1 00:00:07,341 --> 00:00:09,841 புவி மகிவும் வண்ணமயமாக இருப்பதால், 2 00:00:10,636 --> 00:00:13,676 வாழ்வில் சில சின்னஞ்சிறிய விஷயங்களை தவறவிடுவது சகஜம். 3 00:00:15,766 --> 00:00:17,636 ஆனால், சற்று கூர்ந்து கவனித்தால்... 4 00:00:18,143 --> 00:00:20,563 அங்கு கண்டறியப்படாத ஒரு உலகமே உள்ளது. 5 00:00:22,648 --> 00:00:24,978 சிறிய சாகசகாரர்களுக்கும்... 6 00:00:26,485 --> 00:00:27,815 சிறிய அரக்கர்களுக்கும்... 7 00:00:29,029 --> 00:00:31,409 ராட்ச எதிர்ப்புகள் மீது வெற்றிக் கொள்ள... 8 00:00:34,618 --> 00:00:40,038 அசாத்திய சக்திகள் தேவைப்படும் ஒரு உலகம். 9 00:00:51,969 --> 00:00:53,799 வீட்டைப் போன்ற இடம் வேறில்லை. 10 00:01:01,687 --> 00:01:04,857 கறுப்பு-வயிற்று வயல் ஹாம்ஸ்டருக்கு, அந்த வீடு என்பது இங்குதான்... 11 00:01:07,276 --> 00:01:09,776 ஐரோப்பிய கிராமப்புறத்தில் உள்ள இந்த மையப்பகுதிதான். 12 00:01:14,491 --> 00:01:16,161 ஆனால் விஷயும் என்னவெனில்... 13 00:01:18,579 --> 00:01:20,579 கிராமப் புறங்கள் மாறி வருகின்றன. 14 00:01:20,664 --> 00:01:22,674 வர்ணனையாளர் பால் ரட் 15 00:01:43,979 --> 00:01:45,649 இயந்திரங்கள் உள்ளே புகும் போது... 16 00:01:48,567 --> 00:01:50,437 விலங்குகள் வெளியேறிவிடும். 17 00:02:03,790 --> 00:02:06,380 பெரும்பாலானவை மிகச் சிறியவை என்பதால் கவனிக்கப்படாது போகிறது. 18 00:02:16,220 --> 00:02:18,560 அதிர்ஷ்டசாலிகள் இங்கு வந்து சேர்கிறார்கள். 19 00:02:22,809 --> 00:02:24,229 நம் தோட்டங்களில். 20 00:02:30,150 --> 00:02:31,440 நமக்கு அறிமுகமான இடம். 21 00:02:35,030 --> 00:02:36,990 ஆனால் ஒரு சிறிய அளவில், 22 00:02:37,658 --> 00:02:40,078 சிறிய உயிரினங்களின் உலகம்... 23 00:02:43,455 --> 00:02:45,325 அது அற்புதங்கள் நிறைந்த உலகம். 24 00:02:50,254 --> 00:02:54,474 இந்த குட்டி குடிகளுக்கு, தோட்டம் தான் எல்லாமே தரும். 25 00:02:56,134 --> 00:02:57,144 சொகுசான மஞ்சங்கள். 26 00:03:03,976 --> 00:03:05,306 தனிப்பட்ட வசதி அறைகள். 27 00:03:09,022 --> 00:03:10,022 நீச்சல் குளமும் கூட. 28 00:03:12,276 --> 00:03:14,146 அது சொர்க்கம் போலத் தோன்றலாம். 29 00:03:16,864 --> 00:03:19,704 ஆனால் எல்லா இடங்களிலும் ஆபத்துகள் காத்திருக்கின்றன. 30 00:03:23,245 --> 00:03:27,455 அதிலும் மோசமான விஷயம், இந்த நிலம் ராட்சர்களால் ஆளப்படுகிறது. 31 00:03:33,463 --> 00:03:37,263 எனவே, இதை வீடு என்று அழைக்கும் அளவிற்கு அப்படி என்ன இருக்கிறது? 