1 00:01:01,144 --> 00:01:03,105 லாரா டேவ் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 2 00:01:19,204 --> 00:01:20,539 உன்னால் முடியாது. 3 00:01:20,622 --> 00:01:21,665 நிச்சயமாக என்னால் முடியும். 4 00:01:22,416 --> 00:01:24,710 நியூசிலாந்தில் திராட்சைத் தோட்டமா? 5 00:01:25,794 --> 00:01:27,880 நீ பெய்லியிடமிருந்து வெகு தூரம் சென்றுவிட்டாய். 6 00:01:31,008 --> 00:01:34,845 ஒருவேளை நான் தொலைவில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விரும்புகிறேன். 7 00:01:41,602 --> 00:01:43,937 எங்கோ, நீயும் நானும் மட்டும். 8 00:01:49,151 --> 00:01:50,652 நான் உங்கள் அப்பாவிடம் பேச வேண்டும். 9 00:01:54,323 --> 00:01:56,408 நீ போக வேண்டும். இப்போதே. 10 00:02:06,543 --> 00:02:08,878 ஹேய், நான் இங்கே முட்டாள் இல்லை. நீ இங்கிருந்து போக வேண்டும். 11 00:02:08,961 --> 00:02:11,590 -நான் அவரிடம் பேச வேண்டும். -இன்றிரவு எத்தனை காவலர்கள் வந்தார்கள் தெரியுமா? 12 00:02:11,673 --> 00:02:14,343 FBI, அமெரிக்க மார்ஷல்களும் வந்தார்கள். நீ போக வேண்டும். 13 00:02:14,426 --> 00:02:17,179 உங்கள் அப்பாவுக்கு நாங்கள் ஏற்கனவே ஆஸ்டினில் இருப்பது தெரியும், இல்லையா? 14 00:02:17,262 --> 00:02:20,098 உங்களை குறை சொல்லமாட்டேன். அவர் அவளது தாத்தா. 15 00:02:20,182 --> 00:02:23,060 நாங்கள் இங்கே இருப்பது அவருக்குத் தெரிந்தால், எனக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு அதுதான். 16 00:02:23,644 --> 00:02:24,811 உனக்கு வாய்ப்பு கிடைக்காது. 17 00:02:24,895 --> 00:02:28,607 சார்லி, நான் அவரிடம் பேசவில்லை என்றால், கிறிஸ்டினுக்கு எதிர்காலமே கிடையாது. 18 00:02:31,860 --> 00:02:34,780 என் அப்பா உனக்கு உதவ முடியும் என்று நீ நினைத்தாலும், அவர் அதைச் செய்ய மாட்டார். 19 00:02:35,656 --> 00:02:36,782 ஈதன் அவரைக் காட்டிக் கொடுத்தான். 20 00:02:38,242 --> 00:02:39,409 அவன் எங்கள் குடும்பத்தை அழித்தான். 21 00:02:41,954 --> 00:02:42,955 அவர் என்ன செய்தார் என்று தெரியும். 22 00:02:43,664 --> 00:02:44,665 நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். 23 00:02:46,416 --> 00:02:49,211 ஆனால் இதைச் செய்ய நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும். தயவுசெய்து. 24 00:02:52,214 --> 00:02:54,967 அமெரிக்க மார்ஷல்கள் சேவை டெக்சாஸின் மேற்கு மாவட்டம் 25 00:02:56,552 --> 00:02:58,887 -ஹானா எங்கே? -அவர் கூட்ட அறையில் இருக்கிறார். 26 00:03:03,851 --> 00:03:04,852 -எட். -என்ன வேண்டும்? 27 00:03:04,935 --> 00:03:06,186 ஹானா ஹால் எங்கே? 28 00:03:06,270 --> 00:03:07,271 பெண்கள் கழிவறையில். 29 00:03:08,605 --> 00:03:10,274 ஹேய். நீ ஏன் உட்காரக் கூடாது? 30 00:03:17,823 --> 00:03:18,866 ஹானா? 31 00:03:35,757 --> 00:03:37,759 உன் பெயர் மேக்ஸ் இல்லை தானே? 32 00:03:41,722 --> 00:03:42,973 இப்போதைக்கு மேக்ஸ் போதும். 33 00:03:48,145 --> 00:03:50,314 உங்கள் அப்பா நீண்ட காலமாக இங்கு வாழ்ந்தாரா? 34 00:03:51,565 --> 00:03:52,900 இல்லை, சிறையிலிருந்து வெளியே வந்த பிறகுதான். 35 00:03:53,984 --> 00:03:54,985 சில வருடங்கள் ஆகிறது. 36 00:03:55,652 --> 00:03:57,279 அமைதியாக இருக்கிறது. 37 00:03:58,238 --> 00:04:00,824 ஏரிக்கரையில் ஒரு இடத்தை வாங்குவது உண்மையில் என் அம்மாவின் யோசனை. 38 00:04:01,450 --> 00:04:02,618 வார இறுதியை போக்கும் இடமாக. 39 00:04:02,701 --> 00:04:06,288 ஓய்வெடுக்க அவர்கள் போகக் கூடிய ஒரு இடம். மன அழுத்தம் இல்லை. 40 00:04:07,789 --> 00:04:10,042 அவர் சிறையில் இருக்கும்போதே அந்த வீட்டை வாங்கினார். 41 00:04:12,169 --> 00:04:13,754 ஆனால் அவர் நோய்வாய்ப்பட்டார்... 42 00:04:16,298 --> 00:04:17,882 அவர்கள் ஒன்றாக இங்கே வாழ்ந்ததில்லையா? 43 00:04:20,802 --> 00:04:22,763 அப்பா விடுதலையான அன்றே அம்மா இறந்துவிட்டார். 44 00:04:25,349 --> 00:04:27,643 முப்பத்தைந்து மணிநேரங்களுக்குப் பிறகும், நீ தேர்வு செய்ய முடியாதவளாக இருந்தால். 45 00:04:34,399 --> 00:04:35,609 என்னால் உன்னை திரும்ப அழைத்துப் போக முடியும். 46 00:04:42,574 --> 00:04:44,910 விரும்பியதை செய், மேக்ஸ். 47 00:04:46,828 --> 00:04:49,414 ஹானா, இருக்கிறீர்களா? நான்தான். 48 00:04:51,500 --> 00:04:54,002 -எவ்வளவு நேரமாக கழிவறையில் இருக்கிறார்? -யார்? பெய்லியா? 49 00:04:55,170 --> 00:04:57,172 ஹானா. ஹானா எவ்வளவு நேரமாக கழிவறையில் இருக்கிறார்? 50 00:04:58,757 --> 00:05:00,425 கதவு பூட்டியிருக்கிறது. அவர் பதில் சொல்லவில்லை. 51 00:05:02,928 --> 00:05:04,388 ஹானா, நாங்கள் உள்ளே வருகிறோம். 52 00:05:21,947 --> 00:05:22,906 அடச்சே. 53 00:05:26,159 --> 00:05:28,745 ஆஸ்டின் காவல் துறையை அழையுங்கள். ஹானா ஹாலை தேடச் சொல்லி எல்லா 54 00:05:28,829 --> 00:05:31,373 உள்ளூர் சட்ட அமலாக்க பிரிவுக்கும் சொல்லுங்கள். எனக்கு இப்போதே ஒரு குழு வேண்டும். 55 00:05:31,456 --> 00:05:32,958 சரணாலயம் 56 00:05:44,219 --> 00:05:45,846 நான் ஒன்று செய்ய வேண்டும். 