1 00:00:51,301 --> 00:00:54,346 உலக வெப்பநிலை மாற்றம் +1.80 டிகிரி செல்சியஸ் 2 00:00:55,722 --> 00:00:59,226 இந்த நூற்றாண்டில் அழிந்த உயிரினங்கள் +4,11,227 3 00:01:21,331 --> 00:01:23,333 முடிவைப் பற்றிச் சொல். 4 00:01:26,920 --> 00:01:28,297 முடிவா? 5 00:01:29,339 --> 00:01:31,717 வாழ்க்கை எனும் வட்டம் எங்கே முடிவடைகிறது? 6 00:01:33,760 --> 00:01:39,183 அது எப்போதுமே இப்போது முடிந்து, இப்போது தொடங்குகிறது. 7 00:01:42,352 --> 00:01:47,816 இந்த உலகம் அனுமதிக்கும் வரை நமது சுவாசத்தில் பிறந்து, வீழ்கிறோம். 8 00:01:50,903 --> 00:01:53,405 நாட்கள் நம் மீது சாய்ந்திருந்து, 9 00:01:55,157 --> 00:01:57,534 பிறகு கடந்து செல்லும். 10 00:02:00,078 --> 00:02:04,333 நாம் வீழும் வரை இப்போது என்பது அடுத்தது ஆகும். 11 00:02:05,250 --> 00:02:07,503 எடுத்துக்கொண்டவை மீண்டும் வரும். 12 00:02:12,007 --> 00:02:14,468 அதைத்தான் தெரிந்துகொள்ள விரும்புகிறாயா? 13 00:02:15,594 --> 00:02:18,764 நான் அனைத்தையும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 14 00:02:26,438 --> 00:02:27,731 ஹேய், புலிக்குட்டி. 15 00:02:33,362 --> 00:02:35,155 நீ டிவி பார்த்துக்கொண்டே தூங்கிவிட்டாய். 16 00:02:36,073 --> 00:02:41,912 பாட்டி எனக்கு கதை வாசித்துக்கொண்டிருந்தார். பறக்கும் யானைகள் இருக்கும் கதை. 17 00:02:43,747 --> 00:02:48,001 ஆனால்... அவற்றால் பறக்க முடியாது. 18 00:02:50,629 --> 00:02:51,672 அப்படித்தானே? 19 00:02:53,423 --> 00:02:56,593 இல்லை, கண்ணே, அவற்றுக்கு தும்பிக்கை இருக்கும், இறக்கை இருக்காது. 20 00:02:57,594 --> 00:02:59,638 உனக்கு அது தெரியுமே. உனக்கு படங்களைக் காட்டியுள்ளேன். 21 00:03:01,765 --> 00:03:03,100 வா, நண்பா. போகலாம். 22 00:03:09,147 --> 00:03:12,359 இது இன்னொரு ஆரஞ்சு தினமாக இருக்காது என நம்புகிறேன். 23 00:03:16,280 --> 00:03:18,574 ஆகஸ்டு 17, 2046. 24 00:03:18,574 --> 00:03:21,994 காலி, கொலம்பியாவில் சூரியன் மறையும் வரை ஆரஞ்சு எச்சரிக்கை அமலில் உள்ளது. 25 00:03:22,494 --> 00:03:24,162 வெளியில் இருக்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். 26 00:03:29,585 --> 00:03:31,545 கொலம்பியா 27 00:03:31,545 --> 00:03:34,047 இந்த சீசனில் இங்கே ஒரு ஹம்ப்பேக் கூட வரவில்லை. 28 00:03:34,798 --> 00:03:36,884 நான் பழைய, கைவிடப்பட்ட வீட்டில், யாரும் இருக்கின்றனரா என்று 29 00:03:36,884 --> 00:03:38,135 கத்துவது போலுள்ளது. 30 00:03:39,636 --> 00:03:42,139 அவை அங்கே இருந்தால், தொடர்புகொள்ள விரும்புவது போலத் தெரியவில்லை. 31 00:03:42,806 --> 00:03:45,350 இப்போது அதைப் பற்றி யோசிக்கும்போது, அது உன்னை நினைவுபடுத்துகிறது. 32 00:03:46,059 --> 00:03:48,562 இன்னொரு திமிங்கிலம் கரை ஒதுங்கியதைப் பார்த்தேன். 33 00:03:48,562 --> 00:03:52,107 மூன்று திமிங்கிலங்கள் ஃபேர்வெல் கரையில் ஒதுங்கியுள்ளன. ஏனென்று உனக்கு எதுவும் தெரியுமா? 34 00:03:52,608 --> 00:03:54,526 உலகம் மோசமாக இருப்பதற்காக, ஆரோக்கியமான, 35 00:03:54,526 --> 00:03:58,363 அழகான விலங்கு தனது ஓர் உயிரை ஏன் மாய்த்துக்கொள்ளும்? 36 00:03:58,864 --> 00:04:01,742 - தெரியவில்லை. நீயே சொல். - சரி, மார்கோ. 37 00:04:01,742 --> 00:04:03,452 உன்னை அழைத்தது நல்ல யோசனை இல்லை என நினைக்கிறேன். 38 00:04:03,452 --> 00:04:06,079 சரி. நீ போட்டி நிறுவனத்தில் வேலை செய்கிறாய், பெக். 39 00:04:06,079 --> 00:04:08,207 நீ கேட்பது, பெருநிறுவன உளவுச் செய்தி, 40 00:04:08,207 --> 00:04:10,125 தொழில்முறை மரியாதை இல்லை. 41 00:04:10,125 --> 00:04:13,420 டுமாரோஜூவானது ஹேக்கர்கள், உளவாளிகள், போட்டி நிறுவனத்தில் இருக்கும் 42 00:04:13,420 --> 00:04:15,631 பழைய காதலர்கள் தகவலுக்காக கால் செய்வது பற்றி 43 00:04:15,631 --> 00:04:17,048 மிகவும் பயத்தில் உள்ளது. 44 00:04:18,257 --> 00:04:21,136 என்னைப் போலவே நீயும் எல்லா ரகசியத்தன்மை ஆவணங்களிலும் கையெழுத்திட்டிருப்பாய். 45 00:04:21,136 --> 00:04:23,430 இந்த உலகத்தில் விலங்குகளும் நேரமும் குறைந்துகொண்டே வருகின்றன. 46 00:04:23,430 --> 00:04:25,182 பற்றாக்குறை இருந்தால் மதிப்பு அதிகரிக்கும். 47 00:04:25,182 --> 00:04:27,434 அதனால்தான் தகவலைப் பகிரும்படி கேட்கிறேன். 48 00:04:28,644 --> 00:04:30,896 நான் வேலை செய்த திமிங்கிலம் இருந்தால், உனக்குக் கூறுகிறேன். 49 00:04:31,522 --> 00:04:32,940 நீயும் எனக்கு அதைச் செய்வாய் என நம்புகிறேன். 50 00:04:35,901 --> 00:04:38,570 நீ செய்வாய்தானே? 51 00:04:40,864 --> 00:04:41,907 என்னிடம் ஒன்று இருந்தது. 52 00:04:44,535 --> 00:04:48,830 போன வாரம்தான். பிறகு அவள் தொடர்புகொள்ளவே இல்லை. 53 00:04:48,830 --> 00:04:52,042 பல நாட்களாக எதுவுமில்லை. இப்போது அதை நான் இழந்துவிட்டேன். 54 00:04:54,253 --> 00:04:56,171 பெரும்பாலான நாட்களில் பெருங்கடல் வெப்பநிலை 90க்கு மேல் உள்ளது. 55 00:04:56,171 --> 00:05:00,217 கிரில்கள் கிட்டத்தட்ட அழிந்துவிட்டன. 56 00:05:00,217 --> 00:05:03,846 உணவுச் சங்கிலியே சீர்குலைந்து வருகிறது. 57 00:05:05,806 --> 00:05:08,350 அவள் திரும்பி வரவில்லை எனில், அவர்கள் நம் பிசினஸை மூடிவிடுவார்கள். 58 00:05:09,226 --> 00:05:11,645 அவள் திரும்புவாள் என நம்புவோம், பெக். 59 00:05:13,480 --> 00:05:15,941 வெளியே ஒரு திமிங்கிலமாவது இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. 60 00:05:17,985 --> 00:05:18,986 தொடர்பில் இரு. 61 00:05:31,874 --> 00:05:34,001 வெப்பம் மற்றும் காற்றின் தரத்துடன் 62 00:05:34,001 --> 00:05:35,836 உணர்வுரீதியான அழுத்தமும் சம்மர் ஹார்ட் தொடர்பான 63 00:05:35,836 --> 00:05:38,755 இதய நோய் நிகழ்வுகளை ஏற்படுத்துவதாகக் கண்டறிந்துள்ளனர். 64 00:05:38,755 --> 00:05:39,715 தெரியும். 65 00:05:39,715 --> 00:05:42,885 ”சம்மர் ஹார்ட்” எனப் பொதுவாக அறியப்படும் வெப்ப இதய தசைநோயால் 66 00:05:42,885 --> 00:05:46,597 தற்போதைய தீவிர வெப்ப நிகழ்வின்போது நான்கு பேர் இறந்துள்ளனர்... 67 00:05:47,306 --> 00:05:49,933 பெட் பாட்ரோல் உடல்நல மானிட்டர் ஆஃப் செய்யப்படுகிறது. 68 00:05:59,902 --> 00:06:02,696 சரி, நீ வெளியே பாதுகாப்பாக இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என உனக்குத் தெரியும். 69 00:06:02,696 --> 00:06:04,364 - அம்மா... - இந்த பின் நீலமாக இருப்பது... 70 00:06:04,364 --> 00:06:06,450 தெரியும். அது என் பொறுப்பு. 71 00:06:06,450 --> 00:06:07,826 அது மஞ்சளாக மாறினால்? 72 00:06:07,826 --> 00:06:10,078 - நான் அமைதியாக வேண்டும். - அது சிவப்பாக எரிந்தால்? 73 00:06:10,078 --> 00:06:12,664 - மகிழ்ச்சியான விஷயங்களை யோசிக்க வேண்டும். - சரி. 74 00:06:16,752 --> 00:06:17,961 சரி. 75 00:06:51,537 --> 00:06:53,664 ரெபெக்கா ஷீரர், காப்பக நிபுணர். 76 00:06:53,664 --> 00:06:59,044 பணிபுரியும் நிறுவனம், மெனாஜரி2100. வரவேற்கிறோம். இலக்கைத் தேர்ந்தெடுக்கவும். 77 00:06:59,711 --> 00:07:01,672 ஃபீல்டு சைட், பாஹியா மாலகா. 78 00:07:15,310 --> 00:07:18,897 கடைசியாகத் தொடர்புகொண்ட 005 காப்பக அமர்வை பிளே செய். 79 00:07:20,357 --> 00:07:22,609 நான் ஒரு தாய். நீ தாயா? 80 00:07:23,902 --> 00:07:25,279 நான்கு முறை. 81 00:07:26,154 --> 00:07:27,656 கடைசியாக எப்போது பெற்றாய்? 