1 00:00:08,009 --> 00:00:12,305 ஒரு சிறந்த தத்துவஞானி “உலகமே ஒரு புத்தகம், அதில் பயணம் செய்யாதவர்கள் 2 00:00:13,098 --> 00:00:18,478 ஒரு பக்கத்தை மட்டுமே படிப்பவர்கள்” என்று கூறியுள்ளார். 3 00:00:26,903 --> 00:00:28,363 நான் இதைக் கூறியாக வேண்டும், 4 00:00:28,363 --> 00:00:32,616 நான் சில பக்கங்களைப் படித்துள்ளேன், எனக்கு அந்தப் புத்தகத்தில் பெரிய ஆர்வமில்லை. 5 00:00:33,535 --> 00:00:36,621 நான் பயணிப்பது குறித்து உற்சாகமின்றி இருக்க பல காரணங்கள் உள்ளன. 6 00:00:37,205 --> 00:00:38,582 குளிராக இருக்கும்போது, 7 00:00:38,582 --> 00:00:39,666 அசௌகரியமாக இருக்கும். 8 00:00:39,666 --> 00:00:41,501 ஆடையின்றி ஐஸ் நீச்சலா? 9 00:00:41,501 --> 00:00:44,379 - ஆம். - அது ஒரு மோசமான அழைப்பு. 10 00:00:46,756 --> 00:00:49,801 மிகவும் வெப்பமாக இருக்கும்போது எப்படி இருக்கும் தெரியுமா? அசௌகரியமாக இருக்கும். 11 00:00:49,801 --> 00:00:51,887 என்னால் அவ்வளவு வேகமாக ஓட முடியாது. 12 00:00:52,470 --> 00:00:55,223 - ஆனால் எனக்கு 75 வயதாகிறது. - உங்களுக்கு உதவி வேண்டுமா? 13 00:00:55,223 --> 00:00:56,433 இல்லை, என்னால் முடியும். 14 00:00:57,142 --> 00:01:01,062 இது நான் அதிகம் பயணிக்க வேண்டிய நேரமாக இருக்கலாம். 15 00:01:06,818 --> 00:01:08,194 அடக் கடவுளே. 16 00:01:09,404 --> 00:01:11,823 முதல் முறையாக என் கையை யானையின் ஆசனவாய்க்குள் விடுகிறேன். 17 00:01:12,407 --> 00:01:13,658 நல்ல விஷயம் என்னவெனில், 18 00:01:14,659 --> 00:01:17,954 நான் சில அற்புதமான ஹோட்டல்களில் தங்குகிறேன். 19 00:01:17,954 --> 00:01:21,583 அடக் கடவுளே. இது அற்புதமாக இருக்கிறது. 20 00:01:26,504 --> 00:01:31,468 நிபந்தனை என்னவெனில், வெளியே இருப்பவற்றை நான் பார்க்கவும் ஒப்புக்கொண்டுள்ளேன். 21 00:01:31,468 --> 00:01:33,553 - பார்த்து காலை வையுங்கள். - நீங்கள் விளையாடவில்லை. 22 00:01:33,553 --> 00:01:35,639 - அழகான மலை. - அது ஓர் எரிமலை. 23 00:01:35,639 --> 00:01:36,640 அது எரிமலையா? 24 00:01:36,640 --> 00:01:40,435 என் வாழ்க்கை முழுவதும் நான் தவிர்த்த ஓர் உலகம். 25 00:01:41,561 --> 00:01:42,646 சாடி. 26 00:01:42,646 --> 00:01:45,315 அடக் கடவுளே. 27 00:01:45,315 --> 00:01:48,526 உயிர் பிழைத்திருப்பதே சிறப்பாக இருக்கும். 28 00:01:48,526 --> 00:01:51,655 இதுதான் ஒரு ஃபின்லாந்து நபருடன் நான் ஐந்து வோட்காக்கள் குடிக்கும் கடைசி முறை. 29 00:02:02,249 --> 00:02:05,168 நான் ஐரோப்பாவின் கடைசி மேற்கு விளிம்பில் இருக்கிறேன். 30 00:02:07,295 --> 00:02:10,382 வட அமெரிக்காவுக்கு மிக நெருக்கத்தில் இருக்கும் ஐரோப்பிய நகரம், 31 00:02:11,716 --> 00:02:15,262 இருந்தாலும் இந்த நகரத்தைப் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது. 32 00:02:16,930 --> 00:02:19,933 லிஸ்பன் 33 00:02:19,933 --> 00:02:21,017 நான் ஐரோப்பாவை நேசிக்கிறேன். 34 00:02:21,601 --> 00:02:23,770 நான் ரோம், லண்டன் மற்றும் பாரிஸுக்குச் சென்றுள்ளேன். 35 00:02:26,314 --> 00:02:29,818 அந்த நகரங்களைப் பற்றி அனைவருக்கும் நன்றாகத் தெரியும். 36 00:02:32,195 --> 00:02:38,118 என்னால் லிஸ்பனை வரைபடத்தில் கூட காட்ட முடியாது. அதைக் கூற எனக்கு அவமானமாக உள்ளது. 37 00:02:38,785 --> 00:02:41,830 ஆனால் அதுதான் ஐரோப்பாவின் பிரகாசமான தலைநகரம் என்கின்றனர். 38 00:02:41,830 --> 00:02:46,084 சமீபகாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பானதற்கு இது காரணமாக இருக்கலாமா? 39 00:02:46,084 --> 00:02:49,129 நான் இங்கே இருக்கும்போது எனக்குத் தெரியாதது அவர்களுக்கு 40 00:02:49,129 --> 00:02:53,842 என்ன தெரியும் என்பதைக் கண்டறிய முயல்கிறேன். 41 00:02:55,510 --> 00:02:56,720 அது எனக்கானதா? 42 00:02:57,762 --> 00:03:02,392 என்னை லிஸ்பனுக்கு வரவேற்பது உள்ளூர் வழிகாட்டியும் பிரபலமுமான பெர்னார்டோ. 43 00:03:04,185 --> 00:03:08,690 அவரது கார் அவரது மீசையைவிட பழங்கால ஹாலிவுட் போல உள்ளது. 44 00:03:08,690 --> 00:03:10,817 - எனக்காகவா? - ஆம், உங்களுக்காகத்தான். 45 00:03:12,861 --> 00:03:13,945 - போகலாம். - போகலாம். 46 00:03:17,449 --> 00:03:21,119 சரி, பெர்னார்டோ. லிஸ்பன் பற்றிக் கூறுங்கள். 47 00:03:21,119 --> 00:03:25,540 இது ரோமைவிட கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் பழமையானது. 48 00:03:26,124 --> 00:03:28,585 ரோமைவிட 400 ஆண்டுகள் பழமையானதா? 49 00:03:28,585 --> 00:03:32,047 தாத்தா நினைவில் வைத்திருந்தால் மட்டுமே ஓரிடத்தை பழமையானது என்போம். 50 00:03:32,547 --> 00:03:35,884 இந்த இடம் இங்கே 3,000 ஆண்டுகளாக உள்ளது. 51 00:03:36,676 --> 00:03:38,011 இது மிகவும் அழகாக உள்ளது. 52 00:03:38,011 --> 00:03:38,929 அதேதான். 53 00:03:41,848 --> 00:03:43,767 அட்லாண்டிக்கின் கழிமுகத்தில் லிஸ்பன் அமைந்திருப்பதால், 54 00:03:43,767 --> 00:03:48,855 அதை ஐரோப்பாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகத் துறைமுகமாக மாற்றுகிறது. 55 00:03:49,564 --> 00:03:53,860 இதுதான் எங்களது பிரதான ஸ்குயர். முன்பு இது வர்த்தக இடமாக இருந்தது. 56 00:03:53,860 --> 00:03:57,239 கப்பல்கள் இங்கே வந்து தங்கள் சரக்குகளை எடுத்துச் செல்லும். 57 00:03:57,239 --> 00:03:59,866 அந்த ஸ்குயரில் வர்த்தகம் நடக்கும். 58 00:03:59,866 --> 00:04:00,867 அதேதான். 59 00:04:01,409 --> 00:04:05,247 லிஸ்பனின் பொற்காலம் 16ம் நூற்றாண்டாக இருந்தாலும், 60 00:04:05,247 --> 00:04:09,084 இது நவீன காலம் வரையிலும் மிகவும் செல்வாக்கான நகரமாக இருந்து வருகிறது. 61 00:04:10,043 --> 00:04:14,548 இரண்டாம் உலகப் போரில், நாஸி மற்றும் அவர்களுக்கு எதிரான ஏஜென்டுகள் இங்கே 62 00:04:14,548 --> 00:04:19,219 மறைந்திருந்து செயல்பட்டபோது இது “உளவாளிகளின் நகரம்” என அழைக்கப்பட்டது. 63 00:04:19,803 --> 00:04:23,932 மேலும், லிஸ்பனானது ஏழு குன்றுகளின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. 64 00:04:23,932 --> 00:04:29,145 இந்த நகரத்தில் ஏழு குன்றுகளைவிட அதிகமாக இருப்பது போலத் தெரிகிறது. 