1 00:00:40,916 --> 00:00:42,751 "பேன் ட்ரோக்லோடைட்ஸ்." 2 00:00:53,929 --> 00:00:56,014 திரு. ஜின் தனக்குப் பிடித்த குச்சியைக் கண்டுபிடித்துவிட்டது. 3 00:00:57,432 --> 00:01:00,519 - நேரம்? - 10:22, 34 வினாடிகள். 4 00:01:01,061 --> 00:01:03,604 பொறு, 35, 36... 5 00:01:03,605 --> 00:01:04,690 10:22 போதும். 6 00:01:06,275 --> 00:01:08,693 - ஏன் அவற்றுக்கு பெயர் வைக்கிறாய்? - ஏனென்றால் ஜேன் குட்டால் செய்தார். 7 00:01:08,694 --> 00:01:11,529 காடுகளில் பேன் ட்ரோக்லோடைட்ஸ் பற்றி ஆய்வு செய்த முதல் நபர் அவர்தான். 8 00:01:11,530 --> 00:01:13,573 சிம்பன்சிகளின் அறிவியல் பெயரா? 9 00:01:13,574 --> 00:01:15,199 ஆம். அவர் எப்போதும் விலங்குகளுக்கு பெயரிடுவார், 10 00:01:15,200 --> 00:01:18,286 ஏனென்றால் அவை ஒவ்வொன்றுக்கும் விசேஷமான தனித்துவம் இருப்பது அவருக்குத் தெரிந்திருந்தது. 11 00:01:18,287 --> 00:01:20,247 அதற்கு ஏன் திரு. ஜின் என்று பெயர் வைத்தாய்? 12 00:01:23,750 --> 00:01:24,835 அதனால்தான். 13 00:01:25,586 --> 00:01:26,587 பார். 14 00:01:27,171 --> 00:01:28,589 திரு. ஜின்கள் 15 00:01:29,590 --> 00:01:32,383 இப்போது எனக்குப் புரிகிறது. 16 00:01:32,384 --> 00:01:34,970 திரு. ஜின்னுக்கு துடைப்பத்தால் கூரையை இடிப்பது பிடிக்கும். 17 00:01:39,600 --> 00:01:41,726 - இப்போது என்ன செய்கிறது? - ஈட்டி செய்கிறது. 18 00:01:41,727 --> 00:01:43,979 என்ன? சிம்பன்சிகள் ஈட்டிகளை செய்யுமா? 19 00:01:44,563 --> 00:01:46,856 ஈட்டிகள், பஞ்சுகள். எல்லா வகையான கருவிகளையும். 20 00:01:46,857 --> 00:01:48,107 நீ விளையாடுகிறாய். 21 00:01:48,108 --> 00:01:51,402 இல்லை. ஜேன் குட்டால்தான் அவை கருவிகள் செய்வதைக் கண்டுபிடித்த முதல் நபர். 22 00:01:51,403 --> 00:01:54,071 சிம்ப்களையும் மக்களையும் பற்றி நமக்குத் தெரியும் என்று நாம் நினைத்த எல்லாவற்றையும் அது மாற்றியது. 23 00:01:54,072 --> 00:01:54,989 எப்படி? 24 00:01:54,990 --> 00:01:57,992 ஏனென்றால் சிம்பன்சிகள் தாங்களாகவே கருவிகளையும் ஆயுதங்களையும் செய்தால்... 25 00:01:57,993 --> 00:01:59,911 அப்படியென்றால் அவை நம்மைப் போன்றவையா? 26 00:01:59,912 --> 00:02:02,164 அல்லது நாம் அவற்றைப் போன்றவர்கள். 27 00:02:03,207 --> 00:02:05,249 ஜேன் குட்டால் தான் சந்தித்த சிம்பன்சிகளுக்கு என்ன பெயர் வைத்தார்? 28 00:02:05,250 --> 00:02:06,793 அவற்றில் ஒன்று கிரேபியர்ட். 29 00:02:08,628 --> 00:02:10,171 நம் கிரேபியர்டைப் போலவா? 30 00:02:10,172 --> 00:02:13,884 ம், அதன் முழுப் பெயர் டேவிட் கிரேபியர்ட். 31 00:02:15,260 --> 00:02:18,096 கிரேபியர்ட் கேட்டாயா? நம் இருவரின் பெயரும் அதற்கு இருந்திருக்கிறது. 32 00:02:20,766 --> 00:02:24,143 அந்த சிம்பன்சிதான் கரையான்களைப் பிடிக்க புல்லைப் பயன்படுத்துவதை அவர் முதலில் பார்த்தார். 33 00:02:24,144 --> 00:02:26,729 அவை கரையான்களைச் சாப்பிடுமா? ச்சே. 34 00:02:26,730 --> 00:02:29,274 பூச்சிகள், பழங்கள், இறைச்சி. மக்கள் சாப்பிடுவதைத்தான் அவை சாப்பிடுகின்றன. 35 00:02:29,858 --> 00:02:31,651 - மக்கள் பூச்சிகளைச் சாப்பிடுகிறார்களா? - சிலர். 36 00:02:31,652 --> 00:02:33,820 நாம் நிஜமாகவே அவற்றைப் போன்றவர்கள்தான். 37 00:02:38,992 --> 00:02:40,952 ரொம்ப அழகு. 38 00:02:40,953 --> 00:02:42,788 நினைவில் வைத்துக்கொள், நாம் கவனிக்கிறோம். 39 00:02:48,085 --> 00:02:49,586 நீ தொடக்கூடாது என்று சொன்னதாக நினைத்தேன். 40 00:02:50,170 --> 00:02:51,170 நீ சொன்னது சரிதான். 41 00:02:51,171 --> 00:02:54,257 சிம்பன்சிகளின் காடுகளை நாம் வெட்டுவதால், அவற்றை வேட்டையாடுவதால், 42 00:02:54,258 --> 00:02:57,009 தற்செயலாக மக்களின் வியாதிகள் அவற்றுக்கு பரவுவதால் அவை அழிந்து வருகின்றன. 43 00:02:57,010 --> 00:02:58,762 அவை நம்மைப் போல நோய்வாய்ப்படுமா? 44 00:03:03,934 --> 00:03:07,354 அது உன்னுடன் விளையாட ஆசைப்படுகிறது. நீ அதன் குடும்பத்தில் ஒருவன் என்று நினைக்கிறது. 45 00:03:17,155 --> 00:03:18,739 - ஜேன்? - பரவாயில்லை. 46 00:03:18,740 --> 00:03:20,575 சிம்பன்சிகளுக்கு ஆண் தலைவர்கள் இருப்பார்கள். 47 00:03:20,576 --> 00:03:22,910 திரு. ஜின் தான் தலைவன் என்பதை நமக்குக் காட்டலாம். 48 00:03:22,911 --> 00:03:24,288 அல்லது ஆயுதங்களைச் சேகரிக்கலாம். 49 00:03:25,789 --> 00:03:28,166 - நீ என்ன செய்கிறாய்? - ஈட்டியை செய்கிறேன். 50 00:03:32,212 --> 00:03:34,255 நான் எதிர்பார்த்தது அது இல்லை. 51 00:03:34,256 --> 00:03:35,340 நானும்தான். 52 00:03:37,801 --> 00:03:39,802 அது இன்னும் தான்தான் தலைவன் என்று நமக்குக் காட்ட முயற்சிக்கிறதா? 53 00:03:39,803 --> 00:03:42,431 உறுதியாகத் தெரியவில்லை. நான் இது போல எதையும் பார்த்ததில்லை. 