1 00:00:18,393 --> 00:00:19,394 இரவு நேரம். 2 00:00:24,399 --> 00:00:30,364 நம் கிரகத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட விலங்குகளை மறைக்கும் இருண்ட உலகம். 3 00:00:33,534 --> 00:00:38,747 இப்போது வரை, கேமராக்கள் அவற்றின் வாழ்வை கோடிட்டு மட்டுமே காட்டியுள்ளன. 4 00:00:41,750 --> 00:00:44,837 ஆனால் மேம்படுத்தப்பட்ட அடுத்தத் தலைமுறை தொழில்நுட்பத்தோடு, 5 00:00:44,920 --> 00:00:49,842 நம்மால் பகலைப் போலவே இரவையும் தெள்ளத்தெளிவாக பார்க்க முடிகிறது. 6 00:00:56,515 --> 00:01:00,769 மனிதக் கண்ணைவிட நூறு மடங்கு அதிக உணர்திறன் மிக்க கேமராக்களோடு... 7 00:01:04,063 --> 00:01:06,859 இரவின் அழகை இப்போது நம்மால் நல்ல தரத்தில் படம்பிடிக்க முடிகிறது... 8 00:01:09,319 --> 00:01:10,445 அதுவும் வண்ணமயமாக. 9 00:01:15,325 --> 00:01:17,202 வேற்றுலக நிலப்பரப்புகள். 10 00:01:20,205 --> 00:01:24,835 இருளில் மட்டுமே சுறுசுறுப்பாக இருக்கும் விசித்திரமான உயிரினங்கள். 11 00:01:27,713 --> 00:01:30,215 முன்பு பார்த்திராத நடத்தைகள். 12 00:01:37,222 --> 00:01:40,767 இப்போது பூமியின் கடைசி வனப்பகுதியில் 13 00:01:41,602 --> 00:01:44,104 வசிக்கும் விலங்குகளின் வாழ்க்கையை நம்மால் பின்தொடர முடியும். 14 00:01:46,565 --> 00:01:47,566 இரவு நேரம். 15 00:02:09,420 --> 00:02:13,759 நமீபியாவின் ஸ்கெலிடன் கடற்கரையில் சூரியன் அஸ்தமனமாகிறது. 16 00:02:13,842 --> 00:02:15,969 வர்ணனையாளர் டாம் ஹிடில்ஸ்டன் 17 00:02:16,053 --> 00:02:20,265 இங்கே ஆப்பிரிக்க பாலைவனம் அட்லான்டிக் பெருங்கடலை சந்திக்கிறது. 18 00:02:28,649 --> 00:02:31,193 அது உயிரற்று காணப்படுகிறது. 19 00:02:35,280 --> 00:02:37,991 ஆனால், ஒவ்வொரு வருடத்தின் சில மாதங்களில், 20 00:02:38,075 --> 00:02:42,829 இந்த கடற்கரை கடல் சார் விருந்தாளிகளால் நிரம்பி இருக்கும். 21 00:02:45,123 --> 00:02:47,668 கேப் ஃபர் சீல்கள். 22 00:02:54,216 --> 00:02:59,263 ஒவ்வொரு வசந்த காலத்திலும், இனப்பெருக்கம் செய்வதற்காக அரை மில்லியனளவு கரைக்கு வரும். 23 00:03:05,227 --> 00:03:09,982 புதிதாக பிறகும் குட்டிகளை வளர்க்க இது சரியான இடமாக இருக்கிறது. 24 00:03:22,202 --> 00:03:24,413 சில வாரங்களே ஆகி இருக்கும், 25 00:03:25,247 --> 00:03:29,793 இந்த குட்டி அதன் தாயை முழுவதும் சார்ந்து இருக்கிறது. 26 00:03:36,133 --> 00:03:37,759 முதல் நான்கு மாதங்களுக்கு, 27 00:03:38,427 --> 00:03:41,722 அது தன் தாயின் உயர்ந்த-கலோரி பாலைத்தான் குடிக்கும். 