1 00:00:07,341 --> 00:00:09,843 புவி மிகவும் வண்ணமயமாக இருப்பதால், 2 00:00:10,636 --> 00:00:13,680 வாழ்வில் சில சின்னஞ்சிறிய விஷயங்களை தவறவிடுவது சகஜம். 3 00:00:15,766 --> 00:00:17,643 ஆனால், சற்று கூர்ந்து கவனித்தால்... 4 00:00:18,143 --> 00:00:20,562 அங்கு கண்டறியப்படாத ஒரு உலகமே உள்ளது. 5 00:00:22,648 --> 00:00:24,983 சிறிய சாகசகாரர்களுக்கும்... 6 00:00:26,485 --> 00:00:27,861 சிறிய அரக்கர்களுக்கும்... 7 00:00:29,029 --> 00:00:31,406 ராட்சத எதிர்ப்புகள் மீது வெற்றிக்கொள்ள... 8 00:00:34,618 --> 00:00:40,040 அசாத்திய சக்திகள் தேவைப்படும் ஒரு உலகம். 9 00:00:58,600 --> 00:01:02,104 150 மில்லியன் ஆண்டுகளாக... 10 00:01:02,187 --> 00:01:03,230 வர்ணனையாளர் பால் ரட் 11 00:01:03,313 --> 00:01:07,693 ...மடகாஸ்கர் தீவில் தனித்துவமான போக்கில் பரிமாண வளர்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. 12 00:01:09,862 --> 00:01:13,532 இந்த ஆராயப்படாத உலகில் தனித்துவிடப்பட்டவர்கள் 13 00:01:13,615 --> 00:01:17,744 விசித்திரமான, அற்புதமான வழிகளில் பரிமாண வளர்ச்சியடைந்து வருகின்றன. 14 00:01:20,581 --> 00:01:24,501 பூமியில் வேறு எங்கும் காணப்படாத இந்த விலைமதிப்பற்ற மழைக்காடுகள்... 15 00:01:25,627 --> 00:01:27,671 அசாதாரண உயிரினங்களின் வீடு. 16 00:01:33,844 --> 00:01:35,053 மிகச்சிறியவைதான்... 17 00:01:36,430 --> 00:01:38,265 எல்லாவற்றிலும் மிக அற்புதமானவை. 18 00:01:40,809 --> 00:01:42,144 சிறிய வாலில்லா முள்ளெலி. 19 00:01:45,480 --> 00:01:48,442 இப்போது வரை, அதற்கு வழிகாட்ட அதன் அம்மா இருந்தது. 20 00:01:50,235 --> 00:01:51,904 நான்கு வாரங்கள் மட்டுமே ஆனால்... 21 00:01:53,447 --> 00:01:55,282 நான்கு சென்டிமீட்டர் நீளம் மட்டுமே உள்ள இது... 22 00:01:56,408 --> 00:01:58,285 அதன் சொந்த பாதையில் செல்ல வேண்டிய நேரம் இது. 23 00:02:08,044 --> 00:02:09,838 இந்த மர்மமான காட்டில், 24 00:02:10,672 --> 00:02:13,425 விலங்குகள் இரகசிய ஆயுதங்களையும்... 25 00:02:14,676 --> 00:02:15,677 சிறப்பு திறன்களையும்... 26 00:02:17,721 --> 00:02:19,181 தந்திரமான பாதுகாப்புகளையும் கொண்டவை. 27 00:02:26,063 --> 00:02:27,773 இங்கே உயிர்வாழ, 28 00:02:28,482 --> 00:02:32,152 சிறிய வாலில்லா முள்ளெலி அதன் சொந்த சக்தியை கண்டுபிடிக்க வேண்டும். 29 00:02:34,154 --> 00:02:38,158 மழைக்காடு 30 00:02:49,545 --> 00:02:51,797 தனியாக பயணத்தை தொடங்குவதற்கு கடினமான நேரம் இது. 31 00:02:57,302 --> 00:02:58,762 இந்த ஆண்டு தாமதமாக மழை பெய்கிறது. 32 00:03:06,687 --> 00:03:08,146 காடு வறண்டு காணப்படுகிறது. 33 00:03:11,567 --> 00:03:12,985 உணவு பற்றாக்குறை. 