32 00:03:41,513 --> 00:03:47,313 தோட்டம் 33 00:03:53,066 --> 00:03:54,606 வசந்தம் வந்துவிட்டது. 34 00:03:59,364 --> 00:04:01,874 அதனுடன், ஒரு புதிய உணவுக் கூடையும். 35 00:04:16,380 --> 00:04:20,550 ஆனால், உணவு உள்ள இடத்தில், கண்டிப்பாக தொல்லைகளும் இருக்கும். 36 00:04:34,441 --> 00:04:38,031 மற்ற விலங்குகளை விட, வீட்டுப் பூனைகள் சிறிய பாலூட்டிகளை அதிகம் கொல்லுகின்றன. 37 00:04:45,285 --> 00:04:49,915 அதிர்ஷ்டவசமாக, அணில்கள் உடலாலும் மனதாலும் மிகவும் விழிப்புடன் இருக்கின்றன். 38 00:04:53,252 --> 00:04:58,672 எங்கே மனமிருக்கிறதோ... கொஞ்சம் உணவும்... அங்கே மார்க்கமும் உண்டு. 39 00:05:17,234 --> 00:05:21,664 ஆனால் அந்து கயிறு, அதில் நடப்பது மிகக் கடினம். 40 00:05:34,042 --> 00:05:35,042 அவள் திரும்பி வருவாள். 41 00:05:38,172 --> 00:05:40,132 அணில்கள் விடா முயற்சியுள்ள உயிரினங்கள். 42 00:05:45,470 --> 00:05:48,720 பறக்கும் திறமையினால், பறவைகளின் உணவுமேடையை நிச்சயம் எளிதில் அடையமுடியும். 43 00:05:58,192 --> 00:06:00,942 வசந்தகால ஆரம்பத்தில்தான் ராபின்கள் முட்டையிடும். 44 00:06:02,696 --> 00:06:06,776 அப்போதுதான் தந்தைப்பறவை குடும்பத்திற்கு முடிந்தளவு உணவை சேகரித்து தர முடியும். 45 00:06:13,165 --> 00:06:17,745 தாய் பறவை குஞ்சுகளை பராமரிக்கும் போது தந்தை ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை 46 00:06:17,836 --> 00:06:21,086 குஞ்சுகளுக்கு உணவைக் கொண்டு வர மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும். 47 00:06:24,218 --> 00:06:26,928 மற்ற பறவைகளை சாமர்த்தியமாக தவிர்க்க வேண்டும். 48 00:06:32,100 --> 00:06:34,560 தோட்டத்தில் ராபின்கள் தான் மிகவும் அச்சுறுத்தும் பறவைகள். 49 00:06:40,108 --> 00:06:42,528 பயங்கரமான பறவைகளில் இதுவும் ஒன்று. 50 00:06:52,037 --> 00:06:54,407 மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றலை உடைய 51 00:06:55,165 --> 00:06:58,165 குருவிப்பருந்து, சிறிய பறவைகளைப் பிடிப்பதில் தேர்ச்சி பெற்றது. 52 00:07:15,644 --> 00:07:20,524 வேட்டையில் தோல்வி என்பது இன்னொருவருக்கு இலவச உணவைக் கொடுக்கலாம். 53 00:07:34,079 --> 00:07:38,459 கறுப்பு எறும்புகளுக்கோ, உணவைக் கண்டுப் பிடிப்பதே ஒரு மாபெரும் சாகசம். 54 00:07:46,383 --> 00:07:48,593 அவை அடர்ந்த காடுகளின் வழியே செல்ல வேண்டும்... 55 00:07:50,929 --> 00:07:52,929 பரந்த பாலைவனங்களைக் கடக்க வேண்டும். 56 00:08:00,439 --> 00:08:03,359 எறும்புப் புத்தினுள், 5000 எறும்புகள் கொண்ட ஒரு கூட்டமே இருக்கிறது. 