1 00:00:14,056 --> 00:00:15,474 நம்மிடம் பொய் சொல்லி இருக்கிறார்கள். 2 00:00:18,435 --> 00:00:20,562 - எல்லோரும் இதைப் பார்க்க வேண்டும். - எல்லோரும் என்றால் யாரெல்லாம்? 3 00:00:20,562 --> 00:00:21,480 எல்லோருமே. 4 00:00:21,480 --> 00:00:24,066 இதை... எல்லா கம்ப்யூட்டர்களிலும் காட்சிப்படுத்த முடியுமா? 5 00:00:24,066 --> 00:00:25,025 முடியாது. 6 00:00:25,025 --> 00:00:27,694 - என்ன? - இல்லை, அது முடியாத விஷயமில்லை. 7 00:00:27,694 --> 00:00:29,363 எல்லா கம்ப்யூட்டர் ஸ்க்ரீன்களையும் ஐ.டி. தான் கட்டுப்படுத்தும். 8 00:00:29,363 --> 00:00:30,531 நீ ஐ.டி-க்குள் நுழையப் போகிறாயா? 9 00:00:30,531 --> 00:00:32,908 ஒவ்வொரு 30 தளங்களுக்கும் ஒரு சிக்னல் பூஸ்டர் உண்டு. 10 00:00:32,908 --> 00:00:34,368 சரி, எது கீழே இருப்பது? 11 00:00:34,368 --> 00:00:36,119 மேல் தள மற்றும் நடு தளத்திற்கு நான் போக வேண்டும். 12 00:00:36,119 --> 00:00:37,788 ஒன்று 126ல் இருக்கிறது. 13 00:00:37,788 --> 00:00:39,373 - சிறப்பு, நாம் போகலாம். - இல்லை, இரு. 14 00:00:39,373 --> 00:00:41,542 ஒவ்வொரு தளத்திலும் செக்யூரிட்டி குழு இருக்கும். 15 00:00:41,542 --> 00:00:43,752 எனக்குத் தெரிந்த வரை, அவர்கள் உன்னைத் தேடுகிறார்கள். 16 00:00:43,752 --> 00:00:45,379 - எப்படியும்... - நான் நம்மை அழைத்துப் போகிறேன். 17 00:00:45,379 --> 00:00:46,505 கைக்கடிகாரத்தைக் கொடுத்து விட்டு கிளம்பு. 18 00:00:46,505 --> 00:00:48,298 - இல்லை, நீங்களும் எங்களோடு வரணும். வரணும். - மாட்டேன். 19 00:00:48,298 --> 00:00:49,508 கம்ப்யூட்டரை ஹாக் செய்வதற்கு 20 00:00:49,508 --> 00:00:51,343 ஏற்ற ஆளைக் கேட்டாய், நான் கொடுத்துவிட்டேன். 21 00:00:51,343 --> 00:00:52,469 அவனுக்கு எந்தளவுக்கு திறமை உண்டோ, 22 00:00:52,469 --> 00:00:54,888 பெர்னார்டுக்கு அதைவிட அதிகம் உண்டு. இந்த இடத்தை தெரிந்துக்கொள்வான். 23 00:00:54,888 --> 00:00:55,806 இங்கிருக்க விரும்புகிறீர்களா? 24 00:00:56,682 --> 00:00:58,433 - அது உண்மையா? - ஆமாம். 25 00:00:58,433 --> 00:01:00,352 அடச்சே. 26 00:01:00,352 --> 00:01:03,730 டானி... சிறப்பு. மிகச் சிறப்பு. சரி. அடச்சே. 27 00:01:03,730 --> 00:01:04,815 கிடைத்துவிட்டது. 28 00:01:05,983 --> 00:01:08,318 - டிரைவ் எங்கே இருக்கு? - 22வது தளத்தில் ஒரு வீட்டில். 29 00:01:08,318 --> 00:01:11,321 - யார் வீடு? - பேட்ரிக் கென்னடிக்கு ஒதுக்கப்பட்ட வீடு. 30 00:01:11,321 --> 00:01:13,699 எல்லா ரெய்டர்களும் 22வது தளத்திற்கு வாருங்கள். 31 00:01:13,699 --> 00:01:14,616 அவன் யார்? அவளது நண்பனா? 32 00:01:14,616 --> 00:01:16,159 - நீ எல்லாவற்றையும் சோதித்ததாக... - அவன் நண்பனில்லை. 33 00:01:16,159 --> 00:01:17,703 ஆனால் அவள் அவனது உயிரைக் காப்பாற்றினாள். 34 00:01:19,454 --> 00:01:20,873 எல்லா ரெய்டர்களும் 22வது தளத்திற்கு வாருங்கள். 35 00:01:23,500 --> 00:01:24,543 கதவை உடைத்து விடு. 36 00:01:37,556 --> 00:01:38,473 சிவப்பாக இருக்கும் போது திறக்காதீர் 37 00:01:38,473 --> 00:01:41,727 - அடச்சே. நாம் போக வேண்டும். - இல்லை! சிவப்பு லைட் எரிகிறது! 38 00:01:41,727 --> 00:01:43,145 - அவர்கள் வருகிறார்கள். - அடச்சே. 39 00:01:47,649 --> 00:01:48,650 போ! 40 00:01:52,112 --> 00:01:54,448 சரி. நல்லது. 41 00:01:55,574 --> 00:01:57,242 வா! ஹாட்சை மூடு. 42 00:02:06,168 --> 00:02:07,252 நாம் எப்படி... 43 00:02:15,511 --> 00:02:16,595 போகலாம். 44 00:02:18,472 --> 00:02:20,933 டி, நீ நகர வேண்டும். உன்னால் முடியும். 45 00:02:26,396 --> 00:02:28,524 தளத்தில் தேடினார்கள். அவள் அங்கு இல்லை. 46 00:02:28,524 --> 00:02:32,486 அவள் படிகளில் போய் இருக்கலாம். அவள் எங்கே? 47 00:02:33,153 --> 00:02:34,738 திரு. சிம்ஸ்? 48 00:02:34,738 --> 00:02:37,282 உங்கள் ஏஜென்ட் ஒருவரிடமிருந்து செய்தி வந்திருக்கிறது. 49 00:02:37,282 --> 00:02:38,200 புது மெசேஜ் 50 00:02:38,200 --> 00:02:40,285 நிக்கல்ஸின் வீட்டை சோதிக்கும் போது, பில்லிங்ஸ் அங்கு வந்து, உள்ளே நுழைய 51 00:02:40,285 --> 00:02:41,537 அனுமதி கேட்டார். அது மறுக்கப்பட்டது. 52 00:02:48,877 --> 00:02:52,548 துணை அதிகாரியே. ஆமாம், இதெல்லாம் என்னுடைய தவறு தான். 