1 00:00:39,206 --> 00:00:41,416 நீ பேக் செய்வதற்கு என்னால் உதவ முடியாததற்கு மன்னிக்கவும். குட் லக் :) 2 00:00:50,926 --> 00:00:52,719 ஃபெர்ன் 3 00:00:52,719 --> 00:00:56,306 போட்டிக்கு இன்னும் ஐந்து நாட்கள் உள்ளன, நீ இன்னும் ஒரு மணத்தைதான் கண்டுபிடித்துள்ளாய். 4 00:01:00,978 --> 00:01:03,313 நீ களைப்பாக இருக்கிறாய் எனத் தெரியும், ஆனால் இன்னும் முயற்சிக்க முடியுமா? 5 00:01:04,565 --> 00:01:05,566 முயற்சியைக் கைவிடாதே. 6 00:01:11,446 --> 00:01:13,448 விழுங்காதே, சரியா? 7 00:01:15,993 --> 00:01:17,369 துப்பிவிடு. 8 00:01:17,369 --> 00:01:18,954 சரி. 9 00:01:48,567 --> 00:01:49,693 “செலரி வேர், 10 00:01:50,402 --> 00:01:55,115 கொக்கோ, பென்சில், சுண்ணாம்பு, ஃபெர்ன், 11 00:01:55,908 --> 00:01:58,493 களிமண், அதிமதுரம்.” 12 00:02:01,997 --> 00:02:03,749 செலரி வேர் இருந்தது உறுதியாகத் தெரியுமா? 13 00:02:05,250 --> 00:02:08,044 இல்லை, உறுதியாத் தெரியவில்லை. 14 00:02:09,086 --> 00:02:10,881 கேஃபடீரியாவில் செலரி மற்றும் மயோனைஸுடன் 15 00:02:10,881 --> 00:02:13,425 இருக்கும் விசித்திரமான சாலட் உனக்கு நினைவுள்ளதா? 16 00:02:13,425 --> 00:02:14,885 அதே சுவைதான் இருந்தது. 17 00:02:17,888 --> 00:02:21,266 ஏனெனில் வழக்கமாக, வெள்ளை ஒயின்களில்தான் செலரி வேர் இருக்கும், 18 00:02:21,266 --> 00:02:24,561 லொய்ர் ஒயின் அல்லது கிரேக்க ஒயின் போன்று, ஆனால் சிவப்பு ஒயின்களில் இருக்காது. 19 00:02:26,939 --> 00:02:27,981 நிச்சயமாகச் சொல்கிறாயா? 20 00:02:28,941 --> 00:02:30,901 தாமஸ், எனக்குத் தெரியவில்லை. 21 00:02:30,901 --> 00:02:33,320 என்னால் இனியும் கவனம் செலுத்த முடியாது. என் தலை... 22 00:02:33,320 --> 00:02:35,906 மன்னிக்கவும், நீ கூறிய மணங்கள் எனக்குத் தெரிந்த எந்த ஒயினுடனும் 23 00:02:35,906 --> 00:02:39,618 பொருந்தவில்லை, அது என்னைப் பைத்தியமாக்குகிறது. 24 00:02:42,037 --> 00:02:43,705 இன்றிரவுக்கு அது போதும். 25 00:02:43,705 --> 00:02:44,831 நாம் சிறப்பாகச் செய்தோம். 26 00:02:45,499 --> 00:02:46,583 நான் தூங்கப் போகிறேன். 27 00:02:48,210 --> 00:02:49,795 - குட் நைட். - குட் நைட். 28 00:02:53,882 --> 00:02:54,925 ”மிராபெல், 29 00:02:54,925 --> 00:02:56,051 ப்ளூபெர்ரி, 30 00:02:57,636 --> 00:02:58,887 செலரி வேர், 31 00:03:00,639 --> 00:03:02,474 கொக்கோ, பென்சில், 32 00:03:03,225 --> 00:03:04,351 சுண்ணாம்பு... 33 00:03:06,478 --> 00:03:07,479 ஃபெர்ன், 34 00:03:09,398 --> 00:03:10,858 களிமண், அதிமதுரம்.” 35 00:03:12,901 --> 00:03:15,195 மிராபெல், ப்ளூபெர்ரி. 36 00:03:16,029 --> 00:03:17,030 செலரி வேரா? 37 00:03:18,156 --> 00:03:20,617 கொக்கோ, பென்சில், சுண்ணாம்பு, 38 00:03:21,410 --> 00:03:23,453 ஃபெர்ன், களிமண், அதிமதுரம். 39 00:03:23,453 --> 00:03:26,790 மிராபெல், ப்ளூபெர்ரி, 40 00:03:28,208 --> 00:03:33,797 செலரி வேர், கொக்கோ, பென்சில், சுண்ணாம்பு, 41 00:03:34,673 --> 00:03:37,759 ஃபெர்ன், களிமண், அதிமதுரம். 42 00:03:37,759 --> 00:03:39,094 மிராபெல், ப்ளூபெர்ரி, 43 00:03:39,094 --> 00:03:42,472 செலரி வேர், கொக்கோ, பென்சில், சுண்ணாம்பு, 44 00:03:42,472 --> 00:03:45,601 ஃபெர்ன், களிமண், அதிமதுரம். 45 00:03:59,072 --> 00:04:00,324 என்ன தேடுகிறீர்கள்? 46 00:04:02,576 --> 00:04:03,577 நான் உதவலாமா? 47 00:04:04,828 --> 00:04:05,871 சரி. 48 00:04:12,544 --> 00:04:13,754 என்ன செய்கிறீர்கள்? 49 00:04:15,088 --> 00:04:16,714 சரி. 50 00:04:16,714 --> 00:04:17,798 கிடைத்துவிட்டது. 51 00:04:21,553 --> 00:04:22,638 இதுதான். 52 00:04:23,764 --> 00:04:24,806 1986 இல், 53 00:04:25,557 --> 00:04:27,309 ஆண்ட்ரே ஜிகான் என்ற டூரெய்ன் ஒயின் உற்பத்தியாளர் 54 00:04:27,309 --> 00:04:29,561 இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு யாரும் பயன்படுத்தாத பழைய திராட்சை 55 00:04:29,561 --> 00:04:33,148 வகையை மீண்டும் பயன்படுத்தத் தீர்மானித்தார், அது ”லின்யாஜ்”. 56 00:04:33,148 --> 00:04:35,943 அது மிகவும் ஸ்பெஷலான திராட்சை வகை, 57 00:04:35,943 --> 00:04:39,321 அதை வைத்து அவர் சிவப்பு மற்றும் வெள்ளை என இரண்டிலும் அற்புதமான ஒயின் தயாரித்தார். 58 00:04:39,321 --> 00:04:43,075 நீண்ட காலத்திற்கு முன் அந்த இரண்டையும் சுவைத்தது நினைவுக்கு வருகிறது. 59 00:04:43,075 --> 00:04:45,786 குழப்பமானது, ஆனால் அற்புதமானது. 60 00:04:46,411 --> 00:04:48,330 - ”லின்யாஜ்.” - ஆம். 61 00:04:48,330 --> 00:04:50,249 அற்புதம். அது எங்கே கிடைக்கும்? 62 00:04:50,249 --> 00:04:52,668 அது இனிமேல் கிடைக்காது. 63 00:04:53,168 --> 00:04:55,462 ஆண்ட்ரே ஜிகான் 1996 இல் திவாலாகிவிட்டார். 64 00:04:58,131 --> 00:04:59,675 டூரெய்ன்-டொமெய்ன் ஜிகான்-சிபாஜ் லின்யாஜ் 1990 65 00:05:00,843 --> 00:05:02,261 - அடச்சை. - என்ன? 66 00:05:02,261 --> 00:05:05,764 அதன் கடைசி பாட்டில் ஐந்தாண்டுகளுக்கு முன் அமெரிக்கர்களிடம் விற்கப்பட்டுள்ளது. 67 00:05:06,849 --> 00:05:08,100 என்ன விலையில்? 68 00:05:10,435 --> 00:05:11,728 10,000 யூரோ. 69 00:05:11,728 --> 00:05:13,564 - அடக் கடவுளே. - ஆம். 70 00:05:13,564 --> 00:05:17,401 மற்ற பாட்டில்களும் கிட்டத்தட்ட அதே விலையில் உலகம் முழுவதும் விற்கப்பட்டுள்ளன. 71 00:05:19,653 --> 00:05:22,406 நான் இன்றிரவு டோக்கியோ புறப்படுகிறேன். நான் அந்த ஒயினைக் கண்டறிய வேண்டும். 72 00:05:22,406 --> 00:05:23,907 உறுதியாகத் தெரிய, நான் அதைச் சுவைக்க வேண்டும். 73 00:05:26,159 --> 00:05:27,494 எனக்கு வேறு வழியில்லை. 