65 00:04:30,188 --> 00:04:34,234 நாம் வந்த அனைத்துத் தெருக்களும் கற்களால் ஆனதாகத் தெரிகிறது. 66 00:04:34,234 --> 00:04:35,318 ஆம். 67 00:04:36,695 --> 00:04:39,406 பெர்னார்டோவுக்கு நல்ல கைரோபிராக்டர் தெரியும் என நம்புவோம். 68 00:04:40,574 --> 00:04:44,119 - யூஜீன், நாம் வந்துவிட்டோம். - ஆ. 69 00:04:44,953 --> 00:04:47,747 அந்தப் பிரபலமான குன்றுகளில் ஒன்றின் உச்சியில் அமைந்திருக்கும் 70 00:04:48,331 --> 00:04:50,584 நான் தங்கவிருக்கும் ஹோட்டல் முன்னர் மாளிகையாக இருந்தது. 71 00:04:51,293 --> 00:04:55,130 அதில் தங்கிய மிகவும் பிரபலமான நபர் ஒரு பகட்டான பிரபு. 72 00:04:58,258 --> 00:05:01,386 - வரவேற்கிறேன், திரு. லெவி. - மிகவும் அருமை. 73 00:05:01,386 --> 00:05:02,929 நான் முறையின்றி ஆடை அணிந்துள்ளதாக உணர்கிறேன். 74 00:05:03,847 --> 00:05:07,767 இவருக்கு டிப்ஸ் கொடுப்பதா அல்லது சண்டைக்குக் கூப்பிடுவதா எனத் தெரியவில்லை. 75 00:05:09,019 --> 00:05:10,770 என்னவொரு அருமையான இடம். 76 00:05:11,730 --> 00:05:15,817 இந்த மாளிகையின் உட்புற வேலைப்பாடுகள் கவுன்டின் ரசனையைப் பிரதிபலிக்கிறது. 77 00:05:16,818 --> 00:05:20,405 அவரது அணுகுமுறை தேவையானது மட்டும் இருந்தால் போதாது என்பதுதான். 78 00:05:21,406 --> 00:05:26,411 பழைய மாளிகையை முடிந்தளவுக்கு பாதுகாக்க விரும்பினோம். 79 00:05:26,411 --> 00:05:30,415 ஹோட்டல் மேனேஜர் மார்கரிடா என்னை ராயல் ஸ்வீட்டில் தங்க வைத்தார், 80 00:05:30,415 --> 00:05:34,502 அங்கே பிற மதிப்புமிக்க பழங்காலப் பொருட்களுடன் நான் சௌகரியமாக இருப்பேன். 81 00:05:34,502 --> 00:05:35,921 மிகவும் அழகாக உள்ளது. 82 00:05:35,921 --> 00:05:39,257 நான் ஒரு சீனக் கடையில் இருப்பது போல இங்கே சௌகரியமாக இருப்பேன், 83 00:05:39,257 --> 00:05:41,593 எதையும் உடைத்துவிடுவோமோ என்ற பதட்டத்துடன். 84 00:05:41,593 --> 00:05:47,015 நீங்கள் இங்கே பார்க்கும் அனைத்தையும் செய்யும்படி கேட்டது வெஹிடே கவுன்ட். 85 00:05:47,015 --> 00:05:50,018 - வெஹிடே கவுன்ட். - வெஹிடே. 86 00:05:50,018 --> 00:05:53,730 இது எனக்குச் சுலபம், ஏனெனில் யூதராக இருப்பதால் 87 00:05:53,730 --> 00:05:57,692 - இது... மிகவும் பொதுவானது. - இது... ஆம். 88 00:05:57,692 --> 00:06:00,487 - அதனால், இதை உச்சரிப்பது கடினமில்லை. - சில மொழிகளில்தான் வரும்... 89 00:06:00,487 --> 00:06:02,280 - உண்மைதான். - சரியா? 90 00:06:02,280 --> 00:06:07,827 எல்லாம் அவரது வேலைதான். கூரையில் உள்ள பூச்சுகள், மர வேலைப்பாடுகள். 91 00:06:07,827 --> 00:06:10,705 அவர் பணக்காரர் என்பதை வெளிக்காட்ட விரும்பினார். 92 00:06:12,540 --> 00:06:17,712 பாத்ரூம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். 93 00:06:18,380 --> 00:06:22,133 - இந்த டைல் அழகாக உள்ளது. - ஆம். 94 00:06:22,133 --> 00:06:25,220 ஹோட்டல் என்பது வீட்டை விட்டு வெளியே சௌகரியமாக இருக்கும் இடம் என்பார்கள். 95 00:06:26,429 --> 00:06:29,057 நான் சௌகரியமாகத் தங்குமிடம் இப்படி இருந்தால், 96 00:06:29,558 --> 00:06:31,434 நான் மகிழ்ச்சியானவனாக இருப்பேன். 97 00:06:31,434 --> 00:06:32,936 சுவரில் இருப்பது யார்? 98 00:06:32,936 --> 00:06:38,692 {\an8}அவர் இங்கிலாந்தில் இருந்த மன்னரை மணந்துகொண்ட போர்ச்சுகீசிய ராணி. 99 00:06:38,692 --> 00:06:41,903 {\an8}போர்ச்சுகலில் டீ கலாச்சாரம் இருந்தது, 100 00:06:41,903 --> 00:06:46,825 இவர்தான் டீயை இங்கிலாந்துக்குக் கொண்டு சென்றவர். 101 00:06:46,825 --> 00:06:48,785 அது ஒரு சிறப்பான தகவல். 102 00:06:48,785 --> 00:06:51,580 அதை நான் தான் உங்களுக்குக் கூறினேன் என பிறரிடம் கூற முடியுமா? 103 00:06:51,580 --> 00:06:53,540 - ஓ, சரி. - சரி. 104 00:06:53,540 --> 00:06:56,626 - நீங்கள்தான் கூறியதாக பிறரிடம் சொல்கிறேன். - அது நன்றாக இருக்கும். 105 00:06:58,587 --> 00:07:02,632 என்னை ஒரு டீ நிபுணராகக் காட்டிக்கொள்ள முடியலாம். 106 00:07:02,632 --> 00:07:06,386 - நீங்கள் முதலில் செல்லுங்கள். படிகள், ஜாக்கிரதை. - கடவுளே. 107 00:07:06,386 --> 00:07:10,056 ஆனாலும் எனக்கு லிஸ்பன் பற்றி எதுவும் தெரியாது. 108 00:07:12,058 --> 00:07:13,184 அது அற்புதமாக உள்ளது. 109 00:07:14,227 --> 00:07:17,022 ஆம், நான்... இப்போதுதான் கீழே பார்த்தேன். 110 00:07:17,022 --> 00:07:18,148 - நான் விளிம்புக்கு அருகில்... - நன்றாக உள்ளீர்களா? 111 00:07:18,148 --> 00:07:19,524 ...இருப்பதை உணரவில்லை. 112 00:07:19,524 --> 00:07:21,484 உள்ளே போய்விடலாம். 113 00:07:21,484 --> 00:07:26,740 என் கால்கள் ஈரமில்லாத தரையில் இருக்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். 114 00:07:26,740 --> 00:07:31,369 ஆனால் இந்தக் கடல்வழி நகரத்தை ரசிக்கும்படி மார்கரிடா என்னிடம் கூறுகிறார், 115 00:07:31,369 --> 00:07:34,664 நான் இதன் அற்புதமான டாகஸ் நதியில் பயணிக்க வேண்டும். 116 00:07:35,540 --> 00:07:38,627 அதனால் சுற்றுலா வழிகாட்டியான லூயிஸாவுடன் வெளியே செல்கிறேன். 117 00:07:39,419 --> 00:07:41,838 - சரி. - கேப்டன் ஆஞ்சலோவை 118 00:07:41,838 --> 00:07:43,548 உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். 119 00:07:43,548 --> 00:07:44,758 ஹேய், ஆஞ்சலோ. 120 00:07:44,758 --> 00:07:47,886 - வரவேற்கிறேன். உங்களுக்குப் பிடித்துள்ளதா? - ம், ஆம். 121 00:07:47,886 --> 00:07:51,056 - பாய்மரப் படகில்... செல்வது இதுதான் முதன்முறை... - ஆம். 122 00:07:51,056 --> 00:07:53,475 ...பெரிய குழு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. 123 00:07:53,475 --> 00:07:56,978 ஆம், அது எங்களுக்கு உங்கள் உதவி தேவை. 124 00:07:56,978 --> 00:07:59,731 என்னால் முடிந்ததைச் செய்கிறேன். 125 00:07:59,731 --> 00:08:04,069 என்னால் எவ்வளவு குறைவாக வேலை செய்ய முடியும் என ஆஞ்சலோவுக்குத் தெரியாது. 126 00:08:04,569 --> 00:08:07,364 கயிறுகளை அவிழ்க்க எனக்கு உதவ முடியுமா? 127 00:08:07,364 --> 00:08:09,366 - கயிறுகளை அவிழ்க்கணும். - கயிறுகள். 128 00:08:09,366 --> 00:08:12,869 கயிறுகளுக்கு கடல்வழி பாஷையில் எதுவும் பெயர் உள்ளதா அல்லது கயிறுகள்தானா? 