1 00:00:18,393 --> 00:00:19,728 இரவு நேரம். 2 00:00:24,399 --> 00:00:30,364 நம் கிரகத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட விலங்குகளை மறைக்கும் இருண்ட உலகம். 3 00:00:33,617 --> 00:00:38,747 இப்போது வரை, கேமராக்கள் அவற்றின் வாழ்வை கோடிட்டு மட்டுமே காட்டியுள்ளன. 4 00:00:41,792 --> 00:00:44,878 ஆனால் மேம்படுத்தப்பட்ட அடுத்தத் தலைமுறை தொழில்நுட்பத்தோடு, 5 00:00:44,962 --> 00:00:49,800 நம்மால் பகலைப் போலவே இரவையும் தெள்ளத்தெளிவாக பார்க்க முடிகிறது. 6 00:00:56,557 --> 00:01:00,811 மனிதக் கண்ணைவிட நூறு மடங்கு அதிக உணர்திறன் மிக்க கேமராக்களோடு... 7 00:01:04,105 --> 00:01:06,942 இரவின் அழகை இப்போது நம்மால் நல்ல தரத்தில் படம்பிடிக்க முடிகிறது... 8 00:01:09,361 --> 00:01:10,487 அதுவும் வண்ணமயமாக. 9 00:01:15,325 --> 00:01:17,202 வேற்றுலக நிலப்பரப்புகள். 10 00:01:20,247 --> 00:01:24,877 இருளில் மட்டுமே சுறுசுறுப்பாக இருக்கும் விசித்திரமான உயிரினங்கள். 11 00:01:27,713 --> 00:01:30,257 முன்பு பார்த்திராத நடத்தைகள். 12 00:01:37,306 --> 00:01:40,767 இப்போது பூமியின் கடைசி வனப்பகுதியில் 13 00:01:41,643 --> 00:01:44,104 வசிக்கும் விலங்குகளின் வாழ்க்கையை நம்மால் பின்தொடர முடியும். 14 00:01:46,565 --> 00:01:47,566 இரவு நேரம். 15 00:02:11,632 --> 00:02:16,887 இந்தோனேஷியாவின் வெப்ப மண்டல தீவுகளில் சூரியன் மறையத் தொடங்குகிறது. 16 00:02:20,182 --> 00:02:22,226 வர்ணனையாளர் டாம் ஹிடில்ஸ்டன் 17 00:02:22,309 --> 00:02:24,686 அந்த அலைகளின் ஆழத்தில்... 18 00:02:26,605 --> 00:02:31,610 இந்த உலகத்தின் மிகவும் புராதன ஆழ்நீர் உலகங்கள் மறைந்து இருக்கின்றன. 19 00:02:39,868 --> 00:02:41,078 பவளப் பாறைகள்... 20 00:02:47,042 --> 00:02:50,087 நமது சமுத்திரங்களின் உயிரின புதையல்கள். 21 00:02:53,507 --> 00:02:58,637 உலகம் முழுதும், அவை கடல் பரப்பில், ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கின்றன... 22 00:03:01,265 --> 00:03:05,519 ஆனால் மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமாக கடல்வாழ் உயிரினங்கள் அங்கே வாழ்கின்றன. 23 00:03:14,403 --> 00:03:18,073 இந்த பாறைகள், எல்லா வடிவங்களிலும் அளவுகளிலுமுள்ள மிக பரபரப்பான ஜந்துக்கள்... 24 00:03:20,742 --> 00:03:24,538 உணவு உண்டு கொண்டு இருக்கும் ஒரு பரபரப்பான நகரம் போல் இருக்கிறது. 25 00:03:29,543 --> 00:03:33,046 அந்த பவளப் பாறைகளின் புல்டோசர்கள் என்று அழைக்கப்படும், ஹம்ப்ஹெட் பாரட்ஃபிஷ், 26 00:03:33,130 --> 00:03:35,674 அந்த பவளங்களை பறவைகளின் அலகுகள் போன்றவற்றால் உண்கின்றன... 27 00:03:41,972 --> 00:03:45,809 அது போல திடமான பவளப்பாறைகளின் அடியில் வளரும் மென்மையான ஸ்பாஞ்சுகளை 28 00:03:45,893 --> 00:03:48,228 ஹாக்ஸ்பில் டர்ட்டில்கள் உண்கின்றன. 29 00:03:59,072 --> 00:04:04,620 திறமையானவைகளுக்கு, உணவு என்பது மிக அதிசயமான இடங்களில் கூட கிடைக்கும். 