74 00:05:27,494 --> 00:05:30,330 நான் அவரைப் பார்த்து, அவரிடம் இன்னும் ஒரு பாட்டில் உள்ளதா எனக் கேட்க வேண்டும். 75 00:05:30,330 --> 00:05:31,790 ஒன்றே ஒன்று. 76 00:05:31,790 --> 00:05:33,917 அவர் அதை 10,000 யூரோவுக்கு விற்றால் என்ன செய்வாய்? 77 00:05:37,296 --> 00:05:39,298 உனக்குத் தேவைப்பட்டால் என்னால் உதவ முடியும். 78 00:05:40,007 --> 00:05:42,551 - இல்லை, ஃபிலிப்பே, என்னால் அதை... - வா. போகலாம். 79 00:05:42,551 --> 00:05:43,719 என்ன? ஆனால்... 80 00:05:48,223 --> 00:05:50,017 நீ யாருடனாவது உறவில் இருக்கிறாயா? 81 00:05:50,767 --> 00:05:51,768 அது சிக்கலானது. 82 00:05:52,352 --> 00:05:53,812 எது சிக்கலானது? 83 00:05:55,272 --> 00:05:56,648 எனக்கும் ஆண்களுக்கும் பொதுவாகவே சிக்கல்தான். 84 00:05:59,276 --> 00:06:00,319 சரி. 85 00:06:00,903 --> 00:06:02,487 நீ இதற்கு முன் உறவில் இருந்திருக்கிறாய் தானே? 86 00:06:02,487 --> 00:06:05,490 ஆம். அதாவது... 87 00:06:06,533 --> 00:06:07,993 சீரியஸாக எதுவுமில்லை. 88 00:06:09,077 --> 00:06:12,331 நான் மட்டும்தான் ஆல்கஹால் குடிக்காதவள் என்பதால் உணவகத்துக்குச் செல்லாத, 89 00:06:12,331 --> 00:06:16,043 பார்ட்டிக்குப் போக முடியாத பெண்ணாக இருக்கும்போது... 90 00:06:16,043 --> 00:06:19,505 அதாவது, “வாழ்க்கையில் சில விஷயங்களை ரசிக்க முடியாத” நபராக இருப்பது. 91 00:06:20,214 --> 00:06:23,091 ஆண்களுக்கு வழக்கமாக அதுபோன்ற பெண்... 92 00:06:23,091 --> 00:06:25,260 - ஆம். - ஆம். 93 00:06:25,928 --> 00:06:29,848 எனக்கு 29 வயதாகிறது, நான் இன்னும் என் அம்மாவுடன் வசிக்கிறேன், அது மிகவும் பரிதாபம். 94 00:06:31,016 --> 00:06:32,643 நானும் அதே நிலையில்தான் இருக்கிறேன். 95 00:06:33,227 --> 00:06:36,730 நான் என் அப்பாவுடன் வசிக்கிறேன், வேலை செய்கிறேன், அதனால், அதுவும் சிறப்பானது இல்லை. 96 00:06:38,982 --> 00:06:41,777 ஹேய். கவலைப்படாதே. 97 00:06:42,277 --> 00:06:43,779 புதிய கமில் வந்துவிட்டாள். 98 00:06:46,532 --> 00:06:47,658 கமில் 2.0. 99 00:06:49,034 --> 00:06:50,077 அற்புதம். 100 00:07:07,719 --> 00:07:10,556 ”வாசனை உணர்வு” 101 00:07:14,977 --> 00:07:15,978 நாம் நெருங்கிவிட்டோம். 102 00:07:20,232 --> 00:07:21,733 திராட்சைத் தோட்டம் எங்கே உள்ளது? 103 00:07:23,986 --> 00:07:25,153 நல்ல கேள்வி. 104 00:07:37,374 --> 00:07:38,375 ஹலோ. 105 00:07:40,961 --> 00:07:42,087 திரு. ஜிகான்? 106 00:07:45,674 --> 00:07:46,675 ஆண்ட்ரே ஜிகான்? 107 00:07:48,594 --> 00:07:49,595 என்ன? 108 00:07:49,595 --> 00:07:52,556 ஹலோ. உங்களை தொந்தரவு செய்ய மன்னிக்கவும். ஆண்ட்ரே ஜிகானைத் தேடி வந்துள்ளோம். 109 00:07:54,099 --> 00:07:56,310 அவர்தான். நான் அவரது மகன். என்ன உதவி வேண்டும்? 110 00:07:57,144 --> 00:07:58,270 நாம் பேசலாமா? 111 00:07:58,812 --> 00:07:59,813 எதைப் பற்றி? 112 00:08:02,441 --> 00:08:05,027 என் அப்பா புதிய ஒயின்களை உருவாக்கவும் புதிய நுட்பங்களைப் பரிசோதிக்கவும் 113 00:08:05,027 --> 00:08:07,654 தன் வாழ்க்கையையே செலவழித்துள்ளார். 114 00:08:07,654 --> 00:08:10,157 வேறு எவருக்கும் முன்பு அவர்தான் ஆர்கானிக் ஒயினை உருவாக்கினார். 115 00:08:10,157 --> 00:08:13,035 அவர் மறக்கப்பட்ட திராட்சை வகைகளை மீண்டும் கொண்டு வர முயன்றார். 116 00:08:13,035 --> 00:08:14,453 லின்யாஜ் போலவா? 117 00:08:14,453 --> 00:08:16,663 ஆம். லின்யாஜுக்கு நான் அங்கே இருந்தேன். 118 00:08:16,663 --> 00:08:18,665 என் அப்பா அதை நம்பியதால் நானும் நம்பினேன். 119 00:08:18,665 --> 00:08:21,793 அவர் தன் ஆற்றல் மற்றும் சேமிப்புகள் அனைத்தையும் அதில் போட்டார். 120 00:08:22,753 --> 00:08:26,089 அவர் உயர்தரமான ஒயின்களுடன் போட்டி போடும் அற்புதமான ஒயினைத் தயாரித்தார், 121 00:08:26,089 --> 00:08:29,176 அதற்குக் காரணம் யாருக்கும் தெரியாத திராட்சை வகைதான். 122 00:08:29,176 --> 00:08:32,763 அவரது மொத்த முயற்சியையும் கொடுத்தார், ஆனால் நாங்கள் போதுமானளவு தயாரிக்கவில்லை. 123 00:08:32,763 --> 00:08:33,972 நாங்கள் சிறு நிறுவனமாக இருந்தோம். 124 00:08:33,972 --> 00:08:36,808 மேலும் எங்களிடம் மார்க்கெட்டிங்கிற்கும் போதுமான பணம் இல்லை, 125 00:08:36,808 --> 00:08:40,020 அதனால் ஒரு சில ஆர்வமானவர்களைத் தவிர வேறு யாருக்கும் எங்கள் ஒயினைத் தெரியவில்லை. 126 00:08:40,020 --> 00:08:42,063 எங்கள் பிசினஸ் 1996 இல் திவாலாகிவிட்டது. 127 00:08:42,063 --> 00:08:45,442 எங்கள் ஒயின் பத்து வின்டேஜ்கள் வரை சென்றது. அதிகமும் இல்லை, குறையவும் இல்லை. 128 00:08:45,442 --> 00:08:48,070 கடன்களை அடைக்க எங்களிடம் இருந்த அனைத்தையும் விற்றுவிட்டார். 129 00:08:48,070 --> 00:08:50,697 சிலர் சட்டத்திற்குப் புறம்பான முறையில் சம்பாதித்ததை உணர்ந்தேன். 130 00:08:51,240 --> 00:08:54,785 நாங்கள் 40 யூரோவுக்கு விற்ற பாட்டிலை 10,000 யூரோவுக்கு விற்றனர். 131 00:08:59,039 --> 00:09:03,794 திரு. ஜிகான், உங்களிடம் லின்யாஜ் பாட்டில் இன்னும் உள்ளதா? 132 00:09:05,629 --> 00:09:08,131 நீ போட்டியில் சுவைத்த ஒயின் 133 00:09:08,966 --> 00:09:09,967 எங்களுடையது என நினைக்கிறாயா? 134 00:09:11,176 --> 00:09:14,972 இருக்கலாம், ஆனால் உறுதிசெய்ய அதைச் சுவைக்க வேண்டும். 135 00:09:15,556 --> 00:09:17,599 மன்னிக்கவும், நான் அனைத்தையும் விற்றுவிட்டேன். 136 00:09:20,227 --> 00:09:22,521 எனக்கு நினைவிருக்கும் மணங்களில், 137 00:09:22,521 --> 00:09:25,774 வழக்கமாக சிவப்பு ஒயின்களுடன் தொடர்பில்லாத ஒரு மணம் இருந்தது. 138 00:09:25,774 --> 00:09:27,109 அது செலரி வேர். 139 00:09:28,902 --> 00:09:30,237 கேட்டீர்களா, அப்பா? 