57 00:08:05,611 --> 00:08:09,321 அவற்றிற்கு எல்லாம் உணவு அளிப்பது என்பது அற்புதமான விஷயம் தான். 58 00:08:16,246 --> 00:08:19,076 அவை செடிப்பேன்களை வளர்கின்றன. 59 00:08:20,667 --> 00:08:22,087 என்னும், செடிப்பேன்களை உணவாக உட்கொள்வதில்லை. 60 00:08:24,296 --> 00:08:25,876 அவற்றை உரசிவிட்டு... 61 00:08:27,716 --> 00:08:29,836 செடிப்பேன்கள் செடியின் சாற்றை உறிஞ்சும்போது... 62 00:08:34,264 --> 00:08:37,484 இனிப்பான ஒரு திரவத்தை சுரக்க வைக்கின்றன. 63 00:08:47,361 --> 00:08:51,241 ஆனால் எறும்புக் கூட்டத்திற்கு நடுவில்... ஒரு மாறு வேட எதிரி மறைந்துள்ளது. 64 00:08:56,245 --> 00:08:58,495 கரும்புள்ளிச் செவ்வண்டுகள் செடிப்பேன்களை தேடி உண்ணும். 65 00:09:06,630 --> 00:09:09,970 எறும்புகள் தங்களின் வலிமையான தாடைகளால், எதிர்த்துப் போராடும். 66 00:09:14,304 --> 00:09:16,474 மேலும் ஃபார்மிக் அமிலத்தையும் சுரக்கின்றன. 67 00:09:34,241 --> 00:09:38,871 ஆனால் எறும்புப்படைகளால் கூட சில செடிப்பேன் கொல்லிகளை தோற்கடிக்க இயலாது. 68 00:09:47,713 --> 00:09:49,803 வேறெங்காவது சென்று தான் இரை தேடவேண்டும். 69 00:09:57,264 --> 00:10:00,144 காடுகளில், ஹாம்ஸ்டர்கள் தங்களுடைய களத்தை சார்ந்தே வாழும் உயிரினங்கள். 70 00:10:02,519 --> 00:10:06,359 ஆனால் வளமான தோட்டச் சூழல் என்பது அவற்றை ஒரு சேர சுண்டி இழுக்கிறது. 71 00:10:16,033 --> 00:10:17,243 ஒரு ஆண். 72 00:10:23,373 --> 00:10:25,253 அவளுக்கோ தற்போது துணை தேவையில்லை. 73 00:10:30,380 --> 00:10:34,380 பார்க்க சாதுவாக இருந்தாலும், ஹாம்ஸ்டர்கள் மிகவும் வன்மையான போராளிகள். 74 00:10:39,223 --> 00:10:41,813 அவனோ இன்னும் பெரிதாகவும், தெம்புடனும் காணப்படுகிறான்... 75 00:10:47,523 --> 00:10:50,363 ஆனால் காதல்வயப் பட்டிருப்பதுப் போல தெரிகிறது. 76 00:10:54,655 --> 00:10:57,365 ஆனால் அதே போன்ற காதல் உணர்வுகள் அவளுக்கு இல்லை. 77 00:11:03,539 --> 00:11:04,959 ஒரு வேளை இன்னொரு முறை வரலாம். 78 00:11:16,510 --> 00:11:20,760 கோடைகாலம் தீவிரமாக, கவனம் உணவிலிருந்து இனச்சேர்க்கைக்கு திரும்புகிறது. 79 00:11:29,022 --> 00:11:31,112 ஒரு பெண் தாவும் வரிக்குதிரை சிலந்தி. 80 00:11:36,196 --> 00:11:38,816 அவளுடைய அளவென்னவோ ஒரு பருக்கை அரிசியின் அளவாக இருக்கலாம்... 81 00:11:41,368 --> 00:11:42,698 ஆனால் அவளுக்கு அகோர பசி. 82 00:11:53,839 --> 00:11:57,679 ஆண் சிலந்தி மிக எச்சரிக்கையாக இருக்கணும். அவள் எளிதாக அவனைக் கொன்று விடலாம். 