34 00:03:14,152 --> 00:03:16,697 விலங்குகள் அதைத் தேட அதிக நேரம் செலவிடுகின்றபோது... 35 00:03:19,199 --> 00:03:22,077 அவை திறந்தவெளியில் பிடிபடுவதற்கான ஆபத்தும் அதிகம். 36 00:03:26,540 --> 00:03:28,834 மலைப்பாம்புகள் தாக்குவதற்காக பதுங்கி கிடக்கின்றன. 37 00:03:31,962 --> 00:03:34,840 மாமிச உண்ணி ஃபோஸா காட்டின் தரை பகுதியில் சுற்றும். 38 00:03:39,428 --> 00:03:41,889 சிறிய உயிரினங்கள் வேட்டையாடும் விலங்குகளைத் தவிர்க்கவும்... 39 00:03:45,976 --> 00:03:48,312 தப்பிக்கவும் முயற்சி செய்ய வேண்டும். 40 00:04:02,367 --> 00:04:07,664 இந்த கண்ணாமூச்சி விளையாட்டு வன்முறையான பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. 41 00:04:11,585 --> 00:04:13,670 இன்னும் தந்திரமான மாறுவேடங்கள்... 42 00:04:14,671 --> 00:04:17,716 இன்னும் ஆபத்தான அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராட. 43 00:04:24,139 --> 00:04:26,808 மிகவும் உருமறைப்பு செய்யும் உயிரினங்களை கூட கண்டுபிடிக்கும்... 44 00:04:30,812 --> 00:04:34,525 மிகவும் கூர்மையான பார்வை கொண்ட வேட்டைக்காரர்களும் இங்கே இருக்கிறார்கள். 45 00:04:39,655 --> 00:04:41,406 சிறுத்தை பச்சோந்தி. 46 00:04:43,450 --> 00:04:46,662 நம்முடையதை விட ஐந்து மடங்கு கூர்மையான கண்பார்வை... 47 00:04:47,996 --> 00:04:51,166 கிட்டத்தட்ட 360 டிகிரி கண்காணிப்பு... 48 00:04:52,960 --> 00:04:54,920 ஆகியவற்றை கொண்ட இது எதையும் தவறவிடாது. 49 00:05:05,472 --> 00:05:07,349 இறந்த இலை போல் தோன்றும் இது... 50 00:05:11,186 --> 00:05:13,814 உண்மையில் ஒரு மெலிந்த கும்பிடுபூச்சி. 51 00:05:23,323 --> 00:05:26,285 ஒரு பச்சோந்தியின் பார்வை நகர்வுடன் இணைந்திருக்கிறது. 52 00:05:32,708 --> 00:05:36,628 கும்பிடுபூச்சி அசையாமல் இருந்தால், அது உயிர்பிழைக்கக்கூடும். 53 00:05:42,759 --> 00:05:44,553 ஆனால் அதுவும் சாப்பிட வேண்டும். 54 00:06:01,612 --> 00:06:03,405 பச்சோந்தி இலக்கை குறிவைத்துவிட்டு... 55 00:06:06,200 --> 00:06:09,119 பிறகு அதன் கொடிய ஆயுதத்தை கட்டவிழ்த்துவிடுகிறது. 56 00:06:13,916 --> 00:06:17,753 ஒரு வினாடியின் 1/20 நேரத்தில் பூஜ்ஜியத்திலிருந்து 60 மைல்கள் வரை. 57 00:06:28,555 --> 00:06:32,267 பதுங்கிச் செல்கிற பச்சோந்தியிடமிருந்து சில பூச்சிகளே தப்பும். 58 00:06:39,358 --> 00:06:42,653 ஹெல்மெட் வாங்காவிடமிருந்து சில பல்லிகளே தப்புகின்றன... 59 00:06:46,406 --> 00:06:49,326 ...குறிப்பாக இருவருக்கு வேட்டையாடும்போது. 60 00:07:04,758 --> 00:07:06,927 முட்கள் நிறைந்த முள்ளெலி அதன் குஞ்சுக்கு உகந்ததல்ல. 61 00:07:10,514 --> 00:07:14,434 ஆனால் இலை வால் பல்லி ஒரு விருந்தாக அமையும். 