1 00:01:08,694 --> 00:01:10,112 அது பரவாயில்லை. 2 00:01:11,905 --> 00:01:13,156 ஏன் அது பரவாயில்லை? 3 00:01:13,782 --> 00:01:15,450 இப்போது அவனால் யாரையும் காயப்படுத்த முடியாது. 4 00:01:24,001 --> 00:01:26,461 - ஏன் அவனால் முடியாது என நினைக்கிறாய்... - நான் வீட்டுக்கு போகணும். 5 00:01:26,461 --> 00:01:27,921 எனக்குப் புரிகிறது. ஆனால் நாம் இப்போது இங்கிருக்கிறோம். 6 00:01:32,926 --> 00:01:33,969 இதோ. 7 00:01:34,761 --> 00:01:36,513 நீ இப்போது எப்படி உணர்கிறாய்? 8 00:01:37,139 --> 00:01:38,390 அதை உன்னால் வரைய முடியுமா? 9 00:01:47,191 --> 00:01:49,276 நியூ யார்க் மெட்ஸ் 10 00:02:22,309 --> 00:02:24,311 இப்போது எப்படி உணர்கிறீர்கள்? 11 00:02:25,062 --> 00:02:26,438 உங்களால் அதை வரைய முடியுமா? 12 00:02:28,273 --> 00:02:29,441 இதோ வந்துவிடுகிறேன். 13 00:02:56,510 --> 00:02:58,178 ஹேய், டாக்டர் ஆட்லர். 14 00:02:58,178 --> 00:03:00,013 - ஹாய். - ஹலோ. 15 00:03:00,013 --> 00:03:02,224 நோவா உங்களுடன் இருப்பதாக நர்ஸ் சொன்னார். 16 00:03:02,224 --> 00:03:05,143 - எனவே அவன் படிக்க புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். - சரி. 17 00:03:05,143 --> 00:03:07,855 - அவன் எப்படி இருக்கிறான்? - நன்றாக இருக்கிறான். 18 00:03:08,564 --> 00:03:10,941 புதிய மருந்தின் பக்க விளைவுகள் இன்னும் அவனிடம் காணப்படுகிறது, 19 00:03:10,941 --> 00:03:13,819 ஆனால், நாங்கள் கொஞ்சம் மணல் சிகிச்சை கொடுக்கிறோம், மேலும்... 20 00:03:17,739 --> 00:03:19,283 சற்று பொறுங்கள். 21 00:03:29,585 --> 00:03:30,752 என்ன நடக்கிறது? 22 00:03:32,212 --> 00:03:36,175 ஒன்றுமில்லை. அவன்... நான் அவனைக் கண்டுபிடிப்பேன். அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். 23 00:03:36,175 --> 00:03:37,801 - என்ன? அவன் எங்கே? - எனக்குத் தெரியாது. 24 00:03:37,801 --> 00:03:39,178 ஆனால் நான் அவனைக் கண்டுபிடிப்பேன், கவலைப்படாதீர்கள். 25 00:03:57,196 --> 00:03:59,489 மன்னிக்கவும். நோவா இங்கு வந்தானா? 26 00:04:00,699 --> 00:04:02,367 மன்னிக்கவும், இன்றுதான் இங்கு என் முதல் நாள். 27 00:04:02,367 --> 00:04:05,078 - நோவா என்பது யார்? - இந்தப் படுக்கையில் இருப்பவன். 28 00:04:05,078 --> 00:04:06,747 சரி. நோவா, ஆமாம். 29 00:04:06,747 --> 00:04:08,707 தன் மருத்துவரோடு சிகிச்சையில் இருக்கிறான். 30 00:04:08,707 --> 00:04:10,209 நான்தான் அவனுடைய மருத்துவர். 31 00:04:11,627 --> 00:04:13,212 எனவே, அவன் உங்களுடன் இல்லையா? 32 00:04:14,129 --> 00:04:18,634 ஒரு நோயாளியை நான் கண்டுபிடிக்க உதவும்படி நீங்கள் ஊழியர்களை எச்சரிக்க வேண்டும். 33 00:04:20,969 --> 00:04:22,221 - இப்போதே. - சரி. 34 00:05:03,929 --> 00:05:05,013 நோவா? 35 00:05:05,514 --> 00:05:08,308 நோவா, நான் கதவுகளை மெதுவாக திறக்கப் போகிறேன், சரியா? 36 00:05:11,103 --> 00:05:12,145 ஹேய். 37 00:05:13,647 --> 00:05:15,274 நீ என்னிடமிருந்து மறைந்துவிட்டாய். 38 00:05:17,484 --> 00:05:19,111 சரி. பரவாயில்லை. 39 00:05:19,653 --> 00:05:20,946 நாம் மீண்டும் விளையாட்டு அறைக்குப் போவோம். 40 00:05:22,781 --> 00:05:24,533 வா. பரவாயில்லை. 41 00:05:25,033 --> 00:05:26,076 நாம் திரும்பப் போவோம். 42 00:05:26,577 --> 00:05:27,578 சரி. 43 00:05:28,537 --> 00:05:30,414 சரி. சரி. 44 00:05:31,373 --> 00:05:33,959 நோவா, உன்னிடம் பேனா இருக்கா? 45 00:05:33,959 --> 00:05:35,836 ஆனால், இந்த வார்டில் பேனாக்களுக்கு அனுமதியில்லை. 46 00:05:35,836 --> 00:05:37,296 ஆமாம், சரி. 47 00:05:38,463 --> 00:05:40,382 சரி. பேனாவை என்னிடம் கொடு. 