28 00:03:52,649 --> 00:03:56,820 பசித்திருக்கும் குட்டிக்கு பால் கொடுப்பது மிகவும் சோர்வு தரும் வேலை. 29 00:03:59,907 --> 00:04:04,411 எனவே பல நாட்கள், அந்த தாய் சீல்கள், உணவு உண்பதற்காக, 30 00:04:04,494 --> 00:04:06,413 கடலுக்குத் திரும்ப நேரிடுகிறது. 31 00:04:15,130 --> 00:04:16,964 தங்கள் குட்டிகளை... 32 00:04:19,009 --> 00:04:20,511 தனியாக விட்டு விட்டுச் செல்கின்றன. 33 00:04:32,981 --> 00:04:36,068 ஆனால் அஸ்தமன நேரம் ஆபத்தானது. 34 00:04:45,994 --> 00:04:48,872 கரிய நிறம் கொண்ட குள்ளநரிகள் இரண்டு இருக்கின்றன. 35 00:04:59,258 --> 00:05:01,635 பாதுகாப்பிற்கு தங்கள் தாய்மார்கள் இல்லாமல்... 36 00:05:04,805 --> 00:05:07,266 குட்டிகள் தாங்களாகவே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 37 00:05:13,939 --> 00:05:17,025 கூரான பற்கள் மட்டும் தான் அவற்றின் ஆயுதம். 38 00:05:32,249 --> 00:05:36,670 பகல் நேரத்தில், அந்த குட்டிகளால் குள்ளநரிகளை விரட்டி விட முடியும். 39 00:05:39,506 --> 00:05:43,969 ஆனால் இரவு நெருங்கும் போது, நிலைமை தலைகீழாக மாறுகிறது. 40 00:05:47,055 --> 00:05:51,226 இருட்டிய பிறகு, குள்ளநரிகளுக்கு வலிமை கூடுகிறது. 41 00:05:57,024 --> 00:06:03,322 அந்த இளம் குட்டிகளுக்கு, இது ஒரு நீண்ட ஆபத்தான இரவாக இருக்கப் போகிறது. 42 00:06:17,628 --> 00:06:19,963 இருட்டிய பிறகு, கடற்கரை ஓரங்களில் நடக்கக்கூடிய 43 00:06:20,047 --> 00:06:23,300 இப்படி பட்ட நிகழ்ச்சிகளை, நாம் இதுவரை பார்க்க முடிந்ததில்லை. 44 00:06:27,930 --> 00:06:30,474 ஆனால் எப்போதும் போல் அல்லாமல்... 45 00:06:31,808 --> 00:06:34,478 இந்த ரகசிய நிகழ்வுகளை நாம் பார்க்க... 46 00:06:38,774 --> 00:06:40,484 புதிய தொழில் நுட்பம் உதவுகிறது. 47 00:06:56,917 --> 00:07:01,880 இருள் கவிழ்ந்து சில மணி நேரங்கள் வரை, இந்த இடம் மிகுந்த சத்தமாக இருக்கிறது. 48 00:07:09,638 --> 00:07:13,350 இந்த குழப்பத்திற்கு இடையில், ஒரு தனிமையான குட்டி தன் தாயை அழைக்கிறது. 49 00:07:19,106 --> 00:07:22,818 ஆனால் அருகே இருக்கும் மற்ற தாய் விலங்குகள் அதற்கு எந்த ஆதரவும் தரவில்லை. 50 00:07:27,030 --> 00:07:30,784 கேப் ஃபர் சீல்கள் தங்கள் குட்டிகளை மட்டும் தான் பராமரிக்கின்றன. 51 00:07:37,249 --> 00:07:39,126 அது தன்னையே பாதுகாத்துக்கொள்ள வேண்டியது தான். 52 00:07:48,427 --> 00:07:53,932 அதிர்ஷ்டவசமாக, கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தாயின் குட்டிகளால் கடற்கரை நிறைந்துள்ளது 53 00:08:10,407 --> 00:08:16,705 நிலவு ஒளியில், அவை எல்லாம் ஒன்றாக சீல் குட்டிகள் காப்பகம் போல இணைந்துள்ளன. 54 00:08:25,464 --> 00:08:28,717 அது தான் குட்டிகள் பாதுகாப்பாக இருக்க ஒரு சிறந்த வழி. 