1 00:00:07,007 --> 00:00:09,176 ஷெரிஃப்பின் துறை ஷெரிஃப் பெக்கர் 2 00:00:54,388 --> 00:00:56,807 நாங்கள் ஏன் இங்கு இருக்கிறோம் என்று தெரியாது. 3 00:01:05,649 --> 00:01:08,569 இந்த சைலோவை யார் கட்டினார்கள் என்றும் எங்களுக்குத் தெரியாது. 4 00:01:18,871 --> 00:01:24,376 இந்த சைலோவிற்கு வெளியே ஏன் எல்லாம் அப்படி இருக்கிறது என்றும் எங்களுக்குத் தெரியாது. 5 00:01:25,711 --> 00:01:26,920 குட் மார்னிங், ஷெரிஃப். 6 00:01:27,796 --> 00:01:30,132 ஹே, சாம். நீ இன்னும் தூங்கவில்லையா? 7 00:01:31,425 --> 00:01:32,801 பாதி தூக்கத்தில் இருக்கிறேன். 8 00:01:38,932 --> 00:01:42,769 வெளியே போவது எப்போது பாதுகாப்பாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. 9 00:01:45,772 --> 00:01:47,149 எங்களுக்குத் தெரிந்ததெல்லாம்... 10 00:01:49,484 --> 00:01:51,737 அந்த நாள் இன்றில்லை என்பது மட்டும் தான். 11 00:02:03,081 --> 00:02:07,961 கண்ணாடியின் முன் உள்ள பூக்களை இரட்டிப்பாக்கவும் 12 00:02:28,065 --> 00:02:29,066 ஹே. 13 00:02:29,066 --> 00:02:30,150 சீக்கிரமே வந்து விட்டீர்களே. 14 00:02:30,150 --> 00:02:33,320 ஆமாம், கால் பிடித்துக் கொண்டதால், என்னால் தூங்க முடியவில்லை. 15 00:02:33,320 --> 00:02:35,531 காபி குடித்த பிறகு, ஹோல்டிங் 3-இல் என்னை வந்து பாருங்கள். 16 00:02:35,531 --> 00:02:36,657 மூன்றிலா? 17 00:02:38,325 --> 00:02:40,410 ஹோல்டிங் 3 18 00:03:13,652 --> 00:03:15,028 உங்களுக்குக் காபி வேண்டுமா? 19 00:03:17,948 --> 00:03:19,283 என்ன செய்கிறீர்கள்? 20 00:03:19,283 --> 00:03:20,534 அவளைப் பார்க்க வேண்டும். 21 00:03:21,201 --> 00:03:22,661 வேண்டாம், ஷெரிஃப். 22 00:03:23,245 --> 00:03:27,374 நான் இதை மூன்று வருடங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். ஆனால் கவனிக்க முடியாமல் போய்விட்டது. 23 00:03:27,374 --> 00:03:29,126 ஹே. நில்லுங்கள். 24 00:03:30,544 --> 00:03:34,965 அதை விட்டு வெளியே வாருங்கள். நாம் இதைப்பற்றி பேசலாம். 25 00:03:36,800 --> 00:03:38,594 நான் முடிவு செய்துவிட்டேன், இல்லாவிட்டால் இங்கு வந்திருக்க மாட்டேன். 26 00:03:39,636 --> 00:03:40,846 மன்னித்துவிடுங்கள், சாம். 27 00:03:42,181 --> 00:03:45,225 இத்தனையையும் நாம் கடந்து வந்த பின் என்னிடம் இதைச் சொல்லப் போகிறீர்களா? 28 00:03:45,225 --> 00:03:46,852 சாண்டி வரும் வரை நான் காத்திருக்க வேண்டுமா? 29 00:03:46,852 --> 00:03:49,563 நீங்கள் அதைச் சொல்லக் கூடாது. 30 00:03:51,607 --> 00:03:54,860 வேண்டாம், ஷெரிஃப். அதைச் சொல்லாதீர்கள். 31 00:03:54,860 --> 00:03:56,320 - துணை அதிகாரி மார்னஸ்... - வேண்டாம், ஷெரிஃப். 32 00:03:56,320 --> 00:03:57,529 நான் வெளியே போக வேண்டும். 33 00:04:08,916 --> 00:04:11,335 நீங்கள் தயாராகும் வரை, நான் கொஞ்சம் படுக்கலாம் என நினைக்கிறேன். 34 00:05:49,433 --> 00:05:51,560 ஹக் ஹோவே எழுதிய சைலோ என்ற புத்தகத்தைத் தழுவியது 35 00:06:17,878 --> 00:06:19,129 காபி போடுகிறீர்களா? 36 00:06:19,129 --> 00:06:20,214 எனக்கு எனக்கும் 37 00:06:20,214 --> 00:06:21,298 சரி, போடுகிறேன்! 38 00:06:21,298 --> 00:06:24,009 சரி. நான் பால் எடுக்கிறேனே. எனக்குப் பால் வேண்டாம். நான் பால் குடிப்பதில்லை... 39 00:06:24,510 --> 00:06:26,303 எனக்குப் பால் வேண்டாம். வேண்டாம். 40 00:06:26,303 --> 00:06:28,180 - சீக்கிரம். மணி 8:00 ஆகப் போகிறது. - சரி. 41 00:06:28,722 --> 00:06:30,182 - சீக்கிரம். - சரி, வருகிறேன். 42 00:06:32,476 --> 00:06:33,477 நன்றி. 43 00:06:35,062 --> 00:06:36,146 ஏன் இதைச் செய்கிறோம் என்று தெரியவில்லை. 44 00:06:36,146 --> 00:06:38,607 நமக்குக் கிடைக்கப் போவதில்லை. இரண்டு முறை முயற்சி செய்துவிட்டோம். 45 00:06:43,987 --> 00:06:45,405 1 புதிய மெசேஜ் - திறக்கவும் சைலோமெயில் 46 00:06:45,405 --> 00:06:47,282 இனப் பெருக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது - வாழ்த்துக்கள் 47 00:06:47,282 --> 00:06:48,367 உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது 48 00:06:52,621 --> 00:06:54,039 என்னால் நம்ப முடியவில்லை. 49 00:06:54,623 --> 00:06:55,666 மூன்றாவது முறை நல்லபடியாக அமையும். 50 00:06:55,666 --> 00:06:57,709 நீங்கள் தினமும் உறவு கொள்வதில் உற்சாகமாக இருக்கிறீர்கள். 51 00:06:57,709 --> 00:06:59,545 ஹேய், இப்போதிலிருந்து ஒரே மாதத்தில் நீ கர்ப்பமாகலாம். 52 00:06:59,545 --> 00:07:01,171 இது இன்னமுமே நல்லதாக இருக்கட்டும். 53 00:07:06,134 --> 00:07:07,719 எல்லா சூழலிலும் நான் உன்னை காதலிக்கிறேன் என உனக்கே தெரியும். 54 00:07:08,554 --> 00:07:10,931 பேசாதீர்கள். நாம் இதைச் செய்கிறோம். நாம் கிளம்பலாம். 55 00:07:11,682 --> 00:07:14,101 ஆலி, இன்னும் ஒரு மணி நேரம் கழித்துதான் அவரது அலுவலகம் திறக்கப்படும். 56 00:07:14,101 --> 00:07:15,853 சரி. நாம் காலை உணவை எடுத்துக்கொள்ளலாம். 57 00:07:15,853 --> 00:07:17,437 குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என பேசலாம். 58 00:07:17,437 --> 00:07:20,190 உங்களை சந்தோஷப்படுத்தத் தான் பேசப் போகிறோம், ஏனெனில் வெளிப்படையாகச் சொல்வதானால், 59 00:07:20,190 --> 00:07:22,234 நான் குழந்தையைப் பெற்றெடுத்தால், 60 00:07:22,234 --> 00:07:24,194 எனக்குப் பிடித்தப் பெயரைத்தான் வைப்பேன். 61 00:07:26,071 --> 00:07:27,072 சரி. 62 00:07:29,324 --> 00:07:32,286 கர்ப்பகால வாய்ப்பு நேரம் 364 நாட்கள் 23 மணிநேரம் 59 நிமிடங்கள் 63 00:07:37,749 --> 00:07:39,585 - வாழ்த்துக்கள். - நன்றி. 64 00:07:40,335 --> 00:07:42,171 - வாழ்த்துக்கள். - சரி. நன்றி. 65 00:07:42,171 --> 00:07:43,255 நன்றி. 66 00:07:46,008 --> 00:07:46,925 ஹாய். 67 00:07:47,426 --> 00:07:48,343 ஹாய். வாழ்த்துக்கள். 68 00:07:49,970 --> 00:07:51,013 ஹாய். 69 00:07:54,725 --> 00:07:56,602 உண்மையிலேயே இந்த நிலைமை எனக்குப் பிடிக்கவில்லை. 70 00:07:56,602 --> 00:07:58,270 மக்கள் நமக்காக சந்தோஷப்படுகிறார்கள். 71 00:07:58,270 --> 00:08:00,856 எல்லோருக்கும் தெரியாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 72 00:08:03,025 --> 00:08:04,026 அடச்சே. 73 00:08:04,026 --> 00:08:06,236 ஷெரிஃப், திருமதி. பெக்கர். 74 00:08:06,236 --> 00:08:08,280 நான் குறுக்கிட விரும்பவில்லை. 75 00:08:08,280 --> 00:08:09,489 எனில், குறுக்கிடாதீர்கள். 76 00:08:10,282 --> 00:08:12,743 உள்ளதை உள்ளபடி சொல்வது என்பது உங்களுடைய பழக்கம். 77 00:08:12,743 --> 00:08:13,911 அதனால் தான் எல்லோருக்கும் உங்களைப் பிடிக்கறது. 78 00:08:13,911 --> 00:08:15,954 எல்லோருக்கும் என்னைப் பிடிக்கும் என்றால் நான் என் வேலையைச் செய்யவில்லை தானே. 79 00:08:17,915 --> 00:08:21,335 திருமதி. பெக்கர், நான் சொல்ல வரும் விஷயத்தில் உங்கள் கணவருக்கு ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்... 80 00:08:21,335 --> 00:08:22,753 நான் எதில் ஆர்வமாக இருக்கிறேன் என்றால், 81 00:08:22,753 --> 00:08:24,922 - நீங்கள் எங்களை தனியாக விடுவதில் தான், குளோரியா. - ஹோல்ஸ்டன். 82 00:08:24,922 --> 00:08:27,257 ஆனால் நம் ஷெரிஃப் உங்களிம் என்ன சொல்லியிருந்தாலும், 83 00:08:27,257 --> 00:08:29,051 நான் கருவுறுதல் பற்றிய ஆலோசனை வழங்குகிறேன்... 