1 00:00:07,341 --> 00:00:09,843 புவி மிகவும் வண்ணமயமாக இருப்பதால், 2 00:00:10,677 --> 00:00:13,680 வாழ்வில் சில சின்னஞ்சிறிய விஷயங்களை தவறவிடுவது சகஜம். 3 00:00:15,766 --> 00:00:17,643 ஆனால், சற்று கூர்ந்து கவனித்தால்... 4 00:00:18,101 --> 00:00:20,562 அங்கு கண்டறியப்படாத ஒரு உலகமே உள்ளது. 5 00:00:22,648 --> 00:00:24,983 சிறிய சாகசக்காரர்களுக்கும்... 6 00:00:26,485 --> 00:00:27,819 சிறிய அரக்கர்களுக்கும்... 7 00:00:28,987 --> 00:00:31,406 ராட்சத எதிர்ப்புகள் மீது வெற்றிக்கொள்ள... 8 00:00:34,618 --> 00:00:40,040 அசாத்திய சக்திகள் தேவைப்படும் ஒரு உலகம். 9 00:00:58,141 --> 00:01:01,520 கிரகத்தின் மிகவும் மாறுபட்ட சில இடங்களாக பவளப்பாறைகள் இருக்கின்றன. 10 00:01:01,603 --> 00:01:03,021 வர்ணனையாளர் பால் ரட் 11 00:01:05,190 --> 00:01:09,319 கும்பலாக நீந்தும் மீன்கள் மற்றும் அற்புதமான உயிரினங்களின் வீடு. 12 00:01:13,031 --> 00:01:14,241 ஆனால் அதற்கு கீழே... 13 00:01:14,908 --> 00:01:16,493 ஒரு பெருநகரத்தின் சிறிய உருவம்... 14 00:01:19,830 --> 00:01:23,250 அசாதாரண சிறிய உயிரினங்களால் பரபரப்படைகிறது. 15 00:01:27,129 --> 00:01:28,964 இந்த மிருகங்கள் சிறியதாக இருக்கலாம்... 16 00:01:29,882 --> 00:01:32,092 ஆனால் அவை செய்யும் வேலை அவசியமானது. 17 00:01:35,387 --> 00:01:38,390 இப்போது, அவை எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக இயங்குகின்றன. 18 00:01:40,684 --> 00:01:44,897 வருடத்திற்கு ஒருமுறை, அதன் எதிர்காலத்தைப் பாதுகாக்க இன்றியமையாத ஒரு அற்புதமான... 19 00:01:45,772 --> 00:01:48,025 இனப்பெருக்க நிகழ்வை நீரடிப்பாறை நிகழ்த்துகிறது. 20 00:01:50,277 --> 00:01:53,780 ஆனால் ஒரு பெரிய நீரடிப்பாறையில் சிறிய மீனாக இருப்பது எளிதானதல்ல. 21 00:01:56,658 --> 00:02:03,290 பவள நகரத்தை உயிருடன் வைத்திருக்க சிறிய உயிர்கள் பெரிய சவால்களை சமாளிக்க வேண்டும். 22 00:02:06,668 --> 00:02:10,839 நீரடிப்பாறை 23 00:02:15,511 --> 00:02:19,723 பவளப்பாறை எந்தவொரு நகரத்தை போலவும் சிக்கலானது மற்றும் நெருக்கமானது. 24 00:02:23,227 --> 00:02:27,564 ஒவ்வொரு நாளும் பரபரப்போடும் சத்தத்தோடும் தொடங்குகிறது. 25 00:02:30,817 --> 00:02:36,323 அனைத்தும் பரபரப்பான நீருக்கடி விடியலில் ஒன்றுகொன்றை வாழ்த்திக்கொள்கின்றன... 26 00:02:39,576 --> 00:02:41,495 முன்னும் பின்னும் துடுப்புகளை ஆட்டியும்... 27 00:02:43,288 --> 00:02:44,706 நகங்களை தட்டியும்... 28 00:02:46,083 --> 00:02:47,501 பற்களை கடித்தும். 29 00:02:53,507 --> 00:02:58,220 செழிப்பான சமூகத்துடன் ஆரோக்கியமான சிறிய உயிரினங்களை கொண்ட நீரடிப்பாறையால்தான் 30 00:02:58,887 --> 00:03:00,389 இவ்வளவு சத்தத்தை எழுப்ப முடியும். 31 00:03:09,815 --> 00:03:13,193 இங்கே உள்ள பாதிக்கும் அதிகமான மீன்கள் பாட்டில் மூடியை விட சிறியவை. 