1 00:00:22,105 --> 00:00:24,149 “ஸ்நூப்பி ஒரு உரையாற்றுகிறது.” 2 00:00:27,819 --> 00:00:30,697 இதோ. ஒரு கப் தேநீர். 3 00:00:36,453 --> 00:00:38,622 சாண்ட்விச் சாப்பிடுகிறாயா? 4 00:00:45,337 --> 00:00:49,258 நவநாகரீக மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கடித்துச் சாப்பிடுவர் என ஞாபகம் வைத்துக்கொள். 5 00:00:51,051 --> 00:00:54,263 உனக்குத் தலைமை பீகிலிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது, ஸ்நூப்பி. 6 00:01:00,936 --> 00:01:02,563 தலைமை பீகில் என்றால் யார்? 7 00:01:03,522 --> 00:01:08,277 தலைமை பீகில் தான் எல்லா நாய்களுக்கும் பொறுப்பு. அவர் ஆணையிட்டால் நாம் கேட்க வேண்டும். 8 00:01:11,864 --> 00:01:15,784 கடிதத்தில், “தலைமை பீகில் ஸ்நூப்பியைப் பேருரை நிகழ்த்தும் படி கேட்டிருக்கிறார்.” 9 00:01:17,870 --> 00:01:22,332 இவனா ஏன்? அவன் ஒரு தேநீர் விருந்தைக் கூட சரியாக ஒருங்கிணைக்க மாட்டானே. 10 00:01:22,416 --> 00:01:24,710 அவர்கள் ஸ்நூப்பிக்குத் தலைமை பீகிலாவதற்கான 11 00:01:24,793 --> 00:01:27,379 தகுதியிருக்கிறதா என்று சோதிக்க நினைக்கலாம். 12 00:01:32,467 --> 00:01:37,264 சும்மா படுத்துக் கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பது தான் தகுதி என்றால், நிச்சயம் அவன் வென்றுவிடுவான். 13 00:01:40,142 --> 00:01:43,312 நல்ல உரை நிகழ்த்த வேண்டுமென்றால் பதற்றமடையக் கூடாது. 14 00:01:43,395 --> 00:01:47,691 மக்கள் முன்னிலையில் பேசும் போது, என் நாக்கு உளறும். 15 00:01:49,109 --> 00:01:52,738 இந்த வாரம், “சாம் டாயர்” என்ற புத்தகத்தைப் படித்தேன். 16 00:01:52,821 --> 00:01:55,073 அதாவது, “டாம் சாயர்.” 17 00:01:59,786 --> 00:02:02,873 கதை “மிஸ்ஸி-இப்பி” ஆற்றில் நடக்கிறது. 18 00:02:02,956 --> 00:02:06,668 அதாவது, “சிப்பி-மிப்பி”... அதாவது... “பிப்-சிப்பி.” 19 00:02:08,336 --> 00:02:09,922 ஏதாவது கேள்விகள் இருக்கிறதா? 20 00:02:11,465 --> 00:02:16,261 நம்பிக்கையோடு இருந்தால் “சிறகாக” செயல்படலாம்... வந்து, “சிறப்பாக” செயல்படலாம்! 21 00:02:33,403 --> 00:02:37,533 ஹாய், ஸ்நூப்பி. தலைமை பீகிலின் முன் உரையாற்ற தயாராகிறாய் எனக் கேள்விப்பட்டேன். 22 00:02:42,371 --> 00:02:46,375 என் அறிவுரை வேண்டுமா, குட்டி? தயார் செய்யாமல் பேசு. அதை தான் நான் செய்கிறேன். 23 00:02:46,458 --> 00:02:48,293 நான் மக்களின் முன்பு நிற்கும்போது, 24 00:02:48,377 --> 00:02:51,630 பதற்றப்படாமல் இருப்பேன், எல்லாம் சுமூகமாக நடக்கும். 25 00:02:51,713 --> 00:02:54,383 அப்போது, போன வருட பள்ளி நாடகம், சார்? 26 00:02:57,803 --> 00:03:00,931 ஆக, மூன்று கரடிகளும், கோல்டிலாக்ஸ் என்ற சிறுமியும் இருந்தனர். 