62 00:07:18,105 --> 00:07:19,648 அதனால் அதைப் பிடிக்க முடிந்தால். 63 00:07:23,610 --> 00:07:28,407 இந்த சிறிய பல்லிதான் இங்கே இருப்பதிலேயே மிகச்சிறந்த தப்பிக்கும் திறன் கொண்டது. 64 00:07:31,827 --> 00:07:35,998 அதன் தோலின் நிறம் மற்றும் அமைப்புக்கு ஏற்ற... 65 00:07:38,959 --> 00:07:41,044 சரியான கிளையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம்... 66 00:07:44,548 --> 00:07:47,259 அது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிடும். 67 00:07:58,770 --> 00:08:00,772 மடகாஸ்கரின் காடுகள் கிரகத்தின் 68 00:08:00,856 --> 00:08:04,193 மிக அதிசயமான இரகசிய உயிரினங்களை மறைத்துவைத்திருக்கின்றன. 69 00:08:08,530 --> 00:08:11,950 ஆனால் கண்டுபிடிக்க கடினமாக இருப்பது என்பது... 70 00:08:12,951 --> 00:08:15,370 துணையைக் கண்டுபிடிப்பதையும் கடினமாக்குகிறது. 71 00:08:20,042 --> 00:08:22,127 காகித கிளிப் அளவே உள்ள இது, 72 00:08:22,211 --> 00:08:25,839 உலகின் மிகச்சிறிய பச்சோந்திகளில் ஒன்றாகும். 73 00:08:27,174 --> 00:08:29,343 ஆண் இலை பச்சோந்தி. 74 00:08:30,844 --> 00:08:32,804 ஒரு துணையை கண்டுபிடிக்கும் பணியில். 75 00:08:41,480 --> 00:08:43,357 சுற்றி எங்கும் ஆபத்து நிறைந்திருக்க, 76 00:08:44,107 --> 00:08:45,943 அது மெதுவான விளையாட்டை விளையாடுகிறது... 77 00:08:49,530 --> 00:08:53,992 ...கண்டறியப்படாமல் நகர்த்துவதற்கான ஒவ்வொரு அடிக்கும் இடையே நகராமல் இருந்து. 78 00:08:59,790 --> 00:09:06,380 இவற்றை கண்டறிவது கடினம், ஆண் ஒரு பெண் பச்சோந்தியைக் கண்டுபிடிக்க சக்தி தேவை. 79 00:09:10,342 --> 00:09:12,803 மற்றவைகளால் பார்க்க முடியாத விஷயங்களை அதனால் பார்க்க முடியும். 80 00:09:17,933 --> 00:09:20,352 பெண்ணின் ஒளிமயமான பளபளப்பு. 81 00:09:26,233 --> 00:09:29,236 பெண் பச்சோந்தியின் உடல் புற ஊதா ஒளியை பிரதிபலிக்கிறது... 82 00:09:32,573 --> 00:09:34,575 அது ஆண் பச்சோந்தியின் கண்களுக்கு மட்டுமே தெரியும். 83 00:09:40,414 --> 00:09:42,749 ஒரு பெண்ணைக் கண்டுபிடிப்பதே கடினம். 84 00:09:45,878 --> 00:09:47,171 அதிலும் அதோடு நெருக்கமாவது... 85 00:09:49,631 --> 00:09:51,758 இன்னும் பெரிய சவாலாக இருக்கும். 86 00:10:00,767 --> 00:10:03,103 தனக்கென சொந்த உருமறைப்பு திறன் இல்லாமல்... 87 00:10:04,479 --> 00:10:06,190 முள்ளெலி நிலத்தடியில் மறைகிறது. 88 00:10:14,323 --> 00:10:18,577 மழை பெய்யும் வரை அதன் சிறிய வளை ஒரு பாதுகாப்பான இடமாக இருக்கும். 89 00:10:21,914 --> 00:10:24,041 அதோடு கொஞ்சம் சீர் செய்வதன் மூலம்... 90 00:10:24,917 --> 00:10:26,919 அது ஒரு குடும்பத்திற்கு பொருத்தமாக இருக்கும். 