1 00:00:05,297 --> 00:00:08,132 அவற்றுடன் இன்று மாலை நிறைய செய்திகள் வருகின்றன. 2 00:00:08,217 --> 00:00:10,802 ஆனால் முதலில், சில உள்ளூர்ச் செய்திகள் உள்ளன. 3 00:00:11,637 --> 00:00:12,638 ரெஜி. 4 00:00:26,735 --> 00:00:27,736 ரெஜி! 5 00:00:31,823 --> 00:00:32,950 எங்கே இருக்கிறாய், தம்பி? 6 00:00:44,002 --> 00:00:45,420 ரெஜி! 7 00:01:04,772 --> 00:01:05,774 ரெஜி. 8 00:01:08,151 --> 00:01:09,278 ரெஜி! 9 00:01:12,447 --> 00:01:14,908 நான் உன்னை எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டிருக்கிறேன், தம்பி. 10 00:01:14,992 --> 00:01:15,993 ரெஜி! 11 00:01:17,661 --> 00:01:18,662 நீ இங்கே இருக்கிறாயா? 12 00:01:32,634 --> 00:01:34,303 இல்லை! 13 00:01:41,810 --> 00:01:45,564 ஜிஇடி 14 00:01:58,744 --> 00:01:59,995 அடச்சை. 15 00:02:00,078 --> 00:02:02,456 கேவலமான பெண்ணே! உன்னை என்ன செய்கிறேன் பார்! 16 00:02:06,251 --> 00:02:07,920 அம்மா, இது எப்படித் தெரிகிறது எனத் தெரியவில்லை, ஆனால்... 17 00:02:08,002 --> 00:02:09,002 கண்டிப்பாக உனக்குத் தெரியாதுதான்! 18 00:02:09,086 --> 00:02:11,632 -அவளது போர்வையை உயர்த்த வந்தேன்... -மகனே, வாயை மூடு! 19 00:02:12,216 --> 00:02:14,051 உன் அறைக்குச் செல், ஹில்லியர்ட். 20 00:02:14,134 --> 00:02:15,135 போ! 21 00:02:25,979 --> 00:02:27,356 நீ இப்போது கத்தியை இறக்கலாம். 22 00:02:27,439 --> 00:02:28,815 அவன் என்னை வன்புணர்வு செய்ய முயன்றான். 23 00:02:28,899 --> 00:02:32,027 -அவன் விளையாட்டுத்தனமான பையன். -என்னை கற்பழிக்க முயலும் ஆண் போலத் தெரிகிறான்! 24 00:02:32,861 --> 00:02:34,446 நான் இப்போது அதைக் கேட்க வேண்டியதில்லை. 25 00:02:34,530 --> 00:02:37,199 ஹில்லி அதைக் கேட்க வேண்டும். நான் தூங்க முயற்சிக்கிறேன். 26 00:02:37,866 --> 00:02:40,953 உன்னை இங்கே தங்க வைப்பது ஆசையாக இருந்தது இப்போது எனக்குத் தெரிகிறது. 27 00:02:41,036 --> 00:02:43,330 அது என் தவறுதான். நன்றாக யோசித்திருக்க வேண்டும். 28 00:02:43,413 --> 00:02:45,791 ஹில்லியின் வயதும் நீ இவ்வளவு... 29 00:02:45,874 --> 00:02:46,917 இவ்வளவு என்ன? 30 00:02:49,461 --> 00:02:51,421 நீ அழகான பெண், ராபின். 31 00:02:51,505 --> 00:02:53,423 ஒரு இளம்பெண் அரைகுறை ஆடையுடன் சுற்றிக்கொண்டிருக்கிறாய். 32 00:02:53,507 --> 00:02:54,800 அதனால் அவன் சபலப்படுகிறான். 33 00:02:57,511 --> 00:02:59,137 -அது என் பிரச்சினையா? -நீயே சொல். 34 00:02:59,221 --> 00:03:01,723 -உன்னிடம்தான் கத்தி உள்ளது... -என் அம்மா இந்தக் கத்தியைக் கொடுத்தார். 35 00:03:06,603 --> 00:03:09,648 உன் அப்பா கொல்லப்பட்டதும் உன் வீட்டில் உன்னுடன் நிறைய ஆண்களை 36 00:03:09,731 --> 00:03:12,943 உன் அம்மா வைத்திருந்ததும் எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் எனப் புரிகிறது, ஆனால்... 37 00:03:13,026 --> 00:03:15,571 -என் அம்மா என்னை நேசித்தார். -நான் அவளை நேசித்தேன். 38 00:03:16,196 --> 00:03:17,489 அவள் எனது நெருங்கிய தோழி. 39 00:03:18,490 --> 00:03:19,700 அதனால்தான் நீ இங்கே தங்குவதை விரும்பினேன். 40 00:03:20,826 --> 00:03:25,455 ஆனால் இப்போது ஹில்லிக்கும் உனக்கும் எது நல்லது என்பது பற்றி நான் யோசிக்க வேண்டும். 41 00:03:26,540 --> 00:03:29,418 உனது சமத்துவத் தேர்வுக்கான படிப்புக் குழுவில் உனக்கு நிறைய தோழிகள் இருப்பார்கள். 42 00:03:30,294 --> 00:03:32,796 சிறிது காலம் தங்க முடியுமா என அவர்களிடம் கேட்டுப் பார். 43 00:03:37,176 --> 00:03:39,011 ஆனால் நான் எதுவும் தவறு செய்யவில்லை. 44 00:03:39,094 --> 00:03:41,388 எனக்குத் தெரியும். இது நீ செய்தது பற்றி இல்லை. 45 00:03:42,014 --> 00:03:45,184 இதைப் புரிந்துகொள்ள நீ இன்னும் பக்குவப்படவில்லை என்பது பற்றியது. 46 00:03:45,267 --> 00:03:48,645 இந்தக் கருப்பினத்தவர்கள் பைத்தியங்களாக ஆகாமல் பார்த்துக்கொள்வது நம் கடமை. 47 00:03:50,355 --> 00:03:52,983 சரியோ தவறோ, இதைத்தான் நாம் செய்தாக வேண்டும். 48 00:05:49,558 --> 00:05:50,642 கிரே? 49 00:05:52,144 --> 00:05:54,021 கிரே, எழுந்திருங்கள். எழுந்திருங்கள். 50 00:05:56,523 --> 00:05:57,524 யார் நீ? 51 00:05:57,608 --> 00:06:00,068 -என் வீட்டில் என்ன செய்கிறாய்? -நான்தான். நான்தான், ராபின். 52 00:06:03,488 --> 00:06:05,532 பறவையே? வசந்த காலத்தின் முதல் பறவையா? 53 00:06:07,868 --> 00:06:09,244 எப்படி உள்ளே வந்தாய், பறவையே? 54 00:06:09,328 --> 00:06:12,497 நேற்றிரவு கொடுத்த உங்கள் சாவி இன்னும் உள்ளது. அதைத் திருப்பிக் கொடுக்க வந்தேன், 55 00:06:12,581 --> 00:06:14,750 நான் கதவைத் தட்டும்போது நீங்கள் அலறத் தொடங்கினீர்கள். 56 00:06:16,210 --> 00:06:17,211 என்ன கனவு கண்டீர்கள்? 57 00:06:18,378 --> 00:06:19,630 அது... 58 00:06:19,713 --> 00:06:21,632 அது... அது... அது மோசமாக இருந்தது. 59 00:06:21,715 --> 00:06:22,925 அப்படியா? என்ன நடந்தது? 60 00:06:26,678 --> 00:06:28,305 ஹேய், ஹேய், ஹேய். இருங்கள், இருங்கள்! 61 00:06:28,388 --> 00:06:30,015 அதெல்லாம் செய்ய வேண்டியதில்லை. 62 00:06:30,098 --> 00:06:31,975 உங்கள் முகத்தைக் கழுவ தண்ணீர் எடுத்து வருகிறேன். 63 00:06:32,768 --> 00:06:33,894 உங்கள் கழிவறை எங்கே உள்ளது? 64 00:06:37,397 --> 00:06:40,943 கழிவறை... கழிவறை... உடைந்துவிட்டது. 65 00:06:41,026 --> 00:06:43,820 மேலும்... மேலும் சின்க் அடைத்துள்ளது. 66 00:06:44,571 --> 00:06:46,323 பிறகு எப்படி கழிவறைக்குச் செல்கிறீர்கள்? 67 00:06:49,785 --> 00:06:54,122 ரெஜி என்னை சாப்பிட வெளியே கூட்டிச் செல்லும்போது மலம் கழிப்பேன். 68 00:06:54,206 --> 00:06:58,460 மேலும்... பழைய பீன்ஸ் கேனில் சிறுநீர் கழித்து, அதை 69 00:06:58,544 --> 00:07:02,339 சமையலறை சின்க்கில் ஊற்றிவிட்டு, பிறகு தண்ணீரைத் திறந்துவிடுவேன். 70 00:07:04,091 --> 00:07:05,092 சமையலறையிலா? 71 00:07:06,218 --> 00:07:09,429 இல்லை. இல்லை. உங்கள் கழிவறை எங்கே உள்ளது? 72 00:07:09,513 --> 00:07:14,226 அது... அது அங்கே உள்ளது. அங்கேதான் ஹாலைத் தாண்டி உள்ளது. 73 00:07:14,810 --> 00:07:16,520 -இந்தப் பக்கமா? -அங்குதான் இருந்தது. 74 00:07:17,104 --> 00:07:18,522 எதுவும் என் மீது பாய்ந்துவிடதே? 75 00:07:21,149 --> 00:07:22,150 நிச்சயமாகவா? 76 00:07:40,210 --> 00:07:42,546 இல்லை. முடியாது! 77 00:07:46,383 --> 00:07:48,302 -அது சுத்தமாக சரியில்லை. -அது... 78 00:07:48,385 --> 00:07:50,971 நிறுத்து... அப்படிச் செய்வதை நிறுத்து, போய் கதவை மூடு. 79 00:07:51,054 --> 00:07:52,514 இல்லை, இல்லை. நான் சொல்வதைக் கேளுங்கள்! 80 00:07:52,598 --> 00:07:55,225 அதைச் சரிசெய்யவில்லையெனில், எனக்கு அசௌகரியமாக இருக்கும்? 81 00:07:55,309 --> 00:07:56,351 அசௌகரியமாக இருக்கும். 82 00:07:57,186 --> 00:07:59,855 -சுத்தம் செய்யும் பொருட்கள் எங்கே உள்ளன? -என் பொக்கிஷங்கள். முடியாது. 