1 00:00:05,839 --> 00:00:07,049 லிஸ்ஸி! 2 00:00:09,426 --> 00:00:11,637 இவர் வருங்கால வெற்றிகரமான பிரபலமாக எதிர்பார்க்கப்படுபவர், 3 00:00:11,720 --> 00:00:14,306 'பேக் இன் டைம் வித் பெக்கா பேக்ஸ்டர்' என்ற விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 4 00:00:14,389 --> 00:00:17,851 காலப் பயணத் தொடரின் ஆசிரியர். கிட் ஸ்மிதர்ஸுக்கு ஒரு அன்பான லிஸ்ஸி... 5 00:00:17,935 --> 00:00:19,561 வரவேற்பைக் கொடுங்கள்! 6 00:00:24,316 --> 00:00:28,362 கிட், நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்திருப்பது அதிஅற்புதமான விஷயம். நான் உங்கள் பரம ரசிகை. 7 00:00:28,445 --> 00:00:31,573 இங்கே இருப்பது அற்புதம், லிஸ்ஸி. நானும் உன் ரசிகைதான். 8 00:00:32,448 --> 00:00:33,951 தாமதப்படுத்தாமல் தொடங்கலாம். 9 00:00:34,034 --> 00:00:36,995 நீங்கள் எழுத்தாளர் ஆவதற்கு முன்பு என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள்? 10 00:00:37,079 --> 00:00:39,581 ஒரு காலப் பயணியாக இருந்தேன். 11 00:00:41,083 --> 00:00:43,752 நான் நடுநிலைப் பள்ளி ஆசிரியராக இருந்தேன். 12 00:00:43,836 --> 00:00:47,005 வரலாற்றின் மிக அற்புதமான தருணங்களுக்கு காலத்தால் பின்னோக்கி என்னால் 13 00:00:47,089 --> 00:00:50,759 செல்ல முடிந்தால் எப்படி இருக்கும் என்று எப்போதும் கற்பனை செய்வேன். 14 00:00:51,343 --> 00:00:54,471 அவற்றின் போக்கை அப்படியே விடுவேனா அல்லது மாற்றுவேனா என்று? 15 00:00:55,180 --> 00:00:57,307 நான் எழுத்தைப் பற்றி பேசியது போதும். 16 00:00:57,391 --> 00:01:00,727 கடந்த வாரம் நீங்கள் எனக்கு அனுப்பிய மகிழ்ச்சி நிரம்பிய கடிதத்தைப் பற்றி பேசலாமா? 17 00:01:01,562 --> 00:01:03,480 சொல்லப்போனால், அழகான கையெழுத்து. 18 00:01:04,147 --> 00:01:06,942 நான் புகழ்ச்சியில் மயங்கிவிட்டேன், கிட். நன்றி, நிஜமாகவே. 19 00:01:07,025 --> 00:01:09,152 பார்வையாளர்கள் சில கேள்விகளை கேட்கட்டும். 20 00:01:09,236 --> 00:01:11,864 -என்ன? -கிட் ஸ்மிதர்ஸுக்கு கடிதம் எழுதினாயா? 21 00:01:11,947 --> 00:01:13,198 அவர் பதில் கடிதம் வந்ததா? 22 00:01:14,324 --> 00:01:15,617 லிஸ்ஸி? 23 00:01:15,701 --> 00:01:16,785 என்ன? 24 00:01:16,869 --> 00:01:19,997 ஓ, இல்லை. இன்னும் இல்லை. 25 00:01:20,080 --> 00:01:22,040 அவர் பதில் அனுப்புவதை கற்பனை செய்ய முடிகிறதா? 26 00:01:22,124 --> 00:01:25,127 கற்பனையா? இந்த வாரம் முழுக்க இது குறித்துதான் பேசினாள். 27 00:01:25,210 --> 00:01:26,962 அது உண்மையில்லை. 28 00:01:28,130 --> 00:01:30,591 -கடிதம் இன்னும் வரவில்லையா? -இன்னும் இல்லை. 29 00:01:30,674 --> 00:01:34,261 செல்லம், கிட் ஸ்மிதர்ஸ் தனது புதிய புத்தகத்தை விளம்பரப்படுத்துவதில் பரபரப்பாக இருக்கலாம், 30 00:01:34,344 --> 00:01:37,181 எனவே அவர் பதில் அளிக்கவில்லை என்றால் அதை தவறாக நினைக்காதே. 31 00:01:37,264 --> 00:01:38,932 நான் மாட்டேன். 32 00:01:39,433 --> 00:01:41,101 அவர் பதில் கடிதம் போடுவார். 33 00:01:41,185 --> 00:01:43,562 அவருடைய புத்தகப் பயணத்திற்கான அடுத்த 34 00:01:43,645 --> 00:01:47,065 இடம் மிடில்டன் தான் என்பதை சொன்னேனா? 35 00:01:47,149 --> 00:01:51,111 இதைப் படித்து, என்னுடைய சிந்திக்க வைக்கும் கேள்விகளால் அவரைக் கவர ஆவலாக இருக்கிறேன். 36 00:01:51,195 --> 00:01:55,199 இந்த வாரம் நாம் இருவரும் வாசிப்பு வட்டத்தில் இதைப் படிக்கலாம். 37 00:01:55,282 --> 00:01:58,202 என்ன? உன்னுடைய வாசிப்பு வட்டத்தில் இடமில்லை என்று சொன்னதாக நினைக்கிறேன். 38 00:01:58,285 --> 00:02:01,622 அது லூய்ஸின் அம்மாவிற்கு பதவி உயர்வு கிடைத்து குடும்பத்தோடு ஸ்பெயினுக்கு போவதற்கு முன்பு. 39 00:02:01,705 --> 00:02:04,625 எனவே, ஆம், ஒரு இடம் காலியாக இருக்கிறது. நீ சேர விரும்பினால். 40 00:02:05,250 --> 00:02:06,960 அதை யோசித்து சொல்கிறேன். 41 00:02:07,044 --> 00:02:09,755 வேடிக்கைக்காகப் படிக்கும் சிறுவர், சிறுமிகளுடன் கதைகளில் வரும் 42 00:02:09,838 --> 00:02:11,965 கதாபாத்திரங்களைப் பற்றி ஆழமான விவாதிப்பதா? 43 00:02:12,049 --> 00:02:14,259 -நிச்சயமாக அதை விரும்புகிறேன்! -அருமை. 44 00:02:14,343 --> 00:02:17,763 நான் இதை டாஃப்னி உடன் விவாதிக்க வேண்டும். அவள்தான் வாசிப்பு வட்டத்தின் தலைவர். 45 00:02:18,305 --> 00:02:19,556 உனக்கு கேட்டதா? 46 00:02:19,640 --> 00:02:20,807 அஞ்சல் வந்துவிட்டது என நினைக்கிறேன். 47 00:02:20,891 --> 00:02:22,935 இந்த நாள் சிறப்பாகிக்கொண்டே போகிறது! 48 00:02:29,107 --> 00:02:30,692 ஹாய், டாக்டர் ஆபி. 49 00:02:30,776 --> 00:02:34,154 அன்பான வரவேற்புக்கு நன்றி, லிஸ்ஸி. உன்னை பார்ப்பதும் அற்புதம் தான். 50 00:02:34,238 --> 00:02:37,199 நான் வீட்டிற்குப் போக வேண்டும். டாஃப்னியிடம் பேசியதும் உன்னை அழைக்கிறேன். 51 00:02:37,282 --> 00:02:38,700 -பை. -பை. 52 00:02:39,910 --> 00:02:42,579 மன்னித்துவிடுங்கள். நான் ஒரு அஞ்சலுக்காக காத்திருந்தேன். 53 00:02:42,663 --> 00:02:45,499 சரி, என்னிடமும் கொடுக்க விசேஷமான ஒன்று இருக்கிறது. 54 00:02:51,296 --> 00:02:54,466 ஹாய். ஹாய்! 