82 00:07:28,282 --> 00:07:32,619 இப்போதிலிருந்து ஐந்து முறைகளுக்கு முன் அவன் இந்த உலகத்திற்குள் வந்தான். 83 00:07:33,662 --> 00:07:37,040 புரிந்துகொள்ளல் எதுவுமின்றி ஆர்வத்துடன் இருந்தான். 84 00:07:39,376 --> 00:07:42,504 அவன் எப்போதும் என் அருகிலேயே இருந்தான். 85 00:07:44,590 --> 00:07:48,385 நான் அவனுக்கு எல்லாத் திசைகளிலும் உணவாக இருந்தேன். 86 00:07:49,803 --> 00:07:52,055 எனக்கு அவன் வாழ்வின் நோக்கமாக இருந்தான். 87 00:07:53,599 --> 00:07:55,475 என்ன செய்ய வேண்டும் என உனக்கு எப்படித் தெரிந்தது? 88 00:07:56,268 --> 00:07:58,562 இதை என் அம்மா எனக்குச் செய்தார். 89 00:07:59,313 --> 00:08:02,983 அவர் இந்தப் பாதையையும் சிக்கலையும் கற்றுக்கொடுத்தார். 90 00:08:05,068 --> 00:08:07,321 - மார்னிங், எஸ்ரா. - மார்னிங். 91 00:08:07,321 --> 00:08:08,697 இன்று எப்படி இருக்கிறாய்? 92 00:08:15,078 --> 00:08:17,331 இன்று எந்த மாதிரியான நாள் என்று தெரியும் தானே? 93 00:08:17,331 --> 00:08:18,665 ஆம், ஆரஞ்சு தினம். 94 00:08:19,249 --> 00:08:21,502 அதனால் 15 நிமிடங்களுக்கு மேல் வெளியே இருக்கக் கூடாது. 95 00:08:22,085 --> 00:08:24,880 நெருப்பு இன்னும் எரிவதால், காற்றின் தரமும் நன்றாக இல்லை. 96 00:08:25,714 --> 00:08:28,467 உன் இதயத்திற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆக்ஸிஜனும் தேவை. 97 00:08:29,384 --> 00:08:30,844 இந்த பின்னை நீலமாகவே வைத்துக்கொள்வோம். 98 00:08:31,803 --> 00:08:33,722 உன் குழந்தை இப்போது எங்கே? 99 00:08:35,599 --> 00:08:39,895 அவன் என் குரலைத் தாண்டிச் சென்றுவிட்டான். 100 00:08:41,145 --> 00:08:42,898 பிறகு இன்னும் தூரத்திற்குச் சென்றுவிட்டான். 101 00:08:45,025 --> 00:08:48,487 அவன் திரும்பி வரும்படி அந்தத் தூரத்திடம் கேட்டேன். 102 00:08:51,198 --> 00:08:56,119 அவன் ஒரேயடியாகச் சென்றுவிட்டான். 103 00:08:59,706 --> 00:09:02,167 - நீ ஒன்றைப் பார்க்கவில்லை. - நான் பார்த்துள்ளேன். 104 00:09:02,918 --> 00:09:03,919 வாய்ப்பே இல்லை! 105 00:09:03,919 --> 00:09:06,088 இவை சுமார் 1,000 ஆண்டுகளாக உயிருடன் இல்லை. 106 00:09:06,088 --> 00:09:07,214 டைனோசர் காலத்தில் இருந்தேன். 107 00:09:07,214 --> 00:09:10,175 - அவர் உனக்கு டைனோசரை அறிமுகப்படுத்தினாரா? - அது உண்மையானது. 108 00:09:10,175 --> 00:09:14,471 என் அம்மா அதைப் பார்த்துள்ளார். அவர் வேலையே அதுதான். அவர் கடைசி உயிரினங்களை ஆய்வு செய்பவர். 109 00:09:14,471 --> 00:09:16,515 நான் ஒரு புலியை வெளியேற்றுவதைப் பார்க்கிறாயா? 110 00:09:17,140 --> 00:09:19,309 - உனக்கு என்ன பிரச்சினை? - நீ கவனமாக இருக்க வேண்டும், எஸ்ரா. 111 00:09:20,143 --> 00:09:22,020 ஆம், பொய்யனே. சிவப்பு என்றால் மரணம். 112 00:09:22,020 --> 00:09:24,439 என் அம்மாவுக்கு அந்தப் புலியைத் தெரியும்! 113 00:09:30,487 --> 00:09:32,364 ரெபெக்கா! குட் மார்னிங். 114 00:09:32,364 --> 00:09:33,824 நீங்கள் திரும்பி வந்தது எனக்குத் தெரியாது. 115 00:09:33,824 --> 00:09:35,701 கார்ப்பரேட் பதட்டமடைகிறது. 116 00:09:35,701 --> 00:09:37,911 நாம் நிறைய நேரத்தையும் பணத்தையும் இதில் செலவழிக்கிறோம். 117 00:09:38,412 --> 00:09:39,746 என்ன நடக்கிறது என எதுவும் தெரியுமா? 118 00:09:39,746 --> 00:09:43,292 இது சிறப்பாகச் செல்கிறது. அவள் நன்றாகப் பதிலளிக்கிறாள். 119 00:09:43,792 --> 00:09:45,210 ஆனால், 120 00:09:45,210 --> 00:09:47,838 கடந்த சில நாட்களாக நாம் தொடர்பை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. 121 00:09:47,838 --> 00:09:50,799 விருங்காவில் ஏற்பட்டது போல போட்டியாளர்கள் பிரச்சினை உள்ளதா என யோசிக்கிறேன். 122 00:09:51,884 --> 00:09:54,386 வக்கீல்களை ஈடுபடுத்த வேண்டும் என்றால் எனக்குத் தெரிவியுங்கள். 123 00:09:54,386 --> 00:09:57,014 டுமாரோஜூ உங்கள் வேலையில் குறுக்கிட்டால்... 124 00:09:57,014 --> 00:10:00,809 இது வெறும் சூழல் சத்தம்தான், சுரங்க வேலைகள். கீழே மிகவும் சத்தமாக உள்ளது. 125 00:10:00,809 --> 00:10:03,604 நான் அதிர்வலைகளை மாற்றுகிறேன். 126 00:10:03,604 --> 00:10:04,771 அது உதவுகிறதா எனப் பார்க்கிறேன். 127 00:10:04,771 --> 00:10:09,610 நாம் இதைக் கண்டிப்பாக வேகப்படுத்த வேண்டும். நமக்கு நேரம் இல்லை. 128 00:10:12,446 --> 00:10:14,573 அவள் வந்தால், அவளிடம் நான் சொல்கிறேன். 129 00:10:25,292 --> 00:10:28,045 கடைசியாகத் தொடர்புகொண்டதை பிளே செய். ஆகஸ்டு 12. காலை. 130 00:10:28,879 --> 00:10:33,300 என் அம்மா கற்றுக்கொடுத்த பாதை, பின்தொடர முடியாதபடி கடினமாகிறது. 131 00:10:35,052 --> 00:10:37,554 உனக்கும் அப்படித்தானா? 132 00:10:37,554 --> 00:10:39,097 பிளேபேக்கை நிறுத்து. 133 00:10:44,937 --> 00:10:46,188 எங்கே இருக்கிறாய்? 134 00:10:54,071 --> 00:10:58,325 பேசுவதற்கான மைக்ரோஃபோனைத் திற. பிளேபேக்கைத் தொடங்கு. 135 00:10:59,076 --> 00:11:01,370 பிராட்காஸ்ட்டில் நேரம் மற்றும் தேதி முத்திரையிடு. 136 00:11:03,163 --> 00:11:06,500 மாஹ்லெர், சிம்ஃபோனி 10, அடாஜியோவைத் தேர்ந்தெடு. 137 00:11:24,393 --> 00:11:27,437 நீ போன முறை என் அம்மாவைப் பற்றிக் கேட்டாய். 138 00:11:29,106 --> 00:11:31,567 அவரது பெயர் ஈவ். 139 00:11:34,820 --> 00:11:37,865 நான் உன்னிடம் பேசும்போது அவரது குரலைக் கேட்பேன். 140 00:11:39,825 --> 00:11:41,785 உன் குரல் எனக்கு அப்படித்தான் உள்ளது. 141 00:11:43,745 --> 00:11:46,582 சூரியன் மறையும்போது பெர்க்ஷர்ஸில் உள்ள ஏரியில் படகில் அமர்ந்து போர்பன் 142 00:11:46,582 --> 00:11:51,128 குடிப்பதை விரும்பும் ஒரு வயதான பெண் போல. 143 00:11:53,922 --> 00:11:56,800 அது எதுவும் உனக்குப் புரியாது. 144 00:12:05,893 --> 00:12:09,271 நான் எப்போதெல்லாம் சோகமாகவோ தனிமையாகவோ உணர்கிறேனோ 145 00:12:09,271 --> 00:12:13,775 குஸ்டாவ் மாஹ்லர் வேறொரு காலத்திலிருந்து என்னிடம் பேசுவது போல 146 00:12:13,775 --> 00:12:16,945 கற்பனை செய்யும்படி அவர் கூறுவார். 147 00:12:20,157 --> 00:12:23,035 மாஹ்லர் இதை எழுதும்போது அவர் மிகவும் வேதனையில் இருந்தார். 148 00:12:26,246 --> 00:12:30,584 மூன்றாண்டுகளுக்கு முன் அவரது மகள் ஸ்கார்லெட் காய்ச்சலால் இறந்திருந்தார். 149 00:12:34,838 --> 00:12:37,382 வாழ்க்கையால் அவர் இப்படித்தான் ஒலித்தார். 150 00:12:42,554 --> 00:12:45,516 இதை பிளே செய்வதைக் கேட்பதற்கு முன்னரே மாஹ்லர் இறந்துவிட்டார். 151 00:12:47,392 --> 00:12:48,936 அதை முடிக்கக்கூட இல்லை. 152 00:12:50,604 --> 00:12:53,649 என் அம்மா என்னிடம் என் மனதுக்குள் 153 00:12:53,649 --> 00:12:56,860 முடிக்கும்படி கூறுவார். 154 00:13:01,990 --> 00:13:03,867 நீ திரும்ப வர வேண்டும் என விரும்புகிறேன். 155 00:13:08,580 --> 00:13:09,706 அடச்சை. 156 00:13:23,345 --> 00:13:26,265 2037 இன் கோடைக்காலத்தில், எல்லா இடங்களும் தீப்பற்றி எரிந்தன. 157 00:13:28,517 --> 00:13:33,063 என் இரண்டாவது ட்ரைமெஸ்டரில் வரிசையாக 30 தீவிர வெப்ப தினங்கள் வந்தன. 158 00:13:34,565 --> 00:13:38,402 வெப்பத்திலிருந்து விலகியிருக்க முயன்றேன். மின்சாரம் தொடர்ந்து தடைப்பட்டது, அதனால்... 159 00:13:40,279 --> 00:13:42,364 அவனது நோயின் தீவிரம் அவனுக்குத் தெரியுமா? 