83 00:07:59,938 --> 00:08:01,190 என்ன பேசுகிறீர்கள்? 84 00:08:01,273 --> 00:08:03,567 ஒவ்வொரு முறையும் ரெஜி சுத்தம் செய்யப் போவதாகக் கூறும்போதும், அவன் இங்கே... 85 00:08:03,650 --> 00:08:06,445 என் சிறந்த பொருட்களை எல்லாம் தூக்கிப் போட்டு விடுவான். 86 00:08:06,528 --> 00:08:08,238 -என் சிறந்த பொருட்கள். -ஓ, அப்படியா? எது மாதிரி? 87 00:08:11,783 --> 00:08:13,243 அப்படிச் செய்யாதீர்கள். 88 00:08:14,494 --> 00:08:15,704 வாருங்கள். நான் காட்டுகிறேன். 89 00:08:16,955 --> 00:08:18,749 -ஓ, நீ வேகமாக போகிறாய்! -ஓ, மன்னிக்கவும். 90 00:08:18,832 --> 00:08:20,542 இங்கே உட்காருங்கள். மன்னிக்கவும். 91 00:08:24,588 --> 00:08:25,797 நான் என்னவென்று சொல்கிறேன். 92 00:08:25,881 --> 00:08:29,426 தூக்கிப் போடுவதற்கு முன் ஒவ்வொன்றையும் உங்களிடம் காட்டுகிறேன், நீங்கள் முடிவெடுங்கள். 93 00:08:29,510 --> 00:08:30,511 இது பிடித்துள்ளதா? 94 00:08:31,220 --> 00:08:32,929 சரி, சரி. உங்களுக்குப் பிடித்துள்ளது. 95 00:08:37,518 --> 00:08:40,854 -சரி. தயாரா? -நினைக்கிறேன். 96 00:08:46,109 --> 00:08:48,195 இந்த பழைய டூத் பிரஷை வைத்திருக்க வேண்டுமா? 97 00:08:51,406 --> 00:08:53,909 -இல்லை. அதை தூக்கிப் போடு. -சரி. 98 00:08:58,705 --> 00:08:59,706 டாம்பாக்ஸ் 99 00:08:59,790 --> 00:09:01,083 ஆம், அதைத் தூக்கிப் போடலாம். 100 00:09:02,960 --> 00:09:05,462 இதையும் தூக்கிப் போடலாமா? குட்பை சொல்லிவிடலாமா? 101 00:09:05,546 --> 00:09:06,630 -ஆம். -சரி. 102 00:09:16,557 --> 00:09:18,934 -சரி. -இப்போது இதைத் தூக்கிப் போடு. 103 00:09:25,023 --> 00:09:26,525 அது என்ன? 104 00:09:27,150 --> 00:09:30,195 எனக்குத் தெரியவில்லை. “இருமல் மற்றும் ஜலதோஷம்." 105 00:09:30,863 --> 00:09:32,489 எனக்கு இரண்டுமே இல்லை. 106 00:09:40,622 --> 00:09:42,291 ஓ, முடியவே முடியாது! 107 00:09:42,916 --> 00:09:44,001 இப்படி எப்படி வாழ்கிறீர்கள்? 108 00:09:44,084 --> 00:09:46,587 நீ எப்போது வேண்டுமானாலும் நீஸி வீட்டுக்குச் செல்லலாம். 109 00:09:46,670 --> 00:09:48,172 நான் இனி அங்கு இருக்க மாட்டேன். 110 00:09:48,255 --> 00:09:50,007 என்ன நடந்தது? உன்னை வெளியே துரத்திவிட்டாளா? 111 00:09:50,090 --> 00:09:51,592 -ஆம். -எதற்காக? 112 00:09:53,552 --> 00:09:54,553 அது முக்கியம் இல்லை. 113 00:09:55,512 --> 00:09:58,473 நீ இங்கே இருக்கலாம். என்னிடம் நிறைய போர்டு கேம்கள் உள்ளன. 114 00:09:58,557 --> 00:10:00,184 உங்கள் வீட்டில் பூச்சிகள் நிறைய உள்ளன, புரிகிறதா? 115 00:10:01,018 --> 00:10:03,854 இந்தக் குவியல்கள், இந்தப் பெட்டிகளில்தான் அவை குடும்பம் நடத்துகின்றன. 116 00:10:04,354 --> 00:10:05,856 அது எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும். 117 00:10:05,939 --> 00:10:07,691 -இப்போதேவா? -ஆம். 118 00:10:29,421 --> 00:10:30,422 கடவுளே... 119 00:11:04,248 --> 00:11:07,042 மத்திய கிழக்கில் பதட்டம் அதிகமாகவே உள்ளது. 120 00:11:07,125 --> 00:11:10,963 உள்நாட்டு மோதலாகத் தொடங்கியது வன்முறையாக மாறியுள்ளது. 121 00:11:11,046 --> 00:11:12,464 சாட்சிகள் கூறிய... 122 00:11:15,843 --> 00:11:19,179 வாருங்கள். கழிவறை எப்படி இருக்க வேண்டுமென உங்களுக்குக் காட்டுகிறேன். 123 00:11:28,146 --> 00:11:29,648 ஏன் வேகமாக நடக்கிறாய்? 124 00:11:37,239 --> 00:11:38,323 இதோ பாருங்கள்! 125 00:11:54,756 --> 00:11:55,757 இது மாயாஜாலம்! 126 00:11:55,841 --> 00:11:58,177 இல்லை. உங்களது ஃப்லோட்டர் கொஞ்சம் வளைந்திருந்தது. 127 00:11:58,260 --> 00:12:01,388 கழிப்பறை பவுலிலும் சின்க்கிலும் குப்பைகள் இருந்தன, ஆனால் நிறைய நேரம் எடுக்கவில்லை. 128 00:12:01,471 --> 00:12:03,182 இவையெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? 129 00:12:03,265 --> 00:12:04,308 என் அம்மாவிற்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும், 130 00:12:04,391 --> 00:12:06,810 எங்களிடம் பணம் இருக்காது, அதனால் நான்தான் இவற்றைச் சரிசெய்வேன். 131 00:12:06,894 --> 00:12:09,062 -ஓ, உன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லையா? -அவர் இறந்துவிட்டார். 132 00:12:09,146 --> 00:12:10,439 ஓ, அது வருத்தமான விஷயம். 133 00:12:24,578 --> 00:12:26,246 -நான் போக வேண்டும். -என்ன? 134 00:12:26,330 --> 00:12:27,331 இப்போதேவா? 135 00:12:27,414 --> 00:12:29,750 பேப்பர் நிறைய உள்ளது என்பதற்காக அவற்றை இப்படி வீணடிக்கக்கூடாது. 136 00:12:29,833 --> 00:12:32,044 இந்தக் குழாய்கள் வேலை செய்தாலும், கோபமாக உள்ளன, கேட்கிறதா? 137 00:12:32,127 --> 00:12:33,587 ஆம். கடவுளே. 138 00:12:36,840 --> 00:12:37,841 அது அற்புதமாக உள்ளது. 139 00:12:38,675 --> 00:12:40,427 உள்ளே சென்று உங்கள் கைகளைக் கழுவுங்கள். 140 00:12:42,387 --> 00:12:43,388 ஆம், உங்களைத்தான். 141 00:12:51,605 --> 00:12:53,649 என்னால் இதைத் தனியாகச் செய்ய முடியாது. 142 00:13:16,922 --> 00:13:19,550 இன்னும் நிறைய பொருட்களைத் தூக்கிப் போடுவது பற்றி சிந்திக்கிறாயா? 143 00:13:19,633 --> 00:13:22,177 உங்களுக்கு அனைத்தையும் சிறப்பாக்கத்தான் முயல்கிறேன். 144 00:13:22,261 --> 00:13:23,762 சிறப்பு நன்றாகத்தான் இருக்கும், இல்லையா? 145 00:13:28,183 --> 00:13:31,103 உங்களுக்கு நான் சுத்தம் செய்வது பரவாயில்லையா? 146 00:13:35,274 --> 00:13:38,652 கோபப்படக்கூடாது, உங்களை அடித்துக்கொள்ளக்கூடாது, சரியா? 147 00:13:41,822 --> 00:13:44,157 -பூட்டுக்கான சாவி உங்களிடம் உள்ளதா? -இல்லை, இல்லை. 148 00:13:44,241 --> 00:13:45,659 இல்லை. அது இல்லை. 149 00:13:45,742 --> 00:13:47,494 இல்லை, உங்களிடம் சாவி இல்லையா? அல்லது... 150 00:13:51,206 --> 00:13:53,333 பாருங்கள், நான் உள்ளே செல்ல வேண்டும். நிறைய கரப்பான்கள் உள்ளன. 151 00:13:53,417 --> 00:13:55,460 -நான் பூச்சி மருந்து அடிக்க வேண்டும். -அங்கே வேண்டாம். 152 00:13:55,544 --> 00:13:57,671 எல்லா இடத்திலும் அடிக்க வேண்டும் என கூறுகிறேன். 153 00:13:58,255 --> 00:14:00,215 அது... அவளது அறை. 154 00:14:01,049 --> 00:14:02,885 -சென்சியா. -யார்? 155 00:14:02,968 --> 00:14:08,056 சென்சியா. நான் அவளைத் திருமணம் செய்திருந்தேன், பிறகு அவள் இறந்துவிட்டாள். 156 00:14:24,615 --> 00:14:27,951 நான் வேலையை முடித்ததும் நீங்கள் மீண்டும் பூட்டிக்கொள்ளலாம். 157 00:14:28,577 --> 00:14:30,287 என்னை நீங்கள் நம்பலாம். 158 00:14:31,413 --> 00:14:33,457 புரிகிறதா? நம்பலாம். 159 00:14:34,458 --> 00:14:36,919 அது நடக்கவே நடக்காதது போல இருக்கும். 160 00:14:38,754 --> 00:14:40,047 சத்தியமாகச் சொல்கிறேன். 161 00:14:46,803 --> 00:14:48,722 கவலை வேண்டாம். இதை சீக்கிரம் முடித்துவிடுவேன். 162 00:15:10,410 --> 00:15:11,620 இது நன்றாக உள்ளது. 