1 00:00:08,050 --> 00:00:12,305 ஒரு சிறந்த தத்துவஞானி “உலகமே ஒரு புத்தகம், அதில் பயணம் செய்யாதவர்கள், 2 00:00:13,098 --> 00:00:18,478 ஒரு பக்கத்தை மட்டுமே படிப்பவர்கள்” என்று கூறியுள்ளார். 3 00:00:26,903 --> 00:00:28,363 நான் இதைக் கூறியாக வேண்டும், 4 00:00:28,363 --> 00:00:32,616 நான் சில பக்கங்களைப் படித்துள்ளேன், எனக்கு அந்தப் புத்தகத்தில் பெரிய ஆர்வமில்லை. 5 00:00:33,535 --> 00:00:36,621 நான் பயணிப்பது குறித்து உற்சாகமின்றி இருக்க பல காரணங்கள் உள்ளன. 6 00:00:37,205 --> 00:00:39,666 குளிராக இருக்கும்போது, அசௌகரியமாக இருக்கும். 7 00:00:39,666 --> 00:00:41,501 ஆடையின்றி ஐஸ் நீச்சலா? 8 00:00:41,501 --> 00:00:44,379 - ஆம். - அது ஒரு மோசமான அழைப்பு. 9 00:00:46,756 --> 00:00:49,801 மிகவும் வெப்பமாக இருக்கும்போது, எப்படி இருக்கும் தெரியுமா? அசௌகரியமாக இருக்கும். 10 00:00:49,801 --> 00:00:51,887 என்னால் அவ்வளவு வேகமாக ஓட முடியாது. 11 00:00:52,470 --> 00:00:55,223 - ஆனால் எனக்கு 75 வயதாகிறது. - உங்களுக்கு உதவி வேண்டுமா? 12 00:00:55,223 --> 00:00:56,433 இல்லை, என்னால் முடியும். 13 00:00:57,142 --> 00:01:01,062 இது நான் அதிகம் பயணிக்க வேண்டிய நேரமாக இருக்கலாம். 14 00:01:06,818 --> 00:01:08,194 அடக் கடவுளே. 15 00:01:09,404 --> 00:01:11,823 முதல் முறையாக என் கையை யானையின் ஆசனவாய்க்குள் விடுகிறேன். 16 00:01:12,407 --> 00:01:13,658 நல்ல விஷயம் என்னவெனில், 17 00:01:14,659 --> 00:01:17,954 நான் சில அற்புதமான ஹோட்டல்களில் தங்குகிறேன். 18 00:01:17,954 --> 00:01:21,583 அடக் கடவுளே. இது அற்புதமாக இருக்கிறது. 19 00:01:26,504 --> 00:01:31,468 நிபந்தனை என்னவெனில், வெளியே இருப்பவற்றை நான் பார்க்கவும் ஒப்புக்கொண்டுள்ளேன். 20 00:01:31,468 --> 00:01:33,553 - பார்த்து காலை வையுங்கள். - நீங்கள் விளையாடவில்லை. 21 00:01:33,553 --> 00:01:35,639 - அழகான மலை. - அது ஓர் எரிமலை. 22 00:01:35,639 --> 00:01:36,640 அது எரிமலையா? 23 00:01:36,640 --> 00:01:40,435 என் வாழ்க்கை முழுவதும் நான் தவிர்த்த ஓர் உலகம். 24 00:01:40,435 --> 00:01:41,978 ஓ. சாடி. 25 00:01:42,729 --> 00:01:45,315 அடக் கடவுளே. 26 00:01:45,315 --> 00:01:48,526 உயிர்பிழைத்திருப்பதே சிறப்பாக இருக்கும். 27 00:01:48,526 --> 00:01:51,655 இதுதான் ஃபின்லாந்து நபருடன் நான் ஐந்து வோட்காக்கள் குடிக்கும் கடைசி முறை. 28 00:02:04,918 --> 00:02:06,836 நான் சொர்க்கத்திற்கு வந்துள்ளேன். 29 00:02:07,504 --> 00:02:10,423 அதில் சந்தேகமில்லை. மிகவும் அழகாக உள்ளது. 30 00:02:11,132 --> 00:02:12,884 இது யாருக்குத்தான் பிடிக்காது? 31 00:02:13,552 --> 00:02:15,720 இது கிறுக்குத்தனமாக இருக்கும், 32 00:02:15,720 --> 00:02:19,057 ஆனால் என்னைப் போல தண்ணீருக்குப் பயப்படும் நபருக்குப் பிடிக்காது. 33 00:02:19,057 --> 00:02:21,601 நான் நிலத்தை விரும்புபவன். 34 00:02:22,561 --> 00:02:27,524 நான் நீரற்ற நிலத்தில் இருக்கும்போது மகிழ்ச்சியாக இருப்பேன். 35 00:02:28,149 --> 00:02:31,069 என்னைச் சுற்றி தண்ணீர் இருக்கும்போது, அசௌகரியமாக உணர்வேன். 36 00:02:31,653 --> 00:02:34,072 இங்கே மிகப் பெரிய பெருங்கடல் உள்ளது. 37 00:02:35,240 --> 00:02:37,284 பெருங்கடலைத் தவிர எதுவும் தெரியவில்லை. 38 00:02:37,867 --> 00:02:40,537 மாலத்தீவுகள் 39 00:02:40,537 --> 00:02:44,165 இந்த ஆழமான நீலக் கடலின் அழகை நான் பாராட்டினாலும், 40 00:02:44,165 --> 00:02:47,460 கடலுக்குள் என்னைப் பார்த்தால், உதவியை அனுப்புங்கள். 41 00:02:47,460 --> 00:02:51,298 ஏனெனில் நான் கையசைப்பதற்கான வாய்ப்பைவிட மூழ்கிக்கொண்டிருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். 42 00:02:51,965 --> 00:02:53,925 நான் இந்தியப் பெருங்கடலின் நடுவே... 43 00:02:53,925 --> 00:02:55,969 ஒரு சிறு துகள் போல உணர்கிறேன். 44 00:02:56,845 --> 00:03:01,600 மனிதனுக்கு இரண்டு கால்கள் இருப்பது, தரையில் நடக்கத்தான். 45 00:03:02,100 --> 00:03:05,896 இது எனது கேஸ்ட் அவே திரைப்படம் போன்றது. 46 00:03:07,480 --> 00:03:10,150 என்னைக் காப்பாற்ற ஏதோவொன்று வரும் என நம்புகிறேன். 47 00:03:18,533 --> 00:03:19,743 மாலத்தீவுகள். 48 00:03:19,743 --> 00:03:26,291 வரலாற்றுக்கு முந்தைய எரிமலைகளால் உருவான, 600 மைல் நீள மணல் திட்டுகளும், பவளப் பாறைகளும். 49 00:03:27,417 --> 00:03:30,712 இந்த நாட்டில் ஒரு சதவீதம் மட்டுமே நிலம் உள்ளது. 50 00:03:31,296 --> 00:03:36,134 நான் மீதமிருக்கும் 99 சதவீதத்தைப் பழகிக்கொள்ள எனக்கு எந்த அவசரமும் இல்லை, 51 00:03:36,134 --> 00:03:39,179 அதனால் என் ஹோட்டலுக்கு கடல் விமானத்தில் செல்கிறேன். 52 00:03:39,179 --> 00:03:41,848 இதில் ஆக்ஸிஜன் இருக்கும் என நம்புகிறேன். 53 00:03:41,848 --> 00:03:43,934 ”கடல்” மற்றும் “விமானம்” என்ற சொற்கள் 54 00:03:43,934 --> 00:03:48,188 எனக்கு ”மூழ்குவது” மற்றும் “சிதைவுகள்” என்ற சொற்களை நினைவுப்படுத்துகின்றன. 55 00:03:48,855 --> 00:03:50,315 இருந்தாலும்... 56 00:03:50,315 --> 00:03:52,525 ஹாய், சார். மதிய வணக்கம். விமானத்திற்கு வரவேற்கிறேன். 57 00:03:52,525 --> 00:03:54,277 லைஃப் ஜாக்கெட் உங்கள் சீட்டுக்கு அடியில் உள்ளது. 58 00:03:54,277 --> 00:03:56,738 சீட் பெல்ட்டை அணிந்துகொண்டு, பயணத்தை ரசியுங்கள். 59 00:03:56,738 --> 00:03:58,281 மிக்க நன்றி. 60 00:04:00,659 --> 00:04:02,744 லைஃப் ஜாக்கெட்டுகளை அங்கே வைக்கக் கூடாது, இல்லையா? 61 00:04:02,744 --> 00:04:04,996 அவை ஏன் நமது மடியில் இருக்கவில்லை? 62 00:04:04,996 --> 00:04:06,248 அப்போதுதான் அதை உடனடியாக எடுக்க முடியும். 63 00:04:06,248 --> 00:04:08,250 சீட்டுக்கு அடியில்... எனக்குத் தெரியவில்லை. 64 00:04:08,250 --> 00:04:11,836 நாம் கீழே விழும்போது பதட்டமடைவோம். இல்லையா? 65 00:04:11,836 --> 00:04:14,881 நாம் பதட்டமடைந்து மிகவும் குழப்பமாகிவிடுவோம், இல்லையா? 66 00:04:14,881 --> 00:04:17,800 ”அவர் என்ன கூறினார்? 67 00:04:18,343 --> 00:04:19,636 லைஃப் ஜாக்கெட் எங்கே உள்ளது? 