53 00:02:53,882 --> 00:02:54,883 உன்னை வீட்டிற்கு அனுப்பிய போது, 54 00:02:54,883 --> 00:02:59,221 நீ அங்கேயே தான் இருக்க வேண்டும் என்பது உனக்கு தெளிவாக புரிந்திருக்கும் என்று நினைத்தேன். 55 00:03:00,848 --> 00:03:04,476 - நான் தெளிவாக சொல்லவில்லையா? - இல்லை. தெளிவாகச் சொன்னீர்கள். 56 00:03:06,603 --> 00:03:08,981 இருந்தாலும் நீ நிக்கல்ஸ் வீட்டிற்குப் போனாய். 57 00:03:10,148 --> 00:03:13,068 உடன்படிக்கை பற்றி அவளுக்கு சொல்லிக் கொடுத்ததால் அந்த ரெய்டர் என்னிடம் 58 00:03:13,068 --> 00:03:14,695 சொல்ல மாட்டாள் என்று நினைத்தாயா? 59 00:03:16,613 --> 00:03:17,614 இல்லை. 60 00:03:19,992 --> 00:03:21,869 நீ ஏன் நிக்கல்ஸின் வீட்டிற்குப் போனாய்? 61 00:03:22,452 --> 00:03:25,581 எதற்காக அவள் வெளியேற வேண்டும் என்று சொன்னாள் என்று தெரிந்தால், 62 00:03:26,957 --> 00:03:28,375 அவளைக் கண்டுபிடிக்கலாம் என்று நினைத்தேன். 63 00:03:29,001 --> 00:03:31,837 இதைப் பற்றி உனக்கு அங்கே ஏதாவது விளக்கம் தெரிந்ததா? 64 00:03:32,713 --> 00:03:33,714 இல்லை. 65 00:03:35,424 --> 00:03:38,886 அன்று என்னை நீ கைது செய்யுமாறு அவள் ஏன் சொன்னாள் என்பது பற்றி 66 00:03:38,886 --> 00:03:42,264 உனக்கு ஏதாவது தெரிந்ததா... 67 00:03:44,808 --> 00:03:46,602 அல்லது அதற்கு நீ ஏன் ஒப்புக்கொண்டாய் என்று? 68 00:03:50,147 --> 00:03:54,610 என் வீட்டிற்கு போய், என் மனைவியையும், மகனையும் கொல்வேன் என்று 69 00:03:54,610 --> 00:03:57,654 அவள் மிரட்டியதற்கு, அங்கே ஏதாவது விளக்கம் கிடைத்ததா? 70 00:04:05,996 --> 00:04:11,043 துணை அதிகாரியே, உன் கைகளை நான் கவனித்துவிட்டேன். 71 00:04:11,043 --> 00:04:13,045 வலது கையை இடது கையால் பிடித்திருக்கிறாய். 72 00:04:16,173 --> 00:04:17,007 அது ஏன்? 73 00:04:21,220 --> 00:04:23,013 சரி, டானி. அங்கே போக வேண்டும். நகரு. 74 00:04:23,013 --> 00:04:24,223 - சரி. - போ. 75 00:04:24,223 --> 00:04:25,307 போ. 76 00:04:26,892 --> 00:04:27,893 நீங்கள் நலமா? 77 00:04:27,893 --> 00:04:29,394 என்னை கிட்டத்தட்ட இடித்திருக்கும்! 78 00:04:29,394 --> 00:04:31,480 - சரி. அது எங்கே இருக்கு? - இந்தப் பக்கம். 79 00:04:31,480 --> 00:04:32,564 சரி. 80 00:04:35,526 --> 00:04:36,527 இங்கே. 81 00:04:41,406 --> 00:04:42,241 சரி. 82 00:04:48,580 --> 00:04:50,832 - சரி. அடச்சே. - நகரு, நான் திறக்கிறேன். 83 00:04:54,586 --> 00:04:55,712 சிக்னல் பூஸ்டர் தளம் 126 84 00:04:55,712 --> 00:04:56,880 டிரைவைக் கொடு. 85 00:04:57,673 --> 00:04:59,132 ஹே. அது கேமராவா? 86 00:04:59,716 --> 00:05:00,592 - ஆமாம். - ஆமாம். 87 00:05:00,592 --> 00:05:02,761 - இருக்கலாம். - உன் சுத்தியலைக் கொடு. 88 00:05:02,761 --> 00:05:05,848 வேண்டாம். கேமரா காட்சி வராத இடத்திற்கு, உடனேயே ரெய்டர்களை அனுப்புவார்கள். 89 00:05:05,848 --> 00:05:07,057 அதை நீ இணைத்தவுடனேயே அவர்களே அனுப்புவார்கள். 90 00:05:07,057 --> 00:05:09,017 கொஞ்சம் அவகாசம் கொடு. இதோ. 91 00:05:10,102 --> 00:05:11,478 கண்டறியப்பட்டது தளம் 126 92 00:05:11,478 --> 00:05:13,564 டிரைவ் 126 தளத்தில் கண்டறியப்பட்டுள்ளது. 93 00:05:13,564 --> 00:05:15,899 - எங்கே? - நம் ஹப்பில். 94 00:05:15,899 --> 00:05:17,025 போய் சிம்ஸை அழைத்து வா. 95 00:05:20,028 --> 00:05:20,863 அதோ. 96 00:05:26,869 --> 00:05:28,078 சிக்னல் பூஸ்டர் 97 00:05:28,871 --> 00:05:30,080 நம்மை பார்த்து விட்டார்கள். 98 00:05:30,080 --> 00:05:31,373 அப்படியென்றால், சரி. 99 00:05:33,959 --> 00:05:36,461 கேரின்ஸிற்கு ரேடியோவில் தகவல் சொன்னேன். ஐந்து நிமிடத்தில் போய் விடுவாள். 100 00:05:37,504 --> 00:05:38,797 - அடச்சே. - என்ன? 101 00:05:38,797 --> 00:05:40,090 ஸ்கிரீன்களை இணைக்கிறார்கள். 102 00:05:45,971 --> 00:05:46,972 சீக்கிரம். 103 00:05:52,853 --> 00:05:54,021 ஆம். 104 00:06:02,487 --> 00:06:03,906 எல்லோரும், கண்களை மூடுங்கள்! 105 00:06:03,906 --> 00:06:08,035 கண்களை மூடுங்கள்! கண்களை மூடுங்கள்! திரும்புங்கள். முகத்தை மூடுங்கள். 106 00:06:08,952 --> 00:06:10,871 - அவர் சொன்னது போல் செய்யுங்கள்! - நகரு. 107 00:06:10,871 --> 00:06:12,247 - சரி, சார். - நீயும் தான், ராபர்ட். 