48 00:05:40,924 --> 00:05:42,426 - அது என்னிடம் இல்லை. - நோவா. 49 00:05:44,678 --> 00:05:47,222 - நீங்கள் பயந்திருக்கிறீர்கள். - நான் பயப்படவில்லை. 50 00:05:47,222 --> 00:05:48,765 பொய்யன். 51 00:05:51,935 --> 00:05:53,020 எனக்கு அந்தப் பேனா வேண்டும். 52 00:05:55,063 --> 00:05:56,481 இனி நான் பேச விரும்பவில்லை. 53 00:06:05,949 --> 00:06:08,202 இது எல்லாம் என்னவென்று என்னிடம் சொல்ல விரும்புகிறீர்களா? 54 00:06:08,202 --> 00:06:11,288 சரி. நோவா ஒரு பண்ணை வீட்டை வரைந்துகொண்டிருக்கிறான். 55 00:06:12,039 --> 00:06:16,335 லின்னின் அலுவலகத்தில் நான் பார்த்த புகைப்படத்தில் இருந்தது போலவே. 56 00:06:16,335 --> 00:06:19,421 “என்றாவது ஒருநாள் இரவில் அவளை இவன் பின்தொடர்ந்திருப்பானோ? 57 00:06:19,421 --> 00:06:22,424 அவர்களுக்குள் பரிச்சயம் உண்டா? அவர்களுக்குள் ஏதாவதொரு உறவு இருந்ததா? 58 00:06:22,424 --> 00:06:24,968 அப்படி இருந்திருந்தால், அவள் ஏன் அதை என்னிடம் மறைக்க வேண்டும்? 59 00:06:24,968 --> 00:06:26,845 வேறு என்னவெல்லாம் அவள் என்னிடம் சொல்லவில்லை?” என்றெல்லாம் தோன்றுகிறது. 60 00:06:26,845 --> 00:06:27,930 சரி. 61 00:06:27,930 --> 00:06:30,891 ஆனால், அதற்கும் இவனுடைய நோயறிதலுக்கும் என்ன தொடர்பு? 62 00:06:52,037 --> 00:06:53,038 ஓய். 63 00:06:55,040 --> 00:06:57,501 - இதோ, இதைக் குடியுங்க. - நன்றி. 64 00:07:02,798 --> 00:07:04,049 நான் சரியாக தூங்குவதில்லை. 65 00:07:06,385 --> 00:07:07,553 தூக்கமின்மை. 66 00:07:08,303 --> 00:07:10,013 அது உங்கள் மூளையைப் பாதிக்கலாம். 67 00:07:10,848 --> 00:07:14,685 தற்கொலை முயற்சியாக அவன் ஒரு கிளாஸ் தண்ணீரை மூக்கால் உள்ளிழுத்திருக்கிறான், 68 00:07:14,685 --> 00:07:16,395 இப்போது பூட்டப்பட்ட வார்டில் இருக்கிறான். 69 00:07:16,395 --> 00:07:17,688 அது சாத்தியமே இல்லை. 70 00:07:17,688 --> 00:07:19,940 ஆமாம், ஆனால் அவன் நுரையீரல் முழுவதும் தண்ணீர் இருந்தது. 71 00:07:20,440 --> 00:07:21,650 என்னால் அதை விளக்க முடியாது. 72 00:07:23,277 --> 00:07:26,738 சரி, அவன் இதற்கு முன் இருந்த வளர்ப்புக் குடும்பங்களைப் பற்றி ஆராய்ந்தேன். 73 00:07:27,447 --> 00:07:29,533 பண்ணை வீடுமில்லை, டச்சு மொழியும் இல்லை. 74 00:07:32,327 --> 00:07:36,123 - முன்கூட்டிய கைவிடுதல், குழந்தைப்பருவ நிகழ்வு? - கிரிப்டோம்னீசியாவாக இருக்கலாமா? 75 00:07:36,123 --> 00:07:39,960 பண்ணைக்குச் சென்றது, மற்றும் டிவி நிகழ்ச்சி மூலம் டச்சு மொழியை கேட்டிருப்பது போன்ற 76 00:07:39,960 --> 00:07:41,587 உள்ளடக்கமான நினைவு. 77 00:07:43,297 --> 00:07:46,967 அவனைப் பெற்றவர்களிடமிருந்து எனக்கு தகவல் வேண்டும். ஆனால் சட்டப்பூர்வமாக அவன் கைவிடப்பட்ட குழந்தை. 78 00:07:46,967 --> 00:07:49,344 அவன் செயின்ட் மேத்யூஸில் கைவிடப்பட்டான் என்பது மட்டும்தான் எனக்குத் தெரியும். 79 00:07:56,768 --> 00:07:58,270 அந்த நீச்சல் அடிக்கும் பெண் யார்? 80 00:08:05,194 --> 00:08:07,070 - அவள் நீச்சல் அடிக்கிறாள் என நினைக்கிறாயா? - ஆமாம். 81 00:08:10,032 --> 00:08:11,575 எனக்குத் தெரியலை. நான் என்ன நினைத்தேன் என்றால்... 82 00:08:13,035 --> 00:08:14,119 மூழ்குகிறாள் என நினைத்தேன். 83 00:08:17,664 --> 00:08:20,000 டாக்டர் ஆட்லர், உங்கள் இடத்தில் தண்ணீர் சொட்டுகிறது என நினைக்கிறேன். 84 00:08:27,424 --> 00:08:28,675 பள்ளிக்கு பயந்த சிறுவன் 85 00:08:28,675 --> 00:08:29,593 {\an8}எழுதியவர் லின் ஹாஃப்மேன் 86 00:08:29,593 --> 00:08:31,261 இதன் மேலே என்ன இருக்கு? 87 00:08:33,013 --> 00:08:34,181 ஹாலின் குளியலறை. 88 00:09:38,871 --> 00:09:40,038 அவர்கள் வருகிறார்கள். 