129 00:08:12,869 --> 00:08:14,621 - கயிறுகள்தான். - ஓ. சரி. 130 00:08:14,621 --> 00:08:16,206 பாய்மரத்தை விரிக்கலாம். 131 00:08:16,206 --> 00:08:17,374 பாய்மரத்தை விரியுங்கள்! 132 00:08:17,374 --> 00:08:19,376 இல்லை. நாம்தான் அதைச் செய்ய வேண்டும். 133 00:08:19,376 --> 00:08:20,835 - என்னுடன் வாருங்கள். - நான் மேலே ஏற வேண்டுமா? 134 00:08:20,835 --> 00:08:23,755 - ஆம், ஸ்டீயரிங் பற்றி கவலை வேண்டாம். - பரவாயில்லை. கவலைப்படாதீர்கள். 135 00:08:29,010 --> 00:08:31,012 நாம் இப்போது படகை ஓட்டுகிறோம். 136 00:08:32,304 --> 00:08:35,517 நமக்கு முன்னால் சில படகுகள் கடக்கின்றன. 137 00:08:35,517 --> 00:08:37,601 - கவலைப்படாதீர்கள். - அவர்கள் பற்றிய கவலை வேண்டாமா? 138 00:08:37,601 --> 00:08:39,813 - இல்லை, கவலை வேண்டாம். - அவர்கள் வெறும் மனிதர்கள். 139 00:08:40,981 --> 00:08:42,315 இது அருமையான வேலை, இல்லையா? 140 00:08:42,315 --> 00:08:46,695 ஆம், நம் உயிரைப் பற்றிக் கவலைப்படவில்லை எனில். 141 00:08:47,612 --> 00:08:51,658 ஆச்சரியமாக, நான் அந்தப் பகுதியில் இருந்து எங்களை வெளியே கொண்டுவந்துவிட்டேன். 142 00:08:53,535 --> 00:08:55,662 அது இப்போது எவ்வளவு அழகாக உள்ளது பாருங்கள். 143 00:08:55,662 --> 00:08:57,956 லிஸ்பனைப் பற்றித் தெரிந்துகொள்ள இதுதான் சிறந்த இடம். 144 00:08:57,956 --> 00:09:01,710 பழைய நகரம், பிரபலமான குன்றுகள், 145 00:09:01,710 --> 00:09:03,670 மற்றும் அந்தச் சிலையை இங்கிருந்து பார்க்கலாம். 146 00:09:04,170 --> 00:09:05,964 அதை நாங்கள் மன்னர் கிறிஸ்து என்போம். 147 00:09:05,964 --> 00:09:09,384 அதைப் பார்க்கும்போது, வேறோரு நாடு நினைவுக்கு வருகிறதா? 148 00:09:09,384 --> 00:09:12,929 - ம், பிரேஸில் நினைவுக்கு வருகிறது. ஆம். - பிராஸில். அதேதான். 149 00:09:13,430 --> 00:09:17,350 லிஸ்பனின் கார்டினல் ‘30-களில் ரியோவுக்குச் சென்றார், 150 00:09:17,350 --> 00:09:20,854 அங்கே மீட்பர் கிறிஸ்துவின் சிலை அவரை ஈர்த்துவிட்டது, 151 00:09:21,438 --> 00:09:24,733 அவர் திரும்பி வந்தபோது அதேபோல ஒன்றை உருவாக்க விரும்பினார். 152 00:09:25,317 --> 00:09:27,819 ஆ. இது என்ன? 153 00:09:27,819 --> 00:09:31,364 அதன் முதல் பெயர் சாலஸார் பாலம். அது எதையாவது நினைவூட்டுகிறதா? 154 00:09:31,364 --> 00:09:34,993 ஆம், கண்டிப்பாக, கோல்டன் கேட் பாலம், சான் ஃபிரான்சிஸ்கோ. 155 00:09:36,661 --> 00:09:37,996 இதற்கு ஒரு காரணம் உள்ளது, 156 00:09:37,996 --> 00:09:41,625 ஏனெனில் லிஸ்பனில் சான் ஃபிரான்சிஸ்கோ போல இன்னொரு விஷயம் உள்ளது. 157 00:09:41,625 --> 00:09:43,001 நிலநடுக்கங்கள். 158 00:09:43,877 --> 00:09:49,257 பெரும்பாலான நகரமானது 1755 நிலநடுக்கத்தில் அழிந்துவிட்டது, 159 00:09:49,257 --> 00:09:50,550 அதை மீண்டும் கட்ட வேண்டியிருந்தது. 160 00:09:51,134 --> 00:09:53,178 ஓ, ஆம். நாம் பாலத்துக்கு அடியில் செல்கிறோம். 161 00:09:53,178 --> 00:09:55,597 பாலத்தை வடிவமைப்பது என்று வரும்போது, 162 00:09:55,597 --> 00:09:58,725 கலிஃபோர்னியாவில் இருப்பவை போல, நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதாக 163 00:09:59,226 --> 00:10:00,560 உருவாக்க, அமெரிக்கர்களைப் பணியமர்த்தினர். 164 00:10:03,521 --> 00:10:04,856 லிஸ்பனில் நீங்கள் 165 00:10:04,856 --> 00:10:08,735 ஒட்டுமொத்த உலகத்தின் சிறு துணுக்கை ஒரே நகரத்தில் பார்க்கலாம். 166 00:10:13,156 --> 00:10:16,326 லிஸ்பனின் கட்டடங்கள் சர்வதேச அளவில் உள்ளன, 167 00:10:16,826 --> 00:10:18,995 அதில் உலகளாவிய கலாச்சாரங்கள் கலந்துள்ளன. 168 00:10:22,707 --> 00:10:27,420 இது நிறைய பேருக்குத் தெரியாத, கொண்டாடப்பட வேண்டிய ஒரு நினைவுச்சின்னம். 169 00:10:29,339 --> 00:10:33,635 மாலுமிகள் இங்கிருந்துதான் லிஸ்பனை விட்டுப் புறப்பட்டு... 170 00:10:33,635 --> 00:10:35,804 - சரி. - ...புதிய உலகத்தைக் கண்டறியச் சென்றனர். 171 00:10:37,222 --> 00:10:39,724 15 மற்றும் 16ம் நூற்றாண்டுகளின்போது, 172 00:10:39,724 --> 00:10:44,646 போர்ச்சுகீசியர்கள் இந்தியா, பிரேஸில், சீனா மற்றும் ஜப்பானுக்கு கடல்வழிகளைக் கண்டறிந்தனர். 173 00:10:45,146 --> 00:10:50,652 திடீரென வெவ்வேறு மக்களும், ஆடம்பரப் பொருட்களும் வரத் தொடங்கின. 174 00:10:50,652 --> 00:10:54,948 ஐரோப்பாவிலேயே லிஸ்பன் தான் பணக்கார நகரமாகியது. 175 00:10:57,033 --> 00:11:00,787 வரைபடத்தில் என்னால் காட்டக் கூட முடியாத நகரம்தான் 176 00:11:00,787 --> 00:11:02,914 அதை வரையவே உதவியுள்ளது. 177 00:11:04,749 --> 00:11:09,045 இன்றும் போர்ச்சுகீசியர்கள் உலகைச் சுற்றி, ஆய்வுசெய்ய விரும்புகின்றனர். 178 00:11:09,045 --> 00:11:11,882 எங்களுக்கு வெளியே சென்று, வித்தியாசமான அனுபவங்கள் பெற பிடிக்கும். 179 00:11:12,507 --> 00:11:15,594 உங்களுக்கு எப்படி? உங்களுக்கும் பயணிப்பது பிடிக்குமா... 180 00:11:15,594 --> 00:11:16,720 எனக்கு... அது, 181 00:11:16,720 --> 00:11:19,639 - எனக்கு சாகசம் மிகவும் பிடிக்கும், லூயிஸா. - அற்புதம். 182 00:11:19,639 --> 00:11:21,308 - உலகைச் சுற்றுவது... - ஹ்ம்ம். 183 00:11:21,308 --> 00:11:22,517 ...என் குணங்களில் ஒன்று. 184 00:11:22,517 --> 00:11:24,185 நீங்கள் போர்ச்சுகீசியர் போலத்தான். 185 00:11:24,185 --> 00:11:26,813 எனக்குள் கொஞ்சம் போர்ச்சுகீசியர் இருக்கிறார் என்று கூறலாம். 186 00:11:26,813 --> 00:11:27,731 நான் பொய் கூறினேன். 187 00:11:27,731 --> 00:11:31,860 ஒரு சாகச விரும்பியுடன் இருப்பது பற்றி அவர் உற்சாகமாக இருப்பதாகத் தெரிந்தது. 188 00:11:31,860 --> 00:11:34,863 நான் கொஞ்சம் அதிகமாகப் பொய் சொல்லியிருக்கலாம். 189 00:11:35,530 --> 00:11:37,032 நான் கொஞ்சம் கூட சாகச விரும்பி இல்லை. 190 00:11:37,824 --> 00:11:39,284 அங்குதான் நடிப்பது பயனளிக்கும். 191 00:11:39,826 --> 00:11:45,790 அப்படியொரு திறமையின்மையை மறைக்க முடிந்தால், எனக்கு ஆஸ்கார் கொடுக்க வேண்டும். 192 00:11:48,627 --> 00:11:51,254 நாள் முழுக்க படகை ஓட்டிய களைப்புக்குப் பிறகு, 193 00:11:51,254 --> 00:11:55,592 நான் நடிக்க வேண்டியிருக்காத விஷயம், காக்டெயில்கள் மீதான என் காதல். 