163 00:15:11,703 --> 00:15:13,705 நீ அங்கிருந்து வெளியே வர வேண்டும். 164 00:16:09,011 --> 00:16:10,220 உள்ளே வாருங்கள். 165 00:16:10,762 --> 00:16:11,763 சென்சியா? 166 00:16:23,192 --> 00:16:24,443 உள்ளே வருகிறீர்களா இல்லையா? 167 00:16:27,029 --> 00:16:28,947 ஏன் வெளியே நிற்கிறீர்கள், பிட்டி தாத்தா? 168 00:16:30,199 --> 00:16:31,200 வெட்கப்படுகிறீர்களா? 169 00:16:37,539 --> 00:16:38,624 அவள் போய்விட்டாள், தம்பி. 170 00:16:40,417 --> 00:16:43,921 ஹேய், இதை ஏன் பூட்டி வைத்துள்ளீர்கள்? இதுதான் இந்த வீட்டிலேயே சிறந்த அறை. 171 00:16:53,347 --> 00:16:55,557 ஜாக்கோ, அங்கே உனக்கு உதவி தேவைப்பட்டால் என்னிடம் சொல், சரியா? 172 00:16:55,641 --> 00:16:56,642 சரி. 173 00:17:00,479 --> 00:17:03,190 ஹேய், இந்த பெட்டியைப் பயன்படுத்த மாட்டீர்கள் அல்லவா, கிரே? 174 00:17:03,273 --> 00:17:04,983 எனது பயணப் பெட்டியை விடுங்கள்! 175 00:17:05,067 --> 00:17:08,737 என் புக் கேஸையும் விடுங்கள், என் டிவியின் ஒலியுடன் விளையாடாதீர்கள். 176 00:17:08,819 --> 00:17:10,781 சரி, சரி, சார். புரிகிறது. 177 00:17:10,864 --> 00:17:13,367 அந்த அலமாரியில் உள்ள எனது புத்தகங்களை எடுக்காதீர்கள்! 178 00:17:13,450 --> 00:17:16,036 சரி! சரி. அவர்களுக்குப் புரிகிறது. 179 00:17:16,954 --> 00:17:18,539 நாம் கிட்டத்தட்ட முடித்துவிட்டோம். 180 00:17:19,414 --> 00:17:22,751 -பார், பார், என் அலமாரியில் இருக்கிறார்கள். -யாரும் உங்கள் அலமாரிக்குள் செல்ல மாட்டார்கள். 181 00:17:24,752 --> 00:17:28,464 அது... அது மரம் மற்றும் உலோகத்தால் செய்த 182 00:17:28,549 --> 00:17:31,301 சிறிய பெட்டியில் இருந்தது. 183 00:17:31,385 --> 00:17:33,720 -அதில் அதுதான் இருந்தது. -என்ன இருந்தது? 184 00:17:34,638 --> 00:17:36,348 அது... அது... 185 00:17:37,099 --> 00:17:40,102 -வேண்டாம். அதைச் செய்ய வேண்டியதில்லை. -ஓ, எனக்கு... நான் மறந்துவிட்டேன். 186 00:17:40,185 --> 00:17:42,354 இங்கே அழகாக உள்ளது இல்லையா, கிரே? 187 00:17:42,938 --> 00:17:44,857 ஹேய், நான் முதலைத் தோல் பெட்டியை எடுத்துக்கொள்கிறேன். 188 00:17:44,940 --> 00:17:48,777 -அதாவது, அவன் எங்கும் போகவில்லை. -என் முதலையை விடுங்கள். கூடாது! 189 00:17:48,861 --> 00:17:49,862 அவனுக்கு அது தேவையில்லை. 190 00:17:49,945 --> 00:17:52,239 ஹேய், ஹேய். இது அவரது பை, அவர் அதை வைத்துக்கொள்வார். 191 00:17:52,322 --> 00:17:54,324 -ஆம். -பார்த்தீர்களா? 192 00:17:54,408 --> 00:17:56,618 நான் சொன்னேனே. நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். 193 00:17:56,702 --> 00:17:58,704 -உன் பெயர் என்ன? -ராபின். 194 00:17:59,288 --> 00:18:01,331 -வசந்த காலத்தின் முதல் பறவை. -ஆம். 195 00:18:02,583 --> 00:18:05,544 இந்தப் பொருட்களை மறுசுழற்சிக்கு எடுத்துச் செல்ல வேண்டுமெனில், நாம் போக வேண்டும். 196 00:18:05,627 --> 00:18:08,088 சரி, புரிகிறது. சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன், நண்பா. 197 00:18:08,172 --> 00:18:09,298 சரி. 198 00:18:11,675 --> 00:18:14,761 அது ஒரு... சிறிய பெட்டி, 199 00:18:14,845 --> 00:18:19,766 உலோகம் மற்றும் மரத்தால் செய்யப்பட்டிருக்கும், 200 00:18:19,850 --> 00:18:22,269 கிணற்றில் இருக்கும் சிவப்புப் பாறைக்குப் பின்னால் இருக்கும். 201 00:18:22,895 --> 00:18:25,022 ஹேய், ராபின். கொஞ்சம் பேச வேண்டும். 202 00:18:28,567 --> 00:18:29,568 என்ன விஷயம்? 203 00:18:29,651 --> 00:18:31,028 நாம் பேசிய தொகை. 204 00:18:31,987 --> 00:18:33,488 பேசியதற்கு அதிகமான வேலை உள்ளதா? 205 00:18:35,199 --> 00:18:36,617 புரிகிறது. 206 00:18:36,700 --> 00:18:38,368 கவலைப்படாதே. நான் பார்த்துக்கொள்கிறேன். 207 00:18:38,452 --> 00:18:39,828 சரி. 208 00:18:39,912 --> 00:18:43,123 -ஹேய்! பில்லியும் ஜாக்கோவும் கிளம்புகின்றனர். -பை. 209 00:18:44,583 --> 00:18:46,335 அப்படி அவர்களை அனுப்பிவிட முடியாது. 210 00:18:46,418 --> 00:18:48,170 நாம் அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும். 211 00:18:48,253 --> 00:18:51,048 காய்டாகின் புதையலை வைத்து கொடுக்க முடியாது. அது அதற்கானது இல்லை. 212 00:18:51,131 --> 00:18:52,966 ஆம், உங்கள் கேனில் இருந்த பணத்தைக் கொடுக்கலாமா? 213 00:18:54,218 --> 00:18:55,427 நான் பார்க்கிறேன். 214 00:18:57,554 --> 00:19:00,557 ஏன் உப்பு ஜாடி வைத்துள்ளீர்கள்? என்னவோ. 215 00:19:00,641 --> 00:19:02,351 இந்த ஃபேன்களை எடுத்துக்கொள்ளலாமா, கிரே? 216 00:19:02,434 --> 00:19:03,977 இல்லை, நமக்கு அது தேவை. 217 00:19:04,645 --> 00:19:05,729 சரி. 218 00:19:07,689 --> 00:19:09,858 அந்த மடக்கும் நாற்காலிகளை எடுத்துக்கொள்ளலாமா? 219 00:19:10,651 --> 00:19:12,027 ஒரு சிலவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். 220 00:19:16,031 --> 00:19:20,035 ஓ, ஜாக்கோ இது டிவிக்கு அடியில் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்துள்ளான். 221 00:19:21,703 --> 00:19:23,497 நீ... நீ இங்கே தங்க விரும்பினால், 222 00:19:23,580 --> 00:19:25,874 நீ சென்சியாவின் அறையில் தங்கிக்கொள்ளலாம். 223 00:19:25,958 --> 00:19:29,795 அவள் எதுவும் சொல்ல மாட்டாள், நான் இங்கே நாற்காலியில் தூங்கிக் கொள்கிறேன். 224 00:19:29,878 --> 00:19:32,130 இந்த டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் ஏன் செய்தார்கள் எனத் தெரியுமா? 225 00:19:32,214 --> 00:19:35,509 நீ... நீ இங்கே தங்குவதாக இருந்தால் சென்சியாவின் அறையில் தங்கிக்கொள். 226 00:19:35,592 --> 00:19:36,969 ஏன் நீங்கள் டாக்டரைப் பார்க்க வேண்டும்? 227 00:19:37,636 --> 00:19:40,556 எனக்குத் தெரியவில்லை. எனக்கு... எனக்கு எந்த நோயும் இல்லை. 228 00:19:42,724 --> 00:19:45,394 இந்த அப்பாயிண்ட்மெண்ட்டை ரெஜி உங்களுக்காகச் செய்தாரா? 229 00:19:49,439 --> 00:19:51,024 ஹேய், எனக்காகக் காத்திருங்கள். 230 00:20:01,952 --> 00:20:03,412 என் பொருட்கள் எல்லாம் எங்கே? 231 00:20:04,830 --> 00:20:06,248 உங்களுக்கு இது பிடிக்கவில்லையா? 232 00:20:11,086 --> 00:20:13,088 நான் ஜாக்கோவையும் பில்லியையும் வழியனுப்பிவிட்டு வருகிறேன். 233 00:20:13,172 --> 00:20:14,882 திரும்பி வருவாயா? 234 00:20:14,965 --> 00:20:17,467 -நான் கீழே தான் போகிறேன். -சரி, ஆனால் திரும்பி வருவாயா? 235 00:20:18,177 --> 00:20:19,469 ஆம். 236 00:20:20,804 --> 00:20:21,889 நான் திரும்பி வருவேன். 237 00:20:32,399 --> 00:20:35,027 -ஹேய். -ஹேய், என்ன விஷயம்? உனக்கு லிஃப்ட் வேண்டுமா? 238 00:20:35,110 --> 00:20:36,361 -இல்லை. -சரி. 239 00:20:36,445 --> 00:20:39,990 அவரை டாக்டரிடம் கூட்டிச் செல்வது பற்றி ரெஜி உன்னிடம் எதுவும் கூறினானா? 240 00:20:40,574 --> 00:20:41,700 எனக்குத் தெரிந்து இல்லை. 241 00:20:44,661 --> 00:20:45,829 நீ அவருடன் இருக்கப் போகிறாயா? 