1 00:00:07,341 --> 00:00:09,841 புவி மிகவும் வண்ணமயமாக இருப்பதால். 2 00:00:10,636 --> 00:00:13,676 வாழ்வில் சில சின்னஞ்சிறிய விஷயங்களை தவறவிடுவது சகஜம். 3 00:00:15,766 --> 00:00:17,636 ஆனால், சற்று கூர்ந்து கவனித்தால்... 4 00:00:18,143 --> 00:00:20,563 அங்கு கண்டறியப்படாத ஒரு உலகமே உள்ளது. 5 00:00:22,648 --> 00:00:24,978 சிறிய சாகசகாரர்களுக்கும்... 6 00:00:26,485 --> 00:00:27,815 சிறிய அரக்கர்களுக்கும்... 7 00:00:29,029 --> 00:00:31,409 ராட்சத எதிர்ப்புகள் மீது வெற்றிக்கொள்ள... 8 00:00:34,618 --> 00:00:40,038 அசாத்திய சக்திகள் தேவைப்படும் ஒரு உலகம். 9 00:00:55,347 --> 00:00:56,887 வாழ்க்கை வேகமாக நகர்கிறது. 10 00:00:56,974 --> 00:00:58,104 வர்ணனையாளர் பால் ரட் 11 00:00:58,183 --> 00:00:59,813 குறிப்பாக நீங்கள் சிறிதாக இருக்கும்போது. 12 00:01:03,105 --> 00:01:05,515 இந்த சிறிய சிப்மங்க் அணில் ஒரு மாதமே வயதானது. 13 00:01:06,775 --> 00:01:09,065 ஆனால் அதிர்ஷ்டவசமாக அதனால் ஒரு வருடத்திற்கு மேல் வாழ முடியும். 14 00:01:12,865 --> 00:01:14,905 ஆராய நிறைய இருக்கிறது. 15 00:01:16,869 --> 00:01:18,289 ஆனால் நேரமோ மிகக் குறைவு. 16 00:01:23,292 --> 00:01:26,922 அதன் வட அமெரிக்க வனப்பகுதி புது உயிர்களால் நிரம்பப்போகிறது. 17 00:01:31,258 --> 00:01:32,888 சிறிய உயிரினங்களாலும்... 18 00:01:33,635 --> 00:01:35,465 பெரிய வாய்ப்புகளாலும். 19 00:01:45,731 --> 00:01:49,941 ஆனால் கண் சிமிட்டும் நேரத்தில் சிறிய உயிரினங்களின் வாழ்க்கை முடிந்துவிடலாம். 20 00:02:05,751 --> 00:02:06,961 நிற்பதற்கு நேரம் இல்லை. 21 00:02:18,639 --> 00:02:19,719 வேகமாக ஓடு. 22 00:02:27,064 --> 00:02:28,074 விரைவாக கற்றுக்கொள். 23 00:02:32,402 --> 00:02:34,912 அப்படிச்செய்தால் இந்த ஆண்டு முழுவதும் தாக்குப்பிடிக்கலாம். 24 00:02:42,371 --> 00:02:46,581 காடு 25 00:02:55,092 --> 00:02:56,302 வசந்த காலத்தின் ஆரம்பம். 26 00:02:58,262 --> 00:03:00,352 ஆப்பலேச்சியன்ஸ் மலைகளின் காடுகள் 27 00:03:00,430 --> 00:03:02,060 இப்போது பூக்க ஆரம்பித்துள்ளன. 28 00:03:11,567 --> 00:03:13,607 இங்கே நிறைய உணவு இருக்கிறது, 29 00:03:13,694 --> 00:03:17,414 ஒரு உள்ளங்கை அளவிலான சிப்மங்க் அணிலுக்கு அரை ஏக்கர் மட்டுமே தேவை. 30 00:03:28,584 --> 00:03:30,254 குறிப்பாக கொட்டைகள் இங்கே ஏராளம். 31 00:03:34,298 --> 00:03:36,928 அதுதான் இந்த சிறிய உலகை இயக்கும் நாணயம். 32 00:03:39,928 --> 00:03:44,138 இலையுதிர் காலத்தில், அவை பழுத்தவுடன், காற்றடிக்கும்போது கீழே விழும். 