89 00:10:09,359 --> 00:10:13,030 இல்லை, வேண்டாம், என்னை விட்டு தள்ளிப் போங்கள்! வேண்டாம்! 90 00:10:21,455 --> 00:10:23,582 விரைவாக வெப்பநிலையை சோதனை செய்கிறேன், செல்லமே. 91 00:10:48,148 --> 00:10:49,316 ட-டா! 92 00:10:51,860 --> 00:10:53,153 என்ன செய்திருக்கிறேன் என்று பாரேன். 93 00:10:53,153 --> 00:10:54,321 நான் இதை சரிசெய்துவிட்டேனே. 94 00:11:02,996 --> 00:11:04,414 இது என்னது... 95 00:11:08,627 --> 00:11:10,587 ஐயோ, கடவுளே. 96 00:12:05,726 --> 00:12:07,144 அப்பா? 97 00:12:10,480 --> 00:12:11,690 இங்கே இருக்கிறேன். 98 00:12:16,528 --> 00:12:18,363 - ஹாய். - ஹேய், அப்பா. 99 00:12:18,363 --> 00:12:19,489 என்ன செய்கிறீர்கள்? 100 00:12:19,489 --> 00:12:21,533 - ஏன் தரை ஈரமா இருக்கு? - ஓ, அன்பே. 101 00:12:21,533 --> 00:12:23,076 “பிளம்பிங் பிரச்சினைகள்” என்ற வார்த்தையைவிட, 102 00:12:23,076 --> 00:12:24,828 வாங்குபவர்களின் நெஞ்சில் பயத்தைக் கொடுப்பது வேறெதுவுமில்லை. 103 00:12:24,828 --> 00:12:26,038 நான் அதை சரிசெய்து விட்டேன். 104 00:12:26,038 --> 00:12:27,873 எனவே, கவலை வேண்டாம். 105 00:12:27,873 --> 00:12:30,375 அப்பாடா. இவரால் செய்ய முடியாதது ஏதாவது இருக்கா, என்ன? 106 00:12:31,793 --> 00:12:33,712 ஆமாம், அவர் ஆல் இன் ஆல் ஆழகு ராஜா. 107 00:12:48,769 --> 00:12:50,354 அதை எடுத்து பேசப் போவதில்லையா? 108 00:12:50,896 --> 00:12:51,980 அப்பா! 109 00:12:51,980 --> 00:12:53,732 அது உங்க ஃபோன்தானே? 110 00:12:58,070 --> 00:12:59,071 ஆமாம். 111 00:13:02,157 --> 00:13:03,408 - நான் போய் பேசுகிறேன். - சரி. 112 00:13:03,408 --> 00:13:04,743 சரி, போ, போ, போ. 113 00:13:09,414 --> 00:13:10,499 ஹலோ. 114 00:13:10,499 --> 00:13:12,835 இன்றிரவு நீ என் வீட்டிற்கு வருவாயா? 115 00:13:13,585 --> 00:13:15,796 - மன்னிக்கவும், யார் பேசுவது? - நான்தான் ஜாக்சன். 116 00:13:15,796 --> 00:13:17,464 யார் பேசுவதாக நினைக்கிறாய்? 117 00:13:17,464 --> 00:13:19,925 கேளு, இன்றிரவு நிறைய கூட்டம் வரும். 118 00:13:19,925 --> 00:13:21,593 நீ வர மாட்டாய் என்று தோன்றுகிறது, 119 00:13:21,593 --> 00:13:23,303 - ஆனால், கொஞ்சம் ஜாஸ் இசை... - ஒன்று சொல்லவா? 120 00:13:23,303 --> 00:13:25,681 - என்னால் இப்போது பேச முடியாது. - இல்லை, நான் சொல்லும் இந்த ஜாஸ்... 121 00:13:25,681 --> 00:13:26,765 - சரி, பை. - அட்டகாசமாக இருக்கும், செல்லம். 122 00:13:27,349 --> 00:13:29,518 எதுவும் முக்கியமான விஷயம் இல்லை. 123 00:13:30,018 --> 00:13:31,186 சரி. 124 00:13:31,979 --> 00:13:34,606 சரி, உங்கள் இருவருக்காகவும் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? 125 00:13:36,316 --> 00:13:39,361 நாங்கள் வீட்டை சீர்செய்யும்போது, நீங்கள் சோஃபியோடு நேரம் கழிக்க வேண்டும் என்பதை 126 00:13:39,361 --> 00:13:41,071 நீங்கள் மறக்கவில்லைதானே, அப்பா? 127 00:13:41,613 --> 00:13:44,324 கண்டிப்பாக இல்லை. அப்படிப்பட்ட ஒன்றை நான் எப்படி மறப்பேன்? 128 00:13:44,324 --> 00:13:46,285 இன்று தாத்தா தினம். 129 00:13:46,285 --> 00:13:47,369 சரிதானே, சோஃபி? 130 00:13:48,287 --> 00:13:50,622 இன்று தாத்தா மற்றும் சோஃபி தினம். 131 00:13:50,622 --> 00:13:52,958 இவள் அதிபுத்திசாலிதானே? 132 00:13:56,670 --> 00:13:57,629 நாம் போகலாமா? 133 00:13:58,130 --> 00:14:00,090 சரி. வா போகலாம். 134 00:14:00,966 --> 00:14:02,092 ஜாலியாக இருக்கப் போகிறது. 135 00:14:07,181 --> 00:14:08,807 இதில் என்ன ஜாலி என்று எனக்குப் புரியவில்லை. 136 00:14:08,807 --> 00:14:10,475 இந்த இடமே பயமாக இருக்கு. 