242 00:20:47,289 --> 00:20:49,291 தங்க விரும்புகிறேன் என்று கூற முடியாது, ஆனால் நீஸி என்னைத் துரத்திவிட்டார். 243 00:20:49,374 --> 00:20:52,336 -வேறெங்கும் செல்ல இப்போது எனக்கு இடமில்லை. -எதற்காக நீஸி அப்படிச் செய்தார்? 244 00:20:52,419 --> 00:20:55,005 ச்ச. நானா ஹில்லியா என்று இருந்தது. 245 00:20:57,007 --> 00:20:58,175 அந்தப் பெண். 246 00:20:58,926 --> 00:21:00,844 -ஒன்று கேட்கிறேன். -என்ன? 247 00:21:01,345 --> 00:21:05,390 நீ ஏன் கிரேவை “கிரே தாத்தா” அல்லது “மாமா” என்று அழைக்கக்கூடாது? 248 00:21:05,974 --> 00:21:07,976 ஏனெனில் அவர் இரண்டுமே இல்லை. 249 00:21:08,769 --> 00:21:10,521 அது ஒரு மரியாதை, கண்ணே. 250 00:21:10,604 --> 00:21:13,148 எதற்காக, நண்பா? எப்படியும் அவருக்கு நினைவில் இருக்கப் போவதில்லை. 251 00:21:13,232 --> 00:21:16,443 ஆம். இருந்தாலும் அவர் ஒரு ஆண். நமக்கு மூத்தவர். 252 00:21:21,240 --> 00:21:23,075 -தயாரா, ஜாக்கோ? -தயார். 253 00:21:36,004 --> 00:21:37,881 நீ திரும்பி வருவாய் என நினைக்கவில்லை. 254 00:21:38,382 --> 00:21:41,093 ஆனால் வந்துவிட்டேன். இன்னொன்று தெரியுமா? 255 00:21:41,176 --> 00:21:42,928 -என்ன? -நாம் வெடிகுண்டு வாங்கப் போகிறோம். 256 00:21:47,558 --> 00:21:51,353 ஜெனரல் ஹார்டுவேர் 257 00:21:57,025 --> 00:21:58,694 ஃபாகரைச் சொல்கிறீர்களா? 258 00:21:58,777 --> 00:22:00,237 அவற்றை வெடிகுண்டு என்று அழைக்கமாட்டார்களா? 259 00:22:00,320 --> 00:22:02,906 அதை பூச்சிகளுக்கான வெடிகுண்டு என்று கூறித்தான் கேட்டிருக்கிறேன். 260 00:22:02,990 --> 00:22:04,950 நச்சுப்பொருள் நிறைந்த ஆடம்பரமான ஸ்ப்ரே கேன் தான். 261 00:22:05,033 --> 00:22:06,451 அதுதான் எனக்கு வேண்டும். 262 00:22:06,535 --> 00:22:08,787 ஆம், எங்களிடம் கொஞ்சம் உள்ளதென நினைக்கிறேன். 263 00:22:12,124 --> 00:22:13,542 எனக்கு அதில் நான்கு கிடைக்குமா? 264 00:22:17,421 --> 00:22:18,547 நீ எங்கே வசிக்கிறாய்? 265 00:22:19,798 --> 00:22:21,508 நான் கேட்பது உங்களிடம் உள்ளதா? 266 00:22:26,763 --> 00:22:28,557 இங்கே இருக்கும் வாசனை எனக்குப் பிடித்துள்ளது. 267 00:22:28,640 --> 00:22:32,352 இரும்பு ஆணிகள் மற்றும் மோட்டார் ஆயில் போல வாசமடிக்கிறது. 268 00:22:32,436 --> 00:22:34,479 ஹேய், பார்! இவர்களிடம் இருக்கும் பொருட்களைப் பார். 269 00:22:34,563 --> 00:22:39,776 இவர்களிடம் கால் மற்றும் பாதப் பிடிப்புகளை ஒரே நிமிடத்தில் சரிசெய்யலாம் என்று உள்ளது. 270 00:22:51,413 --> 00:22:54,875 தம்பி, நீ இவளைப் பார்க்கும் முறை எனக்குப் பிடிக்கவில்லை. 271 00:22:54,958 --> 00:22:59,213 உன் கண்கள் வெளியே வருகின்றன, உன் மூக்கு அகலமாக விரிகின்றன, 272 00:22:59,296 --> 00:23:01,632 மார்கழி நாய் மோப்பம் பிடிப்பது போல. 273 00:23:02,174 --> 00:23:05,469 இதுபோன்ற அழகான பெண்ணை அப்படிப் பார்க்கக்கூடாது. 274 00:23:06,261 --> 00:23:07,596 அவனுக்கு பணத்தைக் கொடு. 275 00:23:14,478 --> 00:23:15,687 மொத்தம் எவ்வளவு? 276 00:23:34,122 --> 00:23:36,124 ஹேய்! பார்த்துப் போங்கள், முதியவரே. 277 00:23:38,502 --> 00:23:40,337 நீ எங்கே போகிறாய்? எங்கே போகிறாய்? 278 00:23:40,420 --> 00:23:42,881 -ஓ, இல்லை! -அவர் மீதிருந்து கையை எடு, நாயே! 279 00:23:44,299 --> 00:23:47,010 என் பணத்தைக் கொடு! என் பணம் எங்கே? 280 00:23:49,888 --> 00:23:51,390 நாசமாய்ப் போ, நாயே. 281 00:23:53,809 --> 00:23:55,227 -வேண்டாம். வேண்டாம்! -அதை நிறுத்து! 282 00:23:55,310 --> 00:23:57,437 ஓ, கடவுளே! நிறுத்துங்கள்! 283 00:23:57,521 --> 00:23:59,857 -நிறுத்துங்கள்! ஓ! வேண்டாம்! -கடவுளே! 284 00:23:59,940 --> 00:24:01,066 அவளை விடு! 285 00:24:02,150 --> 00:24:05,112 என் பணம் எங்கே? என் பணத்தை வாங்காமல் விடமாட்டேன். 286 00:24:05,195 --> 00:24:06,530 என் பணம் எங்கே? 287 00:24:06,613 --> 00:24:08,574 என் பணம் எங்கே? நான் விளையாடவில்லை. 288 00:24:08,657 --> 00:24:10,284 -என் பணம் எங்கே? -எனக்குத் தெரியாது. 289 00:24:15,163 --> 00:24:17,875 வேண்டாம்! வேண்டாம்! 290 00:24:18,458 --> 00:24:19,459 நாயே! 291 00:24:27,968 --> 00:24:29,928 ஒன்றுமில்லை. வாருங்கள். வாருங்கள். 292 00:24:30,762 --> 00:24:32,723 -வாருங்கள். எழுந்திருங்கள். -சரி. சரி. 293 00:24:43,942 --> 00:24:45,235 அந்த குண்டச்சிக்கு நீங்கள் பணம் தர வேண்டுமா? 294 00:24:45,319 --> 00:24:48,614 இல்லை. அவள்... அவள் ஒருமுறை இங்கே வந்தாள், 295 00:24:48,697 --> 00:24:51,033 என்னைத் தாக்கிவிட்டு சில்லறைகள் இருக்கும் எனது கேனைத் தூக்கிச் சென்றுவிட்டாள். 296 00:24:51,116 --> 00:24:54,244 அதனால்தான் ரெஜி கதவில் கூடுதலாக பூட்டு போட்டுவிட்டு, அவனைத் தவிர 297 00:24:54,328 --> 00:24:56,371 வேறு யாரையும் உள்ளே விடக்கூடாது என்று கூறினான். 298 00:24:57,247 --> 00:24:58,749 அவளது அதிர்ஷ்டம் அவளை வெட்டாமல் விட்டேன். 299 00:24:58,832 --> 00:25:00,834 ஓ, வேண்டாம். கடவுளே, வேண்டாம். அது வேண்டாம். 300 00:25:13,680 --> 00:25:14,806 நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? 301 00:25:15,682 --> 00:25:17,351 எனக்கு... எனக்குத் தெரியவில்லை. 302 00:25:24,316 --> 00:25:27,236 கொஞ்சம் ஓய்வெடுங்கள், மாமா. இன்று யாரையும் நான் தாக்க மாட்டேன். 303 00:25:27,819 --> 00:25:29,988 -இல்லையா? -இல்லை. 304 00:25:30,072 --> 00:25:34,701 இப்போது நான் கொல்ல வேண்டிய ஒரு லட்சம் பூச்சிகள் உள்ளன. 305 00:25:44,962 --> 00:25:46,839 கூடுதல் வலிமையுள்ள பூச்சி மருந்து நாற்றக் கட்டுப்பாட்டுடன் 306 00:25:58,308 --> 00:26:00,102 அந்த நச்சு ஹாலுக்குள் வரக்கூடாது. 307 00:26:03,856 --> 00:26:05,232 நன்றி. 308 00:26:06,108 --> 00:26:07,276 எதற்காக நன்றி? 309 00:26:07,943 --> 00:26:10,153 ஹார்ட்வேர் கடையில் அவனிடம் நீங்கள் கூறியதற்காக. 310 00:26:11,822 --> 00:26:12,823 நான் என்ன சொன்னேன்? 311 00:26:17,411 --> 00:26:19,830 என் வீட்டில் வெடி குண்டு வைத்தால் நான் எங்கே வசிப்பது? 312 00:26:19,913 --> 00:26:23,375 ஓ, உங்கள் வீட்டில் வெடி குண்டு வைக்கவில்லை. முழுக்க பூச்சி மருந்து அடித்துள்ளேன். 313 00:26:23,458 --> 00:26:24,960 அது நல்லதா? 314 00:26:25,043 --> 00:26:26,712 நாம் உள்ளே இருக்கிறோமா வெளியே இருக்கிறோமா என்பதைப் பொறுத்தது. 315 00:26:27,421 --> 00:26:28,547 நாம் எங்கே இருக்கிறோம்? 316 00:26:28,630 --> 00:26:30,507 நாம் வெளியே இருக்கிறோம், மாமா. வெளியே இருக்கிறோம். 317 00:26:31,800 --> 00:26:33,093 செஷைர் மோட்டார் விடுதி 318 00:26:39,975 --> 00:26:41,685 இப்போது இங்குதான் நாம் வசிக்க வேண்டுமா? 319 00:26:41,768 --> 00:26:44,605 இல்லை, இன்று இரவு மட்டும்தான். நாளை வீட்டுக்குப் போய்விடலாம். 320 00:26:46,690 --> 00:26:48,734 கடவுளே, என் மீது பூச்சி மருந்து வாடை அடிக்கிறது. 