32 00:03:17,447 --> 00:03:20,075 ஆனால் அவற்றின் சேவைகள் மிகவும் தேவையானவை. 33 00:03:28,834 --> 00:03:31,128 ஒரு ஆமை சுத்தம் செய்துகொள்ள வருகிறது... 34 00:03:33,005 --> 00:03:34,673 ஓட்டை கொஞ்சம் பளபளப்பாக்க. 35 00:03:49,688 --> 00:03:53,317 ஒரு சிறிய ப்லென்னி தனியாக செய்வதற்கு இது மிகப்பெரும் வேலை. 36 00:03:57,988 --> 00:04:02,284 எனவே, பாசியை உண்ணும் மீன்களின் குழு இதை பளபளப்பாக்க உதவுகிறது. 37 00:04:18,550 --> 00:04:21,970 கோமாளி மீன் குடும்பம் கடற்சாமந்தியை கவனித்துக்கொள்வதில் பரபரப்பாக இருக்கிறது. 38 00:04:25,724 --> 00:04:28,936 சில வேட்டையாடுபவை அதன் கொட்டும் உணர்கொம்புகளில் நுழைவதற்கு பயப்படும். 39 00:04:31,438 --> 00:04:34,399 ஆனால் கோமாளி மீன்களில் பிசினால் ஆன பாதுகாப்பு கவசம் உள்ளது, 40 00:04:34,483 --> 00:04:36,485 இது அவை இங்கு நிரந்தரமாக வாழ அனுமதிக்கிறது. 41 00:04:42,699 --> 00:04:46,578 பதிலுக்கு, அவை கடற்சாமந்தியை சுத்தமாகவும் உயிரோட்டமாகவும் வைத்துக்கொள்கின்றன. 42 00:04:51,792 --> 00:04:56,255 கீழே மறைவாக, ஆண் மீன் 500 முட்டைகளை கவனித்துக்கொள்ள வேண்டும். 43 00:04:58,131 --> 00:05:00,843 ஒவ்வொன்றும் ஒரு அரிசியை விட சிறியவை. 44 00:05:05,514 --> 00:05:08,600 நீரடிப்பாறை இனப்பெருக்கம் செய்யும் அதே இரவில் குஞ்சு பொரித்தால், 45 00:05:08,684 --> 00:05:11,520 அது அவை உயிர்வாழ சிறந்த வாய்ப்பை வழங்கும். 46 00:05:17,609 --> 00:05:20,028 அதுவரை, அவை பாதுகாப்பாக இருக்க வேண்டும். 47 00:05:21,613 --> 00:05:24,616 இது நீரடிப்பாறையில் மிகவும் பாதுகாப்பான இடங்களில் ஒன்று. 48 00:05:26,785 --> 00:05:28,662 அதோடு, குடும்பமும் அதை விட்டு தூரமாக செல்லாது. 49 00:05:33,208 --> 00:05:36,837 இங்கே, எப்போதும் ஒரு பெரிய மீன் இருக்கும். 50 00:05:43,760 --> 00:05:45,762 சிறுத்தை பவள கோமேறி. 51 00:06:02,946 --> 00:06:05,949 கோமேறி மீனிடம் சிக்காமலிருக்க... 52 00:06:07,826 --> 00:06:09,661 டேம்செல் மீன் இடுக்கில் ஒளிந்துகொள்கிறது. 53 00:06:12,664 --> 00:06:14,499 இந்த புத்திசாலித்தனமான மீன் முயற்சியை கைவிடாது. 54 00:06:16,001 --> 00:06:17,336 அது மேலும்... 55 00:06:18,295 --> 00:06:19,296 உதவியை நாடுகிறது. 56 00:06:25,969 --> 00:06:28,847 ஆக்டோபஸ் ஒரு கூடா நட்பாகத் தோன்றலாம். 57 00:06:30,682 --> 00:06:33,393 ஆனால் ஒன்றாக, அவை ஒரு கொல்லும் அணியாக முடியும். 58 00:06:37,439 --> 00:06:40,359 கோமேறி அதன் வண்ணங்களை உருமறைப்புக்காக மாற்றும்போது... 59 00:06:41,818 --> 00:06:43,946 வேட்டை தொடங்குகிறது. 60 00:07:00,754 --> 00:07:02,965 டேம்செல் மீனிற்கு இப்போது இரட்டை சிக்கல். 61 00:07:15,769 --> 00:07:17,980 கோமேறி அவற்றின் இருப்பிடத்தை அறிந்துகொள்கிறது. 62 00:07:19,815 --> 00:07:21,900 பிறகு வெளிர் நிறத்துக்கு மாறி அதன் கவனத்தை ஈர்க்கிறது. 63 00:07:30,075 --> 00:07:31,285 உணர்கொம்புகள் இறங்குகின்றன. 64 00:07:32,578 --> 00:07:34,121 மீன் பதட்டமடையும். 