55 00:02:55,592 --> 00:02:57,636 இதன் பெயர் என்ன? 56 00:02:59,555 --> 00:03:03,058 "ஜாக்" 57 00:03:03,642 --> 00:03:05,477 என் வாடிக்கையாளர்களில் ஒருவர் 58 00:03:05,561 --> 00:03:08,230 தனது மாஸ்டிஃப் வகை நாயான மர்பிக்கு துணையாக ஜாக்கை வாங்கியிருக்கிறார். 59 00:03:08,313 --> 00:03:11,650 அது சரியாக நடக்கவில்லை. அவை ஒன்றோடொன்று சரியாக பழகவில்லை. 60 00:03:11,733 --> 00:03:13,610 மாஸ்டிஃப்கள் பெரியவை. 61 00:03:13,694 --> 00:03:17,823 ஜாக் மிகவும் பயந்திருக்கும். பாவப்பட்ட நாய்க்குட்டி. 62 00:03:23,078 --> 00:03:26,081 -இது சுற்றிப்பார்க்க விரும்புவதாக நினைக்கிறேன். -ஆம். 63 00:03:31,670 --> 00:03:35,424 பாக்ஸர் குட்டிகள் அதிக கவனிப்பை எதிர்பார்க்கும். 64 00:03:36,383 --> 00:03:38,385 நாங்கள் இதை நன்றாக கவனித்துக்கொள்வோம். 65 00:03:38,468 --> 00:03:40,304 அதனால்தான் நீங்கள் எனக்கு பிடித்தவர்கள். 66 00:03:41,513 --> 00:03:43,140 கவனிப்பைப் பற்றி பேசுகையில், 67 00:03:43,223 --> 00:03:46,226 சான்பரியில் காய்ச்சல் வந்த காகடூவை நான் சென்று பார்க்க வேண்டும். 68 00:03:46,310 --> 00:03:48,020 -மீண்டும் நன்றி. -பரவாயில்லை. 69 00:03:48,103 --> 00:03:49,438 -நன்றி. -நிச்சயமாக. 70 00:03:50,105 --> 00:03:54,067 லிஸ்ஸி, நீ இன்று ஒரு கடிதத்தை எதிர்பார்த்தாய், இல்லையா? 71 00:03:55,569 --> 00:03:57,821 நிஜமாகவா? அட. 72 00:03:57,905 --> 00:04:00,407 அவர் எனக்கு பதில் எழுதுவார் என்று என்னால் நம்ப முடியவில்லை. 73 00:04:00,490 --> 00:04:02,451 நீ இன்னும் பிரிக்காமல் இருப்பதைத்தான் நம்ப முடியவில்லை. 74 00:04:06,330 --> 00:04:08,081 ஜாக், வேண்டாம்! 75 00:04:08,165 --> 00:04:09,374 -ஜாக்! -ஜாக். 76 00:04:09,458 --> 00:04:11,460 வேண்டாம், ஜாக், வேண்டாம்! 77 00:04:11,543 --> 00:04:14,129 -அதை கீழே போடு, ஜாக். -நீ அதை பயமுறுத்துகிறாய்! 78 00:04:14,213 --> 00:04:16,380 அது உன் மனநிலைக்கு ஏற்ப செயல்படுகிறது என்று நினைக்கிறேன், செல்லம். 79 00:04:17,548 --> 00:04:19,051 ஆம், இல்லை, நீங்கள் சொல்வது சரிதான். 80 00:04:19,134 --> 00:04:21,470 பாக்ஸர்கள் உணர்திறனோடும் உற்சாகமாகவும் இருக்கும். 81 00:04:26,016 --> 00:04:28,101 இங்கே வா, ஜாக். பரவாயில்லை. 82 00:04:28,185 --> 00:04:29,811 இங்கே வா. 83 00:04:31,313 --> 00:04:33,190 வா. அதை இங்கே கொண்டு வா, ஜாக். 84 00:04:33,774 --> 00:04:35,192 வா. 85 00:04:35,275 --> 00:04:36,568 பரவாயில்லை. 86 00:04:37,736 --> 00:04:39,571 இங்கே வா. 87 00:04:41,073 --> 00:04:43,784 புரிந்து கொண்டாய். இங்கே வா. 88 00:04:44,409 --> 00:04:45,410 நல்ல நாய், ஜாக். 89 00:04:47,496 --> 00:04:49,623 அது அருமையாக இருந்தது. 90 00:04:50,832 --> 00:04:52,501 ஆம். அருமைதான். 91 00:04:54,586 --> 00:04:55,629 அன்புள்ள லிஸ்ஸி 92 00:04:56,880 --> 00:05:00,092 சரி, இதை சரிசெய்துவிட்டோம் என்று நினைக்கிறேன். 93 00:05:03,303 --> 00:05:08,600 "அன்புள்ள லிஸ்ஸி," எழுத்துகள் சரியாகயில்லை. நாய்க்குட்டியின் எச்சில். 94 00:05:08,684 --> 00:05:12,646 எழுத்துகள் சரியாகயில்லை, அழுக்கு, "சிந்தனைமிக்கது." 95 00:05:13,313 --> 00:05:15,607 எழுத்துகள் சரியாகயில்லை. 96 00:05:19,528 --> 00:05:20,863 முயற்சித்ததற்கு நன்றி. 97 00:05:20,946 --> 00:05:23,949 செல்லம், இந்த கடிதத்திற்காக நீ பல வாரமாக காத்திருந்தாய். 98 00:05:26,076 --> 00:05:31,999 "உன்னைப்போன்ற ரசிகர்கள் இருப்பதால் தான் நான்..." 99 00:05:33,542 --> 00:05:35,252 "எழுதுவதற்கு" என்று இருப்பதாக நினைக்கிறேன். 100 00:05:37,004 --> 00:05:40,340 என்ன? என்னைப்போன்ற ரசிகர்கள் இருப்பதால் தான் அவர் எழுதுகிறாரா? 101 00:05:40,424 --> 00:05:42,926 கிட் ஸ்மிதர்ஸ் எழுதுவதற்கு நான்தான் காரணம். 102 00:05:43,010 --> 00:05:45,512 சரி, யாரும் இதை தொடக்கூடாது. இதற்கு ஒரு ஃபிரேமை தேட வேண்டும். 103 00:05:50,017 --> 00:05:51,226 உள்ளே போ, ஜாக். 104 00:05:51,852 --> 00:05:55,314 நீ மெல்ல வேண்டும் என்றால், இதை மெல்லு. 105 00:06:00,235 --> 00:06:01,320 அது எப்படி இருக்கிறது? 106 00:06:02,779 --> 00:06:05,657 பரவாயில்லை. இது பதற்றமாக இருக்கிறது, எனவே கூண்டில் அடைக்கிறேன். 107 00:06:05,741 --> 00:06:08,619 இது இதன் புதிய சூழலில் சௌகரியமாக இருக்க உதவும். 108 00:06:09,203 --> 00:06:11,246 நாங்கள் உனக்கு செய்ததைப் போல நீ அதை ஆறுதல் படுத்து. 109 00:06:11,330 --> 00:06:14,082 நல்லவேளை ஜாக் இன்னும் கொஞ்ச நேரம் டிவி பார்க்கிறேன் என்று சொல்லவில்லை. 110 00:06:14,166 --> 00:06:15,626 நல்ல நகைச்சுவை, அப்பா. 111 00:06:15,709 --> 00:06:18,253 -நன்றாகத்தான் இருந்தது. -நன்றி, அன்பே. 112 00:06:18,337 --> 00:06:20,214 -உன்னை நினைத்து பெருமைப்படுகிறோம். -ஆம். 113 00:06:23,800 --> 00:06:26,595 உனக்கு நிஜமாக இந்த டால்பின் பொம்மை பிடித்திருக்கிறது, இல்லையா? 114 00:06:31,350 --> 00:06:34,102 அட கடவுளே. கையால் எழுதியிருக்கிறார். 115 00:06:34,186 --> 00:06:37,189 -நேரம் ஒதுக்கி எழுதியிருக்கிறார். -ஆம். 116 00:06:37,272 --> 00:06:40,317 இது ஒரு அழகான நட்பின் தொடக்கம் என்று நினைக்கிறேன். 117 00:06:40,400 --> 00:06:41,777 அல்லது கடித வழி நட்பு. 118 00:06:41,860 --> 00:06:44,154 நான் மிஷெல் ஒபாமாவுக்கு கடிதம் எழுத வேண்டும். 