140 00:09:30,863 --> 00:09:32,030 செலரி வேர். 141 00:09:38,245 --> 00:09:44,042 லின்யாஜின் தனித்துவமானது, அதை சிவப்பு மற்றும் வெள்ளை ஒயினாக மாற்றக்கூடிய தன்மைதான். 142 00:09:44,042 --> 00:09:47,337 ஒரே வின்டேஜின் திராட்சைகளில் இரண்டு வண்ணங்களில் என் அப்பா ஒயின் தயாரித்தார். 143 00:09:47,337 --> 00:09:50,257 நம்மால் வெள்ளை ஒயினில் சிவப்பு ஒயினின் மணங்களையும், சிவப்பு ஒயினில் 144 00:09:50,257 --> 00:09:53,135 வெள்ளை ஒயினின் மணங்களையும் உணர முடியும். 145 00:09:53,135 --> 00:09:57,598 அதனால் செலரி வேர் இருக்க வாய்ப்புள்ளது. 146 00:09:57,598 --> 00:10:04,313 நீங்கள் தேடுவது லின்யாஜ், 1987ஐச் சேர்ந்த பாட்டிலாக இருக்கலாம். 147 00:10:12,529 --> 00:10:13,989 குட்பை, நன்றி. 148 00:10:13,989 --> 00:10:16,658 நன்றி. 149 00:10:17,326 --> 00:10:19,620 உண்மையில், இது தேவையற்றது. நான் உன்னைக் கூட்டிச்செல்ல முடியும். 150 00:10:19,620 --> 00:10:20,704 கவலைப்படாதே. 151 00:10:20,704 --> 00:10:22,414 நீ நீண்ட தூரம் போக வேண்டும். 152 00:10:22,414 --> 00:10:25,125 அவர் என்னை நேராக ஏர்போர்ட்டுக்குக் கூட்டிச் செல்வார். அது சுலபம்தான். 153 00:10:26,418 --> 00:10:29,338 நீ செய்த அனைத்திற்கும் நன்றி கூற விரும்பினேன். 154 00:10:29,338 --> 00:10:33,342 உன்னால் கற்பனை செய்யவே முடியாது. மிக்க நன்றி. 155 00:10:34,259 --> 00:10:35,302 - ஹலோ. - ஹலோ. 156 00:10:35,302 --> 00:10:36,386 ஹலோ. 157 00:10:36,386 --> 00:10:39,598 உன்னைப் பார்த்துக்கொள். 158 00:10:39,598 --> 00:10:41,517 - தொடர்பில் இருப்போம். - சரி. 159 00:10:41,517 --> 00:10:43,185 எனக்காக உன் அப்பாவிடம் நன்றி கூறுகிறாயா? 160 00:10:43,185 --> 00:10:45,229 ஆம், கண்டிப்பாகக் கூறுகிறேன். 161 00:10:47,272 --> 00:10:48,440 குட்பை, கமில் லெஜர். 162 00:10:49,358 --> 00:10:50,901 குட்பை, தாமஸ் சஸாங்ரே. 163 00:11:05,999 --> 00:11:07,084 பை. 164 00:11:41,118 --> 00:11:43,328 உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நான் டொமினே. 165 00:11:43,328 --> 00:11:44,705 நான் யூரிகா கடாஸே. 166 00:11:50,836 --> 00:11:51,837 ரெக்கார்டு செய்யலாமா? 167 00:12:01,722 --> 00:12:03,307 நான் உங்களைச் சந்திக்க விரும்பியதன் காரணம் 168 00:12:03,307 --> 00:12:06,351 "லெஜர் சாசனம்” பற்றி நீங்கள் எழுதுகிறீர்கள் என்பதுதான். 169 00:12:07,394 --> 00:12:12,149 நான் கூறுவதை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக நீங்கள் வெளியிட விரும்புகிறேன். 170 00:12:15,527 --> 00:12:20,991 இஸ்ஸேய் டொமினே ஆகிய நான், என் குடும்பத் தொழிலாகிய டொமினே டயமண்ட்ஸில் 171 00:12:22,075 --> 00:12:27,039 முழுதாக ஈடுபட, திரு. அலெக்ஸாண்ட்ரே லெஜரின் போட்டியில் இருந்து விலகுகிறேன். 172 00:12:31,668 --> 00:12:32,878 அவ்வளவுதானா? 173 00:12:35,506 --> 00:12:36,632 என்ன சொல்கிறீர்கள்? 174 00:12:39,510 --> 00:12:42,137 இது ஏமாற்றமாக உள்ளது. 175 00:12:43,055 --> 00:12:45,891 அடுத்த முறை, மின்னஞ்சல் அனுப்பினால் போதும். 176 00:12:45,891 --> 00:12:48,101 அப்படிச் செய்தால் நம் இருவரது நேரமும் வீணாகாது. 177 00:12:50,604 --> 00:12:55,609 உங்கள் குடும்பத் தொழிலில் கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறினீர்கள். 178 00:12:56,944 --> 00:12:59,655 உண்மையில், நீங்கள் பயப்படுவதால்தான் விலகுகிறீர்கள், சரியா? 179 00:13:07,329 --> 00:13:08,872 என்ன பேசுகிறீர்கள்? 180 00:13:09,581 --> 00:13:13,252 எங்கிருந்தோ வரும் பெண்ணிடம் தோற்பதற்கு நீங்கள் பயப்படுகிறீர்கள், 181 00:13:13,252 --> 00:13:19,299 அதுவும் குறிப்பாக அலெக்ஸாண்ட்ரே லெஜர் மகளிடம் தோற்பதற்கு. 182 00:13:19,299 --> 00:13:21,343 எனக்குப் புரிகிறது. 183 00:13:21,343 --> 00:13:24,429 நான் என் ஆய்வைச் செய்துகொண்டு வருகிறேன். 184 00:13:25,347 --> 00:13:28,642 ஒயின் பற்றி படிக்கும் உங்கள் கல்லூரியில் உங்கள் வகுப்புத் தோழர்கள் சிலரைச் சந்தித்தேன். 185 00:13:29,268 --> 00:13:31,603 நீங்கள்தான் மிகவும் திறமைசாலி என்று அவர்கள் அனைவரும் கூறினார்கள். 186 00:13:31,603 --> 00:13:34,106 அதனால்தான் லெஜர் உங்களைத் தன்னோடு சேர்த்துக்கொண்டார். 187 00:13:34,106 --> 00:13:36,149 அவர் இதற்கு முன் செய்யாத ஒன்று. 188 00:13:36,733 --> 00:13:40,779 லெஜரின் மகளை உங்களால்தான் வெல்ல முடியும் என்று கூறினார்கள்... 189 00:13:42,489 --> 00:13:46,785 வேறு யாரையும் வெல்வது கூட. 190 00:13:47,619 --> 00:13:51,331 உங்கள் வாழ்க்கையே ஒயினுக்காகத்தான் என்று கூறினார்கள். 191 00:13:52,374 --> 00:13:58,130 இங்கே யாரும் உண்மை பேசவில்லை எனில், அது நானில்லை. 192 00:13:59,590 --> 00:14:03,427 இப்போது என்ன செய்வீர்கள்? பின்வாங்குகிறீர்களா இல்லையா? 193 00:14:07,347 --> 00:14:09,016 சுலபமில்லையா? 194 00:14:13,770 --> 00:14:14,855 நான் புறப்படுகிறேன். 195 00:14:17,191 --> 00:14:19,276 நேரம் ஒதுக்கு யோசித்துப் பாருங்கள். 196 00:14:29,286 --> 00:14:32,372 உன்னைச் சந்திப்பதில் மகிழ்ச்சி, கமில். 197 00:14:34,166 --> 00:14:35,417 இதைப் பார். 198 00:14:35,417 --> 00:14:37,211 ”இந்த நூற்றாண்டின் பெரிய போட்டி.” 199 00:14:38,128 --> 00:14:41,381 ”சிவப்புத் தங்கத்தை அடைவதற்கான போட்டி.” ”ஃபிரெஞ்சுக்கும் ஜப்பானுக்குமான போட்டி.” 200 00:14:41,381 --> 00:14:44,510 நீதான் தலைப்புச் செய்தியே, இங்கு மட்டுமில்லை, எல்லா இடங்களிலும். 201 00:14:45,636 --> 00:14:47,012 இதுதான் எனக்குப் பிடித்தது. 202 00:14:47,012 --> 00:14:50,015 ”கோலியாத்துக்கு எதிராக தாவீது.” நீதான் தாவீது, சரியா? 