160 00:13:42,948 --> 00:13:44,283 அவனிடம் கூறினீர்களா? 161 00:13:44,283 --> 00:13:47,286 வெப்பமான நாளில் அவன் இறக்கலாம் என்பது அவனுக்குப் புரியுமா? 162 00:13:48,745 --> 00:13:50,873 இல்லை, அதை எப்படிக் கூறுவது என எனக்குத் தெரியவில்லை. 163 00:13:54,668 --> 00:13:56,587 அவனுக்கு சம்மர் ஹார்ட் உள்ளது என அவனுக்குத் தெரியும். 164 00:13:56,587 --> 00:13:59,506 தீவிர வெப்ப தினம் என்றால் என்னவென்றும், அதை அவன் தவிர்க்க வேண்டும் என்றும் அவனுக்குத் தெரியும். 165 00:14:01,091 --> 00:14:04,261 அவற்றை அவன் “தீவிர வெப்பம்” என்பதற்குப் பதிலாக, “இரக்கமற்ற நாட்கள்” என்பான், 166 00:14:04,261 --> 00:14:07,723 அவன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அவனுக்குப் புரியும். 167 00:14:08,891 --> 00:14:12,060 அதுதான் நடந்ததா? அவன் வெளியே அதிக நேரம் இருந்தானா? 168 00:14:12,060 --> 00:14:14,062 இல்லை, அவன் வெளியே இல்லை. 169 00:14:14,980 --> 00:14:17,941 சில பெரிய சிறுவர்கள் அவனை ஏதோ விஷயத்திற்காக கேலி செய்துள்ளனர், 170 00:14:17,941 --> 00:14:19,693 அதனால் அவன் கோபப்பட்டுள்ளான். 171 00:14:19,693 --> 00:14:21,069 அது இந்த நிகழ்வைத் தூண்டியுள்ளது. 172 00:14:24,448 --> 00:14:26,658 நான் அங்கே சென்றபோது இவனுடன் ஒரு சிறுமி இருந்தாள். 173 00:14:28,577 --> 00:14:30,245 அவளுக்கும் சம்மர் ஹார்ட் உள்ளது. 174 00:14:35,334 --> 00:14:38,504 இந்த எதிர்காலம் எங்கே கூட்டிச் சென்றாலும், நாம் ஒன்றாகச் செல்வோம் என நமக்குத் தெரியும். 175 00:14:38,504 --> 00:14:43,926 அதனால்தான் ஆல்ஃபா ஒருங்கிணைந்த சிகிச்சை சாப்பிடக்கூடிய மருந்தை வழங்குகிறது... 176 00:14:51,642 --> 00:14:54,228 அப்பாவுக்கு சம்மர் ஹார்ட் இருந்து, அது எனக்கு வந்துவிட்டதா? 177 00:14:54,811 --> 00:14:55,896 இல்லை, கண்ணே. 178 00:14:56,396 --> 00:14:59,691 உன் அப்பா 1999 இல் பிறந்தார், அப்போது யாருக்கும் சம்மர் ஹார்ட் இல்லை. 179 00:15:00,275 --> 00:15:02,819 உன் அப்பா உனக்கு சிறப்பான இதயத்தைக் கொடுத்துள்ளார். 180 00:15:04,446 --> 00:15:05,531 அந்தச் சிறப்பான இதயத்துக்காகத்தான் 181 00:15:05,531 --> 00:15:07,824 புயல் வந்தபோது அவர் மனிலாவில் இருந்தார். 182 00:15:11,703 --> 00:15:15,999 இந்த உலகம்தான் உனக்கு நோயைக் கொடுத்தது, ஏனெனில் நாங்கள் இந்த உலகத்துக்கு நோயைக் கொடுத்தோம். 183 00:15:17,209 --> 00:15:19,336 ஆனால் இப்போது உன்னை நாங்கள் சரிசெய்யப் போகிறோம். 184 00:15:25,050 --> 00:15:27,010 பள்ளியில் ஒரு சிறுமி 185 00:15:27,010 --> 00:15:29,930 சம்மர் ஹார்ட் இருப்பவர்கள் 30 வயது வரைதான் வாழ்வார்கள் என்று கூறினாள். 186 00:15:30,430 --> 00:15:32,766 எனக்கு அடுத்த ஆண்டு பத்து வயதாவதால், 187 00:15:33,517 --> 00:15:37,104 நான் இன்னும் இரண்டு பத்தாண்டு காலம்தான் வாழ்வேன் என்று அர்த்தம். 188 00:15:37,104 --> 00:15:39,356 நான் அதை நம்பவில்லை. 189 00:15:39,356 --> 00:15:42,276 நீ பல பத்தாண்டு காலம் வாழ்வாய் என நம்புகிறேன். 190 00:15:43,861 --> 00:15:48,365 ஒருவேளை நீ பூனை போல இருக்கலாம். உனக்கு ஒன்பது உயிர்கள் இருக்கலாம். 191 00:15:48,365 --> 00:15:50,158 - அது 90 ஆண்டுகள். - ஆம். 192 00:15:50,993 --> 00:15:52,536 உனக்கு 30 வயதாகும்போது, உனக்காக 193 00:15:52,536 --> 00:15:56,123 யாராவது புத்தம்புதிய இதயத்தைக் கண்டறிந்திருக்கலாம். 194 00:16:02,713 --> 00:16:04,464 வின்டர்சில்லுக்கு வரவேற்கிறோம், 195 00:16:04,464 --> 00:16:07,509 இதயம் தொடர்பான நோய்களுக்கான சிறந்த சிகிச்சை. 196 00:16:08,635 --> 00:16:10,262 {\an8}வின்டர்சில் ஸ்னோமேனை உருவாக்குங்கள் 197 00:16:10,262 --> 00:16:12,764 அடடா, ரெஃப். ஏன் என்னால் விளையாட முடியாது? 198 00:16:12,764 --> 00:16:14,099 மன்னித்துவிடு, நண்பா. 199 00:16:14,099 --> 00:16:16,602 இன்று உன் பள்ளியில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது போலத் தெரிகிறது. 200 00:16:17,186 --> 00:16:20,939 ஆனால் நான் விளையாட விரும்புகிறேன். வின்டர்சில் சுத்த மோசம். 201 00:16:20,939 --> 00:16:24,151 சில நேரம் நம்மைப் பாதுகாக்கும் விஷயங்கள் வேடிக்கையாக இருப்பதில்லை. 202 00:16:24,651 --> 00:16:25,986 ஆனால் உன் தோழி லோலா இங்கிருக்கிறாள். 203 00:16:25,986 --> 00:16:27,487 நண்பர்களைக் கண்டறிய அழுத்தவும் 204 00:16:32,159 --> 00:16:35,037 உதவ விரும்புகிறாயா, எஸ்ரா? இவன் கண்களுக்கு பட்டன்கள் கிடைத்துள்ளன. 205 00:16:35,037 --> 00:16:36,330 நீ கூறியது தவறு என என் அம்மா கூறினார். 206 00:16:36,330 --> 00:16:39,208 நம் இருவருக்கும் அவர்கள் புதிய இதயங்களை உருவாக்குவார்கள் என்றார். 207 00:16:39,833 --> 00:16:41,585 நான் 90 வயது வரை வாழப் போகிறேன் என்றும் கூறினார். 208 00:16:46,924 --> 00:16:49,885 இது மெனாஜரி2100க்கான பாதுகாப்பான இணைப்பு. 209 00:16:49,885 --> 00:16:54,097 ரெபெக்கா ஷீரர், HW1998Fக்கான காப்பக நிபுணர். 210 00:16:55,224 --> 00:16:57,518 இந்த தொடர்பு இடைமுகத்தில் இருக்கும் அனைத்தும் 211 00:16:57,518 --> 00:17:00,020 மெனாஜரி2100க்குச் சொந்தமானவை. 212 00:17:00,687 --> 00:17:04,650 ஆகஸ்டு 18, 2046. மூன்று, இரண்டு, ஒன்று. 213 00:17:11,073 --> 00:17:13,492 இதை நீ கேட்கிறாய் எனில், தயவுசெய்து பதிலளி. 214 00:17:22,376 --> 00:17:23,961 கமான். 215 00:17:27,172 --> 00:17:30,050 நான் பேசுவதைக் கேட்க முடிந்தால், தயவுசெய்து பதிலளி. 216 00:17:45,732 --> 00:17:48,402 நேற்றிரவு நான் இன்னொன்றைக் கேட்டேன். 217 00:17:49,778 --> 00:17:51,280 அவன் எங்கே? 218 00:17:54,825 --> 00:17:58,120 அங்கே ஒரு ஆண் உள்ளதெனில், நீ அதைக் கண்டுபிடிக்க நான் உதவுகிறேன். 219 00:18:00,038 --> 00:18:02,583 நான் மீண்டும் தாயாக விரும்புகிறேன். 220 00:18:03,792 --> 00:18:07,963 இந்த இடத்தில், இந்த இப்போது. 221 00:18:12,926 --> 00:18:14,678 அதற்குப் போதுமான உணவு உள்ளதா? 222 00:18:16,597 --> 00:18:20,893 அவன் இங்கே இருக்கிறான் என்றால், போதுமான உணவு இருக்க வேண்டும். 223 00:18:20,893 --> 00:18:22,811 இங்கே கண்டிப்பாக... 224 00:18:22,811 --> 00:18:25,647 சொல்லகராதி இடைமுகத்தில் சத்தத்தைச் சேர். 225 00:18:27,191 --> 00:18:31,695 நீ ஏன் என்னைப் போல சத்தமிடுகிறாய்? இவ்வளவு காலத்திற்குப் பிறகு. 226 00:18:31,695 --> 00:18:33,989 என் வாழ்க்கை முழுவதும் உங்கள் இனத்தை நான் பார்த்துள்ளேன். 227 00:18:35,908 --> 00:18:37,701 உங்களைப் பற்றி ஆர்வமாக இருந்தேன். 228 00:18:38,994 --> 00:18:40,704 ஆர்வம் என்றால் என்ன தெரியுமா? 229 00:18:41,205 --> 00:18:44,249 வானம் தொடங்கும் இடத்தில் நான் உன்னைப் பார்த்துள்ளேனா? 230 00:18:45,125 --> 00:18:48,170 - எங்களில் சிலர் அழிய நீ காரணமா? - இல்லை. 231 00:18:49,963 --> 00:18:53,008 இல்லை, நான் உன்னை ஒருபோதும் காயப்படுத்த மாட்டேன். 232 00:18:54,885 --> 00:18:56,553 நான் உன்னிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன். 233 00:19:00,265 --> 00:19:03,685 நீ பார்த்துள்ளாய். நாங்கள் எப்படி இருப்போம் என உனக்குத் தெரியும். 234 00:19:05,687 --> 00:19:07,648 நீ என்ன தேடுகிறாய் என்று என்னிடம் கூற முடியுமா? 235 00:19:10,108 --> 00:19:14,029 நாங்கள் இந்த உலகத்தைப் பகிர்ந்துகொள்கிறோம். 236 00:19:15,364 --> 00:19:17,032 அதிலிருக்கும் அனைத்தையும். 