119 00:06:44,238 --> 00:06:46,406 நிஜமாக சொல்கிறேன், மரியா. 120 00:06:46,490 --> 00:06:49,910 முதலில், எனக்குப் பிடித்த புத்தகக்கடையில் அவர் வாசிக்கிறார் என்பதைக் கண்டுபிடித்தேன், 121 00:06:49,993 --> 00:06:53,372 பிறகு அவர் எனக்கு பதில் எழுதுகிறார், இறுதியாக, அவருக்கு நாய்களைப் பிடிக்கிறது. 122 00:06:53,872 --> 00:06:56,041 பார், இதுதான் அவருடைய பாக்ஸர், கபூடல். 123 00:06:56,124 --> 00:06:58,168 ஜாக் போல ஒரு பாக்ஸர். 124 00:06:58,252 --> 00:06:59,336 தெரியும். 125 00:07:00,462 --> 00:07:02,965 எனவே, மற்ற சுவாரஸ்யமான இலக்கிய செய்திகளைப் பொறுத்தவரை, 126 00:07:03,048 --> 00:07:05,926 -வாசிப்பு வட்டம் பற்றி டாஃப்னியுடன் பேசினேன். -என்ன சொன்னாள்? 127 00:07:06,510 --> 00:07:09,054 சேர்க்கை குழு ஒரு நேர்காணலுக்கு ஒப்புக்கொண்டது. 128 00:07:09,137 --> 00:07:10,764 நாளை மதியம், உன் வீட்டில். 129 00:07:10,848 --> 00:07:13,308 சேர்க்கை குழுவா? நிஜமாகவா? 130 00:07:13,892 --> 00:07:16,478 தெரியும். ஆனால் கவலைப்படாதே. நீ அசத்திவிடுவாய். 131 00:07:16,562 --> 00:07:19,815 அதோடு, விரைவில் உலகளவில் பிரபலமாகப்போகும் எழுத்தாளரை தெரிந்த ஒருவரை 132 00:07:19,898 --> 00:07:22,150 வாசிப்பு வட்டம் எப்படி வேண்டாம் என்று சொல்லும்? 133 00:07:24,528 --> 00:07:26,905 நான் போக வேண்டும். நன்றி, மரியா. 134 00:07:33,453 --> 00:07:35,789 ஓ. பாவப்பட்ட நாய்க்குட்டியே. 135 00:07:37,082 --> 00:07:39,668 ஹேய், பரவாயில்லை, ஜாக். நாங்கள் இங்கிருக்கிறோம். 136 00:07:46,175 --> 00:07:49,261 இது டால்பின் பொம்மை என்று உன்னால் நம்ப முடிகிறதா? 137 00:07:51,054 --> 00:07:53,390 கண்டிப்பாக அதை மீண்டும் ஒட்ட முடியாது. 138 00:07:55,601 --> 00:07:57,477 அது ஏன் இப்படி நடந்துகொள்கிறது? 139 00:07:57,561 --> 00:08:00,522 அதற்கு தனியாக இருப்பது பிடிக்காது என்பதால் அப்படி நடந்துகொள்கிறது. 140 00:08:00,606 --> 00:08:02,524 பாக்ஸர்கள் துணையை விருப்பும். 141 00:08:12,868 --> 00:08:14,494 இங்கே வா, ஜாக். 142 00:08:14,995 --> 00:08:16,455 இங்கே வா. 143 00:08:17,039 --> 00:08:19,416 -ஹேய், நண்பா. -நல்ல நாய். 144 00:08:22,920 --> 00:08:25,422 இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 145 00:08:47,819 --> 00:08:49,321 காலை வணக்கம். 146 00:08:51,990 --> 00:08:55,077 தூக்கம் கெட்டுவிட்டதா? ஜாக் அதிக போர்வையை எடுத்துக்கொண்டது போல தெரிந்தது. 147 00:08:55,160 --> 00:08:57,913 -நாங்கள் உங்களை எழுப்ப விரும்பவில்லை. -எதுவும் அவளை எழுப்ப முடியாது. 148 00:08:57,996 --> 00:08:59,831 சரி, சரி. 149 00:08:59,915 --> 00:09:01,208 நாங்கள் ஜாக் பற்றி கவலைப்படுகிறோம், 150 00:09:01,291 --> 00:09:03,877 அது பாதுகாப்பாக இருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்த அதற்கு உதவப் போகிறோம். 151 00:09:03,961 --> 00:09:07,381 அந்த மற்றொரு நாய் ஏன் இதனுடன் பழகவில்லை என்று தெரியவில்லை. இது ஒரு அன்பான நாய். 152 00:09:08,507 --> 00:09:12,386 -நாம் ஜாக்குக்கு ஒரு துணையை தேடினால் என்ன? -இது நிஜமாகவே ஒரு நல்ல யோசனை. 153 00:09:12,469 --> 00:09:14,596 இதை ஏற்றுக்கொண்டதாக உணரவைக்கும் மற்றொரு நாய். 154 00:09:14,680 --> 00:09:16,098 நான் சேமியை அழைக்கிறேன். 155 00:09:16,181 --> 00:09:20,727 அவன் ரூஃபஸையும் கோல்டியையும் அழைத்து வருவான். அவைதான் உலகத்திலேயே மிகவும் நட்பான நாய்கள். 156 00:09:20,811 --> 00:09:23,480 -ஜாக்குக்கு அவற்றை பிடிக்கும். -நல்ல திட்டமாகத் தெரிகிறது. 157 00:09:23,564 --> 00:09:27,234 பிறருடன் பழகும்போது நினைவில்கொள், ஜாக்கை எப்படி அறிமுகப்படுத்துகிறாய் 158 00:09:27,317 --> 00:09:29,778 என்பது போலவே யாரிடம் அறிமுகப்படுத்துகிறாய் என்பதும் முக்கியம். 159 00:09:29,862 --> 00:09:32,614 நல்லது. ஆனால் நீ ஏன் தொடர்ந்து "நீ" என்று சொல்கிறாய். 160 00:09:32,698 --> 00:09:35,409 நான் என்னுடைய அறிமுகத்திற்கு தயாராக வேண்டும் என்பதால். 161 00:09:45,460 --> 00:09:47,004 ஸ்மோர்ஸ். அருமையான தேர்வு. 162 00:09:47,087 --> 00:09:50,174 உண்மையில் இது "டோனி ஸ்மோரிசன்ஸ்." 163 00:09:51,216 --> 00:09:52,301 ஏனென்றால் வாசிப்பு வட்டம். 164 00:09:52,384 --> 00:09:55,762 எந்த வாசிப்பு வட்டத் தலைவரையும் கவர வார்த்தை விளையாட்டுதான் குறுக்குவழி. 165 00:09:56,638 --> 00:10:00,267 இப்போது குறிப்பிடத்தக்க அம்சத்திற்கான நேரம். 166 00:10:00,934 --> 00:10:03,729 நல்ல முடிவு. அவர்களுக்கு உன்னைப் பிடிக்கும். 167 00:10:03,812 --> 00:10:07,107 நானும் நம்புகிறேன். சரி, நான் தயார். இதை செய்வோம். 168 00:10:07,191 --> 00:10:09,943 அவர்கள் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு வர மாட்டார்கள் என்று தெரியும்தானே? 169 00:10:10,027 --> 00:10:13,071 தெரியும். அதை மறந்துவிட்டேன். 170 00:10:13,572 --> 00:10:16,366 நான் இந்த பேரிக்காய் டார்ட்டுகளை... 171 00:10:16,450 --> 00:10:20,662 அதாவது, "ஷேக்ஸ்பியர்" டார்ட்டுகளை மீண்டும் பிரிட்ஜில் வைக்கிறேன். 172 00:10:21,914 --> 00:10:23,415 சரி, இங்கே. 173 00:10:24,208 --> 00:10:26,460 கோல்டி, ரூஃபஸ்! 