57 00:05:47,347 --> 00:05:49,224 நீ என்னை நம்ப வேண்டும். 58 00:05:51,476 --> 00:05:53,145 பெய்லி, அவர் எங்கிருக்கிறார் என்று தெரியுமா? 59 00:05:57,065 --> 00:05:59,818 பெய்லி, அவர் எங்கிருக்கிறார் என்று தெரிந்தால், எனக்குத் தெரிய வேண்டும். 60 00:06:00,903 --> 00:06:02,446 இல்லை. உங்களுடன் தானே இருக்கிறேன். 61 00:06:06,116 --> 00:06:06,950 சரி. 62 00:06:45,697 --> 00:06:46,949 விரும்பினால் உட்கார். 63 00:06:47,491 --> 00:06:49,076 அவர் வர எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியாது. 64 00:06:56,208 --> 00:06:57,376 எனக்குப் பிரச்சினையில்லை. 65 00:06:57,459 --> 00:07:00,337 ஒருவேளை கவலைப்பட வேண்டியது நீயாக இல்லாமல் இருக்கலாம். 66 00:07:01,129 --> 00:07:03,423 அந்தத் தூண்கள் பார்க்கும் அளவுக்கு பலமாக இருக்காது. 67 00:07:04,341 --> 00:07:08,720 அவை துண்டுகளாக ஆஸ்டினுக்கு கொண்டு வரப்பட்டு, மீண்டும் ஒன்றாக இந்த இடத்தில் இணைக்கப்பட்டது. 68 00:07:09,888 --> 00:07:11,098 மெரிடித்... 69 00:07:12,724 --> 00:07:13,767 அது என் மனைவி. 70 00:07:14,726 --> 00:07:16,812 அவளுக்கு வடிவமைப்பதில் நிறைய திறமை இருக்கிறது. 71 00:07:18,355 --> 00:07:22,150 அவள் எல்லாவற்றையும் அழகாக மாற்றுவாள். 72 00:07:24,152 --> 00:07:26,154 இந்த வீட்டிற்குள் இருக்கும் எல்லா பொருட்களையும் அவள் தான் தேர்ந்தெடுத்தாள். 73 00:07:26,238 --> 00:07:27,489 ஒவ்வொரு பொருளையும். 74 00:07:28,073 --> 00:07:30,909 அதைப் பற்றி பேச மாட்டேன், ஆனால் மற்ற எல்லோரையும் விட 75 00:07:31,618 --> 00:07:35,581 நீ வரலாற்றைப் பாராட்டுவாய் என்று நினைத்தேன். 76 00:07:39,084 --> 00:07:40,836 -ஹாய், மகனே. -ஹேய், அப்பா. 77 00:07:41,879 --> 00:07:44,047 -கையை தூக்க முடியுமா, மேடம்? -என்ன சொன்னாய்? 78 00:07:44,131 --> 00:07:46,341 நீ மைக்ரோஃபோன் மாட்டி இருக்கிறாயா என்று அவன் உறுதிபடுத்த விரும்புகிறான். 79 00:07:47,301 --> 00:07:48,510 நான் எதற்காக மைக்ரோஃபோன் மாட்டப் போகிறேன்? 80 00:07:48,594 --> 00:07:51,430 அப்படிப்பட்ட கேள்விகளை நான் இனி கேட்கமாட்டேன். 81 00:07:52,723 --> 00:07:54,141 கையை தூக்குங்கள். 82 00:08:04,526 --> 00:08:06,361 எனவே, சரணாலயம் போல இருக்காது. 83 00:08:06,445 --> 00:08:07,988 எனக்கு இந்த பெயர் பிடிக்காது. 84 00:08:09,239 --> 00:08:12,034 என் மனைவி வைத்த பெயர், இல்லையென்றால் எப்போதோ மாற்றியிருப்பேன். 85 00:08:12,743 --> 00:08:13,911 வேறு எந்த பெயரால்? 86 00:08:13,994 --> 00:08:16,079 ஒரு மேற்கோளாக இருக்கலாமா? 87 00:08:16,788 --> 00:08:21,835 "நம்பிக்கையை கைவிடுங்கள்." அது நம்பிக்கையை கைவிடுவது பற்றியது. 88 00:08:22,336 --> 00:08:24,546 நம்பிக்கை ஏமாற்றிவிடும் என்று என் தாத்தா எப்போதும் சொல்வார். 89 00:08:24,630 --> 00:08:25,839 மற்றொரு போட்டியாளர். 90 00:08:26,340 --> 00:08:27,966 -மைக்ரோஃபோன் எதுவுமில்லை, சார். -நல்லது. 91 00:08:29,551 --> 00:08:32,095 -நீ ஏன் கிளம்பக் கூடாது, மகனே? -நான்தான் அவளை மீண்டும் அழைத்துப் போக வேண்டும். 92 00:08:32,179 --> 00:08:35,307 நம்முடைய புதிய தோழியுடன் தனியாக கொஞ்ச நேரத்தை செலவிட விரும்புகிறேன். 93 00:08:36,140 --> 00:08:40,102 உனக்குப் பிரச்சினை இல்லை தானே? ஹானா? 94 00:08:41,355 --> 00:08:42,481 உன்னை ஹானா என்று கூப்பிடலாமா? 95 00:08:44,608 --> 00:08:47,653 அல்லது திருமதி. மைக்கேல்ஸ் என்றா? 96 00:08:51,615 --> 00:08:52,783 ஹானாவே போதுமானது. 97 00:08:53,617 --> 00:08:54,868 பார்த்தாயா, அவளுக்குப் பிரச்சினை இல்லையாம். 98 00:08:54,952 --> 00:08:57,162 நெட் இங்கிருக்கிறான், அவன் அவளை நகரத்திற்கு அழைத்துப் போவான். 99 00:08:57,663 --> 00:08:59,331 -அப்பா, நான்... -நீ மிகவும் களைப்பாக இருக்கிறாய். 100 00:09:01,500 --> 00:09:02,501 வீட்டிற்குப் போ. 101 00:09:04,127 --> 00:09:05,629 நிச்சயமாக, அவள் போக விரும்பினால், 102 00:09:05,712 --> 00:09:08,841 ஹானா இங்கிருந்து ஆஸ்டினுக்கோ சாஸலிட்டோவிற்கு திரும்பிப் போவதை... 103 00:09:10,843 --> 00:09:11,844 தடுக்க மாட்டேன். 104 00:09:14,763 --> 00:09:15,764 எனக்குப் பிரச்சினையில்லை. 105 00:09:34,825 --> 00:09:38,328 நிக்கோலஸ் பெல்லின் ஃபோன் இருப்பிட தகவல் வேண்டும். சார்லி ஸ்மித்தின் ஃபோன் இருப்பிட தகவல் வேண்டும். 106 00:09:38,412 --> 00:09:40,247 ஆண்ட்ரேயா ரெய்ஸ் வீட்டின் முன்பு இன்னும் யாராவது இருக்கிறார்களா? 107 00:09:40,330 --> 00:09:42,875 இருக்கிறார்கள். அமைதியாக இருங்கள். நிக்கோலஸ் பங்களா முன்பு எந்த நடமாட்டமும் இருக்கக் கூடாது. 108 00:09:42,958 --> 00:09:45,460 தி நெவர் டிரையில் நிறுத்தப்பட்டுள்ள போலீஸ்காரர் ஹானாவைப் பார்த்திருக்கலாம் என்று நினைக்கிறார். 109 00:09:45,544 --> 00:09:47,546 நாங்கள் இப்போது கண்காணிப்பு காட்சிகளை பார்த்து வருகிறோம். 110 00:09:47,629 --> 00:09:50,591 தி நெவர் டிரையில் தேட ஒரு சோதனை ஆணையை பெற்று, ஹானாவின் ஃபோனில் எதை மீட்க முடியும் 111 00:09:50,674 --> 00:09:51,842 -என்பதை க்ரேவனைப் பார்க்கச் சொல்லுங்கள். -சரி. 