137 00:14:12,394 --> 00:14:13,562 ஆமாம், அப்படித்தான் இருக்கு. 138 00:14:13,562 --> 00:14:15,439 கொஞ்சம் பயமாக இருக்கு. 139 00:14:15,439 --> 00:14:16,982 நான் ஒருவரை பார்க்க வேண்டும். 140 00:14:27,701 --> 00:14:30,454 பாட்டி குளியல் தொட்டியை அடைத்திருப்பதால் உங்களுக்கு அவங்க மீது கோபமா? 141 00:14:31,079 --> 00:14:32,122 என்ன? 142 00:14:32,748 --> 00:14:34,416 ஏன்னா அவங்க அதில்தான் மூழ்கினாங்க. 143 00:14:36,793 --> 00:14:38,837 இல்லை. பாட்டி எந்த குளியல் தொட்டியையும் அடைத்திருக்கவில்லை. 144 00:14:39,713 --> 00:14:40,797 அவள் இறந்துவிட்டாள். 145 00:14:41,465 --> 00:14:42,633 இல்லை, அவங்க இறக்கவில்லை. 146 00:14:42,633 --> 00:14:44,426 என் பல்லி பொம்மைக்குள் இருக்காங்க. 147 00:14:50,974 --> 00:14:52,851 பாட்டி என்னிடம் ஒரு ரகசியம் சொல்ல விரும்புறாங்க. 148 00:14:59,942 --> 00:15:01,610 நீங்கள் பாவ மன்னிப்பு கேட்க வேண்டுமா? 149 00:15:03,153 --> 00:15:04,238 பாவ மன்னிப்பா? 150 00:15:05,072 --> 00:15:05,906 இல்லை. 151 00:15:05,906 --> 00:15:08,283 நான்... ஃபாதர் டென்னிஸைப் பார்க்க வந்திருக்கிறேன். 152 00:15:10,202 --> 00:15:11,411 அவன் என் நோயாளி. 153 00:15:11,411 --> 00:15:13,914 அவனுடைய குடும்பம் பற்றி சில தகவல்கள் பெற முயற்சிக்கிறேன். 154 00:15:13,914 --> 00:15:16,625 அவன் சட்டப்பூர்வமாக கைவிடப்பட்ட குழந்தை, எட்டு வருடங்கள் முன்னால் இங்கு விடப்பட்டான். 155 00:15:16,625 --> 00:15:19,670 எனக்கு நினைவிருக்கு. 20 வருடங்களில் இந்தச் சர்ச்சில் விடப்பட்ட ஒரே குழந்தை. 156 00:15:19,670 --> 00:15:22,214 - எனில், நீங்கள் இங்கே இருந்தீர்களா? - இருந்தேன். 157 00:15:23,298 --> 00:15:26,009 அவன் உங்கள் நோயாளி என்றீர்கள். அவனுக்கு என்ன ஆச்சு? 158 00:15:27,386 --> 00:15:29,888 தெரியவில்லை. அதைத்தான் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன். 159 00:15:30,931 --> 00:15:34,768 அவர்களுக்கு பெற்றோராக இருக்க தகுதி இல்லை என்றுதான் நான் சொல்வேன். 160 00:15:35,686 --> 00:15:36,937 உங்களுக்கு அவர்களைத் தெரியுமா? 161 00:15:36,937 --> 00:15:38,021 தெரியாது. 162 00:15:38,772 --> 00:15:41,400 வேறு எதற்காக அவர்கள் ஒரு குழந்தையை கைவிட வேண்டும்? 163 00:15:42,192 --> 00:15:46,071 சில சமயம் கடவுளின் திட்டத்தைப் புரிந்துகொள்வது கடினம். 164 00:15:47,656 --> 00:15:49,366 சரி, உங்களுக்கு என்ன கவலை? 165 00:15:50,617 --> 00:15:53,912 உங்கள் இதயம் கனமாக இருப்பதை என்னால் உணர முடிகிறது. 166 00:15:56,206 --> 00:15:58,709 - என் பாட்டி இறந்துட்டாங்க. - சோஃபி. 167 00:16:05,007 --> 00:16:06,008 சரி. 168 00:16:07,593 --> 00:16:10,888 - என் மனைவி இறந்துவிட்டாள். - உங்கள் இழப்பிற்காக வருந்துகிறேன். 169 00:16:10,888 --> 00:16:12,347 பரவாயில்லை. அவங்க என் பல்லி பொம்மைக்குள்தான் இருக்காங்க. 170 00:16:12,347 --> 00:16:14,892 சோஃபி, அவள் உன் பல்லி பொம்மைக்குள் இல்லை. 171 00:16:14,892 --> 00:16:17,769 இதைப் பற்றி நாம் ஏற்கனவே பேசிவிட்டோம். ஒருவர் இறந்த பிறகு, அவர்கள் போய்விடுவார்கள். 172 00:16:17,769 --> 00:16:19,688 அவர்கள் நிரந்தரமாக மறைந்து போய், திரும்பி வரவே மாட்டார்கள். 173 00:16:19,688 --> 00:16:21,148 ஒரு பல்லி பொம்மையில் கூட வர மாட்டாங்க. 174 00:16:21,148 --> 00:16:22,232 உங்களுக்கு அது தெரியாது. 175 00:16:22,232 --> 00:16:25,110 துக்கத்தை அணுசரிக்க நாம் பலரும் பல வழிகளைக் கையாள்வோம். 176 00:16:25,110 --> 00:16:27,029 அதை என் திருச்சபையில் நான் எப்போதும் பார்ப்பேன். 177 00:16:27,613 --> 00:16:30,032 நம் இருவரின் வேலையும் ஒரே மாதிரிதான். 