33 00:03:48,478 --> 00:03:50,898 ஆனால் அதற்கு முன்பு, அது சமாளிக்க வேண்டியது நிறைய உள்ளது. 34 00:03:59,740 --> 00:04:02,410 ஒரு மூத்த, வலிமையான ஆண் அணில் ஏற்கனவே இங்கு வசிக்கிறது. 35 00:04:06,955 --> 00:04:08,785 சிறிய சிப்மங்க் அணில் பிழைத்திருக்க வேண்டுமென்றால், 36 00:04:09,249 --> 00:04:12,249 ஒருநாள் விரைவில் அது தன் சொந்தக்காலில் நிற்க வேண்டும். 37 00:04:15,088 --> 00:04:16,628 ஆனால் சண்டையிடுவது ஆபத்தானது. 38 00:04:18,841 --> 00:04:21,851 இந்த பருவத்தின் ஆரம்பத்தில் அது காயமடையக்கூடாது. 39 00:04:49,790 --> 00:04:51,500 அது கவனத்தை ஈர்க்காமல் இருக்க வேண்டும்... 40 00:04:52,292 --> 00:04:54,092 மீதமிருக்கும் வெளிப்புறங்களில் கிடைக்கும் கொஞ்ச உணவில் வாழ வேண்டும்... 41 00:04:58,131 --> 00:05:00,181 தனக்கென்று நிலத்தை பிடிக்கும் அளவுக்கு பெரிதாகும் வரை. 42 00:05:06,849 --> 00:05:10,059 பெரும்பாலானவைகளுக்கு, வசந்த காலம் வெளியே சென்று உணவைத் தேடுவதற்கான நேரம். 43 00:05:14,147 --> 00:05:17,857 சிறிய விலங்குகளில் வேகமான வளர்சிதை மாற்றம் இருப்பதால் அடிக்கடி சாப்பிட வேண்டும். 44 00:05:20,988 --> 00:05:22,818 கம்பளிப்பூச்சிகள் அகோர பசி கொண்டவை... 45 00:05:23,949 --> 00:05:25,909 பறவைகளும் அப்படித்தான். 46 00:05:32,583 --> 00:05:36,003 ஊற்றெடுக்கும் மரச்சாறை அடைய சாப்ஸக்கர்கள் நூற்றுக்கணக்கான துளைகளை இடுகின்றன. 47 00:05:39,423 --> 00:05:42,633 வாதுமைக் கொட்டை அளவிலான ஹம்மிங்பறவைகள் சூழ்நிலையை நன்றாக பயன்படுத்துகின்றன. 48 00:05:48,473 --> 00:05:52,273 அவை இங்கே வருவதற்கு கிட்டத்தட்ட 5,000 கிலோமீட்டர் தூரம் பறக்கின்றன. 49 00:05:54,438 --> 00:05:57,648 இந்த பருவகால மரச்சாறை குடிக்க சரியான நேரத்தில் வந்து சேருகின்றன. 50 00:06:08,702 --> 00:06:10,912 காட்டின் பெரும்பகுதியில் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும்போது... 51 00:06:12,539 --> 00:06:15,169 ஒரு உறுப்பினர் மட்டும் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறார். 52 00:06:22,966 --> 00:06:25,586 ஒரு முட்டை ஓட்டைவிடச் சிறிய இடத்தில் சுருண்டு தூங்குகிறது, 53 00:06:26,053 --> 00:06:29,683 எட்டு மாதங்களாக உறங்கும் ஒரு குதிக்கும் எலி. 54 00:06:35,354 --> 00:06:37,564 இப்போது, ஒருபோதும் எழுந்திருக்க முடியாத ஆபத்தில் இருக்கிறது. 55 00:06:44,530 --> 00:06:46,990 நீண்ட காலம் தூங்கினால், அது பட்டினியால் இறக்கக் கூடும். 56 00:06:49,535 --> 00:06:51,655 இந்த எலிகளில் மூன்றில் இரண்டு பங்கு இறந்து தான் போகும். 