112 00:10:00,100 --> 00:10:01,643 ஜூல்ஸ் 113 00:10:04,897 --> 00:10:05,731 ஜூல்ஸ். 114 00:10:05,814 --> 00:10:08,609 நீ நலமா? என்னால் ஹானாவை தொடர்புகொள்ள முடியவில்லை. 115 00:10:08,692 --> 00:10:11,403 என்னாலும் முடியவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. 116 00:10:11,904 --> 00:10:13,947 ஆனால் நீ பத்திரமாக இருக்கிறாயா? 117 00:10:14,031 --> 00:10:15,449 நான் துணை அதிகாரி பிராட்ஃபோர்டுடன் இருக்கிறேன். 118 00:10:16,033 --> 00:10:18,952 ஆனால் ஜூல்ஸ், இது எல்லாம் என் தவறுதான். 119 00:10:19,828 --> 00:10:23,165 ஹானா ஆஸ்டினுக்கு போக விரும்பினார், நான் போகவில்லை, 120 00:10:23,248 --> 00:10:24,958 பிறகு அவரிடம் தகவல் சொல்லாமல் போய்விட்டேன். 121 00:10:25,042 --> 00:10:27,711 இப்போது, அவருக்கு ஏதாவது ஆகியிருந்தால் என்ன செய்வது? 122 00:10:27,794 --> 00:10:29,421 அவளுக்கு ஒன்றும் ஆகாது, சரியா? 123 00:10:29,505 --> 00:10:32,299 எல்லா பிரச்சினைகளும் சரியாகிவிடும். சரியாக இப்போது நீ எங்கே இருக்கிறாய்? 124 00:10:33,467 --> 00:10:34,718 தடுக்கப்பட்டவரிடமிருந்து அழைப்பு - மொபைல் 125 00:10:34,801 --> 00:10:36,011 பெய்லி? 126 00:10:38,931 --> 00:10:40,516 ஜூல்ஸ், உங்களை திரும்ப அழைக்கிறேன். 127 00:10:43,352 --> 00:10:45,270 -ஹானா? -பெய்லி. 128 00:10:50,484 --> 00:10:51,485 அப்பா? 129 00:11:04,456 --> 00:11:05,457 போர்பன்? 130 00:11:05,958 --> 00:11:07,876 -கண்டிப்பாக. -சரி. 131 00:11:14,508 --> 00:11:15,509 உட்கார். 132 00:11:31,024 --> 00:11:33,235 அது கிறிஸ்டினின் இரண்டாவது பிறந்தநாளில் எடுத்தது. 133 00:11:33,944 --> 00:11:35,904 அப்போதே அவள் நன்றாக பேசுவாள். 134 00:11:36,613 --> 00:11:39,199 இந்த புகைப்படம் எடுப்பதற்கு ஒரு வாரம் முன்பு நான் அவளை பூங்காவிற்கு அழைத்துப் போனேன், 135 00:11:40,033 --> 00:11:41,702 பிறகு குழந்தை மருத்துவரை பார்த்தோம். 136 00:11:42,786 --> 00:11:46,748 அவள் எப்படி இருக்கிறாள் என்று அவர் கேட்டார், அதற்கு இரண்டு பக்க பதிலைச் சொன்னாள். 137 00:11:51,211 --> 00:11:53,130 இப்போதும் அவள் அப்படித்தான் என்று நினைக்கிறேன். 138 00:11:53,797 --> 00:11:54,631 ஆம். 139 00:11:59,261 --> 00:12:01,346 இங்கே என்ன செய்கிறாய், ஹானா? 140 00:12:06,393 --> 00:12:08,478 நாம் ஒரு ஒப்பந்தத்துக்கு வர முடியும் என்று நம்பினேன், 141 00:12:13,108 --> 00:12:15,110 நான் அப்படி நினைக்கவில்லை. இல்லை. 142 00:12:17,154 --> 00:12:18,488 என்னிடம் என்ன இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியாது... 143 00:12:18,572 --> 00:12:21,033 இல்லை, என்ன சொல்ல வந்தேன் என்றால், நீ அதற்காகத்தான் வந்தாய் என்று நினைக்கவில்லை. 144 00:12:22,951 --> 00:12:28,373 நீ இங்கிருக்கிறாய் ஏனென்றால் மற்றவர்கள் சொல்வதைப் போல நான் இல்லை என்று நீ நம்புவதால் தான். 145 00:12:33,670 --> 00:12:35,088 -திரு. பெல். -நிக்கோலஸ். 146 00:12:35,672 --> 00:12:38,634 நிக்கோலஸ். பழைய விஷயத்தைப் பற்றி வாதாட நான் வரவில்லை. 147 00:12:38,717 --> 00:12:41,595 இல்லையா? நான் உன் கணவனை மன்னிக்க விரும்புகிறாய். 148 00:12:42,095 --> 00:12:45,724 அவன் என்ன செய்தான் என்ற எந்த யோசனையும், விஷயமும் தெரியாமல், 149 00:12:45,807 --> 00:12:47,142 நான் அவனை மன்னிக்க விரும்புகிறாய். 150 00:12:47,226 --> 00:12:50,020 என்னிடம் சொல்வதற்கு விஷயம் இருக்கிறது. எனக்கு முழு விவரமும் தெரியும். 151 00:12:50,979 --> 00:12:51,980 என் கணவனைப் பற்றி எனக்குத் தெரியும். 152 00:12:52,064 --> 00:12:53,482 உன் கணவன் ஈதன். 153 00:12:53,565 --> 00:12:55,609 உங்கள் மகளை எப்படி பறிகொடுத்தீர்கள் என்று தெரியும். 154 00:13:01,532 --> 00:13:03,200 அதற்கும் எனக்கும் எந்த சம்பத்தமும் இல்லை. 155 00:13:04,451 --> 00:13:10,040 எனக்கு வேலை கொடுத்தவர்கள் என் மகளை காயப்படுத்துவார்கள் என்று நீ நினைத்தால்... 156 00:13:10,123 --> 00:13:10,999 அவர்களிடம் ஒரு நெறி இருக்கிறது. 157 00:13:11,083 --> 00:13:13,710 அதோடு, அவர்கள் என் குடும்பத்திற்கு தீங்கு விளைவித்திருந்தால், நான் அவர்களது உறவை 158 00:13:14,294 --> 00:13:16,505 -முறித்திருப்பேன் என்று அவர்களுக்கே தெரியும். -திரு. பெல்... நிக்கோலஸ்... 159 00:13:16,588 --> 00:13:18,423 நிச்சயமாக, ஈதன், அவர் அதை நம்ப விரும்பவில்லை. 160 00:13:19,007 --> 00:13:21,635 இல்லை, அவனுக்கு யார் மீதாவது பழி சுமத்த வேண்டும், எனவே என் மீது பழி சுமத்தினான். 161 00:13:22,594 --> 00:13:26,390 எனக்கு சரியான தண்டனை கிடைக்கவில்லை என்பதற்காக என்னை தண்டித்தான். 162 00:13:26,473 --> 00:13:27,474 என்னை விடு, 163 00:13:27,558 --> 00:13:31,186 எப்படிப்பட்ட ஒருவன் குழந்தையை அப்படி எடுத்துக்கொண்டு போவான்? 164 00:13:31,770 --> 00:13:35,732 அந்த குழந்தையை தனது பாட்டி, தனது அத்தை, மற்றும் தனது மாமாவிடம் இருந்து பிரித்துவிட்டான். 165 00:13:36,608 --> 00:13:38,110 அவளை விரும்பிய எல்லோரிடமிருந்தும். 