237 00:19:18,700 --> 00:19:22,663 அது குறையும்போது, நாங்களும் குறைகிறோம். 238 00:19:26,083 --> 00:19:27,584 அது உங்களுக்கும் அப்படித்தானா? 239 00:19:32,422 --> 00:19:38,428 எங்கள் புதியவர்கள் சுவாசத்தில் பிறந்து, வீழ்வதில்லை. 240 00:19:40,681 --> 00:19:44,893 அவர்கள் எங்களைவிட்டு தூரத்திற்குச் சென்றுவிடுவார்கள். 241 00:19:48,897 --> 00:19:52,943 அவர்கள் மறைந்துவிடுவார்கள். 242 00:19:55,654 --> 00:19:58,866 என் குழந்தைகள் அனைவரும் அப்படித்தான் சென்றுவிட்டனர். 243 00:19:58,866 --> 00:20:00,742 நான் உனக்காக உணவைத் தேடுகிறேன். 244 00:20:04,997 --> 00:20:08,458 நான் அவனைக் கண்டறிய வேண்டும். அவனுக்கு... 245 00:20:12,963 --> 00:20:14,631 சொல்லகராதி இடைமுகத்தில் சேர். 246 00:20:22,598 --> 00:20:26,185 அவளுக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை எனில் மீண்டும் அவளையும் அந்த ஆணையும் இழப்போம். 247 00:20:26,185 --> 00:20:28,270 அவள் தொடர்வதற்கு நாம் உணவளித்தால்? 248 00:20:28,270 --> 00:20:31,481 பெரிய ஹம்ப்பேக்குகளுக்கு ஒரு நாளைக்கு 3,000 பவுண்டு உணவு தேவை. 249 00:20:31,481 --> 00:20:34,109 - முக்கியமாக கிரில், ஆனால்... - எனக்குத் தெரியாது. 250 00:20:34,109 --> 00:20:38,697 ஆம், இது நாம் நமக்குள் பேச வேண்டிய விளைவுகளைக் கொண்டுள்ளது. 251 00:20:38,697 --> 00:20:40,407 நல்ல விஷயம் என்னவெனில் அவள் இனப்பெருக்கம் செய்ய விரும்புகிறாள், 252 00:20:40,407 --> 00:20:42,367 அது அவளது இடம்பெயர்தல் சுழற்சியின் பகுதி, 253 00:20:42,367 --> 00:20:45,162 அதனால் அந்த ஆண் வலிமையானதாக இருந்தால் நமக்கு அந்த நடத்தையில் 254 00:20:45,913 --> 00:20:46,914 உண்மையான வாய்ப்பு கிடைக்கலாம். 255 00:20:46,914 --> 00:20:50,459 நாம் டெவெலெப் செய்யும் ஒவ்வொரு ஹம்ப்பேக்குக்கும் அவள் மாதிரியாக இருப்பாள். 256 00:20:50,459 --> 00:20:52,377 - இன்று அருமையான வேலை, பெக்கா. - நன்றி. 257 00:20:58,467 --> 00:20:59,635 உணவா? 258 00:21:00,135 --> 00:21:01,637 - அது சிக்கலான விஷயம். - இல்லையா? 259 00:21:01,637 --> 00:21:04,681 அதாவது, தரமான புரதத்தை எடுத்து அதை ஒரு விலங்குக்குக் கொடுப்பது 260 00:21:04,681 --> 00:21:06,308 நிறுவனத்தின் பெயருக்கு பங்கம் விளைவிக்கும். 261 00:21:07,267 --> 00:21:08,602 ஆசியாவில் வறட்சி நிலவுகிறது. 262 00:21:08,602 --> 00:21:10,020 அங்கே மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர், 263 00:21:10,854 --> 00:21:14,107 நாம் மனிதத் தரத்திலான ஊட்டச்சத்துகளை திமிங்கிலத்துக்குக் கொடுத்து 264 00:21:14,107 --> 00:21:16,860 அது சாப்பிடுவது, இனப்பெருக்கம் செய்வது பற்றிப் பேசப் போகிறோம். 265 00:21:17,903 --> 00:21:18,987 இது பொதுத் தொடர்புக்கு மோசமான விஷயம். 266 00:21:18,987 --> 00:21:20,739 சரி. போதும். 267 00:21:21,740 --> 00:21:23,867 மேற்பரப்பு வெப்பநிலை அதிகமாக உள்ளது. அமிலத்தன்மை அதிகமாக உள்ளது. 268 00:21:23,867 --> 00:21:25,869 அந்த விரிகுடாவானது உயிர் வாழத் தகுதியற்றதாக மாறுகிறது. 269 00:21:26,745 --> 00:21:29,081 இதுதான் இங்கே கடைசி சீசனாக இருக்கலாம். 270 00:21:29,957 --> 00:21:32,459 நாம் இதை முன்னேற்ற வேண்டும். 271 00:21:32,960 --> 00:21:35,128 எல்லாம் வெளிவருவதற்குள், இந்த வாரத்தின் இறுதிக்குள் இதை முடிக்க வேண்டும். 272 00:21:35,128 --> 00:21:36,672 ஒப்புக்கொள்கிறேன். 273 00:21:36,672 --> 00:21:40,592 பிரத்தியேக ஹம்ப்பேக்குகள், டுமாரோஜூவை போட்டியிலிருந்து வெளியேற்றிவிடும். 274 00:21:40,592 --> 00:21:42,427 எனக்கு இன்னும் இரண்டு இரவுகள் கொடுங்கள். 275 00:21:50,102 --> 00:21:52,771 ”’நாங்கள் ரோஜாக்கள்’ என்று ரோஜாக்கள் கூறின. 276 00:21:52,771 --> 00:21:57,526 அவன் மிகவும் சோகமாகிவிட்டான், ஏனெனில் அவனது மலர் அவனிடம் தான் 277 00:21:58,026 --> 00:22:01,697 இந்தப் பேரண்டத்திலேயே கடைசியாக இருக்கும் ரோஜா என்றது. 278 00:22:02,406 --> 00:22:05,701 இங்கே அவை போல 5,000 இருந்தன, 279 00:22:06,201 --> 00:22:09,162 ஒரே தோட்டத்தில், எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தன. 280 00:22:09,913 --> 00:22:13,500 ’அவள் அதைப் பார்த்தால், அவளுக்கு மிகவும் தொந்தரவாக இருக்கும்’ 281 00:22:13,500 --> 00:22:15,711 என்று தனக்குள் கூறிக்கொண்டான். 282 00:22:15,711 --> 00:22:18,046 அவள் தீவிரமாக இருமுவாள், 283 00:22:18,046 --> 00:22:22,426 பிறர் தன்னைப் பார்த்துச் சிரிப்பதைவிட, இறக்கலாம் என்பது போல நடிப்பாள். 284 00:22:23,177 --> 00:22:24,469 மேலும் நான்... 285 00:22:24,469 --> 00:22:26,680 நான் அவளை மீண்டும் 286 00:22:26,680 --> 00:22:29,349 உயிர்ப்பிக்கும்படி நடிக்கக் கடமைப்பட்டிருப்பேன். 287 00:22:30,058 --> 00:22:33,729 அதை நான் என்னைத் தாழ்த்திக்கொள்ள 288 00:22:35,147 --> 00:22:37,482 செய்யவில்லை என்றாலும், 289 00:22:38,442 --> 00:22:41,945 அவள் தான் இறப்பதற்கு அனுமதித்திருப்பாள்.’” 290 00:22:45,490 --> 00:22:47,784 - நான் கொஞ்ச நேரம் படிக்கட்டுமா, அம்மா? - இல்லை. 291 00:22:47,784 --> 00:22:52,664 நான்... நீ உயிருடன் இருக்கப் போகிறாய். 292 00:22:53,165 --> 00:22:58,086 நான் இருக்க மாட்டேன். இது பாட்டிக்கான நேரம். 293 00:23:01,632 --> 00:23:05,677 ”பிறகு அவன் தன் பிரதிபலிப்புகளுடன் தொடர்ந்தான். 294 00:23:06,678 --> 00:23:09,932 - ’நான் உலகிலேயே தனித்துவமான மலரால்... - உனக்கு அது பிடித்துள்ளது, இல்லையா? 295 00:23:09,932 --> 00:23:11,975 ...பணக்காரனாக இருப்பேன் என நினைத்தேன்’”... 296 00:23:11,975 --> 00:23:15,604 அந்த உராங்குட்டான் போலத்தான் நீங்கள் பேசும் திமிங்கிலத்தின் குரலும் இருக்குமா? 297 00:23:16,522 --> 00:23:19,233 இல்லை, நான் அந்த உராங்குட்டானுக்கு உன் அப்பாவின் குரலைக் கொடுத்தேன், 298 00:23:19,233 --> 00:23:21,026 ஏனெனில் நான் அவரை மிஸ் செய்கிறேன். 299 00:23:21,026 --> 00:23:23,320 எனில் திமிங்கிலத்தின் குரல் எப்படி இருக்கும்? 300 00:23:23,946 --> 00:23:25,197 ஈவ் பாட்டி போல இருக்கும். 301 00:23:26,031 --> 00:23:28,742 இல்லை, நிஜத்தில் அதன் குரல் எப்படி இருக்கும்? 302 00:23:29,826 --> 00:23:30,953 கேட்க விரும்புகிறாயா? 303 00:23:32,538 --> 00:23:36,834 HW1998 ஐ பிளே செய். அடிப்படைச் சொல்லகராதி. 304 00:23:47,135 --> 00:23:48,554 அது என்ன சொல்கிறது? 305 00:23:49,096 --> 00:23:54,309 அது, “எனக்கு மிகவும் பிடித்த இந்தக் குட்டி மனிதன் எஸ்ரா யார்?” 306 00:23:54,309 --> 00:23:57,771 என்று சொல்கிறது. 307 00:24:04,236 --> 00:24:08,323 நான் போன பின்பு, எனது குரலையும் ஒரு விலங்குக்குக் கொடுப்பீர்களா? 308 00:24:09,533 --> 00:24:12,995 இல்லை, கண்ணே. ஏனெனில் நீ அழியப் போவதில்லை. 309 00:24:17,958 --> 00:24:20,752 ”’என்னிடம் இருந்ததெல்லாம் சாதாரணமான சிறிய ரோஜா.’ 310 00:24:20,752 --> 00:24:24,882 நீ பார்க்க விரும்புகிறாயா, எஸ்ரா? நீ ரோஜாக்களைப் பார்க்க விரும்புகிறாயா? 311 00:24:26,884 --> 00:24:29,052 ’சாதாரணமான ரோஜாவை,' என்றான்.” 312 00:24:30,179 --> 00:24:32,598 நான் நிக் பில்டன், நான் உலகிலேயே மிகவும் 313 00:24:32,598 --> 00:24:34,183 அதிநவீனமான டிஎன்ஏ சார்ந்த ஐபி நிறுவனமான 314 00:24:34,183 --> 00:24:38,896 மெனாஜரி2100 உடன் இணையப் போவதாக 315 00:24:38,896 --> 00:24:41,690 நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். 