108 00:06:23,800 --> 00:06:24,718 ஷட்டவுன் தொடங்குகிறது 109 00:06:30,807 --> 00:06:32,893 என்ன? என்ன நடந்தது? ஷட்டவுன் ஆகிவிட்டதா? 110 00:06:34,436 --> 00:06:35,812 சிக்னல் கிடைக்கவில்லை 111 00:06:35,812 --> 00:06:38,857 - எல்லாவற்றையும் ஷட்டவுன் செய்துவிட்டார்கள். - என்ன? அடச்சே! 112 00:06:38,857 --> 00:06:41,276 - முடிந்துவிட்டது. நீ போ. இப்போது. - சரி. 113 00:06:41,276 --> 00:06:43,278 - அவனோடு போங்கள். - இல்லை. இல்லை... ஹே! 114 00:06:43,278 --> 00:06:45,906 - அந்த கைக்கடிகாரம்? - விளையாடுகிறீர்களா? 115 00:06:47,282 --> 00:06:48,116 அடச்சே. 116 00:06:52,788 --> 00:06:54,039 நீங்கள் இப்போது பார்த்ததை... 117 00:06:56,375 --> 00:06:57,960 மறந்துவிட வேண்டும். 118 00:07:11,849 --> 00:07:14,643 126வது தளத்திலிருந்து கேரின்ஸ் பேசுகிறேன். இருவரை கைது செய்திருக்கிறேன். 119 00:07:14,643 --> 00:07:15,602 நிக்கல்ஸ் எங்கே? 120 00:07:15,602 --> 00:07:19,022 தளத்தை பூட்டிவிட்டோம். அவளை கண்டுபிடிப்போம். 121 00:07:19,982 --> 00:07:24,820 - சரி, ஏற்கனவே இதைக் கேட்டிருக்கோம். - அவள் புத்திசாலி. தைரியமானவளும் கூட. 122 00:07:24,820 --> 00:07:27,322 126வது தளத்தில் அவள் இருக்க மாட்டாள். 123 00:07:27,322 --> 00:07:29,908 - அவள் எங்கே? - குப்பை குழாயில் இருக்கிறாள். 124 00:07:30,868 --> 00:07:32,286 அதன் மூலம் தான் அவள் சுற்றி வருகிறாள். 125 00:07:44,840 --> 00:07:46,717 - அடச்சே. - அவளைப் பார்த்துவிட்டேன். 126 00:07:46,717 --> 00:07:48,427 - வெளியே வந்துவிட்டாளா? - இல்லை, சார். 127 00:07:48,427 --> 00:07:50,012 மறுசுழற்சி பகுதிக்கு போ. கனமான எதையாவது எடு. 128 00:07:56,643 --> 00:07:59,188 நிக்கல்ஸ், அடுத்த ஹாட்சில் வெளியே வந்துவிடு! 129 00:07:59,188 --> 00:08:01,148 குழாயை விட்டு உன்னை வெளியேற்றும்படி எனக்கு உத்தரவு வந்திருக்கு. 130 00:08:31,512 --> 00:08:33,347 - அவளை பிடித்துவிட்டாயா? - தெரியவில்லை. 131 00:08:35,097 --> 00:08:36,099 தெரிந்துகொள். 132 00:09:03,961 --> 00:09:06,463 அவளைத் தூக்கு! ஓ, கடவுளே. அவளைத் தூக்கு... 133 00:10:25,918 --> 00:10:28,420 {\an8}ஹக் ஹோவே எழுதிய சைலோ என்ற புத்தகத்தைத் தழுவியது 134 00:10:45,521 --> 00:10:47,272 - என்னிடம் வந்திருக்கணும். - நீ என்ன செய்திருப்பாய்? 135 00:10:47,272 --> 00:10:49,608 - அவளை இங்கே கொண்டு வந்திருக்க மாட்டேன். - வேறு எங்கு அழைத்துப் போவது? 136 00:10:49,608 --> 00:10:50,567 தெரியவில்லை, ஆனால்... 137 00:10:53,070 --> 00:10:53,987 நீதித்துறையினர் வந்திருக்கிறார்கள். 138 00:10:53,987 --> 00:10:56,198 என்ன? பொறு, அவர்களுக்கு எப்படி தெரியும்? 139 00:10:56,198 --> 00:10:57,741 நான் தான் சொன்னேன். 140 00:10:57,741 --> 00:11:01,036 நாம் அவளை எங்கு ஒளித்து வைத்தாலும் அவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். 141 00:11:01,036 --> 00:11:02,788 இயந்திரவியல் துறையைப் பிரித்து மேய்ந்துவிடுவார்கள். 142 00:11:02,788 --> 00:11:06,208 அடி தளத்தில் உள்ள எல்லோருக்கும் அதற்கான தண்டனை கிடைக்கும். 143 00:11:06,834 --> 00:11:07,709 நீ ஒரு துரோகி. 144 00:11:07,709 --> 00:11:10,212 இல்லை. அவன் சரியாகத்தான் சொல்கிறான். 145 00:11:14,842 --> 00:11:15,676 எனக்கு ஒன்றுமில்லை. 146 00:11:17,386 --> 00:11:20,514 அவர்களை உள்ளே விடும் முன், நான் வாக்குடன் கொஞ்சம் பேச வேண்டும். 147 00:11:21,014 --> 00:11:22,015 முயற்சிக்கிறேன். 148 00:11:36,780 --> 00:11:37,823 எல்லாவற்றையும் பார்க்கும்போது, 149 00:11:37,823 --> 00:11:40,367 உன் 13 வயதில் உன் அப்பாவுடன் நடு தளத்திலேயே நீ தங்கி இருந்தால் 150 00:11:40,367 --> 00:11:41,785 நன்றாக இருந்திருக்கும் என தோன்றுகிறது. 151 00:11:41,785 --> 00:11:45,205 வாக், நான் சொல்வதைக் கேளுங்கள். சில விஷயங்களைச் சொல்ல வேண்டும், சரியா? 152 00:11:46,915 --> 00:11:47,958 தயவுசெய்து, ஒரு நிமிடம் பொறுங்கள். 153 00:11:49,251 --> 00:11:50,377 - அவள் எங்கும் போக மாட்டாள். - ஷெர்லி. 154 00:11:50,377 --> 00:11:52,462 வேண்டாம்... ஹே! 155 00:11:52,462 --> 00:11:54,006 வேண்டாம். 156 00:11:59,011 --> 00:12:00,512 போ. நீ, வெளியே போ. 157 00:12:00,512 --> 00:12:03,473 - இரு. அவங்க... போக மாட்டாங்க. - பேசாதே. வாயை மூடு. 