84 00:08:29,051 --> 00:08:30,761 ஓ, அப்படியா? என்ன மாதிரி? 85 00:08:31,345 --> 00:08:33,138 சட்டத்திற்கு புறம்பாக நான் ஏதாவது 86 00:08:33,138 --> 00:08:35,265 சொல்ல வேண்டும் என்று உங்கள் கணவர் காத்திருக்கிறார். 87 00:08:35,265 --> 00:08:37,643 - எதைப் போல? - புத்திசாலி. 88 00:08:37,643 --> 00:08:40,729 நான் வெளியே அனுப்பப்படுவதில் எனக்கு விருப்பம் இல்லை. நன்றி, ஷெரீப். 89 00:08:41,855 --> 00:08:45,859 திருமதி. பெக்கர், நீங்கள் திறந்த மனதுடன் இருந்தால், வந்து என்னைப் பாருங்கள் 90 00:08:47,611 --> 00:08:49,071 உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். 91 00:08:52,282 --> 00:08:53,659 அவள் என்ன தான் செய்கிறாள்? 92 00:08:53,659 --> 00:08:56,036 அவள் சொல்லும் மோசடியான விஷயத்தைச் செய்தால், மக்களுக்கு குழந்தை பிறக்க 93 00:08:56,036 --> 00:08:59,122 நிச்சயமாகத் தன்னால் உதவ முடியும் என்று நம்புகிறாள். அது கொடூரமானது. 94 00:09:07,673 --> 00:09:09,049 மரத்துப் போகிற மாதிரி செய்கிறேன். 95 00:09:10,801 --> 00:09:16,515 சரி, நான் கர்ப்பத்தடையை நீக்கிய பிறகு, பழையபடி உங்கள் ஹார்மோன்கள் சுரக்க 96 00:09:16,515 --> 00:09:17,975 இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகும். 97 00:09:18,517 --> 00:09:20,727 இப்படிச் சொன்னாலும், இதை நீக்கிய பிறகு, சில நாட்களிலேயே 98 00:09:20,727 --> 00:09:22,229 சிலர் கர்ப்பமாகி விடுவார்கள். 99 00:09:22,229 --> 00:09:24,022 ஆனால், உங்களுக்கு இதெல்லாம் தெரியும் தானே. 100 00:09:24,022 --> 00:09:25,858 இது உங்களுடைய இரண்டாவது தடவையா? 101 00:09:26,733 --> 00:09:28,151 - மூன்றாவது. - கடைசி முறையும் கூட. 102 00:09:28,652 --> 00:09:30,320 எனக்கு இப்போது கிட்டத்தட்ட முப்பத்தெட்டு வயதாகிறது. 103 00:09:33,198 --> 00:09:34,283 உங்களால் உணர முடிகிறதா? 104 00:09:35,075 --> 00:09:36,285 வெறும் அழுத்தத்தை மட்டும். 105 00:09:36,285 --> 00:09:40,455 உங்களுக்கு மரத்துப் போனாலும், கொஞ்சம் வினோதமாகத் தான் தோன்றும். 106 00:09:41,039 --> 00:09:43,917 உங்களுக்குத் தொந்தரவு கொடுக்காதவாறு மாத்திரையை நன்கு ஆழமாக 107 00:09:45,294 --> 00:09:47,212 உள்ளே வைத்திருக்கிறோமா என உறுதிப்படுத்திக்கொள்வோம். 108 00:09:48,630 --> 00:09:52,509 ரொம்ப நேரம் ஆகாது, முடித்து விட்டேன். 109 00:09:54,178 --> 00:09:55,220 இதோ எடுத்துவிட்டேன். 110 00:09:55,888 --> 00:09:57,639 இனிமேல் உங்களுக்குக் கர்ப்பத்தடை கிடையாது. 111 00:10:00,893 --> 00:10:02,728 இனிமேல் நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். 112 00:10:14,531 --> 00:10:16,533 நன்றி திருமதி. ஃப்ளோரெஸ். 113 00:10:16,533 --> 00:10:19,995 இன்னும் ஒருவர் மட்டும் எங்களை வாழ்த்தினால்... 114 00:10:20,621 --> 00:10:22,122 என்னைக் கருவுறச் செய்யுங்கள். இப்போதே. 115 00:10:22,122 --> 00:10:23,123 சரி, மேடம். 116 00:10:25,000 --> 00:10:27,085 - பொறுங்கள், பொறுங்கள், பொறுங்கள். - என்ன? 117 00:10:27,794 --> 00:10:28,795 போன முறை ஞாபகம் இருக்கா? 118 00:10:28,795 --> 00:10:31,381 ஏதோ ஒரு கட்டத்தில், அது என்னமோ வேலை செய்த மாதிரி தோண ஆரம்பித்து விட்டது. 119 00:10:31,381 --> 00:10:32,591 இதுவரை செய்ததிலேயே சிறப்பான வேலை. 120 00:10:33,342 --> 00:10:36,845 கர்ப்பகால வாய்ப்பு நேரம் 364 நாட்கள் 17 மணிநேரம் 35 நிமிடங்கள் 121 00:10:36,845 --> 00:10:40,516 கர்ப்பகால வாய்ப்பு நேரம் 342 நாட்கள் 22 மணிநேரம் 14 நிமிடங்கள் 122 00:10:41,558 --> 00:10:44,478 எங்களுக்கு அனுமதி கிடைப்பதற்கு முன், நான்கு முறை முயற்சித்தோம், 123 00:10:44,478 --> 00:10:45,771 இப்போது, உங்களுடைய நேரம். 124 00:10:45,771 --> 00:10:46,855 ஆமாம். நம்பிக்கை வைப்போம். 125 00:10:46,855 --> 00:10:47,940 ஷெரிஃப் பெக்கரிடமிருந்து திருடப்பட்டது 126 00:10:47,940 --> 00:10:49,024 {\an8}என் கசின் சார்லீன், 127 00:10:49,024 --> 00:10:52,110 {\an8}எப்படியோ தன் கணவரைச் சம்மதிக்க வைத்துவிட்டாள். 128 00:10:52,110 --> 00:10:53,195 {\an8}அது வேலை செய்ததா? 129 00:10:53,195 --> 00:10:54,363 {\an8}அவள் கர்ப்பமாகிவிட்டாள். 130 00:10:54,363 --> 00:10:55,489 {\an8}அம்மா 131 00:10:55,489 --> 00:10:57,533 {\an8}அவனுக்கும் இந்த கர்ப்பத்திற்கும் நிச்சயம் சம்பந்தமிருக்காது. 132 00:10:57,533 --> 00:11:00,494 அவள் அவனோடு சும்மா உறவு வைத்துக் கொண்டிருந்தாள். திருமணத்திற்காக. 133 00:11:00,494 --> 00:11:02,788 - ஹலோ, பெர்னார்ட். - குட் மார்னிங், பெர்னார்ட். 134 00:11:02,788 --> 00:11:04,498 கேரன். ஆலிசன். 135 00:11:05,624 --> 00:11:07,584 நீக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுப்பது பற்றி 136 00:11:07,584 --> 00:11:10,796 பிபிஎஸ்-யில் நீ வெளியிட்ட கட்டுரையைப் பார்த்தேன். 137 00:11:10,796 --> 00:11:13,423 - ஆமாம். - ஆனால் ஐ-டி தொடர்பான விஷயங்கள் எதுவும் 138 00:11:13,423 --> 00:11:16,343 பரவுவதற்கு முன், என் அனுமதியை நீ பெற வேண்டும் என்று உனக்குத் தெரியும் தானே. 139 00:11:16,343 --> 00:11:19,388 தானாகவே சில விஷயங்களைக் கையாள முடிந்தால், 140 00:11:19,388 --> 00:11:21,640 அது நம்முடைய சேவை அழைப்புகளை மிச்சம் பண்ண முடியுமே. 141 00:11:23,559 --> 00:11:25,394 உன்னுடைய பதிவை நான் நீக்குகிறேன். 142 00:11:25,394 --> 00:11:28,438 நீ நல்ல நோக்கத்தோடு தான் செய்திருப்பாய் என தெரியும், 143 00:11:28,438 --> 00:11:31,900 ஆனால் நம்முடைய அமைப்பு இப்படி இருக்க காரணம் இருக்கும். 144 00:11:31,900 --> 00:11:33,151 புரிகிறது. 145 00:11:35,195 --> 00:11:36,572 மட்டமான ஆசாமி. 146 00:11:37,114 --> 00:11:38,782 விதிகளை நீ மீறுகிறாய் என்று உனக்குத் தெரியுமா? 147 00:11:38,782 --> 00:11:43,161 இல்லை. இருக்கலாம். ஒரு விதமாக. 148 00:11:44,788 --> 00:11:46,331 இங்கே ஏகப்பட்ட விதிகள் இருக்கின்றன. 149 00:11:46,331 --> 00:11:47,791 வந்து, ஐ.டி-யில் வேலை செய்ய விரும்பினாயே. 150 00:11:47,791 --> 00:11:50,711 ஐ.டி-யில் மட்டுமில்லை. எல்லா இடத்திலும் இருக்கிறது. 151 00:11:52,880 --> 00:11:56,175 நமது வரலாற்றை அழித்ததற்காக நாம் கிளர்ச்சியாளர்களைக் குற்றம் சாட்டுகிறோம், இல்லையா? 152 00:11:56,175 --> 00:11:57,426 ஆமாம். 153 00:11:57,426 --> 00:12:00,179 நாம் ஏன் அந்த விஷயங்களைப் பற்றி கேள்வி கேட்கக் கூடாது? 154 00:12:00,179 --> 00:12:04,558 வரலாற்றை இழப்பது அவ்வளவு மோசமானால், நீதித்துறையில் இருந்து சில குண்டர்கள், 155 00:12:04,558 --> 00:12:05,934 பழங்கால நினைவுச் சின்னத்தை நீங்கள் 156 00:12:05,934 --> 00:12:08,061 வைத்திருந்தாலும் கூட, ஏன் உங்களைச் சுரங்கத்திற்கு அனுப்ப வேண்டும்? 157 00:12:08,061 --> 00:12:09,146 ஆலிசன். 158 00:12:10,772 --> 00:12:12,024 உண்மையாகவா? 159 00:12:12,024 --> 00:12:14,151 ஷெரிஃப் போல என்னிடம் குரல் உயர்த்தி பேசப் போகிறீர்களா? 160 00:12:14,902 --> 00:12:17,613 அன்பே, நம்மிடம் இருக்கும் ஒரே வரலாறு அந்த உடன்படிக்கை தான். 161 00:12:19,031 --> 00:12:21,783 பூமிக்கு மேலே என்ன இருக்கிறது என்று பார்க்க விதிகளை மீறும் சிலர் 162 00:12:21,783 --> 00:12:22,868 முடிவு செய்தால் என்ன ஆகும்? 