203 00:14:50,015 --> 00:14:52,726 - ஆம், அற்புதம். - நீ வரலாறு படைக்கிறாய், இளம்பெண்ணே. 204 00:14:53,644 --> 00:14:55,604 மியாபி! லோரென்ஸோ! 205 00:14:55,604 --> 00:14:57,314 எங்கே இருக்கிறீர்கள்? 206 00:14:57,314 --> 00:14:59,483 - என்ன? - இங்கே வாருங்கள். 207 00:15:00,359 --> 00:15:02,152 லோரென்ஸோ என் மருமகன். 208 00:15:02,152 --> 00:15:07,032 இவன் ஒரு சோம்மெலியேர் ஆக விரும்புகிறான், அதனால் மியாபியிடம் பயிற்சியளிக்கக் கூறியுள்ளேன். 209 00:15:07,032 --> 00:15:09,409 இவனிடம் நிறைய திறமை உள்ளது, ஆனால்... 210 00:15:09,409 --> 00:15:11,245 - இவனால் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். - ஆம். 211 00:15:11,995 --> 00:15:14,414 இவனைப் பார். இவன் தன்னை நினைத்துப் பெருமைப்படுகிறான். 212 00:15:14,414 --> 00:15:16,625 இவனால் இவனது பெற்றோர் விரக்தியடைவதில் ஆச்சரியமில்லை. 213 00:15:17,793 --> 00:15:20,629 லோரென்ஸோ, இதுதான் பிரபலமான கமில். 214 00:15:21,421 --> 00:15:23,632 ஜப்பானுக்கு வரவேற்கிறேன், கமில். 215 00:15:23,632 --> 00:15:26,718 - நன்றி. ஹலோ. - மியாபி! ஆ, வந்துவிட்டாய். 216 00:15:27,511 --> 00:15:30,556 ஃபிரான்ஸில், கமிலுக்குப் பேரறிவு கிடைத்துள்ளது. 217 00:15:31,139 --> 00:15:32,224 இவர்களிடம் சொல். 218 00:15:33,851 --> 00:15:39,982 முதல் போட்டியின் ஒயின், ஜிகான் டொமெய்னைச் சேர்ந்த, லின்யாஜ் 1987 ஆக இருக்கலாம். 219 00:15:40,858 --> 00:15:43,735 “நான் ஒரு துளி ஒயின் கூட குடித்ததில்லை” என்பதிலிருந்து 220 00:15:43,735 --> 00:15:46,864 ”அது லின்யாஜ், ஜிகான் டொமெய்ன், 1987” வரை வந்திருக்கிறாள். 221 00:15:46,864 --> 00:15:51,743 நான் தவறாகவும் இருக்கலாம். அதாவது, நான் அதை இன்னும் சுவைக்கவில்லை, அதனால்... 222 00:15:51,743 --> 00:15:57,749 என்னிடம் ஜிகான் டொமெய்னின் லின்யாஜ் ஒசாகாவில் உள்ள என் உணவகத்தில் உள்ளது. 223 00:15:57,749 --> 00:16:01,170 ஆனால் அது 1990ஐச் சேர்ந்தது, 1987 இல்லை. 224 00:16:02,045 --> 00:16:03,046 மேலும்... 225 00:16:03,046 --> 00:16:04,464 அந்த விலை. 226 00:16:04,464 --> 00:16:07,426 ஆம். 12,000 யூரோ. 227 00:16:08,051 --> 00:16:09,553 நான் உன்னை நம்புகிறேன், கமில். 228 00:16:09,553 --> 00:16:14,725 ஆனால் “இருக்கலாம்” என்பதற்காக 12,000 யூரோ பாட்டிலைத் திறக்க முடியாது. 229 00:16:15,309 --> 00:16:16,643 உனக்குப் புரியும் என நம்புகிறேன். 230 00:16:17,686 --> 00:16:19,688 திரு. மாட்ஸுபாரா இன்றிரவு வருகிறார். 231 00:16:19,688 --> 00:16:21,190 திரு. மாட்ஸுபாராவா? 232 00:16:22,608 --> 00:16:24,234 திரு. மாட்ஸுபாராவா? 233 00:16:25,736 --> 00:16:27,196 ஒரு பணக்கார பிசினஸ்மேன். 234 00:16:27,196 --> 00:16:28,989 மிகவும் மூடநம்பிக்கை உடையவர். 235 00:16:29,573 --> 00:16:32,951 ஒவ்வொரு முறை அவர் கிளையன்டை இங்கே கூட்டி வரும்போதெல்லாம், டீலை முடிப்பார். 236 00:16:32,951 --> 00:16:34,494 அதனால் இங்கே அடிக்கடி வருவார். 237 00:16:35,287 --> 00:16:38,749 மியாபியால் லின்யாஜைத் திறக்கும்படி அவரைச் சம்மதிக்க வைக்க முடியும். 238 00:16:38,749 --> 00:16:40,417 ஆனால் ஒரு சிக்கல் உள்ளது. 239 00:16:41,001 --> 00:16:43,212 பாட்டிலை கிளையண்டின் முன்னால் திறக்க வேண்டும். 240 00:16:43,212 --> 00:16:44,880 அது அறையை விட்டு வெளியேற முடியாது. 241 00:16:44,880 --> 00:16:48,342 மேலும் திரு. மாட்ஸுபாரா ஒரு துளியையும் மிச்சம் வைக்கும் நபர் இல்லை. 242 00:16:48,884 --> 00:16:49,885 அடச்சை. 243 00:16:52,221 --> 00:16:55,641 நான் பாட்டிலுக்கு அருகில் சென்று, அதை முகர முடிந்தால், 244 00:16:55,641 --> 00:16:56,850 ஒருவேளை... 245 00:16:56,850 --> 00:16:57,976 சரி. 246 00:16:59,478 --> 00:17:00,729 நீங்கள் கமிலைப் பார்த்துக்கொள்ளுங்கள். 247 00:17:00,729 --> 00:17:03,982 நான் ஒசாகாவில் இருந்து பாட்டிலை அனுப்ப வைக்கிறேன். 248 00:17:03,982 --> 00:17:05,608 ”பார்த்துக்கொள்ளுங்களா”? 249 00:17:08,779 --> 00:17:11,740 நீ பரிமாறப் போகும் ஒயின் மிகவும் சென்சிட்டிவானது. 250 00:17:11,740 --> 00:17:13,032 அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றக் கூடாது. 251 00:17:13,032 --> 00:17:16,118 அதை நீ திறந்து திரு. மாட்ஸுபாரா நேரடியாகச் சுவைக்க வைக்க வேண்டும். 252 00:17:16,787 --> 00:17:18,204 முதலில், 253 00:17:18,204 --> 00:17:21,708 ஒயினின் லேபிள் வாடிக்கையாளருக்குத் தெரியும் வகையில் அதைக் காட்ட வேண்டும். 254 00:17:21,708 --> 00:17:24,169 இரண்டாவது, ஒயினை அறிவிக்க வேண்டும். 255 00:17:24,169 --> 00:17:25,503 பிளா, பிளா, பிளா. 256 00:17:25,503 --> 00:17:29,925 பிறகு, ஃபாயிலை பாட்டில் கழுத்தின் கீழே வெட்ட வேண்டும். 257 00:17:30,676 --> 00:17:32,886 கத்தியைத்தான் திருப்ப வேண்டும், பாட்டிலை அல்ல, 258 00:17:32,886 --> 00:17:35,514 அப்போதுதான் கிளையன்டால் லேபிளை எப்போதும் பார்க்க முடியும். 259 00:17:36,598 --> 00:17:39,935 கார்க்கின் விளிம்பில் இருக்கக்கூடிய பூஞ்சையை நீக்க, அதைத் துடைக்க வேண்டும். 260 00:17:39,935 --> 00:17:41,603 பிறகு கார்க்ஸ்க்ரூவைச் செருக வேண்டும். 261 00:17:42,980 --> 00:17:45,065 ஸ்க்ரூவைச் சரியாகச் செருகியபிறகு, 262 00:17:45,065 --> 00:17:47,401 முதல் நாட்சை பாட்டில் கழுத்தில் மாட்டவும். 263 00:17:47,401 --> 00:17:49,069 அதன் மூலம் கார்க்கை வெளியே இழுக்கவும். 264 00:17:49,862 --> 00:17:51,321 இரண்டாவது நிலைக்கும் அதையே செய்யவும். 265 00:17:51,321 --> 00:17:54,992 பாப் சத்தத்தைத் தவிர்க்க, மிகவும் மெதுவாக உன் கையால் திறக்கவும், 266 00:17:54,992 --> 00:17:56,159 அந்த சத்தம் அவமரியாதையானது. 