194 00:11:56,509 --> 00:12:00,096 இந்த ஹோட்டலின் தனித்துவமானதில் கடல் தீம் உள்ளது. 195 00:12:00,096 --> 00:12:02,390 ஓ, இது ஒரு படகு. 196 00:12:02,390 --> 00:12:05,227 இப்போது தெரிகிறது. பாய்மரங்கள். 197 00:12:09,314 --> 00:12:10,190 ஓ, அருமையாக உள்ளது. 198 00:12:14,319 --> 00:12:18,031 இன்று மாலைநேர பானங்கள் இசையுடன் பரிமாறப்படுகின்றன. 199 00:12:19,866 --> 00:12:23,620 இதுதான் சோகத்திற்கான லிஸ்பனின் பதில், ஃபாடோ. 200 00:12:24,120 --> 00:12:29,084 இது பாரம்பரியமாக மாலுமிகளின் பாடல், இப்போது நானும் ஒரு மாலுமிதான். 201 00:12:32,587 --> 00:12:35,215 இன்றிரவு, ஒரு மெகாஸ்டார் அதைப் பாடுகிறார். 202 00:12:38,885 --> 00:12:41,513 அவரை ஃபாடோவின் பானோ எனலாம். 203 00:12:46,184 --> 00:12:48,228 உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. எப்படி உள்ளீர்கள்? நான் ஹெல்டர். 204 00:12:48,228 --> 00:12:49,312 - ஹெல்டரா? - ஹெல்டர். 205 00:12:50,772 --> 00:12:53,024 இந்த இசை எங்கிருந்து தொடங்கியது? 206 00:12:53,024 --> 00:12:57,070 முதல் ஃபாடோ பாடகர் ஒரு பெண்மணி. அவர் பெயர் மரியா செவெரா. 207 00:12:57,779 --> 00:13:01,992 அவர் ஒரு... விலைமாதர், கிடார் வாசிப்பவராக இருந்தார். 208 00:13:02,617 --> 00:13:05,245 - விலைமாதரா? - ஆம். 209 00:13:07,581 --> 00:13:09,499 அது ஒரு சுவாரஸ்யமான வரலாறு. 210 00:13:09,499 --> 00:13:12,752 இந்த இசையை உருவாக்கியது ஒரு விலைமாதர் என்பதை 211 00:13:12,752 --> 00:13:15,463 நான் கணித்திருக்க மாட்டேன். 212 00:13:15,964 --> 00:13:17,424 ஆனால் அவருக்குத்தான் அந்தப் பெருமை சேரும். 213 00:13:18,049 --> 00:13:20,969 ஆனால் கண்டிப்பாக அப்போது அது அவருக்குக் கிடைத்திருக்காது. 214 00:13:21,511 --> 00:13:23,763 அப்போது பணம் மட்டும்தான். 215 00:13:24,973 --> 00:13:27,517 இதில் சில நீளமான நோட்கள் உள்ளன. 216 00:13:27,517 --> 00:13:30,604 ஃபாடோ பாட மிகவும் அற்புதமான குரல் தேவை. 217 00:13:30,604 --> 00:13:32,314 நீங்கள் இசைக் கலைஞரா? 218 00:13:32,314 --> 00:13:34,190 - கொஞ்சம்... - ஆனால் எதுவும் இசைக் கருவி வாசிப்பீர்களா? 219 00:13:34,190 --> 00:13:35,567 - கொஞ்சம், ம்... - ஓ, மோசமாக. 220 00:13:35,567 --> 00:13:37,027 என்ன வாசிப்பீர்கள்? 221 00:13:37,027 --> 00:13:38,278 - கிடார். - கிடாரா? 222 00:13:38,278 --> 00:13:42,198 ம், இன்னும் சில நாட்களில் நாங்கள் இன்னொரு ஃபாடோ கிளப்பிற்குச் செல்கிறோம். 223 00:13:42,198 --> 00:13:45,827 எங்களுடன் கொஞ்சம் வாசிக்கிறீர்களா? 224 00:13:47,746 --> 00:13:51,166 என்னை வாசிக்கும்படி கேட்டது அவரது பெருந்தன்மை. 225 00:13:51,708 --> 00:13:55,295 ஆனால் அவருடன் கிடார் வாசிக்க வேண்டும் என்ற எண்ணமே... 226 00:13:55,295 --> 00:13:58,882 நான் அவரது செட்டை நாசமாக்கிவிடுவேன். 227 00:13:58,882 --> 00:14:01,551 என்னால் உங்களுடன் வாசிக்க முடியுமா... 228 00:14:01,551 --> 00:14:03,053 - முயற்சி செய்யுங்கள். - ...எனத் தெரியவில்லை. 229 00:14:03,053 --> 00:14:04,763 ம். ம்ம். 230 00:14:04,763 --> 00:14:09,851 தவறான இடத்தில் தவறான நோட்டை வாசித்து அவரது கோபத்தை எழுப்ப விரும்பவில்லை. 231 00:14:10,602 --> 00:14:13,313 நான் பல ஆண்டுகளாக கிடார் வாசிக்கவில்லை. 232 00:14:13,313 --> 00:14:16,233 என்னை நம்புங்கள், எனக்கு பொதுவில் அவமானப்படுவது பிடிக்காது. 233 00:14:17,776 --> 00:14:20,237 ஆனால் மேடையில் ஹெல்டருடன் இணைவது 234 00:14:20,237 --> 00:14:24,032 எனக்குத் தேவையான சுய கண்டுபிடிப்பின் பயணமாக இருக்கலாம். 235 00:14:28,078 --> 00:14:33,333 இது லிஸ்பனின் அற்புதமான, கதகதப்பான 220 நாட்களில் ஒரு நாளாகும். 236 00:14:35,335 --> 00:14:38,588 நான் புதிய விஷயங்களை முயற்சிப்பது என்றால் பயப்படுவது அனைவருக்கும் தெரியும், 237 00:14:38,588 --> 00:14:41,633 அது என் வயிறு விஷயத்தில் இன்னும் உண்மை. 238 00:14:42,467 --> 00:14:44,886 ஆனால் இந்த இடம் உணவுப் பிரியர்களுக்கானது, 239 00:14:44,886 --> 00:14:48,098 அதனால் அதன் உணவுகளை முயற்சிக்க நகரத்திற்குள் செல்கிறேன். 240 00:14:48,723 --> 00:14:50,684 முதலில், நான் அங்கே செல்ல வேண்டும். 241 00:14:51,726 --> 00:14:56,147 லிஸ்பனின் மிகவும் தனித்துவமான போக்குவரத்து முறை டிராம் தான். 242 00:14:56,147 --> 00:15:00,068 என் அளவிற்கு யாரும் உடற்பயிற்சியை விரும்ப மாட்டார்கள், தவறாக எண்ணாதீர்கள். 243 00:15:00,944 --> 00:15:02,737 ஆனால் நிறைய குன்றுகள் உள்ளன. 244 00:15:03,530 --> 00:15:06,992 அமெரிக்காவில் உள்ள கேபிள் கார்களால் ஊக்கம் பெற்று உருவாக்கப்பட்ட இவை, 245 00:15:06,992 --> 00:15:09,786 தொடக்கத்தில் அமெரிக்கானோ என்று அழைக்கப்பட்டன. 246 00:15:10,829 --> 00:15:12,163 நான் இதுவரை டிராமில் சென்றதில்லை. 247 00:15:12,872 --> 00:15:18,253 டொரான்டோவில் ஸ்ட்ரீட்கார்கள் உள்ளன, ஆனால் டிராம்கள் இல்லை. 248 00:15:20,297 --> 00:15:25,594 டிராமா இல்லாத போக்குவரத்தையே நான் எப்போதும் விரும்புவேன். 249 00:15:31,766 --> 00:15:34,311 - இங்கே ஒரு பிரச்சினை என நினைக்கிறேன். - பிரச்சினையா? 250 00:15:34,895 --> 00:15:35,812 கார் தவறாக பார்க் செய்யப்பட்டுள்ளது. 251 00:15:36,396 --> 00:15:38,481 இதற்கு நான் எதாவது செய்ய வேண்டும். 252 00:15:42,068 --> 00:15:46,531 இங்கே கார் பார்க் செய்யப்பட்டுள்ளது. டிராக்குக்கு மிக அருகே உள்ளது. 253 00:15:47,699 --> 00:15:51,453 அது போன்ற ஒரு அவசரச் சூழலை நான் எதிர்பார்க்கவில்லை. 254 00:15:52,120 --> 00:15:54,915 - அப்படியே கொண்டு செல்லுங்கள். - இல்லை. 255 00:15:55,957 --> 00:15:58,919 நானாக இருந்தால், அப்படியே ஓட்டிச் சென்று 256 00:15:58,919 --> 00:16:02,088 காரின் முன்பகுதியை எடுத்துவிடுவேன், தெரியுமா? 257 00:16:02,088 --> 00:16:03,256 அதை நீங்கள் செய்ய முடியாதா? 258 00:16:03,256 --> 00:16:05,217 - அதை இடித்துச் செல்ல முடியாதா? - இல்லை, முடியாது. 259 00:16:05,217 --> 00:16:07,302 - அது என் தவறாகும். - ஆனால் இது அவரது பிரச்சினை. 