68 00:04:19,636 --> 00:04:21,304 அவர் என்ன கூறினார்? சீட்டுக்கு அடியிலா?” என்று யோசிப்பீர்கள். 69 00:04:27,394 --> 00:04:28,979 பைலட்டுகள் ஷூக்கள் அணியவில்லை. 70 00:04:30,146 --> 00:04:35,151 ஏனெனில் தண்ணீரில் விழுந்துவிட்டால், ஷூக்கள் உங்களை மூழ்கடிக்கும். 71 00:04:50,542 --> 00:04:52,627 இது அழகாக உள்ளது. 72 00:04:52,627 --> 00:04:55,964 எனக்கு நீருக்கு மேல் இந்தத் தீவுகள், அற்புதமான வண்ணங்கள் தெரிகின்றன. 73 00:04:55,964 --> 00:04:58,008 இதற்கு முன் அதைப் பார்த்ததில்லை. 74 00:04:59,843 --> 00:05:03,346 மாலத்தீவுகளீல் 1,200 தீவுகள் உள்ளன, 75 00:05:03,346 --> 00:05:06,182 ஆனால் வெறும் 200 தீவுகளில்தான் மக்கள் வசிக்கின்றனர். 76 00:05:06,975 --> 00:05:11,688 {\an8}நாம் அவற்றில் ஒன்றுக்குச் செல்வோம் என நம்புகிறேன், ராபின்சன் க்ரூஸோ போல இல்லை. 77 00:05:13,064 --> 00:05:15,233 இது எப்படி இறங்கும் எனத் தெரியவில்லை. 78 00:05:15,233 --> 00:05:18,111 இது நீரில் மோதிவிடும் என நினைக்கிறேன். 79 00:05:21,239 --> 00:05:23,283 அடக் கடவுளே. நாம் தண்ணீரில் மோதுகிறோம். 80 00:05:35,378 --> 00:05:36,630 பயத்தில் உள்ளங்கை வியர்த்துவிட்டது. 81 00:05:41,676 --> 00:05:46,348 சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த குடாடூ தீவு, வெறும் மணல் திட்டாகத்தான் இருந்தது. 82 00:05:47,349 --> 00:05:51,061 அதன்பிறகு, இவர்கள் இதில் 45 மில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளனர், 83 00:05:51,645 --> 00:05:53,813 அதாவது உலகத்திலேயே மிகவும் விலையுயர்ந்த 84 00:05:53,813 --> 00:05:58,235 மணற்கோட்டையில் வசிக்க, நான் அதிர்ஷ்டம் செய்துள்ளேன். 85 00:05:59,611 --> 00:06:02,322 இந்த ரிசார்ட் ஆடம்பரமான ஓய்வுக்கு உறுதியளிக்கிறது, 86 00:06:02,322 --> 00:06:03,740 இதை உறுதிப்படுத்த, 87 00:06:03,740 --> 00:06:07,702 நான் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே, என் வருகைக்குத் திட்டமிடத் தொடங்கிவிட்டனர். 88 00:06:07,702 --> 00:06:10,080 ஒரு வாரத்திற்கு முன்பு 89 00:06:12,916 --> 00:06:19,798 இது அந்த ஹோட்டல் அனுப்பிய விருப்பப் படிவம், பயணிப்பதற்கு முன் இதை 90 00:06:19,798 --> 00:06:24,261 நான் நிரப்ப வேண்டும். 91 00:06:25,178 --> 00:06:27,180 ”தலைப்பு”. 92 00:06:27,180 --> 00:06:30,850 சரி. “திரு, திருமதி, மாஸ்டர், டாக்டர், 93 00:06:31,393 --> 00:06:32,477 ராஜா.” 94 00:06:33,603 --> 00:06:36,940 ராஜா போட வேண்டும் எனத் தோன்றுகிறது, ஆனால் “திரு” என்பதையே போடுகிறேன். 95 00:06:37,524 --> 00:06:39,067 ”எளிதான சாகசப் பயணங்கள்.” 96 00:06:41,736 --> 00:06:43,405 இது சுலபமானது. 97 00:06:43,405 --> 00:06:45,740 ”பேடில்போர்டிங்”. வேண்டாம். 98 00:06:45,740 --> 00:06:48,618 ’ஜெட் ஸ்கி, கைட்சர்ஃபிங், ஸ்கூபா டைவிங். 99 00:06:48,618 --> 00:06:51,955 ஸ்கூபா டைவிங்கில் சுறாக்களுடன் நீந்துவது.” 100 00:06:53,915 --> 00:06:55,166 இதைத்தான் செய்யப் போகிறேன். 101 00:06:56,501 --> 00:06:57,669 வேண்டாம். 102 00:06:57,669 --> 00:07:00,797 ”உங்களுக்குப் பிடித்த ஓய்வு நேரச் செயல்பாடு என்ன?” 103 00:07:04,342 --> 00:07:05,343 ஓய்வெடுப்பது. 104 00:07:06,011 --> 00:07:10,515 ”நாங்கள் உங்களுக்கு ஒரு கனவு உணவைச் சமைக்க வேண்டுமெனில், அது என்ன? 105 00:07:10,515 --> 00:07:12,392 எதை வேண்டுமானாலும் கூறலாம்.” 106 00:07:15,520 --> 00:07:20,775 சீஸ்பர்கர், ஃபிரைஸ் மற்றும் மில்க்ஷேக். 107 00:07:21,568 --> 00:07:22,861 சாக்லேட்டோ வெனிலாவோ. 108 00:07:24,112 --> 00:07:25,614 அதை அவர்களே முடிவுசெய்யட்டும். 109 00:07:31,161 --> 00:07:33,163 குட் மார்னிங், யூஜீன். குடாடூ, மாலத்தீவுகளுக்கு வரவேற்கிறோம். 110 00:07:33,163 --> 00:07:35,040 - நான் பிராட் கோல்டர், ஜெனரல் மேனேஜர். - சரி. 111 00:07:35,040 --> 00:07:37,000 - உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, பிராட். - உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 112 00:07:37,000 --> 00:07:38,543 அடக் கடவுளே. 113 00:07:38,543 --> 00:07:43,215 இதுவரை ஹோட்டலில் செக்-இன் செய்வதற்கு என்னை இப்படி வரவேற்றதே இல்லை. 114 00:07:43,215 --> 00:07:46,176 - இதுவரையா? - இல்லை, இதுவரை நடந்ததே இல்லை. 115 00:07:46,176 --> 00:07:48,136 அதற்குள் நாம் நன்றாகத் தொடங்கியுள்ளோம். 116 00:07:48,136 --> 00:07:50,096 இந்தத் தீவுக்கு உங்களை அறிமுகப்படுத்த அனுமதியுங்கள். 117 00:07:51,640 --> 00:07:53,850 குடா என்றால் மாலத்தீவு மொழியில் “சிறிய” என்று அர்த்தம், 118 00:07:53,850 --> 00:07:56,061 இது மிகவும் சிறிய தீவு. 119 00:07:56,061 --> 00:07:57,604 15 பேர்தான் வசிக்கின்றனர். 120 00:07:58,605 --> 00:08:00,649 விருந்தினர் இந்தத் தீவுக்கு வந்துவிட்டால், 121 00:08:00,649 --> 00:08:02,943 இங்கே, “எதுவும், எந்த நேரமும், எங்கேயும்” என்ற கருத்து உள்ளது, 122 00:08:02,943 --> 00:08:07,322 எங்கள் பணியாளர்கள் தங்களுக்கு எதையும் வழங்கத் தயாராக இருப்பார்கள். 123 00:08:07,322 --> 00:08:09,699 உங்கள் தேவையே எங்கள் கட்டளை. 124 00:08:09,699 --> 00:08:12,160 - எதுவும், எந்த நேரமும்... - எங்கேயும். 125 00:08:12,160 --> 00:08:13,912 - ...எங்கேயும். - ஆம். 126 00:08:13,912 --> 00:08:16,289 இப்போது இவைதான் எனக்குப் பிடித்த மூன்று சொற்கள். 127 00:08:19,793 --> 00:08:21,127 இந்தக் கடற்கரையைப் பாருங்கள். 128 00:08:21,127 --> 00:08:23,547 - இவற்றில் ஒன்று என்னுடையதா? - கண்டிப்பாக. 129 00:08:24,214 --> 00:08:27,217 இங்கே 32 விருந்தினர்களுக்கு மேல் இருப்பதில்லை, அதனால் 130 00:08:27,217 --> 00:08:31,429 பணியாளர்கள் மிகவும் சிறப்பாக அவர்களைக் கவனித்துக்கொள்ள முடியும். 131 00:08:32,054 --> 00:08:36,601 நான் இங்கிருக்கும்போது தரையில் செய்யும் செயல்பாடுகள் இருக்கும் என நம்புகிறேன். 132 00:08:36,601 --> 00:08:39,354 உங்கள் இடத்திலிருந்தே நீங்கள் ஸ்னோர்கலுக்குச் செல்லலாம். 