91 00:10:45,229 --> 00:10:48,732 மடகாஸ்கர் மரவட்டைகள் ஒளிந்து கொள்வதைப் பற்றி கவலைப்படுவதில்லை. 92 00:10:50,817 --> 00:10:54,446 நிறைய விஷம் இருப்பதால், பெரும்பாலான விலங்குகள் அவற்றைத் தொடுவதில்லை. 93 00:10:56,323 --> 00:10:58,492 மழைக்காடுகளில் அவை சுதந்திரமாக சுற்றலாம். 94 00:11:03,413 --> 00:11:04,748 பெரும்பாலான நேரம். 95 00:11:09,545 --> 00:11:12,798 இவ்வளவு பெரிய லெமூர் குரங்குக்கு மரவட்டை தீங்கு விளைவிக்காது. 96 00:11:14,174 --> 00:11:16,677 ஆனால் இது தங்கள் ரோமங்களில் வாழும் ஒட்டுண்ணிகளை 97 00:11:16,760 --> 00:11:19,388 அகற்றுவதற்கான சிறந்த பூச்சி விரட்டியாகும். 98 00:11:29,398 --> 00:11:33,610 லெமூர் குரங்குகள் வித்தியாசமான பக்க விளைவுகளையும் உணர்கின்றன. 99 00:11:40,033 --> 00:11:41,243 ஒரு சிறிய கடியில்... 100 00:11:43,453 --> 00:11:45,163 அதிக நச்சு வெளியிடப்படுகிறது. 101 00:11:47,791 --> 00:11:49,543 சிறிய அளவுகளில்... 102 00:11:50,210 --> 00:11:52,379 அது உளத்தூண்டலை ஏற்படுத்துவதாக தோன்றுகிறது. 103 00:11:59,970 --> 00:12:02,723 மரவட்டைகள் சிறிதும் பாதிப்பின்றி தூக்கி எறியப்படுகின்றன. 104 00:12:04,391 --> 00:12:07,352 ஆனால் போதையுற்ற நிலையில், லெமூர் குரங்குகள்... 105 00:12:08,061 --> 00:12:09,771 சிறிது நேரம் கீழே வராது. 106 00:12:38,884 --> 00:12:40,594 இருளின் மறைவின் கீழ்... 107 00:12:41,470 --> 00:12:45,265 புழுக்களை வேட்டையாட முள்ளெலி வெளியே வருகிறது. 108 00:12:47,768 --> 00:12:49,811 அது ஒவ்வொரு இரவும் சுமார் 50 ஐ சாப்பிடுகிறது. 109 00:12:54,024 --> 00:12:58,362 கண்பார்வை மிக மோசம் என்பதால், அவற்றைக் கண்டுபிடிக்க மூக்கைப் பயன்படுத்துகிறது. 110 00:13:03,951 --> 00:13:07,412 ஆனால் ஒரு மலைப்பாம்புக்கு இன்னும் அதிநவீன வாசனை உணர்திறன் உண்டு. 111 00:13:17,965 --> 00:13:22,177 பிளவுபட்ட நாக்கால் காற்றை ருசித்து அதன் இரையை அது கண்டுபிடிக்கிறது. 112 00:13:37,067 --> 00:13:41,572 அருகில் வந்ததும், அது வெப்பத்தை வைத்து தேடும் பயன்முறைக்கு மாறுகிறது. 113 00:13:43,490 --> 00:13:48,203 வாயைச் சுற்றியுள்ள வெப்பநிலை உணர் குழிகள் சூடான இரத்தம் கொண்டவற்றைக் கண்டறிகின்றன. 114 00:14:10,392 --> 00:14:13,312 கொடிய வேட்டையாடும் விலங்குகளுக்கும் தோல்வியை சந்திக்கும் இரவுகள் உண்டு. 115 00:14:16,523 --> 00:14:19,318 இன்னும் மேலே அதற்கு கொஞ்சம் அதிக வெற்றி கிடைக்கலாம். 116 00:14:28,869 --> 00:14:31,663 ஆனால் முள்ளெலியின் அதிர்ஷ்டம் இன்னும் சிறப்படைகிறது. 117 00:14:36,710 --> 00:14:37,920 ஒரு ஆண். 