321 00:26:50,819 --> 00:26:52,613 எனக்கு இன்னும் கடவுள் கொடுத்த பற்கள் உள்ளன. 322 00:26:53,405 --> 00:26:54,406 ஓ, அப்படியா? 323 00:27:47,835 --> 00:27:49,127 உன்னைப் பார், தம்பி. 324 00:27:54,132 --> 00:27:55,467 நீ ஒரு பேராசைக்காரன். 325 00:27:55,551 --> 00:27:57,344 என்ன, காய். நான் அவ்வளவு மோசமானவன் இல்லை. 326 00:27:57,427 --> 00:27:58,762 உனக்காக நான் திருடியது எங்கே? 327 00:28:01,306 --> 00:28:03,851 அது... அது... 328 00:28:07,855 --> 00:28:09,189 எனக்கு ஞாபகம் இல்லை. 329 00:28:10,899 --> 00:28:12,276 நீ நினைவுகூர வேண்டும். 330 00:28:13,277 --> 00:28:15,863 ஒருவனுக்கு நினைவில் உள்ளவைதான் அவனை ஆண் என நிர்ணயிக்கின்றன. 331 00:28:15,946 --> 00:28:17,030 சரி. 332 00:28:17,990 --> 00:28:19,867 ஓ, சரி. 333 00:28:19,950 --> 00:28:23,245 நான் அதைக் கண்டுபிடிக்கிறேன். அதைக் கண்டுபிடிக்கிறேன். சத்தியமாக. 334 00:28:23,328 --> 00:28:27,249 நான் செய்கிறேன், என்னைப் போக விடு. நான் போக வேண்டும். போக விடு. 335 00:28:28,125 --> 00:28:29,376 என்னை உள்ளே விடு. 336 00:28:29,459 --> 00:28:32,629 என்னை உள்ளே விடு! என்னை உள்ளே விடு! சத்தியமாக. 337 00:28:37,342 --> 00:28:38,677 எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? 338 00:28:44,516 --> 00:28:46,268 -பெண்ணே, அதைச் செய்யாதே! -என்ன? 339 00:28:46,351 --> 00:28:49,396 அவளைப் போல... ஆடை, சீப்பை அணியாதே. வேண்டாம். 340 00:28:49,479 --> 00:28:51,648 சரி! இதைக் கழட்டிவிடுகிறேன்! 341 00:28:51,732 --> 00:28:53,358 -வேண்டாம்! -எப்படியும் இது எனக்கு வேண்டாம்! 342 00:28:53,442 --> 00:28:54,902 போங்கள்! வெளியே போங்கள்! 343 00:28:54,985 --> 00:28:56,320 போங்கள்! 344 00:29:03,160 --> 00:29:05,579 நான்... நான் அதைத் திருடவில்லை! 345 00:29:41,031 --> 00:29:42,699 -வழி விடு! -என்ன செய்கிறீர்கள்? 346 00:29:43,575 --> 00:29:45,536 அவன்... அவன் உதவும்படி கூறினான். 347 00:29:45,619 --> 00:29:47,120 நான் அவனை உதைத்தேன். 348 00:29:51,291 --> 00:29:53,460 என்னை விட்டு நீங்கள் இப்படி ஓடி வரக்கூடாது, புரிகிறதா? 349 00:29:53,544 --> 00:29:54,753 நான் வழி தவறி வந்துவிட்டேன். 350 00:30:26,326 --> 00:30:28,161 நான் இவற்றைக் கொண்டு வந்தேனா? 351 00:30:29,496 --> 00:30:30,664 இல்லை. 352 00:30:30,747 --> 00:30:33,792 இதற்கு... இதற்கு இங்கு எந்த வேலையும் இல்லை. 353 00:30:36,086 --> 00:30:38,630 சொல்ல வேண்டுமெனில், நான் இதை வைத்திருக்கக் கூடாது. 354 00:30:39,506 --> 00:30:40,883 அவை உங்கள் மனைவியுடையது. 355 00:30:42,176 --> 00:30:43,552 ஆம், ஆனால் அவள் இறந்துவிட்டாள். 356 00:30:44,928 --> 00:30:47,556 ஒருவேளை... நீ... 357 00:30:47,639 --> 00:30:51,268 நீ இவற்றை எடுத்துக்கொண்டு ஒரு பெண்ணாக இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 358 00:30:55,230 --> 00:30:56,899 நீங்கள் தூங்க வேண்டும். நேரமாகிவிட்டது. 359 00:31:07,284 --> 00:31:10,037 நான் டிவி பார்க்கலாமா? 360 00:31:16,126 --> 00:31:18,378 ...அமெரிக்காவின் பகுதிகளில் அதிகப்படியான மழை மற்றும் 361 00:31:18,462 --> 00:31:21,006 வெள்ளம் அதிகரிக்கப் போகிறது. 362 00:31:21,089 --> 00:31:24,551 அதேநேரம், ஆர்டிக்கில் வெப்பம் அதிகரிப்பதால் 363 00:31:24,635 --> 00:31:26,637 வெப்பமயமாதல் மிகவும் உச்சத்தை அடைகின்றன. 364 00:31:26,720 --> 00:31:30,057 பனி உருகுவது அந்த இடத்தைச் சார்ந்திருக்கும் 365 00:31:30,140 --> 00:31:32,059 விலங்குகளையும் வன உயிரிகளையும் மட்டும் பாதிக்காமல், 366 00:31:32,142 --> 00:31:35,354 அது போலார் ஜெட் ஸ்ட்ரீமையும் பாதிக்கும், அது நேரடியாக... 367 00:31:43,028 --> 00:31:46,365 நாம் இப்போது வீட்டுக்குப் போகலாமா? ரெஜி பின்னர் வருவானா? 368 00:31:46,448 --> 00:31:47,699 இல்லை, நீங்களும் நானும் மட்டும்தான். 369 00:31:48,283 --> 00:31:50,452 ஆனால் ரெஜி உங்களை டாக்டரைப் பார்க்க விரும்பினான், 370 00:31:50,536 --> 00:31:52,246 அதனால் நாம் அங்கு முதலில் செல்வோம். 371 00:31:53,580 --> 00:31:57,334 அதே டாக்டரா... தொண்டையில் கோலியை வைத்திருக்கும் பெண் இருக்கும் டாக்டரா? 372 00:31:59,962 --> 00:32:01,713 -எப்படி இருக்கிறாய்? -எப்படி இருக்கிறாய்? 373 00:32:01,797 --> 00:32:03,048 நீங்கள் தயாரா? 374 00:32:04,675 --> 00:32:05,926 பார்த்து நடக்கவும். 375 00:32:06,677 --> 00:32:08,887 -நன்றாக இருக்கிறீர்களா, கிரே? -ஆம், இருக்கிறேன்! 376 00:32:08,971 --> 00:32:10,013 நல்லது. நல்லது. 377 00:32:10,097 --> 00:32:12,140 -எப்படி இருக்கிறாய்? -நான் வைக்கிறேன். 378 00:32:12,224 --> 00:32:13,225 -பில்லி. -பில்லி. 379 00:32:15,060 --> 00:32:16,770 -யா, யா, யா. -ஆனால்... 380 00:32:16,854 --> 00:32:19,773 ஹிப் ஹாப் ஹுரே, ஹோ 381 00:32:19,857 --> 00:32:24,611 ஹேய், ஹோ, ஹேய், ஹோ 382 00:32:24,695 --> 00:32:26,989 ஹேய், ஹோ 383 00:32:27,072 --> 00:32:29,575 என் காலையின் படத்தை நீ வரைந்தாய் ஆனால் என்னை மகிழ்ச்சியாக்க முடியவில்லை 384 00:32:29,658 --> 00:32:32,077 நான் அசத்துகிறேன், நீ கொட்டாவி விடுகிறாய் ஆனால் நீ என் பாதையை பார்க்கவேயில்லை 385 00:32:32,160 --> 00:32:34,496 எல்லா விதத்திலும் நான் உன்னை விரும்புகிறேன், அன்பே 386 00:32:34,580 --> 00:32:36,874 நீ பாடுவது வேடிக்கையாக உள்ளதால் உனக்கு பாஸ்போர்ட் தயாராகிறது 387 00:32:36,957 --> 00:32:38,667 ஹேய்! மகிழ்ச்சியாக உள்ளீர்களா? 388 00:32:39,168 --> 00:32:40,210 ஆம்! 389 00:32:40,294 --> 00:32:43,046 இதே போல் இங்கே நான் ஐஸ் வண்டி ஓட்டியிருக்கிறேன். 390 00:32:43,922 --> 00:32:46,675 சரி, ஐஸ் வண்டியில் கிரே, புரிகிறதா? 391 00:33:10,616 --> 00:33:13,243 -கடவுளே! -என்ன? 392 00:33:13,327 --> 00:33:15,329 கிரே, எந்த மாதிரியான டாக்டரைப் பார்க்கப் போகிறீர்கள்? 393 00:33:16,622 --> 00:33:19,458 எந்த மாதிரியான டாக்டரெனில்... டாக்டர் பெப்பர் வைத்திருப்பவர், என நினைக்கிறேன். 394 00:33:21,210 --> 00:33:23,003 ஹேய், நானும் உங்களுடன் வரட்டுமா? 395 00:33:23,086 --> 00:33:25,297 இல்லை, ஏற்கனவே உனக்கு நேரமாகிவிட்டது. நான் பார்த்துக்கொள்கிறேன். 396 00:33:25,380 --> 00:33:27,132 -சரி. -பார்த்து வாருங்கள். 397 00:33:27,216 --> 00:33:29,384 -உங்கள் பைகளைப் பிறகு எடுத்து வருகிறேன். -சரி. 398 00:33:29,468 --> 00:33:31,929 தேவையெனில் எனக்கு கால் செய், சரியா? பை, கிரே. 399 00:33:32,012 --> 00:33:33,430 வாருங்கள். என்னைப் பின்தொடருங்கள். 400 00:33:51,448 --> 00:33:53,492 அது... அது நன்றாக உள்ளது. 401 00:33:53,575 --> 00:33:55,285 இதுபோல நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? 402 00:33:56,203 --> 00:33:58,372 ஓ! ஓ! ஓ, ஆம். ஆம். 403 00:33:58,455 --> 00:34:00,707 -வாருங்கள். -இதைப் பார். 404 00:34:04,461 --> 00:34:06,171 டாக்டர் இப்போது வந்துவிடுவார். 