65 00:07:35,622 --> 00:07:37,791 மீன் நேராக கோமேறியின் வாய்க்குள் செல்லும். 66 00:07:43,338 --> 00:07:44,923 அது ஒரு மோசமான தேர்வு. 67 00:07:46,633 --> 00:07:50,679 நகராமல் இருந்து ஆக்டோபஸிடம் சிக்குவதை எதிர்கொள்வது. 68 00:07:52,347 --> 00:07:53,432 அல்லது தப்பித்து... 69 00:07:55,017 --> 00:07:57,686 கோமேறியால் உண்ணப்படுவது. 70 00:08:05,027 --> 00:08:06,612 பாதுகாப்பாக தப்பிக்க முடியாவிட்டால்... 71 00:08:08,071 --> 00:08:11,283 சில நேரங்களில் திருப்பி சண்டையிடுவதுதான் ஒரே வழி. 72 00:08:18,957 --> 00:08:21,293 டேம்செல் மீன் கும்பல் ஆக்டோபஸை சுற்றி வந்து, 73 00:08:22,669 --> 00:08:24,296 அதை துரத்த முயற்சிக்கின்றன. 74 00:08:29,134 --> 00:08:33,013 ஆனால் இந்த கிளர்ச்சி இன்னும் பெரிய மீனை ஈர்க்கிறது. 75 00:08:41,063 --> 00:08:43,899 சிறிய மீன்கள் தப்பிக்க இது ஒரு வாய்ப்பு. 76 00:08:50,948 --> 00:08:52,616 சுறாக்கள் வட்டமிடும்போது... 77 00:08:55,035 --> 00:08:58,872 திடீரென, ஒவ்வொன்றும் தங்கள் நலனுக்காக செயல்படுகின்றன. 78 00:09:04,670 --> 00:09:06,088 குழுபணிக்கு பயனளிக்கவில்லை. 79 00:09:16,640 --> 00:09:19,059 பெரிய சுறாக்கள் சிறிய மீன்களை கண்டுகொள்வதில்லை. 80 00:09:22,104 --> 00:09:27,943 ஆனால் மற்ற வேட்டையாடுபவற்றை பயமுறுத்தி, சிறிய மீன்கள் தங்கள் பணி செய்ய உதவுகிறது. 81 00:09:32,865 --> 00:09:35,075 கிரேஸர்கள் நீரடிப்பாறையை பாசி இன்றி வைத்திருக்கின்றன. 82 00:09:39,121 --> 00:09:41,748 மெதுவாக வளரும் பவளம் செழிக்க உதவுகிறது. 83 00:09:47,629 --> 00:09:51,675 உண்மையில், பவளம் சிறிய உயிரினங்களின் காலனிகளால் ஆனது. 84 00:09:53,468 --> 00:09:59,516 ஒவ்வொன்றும் ஒளியை உணவாக மாற்றும் நுண்ணிய தாவர செல்களைக் கொண்டிருக்கும். 85 00:10:02,644 --> 00:10:06,648 முழு நீரடிப்பாறையையும் உருவாக்கிய ஒரு அற்புதமான கூட்டணி. 86 00:10:10,819 --> 00:10:14,198 ஒன்றாக, பில்லியன் கணக்கான சிறிய உயிர்கள்... 87 00:10:15,782 --> 00:10:18,994 பூமியில் மிகப்பெரிய வாழும் கட்டமைப்புகளை உருவாக்குகின்றன. 88 00:10:26,668 --> 00:10:28,879 ஆனால் இந்த பவள நகரங்கள் எளிதில் உடையக்கூடியவை. 89 00:10:32,090 --> 00:10:34,301 வெப்பமயமாகும் கடல்களால் பாதிப்படையும்... 90 00:10:35,969 --> 00:10:37,179 மாசு காரணமாக... 91 00:10:38,222 --> 00:10:39,348 அதிக மீன்பிடிப்பால்... 92 00:10:40,516 --> 00:10:42,601 அதோடு அத்துமீறி நுழைதலால். 93 00:10:46,396 --> 00:10:48,690 நூற்றுக்கணக்கான குழாய் போன்ற பாதங்களில் ஊர்ந்து செல்லும். 94 00:10:52,444 --> 00:10:54,655 விஷ கொடுக்குகளை ஆயுதமாகக் கொண்டது. 95 00:11:02,788 --> 00:11:03,997 இராட்சத... 96 00:11:04,915 --> 00:11:06,124 பவளத்தை உண்ணும்... 97 00:11:07,084 --> 00:11:09,503 முட்கிரீட நட்சத்திரமீன். 