163 00:12:23,452 --> 00:12:26,538 எப்படியாவது அந்தக் கதவை அவர்கள் திறந்து விட்டால், நம் கதை முடிந்துவிடும். 164 00:12:27,915 --> 00:12:30,292 அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் வேலையின் ஒரு பகுதி. 165 00:12:53,524 --> 00:12:55,317 கர்ப்பகால வாய்ப்பு நேரம் 157 நாட்கள் 22 மணிநேரம் 14 நிமிடங்கள் 166 00:12:57,277 --> 00:12:58,779 ஆலிசன் - ஹோல்ஸ்டன் மே 5 ‘26 167 00:13:05,786 --> 00:13:06,787 எனக்கு மாதவிடாய் வந்துவிட்டது. 168 00:13:07,913 --> 00:13:10,249 எனக்குத் தெரியும். நமக்கு இன்னும் அவகாசம் இருக்கு. 169 00:13:16,463 --> 00:13:18,173 எதைப்பற்றி இவ்வளவு பயப்படுகிறீர்கள்? 170 00:13:18,173 --> 00:13:21,802 ஒரு குடிகார, வெடிகுண்டு வைத்திருக்கும் இளைஞனுடைய வெடிகுண்டால் 171 00:13:21,802 --> 00:13:24,680 தீ பிடித்து, மக்களுக்கு நெரிசல் உண்டாகுமோ என்று பயப்படுகிறேன். 172 00:13:25,681 --> 00:13:27,850 முடித்து விட்டீர்களா? நான் பேசலாமா? 173 00:13:27,850 --> 00:13:30,143 நீங்கள் பொறுப்பேற்ற பிறகு, நாங்கள் காவல் காக்க ஆரம்பித்த பிறகு, 174 00:13:30,143 --> 00:13:33,689 சுதந்திர தினம் பிரச்சினை இல்லாமல் நடந்திருக்கிறது. அது மிக நீண்ட காலம். 175 00:13:33,689 --> 00:13:35,315 எல்லா அதிகாரிகளும் சுற்றி வருவார்கள், 176 00:13:35,315 --> 00:13:37,442 ஒவ்வொரு பத்தாவது மாடியிலும் தீயணைப்பு அணிகள் இருக்கும். 177 00:13:40,112 --> 00:13:42,865 நாளாக நாளாக பார்ப்பது கடினமாகிக் கொண்டே இருக்கிறது. 178 00:13:42,865 --> 00:13:45,659 சுத்தப்படுத்துவதற்கு நிறைய நேரமாகிறது என்றால் எல்லாம் நலம் என்று தானே அர்த்தம். 179 00:13:46,326 --> 00:13:47,619 சுத்தப்படுத்துவதை யாரும் விரும்பவில்லை, 180 00:13:49,037 --> 00:13:51,331 ஆனால் வெளியே என்ன இருக்கிறது என்பதை மக்கள் பார்க்க வேண்டும். 181 00:14:03,427 --> 00:14:04,428 திருமதி. பெக்கர். 182 00:14:04,428 --> 00:14:06,013 - ஹாய். - உன்னை தேடிக் கொண்டிருந்தேன். 183 00:14:06,638 --> 00:14:09,808 - நீ கர்ப்பமா? - இன்னும் இல்லை. 184 00:14:09,808 --> 00:14:12,019 உங்க உதவி எனக்குத் தேவைப்படாது என்று நினைக்கிறேன். 185 00:14:12,019 --> 00:14:13,270 - பத்திரமாக இருங்கள். - ஓ, இல்லை, இல்லை. 186 00:14:13,270 --> 00:14:18,650 அதற்காக நான் உன்னைத் தேடவில்லை. உன்னிடம் தனிமையில் ஒரு கேள்வி கேட்க வேண்டும். 187 00:14:25,782 --> 00:14:29,328 “சுதந்திர தினம்” என்பதை நான் வெறுக்கிறேன். மிக சாதாரணமாக இருக்கிறது. 188 00:14:30,120 --> 00:14:32,623 “கிளர்ச்சியை அடக்கும் தினம்” என்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். 189 00:14:33,123 --> 00:14:35,209 மேடம், என்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று சொன்னீர்கள். 190 00:14:38,504 --> 00:14:39,630 ஏன் அதைத் திறந்தீர்கள்? 191 00:14:39,630 --> 00:14:41,423 ஏனென்றால் நாம் பேசுவதை அவர்கள் கேட்கக் கூடாது. 192 00:14:42,007 --> 00:14:43,008 யார்? 193 00:14:43,509 --> 00:14:44,968 யாருக்கு ஒட்டுக் கேட்பவர்கள் இருக்கிறார்கள்? 194 00:14:45,844 --> 00:14:46,845 நீதித் துறையா? 195 00:14:51,683 --> 00:14:56,271 அவர்கள் அழித்த அந்த சர்வர்களில் என்ன இருந்தது என்று யோசித்திருக்கிறாயா? 196 00:14:56,271 --> 00:15:01,944 அவர்கள் எரித்த புத்தகங்களில்? அதை கிளர்ச்சியாளர்கள் தான் செய்திருப்பார்கள் என்று? 197 00:15:03,445 --> 00:15:05,280 - நான் வேலைக்குத் திரும்ப வேண்டும். - ஓ, நில்லு. 198 00:15:05,280 --> 00:15:06,949 நான் ஒன்றும் உன்னை சும்மா அழைக்கவில்லை. 199 00:15:08,367 --> 00:15:10,911 நீயும் ரொம்ப யோசிப்பாய் என்று 200 00:15:12,120 --> 00:15:13,121 நான் கேள்விப்பட்டேன். 201 00:15:15,707 --> 00:15:16,708 உங்களிடம் யார் அப்படி சொன்னார்கள்? 202 00:15:16,708 --> 00:15:18,669 நாம் ஏன் பூமிக்கடியில் வாழ்கிறோம்? 203 00:15:18,669 --> 00:15:22,214 உண்மையில் அங்கே வெளியே என்ன நடந்தது? 204 00:15:22,798 --> 00:15:24,675 - நான் இப்போதே போகிறேன். - ஒரு கடைசி விஷயம். 205 00:15:26,426 --> 00:15:30,055 நீ குழந்தை பெறுவதை அவர்கள் விரும்புவார்கள் என்று உண்மையாகவே நினைக்கிறாயா? 206 00:15:33,433 --> 00:15:35,644 மூன்று முறை முயற்சித்தும் வெற்றி இல்லையா? 207 00:15:36,228 --> 00:15:39,606 அவள் சொன்னது... அது வேண்டுமென்றே செய்ததாகத் தோன்றியது. 208 00:15:39,606 --> 00:15:43,402 சரி. விசித்திரமானவள் என்பதில் இருந்து அவள் இப்போது 209 00:15:43,402 --> 00:15:45,028 பைத்தியக்காரியாகி விட்டாள். 210 00:15:45,696 --> 00:15:46,822 குளோரியாவிடம் ஒரு மனநல குழுவை 211 00:15:46,822 --> 00:15:49,658 - நான் அனுப்ப வேண்டும். - வேண்டாம். அவள் வந்து... 212 00:15:49,658 --> 00:15:52,286 வந்து என்ன? உன்னைப் பாதிக்கும் எதையாவது சொன்னேனா? 213 00:15:52,286 --> 00:15:54,788 அவளும் அவள் கணவரும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை. 214 00:15:54,788 --> 00:15:56,790 ஏன் என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டுமாம். 215 00:15:57,291 --> 00:15:59,751 உன் கர்ப்பத்தடை சாதனம் நீக்கப்பட்டுவிட்டது, ஆலி. 216 00:16:00,252 --> 00:16:04,631 அனுமதி உடைய எல்லோரைப் போலவும், நமக்கும் குழந்தை பெற வாய்ப்பு இருக்கிறது. 217 00:16:05,841 --> 00:16:07,509 - சரியா? - சரி. 218 00:16:19,438 --> 00:16:20,772 உனக்கு இதைக் கேட்க பிடிக்காது. 219 00:16:20,772 --> 00:16:24,902 நம் நண்பன் ஜார்ஜ் இன்னொரு டிக்கெட்டை கொடுத்துள்ளான். அதை யார் எடுக்க வேண்டும் என்று சொல் பார்ப்போம். 220 00:16:30,866 --> 00:16:33,702 மார்க்கெட்டில் பழுதுபார்க்கும் கடை வைத்திருக்கும், நடு நிலை ப்ரோக்ராமர். 221 00:16:33,702 --> 00:16:36,788 - நீ ஏன் போகிறாய்? - சுதந்திர தினத்திற்காக அனைவரும் லீவ் போடுகின்றனர். 222 00:16:36,788 --> 00:16:39,958 நீங்கள் வேலை செய்வதால், நானும் வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். 223 00:16:39,958 --> 00:16:41,960 ஆனால் நான் காலையிலேயே அங்கே இருக்க வேண்டும் என்று அவர் நினைப்பதால், 224 00:16:41,960 --> 00:16:44,963 இன்றிரவு கிளம்பி போய் அங்கே ஒரு விடுதியில் தங்க வேண்டும். 225 00:16:44,963 --> 00:16:49,927 இன்று மாலை கேளிக்கையில் நாம் பங்கு கொள்ளவும் முடியாது. 226 00:16:53,847 --> 00:16:55,599 - அன்பே. - தெரியும். நான் சத்தம் போட மாட்டேன். 227 00:16:56,558 --> 00:16:58,393 - இங்கே வேண்டாம். - ஆமாம், இங்கே தான். 228 00:16:58,393 --> 00:17:00,354 - அன்பே. மார்ன்ஸ் வந்து... - சீக்கிரமாக முடிக்கலாம். 229 00:17:00,354 --> 00:17:01,438 சரி. 230 00:17:05,192 --> 00:17:06,359 பரவாயில்லை. பரவாயில்லை. 231 00:17:26,630 --> 00:17:27,631 ஷெரிஃப் 232 00:17:31,093 --> 00:17:32,094 அடக் கடவுளே. 233 00:17:33,387 --> 00:17:36,139 இந்த முறை நான் கர்ப்பமாகவில்லை என்றால், எப்போதும் ஆக முடியாது. 234 00:17:55,200 --> 00:17:58,829 உன்னை முந்திச் சென்று வெளியே போகும் கதவை நாங்கள் திறப்போம், 235 00:17:58,829 --> 00:18:01,707 சைலோவிற்குள் எல்லா விஷமும் வந்து விடும்! 236 00:18:04,168 --> 00:18:05,419 அவசரப்படாதே, கிளர்ச்சிக்காரா! 237 00:18:05,419 --> 00:18:08,422 நிறுவனர்கள் தரப்பிலிருந்து! 