27 00:03:01,014 --> 00:03:02,432 ஏதோவொரு பெயர், சரியா? 28 00:03:03,225 --> 00:03:05,602 அப்பெண்ணுக்கும், கரடிகளுக்கும் பசி வந்துவிட்டது, 29 00:03:05,686 --> 00:03:08,981 எனவே இசையை ஒலிக்கச் செய்துவிட்டு பீட்சாவை வரவழைத்தனர். 30 00:03:09,064 --> 00:03:14,236 பீட்சா இல்லை, சார். கஞ்சி. அவள் மூன்று கிண்ணங்கள் கஞ்சி சாப்பிட்டாள். 31 00:03:14,319 --> 00:03:19,157 என்ன? கரடிகள் கஞ்சி சாப்பிடாதே. அபத்தமாக இருக்கிறது. யார் இப்படி சொதப்பலாக எழுதியது? 32 00:03:26,164 --> 00:03:29,543 சரி. நான் கதையைப் படித்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காது. 33 00:03:29,626 --> 00:03:32,129 பார்வையாளர்கள் அதை ரசித்தார்கள், சார். 34 00:03:32,212 --> 00:03:34,464 நான் என்ன சொல்வது? நான் இயல்பாக நடிப்பவன். 35 00:03:38,927 --> 00:03:43,682 தயார் செய்துக்கொள், இல்லையென்றால் விஷயம் மோசமாக முடியலாம். 36 00:03:59,698 --> 00:04:01,617 உரை நிகழ்த்த சிரமப்படுகிறாயா? 37 00:04:04,494 --> 00:04:06,455 நீ ரொம்ப யோசிக்கிறாய் போல. 38 00:04:06,538 --> 00:04:10,250 என் தாத்தா நம் முதல் யோசனை தான் சிறந்த யோசனை என்று சொல்வார். 39 00:04:31,355 --> 00:04:34,733 கவலைப்படாதே, ஸ்நூப்பி. நீ என்னை விட சிறப்பாகப் பேசுவாய். 40 00:04:34,816 --> 00:04:38,445 பார்வையாளர்கள் என்னைப் பார்க்கும்போது, 41 00:04:38,529 --> 00:04:40,531 எனக்கு வார்த்தையே வராது. 42 00:04:42,407 --> 00:04:47,412 இன்று, எனக்குப் பிடித்த கண்டுபிடிப்பாளரைப் பற்றி பேச விரும்புகிறேன், அலெக்சாண்டர் கிரஹாம் பெல். 43 00:04:47,496 --> 00:04:49,748 -என்ன? -அவன் நம்மிடமா பேசுகிறான்? 44 00:04:49,831 --> 00:04:52,668 -பேசு! -அலெக்சாண்டர் கிரஹாம் பெல்! 45 00:04:52,751 --> 00:04:54,837 தன் கண்டுபிடிப்பு மூலம் ரொம்ப பிரபலமடைந்தார்... 46 00:04:55,712 --> 00:04:57,840 -என்ன? -அவர் என்ன கண்டுபிடித்தார்? 47 00:04:57,923 --> 00:04:59,800 மைக் என்று நினைக்கிறேன். 48 00:05:01,343 --> 00:05:04,429 சொல்ல நினைப்பதைத் தெளிவாகச் சொல், அவ்வளவு தான்! 49 00:05:12,145 --> 00:05:15,482 உளறாதே. எளிதாகப் பேசு. 50 00:05:15,566 --> 00:05:17,901 தயார் செய்துக்கொள், இல்லையென்றால் விஷயம் மோசமாகிவிடும். 51 00:05:17,985 --> 00:05:20,070 -பேச வேண்டுமென ஞாபகம் வைத்துக்கொள். -அமைதியாக இரு. 52 00:05:20,153 --> 00:05:22,322 உன்னைப் பார்ப்பவர்கள் யாரையும் பார்க்காதே. 53 00:05:24,324 --> 00:05:26,118 நிதானமாக இரு! 54 00:05:26,743 --> 00:05:27,578 ஹலோ? 55 00:05:27,661 --> 00:05:28,495 மன உளைச்சலுக்கான உதவி 5 சென்ட் 56 00:05:28,579 --> 00:05:32,457 உரை நிகழ்த்தும் போது, நிதானமாக இருக்கச் சொன்னேன். 