54 00:03:51,857 --> 00:03:54,902 - அது என்ன சத்தம்? - கண்டுபிடிக்க ஒரே வழிதான் இருக்கிறது. 55 00:04:14,796 --> 00:04:16,005 அங்கே என்ன நடந்தது? 56 00:04:16,923 --> 00:04:18,884 - நம்முடைய செயல்தான். - நாம் என்ன செய்தோம்? 57 00:04:19,676 --> 00:04:22,637 சிம்பன்சிகளும் பல விலங்குகளும் வசிக்கும் காடுகளை வெட்டுகிறோம். 58 00:04:22,638 --> 00:04:25,848 - அதை மீண்டும் வளர்க்க முடியாதா? - நாம் வெட்டும் வேகத்திற்கு முடியாது. 59 00:04:25,849 --> 00:04:27,850 - அது மோசம்தான். - எனக்குத் தெரியும். 60 00:04:27,851 --> 00:04:29,852 சலவை முடிந்தது. அதை கொண்டுபோக உதவு. 61 00:04:29,853 --> 00:04:33,648 ஆனால் அம்மா, இன்னும் நிறைய சிம்பன்சி பற்றிய கண்டுபிடிப்புகள் மீதம் இருக்கின்றன. 62 00:04:33,649 --> 00:04:35,858 திரு. ஜின் ஒரு மரத்தின் மீது கல் எறிந்ததைப் பார்த்தோம். 63 00:04:35,859 --> 00:04:37,360 நமக்கு கீழ் மாடியில் இருக்கும் திரு. ஜின்னா? 64 00:04:37,361 --> 00:04:39,196 இல்லை. திரு. ஜின் சிம்பன்சி. 65 00:04:39,780 --> 00:04:42,866 - அது ஏன் கற்களை வீசியது? - நல்ல கேள்வி, அதை தெரிந்துகொள்வதுதான் வேலை. 66 00:04:43,951 --> 00:04:46,702 நாம் சுத்தம் செய்யும் வரை உன் வேலை காத்திருக்கட்டும். 67 00:04:46,703 --> 00:04:48,872 - ஆனால், அம்மா... - உன் அறையைப் பார்த்தாயா? 68 00:04:49,581 --> 00:04:51,375 வேலை முடிந்ததும் டேவிட்டுக்கு வாக்கியில் சொல். 69 00:04:54,795 --> 00:04:57,923 ஹாய், திரு. ஜின். உங்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம். 70 00:04:58,715 --> 00:05:01,634 - நான் கீழே போகிறேன். - எங்களோடு மேலே வந்துவிட்டு, கீழே போகலாம். 71 00:05:01,635 --> 00:05:05,096 என்ன தெரியும், நான் படிக்கட்டில் போகிறேன். கொஞ்சம் உடற்பயிற்சியாக இருக்கும். 72 00:05:05,097 --> 00:05:07,015 எனக்கும்தான். நான் உங்களோடு வருகிறேன். 73 00:05:07,724 --> 00:05:10,227 பிறகு நேராக வந்து, என் அறையை சுத்தம் செய்கிறேன். 74 00:05:11,687 --> 00:05:12,688 அருமை. 75 00:05:13,981 --> 00:05:16,108 இதை எடுத்துச் செல்ல உதவுகிறீர்களா? கனமாக இருக்கிறது. 76 00:05:18,402 --> 00:05:20,319 நாங்கள் ஏன் உங்களைப் பற்றி பேசினோம் என்று தெரிய வேண்டுமா? 77 00:05:20,320 --> 00:05:22,196 - இல்லை. - நீங்கள் மிகவும் வேடிக்கையானவர். 78 00:05:22,197 --> 00:05:25,324 ஒரு சிம்பன்சிக்கு உங்கள் பெயரை வைத்தேன், ஏனென்றால் எங்களை அமைதியாக இருக்கச் சொல்ல 79 00:05:25,325 --> 00:05:28,703 துடைப்பத்தால் உங்கள் கூரையை இடிப்பதைப் போல அதற்கும் குச்சியை காற்றில் சுழற்ற பிடிக்கும். 80 00:05:28,704 --> 00:05:30,288 முடிந்தவரை அப்படி செய்யாமல் இருக்க முயற்சிக்கிறேன். 81 00:05:30,289 --> 00:05:33,291 பிறகு திரு. ஜின் சிம்பன்சி ஒரு மரத்தின் மீது கல்லை வீசியதைப் பார்த்தோம். 82 00:05:33,292 --> 00:05:35,334 அது ஏன் அப்படி செய்தது? 83 00:05:35,335 --> 00:05:37,212 ஒருவேளை அந்த சத்தம் அவற்றுக்கு பிடிக்கலாம். 84 00:05:37,713 --> 00:05:40,215 சுவாரஸ்யமான கோட்பாடு. வேறு ஏதாவது யோசனைகள்? 85 00:05:41,175 --> 00:05:44,260 ஒருவேளை விளையாட்டுக்காகவா? வாலிபால் அல்லது டென்னிஸ் விளையாடுவது போல? 86 00:05:44,261 --> 00:05:46,429 சிம்பன்சிகளுக்கு ஒன்றாக விளையாடப் பிடிக்கும். 87 00:05:46,430 --> 00:05:48,890 அல்லது அப்படி செய்து தங்கள் பிரதேசத்தைக் குறிக்கலாம். 88 00:05:48,891 --> 00:05:51,226 இன்னொரு நல்ல யோசனை. நீங்கள் இது பற்றி நன்றாக யோசிக்கிறீர்கள். 89 00:05:52,019 --> 00:05:54,688 ஹாய், சிம்பன்சிகளைப் பற்றி பேசும்போது, உன்னுடையது எங்கே? 90 00:05:55,647 --> 00:05:57,482 - கிரேபியர்ட். - என்ன... 91 00:06:06,992 --> 00:06:08,243 கிரேபியர்ட்! 92 00:06:09,912 --> 00:06:11,455 கிரேபியர்ட், எங்கே இருக்கிறாய்? 93 00:06:14,875 --> 00:06:16,418 டேவிட், ஜேன் பேசுகிறேன். அவசரம். 94 00:06:19,671 --> 00:06:22,508 - டேவிட் பேசுகிறேன். பிரச்சினையா? - கிரேபியர்டைக் காணவில்லை. 95 00:06:29,306 --> 00:06:32,808 - ஹேய், நோவா. மன்னித்துவிடு, தாமதமாகிவிட்டது. - பிரச்சினை இல்லை, அப்பா. போகலாம்தானே? 96 00:06:32,809 --> 00:06:34,269 திரு. ஜின்! 97 00:06:34,811 --> 00:06:35,811 அநேகமாக இல்லை. 98 00:06:35,812 --> 00:06:37,980 அதை எங்கேயும் காணவில்லை. அது தொலைந்து போயிருக்க வேண்டும். 99 00:06:37,981 --> 00:06:39,399 அது கிடைக்கும் என்று நம்புகிறேன். 100 00:06:39,900 --> 00:06:41,359 - யார்? - கிரேபியர்ட். 101 00:06:41,360 --> 00:06:43,236 ஒரு சிம்பன்சி சுற்றுவதைப் பார்த்தீர்களா? 102 00:06:43,237 --> 00:06:46,030 அது இவ்வளவு உயரம் இருக்கும், இங்கே அழகாக கொஞ்சம் சாம்பல் நிறத்தில் இருக்கும். 