30 00:04:08,332 --> 00:04:12,503 சிறிய சுத்தப்படுத்தும் வ்ராஸ் ஒரு அந்தரங்கமான சேவை செய்கின்றன. 31 00:04:13,504 --> 00:04:18,175 தங்கள் அக்கம்பக்கத்தவரின் வாயில் உள்ள உணவை அவை உண்கின்றன. 32 00:04:29,603 --> 00:04:32,314 மாலை நேரம் என்பது பவளப்பாறைகளில் நெருக்கடியான நேரம், ஏனென்றால், 33 00:04:33,065 --> 00:04:37,569 அப்போது தான் எல்லா உயிரினங்களும் வெளிச்சம் மறைவதற்கு முன் வேலைகளை முடிக்க அவசரப்படும் 34 00:04:50,082 --> 00:04:52,376 ஆனால் இந்த பரபரப்பான உலகம்... 35 00:04:54,211 --> 00:04:55,796 விரைவில் மாறப் போகிறது. 36 00:05:05,722 --> 00:05:08,600 ஏனென்றால் சூரியன் மறைந்த பிறகு வெளிப்படும் மற்றொரு பக்கமும்... 37 00:05:11,520 --> 00:05:16,233 இந்த பவளப் பாறைகளில் உண்டு. 38 00:05:28,871 --> 00:05:31,081 சமீபகால படப்பிடிப்பு தொழில்நுட்பங்கள் மூலம்... 39 00:05:33,250 --> 00:05:36,086 மறைந்து இருக்கும் இந்த உலகத்தை நம்மால் பார்க்க முடிகிறது... 40 00:05:37,504 --> 00:05:44,511 இரவு நேரத்தில் இந்த பவளப் பாறைகளில் நடக்கும் விஷயங்களையும் பார்க்க முடிகிறது. 41 00:05:58,942 --> 00:06:04,531 இருள் சூழும் போது, சிறு மீன்கள் ஒன்றாக சேர்ந்து பாதுகாப்பாக இருக்க முயலுகின்றன. 42 00:06:08,785 --> 00:06:13,874 பவளப் பாறையில், இரவு ஆரம்பிக்கும் நேரம் தான் மிகவும் ஆபத்தான நேரம். 43 00:06:20,547 --> 00:06:21,757 கார்னெட்ஃபிஷ். 44 00:06:22,591 --> 00:06:26,595 இது ஒரு மீட்டர் நீளம் மற்றும் துப்பாக்கி போன்ற மூக்கு கொண்டது. 45 00:06:28,639 --> 00:06:31,350 இந்த பவளப்பாறைகளின் இரவு நேர துப்பாக்கி வீரன். 46 00:06:37,064 --> 00:06:40,234 பெரிய, ஒளியில் பார்க்கக்கூடிய கண்களைக் கொண்டு... 47 00:06:42,236 --> 00:06:45,072 ஒரு பெரிய மீன்கள் கூட்டத்தை சுற்றி வளைத்து... 48 00:06:50,160 --> 00:06:54,456 துல்லியமான வகையில் மீன்களை தாக்குகின்றன. 49 00:07:05,133 --> 00:07:09,763 ஊசி போன்ற தங்கள் வாய்களால் தங்களது இரையை அவை பிடிக்கின்றன. 50 00:07:15,769 --> 00:07:19,398 மேலும் ஒவ்வொரு மீனாக பிடிக்கின்றன. 51 00:07:32,703 --> 00:07:34,621 அவை தங்கள் உணவை விழுங்கிய பிறகு... 52 00:07:35,497 --> 00:07:37,082 மீதம் இருப்பது... 53 00:07:39,710 --> 00:07:42,087 மீன் செதில்கள் மட்டுமே. 54 00:07:48,385 --> 00:07:52,973 ஆனால் கார்னெட்ஃபிஷ் மட்டும் தான் இருட்டில் மறைந்திருக்கும் வேட்டையாளர் கிடையாது. 