83 00:12:07,394 --> 00:12:09,444 புணர்ச்சிக்கு தகுதியானவன் தான் என்று அவன் நிரூபிக்க வேண்டும். 84 00:12:14,902 --> 00:12:16,402 நடனம் ஆடி நிரூபிக்க வேண்டும். 85 00:12:32,294 --> 00:12:33,384 இடமாற்றம். 86 00:12:37,633 --> 00:12:38,633 கால் அசைவு. 87 00:12:41,720 --> 00:12:42,760 பக்கவாட்டமாக நகர்வது. 88 00:12:44,681 --> 00:12:46,891 இவையெல்லாமே நேர்த்தியாக இருக்க வேண்டும். 89 00:12:57,152 --> 00:12:58,782 அவன் மிகச் சிறந்த நடனக்காரன் இல்லைதான். 90 00:13:00,322 --> 00:13:03,532 எனினும் எப்படியோ "உயிர் துடிப்புடன்" இருக்கிறான். 91 00:13:09,831 --> 00:13:13,461 கோடைகாலத்தின் உச்சி. விஷயங்கள் சூடுபிடிக்கத் துவங்குகின்றன. 92 00:13:19,716 --> 00:13:21,546 ஆண் ஹாம்ஸ்டர் மீண்டும் முயற்சிக்கிறான். 93 00:13:23,303 --> 00:13:25,513 அவனுடைய விடா முயற்சிக்கு பலன் கிடைக்கிறது. 94 00:13:38,777 --> 00:13:40,987 பெண் ஹாம்ஸ்டெர் ஒரு இடத்தைத் தேர்ந்து எடுத்துள்ளாள், 95 00:13:41,822 --> 00:13:46,162 அந்த புதிய பொந்தை தன்னுடைய வீடாக மாற்றிக் கொண்டிருக்கிறாள். 96 00:13:52,875 --> 00:13:56,665 இந்த பருவகாலத்தில், தோட்டத்தில் இது போன்று நிறைய இல்லத்தரசிகள் இருப்பார்கள். 97 00:14:18,317 --> 00:14:21,947 மேஸ்திரி தேனீகள், குட்டிகளை வளர்க்க பாதுகாப்பான இடத்தைக் தேடியாக வேண்டும். 98 00:14:26,742 --> 00:14:27,912 குழந்தையை தனியாக வளர்க்கும் ஒரு தாயிக்கு, 99 00:14:27,993 --> 00:14:32,003 ஆரம்பத்திலிருந்து உருவாக்குவதை விட, தயாராக இருக்கும் ஒரு நத்தை ஓடே வசதியானது. 100 00:14:40,964 --> 00:14:43,264 தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு... 101 00:14:44,593 --> 00:14:47,223 அவள் அந்த ஓட்டினுள் ஒரே ஒரு முட்டையை இடுகிறாள். 102 00:14:57,523 --> 00:14:59,153 ஒரே ஓரு பிரச்சனை உள்ளது. 103 00:15:05,822 --> 00:15:08,242 ஸ்டார்லிங்களுக்கு நத்தைகளை சாப்பிடப் பிடிக்கும். 104 00:15:12,579 --> 00:15:15,789 துரதிர்ஷ்டவசமாக, இது தப்பு அடையாளத்தினால் வந்த குழப்பமாகவும் இருக்கலாம். 105 00:15:36,562 --> 00:15:37,902 மயிரிழையில் தப்பித்தது. 106 00:15:40,107 --> 00:15:42,727 இந்த தோட்டத்தில் அவளுடைய குட்டிகள் பிழைக்க வேண்டுமானால், 107 00:15:42,818 --> 00:15:45,238 தேனீயம்மா தன்னுடைய வீட்டின் பாதுகாப்பை இன்னும் வலுவாக்க வேண்டும். 108 00:15:48,407 --> 00:15:50,367 அது இன்னும் ஒரு வருட காலத்திற்கு வெளி வராது. 109 00:15:52,536 --> 00:15:55,076 மேலும் தேனீயம்மா அதை பாதுகாக்க அத்தனை நாட்கள் உயிருடன் இருக்க மாட்டாள். 