166 00:13:38,861 --> 00:13:43,407 கேட்டின் கதைகளை சொல்லக் கூடிய அவளது அம்மாவைத் தெரிந்த எல்லோரிடமிருந்தும். 167 00:13:44,449 --> 00:13:48,036 கபட வேஷம். அதைத்தான் என்னால் உண்மையில் ஜீரணிக்க முடியவில்லை. 168 00:13:49,872 --> 00:13:53,250 நான் என்ன செய்கிறேன் என்று யாரையும் விட உன் கணவனுக்குத் தான் நன்றாகத் தெரியும். 169 00:13:57,129 --> 00:13:59,089 என் சொந்த பிள்ளைகளை விட அவனுக்கு அதிகமாக தெரியும். 170 00:14:00,257 --> 00:14:01,258 அவன்... 171 00:14:03,427 --> 00:14:06,346 அவன் எப்போதும் என்னுடன் அந்த உறவை விரும்பினான், நான்... 172 00:14:07,681 --> 00:14:08,974 நீங்கள் அவரை நேசித்தீர்கள். 173 00:14:09,641 --> 00:14:10,893 என்ன சொன்னாய்? 174 00:14:13,520 --> 00:14:17,441 இவை எல்லாவற்றுக்கும் முன்பாக, நீங்கள் அவரை மிகவும் நேசித்தீர்கள். 175 00:14:17,524 --> 00:14:20,569 எந்தவொரு நல்ல பெற்றோரையும் போலவே நான் அவனிடம் முயற்சித்தேன். 176 00:14:21,236 --> 00:14:22,654 நீங்கள் முயற்சித்ததை விட மேலான ஒன்றை செய்திருக்கிறீர்கள். 177 00:14:23,488 --> 00:14:26,408 முயற்சித்திருந்தால், அது தவறுதான். 178 00:14:26,491 --> 00:14:28,952 நாம் இருவரும் தவறு செய்திருக்கிறோம். ஒப்புக்கொள்ள மாட்டாயா? 179 00:14:29,036 --> 00:14:30,245 இல்லை, ஒப்புக்கொள்ள மாட்டேன். 180 00:14:30,829 --> 00:14:33,582 என்னால் உன் கணவனைப் பற்றிய ஒரு கதையை உனக்குச் சொல்ல முடியும், 181 00:14:33,665 --> 00:14:36,043 நீ என்னை ஒருபோதும் பழையபடி பார்க்க மாட்டாய். 182 00:14:36,126 --> 00:14:38,295 இருக்கலாம். இது முக்கியமானதை மாற்றும் என்று நினைக்கவில்லை. 183 00:14:38,378 --> 00:14:39,379 என்ன அது? 184 00:14:39,963 --> 00:14:44,176 என் கணவன் உங்கள் பேத்தியை எவ்வளவு நேசிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். 185 00:14:44,259 --> 00:14:45,552 நீங்கள் எவ்வளவு தவறாக 186 00:14:46,053 --> 00:14:48,472 நினைக்கிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் அவர் செய்த எல்லாமே, 187 00:14:48,555 --> 00:14:51,099 இதை அவளுக்காகத் தான் செய்தார் என்று உங்களுக்கே தெரியும். 188 00:14:51,183 --> 00:14:54,436 அப்படிப்பட்ட பெற்றோராக இருப்பதற்கு நீங்கள் அவரை மதிப்பீர்கள் என்று நம்புகிறேன். 189 00:14:54,937 --> 00:14:59,983 அப்படிப்பட்ட தியாகத்தை செய்ததற்காக. தனது... குடும்பத்தைப் பாதுகாத்ததற்காக. 190 00:15:01,443 --> 00:15:03,612 உங்கள் இருவரிடமும் அந்த பண்பு பொதுவானது போல தெரிகிறது. 191 00:15:05,072 --> 00:15:06,240 நான் சொல்வதை கவனமாக கேள். 192 00:15:07,282 --> 00:15:10,744 எனது வாடிக்கையாளர்களின் ரகசியங்களைப் பகிர்ந்து குடும்பத்தினரை ஆபத்தில் ஆழ்த்துவதற்குப் பதிலாக, 193 00:15:11,245 --> 00:15:15,374 என் வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தை, ஆறரை ஆண்டுகளை சிறையில் கழித்தேன். 194 00:15:15,457 --> 00:15:19,628 என் மகளை, என் பேத்தியை, என் மனைவியை, என் தொழிலை இழந்தேன். 195 00:15:19,711 --> 00:15:22,798 எனவே, நீ தியாகத்தைப் பற்றி பேச விரும்பினால், அது தான் தியாகம். 196 00:15:22,881 --> 00:15:24,675 ஆனால் உன் கணவன் ஏதோ ஒரு தியாகி என்று என்னை 197 00:15:24,758 --> 00:15:26,885 நம்ப வைக்கப் போகிறாய் என்று பாசாங்கு செய்யாதே. 198 00:15:26,969 --> 00:15:27,886 நான்... 199 00:15:33,183 --> 00:15:35,102 என்னை அவனோடு ஒப்பிட்டு பேசாதே. 200 00:15:42,109 --> 00:15:42,943 கிரேடி பிராட்ஃபோர்ட். 201 00:15:43,026 --> 00:15:47,114 அவள் இங்கிருக்கிறாள். நாங்கள் டிராவிஸ் ஏரியில் இருக்கிறோம், நகரத்திலுள்ள பங்களாவில் அல்ல. 202 00:15:51,034 --> 00:15:52,035 ஹேய், பாஸ்? 203 00:15:54,413 --> 00:15:56,081 டிராவிஸ் கவுண்டி ஷெரிஃப்பின் அலுவலகத்தை அழை. 204 00:15:56,164 --> 00:15:58,959 இப்போதே டிராவிஸ் ஏரியில் இருக்கும் பெல்லின் வீட்டிற்கு SWAT குழுவை அனுப்பச் சொல். 205 00:15:59,543 --> 00:16:02,254 கூப்பர்! ஜென்கின்ஸ், எட், நீங்கள் எல்லோரும் என்னோடு வாருங்கள். 206 00:16:02,337 --> 00:16:03,964 போஸ்னர், அந்த சிறுமியை கவனமாக பார்த்துக்கொள். 207 00:16:04,631 --> 00:16:05,632 போகலாம். 208 00:16:21,773 --> 00:16:25,068 அதை இறுக்கமாக கட்டி அதை இன்னும் மோசமாக்க போகிறீர்கள். 209 00:16:25,152 --> 00:16:26,528 நீ இப்போது மருத்துவராகிவிட்டாயா? 210 00:16:26,612 --> 00:16:29,656 நிறைய மோசமான கை காயங்களை பெற்ற ஒருவள். 211 00:16:30,490 --> 00:16:32,034 அது தொழிலில் உள்ள ஆபத்து. 212 00:16:34,411 --> 00:16:35,871 நேராக விஷயத்திற்கு வா, சரியா? 213 00:16:37,164 --> 00:16:38,373 உங்களோடு ஒரு ஒப்பந்தம் போட விரும்புகிறேன். 214 00:16:38,457 --> 00:16:40,334 அது உன்னுடைய ஒப்பந்தம் அல்ல. 215 00:16:41,210 --> 00:16:42,461 உண்மையில், என்னுடையது தான் என்று நினைக்கிறேன். 216 00:16:42,961 --> 00:16:45,130 உண்மையில், என்னால் மட்டுமே அதை போட முடியும் என்று நினைக்கிறேன். 