158 00:12:03,473 --> 00:12:06,852 - 25 வருடங்களில் அவங்க போனதே இல்லை. - வாயை மூடு என்றேன். 159 00:12:06,852 --> 00:12:07,936 ராப். 160 00:12:09,104 --> 00:12:10,814 நீ, இப்போதே அங்கே போ. 161 00:12:12,900 --> 00:12:13,775 நாம் தனியாக இருந்தால், 162 00:12:13,775 --> 00:12:16,153 இது வேறு விதமாக நடந்திருக்கும். 163 00:12:16,153 --> 00:12:17,863 உன் குடும்பத்தை நான் கஷ்டப்படுத்தியிருக்க மாட்டேன். 164 00:12:17,863 --> 00:12:20,866 அந்த பயமுறுத்தும் பெண்மணி திரும்பி வருவாளா என்று என் மகன் கேட்டுக்கொண்டே இருக்கிறான். 165 00:12:20,866 --> 00:12:23,285 உன்னைப் பற்றி, எத்தனை குடும்பங்கள் அப்படி கேட்கின்றன எனத் தெரியுமா? 166 00:12:23,285 --> 00:12:26,163 - என் வேலையைப் பற்றி உனக்குத் தெரியுமா? - ராப். ராப்! 167 00:12:27,164 --> 00:12:28,790 உன் குழுவோடு வெளியே காத்திரு. 168 00:12:36,131 --> 00:12:38,383 நீ நினைத்ததை உன்னால் செய்ய முடிந்திருந்தால் சைலோவில் உள்ள 169 00:12:39,176 --> 00:12:42,387 - எல்லோரையும் கொன்றிருப்பாய். - மக்களால் உண்மையை ஏற்றுக்கொள்ள முடியும். 170 00:12:42,387 --> 00:12:44,306 உனக்கிருக்கும் நம்பிக்கை எனக்கில்லை. 171 00:12:53,273 --> 00:12:54,650 உனக்கு விலங்கு போடுகிறேன். 172 00:12:55,859 --> 00:12:56,985 மறுபடியும் ஓடாமல் இருப்பதற்கா? 173 00:12:56,985 --> 00:12:58,320 வெறும் காட்சிக்காக. 174 00:13:00,572 --> 00:13:02,866 உன்னிடம் ஒன்று சொல்கிறேன். ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம். 175 00:13:03,617 --> 00:13:06,995 அடி தளத்தில் உள்ள உன் நண்பர்களுக்கு, கிளர்ச்சி மற்றும் நீதித்துறையின் 176 00:13:06,995 --> 00:13:08,580 கடுமையான பின்விளைவுகளைத் தவிர்க்க, 177 00:13:08,580 --> 00:13:12,459 வெளியே போக விரும்புவதாக நீ சொல்லவில்லை என்று சொல்வதை நிறுத்திவிட்டு, 178 00:13:12,459 --> 00:13:14,753 உன் உரிமையைப் பயன்படுத்தி, நீதித்துறையிடம் விசாரணைக்கு நீ கோர வேண்டும். 179 00:13:27,683 --> 00:13:29,643 ஜார்ஜிற்கு என்ன நடந்தது என்று சொல்லுங்கள். 180 00:13:30,310 --> 00:13:33,272 நீ ஒத்துழைத்தால், சொல்வதை விட அதிகம் செய்ய முடியும். 181 00:14:08,849 --> 00:14:10,058 நான் அவளைத் தடுத்திருக்கலாம். 182 00:14:11,351 --> 00:14:12,186 எதிலிருந்து? 183 00:14:12,186 --> 00:14:14,396 நம் ஹீட் டேப் தீர்ந்ததால், அவர்களுடையதை எடுத்தோமே, அதிலிருந்து. 184 00:14:14,396 --> 00:14:16,648 அது தான் மேல் தளத்தில் இருப்பவர்களை எரிச்சலாக்கியது. 185 00:14:16,648 --> 00:14:20,444 அவர்களை எரிச்சலூட்டும் வகையில் அவள் செய்தது என ஒரு நீண்ட பட்டியலே அவர்களிடம் இருக்கும். 186 00:14:20,444 --> 00:14:23,614 நான் கட்டுப்பாட்டறைக்குத் திரும்பிப் போகிறேன். 187 00:14:23,614 --> 00:14:25,908 நாக்ஸை தண்டிக்கும் விதமாக அவனிடம் பேசாமல் இருங்கள். 188 00:14:25,908 --> 00:14:26,867 ஷெர்லி. 189 00:14:26,867 --> 00:14:28,493 அவன் தான் ஜூல்ஸை மாட்டி விட்டான். 190 00:14:29,077 --> 00:14:31,872 அந்த முட்டாள்கள் அவளைத்தானே கண்டுபிடிக்க விட்டிருக்க வேண்டும். 191 00:14:31,872 --> 00:14:33,916 ஆமாம், ஏனென்றால் நான் ஒரு பெரிய ஹீரோ. 192 00:14:33,916 --> 00:14:36,126 அந்த கதவு வழியாக வெளியேற பயந்தவள். 193 00:14:41,256 --> 00:14:42,883 நாக்ஸிற்கு வேறு வழி இல்லை. 194 00:14:42,883 --> 00:14:46,678 வழி இருந்தது. நம் எல்லோருக்கும் வழி இருந்தது. 195 00:16:27,613 --> 00:16:28,614 என்னால் முடியும். 196 00:16:29,448 --> 00:16:35,120 உன்னால் முடியும், கிழவி. அவளுக்கென்று நீ மட்டும் தான் இருக்கிறாய். 197 00:16:45,547 --> 00:16:50,385 சாக மாட்டாய். அப்படித் தோன்றுகிறது அவ்வளவு தான். 198 00:17:17,246 --> 00:17:20,582 வாக்கர், என்ன செய்கிறீர்கள்? 199 00:17:22,667 --> 00:17:23,669 கொஞ்சம் காற்று வாங்குகிறேன். 200 00:17:40,644 --> 00:17:42,771 சரி. கொஞ்சம் பொறு. 201 00:17:43,939 --> 00:17:45,190 பொறு, வந்து... 202 00:17:45,899 --> 00:17:48,110 எனக்கு தண்ணீர் வேண்டும். தண்ணீர் கிடைக்குமா? 203 00:18:07,713 --> 00:18:08,714 சரி. 204 00:18:21,935 --> 00:18:23,812 நாய்களே! அமைதி ஆகுங்கள்! 205 00:18:29,401 --> 00:18:30,402 கார்லா. 206 00:18:32,196 --> 00:18:33,030 மார்த்தா. 207 00:18:35,407 --> 00:18:36,408 நீ அழகாக இருக்கிறாய். 