57 00:06:58,001 --> 00:07:01,171 மறுபுறம், அதன் அக்கம்பக்கத்தினரோ ஒருபோதும் ஓய்வெடுப்பதில்லை. 58 00:07:04,383 --> 00:07:06,843 அவற்றுக்கு உணவளிக்க நூற்றுக்கணக்கான சிறிய உயிர்கள் உள்ளன. 59 00:07:15,102 --> 00:07:17,522 எல்லா எறும்புகளையும் போலவே அவை கடின உழைப்பாளிகள். 60 00:07:18,105 --> 00:07:20,935 ஆனால் அவை தனித்துவமாக இருப்பது அவை வாழும் இடத்தால்தான். 61 00:07:26,780 --> 00:07:29,990 ஒரு மணலின் அளவு மட்டுமே உள்ள அவை, மிகச் சிறியவை, 62 00:07:30,075 --> 00:07:34,495 அவற்றின் முழு சமூகமும் ஒரு ஏகோர்ன் கொட்டைக்குள் பொருந்துகிறது. 63 00:07:46,633 --> 00:07:48,473 இது சரியான பாதுகாப்பான வீடாகத் தெரிகிறது. 64 00:07:51,054 --> 00:07:55,274 ஆனால் வேறொருவரின் உணவில் உங்கள் வீட்டைக் கட்டுவது அவ்வளவு நல்லதல்ல. 65 00:08:01,315 --> 00:08:03,145 ராட்சதர்கள் இந்த காட்டில் உலாவுவார்கள். 66 00:08:23,128 --> 00:08:24,338 காட்டு வான்கோழிகள். 67 00:08:25,923 --> 00:08:28,593 முட்டைகளைப் பாதுகாக்கவும் இறுக்கமாகப் பிடித்துக்கொள்வதற்குமான நேரம். 68 00:08:33,931 --> 00:08:35,721 இது ஒரு கடினமான சவாரியாக இருக்கலாம். 69 00:08:44,358 --> 00:08:46,608 குறைந்தபட்சம் ஏகோர்ன்களாவது உறுதியான வீடுகளாக இருக்கின்றன. 70 00:08:47,402 --> 00:08:49,702 மேலும் அவை உருளுவதற்காக உருவாக்கப்பட்டவை. 71 00:09:06,713 --> 00:09:08,923 காட்டில் கோடைக்காலம் வேகமாக வந்துவிடுகிறது. 72 00:09:11,051 --> 00:09:12,681 இது பசுமையானதாகவும் வளம் நிறைந்ததாகவும் காட்சியளிக்கிறது. 73 00:09:18,225 --> 00:09:21,645 இருந்தாலும், இந்த சிறிய சிப்மங்க் அணிலுக்கு குறைந்த உணவே கிடைக்கிறது. 74 00:09:25,399 --> 00:09:27,029 ஏகோர்ன்கள் இன்னும் பழுக்கவில்லை. 75 00:09:34,032 --> 00:09:36,162 அதோடு, தனக்கென சொந்த நிலம் இல்லாமல், 76 00:09:36,660 --> 00:09:39,290 வளர்ந்த ஆணின் பிரதேசத்தில் உணவைத் தேடும் கட்டாயத்துக்கு ஆளாகிறது. 77 00:09:44,459 --> 00:09:46,089 இன்னும் அந்த சண்டைக்குத் தயாராகவில்லை. 78 00:09:51,383 --> 00:09:52,633 அது பெரிதாக வேண்டும். 79 00:10:02,394 --> 00:10:06,234 இக்கட்டான காலங்களில், சிப்மங்க் அணில்கள் கிட்டத்தட்ட எதையும் முயற்சிக்கும். 80 00:10:09,443 --> 00:10:11,033 கூடில்லாத நத்தையைக் கூட. 81 00:10:20,329 --> 00:10:21,539 அல்லது விட்டுவிடும். 82 00:10:23,540 --> 00:10:24,710 ஆனாலும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. 83 00:10:28,420 --> 00:10:30,630 மேலே ஒரு கொடிய அச்சுறுத்தல் காத்திருக்கிறது. 