57 00:05:32,541 --> 00:05:33,750 அமைதியாக இரு. 58 00:05:34,543 --> 00:05:38,964 மோதும் அலைகள் போன்று அமைதியான ஏதாவது ஒன்றை நினைத்துக்கொள். 59 00:05:39,047 --> 00:05:42,301 மோது! நொறுக்கு! பேம்! 60 00:05:45,262 --> 00:05:47,848 மோதும் அலைகள் எப்போதும் எனக்கு அமைதியைத் தரும். 61 00:05:52,686 --> 00:05:56,648 நமது அறிவுரைகள் அவனை அமைதியடைய வைத்திருக்குமென நினைத்தேன். 62 00:05:56,732 --> 00:06:00,319 பதற்றப்படாதே, ஸ்நூப்பி. உன் உரை சிறப்பாக இருக்கும். 63 00:06:00,402 --> 00:06:03,155 நீ உன்னை மட்டும் நம்பு. 64 00:06:07,284 --> 00:06:10,162 சரி. எங்களை பார்வையாளர்களாக வைத்து நீ முயற்சி செய்கிறாயா? 65 00:06:10,245 --> 00:06:12,664 எங்கள் முன் உன் உரையைப் பயிற்சி செய். 66 00:06:12,748 --> 00:06:14,791 அது நன்றாக இருக்கிறதா என்று நமக்கு எப்படி தெரியும்? 67 00:06:14,875 --> 00:06:16,126 நமக்கு நாயின் பாஷை புரியாதே. 68 00:06:16,210 --> 00:06:20,005 அது விஷயமில்லை, சார். நாம் அவனது நம்பிக்கையை அதிகரிக்க முயற்சிக்கிறோம். 69 00:06:20,088 --> 00:06:23,008 நீ என்ன சொல்கிறாய், ஸ்நூப்பி? முயற்சி செய்கிறாயா? 70 00:06:26,136 --> 00:06:27,596 -உன்னால் முடியும். -கீழே வா. 71 00:06:27,679 --> 00:06:29,223 -ஆமாம்! -நாங்கள் உன்னை நம்புகிறோம்! 72 00:07:01,797 --> 00:07:03,674 ஸ்நூப்பியின் உரை எப்படியிருந்தது? 73 00:07:03,757 --> 00:07:04,925 நன்றாக இருந்தது. 74 00:07:05,008 --> 00:07:07,469 உண்மையில், மிகவும் நன்றாகப் பேசினான், 75 00:07:07,553 --> 00:07:11,390 இப்போது மக்களின் முன் பேசத் தயங்குபவர்களின் பயத்தைப் போக்க உதவுகிறான். 76 00:07:35,372 --> 00:07:37,624 “பீகில் ஸ்கவுட்டாக இருப்பது எப்படி.” 77 00:08:15,746 --> 00:08:17,956 ஹாய், ஸ்நூப்பி. எங்கே செல்கிறாய்? 78 00:08:20,209 --> 00:08:22,753 “அதிகாரப்பூர்வ சாரணர் இயக்க பயணத்தைப் பற்றிய குறிப்பு. 79 00:08:22,836 --> 00:08:26,965 இன்று, தைரியமான பீகில் சாரணர்களைக் காட்டிற்கு அழைத்துச் செல்கிறேன். 80 00:08:27,049 --> 00:08:31,178 அங்கு நவீன வசதிகள் இல்லாமல் வெளிப்புறச் சூழலை நாங்கள் ரசிப்போம்.” 81 00:08:31,261 --> 00:08:34,681 நவீன வசதிகள் இல்லாமலா? தைரியமான விஷயம். 82 00:08:42,898 --> 00:08:44,983 நாமும் முகாமிற்கு போகணும், மார்ஸி. 83 00:08:46,235 --> 00:08:47,319 அன்று வேலை இருக்கிறது. 84 00:08:57,871 --> 00:09:00,624 பீகில் ஸ்கவுட் பேட்ஜுக்கான முதலாவது வாய்ப்பு. 85 00:09:00,707 --> 00:09:02,459 கால்தடங்களை அடையாளம் காணுதல். 86 00:09:44,459 --> 00:09:47,588 பீகில் ஸ்கவுட் பேட்ஜுக்கான இரண்டாவது வாய்ப்பு. 