133 00:08:39,354 --> 00:08:43,191 நீங்கள் ஸ்னோர்கலிங் செல்லும்போது, எந்த நேரத்திலும் ஐந்துக்கும் 134 00:08:43,191 --> 00:08:44,401 - அதிகமான மீன்வகைகளைப் பார்க்கலாம். - சரி. 135 00:08:44,401 --> 00:08:46,570 நான் உங்களை எச்சரிக்கும் ஒரே ஒரு ஆபத்தான விஷயம், நீங்கள் ட்ரிகர் மீன் 136 00:08:46,570 --> 00:08:48,989 எனப்படும் பெரிய மீனைப் பார்த்தால், 137 00:08:48,989 --> 00:08:51,074 அதனிடம் இருந்து விலகிச் சென்றுவிடுங்கள். 138 00:08:51,074 --> 00:08:54,035 அந்த ட்ரிகர் மீன் ஒரு பெண்மணியின்... 139 00:08:54,035 --> 00:08:55,912 - ஓ, உண்மையாகவா? - ...காதைக் கடித்து எடுத்துவிட்டது... 140 00:08:55,912 --> 00:08:57,080 சரி, கவலை வேண்டாம். 141 00:08:57,080 --> 00:08:58,790 - நான் விலகிச் சென்றுவிடுவேன். - சரி. 142 00:08:58,790 --> 00:09:01,626 ”விலகிச் செல்லுதல்” என்பதற்கு புதிய அர்த்தத்தையே கொடுப்பேன். 143 00:09:03,378 --> 00:09:05,171 சுறா எப்போதாவது நீந்திவரும். 144 00:09:06,423 --> 00:09:07,799 தண்ணீரில் சுறாக்களா? 145 00:09:11,845 --> 00:09:13,179 ஆம், அந்தளவுக்கு நல்லதில்லை. 146 00:09:31,907 --> 00:09:34,284 இது ஓர் அழகான காட்சி. 147 00:09:35,076 --> 00:09:37,245 நான் பெருங்கடலைப் பார்த்தது போலக் கேட்டேன், 148 00:09:37,245 --> 00:09:39,205 அவர்கள் அதையே கொடுத்துள்ளனர். 149 00:09:41,458 --> 00:09:44,878 மாலத்தீவுகள் தான் உலகிலேயே மிகவும் கீழே இருக்கும் நாடு. 150 00:09:44,878 --> 00:09:48,632 இதில் எந்தத் தீவும் கடல் மட்டத்திலிருந்து ஆறு அடிக்கு மேலே இல்லை, அதனால் 151 00:09:48,632 --> 00:09:52,886 நீங்கள் பார்க்குமிடமெல்லாம் பெருங்கடல் சொர்க்கம்தான் தெரியும். 152 00:09:54,054 --> 00:09:55,055 {\an8}இதைப் பாருங்கள். 153 00:09:56,389 --> 00:09:58,183 யூஜினை வரவேற்கிறோம் 154 00:09:58,183 --> 00:09:59,476 இன்றிரவு நான் எங்கே தூங்குவது? 155 00:09:59,476 --> 00:10:00,977 {\an8}ஏனெனில் இதை நான் கலைக்கப் போவதில்லை. 156 00:10:02,229 --> 00:10:05,732 {\an8}இருந்தாலும், என் மனைவி, டெப், தினமும் இரவு எனக்கு இப்படித்தான் செய்வார், 157 00:10:05,732 --> 00:10:07,442 {\an8}அதனால் இது ஒன்றும் ஸ்பெஷலானது இல்லை. 158 00:10:09,778 --> 00:10:15,867 இந்த 3,000 சதுர அடி வில்லாவில், சுறா வராத, கடல் மட்ட அளவிலான நீச்சல் குளம் உள்ளது, 159 00:10:15,867 --> 00:10:19,371 இதில் ஓர் இரவு தங்க 7,000 டாலர் செலவாகும். 160 00:10:24,125 --> 00:10:25,627 இங்கே எனக்குப் பிடிக்கும் என நினைக்கிறேன். 161 00:10:28,505 --> 00:10:29,756 - ஹலோ. - ஹாய். 162 00:10:29,756 --> 00:10:32,509 என் பெயர் ஷோஃபா. நான் உங்களுக்கான தனிப்பட்ட சேவகர். 163 00:10:32,509 --> 00:10:35,345 - உள்ளே வரலாமா? - ஆம்... வாருங்கள். 164 00:10:35,345 --> 00:10:36,596 நன்றி. 165 00:10:36,596 --> 00:10:38,056 - என் தனிப்பட்ட சேவகரா? - நீங்கள்... 166 00:10:38,056 --> 00:10:39,182 ஆம். 167 00:10:39,182 --> 00:10:43,270 உங்களுக்குப் பிடித்தவை மற்றும் பிடிக்காதவைப் பற்றி என்னிடம் கூற முடியுமா? 168 00:10:43,270 --> 00:10:46,398 நீரில் இருப்பது சுத்தமாகப் பிடிக்காது. 169 00:10:46,982 --> 00:10:47,941 ஆம். 170 00:10:47,941 --> 00:10:49,526 நீங்கள் மாலத்தீவுகளில் இருக்கிறீர்கள். 171 00:10:49,526 --> 00:10:52,112 - ஆம். - இங்கே 99 சதவீதம் நீர்தான். 172 00:10:52,112 --> 00:10:55,282 அதுதான் இந்த விஷயத்தில் மிகவும் விசித்திரமானது. 173 00:10:55,907 --> 00:10:58,994 ஆனால் நீர் விளையாட்டுகள் எதையும் என்னால் செய்ய முடியாது. 174 00:10:58,994 --> 00:11:00,620 உங்களுக்குப் பிடித்த விளையாட்டு எது? 175 00:11:01,204 --> 00:11:02,122 கோல்ஃப். 176 00:11:02,122 --> 00:11:05,000 அதை மாலத்தீவுகளில் விளையாடுவதில்லை, ஆனால் அதை என்னிடம் விடுங்கள். 177 00:11:05,000 --> 00:11:06,084 சரி. 178 00:11:08,503 --> 00:11:10,714 இதை என்னால் பழகிக்கொள்ள முடியும் என்றாலும், 179 00:11:10,714 --> 00:11:13,341 எனக்கு கர்வம் வந்துவிட்டது என யாரும் நினைப்பதை நான் விரும்பவில்லை. 180 00:11:14,968 --> 00:11:18,972 ”எதுவும், எந்த நேரத்திலும், எங்கேயும்” என்பது ஒரு கனடியனுக்குக் கடினமான விஷயம், 181 00:11:18,972 --> 00:11:20,223 ஏனெனில், உங்களுக்குத் தெரியுமா? 182 00:11:20,223 --> 00:11:23,685 அது எங்களுக்கு நாகரிகமற்றதாகத் தோன்றும். 183 00:11:24,352 --> 00:11:27,731 அதைப் பற்றியும் நீங்கள் கடலுக்கு நடுவே இருக்கிறீர்கள் 184 00:11:27,731 --> 00:11:30,358 என்பதைப் பற்றியும் சிந்திக்கும்போது, 185 00:11:30,984 --> 00:11:34,362 ஒருவருக்கு அவர் விரும்பும் விஷயத்தை எப்படிக் கொடுக்க முடியும்? 186 00:11:34,362 --> 00:11:36,740 அதைப் பற்றி நான் ஆராய விரும்புகிறேன், 187 00:11:36,740 --> 00:11:39,659 ஏனெனில் அது எப்படிச் சாத்தியம் என்பது எனக்குப் புரியவில்லை. 188 00:11:41,745 --> 00:11:43,330 அடிப்படையிலிருந்து தொடங்குவோம். 189 00:11:43,330 --> 00:11:47,334 எனக்கு, மனநிறைவுக்கான வழி என்பது எப்போதும் வயிற்றின் வழியாகச் செல்லும். 190 00:11:48,126 --> 00:11:51,796 அதனால் விருந்தினர்கள் விரும்புவதை எப்படிக் கொடுக்கின்றனர் என்பதைக் கண்டறிய, 191 00:11:51,796 --> 00:11:55,300 சமையல் நிர்வாகியான எடுவார்டைச் சந்திக்கச் செல்கிறேன். 192 00:11:56,384 --> 00:11:57,928 - எடுவார்ட். - யூஜீன். 193 00:11:57,928 --> 00:11:59,596 - எப்படி இருக்கிறீர்கள்? - நலம். எப்படி இருக்கிறீர்கள்? 194 00:11:59,596 --> 00:12:01,056 நான் அற்புதமாக இருக்கிறேன். 195 00:12:02,140 --> 00:12:04,935 - நாம் தொலைதூர இடத்தில் இருக்கிறோம்... - தொலைதூரத்தில் இருக்கிறோம். 196 00:12:04,935 --> 00:12:07,771 - ...ஆனாலும் எந்த உணவை விரும்பினாலும்... - விரும்பும் எந்த உணவும் கிடைக்கும். 197 00:12:07,771 --> 00:12:10,190 - ...நாள் முழுவதும் கிடைக்கும். - கண்டிப்பாக. 198 00:12:10,190 --> 00:12:11,274 அது எப்படி? 199 00:12:11,274 --> 00:12:15,362 ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் ஐரோப்பாவுக்கு இடையில் 200 00:12:15,362 --> 00:12:18,657 இருப்பது மாலத்தீவுகளின் அதிர்ஷ்டம். 