267 00:17:59,705 --> 00:18:02,332 மன்னிக்கவும். எனக்கு பாப் சத்தம் பிடிக்கும். 268 00:18:02,332 --> 00:18:04,501 அது, “பார்ட்டிக்கான நேரம்“ என்று கூறும். 269 00:18:05,919 --> 00:18:08,046 எனில் பார்ட்டி இல்லையா? 270 00:18:10,883 --> 00:18:13,927 பிறகு அதில் கார்க்கின் மணம் இல்லையா என்று செக் செய்ய வேண்டும், 271 00:18:14,595 --> 00:18:16,138 மீண்டும் பாட்டில் கழுத்தைத் துடைக்க வேண்டும். 272 00:18:19,099 --> 00:18:22,186 பிறகு, கிளையன்டின் வலதுபக்கம் சென்று பரிமாற வேண்டும். 273 00:18:26,356 --> 00:18:30,194 ஒயின் துளியானது லேபிளில் சிந்தாமல் இருக்க பாட்டில் கழுத்தை மீண்டும் துடைக்க வேண்டும். 274 00:18:32,070 --> 00:18:35,073 பிறகு மற்றவர்களுக்குப் பரிமாற, கிளையன்டின் அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டும். 275 00:18:35,073 --> 00:18:36,158 நன்றி. 276 00:18:38,911 --> 00:18:39,912 உன் முறை. 277 00:18:54,051 --> 00:18:55,260 பிளா, பிளா. 278 00:19:32,089 --> 00:19:34,508 என் எட்டு வயதில் இதை எப்படிச் செய்வதென... 279 00:19:35,676 --> 00:19:37,344 என் அப்பா கற்றுக்கொடுத்தார். 280 00:19:38,804 --> 00:19:40,931 இதை முன்பே உங்களிடம் சொல்லியிருக்க வேண்டும் போல. 281 00:19:42,099 --> 00:19:43,141 மன்னிக்கவும். 282 00:19:45,310 --> 00:19:47,020 ஆம், நீ முன்பே கூறியிருக்கலாம். 283 00:19:52,776 --> 00:19:53,819 அவர்தான். 284 00:20:38,488 --> 00:20:40,282 - நன்றி, மியாபி. - பரவாயில்லை. 285 00:20:40,282 --> 00:20:42,910 நீங்கள்தான் சிறந்தவர். உங்களை நேசிக்கிறேன். மிக்க நன்றி! 286 00:20:42,910 --> 00:20:44,578 பரவாயில்லை. 287 00:20:45,370 --> 00:20:46,622 அது கிடைத்ததா? 288 00:20:49,166 --> 00:20:51,376 - மாட்ஸுபாரா வந்துவிட்டாரா? - ஆம். 289 00:20:55,172 --> 00:20:56,298 நன்றி! 290 00:21:11,939 --> 00:21:13,023 குட் ஈவ்னிங். 291 00:21:13,023 --> 00:21:15,734 - குட் ஈவ்னிங். - குட் ஈவ்னிங். 292 00:21:18,028 --> 00:21:21,448 லின்யாஜ், ஜிகான் டொமெய்ன், 1990. 293 00:22:06,577 --> 00:22:08,328 திரு. மாட்ஸுபாரா! 294 00:23:11,934 --> 00:23:13,227 உங்கள் டின்னரை உண்டு மகிழுங்கள். 295 00:23:13,227 --> 00:23:15,521 - நன்றி. - நன்றி. 296 00:23:29,868 --> 00:23:31,036 என்ன? 297 00:23:32,329 --> 00:23:36,667 உறுதியாகத் தெரியவில்லை. நான் அதைச் சுவைக்க வேண்டும். 298 00:26:10,320 --> 00:26:12,072 இது அதில்லை. 299 00:26:16,535 --> 00:26:17,619 இல்லை. 300 00:26:26,879 --> 00:26:29,756 - நீ இன்றிரவு அற்புதமாகச் செய்தாய். - நன்றி. 301 00:26:35,554 --> 00:26:38,056 என் கடைசிப் பெயர் ஜாப்பனீஸ் தெரியுமா? 302 00:26:39,808 --> 00:26:41,268 ஷிஸுகு. 303 00:26:42,978 --> 00:26:43,979 துளியா? 304 00:26:44,813 --> 00:26:45,856 ஆம். 305 00:26:45,856 --> 00:26:49,484 என் அப்பா, தொலைநோக்குப் பார்வையுடையவர். என்னைப் பாருங்கள். 306 00:26:49,484 --> 00:26:50,569 ஹேய். 307 00:26:51,403 --> 00:26:52,863 உன்னை அப்படி நினைத்துக்கொள்ளாதே. 308 00:26:58,243 --> 00:26:59,661 மன்னிக்கவும், நான் இதைப் பேசியாக வேண்டும். 309 00:27:01,955 --> 00:27:03,373 - ஹலோ? - ஹலோ. 310 00:27:05,250 --> 00:27:07,211 நீ நன்றாக இருக்கிறாயா என்று பார்க்க அழைத்தேன். 311 00:27:07,211 --> 00:27:08,504 பயணம் எப்படி இருந்தது? 312 00:27:09,004 --> 00:27:10,214 பதட்டமாக இருக்கிறாயா? 313 00:27:10,214 --> 00:27:13,634 நாம் சொதப்பிவிட்டோம். அது ஜிகான் ஒயின் இல்லை. 314 00:27:14,801 --> 00:27:18,263 இல்லை. அடச்சை! 315 00:27:18,263 --> 00:27:19,348 ஆம். 316 00:27:20,057 --> 00:27:23,060 - இது இன்னும் முடியவில்லை. - எனக்கு இன்னும் 48 மணிநேரம் உள்ளது. 317 00:27:23,060 --> 00:27:25,103 இது முடியவில்லை எனில், வேறு எதுவும் வழியிருப்பதாகத் தெரியவில்லை. 318 00:27:25,103 --> 00:27:26,939 லூகா என்ன செய்கிறார்? அவரால் உதவ முடியுமா? 319 00:27:28,106 --> 00:27:29,858 இல்லை, அவர் போதுமானளவு செய்துவிட்டார். 320 00:27:30,734 --> 00:27:32,444 நான் உங்கள் நேரத்தை வீணடித்துவிட்டேன். 321 00:27:32,444 --> 00:27:35,364 இல்லை. கமில், நம்பிக்கையை விட்டுவிடாதே. 322 00:27:36,198 --> 00:27:37,199 சரியா? 323 00:27:42,037 --> 00:27:43,288 நான் உன்னை மிஸ் செய்கிறேன். 324 00:27:54,842 --> 00:27:55,968 அன்பே? 325 00:27:56,468 --> 00:27:58,804 - நான் ஜாகிங் செல்கிறேன். - சரி. 326 00:27:59,471 --> 00:28:00,472 உன்னை நேசிக்கிறேன். 327 00:28:12,860 --> 00:28:14,486 அது எங்கே? 328 00:28:14,486 --> 00:28:16,989 இஸ்ஸேயின் அறிவிப்பு எங்கே? 329 00:28:16,989 --> 00:28:18,699 அவன் விலகுவதாகக் கூறினான். 330 00:28:19,491 --> 00:28:20,701 நிச்சயமாகத் தெரியுமா? 331 00:28:21,451 --> 00:28:22,953 ஆம். 332 00:28:25,581 --> 00:28:26,707 நீ ஏன் பயப்படுகிறாய்? 333 00:28:28,417 --> 00:28:30,252 உன் மகனைப் பார்த்துப் பயப்படுகிறாயா? 334 00:28:32,379 --> 00:28:37,092 இதற்கு மேலும் நான் அழுத்தம் கொடுத்தால், என்னுடன் பேச மாட்டான். 335 00:28:38,760 --> 00:28:42,431 அவனிடம் என்ன செய்வதென எனக்குத் தெரியவில்லை. 336 00:28:43,432 --> 00:28:46,268 நீ உன் மகனிடம் மிகவும் கடினமாக நடந்துகொள்கிறாய் என நினைக்கிறேன். 337 00:28:47,644 --> 00:28:50,105 ஒருமுறை அவனிடம் இனிமையாக நடந்துகொள். 338 00:29:03,577 --> 00:29:05,579 நீங்கள் ஓய்வு எடுக்க விரும்புகிறீர்களா? 339 00:29:15,589 --> 00:29:16,840 என்ன விஷயம்? 340 00:29:17,799 --> 00:29:18,967 எனக்கு வேலை போய்விட்டதா? 341 00:29:18,967 --> 00:29:20,969 இல்லை. 