84 00:10:35,344 --> 00:10:37,184 விரைவில் மற்றொன்ரும் வரவிருக்கிறது. 85 00:10:49,274 --> 00:10:52,494 இப்போது, இந்த கோஷாக் வல்லூறு குஞ்சு நிற்கவே தடுமாறுகிறது... 86 00:10:53,529 --> 00:10:54,739 எங்கே பறப்பது? 87 00:10:59,576 --> 00:11:02,076 அது சிப்மங்க் அணில்களை வேட்டையாடுவதற்கு சிறிது காலம் ஆகும். 88 00:11:09,127 --> 00:11:12,207 கீழே, விசித்திரமான ஒன்று குஞ்சு பொரிக்கிறது. 89 00:11:24,893 --> 00:11:26,733 இரண்டு வருடங்கள் லார்வாவாக இருந்த, 90 00:11:27,396 --> 00:11:31,396 ஒரு கோல்ஃப் பந்தின் அளவுள்ள ஹெர்குலீஸ் வண்டு வெளிவருகிறது. 91 00:11:43,579 --> 00:11:44,789 அது பெரும் அவசரத்தில் இருக்கிறது... 92 00:11:46,707 --> 00:11:49,707 மேட்டு நிலத்தை கைப்பற்றவும், ஒரு துணையைத் தேடிக்கொள்ளவும். 93 00:11:56,383 --> 00:11:57,473 ஆனால் ஏன் நடக்க வேண்டும்... 94 00:11:59,761 --> 00:12:00,971 உங்களால் பறக்க முடியும்போது? 95 00:12:31,210 --> 00:12:33,340 உலகின் கனமான பூச்சிகளில் ஒன்று, 96 00:12:33,962 --> 00:12:36,382 அது பறப்பதற்கு முன்பு அதன் சிறகு தசைகள் 97 00:12:36,465 --> 00:12:38,045 முழுமையாக தயாராக வேண்டும். 98 00:12:41,762 --> 00:12:43,392 இப்போதைக்கு நடப்பதே பாதுகாப்பானது. 99 00:12:46,308 --> 00:12:50,728 ஏகோர்ன் அந்துப்பூச்சியுடன் ஒப்பிடும்போது இந்த கடினமான பணி எளிமையானதாக தோன்றுகிறது. 100 00:12:51,897 --> 00:12:53,817 அது அந்த வண்டைவிட நூறில் ஒரு பங்கு அளவே என்றாலும், 101 00:12:54,733 --> 00:12:57,693 அது வண்டைவிட இன்னும் ஆயிரம் மடங்கு தூரம் செல்ல வேண்டும். 102 00:13:09,039 --> 00:13:10,419 அது ஒரு மாபெரும் பயணத்தை தொடங்கியுள்ளது... 103 00:13:14,294 --> 00:13:16,134 மரத்தின் உச்சியை அடைய. 104 00:13:32,354 --> 00:13:34,864 அனைத்தும் விலைமதிப்பற்ற ஏகோர்ன்களுக்காகவே. 105 00:13:36,316 --> 00:13:37,726 அவை இன்னும் பழுக்கவில்லை. 106 00:13:40,612 --> 00:13:42,242 ஆனால் அது அவற்றை சாப்பிடப் போவதில்லை. 107 00:13:45,659 --> 00:13:46,869 அவை அதன் குட்டிகளுக்கானவை. 108 00:13:56,336 --> 00:13:58,666 அவை பழுப்பதற்கு முன்புதான் அதனால் அவற்றைத் துளையிட முடியும். 109 00:14:06,138 --> 00:14:08,138 ஒரு முட்டைக்காக அத்தனை கடும் முயற்சி. 110 00:14:13,187 --> 00:14:15,687 அது நிரப்ப இன்னும் பல ஏகோர்ன் உள்ளன. 111 00:14:29,578 --> 00:14:32,998 காட்டின் தரையில், குதிக்கும் எலி அசைய தொடங்குகிறது. 112 00:14:36,126 --> 00:14:37,836 அது விரைவில் எழுந்திருக்க வேண்டும். 