55 00:08:30,469 --> 00:08:33,764 இரவு நேரத்தில் அவை ஜாக்கிரதையாக இருப்பது சரியானதே. 56 00:08:42,147 --> 00:08:47,027 கடற்கரையில், மண்ணில் ஒரு தரைதட்டிய கப்பல் புதைந்து இருக்கிறது. 57 00:08:57,913 --> 00:09:03,293 அது அந்த கடற்கரையில் மிக வலிமையான குள்ளநரி கூட்டத்தின் இருப்பிடமாக இருக்கிறது. 58 00:09:06,713 --> 00:09:09,216 அவற்றின் 95 சதவீத உணவு 59 00:09:09,299 --> 00:09:12,970 ஒன்று தான்: சீல் குட்டிகள். 60 00:09:22,729 --> 00:09:28,610 இந்த ஊளைகள் வேட்டையை ஆரம்பிப்பதற்கான ஒரு குரல் ஆகும். 61 00:09:45,794 --> 00:09:47,921 முதன் முதலில் படமாக்கப்படும் இந்த நிகழ்வில், 62 00:09:48,714 --> 00:09:52,759 குள்ளநரிகள் செய்யும் இரவு நேர வேட்டையை கேமராக்கள் பதிவு செய்கின்றன. 63 00:10:02,186 --> 00:10:05,439 வளர்ந்த சீல்களை தோற்கடிப்பது கடினம். 64 00:10:09,067 --> 00:10:14,615 எனவே அந்த கூட்டம் குட்டிகளைத் தேடி, காப்பகத்திற்குள் நுழைகின்றன. 65 00:10:18,160 --> 00:10:19,536 நமது பார்வையில்... 66 00:10:22,206 --> 00:10:24,750 அந்த குட்டிகள் இருட்டில் மறைந்து இருக்கின்றன. 67 00:10:29,379 --> 00:10:32,299 ஆனால் குள்ளநரிகளுக்கு சிறப்பான இரவு பார்வை இருப்பதால்... 68 00:10:34,176 --> 00:10:37,930 அவற்றால் எந்த வாய்ப்பையும் பார்க்க முடிகிறது. 69 00:10:50,984 --> 00:10:52,528 ஒரு குட்டி தூங்குகிறது. 70 00:11:07,501 --> 00:11:09,419 அருகில் தாய் இருப்பதால், 71 00:11:10,045 --> 00:11:13,090 இந்த முறை, குள்ளநரிகள் பின் வாங்குகின்றன. 72 00:11:20,013 --> 00:11:24,309 ஆனால் காப்பகத்தின் பாதுகாப்பை விட்டு ஒரு குட்டி வெளியே வந்து விட்டது. 73 00:11:29,231 --> 00:11:31,066 மேலும் அது குறி வைக்கப்பட்டு விட்டது. 74 00:11:38,282 --> 00:11:41,493 அதற்கு தப்பிப்பதற்கு ஒரே வழி கடலுக்குள் செல்வது தான், 75 00:11:41,577 --> 00:11:43,745 ஏனென்றால் அங்கே தான் குள்ளநரி பின்தொடர்ந்து வராது. 76 00:12:06,643 --> 00:12:08,228 அதிர்ஷ்டவசமாக தப்பித்துவிட்டது. 77 00:12:16,737 --> 00:12:18,447 கடல் அலைகளுக்கு அப்பால்... 78 00:12:19,615 --> 00:12:23,243 பாலைவனத்தில் இருந்து ஒரு வினோதமான ஒலி கேட்கிறது. 79 00:12:30,876 --> 00:12:34,421 சூரிய வெப்பத்தில் நாள் முழுதும் பாதுகாப்பாக இருந்து விட்டு, 80 00:12:34,505 --> 00:12:39,760 தங்கள் பொந்துகளில் இருந்து சிறு விலங்குகள் குளிரான இரவு நேரத்தில் வெளியே வருகின்றன. 81 00:12:45,390 --> 00:12:49,686 குரைக்கும் ஒரு ஆண் கெக்கோ, தன் காதலைத் தேடுகிறது. 