238 00:19:16,323 --> 00:19:19,576 கணினி பழுது பார்க்கும் இடம் 239 00:19:22,204 --> 00:19:23,288 ஆலிசன் பெக்கர்? 240 00:19:23,288 --> 00:19:24,540 நான் தான். நீங்கள்... 241 00:19:24,540 --> 00:19:27,000 உன்னைச் சந்திக்க நீண்ட காலமாக காத்திருக்கிறேன். 242 00:19:34,424 --> 00:19:36,885 சுதந்திர தினத்தன்று இங்கே உன்னை வரவழைத்ததற்கு வருந்துகிறேன். 243 00:19:36,885 --> 00:19:39,847 நான் வேலையில் இருக்கிறேன். என் கணவரும் தான், எனவே... 244 00:19:39,847 --> 00:19:41,849 அவர் ஷெரிஃபாக இருப்பதால், அப்படி இருக்கும் என நினைத்தேன். 245 00:19:41,849 --> 00:19:43,308 அதனால் தான் உன்னை வரவழைக்க நினைத்தேன். 246 00:19:44,643 --> 00:19:47,688 எனக்குப் புரியவில்லை. உனக்கு என்ன வேண்டும்? 247 00:19:48,313 --> 00:19:51,733 சரி. அழிக்கப்பட்ட கோப்புகளை எப்படி திரும்பப் பெறுவது என்ற உன் போஸ்ட்டைப் படித்தேன். 248 00:19:52,276 --> 00:19:56,321 அது ரொம்ப நாள் இருக்காது என்பதால், அதைப் பிரிண்ட் செய்துவிட்டேன். 249 00:19:57,573 --> 00:20:00,701 - அதற்கு நிறைய பணம் செலவழித்திருப்பாய். - ஆமாம், ரொம்ப அதிகமாக. 250 00:20:00,701 --> 00:20:01,952 எனக்கு நிறைய விவரங்கள் கிடைத்தன. 251 00:20:03,203 --> 00:20:07,207 ஆனால் உன்னை நேராக சந்திக்க வேண்டும் என்பதால் நீ வருவாய் என்று நம்பி 252 00:20:07,207 --> 00:20:08,500 ஒரு பழுது பார்க்கும் கோரிக்கை கொடுத்தேன். 253 00:20:08,500 --> 00:20:12,087 ஆனால், உன்னைத் தவிர மற்ற எல்லோரையும் அனுப்பினார்கள். எனவே விடுமுறை தினம் என்பதால்... 254 00:20:12,087 --> 00:20:13,547 நான் வேண்டும் என்று ஏன் நீ கேட்கவில்லை? 255 00:20:14,047 --> 00:20:15,591 சந்தேகத்தைக் கிளப்ப விரும்பவில்லை. 256 00:20:16,842 --> 00:20:17,843 யாரிடமிருந்து? 257 00:20:17,843 --> 00:20:19,553 பழங்கால நினைவுச் சின்ன விதியை எழுதியவர் யார்? 258 00:20:20,304 --> 00:20:22,264 நீதித்துறை பற்றி கவலைப்படுகிறாயா? 259 00:20:22,973 --> 00:20:23,974 எல்லோரும் அப்படித்தானே? 260 00:20:25,434 --> 00:20:26,602 இது பழங்கால நினைவுச் சின்னம் பற்றியதா? 261 00:20:26,602 --> 00:20:28,270 அது தான். எனக்குத் தெரியவில்லை. 262 00:20:30,939 --> 00:20:34,067 ஒரு வருடத்திற்கு முன்னால், 263 00:20:35,027 --> 00:20:36,486 ஒருவன் இதைக் கொண்டு வந்தான். 264 00:20:37,946 --> 00:20:40,782 ஒரு அலமாரியில் தரை விரிப்பின் கீழே இதைக் கண்டுபிடித்ததாகச் சொன்னான். 265 00:20:41,909 --> 00:20:44,494 இதை இணைத்துப் பார்த்தேன், அது காலியாக இருப்பதாக தோன்றியது. 266 00:20:45,078 --> 00:20:47,581 நீ போஸ்ட் செய்ததை முயற்சி செய்துப் பார்த்தேன்... 267 00:20:48,999 --> 00:20:50,000 கருவியை இணைக்கவும் 268 00:20:50,000 --> 00:20:54,713 ...அந்த மெமரியைப் பார்க்க முடிந்தது. 269 00:20:55,797 --> 00:20:57,090 ஸ்கேன் செய்கிறது 270 00:20:58,800 --> 00:21:03,847 அதில் பெரும்பாலான டிரைவ் பயன்பாட்டில் உள்ளது, ஆனால் எந்த கோப்புகளும் தென்படவில்லை. 271 00:21:05,098 --> 00:21:08,018 அங்கு ஏதோ நடக்கிறது. அதை எப்படி பெறுவது என்று தெரியவில்லை. 272 00:21:08,018 --> 00:21:10,354 பழைய பாரம்பரிய சமையல் குறிப்புகளாக இருக்கலாம். 273 00:21:10,354 --> 00:21:13,524 அப்படி என்றால் அவை மிகப் பழைய சமையல் குறிப்புகளாக இருக்கும். 274 00:21:14,733 --> 00:21:15,984 ஐடி-இல் லாக் எடுத்துப் பார்த்தேன். 275 00:21:16,818 --> 00:21:18,737 இந்த சீரியல் நம்பரின் விவரம் எதுவும் இல்லை. 276 00:21:19,738 --> 00:21:23,158 அதே சமயத்தில், கிளர்ச்சிக்குப் பிந்தைய லாக் தான் இருக்கிறது. 277 00:21:23,158 --> 00:21:25,869 இந்த டிரைவ் 140 வருடங்கள் பழமையானது என்று நினைக்கிறாயா? 278 00:21:25,869 --> 00:21:28,997 அது சாத்தியமில்லை. கிளர்ச்சியின் பொழுது எல்லா டிரைவுகளும் அழிக்கப்பட்டன. 279 00:21:28,997 --> 00:21:30,415 தவறாக குறித்து வைத்திருக்கலாம். 280 00:21:32,459 --> 00:21:34,628 அல்லது இல்லாமலும் இருக்கலாம். 281 00:21:38,549 --> 00:21:42,469 அந்த டைரக்டரியில் பெயரைக் கண்டுபிடிப்பது போன்ற சாதாரண விஷயமாக இருக்கலாம். 282 00:21:42,469 --> 00:21:43,554 நான் செய்யலாமா? 283 00:21:45,097 --> 00:21:46,598 நான் ஏதாவது செய்ய வேண்டுமா... 284 00:21:46,598 --> 00:21:48,392 பேசாமல் இருந்தால் நல்லது. 285 00:21:59,862 --> 00:22:02,447 - சுதந்திர தின வாழ்த்துக்கள். - சுதந்திர தின வாழ்த்துக்கள், மேயர். 286 00:22:02,447 --> 00:22:03,866 உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 287 00:22:36,398 --> 00:22:38,650 18 என்பதன் அர்த்தம் என்னவென்று தெரியுமா? 288 00:22:38,650 --> 00:22:39,735 ம்-ம். 289 00:22:44,239 --> 00:22:48,368 - உன்னிடம் பூதக்கண்ணாடி இருக்கிறதா? - இருக்கிறது. 290 00:23:07,638 --> 00:23:08,889 ஆறு நிமிடங்கள் 291 00:23:09,473 --> 00:23:11,141 ஆறு நொடிகள் 292 00:23:11,850 --> 00:23:13,477 ஆறு மணி 293 00:23:14,144 --> 00:23:15,687 இதே நாள் 294 00:23:16,188 --> 00:23:19,650 140 வருடங்களுக்கு முன்னர். 295 00:23:19,650 --> 00:23:24,321 அந்த நொடியில் தான் நம் சுதந்திரத்தை நாம் திரும்பப் பெற்றோம். 296 00:23:27,699 --> 00:23:30,786 அந்தப் கிளர்ச்சியின் பயங்கரத்தை நினைவு கூற 297 00:23:31,328 --> 00:23:34,081 அதன் நினைவு நாளில் நாம் கூடியிருக்கிறோம். 298 00:23:35,123 --> 00:23:36,959 அவர்கள் வெற்றி பெற்றிருந்தால், 299 00:23:36,959 --> 00:23:40,838 வெளி உலகத்தின் கதவை அவர்கள் திறந்திருந்தால், 300 00:23:40,838 --> 00:23:44,258 நாம் யாருமே இப்போது இங்கிருக்க மாட்டோம். 301 00:23:45,717 --> 00:23:49,763 அவர்கள் வெற்றி பெறவில்லை, நிறுவனர்களுக்கு நன்றி சொல்வோம். 302 00:23:49,763 --> 00:23:53,475 ஆனால், அவர்களால் நம் வரலாற்றை அழிக்க முடிந்தது. 303 00:23:53,475 --> 00:23:55,060 வேறு ஏதாவது வலிமையானது இருக்கிறதா? 304 00:23:55,686 --> 00:23:57,312 இது தான் அவர்களிடம் உள்ள வலிமையானது. 305 00:23:59,022 --> 00:24:00,399 அவை எழுத்துக்கள், ஆனால்... 306 00:24:01,483 --> 00:24:02,442 ஏடி501334 நூலகம் 307 00:24:02,442 --> 00:24:04,152 “நூலகம்” என்று நினைக்கிறேன். 308 00:24:06,613 --> 00:24:09,199 நம் கணினியின் டிரைவுகளை அவர்கள் அழித்தார்கள். 309 00:24:09,783 --> 00:24:14,496 நம் கோப்புகளை கிழித்து, நம் நூலகத்தின் எல்லா புத்தகங்களையும் எரித்தார்கள். 310 00:24:14,496 --> 00:24:16,206 தேடுகிறது டி/டிஐஆர்/ “பெரிய மோசமான மர்மம்” 311 00:24:18,500 --> 00:24:21,545 கருவி பெயர்: 18 - வகை: தரவு ரீட்: ஆமாம் - விவரங்கள்: 269 312 00:24:26,925 --> 00:24:30,053 சைலோ- ப்ளூ பிரிண்ட் அக்டோபர் 12, சைலோ வருடம் 98 313 00:24:30,053 --> 00:24:31,930 ஆனால் அவர்கள் தடுக்கப்பட்டார்கள். 314 00:24:32,556 --> 00:24:36,476 நமது சக்தி வாய்ந்த முன்னோர்கள், அன்று வெற்றி பெற்றார்கள். 315 00:24:38,395 --> 00:24:40,898 தளங்கள் 1 -20 மேல் தளங்கள் லோட் செய்யப்படுகின்றன... 316 00:24:43,108 --> 00:24:44,443 இதைப் பாரு. 317 00:24:50,532 --> 00:24:51,533 நான் பார்க்க மாட்டேன். 318 00:24:52,534 --> 00:24:53,535 நீயும் பார்க்கக்கூடாது. 319 00:24:54,286 --> 00:24:55,787 இதை நீ மறைத்து விட வேண்டும். 