201 00:12:18,657 --> 00:12:22,369 அதனால் 24 மணிநேரத்தில் நாங்கள் எதையும் பெற அது உதவுகிறது. 202 00:12:22,369 --> 00:12:27,249 உங்களுக்கு வந்ததிலேயே மிகவும் விசித்திரமான கோரிக்கை என்ன? 203 00:12:27,249 --> 00:12:30,168 அது வெறும் வெண்ணெய்தான். 204 00:12:30,752 --> 00:12:32,921 அது ஃபிரான்ஸின் குறிப்பிட்ட பகுதியிலிருந்து, 205 00:12:32,921 --> 00:12:34,798 குறிப்பிட்ட சப்ளையரிடமிருந்து வர வேண்டும். 206 00:12:35,298 --> 00:12:36,633 - அப்படியா? - பிரிட்டனியில் இருந்து. 207 00:12:36,633 --> 00:12:41,221 அந்தக் கோரிக்கை சனிக்கிழமை காலை 10:00 மணிக்குக் கேட்கப்பட்டது, 208 00:12:41,221 --> 00:12:42,889 அதுவும் ஞாயிற்றுக்கிழமை காலை உணவுக்கு, 209 00:12:42,889 --> 00:12:44,516 அதை இந்தத் தீவுக்கு எப்படியோ கொண்டு வந்துவிட்டோம். 210 00:12:44,516 --> 00:12:45,559 வாவ். 211 00:12:46,518 --> 00:12:51,147 நான் உங்கள் இடத்தில் இருந்திருந்தால், “அது முடியாது” என்றிருப்பேன். 212 00:12:52,190 --> 00:12:54,818 ”நீங்கள் அதிகமாகக் கேட்கிறீர்கள்.” 213 00:12:54,818 --> 00:12:56,111 நாங்கள் அதைத்தான் செய்கிறோம். 214 00:12:56,111 --> 00:13:01,283 உண்மையில், எடுவார்ட் தன் விருந்தினர்களை மெனுவில் இல்லாதவற்றைக் கேட்க ஊக்குவிக்கிறார். 215 00:13:01,866 --> 00:13:05,245 அல்லது அவர்கள் கூறுவது போல, “திட்டமிடப்படாத உணவு.” 216 00:13:06,246 --> 00:13:07,998 நான் திட்டமிடாதவற்றில் ஈடுபடுபவன், 217 00:13:07,998 --> 00:13:11,501 அதனால் சமையலறைக்குள் அதைச் செய்யத் தயாராகிவிட்டேன். 218 00:13:12,002 --> 00:13:15,088 நான் பாதி ஏப்ரான் அணிகிறேன். அப்படித்தானே சொல்வீர்கள்? 219 00:13:15,088 --> 00:13:17,048 - இது பாதி ஏப்ரானா? - வெறும் ஏப்ரான் தான். 220 00:13:17,048 --> 00:13:20,010 வெறும் ஏப்ரான் தான். சரி. 221 00:13:20,010 --> 00:13:23,847 ஒரு விருந்தினர் எங்களிடம், “சரி, எனக்கு வெங்காய சூப் பிடிக்கும், ஆனால் 222 00:13:24,514 --> 00:13:26,600 அதை இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக்க முடியுமா?” என்றார். 223 00:13:26,600 --> 00:13:30,937 அதற்கு நாம் கொஞ்சம் பிராண்டியும் பிளாக் ட்ரஃபுளும் பயன்படுத்தப் போகிறோம். 224 00:13:31,479 --> 00:13:32,772 நமக்கு கொஞ்சம் சீஸ் தேவை. 225 00:13:32,772 --> 00:13:33,857 உங்களுக்கு எந்த சீஸ் வேண்டும்? 226 00:13:33,857 --> 00:13:37,777 எனக்கு கொஞ்சம் க்ருயேர், டெட் டி மாய்ன் மற்றும் பார்மேஸான் வேண்டும். 227 00:13:37,777 --> 00:13:38,862 முடிந்ததாக வைத்துக்கொள்ளுங்கள். 228 00:13:41,656 --> 00:13:43,116 இங்கே குடாடூவில், 229 00:13:43,116 --> 00:13:45,702 சீஸ் ஃபிரிட்ஜில் இருப்பதில்லை. 230 00:13:45,702 --> 00:13:48,622 அவர்கள் அதற்கென்றே ஒரு சேமிப்பிடம் வைத்துள்ளனர். 231 00:13:52,542 --> 00:13:56,046 இங்கே மிகவும் அதிகமாக வாசனை வருகிறது. 232 00:13:56,046 --> 00:13:57,297 வாவ். 233 00:13:59,633 --> 00:14:03,678 சரி. இது க்ருயேர், பார்மேஸான் 234 00:14:04,429 --> 00:14:05,639 மற்றும்... 235 00:14:09,392 --> 00:14:10,393 ஃபிரெஞ்சா? 236 00:14:15,190 --> 00:14:19,194 நான் மெதுவாகத்தான் செயல்படுவேன் என்பதை எடுவார்டிடம் சொல்ல மறந்துவிட்டேன். 237 00:14:19,194 --> 00:14:22,155 எனக்கு குருயேர் அல்லது... கிடைக்கவில்லை. 238 00:14:25,033 --> 00:14:26,785 நான் இவற்றில் சிலவற்றை எடுத்துக்கொள்கிறேன். 239 00:14:28,745 --> 00:14:29,913 கொஞ்சம் ப்ரீ. 240 00:14:32,958 --> 00:14:34,501 இதுவும் சீஸ்தான், இல்லையா? 241 00:14:36,586 --> 00:14:40,006 நீங்கள் சொன்ன ஃபிரெஞ்சு சீஸின் பெயரை மறந்துவிட்டேன், 242 00:14:40,006 --> 00:14:42,759 அதனால் கொஞ்சம் ப்ரீ எடுத்துவந்துள்ளேன், ஏனெனில் இதுவும் ஃபிரெஞ்சுதான். 243 00:14:42,759 --> 00:14:44,886 நல்ல முயற்சி, யூஜீன். நீங்கள் சீஸ் அறைக்குள் சென்றதும் 244 00:14:44,886 --> 00:14:46,471 - உங்களுக்கு நேராக இருக்கும். - சரி. 245 00:14:50,725 --> 00:14:52,978 - நல்லது. - இதுதானா? 246 00:14:53,645 --> 00:14:55,438 - சரி. இதேதான். - சரி. 247 00:14:56,064 --> 00:14:58,149 பிராண்டியை ப்ளோ டார்ச் செய்வோம். 248 00:15:12,581 --> 00:15:14,666 சரி, இது சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது. 249 00:15:19,504 --> 00:15:22,215 - நமக்கு நேரம் உள்ளதா, எடுவார்ட்? - நாம் வேகமாக வேலை செய்ய வேண்டும். 250 00:15:22,215 --> 00:15:23,341 - ஆம். - நாம் வேகமாக வேலை செய்ய வேண்டும். 251 00:15:23,341 --> 00:15:25,719 நீங்கள் தான் மெதுவாக வேலை செய்கிறீர்கள். நீங்கள்... 252 00:15:26,261 --> 00:15:29,514 என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். இதற்கு மேல் என்னால் வேகமாகப் பார்க்க முடியாது. 253 00:15:30,974 --> 00:15:32,517 இதைப் பாருங்கள். 254 00:15:32,517 --> 00:15:37,772 கேரமலைஸ் செய்யப்பட்ட வெங்காயம், பீஃப் ஸ்டாக், பிராண்டி மற்றும் பிளாக் ட்ரஃபுளின் உருமாற்றம், 255 00:15:37,772 --> 00:15:41,651 அதன் மீது தேர்வுசெய்யப்பட்ட மூன்று சீஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. 256 00:15:43,862 --> 00:15:45,113 அடக் கடவுளே. 257 00:15:45,113 --> 00:15:49,618 நான் பார்த்ததிலேயே இதுதான் மிகவும் தனித்துவமான வெங்காய சூப். 258 00:15:51,077 --> 00:15:54,915 எனக்கு பிரட்டுடன் இன்னும் கொஞ்சம் சூப் இருந்தால் பிடிக்கும். 259 00:15:54,915 --> 00:15:56,458 ஆனால் எனக்குமே, 260 00:15:56,458 --> 00:16:00,879 ”எதுவும், எந்த நேரத்திலும், எங்கேயும்” என்பது கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது. 261 00:16:01,880 --> 00:16:05,175 நான் காலை நான்கு மணிக்கு ஃபோனை எடுத்து 262 00:16:05,175 --> 00:16:07,594 எதையும் ஆர்டர் செய்ய மாட்டேன். 263 00:16:07,594 --> 00:16:10,805 அதை ஓர் அமெரிக்கரால்தான் செய்ய முடியும். 264 00:16:11,431 --> 00:16:14,351 ஆனால் இங்கிருப்பது அற்புதமான தத்துவம். 265 00:16:16,728 --> 00:16:18,521 முதல் நாள் சிறப்பாகச் சென்றது. 