55 00:07:58,061 --> 00:08:01,899 பவளப்பாறை வாசிகள் ஆழமாக இடுக்குகளிலும் வெடிப்புகளிலும் மறைந்து கொள்கின்றன... 56 00:08:02,941 --> 00:08:07,779 ஏனென்றால் பெரிய, ஆபத்தான வேட்டையாளர்கள் இப்போது வெளியே வருகின்றன. 57 00:08:09,865 --> 00:08:14,244 அவை ஒவ்வொன்றும் தன் வழியில் இரவு நேர பவளப்பாறைகளை முற்றுகை இடுகின்றன. 58 00:08:32,596 --> 00:08:39,144 இந்த வைட்டிப் ரீஃப் ஷார்க், பவளப்பாறைகளில் வெகு நேரம் இருக்கும் மீன்களை தின்றுவிடும். 59 00:08:42,481 --> 00:08:44,816 அதோடு அது தனியாக இல்லை. 60 00:08:48,612 --> 00:08:53,534 ஒவ்வொரு சிறு மீனின் சிம்மசொப்பனமாக இருக்கும் ஸ்டிங்ரே தென்படுகிறது. 61 00:08:56,036 --> 00:09:03,001 அதனுடைய இரைக்கு, இரவு நேரம் மிக கருமையாகத்தான் தோன்றும். 62 00:09:05,629 --> 00:09:07,673 அது வருவதை அவற்றால் பார்க்க முடியாது. 63 00:09:10,717 --> 00:09:12,177 ஆனால் நம் கேமராக்கள் அது எவ்வாறு... 64 00:09:13,512 --> 00:09:15,514 அந்த பவளப்பாறைகளை முற்றுகை இடுகிறது என காட்டுகின்றன. 65 00:09:17,933 --> 00:09:20,686 அது பார்வையால் அல்ல, எலெக்ட்ரோ ரிசப்டார்களை உபயோகித்து... 66 00:09:21,728 --> 00:09:26,149 பவளப்பாறைகளில் ஒளிந்து இருக்கும் மீன்களின் அசைவுகளை அல்லது... 67 00:09:28,735 --> 00:09:31,280 மணலில் மறைந்து இருக்கும் நண்டுகளை கண்காணிக்கிறது. 68 00:09:36,368 --> 00:09:40,873 இரண்டு மீட்டர்கள் அகலமான சிறகு கொண்டு அவற்றை கடல்மணலில் அழுத்தி விடுகிறது. 69 00:09:47,754 --> 00:09:52,217 மணலை அகற்றினால் இரை கண்ணுக்குத் தெரிந்து விடுகிறது... 70 00:09:59,850 --> 00:10:02,186 அப்படியே அதன் வெற்றிட வாயில்... 71 00:10:07,524 --> 00:10:08,734 அவற்றை விழுங்கி விடுகிறது. 72 00:10:28,420 --> 00:10:30,839 இப்படி நிறைய வேட்டையாளர்கள் இருக்கும் இரவு நேரத்தில்... 73 00:10:34,551 --> 00:10:36,428 நாம் பாதுகாப்பாக இருப்பது தான் சிறந்தது. 74 00:10:48,690 --> 00:10:50,359 ஆனால் இந்த ஆபத்துக்கு இடையில்... 75 00:10:52,569 --> 00:10:58,283 ஒரு சிறிய வண்ணமிக்க மீன் பவளப்பாறைகளின் பாதுகாப்பை விட்டு வெளியே வர பார்க்கிறது. 76 00:11:02,829 --> 00:11:04,373 ஒரு மாண்டரின்ஃபிஷ். 77 00:11:07,876 --> 00:11:09,127 இந்த ஆண் மீன்... 78 00:11:09,837 --> 00:11:12,464 காதலைத் தேடி தான் வந்திருக்கிறது. 79 00:11:15,926 --> 00:11:21,932 இன்றிரவு ஒரு மணி நேரத்திற்குள் எட்டுக்கும் அதிகமான பெண்களோடு உறவு கொள்ள நினைக்கிறது. 80 00:11:25,394 --> 00:11:31,316 ஆனால் அவற்றை கண்டு பிடிப்பதற்காக, அது மிகவும் ஜாக்கிரதையாக நகர வேண்டும். 81 00:11:43,662 --> 00:11:46,164 அந்த இருட்டிற்கு இடையில், அது... 