1 00:00:22,773 --> 00:00:25,609 மிஸ். லெஜர், திரு. டொமினே. 2 00:00:25,609 --> 00:00:29,321 திரு. அலெக்ஸாண்ட்ரே லெஜர் அமைத்த இரண்டாவது சோதனையைக் கொடுக்கப் போகிறேன். 3 00:00:29,321 --> 00:00:33,116 அவர் ஒரு ஓவியத்தைத் தேர்வுசெய்துள்ளார், ”தொடர்பு” என்ற வார்த்தை மட்டும்தான் ஒரே குறிப்பு. 4 00:00:33,992 --> 00:00:35,994 இந்த ஓவியத்தை நன்றாகப் பாருங்கள். 5 00:00:36,495 --> 00:00:38,830 இதற்குப் பொருத்தமான ஒயினைக் கண்டறிய இரண்டு வாரங்கள் உள்ளன. 6 00:00:51,051 --> 00:00:54,680 {\an8}திரு. நொபொரு டொமினே உடனான பிரஸ் கான்ஃபிரன்ஸ் விரைவில் தொடங்கும். 7 00:00:54,680 --> 00:01:00,310 {\an8}அவர் மீடியாவை வெறுப்பவர் என்பதால், பொதுவில் பெரிதாக வர மாட்டார். 8 00:01:00,811 --> 00:01:02,813 {\an8}எனினும், அவரது பேரன், இஸ்ஸேய், 9 00:01:02,813 --> 00:01:05,440 {\an8}ஒயின் உலகில் மேன்மை பெற்று விளங்கிய அலெக்ஸாண்ட்ரே லெஜரின் சொத்தை 10 00:01:05,440 --> 00:01:07,985 {\an8}அடைவதற்காகக் போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார். 11 00:01:07,985 --> 00:01:10,404 அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களின்படி, அவர்... 12 00:01:11,029 --> 00:01:13,073 இதோ வருகிறார். திரு. நொபொரு டொமினே. 13 00:01:25,169 --> 00:01:28,505 உலகமே மாறிவிட்டது. 14 00:01:29,548 --> 00:01:31,758 {\an8}நான் கூறியது போல, ஜப்பான் மாறிவிட்டது. 15 00:01:32,718 --> 00:01:39,224 {\an8}அது மாறிவிட்டது எனில், 16 00:01:39,975 --> 00:01:44,855 {\an8}என்னைப் போன்ற வயதானவனும் மாறலாம். 17 00:01:46,940 --> 00:01:53,405 என் பேரன், இஸ்ஸேய் டொமினேவும் மாறிவிட்டான். 18 00:01:54,907 --> 00:02:00,829 அவன் ஒயின் உலகத்திற்குள் நுழைந்துவிட்டான், 19 00:02:00,829 --> 00:02:04,499 அது வழக்கமாக மேற்கத்திய மக்களுக்கானது. 20 00:02:04,499 --> 00:02:08,961 அவன் தன் திறமையை இந்த உலகத்திற்கு உடனடியாக நிரூபித்துள்ளான். 21 00:02:11,507 --> 00:02:16,970 {\an8}நான் இஸ்ஸேயை ஆதரிப்பேன். 22 00:02:17,554 --> 00:02:20,891 {\an8}அவன் வெல்ல வேண்டும் என்று என மனதார வேண்டுகிறேன். 23 00:02:25,896 --> 00:02:27,064 இஸ்ஸேய், 24 00:02:28,106 --> 00:02:34,696 டொமினே டயமண்ட்ஸ் உனக்கு ஆதரவளிக்கும். 25 00:02:36,615 --> 00:02:39,243 {\an8}வென்றுவிடு! 26 00:02:39,826 --> 00:02:40,911 {\an8}எங்களுக்காக. 27 00:02:42,162 --> 00:02:45,541 {\an8}குறிப்பாக ஜப்பானுக்காக. 28 00:02:48,252 --> 00:02:52,631 {\an8}மிக்க நன்றி. 29 00:03:03,225 --> 00:03:04,434 இதோ. 30 00:03:05,352 --> 00:03:06,478 ஸ்டில் லைஃப் ஓவியம், 31 00:03:06,478 --> 00:03:09,523 ஃபெடே கலிஸியா வரைந்த பீச்கள், சீமை மாதுளை மற்றும் மல்லிகை. 32 00:03:10,315 --> 00:03:12,818 அவர் 17ம் நூற்றாண்டின் பரோக் காலத்தைச் சேர்ந்த 33 00:03:13,610 --> 00:03:14,736 மிலன் ஓவியர். 34 00:03:14,736 --> 00:03:15,863 சரி. 35 00:03:16,613 --> 00:03:20,075 ஸ்டில் லைஃப். அவை அழகையும் 36 00:03:20,075 --> 00:03:21,660 வாழ்க்கையின் சுருக்கத்தையும் பிரதிபலிப்பவை. 37 00:03:21,660 --> 00:03:23,203 எல்லாம் முடிவுக்கு வரும். 38 00:03:23,203 --> 00:03:27,124 பழம் அதன் கிண்ணத்தில் அழுகுவது போல, மனிதர்களும் இறப்பார்கள். 39 00:03:28,083 --> 00:03:29,251 இது அழகாக உள்ளது. 40 00:03:29,835 --> 00:03:31,003 நன்றி. 41 00:03:32,254 --> 00:03:33,839 வாழ்க்கை மற்றும் பிறவற்றின் சுருக்கம். 42 00:03:34,798 --> 00:03:36,592 உன் புத்தகத்தில் நீ அதைக் கூறியிருக்கிறாய், இல்லையா? 43 00:03:37,843 --> 00:03:38,969 நீ அதைப் படித்துள்ளாயா? 44 00:03:39,720 --> 00:03:42,723 ஆம். அது மிகவும் நன்றாக இருந்தது. எனக்குப் பிடித்திருந்தது. 45 00:03:46,143 --> 00:03:51,857 நாம் தேடும் தொடர்பானது வாழ்க்கைக்கும் இறப்புக்குமான தொடர்பாக இருக்கலாம். 46 00:03:52,524 --> 00:03:55,944 ஆம், ஆனால் அதற்கும் ஒயினுக்கும் என்ன சம்மந்தம்? 47 00:03:57,946 --> 00:03:59,072 அல்லது ஒயினுக்கும்? 48 00:04:00,157 --> 00:04:01,241 அது... 49 00:04:02,618 --> 00:04:04,036 ”தொடர்பா”? 50 00:04:04,036 --> 00:04:07,539 தொடர்பு என்னவென்று தெரியவில்லை, ஆனால் வெள்ளை ஒயினோ சிவப்பு ஒயினோ 51 00:04:07,539 --> 00:04:09,208 அது இத்தாலியனாகத்தான் இருக்க வேண்டும். 52 00:04:09,875 --> 00:04:12,044 மிலன் அல்லது லம்பார்டி பிராந்தியம். 53 00:04:12,044 --> 00:04:15,214 எந்தவொரு திராட்சை வகையையும் தேடுங்கள். 54 00:04:15,214 --> 00:04:18,966 அவை 17ம் நூற்றாண்டில் இருந்து கூட வந்திருக்கலாம், நமக்குத் தெரியாது. 55 00:04:21,470 --> 00:04:25,390 மணங்கள்... பீச், மல்லிகை, சீமை மாதுளை. 56 00:04:25,390 --> 00:04:29,728 அவை அனைத்தும் கச்சிதமாக இருக்கும், ஆனால் அதில் இரண்டு நன்றாகத்தான் இருக்கும். 57 00:04:34,191 --> 00:04:35,400 முடிந்தது. 58 00:04:35,400 --> 00:04:38,820 சரி. வாருங்கள், போகலாம். 59 00:04:39,655 --> 00:04:40,656 நன்றி. 60 00:04:45,494 --> 00:04:47,162 என்னைப் பார்க்க விரும்பினீர்களா? 61 00:05:07,391 --> 00:05:08,433 அது என்ன? 62 00:05:25,200 --> 00:05:26,827 அப்பாவுக்கு என்ன ஆனது? 63 00:05:35,544 --> 00:05:38,088 ”என்னைத் தேடாதீர்கள்.” 64 00:05:38,088 --> 00:05:39,631 அவரைக் காணவில்லையா? 65 00:05:39,631 --> 00:05:41,675 - எப்போதிருந்து? - அது முக்கியமில்லை. 66 00:05:42,426 --> 00:05:45,053 நீதான் அவரைப் பார்த்த கடைசி ஆள். 67 00:05:46,638 --> 00:05:48,140 எதைப் பற்றிப் பேசினீர்கள்? 68 00:05:57,524 --> 00:05:58,650 இஸ்ஸேய்? 69 00:06:02,196 --> 00:06:04,489 அவர் என்னை போட்டியில் இருந்து பின்வாங்கும்படி கூறினார். 70 00:06:05,991 --> 00:06:07,826 நீங்கள்தான் அப்படிக் கூறும்படி கேட்டதாக நினைத்தேன். 71 00:06:07,826 --> 00:06:08,994 நான் ஏன் கேட்கப் போகிறேன்? 72 00:06:09,578 --> 00:06:10,871 நான் அப்படிச் செய்ய மாட்டேன். 73 00:06:11,663 --> 00:06:15,167 நீ பிறரது சொத்துக்காகப் போட்டியிட்டால், 74 00:06:15,167 --> 00:06:19,254 அது அவரது நற்பெயர் உட்பட, டொமினே குழுமத்தின் நற்பெயர் பாதிக்கப்படும் என நினைத்தார். 75 00:06:19,254 --> 00:06:20,506 அவரை விட்டுச் செல்லும்போது... 76 00:06:22,382 --> 00:06:24,468 அவர் ஒரு கோழை என்று கூறினேன். 77 00:06:27,721 --> 00:06:29,056 உனக்கு எவ்வளவு தைரியம்? 78 00:06:29,640 --> 00:06:31,433 அவர் உணர்ச்சிவசப்படக்கூடியவர். 79 00:06:31,433 --> 00:06:33,519 எப்படி அவரை அவமானப்படுத்த முடிந்தது? 80 00:06:33,519 --> 00:06:35,395 நீங்கள்தான் அவரை எப்போதும் அவமானப்படுத்தியது. 81 00:06:36,146 --> 00:06:37,147 என்ன? 82 00:06:37,856 --> 00:06:39,441 நான் சரியாகத்தான் கூறினேன். 83 00:06:41,568 --> 00:06:43,612 - நாம் போலீஸிடம் செல்ல வேண்டும். - கூடாது. 