174 00:10:27,044 --> 00:10:30,380 இவற்றின் உற்சாகத்தை குறைக்க அரைமணி நேரமாக கயிறு இழுத்து விளையாடவைத்தேன். 175 00:10:30,464 --> 00:10:33,050 கூடுதலான சக்தியை என் பாட்டியின் வார்த்தையில் சொன்னேன். 176 00:10:33,133 --> 00:10:36,386 -இவற்றுக்கு புதிய நண்பனை பிடிக்கும். -சிறப்பு. ஜாக்கை கூட்டி வருகிறேன். 177 00:10:36,470 --> 00:10:39,097 சரி. தயாரா? இது நன்றாக இருக்கப்போகிறது. 178 00:10:39,890 --> 00:10:41,975 வா, ஜாக். வா. 179 00:10:43,352 --> 00:10:45,312 போகலாம். வா. பயப்படாதே. 180 00:10:48,190 --> 00:10:49,441 ஜாக். 181 00:10:49,525 --> 00:10:52,152 -சரி, நண்பர்களே. -பரவாயில்லை. 182 00:10:52,236 --> 00:10:53,403 ஜாக், வேண்டாம். 183 00:10:56,156 --> 00:11:00,035 கோல்டியும் ரூஃபஸும் ஏற்கனவே நெருக்கமாக இருப்பதால் ஜாக் மிரள்கிறது என்று நினைக்கிறாயா? 184 00:11:00,118 --> 00:11:04,498 தெரியவில்லை. உலகின் இரண்டு மிகவும் நட்பான நாய்களுடன் பழக முடியவில்லை என்றால், 185 00:11:04,581 --> 00:11:05,958 ஏதாவது பிரச்சனை இருக்க வேண்டும். 186 00:11:06,041 --> 00:11:09,294 ஆம். மற்றொரு நாய் இதற்கு என்ன செய்திருக்கும் என்று வியக்கிறேன். 187 00:11:10,337 --> 00:11:11,964 அதை கண்டுபிடிக்கப்போகிறேன். 188 00:11:12,714 --> 00:11:15,592 முதல் பாகம் எனக்கு விருப்பமானது ஏனென்றால் கேட்னிஸ் மிகவும் தன்னலமற்றவர். 189 00:11:15,676 --> 00:11:17,803 நானும் அதையே தான் நினைத்தேன். 190 00:11:17,886 --> 00:11:20,973 அடடா. நிறைய ஸ்வாரஸ்யமான புத்தகங்கள். 191 00:11:21,056 --> 00:11:22,933 எங்கள் குடும்பத்தில் எல்லோரும் வாசிப்பார்கள். 192 00:11:25,227 --> 00:11:28,188 எனவே, லிஸ்ஸி, 'லிட்டில் விமன்' குறித்து உன் கருத்து என்ன? 193 00:11:28,689 --> 00:11:29,690 தலைசிறந்த படைப்பு. 194 00:11:29,773 --> 00:11:31,108 'டு கில் எ மாக்கிங்பேர்டு'? 195 00:11:31,191 --> 00:11:34,987 மிகச்சிறப்பானது. ஆனால் ஹார்பர் லீயின் உத்வேகம் இல்லாத எழுத்து மிகவும் கவலையாக இருக்கிறது. 196 00:11:35,070 --> 00:11:36,446 -ஒலி வடிவ புத்தகங்கள்? -பிடிக்கும், 197 00:11:36,530 --> 00:11:39,867 -ஆனால் முதலில் புத்தகத்தையே படிப்பேன். -மரியா சொன்னது சரிதான். 198 00:11:39,950 --> 00:11:42,619 -வாசிப்பு வட்டத்துக்கு நீ மிகவும் பொருத்தமானவள். -சொன்னேனே. 199 00:11:42,703 --> 00:11:45,622 அதோடு இந்த ஸ்மோரிசன்ஸ் அற்புதம். 200 00:11:45,706 --> 00:11:47,332 அப்படியென்றால் என்னை சேர்த்துக்கொண்டீர்களா? 201 00:11:49,209 --> 00:11:52,129 பிரச்சனை இதுதான்: ஒரே ஒரு இடம் தான் காலியாக இருக்கிறது, 202 00:11:52,212 --> 00:11:55,716 அதோடு இன்று காலை இன்னொருவரை சந்தித்தோம். அவளும் மிகவும் தகுதியானவள். 203 00:11:55,799 --> 00:11:57,467 அவளிடம் மிகப்பெரிய நீச்சல் குளம் இருக்கிறது, 204 00:11:57,551 --> 00:12:00,345 அது எங்கள் கோடை திட்டத்துக்கு மிகவும் ஏதுவானதாக இருக்கலாம். 205 00:12:01,680 --> 00:12:04,725 இது ஒரு பெரிய முடிவு, எனவே அது குறித்து சிந்திக்க வேண்டும். 206 00:12:04,808 --> 00:12:06,727 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, லிஸ்ஸி. 207 00:12:08,187 --> 00:12:09,605 பொறுங்கள். 208 00:12:09,688 --> 00:12:13,108 ஞாயிறன்று நம் சந்திப்புக்கு ஒரு நிஜ எழுத்தாளரைக் அழைத்து வந்தால்? 209 00:12:13,192 --> 00:12:15,652 நாம் அவரின் புத்தகங்களைப் படித்து அதைப்பற்றி அவரிடம் பேசுவோம். 210 00:12:16,445 --> 00:12:17,988 எந்த எழுத்தாளர்? 211 00:12:18,071 --> 00:12:21,408 கிட் ஸ்மிதர்ஸ். கிட் ஸ்மிதர்ஸை லிஸ்ஸிக்குத் தெரியும். 212 00:12:21,491 --> 00:12:24,620 -எனக்குத் தெரியும். -அவருடைய படைப்புகள் குறித்து எனக்குத் தெரியாது. 213 00:12:24,703 --> 00:12:28,040 பொறு. உனக்கு கிட் ஸ்மிதர்ஸை தெரியுமா? 214 00:12:28,540 --> 00:12:30,542 பெக்கா பேக்ஸ்டரை எனக்குப் பிடிக்கும். 215 00:12:31,126 --> 00:12:34,588 மர்மமான கதை சொல்லல், வலிமையான பெண் குரல். உனக்கு அவரைப் பிடிக்கும். 216 00:12:34,671 --> 00:12:38,467 ஆம். அவர் எனக்கு எழுதிய கடிதம் இதோ. 217 00:12:39,718 --> 00:12:41,512 என்னால் இதை படிக்க முடியவில்லை. 218 00:12:42,012 --> 00:12:47,935 இது பெரும்பாலும் தனிப்பட்ட விஷயம் தான், எனக்கும் கிட்டுக்கும் இடையே நடக்கும் நகைச்சுவைகள். 219 00:12:48,519 --> 00:12:49,520 கொஞ்சம் பொறு. 220 00:12:53,690 --> 00:12:55,317 பதிப்பிட்ட எழுத்தாளரை நான் சந்தித்ததில்லை. 221 00:12:55,400 --> 00:12:58,737 சுய பதிப்பாளர்களை, சந்தித்திருக்கிறேன். ஆனால் அது இதில் சேருமா என்று தெரியாது. 222 00:13:00,280 --> 00:13:02,282 வாசிப்பு வட்டத்திற்கு வரவேற்கிறேன், லிஸ்ஸி. 223 00:13:09,915 --> 00:13:12,042 ஜாக்கின் பழைய உரிமையாளர் இங்கே வருவார் என தெரியுமா? 224 00:13:12,125 --> 00:13:15,045 டாக்டர் ஆபி தினமும் 3 மணிக்கு நாய் பூங்காவிற்கு வருவதாக கூறினார். 225 00:13:15,128 --> 00:13:18,549 அவர் இல்லையென்றாலும், ஜாக் விளையாட சில நாய்களைத் தேடிப்பிடித்துவிடும். 226 00:13:18,632 --> 00:13:20,175 -இங்கு நிறைய உள்ளன. -ஆம். 227 00:13:22,719 --> 00:13:25,806 -நாம் இதை கழற்றி விடுவோமா? -ஆம். 