82 00:12:51,980 --> 00:12:55,442 ஆனால் அந்த இருட்டில், ஒரு துணையைக் கண்டு பிடிப்பது கடினம். 83 00:12:57,152 --> 00:12:58,612 அதனால் அது குரைக்கிறது. 84 00:13:16,171 --> 00:13:20,092 அந்த பெண் கெக்கோவிற்கு அந்த ஒலி பிடிக்கிறது. 85 00:13:25,222 --> 00:13:27,140 ஆனால் தன் காதலை அடைய... 86 00:13:29,017 --> 00:13:30,894 அவள் தன் உயிரை பணயம் வைக்க வேண்டும். 87 00:13:38,235 --> 00:13:40,237 ஒரு வெள்ளை நிற பெண் சிலந்தி. 88 00:13:43,866 --> 00:13:45,367 விஷத்தன்மையோடு கடித்து... 89 00:13:48,453 --> 00:13:51,623 கெக்கோக்களை வேட்டையாடும். 90 00:14:00,549 --> 00:14:06,138 கருமையான இருளில், மண்ணில் ஏற்படும் சிறிய அசைவுகளால் தன் இரையைக் கண்டு பிடிக்கும். 91 00:14:33,373 --> 00:14:39,421 விரைவாக சிலந்தியிடமிருந்து தப்பித்ததால், அது, தன் இருப்பிடத்திற்கு சென்றுவிடுகிறது. 92 00:14:44,426 --> 00:14:49,181 குரைக்கும் கெக்கோவிற்கு, தன் துணையைத் தேடுவது ஒரு ஆபத்ததான வேலை. 93 00:14:56,772 --> 00:14:58,774 ஆனால் அது அந்த ஆபத்திற்குத் தயாராக இருக்கிறது. 94 00:15:08,700 --> 00:15:13,872 இரவு நேரத்தில், இந்த பாலைவன கடற்கரையில் வேறு பல ஆச்சரியங்களும் காத்திருக்கின்றன. 95 00:15:17,125 --> 00:15:20,295 இந்த மணல், கப்பல்களை மட்டும் விழுங்கவில்லை... 96 00:15:22,089 --> 00:15:24,967 முழு நகரங்களையே விழுங்கி இருக்கிறது. 97 00:15:39,773 --> 00:15:42,901 அறிமுகமில்லாத, இரவில் பேய்கள் நோட்டமிடும்... 98 00:15:44,319 --> 00:15:47,489 பாழடைந்த ஒரு பழைய சுரங்க அலுவலகம். 99 00:15:59,751 --> 00:16:05,340 ஒரு பழுப்பு நிற கழுதைப்புலி உள்ளூர் கடற்கரை ஓநாய் என அழைக்கப்படுகிறது. 100 00:16:08,886 --> 00:16:12,389 இந்த விலங்குகளின் இரவு வாழ்க்கையைப்பற்றி பார்ப்பது 101 00:16:12,472 --> 00:16:16,101 நமக்கு இது தான் முதல் முறை. 102 00:16:18,687 --> 00:16:24,568 பாழைடைந்த, உபயோகமற்ற ஒரு கசினோவில் ஒரு சிறு குடும்பம் வசிக்கிறது. 103 00:16:32,117 --> 00:16:33,202 ஒரு தாய்... 104 00:16:34,703 --> 00:16:39,291 மற்றும் அவளின், இரண்டு இளம்வயது பெண் குட்டிகள். 105 00:16:40,918 --> 00:16:43,795 அந்த இளம் குட்டிகள், நாள் முழுதும் ஒன்றும் சாப்பிடவில்லை. 106 00:16:45,589 --> 00:16:46,882 அவை பசியோடு இருக்கின்றன. 107 00:16:49,843 --> 00:16:51,345 மற்றும் கோபமாக இருக்கின்றன. 108 00:16:59,144 --> 00:17:04,483 இந்த வினோதமான சண்டைக்கு முகவாய்-மல்யுத்தம் என்று பெயர். 