103 00:06:46,031 --> 00:06:48,324 - அதனால்தான் அதற்கு அந்த பெயர். - என்ன? 104 00:06:48,325 --> 00:06:51,410 - நரைத்த தாடி. - ஜேன், அதை கடைசியாக எங்கே பார்த்தாய்? 105 00:06:51,411 --> 00:06:54,997 - பின் சந்தில், ஆனால் அது அங்கே இல்லை. - தேடிக்கொண்டே இரு. நிச்சயம் கிடைத்துவிடும். 106 00:06:54,998 --> 00:06:56,165 ஆனால் கிடைக்கவில்லை என்றால்? 107 00:06:56,166 --> 00:06:57,626 அது என் உற்ற நண்பர்களில் ஒன்று. 108 00:06:58,210 --> 00:07:00,212 நான் அவளுடைய இன்னொரு உற்ற நண்பன். 109 00:07:00,963 --> 00:07:02,672 நான் இவனுடைய சகோதரி. 110 00:07:02,673 --> 00:07:04,090 நான் இவருடைய மகன். 111 00:07:04,091 --> 00:07:05,466 ஹாய். 112 00:07:05,467 --> 00:07:07,386 ஜேன், நாங்கள் இங்கிருந்து தேடுகிறோம். 113 00:07:08,637 --> 00:07:10,639 கவலைப்படாதே, ஜேன். அதைக் கண்டுபிடிப்போம். 114 00:07:12,182 --> 00:07:14,142 நீ ஏன் மீண்டும் பின் சந்தில் பார்க்க கூடாது? 115 00:07:18,230 --> 00:07:19,439 வேடிக்கையான பிள்ளைகள். 116 00:07:32,578 --> 00:07:34,121 கிரேபியர்ட், அது நீயா? 117 00:07:37,457 --> 00:07:38,792 நான் வருகிறேன், கிரேபியர்ட். 118 00:07:44,965 --> 00:07:46,091 திரு. ஜின்? 119 00:07:46,884 --> 00:07:47,968 கிரேபியர்ட். 120 00:07:49,094 --> 00:07:51,596 பொறு, எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் திரு. ஜின் சொன்னது சரிதானா? 121 00:07:51,597 --> 00:07:54,515 சிம்பன்சிகள் தங்கள் நிலப்பகுதியைக் குறிக்க அல்லது பின்தொடர்வதற்கு 122 00:07:54,516 --> 00:07:57,936 ஒரு பாதையை உருவாக்க, அல்லது அந்த சத்தம் பிடிக்கிறது என்பதற்காக கற்களை வீசுகின்றனவா? 123 00:08:01,982 --> 00:08:05,527 ஓ, இல்லை, நீ பொறியில் சிக்கியிருக்கிறாய். நான் உதவுகிறேன். 124 00:08:09,156 --> 00:08:11,491 கவலைப்படாதே, கிரேபியர்ட். நான் அதை விடுவிக்கிறேன். 125 00:08:12,117 --> 00:08:13,118 கிட்டத்தட்ட வெட்டிவிட்டேன். 126 00:08:16,455 --> 00:08:17,789 இதோ, நீ விடுபட்டுவிட்டாய்! 127 00:08:26,632 --> 00:08:27,633 கிரேபியர்ட்? 128 00:08:36,225 --> 00:08:37,558 கிரேபியர்ட். 129 00:08:38,894 --> 00:08:40,145 அதைக் கண்டுபிடித்துவிட்டேன். 130 00:08:45,025 --> 00:08:48,861 ஹேய். கொஞ்சம் இலைகள் ஒட்டியிருக்கிறது, ஆனால் அதைத் தவிர, எனக்கு அழகாகத்தான் தெரிகிறது. 131 00:08:48,862 --> 00:08:50,197 நன்றி, திரு. ஜின். 132 00:08:50,948 --> 00:08:51,949 ஜேன், டேவிட் பேசுகிறேன். 133 00:08:52,866 --> 00:08:53,699 ஜேன் பேசுகிறேன். 134 00:08:53,700 --> 00:08:56,202 நான் கிரேபியர்டைக் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் உன் அம்மாவைப் பார்த்தேன். 135 00:08:56,203 --> 00:08:58,121 அவர் நிஜமாகவே கோபமாக இருக்கிறார். 136 00:08:58,872 --> 00:09:00,624 ரொம்ப கோவமாக. 137 00:09:02,709 --> 00:09:06,337 - நீ அங்கே திரும்பிப் போக வேண்டும். - இதைக் கண்டுபிடித்ததற்கு மீண்டும் நன்றி. 138 00:09:06,338 --> 00:09:07,506 நான் உதவ முடிந்ததில் மகிழ்ச்சி. 139 00:09:15,597 --> 00:09:16,890 கிரேபியர்ட்? 140 00:09:19,268 --> 00:09:20,269 கிரேபியர்ட். 141 00:09:22,354 --> 00:09:23,564 நீ ஏன் உயிரோடு இல்லை? 142 00:09:24,606 --> 00:09:29,194 சரி, அது சாத்தியம் என்று தோன்றவில்லை, ஆனால் உன் அம்மாவின் கோபம் அதிகரித்துக்கொண்டே போகிறது. 143 00:09:29,695 --> 00:09:33,115 டேவிட், ஜேனை உடனே வீட்டிற்கு வரச் சொல். 144 00:09:34,658 --> 00:09:36,326 உன் அம்மா உன்னை வீட்டிற்கு வரச் சொல்கிறார். 145 00:09:36,869 --> 00:09:38,078 உடனே. 146 00:09:46,837 --> 00:09:48,212 நீ எங்கே இருந்தாய்? 147 00:09:48,213 --> 00:09:51,717 நீ கொண்டு வர வேண்டிய துவைத்த துணியை திரு. ஜின் ஏன் கொண்டுவந்தார்? 148 00:09:52,634 --> 00:09:54,595 ஜேன், எனக்கு பதில் சொல். 149 00:09:55,804 --> 00:09:56,805 மன்னித்துவிடுங்கள், அம்மா. 150 00:09:58,015 --> 00:10:01,475 செல்லம். இங்கே வா. 151 00:10:01,476 --> 00:10:03,061 என்ன ஆனது? 152 00:10:04,688 --> 00:10:06,814 கிரேபியர்ட் மற்றொரு சிம்பன்சியை சந்தித்தது, 153 00:10:06,815 --> 00:10:08,941 அதோடு ஒரு குட்டி சிம்ப் இருந்தது, 154 00:10:08,942 --> 00:10:11,486 திரு. ஜின் ஒரு பொறியில் சிக்கிக்கொண்டது... 155 00:10:12,321 --> 00:10:15,199 கிரேபியர்ட் இனி என் நண்பனாக இருக்க விரும்பவில்லை என்று தோன்றுகிறது. 156 00:10:15,699 --> 00:10:17,034 திரு. ஜின் சிக்கலில் இருக்கிறாரா? 157 00:10:17,951 --> 00:10:19,161 சிம்பன்சி. 158 00:10:21,038 --> 00:10:23,373 சரி. வா, உட்கார். 159 00:10:28,670 --> 00:10:30,464 ஆழமான சுவாசி. 160 00:10:34,092 --> 00:10:35,344 மீண்டும் சொல். 