228 00:13:25,889 --> 00:13:27,850 நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ள தயாரா, ஜாக்? 229 00:13:30,727 --> 00:13:32,187 போ. 230 00:13:35,315 --> 00:13:36,984 வா, ஜாக். 231 00:13:38,443 --> 00:13:39,695 மீண்டும் இப்படியா. 232 00:13:40,571 --> 00:13:42,239 வா, ஜாக். பரவாயில்லை. 233 00:13:44,700 --> 00:13:46,410 ஐயோ. அந்த நாய் என்னை விட பெரிதாக இருக்கிறது. 234 00:13:46,493 --> 00:13:48,829 அது மாஸ்டிஃப். நிச்சயமாக அவர்தான் ஆண்ட்ரியா. 235 00:13:48,912 --> 00:13:50,330 ஓ, சரியான நேரத்திற்கு வந்துவிட்டார். 236 00:13:53,417 --> 00:13:54,710 ஜாக்? 237 00:13:56,378 --> 00:13:59,173 ஜாக்! ஹாய்! 238 00:13:59,256 --> 00:14:02,926 ஆம்! ஹலோ. நான் உன்னை பிரிந்து வருந்தினேன். 239 00:14:03,010 --> 00:14:04,887 ஹாய். 240 00:14:06,471 --> 00:14:08,849 உங்களில் ஒருவர் சார்ல்ஸ் பீட்டர்சனாக இருக்க வேண்டும். 241 00:14:08,932 --> 00:14:11,393 அது நான்தான். இது என் நண்பன், சேமி. 242 00:14:11,476 --> 00:14:12,936 -ஹாய். -ஹாய். 243 00:14:13,020 --> 00:14:17,858 நான் ஜாக்கின் பழைய உரிமையாளர். இங்கே சந்திப்பது என்னவொரு தற்செயல் நிகழ்வு. 244 00:14:17,941 --> 00:14:19,276 உண்மையில் இல்லை. 245 00:14:19,359 --> 00:14:23,238 -ஜாக் பற்றி உங்களுடன் பேச வந்தோம். -அப்படியா? ஏன்? என்ன நடக்கிறது? 246 00:14:23,322 --> 00:14:26,533 அது புதிய இடத்துக்கு பழக மிகவும் சிரமப்படுகிறது. 247 00:14:26,617 --> 00:14:30,370 உங்கள் நாய் அதை காயப்படுத்தியிருக்கலாம். 248 00:14:30,454 --> 00:14:32,039 மர்பியா? 249 00:14:32,122 --> 00:14:35,000 விளையாடுகிறீர்களா? அதனால் ஒரு பூச்சியைக் கூட காயப்படுத்த முடியாது. 250 00:14:35,083 --> 00:14:38,795 அது ஒரு வயதான நாய், மிகவும் இனிமையானது. 251 00:14:41,340 --> 00:14:45,344 உண்மையில் யாராவது அதை விரும்பவில்லை என்றால், அது ஜாக் தான். 252 00:14:45,427 --> 00:14:49,598 அதாவது என் குழந்தைகளுடன் நன்றாக இருந்தது, ஆனால் மர்பியுடன் எதுவும் செய்ய விரும்பவில்லை. 253 00:14:49,681 --> 00:14:52,392 மர்பி அதோடு விளையாட முயன்றாலோ அல்லது அருகில் வந்தாலோ, 254 00:14:52,476 --> 00:14:54,269 ஜாக் எப்போதும் உறுமும். 255 00:14:54,353 --> 00:14:56,730 அது ரூஃபஸ் மற்றும் கோல்டியிடம் செய்ததைப் போலவே. 256 00:14:56,813 --> 00:14:58,565 -ஆம். -நான் அதை கொடுக்க விரும்பவில்லை, 257 00:14:58,649 --> 00:15:01,568 மர்பிக்காக இல்லையென்றால் நான் அதை கொடுத்திருக்கமாட்டேன். 258 00:15:03,278 --> 00:15:08,200 நீங்கள் அதற்கு நல்ல வீட்டைக் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறேன். நல்ல நாய்க்குட்டி. 259 00:15:09,785 --> 00:15:12,829 -ஆம். -போகலாம், ஜாக். 260 00:15:16,416 --> 00:15:18,043 இது நல்ல நாய்க்குட்டிதான். 261 00:15:18,126 --> 00:15:20,546 கவலைப்படாதே, ஜாக். நான் உன்னை கைவிடமாட்டேன். 262 00:15:23,966 --> 00:15:25,968 எனவே உண்மைகளைப் பார்ப்போம். 263 00:15:26,051 --> 00:15:29,513 கடந்த காலத்தில், நீ உதவியாளர்கள், துரத்துபவர்கள், மற்றும் 264 00:15:29,596 --> 00:15:33,141 கொஞ்சம் கூடுதல் கவனம் தேவைப்படும் சில நாய்க்குட்டிகளை வளர்த்திருக்கிறாய். 265 00:15:33,225 --> 00:15:36,228 ஆனால் ஜாக், சுய் ஜெனரிஸ். 266 00:15:36,311 --> 00:15:38,814 அது உன் பாட்டி பயன்படுத்தும் இன்னொரு வார்த்தையா? 267 00:15:38,897 --> 00:15:41,149 ஓ, இல்லை. இது லத்தீன்... 268 00:15:42,776 --> 00:15:45,612 "அது ஒரு தனிப்பிரிவு." 269 00:15:46,196 --> 00:15:48,031 எனவே, அதற்கு தனியாக இருப்பது பிடிக்காது. 270 00:15:48,115 --> 00:15:52,119 -மற்ற நாய்களையும் அதற்கு பிடிப்பதில்லை. -யாருக்குதான் மற்ற நாய்களைப் பிடிக்காது? 271 00:15:52,202 --> 00:15:55,497 இதற்கு. இன்று உண்மையில் திட்டமிட்டபடி போகவில்லை. 272 00:15:56,415 --> 00:15:57,708 இது நலமா? 273 00:15:57,791 --> 00:15:59,501 நலமடைந்துவிடும், இறுதியில். 274 00:15:59,585 --> 00:16:02,921 இது வீட்டில் ஒரே நாயாக இருக்க விரும்புகிறது. 275 00:16:03,005 --> 00:16:04,423 அல்லது நாய் பூங்காவில். 276 00:16:04,506 --> 00:16:07,342 அதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு இதெல்லாம் தேவைப்பட்டதா? 277 00:16:07,426 --> 00:16:09,803 இல்லை, சலிப்பாக இருந்தது. 278 00:16:09,887 --> 00:16:13,307 சரி, நீங்கள் முடித்ததும், உன் சகோதரியை போய் பார். 279 00:16:13,390 --> 00:16:15,893 இன்றைய நாள் அவளுக்கும் திட்டமிட்டபடி சென்றதாகத் தெரியவில்லை. 280 00:16:16,810 --> 00:16:18,604 -சரி. -சரி. 281 00:16:26,111 --> 00:16:29,865 -எனவே, கிட்டுக்கு என்ன செய்யப் போகிறாய்? -அவருடைய மின்னஞ்சல் முகவரி தெரிந்தது, 282 00:16:29,948 --> 00:16:32,284 நான் அவருக்கு ஒரு நல்ல மின்னஞ்சலை அனுப்புகிறேன்... 283 00:16:33,410 --> 00:16:35,913 -இப்போது. -சரி, அது ஒரு நல்ல ஆரம்பம். 284 00:16:35,996 --> 00:16:37,664 ஆனால் அவர் பதிலளிக்க சில நாட்கள் அவகாசம் கொடு. 285 00:16:37,748 --> 00:16:40,834 நினைவில் கொள், கவலைப்படுவது அவர் விரைவாக உனக்கு பதிலளிக்க செய்யாது. 286 00:16:42,961 --> 00:16:44,755 கிட்டிடம் இருந்து மின்னஞ்சல் வந்திருக்கிறது! 