178 00:16:30,032 --> 00:16:32,284 அப்படியா? நமக்கு வெவ்வேறு அலுவலகங்கள் இருக்கின்றன, அல்லவா? 179 00:16:32,284 --> 00:16:33,827 - இந்த இடத்தைப் பாருங்கள். - நாம் இருவரும் மக்களுக்கு உதவுகிறோம். 180 00:16:33,827 --> 00:16:35,746 ஆனால், நான் மக்களுக்கு அறிவியல், மருந்தின் மூலம் உதவுகிறேன்... 181 00:16:35,746 --> 00:16:37,998 கொஞ்சம் நம்பிக்கையையும் சேர்க்கலாம். 182 00:16:37,998 --> 00:16:41,376 நம்பிக்கைதான் எல்லாம் என்பதை மனநல மருத்துவர் தெரிந்திருப்பார். 183 00:16:41,376 --> 00:16:43,712 நான் எதை நம்புகிறேன் தெரியுமா? உண்மைகளை நம்புகிறேன். 184 00:16:44,254 --> 00:16:47,508 உண்மையை மக்கள் எதிர்கொள்ளாமல் இருப்பதற்காகச் சொல்லப்பட்ட கற்பனைக் கதைகளை நீங்கள் நம்புகிறீர்கள். 185 00:16:47,508 --> 00:16:49,176 உண்மை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? 186 00:16:49,176 --> 00:16:52,221 நம்மை கவனித்துக்கொள்ளும்படி, வானத்தில் எந்த அதிசயமும் இல்லை. 187 00:16:52,221 --> 00:16:54,848 அவன் பழிவாங்கத் துடிக்கும் மோசமானவன், அது உங்களுக்கே தெரியும். 188 00:16:57,726 --> 00:16:59,102 நமக்கு நாமேதான் துணை, நண்பா. 189 00:17:01,063 --> 00:17:02,064 சோஃபி, வா. நாம் போகலாம். 190 00:17:23,544 --> 00:17:26,922 ஹேய். இது சொட்டுகிறது. உனக்கு வேண்டாமா? 191 00:17:53,574 --> 00:17:55,617 - பார்ப்? - சொல்லுங்கள். 192 00:17:55,617 --> 00:17:58,370 ஹேய், தாத்தா தினம் எப்படி போனது? 193 00:17:58,370 --> 00:18:00,247 ரொம்பவே ஜாலியாக இருந்தது என்று நினைத்தேன். 194 00:18:10,757 --> 00:18:13,844 மன்னிக்கவும். அந்தப் பல்லி விஷயத்தில் அவள் ரொம்பவே விசித்திரமாக நடக்கிறாள். 195 00:18:13,844 --> 00:18:15,512 ஆமாம், அதைப் பற்றித்தான் உன்னிடம் பேச விரும்பினேன். 196 00:18:15,512 --> 00:18:17,598 “பாட்டி பல்லியில் இருக்கிறாள்” என்பதைப் பற்றியா? 197 00:18:17,598 --> 00:18:20,225 அது துக்கத்தை அணுசரிக்கும் ஒரு விதம்தான், சரியா? 198 00:18:20,225 --> 00:18:22,060 இல்லை. நான் உன்னிடம் பேச நினைத்தது அதைப் பற்றி இல்லை. 199 00:18:23,562 --> 00:18:25,564 உன் அம்மா மூழ்கி இறந்தாள் என்று ஏன் அவளிடம் சொன்ன? 200 00:18:25,564 --> 00:18:27,816 - என்ன, என்ன? - ஏன்? ஏன் அப்படி சொன்ன? 201 00:18:27,816 --> 00:18:29,526 “எப்போதும் பாட்டி உன்னை சுற்றிதான் இருக்கிறாள், 202 00:18:29,526 --> 00:18:32,654 உன்னைப் பார்த்துகொள்கிறாள்” என்று முன்பெல்லாம் சொல்லிவிட்டு, திடீரென்று ஏன் இப்படி? 203 00:18:32,654 --> 00:18:35,115 அம்மா மூழ்கி இறந்தது பற்றி நான் அவளிடம் எதுவும் சொல்லவில்லை, அப்பா. 204 00:18:36,283 --> 00:18:37,868 அடச்சே. 205 00:18:38,535 --> 00:18:41,455 நான் ஃபோனில் பேசியதை அவள் ஒட்டுக் கேட்டிருக்கலாம். 206 00:18:41,455 --> 00:18:43,916 - அதைப் பற்றி பேசியதையா? யாரிடம்? - தெரியலை, நண்பரிடமாக இருக்கலாம். 207 00:18:43,916 --> 00:18:45,501 ஏன் எல்லோரும் அதைப் பற்றி பேசுறீங்க? 208 00:18:45,501 --> 00:18:48,003 அதைப் பற்றி பேச என்ன இருக்கு? நீ என்ன செய்கிறாய்? 209 00:18:48,587 --> 00:18:50,547 - என்ன செய்கிறாய்? - வேண்டாததை நீக்குகிறேன். 210 00:18:50,547 --> 00:18:52,674 - நாம் வேண்டாததை நீக்கணும் என்று சூ ஆன் சொன்னாள். - இல்லை. அகற்றுவது. 211 00:18:52,674 --> 00:18:55,219 இது உன் அம்மாவின் தனிப்பட்ட பொருட்கள் மற்றும் மருந்துகள். 212 00:18:55,219 --> 00:18:56,929 அம்மாவுக்கு இனிமேல் எந்த தனிப்பட்ட பொருட்களும் கிடையாது, அப்பா. 213 00:18:56,929 --> 00:18:58,013 அதை விட்டுவிடு! 214 00:19:02,100 --> 00:19:03,519 உங்களுக்கு என்னதான் பிரச்சினை? 