161 00:10:37,387 --> 00:10:39,722 கிரேபியர்ட் வேறு சில சிம்பன்சிகளை சந்தித்தது, 162 00:10:39,723 --> 00:10:42,767 பிறகு அவர்களுடைய வசிப்பிடம் வெட்டப்படுவதைப் பார்த்தது. 163 00:10:42,768 --> 00:10:45,937 அவற்றில் ஒன்று ஒரு பொறியில் சிக்கிக்கொண்டது, நான் அதை விடுவித்தேன், 164 00:10:45,938 --> 00:10:48,440 பிறகு கிரேபியர்ட் என்னைவிட்டு போய்விட்டது. 165 00:10:49,525 --> 00:10:51,734 அதோ நம்மை போன்ற மக்கள் 166 00:10:51,735 --> 00:10:55,656 எப்படி சிம்ப்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்பதை அது பார்த்ததால்தான் என்று நினைக்கிறேன். 167 00:10:58,200 --> 00:11:01,370 - ஆனால் அது இங்கே இருக்கிறது. - உயிரோடு இல்லை. 168 00:11:03,580 --> 00:11:07,750 சரி, ஜேன், நீ எவ்வளவு போராடுகிறாய் என்று கிரேபியர்டுக்குத் தெரியும் என்று நம்புகிறேன்... 169 00:11:07,751 --> 00:11:10,211 ஆனால் சிம்பன்சிகளுக்கு நேரமில்லை, அம்மா. 170 00:11:10,212 --> 00:11:12,213 இன்னும் சில வருடங்களில் எதுவும் மிச்சம் இருக்காது. 171 00:11:12,214 --> 00:11:15,132 அவற்றைப் பற்றி நாம் இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. 172 00:11:15,133 --> 00:11:16,634 எதையெல்லாம்? 173 00:11:16,635 --> 00:11:19,888 அவை ஏன் மரங்களின் மீது கற்களை வீசுகின்றன அல்லது கருவிகளைப் பயன்படுத்துகின்றன என்று. 174 00:11:20,973 --> 00:11:24,226 உலகில் நம்மைத் தவிர வேறு எந்த மிருகமும் அப்படிச் செய்வதில்லை. 175 00:11:24,810 --> 00:11:27,646 சிம்பன்சிகளும் மனிதர்களும் ஒரே மாதிரிதான், 176 00:11:28,605 --> 00:11:30,607 பிறகு ஏன் நாம் அவற்றை காயப்படுத்துகிறோம், அம்மா? 177 00:11:36,613 --> 00:11:37,906 ஜேன்... 178 00:11:38,907 --> 00:11:40,242 எனக்குத் தெரியாது. 179 00:11:41,910 --> 00:11:43,286 ஆனால் மாற்றத்தை ஏற்படுத்த 180 00:11:43,287 --> 00:11:47,916 நீ உன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறாய் என்பது எனக்குத் தெரியும். 181 00:11:50,836 --> 00:11:53,880 ஜேன் குட்டால் என்ன சொல்கிறார்? "அவற்றை புரிந்துகொண்டால் மட்டும்தான், நாம்"... 182 00:11:53,881 --> 00:11:57,217 ஆனால் சிம்பன்சிகளே இல்லை என்றால் நம்மால் அவற்றை புரிந்துகொள்ள முடியாது. 183 00:12:30,209 --> 00:12:31,418 நான் சுத்தம் செய்கிறேன். 184 00:12:32,961 --> 00:12:34,171 நான் நன்றாக இருக்கிறேன், அம்மா. 185 00:12:40,093 --> 00:12:41,261 டேவிட்? 186 00:12:45,265 --> 00:12:47,850 நம்முடைய எல்லா சிம்பன்சி ஆராய்ச்சி பொருட்களையும் நீ என்ன செய்கிறாய்? 187 00:12:47,851 --> 00:12:49,061 தூக்கி எறியப் போகிறேன். 188 00:12:49,686 --> 00:12:51,979 - ஏன்? - ஏனென்றால் இதில் எந்த அர்த்தமும் இல்லை, டேவிட். 189 00:12:51,980 --> 00:12:54,106 ஒவ்வொரு வருடமும், அதிகமான விலங்குகள் அழிந்துபோகின்றன, 190 00:12:54,107 --> 00:12:56,485 அதற்கு ஏதாவது செய்ய போதுமான மக்கள் இல்லை. 191 00:12:57,277 --> 00:13:00,197 ஆனால் ஜேன் குட்டாலையும், நாம் சந்தித்த மற்ற எல்லோரையும் என்ன செய்வது? 192 00:13:00,781 --> 00:13:02,282 அவர்கள் ஏதோ செய்கிறார்கள். 193 00:13:03,033 --> 00:13:04,826 இன்னும் போதவில்லை. 194 00:13:07,120 --> 00:13:08,705 அதற்கு ஒரு மேற்கோள் இருக்கும். 195 00:13:10,290 --> 00:13:11,500 நம்பிக்கை இல்லை. 196 00:13:13,168 --> 00:13:14,169 கிரேபியர்ட் போய்விட்டது. 197 00:13:19,967 --> 00:13:21,176 அது அப்படி செய்யாது. 198 00:13:21,927 --> 00:13:22,927 அது உண்மைதான். 199 00:13:22,928 --> 00:13:25,430 இனி அது நண்பர்களாக இருக்க விரும்பவில்லை என்று நினைக்கிறேன். 200 00:13:28,725 --> 00:13:31,979 நமக்கு உதவக்கூடிய வேறு யாரும் உன் மனதில் தோன்றவில்லையா? 201 00:13:32,479 --> 00:13:34,106 எனக்கு கிரேபியர்ட் திரும்ப வேண்டும். 202 00:13:34,773 --> 00:13:37,568 ஒருவேளை சிம்பன்சிகளைப் பற்றி அதிகம் தெரிந்த ஒருவர்? 203 00:13:38,151 --> 00:13:39,361 யாரைப் போல? 204 00:13:48,829 --> 00:13:51,831 - உன் கண்களை மூடு... - அதை எப்படி செய்வது என்று எனக்குத் தெரியும். 205 00:13:51,832 --> 00:13:53,458 அப்படியென்றால் கண்களை மூடு. 206 00:13:57,087 --> 00:13:58,130 கற்பனை செய். 207 00:14:07,639 --> 00:14:10,100 அப்படித்தான் சிம்பன்சிகள் ஹலோ சொல்லும். 208 00:14:15,397 --> 00:14:17,065 மிகவும் அருமை, டேவிட். 209 00:14:18,358 --> 00:14:19,818 அவருக்கு என் பெயர் தெரிந்திருக்கிறது. 210 00:14:21,028 --> 00:14:22,905 ஹலோ, ஜேன். 211 00:14:24,156 --> 00:14:25,741 சிம்பன்சி போல கத்து, ஜேன். கத்து. 212 00:14:31,079 --> 00:14:33,080 அது மிகவும் மகிழ்ச்சி இருப்பது போல தெரியவில்லை. 213 00:14:33,081 --> 00:14:37,668 மனிதர்களைப் போலவே சிம்பன்சிகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. 