98 00:11:13,632 --> 00:11:16,927 இதனால் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பவளங்களை துவம்சம் செய்ய முடியும். 99 00:11:20,722 --> 00:11:22,933 அதோடு இங்கே ஒன்று மட்டும் இல்லை. 100 00:11:24,101 --> 00:11:26,103 இங்கே அவற்றின் ஒட்டுமொத்த படையும்... 101 00:11:27,479 --> 00:11:30,607 எல்லா சிறிய உயிரினங்களின் வீட்டையும் அழிக்கிறது. 102 00:11:38,866 --> 00:11:41,285 ஆனால் தங்களுக்கு வரப்போகும் அச்சுறுத்தல் பற்றி அறியாமல், 103 00:11:42,703 --> 00:11:47,332 நீரடிப்பாறையின் வாசிகள் இனபெருக்கம் செய்ய தயாராகி வருகின்றன. 104 00:11:48,750 --> 00:11:50,377 அதோடு உணவையும் தேடுகின்றன. 105 00:11:55,966 --> 00:11:59,178 விலங்கினத்தில் மிகவும் சிக்கலான கண்கள். 106 00:12:00,596 --> 00:12:03,807 மனிதனை விட நான்கு மடங்கு நிறைய வண்ண ஏற்பிகளைக் கொண்டு, 107 00:12:05,142 --> 00:12:10,147 மயில் மான்டிஸ் இறால் உலகத்தை முற்றிலும் வேறொரு விதமாக பார்க்கிறது. 108 00:12:14,026 --> 00:12:19,740 இது பற்பசை டியுப் அளவுள்ளது, ஆனால் நிச்சயமாக பாதுகாப்பற்றதும் அல்ல. 109 00:12:22,743 --> 00:12:28,790 இது 9 மில்லிமீட்டர் குண்டின் வேகத்தை விட வேகமாக தாக்கும் திறன் கொண்டது. 110 00:12:30,626 --> 00:12:33,629 எவ்வளவு வேகமாக என்றால், இது தண்ணீரை ஆவியாக்குகிறது. 111 00:12:39,176 --> 00:12:41,512 அந்த தாக்குதல் ஒளியை கூட உருவாக்குகிறது. 112 00:12:50,854 --> 00:12:53,982 ஆனால் நன்கு ஆயுதம் ஏந்திய மான்டிஸ் இறால்களுக்கு கூட பாதுகாப்பான இடம் தேவை. 113 00:12:58,445 --> 00:13:01,448 அதன் வளை, விரைவில் குஞ்சுகளின் வீடாக மாறும். 114 00:13:03,700 --> 00:13:05,327 வீட்டை புதுப்பிப்பது முடிந்ததும். 115 00:13:12,543 --> 00:13:14,378 துணையை தேடி வந்த ஒரு ஆண் விருந்தினரை... 116 00:13:16,213 --> 00:13:17,464 இது ஏற்கனவே பார்த்துவிட்டது. 117 00:13:18,799 --> 00:13:20,801 அல்லது அதன் வீட்டை கைப்பற்ற வந்ததை. 118 00:13:27,766 --> 00:13:28,809 எதுவாயினும்... 119 00:13:30,602 --> 00:13:33,856 அதன் மின்னல் வேக தாக்குதல் தெளிவாக உணர்த்துகிறது... 120 00:13:37,276 --> 00:13:39,403 அது விருந்தினர்களுக்கு தயாராக இல்லை என்று. 121 00:13:44,616 --> 00:13:47,786 ஆனால் இது மறைந்துகொள்ள முடியாத ஒரு ஆபத்தான இடம். 122 00:14:01,341 --> 00:14:02,801 ஒரு பயங்கரமான வேட்டைக்காரன். 123 00:14:08,599 --> 00:14:09,933 ஒரு டீ கோப்பையின்... 124 00:14:12,227 --> 00:14:13,228 அளவுள்ளது. 125 00:14:16,690 --> 00:14:18,525 குள்ளக் கனவாய் மீன். 126 00:14:19,484 --> 00:14:23,322 இது இனப்பெருக்க நிலையை அடைய வேண்டுமானால், இது பெரிதாக வேண்டும். 127 00:14:24,364 --> 00:14:26,658 அப்படியென்றால் அதிகமாக சாப்பிட வேண்டும். 128 00:14:29,494 --> 00:14:32,331 ஆனால் இது தன்னைத்தானே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும். 