87 00:09:47,671 --> 00:09:50,090 நுகர்வதின் மூலம் இயற்கையை அறிதல். 88 00:11:00,077 --> 00:11:02,913 பீகில் ஸ்கவுட் பேட்ஜுக்கான மூன்றாவது வாய்ப்பு. 89 00:11:02,996 --> 00:11:05,415 இயற்கையை ஒலியின் மூலம் புரிந்துக்கொள்ளுதல். 90 00:14:54,853 --> 00:14:56,980 “மழைக்காலம் என்றாலே மகிழ்ச்சி தான்.” 91 00:15:51,451 --> 00:15:54,079 ஸ்நூப்பி, இது ஜாலியாக இருக்கு தானே? 92 00:15:55,205 --> 00:15:58,709 எனக்கு மழைக்காலம் ரொம்ப பிடிக்கும். குளத்தில் மழைத்துளிகள் விழுந்து தெறிப்பதைப் பார். 93 00:15:59,209 --> 00:16:00,460 என்னுடன் சேர்ந்துக்கொள்கிறாயா? 94 00:16:02,838 --> 00:16:05,465 உன் விருப்பம். 95 00:16:14,474 --> 00:16:17,728 ஹாய், ஸ்நூப்பி. நீயும் மழையில் மாட்டிக்கொண்டதுப் போல் தெரிகிறது. 96 00:16:18,228 --> 00:16:22,107 சீக்கிரம் வீட்டிற்குப் போக வேண்டும். நீயும் வருகிறாயா? 97 00:16:35,954 --> 00:16:39,416 வருத்தப்படாதே, ஸ்நூப்பி. மழை நாட்கள் சந்தோஷமாக இருக்கும். 98 00:16:39,499 --> 00:16:41,335 இந்த அறையில் பெரிய கம்பீரமான இருக்கை 99 00:16:41,418 --> 00:16:45,506 ஒன்றைக் கட்டலாம். 100 00:16:46,089 --> 00:16:47,633 நீ என்ன நினைக்கிறாய், ஸ்நூப்பி? 101 00:16:48,634 --> 00:16:49,843 ஸ்நூப்பி? 102 00:16:56,975 --> 00:16:59,102 நான் தான் அரசன் லைனஸ். 103 00:16:59,186 --> 00:17:03,899 நம்பகமான வீரரான தளபதி ஸ்நூப்பியிடமிருந்து எனக்கு கொஞ்சம் உதவி வேண்டும். 104 00:17:05,358 --> 00:17:06,777 அது நீ தான். 105 00:17:13,407 --> 00:17:15,577 நீ தான் என் வெற்றியாளன். 106 00:17:16,118 --> 00:17:18,163 நம் ராஜ்ஜியம் பெரும் ஆபத்தில் உள்ளது. 107 00:17:18,664 --> 00:17:21,375 மிகவும் கொடூரமான ஒரு டிராகன் படையெடுத்திருக்கிறது. 108 00:17:21,458 --> 00:17:25,170 உன்னால் மட்டும் தான் அந்த எதிரியை எதிர்த்துப் போரிட முடியும், தளபதி ஸ்நூப்பி. 109 00:17:50,529 --> 00:17:52,072 நான் நனைந்துவிட்டேன்! 110 00:17:52,155 --> 00:17:55,158 ஏன் இப்படி செய்தாய், முட்டாள் நாயே? 111 00:18:15,179 --> 00:18:16,263 ஸ்நூப்பி! 112 00:18:16,346 --> 00:18:19,808 நீ ஈரமாக இருக்கிறாய். இதோ. துடைத்துக்கொள். 113 00:18:23,020 --> 00:18:26,857 நாங்கள் உடை-அணிந்து விளையாடுகிறோம். மழைக் காலத்திற்கு ஏற்ற விளையாட்டு. 114 00:18:26,940 --> 00:18:28,025 நீயும் விளையாடுகிறாயா? 115 00:18:30,319 --> 00:18:32,738 இது என்ன? 116 00:18:32,821 --> 00:18:35,699 மேரி க்யூரி போல உடை அணிவதற்காக வாங்கினேன், 117 00:18:35,782 --> 00:18:40,329 அவர் ஒருவர் தான் வெவ்வேறு அறிவியல் துறைகளில் நோபல் பரிசு வென்றுள்ளார். 118 00:18:42,789 --> 00:18:44,583 சரி, எனக்கு இது தான் பிடித்திருக்கிறது. 