113 00:14:40,631 --> 00:14:43,931 இப்போதைக்கு, மாறிவரும் பருவநிலைகளையும்... 114 00:14:44,635 --> 00:14:47,965 மேலே உருவாகும் போர் சூழலையும் அறியாமல் ஆனந்தமாக உறங்குகிறது. 115 00:14:54,811 --> 00:14:57,651 ஹெர்குலீஸ் வண்டு மரத்தின் உச்சியை அடைந்துவிட்டது. 116 00:15:04,321 --> 00:15:05,951 ஆனால் ஓய்வெடுக்க நேரமில்லை. 117 00:15:08,742 --> 00:15:11,162 போட்டியாளன் பின்னால் வருகிறான். 118 00:15:22,047 --> 00:15:24,377 இந்த கிரகத்தின் வலிமையான வண்டுகளில் சில. 119 00:15:26,844 --> 00:15:29,854 ஒவ்வொன்றும் தங்கள் சொந்த எடையைப் போல 100 மடங்கு எடையை தூக்க முடியும். 120 00:15:35,602 --> 00:15:38,862 எதிரியை மரத்திலிருந்து தூக்கி எறிவதே குறிக்கோள். 121 00:15:41,149 --> 00:15:43,529 பூச்சிகளின் உலகின் சுமோ மல்யுத்த வீரர்கள். 122 00:16:41,210 --> 00:16:42,840 இந்த மரம் அவனுடையது. 123 00:16:45,297 --> 00:16:48,007 அதனுடன் இனச்சேர்க்கைக்கான வாய்ப்பும் கிடைக்கிறது. 124 00:17:00,020 --> 00:17:03,270 இளம் கோஷாக் வல்லூறுவின் பார்வை ஏற்கனவே நம்முடையதை விட இரு மடங்கு சிறந்தது. 125 00:17:05,901 --> 00:17:08,531 நான்கு வாரங்கள் ஆகும்போது, கிட்டத்தட்ட முழுமையாக வளர்ந்துவிடும். 126 00:17:17,037 --> 00:17:18,867 அதன் பெரும்பாலான இறகுகள் இப்போது வளர்ந்துவிட்டன. 127 00:17:24,377 --> 00:17:25,837 விரைவில் அதனால் பறக்க முடியும். 128 00:17:30,425 --> 00:17:33,045 அதுவரை, சிறிய சிப்மங்க் அணில் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம். 129 00:17:39,893 --> 00:17:41,103 இருந்தாலும் அவ்வளவு எளிதல்ல. 130 00:17:43,105 --> 00:17:47,105 இலையுதிர் காலத்திற்கு கொஞ்ச காலமே இருந்தாலும், ஏகோர்ன்கள் பழுத்துவிட்டன. 131 00:17:57,327 --> 00:17:59,157 நடுவேனிற்கால இரவு பொழுதில், 132 00:18:00,080 --> 00:18:01,500 அதிசயமான நிகழ்வு ஒன்று காணக்கிடைக்கும். 133 00:18:14,052 --> 00:18:18,642 ஆயிரக்கணக்கான மின்மினி பூச்சிகள் இரவில் நடனமாடுகின்றன. 134 00:18:29,526 --> 00:18:32,776 தனது மரக்கட்டையின் உள்ளே, சிறிய குதிக்கும் எலி கண்விழிக்கிறது. 135 00:18:37,868 --> 00:18:40,698 ஆனால் இப்போது, பசியால் சாகும் நிலையில் இருக்கிறது. 136 00:18:41,830 --> 00:18:44,000 அது உணவைக் கண்டுபிடிக்க வேண்டும். 137 00:18:47,920 --> 00:18:49,920 அதாவது ஆபத்தான இரவை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். 138 00:18:59,556 --> 00:19:02,766 வினோதமான விஷயங்கள் காட்டின் தரையில் நடக்கும். 