260 00:16:07,302 --> 00:16:08,887 இது அடிக்கடி நடக்குமா? 261 00:16:09,721 --> 00:16:11,598 ஆம், அடிக்கடி. 262 00:16:11,598 --> 00:16:17,270 அந்தக் காருக்கு அபராதம் விதிக்கப்படும், அப்போதும் அங்கேயே இருந்தால், வண்டி இழுத்துச் செல்லப்படும். 263 00:16:17,938 --> 00:16:20,899 எல்லாம் சரியாகிவிடும். இதைத்தான் நான் மகிழ்ச்சியான முடிவு என்பேன். 264 00:16:21,858 --> 00:16:25,278 ஆனால் நீதி கிடைக்கும் வரை காத்திருக்க எனக்கு நேரமில்லை. 265 00:16:25,278 --> 00:16:30,951 உணவுகளைத் தேடி நான் நடந்துசெல்ல வேண்டிய கட்டாயம் போலத் தெரிகிறது. 266 00:16:30,951 --> 00:16:33,161 யூஜீன், நான் லூயிசா. 267 00:16:33,161 --> 00:16:36,665 - லூயிசா, உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. - அடுத்த சில மணிநேரத்திற்கு 268 00:16:36,665 --> 00:16:38,166 உங்கள் நலத்திற்கு நானே பொறுப்பு. 269 00:16:38,166 --> 00:16:39,084 ஆஹா! 270 00:16:39,084 --> 00:16:42,045 என் வயிற்றுக்குள் செல்பவைக்கு நீங்கள்தான் பொறுப்பு. 271 00:16:42,045 --> 00:16:45,298 போர்ச்சுகலில் நாங்கள் ஏன் உணவை விரும்புகிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 272 00:16:45,298 --> 00:16:49,177 எங்களுக்குப் பிடித்த முதல் விஷயம் உணவு, இரண்டாவது உணவு, மூன்றாவது உணவும் சூரியனும். 273 00:16:49,177 --> 00:16:50,387 எனக்கு நன்றாகப் புரிகிறது. 274 00:16:50,387 --> 00:16:54,641 உங்கள் மதிய உணவைச் சமைப்பதற்குத் தேவையானவற்றை வாங்குவோம். 275 00:16:54,641 --> 00:16:58,478 லூயிசா இங்கே சமையல் வகுப்புகள் எடுக்கும் உள்ளூர் சமையல்காரர். 276 00:16:58,478 --> 00:17:02,107 இதுதான் லிஸ்பனில் இருக்கும் சிறந்த சந்தை. 277 00:17:02,107 --> 00:17:04,276 நான் தினமும் இங்கே வருவேன், ஏன் தெரியுமா? 278 00:17:04,276 --> 00:17:07,112 உணவின் மூலம் ஒரு நாட்டையும் கலாச்சாரத்தையும் 279 00:17:07,112 --> 00:17:09,030 - தெரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். - உண்மைதான். 280 00:17:09,613 --> 00:17:13,868 லிஸ்பனில் நாங்கள் சர்வதேச உணவுகள் பற்றி அக்கறை கொள்கிறோம். 281 00:17:13,868 --> 00:17:18,957 உலகம் முழுவதிலும் இருந்து பல சுவைகளையும் மசாலாக்களையும் போர்ச்சுகளுக்குக் கொண்டுவந்துள்ளோம். 282 00:17:18,957 --> 00:17:21,668 பரந்துபட்ட போர்ச்சுகீசிய வர்த்தக நெட்வொர்க்கானது 283 00:17:21,668 --> 00:17:26,339 ஆப்பிரிக்கா, இந்தியா, தூரத்து கிழக்கு நாடுகள் போன்றவற்றின் உணவுகளைக் கொண்டுவந்துள்ளது. 284 00:17:26,339 --> 00:17:32,220 - போர்ச்சுகீசிய உணவுகளில் சுவையாக இருக்கும்... - வாவ். 285 00:17:32,220 --> 00:17:36,224 ...உணவுகளில் ஒன்றாக பிரி பிரி சாஸ் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். 286 00:17:36,224 --> 00:17:37,726 உங்களுக்கு பிரி பிரி சாஸ் பிடிக்கும். 287 00:17:37,726 --> 00:17:42,314 இங்கிருந்த மாலுமிகள் மொஸாம்பிக்கில் மிகவும் காரமான பறவைக் கண் மிளகாயைக் 288 00:17:42,314 --> 00:17:44,608 கண்டறிந்து பிரி பிரியை உருவாக்கினார்கள். 289 00:17:44,608 --> 00:17:47,319 அது ஸ்வாஹிலியில் “மிளகாய், மிளகாய்” என்று அர்த்தம். 290 00:17:48,320 --> 00:17:51,156 அது மிகவும் காரமாக இருந்ததால், இரண்டு முறை பெயரிட்டுள்ளனர். 291 00:17:51,156 --> 00:17:54,075 - இது காரமாகத் தெரிகிறது. காரமாக இருக்குமா? - எல்லாமே மிகவும் காரமாக இருக்கும். 292 00:17:54,075 --> 00:17:56,286 - ஐயோ எனும் அளவிற்குக் காரமா? - ஆம். 293 00:17:56,870 --> 00:17:59,581 இருந்தாலும் போர்ச்சுகீசியர்கள் “எனக்கு கெட்ச்சப் தான் பிடிக்கும்” 294 00:17:59,581 --> 00:18:01,833 என்று கூறுவதற்குப் பிரபலமானவர்களாக இருக்க விரும்புகிறேன். 295 00:18:03,126 --> 00:18:07,923 அடுத்து மெனுவில் இருப்பது, உள்ளூர்வாசிகளுக்கு பிரி பிரியைவிட அதிகம் பிடித்த ஒன்று. 296 00:18:07,923 --> 00:18:08,840 மீன். 297 00:18:09,424 --> 00:18:12,761 ஜப்பானும் ஐஸ்லாந்தும்தான் ஒரு நபருக்கு அதிகமாக மீன் சாப்பிடும் நாடு. 298 00:18:12,761 --> 00:18:16,514 நாம் சமைக்கப் போகும் மீன் அதுதான். 299 00:18:17,182 --> 00:18:18,183 அடக் கடவுளே. 300 00:18:19,059 --> 00:18:22,187 எனக்கு மீன் சந்தைகள் ஒருபோதும் பிடித்ததில்லை, 301 00:18:22,771 --> 00:18:24,981 மீன்களுக்கும் அப்படித்தான் என நினைக்கிறேன். 302 00:18:28,735 --> 00:18:29,736 எனக்கு அது கேட்கிறது. 303 00:18:30,445 --> 00:18:31,446 நொறுங்கும் சத்தம் கேட்கிறது. 304 00:18:32,864 --> 00:18:34,074 வாவ். 305 00:18:39,162 --> 00:18:41,623 அதனால்தான் என்னை படகுத்துறையில் பார்க்க முடியாது. 306 00:18:43,708 --> 00:18:47,170 அடுத்த பல ஆண்டுகளுக்கு அந்த மீனின் கண்களில் இருக்கும் 307 00:18:47,170 --> 00:18:48,255 பார்வை என் கண் முன்னே வந்துபோகும். 308 00:18:53,426 --> 00:18:56,513 ஆனால் இப்போது நான் கொஞ்சமும் தயாராக இல்லாத விஷயம். 309 00:18:57,013 --> 00:18:59,766 என் பணிவான வீட்டுக்கு வரவேற்கிறேன். 310 00:18:59,766 --> 00:19:00,684 சமைப்பது. 311 00:19:02,435 --> 00:19:07,399 யூஜீன், பிரி பிரி சாஸுக்குத் தேவையான பொருட்கள் நம்மிடம் உள்ளன. 312 00:19:07,399 --> 00:19:09,025 நான் இதை வெட்டப் போகிறேன். 313 00:19:09,025 --> 00:19:10,986 - முதலில், இதை அப்படி வெட்டப் போகிறேன். - சரி. 314 00:19:10,986 --> 00:19:12,028 அதை வெட்ட வேண்டுமா? 315 00:19:12,028 --> 00:19:14,781 - அதற்கு முன் உரிக்க வேண்டும், யூஜீன். - என்ன? ஓ, அதை உரிக்க வேண்டுமா? 316 00:19:14,781 --> 00:19:16,283 - ஆம். - ஓ, சரி. 317 00:19:16,283 --> 00:19:18,243 - வெங்காயங்களை உரிக்க வேண்டும். - வெவ்வேறு கலாச்சாரங்கள். 318 00:19:19,536 --> 00:19:22,539 எனக்கு உணவைச் சாப்பிடுவது பிடிக்கும். அதைச் செய்வது அவ்வளவாகப் பிடிக்காது, தெரியுமா? 319 00:19:22,539 --> 00:19:26,001 சமைக்கும்போது பிறரைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ளலாம், இல்லையா? 320 00:19:26,001 --> 00:19:30,088 இதற்கு மேலும்... இதைத் தொடர... எனக்கு பயமாக உள்ளது. 