109 00:17:08,153 --> 00:17:12,031 இப்படித்தான் இளம் கழுதைப்புலிகள் தங்களது வலிமையை சோதித்துப் பார்த்துக் கொள்ளும். 110 00:17:26,672 --> 00:17:31,802 அவை இவ்வாறு சண்டையிடும் போது, அவற்றின் தாய் தான் உணவு கொண்டு வர வேண்டும். 111 00:17:36,723 --> 00:17:39,935 பழுப்பு நிற கழுதைப்புலிகள், தோட்டி விலங்குகளாக கருதப்படுகின்றன. 112 00:17:41,895 --> 00:17:47,442 ஆனால் இந்த கடற்கரை பகுதியில், அவை சீல் குட்டிகளை வேட்டையாட... 113 00:17:48,694 --> 00:17:49,862 கற்றுக் கொண்டு இருக்கின்றன. 114 00:18:03,750 --> 00:18:05,586 இப்போது, முதல் முறையாக, 115 00:18:05,669 --> 00:18:10,132 அவை தங்கள் இரையை பிடிக்க இருள் எப்படி உதவுகிறது என எங்களால் காண்பிக்க முடிகிறது. 116 00:18:14,344 --> 00:18:15,846 எங்களது கேமராக்கள் இல்லாமல்... 117 00:18:18,182 --> 00:18:21,685 அந்த கழுதைப்புலியை கண்டு பிடிப்பது மிகவும் கடினமாக இருக்கும். 118 00:18:24,229 --> 00:18:26,481 இருளில் மறைந்த வண்ணம்... 119 00:18:30,027 --> 00:18:32,154 அது அந்த சீல்களை துரத்துவதில்லை... 120 00:18:34,740 --> 00:18:38,285 அந்த சீல்கள் தன்னைத் தேடி வருவதற்காக காத்திருக்கிறது. 121 00:18:56,261 --> 00:18:58,180 எட்டும் தூரத்தில் இருக்கின்றன. 122 00:19:09,441 --> 00:19:14,029 ஆனால் கழுதைப்புலிக்கு ஆதரவாக நிலைமை இப்போது மாறப்போகிறது. 123 00:19:17,783 --> 00:19:19,701 நடு இரவு நேரத்திற்கு பின்னர், 124 00:19:19,785 --> 00:19:25,290 நிலவொளியை மறைத்தவாறு, ஒரு புகை போன்ற பனி மூட்டம் கடலில் தோன்றுகிறது. 125 00:19:31,421 --> 00:19:36,510 இதனால் கழுதைப்புலியைப் பார்ப்பது, இப்போது சீல்களுக்கு மேலும் கடினமாக ஆகி விட்டது. 126 00:19:49,106 --> 00:19:51,775 அது பாறைகளுக்கிடையே பதுங்கிக் கொண்டு... 127 00:19:53,360 --> 00:19:54,778 காத்திருக்கிறது. 128 00:20:03,704 --> 00:20:07,082 இறுதியாக, சரியான இலக்கு தோன்றுகிறது. 129 00:20:18,260 --> 00:20:21,138 அதன் கூரான பற்கள் வேலையை முடிக்கிறது. 130 00:20:25,184 --> 00:20:28,604 இந்த வேட்டை, தேவை இல்லாத கவனத்தை ஈர்க்கிறது. 131 00:20:34,776 --> 00:20:40,407 அதிக பசியோடு உள்ள குள்ளநரிகள் 20க்கு ஒன்று என்ற கணக்கில் அதை சூழ்ந்து கொள்கின்றன. 132 00:20:49,750 --> 00:20:55,464 ஆனால் அந்த முழு கூட்டமும் இந்த வலிமையான இரவு வேட்டையாடுபவற்றிற்கு நிகர் இல்லை. 133 00:21:03,847 --> 00:21:06,767 இந்த இரவிற்கான வேட்டை முடிந்துவிட்டது. 134 00:21:21,823 --> 00:21:24,159 விடியலின் முதல் வெளிச்சத்தில்... 