214 00:14:37,669 --> 00:14:39,587 அவற்றால் கோபப்பட முடியும், 215 00:14:39,588 --> 00:14:41,422 அவற்றால் பயப்பட முடியும், 216 00:14:41,423 --> 00:14:43,759 அவற்றால் சோகமாக இருக்க முடியும். 217 00:14:44,593 --> 00:14:45,802 உன்னைப் போலவே, ஜேன். 218 00:14:46,428 --> 00:14:49,263 எங்கள் கிரேபியர்ட் இனி இவளுடைய நண்பனாக இருக்க விரும்பாததால் ஜேன் சோகமாக இருக்கிறாள். 219 00:14:49,264 --> 00:14:51,682 எனக்கு ஒரு கிரேபியர்டைத் தெரியும். 220 00:14:51,683 --> 00:14:54,852 டேவிட் கிரேபியர்ட், எனக்கு மிகவும் பிடித்த சிம்பன்சி. 221 00:14:54,853 --> 00:14:58,190 தெரியும். கருவிகளைப் பயன்படுத்தி நீங்கள் பார்த்த முதல் சிம்பன்சி அதுதான். 222 00:15:02,486 --> 00:15:07,448 டேவிட் கிரேபியர்ட்தான் என்னை நம்பிய முதல் சிம்பன்சி. 223 00:15:07,449 --> 00:15:09,242 அது என்னை நம்ப ஆரம்பித்தவுடன், 224 00:15:09,243 --> 00:15:12,412 மிகவும் பயந்திருந்த மற்ற சிம்பன்சிகள், 225 00:15:12,913 --> 00:15:16,457 "சரி, அவளைப் பார்த்து பயப்பட தேவையில்லை" என்று நினைத்தன என்று தோன்றுகிறது. 226 00:15:16,458 --> 00:15:19,669 அதோடு அவை எல்லாவற்றையும் தனித்தனியாக நான் தெரிந்துகொண்டேன். 227 00:15:19,670 --> 00:15:21,462 என் கிரேபியர்டும் என்னை நம்பியது, 228 00:15:21,463 --> 00:15:25,050 பிறகு மக்கள் செய்யும் எல்லா மோசமான செயல்களையும் அது பார்த்தது, என்னால் அவற்றை தடுக்க முடியவில்லை. 229 00:15:26,552 --> 00:15:28,804 இது மிகவும் நம்பிக்கையற்றதாக தோன்றும், இல்லையா? 230 00:15:30,055 --> 00:15:32,391 ஆம். நீங்களும் எப்போதாவது நம்பிக்கையற்றதாக உணர்ந்திருக்கிறீர்களா? 231 00:15:33,851 --> 00:15:37,770 கிரகத்திற்கு நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்கும் எல்லோரும் ஏதோவொரு நேரத்தில் 232 00:15:37,771 --> 00:15:39,272 நம்பிக்கையற்றவர்களாக உணர்வார்கள். 233 00:15:39,273 --> 00:15:42,942 ஆனால் நீ நம்பிக்கையற்றவளாக உணரும்போது நீ என்ன செய்ய முடியும் தெரியுமா, 234 00:15:42,943 --> 00:15:45,612 எல்லா நம்பிக்கையான விஷயங்களைப் பற்றியும் யோசிக்கலாம். 235 00:15:46,947 --> 00:15:47,947 என்ன மாதிரி? 236 00:15:47,948 --> 00:15:51,868 காலநிலை மாற்றம், உயிர்களின் பன்முகத்தன்மையின் இழப்பு போல நாம் உருவாக்கிய 237 00:15:51,869 --> 00:15:54,871 பிரச்சினைகளைப் பற்றி அதிகமான மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. 238 00:15:54,872 --> 00:15:58,499 நாம் செய்த சில தீங்கை சரிசெய்ய முயற்சிப்பதற்கான புதுமையான தீர்வுகளை 239 00:15:58,500 --> 00:16:01,252 விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் அதே நேரத்தில், 240 00:16:01,253 --> 00:16:06,299 உங்களைப் போன்ற இளைஞர்கள் உலகத்தை மேம்படுத்த என்ன செய்ய முடியும் என்று யோசிக்கிறீர்கள். 241 00:16:06,300 --> 00:16:08,302 அது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. 242 00:16:11,221 --> 00:16:14,850 நாம் வைக்கும் ஒவ்வொரு அடியிலும், நாம் உலகைக் காப்பாற்ற ஒரு அடி நெருக்கமாக இருக்கிறோம். 243 00:16:15,767 --> 00:16:18,186 அது ஜேன் குட்டாலின் மேற்கோள் போல தெரிகிறது. 244 00:16:18,187 --> 00:16:21,106 உண்மையில், அது ஜேன் கார்சியாவின் மேற்கோள் என்று நினைக்கிறேன். 245 00:16:25,903 --> 00:16:28,070 எனவே, செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி யோசி, 246 00:16:28,071 --> 00:16:31,782 உன்னை தயார்படுத்திக்கொண்டு, வெளியே சென்று அவற்றைச் செய். 247 00:16:31,783 --> 00:16:36,162 {\an8}அதனால், நீ செய்யும் எல்லா விஷயங்களுக்காகவும் நீ இந்த ஹீரோக்களில் பலகையில் இருக்க 248 00:16:36,163 --> 00:16:38,290 {\an8}தகுதியானவள் என்று நான் நினைக்கிறேன். 249 00:16:43,462 --> 00:16:45,422 சிம்பன்சிகள் எப்படி நன்றி சொல்லும்? 250 00:16:45,923 --> 00:16:48,466 சில நேரங்களில் அவை ஒன்றை ஒன்று தலையை கோதிக்கொள்ளும். 251 00:16:48,467 --> 00:16:50,176 நாங்கள் உங்கள் முடியை கோதலாமா? 252 00:16:50,177 --> 00:16:52,345 அது தேவையில்லை. 253 00:16:52,346 --> 00:16:54,096 நன்றி, டாக்டர் குட்டால். 254 00:16:54,097 --> 00:16:57,309 உனக்குப் பிடித்திருந்தால் நீ என்னை டாக்டர் ஜேன் என்று அழைக்கலாம். நீங்கள் இருவருமே. 255 00:16:58,227 --> 00:17:02,605 இப்போது, தாமதமாகும் முன்பு இந்த உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கு நிறைய 256 00:17:02,606 --> 00:17:03,981 செய்ய வேண்டியிருக்கிறது. 257 00:17:03,982 --> 00:17:07,569 எனவே சென்று நம் கிரகத்தைக் காப்பாற்ற உதவுங்கள். 258 00:17:16,244 --> 00:17:17,663 நன்றி, டாக்டர் ஜேன். 259 00:17:19,998 --> 00:17:21,499 நீ எங்கே போகிறாய்? 