321 00:19:30,839 --> 00:19:35,135 என் மனைவியுடனான முதல் டேட்டில், 322 00:19:35,135 --> 00:19:39,890 நான் டீ போட்டேன் நான் டீபேகை கப்பில் போட்டு 323 00:19:39,890 --> 00:19:42,142 ஸ்பூனால் அதைப் பிழிந்தேன். 324 00:19:42,142 --> 00:19:44,227 அவர், “என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார். 325 00:19:44,227 --> 00:19:45,729 நான், “உனக்கு டீ போடுகிறேன்” என்றார். 326 00:19:45,729 --> 00:19:47,939 அவர், “டீயை ஊறவிட மாட்டீர்களா?” என்றார். 327 00:19:47,939 --> 00:19:50,108 நான், “அப்படி என்றால் என்ன என்று தெரியாது” என்றேன். 328 00:19:50,108 --> 00:19:52,819 நாங்கள் கொஞ்சம் விவாதித்தோம். அதுதான் எங்கள் முதல் டேட். 329 00:19:52,819 --> 00:19:55,488 அவரை மீண்டும் பார்ப்பது சிக்கலாக இருந்ததா? 330 00:19:55,488 --> 00:19:56,990 இல்லை, சிக்கல் எதுவும் இல்லை. 331 00:19:56,990 --> 00:20:00,201 என் குணாதிசயத்தால் அவர் மயங்கிவிட்டார். 332 00:20:00,201 --> 00:20:01,870 அவர் உங்களை மிகவும் நேசித்துள்ளார். 333 00:20:01,870 --> 00:20:03,371 ஆ, கண்டிப்பாக. 334 00:20:03,371 --> 00:20:04,915 நீங்கள் திருமணம் செய்து எத்தனை ஆண்டுகளாகின்றன? 335 00:20:04,915 --> 00:20:10,295 எங்களுக்குத் திருமணமாகி 45 ஆண்டுகள் ஆகின்றன. 336 00:20:11,087 --> 00:20:12,964 - வாவ், அற்புதம். - ஆம். 337 00:20:12,964 --> 00:20:16,593 மேலும்... எனக்குத் தெரிந்த நீண்டகால திருமண வாழ்க்கை என்னுடையதுதான். 338 00:20:16,593 --> 00:20:18,220 - உங்களுக்குத் திருமணமாகி... - 38 ஆண்டுகள் ஆகின்றன. 339 00:20:18,220 --> 00:20:19,137 - 38 ஆண்டுகளா? - ஆம். 340 00:20:19,137 --> 00:20:20,805 - அது மிகவும் நெருக்கமானது. - ஆம். 341 00:20:20,805 --> 00:20:22,015 - ஏழு ஆண்டுகளில் நான் வென்றுவிட்டேன். - ஆம். 342 00:20:22,015 --> 00:20:24,142 இப்போது விவாகரத்து வாங்குவதில் பயனில்லை. 343 00:20:25,685 --> 00:20:27,687 - இல்லை. - இல்லை. எந்த அர்த்தமும் இல்லை. 344 00:20:27,687 --> 00:20:31,566 என் மனைவி கூறுவது போல, மீண்டும் ஒரு புதிய உறவினர் கூட்டம் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 345 00:20:31,566 --> 00:20:32,943 - ஆம், அதேதான். - சரியா? 346 00:20:33,818 --> 00:20:37,113 நான் உங்கள் மனைவிக்கு ஒரு குறிப்பு எழுத வேண்டும், 347 00:20:37,113 --> 00:20:40,533 - ஏனெனில் உங்களுடன் அவர் கஷ்டப்படுகிறார். - ஆம். 348 00:20:41,284 --> 00:20:44,871 சாப்பிட்டுக்கொண்டே வேடிக்கை பார்ப்பதுதான் நான் செய்யும் 349 00:20:44,871 --> 00:20:47,499 சிறந்த விஷயம் என்று லூயிசா உணர்ந்துள்ளார். 350 00:20:48,083 --> 00:20:49,376 - மிளகாய்களா? - மிளகாய்கள். 351 00:20:49,376 --> 00:20:50,335 எலுமிச்சை. 352 00:20:50,835 --> 00:20:54,422 சரியான பிரி பிரியில், மிளகாயின் காரமானது 353 00:20:54,422 --> 00:20:59,803 நுட்பமான எலுமிச்சை, பூண்டு, வெங்காயம் மற்றும் உப்பின் கலவையால் குறைக்கப்படும். 354 00:21:00,303 --> 00:21:03,181 மேலும் என் பங்கு வேலையைச் செய்த பிறகு... 355 00:21:04,015 --> 00:21:05,475 - கச்சிதமா? - கச்சிதம். 356 00:21:05,475 --> 00:21:06,893 ...சாஸ் தயாரானது. 357 00:21:06,893 --> 00:21:10,063 நான் மீனை ஊறவைக்கப் போகிறேன். 358 00:21:10,063 --> 00:21:12,857 போர்ச்சுகீசிய வழக்கத்தைப் பின்பற்றி, 359 00:21:12,857 --> 00:21:17,153 லூயிசா அந்த மீனை இன்னும் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகிறார். 360 00:21:17,153 --> 00:21:19,364 மீன் அந்தப் பாலில் உட்கார்ந்துள்ளது. 361 00:21:20,865 --> 00:21:22,951 - என்ன? - நீங்கள் என் பேரக் குழந்தைகளைவிட மோசம். 362 00:21:22,951 --> 00:21:24,160 நான் தேர்வுசெய்து சாப்பிடுபவன். 363 00:21:24,160 --> 00:21:27,497 - இது மீனை... - மீனை மென்மையாக்குமா? 364 00:21:27,497 --> 00:21:29,749 - ...மென்மையாக்கும். சாப்பிடும்போது தெரியும். - அப்படியா? 365 00:21:31,835 --> 00:21:36,923 அவர் மிகவும் நம்பிக்கையைக் கொடுப்பதால், நான் அவரை அதிகமாக நம்புகிறேன். 366 00:21:38,091 --> 00:21:39,384 எனக்குப் பதட்டமாக உள்ளது. 367 00:21:40,802 --> 00:21:44,931 மீன், பிரி பிரி சாஸ். ஆனால் ஜாக்கிரதை. 368 00:21:46,016 --> 00:21:47,017 சரி. 369 00:21:52,939 --> 00:21:56,026 அடக் கடவுளே. இது அற்புதமாக உள்ளது. 370 00:21:57,193 --> 00:22:00,947 நான் போர்ச்சுகலில் சாப்பிட்டதிலேயே சிறந்த உணவு இதுதான். 371 00:22:00,947 --> 00:22:03,825 அற்புதம். என்னை நம்பியதற்கு நன்றி. 372 00:22:03,825 --> 00:22:07,579 நான் உணவைச் சமைக்க மோசமாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன். 373 00:22:09,039 --> 00:22:11,333 லூயிசாவின் கட்டளைகளை ஏற்பதில் எனக்குப் பிரச்சினையில்லை. 374 00:22:11,833 --> 00:22:13,793 - இந்த மீனுக்காக. - இந்த மீனுக்காக. 375 00:22:15,629 --> 00:22:18,965 லிஸ்பன் கண்டிப்பாக மக்கள் மீது வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 376 00:22:19,466 --> 00:22:23,386 நான் புதிய விஷயங்களை முயற்சி மட்டும் செய்யவில்லை, சிலவற்றை எனக்குப் பிடித்துள்ளது. 377 00:22:24,512 --> 00:22:28,516 இந்த நகரத்தின் சாகச விருப்பம் என்னையும் தாக்கியிருக்கலாம். 378 00:22:30,018 --> 00:22:34,189 ஆனால் ஹெல்டரின் நிகழ்ச்சிக்குத் தயாராவது இன்னும் பெரிய சவால். 379 00:22:34,898 --> 00:22:37,692 எனக்கு எல்லாமே நினைவுக்கு வரவில்லை. 380 00:22:39,361 --> 00:22:41,655 நான் நீண்ட காலமாக கிடாரை எடுக்கவில்லை. 381 00:22:41,655 --> 00:22:47,160 நான் வாசிப்பதைக் கேட்டால், ஓரிரு மோசமான சத்தங்களைக் கேட்கலாம். 382 00:22:47,911 --> 00:22:51,748 நான் மேடையில் நிறைய சிணுங்கக்கூடும். 383 00:22:52,499 --> 00:22:57,087 என் வாசிப்பால் அந்த நிகழ்ச்சியே மிகவும் சோகமானதாக மாறலாம். 384 00:22:57,087 --> 00:23:00,549 ஆனால் அதுதான் ஃபாடோ இசை, இல்லையா? சரிதானே? 385 00:23:01,091 --> 00:23:05,095 இந்த நபருடன் ஒரு சிறப்பான இசைக் கலைஞருக்கான ஏக்கத்திற்கு 386 00:23:05,887 --> 00:23:08,515 என்னால் பங்களிக்க முடிவதில் மகிழ்ச்சி. 387 00:23:10,767 --> 00:23:14,813 நான் இரவு முழுவதும் பயிற்சி செய்ய வேண்டியிருக்கலாம். 