405 00:34:06,839 --> 00:34:10,509 -உங்களுக்கு குடிக்க எதுவும் வேண்டுமா? -டாக்டர் பெப்பர் வேண்டும். 406 00:34:21,436 --> 00:34:24,857 ஹலோ, கிரே. நான் டாக்டர் ரூபின். 407 00:34:26,440 --> 00:34:27,860 உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 408 00:34:29,069 --> 00:34:31,530 உட்காருங்கள். 409 00:34:33,866 --> 00:34:35,409 ரெஜினால்ட் லாயிடா? 410 00:34:35,492 --> 00:34:39,161 இல்லை. ரெஜி இல்லை. ராபின் பர்னெட். 411 00:34:40,121 --> 00:34:41,956 ரெஜி திடீரென இறந்துவிட்டான். 412 00:34:43,292 --> 00:34:44,585 அது வருத்தமான செய்தி. 413 00:34:45,293 --> 00:34:47,795 லாய்ட் தான் கிரேவின் பராமரிப்பாளராக இருந்தார், சரியா? 414 00:34:47,880 --> 00:34:49,505 அப்படியும் அவரை அழைக்கலாம். 415 00:34:49,590 --> 00:34:52,801 -உங்களை எப்படி அழைப்பது? -உதவி செய்யும் குடும்ப நண்பர். 416 00:34:53,385 --> 00:34:58,932 சரி. நல்லது. கிரே உங்களை இறுதியாக இங்கே சந்திப்பது மகிழ்ச்சி. 417 00:34:59,016 --> 00:35:00,726 ஆம், நான் நன்றாக இருக்கிறேன், நன்றி. 418 00:35:00,809 --> 00:35:02,102 நீங்கள் அப்படித்தான் இருக்க வேண்டும். 419 00:35:02,186 --> 00:35:04,521 அதனால் தான் என்னிடம் பரிந்துரைத்துள்ளனர், ஏனெனில் நீங்கள் வலிமையானவர். 420 00:35:04,605 --> 00:35:06,023 சரிதான். 421 00:35:06,106 --> 00:35:10,527 இருந்தாலும், நீங்கள் சில விஷயங்களை மறந்து வருவதாகக் கேள்விப்பட்டேன். 422 00:35:14,198 --> 00:35:18,285 -நான்... முக்கியமானவற்றை நினைவில் வைத்திருப்பேன். -எது போன்றவை? 423 00:35:20,245 --> 00:35:23,498 எது சரி எது தவறு என எனக்குத் தெரியும். 424 00:35:24,249 --> 00:35:26,752 அது மிகவும் முக்கியம்தான். 425 00:35:26,835 --> 00:35:30,881 ஆனால் இன்று காலை என்ன சாப்பிட்டீர்கள் என்று நினைவுள்ளதா? 426 00:35:30,964 --> 00:35:34,218 அல்லது இன்று திட்டமிட்டுள்ள வேலைகள் நினைவுள்ளதா? 427 00:35:34,301 --> 00:35:36,803 வீட்டுக்குப் போகும் வழி நினைவுள்ளதா, கிரே? 428 00:35:36,887 --> 00:35:38,847 நீ நினைவுகொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. 429 00:35:38,931 --> 00:35:41,683 சில நேரம் நான் மறக்க விரும்புகிறேன். 430 00:35:42,476 --> 00:35:43,685 புரிகிறது. 431 00:35:47,856 --> 00:35:50,108 மிஸ் பர்னெட், நான்... 432 00:35:50,192 --> 00:35:52,361 நான் என்ன செய்கிறேன் என்பது பற்றி உங்களிடம் சொல்ல வேண்டும். 433 00:35:52,444 --> 00:35:56,448 அல்ஸைமர் நோயின் குறிப்பிட்ட அம்சங்கள் மற்றும் டிமென்ஷியா, முதுமையின் பிற வடிவங்களைக் 434 00:35:56,532 --> 00:36:01,245 குணப்படுத்த முயலும் நிபுணர்களுடன் நான் பணிபுரிகிறேன். 435 00:36:01,954 --> 00:36:04,790 எங்கள் ஆய்வில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறோம். 436 00:36:05,332 --> 00:36:08,877 எங்களால் விர்ச்சுவலாக, தற்காலிகமாக, 437 00:36:08,961 --> 00:36:13,131 எல்லாவிதமான டிமென்ஷியாவையும் குணப்படுத்த முடியும். 438 00:36:13,215 --> 00:36:15,843 -நாம் எப்போது வீட்டுக்குப் போவோம்? -இருங்கள்! 439 00:36:15,926 --> 00:36:17,261 டாக்டர் இன்னும் பேசி முடிக்கவில்லை. 440 00:36:19,304 --> 00:36:22,516 நாங்கள் உருவாக்கிய மருந்தை இரண்டு டோஸ் போட்டுக்கொண்ட பிறகு, 441 00:36:22,599 --> 00:36:24,560 கிரே, ஒரு வாரத்திற்குள், 442 00:36:25,477 --> 00:36:28,272 அவருக்குத் தெரிந்த அனைத்தையும் நினைவுகூர்வார். 443 00:36:31,817 --> 00:36:32,860 உங்களை என்னைப் போன்ற சாதாரண 444 00:36:32,943 --> 00:36:36,905 மனிதர்களால் நினைவுகூர முடியாத விவரங்களை அவரால் நினைவுகூர முடியும். 445 00:36:37,489 --> 00:36:39,116 ரெஜியிடம் இதைக் கூறினீர்களா? 446 00:36:39,700 --> 00:36:40,951 இல்லை. 447 00:36:41,034 --> 00:36:44,288 இல்லை, இதைப் பற்றி இன்று சந்திக்கும்போது பேசலாம் என்றிருந்தோம், 448 00:36:44,371 --> 00:36:49,334 இன்று இதில் உள்ள இன்னும் சிக்கலான அம்சங்கள் பற்றியும், அதாவது 449 00:36:49,418 --> 00:36:51,962 குறைகளையும் எடுத்துரைக்கலாம் என்றிருந்தோம். 450 00:36:52,045 --> 00:36:53,130 என்ன குறைகள்? 451 00:36:54,214 --> 00:36:57,968 அது கிரேவுக்கும் எனக்குமான நேரடிச் சந்திப்பில் கூறுவது 452 00:36:58,051 --> 00:36:59,553 சிறந்தது என நினைக்கிறேன். 453 00:36:59,636 --> 00:37:01,388 நேரடிச் சந்திப்பா? அது எப்படி நடக்கும்? 454 00:37:04,016 --> 00:37:05,684 நன்றி, ஓல்கா. 455 00:37:06,602 --> 00:37:10,522 எங்கள் ஆய்வின் தொடக்கத்தில் நாங்கள் இன்னொரு சிகிச்சையையும் உருவாக்கினோம். 456 00:37:10,606 --> 00:37:14,776 அது 100 சதவீத நினைவைத் தராது, ஆனால் ஆனால் அது விழிப்புணர்வைத் தரும். 457 00:37:14,860 --> 00:37:16,445 அதை எளிதாகக் கூற முடியுமா? 458 00:37:17,779 --> 00:37:21,575 அதாவது, அந்த சிகிச்சையால் கிரே தெளிவாக சிந்திக்கவும், 459 00:37:22,618 --> 00:37:24,578 தனது சொந்த முடிவுகளை எடுக்கவும் முடியும். 460 00:37:26,955 --> 00:37:31,460 நாங்கள் அடுத்த வாரம் வந்து எங்கள் முடிவைச் சொல்கிறோம். 461 00:37:31,543 --> 00:37:33,670 பர்னெட், நான் கொஞ்சம் பேசலாமா. 462 00:37:33,754 --> 00:37:38,926 இது கடினமான விஷயம் எனத் தெரியும், ஆனால் அவரது டாக்டரின் அறிக்கையின்படி, 463 00:37:39,009 --> 00:37:42,054 இந்த சிகிச்சையால் குணப்படுத்தும் நிலையின் விளிம்பில் இவர் உள்ளார். 464 00:37:43,096 --> 00:37:46,600 அடுத்த வாரத்திற்குள், ஒருவேளை நாளைக்குள், 465 00:37:47,726 --> 00:37:48,936 இவர் குணப்படுத்த முடியாத நிலைக்குச் செல்லலாம். 466 00:37:52,314 --> 00:37:55,567 அவருக்கு என்ன கொடுப்பீர்கள்? மாத்திரை போல எதுவுமா? 467 00:37:56,318 --> 00:37:59,196 இல்லை. இல்லை, ஒரு ஊசி போடுவோம், 468 00:37:59,279 --> 00:38:03,075 இதன் விளைவு 12 முதல் 24 மணிநேரத்திற்குத் தோராயமாக இருக்கும். 469 00:38:03,158 --> 00:38:04,660 இதில் பக்க விளைவுகள் எதுவும் இருக்காது. 470 00:38:05,244 --> 00:38:08,247 ஆனால் இது ஒருமுறைதான் வேலை செய்யும். 471 00:38:08,997 --> 00:38:12,543 இதன் வீரியம் குறைந்தவுடன், மறுபடியும் இந்த சிகிச்சை அளிப்பதால் பயனில்லை. 472 00:38:25,931 --> 00:38:28,767 இவரால் நீங்கள் மீண்டும் நினைவுகூர உதவ முடியும் எனக் கூறுகிறார். 473 00:38:36,984 --> 00:38:39,862 காய்டாகின் புதையல் இருக்கும் இடத்தையுமா? 474 00:38:43,240 --> 00:38:44,575 இந்த சிகிச்சை பற்றி உங்களுக்குப் புரியவைக்க 475 00:38:44,658 --> 00:38:50,372 அவர் உங்களுக்கு ஊசி போட வேண்டும் என்கிறார். 476 00:38:51,081 --> 00:38:52,624 அதை நீங்கள் விரும்புகிறீர்களா? 477 00:38:56,962 --> 00:38:58,297 எனக்குத் தெரியவில்லை. 478 00:39:01,175 --> 00:39:03,677 எனக்குத் தெரிய வேண்டும். 479 00:39:04,845 --> 00:39:05,888 இல்லையா? 480 00:39:05,971 --> 00:39:08,640 ஆம். தெரிய வேண்டும், கிரே. 