342 00:29:22,679 --> 00:29:25,265 நீ வியாழன் இரவு பற்றி மறக்கவில்லைதானே? 343 00:29:26,016 --> 00:29:27,434 கண்டிப்பாக இல்லை. 344 00:29:27,434 --> 00:29:28,852 கவலைப்படாதீர்கள். 345 00:29:32,981 --> 00:29:34,399 ஹிரோகாஸு. 346 00:29:34,399 --> 00:29:36,151 உங்களிடம் ஒரு உதவி வேண்டும். 347 00:29:37,486 --> 00:29:38,654 சொல்லுங்கள். 348 00:29:39,863 --> 00:29:41,281 இஸ்ஸேய் என்ன நினைக்கிறான் என்று தெரிந்துகொள்ள 349 00:29:42,366 --> 00:29:45,244 நீங்கள் அவனிடம் பேச வேண்டும். 350 00:29:45,827 --> 00:29:48,622 அவன் இன்னும் எந்த முடிவும் சொல்லவில்லையா? 351 00:29:49,665 --> 00:29:51,708 அவன் குழப்பத்தில் இருக்கிறான். 352 00:29:51,708 --> 00:29:54,586 அவனைத் தெளிவாக்க நான் உதவ வேண்டும் என்று விரும்புகிறாயா? 353 00:29:54,586 --> 00:29:56,129 ஆம். 354 00:29:56,129 --> 00:29:57,840 நான் ஏன்? 355 00:29:58,674 --> 00:30:00,884 நீங்கள் சொன்னால் அவன் கேட்பான். 356 00:30:01,885 --> 00:30:06,348 அவன் என் கருத்தை விட உங்கள் கருத்தை மதிப்பான். 357 00:30:06,348 --> 00:30:07,641 அதனால்தான். 358 00:30:08,851 --> 00:30:11,854 அவன் தன் மனதை மாற்றியிருந்தால் என்ன செய்வது? 359 00:30:11,854 --> 00:30:13,814 எனில் நீங்கள் அதை மீண்டும் மாற்ற வேண்டும். 360 00:30:13,814 --> 00:30:15,607 ஆனால் நான் அவனிடம் என்ன சொல்வது? 361 00:30:15,607 --> 00:30:16,859 கண்டிப்பாக... 362 00:30:17,943 --> 00:30:24,283 மகன் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும், குடும்பத்தின் பாரம்பரியத்தை மதித்து, பின்பற்ற வேண்டும். 363 00:30:25,117 --> 00:30:27,286 அவன் இங்கே இருக்க வேண்டியவன், வேறெங்கும் இல்லை. 364 00:30:29,329 --> 00:30:32,791 இதை நான் ஏற்கவில்லை என்றால்? 365 00:30:33,625 --> 00:30:35,210 என்ன சொல்கிறீர்கள்? 366 00:30:35,210 --> 00:30:41,341 ”ஒயின் தான் அவன் வாழ்க்கையாக இருக்கலாம்” என்றேன். 367 00:30:41,341 --> 00:30:43,218 என்ன பேசுகிறீர்கள்? 368 00:30:43,719 --> 00:30:48,473 அவனை அலெக்ஸாண்ட்ரே லெஜரிடம் ஒப்படைக்க விரும்புகிறீர்களா? 369 00:30:49,141 --> 00:30:50,934 நான் என் கருத்தைக் கூறினேன், ஏனெனில்... 370 00:30:50,934 --> 00:30:52,477 எனக்கு உங்கள் கருத்து தேவையில்லை. 371 00:30:53,187 --> 00:30:55,105 துரதிர்ஷ்டவசமாக, அதற்கு நேரமில்லை. 372 00:30:55,898 --> 00:31:00,402 இஸ்ஸேய் சரியான முடிவை எடுக்க வேண்டும். 373 00:31:01,111 --> 00:31:03,071 புரிகிறதா? 374 00:31:22,424 --> 00:31:24,009 - இல்லை! - சர்ப்ரைஸ்! 375 00:31:25,928 --> 00:31:27,262 இங்கே என்ன செய்கிறாய்? 376 00:31:27,262 --> 00:31:29,556 என்னிடம் திடீரென ஃபோனை வைத்தால் என்னால் தாங்க முடியாது. 377 00:31:32,559 --> 00:31:34,186 - ஹலோ. - மிஸ். லெஜர். 378 00:31:34,186 --> 00:31:35,979 நான் லூகாவைப் பார்க்க வேண்டும். 379 00:31:35,979 --> 00:31:37,314 அவர் செல்லரில் இருக்கிறார். 380 00:31:37,940 --> 00:31:39,274 வா! 381 00:31:39,816 --> 00:31:41,360 உனக்கு ஜாப்பனீஸ் தெரியுமா? 382 00:31:41,360 --> 00:31:42,444 ஆம்! 383 00:31:48,575 --> 00:31:49,910 கமில். 384 00:31:52,246 --> 00:31:53,580 நாங்கள் உன்னை மிஸ் செய்தோம். 385 00:31:54,456 --> 00:31:56,166 - இது யார்? - இதுதான் தாமஸ். 386 00:31:56,792 --> 00:31:58,585 - தாமஸ் சஸாங்ரேவா? - ஆம். 387 00:31:58,585 --> 00:31:59,753 வரவேற்கிறேன். 388 00:31:59,753 --> 00:32:03,048 கமிலுடனான உன் வேலைக்கு வாழ்த்துகள். அற்புதம். 389 00:32:03,048 --> 00:32:04,299 நன்றி. 390 00:32:04,299 --> 00:32:06,093 ஒன்றாக நீங்கள் இருவரும் அழகாக இருக்கிறீர்கள். 391 00:32:06,093 --> 00:32:08,512 நான் ஒரு முடிவு எடுத்துள்ளேன். 392 00:32:09,429 --> 00:32:13,559 என் செல்லாரை நீ பயன்படுத்திக்கொள்ளலாம். லோரென்ஸோவையும் மியாபியையும்தான். 393 00:32:13,559 --> 00:32:17,062 - லூகா, நீங்கள் இதை... - ஓ, கவலைப்படாதே. என்னைப் பெருமைப்படுத்து. 394 00:32:19,982 --> 00:32:21,608 - ஹாய். - ஹலோ. 395 00:32:21,608 --> 00:32:22,985 உன் காதலனா? 396 00:32:23,527 --> 00:32:25,028 ஓ, இல்லை. 397 00:32:25,863 --> 00:32:27,030 நண்பர்கள்தான். 398 00:32:30,242 --> 00:32:32,160 உங்களிடம் என்ன உள்ளது? 399 00:32:39,835 --> 00:32:43,797 - நன்றாக இருக்கிறீர்களா? - நன்றாக இருக்கிறேன். ஓய்வெடுப்போம். 400 00:32:54,850 --> 00:32:56,059 அப்பா. 401 00:33:00,981 --> 00:33:01,982 அப்பா, 402 00:33:03,525 --> 00:33:06,320 நான் என் வழியைக் கண்டுபிடித்துவிட்டதாக நினைக்கிறேன். 403 00:33:07,446 --> 00:33:08,780 ஒயின் தான் என் வாழ்க்கை. 404 00:33:10,115 --> 00:33:13,869 நான் இப்போது பின்வாங்கினால், என் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியின்றி இருப்பேன். 405 00:33:16,079 --> 00:33:17,456 உங்கள் அனைவரையும் போல. 406 00:33:26,298 --> 00:33:27,299 இஸ்ஸேய், 407 00:33:28,967 --> 00:33:33,805 நீ போட்டியிலிருந்து விலக வேண்டும் என நினைக்கிறேன். 408 00:33:35,224 --> 00:33:37,184 மகன் என்பவன் தன் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும். 409 00:33:38,435 --> 00:33:41,813 அதுதான் வாழ்க்கையின் நியதி. 410 00:33:43,774 --> 00:33:46,818 - அம்மாதானே உங்களை அனுப்பியது? - இல்லை. 411 00:33:46,818 --> 00:33:48,695 உங்களுக்கு பொய் சொல்லத் தெரியாது. 412 00:33:50,030 --> 00:33:52,574 நீங்கள்தான் என்னை எப்போதும் புரிந்துகொள்வராக இருப்பீர்கள். 413 00:33:53,325 --> 00:33:55,202 அப்படி நம்பியது என் முட்டாள்தனம். 414 00:33:55,202 --> 00:33:56,870 ஏன் அப்படிச் சொல்கிறாய்? 