217 00:16:45,797 --> 00:16:47,424 -அது சரியா? -உங்களுக்கும் என் கணவருக்கும் 218 00:16:47,508 --> 00:16:51,845 ஒருவரையொருவர் பிடிக்காது என்பது தெளிவாக தெரிகிறது. 219 00:16:52,346 --> 00:16:55,182 நான் இப்போது சொல்லப் போவதை அவர் சொல்வார் என்று நினைக்கவில்லை, 220 00:16:55,265 --> 00:16:58,894 ஆனால் அவர் இங்கே இல்லை. நான் இருக்கிறேன். 221 00:17:00,896 --> 00:17:01,897 சரி. 222 00:17:03,273 --> 00:17:04,273 கேட்டுக்கொண்டிருக்கிறேன். 223 00:17:06,527 --> 00:17:09,655 உங்கள் பேத்தியுடன் நீங்கள் உறவை வளர்க்க விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். 224 00:17:10,821 --> 00:17:12,241 நீங்கள் அவளைப் பற்றி பேசும் விதத்தில் இருந்து, 225 00:17:12,324 --> 00:17:16,787 எதையும் விட அவளுடன் நீங்கள் உறவை வளர்க்க விரும்புவீர்கள் என்று நான் நினைக்கிறேன். 226 00:17:19,373 --> 00:17:24,044 அதை நடக்க வைப்பதற்காக உங்கள் வாடிக்கையாளர்களுடன் ஏற்பாடுகளைச் செய்ய 227 00:17:24,795 --> 00:17:26,003 நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். 228 00:17:26,088 --> 00:17:28,924 அந்த அமைப்புடன் எனக்கு அந்த வகையான செல்வாக்கு இருப்பதாக நீ நினைக்கிறாயா? 229 00:17:29,007 --> 00:17:32,094 அவர்களுக்காக ஆறரை ஆண்டுகள் சிறையில் இருந்ததாக இப்போது நீங்கள் சொல்லவில்லையா? 230 00:17:32,177 --> 00:17:34,054 அவர்கள் நன்றியுள்ளவர்களாக இல்லை என்று என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. 231 00:17:34,638 --> 00:17:39,309 அது நடக்க வேண்டும் அல்லது உங்கள் பேத்தி மீண்டும் காணாமல் போய்விடுவாள். 232 00:17:40,519 --> 00:17:41,854 மிரட்டுவது எனக்குப் பிடிக்காது. 233 00:17:41,937 --> 00:17:44,690 நான் உங்களை மிரட்டவில்லை. அதுதான் வேறு வழி என்று எனக்குச் சொல்லப்படுகிறது. 234 00:17:44,773 --> 00:17:46,191 ஒரே வழி என்று. 235 00:17:46,942 --> 00:17:48,861 உன்னைக் கண்டுபிடிக்க மாட்டேன் என்று எது உன்னை நினைக்க வைக்கிறது? 236 00:17:49,653 --> 00:17:50,654 ஒருவேளை கண்டுபிடிக்கலாம். 237 00:17:52,155 --> 00:17:55,117 அவள் மீண்டும் ஓட வேண்டும் என்று நீங்கள் உண்மையில் விரும்புகிறீர்களா? 238 00:17:58,537 --> 00:18:00,914 உங்கள் பேத்தியை பத்திரமாக வைத்திருக்கும்படி கேட்கிறேன், 239 00:18:00,998 --> 00:18:02,624 அவள் வாழ்க்கையை வாழ அனுமதிக்க, 240 00:18:02,708 --> 00:18:06,545 அவள் தன் குடும்பத்தை அறியக்கூடிய நிலையில் அவளை வைக்க. 241 00:18:07,504 --> 00:18:08,672 அவள் உங்களை தெரிந்துகொள்ள. 242 00:18:13,927 --> 00:18:15,095 அது எனக்குப் பிடித்திருக்கிறது. 243 00:18:16,013 --> 00:18:18,140 ஆனால் நீ ஈதனை பாதுகாக்க சொன்னால், 244 00:18:18,223 --> 00:18:19,558 அது சாத்தியமில்லை. 245 00:18:21,226 --> 00:18:23,812 நான் விரும்பினாலும் ஈதனை பாதுகாக்க முடியாது. 246 00:18:23,896 --> 00:18:25,981 தெளிவாக இருக்க சொல்கிறேன், அது என்னால் முடியாது. 247 00:18:40,829 --> 00:18:42,456 ஈதன் இதில் ஒரு பகுதியாக இல்லை என்றால்? 248 00:18:43,749 --> 00:18:44,750 என்ன? 249 00:18:48,086 --> 00:18:49,713 ஈதன் இதில் ஒரு பகுதியாக இல்லை என்றால்? 250 00:18:52,382 --> 00:18:53,383 ஒருவேளை அது… 251 00:18:54,927 --> 00:18:57,262 உங்கள் பேத்தி, கிறிஸ்டின் மட்டும் என்றால்? என்ன... 252 00:18:58,889 --> 00:19:00,265 அவளைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியுமா? 253 00:19:01,725 --> 00:19:03,060 கிறிஸ்டின் மட்டுமா? 254 00:19:04,228 --> 00:19:05,229 ஆம். 255 00:19:07,648 --> 00:19:09,024 நீ புரிந்துதான் பேசுகிறாயா? 256 00:19:09,107 --> 00:19:11,235 உன் கணவன் வீட்டிற்கு வர முடியாது. 257 00:19:11,735 --> 00:19:13,654 இப்போது மட்டும் இல்லை, எப்போதுமே. 258 00:19:14,321 --> 00:19:15,489 ஈதன் விரும்புவதும் அதுதான். 259 00:19:17,616 --> 00:19:19,451 அவள் இல்லாமல் தன் வாழ்க்கையை வாழ்வதா? 260 00:19:19,952 --> 00:19:24,998 அவளை பாதுகாப்பாக வைத்திருக்க. அவளை பாதுகாக்க. பெய்லி பெய்லியாக இருக்க. 261 00:19:27,376 --> 00:19:30,003 அதைத்தான் நாம் இருவரும் அதிகம் விரும்புகிறோம். 262 00:19:35,592 --> 00:19:37,261 என் அம்மா என்னோடு இருந்ததில்லை. 263 00:19:39,012 --> 00:19:40,138 என் சிறு வயதிலேயே அவர் போய்விட்டார், 264 00:19:40,222 --> 00:19:42,891 நீங்கள் கடைசியாக கிறிஸ்டினை பார்த்தபோது இருந்த விட வயது அதிகம் இல்லை. 265 00:19:44,726 --> 00:19:48,355 ஆனால் எனக்கு என் தாத்தா இருந்தார். பெரும்பாலான மக்களை விட அதிகமாக. 266 00:19:49,022 --> 00:19:53,277 நான் விளக்க முயற்சிப்பது, ஈதன் போகும்போது அது புரிந்திருக்க வேண்டும். 267 00:19:53,360 --> 00:19:55,946 என்னுடைய முன்னுரிமை உங்கள் பேத்தியாக இருக்க வேண்டும் என்று. 268 00:19:57,698 --> 00:20:03,161 அவள்தான் இங்கு முக்கியம். அது என்னை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். 269 00:20:03,245 --> 00:20:04,663 நீ அப்படிச் சொல்ல என்ன காரணம்? 