129 00:14:34,750 --> 00:14:39,421 எனவே வேட்டையாடப்படாமல் வேட்டையாடுவதே வெற்றியடைவதற்கான வழி. 130 00:14:42,174 --> 00:14:47,012 இந்த மாறுவேட மன்னனால் தனது தோலின் நிறத்தையும் அமைப்பையும் மாற்ற முடியும்... 131 00:14:48,764 --> 00:14:50,182 வேட்டையாடுபவற்றையும் இரையையும்... 132 00:14:51,308 --> 00:14:52,476 விஞ்சுவதற்கு. 133 00:15:02,611 --> 00:15:06,156 இது ஒரு வருடத்திற்கும் குறைவாகவே வாழும், எனவே நகரும் எதையும் சாப்பிட்டு 134 00:15:07,241 --> 00:15:09,576 இது வேகமாக வளர வேண்டும். 135 00:15:14,790 --> 00:15:17,376 பொத்தான் அளவுள்ள பாக்ஸர் நண்டு ஆபத்தை கவனிக்காமல்... 136 00:15:19,920 --> 00:15:24,174 மிதவை நுண்ணுயிர்களை பிடிக்க அது தன் கைகளை ஆட்டுகிறது. 137 00:15:33,475 --> 00:15:34,893 வலிமிகுந்த தவறு. 138 00:15:38,772 --> 00:15:42,568 இந்த நண்டு அதன் நகங்களில் சிறிய கொட்டும் கடற்சாமந்திகளை கொண்டுள்ளது. 139 00:15:44,278 --> 00:15:47,322 வேட்டையாடுபவற்றிடம் இருந்து தற்காத்து கொள்ள சிறிய ஆயுதங்கள். 140 00:15:51,493 --> 00:15:53,161 அவை நன்றாக வேலை செய்கின்றன, 141 00:15:53,245 --> 00:15:56,456 போட்டியாளர்கள் அவற்றைப் பிடிக்க எதையும் செய்கின்றன. 142 00:16:05,048 --> 00:16:07,092 இது ஒரு குறிப்பிடத்தக்க இக்கட்டான போராட்டம். 143 00:16:10,387 --> 00:16:13,015 எந்த நண்டும் கடற்சாமந்தியை சேதமாக்க விரும்பவில்லை. 144 00:16:17,978 --> 00:16:23,192 எதிராளி பிடியில் இருக்கும் நிலையில், போட்டியாளர் பரிசை கவனமாகப் கைப்பற்றுகிறது. 145 00:16:32,326 --> 00:16:34,161 இப்போது ஒவ்வொன்றிடமும் ஒன்று இருக்கிறது, 146 00:16:34,244 --> 00:16:39,166 இரண்டு நண்டுகளும் அவற்றைப் பிரித்து முழுமையான கொட்டும் கையுறைகளாக மாற்றும். 147 00:16:45,005 --> 00:16:48,467 கடற்சாமந்திகள் அனைத்து வகையான சிறிய உயிரினங்களுக்கும் பாதுகாப்பை வழங்குகின்றன. 148 00:16:52,137 --> 00:16:54,139 ஒலி புகும் சிறிய கடற்சாமந்தி இறால். 149 00:16:56,141 --> 00:16:58,101 கோமாளி மீனோடு சேர்ந்து வாழ்கிறது. 150 00:17:01,772 --> 00:17:03,982 அவை ஒரு காகித கிளிப்பின் அளவில் இருக்கலாம்... 151 00:17:06,443 --> 00:17:10,280 ஆனால் அவை நீரடிப்பாறையில் பெரிய மீன்களோடு வேலை செய்யும் அளவிற்கு துணிச்சல் பெற்றவை. 152 00:17:19,289 --> 00:17:22,917 இறால் தன் சேவைகளை தட்டுவதன் மூலம் விளம்பரப்படுத்துகிறது. 153 00:17:26,880 --> 00:17:29,007 அதோடு வேட்டையாடுபவரே வாடிக்கையாளராக இருந்தால்... 154 00:17:31,552 --> 00:17:35,264 அவை சுத்தம் செய்வதற்கான தங்களின் விருப்பத்தை தெளிவாக உறுதி செய்கின்றன... 155 00:17:35,347 --> 00:17:36,974 தட்டுவதன் மூலம். 156 00:17:53,824 --> 00:17:55,951 அதன் பாதுகாப்பை உறுதி செய்தவுடன், 157 00:17:56,869 --> 00:17:58,829 ஒரு சிறிய இறால் சுத்தம் செய்ய தொடங்குகிறது. 158 00:18:00,539 --> 00:18:02,416 இறந்த சருமத்தை அகற்றுகிறது... 