266 00:16:18,521 --> 00:16:20,190 இருந்தாலும், எல்லாப் பெருமையும் எனக்குச் சேராது. 267 00:16:20,941 --> 00:16:22,734 நான் ஃபிரெஞ்சு வெங்காய சூப் செய்துள்ளேன், 268 00:16:22,734 --> 00:16:25,737 கடல் விமானத்தில் உயிர்பிழைத்துள்ளேன், பெருங்கடலைத் தவிர்த்துள்ளேன். 269 00:16:26,321 --> 00:16:28,949 அப்படிப் பார்த்தால், எல்லாப் பெருமையும் எனக்குத்தான் சேரும். 270 00:16:30,909 --> 00:16:37,332 என் சேவகர் ஷோஃபா, நாளை எனக்காகத் திட்டமிட்டுள்ளார். 271 00:16:38,416 --> 00:16:42,254 அவரது உற்சாகமும் ஆர்வமும் என்னை பயமுறுத்துகின்றன. 272 00:16:42,837 --> 00:16:44,881 தண்ணீர் கிடையாது என்று கூறிவிட்டோம், 273 00:16:44,881 --> 00:16:47,300 அதனால் என்ன நடக்கும் எனச் சிந்தித்து, 274 00:16:48,051 --> 00:16:52,597 தூக்கத்தைக் கெடுத்துக்கொள்ளாமல், நிம்மதியாகத் தூங்குவேன். 275 00:17:10,614 --> 00:17:11,699 குட் மார்னிங். 276 00:17:11,699 --> 00:17:15,035 ஆம், இன்றுகாலை அற்புதமாக உள்ளது. 277 00:17:15,035 --> 00:17:16,662 நீச்சல் குளத்தில் என்ன உள்ளது என்று பார்த்தீர்களா? 278 00:17:18,164 --> 00:17:19,165 வாருங்கள். 279 00:17:26,171 --> 00:17:27,591 இதைப் பாருங்கள். 280 00:17:28,550 --> 00:17:32,137 நான் பார்த்ததிலேயே இதுதான் அற்புதமான காலை உணவு, 281 00:17:32,137 --> 00:17:34,180 அவர்கள் அதை நீச்சல் குளத்தில் வைத்துள்ளனர். 282 00:17:34,806 --> 00:17:36,349 இது ஓர் அற்புதமான விஷயம், 283 00:17:36,933 --> 00:17:38,768 ஆனால் என்னால் அதை எடுக்க முடியவில்லை. 284 00:17:39,686 --> 00:17:44,441 என்னிடம் வா! 285 00:17:45,692 --> 00:17:47,277 அடக் கடவுளே. 286 00:17:47,277 --> 00:17:49,613 அவர்கள் என்ன செய்ய முயல்கின்றனர் என எனக்குத் தெரியும். 287 00:17:49,613 --> 00:17:53,116 முதலில் என்னை குளத்தில் இறங்கச் செய்து, பிறகு இந்தியப் பெருங்கடலில் தள்ளப் பார்க்கிறார்கள். 288 00:17:54,284 --> 00:17:57,871 ஆனால் காலை உணவில், நான் பேன்ட் அணிந்திருக்க விரும்புவேன். 289 00:17:58,997 --> 00:18:01,124 ”குட் மார்னிங், யூஜீன். 290 00:18:01,625 --> 00:18:05,629 நீங்கள் இங்கே தங்கியிருப்பதை அற்புதமான தருணங்களாக மாற்ற”... 291 00:18:06,463 --> 00:18:07,631 அற்புதம். 292 00:18:08,298 --> 00:18:11,635 ”நான் பின்வரும் தீவு அனுபவத்தை யோசித்துள்ளேன். 293 00:18:11,635 --> 00:18:14,888 யோகா தெரபிஸ்ட்டான நந்தினியுடன் 294 00:18:16,097 --> 00:18:20,060 ஒலிக் குளியல் தியானம். 295 00:18:20,060 --> 00:18:23,438 வாழ்த்துகள். உங்கள் சேவகர், ஷோஃபா." 296 00:18:24,356 --> 00:18:25,565 சுவாரஸ்யமாக உள்ளது. 297 00:18:28,985 --> 00:18:30,237 நன்றி. 298 00:18:33,073 --> 00:18:35,492 ஒலிக் குளியல் என்றால என்ன? கண்டறிய வேண்டுமா? 299 00:18:35,492 --> 00:18:38,828 நிச்சயமாக. சரி. ஆனால் அதற்கு படகில் செல்ல வேண்டும். 300 00:18:39,537 --> 00:18:41,122 அப்படித்தான் உங்களை மடக்குவார்கள். 301 00:18:42,207 --> 00:18:48,088 இது கொஞ்சம் குதிக்கிறது, எனக்கு வாந்தி வருவது போல உள்ளது. 302 00:18:50,131 --> 00:18:52,926 நாங்கள் எங்கே போகிறோம் எனத் தெரியவில்லை. 303 00:18:52,926 --> 00:18:57,514 ஆனால், அங்கே நிறைய நிலம் இருக்கும் என நம்புகிறேன். 304 00:19:00,559 --> 00:19:03,687 ஒலிக் குளியல் என்பது நீராவிக் குளியல் போல இருக்கலாம், அல்லது 305 00:19:03,687 --> 00:19:06,982 அதுபோல வேறொன்றாக இருக்கலாம். 306 00:19:07,566 --> 00:19:10,902 அதில் எனக்கு ஆர்வமில்லை. அது எனக்குப் பிடிக்காது. 307 00:19:11,486 --> 00:19:14,072 ஆனால் அது என்னவாக இருந்தாலும், என்னால் முடிந்ததைச் செய்கிறேன். 308 00:19:23,623 --> 00:19:27,335 சரி, அந்த ஒலிக் குளியலறை எங்கே உள்ளது? 309 00:19:27,836 --> 00:19:29,296 அது நிலவறையில் உள்ளதா? 310 00:19:47,147 --> 00:19:51,276 அடக் கடவுளே. இது நம்ப முடியாததாக உள்ளது. 311 00:19:53,695 --> 00:19:55,488 நமஸ்தே, திரு. யூஜீன்! 312 00:19:55,488 --> 00:19:59,117 கடலுக்கடியில் இருக்கும் தியானத்திற்கு வரவேற்கிறேன். இது எப்படி உள்ளது? 313 00:19:59,117 --> 00:20:01,494 எப்படி உள்ளதா? நீருக்கடியில் உள்ளது. 314 00:20:03,288 --> 00:20:05,290 அழகான மீன்கள். 315 00:20:05,290 --> 00:20:09,920 மாலத்தீவுகள் உலகத்திலேயே மிகப்பெரிய பவளப் பாறை அமைப்புகளில் ஒன்று, 316 00:20:09,920 --> 00:20:12,881 இங்கே 2,000க்கும் அதிகமான மீன் வகைகள் உள்ளன. 317 00:20:12,881 --> 00:20:17,886 அவற்றில் எதையும் 20 அடி ஆழத்தில் நீருக்கடியில் பார்க்க நான் திட்டமிடவில்லை. 318 00:20:19,095 --> 00:20:22,641 எனது இதயம் கொஞ்சம் அமைதியாகட்டும். 319 00:20:25,644 --> 00:20:28,897 இது நம்ப முடியாததாக உள்ளது. 320 00:20:29,481 --> 00:20:34,402 இதை யார் வடிவமைத்தது, அவர் திறமையானவரா? 321 00:20:35,820 --> 00:20:37,822 இந்தச் சத்தம் எங்கிருந்து வருகிறது? 322 00:20:37,822 --> 00:20:39,616 ஒலிக் குளியல் என்றால் என்ன? 323 00:20:39,616 --> 00:20:42,661 நம் உடலில் 65 சதவீதம் நீர் தான் உள்ளது. 324 00:20:42,661 --> 00:20:46,623 நீரானது ஒலிக்கு, பதிலளிக்கும், 325 00:20:46,623 --> 00:20:49,876 அதனால் அது உங்கள் உடல் முழுவதிலும் இருந்து அடைப்புகளை அகற்றும். 326 00:20:49,876 --> 00:20:54,381 அந்த அடைப்புகள்தான் என்னை உயிருடன் வைத்திருக்கின்றன என நினைக்கிறேன். 327 00:20:54,381 --> 00:20:59,302 உங்கள் உடல்... பாசிட்டிவ் எனர்ஜியை ஏற்கத் தயாராக உள்ளது. 328 00:20:59,302 --> 00:21:04,432 - உங்கள் மனம் அமைதியாக, ரிலாக்ஸாக உள்ளது. - அதைப் பார்க்கும் வரை அது அமைதியாக இருந்தது... 329 00:21:04,432 --> 00:21:07,811 அது மத்தி மீன் போல இல்லை. 330 00:21:08,770 --> 00:21:12,190 மூச்சை இழுங்கள். தொடங்கலாம். 331 00:21:12,190 --> 00:21:19,281 - ஓம். - ஓம். 332 00:21:28,373 --> 00:21:30,166 வாவ். அற்புதம். 333 00:21:30,166 --> 00:21:33,295 - நானே அதிர்ச்சியாகி விட்டேன். - நீங்கள் அற்புதமாகச் செய்தீர்கள்! 334 00:21:34,379 --> 00:21:37,215 நந்தினி நான் ஒரு நடிகர் என்பதைப் புரிந்துகொண்டார். 