287 00:16:44,838 --> 00:16:46,882 பார்! அவர் என்ன சொல்கிறார்? 288 00:16:46,965 --> 00:16:51,053 "கிட் ஸ்மிதர்ஸ் அலுவலகத்தில் இல்லை. அதிக அளவு மின்னஞ்சல்களின் காரணமாக, 289 00:16:51,136 --> 00:16:53,555 இந்த நேரத்தில் அவரால் உங்களுக்கு பதிலளிக்க முடியாது." 290 00:16:54,056 --> 00:16:55,474 நல்ல பதில் அல்ல. 291 00:16:56,808 --> 00:17:00,521 நான் என்ன நினைத்தேன்? அதாவது, அவர் ஒரு பரபரப்பான பெரியவர். 292 00:17:00,604 --> 00:17:04,066 யாரோவொரு சிறுமியின் சிறப்பு கோரிக்கைகளுக்கு அவருக்கு நேரம் இருக்காது. 293 00:17:04,148 --> 00:17:06,818 நீ யாரோவொரு சிறுமி அல்ல. நீ அவருடைய மிகப்பெரிய ரசிகை. 294 00:17:07,402 --> 00:17:09,530 நான் நிச்சயமாக அவருடைய நண்பர் அல்ல. 295 00:17:10,071 --> 00:17:12,031 எனவே, நீ என்ன செய்ய விரும்புகிறாய்? 296 00:17:12,115 --> 00:17:14,076 எனக்குத் தெரியவில்லை. நான் ஏதாவது யோசிக்கிறேன். 297 00:17:14,159 --> 00:17:16,828 நானும் ஏதாவது யோசிக்க முயற்சிக்கிறேன். பிறகு பேசுகிறேன். 298 00:17:16,912 --> 00:17:18,789 சரி. வருகிறேன். 299 00:17:20,582 --> 00:17:23,335 நாங்கள் உன்னை உற்சாகப்படுத்த வந்தோம். இது ஜாக்கின் யோசனை. 300 00:17:25,712 --> 00:17:28,048 நான் விரும்பியதெல்லாம் மரியாவின் வாசிப்பு வட்டத்தில் சேரத்தான். 301 00:17:28,131 --> 00:17:30,551 ஆனால் நான் அவர்களிடம் பொய் சொல்லி எல்லாவற்றையும் கெடுத்துவிட்டேன். 302 00:17:30,634 --> 00:17:32,636 நீ ஏன் பொய் சொன்னாய் என்று எனக்குத் தெரியவில்லை. 303 00:17:32,719 --> 00:17:35,264 ஆனால் உனக்கு ஏன் வாசிப்பு வட்டம் தேவை என்றும் தெரியவில்லை. 304 00:17:35,347 --> 00:17:37,349 -நீ எப்போதும் திரைப்படம் பார்க்கலாம். -சார்ல்ஸ். 305 00:17:37,432 --> 00:17:40,018 நான் உன்னை உற்சாகப்படுத்த முயற்சிக்கிறேன், நினைவிருக்கிறதா? 306 00:17:40,102 --> 00:17:42,479 நான் கிட் ஸ்மிதர்ஸின் நல்ல நண்பர் என்றும், ஞாயிற்றுக்கிழமை 307 00:17:42,563 --> 00:17:44,857 எங்கள் சந்திப்புக்கு அவரை அழைத்து வருவதாகவும் சொன்னேன். 308 00:17:46,066 --> 00:17:47,901 அவர் எனக்கு எந்த பதிலும் அனுப்பவில்லை. 309 00:17:47,985 --> 00:17:51,113 ஆனால் அவர் சனிக்கிழமை கோஸி நூக் புக்ஸில் இருப்பார் என்று சொன்னாய். 310 00:17:51,196 --> 00:17:53,115 அப்போது ஏன் நீ அவரிடம் கேட்கக்கூடாது? 311 00:17:53,198 --> 00:17:56,910 -நான் அவரை தொந்தரவு செய்தது போதும். -நீ அவரை தொந்தரவு செய்யவில்லை என்றால். 312 00:17:56,994 --> 00:17:59,454 ஒருவேளை நீ சொன்னது போல அவருக்கு வேலை பளு இருந்திருக்கலாம். 313 00:17:59,538 --> 00:18:02,207 நீ ஒட்டுக்கேட்டாயா? அது தவறு! 314 00:18:02,291 --> 00:18:05,711 இல்லை. நீ மரியாவிடம் பேசும்போது நான் குறுக்கிட விரும்பவில்லை. 315 00:18:05,794 --> 00:18:07,629 அதுதான் தவறாக இருந்திருக்கும். 316 00:18:07,713 --> 00:18:08,714 சரி. 317 00:18:11,175 --> 00:18:13,427 நான் ஏதாவது உதவி செய்ய முடியுமா? 318 00:18:13,510 --> 00:18:15,304 கிட் ஸ்மிதர்ஸை உனக்கு தெரியாத வரை முடியாது. 319 00:18:17,681 --> 00:18:19,349 எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன். 320 00:18:19,433 --> 00:18:22,936 நாம் நாய்க்குட்டிக்கு வீட்டை தேடும்போது நீ ஒருபோதும் பின்வாங்கியதில்லை. 321 00:18:23,020 --> 00:18:25,439 எனவே நீ ஏன் இதிலிருந்து பின்வாங்குகிறாய் என்று எனக்குப் புரியவில்லை. 322 00:18:25,939 --> 00:18:27,274 அட, லிஸ்ஸி. 323 00:18:27,357 --> 00:18:30,611 தார்மீக ஆதரவுக்காக நானும் ஜாக் உன்னுடன் புத்தகக் கடைக்கு வருகிறோம். 324 00:18:31,111 --> 00:18:34,907 நான் புதிய 'மெஜஸ்டிக் டாக் வாரியர்' காமிக் புத்தகத்தை உனக்கு வாங்கித்தர வேண்டும். 325 00:18:34,990 --> 00:18:36,450 உன் கை செலவு பணத்தை நீ என்ன செய்கிறாய் 326 00:18:36,533 --> 00:18:38,660 என்பது என் பிரச்சனை இல்லை. 327 00:18:38,744 --> 00:18:41,079 மேலும் அது காமிக் புத்தகம் அல்ல. அது மாங்கா. 328 00:18:42,206 --> 00:18:44,458 ஜாக்குக்கு வீட்டைக் கண்டுபிடிக்க ஏதாவது வழி கிடைத்ததா? 329 00:18:45,459 --> 00:18:47,002 இப்போது, ஒரே வழிதான் இருக்கிறது. 330 00:18:47,085 --> 00:18:49,963 அது நல்லதுதான். அது சரியானதாக இருந்தால். 331 00:18:50,047 --> 00:18:51,965 நல்லது நடக்கும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. 332 00:18:56,428 --> 00:18:57,429 என்ன? 333 00:18:57,513 --> 00:18:59,056 நான் யோசிக்கிறேன். 334 00:18:59,139 --> 00:19:01,600 இதை வளர்க்க யோசிக்கிறாயா? 335 00:19:01,683 --> 00:19:06,021 அல்லது வழக்கம் போல அதனிடம் உள்ள எல்லா குறைகளையும் பற்றியுமா? 336 00:19:06,605 --> 00:19:11,485 ஏதும் குறையில்லை. நட்பானதாக தெரிகிறது. காதுகளை பிடித்திருக்கிறது. 337 00:19:11,568 --> 00:19:13,695 நினைவில் கொள், இதற்கு மற்ற நாய்களை பிடிக்காது. 338 00:19:13,779 --> 00:19:16,949 என்னிடம் வேறு நாய்கள் இல்லை. இது மிகவும் பொருத்தமானதாக இருக்கலாம். 339 00:19:17,032 --> 00:19:18,867 -நிஜமாகவா? -முற்றிலும். 340 00:19:18,951 --> 00:19:20,285 அது ஆச்சரியமாக இருக்கிறது! 341 00:19:20,369 --> 00:19:24,706 ஆனால் இது ஒரு பாக்ஸர் நாய், அது எனக்கு குத்துச்சண்டையை நினைவூட்டுகிறது. 