320 00:24:56,371 --> 00:24:58,165 மறைக்க வேண்டுமா? விளையாடுகிறாயா? இது தான் சிறந்த... 321 00:24:58,165 --> 00:25:01,460 இது ஒரு பழங்கால நினைவுச் சின்னம். இதை வைத்திருப்பது கூட சட்டத்துக்குப் புறம்பானது. 322 00:25:01,460 --> 00:25:03,795 ஆனால் நமக்குத் தெரியாத எல்லாவற்றிற்கும் இது ஒரு துப்பாக இருக்கலாம். 323 00:25:03,795 --> 00:25:06,840 - நாம் அதைத் தேடிப் பார்க்க... - இதற்காக உன்னை சுத்தம் செய்ய அனுப்புவார்கள். 324 00:25:06,840 --> 00:25:09,760 உன் கணவரிடம் சொல்லப் போகிறாயா? 325 00:25:10,677 --> 00:25:11,678 அதை மறைத்து விடு. 326 00:25:30,489 --> 00:25:32,616 அவர்களது சிறந்த வெற்றி, 327 00:25:33,200 --> 00:25:36,745 ஆரவாரத்தோடு கொண்டாடப்பட வேண்டும். 328 00:25:53,804 --> 00:25:57,766 முழக்கம் செய்து கொண்டாடப்பட வேண்டும். 329 00:26:13,198 --> 00:26:14,783 அது எங்கே போகிறது? 330 00:26:15,868 --> 00:26:18,537 ரகசியமானது சுரங்கப்பாதை 331 00:26:28,672 --> 00:26:33,552 அது அமைதியாக நினைவுப்படுத்தப்பட வேண்டும். 332 00:26:55,240 --> 00:26:59,119 ஒலிக்கும் சத்தத்தைக் கேளுங்கள் 333 00:26:59,119 --> 00:27:01,830 அது நம்மை அழைக்கிறது 334 00:27:01,830 --> 00:27:05,918 நம் கடமையை நோக்கி 335 00:27:05,918 --> 00:27:09,421 பாடும் குரல்களைக் கேளுங்கள் 336 00:27:09,421 --> 00:27:12,508 ரொம்ப சத்தமாகவும் பெருமையாகவும் 337 00:27:12,508 --> 00:27:16,303 சுதந்திரத்தின் அழகை வாழ்த்துங்கள் 338 00:27:16,303 --> 00:27:20,516 ஒளிரும் விளக்குகளைப் பாருங்கள் 339 00:27:24,353 --> 00:27:28,732 நீண்ட இரவு, மேலே எழந்து... 340 00:27:40,285 --> 00:27:42,955 மன்னிக்கவும். நான் வந்து... 341 00:27:43,956 --> 00:27:46,083 ஏறி வந்ததில் மிகவும் சோர்வாக இருக்கிறேன். 342 00:27:47,709 --> 00:27:50,879 நாள் முழுவதும் உட்கார்ந்து இருக்காவிட்டால், இன்னும் வலிமையாக இருப்பேன். 343 00:27:53,674 --> 00:27:54,675 பரவாயில்லை. 344 00:27:56,802 --> 00:27:58,053 சோர்வாக இருக்கிறேன் என்றேன் அவ்வளவுதான். 345 00:27:59,096 --> 00:28:00,097 சரி. 346 00:28:01,640 --> 00:28:03,559 70 நிலை அளவு சோர்வாக இருக்கிறாயா, 347 00:28:03,559 --> 00:28:04,643 அல்லது... 348 00:28:06,770 --> 00:28:07,896 வெறும் சோர்வாக இருக்கிறாயா? 349 00:28:10,732 --> 00:28:12,025 நமக்கு இன்னும் நேரம் இருக்கிறது. 350 00:28:12,568 --> 00:28:14,444 இனி இது உங்களுக்கு சந்தோஷமாக இருக்காது. 351 00:28:15,279 --> 00:28:16,572 இது சந்தோஷம் பற்றியதில்லை. 352 00:28:19,032 --> 00:28:20,450 எனக்கு குழந்தை வேண்டும். 353 00:28:23,579 --> 00:28:24,580 எனக்கும் தான். 354 00:28:52,357 --> 00:28:53,609 ஜார்ஜ் விஷயம் என்னாச்சு? 355 00:28:54,818 --> 00:28:55,861 அவனுக்கு உதவ முடியவில்லை. 356 00:28:56,862 --> 00:28:58,113 அவன் தனிமையாக உணர்கிறான். 357 00:28:58,113 --> 00:29:00,407 மற்ற கணினி நபர்களோடு பேச விரும்புகிறான். 358 00:29:06,079 --> 00:29:08,749 நான், சாப்பிட்டது ஏதோ, 359 00:29:08,749 --> 00:29:12,044 அல்லது எனக்கு ஜலதோஷம் பிடிக்கிறதா எனத் தெரியவில்லை, நான் நலமாக உணரவில்லை. 360 00:29:12,044 --> 00:29:14,004 நீ வீட்டிற்கு போ. நான் பெர்னார்டிடம் சொல்கிறேன். 361 00:29:15,839 --> 00:29:16,924 நன்றி. 362 00:29:19,843 --> 00:29:20,928 நன்றாக ஓய்வெடு. 363 00:29:52,960 --> 00:29:54,086 உள்ளே வா. 364 00:30:00,342 --> 00:30:01,552 நீ திரும்பி வருவாய் என்று நம்பினேன். 365 00:30:02,344 --> 00:30:04,304 நாம் குழந்தைப் பெறுவதை அவர்கள் ஏன் விரும்பவில்லை? 366 00:30:18,902 --> 00:30:23,115 - பெர்னாட் சரியாக நடந்து கொள்கிறாரா? - நான் அவரைப் பார்க்கவில்லை. 367 00:30:27,494 --> 00:30:30,330 நாளைக்கு நான் விடுமுறை எடுக்கப் போகிறேன். சந்தைக்கு போகப் போகிறேன். 368 00:30:30,330 --> 00:30:32,666 உனக்கு என்ன வேண்டும்? நான் கூலியாளை அனுப்புகிறேன். 369 00:30:32,666 --> 00:30:34,710 நான் சுற்றிப் பார்க்க வேண்டும். 370 00:30:35,210 --> 00:30:36,628 கொஞ்சம் உடற்பயிற்சி தேவை. 371 00:30:37,212 --> 00:30:38,589 என் மனதை ஆசுவாசப்படுத்த... 372 00:30:40,924 --> 00:30:43,468 சரி. சரி. 373 00:30:43,468 --> 00:30:45,053 நல்ல யோசனையாகத் தோன்றுகிறது. 374 00:31:08,744 --> 00:31:10,120 நான் எல்லாவற்றையும் பார்க்க விரும்புகிறேன். 375 00:31:28,013 --> 00:31:29,515 என் மூளை சோர்ந்து விட்டது. 376 00:31:35,854 --> 00:31:38,440 இதைப்பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்பது புரிகிறது. 377 00:31:38,982 --> 00:31:40,025 ஆமாம், புரிகிறது. 378 00:31:41,944 --> 00:31:43,111 எப்போது திரும்பி வருவாய்? 379 00:31:43,612 --> 00:31:44,613 தெரியவில்லை. 380 00:31:50,118 --> 00:31:51,119 இது என்ன? 381 00:31:53,413 --> 00:31:54,581 எனக்குத் தெரியவில்லை. 382 00:31:55,332 --> 00:31:56,333 கடைசி? 383 00:32:01,922 --> 00:32:04,842 ஜேன் கார்மோடி கிளீனிங் செப்டம்பர் 13, சைலோ வருடம் 97 384 00:32:29,032 --> 00:32:30,200 ஹே! வலது பக்கம் போ. 385 00:32:55,434 --> 00:32:56,435 நேரமாகிவிட்டது. 386 00:32:57,269 --> 00:32:58,562 வழி தவறிவிட்டேன். 387 00:32:58,562 --> 00:33:02,065 நீ கடைக்குச் சென்றாயா? நம் கிரெடிட்களை மொத்தமும் செலவழித்தாயா? 388 00:33:02,065 --> 00:33:04,526 ஆமாம். அதை விரும்புகிறேன். அடுத்த முறை. 389 00:33:24,922 --> 00:33:27,216 எனக்கு டாக்டரிடம் இருந்து மெசேஜ் வந்தது. 390 00:33:27,216 --> 00:33:29,676 11:00 மணிக்கு மட்டும் தான். அவரால் நம்மைப் பார்க்க முடியுமாம். 391 00:33:30,761 --> 00:33:35,182 ஆனால், தெரியாது. உண்மையில், நமக்கு இன்னும் சில மணி நேரங்கள் உள்ளன. 392 00:33:35,182 --> 00:33:36,517 பரவாயில்லை. 393 00:33:36,517 --> 00:33:39,520 கொஞ்சம் நேரம் தூங்கி விட்டு, உங்களை அங்கே சந்திக்கிறேன். 394 00:33:45,484 --> 00:33:48,362 ஹே. நீ நலமா? 395 00:33:50,405 --> 00:33:51,406 இல்லை. 396 00:33:52,491 --> 00:33:53,700 ஆனால் நலமாகி விடுவேன். 397 00:34:06,171 --> 00:34:09,174 கர்ப்பகால வாய்ப்பு நேரம் 00 நாட்கள் 07 மணிநேரம் 44 நிமிடங்கள் 398 00:34:33,197 --> 00:34:34,574 - ஹே, கேரன். - ஹே. 399 00:34:35,576 --> 00:34:36,577 ஆலிசன் எங்கே? 400 00:34:38,036 --> 00:34:41,039 அவளுக்கு உடம்பு சரியில்லை என்று கூலியாள் மூலம் செய்தி அனுப்பினாள். 401 00:34:43,292 --> 00:34:44,793 - நன்றி. - சரி. 402 00:34:58,140 --> 00:34:59,308 நாம் பேச வேண்டும். 403 00:35:01,685 --> 00:35:03,187 - என்ன நடக்கிறது? - உட்காருங்கள். 404 00:35:06,440 --> 00:35:08,650 - நீ நலமா? - தயவு செய்து, உட்காருங்கள். 405 00:35:17,576 --> 00:35:18,911 நேற்றிரவே உங்களிடம் பேசவிருந்தேன், 406 00:35:18,911 --> 00:35:22,497 ஆனால் நான் சொல்ல வந்ததை நீங்கள் கேட்க விரும்புவீர்களா என்று உறுதியாகத் தெரியவில்லை. 407 00:35:23,624 --> 00:35:25,334 நீங்கள் எப்போதும் கவனிக்க மாட்டீர்கள், அன்பே. 408 00:35:26,877 --> 00:35:27,920 நீ எதைப் பற்றி பேசுகிறாய்? 409 00:35:27,920 --> 00:35:29,922 - நான் எப்போதும் கவனிப்பேன்... - பேசுவது என்பது கவனிப்பதல்ல. 410 00:35:32,257 --> 00:35:37,554 நீங்கள் சட்டத்தை மதிப்பவர் என்பதால், உங்களுக்கு ஆதாரம் கொடுக்க நினைத்தேன். 411 00:35:38,847 --> 00:35:40,641 எதைப்பற்றிய ஆதாரம்? 