208 00:18:37,492 --> 00:18:38,994 நீங்கள் பொய் சொல்லி நான் பார்த்ததே இல்லை. 209 00:18:41,371 --> 00:18:44,583 உங்களை மறுபடியும் இங்கே எதிர்பார்க்கவில்லை. 210 00:18:44,583 --> 00:18:45,918 நானும் எதிர்பார்க்கவில்லை. 211 00:18:48,378 --> 00:18:52,591 சரி, விநியோகத்தில் வேலை எப்படி இருக்கிறது? 212 00:18:54,426 --> 00:18:58,889 என்ன? பொறுங்கள், இது நிக்கல்ஸ் சம்பந்தப்பட்ட விஷயமா? 213 00:19:00,474 --> 00:19:02,935 அந்த ஹீட் டேப் பற்றியா? 214 00:19:03,727 --> 00:19:04,853 ஆமாம். 215 00:19:04,853 --> 00:19:08,023 அவள் செய்த அந்த காரியம் தான், நீதித்துறையையும், 216 00:19:08,023 --> 00:19:09,816 அந்த மோசமான ஐ.டி. தலைவனையும் கீழே வரவழைத்தது. 217 00:19:09,816 --> 00:19:12,069 மேயராக ஆனவன். 218 00:19:12,069 --> 00:19:16,281 அவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? உங்களுடைய டேப் அவர்களுடையதை விட ரொம்பவே சிறந்தது. 219 00:19:16,281 --> 00:19:22,204 ஆம், தெரியும். இது புரியவில்லை. அப்படி இருந்தாலே ஒழிய. 220 00:19:29,545 --> 00:19:32,589 நில்லுங்கள். அவளது விலங்கை அவிழ்த்து விடுங்கள். 221 00:19:33,757 --> 00:19:34,967 இங்கிருந்து கிளம்புங்கள். 222 00:19:47,646 --> 00:19:50,357 அவள் பார்க்கப் போவதை யாரிடமாவது சொன்னால், அவர்களையும் கைது செய்ய நேரிடும். 223 00:19:52,317 --> 00:19:54,695 சொல்ல மாட்டாள். எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் இருக்கு. 224 00:20:16,675 --> 00:20:19,178 இது என்ன? நாம் இங்கே என்ன செய்கிறோம்? 225 00:20:19,178 --> 00:20:20,846 ரோட்டா 226 00:20:20,846 --> 00:20:22,347 திரு. சிம்ஸ். 227 00:20:51,835 --> 00:20:53,837 இது நம் விதிமுறைகளை மீறும் செயல் என்றாலும், 228 00:20:53,837 --> 00:20:57,758 அவள் சுத்தம் செய்யப் போவதற்கு முன் ஷெரிஃபிற்காக நான் விதிவிலக்கு தருகிறேன். 229 00:21:02,429 --> 00:21:05,265 படியில் ஜார்ஜ் வில்கின்ஸ் போகும் கண்காணிப்பு காட்சியை போடு. 230 00:21:10,854 --> 00:21:12,314 எங்களுக்கு வேறு வழியே இல்லை. 231 00:21:13,232 --> 00:21:14,066 இல்லை. 232 00:21:15,859 --> 00:21:18,362 - எவ்வளவு தூரம் பார்க்க வேண்டும்? - அவர்கள் நிற்கும் வரை போடு. 233 00:21:20,906 --> 00:21:21,740 சத்தத்தை அதிகரி. 234 00:21:21,740 --> 00:21:23,742 - நடந்துகொண்டே இரு. - எனக்கு தண்ணீர் வேண்டும். 235 00:21:23,742 --> 00:21:26,745 வேண்டுமென்றே கேமராவுக்கு முன் நின்றான் என்று எங்களுக்குத் தோன்றுகிறது. 236 00:21:27,663 --> 00:21:29,748 அதன் மூலம், கேமரா எப்படி இருக்கும் என அவனுக்குத் தெரிந்திருக்கும். 237 00:21:34,545 --> 00:21:35,379 முட்டாள்தனமாக நடக்காதே. 238 00:21:35,379 --> 00:21:37,714 - இன்னும் ஒரு அடி வைத்தால்... - ஸூம் செய். 239 00:21:38,423 --> 00:21:40,634 ...நான் ரொம்ப முட்டாள்தனமாக நடப்பேன். 240 00:21:40,634 --> 00:21:43,387 - உனக்கு என்ன வேண்டும்? - உயிருடன் பிடிப்பது தான் உனக்கு வந்த உத்தரவா? 241 00:21:43,387 --> 00:21:46,056 - ஆமாம். - ஆக, என்னோடு வேலை செய்தவர்களையும் 242 00:21:46,056 --> 00:21:48,809 அந்த ஹார்ட் டிரைவையும் பற்றி நான் சொல்லும் வரை என்னை சித்திரவதை செய்யலாம். 243 00:21:48,809 --> 00:21:52,271 - இல்லை. உன்னோடு பேச விரும்புகிறார்கள். - உனக்கு பொய் சொல்லத் தெரியவில்லை. 244 00:21:52,271 --> 00:21:53,188 ஓ, சரி. 245 00:21:57,568 --> 00:21:58,569 வேண்டாம்! 246 00:22:53,540 --> 00:22:54,875 இன்று நிலைமை எப்படி இருக்கு? 247 00:22:55,876 --> 00:22:57,377 எல்லாம் அமைதியாக இருக்கிறது. 248 00:22:58,337 --> 00:23:00,631 ஹோல்ஸ்டன் போன பிறகு இவ்வளவு அமைதியாக இருந்ததில்லை. 249 00:23:04,635 --> 00:23:05,636 ராப், 250 00:23:06,929 --> 00:23:10,724 நீ என்னைப் பின்தொடருவது பற்றி சொல்லும் போது நான் கடுமையாக பேசி விட்டேன். 251 00:23:12,392 --> 00:23:17,314 நாளைக்கு, நிக்கல்ஸ் ஹில்லிற்கு வரும்போது, மறுபடியும் பேசலாம், சரியா? 252 00:23:34,957 --> 00:23:38,168 எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டாய் என்பதால், உணவு சமைத்துக் கொண்டு வந்தேன். 253 00:23:38,168 --> 00:23:40,671 நான் நலமாக இருக்கிறேன். அதிக பசி இல்லை, எனவே நான்... 