119 00:18:45,792 --> 00:18:47,794 இது என் லைப்ரரி பெண் ஆடை. 120 00:18:47,878 --> 00:18:51,882 அவளது அற்புத சக்தி என்னவென்றால், அவளால் ஆயிரம் புத்தகங்களை நேரம் முடிவதற்குள் படிக்க முடியும். 121 00:18:52,382 --> 00:18:56,053 அவள் அதை இரசித்து படிக்கவில்லை என்பதற்காக சீக்கிரம் படிப்பதில்லை. 122 00:18:56,136 --> 00:18:58,430 அப்படி படிப்பதில் பயனும் இல்லை. 123 00:18:58,931 --> 00:19:00,682 சூப்பர் ஹீரோவாக யார் நடிப்பது? 124 00:19:00,766 --> 00:19:02,100 ஜாலி! 125 00:19:06,188 --> 00:19:07,898 மோசமான செய்தி, முகமூடி மார்வெல். 126 00:19:07,981 --> 00:19:11,443 நூலகத்திலிருந்த எல்லா புத்தகங்களையும் மோசமான புத்தகத்திருடி திருடிவிட்டாள். 127 00:19:11,527 --> 00:19:15,239 அவளைப் பிடித்து எல்லா புத்தகங்களையும் எப்படியாவது திரும்பப் பெற வேண்டும். 128 00:19:25,832 --> 00:19:28,502 என்னைத் தான் தேடுகிறாயா, முகமூடி மார்வெல்? 129 00:19:28,585 --> 00:19:31,338 நூலகப் புத்தகத்தினைத் திரும்ப கொடுக்க வந்தேன். 130 00:19:31,421 --> 00:19:33,465 இதை எடுத்துக்கொள்! இதையும்! 131 00:19:33,549 --> 00:19:35,217 இந்த அற்புதமான புத்தகம் எப்படி? 132 00:19:37,135 --> 00:19:39,596 காங்கிரஸ் வகைப்பாட்டு அமைப்பின்படி... 133 00:19:40,097 --> 00:19:44,393 புத்தகங்களை ஓழுங்கமைக்க சரியான நேரத்தில் தான் வந்திருக்கிறேன். 134 00:19:48,689 --> 00:19:49,940 உஷ்! 135 00:19:52,067 --> 00:19:53,402 என்னைப் பிடித்துவிட்டாய்! 136 00:19:55,946 --> 00:19:57,823 ஹே, மழை நின்றுவிட்டது. 137 00:21:00,344 --> 00:21:02,971 ஸ்நூப்பி, நான் உன்னை எல்லா இடத்திலும் தேடிக் கொண்டிருந்தேன். 138 00:21:06,767 --> 00:21:09,478 பரவாயில்லை. வா, வீட்டுக்குப் போகலாம். 139 00:21:12,731 --> 00:21:14,983 இதுதான். பாதுகாப்பான மற்றும் உலர்ந்த இடம். 140 00:21:18,362 --> 00:21:20,948 நீ உன் சுற்றுலாவை சந்தோஷமாக கழிக்கவில்லை போலும். 141 00:21:22,324 --> 00:21:26,912 பரவாயில்லை, மழை நாட்களில் எது சிறந்ததென உனக்கே தெரியும். 142 00:21:26,995 --> 00:21:28,372 வீட்டுக்குள்ளேயே சுற்றுலா செல். 143 00:21:42,010 --> 00:21:44,096 எனக்கும் கொஞ்சம் வை, ஸ்நூப்பி. 144 00:21:49,685 --> 00:21:50,936 கடவுளே. 145 00:21:55,941 --> 00:21:58,819 மழைக்காலம் என்றாலே... மகிழ்ச்சி தான் 146 00:21:59,695 --> 00:22:00,737 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 147 00:22:23,635 --> 00:22:25,637 தமிழாக்கம் மேனகா மணிகண்டன் 148 00:22:28,724 --> 00:22:29,725 நன்றி, ஸ்பார்க்கி. என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.