84 00:06:44,488 --> 00:06:46,907 இது யாருக்கும் தெரியக் கூடாது. 85 00:06:46,907 --> 00:06:49,201 அப்பாவைக் காணவில்லை, நீங்கள் எதுவும் செய்ய மாட்டீர்களா? 86 00:06:49,201 --> 00:06:52,913 அவர் பிரிவதற்குத் தீர்மானமாக இருந்தால், நம்முடன் இருக்க அவரைக் கட்டாயப்படுத்த முடியாது. 87 00:06:52,913 --> 00:06:55,624 - ஆனால் அவருக்கு எதுவும் ஆனால்? - எதுவும் செய்யாதே! 88 00:06:57,918 --> 00:07:01,630 நீ ஏற்கனவே போதுமான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளாய். 89 00:08:21,502 --> 00:08:23,921 தாத்தா, நன்றி. 90 00:08:25,839 --> 00:08:27,007 நான் என்ன செய்தேன்? 91 00:08:28,133 --> 00:08:32,929 நான் ஜெயிக்க வேண்டும் என மனதார விரும்புவதாக அனைவரிடமும் கூறினிர்கள். 92 00:08:32,929 --> 00:08:35,557 ஆம். கூறினேன். 93 00:08:38,352 --> 00:08:41,313 உண்மைதான், இஸ்ஸேய். 94 00:08:46,276 --> 00:08:47,402 மிக்க நன்றி. 95 00:08:48,362 --> 00:08:52,115 உண்மைதான். நீ வென்றாக வேண்டும். 96 00:08:53,242 --> 00:08:57,246 ஏனெனில் உனக்கு வேறு வாய்ப்பு இல்லை. 97 00:08:59,957 --> 00:09:05,754 எங்களிடம் ஆலோசிக்காமல், நாங்கள் எச்சரித்ததையும் மீறி 98 00:09:06,713 --> 00:09:11,134 நீயாகவே முடிவெடுத்துள்ளாய். 99 00:09:12,886 --> 00:09:14,346 அதன் விளைவாக, 100 00:09:15,389 --> 00:09:19,518 நீ இனி இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவன் இல்லை. 101 00:09:21,478 --> 00:09:23,272 புரிகிறதா, இஸ்ஸேய்? 102 00:09:24,690 --> 00:09:27,276 நீ ஜெயிப்பதைத் தவிர வேறு வழியில்லை. 103 00:09:28,026 --> 00:09:31,989 நீ ஜெயிக்கவில்லை எனில், நீ அனைத்தையும் இழப்பாய். 104 00:09:32,948 --> 00:09:35,325 நற்பெயர், பெருமை... 105 00:09:36,994 --> 00:09:40,747 குடும்பம், பணம், எதிர்காலம். 106 00:09:42,499 --> 00:09:45,669 உனக்கு எதுவுமே இருக்காது. 107 00:09:47,171 --> 00:09:52,676 அழுவதற்கு உன் கண்கள் மட்டும்தான் இருக்கும். 108 00:09:54,678 --> 00:09:57,097 உனக்கு அதிர்ஷ்டம் கிடைக்கட்டும். 109 00:10:36,845 --> 00:10:37,846 இல்லை. 110 00:10:57,824 --> 00:10:59,159 அது, 111 00:11:00,494 --> 00:11:04,831 அவள் வாந்தி எடுப்பதாக நினைக்கிறாய், ஆனால் ஃபிரெஞ்சுக்காரர்கள்... 112 00:11:09,545 --> 00:11:11,880 ஆனால் நீங்கள் ஜப்பானியர்களோ, 113 00:11:11,880 --> 00:11:17,094 ஒழுக்கம், பழக்க வழக்கம், தொடக் கூடாது என்றிருக்கிறீர்கள். 114 00:11:18,554 --> 00:11:20,180 உங்களுக்காக வருந்துகிறேன். 115 00:11:35,612 --> 00:11:38,156 அதைத்தானே எதுவும் தெரியாமல் முடிவெடுப்பது என்போம்? 116 00:11:52,296 --> 00:11:53,547 அவரது பெயர்? 117 00:11:54,590 --> 00:11:55,966 ஹிரோகாசு டொமினே. 118 00:11:56,592 --> 00:11:58,927 அவர் எப்படிக் காணாமல் போனார்? 119 00:12:02,848 --> 00:12:05,893 என்னைத் தேடாதீர்கள். 120 00:12:07,853 --> 00:12:09,855 இதை அவரே எழுதினாரா? 121 00:12:10,814 --> 00:12:11,857 ஆம். 122 00:12:14,985 --> 00:12:16,486 உங்கள் அப்பா ஒரு 56 வயதான நபர். 123 00:12:17,738 --> 00:12:20,073 அவர் தன் வாழ்வில் என்ன செய்ய வேண்டும் என முடிவெடுக்கும் பக்குவமுடையவர். 124 00:12:21,783 --> 00:12:23,243 நான் அவரைப் பற்றிக் கவலைப்படுகிறேன். 125 00:12:23,243 --> 00:12:26,413 அவரிடம் பணமோ அவரது அடையாள அட்டைகளோ இல்லை. 126 00:12:26,413 --> 00:12:30,125 அவர் தெருக்களுக்குச் சென்று அவருக்கு மோசமாக எதுவும் ஆவதை நான் விரும்பவில்லை. 127 00:12:30,751 --> 00:12:36,173 ஜப்பானில் தினமும் எத்தனை பெரியவர்கள் காணாமல் போகின்றனர் தெரியுமா? 128 00:12:36,840 --> 00:12:41,136 மக்கள் தானாகக் காணால் போகும்போது எங்களால் என்ன செய்ய முடியும் தெரியுமா? 129 00:12:42,554 --> 00:12:43,722 எதுவும் செய்ய முடியாது. 130 00:12:45,307 --> 00:12:46,934 நாங்கள் அவர்களைக் கண்டறிந்தாலும், 131 00:12:47,768 --> 00:12:50,812 அவர்கள் விரும்பாமல் அவர்களைத் திரும்பிப் போகும்படி கட்டாயப்படுத்த முடியாது. 132 00:12:54,942 --> 00:12:58,529 நான் உங்களை டிவியில் பார்த்துள்ளேனா? 133 00:12:59,571 --> 00:13:00,572 இல்லை. 134 00:13:02,032 --> 00:13:03,075 சரி. 135 00:13:04,159 --> 00:13:05,494 சரி, 136 00:13:06,245 --> 00:13:07,788 எங்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. 137 00:13:08,664 --> 00:13:10,832 சில நேரம் அவர்களாகவே வந்துவிடுவார்கள். 138 00:13:11,333 --> 00:13:13,794 அவரைத் தேடாமலேயே எப்படி உங்களால் அதைச் சொல்ல முடிகிறது? 139 00:13:15,087 --> 00:13:16,713 விரக்தியடையாதீர்கள். 140 00:13:31,228 --> 00:13:32,354 நாம் சந்திக்கலாமா? 141 00:13:34,064 --> 00:13:35,357 எப்போது? 142 00:13:50,622 --> 00:13:51,832 சொல்லாதீர்கள். 143 00:13:52,332 --> 00:13:53,959 இப்போது உங்களுக்கு என்னைப் பிடித்துவிட்டதால் 144 00:13:53,959 --> 00:13:56,962 ஒவ்வொரு போட்டிக்கும் நான் பிரத்தியேக நேர்காணல்கள் செய்ய விரும்புகிறீர்கள், சரியா? 145 00:13:57,713 --> 00:13:58,714 அதேதான். 146 00:14:00,757 --> 00:14:02,009 உண்மையாகவா? 147 00:14:03,677 --> 00:14:05,095 உங்களுக்கு என்ன பிரச்சினை? 148 00:14:05,095 --> 00:14:06,763 நீங்கள் வழக்கம் போல இல்லையே. 149 00:14:08,557 --> 00:14:12,060 நான் உங்களை நம்பலாமா, மிஸ். கடாஸே? 150 00:14:13,520 --> 00:14:15,397 நான் ஒரு பத்திரிக்கையாளர். 151 00:14:23,280 --> 00:14:24,823 மன்னிக்கவும். புரிந்தது. 152 00:14:26,074 --> 00:14:28,452 சரி, நீங்கள் கூறுவும் எதுவும் இந்த இடத்தைவிட்டு வெளியேறாது. சத்தியம். 153 00:14:34,124 --> 00:14:35,792 என் அப்பாவைக் காணவில்லை. 154 00:14:36,293 --> 00:14:38,962 அவரிடம் தன் ஃபோன், அடையாள அட்டைகள், கிரெடிட் கார்டு எதுவுமே இல்லை. 155 00:14:41,340 --> 00:14:42,591 நீங்கள் அவரைக் கண்டறிய வேண்டும். 156 00:14:45,093 --> 00:14:48,805 நான் ஒரு பத்திரிக்கையாளர், தனியார் டிடெக்டிவ் இல்லை. 157 00:14:48,805 --> 00:14:51,350 நீங்கள் செய்வதை நான் பார்த்துள்ளேன், படித்துள்ளேன். 158 00:14:52,518 --> 00:14:55,270 நீங்கள் நிறைய ரிஸ்க் எடுக்கிறீர்கள். 159 00:14:56,271 --> 00:14:59,816 நான் உயர்குடும்பத்தில் பிறந்த மூர்க்கமானவன் என நீங்கள் நினைக்கிறீர்கள். 160 00:14:59,816 --> 00:15:01,026 நான் அப்படியும் இருக்கலாம். 161 00:15:01,652 --> 00:15:04,363 நான் அவ்வளவாக வெளியில் செல்ல மாட்டேன், எனக்கு நிறைய நண்பர்கள் இல்லை. 162 00:15:05,072 --> 00:15:06,073 உண்மையில், 163 00:15:07,074 --> 00:15:09,993 நான் இன்னொரு நபரிடம் இதுபோல மனம் விட்டுப் பேசி நீண்ட காலம் ஆகிறது. 164 00:15:17,376 --> 00:15:18,502 என் அப்பா, அவர்... 165 00:15:22,798 --> 00:15:26,510 டிவி டாக் ஷோவில் எனக்கு ஒரு நியூஸ் ஸ்லாட் உள்ளது. 