388 00:23:22,946 --> 00:23:28,243 இன்று காலை, ஹோட்டல் உரிமையாளர் கீஸ் என்னை கற்கள் மீது நடக்கக் கூட்டிச் செல்கிறார், 389 00:23:28,243 --> 00:23:30,662 இது நன்றாக இருக்கும் என உறுதியளித்துள்ளார். 390 00:23:30,662 --> 00:23:33,456 குட் மார்னிங். 391 00:23:33,456 --> 00:23:37,043 - அருமையான ஸ்டைல். எனக்குப் பிடித்துள்ளது. - அப்படியா? 392 00:23:37,043 --> 00:23:40,839 இந்த உடையை அணிந்தால் என் மகன் 393 00:23:40,839 --> 00:23:42,132 - மிகவும் உற்சாகமாகிவிடுவான். - அப்படியா? 394 00:23:43,466 --> 00:23:46,845 டச்சுக்காரரான கீஸ் உலகம் முழுவதும் சுற்றிய பிறகு இங்கே 395 00:23:46,845 --> 00:23:48,513 40 ஆண்டுகளுக்கு முன் இங்கே குடியேறியுள்ளார். 396 00:23:49,639 --> 00:23:51,182 லிஸ்பன் உலகிலேயே மிகவும் அழகான 397 00:23:51,182 --> 00:23:54,269 இடங்களில் ஒன்று என்பதால் இங்கே வாழ வந்தேன். 398 00:23:54,269 --> 00:23:57,063 அதற்கு என்னைச் சம்மதிக்க வைக்கு முயற்சியில், 399 00:23:57,063 --> 00:24:00,817 என் மனதைத் தொடும் வழியை அவர் கண்டறிந்தார்: பேஸ்ட்ரிகள். 400 00:24:00,817 --> 00:24:04,696 உங்களுக்கு கொஞ்சம் சிறிய கஸ்டர்டு டார்ட்டுகள் வாங்க அனுமதிப்பீர்கள் என நினைக்கிறேன். 401 00:24:04,696 --> 00:24:06,197 கஸ்டர்ட் டார்ட்டுகளா? 402 00:24:06,197 --> 00:24:09,367 அடடா. இவற்றை எனக்குப் பிடித்துள்ளது. 403 00:24:09,367 --> 00:24:11,995 பாஸ்டல் டி நாடஸ் உருவாகக் காரணம், தங்கள் உடைகளுக்குக் 404 00:24:11,995 --> 00:24:15,498 கஞ்சி போட முட்டையின் வெள்ளைக் கருவைப் பயன்படுத்திய கன்னியாஸ்திரிகளே, 405 00:24:15,498 --> 00:24:19,085 மீதமிருந்த மஞ்சள் கருவானது நன்கு அடிக்கப்பட்டு கஸ்டர்டாக துறவிகளுக்குக் கொடுக்கப்பட்டன. 406 00:24:19,586 --> 00:24:21,838 துறவிகளுக்கு ஆசீர்வாதம் கிடைக்கட்டும். எப்படி? 407 00:24:22,464 --> 00:24:23,465 என்னால் காத்திருக்க முடியவில்லை. 408 00:24:29,262 --> 00:24:31,973 ஒவ்வொரு தெருவிலும் நிறைய டைல்கள் இருப்பதைப் பார்க்கலாம். 409 00:24:31,973 --> 00:24:32,891 ஓ. 410 00:24:32,891 --> 00:24:36,186 லிஸ்பன் அல்லது போர்ச்சுகலில் இவற்றை அஸுலேஹோஸ் என்போம். 411 00:24:36,686 --> 00:24:40,148 இந்த வண்ணம் தீட்டப்பட்ட டைல்கள் மூர்களில் இருந்து தோன்றியவை. 412 00:24:40,148 --> 00:24:44,361 அஸுலேஹோஸ் என்ற அரேபிய வார்த்தைக்கு, “பாலிஷ் செய்யப்பட்ட கற்கள்” என்று அர்த்தம். 413 00:24:45,445 --> 00:24:50,116 - இந்த டைல்கள் இப்போதும் லிஸ்பனில் உருவாகின்றனவா? - கண்டிப்பாக. 414 00:24:50,116 --> 00:24:54,079 நம் ஹோட்டலில் இருக்கும் டைல்கள் எல்லாம் நீண்ட காலமாகச் செய்துவரும் 415 00:24:54,079 --> 00:24:55,789 தொழிற்சாலைகளில் கைகளால் உருவாக்கப்பட்டவை. 416 00:24:56,915 --> 00:25:01,753 எனக்கு முன்பு தெரியாத இந்த நகரத்தின் குணாதிசயத்தை 417 00:25:01,753 --> 00:25:04,172 இப்போது கண்டறியத் தொடங்குகிறேன். 418 00:25:05,840 --> 00:25:07,175 இது அற்புதமாக உள்ளது. 419 00:25:07,175 --> 00:25:11,054 யூஜீன், பாஸ்டல் டி நாடஸைச் சாப்பிடும் நேரம் இதுதான் என நினைக்கிறேன். 420 00:25:11,054 --> 00:25:13,640 என்னைப் புரிந்துகொள்ளும் மனிதர். 421 00:25:14,307 --> 00:25:15,267 - சீயர்ஸ். - சீயர்ஸ். 422 00:25:22,107 --> 00:25:23,108 அடடா. 423 00:25:23,608 --> 00:25:25,735 அந்த டார்ட்டுகள் அற்புதமாக இருந்தன. 424 00:25:26,236 --> 00:25:29,823 அவை மிகவும் சுவையாக இருந்தன. 425 00:25:30,949 --> 00:25:31,783 வாவ். 426 00:25:31,783 --> 00:25:35,078 அந்த டார்ட்டுகளுக்காகவே லிஸ்பனுக்கு வரலாம். 427 00:25:35,078 --> 00:25:36,538 அப்படியே வாயில் போடுவோம். 428 00:25:36,538 --> 00:25:41,334 நான் லிஸ்பனின் தலைமை கஸ்டர்ட் டார்ட் சுவை பார்ப்பவர் வேலையை தன்னார்வத்துடன் செய்வேன், 429 00:25:41,334 --> 00:25:43,795 {\an8}ஆனால் கீஸ் எனக்கு வேறு வேலை வைத்திருந்தார். 430 00:25:44,546 --> 00:25:48,842 {\an8}நகரத்தின் பழமையான டைல் தொழிற்சாலை ஒன்றுக்குச் செல்லும்படி பரிந்துரைத்தார். 431 00:25:49,676 --> 00:25:56,141 இங்கே அவர்கள் ஒரு நாளைக்கு 20,000 டைல்கள் வரை 432 00:25:56,141 --> 00:25:58,518 உருவாக்கி, பெயின்ட் செய்கின்றனர். 433 00:26:01,479 --> 00:26:03,231 நான் டியோகோவைச் சந்திக்கிறேன், 434 00:26:03,899 --> 00:26:07,360 இவர் சமகாலத்திய டிசைனை செராமிக்ஸுக்குள் கொண்டு வந்தவர். 435 00:26:07,986 --> 00:26:10,864 ஒரு நுட்பமான கலைஞர் இன்னொரு நுட்பமான கலைஞரைச் சந்திக்கிறேன். 436 00:26:11,448 --> 00:26:12,824 - நான் டியோகோ. - டியோகோ. 437 00:26:12,824 --> 00:26:14,743 - யூஜீன். - நீங்கள்தான் அவர். 438 00:26:15,327 --> 00:26:19,956 டியோகோவின் டைல்களில் அஸுலேஹோஸின் வரலாற்று நீலமும் வெள்ளையும் பயன்படுத்தப்படுகின்றன. 439 00:26:20,624 --> 00:26:23,919 என் படைப்பு பாரம்பரியமானதாகத் தெரிவதுதான் இதில் ட்விஸ்ட். 440 00:26:23,919 --> 00:26:25,170 இது பாரம்பரியமானது இல்லை. 441 00:26:26,129 --> 00:26:31,134 என் கவனமானது பேட்டர்ன்களுக்குள் இருக்கும் பேட்டர்ன்களும் உறுப்புகளும்தான். 442 00:26:31,134 --> 00:26:33,386 - சரி. - இந்தப் பேட்டர்னைப் பார்த்தால், 443 00:26:33,386 --> 00:26:38,058 இது ஒரு சிறிய விலங்கு அல்லது கார்ட்டூனை வைத்து வரையப்பட்டதாக்த் தெரியலாம்... 444 00:26:38,058 --> 00:26:39,851 ஓ. எனக்குத் தெரிகிறது. 445 00:26:40,352 --> 00:26:44,731 டியோகோவின் குறுகியகால டைல்கள் ஒவ்வொன்றும் நூற்றுக்கணக்கான டாலர்களுக்குப் போகும். 446 00:26:45,315 --> 00:26:47,817 அவர்கள் அதை கையாலேயே வண்ணம் தீட்டுகின்றனர். 447 00:26:48,944 --> 00:26:53,323 மனுவேலா இதோ உள்ளார். இவர்தான் டைல் வண்ணம் தீட்டலில் நிபுணர். 448 00:26:55,617 --> 00:26:57,744 இவர் இங்கே 42 ஆண்டுகளாக வேலை செய்கிறார். 449 00:26:58,453 --> 00:27:00,330 42 ஆண்டுகளா? அற்புதம். 450 00:27:01,957 --> 00:27:03,375 நீங்கள் முயற்சிக்க விரும்புகிறீர்களா எனக் கேட்கிறார். நீங்கள் முயற்சிக்கிறீர்களா? 451 00:27:03,375 --> 00:27:06,002 - நீங்கள் முயற்சிக்க வேண்டும். - வண்ணம் தீட்டவா? எனக்குத் தெரியவில்லை. 