415 00:33:59,331 --> 00:34:02,167 ”அது வாழ்க்கையின் நியதியா”? அது அர்த்தமற்றது! 416 00:34:03,168 --> 00:34:04,837 உங்கள் தன்மானம் எங்கே போனது? 417 00:34:06,630 --> 00:34:09,507 தன்னையே நேசிக்காத ஒருவரை எப்படி மதிக்க முடியும்? 418 00:34:10,592 --> 00:34:12,261 மன்னிக்கவும், 419 00:34:12,261 --> 00:34:15,973 ஆனால் அம்மா உங்கள் நடத்தும் விதத்தை எவ்வளவு நாட்கள் பொறுத்துக்கொள்ளப் போகிறீர்கள்? 420 00:34:17,850 --> 00:34:19,560 நீங்கள் ஒரு கோழை. 421 00:34:35,492 --> 00:34:38,161 இது இல்லை. மன்னிக்கவும். 422 00:34:38,704 --> 00:34:39,871 சரி, என்ன இல்லை? 423 00:34:39,871 --> 00:34:43,917 அதே விஷயம்தான். செலரி வேர் இல்லை. 424 00:34:44,751 --> 00:34:47,754 நான் சுவைத்த ஒயினில் அது இருந்தது. உறுதியாகத் தெரியும். 425 00:34:47,754 --> 00:34:50,215 கிட்டத்தட்ட. 426 00:34:50,841 --> 00:34:54,678 இல்லையெனில், அது செலரி வேராக இல்லாமல் இருக்கலாம். அதுபோன்ற மணமாக இருக்கலாமா? 427 00:34:55,179 --> 00:34:58,515 எனக்குத் தெரியவில்லை. மன்னிக்கவும். 428 00:34:59,600 --> 00:35:01,602 நமக்கு என்ன தேவை தெரியுமா? 429 00:35:01,602 --> 00:35:02,811 ஓய்வு. 430 00:35:03,478 --> 00:35:05,731 நம் எண்ண ஓட்டங்களைத் தெளிவாக்க. 431 00:35:05,731 --> 00:35:09,526 நம் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்ய. புரிகிறதா? 432 00:35:10,110 --> 00:35:11,320 அனைத்தும்தான். 433 00:35:12,112 --> 00:35:14,364 ஏனெனில் சில நேரம், 434 00:35:14,364 --> 00:35:20,329 நாம் தேடுவதை நிறுத்தும்போதுதான் அதைக் கண்டறிய முடியும். 435 00:35:21,747 --> 00:35:23,498 வாருங்கள். என் ட்ரீட். 436 00:35:41,099 --> 00:35:43,477 விஸ்கி! 437 00:35:43,477 --> 00:35:46,438 டாம். கமில். மியாபி. 438 00:35:54,446 --> 00:35:55,781 கடவுளே. 439 00:35:56,865 --> 00:35:59,117 - அருமை. - மிகவும் அருமை. 440 00:36:10,003 --> 00:36:11,463 எனக்கு அந்தப் பாடல் தெரியும். 441 00:36:12,005 --> 00:36:13,382 அவன் எங்கே போகிறான்? 442 00:37:19,031 --> 00:37:20,741 நாம் அதைப் பற்றிப் பேசப் போகிறோமா? 443 00:37:20,741 --> 00:37:21,950 எதைப் பற்றி? 444 00:37:22,868 --> 00:37:24,786 இப்போது நீ இங்கே இருப்பது பற்றி. 445 00:37:25,704 --> 00:37:28,457 உனக்கு என் உதவி தேவைப்பட்டது. நீ என் தோழி என்பதால் நான் வந்தேன். 446 00:37:28,457 --> 00:37:30,542 நட்புக்காக 10,000 கிலோமீட்டர் பயணித்து வந்துள்ளாயா? 447 00:37:30,542 --> 00:37:31,752 ஆம். 448 00:37:32,669 --> 00:37:34,880 என் அப்பா உன் அப்பாவுக்கு சத்தியம் செய்து கொடுத்ததாலும். 449 00:37:39,051 --> 00:37:42,095 நான் ஃபோனில் கடைசியாகக் கூறியது நினைவுள்ளதா? 450 00:37:46,099 --> 00:37:47,643 கமில், நான் ஒருவருடன் உறவில் இருக்கிறேன். 451 00:37:48,560 --> 00:37:49,978 ஆம், ஆனால் நீ இங்கே இருக்கிறாய். 452 00:38:01,114 --> 00:38:02,616 இதோ வந்துவிடுகிறேன். 453 00:38:20,843 --> 00:38:23,303 - அனைவரும் பாடுங்கள்! - ஆம், நன்றாக இருக்கிறேன். 454 00:38:23,303 --> 00:38:26,932 பயணத்தால் கொஞ்சம் களைப்பாக உள்ளது, ஆனால் நன்றாக உள்ளேன். 455 00:38:28,350 --> 00:38:29,351 ஆம். 456 00:38:30,185 --> 00:38:31,186 நீ எப்படி இருக்கிறாய்? 457 00:38:33,105 --> 00:38:34,106 அப்படியா? 458 00:38:36,400 --> 00:38:41,196 நான் திரும்பி வந்ததும் பார்க்கிறேன், ஆனால் இப்போது எனக்கு நேரமில்லை. 459 00:38:42,406 --> 00:38:43,657 ஆம். 460 00:38:46,743 --> 00:38:47,744 ஆம். 461 00:38:50,956 --> 00:38:52,040 உங்களை நேசிக்கிறேன், பெண்களே. 462 00:38:52,040 --> 00:38:54,168 - கொஞ்சம் தண்ணீர் கொடு. - ஏன் இவ்வளவு கனமாக இருக்கிறாய்? 463 00:38:54,168 --> 00:38:56,295 - லோரென்ஸோ, தண்ணீர் குடி. - உங்களை மிகவும் நேசிக்கிறேன். 464 00:38:56,795 --> 00:38:58,255 சரி. இங்கே உட்காரு. 465 00:38:59,423 --> 00:39:02,342 நான் அந்த துருப்பிடித்த பழைய சைக்கிளைப் பார்த்தபோது எனக்குத் தோன்றியது. 466 00:39:02,843 --> 00:39:04,595 நான் இதைப் பற்றி முன்பு யோசித்திருக்க வேண்டும். 467 00:39:08,932 --> 00:39:10,601 உனக்கு செலரி வேர் வாசனை வருகிறதா? 468 00:39:13,228 --> 00:39:15,898 - ஆம். - அது சோதனையில் வந்த வாசம் போல உள்ளதா? 469 00:39:16,690 --> 00:39:18,317 - இல்லை. - இல்லை. 470 00:39:18,317 --> 00:39:20,944 ஏனெனில் நீ முகர்ந்தது செலரி வேர் இல்லை. 471 00:39:26,783 --> 00:39:27,993 இது நன்றாக உள்ளதல்லவா? 472 00:39:28,660 --> 00:39:29,745 நெருக்கத்தில் உள்ளது. 473 00:39:29,745 --> 00:39:31,997 என்ன வித்தியாசம் எனத் தெரிகிறதா? 474 00:39:32,831 --> 00:39:36,418 ஆக்ஸிஜனேற்றம். ஏனெனில் அந்த ஒயின் பழமையானது. 475 00:39:36,418 --> 00:39:39,713 புதிய ஒயினில் நமக்கு செலரி வேர் மணம் கிடைக்கும். 476 00:39:39,713 --> 00:39:45,761 ஆனால், ஆண்டுகள் கடக்கும்போது, அது... 477 00:39:50,140 --> 00:39:51,517 ட்ரஃபுளாக மாறும். 478 00:39:51,517 --> 00:39:54,436 ட்ரஃபுள். அடக் கடவுளே. அதேதான். 479 00:39:54,436 --> 00:39:56,396 அது அனைத்தையும் மாற்றுகிறது. 480 00:39:56,396 --> 00:39:58,315 ட்ரஃபுள் என்றால் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. 481 00:39:58,315 --> 00:40:02,194 ஒன்று, அந்த பிளெண்டில் கேபர்னே சாவியான் அல்லது கேபர்னே ஃபிரான்க் இருக்க வேண்டும். 482 00:40:02,194 --> 00:40:07,741 அது அற்புதமான வின்டேஜ் போர்டோ அல்லது கேபர்னேவால் செய்த உலக ஒயினாக இருக்க வேண்டும். 483 00:40:07,741 --> 00:40:11,995 இரண்டு, ட்ரஃபுள் என்பது ஒயினின் பழமையாக்கும் செய்முறையின் அடையாளம் ஆகும். 