412 00:35:41,642 --> 00:35:43,727 இது எப்படித் தெரியும் என்று சொல்ல முடியாது, ஆனால்... 413 00:35:45,103 --> 00:35:47,272 நாம் குழந்தை பெற்றுக்கொள்ள அவர்கள் அனுமதிப்பதாக இல்லை. 414 00:35:47,272 --> 00:35:49,316 - என்ன? - நாம்... 415 00:35:51,318 --> 00:35:54,863 எனக்கு குழந்தைகள் பிறப்பதை அவர்கள் விரும்பவில்லை. 416 00:35:55,572 --> 00:35:56,615 யார் அந்த “அவர்கள்?” 417 00:35:56,615 --> 00:35:59,034 உடன்படிக்கையை அமல்படுத்துபவர்கள். 418 00:35:59,034 --> 00:36:03,038 சாதுவான, சொல்பேச்சு கேட்பவர்கள் தான் அவர்களுக்குத் தேவை. 419 00:36:05,332 --> 00:36:07,793 டாக்டர லெனார்ட் உன் கர்ப்பத்தடையை வெளியே எடுப்பதை நானே பார்த்தேன். 420 00:36:07,793 --> 00:36:10,379 - இல்லை, நீங்கள் பார்க்கவில்லை. - நான் அங்கே இருந்தேன். 421 00:36:10,379 --> 00:36:11,839 அவர் திரைக்குப் பின்னால் இருந்தார். 422 00:36:11,839 --> 00:36:14,007 - அவர் என்ன செய்தார் என்பதை நீங்கள் பார்க்கவில்லை. - ஆலிசன்... 423 00:36:14,007 --> 00:36:16,218 என்னால் திடமாகச் சொல்ல முடியும், 424 00:36:17,803 --> 00:36:19,721 அவர் என் கர்ப்பத்தடையை எடுக்கவில்லை. 425 00:36:20,264 --> 00:36:21,473 உனக்கு அது எப்படி தெரியும்? 426 00:36:21,974 --> 00:36:23,475 ஏனென்றால் இப்போது தான் நான் அதை வெளியே எடுத்தேன். 427 00:36:32,025 --> 00:36:33,277 நீ என்ன செய்தாய்? 428 00:36:36,029 --> 00:36:38,407 அதன் மீது அழுத்தம் கொடு, நகராதே. 429 00:36:47,666 --> 00:36:48,792 ஹே. 430 00:36:53,714 --> 00:36:54,715 ஹே. 431 00:37:07,394 --> 00:37:08,770 - நீங்கள் வர வேண்டும். - என்ன? 432 00:37:08,770 --> 00:37:10,355 ஆலிசனுக்கு காயம் பட்டுவிட்டது. 433 00:37:11,231 --> 00:37:13,317 - நல்லது. ஷெரிஃப்! - என்னால் முடியாது. ஆலிசன் காயப்பட்டிருக்கிறாள். 434 00:37:13,317 --> 00:37:14,860 ஆலிசன் கேன்டீனில் இருக்கிறாள். 435 00:37:18,322 --> 00:37:22,409 இது எதுவும் உண்மை இல்லை. உங்களுக்குப் புரிகிறதா? 436 00:37:23,160 --> 00:37:26,038 உங்களை இஙேயே வைத்திருக்க வேண்டும் என்பதால், உங்களிடம் பொய் சொல்கிறார்கள். 437 00:37:26,038 --> 00:37:29,958 வெளியே பச்சைபசையாக இருக்கிறது. பச்சை மரங்கள் உண்டு. 438 00:37:30,792 --> 00:37:33,295 வானத்தில் பறவைகள் பறக்கின்றன. 439 00:37:34,338 --> 00:37:35,714 நான் சொல்வதை யாரும் கேட்கவில்லையா? 440 00:37:36,840 --> 00:37:38,008 நம்மை இங்கே இருக்க வைக்கிறார்கள். 441 00:37:38,008 --> 00:37:40,385 - இந்தக் காட்சிகளெல்லாம் பொய்யானது. - ஆலிசன். 442 00:37:40,385 --> 00:37:43,555 - ஆலிசன். ஆலிசன். என்னுடன் வா. - அவர்கள் நம்மை... இல்லை. 443 00:37:43,555 --> 00:37:45,015 - சொல்வதைக் கேளுங்கள். - நாம் முயற்சி... 444 00:37:45,015 --> 00:37:48,310 - நாம் மூன்று முறை முயற்சித்தோம். அது கடினம். - நான் ஒன்றும் பைத்தியமில்லை! 445 00:37:48,310 --> 00:37:50,687 - என்னை ஏன் பைத்தியக்காரி மாதிரி நடத்துகிறீர்கள்? - கண்டிப்பாக இல்லை. 446 00:37:50,687 --> 00:37:53,607 மன உளைச்சலில் இருக்கும் பல நோயாளிகளை நான் பார்த்திருக்கிறேன், ஆலிசன். 447 00:37:53,607 --> 00:37:55,984 எனக்கு மனஉளைச்சல் எல்லாம் இல்லை. 448 00:37:55,984 --> 00:37:57,236 உனக்கு இரத்தம் வருகிறது, அன்பே. 449 00:37:57,236 --> 00:37:58,904 - மேலும் நீ என்னோடு வா... - மாட்டேன்! 450 00:37:59,613 --> 00:38:04,701 இல்லை. இதைப்பற்றி... நிறைய யோசித்துவிட்டேன், சரியா? 451 00:38:05,410 --> 00:38:09,915 தயவுசெய்து. எனக்கு வேறு வழியில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். 452 00:38:11,875 --> 00:38:13,085 என்னை மன்னித்துவிடு, அன்பே. 453 00:38:14,378 --> 00:38:15,879 பரவாயில்லை. 454 00:38:16,588 --> 00:38:18,465 - பரவாயில்லை. - நான் வெளியே போக வேண்டும்! 455 00:38:28,684 --> 00:38:29,935 நான் வெளியே போக வேண்டும். 456 00:38:32,437 --> 00:38:33,438 அடக் கடவுளே. 457 00:39:06,430 --> 00:39:08,765 - அதில் ஏதோ விஷயமிருக்கிறது. - அதெல்லாம் ஒன்றுமில்லை. 458 00:39:08,765 --> 00:39:12,978 அவள் வருத்தமாக இருந்திருக்கிறாள் இல்லை தவறாகப் பேசியிருக்கிறாள் இல்லை தவறாக கேட்டிருக்கின்றனர். 459 00:39:13,604 --> 00:39:16,982 அங்கு மக்கள் இருந்தனர். அவர்கள் காதுகளில் விழுந்ததை தான் அவர்கள் கேட்டிருப்பார்கள். 460 00:39:16,982 --> 00:39:19,484 - நாம்... - நாம் அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கலாம், கொல்லலாம். 461 00:39:19,484 --> 00:39:20,652 ஐயோ, வேண்டாம். 462 00:39:21,904 --> 00:39:26,033 தவறாகப் புரிந்துகொண்டதாக நினைத்தால் விசாரணைக்குக் கோரலாம் என உடன்படிக்கையில் இருக்கிறது. 463 00:39:26,033 --> 00:39:28,035 இது தவறான புரிதல் என்று ஆலிசன் நினைக்கவில்லை. 464 00:39:28,869 --> 00:39:30,871 நீ அதன் சாத்தியக் கூறுகளையாவது பார்க்க விரும்பவில்லையா? 465 00:39:30,871 --> 00:39:32,414 கண்டிப்பாக பார்க்க விரும்புகிறேன்! 466 00:39:33,498 --> 00:39:37,252 நான் அதையே திரும்பத் திரும்ப செய்வது உங்களுக்குத் தெரியவில்லையா? எனக்கு வேறு வழியில்லை. 467 00:39:42,424 --> 00:39:46,136 உடன்படிக்கையை ஒரு விதிக்குள் கொண்டு வந்தால், 468 00:39:46,762 --> 00:39:51,475 நீ வெளியே போக வேண்டும் என்று சொல்லக்கூடாது அல்லது வெளியே போய் தான் ஆக வேண்டும் என்றிருக்கும். 469 00:39:57,272 --> 00:40:01,985 இதில் வேறுயாருடைய பங்காவது இருக்கிறதா? அவளைத் தூண்டிவிட்டார்களா? 470 00:40:01,985 --> 00:40:07,407 அவள் 17ஆம் தேதி குளோரியா ஹில்டிப்ராண்ட் என்ற கருவுறுதல் ஆலோசகரிடம் பேசியிருக்கிறாள். 471 00:40:07,407 --> 00:40:08,992 அவள் என்ன சொன்னாள்? 472 00:40:08,992 --> 00:40:10,953 குழந்தை பெற்றுக்கொள்ள நாங்கள் தகுதியானவர்கள் இல்லை என்று 473 00:40:10,953 --> 00:40:14,081 அவர்கள் நினைப்பதாக ஒரு சந்தேகத்தை அவள் ஆலிசனுக்கு ஏற்படுத்தியிருக்கிறாள். 474 00:40:14,081 --> 00:40:15,249 யார் அந்த “அவர்கள்?” 475 00:40:15,249 --> 00:40:16,416 அவருக்குத் தெரியவில்லை. 476 00:40:16,416 --> 00:40:19,461 அவளுக்கும் அவள் கணவருக்கும் குழந்தை பிறக்கவில்லை என்பதால் கோபமாக இருந்திருக்கிறாள். 477 00:40:19,461 --> 00:40:21,088 நீ என்ன பேச நினைக்கிறாயோ அதை காவல் நிலையத்தில் வந்து பேசு. 478 00:40:21,088 --> 00:40:25,300 ஜார்ஜ் வில்கின்ஸ், என்பவனை சந்தையிலிருந்து பிடித்து வந்திருக்கிறோம். 479 00:40:25,300 --> 00:40:27,511 அவன் கணினி ரிப்பேர் செய்யும் கடை வைத்திருக்கிறான். 480 00:40:27,511 --> 00:40:30,305 விடுமுறை அன்று ஆலிசன் அவனுக்குத் தொழில்நுட்ப உதவியாளராக வேலை செய்திருக்கிறாள். 481 00:40:30,305 --> 00:40:35,769 நேற்று பொருள்கள் வாங்க கடைக்குச் சென்றாள். அவனைப் பார்க்கச் சென்றிருக்கிறாள் என நினைத்தேன். 482 00:40:35,769 --> 00:40:38,522 ஆனால் ஆலிசன் திரும்பி வரவேயில்லை என வில்கின்ஸ் சொன்னார். 483 00:40:39,231 --> 00:40:43,861 நீதிமன்ற குழுவினர் அவனுடைய கடையைச் சோதனை செய்தனர், ஆனால் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. 484 00:40:45,153 --> 00:40:46,446 அப்புறம் என்ன? 485 00:40:48,490 --> 00:40:51,118 ஆலிசன் சில விஷயங்களைத் திடமாக நம்புபவள். 