110 00:15:57,207 --> 00:15:59,747 ஆகையால் அவள் கட்டுமானப் பொருட்களைத் தேடுகிறாள். 111 00:16:18,770 --> 00:16:23,190 தன்னை விட 20 மடங்கு பெரிய குச்சிகளை எல்லாம் தூக்கிக் கொண்டு வந்து தன் 112 00:16:23,275 --> 00:16:25,025 குழந்தைகள் காப்பகத்தைக் கட்டுவது மிக ஆச்சரியமான ஒன்று. 113 00:16:40,292 --> 00:16:43,382 கொஞ்சம் கொஞ்சமாக, அந்த நத்தை ஓடு மாற்றப்படுகிறது... 114 00:16:51,929 --> 00:16:53,389 அது ஒரு கோட்டையாக மாறுகிறது. 115 00:17:01,688 --> 00:17:04,528 தன் குஞ்சை காப்பாற்ற அவள் இருக்கப் போவதில்லை என்றாலும், 116 00:17:04,608 --> 00:17:07,238 அவள் தன்னால் முடிந்த வரை நல்ல தொடக்கத்தை தந்துவிட்டாள். 117 00:17:14,660 --> 00:17:16,490 மனிதர்கள் உறங்கச்செல்ல தயாராகும் போது, 118 00:17:16,954 --> 00:17:20,254 புதிய உயிரினக்கூட்டங்களினால் தோட்டம் உயிர் பெறுகிறது. 119 00:17:26,128 --> 00:17:29,548 சிலர் தோட்டத்தை வந்து அடைவதற்கே மிக ஆபத்தான பயணங்களை மேற்கொள்கிறார்கள். 120 00:17:32,219 --> 00:17:35,719 ஒரு செவிலி தேரை, ஆபத்து நிறைந்த பயணத்தில் போகிறது. 121 00:17:36,890 --> 00:17:40,890 அவனுடைய காதலி தன் அரிய முட்டைகளை பாதுகாப்பிற்காக அவனிடம் கொடுத்துள்ளாள். 122 00:17:47,067 --> 00:17:50,447 விழுந்து விடாமல் இருக்க, அவன் கால்களைச் சுற்றி அவற்றைக் கட்டியிருக்கிறாள். 123 00:18:02,457 --> 00:18:06,127 அவை பொறிந்து வரும் காலம் நெருங்கிவிட்டது, எனவே விரைந்து நீரில் சேர்த்து விடணும். 124 00:18:09,882 --> 00:18:11,722 அதைச் செய்வதற்காக தன் உயிரையே பணயம் வைப்பான் அவன். 125 00:18:27,316 --> 00:18:31,066 தோட்டக் குளத்திலிருந்து வரும் மெல்லிய வாசத்தை வைத்தே அதன் இருப்பை அறிவான். 126 00:18:34,239 --> 00:18:35,659 ஆனால் அதை இன்னும் அடையவில்லை. 127 00:18:44,166 --> 00:18:46,166 முள்ளம்பன்றிகள் தேரைகளை சாப்பிடும். 128 00:18:55,511 --> 00:18:57,721 ஆனால் இந்த முள்ளம்பன்றி வேறு எதையோ தேடுகிறது. 129 00:19:02,059 --> 00:19:04,019 இரவின் அதிசயம். 130 00:19:11,360 --> 00:19:12,780 ஒரு சிறுத்தைப்புலி நத்தை. 131 00:19:16,240 --> 00:19:17,780 அதிக வெப்பமும், ஈரப்பதமும் உள்ள இரவுகளில், 132 00:19:17,866 --> 00:19:21,866 இயற்கையின் மிக வியக்கத்தக்க காட்சி உயிரினங்களாக அவை தோன்றுகின்றன. 133 00:19:38,178 --> 00:19:41,808 இன்னொரு நத்தையின் வழிதடத்தைத் தொடர்ந்து இது மேலே ஏறுகிறது. 134 00:19:57,489 --> 00:19:58,949 அவை இரண்டும் சந்திக்கும் போது... 