484 00:40:11,995 --> 00:40:14,289 அது 2006க்கு முந்தையதாக இருக்க வேண்டும். 485 00:40:14,289 --> 00:40:18,168 அது மிகவும் சிறப்பான ஒயின்களுக்குத்தான் சாத்தியம். 486 00:40:18,877 --> 00:40:20,337 சரி, போகலாம். 487 00:40:21,797 --> 00:40:22,798 சரி. 488 00:40:30,013 --> 00:40:31,014 வேகா சிசிலியா யுனிகோ 489 00:40:33,475 --> 00:40:35,477 இவைதான் அதில் பொருந்தும் ஒயின்கள். 490 00:40:36,270 --> 00:40:38,814 துரதிர்ஷ்டவசமாக, நீ அவற்றைச் சுவைத்துப் பார்க்க முடியாது. 491 00:40:38,814 --> 00:40:39,982 அவை நம்மிடம் இங்கே இல்லை, 492 00:40:39,982 --> 00:40:43,360 அவற்றைக் கண்டுபிடிக்க ஆகும் நேரத்தை வைத்துப் பார்க்கும்போது 493 00:40:43,360 --> 00:40:44,528 அது மிகவும் தாமதமாகிவிடும். 494 00:40:44,528 --> 00:40:48,824 வேகா சிசிலியா மற்றும் செவால் பிளான்க் இரண்டுமே 495 00:40:48,824 --> 00:40:52,244 ஒரே திராட்சை வகையில் செய்யப்பட்டவை. 496 00:40:52,244 --> 00:40:55,330 அவற்றை வேறுபடுத்திக் கூறுவது மிகவும் கடினமாக இருக்கும். 497 00:40:55,330 --> 00:40:58,083 அவற்றில் பொதுவாக இருப்பதை நாம் தேடக் கூடாது. 498 00:40:59,543 --> 00:41:02,421 நாம் அவற்றின் வித்தியாசத்தைத் தேட வேண்டும். 499 00:41:04,548 --> 00:41:09,428 செவால் பிளான்க்கை, புதிய பீப்பாய்களில் பழமையாக்குவார்கள். 500 00:41:09,428 --> 00:41:14,683 வேகா சிசிலியா யூனிகா குறைந்தது ஆறு ஆண்டுகளுக்கு பீப்பாயில் இருக்கும், 501 00:41:14,683 --> 00:41:19,188 உலகத்திலேயே ஓக் பீப்பாய்களில் இருக்கும் 502 00:41:19,938 --> 00:41:23,192 சிவப்பு ஒயின்களுக்கான மிக நீண்ட பழமையாக்கும் செயல்களில் ஒன்று. 503 00:41:23,775 --> 00:41:26,320 சுவைக்கும்போது இதில் தவறு செய்யக் கூடாது, கமில். 504 00:41:26,320 --> 00:41:29,865 செவால் பிளான்க்: புதிய பீப்பாய்கள். 505 00:41:29,865 --> 00:41:32,910 வேகா சிசிலீயா: பழைய பேரல்கள். 506 00:41:33,827 --> 00:41:37,956 ஆனால் காலத்தைக் கண்டறிவதுதான் கடினமான விஷயம், 507 00:41:38,582 --> 00:41:40,459 அதில் எங்களால் உனக்கு உதவ முடியாது. 508 00:41:42,002 --> 00:41:43,337 நீயாகத்தான் கண்டறிய வேண்டும். 509 00:41:44,087 --> 00:41:45,172 அற்புதம். 510 00:41:56,350 --> 00:41:58,060 நான் இஸ்ஸேய் டொமினே. 511 00:41:58,060 --> 00:41:59,436 என்னை இங்கே அழைத்துள்ளனர். 512 00:42:30,676 --> 00:42:36,765 நேரமாகிவிட்டது, உங்களுக்காகக் காத்திருக்கின்றனர். 513 00:42:45,482 --> 00:42:46,692 குட் மார்னிங். 514 00:42:56,159 --> 00:42:59,413 உறுதியளித்தது போல, சோதனைக்கான பதிலைக் கொடுப்பதற்கு முன், நீங்கள் விவரம் 515 00:42:59,413 --> 00:43:02,624 தெரியாமல் குடிப்பதற்கான ஒயின் இதோ. 516 00:45:24,850 --> 00:45:28,353 ஷடூ செவால் பிளான்க் 517 00:47:20,007 --> 00:47:22,885 நான் திரு. டொமினேவின் பதிலில் இருந்து தொடங்குகிறேன், அது... 518 00:47:27,681 --> 00:47:30,642 ஷடூ செவால் பிளான்க், 1999. 519 00:47:36,315 --> 00:47:37,858 இப்போது மிஸ் லெஜரின் பதில். 520 00:47:40,110 --> 00:47:42,988 ஷடூ செவால் பிளான்க், 2000. 521 00:47:46,658 --> 00:47:48,702 நீங்கள் சுவைத்த ஒயினானது... 522 00:47:54,291 --> 00:47:55,542 ஷடூ செவால் பிளான்க்... 523 00:47:57,544 --> 00:47:58,712 1999. 524 00:48:02,049 --> 00:48:04,801 திரு. டொமினேதான் இந்தச் சோதனையில் வென்றுள்ளார். 525 00:48:05,719 --> 00:48:08,931 அடுத்த சோதனை பற்றிய விவரங்களை என் அலுவலகத்தில் 526 00:48:08,931 --> 00:48:10,849 நாளை மாலை 4 மணிக்கு வழங்குகிறேன். 527 00:48:11,558 --> 00:48:12,559 அதற்குள்ளாகவா? 528 00:49:21,461 --> 00:49:24,173 முதல் சோதனை நடந்து முடிந்தது. 529 00:49:24,715 --> 00:49:27,301 அலெக்ஸாண்ட்ரே லெஜரரின் சொத்துக்கான போட்டியாளர்களான இருவரும் 530 00:49:27,301 --> 00:49:30,387 சரியான ஒயினைக் கண்டுபிடித்தனர். 531 00:49:30,387 --> 00:49:34,516 ஆனால் சரியான காலத்தைக் கண்டுபிடித்து 532 00:49:35,475 --> 00:49:38,145 திரு. டொமினே சோதனையில் வென்றுவிட்டார். 533 00:49:38,145 --> 00:49:39,229 மன்னிக்கவும். 534 00:49:44,151 --> 00:49:46,403 - ஹலோ. - ஹொனோகா. 535 00:49:47,571 --> 00:49:48,864 நீ மறக்கவில்லைதானே? 536 00:49:48,864 --> 00:49:50,449 நீ எப்போது இங்கே வருவாய்? 537 00:49:50,449 --> 00:49:52,159 எப்படி நீங்கள் எனக்கு இதைச் செய்யலாம்? 538 00:49:52,159 --> 00:49:54,244 நீங்கள் ஏன் அவனைத் தடுக்கவில்லை? 539 00:49:54,244 --> 00:49:56,371 அவன் சோதனையில் வென்றுவிட்டான். கேட்கிறதா? 540 00:49:56,371 --> 00:49:57,581 அது உங்கள் தவறுதான். 541 00:49:57,581 --> 00:49:59,166 இப்போது அது மீடியா முழுவதும் வந்துவிட்டது. 542 00:49:59,166 --> 00:50:00,834 எனக்குத் தெரியாது. 543 00:50:04,171 --> 00:50:06,423 இருந்தாலும் நான் அவனிடம் கூறினேன். 544 00:50:07,549 --> 00:50:10,594 நீங்கள் எதற்கும் லாயக்கில்லாதவர். 545 00:50:10,594 --> 00:50:12,554 எப்போதும் என் வழியில் குறுக்கிடுபவர். 546 00:50:13,263 --> 00:50:14,973 உங்களைச் சந்தித்திருக்கவே கூடாது என நினைக்கிறேன். 547 00:50:39,581 --> 00:50:41,875 உங்களிடம் பெரிய கவர் உள்ளதா? 548 00:50:41,875 --> 00:50:43,627 உள்ளது. ஒரு நிமிடம். 549 00:51:22,708 --> 00:51:24,793 - இந்தாருங்கள். - நன்றி. 550 00:51:49,401 --> 00:51:51,653 இதை டெலிவரி செய்ய முடியுமா? 551 00:51:56,533 --> 00:51:57,534 சரி, சார். 552 00:52:30,901 --> 00:52:32,319 டடாஷி ஆகி/ஷூ ஓகிமோட்டோ எழுதிய காமி நோ ஷிஸுகு மாங்காவை அடிப்படையாகக் கொண்டது. 553 00:52:49,837 --> 00:52:51,839 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்