254 00:23:41,797 --> 00:23:43,924 உன் சிறு வயதில் நாங்கள் என்ன சொன்னோம் என நினைவிருக்கிறதா? 255 00:23:43,924 --> 00:23:46,426 - இருக்கு, “ஒரே ஒரு கடி.” - “ஒரே ஒரு கடி.” 256 00:23:53,851 --> 00:23:54,977 அம்மா தான் இதை சமைப்பார். 257 00:23:57,521 --> 00:23:59,189 அப்பா, நான்... 258 00:24:00,774 --> 00:24:02,651 எல்லாவற்றிற்கும் உங்களை பழி சொல்லியதற்காக வருந்துகிறேன். 259 00:24:02,651 --> 00:24:07,030 இல்லை. இல்லை, நாம் இதைப் பற்றி முன்பே பேசியிருக்க வேண்டும். 260 00:24:10,033 --> 00:24:16,665 அன்பே, ஜூல்ஸ், எதற்காக வெளியே போக வேண்டும் என்று சொன்னாய்? 261 00:24:16,665 --> 00:24:20,002 - நான் ஏதாவது செய்தேனா? - இல்லை, அப்படியில்லை... நான்... 262 00:24:32,681 --> 00:24:35,184 நீங்கள் இவ்வளவு நன்றாக சமைப்பீர்கள் என்று தெரியாது. ருசியாக இருக்கு. 263 00:24:38,145 --> 00:24:39,938 கிழவனாக இருந்தும் நன்றாகச் சமைத்துள்ளேன், இல்லையா? 264 00:24:52,409 --> 00:24:53,243 அவனை உள்ளே அழைத்து வா. 265 00:25:01,293 --> 00:25:02,127 நீ போகலாம். 266 00:25:10,511 --> 00:25:16,517 லூகஸ், உன்னுடைய ஒத்துழைப்பினால், 267 00:25:17,601 --> 00:25:20,646 ஜூலியட் நிக்கல்ஸைக் கைது செய்துவிட்டோம். 268 00:25:21,688 --> 00:25:23,106 அவளுக்கு என்ன நடக்கும்? 269 00:25:23,815 --> 00:25:26,235 உனக்கு என்ன நடக்கும் என்பதைப் பற்றி தான் நான் கவலைப்படுகிறேன். 270 00:25:27,945 --> 00:25:28,946 நான் உங்களுக்கு உதவினேன். 271 00:25:29,738 --> 00:25:34,368 ஆமாம். அதை அங்கீகரித்து, வெளியே சுத்தம் செய்ய அனுப்பப்பட மாட்டாய். 272 00:25:37,204 --> 00:25:40,207 ஆனால், சுரங்கத்திற்குப் போவாய். 273 00:25:40,999 --> 00:25:42,918 பத்து வருடங்கள். 274 00:25:43,544 --> 00:25:44,586 இது வெட்கக்கேடு தான், 275 00:25:45,587 --> 00:25:47,840 ஏனென்றால் உனக்கு அதிக திறமை உண்டு. 276 00:25:49,007 --> 00:25:50,884 நிறைய அறிவுசார்ந்த ஆர்வமும் உண்டு. 277 00:25:51,844 --> 00:25:56,265 ஒவ்வொரு இரவும் தனியாக கேன்டீனில் அமர்ந்து, 278 00:25:56,265 --> 00:25:58,433 வான வெளிச்சத்தை பார்க்கிறாய். 279 00:26:01,520 --> 00:26:03,689 சுரங்கத்தில் உன்னால் எந்த வெளிச்சத்தையும் பார்க்க முடியாது. 280 00:26:05,566 --> 00:26:10,487 பத்து வருடங்கள் இரும்பை சுமந்தால், உனக்கு நல்லொழுக்கம் வரலாம். 281 00:26:22,749 --> 00:26:26,670 {\an8}சென்சர் வூல் 282 00:26:43,812 --> 00:26:44,855 நல்ல வாசனை. 283 00:26:45,856 --> 00:26:50,777 எல்லோரும் எனக்கு உணவு கொடுப்பதால், ஷெர்ல், எனக்கு... பசியே இல்லை. 284 00:26:51,862 --> 00:26:55,532 நீ எல்லாவற்றையும் சாப்பிட்டால், உனக்கு உடை பத்தாமல் போகும் என்று வாக் சொல்கிறார். 285 00:26:56,575 --> 00:26:57,951 ஒன்றாவது சாப்பிட்டுப் பார். 286 00:26:59,411 --> 00:27:02,039 - இல்லை, வேண்டாம்... - அதிர்ஷ்டத்திற்காக முழு டப்பாவையும்... 287 00:27:03,874 --> 00:27:04,875 நீ வாங்கிக்கொள்ள வேண்டும் என சொன்னார். 288 00:27:08,212 --> 00:27:10,756 சரி. 289 00:27:16,011 --> 00:27:16,845 சரியா? 290 00:27:19,681 --> 00:27:24,478 ஹே. நான் நலமாகத்தான் இருக்கிறேன். சரி. 291 00:27:30,609 --> 00:27:31,693 ஹோல்டிங் 3 292 00:27:54,633 --> 00:27:58,011 {\an8}“உண்மையைத் தெரிந்துகொள்ள விரும்பினாய். நான் உன்னை நேசிப்பது தான் உண்மை. 293 00:28:00,264 --> 00:28:03,183 பயப்படாதே, அவர்கள் விநியோகத்தில் சிறந்தவர்கள்.” 294 00:28:09,147 --> 00:28:12,401 ஹே. அவளை இப்போது தான் தூங்க வைத்தேன். 295 00:28:14,528 --> 00:28:18,031 கேட், உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். 296 00:28:18,031 --> 00:28:18,949 என்ன? 297 00:28:19,616 --> 00:28:22,411 எனக்கு நோய் இருப்பது சிம்ஸுக்கு தெரிந்துவிட்டது. 298 00:28:25,873 --> 00:28:27,249 அதற்கு என்ன அர்த்தம்? 299 00:28:27,249 --> 00:28:30,294 வேலை போய்விட்டதா? வேறு இடம் போக வேண்டுமா? நாம்... 300 00:28:30,294 --> 00:28:33,839 நாம் போக வேண்டாம். என் வேலை போகவில்லை. 301 00:28:40,262 --> 00:28:43,432 மேயரும், நீதித்துறையும் எனக்கு விதிவிலக்கு கொடுக்கிறார்கள். 302 00:29:07,122 --> 00:29:08,123 நன்றி, ஷெரிஃப். 303 00:29:09,416 --> 00:29:11,001 நாங்கள் கொஞ்சம் தனியாக பேசலாமா? 