135 00:20:03,537 --> 00:20:04,657 அவை நடனமாடுகின்றன. 136 00:20:17,134 --> 00:20:20,264 பின்னர், கிளையின் மீது உள்ள தங்கள் பிடியை விடுத்து, 137 00:20:20,345 --> 00:20:23,175 கீழே ஒட்டிக்கொள்ளும் சேறில் விழுகின்றன. 138 00:20:27,436 --> 00:20:29,266 ஆபத்தில்லாத பாதுகாப்பான இடத்தில்... 139 00:20:33,859 --> 00:20:35,489 அவை புணருகின்றன. 140 00:21:02,221 --> 00:21:05,061 தோட்டத்தின் எல்லா பாகங்களிலும், புதிய உயிர்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. 141 00:21:09,603 --> 00:21:12,943 அந்த செவிலித் தேரையும், எப்படியோ குளத்தைச் சென்று அடைந்துவிட்டது. 142 00:21:15,317 --> 00:21:17,487 அவன் பிறந்த இடமும் அந்த குளம்தான். 143 00:21:30,832 --> 00:21:33,462 இயற்கை குளங்கள் அரிதாகிவிட்ட இந்த காலத்தில், 144 00:21:34,086 --> 00:21:37,206 தோட்டக் குளங்கள் தான் சிறிய உயிரினங்களுக்கு வாழ்வளிக்கும் ஊற்று. 145 00:21:49,601 --> 00:21:52,811 ஹாம்ஸ்டரின் வாழ்விலும் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. 146 00:21:55,482 --> 00:21:58,532 தோட்டத்தில் வாழும் முடிவு, நிச்சயமாக நல்ல முடிவுதான். 147 00:22:06,869 --> 00:22:09,329 அவள் ஏழு குட்டிகளுக்குத் தாயாகியிருக்கிறாள். 148 00:22:14,543 --> 00:22:17,383 முதல் இரண்டு வாரங்களுக்கு அவற்றின் கண்கள் மூடியே இருக்கும். 149 00:22:19,965 --> 00:22:22,795 அந்த காலத்திற்குள், குட்டிகளின் அளவு இரட்டிப்பாகி விடும். 150 00:22:25,596 --> 00:22:28,596 அதற்கு ஈடுகொடுக்க, தாய் நன்றாக சாப்பிட வேண்டும். 151 00:22:30,684 --> 00:22:33,104 இத்தனை குட்டிகளுக்கு பாலூட்டுவது எளிதன்று. 152 00:22:40,110 --> 00:22:43,320 அதிர்ஷ்டவசமாக, தோட்டக் காரரின் கடின உழைப்பு நல்ல பலன்களைத் தருகிறது. 153 00:22:54,166 --> 00:22:59,126 ஆனால், அவள் வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும், தனது உயிரை பணயம் வைக்கிறாள். 154 00:23:14,228 --> 00:23:16,648 குறைவான தேடல்களில் வருவதே சிறந்தது. 155 00:23:18,315 --> 00:23:20,525 ஹாம்ஸ்டர்கள் நன்றாக செய்யும் விஷயத்தை அவள் செய்ய வேண்டும். 156 00:23:23,570 --> 00:23:26,200 அந்தக் கன்னங்களில், மூன்று வேளைக்கான உணவை பதுக்கி வைக்க இடமுள்ளது. 157 00:23:44,091 --> 00:23:46,721 ஆனால், அவள் வாயோ சிறியதாகவே திறக்கிறது. 158 00:24:05,654 --> 00:24:08,284 கோடைகாலத்தின் உச்சியில், தோட்டம் மிக வேகமாக வளர்ச்சியடைகிறது. 