486 00:40:52,995 --> 00:40:55,163 ஆனால் அவளால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பது... 487 00:40:57,499 --> 00:41:01,461 அது ரொம்ப பெரிய விஷயமாக இருந்திருக்கிறது என நினைக்கிறேன். 488 00:41:07,467 --> 00:41:11,388 அடுத்தடுத்த விஷயங்கள் நடக்கும்போது நீ இங்கிருக்கக்கூடாது, ஹோல்ஸ்டன். 489 00:41:12,806 --> 00:41:13,807 நான் ஒரு ஷெரிஃப். 490 00:41:13,807 --> 00:41:15,434 வேறு யாராவது பார்த்துக்கொள்ள விடமாட்டாயா? 491 00:41:16,393 --> 00:41:19,354 - இப்பதவியை ஏற்கும்போது உறுதிமொழியை ஏற்றேன். - தெரியும், ஆனால் எல்லோருமே... 492 00:41:19,354 --> 00:41:22,858 சுலபமான விஷயங்களை மட்டும் பின்பற்றுவதற்கு எதற்கு உறுதிமொழி? 493 00:41:28,864 --> 00:41:30,741 முக்கியமான விஷயத்தைத் தவிர்த்து, இரண்டு நாட்களுக்கு விடுமுறை. 494 00:41:32,034 --> 00:41:34,328 சைலோவில் உள்ள மேல் தள அறைகள், பார்வையாளர்களுக்காகத் திறந்து வையுங்கள். 495 00:41:34,328 --> 00:41:38,874 எப்போதும் வரும் கூட்டத்தை விட இதற்கு கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்க்கிறோம். 496 00:41:38,874 --> 00:41:42,336 கேன்டீனின் வருகைக்காக லாட்டரி சீட்டு போடுவோம். 497 00:42:00,395 --> 00:42:01,647 என்னை மன்னித்துவிடுங்கள். 498 00:42:04,233 --> 00:42:05,234 என்னையும் மன்னித்துவிடு. 499 00:42:09,446 --> 00:42:10,948 நான் விசித்திரமாக நடந்துகொள்ளவில்லை. 500 00:42:10,948 --> 00:42:13,242 கத்தியால் உன் உடலைக் கிழித்து, எதையோ வெளியே எடுத்தாயே. 501 00:42:13,784 --> 00:42:15,953 ஆம், அது ரொம்ப வலிக்கிறது. 502 00:42:20,082 --> 00:42:22,334 நான் அந்த மாத்திரையை டாக்டர் லெனார்ட்டிடமே கொண்டுச் சென்றேன். 503 00:42:22,334 --> 00:42:23,794 ஓ, அப்படியா? அவர் என்ன சொன்னார்? 504 00:42:23,794 --> 00:42:27,881 அது தொற்று பரவாமல் தடுப்பதற்காக வைக்கப்பட்டது. 505 00:42:27,881 --> 00:42:29,132 அது போல ஏதோ ஒன்று தானே? 506 00:42:34,429 --> 00:42:35,639 அது ஒரு பெரிய விஷயமில்லை. 507 00:42:39,935 --> 00:42:41,603 நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். 508 00:42:43,272 --> 00:42:44,773 ஆனால், என் பக்கத்தில் நெருங்கி உட்காருங்கள். 509 00:42:45,440 --> 00:42:47,693 - நான் சொல்வதை வேறுயாரும் கேட்கக் கூடாது. - நாம் தனியாகத்தான் இருக்கிறோம். 510 00:42:48,277 --> 00:42:49,278 வாருங்கள். 511 00:42:51,321 --> 00:42:52,322 தயவுசெய்து வாங்க. 512 00:43:04,126 --> 00:43:06,920 எல்லாவற்றிற்கும் மேலாக, நான் உங்களை நேசிக்கிறேன். 513 00:43:06,920 --> 00:43:12,467 - இதுதான் ரொம்ப முக்கியமான விஷயம். - அப்படியா? 514 00:43:13,051 --> 00:43:16,180 நீங்கள் கோபமாக இருப்பது புரிகிறது. நானும் கோபமாக தான் இருந்திருப்பேன். 515 00:43:19,183 --> 00:43:24,188 கடந்தகாலத்திற்குச் சென்று இப்போது அறிந்த விஷயத்தை அறியாமல் இருந்திருந்தால் கோபப்பட்டிருப்பேன். 516 00:43:25,063 --> 00:43:26,398 எந்த தயக்கமுமின்றி. 517 00:43:29,484 --> 00:43:33,739 ஆனால், அவர்கள் நம்மிடம் சொன்னது எதுவுமே உண்மையில்லை என தெரிந்துக்கொண்டேன். 518 00:43:34,907 --> 00:43:38,493 நாம் ஏன் இங்கிருக்கிறோம், 140 வருடங்களுக்கு முன் என்ன நடந்தது, 519 00:43:38,493 --> 00:43:41,622 யாருக்கெல்லாம் குழந்தைகள் பிறக்கின்றன ஏன் பிறக்கின்றன. அது கூட பெரிய விஷயமில்லை... 520 00:43:41,622 --> 00:43:42,706 அதனால் என்ன? 521 00:43:43,624 --> 00:43:45,334 - அதனால் என்னவா? - நீ அதுமாதிரி ஏதாவது கண்டுபிடித்தால், 522 00:43:45,334 --> 00:43:49,296 என்னிடமோ, அல்லது மேயர் ஜான்ஸிடமோ அல்லது நீதித்துறையிடமோ தெரியப்படுத்தியிருக்கணும். 523 00:43:49,296 --> 00:43:50,881 மாறாக, சைலோவிலுள்ள அனைவருக்கும் தெரியப்படுத்திவிட்டாய். 524 00:43:50,881 --> 00:43:55,302 உன்னை வெளியே அனுப்பி, இறக்க வைக்கும் அந்த வார்த்தைகளைச் சொல்லாதே. 525 00:43:55,302 --> 00:44:00,140 நான் கண்டுபிடித்த முக்கியமான விஷயமே அதுதான். அங்கு போனால் நான் இறக்க மாட்டேன். 526 00:44:00,140 --> 00:44:06,104 நாம் திரையில் பார்க்கக்கூடிய விஷயங்களை மாற்றும் திறன் அவர்களுக்கு இருக்கிறது. 527 00:44:06,104 --> 00:44:08,524 கேன்டீனில், சைலோ பகுதியில் என அனைத்தையுமே மாற்றிவிடுவார்கள். 528 00:44:08,524 --> 00:44:10,651 - என்ன உளறுகிறாய்? - அவர்கள் ஒரு புகைப்படத்தை எடுத்து, 529 00:44:10,651 --> 00:44:12,569 அதை எப்படியோ மாற்றுகிறார்கள். 530 00:44:12,569 --> 00:44:16,865 எனவே, நாம் இங்கிருந்து பார்ப்பது, அங்கு இருக்காது. 531 00:44:16,865 --> 00:44:19,785 அங்கு இப்படி இருப்பதாக நம்மை நம்ப வைக்கிறார்கள். 532 00:44:19,785 --> 00:44:22,037 - அதோ அங்கிருக்கிறதே, அது என்ன? - ஹோல்ஸ்டன். 533 00:44:22,037 --> 00:44:23,330 அப்புறம் அது. 534 00:44:23,330 --> 00:44:25,582 கடைசியாக சுத்தம் செய்த மூன்று பேர். 535 00:44:25,582 --> 00:44:28,377 அல்லது அப்படியில்லாமலும் இருக்கலாம். 536 00:44:28,961 --> 00:44:32,339 - அது வெறும் கல்லாகவோ புதராகவோ இருந்தால்? - நான் என்ன பார்க்கிறேன் என எனக்குப் புரிகிறது. 537 00:44:32,339 --> 00:44:35,384 புரியாது, ஏனென்றால் கணினி மூலம் இவற்றைத் தான் காண்பிக்கிறார்கள். 538 00:44:35,384 --> 00:44:37,886 - ஏன் இப்படி செய்கிறார்கள்? - நம்மை இங்கே இருக்க வைக்கத்தான். 539 00:44:39,221 --> 00:44:40,305 சரி. 540 00:44:41,890 --> 00:44:45,686 வெளியே அற்புதமாக இருக்குமென்றால், அவர்கள் ஏன் நம்மை வெளியே அனுப்புவதில்லை? 541 00:44:46,436 --> 00:44:47,563 எனக்குத் தெரியாது. 542 00:44:49,690 --> 00:44:52,401 - எனக்குத் தெரியாது. - சரி. 543 00:44:52,401 --> 00:44:54,736 ஆனால், நான் அதைக் கண்டுபிடிப்பேன். என்னை மன்னித்துவிடுங்கள். 544 00:44:55,320 --> 00:44:56,905 - நீ இதையே சொல்லிக் கொண்டேயிருக்கிறாய். நான்... - சரி. 545 00:44:56,905 --> 00:44:59,032 நீங்கள் இன்னும் ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்க வேண்டும், 546 00:44:59,032 --> 00:45:00,325 பிறகு போய் தூங்குங்கள். 547 00:45:02,578 --> 00:45:03,954 எங்கேயும் போக மாட்டேன். 548 00:45:06,123 --> 00:45:07,457 மக்கள் ஏன் சுத்தம் செய்கின்றனர்? 549 00:45:12,296 --> 00:45:14,923 சென்சாரில் உள்ள தூசி மற்றும் அழுக்கை அகற்ற, அப்போதுதான் 550 00:45:14,923 --> 00:45:16,300 - நம்மால் பார்க்க முடியும். - இல்லை. 551 00:45:16,300 --> 00:45:18,385 அவர்கள் ஏன் அதைச் செய்கின்றனர்? 552 00:45:18,385 --> 00:45:20,179 பெரும்பாலானோர் இதைச் செய்ய மாட்டோம் என உறுதியாக இருப்பார்கள். 553 00:45:20,179 --> 00:45:23,140 நீங்கள் பிரென்ட்-ஐ கைது செய்தபோது, தன் தலையில் சுட்டு, வெளியே தூக்கிப் போடச் சொன்னான், 554 00:45:23,140 --> 00:45:25,601 ஏனென்றால் அவன் சுத்தம் செய்ய விரும்பவில்லை. 555 00:45:25,601 --> 00:45:28,854 - பிறகு அவன் என்ன செய்தான்? - சுத்தம் செய்தான். 556 00:45:28,854 --> 00:45:32,566 இதெல்லாம் பொய் என்ற உண்மையை 557 00:45:33,317 --> 00:45:38,572 மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக மக்கள் சுத்தம் செய்கின்றனர் என நினைக்கிறேன். 558 00:45:41,533 --> 00:45:47,164 நான் வெளியே போய் பார்க்கும் போது, அது இந்த மாதிரி இருந்தால், நான் சுத்தம் செய்ய மாட்டேன். 