின் மகன். - ஹலோ? 339 00:30:30,789 --> 00:30:31,748 நிச்சயமாக. 340 00:30:31,748 --> 00:30:32,833 ஹேய். 341 00:30:37,880 --> 00:30:38,881 ஹேய். 342 00:30:43,844 --> 00:30:46,513 என்ன கண்டுபிடித்தாய்? 343 00:30:46,513 --> 00:30:51,143 ஒன்றுமில்லை. ஒரு சுத்தியல். 344 00:30:52,936 --> 00:30:54,855 ஆனால் அது ஒரு பேஸ்மண்ட, அங்கேதான் என் சுத்தியலை வைத்திருப்பேன். 345 00:30:55,355 --> 00:30:56,940 நிச்சயமாக எல்லா இடங்களிலும் பார்த்தாயா? 346 00:30:58,400 --> 00:30:59,401 நிச்சயமாக. 347 00:31:00,903 --> 00:31:02,237 சரி, என் தவறுதான். 348 00:31:04,656 --> 00:31:05,866 அது சரிதான். 349 00:31:06,450 --> 00:31:07,534 எனவே இப்போது என்ன? 350 00:31:16,752 --> 00:31:18,378 இங்கே யாரோ இருப்பதாக சொன்னது யார்? 351 00:31:21,548 --> 00:31:25,135 ஒரு நண்பர். அது தவறான தகவல் போல. 352 00:31:26,303 --> 00:31:29,306 அப்படி நடப்பது சகஜம்தான். ஆனால் சங்கடமாக இருக்கிறது. 353 00:31:29,306 --> 00:31:30,599 எந்த நண்பர்? 354 00:31:31,558 --> 00:31:33,810 எந்த நண்... எந்த நண்பர் என்று என்னால் சொல்ல முடியாது. 355 00:31:35,854 --> 00:31:38,649 இரகசிய நபர்... என் வேலையில் கடைபிடிக்க வேண்டிய முன்நிபந்தனை. 356 00:31:50,536 --> 00:31:52,371 என் பேஸ்மெண்டில் ஒருவர் இருப்பதாக சொன்னது யார்? 357 00:31:56,250 --> 00:31:58,085 நான் எந்த அலாரத்தையும் ஒலிக்க செய்யவில்லை. 358 00:31:59,461 --> 00:32:00,462 - நீ திறமைசாலிதான். - அப்படியா? 359 00:32:00,462 --> 00:32:01,797 நான் வேலையிலிருந்து திரும்பி வந்தேன். 360 00:32:06,134 --> 00:32:06,969 என் அதிர்ஷ்டம். 361 00:32:08,262 --> 00:32:09,263 உன் துரதிர்ஷ்டம். 362 00:32:10,097 --> 00:32:13,767 ஹேய், இது இப்படி நடக்க வேண்டியதில்லை. 363 00:32:16,061 --> 00:32:17,813 அதாவது, வேறு யாரும் காயப்பட வேண்டியதில்லை. 364 00:32:19,314 --> 00:32:20,315 உன்னையும் சேர்த்து. 365 00:32:21,191 --> 00:32:22,943 உண்மையில், மக்கள் காயப்படுவதில் எனக்குப் பிரச்சினை இல்லை. 366 00:32:24,361 --> 00:32:29,408 என் கேள்வியெல்லாம், "நான் சுத்தியலில் இருந்து தொடங்கவா?" 367 00:32:54,850 --> 00:32:55,893 உன் பெயர் என்ன? 368 00:32:57,060 --> 00:32:58,437 - ரையன். - ரையன். 369 00:32:59,980 --> 00:33:03,942 இது முடிந்துவிட்டது. சரியா? நீ ஏன் தோல்வியை ஒப்புக்கொள்ளக் கூடாது? 370 00:33:06,111 --> 00:33:07,988 - ஆம். - வேண்டாம். வேண்டாம்! 371 00:35:03,312 --> 00:35:04,313 ஒலிவியா. 372 00:35:54,571 --> 00:35:56,573 வசனத் தமிழாக்கம் அருண்குமார்