166 00:15:28,554 --> 00:15:29,972 எனக்கு ஒரு நேர்காணல் கொடுங்கள். 167 00:15:29,972 --> 00:15:31,431 பிரத்தியேகமான ஒன்று. 168 00:15:35,894 --> 00:15:37,688 அவர் ஏன் காணாமல் போனார் என நான் கேட்க மாட்டேன். 169 00:15:39,565 --> 00:15:41,817 ஆனால் நீங்கள் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். 170 00:15:42,568 --> 00:15:44,695 குறிப்பாக ஏன் இந்தத் தருணத்தில்? 171 00:15:47,114 --> 00:15:48,699 நான் அவரிடம் சில மோசமான விஷயங்களைக் கூறினேன். 172 00:15:51,243 --> 00:15:54,705 மோசமான வார்த்தைகளால் மக்கள் காணாமல் போவதில்லை. 173 00:15:56,665 --> 00:15:58,584 அவரிடம் சில ரகசியங்கள் இருக்கலாம். 174 00:15:59,793 --> 00:16:02,880 யாருக்குத்தான் ரகசியம் இல்லை? 175 00:16:05,048 --> 00:16:07,509 - உங்களிடம் படம் உள்ளதா? - என்ன? 176 00:16:07,509 --> 00:16:09,511 உங்கள் அப்பாவின் படம். 177 00:16:22,191 --> 00:16:23,233 நல்ல படம். 178 00:16:25,819 --> 00:16:27,487 நீங்கள் அவரைப் போலவே இருக்கிறீர்கள். 179 00:16:47,174 --> 00:16:48,425 வரவேற்கிறேன். 180 00:16:52,554 --> 00:16:54,139 நீ என்ன குடிக்க விரும்புகிறாய்? 181 00:16:55,641 --> 00:16:56,850 ஒன்றுமில்லை. 182 00:17:03,357 --> 00:17:06,026 என்ன நடக்கிறது? 183 00:17:06,527 --> 00:17:07,736 என்னை ஏன் இங்கே அழைத்தீர்கள்? 184 00:17:07,736 --> 00:17:09,445 நான் உன்னிடம் பேச வேண்டும், சரியா? 185 00:17:11,406 --> 00:17:12,574 சரி. 186 00:17:12,574 --> 00:17:15,368 ஒவ்வொரு மார்ச் 31ம் என்ன நடக்கும் தெரியுமா? 187 00:17:16,494 --> 00:17:17,496 இல்லை. 188 00:17:17,996 --> 00:17:19,830 புதிய லெஜர் வழிகாட்டி வெளிவரும். 189 00:17:21,375 --> 00:17:25,337 அந்த வழிகாட்டி 70க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 மில்லியன் பிரதிகள் வெளியிடப்பட்டுள்ளன. 190 00:17:26,630 --> 00:17:31,385 1,000 ஒயின்கள் சுவைக்கப்பட்டு, மதிப்பீடுகள் கொடுக்கப்படும். 191 00:17:31,385 --> 00:17:34,221 லூகா, இதை ஏன் சொல்கிறீர்கள்? 192 00:17:36,890 --> 00:17:39,601 ஏனெனில் லெஜர் வழிகாட்டியை நடத்த லெஜர் இல்லையெனில் 193 00:17:40,102 --> 00:17:42,062 அது லெஜர் வழிகாட்டியே இல்லை. 194 00:17:42,646 --> 00:17:43,689 அதற்கு? 195 00:17:48,110 --> 00:17:50,153 இங்கே வேறு லெஜர் இருக்கிறார்களா? 196 00:17:50,737 --> 00:17:53,782 நான் உன்னைப் பற்றிப் பேசுகிறேன். நீதான். உன்னைப் பற்றிப் பேசுகிறேன். 197 00:17:53,782 --> 00:17:56,118 - லூகா, கமான். - எனக்குத் தெரியும். 198 00:17:56,118 --> 00:17:57,911 உனக்கு இப்போது போட்டிதான் முக்கியம். 199 00:17:58,745 --> 00:18:02,291 ஆனால் நீ அந்த வழிகாட்டியை நடத்துவதுதான் உன் அப்பாவின் கனவாக இருந்தது. 200 00:18:04,877 --> 00:18:07,588 அவர் அதை என்னிடம் கூறினார். நான் வெறும் தூதர் தான். 201 00:18:16,513 --> 00:18:20,392 நாளை காலை, உன் அப்பாவின் இடத்தில் நமக்கு ஒரு மீட்டிங் உள்ளது. 202 00:18:20,976 --> 00:18:24,062 தாமஸ் அங்கே இருக்க மாட்டான். நாம் லோரென்ஸோவை வைத்துச் சமாளிப்போம். 203 00:18:24,855 --> 00:18:26,273 உனக்கு ஓர் ஆச்சரியம் உள்ளது. 204 00:18:33,906 --> 00:18:40,454 உங்களிடம் இங்கே கற்பித்த பேராசிரியர்களின் பதிவுகள் உள்ளனவா? 205 00:18:42,289 --> 00:18:46,335 1990க்கும் 1994க்கும் இடையில்? 206 00:18:50,339 --> 00:18:52,299 எதற்காக? 207 00:18:53,967 --> 00:18:59,139 என் பெற்றோர் அவரது வகுப்பில்தான் சந்தித்ததாக நினைக்கிறேன், ஆனால் தெரியவில்லை. 208 00:18:59,139 --> 00:19:01,391 இந்த ஆண்டு, என் பெற்றோரின் 30வது திருமண விழா வருகிறது. 209 00:19:01,391 --> 00:19:05,187 அதனால் இந்தப் பேராசிரியரை அழைத்து அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்புகிறேன். 210 00:19:06,480 --> 00:19:07,689 அந்தப் பேராசிரியரின் பெயர் என்ன? 211 00:19:08,982 --> 00:19:10,567 லெஜர், அலெக்ஸாண்ட்ரே. 212 00:19:11,944 --> 00:19:13,987 எல்-இ-ஜெ-இ-ஆர். 213 00:19:24,248 --> 00:19:25,499 கிடைத்துவிட்டது. 214 00:19:27,292 --> 00:19:29,169 அவர் எவ்வளவு காலம் இங்கே வேலை செய்தார்? 215 00:19:30,754 --> 00:19:34,049 1991 ஏப்ரல் முதல் ஜூன் வரை. 216 00:19:35,259 --> 00:19:39,179 அவர் ஆண்டு முழுவதும் இருக்கவில்லையா? ஏன்? 217 00:19:39,930 --> 00:19:42,182 அதை உங்களிடம் கூற முடியாது. 218 00:19:43,684 --> 00:19:49,857 என் பெற்றோர் அவரது மாணவர்களாக இருந்தால், எவ்வளவு காலம் அவரிடம் படித்தனர்? 219 00:19:50,482 --> 00:19:53,068 ஹொனோகா டொமினே மற்றும் ஹிரோகாஸு ஒனோயமா. 220 00:20:04,288 --> 00:20:08,041 ஏப்ரலில் இருந்து ஜூன் வரை. அவர்களது பேராசிரியர் போலவே. 221 00:20:13,797 --> 00:20:15,799 என் பெற்றோரது மதிப்பெண்கள் உள்ளதா? 222 00:20:16,300 --> 00:20:17,301 ஆம். 223 00:20:18,260 --> 00:20:19,261 எனில்? 224 00:20:19,887 --> 00:20:21,847 அதை உங்களிடம் கூற அனுமதி இல்லை. 225 00:20:24,683 --> 00:20:28,353 பார்ட்டிக்கு அழைக்க, அவர்களது நண்பர்களது பெயர்கள் கிடைக்குமா? 226 00:20:31,356 --> 00:20:32,983 அதைக் கூற அனுமதி இல்லை, சரியா? 227 00:20:35,402 --> 00:20:39,781 எனக்கு உதவ முடியுமா? இது மிகவும் முக்கியமானது. 228 00:20:42,201 --> 00:20:43,202 ப்ளீஸ். 229 00:20:56,673 --> 00:20:59,426 அந்த நேரத்தில் இருந்த மொழிபெயர்ப்பாளரது 230 00:20:59,927 --> 00:21:01,553 பெயரும் முகவரியும் உள்ளன. 231 00:21:02,304 --> 00:21:03,931 அவர் இன்னும் அங்கே வசித்தால். 232 00:21:04,890 --> 00:21:06,600 அது அருமையான விஷயம். 233 00:21:29,498 --> 00:21:31,458 - இதற்கு மன்னிக்கவும். - இல்லை, கவலை வேண்டாம். 234 00:21:33,418 --> 00:21:34,545 முடிந்தது. 235 00:21:37,965 --> 00:21:39,007 அது ஜூலியெட்டா? 236 00:21:40,425 --> 00:21:42,970 - ஆம். - எவ்வளவு காலமாக ஒன்றாக இருக்கிறீர்கள்? 237 00:21:43,971 --> 00:21:45,472 ஏழாண்டுகளாக. 238 00:21:48,600 --> 00:21:49,977 ஏன் “ம்ம் ஹ்ம்ம்”? 239 00:21:50,936 --> 00:21:53,355 ஒன்றுமில்லை. அது நீண்ட காலம். 240 00:21:53,355 --> 00:21:54,815 அதாவது அது நல்ல விஷயம்தான். 241 00:21:55,941 --> 00:21:57,025 ஆனால் ஏழாண்டுகள். 242 00:21:58,944 --> 00:22:01,071 அது உறவில் முக்கியமான தருணம், சரியா? 243 00:22:02,114 --> 00:22:04,449 அது மலிவான ஒயினுக்கும் கிராண்ட் க்ரூ ஒயினுக்கும் இடையே உள்ள எல்லை. 244 00:22:05,409 --> 00:22:07,953 விளையாடினேன், உங்களுக்கு ஒருவரையொருவர் நன்றாகத் தெரிந்திருக்கும். அற்புதம். 245 00:22:08,787 --> 00:22:09,997 உனது அதிகபட்சக் காலம் எவ்வளவு? 246 00:22:13,208 --> 00:22:14,293 ஆறு மாதங்கள்? 247 00:22:15,419 --> 00:22:16,753 ஆறு மாதங்களா? 248 00:22:16,753 --> 00:22:17,921 ஓ, உண்மையாகவா? 249 00:22:18,881 --> 00:22:20,757 ஆம், என்னை நிறைய கழட்டிவிட்டுள்ளனர். 