270 00:20:05,372 --> 00:20:06,456 நீங்கள் முதலில் அங்கு இருந்தீர்கள். 271 00:20:15,007 --> 00:20:16,633 நான் உன்னை வீட்டிற்கு அனுப்பியதாக நினைத்தேன். 272 00:20:17,217 --> 00:20:21,096 கிரேடி பிராட்ஃபோர்ட் அரை டஜன் அமெரிக்க மார்ஷல்கள் மற்றும் SWAT உடன் வாசலில் நிற்கிறான். 273 00:20:27,686 --> 00:20:28,770 சரி, நீ நினைக்கிறாய்... 274 00:20:34,902 --> 00:20:38,197 அவள் என்னைச் சந்திக்க விரும்புவாள் என்று நினைக்கிறாயா? 275 00:20:39,031 --> 00:20:40,032 கிறிஸ்டினா? 276 00:20:41,867 --> 00:20:45,370 ஆம். அவள் உங்களைப் பற்றி தவறாக நினைக்காமல் பார்த்துக் கொள்கிறேன். 277 00:20:45,454 --> 00:20:47,706 இங்கு நடந்த பல விஷயங்களுக்கும் அவள் மீதான 278 00:20:49,333 --> 00:20:52,920 உங்கள் அன்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது அவளுக்குத் தெரிவதை நான் உறுதிப்படுத்துகிறேன். 279 00:20:54,463 --> 00:20:57,674 அப்பா. அவள் போக வேண்டும். 280 00:21:03,639 --> 00:21:07,059 என்றாவது ஒரு நாள் ஈதன் உங்கள் வாழ்க்கையில் மீண்டும் வரலாம், 281 00:21:07,142 --> 00:21:11,980 அவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள் என்ற யோசனை உனக்கு துளியும் இருந்தால் 282 00:21:12,481 --> 00:21:15,901 நான் சொல்கிறேன், அவர்கள் விடமாட்டார்கள். 283 00:21:18,654 --> 00:21:20,989 அந்த மனிதர்கள், அவர்கள் மறக்க மாட்டார்கள். 284 00:21:23,534 --> 00:21:24,910 எனக்குப் புரிகிறது. 285 00:21:25,702 --> 00:21:29,790 அவர்கள் அவனைக் கண்டுபிடிக்கலாம். அவன் திரும்பி வரவில்லை என்றாலும். 286 00:21:32,209 --> 00:21:33,502 அவர்கள் இன்னும் அவரைக் கண்டுபிடிக்கவில்லை. 287 00:21:42,511 --> 00:21:43,512 வீட்டிற்கு செல். 288 00:21:45,639 --> 00:21:49,726 அவள் பாதுகாப்பாக இருப்பாள். நீங்கள் இருவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள். 289 00:21:51,436 --> 00:21:52,813 நான் உனக்கு வாக்குக் கொடுக்கிறேன். 290 00:21:54,773 --> 00:21:56,149 -நன்றி. -எனக்கு நன்றி சொல்லாதே. 291 00:21:58,193 --> 00:21:59,987 நான் இதை உனக்காக செய்யவில்லை. 292 00:22:58,170 --> 00:23:01,131 எனவே, என்ன திட்டம், ஹானா? 293 00:23:01,215 --> 00:23:04,176 என்ன? என்றென்றும் மகிழ்ச்சியாக வாழலாம் என்ற நம்பிக்கையில் நீங்கள் ஒரு விமானத்தில் ஏறி 294 00:23:04,259 --> 00:23:06,553 உங்கள் வாழ்க்கைக்குத் திரும்பப் போகிறீர்களா? 295 00:23:09,056 --> 00:23:11,558 -என்றென்றும் மகிழ்ச்சியாக இல்லை. -ஆம். நீங்கள் சொல்வது சரிதான். 296 00:23:11,642 --> 00:23:13,560 நீங்கள் எங்கே என்று அவர்களுக்குத் தெரிந்தால் என்னால் உங்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது. 297 00:23:13,644 --> 00:23:16,980 -நீங்கள் எங்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது. -நிக்கோலஸ் பெல் செய்வார் என நினைக்கிறீர்களா? 298 00:23:19,441 --> 00:23:23,570 ஓவனை தண்டிக்க விரும்புவதை விட நிக்கோலஸ் தனது பேத்தியை தெரிந்து கொள்ள விரும்புகிறார். 299 00:23:28,951 --> 00:23:30,702 உங்களுக்கு இன்னும் புரியவில்லை, இல்லையா? 300 00:23:32,704 --> 00:23:36,083 இவர்கள் ஓவனை கண்டுபிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். 301 00:23:37,042 --> 00:23:39,545 அவர்கள் உங்களைப் பின்தொடர்வார்கள், பெய்லியைப் பின்தொடர்வார்கள். 302 00:23:39,628 --> 00:23:42,798 அவர்கள் ஓவனை வெளியே கொண்டுவர தேவையான எந்த வழியையும் பயன்படுத்துவார்கள். 303 00:23:43,298 --> 00:23:47,219 -தேவையான எந்த வழியையும். -நிக்கோலஸ் எனக்கு வாக்குக் கொடுத்தார். 304 00:23:47,302 --> 00:23:49,263 நிக்கோலஸின் பிழைப்பே பொய் சொல்வதுதான்! 305 00:23:49,346 --> 00:23:50,722 வாய்ப்புகள் என்ன? 306 00:23:50,806 --> 00:23:52,933 எங்களை வேறு இடத்திற்கு மாற்றினால், அவர்கள் எங்களைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் என்ன? 307 00:23:53,016 --> 00:23:54,518 பத்து சதவிகிதமா? ஐந்தா? 308 00:23:55,936 --> 00:24:00,107 எனக்கு உறுதியாக தெரிவது என்னவென்றால் ஓவன் எங்களுடன் இணைந்தால், 309 00:24:00,190 --> 00:24:02,860 அவரை வேட்டையாடும் வரை அவர்கள் ஓயமாட்டார்கள். 310 00:24:04,111 --> 00:24:06,572 அந்த சண்டையில் பெய்லி சிக்கினால்… 311 00:24:08,657 --> 00:24:12,369 ஓவன் அந்த முடிவை எடுக்கவே மாட்டார். அதனால்தான் அவர் ஓடிவிட்டார். 312 00:24:13,620 --> 00:24:16,373 அவர் எங்களுடன் இருந்தால் பெய்லியைப் பாதுகாக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும். 313 00:24:16,456 --> 00:24:20,586 அப்படியென்றால், உங்கள் கணவர் தனது ஃபோனை எனக்கு அனுப்பியதை எப்படி விளக்குவீர்கள்? 314 00:24:22,212 --> 00:24:24,339 அவர் தி ஷாப் பற்றி அவர் வைத்திருந்த எல்லா விரிவான கோப்புகளும். 315 00:24:25,591 --> 00:24:28,218 அவர் திரும்பி வருவதற்கு எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தார். 316 00:24:29,386 --> 00:24:31,054 இல்லை. வேறு காரணம் இருப்பதாக நினைக்கிறேன். 317 00:24:31,638 --> 00:24:35,517 -அது என்ன? அவரது பாரம்பரியமா? -இல்லை. பெய்லியின். 