316 00:24:41,690 --> 00:24:44,902 இப்போது, ஆல்ஃபா போன்ற ஒரு நிறுவனம் ஏன் 317 00:24:44,902 --> 00:24:46,904 இந்தத் துறையில் இருக்க விரும்புகிறது என நீங்கள் கேட்கலாம், 318 00:24:46,904 --> 00:24:49,239 அதற்கான பதில் சுலபமானது. 319 00:24:49,239 --> 00:24:52,409 {\an8}ஆல்ஃபாவுக்கு ஒரே ஒரு விஷயத்தில்தான் ஆர்வம் உள்ளது: 320 00:24:52,409 --> 00:24:56,747 {\an8}நிகழ்காலத்தில் இருப்பவற்றில் எதிர்காலத்தைச் சேர்ந்தவற்றைக் கண்டறிவது. 321 00:24:57,414 --> 00:24:58,624 {\an8}ஒரு சிறப்பான எதிர்காலம். 322 00:24:59,124 --> 00:25:02,920 {\an8}மரபணுரீதியாகச் சேமிக்கப்பட்ட யானைகள், உராங்குட்டான்கள், 323 00:25:04,046 --> 00:25:07,341 {\an8}நான் கேள்விப்பட்ட வரை, ஹம்ப்பேக் திமிங்கிலங்கள் கூட இருக்கும் எதிர்காலம். 324 00:25:07,841 --> 00:25:11,053 ஆல்ஃபாவின் பெனிஃபிட்ஸ் பேக்கேஜ் மிகவும் அற்புதமானது. 325 00:25:11,053 --> 00:25:13,138 உங்கள் அனைவரிடமிருந்தும் நான் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. 326 00:25:13,138 --> 00:25:16,475 பங்குதாரர் அனுமதியுடன், இந்தப் பயணத்தில் நீங்கள் என்னுடன் 327 00:25:17,309 --> 00:25:19,144 இணைவீர்கள் என நம்புகிறேன். 328 00:25:51,635 --> 00:25:52,636 வா. 329 00:26:00,227 --> 00:26:02,646 காப்பக அமர்வு 008 ஐ பிளே செய். 330 00:26:05,899 --> 00:26:08,193 அந்தக் கடைசி ஆண் குரலை நீ எங்கே கேட்டாய்? 331 00:26:08,193 --> 00:26:10,237 அவன் இங்கிருந்து வெகுதூரத்தில் இல்லை. 332 00:26:12,698 --> 00:26:15,868 நாங்கள் ஒருவரையொருவன் வானத்தின் அடியில் சந்தித்தோம். 333 00:26:16,910 --> 00:26:19,788 இதைவிட அவன் வித்தியாசமாக இருந்தான். 334 00:26:22,207 --> 00:26:23,458 அவனுக்கு என்ன ஆனது? 335 00:26:25,294 --> 00:26:27,379 அது ஒரு பகல் நேரம். 336 00:26:28,964 --> 00:26:31,049 வானம் நெருக்கத்தில் இருந்தது. 337 00:26:34,761 --> 00:26:39,725 எங்களுக்கு உணவாக இருந்தவை அழிந்துவிட்டன. 338 00:26:39,725 --> 00:26:42,644 அதனால் நாங்கள் புதிய இடங்களில் தேடினோம். 339 00:26:43,687 --> 00:26:47,232 மேலிருந்து அவனை என்ன தாக்கியது என்பதை அவன் பார்க்கவில்லை. 340 00:26:47,733 --> 00:26:49,151 அது அவன் உடலில் துளைகள் இட்டது, 341 00:26:49,902 --> 00:26:52,821 அவன் வீழ்ந்துவிட்டான். 342 00:26:54,323 --> 00:26:56,074 கீழே போய்விட்டான். 343 00:26:57,534 --> 00:26:59,328 அவன் இன்னும் அங்கே இருக்கிறான். 344 00:27:00,120 --> 00:27:02,581 அவன் மாறுவதை நான் பார்க்கிறேன். 345 00:27:05,209 --> 00:27:07,544 இந்தப் புதிய ஆண் எங்கே இருக்கிறான்? 346 00:27:09,505 --> 00:27:11,215 என்னால் அவனைக் கண்டறிய முடியவில்லை. 347 00:27:15,969 --> 00:27:20,432 நீங்கள்தான் ரெபெக்காவாக இருக்க வேண்டும். நான் ஆபரேஷன்ஸ் குழுவைச் சேர்ந்தவன். ஹெண்ட்ரிக்ஸ். 348 00:27:20,432 --> 00:27:22,726 தெற்கு அரைக்கோளத் திட்டப்பணி வளங்கள் நிர்வாகம். 349 00:27:23,227 --> 00:27:24,728 பிளேபேக்கை நிறுத்து. 350 00:27:25,395 --> 00:27:27,481 மன்னிக்கவும், இந்த சப்ஜக்ட்டுடன் வேறு யாரும் பணிபுரிவதாக கிறிஸ்டினா 351 00:27:27,481 --> 00:27:29,316 - என்னிடம் சொல்லவில்லை. - இல்லை, நான் இரவில் வந்து, வேலையை 352 00:27:29,316 --> 00:27:30,817 வேகப்படுத்த உதவுவேன், புரிகிறதா? 353 00:27:32,444 --> 00:27:33,445 நேரத்தில் முடிக்க வேண்டுமே. 354 00:27:33,445 --> 00:27:38,659 இதுதான் இங்கிருக்கும் கடைசி ஹம்ப்பேக்காக இருக்க அதிக வாய்ப்புள்ளது. 355 00:27:38,659 --> 00:27:40,327 கடைசி இரண்டு. 356 00:27:40,327 --> 00:27:43,914 HW1998 மற்றும் அது தொடர்புகொண்டு வரும் ஓர் ஆண். 357 00:27:44,414 --> 00:27:46,041 கடந்த இரவின் டிரான்ஸ்கிரிப்ட் நகல் உங்களிடம் உள்ளதா? 358 00:27:46,041 --> 00:27:47,417 ஏதோ காரணத்திற்காக, அது தடைசெய்யப்பட்டுள்ளது. 359 00:27:49,795 --> 00:27:53,048 நம் கவனத்தை இந்தப் பெண் மீது செலுத்த வேண்டும் என்பேன். 360 00:27:54,049 --> 00:27:57,010 உங்களது சில ரெக்கார்டிங்குகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். 361 00:27:57,010 --> 00:28:00,597 எங்கள் புதியவர்கள் சுவாசத்தில் பிறந்து, வீழ்வதில்லை. 362 00:28:00,597 --> 00:28:02,766 நீங்கள் பயன்படுத்தி வரும் குரல் பற்றி உங்களிடம் கேட்க விரும்பினேன். 363 00:28:02,766 --> 00:28:04,810 - குரலா? - திமிங்கிலத்திற்கு. 364 00:28:05,435 --> 00:28:09,898 நீங்கள் மெனாஜெரி நெறிமுறைக்கு எதிராக, மனிதக் குரலைப் பயன்படுத்துகிறீர்கள். 365 00:28:09,898 --> 00:28:12,776 அது நாங்கள் தடுக்க நினைக்கும் 366 00:28:12,776 --> 00:28:15,404 உணர்வுரீதியான நெருக்கத்தை ஏற்படுத்தும். 367 00:28:15,404 --> 00:28:16,822 என்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறீர்களா? 368 00:28:17,781 --> 00:28:19,283 இல்லை. 369 00:28:19,825 --> 00:28:21,285 இல்லை. உங்களுக்கு என்ன விருப்பமோ அதைச் செய்யுங்கள். 370 00:28:21,285 --> 00:28:23,620 அதைத் தீர்மானிக்க நான் யார்? 371 00:28:23,620 --> 00:28:26,623 வௌவால்களுடன் வேலை பார்த்த ஒருவன் அவற்றுக்கு மர்லின் மன்ரோ குரலைக் கொடுத்தான். 372 00:28:27,958 --> 00:28:29,376 நான் உங்கள் பழைய ஃபைலைப் பார்த்தேன். 373 00:28:29,376 --> 00:28:32,045 நீங்கள் யானைகளுக்கும் மனிதக் குரலைப் பயன்படுத்தியுள்ளீர்கள். 374 00:28:34,256 --> 00:28:37,009 அது ஒரு பிணைப்பை ஏற்படுத்தி, சரியான கேள்விகளைக் கேட்க உதவுகிறது. 375 00:28:37,009 --> 00:28:40,137 நீங்கள் இங்கே பயன்படுத்தும் மனிதக் குரல், 376 00:28:41,597 --> 00:28:43,056 ஈவ் ஷீரர், 377 00:28:44,057 --> 00:28:45,934 உங்கள் அம்மா என நினைக்கிறேன். 378 00:28:46,810 --> 00:28:49,563 மேலும், சுமத்ராவில் உள்ள உராங்குட்டான், 379 00:28:49,563 --> 00:28:51,982 ஒமர் ஹடாட் என்ற ஓர் ஆணின் குரல். 380 00:28:51,982 --> 00:28:53,650 - இறந்துபோன என் கணவர். - சரி. 381 00:28:53,650 --> 00:28:57,237 நான் கூறியது போல, உங்களுக்கு விருப்பமானதைச் செய்யுங்கள். 382 00:28:58,697 --> 00:29:01,074 நான் அந்த ஆணைப் பார்க்கவும், முடிந்தால் டிஎன்ஏ மாதிரியை எடுக்கவும் 383 00:29:01,074 --> 00:29:04,244 டைவ் குழுவுக்காக கோரிக்கை விண்ணப்பித்துள்ளேன். 384 00:29:04,745 --> 00:29:06,371 நீங்கள் அதைப் பார்த்தீர்களா? அது எப்படி இருந்தது? 385 00:29:06,955 --> 00:29:08,081 ஆம், 386 00:29:08,081 --> 00:29:10,209 இன்று நீங்கள் அந்த ஆணுடன் வேலை செய்யப் போவதில்லை, 387 00:29:10,209 --> 00:29:15,047 மேலும், வருத்தம் என்னவெனில், டைவ் குழுவாலும் அதைக் கண்டறிய முடியாது. 388 00:29:20,511 --> 00:29:21,595 நீங்கள் கேட்பது... 389 00:29:24,014 --> 00:29:29,102 ஏழாண்டுகளுக்கு முன் கிளேஸியர் பேவுக்கு அருகில் கிடைத்த ரெக்கார்டிங். 390 00:29:29,102 --> 00:29:31,313 அது ஓர் ஆண். இப்போது அது இறந்துவிட்டது. 391 00:29:31,313 --> 00:29:32,481 இறந்துவிட்டதா? 392 00:29:33,815 --> 00:29:35,317 கப்பல் மோதிவிட்டது என நினைக்கிறேன். 393 00:29:40,322 --> 00:29:43,200 நீங்கள் இறந்த திமிங்கிலத்தின் குரலை அவளின் இனப்பெருக்க அழைப்பாக பிளே செய்தீர்களா? 394 00:29:43,992 --> 00:29:45,911 உங்களுக்கு என்ன பிரச்சினை? 