250 00:22:22,551 --> 00:22:25,304 எங்கள் உறவின் எதிர்காலத்தை அவர்களால் பார்க்க முடியவில்லை. அதேநேரம், எனக்குப் புரிகிறது. 251 00:22:25,888 --> 00:22:27,681 என் வாழ்க்கையில் என்ன செய்வதென எனக்குத் தெரியவில்லை. 252 00:22:28,432 --> 00:22:30,434 அதனால்தான் ஏழாண்டுகள் எனக்குப் பெரிதாக உள்ளது. 253 00:22:34,229 --> 00:22:35,480 அவள் என்னை ப்ரொபோஸ் செய்தாள். 254 00:22:36,064 --> 00:22:38,859 வாவ். நவீனமான பெண். 255 00:22:40,652 --> 00:22:42,738 - வாழ்த்துகள். - நன்றி. 256 00:22:43,238 --> 00:22:45,490 எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லையென்றாலும். 257 00:22:46,533 --> 00:22:48,118 விவாகரத்தின் விகிதம் தெரியுமா? 258 00:22:48,702 --> 00:22:50,204 - 50 சதவீதமா? - ஆம். 259 00:22:50,996 --> 00:22:52,122 இரண்டாம் திருமணங்களுக்கு? 260 00:22:52,998 --> 00:22:55,083 - 30 சதவீதமா? - 66 சதவீதம். 261 00:22:55,584 --> 00:22:58,462 - வாய்ப்பே இல்லை. - மூன்றாம் திருமணங்களுக்கு, 75 சதவீதம். 262 00:22:58,462 --> 00:23:01,423 புரிகிறது. அது கிறுக்குத்தனம். 263 00:23:02,758 --> 00:23:04,718 உன்னை ஏன் அதிகமாகக் கழட்டிவிட்டனர் என்பது புரிகிறது. 264 00:23:04,718 --> 00:23:06,220 நீ மிகவும் கடுப்பேற்றுகிறாய். 265 00:23:07,513 --> 00:23:09,848 வேண்டுமெனில், என்னிடம் ஒரு தியரி உள்ளது. கேள். 266 00:23:09,848 --> 00:23:12,142 - காதலில் மகிழ்ச்சி-வலிக்கான விகிதம். - இரு, ஆனால்... சரி. 267 00:23:12,142 --> 00:23:13,644 ஒரு குறிப்பு, அது மிகவும் சமநிலையற்றது. 268 00:23:13,644 --> 00:23:16,396 அதில் சந்தேகமில்லை, ஆனால் அதை நான் கேட்க விரும்பவில்லை. 269 00:23:16,396 --> 00:23:18,357 அதனால் உன் தியரியை நீயே வைத்துக்கொள், நன்றி. 270 00:23:19,483 --> 00:23:21,401 எனக்கு வேண்டியதெல்லாம், நான் நேசிக்கும் மக்கள், 271 00:23:22,194 --> 00:23:24,321 நல்ல இசை, நல்ல ஒயினுடன் ஓர் அழகான திருமணம். 272 00:23:24,321 --> 00:23:26,365 இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு விவாகரத்தானாலும் பரவாயில்லை. 273 00:23:28,951 --> 00:23:32,037 நாம் நேசிக்கும் மக்கள் நம்மைச் சுற்றி இருக்கும் பல வாய்ப்புகள் கிடைப்பதில்லை. 274 00:23:33,956 --> 00:23:35,332 இறுதிச் சடங்குகளைத் தவிர, 275 00:23:36,834 --> 00:23:38,293 ஆனால் அது எனக்கான விஷயம் அல்ல. 276 00:23:42,381 --> 00:23:45,008 ஏனென்று தெரியவில்லை, ஆனால் நீ என் அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு வருவாய் என நினைத்தேன். 277 00:23:47,886 --> 00:23:49,221 நான் வந்திருப்பேன். 278 00:23:49,972 --> 00:23:52,266 ஆனால் என் அம்மா என்னிடம் கூற “மறந்துவிட்டார்”. 279 00:23:56,186 --> 00:23:57,729 மரியான் நிறைய கஷ்டப்பட்டுள்ளார். 280 00:24:00,858 --> 00:24:04,194 உன் அப்பா கோபக்காரராக இருந்தார், அது காலப்போக்கில் குறையவே இல்லை. 281 00:24:04,194 --> 00:24:05,779 அவர் கடுமையாக இருந்தார். 282 00:24:06,321 --> 00:24:08,323 நீ அவருடன் எப்போதும் கவனமாகவே இருக்க வேண்டியிருந்தது. 283 00:24:08,323 --> 00:24:09,825 எல்லாமே எப்போதும் சிக்கலானதாகவே இருந்தது. 284 00:24:09,825 --> 00:24:11,451 அனைவருக்கும் அது கடினமானதாக இருந்தது. 285 00:24:13,537 --> 00:24:17,040 இருந்தாலும் நீதான் உலகிலேயே கனிவான பெண். 286 00:24:17,916 --> 00:24:19,626 - அற்புதம். - இல்லை. 287 00:24:20,794 --> 00:24:22,171 இல்லை, உண்மைதான். 288 00:24:22,838 --> 00:24:25,048 எனக்கு கனிவு பிடிக்கும். அதைவிட அழகானது வேறெதுவும் இல்லை. 289 00:24:26,216 --> 00:24:29,136 அதுவும் உன் அறிவும் சேர்ந்திருப்பது, 290 00:24:30,012 --> 00:24:31,263 உனக்குப் புரியாது. 291 00:24:39,438 --> 00:24:42,316 - இரு, நாம் அங்கிருந்து வந்தோம். - இல்லை, தாமஸ், கமான்! 292 00:24:42,816 --> 00:24:45,319 - இந்தப் பக்கம். இல்லை! வா. - நாம் இந்தப் பக்கம் வந்தோம். 293 00:24:45,319 --> 00:24:47,029 - நிச்சயமாகவா? - ஆம். 294 00:24:48,322 --> 00:24:49,615 இது தவறாகத் தெரிகிறது. 295 00:24:51,533 --> 00:24:54,203 - இந்தப் பக்கம்தானா? - இல்லை, வா. நான் கூட்டிச் செல்கிறேன். 296 00:24:54,745 --> 00:24:57,331 ஜாப்பனீஸில் “போதையில் இருப்பதை” எப்படிச் சொல்வது? 297 00:24:58,207 --> 00:25:00,667 யோப்பராட்டா. 298 00:25:01,210 --> 00:25:02,753 - ஆம். - யோப்பராட்டா. 299 00:25:03,253 --> 00:25:04,379 யோப்பராட்டா. 300 00:25:05,964 --> 00:25:07,049 என்ன? 301 00:25:07,966 --> 00:25:10,052 - நிறுத்து. - யூசுகே இங்கிருக்கிறாரா? 302 00:25:10,052 --> 00:25:12,054 - ஆம், ஆனால் தூங்குகிறார். - ஓ, ஆம். 303 00:25:12,054 --> 00:25:13,222 என்ன செய்கிறாய்? 304 00:25:13,889 --> 00:25:16,350 - செருப்புகள். - யார் அதைக் கண்டுகொள்ளப் போகிறார்கள்? 305 00:25:16,350 --> 00:25:17,893 யூசுகே தூங்குகிறார். 306 00:25:20,604 --> 00:25:21,605 உண்மையாக. 307 00:25:22,523 --> 00:25:24,942 ஷூக்களுடன் வீட்டிற்குள் நுழையக் கூடாது என்று கூறியுள்ளார். 308 00:25:32,616 --> 00:25:33,659 என்ன ஆயிற்று? 309 00:25:35,494 --> 00:25:36,537 வா. 310 00:25:37,579 --> 00:25:38,872 கமில், வா. 311 00:25:39,665 --> 00:25:42,125 கமில், வா. 312 00:25:47,297 --> 00:25:48,465 இல்லை. 313 00:25:48,465 --> 00:25:50,843 - இல்லை, கமில். - என்ன? 314 00:25:50,843 --> 00:25:52,845 - கமில், நாம் போதையில் இருக்கிறோம். - நானில்லை. 315 00:25:53,887 --> 00:25:55,764 - கமில், நாம்... - கேள்! 316 00:25:57,516 --> 00:25:59,560 நான் வழக்கமாக இப்படிச் செய்ய மாட்டேன். 317 00:26:00,686 --> 00:26:01,687 ஆனால்... 318 00:26:02,646 --> 00:26:03,939 நீயும் நானும்... 319 00:26:06,608 --> 00:26:07,651 இல்லையா? 320 00:26:20,080 --> 00:26:21,540 இல்லை. என்னால் முடியாது. 321 00:26:22,499 --> 00:26:23,542 என்னால் முடியாது. 322 00:26:23,542 --> 00:26:24,626 - இரு. - இல்லை. 323 00:26:56,491 --> 00:26:57,784 ஹாய். 324 00:26:57,784 --> 00:26:59,870 குட் ஈவ்னிங். இது சரியான நேரமா? 325 00:26:59,870 --> 00:27:01,496 எதுவும் செய்தி கிடைத்ததா? 326 00:27:01,496 --> 00:27:08,045 காணாமல் போனவர்கள் வழக்கமாக சொந்த ஊரை விட்டுத் தூரமாகச் செல்வார்கள். 327 00:27:08,045 --> 00:27:09,713 அவர்கள் பஸ்ஸிலோ ரயிலிலோ செல்வார்கள். 328 00:27:10,672 --> 00:27:11,965 உங்கள் மின்னஞ்சலைப் பாருங்கள். 329 00:27:14,051 --> 00:27:15,552 ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை 330 00:27:15,552 --> 00:27:18,347 அணுகக்கூடிய ஒரு நண்பர் போலீஸில் இருக்கிறார். 331 00:27:19,264 --> 00:27:21,725 நீங்கள் கொடுத்த தேதி மற்றும் நேரத்தின்படி... 332 00:27:24,728 --> 00:27:26,230 அது உங்கள் அப்பாவாக இருக்க முடியுமா? 