118 00:14:42,007 --> 00:14:45,802 இரண்டு மாதங்களில் முள்ளெலிகள் ஒரு துணையை தேட தயாராகிவிடுகின்றன. 119 00:14:52,518 --> 00:14:55,187 இந்த லெமூர் சுண்டெலிக்கு ஏற்கனவே குட்டிகள் உள்ளன. 120 00:14:58,232 --> 00:15:00,400 உலகின் மிகச்சிறிய உயர் விலங்குகளில் ஒன்று, 121 00:15:00,484 --> 00:15:04,279 மரத்தின் மிகச்சிறிய துளைகளில் அது அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். 122 00:15:10,786 --> 00:15:12,913 குட்டிகள் எல்லாமே தாயையே சார்ந்து இருக்கின்றன. 123 00:15:13,539 --> 00:15:15,958 எனவே அதற்கு அதிக ஆற்றல் தேவை. 124 00:15:18,502 --> 00:15:20,546 அது எங்கே கிடைக்கும் என்றும் அதற்கு தெரியும். 125 00:15:24,007 --> 00:15:29,221 உயரம்தான், ஆனால் லெமூர் சுண்டெலியால் உடல் நீளத்தை விட 8 மடங்கு குதிக்க முடியும். 126 00:15:42,067 --> 00:15:43,569 அதோடு, பெரிய கண்களுடன்... 127 00:15:44,278 --> 00:15:46,113 இருட்டில் தன் வழியைக் கண்டுபிடிக்க முடியும். 128 00:15:51,577 --> 00:15:53,579 ஆனால் மிகவும் வியப்பூட்டும் இரவு பார்வை 129 00:15:53,662 --> 00:15:56,874 காட்டின் தரையில் வேட்டையாடும் ஒரு உயிரினத்திற்கு சொந்தமானது. 130 00:16:03,172 --> 00:16:08,635 அரக்க முகம் கொண்ட சிலந்திகள் நம் கண்களை விட 2,000 மடங்கு அதிக உணர்திறன் கொண்டவை. 131 00:16:13,098 --> 00:16:15,434 சிலந்தியின் கண்களிலேயே அவைதான் மிகப்பெரியவை. 132 00:16:21,899 --> 00:16:24,234 அது ஒரு வளைக்கு பதிலாக ஒரு பொறியை பின்னுகிறது. 133 00:16:29,448 --> 00:16:30,574 பிறகு காத்திருக்கிறது. 134 00:16:49,218 --> 00:16:51,970 இப்போது அதன் சிலந்தி உள்ளுணர்வு செயல்படத் தொடங்குகிறது. 135 00:16:56,266 --> 00:16:57,392 ஒவ்வொரு இரவும், 136 00:16:57,476 --> 00:17:01,772 சிறப்பு பூச்சு அதன் கண்களில் உருவாகிறது, எனவே, அதனால் இருட்டில் பார்க்க முடியும். 137 00:17:19,414 --> 00:17:24,877 முன்னே பார்க்கும் கண்கள் வேட்டையாடுவதற்கு சிறந்தவை, ஆனால் அதன் புற பார்வை மோசமானது. 138 00:17:31,677 --> 00:17:37,307 இரவில், இலை வால் பல்லி, பூச்சிகளையும் சிலந்திகளையும் வேட்டையாட மறைவிலிருந்து... 139 00:17:45,440 --> 00:17:46,608 வெளியே வருகிறது. 140 00:17:56,285 --> 00:18:00,247 மேலே உயரத்தில், லெமூர் சுண்டெலி அது தேடுவதைக் கண்டுபிடித்துவிட்டது. 141 00:18:10,048 --> 00:18:11,592 மலர் பூச்சிகள். 142 00:18:19,349 --> 00:18:23,604 இவை வேட்டையாடுபவற்றை முட்டாளாக்க மலர் இதழ்களைப் போல தோற்றமளிக்கின்றன. 143 00:18:37,159 --> 00:18:38,994 ஆனால் அது அவற்றை சாப்பிட விரும்பவில்லை. 144 00:18:41,330 --> 00:18:45,959 அவை மரச்சாறு சாப்பிடும்போது, பூச்சிகள் சர்க்கரையின் துளிகளை வெளியிடுகின்றன. 145 00:18:55,719 --> 00:18:58,472 பரபரப்பான அம்மாவுக்கு தேவையான அதிக சக்தி நிறைந்த சிற்றுண்டி. 