215 00:19:04,728 --> 00:19:06,146 எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. 216 00:19:06,897 --> 00:19:08,982 என் தனிப்பட்ட இடம் பறிக்கப்படும்போது, அதற்கு ஏற்றவாறு 217 00:19:09,483 --> 00:19:11,944 எதிர்வினையாற்றுகிறேன் அவ்வளவுதான், சரியா? 218 00:19:13,654 --> 00:19:14,780 தெரியுமா, அப்பா, 219 00:19:16,240 --> 00:19:18,408 அம்மாவுக்கு நடந்தது உங்களை மட்டும் பாதிக்கவில்லை. 220 00:19:20,369 --> 00:19:21,537 என்னையும்தான் பாதித்தது. 221 00:19:28,710 --> 00:19:29,711 பார்ப். 222 00:19:30,212 --> 00:19:32,756 ஹேய், ஹேய், பார்ப். 223 00:19:33,882 --> 00:19:34,716 செல்லமே. 224 00:19:35,676 --> 00:19:38,387 ஹேய், என்னை மன்னித்துவிடு. 225 00:19:38,387 --> 00:19:39,513 சரியா? 226 00:19:39,513 --> 00:19:40,848 பரவாயில்லை. ஒன்றும் பிரச்சினையில்லை. 227 00:19:40,848 --> 00:19:44,309 இல்லை, கேளு, நான் இதைச் செய்கிறேன். 228 00:19:45,519 --> 00:19:46,895 நானே தேவையில்லாததை அகற்றுகிறேன். 229 00:19:48,730 --> 00:19:50,315 நீ சோஃபியை வீட்டுக்கு கூட்டிட்டுப் போ, சரியா? 230 00:19:50,315 --> 00:19:51,525 நான் இதைச் செய்து முடிக்கிறேன். 231 00:19:52,276 --> 00:19:53,485 நிச்சயமாகவா? 232 00:19:56,613 --> 00:19:58,574 சரி, நன்றி. 233 00:19:59,533 --> 00:20:01,702 ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னைக் கூப்பிடுங்கள். 234 00:20:02,202 --> 00:20:03,412 வா, சோஃப். 235 00:20:06,665 --> 00:20:08,500 பை, சோஃபி. அது ஜாலியாக இருந்தது. 236 00:20:12,713 --> 00:20:13,672 ஹே, சோஃப். 237 00:20:14,256 --> 00:20:15,424 சோஃபி, என்னிடம்... 238 00:20:30,772 --> 00:20:34,276 “உணவு ஷாப்பிங்: பால், வாழைப்பழங்கள். மருந்தகத்திற்கு போய்...” 239 00:20:38,280 --> 00:20:40,240 “ஜாக்சனுக்கு ஓவியங்களை அனுப்பு”? 240 00:20:55,964 --> 00:20:57,674 ஜாக்சன் - ஓவியத்தை இணைத்திருக்கிறேன் 241 00:21:01,678 --> 00:21:04,306 “ஈலையிடம் சொல்லாதே, அவர் தாங்க மாட்டார், சொல்வதைக் கேட்கவும் மாட்டார்.” 242 00:21:04,306 --> 00:21:05,724 உனக்கே அவரைப் பற்றித் தெரியும், அவர் ரொம்பவே தர்க்கவாதி... 243 00:21:05,724 --> 00:21:07,768 உண்மையில், நான் இதைப் பற்றி பேசக்கூடிய 244 00:21:07,768 --> 00:21:09,186 ஒரே நபர் நீதான் என்று உணருகிறேன்... 245 00:21:12,731 --> 00:21:13,899 என்னது இது... 246 00:21:19,780 --> 00:21:23,075 இங்கே பாரேன். நீ வந்துவிட்டாயே. 247 00:21:23,075 --> 00:21:25,827 - நான் உன்னுடன் பேச வேண்டும். - இங்கு ஓடியே வந்தாயா? 248 00:21:25,827 --> 00:21:27,913 உனக்கு வியர்த்திருக்கு. உனக்கு குடிக்க ஏதாவது கொண்டு வரேன். 249 00:21:27,913 --> 00:21:29,957 எனக்கு குடிக்க எதுவும் வேண்டாம், லின்னைப் பற்றி உன்னிடம் பேச வேண்டும். 250 00:21:29,957 --> 00:21:32,334 உன் கருவிழிகள் விசித்திரமாக இருக்கு. 251 00:21:32,334 --> 00:21:34,920 சமீப காலமாக எல்லாமே எனக்கு விசித்திரமாகத்தான் இருக்கு. இப்போது நான் சொல்வதைக் கேளு. 252 00:21:34,920 --> 00:21:37,256 லின் இல்லாமல் இருப்பது சற்று விசித்திரமாக இருக்குமென புரிகிறது. 253 00:21:37,256 --> 00:21:38,507 இது அதைப் பற்றி கிடையாது. 254 00:21:38,507 --> 00:21:40,843 அவளுடைய பொருட்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்... நான் சொல்வதைக் கேளு, சரியா... 255 00:21:40,843 --> 00:21:42,636 - உனக்காக ஏங்கினேன், ஈலை. - நிறுத்து. 256 00:21:42,636 --> 00:21:44,012 - இதைக் குடி. - எனக்கு வேண்டாம்... 257 00:21:44,012 --> 00:21:46,765 இந்த இசையைக் கேளு, என்னுடன் வா. 258 00:21:48,016 --> 00:21:52,980 என் முதுகலை மாணவர்களில் ஒருவர் இந்த இறால் சுருளைச் சமைத்தார். 