159 00:24:20,836 --> 00:24:23,046 கூடவே, உணவிற்கு அதைச் சார்ந்திருக்கும் சிறிய உயிரினங்களும் வளர்கின்றன. 160 00:24:30,804 --> 00:24:31,854 அப்போதுதான் முட்டையிலிருந்து வெளியேறிய 161 00:24:31,930 --> 00:24:35,890 அந்துப்பூச்சியின் புழு, ஒரு ஊசியின் காதினுள் போய்விடும் அளவிற்குச் சிறியது. 162 00:24:41,023 --> 00:24:43,233 ஆனால், அந்த சிறு புழுவிற்கு உள்ளதோ அசுர பசி. 163 00:24:46,737 --> 00:24:49,277 மூன்றே வாரங்களில், அது வளர்கிறது... 164 00:24:51,825 --> 00:24:52,865 வளர்கிறது... 165 00:24:55,495 --> 00:24:58,325 அதனுடைய பழைய குட்டி உருவத்தைவிட ஆயிரம் மடங்கு பெரிதாக. 166 00:25:03,712 --> 00:25:06,922 இப்போது தான், அதாவது தோட்டம் சுறுசுறுப்பாக இருக்கும் நிலையில்தான், 167 00:25:08,008 --> 00:25:10,178 மனிதர்கள் அதை மீண்டும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவார்கள். 168 00:25:16,558 --> 00:25:18,768 ஆனால் இயற்கை தன்னை மீண்டும் நிலைநாட்டிக் கொள்ளும். 169 00:25:25,234 --> 00:25:27,954 ஃபார்மிக் அமிலத்தை ஒரு முறை தெளித்தால் போதும் அதை சாதிக்க. 170 00:25:32,282 --> 00:25:35,702 பல சிறிய உயிரினங்கள் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தங்களை பாதுகாக்கின்றன. 171 00:25:39,289 --> 00:25:42,289 ஆனால், மனிதர்களிடமோ, பெருமளவு நாசம் விளைவிக்கும் கருவிகள் உள்ளன. 172 00:25:52,427 --> 00:25:55,807 வெளியில் சென்று உணவை சேகரித்து வரும் பணியில் உள்ள எறும்புகளுக்கோ... 173 00:26:03,522 --> 00:26:04,732 ...அது பெருத்த நாசம். 174 00:26:37,264 --> 00:26:38,974 அடிபட்டவர்களின் எண்ணிக்கை அதிகமான போதிலும், 175 00:26:40,267 --> 00:26:42,767 இந்த எறும்புகள், அடிபட்டவற்றை அப்படியே விட்டுவிட்டுச் செல்வதில்லை. 176 00:26:46,106 --> 00:26:49,776 அவற்றை தங்கள் வசிப்பிடத்திற்குச் சுமந்து செல்கின்றனர். 177 00:26:54,865 --> 00:26:57,195 வீட்டிற்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிப்பது எளிதே அல்ல. 178 00:26:59,953 --> 00:27:03,923 மேலும், இப்போது வெட்டப்பட்ட புல், அவர்களுக்கு எந்த பாதுகாப்பையும் தராது. 179 00:27:19,223 --> 00:27:23,443 ஸ்டார்லிங்குகளுக்கு, நத்தைகளைவிட எறும்புகளை மிகவும் பிடிக்கும். 180 00:27:29,107 --> 00:27:32,107 இந்த முறை ஃபார்மிக் அமிலத்தை வெளியிடுவது தனக்கே வினையாக முடிகிறது. 181 00:27:35,072 --> 00:27:37,242 ஸ்டார்லிங் அதை ஆமோதிக்கிறது. 182 00:27:37,824 --> 00:27:41,624 அந்த அமிலம் இறக்கைகளை பதப்படுத்தவும், ஒட்டுண்ணிகளைத் தவிர்க்கவும் உதவுகிறது. 