146 00:19:02,059 --> 00:19:04,811 ஆனால் இன்றிரவு எல்லாமே மிகவும் இன்பகரமானது அல்ல. 147 00:19:30,879 --> 00:19:34,675 ஒரு பெரிய, வினோதமான இரவு வேட்டைக்காரன். 148 00:19:41,974 --> 00:19:43,183 அய்-அய். 149 00:19:46,645 --> 00:19:51,191 இந்த விசித்திரமான லெமூர் பரிமாண வளர்ச்சியின் ஒரு அரக்கன். 150 00:19:52,442 --> 00:19:53,652 வவ்வால் போன்ற காதுகள். 151 00:19:54,611 --> 00:19:56,613 எலி போன்ற பற்கள். 152 00:20:00,242 --> 00:20:01,785 சூனியக்காரனின் விரல். 153 00:20:05,372 --> 00:20:08,750 ஒரு மரத்தின் உள்ளே துளை உள்ளதா என அறிய அதைத் தட்டுகிறது. 154 00:20:16,258 --> 00:20:18,427 அது லெமூர் சுண்டெலிகளை வேட்டையாடவில்லை. 155 00:20:20,387 --> 00:20:23,140 அது இன்னும் சிறிய ஒன்றைத் தேடுகிறது. 156 00:20:25,309 --> 00:20:26,518 முட்டைப்புழுக்களை. 157 00:20:29,646 --> 00:20:33,317 அதன் வளைந்த விரலும் சரியான பற்றி இழுக்கும் கருவியாகும். 158 00:20:40,407 --> 00:20:43,202 இந்த மழைக்காடுகளில், ஒன்று உண்ணும் முறைக்கு ஏற்ப வெகுமதிகளை பெறுகின்றன... 159 00:20:44,286 --> 00:20:46,205 இருப்பினும் இது விசித்திரமாக இருக்கலாம். 160 00:21:08,477 --> 00:21:10,479 திரும்பும் பகல் வெளிச்சம்... 161 00:21:11,396 --> 00:21:12,606 ஒரு வெற்று கூட்டை வெளிப்படுத்துகிறது. 162 00:21:19,488 --> 00:21:22,407 ஆனால் நம்பிக்கையை இழக்காத அளவுக்கு வாங்கா அரும்பாடுபட்டுள்ளது. 163 00:21:41,385 --> 00:21:45,305 கூட்டிலிருந்து கொஞ்சம் தொலைவில், அதன் குஞ்சு இன்னும் உயிருடன் இருக்கிறது. 164 00:21:50,686 --> 00:21:55,524 அச்சுறுத்தப்பட்ட குஞ்சுகள் சில சமயங்களில் முழுமையாக வளர்வதற்கு முன்பே பறக்கின்றன. 165 00:22:04,867 --> 00:22:09,580 அது சுதந்திரமாக செயல்படும் வரை தாய் இன்னும் சில நாட்களுக்கு உணவளிக்கும். 166 00:22:28,307 --> 00:22:29,308 இறுதியாக... 167 00:22:32,311 --> 00:22:33,937 மழைக்காலம் வந்துவிட்டது. 168 00:22:57,878 --> 00:23:00,589 நீர் மழைக்காடுகளை மாற்றுகிறது. 169 00:23:07,054 --> 00:23:08,555 இது புதிய உயிரினங்கள் வளர வகைசெய்கிறது. 170 00:23:16,939 --> 00:23:18,357 அதோடு, புதிய உணவையும். 171 00:23:24,571 --> 00:23:29,660 இலைகள் பச்சை நிறமாக இருப்பதால், உருமறைப்பில் புதிய யுக்தி தேவைப்படுகிறது. 172 00:23:36,625 --> 00:23:39,795 ஆனால் மழைக்காடுகளில் சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது. 173 00:23:43,924 --> 00:23:50,264 இதுவரை தப்பிப்பிழைத்தவைகள் இப்போது இன்னும் பெரிய சவாலை எதிர்கொள்கின்றன. 174 00:23:52,182 --> 00:23:57,855 மழை திரும்பும்போது, இனப்பெருக்கத்துக்கான போர் அனைத்து மட்டங்களிலும் வெடிக்கிறது. 