333 00:27:34,154 --> 00:27:37,032 அப்படித்தான் நினைக்கிறேன். 334 00:27:40,494 --> 00:27:43,288 அவர் எந்த ரயிலில் சென்றார் என்று இன்னும் நமக்குத் தெரியவில்லை. 335 00:27:43,288 --> 00:27:46,291 ஆனால் அவர் எந்த டிக்கெட் மிஷினைப் பயன்படுத்தினார் என்று தெரியும். 336 00:27:47,626 --> 00:27:51,213 பரிவர்த்தனையைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்காது. 337 00:27:54,174 --> 00:27:55,467 மிஸ். கடாஸே, 338 00:27:56,343 --> 00:27:57,636 மிகவும் நன்றி. 339 00:27:58,220 --> 00:27:59,513 பரவாயில்லை. 340 00:28:00,556 --> 00:28:02,516 உங்களுக்குத் தொடர்ந்து தகவல் தெரிவிக்கிறேன். 341 00:28:03,559 --> 00:28:05,769 அது இருக்கட்டும், நாளை மாலை நீங்கள் ஃபிரீயா? 342 00:28:05,769 --> 00:28:06,937 எதற்காக? 343 00:28:07,938 --> 00:28:10,357 சினிமா? டின்னர்? 344 00:28:14,069 --> 00:28:15,362 விளையாடினேன். 345 00:28:15,362 --> 00:28:17,364 நேர்காணலுக்குத்தான். 346 00:28:17,364 --> 00:28:20,117 என் பிரத்தியேக நேர்காணல். 347 00:28:20,742 --> 00:28:22,160 நீங்கள் நேரத்தை வீணடிப்பதில்லை. 348 00:28:23,036 --> 00:28:24,204 மாலை 7 மணிக்கு? 349 00:28:25,330 --> 00:28:26,415 சரி. 350 00:28:26,415 --> 00:28:27,583 அருமை. 351 00:28:28,333 --> 00:28:29,751 விவரங்களை உங்களுக்கு அனுப்புகிறேன். 352 00:28:30,544 --> 00:28:33,338 கவலைப்படாதீர்கள். கனிவுடன் நடந்துகொள்கிறேன். 353 00:28:34,131 --> 00:28:35,299 கொஞ்சம் மென்மையாக இருங்கள். 354 00:28:37,217 --> 00:28:39,428 பார்த்துக்கொள்ளுங்கள். குட் நைட். 355 00:28:40,053 --> 00:28:41,096 குட் நைட். 356 00:29:08,332 --> 00:29:11,502 இஸ்ஸேய். இந்த டிவி நேர்காணல் எல்லாம் என்ன? 357 00:29:13,295 --> 00:29:14,796 ஹலோ, எப்படி இருக்கிறீர்கள்? 358 00:29:15,756 --> 00:29:18,717 உன் நக்கலை விட்டுவிட்டு, நீ செய்வதற்கு விளக்கம் கொடு. 359 00:29:19,343 --> 00:29:20,427 தாத்தாவின் ஆதரவுக்கான 360 00:29:21,261 --> 00:29:26,099 நன்றியுணர்ச்சியால். அதை உலகமே தெரிந்துகொள்ள விரும்பினேன் எனலாம். 361 00:29:26,099 --> 00:29:27,434 விளையாடுகிறாயா? 362 00:29:27,434 --> 00:29:29,394 நீங்கள்தான் விளையாடுகிறீர்கள். 363 00:29:30,020 --> 00:29:33,482 உங்கள் கணவரைக் காணவில்லை, அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று நமக்குத் தெரியவில்லை, 364 00:29:33,482 --> 00:29:35,108 நீங்கள் கவலைப்படவேயில்லை. 365 00:29:36,235 --> 00:29:39,404 அவர் நம்மிடம் திரும்பி வர மாட்டார். 366 00:29:40,072 --> 00:29:42,074 அது உங்களுக்குத் தேவைதான். 367 00:29:42,074 --> 00:29:44,117 அவர் நமக்கு ஆதரவாக இருந்தார். 368 00:29:44,117 --> 00:29:46,703 ஆனால் நாம் அவருக்கு எதுவும் செய்யவில்லை. மாறாக, நாம் அவரைப் புறக்கணித்தோம். 369 00:29:46,703 --> 00:29:50,123 அவர் நமக்கு எவ்வளவு முக்கியமானவர் 370 00:29:50,832 --> 00:29:54,253 என்று அவரிடம் கூற முயலவில்லை. 371 00:29:54,753 --> 00:29:58,841 அதற்கும் நேர்காணலுக்கும் என்ன சம்மந்தம்? 372 00:29:58,841 --> 00:30:00,425 நீங்கள் பார்ப்பீர்கள். 373 00:30:01,260 --> 00:30:02,302 குட்பை. 374 00:30:39,047 --> 00:30:40,048 ஹலோ. 375 00:30:40,048 --> 00:30:41,300 இஸ்ஸேய் டொமினே? 376 00:30:42,426 --> 00:30:43,844 உங்களை டிவியில் பார்த்தேன். 377 00:30:43,844 --> 00:30:45,679 நீங்கள் ஓயின் சூப்பர்ஸ்டார்! 378 00:30:46,263 --> 00:30:48,515 இங்கே எதற்காக வந்துள்ளீர்கள்? 379 00:30:50,017 --> 00:30:54,396 நான் மிஸ். யோகோ சாவாகுச்சியைப் பார்க்க வந்தேன். அவர் மொழிபெயர்ப்பாளராக இருந்தார். 380 00:30:54,980 --> 00:30:57,024 அவர் என் பாட்டிதான். 381 00:30:57,524 --> 00:31:01,403 இது அவரது வீடுதான். ஆனால் அவர் ஹகோனேவில் உள்ள ஸ்பாவுக்குச் சென்றுள்ளார். 382 00:31:01,987 --> 00:31:03,614 நாளை வந்துவிடுவார். 383 00:31:04,156 --> 00:31:05,991 நான் அப்போது வருகிறேன். 384 00:31:05,991 --> 00:31:07,784 நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். 385 00:31:09,161 --> 00:31:11,663 நான் அயாமே. 386 00:31:11,663 --> 00:31:12,915 அயாமே. 387 00:31:14,041 --> 00:31:15,459 - விரைவில் சந்திப்போம். - சந்திப்போம். 388 00:31:21,006 --> 00:31:22,382 குட் மார்னிங், கமில். 389 00:31:22,382 --> 00:31:24,676 - எப்படி இருக்கிறாய்? உறங்கினாயா? - ஆம். 390 00:31:24,676 --> 00:31:25,802 தாமஸ் எங்கே? 391 00:31:25,802 --> 00:31:29,223 எங்கேயென்று உனக்குத் தெரியும். “பாட்டில்களைத் தேர்வுசெய்ய” லோரென்ஸோ கூட்டிச் சென்றுள்ளான். 392 00:31:31,767 --> 00:31:33,185 இது என் நண்பர், ஜாக். 393 00:31:34,853 --> 00:31:35,938 கமில்! 394 00:31:36,897 --> 00:31:39,650 உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. நான் ஜாக் ஃபியூஸியே. 395 00:31:40,192 --> 00:31:43,529 உன் அப்பாவின் நிரந்தப் பதிப்பாளர். 396 00:31:44,279 --> 00:31:46,156 உன்னைக் குழந்தையாகப் பார்த்தது. 397 00:31:47,032 --> 00:31:48,742 லூகா உன்னைப் பற்றி நிறைய கூறியுள்லார். 398 00:31:49,576 --> 00:31:52,788 அவர் ஒருவரைப் பற்றி இவ்வளவு ஆர்வமாக இருந்து நான் பார்த்ததில்லை. 399 00:31:53,455 --> 00:31:56,291 - நீதான் ஒயினின் மொஸார்ட் என்றார். - இல்லை, அவர் மிகைப்படுத்துகிறார். 400 00:31:57,668 --> 00:32:01,630 லெஜர் குடும்பத்தில் தன்னடக்கத்தை நான் பார்த்ததில்லை. 401 00:32:01,630 --> 00:32:03,423 அதைப் பார்த்தாயா? 402 00:32:03,423 --> 00:32:06,593 அது 2001ல் நானும் அலெக்ஸாண்ட்ரேவும் 403 00:32:06,593 --> 00:32:09,847 லெஜர் வழிகாட்டியின் 8வது பதிப்பைக் கொண்டாடியது. 404 00:32:10,347 --> 00:32:11,890 நினைவுகூரத்தக்க மாலை. 405 00:32:11,890 --> 00:32:16,979 ஒரு பதிப்பாளராக, உன் அப்பாவின் வழிகாட்டிதான் என் மிகப்பெரிய பெருமை என்பதை மறைக்க மாட்டேன். 406 00:32:18,105 --> 00:32:19,773 உன் அம்மாவுக்குத்தான் நன்றிக்கடன்பட்டுள்ளேன். 407 00:32:21,108 --> 00:32:22,401 மிகவும் புத்திசாலியான பெண். 408 00:32:23,402 --> 00:32:25,487 மிகவும் உயிர்ப்பானவர். அற்புதமான பெண். 409 00:32:25,487 --> 00:32:28,657 தொடக்கக் காலத்தில் உன் அப்பாவை ஆதரிக்க அவர் இல்லையெனில், 410 00:32:28,657 --> 00:32:30,868 அவர் அடைந்த நிலையை அடைந்திருக்க மாட்டார். 411 00:32:30,868 --> 00:32:32,619 நான் உனக்கு எதையும் கற்பிக்கவில்லை. 412 00:32:32,619 --> 00:32:34,705 இதை அவர் உன்னிடம் பல முறை கூறியிருப்பார். 413 00:32:34,705 --> 00:32:35,789 ஆம். 414 00:32:35,789 --> 00:32:37,916 கமில்! இங்கே வருகிறாயா? 415 00:32:38,584 --> 00:32:39,668 சரி. 416 00:32:40,669 --> 00:32:41,670 என்ன? 417 00:32:44,923 --> 00:32:46,008 இங்கே உட்காரு. 