260 00:17:21,500 --> 00:17:24,085 சத்தியமாக என் அறையை பிறகு சுத்தம் செய்வேன், அம்மா, ஆனால் இப்போது... 261 00:17:24,086 --> 00:17:25,877 இல்லை, நீ என்னைச் சொல்ல விடவில்லை. 262 00:17:25,878 --> 00:17:30,717 கிரேபியர்ட் இல்லாமல் எங்கே போகிறாய்? 263 00:17:31,844 --> 00:17:33,428 நான் அது மேல் இருந்த அழுக்கை துடைத்துவிட்டேன். 264 00:17:36,974 --> 00:17:37,932 டேவிட்? 265 00:17:37,933 --> 00:17:39,935 சிம்பன்சிகள் இப்படித்தான் நன்றி சொல்லும். 266 00:17:40,686 --> 00:17:42,311 அவை முதலில் கேட்க வேண்டும். 267 00:17:42,312 --> 00:17:45,607 கிரேபியர்டை சுத்தம் செய்ததற்கு நன்றி சொல்ல நாங்கள் உங்கள் தலைமுடியை கோதலாமா? 268 00:17:47,609 --> 00:17:48,819 சரி. 269 00:17:52,573 --> 00:17:55,325 சரி, வினோதமாக இருக்கிறது. சரி, கிளம்புங்கள். 270 00:18:09,923 --> 00:18:11,424 - இந்த வழியாக. - உனக்கு எப்படித் தெரியும்? 271 00:18:11,425 --> 00:18:14,177 உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் எந்த வழியாக போவது என்று அவற்றுக்கு தெரிய அவை இந்தக் 272 00:18:14,178 --> 00:18:17,305 - குறிகளை ஏற்படுத்துகின்றன என்று நினைக்கிறேன். - X கிரேபியர்டைக் குறிக்கிறது. 273 00:18:17,306 --> 00:18:18,640 அதை நம்புவோம். 274 00:18:21,268 --> 00:18:23,187 திரு. ஜின். நான் சத்தம் போட்டுவிட்டேனா? 275 00:18:23,729 --> 00:18:25,688 ஏன் எல்லோரும் அதையே என்னிடம் கேட்கிறார்கள்? 276 00:18:25,689 --> 00:18:28,191 இல்லை. ஜேனைப் பார்க்க நினைத்தேன். 277 00:18:28,192 --> 00:18:30,359 அவள் முன்பு மிகவும் வருத்தமாக இருந்தாள். 278 00:18:30,360 --> 00:18:31,903 உங்கள் அக்கறை புரிகிறது. 279 00:18:31,904 --> 00:18:33,154 வருத்தமாக இருந்தாள். 280 00:18:33,155 --> 00:18:36,074 நான் அவளை மிகவும் நம்பிக்கையற்றவளாகப் பார்த்தது அதுதான் முதல் முறை. 281 00:18:36,867 --> 00:18:38,994 ஆம். அது எப்படி இருக்கும் என்று தெரியும். 282 00:18:40,204 --> 00:18:41,455 நான் அவளிடம் பேசலாமா? 283 00:18:42,080 --> 00:18:45,082 அவள் டேவிட்டோடு ஆராய்ந்து கொண்டிருக்கிறாள், வந்தவுடன் மெஸ்சேஜ் அனுப்புகிறேன். 284 00:18:45,083 --> 00:18:46,334 இல்லை, பரவாயில்லை. 285 00:18:46,335 --> 00:18:48,462 நான் அவளை சந்திக்கிறேனா என்று பார்க்கிறேன். பை. 286 00:18:49,171 --> 00:18:50,172 பை. 287 00:18:57,930 --> 00:19:01,974 பார், அந்த குட்டி சிம்ப் மரத்தின் மீது கல்லை எறிய கிரேபியர்டிடமிருந்து கற்றுக்கொள்கிறது. 288 00:19:01,975 --> 00:19:03,060 ஆனால் ஏன்? 289 00:19:03,894 --> 00:19:05,144 எனக்கு இன்னும் தெரியவில்லை. 290 00:19:05,145 --> 00:19:08,272 ஒரு பாதையைக் குறிக்க, அல்லது அந்த சத்தம் பிடித்திருக்கலாம், 291 00:19:08,273 --> 00:19:10,983 அல்லது நாம் இன்னும் யோசிக்காத காரணத்திற்காக கூட இருக்கலாம். 292 00:19:10,984 --> 00:19:13,319 அதனால்தான் விலங்குகளை காப்பாற்றுவது முக்கியம். 293 00:19:13,320 --> 00:19:15,572 அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள இன்னும் நிறைய இருக்கின்றன. 294 00:19:28,961 --> 00:19:32,129 கிரேபியர்ட், சிம்பன்சிகளுக்கு மக்கள் நிறைய தீங்கு விளைவிப்பது எனக்குத் தெரியும். 295 00:19:32,130 --> 00:19:34,674 ஆனால் அந்த குட்டி சிம்ப் உன்னிடமிருந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது போல, 296 00:19:34,675 --> 00:19:36,385 மக்களும் எங்களிடமிருந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். 297 00:19:37,970 --> 00:19:41,264 நமக்கு ஒரே உலகம், ஒரே வீடுதான் இருக்கிறது என்று அவர்களுக்குப் புரியவைக்கலாம். 298 00:19:41,265 --> 00:19:43,517 அதைப் பாதுகாக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று. 299 00:19:47,855 --> 00:19:51,023 சில நேரங்களில் நம்பிக்கையற்றவர்களாக உணரலாம், ஆனால் நாம் முயற்சி செய்ய வேண்டும். 300 00:19:51,024 --> 00:19:52,776 நான் ஒருபோதும் முயற்சியை நிறுத்த மாட்டேன். 301 00:19:55,404 --> 00:19:56,405 நானும்தான். 302 00:20:06,123 --> 00:20:07,082 உனக்கும் நன்றி. 303 00:20:16,800 --> 00:20:17,801 திரு. ஜின்? 304 00:20:18,385 --> 00:20:19,552 டேவிட் எங்கே? 305 00:20:19,553 --> 00:20:22,973 நாங்கள் எங்கள் வேலையை முடித்தோம், ஆனால் இன்னும் எனது அறையை சுத்தம் செய்ய வேண்டும். 306 00:20:24,057 --> 00:20:26,101 - நீ நன்றாக உணர்கிறாயா? - ஆம். 307 00:20:28,061 --> 00:20:31,898 அப்படித்தான் நினைக்கிறேன். நான் போதுமான அளவு செய்யவில்லை என்று சில நேரங்களில் கவலைப்படுகிறேன். 308 00:20:31,899 --> 00:20:33,192 நீ விளையாடுகிறாய்தானே? 309 00:20:35,694 --> 00:20:36,820 எழுந்திரு. 310 00:20:38,238 --> 00:20:39,239 என் பின்னாடி வா. 