82 00:11:47,791 --> 00:11:49,001 ஒரு பெண்... 83 00:11:50,252 --> 00:11:55,507 இறால் போன்ற கோபேபாடுகளை, மாலை உணவாக உண்பதை பார்க்கிறது. 84 00:11:58,927 --> 00:12:01,722 ஆனால் அந்த பெண் மீனும் தன் உணவை தேர்ந்து எடுப்பது போலவே... 85 00:12:04,600 --> 00:12:07,603 தன் காதலர்களையும் தேர்ந்து எடுக்கிறது. 86 00:12:17,154 --> 00:12:21,575 அதன் அன்பைப் பெறுவதற்காக, அந்த ஆண் மீன் தன் துடுப்புகளை... 87 00:12:23,327 --> 00:12:28,457 பெரியதாக, அழகானதாக விரித்து அந்த பெண் மீனை கவருகிறது. 88 00:12:36,048 --> 00:12:37,883 அந்த பெண் மீனும் கவரப்பட்டு விட்டது. 89 00:12:48,477 --> 00:12:54,149 ஆனால் ஒன்றிணைவதற்கு, அந்த இருளைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்த... 90 00:12:56,151 --> 00:12:59,404 இன்னும் ஒரு தைரியமான வேலையை அவர்கள் செய்தாக வேண்டும். 91 00:13:05,202 --> 00:13:08,413 அவற்றின் முட்டைகளை உண்பதற்காக மீன்கள் பவளப்பாறைகளில் ஒளிந்திருப்பதால்... 92 00:13:14,378 --> 00:13:18,340 அந்த புது தம்பதி பவளப்பாறைகளுக்கு மேலே எழும்பி... 93 00:13:20,050 --> 00:13:23,971 ஒரு அற்புதமான காதல் நடனம் செய்கின்றன. 94 00:13:40,529 --> 00:13:42,656 அவர்களது இரவு நேர நடனம் முடிந்த பிறகு... 95 00:13:43,866 --> 00:13:46,660 அந்த ஜோடி பவளப்பாறைகளின் பாதுகாப்பில் ஒதுங்குகின்றன... 96 00:13:49,913 --> 00:13:51,623 ஆனால் வெகு நேரத்திற்கு அல்ல. 97 00:13:55,252 --> 00:13:58,172 இன்னும் ஏழு பெண் துணைகளைத் தேடி... 98 00:14:00,215 --> 00:14:04,469 அந்த காதல் மன்னன் இருளையும் பொருட்படுத்தாது 99 00:14:04,553 --> 00:14:07,931 தனது அடுத்த நடன ஜோடியைத் தேடி செல்கிறது. 100 00:14:20,569 --> 00:14:22,070 இரவு தொடரும் போது... 101 00:14:23,113 --> 00:14:27,284 அந்த இருளில் இயற்கையின் மிக சிறந்த மறைந்திருக்கும் அதிசயங்கள் வெளிவருகிறது... 102 00:14:33,207 --> 00:14:38,545 அந்த பவளப்பாறைக்கு மாயாஜால மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்ச்சி தான் அது. 103 00:14:43,050 --> 00:14:48,639 கடலின் ஆழங்களில் இருந்து, வேற்று கிரகத்தில் இருந்து வருவது போல... 104 00:14:51,391 --> 00:14:54,311 மிகச்சிறிய விலங்குகளின் ஒரு சேனை வெளிவருகிறது. 105 00:14:58,857 --> 00:15:03,111 நம் பூமியின் ஜந்துக்களின் மிகப்பெரிய ஒரு புலன் பெயர்ச்சி தான் இது, 106 00:15:03,987 --> 00:15:07,491 மற்றும் அது ஒவ்வொரு இரவும் நம் சமுத்திரங்களில் நடக்கிறது. 107 00:15:11,036 --> 00:15:14,665 ஒரு பில்லியன் டன் அளவிற்கும் மேலான பிளாங்க்டன் உயிரிகள் 108 00:15:14,748 --> 00:15:19,169 கடல் ஆழத்தில் இருந்து மேலே வந்து கடற்பரப்பில் உணவு உண்ண வருகின்றன. 109 00:15:28,762 --> 00:15:32,558 ஒரு அரிசி மணியின் அளவை விட, சிறியதாய் இருக்கும் சில உயிரினங்களான இவை தான்... 