318 00:24:35,601 --> 00:24:38,270 -அதற்குள் அந்த முடிவுக்கு வந்துவிட்டீர்கள். -நான் திருமணம் செய்தவரை எனக்குத் தெரியும். 319 00:24:38,353 --> 00:24:39,354 அட. 320 00:24:40,647 --> 00:24:41,732 இது உங்களுக்கு ஏதாவது கற்பித்திருந்தால், 321 00:24:41,815 --> 00:24:44,651 நாம் திருமணம் செய்தது யாரை என்று நம்மில் யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன். 322 00:24:52,034 --> 00:24:54,578 ஓவன் எங்கள் திருமண மோதிரங்களை செய்தார். 323 00:24:55,078 --> 00:24:57,331 அவர் என் பட்டறையில் இரவு வெகுநேரம் வேலை செய்தார். 324 00:24:57,414 --> 00:25:01,543 என்னை ஆச்சரியப்படுத்த விரும்பினார், ஆனால் படுக்கைக்கு வருவார், 325 00:25:01,627 --> 00:25:03,754 அவர் மேல் மர சில்லுகளின் வாசனை வீசும். 326 00:25:05,005 --> 00:25:09,426 அவர் என்ன செய்கிறார் என்பது தெரியும் முன்பே அவர் என்ன செய்கிறார் என்று எனக்குத் தெரியும். 327 00:25:12,930 --> 00:25:14,640 அந்த அளவுக்கு நாங்கள் ஒருவரையொருவர் அறிவோம். 328 00:25:15,557 --> 00:25:18,477 ஓவன் மறைந்ததும் அடுத்து நான் என்ன செய்வேன் என்று அவருக்குத் தெரியும். 329 00:25:19,478 --> 00:25:24,358 அவளுக்குத் தேவையானதை நான் செய்வேன் என்று அவருக்குத் தெரியும். 330 00:25:26,735 --> 00:25:27,736 ஹானா... 331 00:25:30,364 --> 00:25:32,115 இது எவ்வளவு ஆபத்தானது என்று உங்களுக்குத் தெரிய வேண்டும். 332 00:25:35,994 --> 00:25:38,080 அவர்கள் உங்கள் பின்னால் வருவார்கள். 333 00:25:39,873 --> 00:25:43,710 அவர்கள் பெய்லியை விட்டுவிடலாம், ஆனால் ஓவனை காயப்படுத்த அவர்கள் உங்களை காயப்படுத்துவார்கள். 334 00:25:43,794 --> 00:25:45,045 அவரை வெளியே கொண்டுவர. 335 00:25:49,341 --> 00:25:51,134 தயவுசெய்து. நீங்கள் கெட்டவர்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, 336 00:25:51,218 --> 00:25:52,803 அதிலிருந்து விடுபடுவதை எதிர்பார்க்கக் கூடாது. 337 00:25:56,014 --> 00:25:57,307 நான் ஏற்கனவே செய்துவிட்டேன். 338 00:26:04,565 --> 00:26:07,276 செல்வி. மைக்கேல்ஸ். பெய்லி. 339 00:26:24,251 --> 00:26:25,460 மன்னிக்கவும். 340 00:26:26,795 --> 00:26:28,922 நான் ஓடியிருக்கக் கூடாது... 341 00:26:31,633 --> 00:26:34,595 பரவாயில்லை. நீ நலமாக இருக்கிறாய். 342 00:26:38,098 --> 00:26:39,099 அவர் அழைத்தார். 343 00:26:41,143 --> 00:26:42,186 உன் அப்பாவா? 344 00:26:42,686 --> 00:26:47,357 நிறுத்து. நிறைய பேர் இருக்கிறார்கள். சந்திப்பு அறை, இப்போதே. 345 00:26:50,444 --> 00:26:51,445 எனக்கு அறை வேண்டும். 346 00:27:00,412 --> 00:27:03,123 -நான் ஹானாவிடம் தனியாக பேசலாமா? -பெய்லி. 347 00:27:03,749 --> 00:27:06,627 உன் அப்பா சொன்னதை நீ சொல்ல வேண்டும். நான் அவருக்கு உதவக்கூடிய ஒரே வழி அதுதான். 348 00:27:07,794 --> 00:27:08,795 பரவாயில்லை. 349 00:27:13,050 --> 00:27:15,802 நான் ஹலோ சொன்னதும், 350 00:27:16,512 --> 00:27:19,306 அப்பா ஏற்கனவே பேசிக் கொண்டிருந்தார். 351 00:27:21,517 --> 00:27:23,435 அவர் எங்கிருந்து அழைத்தார் என்று சொல்லவில்லை, 352 00:27:23,519 --> 00:27:26,522 அதோடு… …நான் நலமா என்று அவர் கேட்கவில்லை. 353 00:27:27,648 --> 00:27:31,902 அவர்... அவருக்கு 22 வினாடிகள் இருப்பதாக சொன்னார். 354 00:27:31,985 --> 00:27:33,737 எனக்கு அது நினைவிருக்கிறது. இருபத்தி இரண்டு வினாடிகள். 355 00:27:36,323 --> 00:27:38,325 அவர் வருந்துவதாகச் சொன்னார். 356 00:27:40,494 --> 00:27:42,454 அவரால் முடிந்ததை விட வருந்துவதாக... 357 00:27:45,040 --> 00:27:46,416 அவர் சொன்னார்… 358 00:27:47,292 --> 00:27:49,837 அவர் மீண்டும் அழைக்க மிகவும் நீண்ட காலம் ஆகும் என்றார். 359 00:27:52,297 --> 00:27:54,091 அவர் வீட்டிற்கு வர முடியாதாம். 360 00:27:57,219 --> 00:27:59,304 அதற்கு எப்போதும் என்று அர்த்தமா? 361 00:28:02,307 --> 00:28:05,561 பெய்லி, இது வருத்தமளிக்கிறது என்று தெரியும், 362 00:28:05,644 --> 00:28:08,605 ஆனால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி பேச வேண்டும். 363 00:28:10,107 --> 00:28:11,984 அடுத்த கட்ட நடவடிக்கைகளா? அப்படியென்றால்? 364 00:28:12,067 --> 00:28:16,071 நாம் இருவரும் இப்போது எங்கு செல்வது என்பது பற்றி கிரேடி சொல்கிறார். 365 00:28:16,947 --> 00:28:19,116 -நாம் வீட்டிற்குச் செல்வதா அல்லது... -அல்லது 366 00:28:20,033 --> 00:28:21,493 நீங்கள் புதிய வீட்டிற்குச் செல்வதா. 367 00:28:22,953 --> 00:28:25,205 நாங்கள் உங்களைப் பாதுகாக்கக் கூடிய இடத்துக்கு. 368 00:28:25,789 --> 00:28:28,292 அந்த வகையில் உங்கள் அப்பா பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கும் போது உங்களுடன் சேரலாம். 369 00:28:29,418 --> 00:28:31,712 -அவர் வரப்போவதில்லை. -அது உனக்குத் தெரியாது. 370 00:28:33,922 --> 00:28:36,758 பெய்லி, நான் உன் பக்கம் இருக்கிறேன் என்று அவர் சொல்லியிருக்க வேண்டும். 