395 00:29:46,912 --> 00:29:47,913 எனக்கா? 396 00:29:49,414 --> 00:29:51,458 நீங்கள் நிறுவனத்தின் பணி நோக்கத்தைப் படித்தீர்களா? 397 00:29:51,458 --> 00:29:53,877 நாம் இங்கே தனிப்பட்ட உயிரினங்களைக் காப்பாற்றவில்லை. 398 00:29:53,877 --> 00:29:56,797 நாம் ஒட்டுமொத்த உயிரினங்களுக்கான புளூபிரின்டை உருவாக்க முயல்கிறோம். 399 00:29:56,797 --> 00:29:59,383 அவள் வெளியே அவனைத் தேடிக்கொண்டிருக்கிறாள். 400 00:29:59,383 --> 00:30:03,554 இனப்பெருக்க நடத்தையை வெளிப்படுத்துகிறாள், அதுதான் நமக்குத் தேவை. 401 00:30:03,554 --> 00:30:06,682 அதை நீங்கள் புரிந்துகொள்வது ஏன் கடினமாக உள்ளது எனத் தெரியவில்லை. 402 00:30:06,682 --> 00:30:08,392 அதாவது... 403 00:30:08,392 --> 00:30:11,478 நமக்குத் தேவையானதைப் பெற அவற்றுக்கு உணவும் இடமும் லஞ்சமாகக் கொடுக்கவில்லையா? 404 00:30:11,478 --> 00:30:14,064 நீங்கள் வேலை செய்த யானைகளின் விஷயத்தில் அதுதான் நடந்துகொண்டிருந்தது என 405 00:30:14,064 --> 00:30:15,732 உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். 406 00:30:15,732 --> 00:30:16,733 நான்... 407 00:30:17,234 --> 00:30:21,071 அது சமீபத்திய தகவல்களைத் தெரிந்துகொள்ள 408 00:30:21,071 --> 00:30:23,949 அது ஒரு மனிதரைத் தேடுகிறது என நீங்கள் நினைத்திருக்கலாம். 409 00:30:23,949 --> 00:30:26,159 - அதாவது... - நான் இதில் வேலை செய்ய முடியாது. 410 00:30:27,411 --> 00:30:29,830 உண்மையாகவா? நீங்கள் ஏற்கனவே அதில்தான் வேலை செய்கிறீர்கள். 411 00:30:34,126 --> 00:30:35,127 ஹேய், ஷீரர்! 412 00:30:35,794 --> 00:30:37,337 நாம் இங்கே என்ன செய்துகொண்டிருந்தோம் என நினைத்தீர்கள்? 413 00:30:37,337 --> 00:30:40,132 இவை மிகவும் புத்திசாலியான உயிரினங்கள்! 414 00:30:40,132 --> 00:30:42,384 ஆம், நாமும்தான். 415 00:30:42,384 --> 00:30:44,261 அதுதான் உலகின் கடைசி திமிங்கிலம் என்று அது உணரும் முன் 416 00:30:44,261 --> 00:30:47,472 அதைப் பற்றி முடிந்தளவு விஷயங்களை நாம் பெறவில்லை எனில், 417 00:30:47,472 --> 00:30:50,225 நமக்கு பிஸினஸே இருக்காது, இல்லையா? 418 00:30:52,769 --> 00:30:54,688 குறைந்தபட்சம் உங்களால் விற்க முடியாத ஒன்று. 419 00:31:06,074 --> 00:31:07,242 இந்த மீட்டிங்குக்குத் தயாரா? 420 00:31:07,242 --> 00:31:09,328 - கண்டிப்பாக. - சரி. 421 00:31:09,328 --> 00:31:11,246 - அற்புதம். - அது நல்ல யோசனை என்று... 422 00:31:11,246 --> 00:31:14,333 - நான் உங்களுடன் பேச வேண்டும். - ரெபெக்கா. 423 00:31:14,333 --> 00:31:16,543 - நான் கொஞ்சம் பிசியாக உள்ளேன். - இது முக்கியமானது. 424 00:31:17,836 --> 00:31:18,837 நான் பிறகு வருகிறேன். 425 00:31:23,717 --> 00:31:25,010 நீங்கள் என்னிடம் மட்டும் பொய் சொல்லவில்லை. 426 00:31:25,677 --> 00:31:27,221 அவளிடம் பொய் சொல்லியிருக்கிறீர்கள். 427 00:31:30,849 --> 00:31:32,768 எப்படி இருந்தாலும் அவள் அழியப் போகிறாள். 428 00:31:33,435 --> 00:31:36,605 இந்த வழியிலாவது, அவளை நாம் மீண்டும் கொண்டு வந்து பிரச்சினையைச் சரிசெய்யலாம். 429 00:31:38,690 --> 00:31:42,861 முதலில் நாம் அவற்றைக் கொன்று மெழுகுவர்த்திகளாகவும் ஆடைகளாகவும் செய்தோம், 430 00:31:42,861 --> 00:31:46,782 பிறகு கப்பல்களால் அவற்றை மோதினோம், அவற்றின் வயிற்றை பிளாஸ்டிக்கால் நிரப்பினோம். 431 00:31:46,782 --> 00:31:50,160 இருந்தாலும், அவற்றில் சில உயிர்பிழைத்தன. 432 00:31:51,620 --> 00:31:54,998 கார்பன் டை ஆக்ஸை அந்தக் கடலை அமிலத்தன்மையுடையதாக மாற்றும் வரை, 433 00:31:55,499 --> 00:31:57,793 அவள் சாப்பிடும் உயிரினத்தால் எலும்புகளைக் கூட உருவாக்க முடியவில்லை. 434 00:31:57,793 --> 00:31:59,044 இப்போது... 435 00:32:00,003 --> 00:32:02,881 ஒன்றே ஒன்று மீதமிருக்கும்போது, 436 00:32:04,216 --> 00:32:05,551 நீங்கள் அவளிடம் பொய் சொல்லியிருக்கிறீர்கள். 437 00:32:09,513 --> 00:32:12,266 தொடக்கத்திலேயே இவற்றை அவளிடம் கூறியிருந்தால், 438 00:32:13,100 --> 00:32:15,727 உங்களிடம் தன் கதையைக் கூற அவள் ஆர்வம் கொண்டிருப்பாளா? 439 00:32:17,145 --> 00:32:20,357 அல்லது நாம் செய்யும் ரெக்கார்டிங்குகள் பெரிய திமிங்கிலத்திடம் குட்டிக்கு 440 00:32:20,357 --> 00:32:24,653 கடலில் வழங்கும் தகவலாக மாற்றப்படும், ஏனெனில் கடலே இருக்காது என்பதை 441 00:32:24,653 --> 00:32:25,904 அவளிடம் கூறியிருந்தால் என்னவாகியிருக்கும்? 442 00:32:25,904 --> 00:32:27,739 அது உங்களுக்கு நேர்மையாக இருந்திருக்குமா? 443 00:32:30,576 --> 00:32:33,078 கடைசி ஹம்ப்பேக் திமிங்கிலத்திடம் கடைசி பேட்டியை நாம் எடுப்பதால்தான் 444 00:32:33,078 --> 00:32:34,621 பில்டன் அதிக பணம் கொடுக்கிறார். 445 00:32:34,621 --> 00:32:35,831 அது ஒரு நல்ல விஷயம்தான். 446 00:32:35,831 --> 00:32:38,667 நாம் என்ன செய்தோம் என மக்களுக்குத் தெரிந்தால், ஊடகத்திற்குத் தெரிந்தால்... 447 00:32:38,667 --> 00:32:39,877 அது எப்படி நடக்கும்? 448 00:32:45,340 --> 00:32:47,217 இந்த வேலையை ஹெண்ட்ரிக்ஸ் முடித்துவிடுவார். 449 00:32:48,552 --> 00:32:50,053 நீங்கள் அலாஸ்காவுக்குச் செல்ல வேண்டும். 450 00:32:50,554 --> 00:32:52,848 - அங்கே அலெக்ஸாண்டர் ஆர்க்கிபெலகோ... - ”முடித்துவிடுவார்” என்றால் என்ன அர்த்தம்? 451 00:32:52,848 --> 00:32:55,058 - ...என்றொரு ஓநாய் இனம் உள்ளது... - அவர் அவளிடம் என்ன சொல்லப் போகிறார்? 452 00:32:55,559 --> 00:32:59,271 டுமாரோஜூவுக்கு ஹம்ப்பேக் கிடைக்கக்கூடாது என்பதற்காக அதை கரை ஒதுக்க முயல்கிறாரா? 453 00:32:59,271 --> 00:33:00,480 அதைத்தான் அவர் செய்கிறாரா? 454 00:33:02,024 --> 00:33:04,693 தவறாக நினைக்கவில்லை எனில், எனக்கு ஒரு மீட்டிங் உள்ளது. 455 00:33:17,247 --> 00:33:20,209 பிளேபேக். ஆண் குரலை ஒலிபரப்பு. 456 00:33:21,168 --> 00:33:22,878 தொடர் சுழற்சியில் இயக்கு. 457 00:33:36,767 --> 00:33:42,606 ”மதிய நேரத்தின் ஒளியானது, பண்ணையின் விரிசல் வழியே பிரகாசிக்கட்டும், 458 00:33:43,524 --> 00:33:47,236 சூரியன் கீழே போகும்போது வைக்கோற்போர்கள் மேலே செல்லட்டும். 459 00:33:48,987 --> 00:33:50,531 மாலை நேரம் வரட்டும். 460 00:33:52,032 --> 00:33:54,284 ஒரு பெண் தன் ஊசிகளையும் நூற்கண்டையும் எடுப்பது போல, 461 00:33:55,077 --> 00:33:58,330 சிள்வண்டுகள் கிரீச்சிடட்டும். 462 00:33:59,957 --> 00:34:01,291 மாலை நேரம் வரட்டும். 463 00:34:03,126 --> 00:34:08,757 நீண்ட புற்களில் கைவிடப்பட்ட மண்வெட்டியில் பனித்துளிகள் சேரட்டும். 464 00:34:10,384 --> 00:34:12,844 நட்சத்திரங்கள் தோன்றட்டும். 465 00:34:13,344 --> 00:34:19,768 நிலா, தனது வெள்ளிக் கொம்புகளை வெளிப்படுத்தட்டும்.” 466 00:34:19,768 --> 00:34:21,395 - அம்மா. - ”இந்த”... 467 00:34:21,395 --> 00:34:22,688 நான்... 468 00:34:23,480 --> 00:34:27,734 இதை முடித்துக்கொள்கிறேன். இந்தக் கவிதை முழுவதையும் மனப்பாடம் செய்துள்ளேன். 469 00:34:27,734 --> 00:34:28,694 என்னை... 470 00:34:28,694 --> 00:34:34,241 இதை மறப்பதற்குள் சொல்லிவிடுகிறேன், ஏனெனில் என் நினைவு... 471 00:34:35,324 --> 00:34:38,536 - ”ஓநாய்”... “ஓநாய்”... - நிறுத்துங்கள். 472 00:34:38,536 --> 00:34:42,291 ”அது வரட்டும். நீ பயப்பட வேண்டாம்.” 473 00:34:42,291 --> 00:34:46,378 நான் உங்கள் மீது கோபமாக உள்ளேன், அம்மா. 