175 00:24:07,114 --> 00:24:10,242 அவற்றின் கூடுதல் நீளமான கழுத்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் 176 00:24:10,742 --> 00:24:14,621 ஆண் ஒட்டகச்சிவிங்கி அந்துப்பூச்சிகள் பெண்ணுக்காக ஈட்டிப் போரில் ஈடுபடுகின்றன. 177 00:24:23,046 --> 00:24:25,799 இந்த பட்டாணி அளவிலான சண்டைகளில் அரிதாகவே காயம் ஏற்படுகின்றன. 178 00:24:28,552 --> 00:24:33,724 ஆனால் சிறுத்தை பச்சோந்திகள் மோதும்போது சண்டைகள் இன்னும் மிருகத்தனமாகின்றன. 179 00:24:43,066 --> 00:24:44,776 அவை பிரகாசமான வண்ணங்களுக்கு மாறுகின்றன. 180 00:24:46,737 --> 00:24:48,238 இது உருமறைப்பு அல்ல. 181 00:24:50,490 --> 00:24:51,992 இது போருக்கான வண்ணம். 182 00:24:54,786 --> 00:24:58,415 ஒரு துணையை வெல்வதற்கு அவற்றின் பிராந்தியத்துக்கான சண்டைகள் முக்கியமானவை. 183 00:25:29,363 --> 00:25:31,823 வெற்றி பெற்றது இந்த மரத்திற்கான உரிமையை கோருகிறது. 184 00:25:33,534 --> 00:25:35,369 தோல்வியுற்றது வேறு எங்காவது செல்ல வேண்டும். 185 00:25:39,456 --> 00:25:41,500 சண்டையில் வெற்றி பெறுவது ஒரு ஆரம்பம்தான். 186 00:25:43,418 --> 00:25:46,129 ஒரு துணையை பெறுவது இன்னும் போராட்டமாக இருக்கும். 187 00:25:56,056 --> 00:25:58,392 இந்த சிறிய இலை பச்சோந்தி முன்னேறி வருகிறது. 188 00:26:02,646 --> 00:26:03,981 மிக அருகில்... 189 00:26:04,773 --> 00:26:06,233 இருந்தாலும் இன்னும் தூரம்தான். 190 00:26:10,737 --> 00:26:11,905 வாங்கா. 191 00:26:13,782 --> 00:26:16,201 அது முன்பை விட மிகவும் கவனமாக நகர வேண்டும். 192 00:26:27,713 --> 00:26:29,131 கவனத்தை திசைதிருப்புகிறது. 193 00:26:32,301 --> 00:26:36,180 இரண்டு பச்சோந்திகள் இலைகளின் மறைவில் "இரகசியமாக" சந்திக்கின்றன. 194 00:26:40,851 --> 00:26:44,521 துணைகள் இணைந்தன, அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கான நேரம் இது. 195 00:26:48,901 --> 00:26:53,280 பெண் அந்துப்பூச்சி தனது முட்டைகளைப் பாதுகாக்க பெருமுயற்சியை மேற்கொள்கிறது. 196 00:26:56,700 --> 00:26:58,160 ஆண் பாதுகாக்கிறது... 197 00:26:59,119 --> 00:27:02,289 பெண் ஒரு இலையில் ஒரு முட்டையை இடும்போது. 198 00:27:09,838 --> 00:27:12,633 பிறகு அது அந்த கழுத்தை பயன்படுத்துகிறது. 199 00:27:17,429 --> 00:27:20,182 நம்பமுடியாத வலிமையின் வெளிப்பாடாக, 200 00:27:20,265 --> 00:27:25,354 தன் அளவை விட பத்து மடங்கு பெரிய உருமறைப்பு தொட்டிலை இந்த அம்மா உருவாக்குகிறது. 201 00:27:32,986 --> 00:27:34,196 வெளிப்படையான இடத்தில்... 202 00:27:37,282 --> 00:27:38,867 அதை மறைக்கிறது. 203 00:27:48,710 --> 00:27:50,838 சிறிய முள்ளெலி இன்னும் பரபரப்பாக இருக்கிறது. 