418 00:32:52,848 --> 00:32:54,933 இந்த ஒயினை எங்களுக்காகச் சுவைக்க முடியுமா? 419 00:32:56,226 --> 00:32:58,520 லூகா, நான் ஒன்றும் பொருட்காட்சி இல்லை. 420 00:32:58,520 --> 00:33:00,564 கண்டிப்பாக இல்லை. என்னை மன்னித்துவிடு. 421 00:33:01,106 --> 00:33:02,608 நீ எதையும் கணிக்க வேண்டாம். 422 00:33:02,608 --> 00:33:05,152 இதைப் பற்றிய உன் கருத்தில் எங்களுக்கு ஆர்வமுள்ளது. 423 00:33:08,906 --> 00:33:09,948 ப்ளீஸ். 424 00:33:13,160 --> 00:33:14,203 சரி. 425 00:33:34,932 --> 00:33:37,518 வாவ். இது அற்புதமாக உள்ளது. 426 00:33:38,435 --> 00:33:41,980 இதில் சூரியனும் குளிர்ச்சியும் ஒரே நேரத்தில் தெரிகின்றன. விசித்திரமாக உள்ளது. 427 00:33:43,815 --> 00:33:47,653 பிளாக்பெர்ரி, மெரொல்லோ செர்ரி, கம்போடியன் மிளகு மற்றும்... 428 00:33:48,612 --> 00:33:49,947 தாய் மிளகாய். 429 00:33:50,822 --> 00:33:52,574 திராட்சை வகை, மல்பெக், 430 00:33:53,450 --> 00:33:54,785 ஆனால் எனக்குத் தெரிந்த ஒன்று இல்லை. 431 00:33:57,371 --> 00:33:59,831 உயரத்தில் வளர்ந்திருக்கலாம். 432 00:34:01,208 --> 00:34:04,336 அண்டியன் மலைகளாக இருக்கலாம். 433 00:34:18,433 --> 00:34:21,103 - ஓ, கடவுளே. என்ன அது? - என்ன நடந்தது? 434 00:34:31,237 --> 00:34:33,907 எனக்கு இசை கேட்கும் அளவுக்கு இது மிகவும் அருமையாக உள்ளது. 435 00:34:42,791 --> 00:34:45,043 இது நம்ப முடியாததாக உள்ளது. 436 00:34:45,918 --> 00:34:48,672 முற்றிலும் நம்ப முடியாததாக. 437 00:34:54,094 --> 00:34:55,888 நான் எதுவும் முட்டாள்தனமாகக் கூறினேனா? 438 00:34:57,973 --> 00:34:59,016 இல்லை. 439 00:35:00,267 --> 00:35:01,810 கமில், இந்த ஒயின்... 440 00:35:03,520 --> 00:35:05,230 இதை உன் அப்பாதான் கண்டறிந்தார். 441 00:35:06,148 --> 00:35:09,151 இது அர்ஜெண்டினாவின் மெண்டோஸா பிராந்தியத்தைச் சேர்ந்ததுதான், 442 00:35:09,651 --> 00:35:12,279 அண்டஸ் மலைகளில் ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ளது. 443 00:35:12,279 --> 00:35:14,907 நீ கூறியது போல மல்பெக்தான் திராட்சை வகை. 444 00:35:16,909 --> 00:35:18,660 உன் அப்பா இந்த ஒயினை விரும்பினார். 445 00:35:19,369 --> 00:35:21,914 அவர் இதை “நம்ப முடியாததாக” உணர்ந்தார். 446 00:35:22,581 --> 00:35:24,917 - அவரும் “நம்ப முடியாதது” என்றார். - ”நம்ப முடியாதது” ஆம். 447 00:35:24,917 --> 00:35:26,460 - இல்லையா, ஜாக்? - ஆம். 448 00:35:26,460 --> 00:35:29,796 லெஜர் வழிகாட்டி என்பது அதுதான். 449 00:35:31,215 --> 00:35:34,801 நீ சுவைக்கும் ஒயின்களின் உண்மையான கருத்து. 450 00:35:36,136 --> 00:35:37,179 வேறெதுவும் இல்லை. 451 00:35:38,680 --> 00:35:40,307 என்ன நினைக்கிறாய்? 452 00:35:45,687 --> 00:35:47,314 நான் யோசிக்கிறேன். 453 00:35:51,443 --> 00:35:52,486 ஜாக். 454 00:35:52,986 --> 00:35:55,239 உனக்காக ஒரு சர்ப்ரைஸ் ஏற்பாடு செய்துள்ளோம். 455 00:35:55,239 --> 00:35:58,325 இது வெறும் நகல்தான்... 456 00:35:58,951 --> 00:36:00,244 எப்படிச் சொல்வது? 457 00:36:00,744 --> 00:36:02,871 விஷயத்தைப் புரிந்துகொள்வதற்காக. 458 00:36:03,372 --> 00:36:05,499 ஆம், அதுதான் விஷயம். 459 00:36:05,499 --> 00:36:07,668 விஷயத்தைப் புரிந்துகொள்வதற்காக. 460 00:36:30,107 --> 00:36:32,860 - ஹேய். - தூங்குமூஞ்சி, தாமதமாக வந்துள்ளாய். 461 00:36:32,860 --> 00:36:34,945 - மன்னிக்கவும். - இரவு தூங்கவில்லையா? 462 00:36:34,945 --> 00:36:37,406 இல்லை, அவ்வளவாக தூங்காமல் இல்லை. 463 00:36:37,906 --> 00:36:41,201 எனக்கு ஒரு மீட்டிங் இருந்தது. வக்கீல் விஷயம். உங்களிடம் கூறியிருக்க வேண்டும், மன்னித்துவிடு. 464 00:36:43,954 --> 00:36:45,414 அவற்றில் எத்தனை கிடைத்தது? 465 00:36:46,206 --> 00:36:48,208 லம்பார்டியில் கண்டறிய முடிந்த அனைத்தையும் ஆர்டர் செய்தோம். 466 00:36:48,208 --> 00:36:50,669 அது இருக்கட்டும், மியாபியும் நானும் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம். 467 00:36:51,170 --> 00:36:53,255 ஆம், அப்படி நினைக்கவில்லை. 468 00:36:54,298 --> 00:36:55,382 நாம் ஒருநாள் திருமணம் செய்துகொள்வோம். 469 00:36:55,382 --> 00:36:56,508 நாம் பேசலாமா? 470 00:36:56,508 --> 00:36:59,386 - எனக்கும் உனக்கும் தெரியும். - ஓ, உனக்குத் தெரியுமா? 471 00:36:59,386 --> 00:37:01,930 ஆம். 472 00:37:02,639 --> 00:37:06,268 உன் பெற்றோரைப் பார்க்க என்னை எப்போது கூட்டிச் செல்லப் போகிறாய்? 473 00:37:19,156 --> 00:37:20,199 நமக்குள் பிரச்சினை இல்லையே? 474 00:37:21,783 --> 00:37:23,619 இல்லை. ஏன் கேட்கிறாய்? 475 00:37:24,203 --> 00:37:25,412 அது, 476 00:37:26,413 --> 00:37:27,456 நல்ல விஷயம்தான். 477 00:37:32,836 --> 00:37:35,881 அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, தேவையில்லாமல் என் மீது கோபப்படும் 478 00:37:36,882 --> 00:37:37,883 பெண்கள் உள்ளனர், 479 00:37:37,883 --> 00:37:40,135 அதுவும் நான் வேறு பெண்ணுடன் இருக்கிறது தொடக்கத்தில் இருந்தே தெரிந்தபோதும். 480 00:37:40,135 --> 00:37:41,678 ஆம், தெளிவாகத் தெரியும். 481 00:37:42,930 --> 00:37:44,848 நான் உன்னுடன் பேசும்போது ஃபோனை வைத்ததும், 482 00:37:44,848 --> 00:37:46,558 நீ என்னிடம் வர முதல் விமானத்தில் வந்ததை நான் மறந்துவிடுகிறேன். 483 00:37:48,227 --> 00:37:50,896 மேலும் சில நேரம் என்னிடம் அப்பாவித்தனமாக 484 00:37:50,896 --> 00:37:52,731 இல்லாத பார்வைகளை வீசியதையும் மறந்துவிடுகிறேன். 485 00:37:53,440 --> 00:37:55,484 நான் உன்னைப் பார்க்கிறேன். 486 00:37:57,486 --> 00:37:59,613 இல்லை, நமக்குள் கண்டிப்பாக ஏதோ இருக்கும்போது நீ என்னை 487 00:37:59,613 --> 00:38:01,532 ஒதுக்கியதைத் தனிப்பட்டதாக எடுத்துக்கொள்ளவில்லை. 488 00:38:01,532 --> 00:38:03,951 - நான் அதைக் கடந்துவிட்டேன். - கமில், எனக்கு திருமணமாகப் போகிறது. 489 00:38:03,951 --> 00:38:06,036 ஆம், புரிந்தது. அருமை. 490 00:38:07,621 --> 00:38:09,039 நாம் வேறெதையாவது பேசலாமா? 491 00:38:12,960 --> 00:38:14,920 உன் நிர்வாக மீட்டிங் எதைப் பற்றியது? 492 00:38:18,006 --> 00:38:19,716 நான் உன்னிடம் சொல்லலாமா என்று தெரியவில்லை. 493 00:38:20,884 --> 00:38:21,927 கமான். 494 00:38:25,556 --> 00:38:26,598 சொல்ல மாட்டாயா? 495 00:38:31,311 --> 00:38:33,522 லெஜர் வழிகாட்டியை நான் நடத்தும்படி கேட்டனர். 496 00:38:40,988 --> 00:38:42,406 உண்மையாகவா? 497 00:38:42,406 --> 00:38:44,032 ஆம். அதில் என்ன சிரிப்பு? 498 00:38:44,032 --> 00:38:46,493 மன்னித்துவிடு, ஆனால்... 499 00:38:48,245 --> 00:38:50,706 ஆனால், கமில், உன்னால் லெஜர் வழிகாட்டியை நடத்த முடியாது. 500 00:38:50,706 --> 00:38:51,832 சரி, ஏன்? 