311 00:20:40,824 --> 00:20:44,411 நீ இல்லாமல், நாம் பேட்டரிகளை மறுசுழற்சி செய்திருக்க மாட்டோம். 312 00:20:46,622 --> 00:20:49,625 திரு. படேலின் அப்பார்ட்மெண்டுக்கு முன்னால் பட்டாம்பூச்சிகள் இருந்திருக்காது. 313 00:20:52,211 --> 00:20:53,085 சிங்கத்தைக் காப்பாற்றுங்கள் 314 00:20:53,086 --> 00:20:55,923 உலகெங்கிலும் உள்ள விலங்குகளுக்கு நாம் உதவ முயற்சித்திருக்க மாட்டோம். 315 00:20:59,343 --> 00:21:01,970 நம்மிடம் வௌவால் கூடுகள் இருந்திருக்காது. 316 00:21:02,804 --> 00:21:05,182 - மீண்டும் எனக்கு ஞாபகப்படுத்து அவை ஏன்... - பூச்சிகளை சாப்பிடுகின்றன. 317 00:21:05,682 --> 00:21:06,683 சரி. 318 00:21:07,643 --> 00:21:09,686 ஒவ்வொரு தொட்டியிலும் என்ன போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரிந்திருக்காது. 319 00:21:10,479 --> 00:21:11,855 வா. 320 00:21:16,777 --> 00:21:19,153 நீ இல்லாமல் இவை எதுவும் நடந்திருக்காது. 321 00:21:19,154 --> 00:21:23,742 - டேவிட் மற்றும் பலர் இல்லாமல். - ஆம், ஆனால் நீ எல்லோரையும் ஊக்கப்படுத்தினாய். 322 00:21:26,328 --> 00:21:28,955 அழிந்து வரும் சிம்பன்சிகளுக்கு உதவ மனுவில் கையெழுத்திடுவீர்களா? 323 00:21:28,956 --> 00:21:30,832 - நிச்சயமாக. - கொஞ்சம் பணத்தை நன்கொடையாக கொடுப்பீர்களா? 324 00:21:31,959 --> 00:21:33,752 - எவ்வளவு? - ஜேன்? 325 00:21:34,711 --> 00:21:37,798 அறையை சுத்தம் செய், பிறகு உலகைக் காப்பாற்றலாம். 326 00:21:38,924 --> 00:21:39,925 போக வேண்டும். 327 00:21:54,064 --> 00:21:56,984 வா, கிரேபியர்ட். நாம் காப்பாற்ற ஒரு உலகம் இருக்கிறது. 328 00:22:01,905 --> 00:22:03,991 "சிம்பன்சிகளைக் காப்பாற்ற உதவுங்கள்." 329 00:22:06,159 --> 00:22:08,369 - ஜேன். - நான் சுத்தம் செய்கிறேன். 330 00:22:08,370 --> 00:22:11,039 அதைப் பார்க்க நான் உள்ளே வரவில்லை. இங்கே வா. 331 00:22:17,337 --> 00:22:18,671 இந்த வீடியோ எங்கிருந்து வந்தது? 332 00:22:18,672 --> 00:22:20,840 - சிம்ப் ஈடன். - சிம்ப் ஈடனா? 333 00:22:20,841 --> 00:22:22,800 மீட்கப்பட்ட சிம்பன்சிகள் கவனித்துக்கொள்ளப்படும் 334 00:22:22,801 --> 00:22:25,052 டாக்டர் ஜேனின் சிம்பன்சி சரணாலயங்களில் ஒன்றா? 335 00:22:25,053 --> 00:22:26,972 ஆம், என்ன தெரியுமா? 336 00:22:29,600 --> 00:22:32,185 உனக்கு கொஞ்சம் ஊக்கம் தேவைப்படலாம் என்று நினைத்தேன், அதனால் நான் 337 00:22:32,186 --> 00:22:34,228 யானா ஸ்வார்டிடம் பேசி ஒரு அழைப்புக்கு ஏற்பாடு செய்தேன். 338 00:22:34,229 --> 00:22:36,731 - அவர் சிம்ப் ஈடனில் வேலை செய்கிறார். - அவர் யார் என்று தெரியும். 339 00:22:36,732 --> 00:22:38,733 ஆஹா, இது நிஜமாகவே அருமையானது. நன்றி, அம்மா. 340 00:22:38,734 --> 00:22:39,943 மகிழ்ச்சியாக இரு. 341 00:22:41,987 --> 00:22:45,323 - ஹாய். நீங்கள் ஜேன், டேவிட் ஆக இருக்க வேண்டும். - ஹாய், யானா. 342 00:22:45,324 --> 00:22:47,408 உங்களிடம் கேட்க பல கேள்விகள் இருக்கின்றன. 343 00:22:47,409 --> 00:22:50,328 சிம்ப் ஈடனில் இருக்கும் சிம்ப்கள் எப்போதாவது மீண்டும் காட்டுக்குள் விடப்படுமா? 344 00:22:50,329 --> 00:22:53,497 இல்லை, அவை தங்கள் இயற்கை வாழ்விடத்தில் எப்படி உயிர் பிழைப்பது என்று கற்றுக்கொள்ள வேண்டும், 345 00:22:53,498 --> 00:22:55,249 அதை அவை தங்கள் அம்மாவிடம் கற்றுக்கொள்கின்றன. 346 00:22:55,250 --> 00:22:59,462 ஆனால் வேட்டையாடுதல், காடழிப்பு காரணமாக பல தங்கள் அம்மாவை இழந்துவிட்டு, 347 00:22:59,463 --> 00:23:01,964 சர்க்கஸுக்கு போகின்றன அல்லது செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. 348 00:23:01,965 --> 00:23:03,341 அது அவற்றுக்கு மோசமானது. 349 00:23:03,342 --> 00:23:04,550 அது மிகவும் வருத்தமாக இருக்கிறது. 350 00:23:04,551 --> 00:23:07,094 அதனால்தான் இந்த மீட்கப்பட்ட சிம்பன்சிகளுக்கு 351 00:23:07,095 --> 00:23:10,224 சிறந்த வாழ்க்கையை கொடுக்கக்கூடிய ஒரு சரணாலயம் இருப்பது மிகவும் முக்கியமானது. 352 00:23:13,143 --> 00:23:14,143 அது என்னது? 353 00:23:14,144 --> 00:23:16,187 சிம்ப்கள் ஸ்டானியைப் பார்த்திருக்க வேண்டும். 354 00:23:16,188 --> 00:23:18,440 பொறுங்கள். ஸ்டானி, சிம்பன்சி விஸ்பரரை எழுதியவரா? 355 00:23:19,816 --> 00:23:22,527 அவர் சிம்ப் ஈடனில் வேலை செய்கிறார், அவர் சிம்பன்சி நிபுணர். 356 00:23:22,528 --> 00:23:24,446 ஜேன் நிபுணர்கள் பற்றிய நிபுணர். 357 00:23:25,614 --> 00:23:27,657 உண்மையில் உங்கள் இருவருக்கும் ஒரு ஆச்சரியம் இருக்கிறது. 358 00:23:27,658 --> 00:23:29,076 நீங்கள் இதைப் பார்க்க வேண்டும். 359 00:23:32,871 --> 00:23:34,581 அவர் சிம்பன்சிகளுக்கு உணவளிக்கிறார். 360 00:23:36,291 --> 00:23:37,250 ஹாய், நண்பர்களே. 