135 00:21:25,619 --> 00:21:29,706 குள்ளநரிகள் தங்கள் இருப்பிடமான பாழடைந்த கப்பலுக்கு திரும்பி விட்டன. 136 00:21:40,759 --> 00:21:44,471 சீல்கள் இருப்பிடத்தில் சற்று சுறுசுறுப்பாகின்றன. 137 00:21:50,686 --> 00:21:55,315 ஒன்றாக சேர்ந்து இருந்ததன் மூலம், பெரும்பான்மையானவை அந்த இரவை கழித்துவிட்டன. 138 00:22:00,821 --> 00:22:05,534 ஒரு குட்டி, பரிச்சயமான குரலைக் கேட்கிறது. 139 00:22:34,229 --> 00:22:36,607 அம்மா வந்து விட்டது. 140 00:22:47,034 --> 00:22:50,329 இறுதியாக அதற்கு பால் கிடைத்துவிட்டது. 141 00:22:55,250 --> 00:23:00,255 இன்னும் சில மாதங்களில்,குட்டிகள் கடற்கரையை விட்டு செல்ல கூடிய அளவு பெரிதாகிவிடும்... 142 00:23:03,425 --> 00:23:07,137 மேலும் தங்கள் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை கடலில் தொடங்கத் தயாராகி விடும். 143 00:23:13,685 --> 00:23:19,942 நமீபியாவின் ஸ்கெலிடன் கடற்கரையும் மறுபடியும் அமைதியாகி விடும். 144 00:23:30,369 --> 00:23:32,788 இரவில் பூமி 145 00:23:32,871 --> 00:23:37,876 இரவில் படமாக்கப்பட்டது 146 00:23:42,673 --> 00:23:46,385 'எர்த் அட் நைட்' குழு எதிர்நோக்கிய பெரிய பிரம்மாண்டமான சவால் என்னவென்றால் 147 00:23:46,468 --> 00:23:49,930 பாழடைந்த ஒரு நகரத்தை வலம் வந்து, 148 00:23:50,013 --> 00:23:53,058 மறைத்திருக்கும் அந்த பழுப்பு நிற கழுதைப்புலியை படம் பிடிப்பது தான். 149 00:23:55,102 --> 00:23:57,688 பல மைல்கள் சுற்றுப்புறத்தில் நாங்கள் மட்டும் தான் மனிதர்கள். 150 00:23:57,771 --> 00:23:59,147 கரீனா தாமஸ் உதவி தயாரிப்பாளர் 151 00:23:59,231 --> 00:24:01,108 அதோடு இரவு நேரத்தில் பயமாக இருக்கும். 152 00:24:02,568 --> 00:24:05,070 அந்த அச்சுறுத்தும் உணர்வு 153 00:24:05,153 --> 00:24:08,532 ஒரு பெரிய கழுதைப்புலியை நேருக்கு நேர் பார்த்த போது இன்னும் அதிகமானது. 154 00:24:10,951 --> 00:24:12,452 மிகவும் அருகில் இருக்கு. 155 00:24:13,036 --> 00:24:17,499 கழுதைப்புலி விஞ்ஞானி டாக்டர். இன்க்ரிட் வீசெல் உட்பட, 156 00:24:17,583 --> 00:24:21,295 இரவில் இந்த விலங்குகள் என்ன செய்யும் என்று நாம் தெரியாமலேயே இருந்துவிட்டோம். 157 00:24:21,378 --> 00:24:23,046 நான் பல வருடங்கள் பகல் நேரத்தில் அவற்றை கண்காணித்திருக்கிறேன். 158 00:24:23,130 --> 00:24:24,423 இன்க்ரிட் வீசெல் பழுப்பு நிற கழுதைப்புலி ஆராய்ச்சி திட்டம் 159 00:24:25,757 --> 00:24:28,468 ஆனால் இரவில் அதன் நடத்தை மாறுபட்டு இருக்கலாம். 160 00:24:29,386 --> 00:24:31,138 இந்த காணொளியைப் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். 