304 00:29:11,627 --> 00:29:13,212 திரு மேயர், ஆட்சேபனை இல்லை என்றால், 305 00:29:13,212 --> 00:29:15,714 - அதிகாரப்பூர்வமாகும் வரை, இதை... - தெரியும். 306 00:29:19,801 --> 00:29:24,681 அவன் விதிகளைக் கடைப்பிடிப்பவன். இப்போதைக்கு அவனால் அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்க முடியாது... 307 00:29:24,681 --> 00:29:25,599 நான் இறக்கும் வரையா? 308 00:29:29,561 --> 00:29:30,812 அவன் சிறந்த ஷெரிஃப்பாக இருப்பான். 309 00:29:31,438 --> 00:29:33,398 முதலிலேயே, அவன் தான் இந்த பதவியில் இருந்திருக்க வேண்டும். 310 00:29:35,484 --> 00:29:37,069 இந்த வேலை ஏற்றுக் கொண்டதற்காக வருந்துகிறாயா? 311 00:29:38,195 --> 00:29:39,029 இல்லவே இல்லை. 312 00:29:39,029 --> 00:29:42,407 இயந்திரவியல் துறையில் இருந்து கொண்டு, ஜெனரேட்டரை ரிப்பேர் செய்திருக்கலாம். 313 00:29:43,450 --> 00:29:44,576 இதில் எனக்கு 314 00:29:46,370 --> 00:29:49,540 எந்த சந்தோஷமும் இல்லை என்று நீ தெரிந்துகொள்ள வேண்டும். எதுவுமே இல்லை. 315 00:29:50,290 --> 00:29:51,208 எனில், ராஜினாமா செய்யுங்கள். 316 00:29:51,792 --> 00:29:57,005 ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அதை யோசிக்கிறேன். 317 00:29:57,005 --> 00:29:59,800 என் பிரச்சினைகளை சொல்லி உன்னை வருந்தச் செய்ய விருப்பமில்லை. 318 00:30:00,968 --> 00:30:05,138 உன்னுடனான பிரச்சினைகள் எப்போது ஆரம்பித்தது என்று நீ ஒருமுறை என்னிடம் கேட்டாய். 319 00:30:06,682 --> 00:30:08,350 அந்த நாசமாய் போன டேப்பை நான் திருடிய பிறகு. 320 00:30:08,350 --> 00:30:11,478 இல்லை, கருவிலேயே ஆரம்பித்தது. 321 00:30:11,478 --> 00:30:14,189 உன் பெற்றோர்களுக்கு, குழந்தைகள் பிறந்திருக்கக் கூடாது. 322 00:30:14,773 --> 00:30:15,983 ஆனால், விபத்துகள் நிகழும். 323 00:30:17,442 --> 00:30:19,611 எனவே, என்னை வெளியே அனுப்புவதன் மூலம், இவற்றை சரிசெய்கிறீர்களா? 324 00:30:20,320 --> 00:30:21,446 கிடையாது. 325 00:30:22,114 --> 00:30:23,740 ஒவ்வொரு மனித உயிருக்கும் மதிப்பு உண்டு. 326 00:30:24,575 --> 00:30:27,286 நீ சைலோவிற்காக நீ சிறப்பாக சேவை செய்திருக்கிறாய். 327 00:30:27,286 --> 00:30:29,246 ஆனால் ஷெரிஃபான பிறகு 328 00:30:29,246 --> 00:30:31,290 வில்கின்ஸின் மரணத்தை விசாரிக்கத் தொடங்கினாய்... 329 00:30:31,290 --> 00:30:32,958 என் மதிப்பை இழந்தேன். 330 00:30:32,958 --> 00:30:36,670 எங்கள் வாழ்க்கைக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகி விட்டாய். 331 00:30:37,713 --> 00:30:38,881 எங்கள் வாழ்க்கையா? 332 00:30:40,924 --> 00:30:44,386 ஜார்ஜ், ஜான்ஸ், மார்னஸ், ஷெரிஃப் மற்றும் அவரது மனைவி 333 00:30:44,386 --> 00:30:47,472 ஆகியோரின் இறப்பு இந்த இடத்திற்கு தேவை என்றால், 334 00:30:47,472 --> 00:30:49,224 இந்த சைலோவில் ஏதோ பெரிய தவறு இருக்கிறது. 335 00:30:49,224 --> 00:30:50,893 என்ன தெரியுமா? 336 00:30:50,893 --> 00:30:53,187 எனக்கு இனி சேவை செய்ய விருப்பமில்லை. 337 00:30:56,815 --> 00:30:57,774 நீ ஒரு இன்ஜினியராக இருந்தாய். 338 00:30:59,818 --> 00:31:01,820 இரவும் பகலும் கருவிகளை கண்காணித்தாய். 339 00:31:01,820 --> 00:31:04,573 அழுத்தம் அதிகமாகவோ குறைந்தோ போனால், 340 00:31:04,573 --> 00:31:06,158 அவற்றை சரிசெய்தாய், 341 00:31:06,158 --> 00:31:08,952 இல்லையென்றால் அது வெடித்திருக்கும். 342 00:31:10,746 --> 00:31:12,372 நானும் ஒரு இன்ஜினியர் தான். 343 00:31:13,457 --> 00:31:17,336 ஆனால் ஜெனரேட்டருக்கு பதில், சைலோவை பத்திரமாக நடத்துகிறேன். 344 00:31:17,336 --> 00:31:20,923 ஆலிசின் பெக்கர் மற்றும் ஜார்ஜ் வில்கின்ஸ் அந்த டிரைவை பார்த்த பிறகு, 345 00:31:20,923 --> 00:31:23,717 அதை சீரமைக்காவிட்டால், 346 00:31:23,717 --> 00:31:27,804 எல்லாம் வெடித்து அழிவதற்கு சில காலமே இருந்தது. 347 00:31:27,804 --> 00:31:30,641 என் அம்மாவும் அப்படி சீரமைக்கப்பட்டவர் தானா? 348 00:31:31,266 --> 00:31:33,894 அது அவளது விருப்பம். 349 00:31:36,522 --> 00:31:39,942 ஆனால் உங்களுக்கு இந்த காட்சி பொய் என்று தெரியும். 350 00:31:41,109 --> 00:31:44,947 எனவே வெளியே போவது பாதுகாப்பானது என்று நீங்களே மக்களிடம் சொல்லலாமே? 