110 00:15:34,059 --> 00:15:36,728 சமுத்திரங்களின் உயிரோட்டமாகத் திகழ்கின்றன. 111 00:15:42,067 --> 00:15:45,946 பலவித ஒளிரும் தன்மைகளும் நகர்வதற்கான பாகங்களும் கொண்டு... 112 00:15:49,867 --> 00:15:54,079 இவை மேலே வந்து இருளில் கடற்பரப்பில் மிதக்கும் உணவு துகள்களை உண்கின்றன. 113 00:16:16,143 --> 00:16:20,105 முழுவதுமாக மறைந்திருக்கும் இந்த உலகத்திலேயே சில உயிரினங்கள் வாழ்கின்றன. 114 00:16:23,609 --> 00:16:26,612 மற்ற சில, மான்டிஸ் ஷ்ரிம்ப் லார்வேக்கள் போன்றவை, 115 00:16:27,196 --> 00:16:31,450 இந்த மாறுபட்ட இடத்தில் தங்கள் வாழ்க்கையின் ஆரம்பப் பகுதியை மட்டும் கழித்து விட்டு 116 00:16:32,034 --> 00:16:35,621 பின்னர் தாங்கள் வளர்ந்த பிறகு பவளப்பாறைகளுக்கே திரும்பி விடுகின்றன. 117 00:16:58,519 --> 00:17:00,812 மேலே எழும்பி வரும் உயிரினங்கள்... 118 00:17:01,522 --> 00:17:07,277 இப்போது பவளப்பாறைகளில் ஒரு மாயாஜால மாற்றத்தை ஏற்படுத்துகிறது. 119 00:17:13,367 --> 00:17:16,994 அசைவற்ற பாறைகள் உயிர் பெற்று எழுகின்றன. 120 00:17:43,522 --> 00:17:49,695 மிகச் சிறிய உயிரினங்களால் ஆன மிகப் பெரிய சமுதாயங்களாக பவளப்பாறைகள் திகழ்கின்றன. 121 00:17:51,446 --> 00:17:54,992 பகல் நேரத்தில், பவளப்பாறைகள் சூரியனில் இருந்து சக்தியை எடுத்துக்கொள்கின்றன. 122 00:17:58,036 --> 00:17:59,246 ஆனால் இரவில்... 123 00:18:01,999 --> 00:18:06,044 இந்த விலங்குகள் தங்கள் கொடுக்குகளைப் பரப்பி இந்த நுண்ணிய கிருமிகள் உலகத்தின்... 124 00:18:07,713 --> 00:18:10,841 வேட்டையாளர்களாக ஆகி விடுகின்றன. 125 00:18:18,515 --> 00:18:20,851 இங்கே மிதந்து வரும் சிறிய உயிரினங்களுக்கு இந்த வண்ண மயமான தோட்டம்... 126 00:18:22,769 --> 00:18:29,776 மிக பயங்கரமான வேட்டையாளர்களின் மில்லியன் கணக்கான வாய்களால் ஆன ஒரு சுவராக மாறுகிறது. 127 00:18:52,591 --> 00:18:57,471 இந்த இரவுநேர விருந்து தான் பவளப்பாறைகள் வளர்வதற்குத் தேவையான சத்துக்களை 128 00:18:57,554 --> 00:18:59,681 உண்டாக்கிக் கொடுக்கிறது. 129 00:19:03,602 --> 00:19:08,440 நமக்கு இப்போது தெரிவது போல, கடலின் வெப்ப நிலை கூடி வருவதால், 130 00:19:09,024 --> 00:19:13,779 இந்த இரவுநேர உணவு உண்ணும் நிகழ்ச்சி, அவற்றின் வாழ்விற்கு முக்கியமாக இருக்கிறது. 131 00:19:33,924 --> 00:19:39,555 இந்த சிறு பவளப்பாறைகள் மட்டுமே அந்த இரவு நேர பிளாங்க்டன் அலைகளை நம்பி இருக்கவில்லை. 