161 00:24:36,143 --> 00:24:40,772 இரவில் ஒளிப்பதிவு செய்யக்கூடிய ஒரு ட்ரோன் அந்த பாழைடைந்த கட்டிடங்களை சுற்றி பார்த்து 162 00:24:40,856 --> 00:24:44,359 கேமராக்களை எங்கு வைத்தால் சிறப்பாக இருக்குமென குழுவினருக்கு காட்டிக்கொடுத்தது 163 00:24:47,863 --> 00:24:51,950 பாழடைந்த கசினோவில் அவர்கள் ஒரு இடம் கண்டு பிடித்தார்கள். 164 00:24:54,703 --> 00:24:56,371 அது ஆச்சரியமாக இருக்கு. 165 00:24:57,414 --> 00:25:00,083 கழுதைப்புலிகளை ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கும் இந்த இருபது வருடங்களில், 166 00:25:00,167 --> 00:25:04,671 இரவில் படப்பிடிப்பு செய்யும் நிறுவனத்தோடு இப்போதுதான் முதன்முதலில் வேலை செய்கிறேன். 167 00:25:08,842 --> 00:25:11,637 பல வாரங்கள் கவனித்ததில், 168 00:25:11,720 --> 00:25:17,059 கழுதைப்புலிகளின் இரவுநேர நடவடிக்கைகள் பற்றி குழு மிகவும் ஆச்சரியமடைந்துள்ளனர். 169 00:25:22,898 --> 00:25:26,527 இதில் சிலவற்றை இன்க்ரிட் கூட இதற்கு முன்னர் பார்த்ததில்லை. 170 00:25:27,569 --> 00:25:30,280 ஆஹா, இன்று இது ஒரு ஆச்சரியமான காட்சியாக இருந்தது. 171 00:25:30,364 --> 00:25:31,657 என்னால் நம்பவே முடியவில்லை. 172 00:25:33,784 --> 00:25:36,411 ஆனால் எப்படி அந்த கழுதைப்புலிகளின் அருகில் இருந்த 173 00:25:36,495 --> 00:25:41,333 குள்ளநரிகளும் வேட்டையில் கலந்து கொண்டன, என்பது அவருக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. 174 00:25:42,835 --> 00:25:45,879 இந்த குள்ளநரிகள் அந்த கழுதைப்புலியை துன்புறுத்துகின்றன. 175 00:25:48,173 --> 00:25:50,801 இது இரவு நேரத்தில் அதிகமாக நடப்பதாக நான் நினைக்கிறேன். 176 00:25:53,846 --> 00:25:56,223 ஒரு குள்ளநரி மிகவும் தைரியத்தோடு 177 00:25:56,306 --> 00:26:00,227 கழுதைப்புலியின் இருப்பிடத்திற்கு சென்று ஒரு திருட்டுத்தனமான நோட்டம் கூட செய்தது. 178 00:26:03,355 --> 00:26:04,982 அது ஒரு நல்ல யோசனை கிடையாது. 179 00:26:05,941 --> 00:26:08,902 அவை இரவில் செய்வதை பார்ப்பதற்கு, மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. 180 00:26:11,113 --> 00:26:14,449 விஞ்ஞானிகளுடனும் தற்கால தொழில் நுட்பத்துடனும் சேர்ந்து, 181 00:26:14,533 --> 00:26:18,745 வேலை செய்து இந்த ரகசியமான இரவுநேர விலங்குகளின் 182 00:26:18,829 --> 00:26:23,417 இதுவரை கண்டிறாத நிகழ்வுகளை நமது குழுவால் படம் பிடிக்க முடிந்தது. 183 00:27:07,044 --> 00:27:09,046 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்