481 00:39:20,444 --> 00:39:22,821 மாமா, நன்றாக இருக்கிறீர்களா? 482 00:39:31,121 --> 00:39:32,289 ஓல்கா. 483 00:40:00,692 --> 00:40:02,778 ஈபிஏவானது 484 00:40:02,861 --> 00:40:07,658 பிஎஃப்ஏஎஸ் தெளிவான நீரில் நச்சுப் பொருளாக கருதப்பட வேண்டுமா எனவும் தீர்மானிக்க வேண்டும், 485 00:40:07,741 --> 00:40:12,746 பிஎஃப்ஏஎச் நச்சாக கருதப்பட்டால், ஈபிஏவானது தொழிற்சாலைகளில் இருந்து பிஎஃப்ஏஎஸ் 486 00:40:12,829 --> 00:40:16,250 வெளியேற்றப்படுவதை வரம்பிடும் தரநிலைகளை நிறுவ வேண்டும்... 487 00:40:16,333 --> 00:40:18,544 கடவுளே, இந்த அறை மிகவும் தூசியாக உள்ளது. 488 00:40:19,545 --> 00:40:21,380 எல்லா இடங்களிலும் இறந்த கரப்பான்களாக உள்ளன. 489 00:40:25,133 --> 00:40:26,301 டிவியை ஆஃப் செய்துவிட்டீர்கள். 490 00:40:26,385 --> 00:40:28,178 ஆம். அதைத்தான் செய்ய முயன்றுகொண்டிருந்தேன். 491 00:40:29,763 --> 00:40:31,807 சேனலை இழந்துவிடுவோம் என கவலைப்படவில்லையா? 492 00:40:31,890 --> 00:40:34,351 நான் எப்படி அதை இழப்பேன்? அதுதான் டிவியில் இருக்கிறதே. 493 00:40:34,434 --> 00:40:35,936 நான் யார் எனத் தெரிகிறதா? 494 00:40:36,019 --> 00:40:38,438 நீ எனது... இல்லை. 495 00:40:39,022 --> 00:40:43,986 நீ நீஸியின் தோழியின் மகள், என் இடத்தைச் சுத்தம் செய்வதற்காக 496 00:40:44,069 --> 00:40:45,279 இங்கே அனுப்பியுள்ளனர். 497 00:40:53,871 --> 00:40:56,331 இங்கே என்னிடம் நிறைய பொருட்கள் இருந்தன, இல்லையா? 498 00:40:56,415 --> 00:40:58,208 ஆம், நான், பில்லியி ஃப்ரெரெஸ் அதைச் சுத்தம் செய்துவிட்டோம். 499 00:40:58,292 --> 00:40:59,960 -பில்லியா? -ஆம். 500 00:41:00,919 --> 00:41:02,129 ரெஜியின் நண்பன். 501 00:41:02,713 --> 00:41:03,839 ஆம். சரி. 502 00:41:04,506 --> 00:41:07,551 மேலும் ரெஜி இறந்துவிட்டான். 503 00:41:08,385 --> 00:41:09,511 யாரோ அவனைக் கொன்றுவிட்டனர். 504 00:41:10,053 --> 00:41:11,054 உங்களுக்கு அது நினைவுள்ளதா? 505 00:41:12,806 --> 00:41:14,224 அது யார் எனக் கண்டுபிடித்தனரா? 506 00:41:14,308 --> 00:41:15,851 இல்லை, யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. 507 00:41:15,934 --> 00:41:17,394 அதைப் பற்றி போலீஸ் கவலைப்படவில்லை. 508 00:41:18,645 --> 00:41:19,897 அவன் எங்கே கொல்லப்பட்டான்? 509 00:41:19,980 --> 00:41:22,274 டெல்மார் வட்டத்தின் அருகே ஒரு சந்தில். 510 00:41:31,617 --> 00:41:32,659 உன்னிடம் கார் உள்ளதா? 511 00:41:33,368 --> 00:41:35,329 இல்லை, ஆனால் ஒரு காரை அழைக்கலாம். 512 00:41:36,121 --> 00:41:37,497 அதைச் செய். 513 00:41:37,581 --> 00:41:40,000 ரெஜி கொல்லப்பட்ட இடத்தை நான் பார்க்க வேண்டும். 514 00:41:40,083 --> 00:41:42,794 ஆனால் டாக்டர் கொடுத்த மருந்து அரை நாள் வரைதான் வேலை செய்யும், 515 00:41:42,878 --> 00:41:44,046 பிறகு நீங்கள் மீண்டும் மறந்துவிடுவீர்கள். 516 00:41:44,129 --> 00:41:46,089 நீங்கள் அதை எடுத்துக்கொண்டு ஏற்கனவே நான்கு மணிநேரம் ஆகிவிட்டது. 517 00:41:46,173 --> 00:41:48,509 எனில், நீ சீக்கிரம் காரைக் கூப்பிடு. 518 00:42:08,779 --> 00:42:10,239 -இதுதானா? -ஆமாம், சார். 519 00:42:17,788 --> 00:42:18,872 நன்றாக இருக்கிறாயா? 520 00:42:19,748 --> 00:42:23,794 இருக்கிறேன். நீங்கள் தான் வித்தியாசமாக இருக்கிறீர்கள். 521 00:42:24,378 --> 00:42:26,463 அப்படியா? எனக்கு வித்தியாசமாகத் தோன்றவில்லை. 522 00:42:29,049 --> 00:42:30,425 நீங்கள் ஏன் வேகமாக நடக்கிறீர்கள்? 523 00:42:35,722 --> 00:42:37,015 மன்னிக்கவும், சார். 524 00:42:38,559 --> 00:42:39,935 என்ன? 525 00:42:40,018 --> 00:42:44,648 இங்கே சமீபத்தில் ஒரு துப்பாக்கிச்சூடு நடந்தது. 526 00:42:44,731 --> 00:42:46,358 ஒருவர் கொல்லப்பட்டார். 527 00:42:46,441 --> 00:42:49,444 அதைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியுமா எனக் கேட்கிறேன். 528 00:42:49,987 --> 00:42:51,154 உங்கள் பெயர் என்ன? 529 00:42:51,238 --> 00:42:52,364 என் பெயர் டாலெமி. 530 00:42:52,447 --> 00:42:55,742 இங்கே இறந்தது என் மருமகன், ரெஜி. 531 00:42:55,826 --> 00:42:57,119 என் மருமகனின் மகன். 532 00:43:07,588 --> 00:43:08,589 மாமா. 533 00:43:17,556 --> 00:43:20,726 நீங்கள் குடிப்பது மிகவும் கடுமையான சரக்கு, நண்பா. 534 00:43:22,519 --> 00:43:23,520 ஸெல்டா. 535 00:43:26,106 --> 00:43:27,524 என்ன, ஹோகி? 536 00:43:27,608 --> 00:43:30,110 அந்த மனிதன் சுடப்படும்போது நீ பார்த்தாய் அல்லவா? 537 00:43:31,528 --> 00:43:32,571 இருக்கலாம். 538 00:43:32,654 --> 00:43:34,656 இவர் அவரது மாமா. 539 00:43:35,574 --> 00:43:36,575 நம் ஆள் தான். 540 00:43:39,453 --> 00:43:41,788 அதோ இருக்கும் இரண்டாவது குட்டை. 541 00:43:41,872 --> 00:43:44,583 அது முள் போன்ற முடியுடைய பழுப்பின ஆண். 542 00:43:44,666 --> 00:43:46,877 அவனை இதற்கு முன் பார்த்துள்ளீர்களா? இருவரில் யாரையாவது? 543 00:43:47,377 --> 00:43:48,754 இல்லை. இருவரையுமே பார்த்ததில்லை. 544 00:43:48,837 --> 00:43:51,298 அவர்கள் சந்தித்துக்கொண்டது போல இருந்தது. 545 00:43:51,381 --> 00:43:52,591 எதுவும் கேட்டீர்களா? 546 00:43:52,674 --> 00:43:55,135 அவர்கள் எதுவும் பெயர்கள் சொன்னதாகக் கேட்டீர்களா? 547 00:43:56,428 --> 00:43:58,305 துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் ஓடிவிட்டேன். 548 00:44:00,432 --> 00:44:04,019 சுட்டவனுக்கு ஜிக் ஜாக் போல தழும்பு இருந்தது என நினைக்கிறேன். 549 00:44:04,645 --> 00:44:06,522 அவனது இடது கண்ணுக்கு மேலே, என நினைக்கிறேன். 550 00:44:17,241 --> 00:44:19,618 மிகவும் நன்றி. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். 551 00:44:48,230 --> 00:44:49,523 போதுமான அளவுக்குப் பார்த்துவிட்டீர்களா? 552 00:44:54,862 --> 00:44:57,739 நாகரிகத்தின் கதை 7 காரணத்தின் யுகம் தொடங்குகிறது 553 00:45:00,868 --> 00:45:02,494 நாம் மீண்டும் அங்கே செல்ல வேண்டும். 554 00:45:02,578 --> 00:45:05,497 நான் ஏற்கனவே கூறிவிட்டேன். டாக்டர் ரூபின் நம்மை எதிர்பார்த்துக்கொண்டிருப்பார். 555 00:45:14,715 --> 00:45:17,467 நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் இவருடன் பேச வேண்டும். 556 00:45:17,551 --> 00:45:19,928 இந்த சிகிச்சை பற்றி அவர் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களைச் சொல்லட்டும், 557 00:45:20,012 --> 00:45:22,055 அப்போதுதான் இதில் எவ்வளவு தூரம் போகலாம் என நீங்கள் முடிவெடுக்கலாம். 558 00:45:22,139 --> 00:45:24,641 -அவர் என்ன கூறுவார் என ஏற்கனவே எனக்குத் தெரியும். -எப்படி? 559 00:45:24,725 --> 00:45:26,351 நீ ஏற்கனவே கூறிவிட்டாய். 560 00:45:26,435 --> 00:45:28,687 ஆம், அது பைத்தியக்காரத்தனம். 561 00:45:28,770 --> 00:45:29,938 அதில் என்ன பைத்தியக்காரத்தனம்? 