159 00:18:03,667 --> 00:18:05,294 உண்ணிகளை அகற்றுகிறது... 160 00:18:06,086 --> 00:18:07,796 அதோடு செவுளை சுத்தம் செய்கிறது. 161 00:18:16,763 --> 00:18:20,934 பல் சுகாதாரத்திற்காக அது தைரியமாக மீனின் தாடைகளை கூட சுத்தம் செய்கிறது. 162 00:18:26,899 --> 00:18:30,277 பெரிய மீன்கள் தங்களை சிறந்த நிலையில் 163 00:18:30,360 --> 00:18:33,864 வைத்திருக்க சிறியவைகள் வழங்கும் சுகாதார சேவைகள் அவசியம். 164 00:18:39,953 --> 00:18:44,833 நீரடிப்பாறையின் எல்லா இடங்களிலும் இனச்சேர்க்கைக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. 165 00:18:50,756 --> 00:18:53,634 மான்டிஸ் இறால் குஞ்சுகள் வளர்ப்பிடத்தை கிட்டத்தட்ட கட்டி முடித்துவிட்டது. 166 00:18:57,638 --> 00:19:01,683 அது பாதுகாப்பாக இருக்க 3 கிலோ சிதைவுகளை சுமக்கிறது. 167 00:19:06,480 --> 00:19:12,194 அதோடு அவசர வழிகளை சுத்தப்படுத்திவிட்டது, எனவே அதை கண்டுபிடிப்பது கடினமாகிறது. 168 00:19:15,155 --> 00:19:20,452 அதன் கட்டிட வேலை மிகவும் விரிவானது, மற்றவைகளும் இதை வீடாக பயன்படுத்தலாம். 169 00:19:25,249 --> 00:19:29,086 ஆனால் இதற்கு அதிகம் தொல்லை தரும் ஒரு அண்டை வீட்டுக்காரன் உண்டு. 170 00:19:34,091 --> 00:19:35,384 டஸ்க் மீன். 171 00:19:36,468 --> 00:19:39,096 கருவிகளைப் பயன்படுத்தத் தெரிந்த சில மீன்களில் ஒன்று. 172 00:19:41,807 --> 00:19:44,935 சிப்பிகளை உடைக்க அதனிடம் சொந்த கருவி கூட இருக்கிறது. 173 00:19:53,068 --> 00:19:55,404 அது மென்டிஸ் இறாலை சாப்பிட விரும்பவில்லை. 174 00:19:58,156 --> 00:20:01,827 ஆனால் அதன் உடைத்து சாப்பிடும் அணுகுமுறை இறாலின் வீட்டை துவம்சம் செய்யலாம். 175 00:20:05,581 --> 00:20:09,418 அது உணவைத் தேட பெரிய இடிபாடுகளை தூக்கிப் போடுகிறது. 176 00:20:20,971 --> 00:20:22,306 அதற்கு தேவையானது கிடைத்துவிட்டது. 177 00:20:24,641 --> 00:20:28,520 ஆனால் இப்போது அதன் வளர்ப்பு இட கட்டுமான திட்டம் பின்னடைவை சந்திக்கிறது. 178 00:20:32,900 --> 00:20:37,487 பகல்பொழுது முடியும்போது, நீரடிப்பாறையில் மீன்களின் செயல்பாடு அதிகமாகிறது. 179 00:20:43,702 --> 00:20:46,121 கோமாளி மீன் முட்டைகள் குஞ்சு பொரிப்பதற்கு தயாராக இருக்கின்றன. 180 00:20:52,920 --> 00:20:55,130 அதோடு கிளினர் ராஸின் படை சுத்தம் செய்யும் பணியை கடுமையாகச் செய்கின்றன. 181 00:20:58,258 --> 00:21:00,177 ஒரு விரலின் நீளமே உள்ள இவை, 182 00:21:00,260 --> 00:21:03,555 அவற்றின் கருப்பு மற்றும் நீல நிற கோடுகளால் அவை எளிதில் அடையாளம் காணப்படுகின்றன. 183 00:21:17,569 --> 00:21:21,156 ஆனால் எல்லாமே அதன் தோற்றத்திற்கு ஏற்ப நல்ல நோக்கத்துடன் இருக்காது. 184 00:21:27,162 --> 00:21:28,580 ஃபாங்ப்ளேனி. 185 00:21:32,626 --> 00:21:36,547 இந்த வஞ்சகன் தனது வண்ணங்களை மாற்றி கிளினர் ராஸைப் போல தோற்றமளித்து 186 00:21:36,630 --> 00:21:38,841 கவனிக்கப்படாமல் அவற்றுக்கு இடையே ஊடுருவுகிறது. 