183 00:27:47,376 --> 00:27:50,046 ஆனால், திறந்த வெளித் தோட்டத்தில் தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்வது ஆபத்தானது. 184 00:28:24,037 --> 00:28:25,867 எறும்புகளின் நல்ல காலம். 185 00:28:28,083 --> 00:28:32,633 அவர்கள் வீட்டைச் சென்றடையும் முன்னர் கடக்க, இன்னும் ஒரேயொரு தடைதான் உள்ளது. 186 00:28:40,387 --> 00:28:42,007 சுட்டெரிக்கும் சூரியன். 187 00:28:45,058 --> 00:28:46,478 உருமாறும் மண்மேடுகள். 188 00:28:51,440 --> 00:28:53,280 மற்றும் மிக பயங்கரமான குழிநரிகள். 189 00:28:56,111 --> 00:29:01,121 அவை குழிகளைத் தோண்டி மணலில் புதைந்து கொண்டு, உணவு தப்பிக்காமல் பிடித்துவிடும். 190 00:29:12,044 --> 00:29:15,674 மாட்டிக் கொண்ட தன் தோழியைக் காப்பாற்ற ஒரு எறும்பு தன் உயிரை பணயம் வைக்கிறது. 191 00:29:24,556 --> 00:29:26,636 எனினும், இம்முறை, அவளைக் காப்பாற்ற முடியாது. 192 00:29:39,613 --> 00:29:44,243 ஆனால், எறும்புகளின் இந்த நல்ல இயல்பின் காரணமாக, பெரும்பாலானவை திரும்பிவிடுகின்றன. 193 00:30:00,425 --> 00:30:04,845 இப்போது, ஹாம்ஸ்டர் குட்டிகளுக்கு நான்கு வாரங்கள் ஆகவே, குறுகுறுப்பாக ஓடுகின்றன. 194 00:30:09,685 --> 00:30:11,595 தோட்டத்தை சுற்றிப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது. 195 00:30:25,033 --> 00:30:28,453 அவர்கள் தாயும், அதை தகுந்த இடத்திலிருந்து தொடங்குவைத உறுதி செய்கிறாள். 196 00:30:35,043 --> 00:30:36,713 ஒரு பசுமையான சோலையில்... 197 00:30:38,046 --> 00:30:39,756 சதாகாலமும் மாறிக் கொண்டிருக்கும் உலகில். 198 00:30:46,013 --> 00:30:47,603 எல்லாமே உன்னதமாக இல்லாமல் போகலாம். 199 00:30:49,975 --> 00:30:51,095 ஆனால் அதுதான் வீடு. 200 00:30:56,190 --> 00:31:00,820 அடிக்கடி, தோட்டத்தில் வாழும் உயிரினங்களை, நாம் தொல்லையாக கருதுகிறோம். 201 00:31:02,654 --> 00:31:05,874 ஆனால், அதை தவிர்த்து, நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். 202 00:31:06,909 --> 00:31:10,909 சின்னஞ்சிறிய அற்புதங்களின் சமூகம் ஒன்று நம் உலகத்தில் ஒரு குடும்பத்தை உருவாக்க 203 00:31:10,996 --> 00:31:14,166 முயற்சிப்பதை நாம் காண முடியும். 204 00:31:23,717 --> 00:31:26,427 சிறியதாக இருப்பதால் உள்ள இடர்களை மறப்பது சுலபம். 205 00:31:32,976 --> 00:31:34,436 ஆனால் உதவும் கரங்களுடன்... 206 00:31:39,441 --> 00:31:40,821 சின்னஞ்சிறியவையும்... 207 00:31:46,406 --> 00:31:48,526 அரிய பெரிய சாதனைகளைப் படைக்கலாம். 208 00:32:50,470 --> 00:32:52,470 தமிழ் மொழி பெயர்ப்பு அகிலா குமார்