132 00:19:43,058 --> 00:19:48,939 மற்றப் பெரிய உயிரினங்களும் கூட இந்த இரவு நேர விருந்திற்கு தயாராக இருக்கின்றன: 133 00:19:53,735 --> 00:19:59,783 அதில் ஒன்று மண்டா ரே, தனது நான்கு மீட்டர் சிறகுகளை விரித்தவாறு காத்திருக்கிறது. 134 00:20:02,661 --> 00:20:04,204 தனித்து இருந்தாலும்... 135 00:20:05,747 --> 00:20:10,294 வெப்ப மண்டல சமுத்திரங்களில் சில இடங்களில் அபரிதமான பிளாங்க்டன்கள் இருப்பதால், 136 00:20:10,377 --> 00:20:12,921 இந்த மண்டாக்கள் உணவு உண்ண ஒன்றாக கூடுகின்றன. 137 00:20:18,302 --> 00:20:22,556 இந்த, ஒரு டன் எடையுள்ள பெரிய விலங்குகள், இரவில் அலைகளில் எழும்பும், 138 00:20:23,056 --> 00:20:29,188 இந்த சிறு பிளாங்க்டன்களால் உயிர் வாழ்கிறது என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். 139 00:20:37,487 --> 00:20:42,534 கொம்பு போன்ற துடுப்புகளால், அவை அந்த பிளாங்க்டன்களை வாரி... 140 00:20:48,457 --> 00:20:50,918 தங்கள் வாய்களுக்குள் செலுத்தி, தங்கள் உணவை வடிகட்டுகின்றன. 141 00:21:01,261 --> 00:21:03,347 இரவு நேரத்தில்... 142 00:21:04,473 --> 00:21:09,853 கிடைக்கும் அபரிமிதமான உணவை உண்பதன் மூலம், அவை தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றன. 143 00:21:35,796 --> 00:21:38,715 குதித்து குதித்து வளைத்து வளைத்து... 144 00:21:39,591 --> 00:21:42,886 பெரும் அளவிலான பிளாங்க்டன்களை சேர்த்து... 145 00:21:44,429 --> 00:21:46,932 விழுங்குகின்றன. 146 00:22:17,629 --> 00:22:22,759 மண்டா ரேகளுக்குத்தான் மீன்கள் இனத்திலேயே அதிக அளவு மூளை உண்டென்பது தெரிந்துவிட்டது. 147 00:22:24,761 --> 00:22:29,308 ஆனால் இருள் படர்ந்த பிரமாண்டமான கடலுக்குள் 148 00:22:29,391 --> 00:22:34,479 அவை எப்படி தங்கள் உணவைத் தேடி வருகின்றன என்பது ஒரு புதிராகவே இருக்கிறது. 149 00:22:42,821 --> 00:22:47,534 நமது இரவு நேர கடல் வாழ்க்கையில் இன்னும் கண்டுபிடிக்கப்பட வேண்டிய... 150 00:22:48,118 --> 00:22:50,579 பல ரகசியங்களில் ஒன்றாக அது இருக்கிறது. 151 00:23:06,261 --> 00:23:10,349 இரவில் பூமி 152 00:23:10,432 --> 00:23:13,894 இரவில் படம்பிடிக்கப்பட்டது 153 00:23:15,312 --> 00:23:19,149 பவளப்பாறைகளின் இரவு நேர நிகழ்ச்சிகளை படம் பிடிப்பதற்காக, உலகின் மிக அற்புதமான 154 00:23:19,233 --> 00:23:24,071 வெப்ப மண்டல கடல்களில் 'எர்த் அட் நைட்' குழுவினர் படப்பிடிப்பு நடத்தினார்கள். 155 00:23:28,951 --> 00:23:31,119 பவளப்பாறைகளின் இரவு வேட்டையாளர்களை படம் பிடிப்பது தான், 156 00:23:31,203 --> 00:23:36,124 ஒளிப்பதிவாளர் டேவிட் ரெய்சர்ட்-க்கு பெரிய சவாலாக இருந்தது. 157 00:23:38,544 --> 00:23:43,006 சுறா மீன்களும் மற்ற வேட்டை மீன்களும் இரவில் மிகப் பரபரப்பாக இருக்கும்... 