139 00:19:07,147 --> 00:19:11,237 இயற்கையின் வினோதமான காட்சிகளில் ஒன்று வெளிப்படுத்தப்பட இருக்கிறது. 140 00:19:15,197 --> 00:19:18,407 முட்டைப்புழுவாக நிலத்துக்கடியில் 17 வருடங்கள் உண்டு களித்தப் பிறகு, 141 00:19:18,992 --> 00:19:21,202 சில்வண்டுகள் இறுதியாக மேலே வருகின்றன. 142 00:19:24,206 --> 00:19:27,576 இப்போது, அவை வாழ இன்னும் சில நாட்களே இருக்கின்றன. 143 00:19:30,462 --> 00:19:31,842 போட்டி தொடங்கிவிட்டது. 144 00:19:38,679 --> 00:19:40,679 வாழ்நாள் முழுக்க தனியாக நிலத்துக்கு அடியில் இருந்த பிறகு, 145 00:19:41,265 --> 00:19:46,725 மில்லியன் கணக்கான கட்டைவிரல் அளவுள்ள சில்வண்டுகள் இப்போது வெளிவருக்கின்றன. 146 00:19:51,859 --> 00:19:54,489 இது பூமியில் மிகப்பெரிய புலம்பெயர்வுகளில் ஒன்றாகும். 147 00:19:57,239 --> 00:20:00,529 இன்றிரவு, அவை சிறிய பூச்சியில் இருந்து பெரிய பூச்சிகளாக மாறும். 148 00:20:10,711 --> 00:20:14,461 நாளை, அவை இனச்சேர்க்கை கொள்ளும், பிறகு இறந்துவிடும். 149 00:20:24,141 --> 00:20:25,891 பல பூச்சிகள் இரவைக் கூட தாண்டாது. 150 00:20:32,357 --> 00:20:36,567 ஆனால் பெரும்பாலானவை இனப்பெருக்கம் வரை பிழைக்குமென புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. 151 00:20:37,863 --> 00:20:39,913 காட்டில் வாழும் உயிரினங்களுக்கு இன்னும் விருந்து காத்திருக்கிறது. 152 00:20:46,163 --> 00:20:48,753 ஆனால் குதிக்கும் எலியோ சைவம். 153 00:20:52,377 --> 00:20:55,377 சிறிய விதைகளையும் புஞ்சைகளையும் அது தேடிச் செல்கிறது. 154 00:21:06,892 --> 00:21:09,652 டிம்பர் சாரைப்பாம்புகளால் பல மாதங்கள் உணவின்றி வாழ முடியும். 155 00:21:18,403 --> 00:21:22,373 இப்போது, எலி அளவுள்ள ஒன்று சாப்பிட ஏதுவாக இருக்கும். 156 00:21:29,039 --> 00:21:31,249 இருட்டில் உணவு தேடுவது ஆபத்தான விஷயமாகும்... 157 00:21:35,504 --> 00:21:36,594 உங்களிடம் ரகசிய... 158 00:21:39,842 --> 00:21:41,182 அசாத்திய சக்திகள் இருந்தாலொழிய. 159 00:21:49,726 --> 00:21:53,556 புவியீர்ப்பு விசையை மீறி, அதனால் இரண்டு மீட்டர் உயரம் தாவமுடியும். 160 00:22:03,365 --> 00:22:07,825 பாதங்களிலும் கால்களிலும் உள்ள அதிகப்படியான தசைநாண்களும் சிறிய அளவும் ஒன்றிணைந்து... 161 00:22:08,912 --> 00:22:11,922 காட்டில் பதுங்கியிருக்கும் ஆபத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது. 162 00:22:29,183 --> 00:22:32,313 அதோடு உணவு கிடைக்கும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல உதவுகிறது. 