342 00:19:24,790 --> 00:19:26,875 குத்துச்சண்டை குத்துவதைப் பற்றியது. 343 00:19:26,959 --> 00:19:29,962 -ஜூடோ பயிற்சி பெறுபவனான... -எனக்குத் தெரியும். 344 00:19:31,505 --> 00:19:33,298 இன்று மதியம்: கிட் ஸ்மிதர்ஸ் 345 00:19:34,508 --> 00:19:36,260 -ஹாய், டேரியோ. -ஹேய், லிஸ்ஸி. 346 00:19:36,343 --> 00:19:39,680 -நான் நினைத்தேன்... -புதிய 'மெஜஸ்டிக் டாக் வாரியர்' வந்துவிட்டதா? 347 00:19:39,763 --> 00:19:41,557 அது காமிக் பிரிவில் இருக்கிறது. 348 00:19:41,640 --> 00:19:44,560 -ஆம், அது மாங்கா என்று எனக்குத் தெரியும். -சரி. நன்றி. 349 00:19:44,643 --> 00:19:47,020 கிட்டின் வாசிப்பு வரை காத்திருக்க முடியாதா? 350 00:19:47,104 --> 00:19:48,105 முடியாது. 351 00:19:50,065 --> 00:19:53,485 -ஒரு உதவி செய்வீர்களா? -எனது சிறந்த வாடிக்கையாளருக்கு நிச்சயமாக. 352 00:19:53,569 --> 00:19:54,862 உங்களால் முடியும் என்றால் 353 00:19:54,945 --> 00:19:57,573 -என்னை அறிமுகப்படுத்த... -மன்னிக்கவும். 354 00:19:57,656 --> 00:19:58,907 டேர்... 355 00:19:58,991 --> 00:20:01,743 -மன்னிக்கவும். -நான் டேரியோ, திருமதி ஸ்மிதர்ஸ். 356 00:20:01,827 --> 00:20:04,496 கிட், திருமதி ஸ்மிதர்ஸ் அல்ல. 357 00:20:04,580 --> 00:20:08,959 நீங்கள் பார்க்கக்கூடியது போலவே, நான் என் கண்ணாடியை எங்கோ வைத்துவிட்டேன். 358 00:20:09,042 --> 00:20:11,712 நான் தேடி கண்டுபிடிக்கிறேன். 359 00:20:12,379 --> 00:20:13,922 ஹாய், கிட். 360 00:20:14,006 --> 00:20:15,340 ஹலோ. 361 00:20:15,424 --> 00:20:16,717 நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகை. 362 00:20:16,800 --> 00:20:19,595 மிகப்பெரிய ரசிகையாக இல்லாமல் போகலாம். அதன் அளவு எனக்குத் தெரியவில்லை. 363 00:20:19,678 --> 00:20:22,139 ஆனால் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன், நீங்கள் அதற்கு பதில் எழுதினீர்கள். 364 00:20:22,222 --> 00:20:24,141 ஆனால், அது மெல்லப்பட்டது. 365 00:20:24,224 --> 00:20:27,352 ஆனாலும் அதை சட்டகத்தில் வைத்திருக்கிறேன், ஏனென்றால் நீங்கள், கிட் ஸ்மிதர்ஸ்! 366 00:20:27,436 --> 00:20:31,231 உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி. இப்போது, நீ என்னை அனுமதித்தால்... 367 00:20:31,315 --> 00:20:33,817 உங்கள் ரசிகர்கள் உங்களுக்கு ஊக்கமளிப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். 368 00:20:33,901 --> 00:20:34,902 அதை வரவேற்கிறேன். 369 00:20:34,985 --> 00:20:36,528 அதாவது, நன்றி. 370 00:20:36,612 --> 00:20:40,157 எனவே, நாளை என் வாசிப்பு வட்டத்துக்கு நீங்கள் சிறப்பு விருந்தினராக 371 00:20:40,240 --> 00:20:41,533 வர முடியுமா? 372 00:20:41,617 --> 00:20:44,328 சுவையான, இலக்கியம் சார்ந்த சிற்றுண்டி நிச்சயம் கிடைக்கும். 373 00:20:45,204 --> 00:20:46,663 என்னை மன்னித்துவிடு. 374 00:20:46,747 --> 00:20:49,333 -யாரும் அதை பார்க்கவில்லையாம். -வேதனை அளிக்கிறது. 375 00:20:49,416 --> 00:20:51,543 படிக்க முடியவில்லை என்றால் புத்தகம் வாசிப்பது கடினம். 376 00:20:51,627 --> 00:20:54,588 என் காரில் ஒன்று இருப்பதாக நினைக்கிறேன். 377 00:20:56,715 --> 00:20:58,342 மன்னிக்கவும், அன்பே, 378 00:20:58,425 --> 00:21:02,638 ஆனால் எனது ரசிகர்களின் வாசிப்பு வட்டங்களுக்கு செல்வது என் வழக்கமில்லை. 379 00:21:03,555 --> 00:21:07,392 -ஆனால் நீ வாசிப்பில் கலந்துகொள்ள வேண்டும். -ஓ, சரி. 380 00:21:09,811 --> 00:21:11,063 நிச்சயமாக. 381 00:21:11,563 --> 00:21:12,564 என்ன ஆனது? 382 00:21:13,857 --> 00:21:17,861 கிட்டுக்கு நான் யாரென்றே தெரியவில்லை அவர் வரப்போவதில்லை. 383 00:21:17,945 --> 00:21:20,656 -என்ன செய்வதென்று தெரியவில்லை, சார்ல்ஸ். -எனக்கும்தான். 384 00:21:20,739 --> 00:21:22,908 'மெஜெஸ்டிக் டாக் வாரியர்' விற்றுத்தீர்ந்துவிட்டது. 385 00:21:22,991 --> 00:21:25,160 இப்போது வாசிப்பின் போது எனக்கு படிக்க எதுவும் இல்லை. 386 00:21:26,328 --> 00:21:29,873 நீ இங்கே இருக்க வேண்டியதில்லை, ஆனால் நீ இருந்தால் நான் பாராட்டுவேன். 387 00:21:30,541 --> 00:21:32,459 அதோடு, ஜாக்கும் சலிப்படைந்துவிடும். 388 00:21:35,921 --> 00:21:37,339 உறுதியாக சொல்கிறாயா? 389 00:21:37,422 --> 00:21:39,258 ஆம், உறுதியாக. 390 00:21:40,175 --> 00:21:42,719 சரி, நன்றி. வா, ஜாக். 391 00:21:56,149 --> 00:21:58,610 ஹேய், மரியா. நீ இங்கே என்ன செய்கிறாய்? 392 00:21:58,694 --> 00:22:01,446 நாம் கிட் குறித்த சிக்கலை தீர்க்க முயன்றது நினைவிருக்கிறதா, 393 00:22:01,530 --> 00:22:03,448 நான் ஏதாவது யோசிக்கிறேன் என்று சொன்னேனே? 394 00:22:03,532 --> 00:22:06,201 -நான் ஒன்று நினைத்தேன். -சரி. 395 00:22:06,285 --> 00:22:08,871 நான் டாஃப்னி மற்றும் வின்சென்டிடம், கிட் நாளை சீக்கிரம் கிளம்பிவிடுவர், 396 00:22:08,954 --> 00:22:11,832 எனவே அவரால் வர முடியாது, ஆனால் நீ "கிட், நீங்கள் உறுதியளித்தீர்கள். 397 00:22:11,915 --> 00:22:14,668 என் வாசிப்பு வட்டத்துக்கு வராமல் இருக்கக் கூடாது" என வாதிட்டதாக சொன்னேன். 398 00:22:15,169 --> 00:22:16,628 அவர்கள் நீ சொன்னதை நம்பினார்களா? 