501 00:38:52,833 --> 00:38:53,917 நான் சொல்வதைத் தவறாக எடுத்துக்கொள்கிறாய். 502 00:38:53,917 --> 00:38:56,837 இல்லை. நான் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. நீ அதை விளக்க விரும்புகிறேன். 503 00:38:57,754 --> 00:39:00,924 அதுபோல ஒரு வழிகாட்டிக்கான பொறுப்புடன் இருப்பதன் அர்த்தம் தெரியுமா? 504 00:39:01,508 --> 00:39:03,427 நீ அதற்குத் தயார் என நினைக்கிறாயா? 505 00:39:03,427 --> 00:39:04,511 ஏன் இல்லை? 506 00:39:05,804 --> 00:39:08,056 விழித்துக்கொள், கமில். 507 00:39:08,765 --> 00:39:11,602 ஒரு மாதத்திற்கு முன் சிவப்பு ஒயினுக்கும் வெள்ளை ஒயினுக்குமே உனக்கு வித்தியாசம் தெரியவில்லை. 508 00:39:11,602 --> 00:39:14,271 - புரிகிறது. - நீ லெஜர் வழிகாட்டியை நடத்த விரும்புகிறாயா? 509 00:39:14,271 --> 00:39:16,190 உனக்கு தோற்கும் கமிலைத்தான் பிடிக்கும், இல்லையா? 510 00:39:16,190 --> 00:39:18,400 இல்லை. பைத்தியம் போல பேசாதே. 511 00:39:18,942 --> 00:39:22,154 கமில், நீ திறமைசாலிதான். நான் பார்த்ததிலேயே மிகவும் திறமைசாலி. 512 00:39:22,154 --> 00:39:25,824 ஆனாலும் நீ கற்றுக்கொள்ள இன்னும் சில விஷயங்கள் உள்ளன. உனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லாதே. 513 00:39:25,824 --> 00:39:28,744 என்னால் நம்ப முடியவில்லை. எனக்காக இரண்டு நிமிடங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க முடியாதா? 514 00:39:29,244 --> 00:39:31,997 என் அப்பா அதை நான் நடத்த விரும்பியுள்ளார். 515 00:39:31,997 --> 00:39:33,123 அப்படியா? 516 00:39:35,334 --> 00:39:36,793 நீ நடத்த வேண்டும் என்று அலெக்ஸாண்ட்ரே விரும்பியிருந்தால், 517 00:39:36,793 --> 00:39:39,421 ஏன் அவரது சொத்தை அடைய ஒரு அந்நியருடன் உன்னை மோதச் செய்தார்? 518 00:39:40,672 --> 00:39:42,257 ஏன் அனைத்தையும் உன்னிடமே கொடுக்கவில்லை? 519 00:39:42,257 --> 00:39:44,593 ஒன்று சொல்லவா? நீ என்னை நம்பவில்லை எனில், நீ போகலாம். 520 00:39:45,260 --> 00:39:46,386 உண்மையாகவா? 521 00:39:49,139 --> 00:39:51,517 - உண்மையாகவா? - ஆம், உண்மைதான். போய்விடு. 522 00:39:51,517 --> 00:39:54,144 நான் உனக்காக இவ்வளவு செய்த பிறகு, இப்படித்தான் நடந்துகொள்வாயா? 523 00:39:54,144 --> 00:39:56,104 - ஆம். - சரி, பை. 524 00:40:11,662 --> 00:40:13,080 நீ சொதப்பிவிட்டாய். 525 00:40:16,333 --> 00:40:18,293 காதலில் இருப்பவர்கள் முட்டாளாக இருக்க முடியும். 526 00:40:21,672 --> 00:40:22,881 என்ன? 527 00:40:31,723 --> 00:40:33,934 திரு. டொமினே, உங்களுக்காகத் தயாராக உள்ளோம். 528 00:40:39,356 --> 00:40:43,569 இன்றைய விருந்தினர், ஜப்பானிலும் அமெரிக்காவிலும் பொறியியல் பட்டம் பெற்றவர். 529 00:40:43,569 --> 00:40:45,445 பிறகு ஒயினில் தனக்கு ஆர்வம் இருப்பதைக் கண்டறிந்தார். 530 00:40:45,445 --> 00:40:50,784 பிரபலமான ஒயின் வழிகாட்டியின் ஆசிரியரும் எனாலஜியின் உச்சத்தில் இருந்தவருமான 531 00:40:50,784 --> 00:40:52,870 அலெக்ஸாண்ட்ரே லெஜர், இவரது அற்புதமான திறமையை அங்கீகரித்தார். 532 00:40:52,870 --> 00:40:55,330 இப்போது அவரது வாரிசுகளில் ஒருவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 533 00:40:55,914 --> 00:40:58,542 {\an8}இவரை திரு. லெஜர் “ஆன்மீக வாரிசு” என்று அழைத்துள்ளார். 534 00:40:58,542 --> 00:41:01,003 {\an8}சமீபத்தில் இவர்தான் எல்லாத் தலைப்புச் செய்திகளிலும் வந்துள்ளார். 535 00:41:01,962 --> 00:41:04,631 {\an8}இஸ்ஸேய் டொமினேவை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 536 00:41:06,550 --> 00:41:07,718 {\an8}எனக்குத்தான் மகிழ்ச்சி. 537 00:41:07,718 --> 00:41:09,428 {\an8}இந்த நிகழ்ச்சிக்கு வந்தமைக்கு நன்றி. 538 00:41:09,928 --> 00:41:13,724 {\an8}முதலில், இரண்டாவது சோதனை பற்றி எங்களுக்கு என்ன கூற முடியும்? 539 00:41:13,724 --> 00:41:18,103 {\an8}நிறைய கூற முடியாது, ஆனால் அது கலை சம்மந்தப்பட்டது. 540 00:41:18,645 --> 00:41:19,855 {\an8}குறிப்பாக, ஓர் ஓவியம். 541 00:41:19,855 --> 00:41:21,315 {\an8}ஓவியமா? 542 00:41:21,315 --> 00:41:22,482 {\an8}ஆம். 543 00:41:22,482 --> 00:41:26,278 {\an8}திரு. லெஜருக்கு கலையில் அதீத அறிவு இருந்தது. 544 00:41:27,779 --> 00:41:31,825 {\an8}அவருக்கு இசை, ஓவியம் மற்றும் இலக்கியத்தில் அதிக ஆர்வம் இருந்தது. 545 00:41:32,367 --> 00:41:36,205 {\an8}எது அழகானது அல்லது சிறப்பானது, எது அப்படி இல்லை என்பது பற்றிய குறிப்பிட்ட கருத்து இருந்தது. 546 00:41:36,997 --> 00:41:38,916 {\an8}நீங்கள் அவருடன் நெருக்கமாக இருந்தீர்களா? 547 00:41:40,334 --> 00:41:41,376 {\an8}எங்களுக்குள் இருந்த உறவு 548 00:41:41,877 --> 00:41:45,881 {\an8}மாணவர்-ஆசிரியர் உறவுதான். அதைத் தாண்டி எதுவும் இல்லை. 549 00:41:45,881 --> 00:41:49,384 {\an8}அவருடன் பழகுவது கடினமானது என்று கூறுகின்றனர். 550 00:41:49,384 --> 00:41:52,846 {\an8}அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 551 00:41:52,846 --> 00:41:55,432 {\an8}திறமைசாலிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு இருண்ட பக்கம் இருக்கும். 552 00:41:56,016 --> 00:41:59,102 {\an8}அவர் மிகவும் கண்டிப்பானவர், தவறுகளை அனுமதிக்க மாட்டார். 553 00:42:00,062 --> 00:42:03,315 {\an8}ப்ரொஃபஷனலாக இருப்பது பற்றிய அனைத்தையும் எனக்குக் கற்றுக்கொடுத்தார். 554 00:42:03,315 --> 00:42:09,154 {\an8}நேற்று, உங்கள் தாத்தா தன் ஆதரவு உங்களுக்கு இருப்பதாக அறிவித்தார். 555 00:42:09,821 --> 00:42:11,031 {\an8}அதைக் கேட்டது மகிழ்ச்சியாக இருந்ததா? 556 00:42:11,949 --> 00:42:16,119 என் தாத்தா இரக்கமற்றவர், கொடூரமானவர் என்று சிலர் கூறுகின்றனர், 557 00:42:16,119 --> 00:42:17,412 ஆனால் அது உண்மை இல்லை. 558 00:42:17,913 --> 00:42:20,332 ரத்த சொந்தங்கள் மதிப்புமிக்கவை. 559 00:42:20,916 --> 00:42:24,503 நாம் நேசிப்பவர்களை அப்படியே நாம் பாராட்ட வேண்டும், 560 00:42:24,503 --> 00:42:27,172 நாம் விரும்புபவராக இருப்பதற்கு இல்லை. 561 00:42:27,673 --> 00:42:31,176 அறிவில்லாத, முட்டாள்களுக்கு அது புரியாது, 562 00:42:31,844 --> 00:42:34,763 ஆனால் அவர் முற்றிலும் வித்தியாசமானவர். 563 00:42:35,722 --> 00:42:40,060 குடும்பத்தாலும் நேசிப்பவர்களாலும் ஆதரிக்கப்படுவது மிகவும் முக்கியமானது. 564 00:42:40,936 --> 00:42:44,398 மற்ற யாரையும் விட என் தாத்தாவுக்கு இது தெரியும். 565 00:42:45,983 --> 00:42:51,238 நீங்கள் போட்டியில் தோற்றால், டொமினே டயமண்ட்ஸை ஏற்று நடத்துவீர்களா? 566 00:42:52,614 --> 00:42:55,409 வைரங்களும் ஒயினும் நேரெதிரானவை. 567 00:42:56,326 --> 00:42:57,911 தனிமமும் இயற்கையானவையும். 568 00:42:59,204 --> 00:43:01,999 வைரங்கள் மாறாத்தன்மையையும் நிரந்தரத்தையும் குறிக்கின்றன. 569 00:43:01,999 --> 00:43:03,125 ஒயின் வித்தியாசமானது. 