163 00:22:46,950 --> 00:22:48,740 கோடை முடிந்து இலையுதிர் காலம் வரும்போது, 164 00:22:50,495 --> 00:22:53,365 காடு ஒரு வியக்கத்தக்க பொற்காலத்துக்குள் நுழைகிறது. 165 00:22:59,004 --> 00:23:01,804 அதோடு புதிய அச்சுறுத்தலும் வருகிறது. 166 00:23:11,225 --> 00:23:13,265 இந்த இளம் கோஷாக் வல்லூறு சிறிய குஞ்சிலிருந்து... 167 00:23:19,858 --> 00:23:21,688 வான்வழி கொலைகாரனாக... 168 00:23:28,450 --> 00:23:29,870 உருவெடுத்துள்ளது. 169 00:23:34,957 --> 00:23:36,577 அதன் இறக்கைகள் ஒரு மீட்டருக்கு மேல் இருக்கும். 170 00:23:38,126 --> 00:23:42,046 அதோடு, மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க முடியும். 171 00:23:57,479 --> 00:23:59,939 சிறிய விலங்குகள் வானத்தை கவனிப்பது புத்திசாலித்தனமானது. 172 00:24:07,364 --> 00:24:08,874 பருந்துகளுக்காக மட்டும் அல்ல. 173 00:24:17,624 --> 00:24:20,044 சிப்மங்க் அணில் காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டது. 174 00:24:26,550 --> 00:24:28,050 ஏகோர்ன்கள் பழுத்துவிட்டன. 175 00:24:31,555 --> 00:24:35,635 இந்த ஆதாயம் ஓரிரு வாரங்கள் மட்டுமே நீடிக்கும், எனவே நிறைய சேகரிக்க வேண்டும். 176 00:24:40,814 --> 00:24:44,324 அந்த பெரிய வாயில் நிறைய கொட்டைகளை அதனால் திணிக்க முடியும். 177 00:24:49,740 --> 00:24:53,370 குளிர்காலத்தில் உயிர்வாழ நூற்றுக்கணக்கானவை தேவை என்பதால் இது மதிப்புமிக்க திறனாகும். 178 00:24:59,416 --> 00:25:02,416 ஆனால் அதன் சேமிப்பு கிடங்கு வேகமாக நிரம்புவது போல தெரியவில்லை. 179 00:25:09,092 --> 00:25:11,512 யாரோ அதன் சேமிப்பை திருடுகிறார்கள். 180 00:25:14,389 --> 00:25:15,599 மூத்த ஆண் அணில். 181 00:25:23,106 --> 00:25:24,936 இது எவ்வளவு அதிகமாக சேமிக்கிறதோ... 182 00:25:29,571 --> 00:25:31,621 அந்த அளவிற்கு அருகில் உள்ள அணில் திருடுகிறது. 183 00:25:38,705 --> 00:25:39,915 எல்லாவற்றுக்கும் மேலாக... 184 00:25:43,252 --> 00:25:46,172 அருகில் இருக்கும் பல கொட்டைகள் உபயோகமற்றவை. 185 00:25:52,344 --> 00:25:55,104 ஏகோர்ன் அந்துப்பூச்சியின் புழு உள்ளே வளர்கிறது. 186 00:25:58,892 --> 00:26:03,112 இப்போது ஜெல்லி பீன் அளவுள்ள அது, தப்பிக்க வேண்டிய நேரம் இது. 187 00:26:07,818 --> 00:26:09,648 சொல்வதை காட்டிலும் மிகவும் கடினமான பணி. 188 00:26:19,913 --> 00:26:22,003 வெற்று கொட்டைகள் கூட வீணாவதில்லை. 189 00:26:26,295 --> 00:26:30,125 புதிய தலைமுறை ஏகோர்ன் எறும்புகளுக்கு ஒரு புதிய வீடாகிறது. 190 00:26:41,810 --> 00:26:43,480 தனது வசதியான மரபொந்தில், 191 00:26:45,689 --> 00:26:48,689 குதிக்கும் எலி ஏற்கனவே தனது படுக்கையைத் தயார் செய்துவிட்டது. 