187 00:21:44,972 --> 00:21:46,515 ஆனால் அது இங்கே சுத்தம் செய்ய வரவில்லை. 188 00:21:54,439 --> 00:21:57,985 சந்தேகப்படாத மீனின் தோலுக்கு குறுக்கே விரைவாக சென்று... 189 00:22:01,154 --> 00:22:03,574 இது செதில்களை உணவாக திருடுகிறது. 190 00:22:13,750 --> 00:22:16,003 இதனால் பாதிக்கப்பட்டது என்ன நடந்தது என்பதை உணரும் முன், 191 00:22:17,004 --> 00:22:19,506 இந்த கபட வேடதாரி சென்றுவிடுகிறது... 192 00:22:20,924 --> 00:22:22,176 மீண்டும் அதன் பொந்துக்கு. 193 00:22:25,554 --> 00:22:29,975 இரகசியமாக செயல்படுவது பல சிறிய விலங்குகள் பெரிய நீரடிப்பாறைகளில் வாழ உதவுகிறது. 194 00:22:34,605 --> 00:22:37,941 இப்படித்தான் குள்ளக் கணவாய் மீன் உயிருடன் இருக்கவும்... 195 00:22:39,318 --> 00:22:40,777 உணவை பெறவும் முடிந்தது. 196 00:22:47,868 --> 00:22:50,537 ஒவ்வொரு வெற்றிகரமான வேட்டையுடன், அது பெரிதாக வளர்கிறது. 197 00:22:58,712 --> 00:23:00,714 இந்த பெண் ஈர்க்கப்பட்டது போல தெரிகிறது. 198 00:23:01,381 --> 00:23:05,219 அதோடு இந்த தருணத்தில், அது உணவிற்கு முன்னுரிமை தரவில்லை. 199 00:23:13,685 --> 00:23:16,522 மென்டிஸ் இறால் தன் வீட்டை சீரமைக்கிறது. 200 00:23:21,527 --> 00:23:22,778 இடிபாடுகளை அகற்றுகிறது. 201 00:23:24,905 --> 00:23:27,032 அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்கிறது. 202 00:23:29,785 --> 00:23:31,954 அதோடு கடைசி வேலைப்பாடுகளை சேர்க்கிறது. 203 00:23:43,715 --> 00:23:47,511 இறுதியில், அது விருந்தினரை வரவேற்க தயாராகிவிட்டது. 204 00:24:00,816 --> 00:24:04,069 ஆண்டின் மிக முக்கியமான நிகழ்வுக்காக நீரடிப்பாறை தயாராக இருக்கும் சமயம், 205 00:24:04,945 --> 00:24:06,864 பவள கொலையாளிகள் வருகின்றன. 206 00:24:15,497 --> 00:24:17,916 முட்கிரீட நட்சத்திரமீன் கூட்டம். 207 00:24:26,216 --> 00:24:30,429 வயிற்றை வெளியேற்றி, பவளத்தின் உயிர் திசுக்களை ஜீரணிக்கின்றன. 208 00:24:33,682 --> 00:24:36,602 வெள்ளை எலும்புக்கூடுகளை மட்டுமே விட்டுவைக்கின்றன. 209 00:24:49,114 --> 00:24:52,409 நட்சத்திரமீன்களின் கூட்டம் அதன் பாதையில் வரும் ஒவ்வொரு நீரடிப்பாறையையும் 210 00:24:52,492 --> 00:24:57,706 விழுங்குவதைத் தடுக்க, பவள வாசிகள் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. 211 00:25:08,675 --> 00:25:12,638 இந்த சிறிய நண்டின் வீடுதான் அடுத்து சாப்பிடப்படும். 212 00:25:22,564 --> 00:25:24,775 அது எவ்வளவு முயற்சி செய்தாலும் சரி... 213 00:25:26,777 --> 00:25:29,613 நட்சத்திரமீனின் உடலை துளைப்பது சாத்தியமற்றது. 214 00:25:34,284 --> 00:25:36,745 ஆனால் முதுகெலும்பின் மென்மையான உணர்திறன் அடிப்பகுதிதான்... 215 00:25:38,580 --> 00:25:40,249 அதன் கவசத்தில் உள்ள பலவீனம். 216 00:25:44,253 --> 00:25:46,213 ஒரு சிறிய நண்டிற்கு இராட்சதர்களை... 217 00:25:47,339 --> 00:25:49,007 தோற்கடிக்க நேரம் வந்துவிட்டது. 