361 00:23:37,251 --> 00:23:38,584 அவை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கின்றன. 362 00:23:38,585 --> 00:23:40,169 ஹாய், ஜேன். ஹாய், டேவிட். 363 00:23:40,170 --> 00:23:42,339 - ஹாய், ஸ்டானி. - ஹாய், ஸ்டானி. 364 00:23:42,965 --> 00:23:45,049 ஹேய், சிம்பன்சிகள் எல்லாம் எங்கே போகின்றன? 365 00:23:45,050 --> 00:23:47,802 அவை கூடுதல் உணவைத் தேடுவதற்குப் புறப்பட்டிருக்கலாம். 366 00:23:47,803 --> 00:23:50,972 அவை என்ன நினைக்கின்றன, உணர்கின்றன என்பதை எங்களிடம் சொல்ல நாங்கள் ஸ்டானியை நம்பியுள்ளோம், 367 00:23:50,973 --> 00:23:52,765 அதன்மூலம் நாங்கள் அவற்றை சரியாக கவனித்துக்கொள்ள முடியும். 368 00:23:52,766 --> 00:23:55,184 அதனால்தான் நீங்கள் ஒரு சிம்பன்சி விஸ்பரர். 369 00:23:55,185 --> 00:23:56,644 ஆம். 370 00:23:56,645 --> 00:23:58,104 எப்படி உங்களுக்கு அந்த செல்லப்பெயர் வந்தது? 371 00:23:58,105 --> 00:24:01,107 டாக்டர் ஜேன் குட்டால் எனக்கு அந்தப் பெயரை வைத்தார். 372 00:24:01,108 --> 00:24:03,776 டாக்டர் ஜேன் அந்தப் பெயரை வைத்தாரா? அது மிகவும் அருமை. 373 00:24:03,777 --> 00:24:06,153 ஸ்டானி, எவ்வளவு காலமாக சிம்பன்சிகளுடன் வேலை செய்கிறீர்கள்? 374 00:24:06,154 --> 00:24:08,197 என் வாழ்க்கையின் கிட்டத்தட்ட பாதி காலம். 375 00:24:08,198 --> 00:24:11,450 இதில் நான் சிம்ப் குட்டிகளை கவனித்துக்கொள்கிறேன். 376 00:24:11,451 --> 00:24:12,535 இது போகோ. 377 00:24:12,536 --> 00:24:16,330 இதில் சிம்பன்சிகளுடன் எப்படி வாழ்வது என்று ஒரு சமூகத்திற்கு நான் வகுப்பெடுக்கிறேன். 378 00:24:16,331 --> 00:24:18,499 நீங்கள் ஏராளமான சிம்பன்சிகளுக்கு உதவியிருப்பீர்கள். 379 00:24:18,500 --> 00:24:21,627 அவை என் குடும்பத்தைப் போன்றவை, எனக்கு நிறைய கற்றுக்கொடுக்கின்றன. 380 00:24:21,628 --> 00:24:22,753 என்ன மாதிரியானவற்றை? 381 00:24:22,754 --> 00:24:24,839 மன்னிக்கும் குணத்தையும் நம்பிக்கையையும். 382 00:24:24,840 --> 00:24:26,549 நம்பிக்கை பற்றி எப்படி கற்றுக்கொடுத்தன? 383 00:24:26,550 --> 00:24:29,468 சிம்பன்சி சரணாலயத்திற்கு வரும்போது, 384 00:24:29,469 --> 00:24:32,597 அவை மிகவும் நோய்வாய்ப்பட்டு, மிகவும் பயந்திருக்கும். 385 00:24:32,598 --> 00:24:35,391 நல்ல கவனிப்புக்குப் பிறகு, 386 00:24:35,392 --> 00:24:37,935 அவை ஆரோக்கியமடைந்து, சூழ்நிலைகளுக்கு அடிமையாகாது. 387 00:24:37,936 --> 00:24:40,062 அது எனக்கு நம்பிக்கை கொடுக்கிறது. 388 00:24:40,063 --> 00:24:41,397 உதவ நாம் என்ன செய்யலாம்? 389 00:24:41,398 --> 00:24:46,319 நம்முடைய நெருங்கிய உறவினர்களான சிம்பன்சிகளைப் பற்றி நீங்கள் கற்றுக்கொண்டதை 390 00:24:46,320 --> 00:24:50,948 உங்கள் நண்பர்களோடும் குடும்பத்தினரோடும் பகிர்ந்துகொள்வது முக்கியம். 391 00:24:50,949 --> 00:24:53,951 ஆம். நீங்கள் எங்கே வாழ்ந்தாலும், அவற்றின் வசிப்பிடமான 392 00:24:53,952 --> 00:24:58,372 காட்டை அழிக்காத நிலையான ஆதார தயாரிப்புகளை வாங்குவதன் மூலம் காட்டு விலங்குகளுக்கு உதவலாம். 393 00:24:58,373 --> 00:25:01,375 அவை உருவாக்கப்படும் போது கிரகத்திற்கு குறைவான தீங்கை விளைவிக்கும். 394 00:25:01,376 --> 00:25:04,670 சிம்பன்சிகளுக்கும் பிற விலங்குகளுக்கும் உயிர்வாழ, காடு தேவை. 395 00:25:04,671 --> 00:25:07,673 நம்முடைய பொழுதுபோக்குக்காக இந்த பூமியில் விலங்குகள் இல்லை என்பதை 396 00:25:07,674 --> 00:25:08,966 நினைவில்கொள்ள வேண்டும். 397 00:25:08,967 --> 00:25:11,010 அதை முழு உலகத்துக்கும் தெரியப்படுத்த வேண்டும். 398 00:25:11,011 --> 00:25:13,055 - நான் எல்லோரிடமும் சொல்வேன். - நானும்தான். 399 00:25:13,931 --> 00:25:15,598 சிம்பன்சிகள் எப்படி குட்பை சொல்லும்? 400 00:25:15,599 --> 00:25:19,895 சிம்பன்சி கடைசியாக இப்படித்தான் குட்பை சொல்லும். 401 00:25:31,657 --> 00:25:34,450 பை, யானா. பை, ஸ்டானி. 402 00:25:34,451 --> 00:25:36,620 பை, சிம்பன்சிகளே. 403 00:25:37,412 --> 00:25:40,332 - அம்மா, இதற்கு மிக்க நன்றி. - ஆம், நன்றி, ஜேனின் அம்மா. 404 00:25:40,916 --> 00:25:42,458 கிரேபியர்டுக்கும் இது பிடித்திருக்கும். 405 00:25:42,459 --> 00:25:43,961 அதற்கு கண்டிப்பாக பிடித்திருக்கும். 406 00:25:45,254 --> 00:25:47,588 இப்போது, இந்த அறை தானாக சுத்தமாகப் போவதில்லை. 407 00:25:47,589 --> 00:25:48,548 பை, டேவிட். 408 00:25:48,549 --> 00:25:50,384 - பை. - பை, டேவிட். 409 00:25:52,928 --> 00:25:54,888 உனக்கு இவை தேவைப்படும் என்று தோன்றியது. 410 00:25:56,056 --> 00:25:57,057 நன்றி, அம்மா. 411 00:26:00,394 --> 00:26:03,146 இதோ. நான் யானா படத்தை ஒட்டுகிறேன், நீ ஸ்டேனி படத்தை ஒட்டுகிறாயா? 412 00:26:59,161 --> 00:27:01,163 வசனத் தமிழாக்கம் அருண்குமார்