192 00:26:51,987 --> 00:26:54,237 அது சில மாதங்கள் மட்டுமே விழித்திருக்கிறது. 193 00:26:55,032 --> 00:26:57,662 இப்போது மற்றொரு நீண்ட தூக்கத்திற்கான நேரம் இது. 194 00:27:03,123 --> 00:27:04,963 சிப்மங்க் அணிலுக்கு ஓய்வே கிடையாது. 195 00:27:06,835 --> 00:27:08,295 இலையுதிர் காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, 196 00:27:08,378 --> 00:27:11,218 குளிர்காலத்தில் தாக்குப்பிடிப்பதற்கான அதன் வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை. 197 00:27:16,345 --> 00:27:17,675 அதற்கு அதிகமான கொட்டைகள் தேவை. 198 00:27:19,389 --> 00:27:20,889 இதற்கு ஒரேயொரு வழி தான் உள்ளது. 199 00:27:27,606 --> 00:27:29,816 எதிரியின் எல்லைக்குள் நுழைவதற்கான நேரம். 200 00:27:39,993 --> 00:27:42,043 மூத்த ஆண் அணில் ஒருவேளை திருட விரும்பலாம்... 201 00:27:47,584 --> 00:27:49,804 ஆனால் அது நிச்சயமாக பகிர்ந்துகொள்ள தயாராக இல்லை. 202 00:28:06,478 --> 00:28:09,108 இளம் சிப்மங்க் அணில் கையும் களவுமாக மாட்டிக்கொண்டது. 203 00:28:14,319 --> 00:28:17,199 காட்டின் இந்தப் பகுதி இருவருக்கும் போதுமானதாக இல்லை. 204 00:28:30,127 --> 00:28:31,797 ஆனால் அதனால் எப்போதும் ஓடிக்கொண்டேயிருக்க முடியாது. 205 00:28:34,256 --> 00:28:35,876 இது சண்டையிடுவதற்கான நேரம். 206 00:29:06,997 --> 00:29:09,917 அடிபட்டு தோற்றதால், வயதான ஆண் ஓடிவிட்டது. 207 00:29:18,842 --> 00:29:21,802 அது திரும்பி வரப்போவதில்லை போல தெரிகிறது. 208 00:29:32,606 --> 00:29:35,226 சில நேரங்களில் நீங்கள் சிறியதாக இருந்தால், வாழ்க்கை வலிமிகுந்ததாக இருக்கலாம். 209 00:29:40,113 --> 00:29:42,533 இந்த சிப்மங்க் அணில் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையின் சிறந்த ஆதாயத்தை பெறுகிறது. 210 00:29:45,077 --> 00:29:46,907 தனகென்று ஒரு எல்லையை வகுத்துக்கொண்டது, 211 00:29:47,746 --> 00:29:49,456 நிறைய கொட்டைகளை சேகரித்துவிட்டது... 212 00:29:51,250 --> 00:29:54,380 ஒரு பெரிய காட்டு மரத்தில், சிறியதாக இருப்பதால் ஏற்படும்... 213 00:29:55,295 --> 00:29:57,255 சிக்கல்களையும் கடந்துவிட்டது. 214 00:29:59,466 --> 00:30:01,836 குளிர்காலத்தை கழிக்க அதற்குத் தேவையான அனைத்துடனும்... 215 00:30:04,429 --> 00:30:06,519 இறுதியாக, அது தூங்க செல்லலாம்... 216 00:30:08,392 --> 00:30:10,812 அடுத்த வசந்த காலத்தைப் பற்றி கனவு காணலாம். 217 00:31:07,659 --> 00:31:09,659 வசன தமிழாக்கம் அருண்குமார்