562 00:45:30,022 --> 00:45:32,608 ஏனெனில் நான் என்ன பேசுகிறேன் என எனக்குத் தெரியவில்லை. 563 00:45:32,691 --> 00:45:34,318 நான் உன்னை முதலில் சந்திக்கும்போது நீ இவ்வளவு... 564 00:45:34,401 --> 00:45:37,362 அடுத்த ஊசி போட்டால் சில குறைகள் இருக்கும் என டாக்டர் கூறினார். 565 00:45:37,446 --> 00:45:39,781 -அதில் எந்த வித்தியாசமும் இல்லை. -ஏன்? 566 00:45:40,490 --> 00:45:43,952 ரெஜிக்காக. உனக்காக. 567 00:45:46,830 --> 00:45:47,831 எனக்காகவா? 568 00:45:48,749 --> 00:45:50,459 இதை எனக்காக அவன் செய்தது எனக்கு நினைவுள்ளது. 569 00:45:50,542 --> 00:45:52,461 ஹில்லியர்ட் - நீஸீ - ரெஜி - நீனா ஆர்தர் - லதீஷா 570 00:45:52,544 --> 00:45:55,797 இதில் பெரிதாக பெயர்களை எழுதுவதற்காக இதைப் பெரிதுபடுத்தினான், 571 00:45:55,881 --> 00:45:57,090 அப்போதுதான் எனக்கு நினைவில் இருக்கும் என்று. 572 00:45:58,133 --> 00:45:59,885 வீட்டில் இருக்கும் அவனது கம்ப்யூட்டரில் செய்தான். 573 00:46:00,761 --> 00:46:01,803 எனக்காக. 574 00:46:02,971 --> 00:46:05,766 அவன் எப்போதும் எனக்காகச் செய்வான். 575 00:46:08,227 --> 00:46:11,855 அவனது பெயரை மற்றவர்கள் மறப்பதற்கு எப்படி அனுமதிப்பேன்? 576 00:46:14,066 --> 00:46:15,901 அவன் மரணத்தில் உள்ள அநீதியை... 577 00:46:17,945 --> 00:46:22,616 நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை எனில் நான் என்ன மனிதன்? 578 00:46:33,585 --> 00:46:35,587 அது யாராக இருந்தாலும், நான் வீட்டில் இல்லை என்று சொல். 579 00:46:47,099 --> 00:46:49,560 டாலெமி கிரே இங்கே வசிக்கிறாரா? 580 00:46:50,060 --> 00:46:51,562 ஆம், ஆனால் அவர் தூங்குகிறார். 581 00:46:53,814 --> 00:46:56,733 தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும், ஆனால் நான் வேலையில் இருந்தேன். 582 00:46:56,817 --> 00:46:59,903 சில நாட்கள் கழித்து வாருங்கள், அடுத்த முறை கொஞ்சம் சீக்கிரமாக வாருங்கள். 583 00:46:59,987 --> 00:47:01,864 சரி. நான் மீண்டும் வருகிறேன். 584 00:47:01,947 --> 00:47:06,702 அவரிடம் டபிள்யு-ஆர்-ஐ-என்-ஜி வந்ததாக சொல்ல முடியுமா? 585 00:47:06,785 --> 00:47:07,786 அவருக்குத் தெரியும். 586 00:47:08,871 --> 00:47:09,913 சொல்கிறேன். 587 00:47:09,997 --> 00:47:11,790 நல்ல மனிதர். 588 00:47:18,422 --> 00:47:19,673 மாமா? 589 00:47:28,557 --> 00:47:29,641 நன்றாக இருக்கிறீர்களா? 590 00:47:33,270 --> 00:47:37,399 என்னிடம்... என்னிடம் ஒரு படப் புத்தகம் இருந்தது. 591 00:47:37,482 --> 00:47:40,777 -அப்படியா? -அது பெரிதாக்கப்பட்டிருக்கும். 592 00:47:40,861 --> 00:47:43,697 அதை என் மருமகன் எனக்காக செய்திருந்தான். 593 00:47:43,780 --> 00:47:46,742 அதை... இப்போது என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. 594 00:47:47,910 --> 00:47:49,870 மாமா. என்னைப் பாருங்கள். 595 00:47:58,587 --> 00:48:00,172 நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்றாவது தெரியுமா? 596 00:48:09,932 --> 00:48:11,183 ஓ, இல்லை. 597 00:48:30,202 --> 00:48:31,745 -அவர் எங்கே? -டாக்டர் எங்கே? 598 00:48:31,828 --> 00:48:33,038 இந்தப் பக்கம். 599 00:48:34,081 --> 00:48:35,374 வாருங்கள். சீக்கிரம். 600 00:48:36,166 --> 00:48:37,709 அவர் வேகமாக மறக்கத் தொடங்கினார், 601 00:48:37,793 --> 00:48:40,462 -வேறு என்ன செய்வது என எனக்குத் தெரியவில்லை. -கவலை வேண்டாம். என்னிடம் அது உள்ளது. 602 00:48:40,546 --> 00:48:42,214 விதிகளும் இல்லை, சட்டங்களும் இல்லை. 603 00:48:42,297 --> 00:48:44,758 -விதிகளும் இல்லை, சட்டங்களும் இல்லை. -அவருக்கான ஊசி உள்ளது. 604 00:48:44,842 --> 00:48:46,802 இது ஏன் நடக்கிறது? 12 மணிநேரம் கூட ஆகவில்லையே. 605 00:48:46,885 --> 00:48:49,972 -விதிகள் இல்லை, சட்டங்கள் இல்லை. ஓ. என்ன... -முன்பை விட இன்னும் மோசமாகிவிட்டார். 606 00:48:50,055 --> 00:48:52,933 என்ன செய்கிறாய்? யார்... யார் இது? 607 00:48:54,643 --> 00:48:55,644 அது வலிக்குமா? 608 00:48:55,727 --> 00:48:57,396 டாக்டர் எங்கே? அவர் ஏன் உங்களுடன் வரவில்லை? 609 00:48:57,479 --> 00:48:58,480 நாங்கள் நிறுத்த வேண்டுமா? 610 00:48:58,564 --> 00:49:00,357 -ரெஜி எங்கே? -நாம் நிறுத்த வேண்டும் என நினைக்கிறேன். 611 00:49:01,692 --> 00:49:04,695 -ஓ, இது சுடுகிறது! இது சுடுகிறது. -இது முதலில் அப்படித்தான் இருக்கும். 612 00:49:04,778 --> 00:49:07,114 பறவையே. வசந்த காலத்தின் முதல் பறவையே? 613 00:49:07,197 --> 00:49:09,324 இது சுடுகிறது. இது சுடுகிறது! 614 00:49:09,408 --> 00:49:10,868 அவரை நிலையாகப் பிடியுங்கள். 615 00:49:10,951 --> 00:49:13,453 -அவர் இறந்துவிடுவாரா? -சிலர் இறப்பார்கள், ஆனால் நிறைய இல்லை. 616 00:49:13,537 --> 00:49:16,665 -”நிறைய இல்லை” என்றால் என்ன அர்த்தம்? -உங்கள் மாமா தைரியமானவர். 617 00:49:16,748 --> 00:49:19,168 அவரது நோயைக் குணப்படுத்துவதற்கான வாய்ப்பை அவர் எடுக்க விரும்புகிறார். 618 00:49:19,251 --> 00:49:22,379 -அதைத்தான் அவர் விரும்புகிறார். -காய்டாக்? 619 00:49:22,462 --> 00:49:25,799 காய்டாக், இறந்துவிடாதே! காய்டாக், இறந்துவிடாதே! 620 00:49:25,883 --> 00:49:26,884 என்னுடனே இரு. 621 00:49:26,967 --> 00:49:29,720 -ஓ, என் அம்மா நெருப்பில் எரிகிறார்! -ஒன்றுமில்லை, பேபி. 622 00:49:29,803 --> 00:49:32,014 -ஓ, இல்லை. சென்சி. -ஒன்றுமில்லை. நான் இங்குதான் இருக்கிறேன். 623 00:49:32,097 --> 00:49:34,391 சென்சி! என்னுடன் வந்து படு. 624 00:49:34,474 --> 00:49:36,143 -நான் இங்குதான் இருக்கிறேன். -அடக் கடவுளே. இல்லை! 625 00:49:36,226 --> 00:49:38,103 என்னுடன் இரு, சிறுவனே. நீ என்ன செய்ய வேண்டும் என உனக்குத் தெரியும். 626 00:49:38,187 --> 00:49:40,147 காய்டாக்! 627 00:49:40,230 --> 00:49:42,733 நான் இறக்கப் போகிறேன். நான் இறக்கப் போகிறேன்! 628 00:49:42,816 --> 00:49:44,735 இதை என்னால் செய்ய முடியாது! 629 00:49:44,818 --> 00:49:47,779 நீ இறந்தால், எல்லாம் இழந்துவிடும். உனக்குப் புரிகிறதா? 630 00:49:48,447 --> 00:49:51,283 உன்னையும் என்னையும் போன்ற கருப்பினத்தவர்களுக்கு விதிகளும் சட்டங்களும் கிடையாது. 631 00:49:51,366 --> 00:49:52,659 சரியும் தவறும்தான் உள்ளன. 632 00:49:52,743 --> 00:49:55,245 வெள்ளையினத்தவர்களைப் பொறுத்தவரை, நாம் மூச்சுவிடுவது கூட குற்றம்தான். 633 00:49:55,329 --> 00:49:56,580 நான் சொல்வது புரிகிறதா? 634 00:49:56,663 --> 00:49:59,750 புரிகிறது, சார். 635 00:49:59,833 --> 00:50:01,168 அப்படியெனில் சரி. 636 00:50:08,926 --> 00:50:11,595 ஏன்... ஏன் இது நடக்கிறது, பறவையே? 637 00:50:14,097 --> 00:50:15,474 நீ என்னை என்ன செய்தாய்? 638 00:50:31,031 --> 00:50:31,990 வால்ட்டர் மோஸ்லியின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 639 00:52:33,070 --> 00:52:35,072 நரேஷ் குமார் ராமலிங்கம்