351 00:31:45,489 --> 00:31:46,907 அந்த கதவு பற்றி என்ன? 352 00:31:46,907 --> 00:31:48,617 சைலோவுக்கடியில், 353 00:31:48,617 --> 00:31:50,285 ஜார்ஜ் கண்டுபிடித்த, அந்த இரும்பினால் ஆன கதவு. 354 00:31:50,285 --> 00:31:52,162 அதைப் பற்றி ஏன் மக்கள்லிடம் சொல்லவில்லை? 355 00:31:56,583 --> 00:32:00,712 நிறைய மர்மங்களை நிறுவனர்கள் விட்டுச் சென்றார்கள். 356 00:32:04,675 --> 00:32:07,094 நாம் இருவரும் நிகழ்ச்சிக்காக தயாராக வேண்டிய நேரம். 357 00:32:08,053 --> 00:32:09,388 உனக்கு வாழ்த்துக்கள். 358 00:32:09,388 --> 00:32:12,558 நீ சுத்தம் செய்வதை பார்ப்பதற்கு ஒரு பெரிய கூட்டத்தையே வரவழைத்திருக்கிறாய். 359 00:32:14,184 --> 00:32:15,644 ஹோல்ஸ்டனின் கூட்டத்தை விட அதிகம். 360 00:32:19,857 --> 00:32:20,858 நான் சுத்தம் செய்ய மாட்டேன். 361 00:32:22,484 --> 00:32:24,945 யாரும் விரும்ப மாட்டார்கள், ஆனால் செய்வார்கள். 362 00:32:26,280 --> 00:32:28,907 அவர்கள் செய்வார்கள் என்று நிறுவனர்கள் நம்பியது போல. 363 00:32:31,827 --> 00:32:32,828 உன் கடைசி கோரிக்கை... 364 00:32:34,955 --> 00:32:37,165 ஏற்றுக்கொள்ளப்பட்டது. 365 00:32:40,627 --> 00:32:43,255 ஷெரிஃப் துறை 366 00:32:43,964 --> 00:32:47,593 உண்மை 367 00:32:51,221 --> 00:32:52,222 துணை அதிகாரி! 368 00:34:46,879 --> 00:34:50,047 “ஜூலியட் நிக்கல்ஸ், நம் சமுதாயத்தின் சட்டத்தை மீறியதற்காக 369 00:34:50,047 --> 00:34:54,761 உன் மீது குற்றம் சாட்டப்பட்டு, தண்டிக்கப்படுகிறாய். 370 00:34:56,263 --> 00:34:59,600 சைலோவை விட்டு வெளியேறுவதற்கான எந்தவொரு வாய்வழி கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படும், 371 00:34:59,600 --> 00:35:00,851 ஆனால் அதைத் திரும்பப்பெற முடியாது. 372 00:35:01,768 --> 00:35:03,812 நீ சுத்தம் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டது, 373 00:35:03,812 --> 00:35:06,190 மேலும் சுத்தம் செய்வதற்கான பொருட்கள் உன்னிடம் கொடுக்கப்பட்டுள்ளன. 374 00:35:07,482 --> 00:35:09,651 ஆனால் சுத்தம் செய்தாக வேண்டும் என உன்னை வற்புறுத்த முடியாது. 375 00:35:10,319 --> 00:35:15,157 ஏனென்றால், நீ கதவை விட்டு வெளியேறிவிட்டால், சைலோவின் சட்டங்களிலிருந்து வெளியேறிவிடுவாய். 376 00:35:19,077 --> 00:35:20,787 நாங்கள் ஏன் இங்கு இருக்கிறோம் என்று தெரியாது. 377 00:35:22,748 --> 00:35:24,791 இந்த சைலோவை யார் கட்டினார்கள் என்றும் எங்களுக்குத் தெரியாது. 378 00:35:26,293 --> 00:35:30,380 இந்த சைலோவிற்கு வெளியே ஏன் எல்லாம் அப்படி இருக்கிறது என்றும் எங்களுக்குத் தெரியாது. 379 00:35:31,632 --> 00:35:34,927 வெளியே போவது எப்போது பாதுகாப்பாக இருக்கும் என்றும் எங்களுக்குத் தெரியாது. 380 00:35:36,094 --> 00:35:40,807 அந்த நாள் இன்றில்லை என்பது மட்டும் தான் எங்களுக்குத் தெரியும். 381 00:35:42,434 --> 00:35:43,769 ஜூலியட் நிக்கல்ஸ், 382 00:35:43,769 --> 00:35:46,605 சைலோவில் வசிக்கும் மக்களின் சார்பாக, நம் சரணாலயத்திற்கு வெளியே இருக்கும் 383 00:35:47,439 --> 00:35:48,857 உலகத்தை நாங்கள் தெளிவாக பார்க்கும் அளவிற்கு 384 00:35:48,857 --> 00:35:53,195 நீ சுத்தம் செய்வாய் என நம்புகிறேன் 385 00:35:53,987 --> 00:35:58,242 அப்போதுதான், இங்கு தான் நாங்கள் பாதுகாப்பாக இருப்போம், 386 00:35:59,743 --> 00:36:02,079 அங்கு அப்படி இருக்க முடியாது என்று எங்களுக்குப் புரியும்.” 387 00:36:04,331 --> 00:36:08,293 ஜூலியட் நிக்கல்ஸ், கடைசியாக ஏதாவது சொல்ல விரும்புகிறாயா? 388 00:36:10,838 --> 00:36:11,839 எனக்கு பயமில்லை. 389 00:38:18,465 --> 00:38:20,634 அந்தக் காட்சி பொய்யானது. 390 00:39:07,806 --> 00:39:08,807 நாம் என்ன செய்வது? 391 00:39:10,392 --> 00:39:11,935 ரொம்ப காலம் நீடிக்காது. 392 00:39:13,520 --> 00:39:15,898 அந்த மரத்திற்கு அருகே போவதற்குள் அவள் இறந்துவிடுவாள். 393 00:39:33,415 --> 00:39:34,416 நேரப்படி சரியாக நடக்கிறது. 394 00:40:09,284 --> 00:40:10,285 அவளுக்குத் தெரிந்துவிட்டது. 395 00:40:11,662 --> 00:40:12,663 என்ன தெரிந்துவிட்டது? 396 00:40:16,834 --> 00:40:18,252 ஷெரிஃப் பெக்கர் 397 00:40:56,707 --> 00:40:58,125 அவர்கள் விநியோகத்தில் சிறந்தவர்கள். 398 00:41:33,118 --> 00:41:37,080 சர்வர் அறை 399 00:44:12,402 --> 00:44:14,404 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்