218 00:26:09,736 --> 00:26:13,407 பாதுகாப்பு நண்டுகளுடன் போராடுவது எந்த பலனையும் தராது. 219 00:26:24,418 --> 00:26:27,045 சிறிய உயிரினங்களின் பன்முகப்பட்ட சமூகம்... 220 00:26:28,088 --> 00:26:29,756 அனைத்தும் தங்கள் பங்களிப்பை தந்து... 221 00:26:31,216 --> 00:26:37,431 பவளத்தை ஆரோக்கியமாகவும், எதிர்கொள்ளும் ஆபாயங்களை தாங்கி நிற்கவும் வைக்கிறது. 222 00:26:44,938 --> 00:26:48,942 இந்த வாழும் நகரங்களின் சேதமடைந்த பகுதிகள் கூட மீண்டும் உருவாக்கப்படலாம். 223 00:26:55,032 --> 00:26:56,825 வருடத்திற்கு ஒருமுறை 224 00:26:56,909 --> 00:27:00,913 சரியான அலையும் சரியான வெப்பநிலையும் ஒத்துப்போகிறது. 225 00:27:08,795 --> 00:27:10,380 இன்றிரவுதான் நீரடிப்பாறைகளே... 226 00:27:11,715 --> 00:27:14,801 இனப்பெருக்கம் செய்யத் தொடங்கும் இரவு. 227 00:27:22,017 --> 00:27:26,480 ஒரு மிளகு அளவுள்ள சிறிய மூட்டை. 228 00:27:28,440 --> 00:27:33,654 குட்டி பவளங்களை உருவாக்கும் அனைத்தையும் கொண்ட ஒரே தொகுப்பாக. 229 00:27:37,241 --> 00:27:39,034 பவளம் முட்டையிடுகின்றது. 230 00:27:42,746 --> 00:27:45,541 இன்னும் பல சிறிய நீரடிப்பாறை விலங்குகளும் இனப்பெருக்கம் செய்கின்றன. 231 00:27:48,335 --> 00:27:50,921 சிறிய கணவாய் மீன் தன் துணையை தேடிக்கொண்டது. 232 00:27:56,093 --> 00:27:59,972 அது தன் முட்டைகளை பாதுகாப்பாக பவளங்களுக்குள் செருக வேண்டிய நேரம் இது. 233 00:28:03,934 --> 00:28:06,103 மென்டிஸ் இறாலும் முட்டைகளை வைத்திருக்கிறது. 234 00:28:07,229 --> 00:28:08,480 இருபதாயிரம் முட்டைகள். 235 00:28:16,238 --> 00:28:18,740 அதோடு தந்தையிடம் இருந்து மேலும் ஒரு சுத்தப்படுத்தலுக்கு பிறகு... 236 00:28:21,493 --> 00:28:25,038 நூற்றுக்கணக்கான கோமாளி மீன் குஞ்சுகள் வெளியிடப்படுகின்றன. 237 00:28:35,215 --> 00:28:39,386 ஒன்றாக முட்டையிடுவது முடிந்தவரை பல புதிய குஞ்சுகளை அலைகளில் பாதுகாப்பாக 238 00:28:40,429 --> 00:28:42,764 கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்கிறது. 239 00:28:52,107 --> 00:28:55,152 விரைவில், சிறிய கண்கவர் உயிரினங்கள் வளர்கின்றன. 240 00:29:00,908 --> 00:29:03,035 வேர்கடலையை விட சிறியதான, 241 00:29:03,118 --> 00:29:07,497 ஒரு கணவாய் மீன் குஞ்சு அதன் கடல் சாகசத்தைத் தொடங்குகிறது. 242 00:29:13,795 --> 00:29:19,468 எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு மில்லிமீட்டர் அளவுள்ள பவள புழுக்கள். 243 00:29:25,265 --> 00:29:27,351 நீரடிப்பாறையின் ஒலியை நோக்கி ஈர்க்கப்பட்ட... 244 00:29:36,193 --> 00:29:39,738 ...ஒரு சிறிய செடி ஒரு வலிமையான பவளமாக வளரும். 245 00:29:41,865 --> 00:29:46,745 இந்த பவள நகரத்தில் வசிக்கும் அனைத்திற்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்க உதவுகிறது. 246 00:30:29,913 --> 00:30:31,915 வசன தமிழாக்கம் அருண்குமார்