259 00:21:52,980 --> 00:21:54,273 சாப்பிட்டுப் பாரு. 260 00:21:54,273 --> 00:21:56,692 - பார், நான் சிலருடன் பேச வேண்டும். - நான்... 261 00:21:56,692 --> 00:21:59,319 நீ இங்கேயே இரு. நான் உடனே வந்துவடுகிறேன். 262 00:22:34,021 --> 00:22:36,190 சிறுவர் பிரிவு 263 00:23:24,196 --> 00:23:25,072 எனக்கு அது வேண்டும். 264 00:23:31,578 --> 00:23:35,207 மனவுலைச்சல், தொடர்பின்றி இருத்தல் பற்றி கட்டுரையில் வந்த உங்கள் கோட்பாடு எனக்குப் பிடிச்சிருக்கு. 265 00:23:37,042 --> 00:23:39,419 இந்த மாதிரி விஷயங்களெல்லாம் உங்களுக்கு சுத்தமாகப் பிடிக்காது, அல்லவா? 266 00:23:40,254 --> 00:23:44,967 உங்களை இப்போதே எச்சரிக்கிறேன், நீங்கள் என்னுடன் நடனமாடும் வரை நாம் கிளம்பப் போவதில்லை. 267 00:23:45,843 --> 00:23:48,387 இந்தப் புதிய ஆய்வைப் பற்றி உங்களிடம் கேட்கவிருந்தேன்... 268 00:23:52,099 --> 00:23:53,183 இதோ வந்துவிடுகிறேன். 269 00:23:54,017 --> 00:23:55,936 ஹே, நாம் நிச்சயம் பேசியாக வேண்டும். 270 00:23:55,936 --> 00:23:58,897 - கொஞ்சம் அவகாசம் கொடு. - முடியாது, இப்போதே பேசணும். 271 00:24:01,525 --> 00:24:02,693 அதை என்னிடம் கொடு. 272 00:24:02,693 --> 00:24:03,902 முடியாது. 273 00:24:06,572 --> 00:24:08,782 குழந்தைகளே, இது தூங்குவதற்கான நேரம். 274 00:24:10,951 --> 00:24:11,952 நோவா... 275 00:24:13,662 --> 00:24:15,205 உன் கையில் ஏதாவது வைத்திருக்கிறாயா? 276 00:24:19,042 --> 00:24:20,002 நோவா? 277 00:24:21,920 --> 00:24:23,338 உன் கையில் என்ன இருக்கு? 278 00:24:23,839 --> 00:24:24,756 நோவா! 279 00:24:27,217 --> 00:24:28,594 நோவா... 280 00:24:30,095 --> 00:24:31,638 உன் கையில் என்ன இருக்கு என நான் பார்க்கணும். 281 00:24:33,515 --> 00:24:36,643 அன்பே, உன் கையில் இருப்பதை என்னிடம் கொடு... 282 00:24:38,353 --> 00:24:39,396 இப்போதே கொடு. 283 00:24:54,077 --> 00:24:55,996 ஏன் இவ்வளவு கவலைப்படுகிறாய் என்று எனக்குப் புரியவில்லை. 284 00:24:55,996 --> 00:24:58,248 லின்னும் நானும் நண்பர்களாக இருந்தோம். 285 00:24:58,248 --> 00:24:59,541 நாங்கள் மின்னஞ்சல் மூலம் எப்போதும் தொடர்பில் இருந்தோம். 286 00:24:59,541 --> 00:25:02,920 அது சரி, ஆனால் “ஈலைக்குப் புரியாது” என்பதெல்லாம் என்ன? 287 00:25:02,920 --> 00:25:04,963 அவள் அந்த ஓவியங்கள் பற்றி என்ன சொன்னாள்? 288 00:25:04,963 --> 00:25:07,341 மூன்று நண்பர்களைப் பற்றி அவள் ஒரு புது புத்தகம் எழுதிக்கொண்டிருந்தாள். 289 00:25:07,341 --> 00:25:08,759 எனக்கு ஒரு ஓவியத்தை அனுப்பினாள். 290 00:25:08,759 --> 00:25:10,928 அவள் மனதை மிகவும் பாதித்த விஷயம் அது. 291 00:25:10,928 --> 00:25:13,931 - எதைப் பற்றியது? - இறப்பைப் பற்றியது, ஈலை. 292 00:25:15,057 --> 00:25:18,602 அவள் தன் இறப்பை எதிர்கொண்டு இருந்தாள், நீயோ அவள் அடுத்தகட்ட மருந்துகளை 293 00:25:18,602 --> 00:25:20,646 சாப்பிட்டு குணமாகிவிடுவாள் என்று மட்டும்தான் நினைத்தாய். 294 00:25:20,646 --> 00:25:22,523 ஆமாம், ஏனென்றால் நான் அவளுக்கு உதவ முயற்சித்தேன். 295 00:25:22,523 --> 00:25:24,858 புரிகிறது, ஆனால் அவளே அதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தாள். 296 00:25:28,529 --> 00:25:30,948 சில விஷயங்களைப் பற்றி உனக்குப் புரியாது என்று அவள் நினைத்தாள், 297 00:25:30,948 --> 00:25:34,743 ஏனென்றால் அவற்றை நீ அறிவியல் ரீதியாக விளக்க நினைப்பாய், 298 00:25:34,743 --> 00:25:37,871 அவை அறிவியலுக்கும் அப்பாற்பட்டது என்று அவள் நினைத்தாள். 299 00:25:47,631 --> 00:25:50,008 இதில் அர்த்தமே இல்லை. இதில் எந்த அர்த்தமுமே இல்லை. 