570 00:43:03,625 --> 00:43:05,669 நீங்கள் என் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. 571 00:43:06,962 --> 00:43:08,046 அதற்கான பதில், இல்லை. 572 00:43:09,923 --> 00:43:14,887 நான் முடிவு எதுவாக இருந்தாலும், அந்த நிறுவனத்தை ஏற்று நடத்த மாட்டேன். 573 00:43:16,680 --> 00:43:18,432 நம் நிகழ்ச்சி முடிவுக்கு வரப் போகிறது. 574 00:43:18,432 --> 00:43:20,184 வேறெதுவும் கூற விரும்புகிறீர்களா? 575 00:43:25,022 --> 00:43:30,360 என் அப்பா ஹிரோகாஸு டொமினேவுக்கு நன்றி கூற விரும்புகிறேன். 576 00:43:31,737 --> 00:43:33,947 மற்ற யாரையும் விட அவர்தான் 577 00:43:34,531 --> 00:43:36,742 நான் யார், எதை விரும்புகிறேன் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டவர். 578 00:43:39,620 --> 00:43:41,455 {\an8}அவர் எனக்கு மிகவும் முக்கியமானவர். 579 00:43:43,582 --> 00:43:47,878 {\an8}அவரது மகனாக இருக்கப் பெருமைப்படுகிறேன். 580 00:43:55,010 --> 00:43:56,178 மிக்க நன்றி. 581 00:44:23,580 --> 00:44:24,998 தாமஸ்? 582 00:44:27,543 --> 00:44:28,585 இருக்கிறாயா? 583 00:44:34,842 --> 00:44:35,884 தாமஸ்? 584 00:44:38,971 --> 00:44:40,180 மன்னிக்கவும். 585 00:44:45,727 --> 00:44:47,479 அவர் போய்விட்டார். 586 00:45:34,818 --> 00:45:36,069 இதோ வருகிறேன். 587 00:45:40,449 --> 00:45:42,451 உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. என் பெயர் இஸ்ஸேய் டொமினே. 588 00:45:42,451 --> 00:45:44,411 ஹலோ, திரு. இஸ்ஸேய். 589 00:45:45,204 --> 00:45:47,956 என் பேத்தி உங்களைப் பற்றி நிறைய கூறினாள். உள்ளே வாருங்கள். 590 00:45:49,291 --> 00:45:54,379 திரு. லெஜரின் வகுப்பு பற்றிய அனைத்தும் இதில் எழுதப்பட்டுள்ளது. 591 00:45:56,173 --> 00:45:59,218 உன் பெற்றோர் கலந்துகொண்டு அனைத்து வகுப்புகளும். 592 00:46:04,181 --> 00:46:06,808 என் பெற்றோரை உங்களுக்கு நினைவுள்ளது. 593 00:46:10,771 --> 00:46:15,400 இதை நீங்கள் எடுத்துச் சென்று வீட்டில் பொறுமையாகப் படிக்கலாம். 594 00:46:16,985 --> 00:46:20,572 அல்லது உள்ளே என்னுடன் வந்து பேசலாம். 595 00:46:22,032 --> 00:46:26,411 ஆனால் உள்ளே வரத் தேர்வுசெய்தால், 596 00:46:27,037 --> 00:46:30,165 நீங்கள் உண்மையை எதிர்கொள்ள வேண்டும். 597 00:46:32,751 --> 00:46:36,296 முடிவு உங்களுடையது. 598 00:46:45,681 --> 00:46:48,934 காக்க வைத்ததற்கு மன்னிக்கவும். 599 00:46:54,356 --> 00:46:55,399 இந்தாருங்கள். 600 00:46:55,899 --> 00:46:56,942 நன்றி. 601 00:46:59,903 --> 00:47:02,948 என் பெற்றோரை உங்களுக்குத் தெரியுமா? 602 00:47:05,826 --> 00:47:08,829 ”தெரியும்” என்பது பெரிய வார்த்தை. 603 00:47:09,705 --> 00:47:13,750 சில மாதங்களுக்கு எங்கள் பாதைகள் குறுக்கிட்டன. 604 00:47:13,750 --> 00:47:18,338 நான் திரு. லெஜரின் வகுப்புகளில் மொழிபெயர்த்தேன். 605 00:47:20,007 --> 00:47:21,675 ஒரு மொழிபெயர்ப்பாளராக, 606 00:47:22,426 --> 00:47:25,387 நான் கவனமாகவும், கிட்டத்தட்ட கண்ணுக்கே தெரியாமலும் இருந்தேன். 607 00:47:32,644 --> 00:47:33,729 ஆனால், 608 00:47:34,855 --> 00:47:40,360 நாம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும்போது நிறைய விஷயங்களைப் பார்க்க முடியும். 609 00:47:42,279 --> 00:47:45,282 என்ன பார்த்தீர்கள்? சொல்லுங்கள். 610 00:47:47,075 --> 00:47:50,954 நீங்கள் மிகவும் தீவிரமானவர் என்று தெரிகிறது. 611 00:47:51,872 --> 00:47:53,832 ஹொனோகா போலவே. 612 00:47:56,752 --> 00:47:59,296 என் அம்மா எப்படிப்பட்ட மாணவி? 613 00:48:01,673 --> 00:48:03,800 மற்ற மாணவர்களிடையே அவரை மட்டும்தான் பார்க்க முடியும். 614 00:48:05,010 --> 00:48:09,598 அவர் மிகவும் புத்திசாலி, அவருக்கென்று சொந்தக் கருத்துகள் இருந்தன. 615 00:48:10,516 --> 00:48:15,187 அவர் சமாதானம் அடையவே மாட்டார், மிகவும் புத்திசாலி. 616 00:48:17,898 --> 00:48:20,067 என் அப்பா எப்படிப்பட்டவர்? 617 00:48:20,859 --> 00:48:26,448 அவரும் உங்கள் அம்மா போலவே பேரார்வமிக்கவர். 618 00:48:27,407 --> 00:48:28,742 பேரார்வமிக்கவரா? 619 00:48:30,869 --> 00:48:33,247 அவர்களுக்கு உறுதியான ஆர்வம் இருந்தது. 620 00:48:34,122 --> 00:48:37,876 அவர்கள்தான் கவனத்தை ஈர்ப்பவர்களாக இருந்தனர். 621 00:48:38,877 --> 00:48:42,798 அவர்கள் ஒருவரையொருவர் மட்டுமே பார்த்துக்கொள்வார்கள். 622 00:48:43,757 --> 00:48:49,805 அவர்களது காதல் தொடங்கியதை நான் பார்த்தேன். 623 00:48:51,682 --> 00:48:55,269 என் பெற்றோர் காதலித்ததே இல்லை என்பது போல எனக்குத் தோன்றியது. 624 00:48:56,854 --> 00:49:02,943 அவர் அவருக்காகத்தான் வகுப்பெடுக்கிறார் என்பது போல இருக்கும். 625 00:49:04,903 --> 00:49:08,615 என்ன சொல்கிறீர்கள்? என் அப்பாவும் ஒரு மாணவர்தானே? 626 00:49:19,793 --> 00:49:21,962 திரு. ஹிரோகாஸு ஒனோயமா, 627 00:49:23,213 --> 00:49:27,259 அவரும் உன் அம்மாவும் எப்போதும் ஒன்றாகவே இருந்தனர். 628 00:49:27,259 --> 00:49:29,136 அவர் தன் கண்ணிலிருந்து அவரை விலகவிட மாட்டார். 629 00:49:30,971 --> 00:49:37,186 அவர்கள் காதலித்ததைத் தெரிந்துகொண்டது, திரு. ஒனோயாமா நொறுங்கிவிட்டார். 630 00:49:38,770 --> 00:49:40,147 ஒருநாள் காலை, 631 00:49:41,815 --> 00:49:47,821 அவர் பல்கலைக்கழக வளாகத்தில் குடித்துவிட்டுக் கிடந்தார். 632 00:49:49,990 --> 00:49:51,617 அவரால்தான்... 633 00:49:53,660 --> 00:49:58,415 திரு. லெஜர் பணிநீக்கம் செய்யப்பட்டார். 634 00:50:00,417 --> 00:50:02,419 சில மாதங்களுக்குப் பிறகு, 635 00:50:03,837 --> 00:50:08,717 ஹொனோகாவும் ஹிரோகாஸுவும் திருமணம் செய்துகொண்டது எனக்குத் தெரிந்தது. 636 00:50:10,844 --> 00:50:12,804 எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 637 00:50:15,224 --> 00:50:16,934 இதைக் கேட்க உங்களுக்குக் கடினமாக இருக்கும். 638 00:50:19,061 --> 00:50:20,062 ஆனால்... 639 00:50:21,939 --> 00:50:25,651 ஆனால் திரு. லெஜரைத்தான் உங்கள் அம்மா மிகவும் நேசித்தார். 640 00:50:27,694 --> 00:50:32,366 அதனால்தான் தன் சொத்தை அடைவதில்... 641 00:50:35,369 --> 00:50:37,454 உங்களுக்கு வாய்ப்பளிக்க விரும்பினர். 642 00:50:44,670 --> 00:50:45,921 எழுந்திருங்கள்! 643 00:50:50,801 --> 00:50:53,679 உங்களுக்காக உணவு சமைத்துள்ளேன். 644 00:50:53,679 --> 00:50:55,806 வெறும் வயிற்றில் பயணிக்கக் கூடாது. 645 00:50:58,058 --> 00:50:59,351 சரியா? 646 00:51:13,657 --> 00:51:15,284 கவனமாக இருங்கள். 647 00:52:10,964 --> 00:52:12,591 கமில் லெஜர் 648 00:52:31,193 --> 00:52:32,611 டடாஷி ஆகி/ஷூ ஓகிமோடோ எழுதிய கமி நோ ஷிஸுகு மாங்காவை அடிப்படையாகக் கொண்டது. 649 00:52:50,128 --> 00:52:52,130 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்