559 00:45:48,665 --> 00:45:51,627 என் வாழ்வில் மிகப்பெரிய தவறை செய்துவிட்டேன் என நான் விடைப்பெற்றுவிடுவேன். 560 00:45:52,628 --> 00:45:54,713 ஆனால் நான் சொல்வது சரியென்றால், 561 00:45:55,255 --> 00:45:58,008 பச்சைபசையாக அழகாக இருந்தால், 562 00:45:58,008 --> 00:46:03,597 என் கம்பளியைப் போட்டுக்கொண்டு சுத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவேன். அப்போது உங்களுக்குப் புரியும். 563 00:46:06,141 --> 00:46:10,562 பிறகு மலை மீது ஏறிச் சென்று, என்ன நடக்கிறது எனப் பார்ப்பேன். 564 00:46:10,562 --> 00:46:12,356 பிறகு உங்களுக்காகத் திரும்பி வருவேன். 565 00:46:16,026 --> 00:46:17,027 சரியா? 566 00:46:28,205 --> 00:46:29,957 ஹோல்டிங் 3 567 00:46:35,796 --> 00:46:37,256 “ஆலிசன் பெக்கர். 568 00:46:38,799 --> 00:46:42,636 நம் சமூகத்தின் முக்கிய சட்டத்தை மீறியதற்காக 569 00:46:42,636 --> 00:46:45,305 உன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 570 00:46:46,181 --> 00:46:48,892 சைலோவை விட்டு வெளியேறுவதற்கான எந்தவொரு வாய்வழி கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படும், 571 00:46:50,727 --> 00:46:52,563 ஆனால் அதைத் திரும்பப் பெற முடியாது. 572 00:46:54,815 --> 00:46:58,402 ஒருமுறை சொல்லிவிட்டால், அதை மாற்ற முடியாது. 573 00:47:01,446 --> 00:47:03,115 நீ சுத்தம் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டது 574 00:47:03,615 --> 00:47:06,410 மேலும் சுத்தம் செய்வதற்கான பொருட்கள் என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளன. 575 00:47:07,244 --> 00:47:09,746 ஆனால் சுத்தம் செய்தாக வேண்டும் என உன்னை வற்புறுத்த முடியாது. 576 00:47:09,746 --> 00:47:14,209 ஏனென்றால், நீ கதவை விட்டு வெளியேறிவிட்டால், சைலோவின் சட்டங்களிலிருந்து வெளியேறிவிடுவாய்.” 577 00:47:27,472 --> 00:47:29,391 “நாங்கள் ஏன் இங்கு இருக்கிறோம் என்று தெரியாது. 578 00:47:32,269 --> 00:47:34,479 இந்த சைலோவை யார் கட்டினார்கள் என்றும் எங்களுக்குத் தெரியாது. 579 00:47:36,440 --> 00:47:40,360 இந்த சைலோவிற்கு வெளியே ஏன் எல்லாம் அப்படி இருக்கிறது என்றும் எங்களுக்குத் தெரியாது. 580 00:47:44,656 --> 00:47:46,158 வெளியே போவது... 581 00:47:49,286 --> 00:47:51,538 எப்போது பாதுகாப்பாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. 582 00:47:53,665 --> 00:47:55,918 அந்த நாள் இன்றில்லை என்பது மட்டும் தான் எங்களுக்குத் தெரியும். 583 00:47:57,211 --> 00:47:59,379 ஆலிசன் பெக்கர். 584 00:48:02,508 --> 00:48:06,637 சைலோவில் வசிக்கும் மக்களின் சார்பாக, நம் சரணாலயத்திற்கு வெளியே இருக்கும் 585 00:48:07,429 --> 00:48:12,893 உலகத்தைத் தெளிவாக பார்க்கும் அளவிற்கு நீ சுத்தம் செய்வாய் என நம்புகிறேன் 586 00:48:12,893 --> 00:48:15,062 அப்போதுதான், இங்கு தான் நாங்கள் பாதுகாப்பாக இருப்போம், 587 00:48:16,063 --> 00:48:20,567 அங்கு அப்படி இருக்க முடியாது என்று எங்களுக்குப் புரியும்.” 588 00:48:24,905 --> 00:48:26,365 கடைசியாக ஏதாவது சொல்ல விரும்புகிறாயா? 589 00:48:29,993 --> 00:48:30,994 நான் உங்களை நேசிக்கிறேன். 590 00:48:34,289 --> 00:48:35,499 நானும் உன்னை நேசிக்கிறேன். 591 00:53:00,347 --> 00:53:01,348 ஆம்! 592 00:54:01,867 --> 00:54:05,537 இரண்டு வருடங்களுக்குப் பிறகு 593 00:54:36,652 --> 00:54:38,237 நீங்கள் இதைப் பார்க்க வேண்டும். 594 00:54:38,737 --> 00:54:42,241 ஜார்ஜ் வில்கின்ஸுக்கு உதவி செய்யத் தான் ஆலிசன் சந்தைக்குச் சென்றிருக்கிறாள். 595 00:54:42,241 --> 00:54:44,368 - அவனை நாம் பிடித்துவிட்டோம்... - ஆம், அவனை எனக்குத் தெரியும். 596 00:54:44,368 --> 00:54:47,204 அவன் போன வருடம் இயந்திரவியல் துறைக்கு மாறிவிட்டான். 597 00:54:48,372 --> 00:54:49,456 சரி. 598 00:54:49,456 --> 00:54:50,707 குடிமகன் குடியிருப்பவன் வில்கின்ஸ் ஜார்ஜ் 599 00:54:50,707 --> 00:54:56,588 அவன் இறந்துவிட்டான். இரயில் தளம் 120 இன் குறுக்கே விழுந்துவிட்டான். 600 00:54:56,588 --> 00:54:59,091 விபத்தா? தற்கொலையா? 601 00:54:59,842 --> 00:55:00,968 தெரியவில்லை. 602 00:55:02,594 --> 00:55:05,097 - ஹாங்க் என்ன சொல்கிறார்? - அவர் ஒன்றும் பெரிதாகச் சொல்லவில்லை. 603 00:55:05,097 --> 00:55:06,723 அவன் சென்றதை யாருமே பார்க்கவில்லை. 604 00:55:08,225 --> 00:55:10,394 என்னிடம் சொல்லாத விஷயத்தைச் சொல்லுங்கள். 605 00:55:13,981 --> 00:55:16,692 இது ஒரு கொலை என அங்கிருக்கும் பொறியாளர் ஒருவர் சொல்கிறார். 606 00:55:37,212 --> 00:55:38,755 அந்தப் பொறியாளர் எங்கே? 607 00:55:40,048 --> 00:55:40,924 அவளால் வர முடியவில்லை. 608 00:55:41,425 --> 00:55:45,053 நாங்கள் இங்கு நடந்து வருவதற்கே ஒருநாளாகிவிட்டது. அதற்குள் வேலையை முடித்துவிட்டு கிளம்பியிருப்பாள். 609 00:55:45,554 --> 00:55:46,722 எதிர்பாராமல் ஏதாவது நடந்திருக்கும். 610 00:55:52,686 --> 00:55:53,687 சரி. 611 00:56:00,986 --> 00:56:03,363 நம்முடனான சந்திப்பு முக்கியமானது, ஹாங்க். 612 00:56:03,363 --> 00:56:06,450 இவன் கொலை செய்யப்பட்டதாக அவள் சொல்கிறாள். நாம் அவளிடம் பேச வேண்டும். 613 00:56:06,450 --> 00:56:07,534 என்ன நடந்தது? 614 00:56:08,952 --> 00:56:11,246 மின் உற்பத்தி இயந்திரம். இது அவளுக்கு பிரச்சினை கொடுக்கிறது. 615 00:56:13,165 --> 00:56:14,249 அவள் என்ன செய்கிறாள்? 616 00:56:14,249 --> 00:56:16,752 சைலோவில் உள்ள அனைவரையும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறாள். 617 00:56:41,026 --> 00:56:42,027 அதோ அவள் தான். 618 00:56:43,445 --> 00:56:44,821 - அவள் பெயர் என்ன? - என்ன? 619 00:56:45,614 --> 00:56:47,157 அவளது பெயர் என்ன? 620 00:56:47,157 --> 00:56:49,952 ஜூலியட். ஜூலியட் நிக்கல்ஸ். 621 00:57:13,725 --> 00:57:15,602 உனக்கும் அவளுக்கும் இடையே என்ன நடந்தது? 622 00:57:18,480 --> 00:57:20,858 இரண்டு வருடங்களாக, உணர்வுகளுடன் போராடிக் கொண்டிருந்தாய். 623 00:57:23,777 --> 00:57:25,529 பிறகு ஜூலியட் நிக்கல்ஸை சந்தித்தாய். 624 00:57:27,030 --> 00:57:30,909 - ஒருவழியாக நான் கவனிக்கத் தொடங்கிவிட்டேன். - எதை? 625 00:57:31,660 --> 00:57:36,123 ஆலிசன் சொன்னதை. அவள் என்னிடம் சொல்ல முயற்சித்ததை. 626 00:57:37,416 --> 00:57:39,334 அது என்னவென்று உங்களிடம் சொல்ல மாட்டேன். 627 00:57:39,334 --> 00:57:43,630 ஒன்று மட்டும் தெரிந்துகொள்ளுங்கள், நான் அவளைத் தேடி கண்டுபிடிக்கப் போகிறேன். 628 00:57:45,090 --> 00:57:46,341 அவளைத் தேடி கண்டுபிடிக்கப் போகிறீர்களா? 629 00:57:47,259 --> 00:57:49,178 அவள் அதோ அங்கிருக்கிறாள். 630 00:57:51,972 --> 00:57:53,182 என்னை மன்னிக்கவும். 631 00:57:55,767 --> 00:57:58,228 கிழவனே, நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேனோ, 632 00:57:59,980 --> 00:58:01,481 அதைவிட அதிகமாக ஆலிசனை நேசிக்கிறேன். 633 00:58:05,777 --> 00:58:10,616 உண்மையிலேயே அவள் அங்கு இருந்தாலும், இல்லையென்றாலும், 634 00:58:11,783 --> 00:58:13,577 நான் முடிவெடுத்துவிட்டேன். 635 00:58:14,703 --> 00:58:16,622 எனக்கு உண்மைத் தெரிந்தாக வேண்டும். 636 00:59:14,680 --> 00:59:16,682 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்