474 00:34:47,004 --> 00:34:48,880 - தெரியும். - மிகவும் கோபமாக. 475 00:34:49,755 --> 00:34:53,802 ஆனால் வேறு மாதிரி செய்திருந்தால், நான் என் மீது கோபப்பட்டிருப்பேன்... 476 00:34:56,138 --> 00:35:00,767 மேலும் என்னுடன் விவாதிக்கும்போது நான் இறக்க விரும்பவில்லை. 477 00:35:01,643 --> 00:35:06,481 நீங்கள் குணமடைவதாக டாக்டர் கேரகர் கூறினார் என்றீர்கள். 478 00:35:07,107 --> 00:35:11,862 நான் வீட்டுக்கு வர விரும்பினேன். நீங்கள் அவசரம் இல்லை என்றீர்கள். 479 00:35:11,862 --> 00:35:16,575 மனிதர்கள் அழியப் போவதில்லை, யானைகள்தான் அழியப் போகின்றன. 480 00:35:17,576 --> 00:35:20,454 அது உங்கள் முடிவு இல்லை, அம்மா. 481 00:35:20,454 --> 00:35:22,080 உன் வேலை முக்கியமானது. 482 00:35:22,956 --> 00:35:25,417 பெக்கா, அவர் நீ வருத்தப்பட வேண்டும் என அப்படிச் செய்யவில்லை. 483 00:35:25,417 --> 00:35:28,086 - உன் வேலையை முடிக்க விரும்பினார். - உங்களுக்குத் தெரிந்திருந்தது. 484 00:35:28,086 --> 00:35:30,964 நீங்கள் ஏன்... உங்களுக்கு என்னதான் ஆனது? 485 00:35:30,964 --> 00:35:35,677 எனக்கு கல்லீரலிலும், கிட்டத்தட்ட மற்ற பகுதிகளிலும் புற்றுநோய் உள்ளது. 486 00:35:35,677 --> 00:35:37,429 அம்மா, இல்லை. ஜோக் அடிக்காதீர்கள். 487 00:35:40,307 --> 00:35:41,892 என்னிடம் பொய் சொல்லியிருக்கிறீர்கள், அம்மா. 488 00:35:42,809 --> 00:35:44,061 என்னிடம் பொய் சொல்லியிருக்கிறீர்கள். 489 00:35:59,535 --> 00:36:05,457 கதையில் இப்போது நான் இருக்கும் பகுதிக்கு நீ வரும்போது, 490 00:36:05,457 --> 00:36:10,045 கடந்தகாலம் பற்றிக் கோபப்படுவதை நிறுத்திவிடுவாய். 491 00:36:10,045 --> 00:36:15,634 எதிர்காலத்தின் திட்டங்களில் நீ இருக்க மாட்டாய், அதனால் இப்போது மட்டும்தான் உள்ளது. 492 00:36:15,634 --> 00:36:18,387 இப்போது மட்டும்தான் நம்மிடம் உள்ளது. 493 00:36:21,932 --> 00:36:23,976 - அது போதாது. - இல்லை. 494 00:36:23,976 --> 00:36:27,354 ஆனால்... அதுதான் நம்மிடம் உள்ளது. 495 00:36:28,355 --> 00:36:30,232 கொஞ்சம் இப்போதுதான் உள்ளது. 496 00:36:39,366 --> 00:36:41,451 நம்மிடம் அது மட்டும்தான் இருந்துள்ளது. 497 00:37:57,194 --> 00:37:58,445 ஒலிபரப்பை நிறுத்து. 498 00:37:59,530 --> 00:38:01,865 உள்ளடக்கத்தை வழக்கமான ஆங்கில வாக்கிய அமைப்புக்கு மாற்று. 499 00:38:02,950 --> 00:38:06,703 பாதை இல்லை. 500 00:38:06,703 --> 00:38:09,623 - பாதை இல்லை. பாதை... - அடக் கடவுளே. 501 00:38:09,623 --> 00:38:13,377 பேசுவதற்கான மைக்ரோஃபோனைத் திற. அமர்வை ரெக்கார்டு செய்யாதே. 502 00:38:14,837 --> 00:38:15,838 நான் பேசுவது கேட்கிறதா? 503 00:38:17,005 --> 00:38:18,882 இப்போது கேட்டதை, நீ கவனிக்காதே. 504 00:38:18,882 --> 00:38:20,926 ஆணின் குரலைக் கவனிக்காதே. நான் பேசுவது கேட்கிறதா? 505 00:38:22,261 --> 00:38:23,470 அடச்சை. 506 00:38:24,388 --> 00:38:26,640 நீ இப்போதும் வெளியே இருந்தால், தயவுசெய்து... 507 00:38:29,059 --> 00:38:32,521 அவன் உன் முன்னால் வராமல் இருப்பதற்கும் பதிலளிக்காமல் இருப்பதற்கும் 508 00:38:32,521 --> 00:38:34,815 ஒரு காரணம் உள்ளது. 509 00:38:36,859 --> 00:38:38,110 அவன் இல்லவே இல்லை. 510 00:38:39,736 --> 00:38:40,737 எந்த ஆணும் இல்லை. 511 00:38:41,822 --> 00:38:46,994 நீ கேட்ட குரல் பல ஆண்டுகளுக்கு முன்பு, வெகுதூரத்தில் இருந்த குரல். 512 00:38:46,994 --> 00:38:48,745 அது வெறும் ரெக்கார்டிங்குதான். 513 00:38:49,830 --> 00:38:50,831 அடச்சை. 514 00:38:51,582 --> 00:38:54,585 அடச்சை. உனக்கு ரெக்கார்டிங் என்றால் என்னவென்று தெரியாது. 515 00:38:56,879 --> 00:38:59,006 சரி, உனக்கு இதை எப்படி விளக்குவது? 516 00:39:08,724 --> 00:39:11,935 நாங்கள் உனக்குள் இருப்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினோம், 517 00:39:12,436 --> 00:39:13,812 உன் வாழ்க்கை எப்படிப்பட்டது என்று. 518 00:39:15,397 --> 00:39:17,107 அதை எங்கள் நோக்கங்களுக்காக விரும்பினோம், 519 00:39:18,734 --> 00:39:20,485 உன் நல்லதுக்காக இல்லை. 520 00:39:22,821 --> 00:39:25,365 நீ இறக்கக்கூடிய இடத்திற்கு உன்னை நீந்தும்படி கூறுகிறோம். 521 00:39:25,991 --> 00:39:29,036 நாங்கள்தான் கூறுகிறோம், அவன் இல்லை. 522 00:39:30,537 --> 00:39:31,538 திமிங்கிலம் இல்லை. 523 00:39:37,127 --> 00:39:39,463 அந்தத் திமிங்கிலம் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டது. 524 00:39:40,297 --> 00:39:41,548 அவன் இங்கே இல்லை. 525 00:39:42,174 --> 00:39:45,302 அவனது குரல் உண்மை இல்லை. 526 00:39:49,056 --> 00:39:50,307 நீந்திச் சென்றுவிடு. 527 00:39:53,018 --> 00:39:54,186 போய் உணவைத் தேடு. 528 00:39:58,690 --> 00:40:00,359 நாங்கள் உன்னிடம் பொய் சொல்கிறோம். 529 00:40:01,902 --> 00:40:04,488 எங்கள் இனம் வலியில் இருக்கும்போது இதைத்தான் செய்வோம். 530 00:40:10,494 --> 00:40:11,495 நாங்கள் பொய் சொல்வோம். 531 00:40:36,645 --> 00:40:38,730 அவன் இங்கே இல்லையா? 532 00:40:42,609 --> 00:40:43,610 இல்லை. 533 00:40:45,487 --> 00:40:49,908 இங்கே இல்லாத விஷயத்தின் ஒலி உங்களிடம் உள்ளதா? 534 00:40:50,409 --> 00:40:52,494 நிஜத்தில் இல்லாததற்கு? 535 00:40:54,371 --> 00:40:55,497 அதன் பெயர் பொய். 536 00:40:58,792 --> 00:41:01,086 எங்களிடம் இதற்கு ஒலி இல்லை. 537 00:41:02,129 --> 00:41:07,301 நிஜத்தில் இல்லாததை ஏன் கூற வேண்டும்? 538 00:41:12,514 --> 00:41:15,517 உன் இனத்தில் நீதான் கடைசியாக இருக்க வாய்ப்புள்ளது. 539 00:41:17,853 --> 00:41:21,773 வேறு திமிங்கிலங்களை எங்களால் கண்டறிய முடியவில்லை. நீ மட்டும்தான். 540 00:41:24,109 --> 00:41:26,695 எனில் இது நான் வீழ்வதற்கான நேரம். 541 00:41:31,825 --> 00:41:35,704 நீ விழும்போது, அது மீண்டும் தொடங்கும் என்று நீ கூறினாய். 542 00:41:38,165 --> 00:41:40,083 அதற்குப் பின் வரும் அனைத்துமாக நீ மாறுவாய். 543 00:41:41,210 --> 00:41:42,753 எது எடுத்துக்கொள்ளப்பட்டதோ அதைத் திருப்பிக் கொடுப்பாய். 544 00:41:44,880 --> 00:41:45,881 ஆம். 545 00:41:48,550 --> 00:41:51,303 ஒருநாள் உன்னைப் போல நிறைய பேர் இருக்க வாய்ப்புள்ளது. 546 00:41:53,388 --> 00:41:54,389 எப்போது? 547 00:41:56,225 --> 00:41:57,351 அதற்கு நீண்ட காலம் ஆகும். 548 00:41:58,936 --> 00:42:00,979 உனக்கும் எனக்கும் இருப்பதைவிட அதிக காலம். 549 00:42:04,483 --> 00:42:07,903 ஆனால் நீ என்னிடம் கூறியது, நாம் ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டது... 550 00:42:09,905 --> 00:42:11,782 அது புதியவர்களுக்கு ஊட்டமளிக்கும். 551 00:42:16,745 --> 00:42:19,790 அடுத்த முறை அது எப்படி வேறு மாதிரி இருக்கும்? 552 00:42:31,510 --> 00:42:34,847 பேசுவதற்கான மைக்ரோஃபோனைத் திற. அமர்வை ரெக்கார்டு செய்யாதே. 553 00:42:36,390 --> 00:42:40,269 அனுமதியளிக்கப்படாத உங்கள் அமர்வில் வேறெந்தக் கூடுதல் தகவலும் இல்லை என்பதைக் கண்டறிந்தோம். 554 00:42:41,103 --> 00:42:43,522 என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. 555 00:42:43,522 --> 00:42:44,606 எதுவுமில்லையா? 556 00:42:46,775 --> 00:42:47,776 அவள் போய்விட்டாள். 