204 00:27:56,009 --> 00:28:00,639 தன் அம்மாவை விட்டு பிரிந்து 4 மாதங்களுக்கு பிறகு, அதன் வளை நிரம்பியுள்ளது. 205 00:28:04,852 --> 00:28:06,854 மூன்று குட்டிகளால். 206 00:28:08,438 --> 00:28:10,858 முள்ளெலி மிகவும் நெருக்கமானவையாக தெரியவில்லை... 207 00:28:12,818 --> 00:28:14,736 ஆனால் அவற்றின் முதல் இரண்டு வாரங்களுக்கு, 208 00:28:14,820 --> 00:28:18,782 முட்கள் நிறைந்த சிறிய முள்ளெலிகள் சூடாக இருக்க நெருக்கமாக இருக்க விரும்புகின்றன. 209 00:28:34,464 --> 00:28:38,552 அவை காட்டை சுற்ற தொடங்கும்போது ஒன்றாக இருக்க வேண்டும். 210 00:28:41,388 --> 00:28:46,977 அத்தகைய ஆபத்தான உலகில் தன் குடும்பத்தைப் பாதுகாக்க தாய்க்கு இப்போது அனுபவம் உண்டு. 211 00:28:50,856 --> 00:28:52,274 ஆனால் எப்போதும் பிரிந்து தனியே... 212 00:28:53,317 --> 00:28:54,818 செல்லக்கூடிய ஒன்று இருக்கும். 213 00:29:16,548 --> 00:29:19,009 சிறிய குட்டிக்கு உள்ளுணர்வால் மறைந்துகொள்ள தெரியும். 214 00:29:24,806 --> 00:29:29,770 ஆனால் எப்படியாவது, ஃபோஸாவுக்கு தெரியாமல் அம்மா தன் குட்டியை திரும்பப் பெற வேண்டும். 215 00:29:42,449 --> 00:29:45,452 அதன் முதுகில் உள்ள சிறப்பு முதுகெலும்புகளை ஒன்றாக தேய்த்து, 216 00:29:45,536 --> 00:29:48,121 அது ஒரு இரகசிய சமிக்ஞையை அனுப்புகிறது. 217 00:29:55,879 --> 00:29:58,924 இந்த உயர் அதிர்வெண் ஒலி புதர்களின் வழியாக செல்கிறது. 218 00:30:00,884 --> 00:30:02,469 பாதுகாப்பான இடத்துக்கு தன் தொலைந்த... 219 00:30:03,136 --> 00:30:04,346 குட்டியை வழிநடத்த. 220 00:30:10,435 --> 00:30:16,149 சிறிய முள்ளெலிக்கும் சொந்த சிறப்பு சக்தி இருப்பதாகத் தெரிகிறது. 221 00:30:31,039 --> 00:30:34,710 மடகாஸ்கரின் சிறிய விலங்குகள் விசித்திரமான வழிகளில் பரிமாண வளர்ச்சி அடைந்துள்ளன. 222 00:30:36,920 --> 00:30:38,130 இந்த விசித்திரமான உலகில்... 223 00:30:39,464 --> 00:30:41,383 பிழைப்பதற்கு. 224 00:30:52,895 --> 00:30:56,356 ஆனால் அவை எதிராக சக்தியற்ற ஒரு அச்சுறுத்தல் உள்ளது. 225 00:31:06,408 --> 00:31:10,913 காடழிப்பு மடகாஸ்கரின் ஒரு காலத்தில் பரந்த மழைக்காடுகளை... 226 00:31:12,456 --> 00:31:15,250 சுருங்கியதாகவும், துண்டு துண்டாகவும் மாற்றிவிட்டன. 227 00:31:18,337 --> 00:31:20,214 எண்பது சதவீதம் ஏற்கனவே அழிந்துவிட்டது. 228 00:31:25,636 --> 00:31:26,970 ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக... 229 00:31:30,974 --> 00:31:33,435 நாம் அழிவின் போக்கை மாற்றி... 230 00:31:39,149 --> 00:31:43,904 இந்த இழந்த உலகத்தை மீண்டும் உருவாக்கத் தொடங்கலாம். 231 00:32:35,038 --> 00:32:37,040 வசன தமிழாக்கம் அருண்குமார்