335 00:21:37,215 --> 00:21:41,094 எனக்குப் போதுமானளவு ஊக்கம் கொடுத்தால், என்னை எதையும் செய்ய வைக்கலாம். 336 00:21:41,887 --> 00:21:42,888 இது அருமையாக உள்ளது. 337 00:21:43,722 --> 00:21:47,976 மூச்சை உள்ளே இழுங்கள். 338 00:21:52,731 --> 00:21:58,612 மூச்சை விடுங்கள். 339 00:21:58,612 --> 00:22:02,699 இது மிகவும் அற்புதமான விஷயம். 340 00:22:05,285 --> 00:22:08,830 ஆனால், “விரிசல் விழும் சத்தம் கேட்டால் என்ன செய்வது?” மற்றும் 341 00:22:08,830 --> 00:22:11,207 ”கசிவு ஏற்பட்டால் என்ன செய்வது?” என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். 342 00:22:20,675 --> 00:22:23,386 ஏனெனில் நீருக்கடியில் இறப்பது பற்றி பேச விரும்புகிறீர்களா? 343 00:22:24,429 --> 00:22:26,139 அதுதான் அதன் விளக்கமாக இருக்கும். 344 00:22:27,807 --> 00:22:30,393 மெதுவாக உங்கள் கண்களைத் திறங்கள். 345 00:22:31,853 --> 00:22:33,563 மெதுவாக. 346 00:22:33,563 --> 00:22:35,190 அவை ஈல்களா? 347 00:22:37,609 --> 00:22:40,612 அது அற்புதமாக இருந்தது, அங்கே நான் ரிலாக்ஸ் ஆனது, 348 00:22:40,612 --> 00:22:44,824 நீருக்கடியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க அழகாக இருந்தது. 349 00:22:46,159 --> 00:22:49,162 அதன் நடுவே நான் கிட்டத்தட்ட தூங்கிவிட்டேன். 350 00:22:49,162 --> 00:22:50,580 அதற்கு எனக்குப் பெரிதாக எதுவும் தேவைப்படாது. 351 00:22:52,791 --> 00:22:54,292 அவ்வளவு இருந்தும், 352 00:22:54,292 --> 00:22:59,422 ஷோஃபா என்னை கடலுக்கு மிக நெருக்கத்தில் கூட்டிச் சென்றுவிட்டார். 353 00:23:00,465 --> 00:23:01,508 ஹலோ! 354 00:23:01,508 --> 00:23:04,177 ஸ்னோர்கலிங் செல்வதை 355 00:23:04,177 --> 00:23:06,471 என் காலை நனைக்காமலே அனுபவித்துவிட்டேன், 356 00:23:06,471 --> 00:23:09,474 என் சேவகர் அடுத்து என்ன திட்டமிட்டுள்ளார் என வியக்கிறேன். 357 00:23:09,474 --> 00:23:11,601 - அகலமாக காலை வையுங்கள். ஆம். - நன்றி. 358 00:23:11,601 --> 00:23:16,022 நான் கடல் உயிரியலாளர் ஜாஸ்மினுடன் பயணிக்கிறேன். 359 00:23:16,022 --> 00:23:18,692 ஒருவேளை எனக்கு பெருங்கடல் பற்றி நிறைய தெரிந்தால், 360 00:23:18,692 --> 00:23:21,027 அதை என்னால் ரசிக்க முடியலாம். 361 00:23:21,611 --> 00:23:25,865 அல்லது நமக்குத் தெரியாத விஷயம் நம்மைக் காயப்படுத்தலாம் என்பதைத் தெரிந்திருப்பேன். 362 00:23:25,865 --> 00:23:28,034 இதுதான் படகு. 363 00:23:28,034 --> 00:23:30,495 கொஞ்சமும் ஆடவில்லை. என் வயிறு நன்றாக உள்ளது. 364 00:23:31,538 --> 00:23:33,873 மென்மையாகச் செல்கிறது. எனக்கு எதுவும் தெரியவில்லை. 365 00:23:33,873 --> 00:23:35,834 நீங்கள் இயல்பாக இதுபோல விஷயங்களைச் செய்வீர்களா? 366 00:23:35,834 --> 00:23:38,920 - நான் இதுபோல எப்போதும் செய்ய மாட்டேன். - உண்மையாகவா, எதுவுமேவா? 367 00:23:40,839 --> 00:23:46,219 என்னைப் போல இல்லாமல் நீங்கள் கடலை நேசிக்கிறீர்கள். 368 00:23:46,803 --> 00:23:49,306 - இல்லையா? - ஆனால் என்னிடம் பயம்தான் உள்ளது. 369 00:23:49,306 --> 00:23:52,017 - தெரியுமா? மூழ்கிவிடுவோம் என்ற பயமும்... - சரி. 370 00:23:52,017 --> 00:23:56,521 ...சுறாவிடம் நமது உடல் பாகங்களை இழந்துவிட்டு, 371 00:23:56,521 --> 00:23:59,065 - பிறகு மூழ்குவோம் என்ற பயமும் உள்ளது. - பெரிய சுறாவிடம். ஆம். 372 00:24:00,650 --> 00:24:05,697 மாலத்தீவுகளை மிகவும் தனித்துவமாக மாற்றுவது எது? 373 00:24:05,697 --> 00:24:09,534 உலகின் ஒட்டுமொத்த பவளப் பாறைகளில் ஐந்து சதவீதம் மாலத்தீவுகளில் உள்ளது. 374 00:24:09,534 --> 00:24:12,037 - அது அற்புதமான விஷயம்... - அது பெரிய அளவு, இல்லையா? 375 00:24:12,037 --> 00:24:15,332 ...ஏனெனில் வரைபடத்தில் மாலத்தீவுகளைப் பார்த்தால், அது ஒரு புள்ளி போலத்தான் இருக்கும். 376 00:24:15,332 --> 00:24:17,208 - சில நேரம் வரைபடத்தில் இருக்கவே இருக்காது. - சரி. 377 00:24:17,208 --> 00:24:18,710 அது நிறைய பவளப் பாறை. 378 00:24:18,710 --> 00:24:20,128 - நிறைய பவளப் பாறை இருப்பதால்... - ஆம். 379 00:24:20,128 --> 00:24:22,881 ...இந்தப் பெருங்கடலில் இருக்கும் உயிரினங்களில் காற்பகுதி இப்போது 380 00:24:22,881 --> 00:24:24,466 பவளப் பாறைகளில் வசிக்கின்றன. 381 00:24:25,425 --> 00:24:31,389 அதுதான் இங்கே இருக்கும் கடல் உயிரினங்களை மிகவும் ஸ்பெஷலாக மாற்றுகின்றன. 382 00:24:31,389 --> 00:24:33,516 - ஆம். - மேலும் பவளப் பாறைதான் 383 00:24:33,516 --> 00:24:37,437 இங்கிருக்கும் மணலை மிகவும் வெண்ணிறமாக மாற்றுகின்றன. 384 00:24:38,980 --> 00:24:44,110 உலகின் ஐந்து சதவீதக் கடற்கரைதான் இதுபோல பவளப் பாறையால் உருவாகியுள்ளன. 385 00:24:46,029 --> 00:24:48,448 அதாவது, இங்கிருக்கும் பெருங்கடல் 386 00:24:48,448 --> 00:24:50,325 மிகவும் அழகாக உள்ளது. 387 00:24:50,325 --> 00:24:51,409 - சரியா? - ஆம். 388 00:24:51,409 --> 00:24:55,872 சொல்லி வைத்ததுபோல, என் தனிப்பட்ட சேவகர் கூட திட்டமிட முடியாதது போல 389 00:24:55,872 --> 00:25:00,210 ஒரு தருணத்தை இந்தக் கடல் கொடுக்கிறது. 390 00:25:01,419 --> 00:25:03,672 அதோ. உங்களுக்குப் பின்னால். தெரிகிறதா? 391 00:25:05,298 --> 00:25:09,719 - தெரிகிறதா? - ஓ, ஆம்! சில டால்ஃபின்கள் வந்துள்ளன! 392 00:25:11,054 --> 00:25:12,847 கீழே பாருங்கள். தெரிகிறதா? 393 00:25:13,431 --> 00:25:16,726 - ஓ, தெரிகிறது! - இங்கே ஒன்று உள்ளது. 394 00:25:16,726 --> 00:25:18,728 - நான்கு, ஐந்து. - இதோ உள்ளன! 395 00:25:18,728 --> 00:25:20,855 - ஆம். - அருமை! 396 00:25:20,855 --> 00:25:22,566 - அவற்றைப் பார்க்கிறீர்களா? - அவை குதிக்கின்றன. 397 00:25:28,113 --> 00:25:29,489 இது உற்சாகமாக இருக்க வேண்டும், இல்லையா? 398 00:25:29,489 --> 00:25:33,660 நம்ப முடியாததாக உள்ளது. மிகவும் அற்புதமான அனுபவம். 399 00:25:33,660 --> 00:25:36,496 மாலத்தீவுகள் என்பது தீவில் இருக்கும் சொர்க்கம், 400 00:25:36,496 --> 00:25:39,416 தண்ணீர் இல்லாமல் தீவுகள் இருக்காது. 401 00:25:39,416 --> 00:25:41,626 பெயரிலேயே அது உள்ளது. 