158 00:23:45,843 --> 00:23:49,304 ஆனால் அவற்றை பாதுகாப்பாக அணுகுவது மிகவும் கடினமாக இருக்கும். 159 00:23:53,183 --> 00:23:55,394 இரவு நேரத்தில் படம் பிடிப்பது என்பது ஒரு புது உலகமாக இருக்கும். 160 00:23:59,898 --> 00:24:02,693 இருட்டில் இருந்து என்ன வரப் போகிறது என்பதே எங்களுக்குத் தெரியாது. 161 00:24:04,278 --> 00:24:05,279 டேவிட் ரெய்சர்ட் ஒளிப்பதிவாளர் 162 00:24:05,362 --> 00:24:06,947 நாம் தெரிந்து கொள்வோம். இப்போது உள்ளே போகிறோம். 163 00:24:17,875 --> 00:24:21,628 பௌர்ணமி நாட்களில் வலிமையான அலைகள், 164 00:24:21,712 --> 00:24:24,381 பவளப்பாறைகளில் உணவை சேர்க்கும் நேரம் என்பதால் வேட்டையாளர்கள்... 165 00:24:25,215 --> 00:24:27,968 பரபரப்பாக இயங்கும், எனவே டேவிட் அப்போது உள்ளே செல்ல முடிவெடுத்தார். 166 00:24:32,139 --> 00:24:34,474 ஆனால் அது பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியது. 167 00:24:34,975 --> 00:24:38,437 மேற்பரப்பிலிருந்து டைவர்களிடம் பேசுகிறோம். நீரோட்டம் எப்படி இருக்கிறது? 168 00:24:40,105 --> 00:24:43,192 சரியாக இல்லை. நீரோட்டம் அதிகமாக இருக்கு. 169 00:24:44,818 --> 00:24:47,321 நாங்கள் கிளம்புகிறோம். மேலே வருகிறோம். 170 00:24:51,658 --> 00:24:53,952 கீழே நீரோட்டம் மிகவும் அதிகமாக இருப்பதால், 171 00:24:54,036 --> 00:24:57,789 நிலையாக அங்கே இருப்பது கடினமாக இருக்கிறது. 172 00:24:57,873 --> 00:24:59,249 வந்து, அது மோசமாக இருந்தது. 173 00:25:00,667 --> 00:25:01,752 ஆமாம்... 174 00:25:03,212 --> 00:25:05,297 நீரோட்டம் அதிகமாக இருக்கும் போது, அங்கே, 175 00:25:05,380 --> 00:25:07,132 நிறைய பரபரப்பும், நிகழ்வுகளும் படம் பிடிக்க இருக்கின்றன. 176 00:25:07,216 --> 00:25:08,800 இன்னமும் அதிகமாக இருக்கிறது. 177 00:25:08,884 --> 00:25:11,512 ஆனால் அங்கே இருப்பதற்கே எங்களுக்குக் கடினமாக இருக்கிறது. 178 00:25:11,595 --> 00:25:13,055 அப்படிப்பட்ட நிலைமை தான் இப்போது. 179 00:25:16,683 --> 00:25:22,397 வரக்கூடிய இரவுகளில், முழு நிலவு தேயும் போது நீரோட்டம் குறையும். 180 00:25:24,691 --> 00:25:29,613 நீரில் மூழ்குவது சுலபமாக இருந்தாலும், பவளப்பாறைகள் காலியாக இருக்கும். 181 00:25:32,533 --> 00:25:33,534 ஆமாம். 182 00:25:33,617 --> 00:25:38,205 ஆமாம், நீரோட்டம் ஓய்ந்ததனால், அனைத்தும்... 183 00:25:38,288 --> 00:25:39,706 ஆமாம், இருப்பிடத்திற்குச் சென்று விட்டன. 184 00:25:39,790 --> 00:25:41,250 -ஆமாம். -ஆமாம். 185 00:25:42,626 --> 00:25:45,379 சரியான தருணத்தை நம் குழுவினர் தேடும் போது... 186 00:25:45,462 --> 00:25:48,340 நீரோட்டத்திற்கு மத்தியில் தண்ணீர் மந்தமடையும்... 