399 00:22:16,712 --> 00:22:20,257 100%. அது மட்டுமல்ல, நீ எவ்வளவு வருத்தப்பட்டாய் என்றும் அவர்களிடம் சொன்னேன், 400 00:22:20,340 --> 00:22:22,050 முற்றிலும் பரவாயில்லை என்று சொன்னார்கள். 401 00:22:22,134 --> 00:22:25,179 பொறு, அப்போது இன்னும் நான் வாசிப்பு வட்டத்தில் இருப்பதாக சொல்கிறாய்? 402 00:22:25,762 --> 00:22:27,264 மரியா, அது அருமை. 403 00:22:27,347 --> 00:22:30,684 -இல்லை, அது இல்லை. -பொறு, என்ன? 404 00:22:31,268 --> 00:22:32,603 அங்கே இருக்கிறாள். 405 00:22:32,686 --> 00:22:34,313 லிஸ்ஸி! 406 00:22:34,396 --> 00:22:37,065 மரியா நடந்ததை சொன்னாள். கவலைப்படாதே. அது உன் தவறு அல்ல. 407 00:22:37,149 --> 00:22:39,151 தவிர, நீ இன்று அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தலாம். 408 00:22:39,234 --> 00:22:41,778 அவருடைய புதிய புத்தகத்தை எவ்வளவு விரும்புகிறோம் என சொல்ல ஆவலாக இருக்கிறேன். 409 00:22:41,862 --> 00:22:45,574 எல்லோரும் புத்தகங்களில் கையெழுத்து பெற்ற பிறகு அவர் எங்களுடன் தேநீர் அருந்தலாம். 410 00:22:46,325 --> 00:22:47,868 நான் ஒரு VIP யாக இருப்பது பிடிக்கும். 411 00:22:55,000 --> 00:22:57,377 நான் உங்கள் இருவரிடமும் ஒன்று சொல்ல வேண்டும். 412 00:22:59,338 --> 00:23:01,256 எனக்கு உண்மையில் கிட் ஸ்மிதர்ஸை தெரியாது. 413 00:23:02,424 --> 00:23:05,761 நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவர் பதில் எழுதினார். அவ்வளவுதான். 414 00:23:06,762 --> 00:23:11,517 வாசிப்பு வட்டத்தில் சேர விரும்பினேன். நீச்சல் குளமும் இல்லை, எனவே பொய் சொன்னேன். 415 00:23:11,600 --> 00:23:13,727 எல்லோரும் கவனியுங்கள். 416 00:23:13,810 --> 00:23:18,398 தயவுசெய்து கிட் ஸ்மிதர்ஸுக்கு அன்பான வரவேற்பு கொடுங்கள். 417 00:23:23,654 --> 00:23:27,741 அனைவரின் வருகைக்கும் நன்றி. எவ்வளவு அழகான கடை. 418 00:23:27,824 --> 00:23:29,868 நீ ஏன் அப்படி செய்தாய் என்று புரிகிறது. 419 00:23:29,952 --> 00:23:31,828 -நாம் தொடங்குவதற்கு முன்பு... -நிஜமாகவா? 420 00:23:31,912 --> 00:23:34,414 முற்றிலும். டாப்னி அப்படி நினைக்கமாட்டாள். 421 00:23:34,498 --> 00:23:38,627 ...என் சுவாரசியமற்ற வாழ்க்கையின் ஒரு குட்டி கதையை சொல்ல விரும்புகிறேன். 422 00:23:39,378 --> 00:23:40,754 உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும், 423 00:23:40,838 --> 00:23:44,466 சமீபத்தில் என் சிறந்த நண்பன், என் நாய், கபூடலுக்கு விடை கொடுக்க வேண்டியிருந்தது. 424 00:23:45,551 --> 00:23:47,761 கபூடல் அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்தது, 425 00:23:47,845 --> 00:23:51,598 ஆனால் அதன் மறைவுக்கு பிறகு என் மனநிலை இயல்பாக இல்லை. 426 00:23:51,682 --> 00:23:52,683 அதனால் தான், 427 00:23:52,766 --> 00:23:57,229 பத்து நிமிடங்களுக்கு முன்பு பார்க்கிங்கில் அழகான பாக்ஸர் நாய்க்குட்டியைப் பார்த்து, 428 00:23:57,312 --> 00:23:59,439 நான் ஹலோ சொல்ல வேண்டியிருந்தது. 429 00:23:59,523 --> 00:24:02,901 அதை கூட்டிச்சென்ற சென்ற இளைஞன் என்னை அடையாளம் கண்டுகொண்டான், நாங்கள் பேசினோம், 430 00:24:02,985 --> 00:24:06,446 அவன் என் மீது கொஞ்சம் வருத்தத்தில் இருந்ததை உணர்ந்தேன். 431 00:24:06,947 --> 00:24:08,073 ஓ, இல்லை. 432 00:24:09,032 --> 00:24:10,993 ஆனால் நாங்கள் விரைவாக அதற்கு தீர்வு கண்டோம். 433 00:24:11,076 --> 00:24:14,997 அதனால்தான் ஒரு சிறப்பு நபருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன், 434 00:24:15,747 --> 00:24:17,124 லிஸ்ஸி பீட்டர்சன்... 435 00:24:18,208 --> 00:24:23,714 இப்போது நினைவு வந்துவிட்டது, எனக்கு வந்ததிலேயே மிகவும் சிந்தனை மிக்க 436 00:24:23,797 --> 00:24:25,007 கடிதங்களில் ஒன்றை அனுப்பியவர். 437 00:24:26,258 --> 00:24:28,802 லிஸ்ஸி மற்றும் அவரது சகோதரன் சார்லஸுக்கு நன்றி, 438 00:24:28,886 --> 00:24:33,182 என் புதிய நண்பன், ஜாக்கும் நானும் ஒன்றாக வெர்மான்ட் வீட்டிற்கு செல்லவிருக்கிறோம். 439 00:24:33,265 --> 00:24:34,683 என்ன? 440 00:24:34,766 --> 00:24:37,269 அது மிகவும் அருமை. 441 00:24:40,272 --> 00:24:44,484 எப்படியிருந்தாலும், பெக்கா பேக்ஸ்டர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா? 442 00:24:45,068 --> 00:24:46,904 இது அத்தியாயம் ஆறிலிருந்து, 443 00:24:46,987 --> 00:24:52,159 அங்கு பெக்காவும் சார்டோவும் கரடுமுரடான, இருண்ட கோட்டையின் நடுவில் இருக்கிறார்கள். 444 00:24:52,242 --> 00:24:53,619 பேக் இன் டைம் வித் பெக்கா பேக்ஸ்டர் 445 00:24:55,078 --> 00:24:58,540 பெஞ்சமினை அறிமுகப்படுத்த கடைசி அத்தியாயம் வரை அவர் ஏன் காத்திருந்தார்? 446 00:24:59,124 --> 00:25:03,337 கிட் ஸ்மிதர்ஸை அறிந்ததால், அவருடைய அடுத்த புத்தகத்தில் அது உறுதியாக தெரியவரும். 447 00:25:04,213 --> 00:25:05,506 நீங்கள் என்ன நினைக்கறீர்கள்? 448 00:25:09,843 --> 00:25:11,136 வேறு யாராவது? 449 00:25:34,201 --> 00:25:36,119 எலென் மைல்ஸ் எழுதிய 'தி பப்பி ப்ளேஸ்' என்ற ஸ்கோலஸ்டிக் புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது 450 00:26:52,196 --> 00:26:54,198 வசன தமிழாக்கம் அருண்குமார்