402 00:25:43,336 --> 00:25:46,006 நான் படகுப் பயணத்தைப் பழகிக்கொள்ள 403 00:25:46,006 --> 00:25:47,632 இன்னும் சில படகுச் சவாரிகள் தேவைப்படும்போது, 404 00:25:47,632 --> 00:25:51,344 பெருங்கடலில் இருக்கும் அனைத்தும் எனக்கு பிரச்சினையை ஏற்படுத்தாது 405 00:25:51,344 --> 00:25:54,973 என்ற விவரத்துடன் இந்த நாளை முடிக்கிறேன். 406 00:26:03,273 --> 00:26:06,067 நான் இந்த ஆடம்பர வாழ்க்கையை... 407 00:26:06,651 --> 00:26:09,112 மிகவும் பழக்கப்பட்டவர் போல எடுத்துக்கொண்டுள்ளேன். 408 00:26:10,780 --> 00:26:14,701 ஆனால் இங்கிருக்கும் அனுபவ நிலையால் கொஞ்சம் அவமானமாக உள்ளது, 409 00:26:14,701 --> 00:26:17,120 மேலும் எல்லா விஷயங்களுக்கும் தனிப்பட்ட சேவகர் 410 00:26:17,120 --> 00:26:20,665 இல்லாமல் இந்த நாட்டைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என உணர்கிறேன். 411 00:26:23,793 --> 00:26:26,838 மாலத்தீவுகளில் சுமார் ஐந்து லட்சம் பேர் வசிக்கின்றனர். 412 00:26:26,838 --> 00:26:29,132 அவர்கள் 200 தீவுகளில் பரந்து வசிப்பதால், 413 00:26:29,132 --> 00:26:34,179 புவியியல் ரீதியாக சிதறியுள்ள நாடுகளில் ஒன்றாக இதை மாற்றுகிறது. 414 00:26:34,179 --> 00:26:38,975 பணியாளர்களைத் தவிர நான் வேறு யாரையும் பார்க்காததில் எந்த ஆச்சரியமும் இல்லை. 415 00:26:41,895 --> 00:26:47,150 நான் வழக்கத்திற்கு மாறாக, அதிக மக்கள் இருக்கும் தீவான நைஃபருவுக்கு 416 00:26:47,150 --> 00:26:50,654 நானாக விரும்பி, படகில் ஏறினேன், 417 00:26:50,654 --> 00:26:54,574 இங்கே வசிக்கும் ஒருவரைப் பார்ப்பதற்காக. 418 00:26:55,367 --> 00:26:57,661 - நீங்கள்தான் சாண்டியாக இருக்க வேண்டும். - ஹலோ. 419 00:26:58,453 --> 00:27:02,916 ஆச்சரியமின்றி, இந்தத் தீவுகளில் சுற்றுலாதான் மிகப் பெரிய துறையாக உள்ளது, 420 00:27:02,916 --> 00:27:06,461 மாலத்தீவுகளின் காற்பகுதிக்கும் அதிக வருமானம் அதில்தான் வருகிறது. 421 00:27:07,087 --> 00:27:11,841 நைஃபருவில் வசிக்கும் பெரும்பாலான மக்கள், அருகில் உள்ள சுற்றுலா ரிசார்ட்களில் வேலை செய்கின்றனர். 422 00:27:11,841 --> 00:27:14,928 ஆனால் சாண்டி சமீபத்தில்தான் ஓய்வுபெற்றுள்ளார். 423 00:27:14,928 --> 00:27:17,222 இது என்ன பொருள்? 424 00:27:17,222 --> 00:27:19,808 - நான் மீன்பிடிக்க முயல்கிறேன். இது... - இல்லை, அது புரிகிறது. 425 00:27:19,808 --> 00:27:21,142 ஆனால்... அது... 426 00:27:21,142 --> 00:27:24,104 இது என் மனைவி கழிவறையை சுத்தம் செய்யப் பயன்படுத்துவது. 427 00:27:24,104 --> 00:27:26,773 இதை நான் தூண்டில் ரீலாகப் பயன்படுத்துகிறேன். 428 00:27:26,773 --> 00:27:28,024 நீங்கள் முயல்கிறீர்களா? 429 00:27:28,024 --> 00:27:29,818 ஓ, ஆம். நான்... சரி. 430 00:27:33,780 --> 00:27:34,864 நன்றாக எறிந்தீர்கள். 431 00:27:34,864 --> 00:27:36,825 - இதைப் பிடித்திருக்க வேண்டும். - சரி. 432 00:27:38,910 --> 00:27:40,120 அதைக் கடிக்கிறதா? 433 00:27:40,120 --> 00:27:41,413 ஏதோவொன்றை உணர்ந்தேன். 434 00:27:42,831 --> 00:27:44,958 ஆனால் இப்போது எதுவும் இல்லை. 435 00:27:47,961 --> 00:27:51,423 மீன்பிடிப்பதா? அதை என்னால் செய்ய முடியும் என நினைக்கிறேன். 436 00:27:52,173 --> 00:27:53,592 இப்போது கடித்தது. 437 00:27:53,592 --> 00:27:55,635 நான் இங்கே நீண்ட காலம் இருந்திருந்தால். 438 00:27:56,845 --> 00:27:59,222 ஆனால் எதுவும் இன்னும் வரவில்லை. 439 00:27:59,806 --> 00:28:01,308 அதாவது நீண்ட காலம் இருக்க வேண்டும். 440 00:28:02,100 --> 00:28:03,435 எதுவும் வருகிறதா? 441 00:28:03,435 --> 00:28:05,395 - இல்லை. - தூண்டில் உணவுதான். 442 00:28:05,395 --> 00:28:07,772 பல ஆண்டுகள் ஆகலாம். 443 00:28:09,399 --> 00:28:11,401 அதனால்தான் அதைச் சாப்பிடவில்லை. 444 00:28:11,401 --> 00:28:13,612 அதனால்தான் அதைச் சாப்பிடவில்லை! 445 00:28:13,612 --> 00:28:15,447 நான் அதை தண்ணீரிலிருந்து வெளியே இழுத்தேன். 446 00:28:18,283 --> 00:28:20,201 இதோ உள்ளது. 447 00:28:20,201 --> 00:28:23,496 இந்தப் பகுதிதான் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிக்கு 448 00:28:23,496 --> 00:28:26,750 இடையேயான பழங்கால வர்த்தக வழிகளின் சந்திப்பாக இருந்தது. 449 00:28:26,750 --> 00:28:30,337 அதாவது இந்தக் கலாச்சாரமானது, பல்வேறு மக்கள் கலந்த மாலத்தீவின் சமூகமாகும். 450 00:28:32,422 --> 00:28:35,383 சாண்டி, மாலத்தீவுகளில் உள்ள வாழ்க்கை பற்றிக் கூறுங்கள். 451 00:28:35,383 --> 00:28:39,888 இங்கே அனைத்துமே பெருங்கடல்தான், எங்களுக்கு அதுதான் எல்லா வளங்களையும் கொடுக்கிறது. 452 00:28:39,888 --> 00:28:43,391 நான் அதை கண்டு பண்டா என்பேன். 453 00:28:44,351 --> 00:28:47,395 - கண்டு என்றால் பெருங்கடல். பண்டா என்றால் வயிறு. - சரி. 454 00:28:47,395 --> 00:28:49,731 - பெருங்கடலில் இருந்து உங்கள் வயிற்றுக்கு. - ஆம். 455 00:28:49,731 --> 00:28:53,026 அது ஒரு தற்சார்பு வாழ்க்கை முறை. 456 00:28:53,026 --> 00:28:56,821 ஆம். அதாவது, நீங்கள் நகரத்தில் வாழும்போது 457 00:28:57,405 --> 00:29:00,784 - மக்கள் கவலையுடனும் மனஅழுத்தத்துடனும் இருப்பார்கள். - ஆம். 458 00:29:00,784 --> 00:29:02,077 ஆம், அது நான் தான். 459 00:29:04,162 --> 00:29:05,372 பிறகு நீங்கள் பெருங்கடலைப் பார்த்தால், 460 00:29:05,372 --> 00:29:08,416 நீங்கள் பேரண்டத்துடன் இணைந்துவிடுவீர்கள், புரிகிறதா? 461 00:29:08,416 --> 00:29:12,045 அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்வோம். 462 00:29:15,507 --> 00:29:18,385 - இந்தப் பக்கமா? - நேராக... கடற்கரை உங்களுக்குத் தெரியும். 463 00:29:19,344 --> 00:29:20,345 50 ஆண்டுகளுக்கு முன்பு, 464 00:29:20,345 --> 00:29:24,891 மாலத்தீவுகளில் சாண்டி போன்ற உள்ளூர் மக்கள்தான் பெரும்பாலும் இருந்தனர். 465 00:29:25,559 --> 00:29:29,938 ஆனால் இங்கே 1972 இல் முதல் ரிசார்ட்டைத் திறந்ததிலிருந்து, 466 00:29:29,938 --> 00:29:34,734 சுற்றுலாப் பயணிகள் இந்தத் தீவின் ரகசியங்களை அவர்களே தெரிந்துகொள்ள வருகின்றனர். 