371 00:28:36,842 --> 00:28:38,510 நான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று அவர் சொல்லியிருக்க வேண்டும். 372 00:28:38,594 --> 00:28:43,891 அவர் ஹானா சொல்வதை நான் கேட்க வேண்டும் என்றார். 373 00:28:45,893 --> 00:28:47,895 பார், அவருக்கு அது பற்றிய அறிவு 374 00:28:47,978 --> 00:28:51,481 அல்லது கருவிகள் அல்லது அனுபவம் இல்லை, உன் அப்பாவுக்கும் இல்லை. 375 00:28:51,982 --> 00:28:55,235 அவர் சொன்னதை பொருட்படுத்தாமல், உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க என்னை அனுமதிக்க வேண்டும். 376 00:28:57,613 --> 00:28:58,947 நீங்கள் நினைப்பது போல நடக்காது. 377 00:29:00,199 --> 00:29:02,826 பெய்லி, நீயும் நானும் நன்றாக இருப்போம் என்று நினைக்கிறேன். 378 00:29:05,162 --> 00:29:06,955 நீ விரும்பும் இடத்திற்கு நாம் போகலாம் என்று நினைக்கிறேன். 379 00:29:07,039 --> 00:29:11,001 உனக்கு மிகவும் வசதியாக இருப்பதை நாம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். 380 00:29:11,084 --> 00:29:12,211 ஹானா, கடவுளே, 381 00:29:12,294 --> 00:29:13,962 எனக்கு ஈதனைத் தெரியும், அவர் அதை விரும்பமாட்டார்... 382 00:29:14,046 --> 00:29:15,172 இப்போது என்ன சொன்னீர்கள்? 383 00:29:16,381 --> 00:29:18,467 -எனக்கு உன் அப்பாவை தெரியும் என்றேன்... -இல்லை. 384 00:29:18,550 --> 00:29:21,094 எனக்கு என் அப்பாவை தெரியும், நான் உங்கள் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அவர் விரும்பினால், 385 00:29:21,178 --> 00:29:22,304 அவர் சொல்லியிருப்பார். 386 00:29:28,560 --> 00:29:30,646 -நாம் வீட்டிற்குப் போகலாமா? -பெய்லி. 387 00:29:30,729 --> 00:29:32,397 தயவுசெய்து என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியுமா? 388 00:29:35,651 --> 00:29:36,652 சரி. 389 00:29:46,912 --> 00:29:49,414 ஹேய், இப்போதுதான் விமான நிலையம் வந்தோம். ஹானா கழிவறையில் இருக்கிறார். 390 00:29:49,498 --> 00:29:50,791 அவரிடம் பேச வேண்டுமா? 391 00:29:50,874 --> 00:29:53,544 உன்னிடம் பேசுகிறேன். இன்றிரவு உணவிற்கு நானும் மேக்ஸும் வர வேண்டுமா? 392 00:29:55,671 --> 00:29:57,339 இன்றிரவு வேண்டாம். 393 00:29:57,422 --> 00:30:00,259 சரி, நாளை இரவு வருகிறோம். 394 00:30:00,342 --> 00:30:01,593 பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள், சரியா? 395 00:30:03,136 --> 00:30:04,137 நன்றி. 396 00:30:11,478 --> 00:30:12,563 பெய்லி. 397 00:30:16,191 --> 00:30:17,192 போகலாம். 398 00:30:40,299 --> 00:30:41,633 அவர் எப்படி இருந்தார்? 399 00:30:43,093 --> 00:30:44,219 நிக்கோலஸா? 400 00:30:45,679 --> 00:30:50,267 அவர் புத்திசாலியாகவும் சோகமாகவும் இருந்தார். 401 00:30:53,353 --> 00:30:56,732 அவர் தனது குடும்பத்தை நேசிக்கிறார். அவர் உன்னை நேசிக்கிறார். 402 00:31:01,236 --> 00:31:03,530 அவர் வர விரும்பினாரா? 403 00:31:05,032 --> 00:31:10,621 அவரும் ஆண்ட்ரேயாவும் சார்லியும். உன் மாமாவின் பிள்ளைகளையும் கூட்டி வர விரும்புகிறார்கள். 404 00:31:10,704 --> 00:31:14,082 அவர்கள் உன்னை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆண்ட்ரேயா நினைக்கிறார். 405 00:31:16,543 --> 00:31:18,962 அவர்கள் நம்மோடு தங்க விரும்பமாட்டார்களா? 406 00:31:19,046 --> 00:31:20,839 இல்லை. அப்படி எதுவும் இல்லை. 407 00:31:22,299 --> 00:31:25,177 ஒன்றாக ஓரிரு முறை சாப்பிடுவோம். நாம் அங்கிருந்து தொடங்குவோம். 408 00:31:29,306 --> 00:31:31,892 இதில் ஏதாவது ஒன்றை நான் இப்போது முடிவு செய்ய வேண்டுமா? 409 00:31:33,810 --> 00:31:36,271 நீ இப்போது எதையும் முடிவு செய்ய வேண்டியதில்லை. 410 00:31:56,458 --> 00:31:58,585 -விமானப் பணிப்பெண்களே, தயாராகுங்கள். -நன்றி. 411 00:32:12,641 --> 00:32:16,854 ஒருவேளை நான் தொலைவில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விரும்புகிறேன். 412 00:32:18,021 --> 00:32:20,148 எங்கோ, நானும் நீயும் மட்டும். 413 00:32:34,621 --> 00:32:35,622 உனக்கு எப்படி? 414 00:32:36,874 --> 00:32:37,875 எனக்கு எப்படியா? 415 00:32:40,419 --> 00:32:42,588 ஐந்து வருடங்களில் நாம் எங்கே இருப்போம் என்று நினைக்கிறாய்? 416 00:33:13,952 --> 00:33:19,291 ஐந்து வருடங்களுக்குப் பிறகு 417 00:33:27,216 --> 00:33:31,887 ஹேய், தொலைந்துவிட்டாயா? சரி. இது இரண்டாவது மாடியில் இருக்கிறது. 418 00:33:32,930 --> 00:33:37,643 ஆம். தென்மேற்கு நுழைவாயிலுக்கு அருகில். விமானத்தைத் தேடு. 419 00:33:39,937 --> 00:33:41,688 நீ பிரபலமான ஷெப்புடன் இருக்கிறாயா? 420 00:33:42,981 --> 00:33:46,818 சொல், அவர் கார்டிகன் அணிந்திருக்கிறாரா? இல்லை. நன்றாக நடந்துகொள். 421 00:33:47,319 --> 00:33:48,779 சரி, விரைவில் சந்திப்போம். 422 00:33:52,574 --> 00:33:53,867 ஹானா ஹால் 423 00:34:35,449 --> 00:34:37,202 உன் முன்னாள் காதலர்கள் இன்னும் உன்னை காதலிக்கிறார்கள். 424 00:35:04,313 --> 00:35:05,564 அம்மா? 425 00:36:18,512 --> 00:36:20,514 வசனத் தமிழாக்கம் அருண்குமார்