557 00:42:48,360 --> 00:42:53,282 மெனாஜரி2100 பணியாளருக்கும் இலக்கு உயிரினத்துக்கும் இடையிலான எந்தவொரு 558 00:42:53,282 --> 00:42:57,119 உரையாடலும் எங்களுக்குச் சொந்தம் என உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டியதில்லை. 559 00:42:58,912 --> 00:43:00,664 நான் நெறிமுறையை மீறிவிட்டேன். 560 00:43:01,623 --> 00:43:04,710 இறந்துபோன என் அம்மாவின் குரலைப் பயன்படுத்தினேன். என்னை மன்னியுங்கள். 561 00:43:05,502 --> 00:43:06,503 இதுபோல மீண்டும் நடக்காது. 562 00:43:10,632 --> 00:43:14,136 சமீப காலத்தில் பல விஷயங்களை நாம் இழந்து வருகிறோம். 563 00:43:15,971 --> 00:43:18,557 விலங்குகள், உடன் இருந்தவர், ஒட்டுமொத்த நகரங்களும். 564 00:43:20,475 --> 00:43:21,685 கண்டிப்பாக அது நம்மைப் பாதிக்கும். 565 00:43:23,353 --> 00:43:25,856 அந்த விரிகுடாவில் ஆல்ஃபா சுரங்க வேலையைத் தொடங்கியதைக் கவனித்தேன். 566 00:43:27,816 --> 00:43:29,735 அவர்களுக்கு முன் நாம் அங்கே சென்றதில் மகிழ்ச்சி. 567 00:43:29,735 --> 00:43:33,071 ஆம், இனி நமக்கு ஆல்ஃபாவிடம் சலுகை கிடையாது. 568 00:43:37,034 --> 00:43:39,119 நீங்கள் அலாஸ்காவில் அலுவலகத்தில் இருந்து தூரத்தில் இருப்பீர்கள், 569 00:43:39,620 --> 00:43:41,580 அதனால் போர்ட்டபிள் யூனிட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். 570 00:43:41,580 --> 00:43:43,373 அதில் டேட்டாபேஸுக்கான அப்லிங்க் இருக்கும். 571 00:43:45,709 --> 00:43:48,212 குளிரான வானிலை எஸ்ராவுக்கு நன்றாக இருக்கலாம். 572 00:43:50,214 --> 00:43:51,465 ஆம். 573 00:43:53,759 --> 00:43:55,219 நான் இனி பள்ளியில் இருக்க மாட்டேன். 574 00:43:55,219 --> 00:43:57,471 - உனக்கு உடல்நிலை சரியில்லை என்பதாலா? - நாங்கள் வேறு ஊருக்குச் செல்கிறோம். 575 00:43:58,263 --> 00:43:59,515 - எங்கே? - அலாஸ்கா. 576 00:44:00,599 --> 00:44:02,893 என் அம்மா ஓநாய்களிடம் பேசப் போகிறார். 577 00:44:10,609 --> 00:44:13,237 நீ என்னை இங்கே சந்தித்து அப்படி என்றால் என்ன என்று சொல்கிறாயா? 578 00:44:13,237 --> 00:44:16,114 சரி. அலாஸ்காவில் இன்னும் பனிக்காலம் இருக்கிறது என நினைக்கிறேன். 579 00:44:18,325 --> 00:44:21,161 நான் உன்னைப் பார்க்க வந்து, உண்மையான ஸ்னோமேன் உருவாக்கலாம். 580 00:44:22,204 --> 00:44:23,580 அதைத் திற. 581 00:44:35,259 --> 00:44:38,428 ஹம்ப்பேக் திமிங்கிலம் 2046 இல் அழிந்தது. 582 00:44:39,054 --> 00:44:43,308 ஒரு கட்டத்தில் உலகில் 1,25,000க்கும் அதிகமான திமிங்கிலங்கள் இருந்தன. 583 00:44:44,476 --> 00:44:47,271 அவை துருவங்களுக்கு அருகிலான கோடைக்கால உணவிடங்களில் இருந்து, பூமத்திய ரேகைக்கு 584 00:44:47,271 --> 00:44:49,648 அருகில் கதகதப்பான நீரில் இனப்பெருக்கம் செய்ய இடம்பெயர்ந்தன. 585 00:44:50,941 --> 00:44:52,651 அவற்றின் பாடல்கள் மிகவும் பிரபலமானவை, 586 00:44:53,151 --> 00:44:56,697 அவை தொடர்புகொள்ள உதவும் சிக்கலான ஒலிகள். 587 00:45:18,760 --> 00:45:22,389 இந்த இந்தியக் கழுகு 2039 இல் அழிந்தது. 588 00:45:22,389 --> 00:45:23,807 ஒருகாலத்தில் அவை 8 கோடிக்கும்... 589 00:45:23,807 --> 00:45:27,352 ஆப்பிரிக்க யானைகள் 2040 இல் அழிந்தன. 590 00:45:27,936 --> 00:45:29,229 அழிவுக்கு முன்... 591 00:45:29,229 --> 00:45:34,109 டாப்பனுலி உராங்குட்டான்கள் 2045 இல் அழிந்தன. அவை... 592 00:45:34,109 --> 00:45:36,862 துருவக் கரடிகள் 2043 இல், பருவநிலை மாற்றத்தால் 593 00:45:36,862 --> 00:45:40,407 அவற்றின் கடல் பனி வாழ்விடங்கள் இல்லாததால் அழிந்தன. 594 00:45:40,407 --> 00:45:42,492 - நீ தயாரா? - தயார். 595 00:45:51,543 --> 00:45:53,295 - மூன்று மணிநேரமா? - ஆம். 596 00:45:53,879 --> 00:45:56,006 இதைச் செய்ததாக யாரிடமும் கூறக் கூடாது. 597 00:45:56,006 --> 00:45:57,466 யாரிடமும். 598 00:45:57,466 --> 00:45:58,383 கூற மாட்டேன். 599 00:46:18,820 --> 00:46:21,698 ஆனால் அடுத்த முறை அது எப்படி வேறு மாதிரி இருக்கும்? 600 00:46:23,575 --> 00:46:26,286 நாங்கள் மாறினால்தான் அது மாறும். 601 00:46:27,996 --> 00:46:30,290 உலகம் பற்றி நாங்கள் பொய் சொல்வதை நிறுத்தினால். 602 00:46:32,626 --> 00:46:38,048 நாங்கள் சரிசெய்யாததால், எங்களுக்கு பிந்தையவர்கள் சரிசெய்வார்கள் என எதிர்பார்ப்பதை நிறுத்தினால். 603 00:46:49,643 --> 00:46:50,644 இங்கே நிறுத்துங்கள். 604 00:46:51,270 --> 00:46:53,647 இங்கே நிறுத்துங்கள். 605 00:46:59,152 --> 00:47:01,446 இப்போது எந்த மீன்களும் இல்லை. 606 00:47:01,446 --> 00:47:04,032 அப்படி இருந்தால், எங்களுக்குத் தெரியும். 607 00:47:04,032 --> 00:47:06,994 நான் இப்போது ஆல்ஃபாவுக்கு வேலை செய்கிறேன். 608 00:47:06,994 --> 00:47:08,370 கண்டிப்பாக. 609 00:47:11,999 --> 00:47:13,834 அது இன்னும் இங்கே இருக்கும் என எப்படி உங்களுக்குத் தெரியும்? 610 00:47:15,627 --> 00:47:16,628 எனக்குத் தெரியாது. 611 00:47:17,880 --> 00:47:19,590 ஆல்ஃபா 612 00:47:39,651 --> 00:47:40,485 வா. 613 00:47:46,700 --> 00:47:48,202 - நீ தயாரா? - ஆம். 614 00:47:49,369 --> 00:47:52,581 - மூன்று, இரண்டு, ஒன்று, குதி. - மூன்று, இரண்டு, ஒன்று. 615 00:48:05,302 --> 00:48:06,428 நான் இங்கே எவ்வளவு நேரம் இருக்கலாம்? 616 00:48:06,428 --> 00:48:07,804 நீண்ட நேரம் இல்லை. 617 00:48:14,019 --> 00:48:15,479 அது நம்மைச் சாப்பிடாது தானே? 618 00:48:17,105 --> 00:48:21,360 அவளைவிட அதிக பற்கள் உன்னிடம் உள்ளன, ஆனால் அப்படிச் சாப்பிட்டால் அது அவளது தவறு இல்லை. 619 00:48:32,704 --> 00:48:35,666 இந்தச் சத்தத்திற்கு என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியவில்லை. 620 00:48:37,292 --> 00:48:40,838 இசை? அது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அர்த்தத்தில் புரியும். 621 00:48:42,464 --> 00:48:46,385 இதைச் செய்தவரை உனக்குத் தெரியுமா? 622 00:48:47,094 --> 00:48:51,014 நான் அவரைச் சந்தித்தது இல்லை, அவரது இசையை மட்டும்தான் கேட்டுள்ளேன். 623 00:48:53,725 --> 00:48:58,021 ஆனாலும் அவரை உன்னால் கேட்க முடிகிறதா? 624 00:48:59,356 --> 00:49:00,357 ஆம். 625 00:49:01,692 --> 00:49:02,693 வா. 626 00:49:04,444 --> 00:49:09,449 அவரது உலகை உனக்குத் தெரியும், அவரைத் தெரியாதா? 627 00:49:10,617 --> 00:49:11,618 ஆம். 628 00:49:12,744 --> 00:49:15,372 இன்னும் பிறக்காதவர்களும் கேட்க முடியுமா? 629 00:49:16,164 --> 00:49:19,042 நாம் இன்று உருவாக்கும் ஒலிகளை அவர்கள் கேட்பார்களா? 630 00:49:19,751 --> 00:49:20,752 ஆம். 631 00:49:22,045 --> 00:49:23,046 அது எங்கே? 632 00:49:24,506 --> 00:49:25,799 அது போய்விட்டது என நினைக்கிறேன், அம்மா. 633 00:49:31,597 --> 00:49:32,598 அதோ வருகிறாள். 634 00:49:38,854 --> 00:49:41,440 இந்த உலகத்தில் இருப்பதற்கான வழியை நீ அவர்களுக்குக் காட்டுவாய். 635 00:49:43,692 --> 00:49:44,902 எங்களைப் பற்றி எச்சரிப்பாய். 636 00:49:46,445 --> 00:49:50,449 எங்களால் என்ன செய்ய முடியும் என்பதையும் ஏற்கனவே செய்துள்ளதையும் பார்க்கிறாய். 637 00:49:58,332 --> 00:50:00,250 நாங்கள் யார் என்பதை அவர்களிடம் கூறு. 638 00:50:05,380 --> 00:50:06,673 நான் ஏற்கனவே கூறிவிட்டேன். 639 00:51:34,761 --> 00:51:36,763 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்