467 00:29:34,734 --> 00:29:38,113 நீங்கள் வாழ்க்கையிலிருந்து அதிக மகிழ்ச்சியை எடுத்துக்கொள்பவராகத் தெரிகிறீர்கள், 468 00:29:38,113 --> 00:29:41,324 நீங்கள் மக்களுக்கு என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள்? 469 00:29:41,908 --> 00:29:44,536 நீங்கள் அதனுடன் இணைய வேண்டும். 470 00:29:45,245 --> 00:29:50,750 ஷூக்களைக் கழற்றி, மணலை உணர வேண்டும், நீருக்குள் செல்ல வேண்டும், 471 00:29:50,750 --> 00:29:53,712 காற்றை உணர வேண்டும், உப்பைச் சுவைக்க வேண்டும், பிறகு 472 00:29:53,712 --> 00:29:57,841 உங்கள் கவலையையும் மன அழுத்தத்தையும் மறந்துவிடுவீர்கள். 473 00:29:57,841 --> 00:29:59,551 இணைந்திருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். 474 00:30:00,760 --> 00:30:03,597 ரிசார்ட்டுகள் மிகவும் அற்புதமான அனுபவத்தை வழங்குகின்றன, 475 00:30:03,597 --> 00:30:06,182 ஆனால் சாண்டியுடன் ஒரு மதியம் இருந்தது 476 00:30:06,182 --> 00:30:09,644 மாலத்தீவுகளின் உண்மையான மேஜிக்கைக் காட்டியது. 477 00:30:09,644 --> 00:30:12,856 உங்களது எனர்ஜியைக் கொஞ்சம் என்னுடன் எடுத்துச் செல்கிறேன். 478 00:30:12,856 --> 00:30:15,609 அது இந்தப் பயணத்தை எனக்கு நினைவுள்ளதாக மாற்றும். 479 00:30:15,609 --> 00:30:16,818 மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 480 00:30:16,818 --> 00:30:22,657 என் நாட்டின் அழகைப் பிறருக்குக் காட்ட எப்போதும் விரும்புகிறேன். 481 00:30:22,657 --> 00:30:23,825 இவர் ஒரு அன்பானவர். 482 00:30:25,660 --> 00:30:26,661 நன்றி. 483 00:30:28,830 --> 00:30:32,918 எனக்கு இருந்திருக்கலாம் என நான் விரும்பும் குணாதிசயம் சாண்டியிடம் உள்ளது. 484 00:30:33,627 --> 00:30:38,006 உண்மையில், நான் என்னருகில் இருப்பதைவிட சாண்டியுடன் இருப்பேன். 485 00:30:39,716 --> 00:30:41,927 நான் என் தீவுக்குத் திரும்பிச் செல்லும்போது, 486 00:30:41,927 --> 00:30:45,555 உங்கள் பட்ஜெட் என்னவாக இருந்தாலும், சாண்டியின் மாலத்தீவுகள் என்பது உங்கள் 487 00:30:45,555 --> 00:30:50,393 விடுமுறைப் பயணத்தில் பெற முடியாத 488 00:30:50,393 --> 00:30:52,187 சொர்க்கம் என்று உணர்ந்தேன். 489 00:30:53,855 --> 00:30:55,482 நான் வருவதற்கு முன்பே, 490 00:30:55,482 --> 00:30:59,361 குடாடூ என் ஆசைகளை நிறைவேற்றியதாக உறுதியளித்தது. 491 00:30:59,361 --> 00:31:01,196 சாண்டியின் எண்ண அலைகளில், 492 00:31:01,196 --> 00:31:06,534 நான் ஏமாற்றமடையாத ஓர் எளிய அனுபவத்தை அவர்கள் கொடுத்தனர். 493 00:31:08,995 --> 00:31:10,163 அது எனக்காகவா? 494 00:31:12,457 --> 00:31:14,334 நான் ஷோஃபாவைப் பாராட்ட வேண்டும். 495 00:31:14,334 --> 00:31:17,837 நான் எனக்கான சொர்க்கத்திற்கு வந்துள்ளேன். 496 00:31:19,256 --> 00:31:22,509 கமான். இது என் கனவு உணவா? 497 00:31:23,760 --> 00:31:26,596 வெனிலா ஷேக், ட்ரஃபுள் ஃபிரைஸ். இது... 498 00:31:27,514 --> 00:31:28,515 சீஸ்பர்கராக இருக்க வேண்டும். 499 00:31:30,600 --> 00:31:33,895 கடவுளே. எனக்கு எடுவார்டைப் பிடித்துள்ளது. 500 00:31:40,527 --> 00:31:41,820 ஒன்று சொல்லவா? 501 00:31:41,820 --> 00:31:44,781 நான் சாப்பிட்டதிலேயே இதுதான் சிறந்த சீஸ்பர்கர். 502 00:31:46,741 --> 00:31:50,370 எனக்குப் புரிகிறது. நான் கொஞ்சம் தொந்தரவானவன்தான், சரியா? 503 00:31:50,370 --> 00:31:53,206 குறை கூறுவதென்றால் எனக்குப் பிடித்த விஷயம். 504 00:31:53,957 --> 00:31:55,750 இது இதைவிடச் சிறப்பாக மாற முடியாது. 505 00:31:57,794 --> 00:31:59,629 என் வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தருணங்களா? 506 00:31:59,629 --> 00:32:01,006 என் திருமணம், 507 00:32:01,006 --> 00:32:02,966 என் மகன் டேனியல் பிறந்த தருணம், 508 00:32:02,966 --> 00:32:04,718 என் மகள் சாரா பிறந்த தருணம். 509 00:32:04,718 --> 00:32:10,682 இந்த உணவும் இந்த நாளும் இந்த இடமும் மகிழ்ச்சியான தருணங்களில் உள்ளன. 510 00:32:12,309 --> 00:32:15,103 சாண்டி கூறுவது போல, எளிய மகிழ்ச்சிகள். 511 00:32:16,271 --> 00:32:17,647 முன்பொரு காலத்தில், 512 00:32:17,647 --> 00:32:21,192 இங்கே வர வேண்டும் என்ற விஷயமே எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்காது. 513 00:32:21,192 --> 00:32:23,737 எனக்கு இது மிக அதிகத் தண்ணீர். 514 00:32:23,737 --> 00:32:29,826 ஆனால் நான் அற்புதமான, தனித்துவமான, இயற்கை சொர்க்கத்தைக் கண்டறிந்துள்ளேன். 515 00:32:30,660 --> 00:32:36,875 நான் பார்த்ததிலேயே மிகவும் அழகான இடங்களில் இது ஒன்று. 516 00:32:40,003 --> 00:32:44,341 நிலத்தை விரும்புபவராக இந்தப் பயணத்தைத் தொடங்கினாலும், 517 00:32:44,341 --> 00:32:47,761 இந்த மாலத்தீவுகள் என்னையே நான் மறக்கச் செய்துள்ளது. 518 00:32:49,262 --> 00:32:50,764 - யூஜீன். - என்ன? 519 00:32:50,764 --> 00:32:52,349 நீங்கள் பெருங்கடலில் நிற்கிறீர்கள், 520 00:32:59,814 --> 00:33:01,233 நான் பெருங்கடலில் நிற்கிறேன். 521 00:33:02,776 --> 00:33:04,277 ஏதோவொரு பெருங்கடலில் இல்லை. 522 00:33:05,070 --> 00:33:06,446 இந்தியப் பெருங்கடலில் நிற்கிறேன். 523 00:33:07,197 --> 00:33:10,784 ஒரு விஷயம்தான் இதைவிடச் சிறப்பாக இருக்க முடியும், 524 00:33:11,743 --> 00:33:14,412 ஷோஃபா தனது வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார். 525 00:33:17,374 --> 00:33:22,254 ”கவலைப்படாதீர்கள். இந்த கோல்ஃப் பந்துகள் மக்கக்கூடியவை, 526 00:33:22,254 --> 00:33:25,549 அவற்றில் மீன் உணவு உள்ளது. மகிழ்ச்சியாக இருங்கள்.” 527 00:33:33,139 --> 00:33:34,641 இது நம்ப முடியாததாக உள்ளது. 528 00:33:36,226 --> 00:33:37,477 கடவுளே, வாவ். 529 00:33:39,938 --> 00:33:42,816 நான் மாலத்தீவுகளின் அற்புதமான அழகை ரசிக்கிறேன். 530 00:33:44,317 --> 00:33:48,113 நான் இங்கே சொர்க்கத்தைத் தேடி வந்தேன், 531 00:33:48,655 --> 00:33:52,409 அதைக் கண்டறிந்துவிட்டேன். 532 00:34:45,420 --> 00:34:47,422 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்