300 00:25:50,008 --> 00:25:52,594 எந்த விஷயங்கள்? எப்படிப்பட்ட விஷயங்கள்? 301 00:25:52,594 --> 00:25:55,472 அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் என்று எதுவுமே இல்லை. 302 00:26:24,585 --> 00:26:26,420 - நோவா. ஒன்றும் பிரச்சினையில்லை. - ஒன்றும் பிரச்சினையில்லையே? 303 00:26:27,421 --> 00:26:28,672 அவன் என்னிடம் கொடுத்துவிடுவான். 304 00:26:29,423 --> 00:26:30,424 அப்படித்தானே, நோவா? 305 00:26:32,259 --> 00:26:33,302 பயப்படாதே, நண்பா. 306 00:26:37,431 --> 00:26:41,685 நோவா. இப்படி நடப்பததற்கு மன்னித்துவிடு, கண்ணா, ஆனால் நான் அதைப் பார்த்தாகணும்... 307 00:27:05,250 --> 00:27:09,046 ஈலை. 308 00:27:41,537 --> 00:27:43,038 உதவி, அவள் திணறுகிறாள். 309 00:27:45,707 --> 00:27:46,792 911 அழையுங்கள். 310 00:27:47,292 --> 00:27:49,419 ஒவ்வாமையால் தாக்கப்பட்டு இருக்கிறாள். 311 00:27:49,419 --> 00:27:51,755 யாரிடமாவது எபிபென் இருக்கா? எபிபென்? யாரிடமாவது? 312 00:27:53,298 --> 00:27:55,884 சரி, பரவாயில்லை. நான் பார்த்துக்கொள்கிறேன். 313 00:27:55,884 --> 00:27:57,177 யாரோ வருகிறார்கள். 314 00:27:57,177 --> 00:27:59,137 அதை விட்டுவிடுங்கள். 315 00:28:00,138 --> 00:28:01,139 வந்துவிடு. 316 00:28:02,933 --> 00:28:05,352 இதோ வந்துவிட்டது. 317 00:28:12,484 --> 00:28:15,571 ஐயோ. இவள் சுவாசிக்கவில்லை. இவள்... 318 00:28:17,447 --> 00:28:19,491 இது மதுவா? சீக்கிரம் கொடுங்கள்! 319 00:28:24,705 --> 00:28:27,499 சரி, எனக்கு ஒரு பால்பாயிண்ட் பேனா வேண்டும். 320 00:28:28,542 --> 00:28:30,335 யாரிடமாவது பால்பாயிண்ட் பேனா இருக்க? 321 00:28:30,335 --> 00:28:31,461 உன்னிடம் இருக்கா? 322 00:28:31,461 --> 00:28:33,088 ஒரு சாதா பேனா? 323 00:28:33,589 --> 00:28:34,965 யாரிடமாவது பேனா இருக்கா? 324 00:28:35,674 --> 00:28:36,967 அவருக்குப் பேனா தேவை. 325 00:28:41,513 --> 00:28:42,931 மெட்ஸ் 326 00:28:56,612 --> 00:28:57,738 இதோ. 327 00:28:59,072 --> 00:29:00,073 ஆம். 328 00:29:01,158 --> 00:29:02,159 அப்படித்தான். 329 00:29:03,744 --> 00:29:04,745 இதோ முடிந்தது. 330 00:29:06,038 --> 00:29:07,164 நல்லபடியாக முடிந்தது. 331 00:29:18,592 --> 00:29:20,886 சரி, பார்ட்டி தந்திரங்கள் பொறுத்தவரை, 332 00:29:21,678 --> 00:29:24,306 இது கொஞ்சம் அதிகபட்சம்தான். 333 00:29:25,933 --> 00:29:26,934 விளையாட்டுக்குச் சொன்னேன். 334 00:29:27,559 --> 00:29:29,770 நல்லவேளை நீ இங்கே இருந்தாய். 335 00:29:31,438 --> 00:29:32,606 அவள் குணமாகிவிடுவாள், அல்லவா? 336 00:29:33,148 --> 00:29:34,483 ஆமாம். 337 00:29:36,318 --> 00:29:38,028 அப்புறம் அந்த மின்னஞ்சல் விஷயம். 338 00:29:40,030 --> 00:29:41,031 என்னை மன்னித்துவிடு. 339 00:29:42,866 --> 00:29:45,035 - நான் உன்னிடம் சொல்லியிருக்கணும். - ஆமாம், நீ சொல்லியிருக்கணும். 340 00:29:46,453 --> 00:29:50,832 உண்மையில், புத்தகத்தின் கடைசி பகுதியை எழுதுவதில் அவள் சற்று சிரமப்பட்டாள், 341 00:29:51,667 --> 00:29:53,961 ஆனால் அது அவள் கனவுகளில் வந்தது. 342 00:29:53,961 --> 00:29:59,842 வந்து, அவளுடைய கனவுகளைப் பற்றிக் கேட்க எனக்கு விருப்பமில்லை, சரியா? 343 00:30:00,509 --> 00:30:05,138 ஏனென்றால் எனக்கு அவளைத் தெரியவே தெரியாதது என்பது போலத் தோன்றத் தொடங்குகிறது. 344 00:30:11,895 --> 00:30:13,689 இதைத்தான் அவள் வரைந்துகொண்டிருந்தாள். 345 00:30:18,694 --> 00:30:21,363 இதை நீ வைத்துக்கொள்ளவே அவள் விரும்புவாள் என்று நினைக்கிறேன். 346 00:32:30,701 --> 00:32:32,703 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்