187 00:25:49,383 --> 00:25:52,177 ஒரு சிறிய இடைவெளி மட்டும் இருப்பதைத் தெரிந்து கொள்கிறார்கள். 188 00:26:00,602 --> 00:26:02,104 அப்படி படம் பிடிப்பது கடினமாக இருக்கலாம், 189 00:26:02,187 --> 00:26:06,483 ஏனென்றால் அது சூரியன் அஸ்தமனமாகும் மாலை 6:00 மணியாகவும் இருக்கலாம், 190 00:26:06,567 --> 00:26:11,363 ஆனால் அந்த தருணத்தை நாம் விட்டு விட்டால், திடீரென்று அதிகாலை 4:00 மணி ஆகிவிடலாம். 191 00:26:11,446 --> 00:26:12,906 எனவே 40 நிமிடம் நீரில் மூழ்குவதற்காக 192 00:26:12,990 --> 00:26:18,161 நாம் இரவு முழுவதும், காத்திருக்கும், கடினமான நேரங்களும் ஏற்படும். 193 00:26:20,581 --> 00:26:21,832 எனக்கு ஒரு கோப்பை தேநீர் கொடுங்கள். 194 00:26:24,960 --> 00:26:27,921 தளர்வில்லாமல் பல இரவுகள் முழித்திருந்து... 195 00:26:28,964 --> 00:26:32,009 டேவிட் மற்றும் அவரது குழுவினர், தாங்கள் தேடிக் கொண்டிருந்த புதுமையான 196 00:26:32,092 --> 00:26:35,220 நடத்தைகளை படம் பிடிக்கத் தொடங்குகிறார்கள். 197 00:26:36,263 --> 00:26:39,766 இந்த கார்னட் ஃபிஷ் இப்படி தாக்குவதை இதற்கு முன் பார்த்தது கிடையாது. 198 00:26:40,642 --> 00:26:42,728 எல்லாவற்றிலும் வெல்ல முடியாது, ஆனால் இந்த ஒன்றை வென்று விட்டோம். 199 00:26:47,316 --> 00:26:51,403 ஒவ்வொரு வேட்டையாளரும் தன் பாணியில் தனது இரையை பின் தொடருகிறது. 200 00:26:53,447 --> 00:26:58,285 மோரே ஈல்கள் வேட்டையாடுவதற்காக பவளப்பாறைகளைத் தேடி வந்தன. 201 00:26:58,368 --> 00:27:00,954 அந்த மொரே, பவளப்பாறைகளின் மேல் பகுதியில் உணவு உண்டது. 202 00:27:02,372 --> 00:27:05,459 அங்கே, கீழ் பகுதி வரைக்கும், செல்லக்கூடிய ஒரு துளை இருந்தது. 203 00:27:13,050 --> 00:27:14,843 அங்கே, ஒரு சிறு மீன் இருந்தது, 204 00:27:14,927 --> 00:27:16,053 மற்றும் அந்த மொரேவும் அங்கு சென்றது. 205 00:27:17,221 --> 00:27:18,305 அங்கே இருக்கிறது. 206 00:27:23,101 --> 00:27:24,353 அதன் பிறகு, அவ்வளவு தான். 207 00:27:28,398 --> 00:27:31,693 சிறப்பு! கேமராவிற்கு முன்னால் நடந்தது. துளைக்குள்ளேயே நடந்தது இன்னும் சிறப்பு. 208 00:27:36,490 --> 00:27:38,992 இந்த பவளப்பாறைகளில் நிறைய விஷயங்கள் நடக்கின்றன. 209 00:27:39,952 --> 00:27:43,288 இரவில் மட்டும் பரபரப்பாகும் ஒரு வண்ணமயமான சமுதாயத்தை 210 00:27:43,372 --> 00:27:45,999 அங்கே நம்மால் காண முடிகிறது. 211 00:27:50,295 --> 00:27:54,091 புதுமையான தனித்துவமான விஷயங்களை இந்த அற்புதமான ஆழ்கடல் உலகத்தில் 212 00:27:54,174 --> 00:27:57,678 நமது குழுவால் படம் பிடிக்க முடிந்தது. 213 00:28:42,055 --> 00:28:44,057 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்