452 00:27:06,002 --> 00:27:08,296 அவரது மதிப்புமிக்க டிசைன்களில் 453 00:27:08,296 --> 00:27:11,967 என்னை வரையவிடுவது நல்ல யோசனைதான். 454 00:27:11,967 --> 00:27:15,053 - பார்த்தீர்களா? - ஓ. இங்கே தொடங்குகிறேன். 455 00:27:16,263 --> 00:27:18,557 - அப்படித்தான். - சரி. 456 00:27:19,307 --> 00:27:21,017 நான் என் டைலில் நன்றாகத் தொடங்கினேன். 457 00:27:21,810 --> 00:27:23,728 எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. 458 00:27:23,728 --> 00:27:25,939 ம், நீங்கள் நன்றாக வரைகிறீர்கள். 459 00:27:25,939 --> 00:27:27,983 இப்போது உங்களுக்கு நான் சவாலை உருவாக்கப் போகிறேன். 460 00:27:27,983 --> 00:27:29,276 அப்படியா? 461 00:27:29,276 --> 00:27:32,821 இதில் இந்த வெள்ளைக் கோடுகள் உள்ளன. 462 00:27:32,821 --> 00:27:35,865 அந்த வெள்ளைக் கோடுகளைச் சுற்றி நாம் என்ன வரைவது? 463 00:27:35,865 --> 00:27:37,325 - அது... - நான்... 464 00:27:37,325 --> 00:27:39,828 நான் வேறொருவரை அழைப்பேன், ஆனால்... 465 00:27:40,537 --> 00:27:43,331 - நானே இதைச் செய்கிறேன். அங்கே. - நன்றாக உள்ளது. 466 00:27:43,331 --> 00:27:47,210 என் அப்பா அற்புதமான ஒரு கலைஞர். அவர் கேலிச் சித்திரங்கள் வரைபவர். 467 00:27:47,919 --> 00:27:49,838 நிலையான கைகள். நிலை. 468 00:27:49,838 --> 00:27:52,173 - தயாரா? - நீங்கள் தயார் என்றால் தயார். 469 00:27:57,971 --> 00:28:00,307 அவரிடமிருந்து... எந்தத் திறமையும் எனக்கு வரவில்லை. 470 00:28:00,307 --> 00:28:03,351 அது மோசம். அது நாசமாகிவிட்டது. 471 00:28:04,519 --> 00:28:05,770 அந்த மரபணுவுக்கு என்னவானது? 472 00:28:07,606 --> 00:28:08,899 - நாம் கூட்டுப்பணியாற்றியுள்ளோம், யூஜீன். - சரி. 473 00:28:08,899 --> 00:28:10,775 - இதில் உங்களுக்கு மகிழ்ச்சி என நம்புகிறேன். - வாவ். 474 00:28:11,902 --> 00:28:13,778 அவர் மிகவும் திறமைசாலி. 475 00:28:15,238 --> 00:28:18,575 எனக்கு இங்கே பெருமை கிடைக்கவில்லை, 476 00:28:18,575 --> 00:28:24,873 ஆனால் இன்றிரவு கூட்டுப்பணியாற்றுவதில் எனக்குச் சாதகமாக நடக்கும் என நம்புகிறேன். 477 00:28:24,873 --> 00:28:26,333 அதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள். 478 00:28:26,333 --> 00:28:27,542 அடடா. 479 00:28:34,758 --> 00:28:35,842 மோசமில்லை. 480 00:28:37,844 --> 00:28:41,640 போர்ச்சுகலின் சிறந்த ஃபாடோ பாடகர்களில் ஒருவரைப் பார்ப்பதற்காக 481 00:28:41,640 --> 00:28:45,143 பல மணிநேரம் கழித்து கூட்டத்தினர் ஒன்றுசேரத் தொடங்கினர். 482 00:28:45,143 --> 00:28:47,062 இவரைப் பார்த்தால் பாவமாக உள்ளது. 483 00:28:47,771 --> 00:28:50,899 அவர் எதில் சிக்கிக்கொண்டுள்ளார் என்று அவருக்குத் தெரியவில்லை. 484 00:28:50,899 --> 00:28:54,736 அவரது மிகவும் திறமை குறைவான கனடிய கிடார் கலைஞரையும் பார்க்க. 485 00:28:55,612 --> 00:28:57,656 - யூஜீன். - ஹலோ, யூஜீன். 486 00:28:57,656 --> 00:28:59,366 - ஹாய். - வரவேற்கிறேன். 487 00:28:59,366 --> 00:29:02,494 அதிர்ஷ்டவசமாக, என் புதிய போர்ச்சுகீசிய நண்பர்கள் சிலர்... 488 00:29:02,494 --> 00:29:03,954 - வாவ், மிகவும் ஸ்டைலாக உள்ளீர்கள். - வாவ். 489 00:29:03,954 --> 00:29:05,705 ...எனக்கு ஆதரவாக வந்திருந்தனர். 490 00:29:06,790 --> 00:29:09,751 இன்று நம்முடன் மிகவும் ஸ்பெஷலான விருந்தினர் இருக்கிறார். 491 00:29:10,335 --> 00:29:14,756 திரு. யூஜீன் லெவியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். 492 00:29:15,590 --> 00:29:18,885 நான் சில எளிய கார்டுகளை வாசித்தால் போதும், 493 00:29:18,885 --> 00:29:22,973 மற்ற இசையை நிபுணர்கள் பார்த்துக்கொள்வார்கள். 494 00:29:22,973 --> 00:29:27,102 அறை முழுவதும் ஃபாடோ ரசிகர்கள் முன்னிலையில் இருக்கும் வரை அது எளிதாகத்தான் தெரியும். 495 00:29:27,102 --> 00:29:28,770 நன்றி. 496 00:29:28,770 --> 00:29:30,981 - நான் பாடப் போவதில்லை. - சரி. 497 00:29:32,190 --> 00:29:37,237 இது என் முதல் ஃபாடோ இசை நிகழ்ச்சி. நான் சொதப்ப மாட்டேன் என நம்புகிறேன். 498 00:29:39,489 --> 00:29:40,490 மக்களே. 499 00:30:19,613 --> 00:30:21,197 இரண்டு, மூன்று, நான்கு. 500 00:30:29,331 --> 00:30:32,000 அங்கே வாசிப்பது மிகவும் பதட்டமாக இருந்தது, 501 00:30:32,000 --> 00:30:34,836 ஏனெனில் அவர்கள் மிகவும் நன்றாக வாசித்தனர். 502 00:30:39,549 --> 00:30:42,636 ஆனால் நான்... அதைச் சொதப்பவில்லை என நினைக்கிறேன். 503 00:30:45,388 --> 00:30:48,183 நான் நினைத்ததைவிட நன்றாக வாசித்தேன். 504 00:30:53,438 --> 00:30:55,357 யா, ஓ! 505 00:31:03,865 --> 00:31:05,200 நன்றி. 506 00:31:08,578 --> 00:31:09,663 இது வேடிக்கையாக உள்ளது. 507 00:31:12,249 --> 00:31:17,254 சில நாட்களுக்கு முன் இந்த நகரத்தைப் பற்றி எதுவும் தெரியாது என்பதை நம்ப முடியவில்லை. 508 00:31:17,963 --> 00:31:22,425 இந்த இடம் பற்றி எதுவும் தெரியாமல் இருந்ததில் இருந்து, 509 00:31:22,425 --> 00:31:23,969 இது எனக்கு நிறைய புரிய வைத்துள்ளது. 510 00:31:24,553 --> 00:31:29,307 பயணமும் சாகசமும் லிஸ்பனின் அடிப்படை குணத்திலேயே உள்ளது. 511 00:31:29,891 --> 00:31:35,647 போர்ச்சுகீசியர்கள் உலகைச் சுற்றி வந்து, புதியவை மற்றும் ஆடம்பரமானவற்றைக் கண்டறிந்து 512 00:31:35,647 --> 00:31:38,692 அவற்றை இந்த நகரத்துடன் ஒருங்கிணைத்துவிட்டனர். 513 00:31:39,276 --> 00:31:41,111 அது ஊக்கமளிப்பதாக உள்ளது. 514 00:31:41,695 --> 00:31:48,451 நான் இன்னும் அந்த சாகசத்திற்கான விருப்பத்துடன் சண்டையிடுவதாக உணர்கிறேன், தெரியுமா? 515 00:31:48,451 --> 00:31:52,914 எனக்கு இன்னும் அது வரவில்லை, ஆனால் நான் முயற்சிக்கிறேன். 516 00:31:52,914 --> 00:31:54,708 என் ஃபாடோ பிரீமியருக்கு. 517 00:31:54,708 --> 00:31:56,585 - ஆம். - ஆம்! 518 00:31:56,585 --> 00:32:01,298 உலகப் பயணியர் கிளப்பில் என்னை ஜூனியர் உறுப்பினராக 519 00:32:02,757 --> 00:32:04,509 இருப்பேன் என நினைக்கிறேன். 520 00:32:55,518 --> 00:32:57,562 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்