1 00:00:07,257 --> 00:00:09,837 புவி மிகவும் வண்ணமயமாக இருப்பதால், 2 00:00:10,636 --> 00:00:13,676 வாழ்வில் சில சின்னஞ்சிறிய விஷயங்களை தவறவிடுவது சகஜம். 3 00:00:15,766 --> 00:00:17,426 ஆனால், சற்று கூர்ந்து கவனித்தால்... 4 00:00:18,101 --> 00:00:20,561 அங்கு கண்டறியப்படாத ஒரு உலகமே உள்ளது. 5 00:00:22,648 --> 00:00:24,978 சிறிய சாகசகாரர்களுக்கும்... 6 00:00:26,485 --> 00:00:27,815 சிறிய அரக்கர்களுக்கும்... 7 00:00:29,029 --> 00:00:31,409 ராட்சத எதிர்ப்புகள் மீது வெற்றிக்கொள்ள... 8 00:00:34,618 --> 00:00:40,118 அசாத்திய சக்திகள் தேவைப்படும் ஒரு உலகம். 9 00:00:51,093 --> 00:00:53,053 வர்ணனையாளர் பால் ரட் 10 00:00:53,136 --> 00:00:57,266 ஆஸ்திரேலியா அற்புதமான உயிரினங்கள் நிறைந்த ஒரு நாடு. 11 00:00:59,226 --> 00:01:02,226 கங்காருக்கள் மற்றும் கோலாக்கள் மட்டுமல்ல. 12 00:01:05,566 --> 00:01:10,196 சூரியன் சுட்டெடுக்கும் இந்த உலகில், புதர்களுக்கு அடியில், 13 00:01:11,321 --> 00:01:12,871 வினோதமான சின்னஞ்சிறு விலங்கினங்கள்... 14 00:01:15,284 --> 00:01:17,334 தம்முடைய வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. 15 00:01:20,998 --> 00:01:23,378 உள்ளங்கை அளவு சிறிய சுகர் க்ளைடர், 16 00:01:23,458 --> 00:01:27,548 தனக்கான உணவையும் உறைவிடத்தையும், பிசின் மரங்களில் கண்டடைகிறது. 17 00:01:32,634 --> 00:01:34,474 அதன் அக்கம்பக்கத்து விலங்கினங்களும் அப்படித்தான். 18 00:01:39,516 --> 00:01:42,896 ஆனால், மிகச் சரியான தருணங்களில் கூட, அவை சவால்களைச் சந்திக்கின்றன. 19 00:01:48,609 --> 00:01:52,859 கோடைக்காலத்தின் உச்சத்தில், சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் போது... 20 00:01:52,946 --> 00:01:54,526 இன்றைய தீ அபாயம் அதிகம் 21 00:01:57,159 --> 00:01:58,989 ...உஷ்ணத்தைத் தாக்கு பிடிக்கிறவர்கள் மட்டுமே 22 00:02:04,333 --> 00:02:05,963 வெற்றிக் கொள்ள முடியும். 23 00:02:14,426 --> 00:02:19,216 ஆளில்லா தொலைதூரப் பகுதி 24 00:02:22,100 --> 00:02:26,270 ஆளில்லா வறண்ட கண்டத்தில் வசிப்பதில் சில சௌகரியங்கள் உள்ளன. 25 00:02:27,981 --> 00:02:33,901 சூரிய ஒளி அதிகம் இருப்பதால், பிசின் மரங்களில் அதிக சர்க்கரை உற்பத்தியாகிறது. 26 00:02:38,867 --> 00:02:42,447 வசந்த காலத்தில், சுகர் க்ளைடர்களின் உணவில் அது பெரும் பங்கு வகிக்கிறது. 27 00:02:48,085 --> 00:02:51,085 தற்சமயத்தில், அவற்றின் வாழ்க்கை நன்றாகவே போய்க் கொண்டு இருக்கிறது. 28 00:02:51,713 --> 00:02:55,973 பிசின் மரங்களுக்கிடையே, ஒரு இனிப்பு நிறுத்தத்தைத் தேடி தாவிக் கொண்டிருக்கிறது. 29 00:02:59,221 --> 00:03:04,141 ஒரு தாவலில், அது இரண்டு டென்னிஸ் மைதானத்தின் அளவு தாவி விடுகின்றது. 30 00:03:12,860 --> 00:03:15,950 அந்த சர்க்கரை, வானவில் லாரிகீட்களையும் ஈர்க்கின்றது. 31 00:03:16,613 --> 00:03:17,743 நூற்றுக்கணகானவைகளை. 32 00:03:25,622 --> 00:03:27,712 தேவைக்கதிகமான உணவு உள்ளது. 33 00:03:30,127 --> 00:03:33,547 அதனால், உஷ்ணமான பொழுதுகளில், அது அவற்றை அவர்களுக்காக விட்டுவிடும்... 34 00:03:35,465 --> 00:03:37,795 எங்காவது அமைதியாக ஓய்வெடுத்துக் கொள்ளும். 35 00:03:41,388 --> 00:03:45,178 பிறந்து இரண்டு வாரங்களே ஆன அதனுடைய குழந்தை. 36 00:03:53,400 --> 00:03:55,190 அதன் உயரமே கட்டை விரல் அளவுதான் இருக்கும். 37 00:03:56,945 --> 00:03:59,565 அது முழுதாகத் தன் தாயையே சார்ந்து இருக்கும். 38 00:04:02,075 --> 00:04:05,785 ஆனால், கோடைக்காலத்தின் இடையிலேயே, அது, இந்த சவால்கள் நிரம்பிய உலகில்... 39 00:04:07,080 --> 00:04:09,580 தனக்கான உணவைத் தானே தேடிக்கொள்ளத் தொடங்க வேண்டும். 40 00:04:15,464 --> 00:04:17,804 தற்பொழுது, வாழ்க்கை இங்கே நன்றாக இருக்கிறது, 41 00:04:18,509 --> 00:04:21,389 லாரிகீட் கள் இங்கேயே தங்க முடிவு செய்துவிட்டன. 42 00:04:25,807 --> 00:04:27,557 ஆனால் ஒரு கூட்டைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. 43 00:04:31,647 --> 00:04:35,107 ஆஸ்ட்ரேலியாவில், மரங்களில் பொந்துகள் ஏற்படுத்துவதற்கு மரங்கொத்திகள் கிடையாது. 44 00:04:38,195 --> 00:04:41,405 ஆகவே, பாதுகாப்பான மறைவிடங்கள் தான் அரிதான சொத்து. 45 00:04:49,873 --> 00:04:54,423 ராட்சத, பயங்கரக் கொலையாளி. 46 00:04:56,755 --> 00:04:59,465 லேஸ் மானிட்டர்கள், ஒரு குழந்தையின் எடையளவு இருக்கும், 47 00:05:01,093 --> 00:05:03,933 ஆனால் அவை எல்லாவற்றையும் உண்ணும். 48 00:05:12,646 --> 00:05:14,186 சுருள் மடிப்புப் பல்லி, 49 00:05:15,148 --> 00:05:19,148 கண்ணிமைக்கும் நொடியில், இந்த ராட்சச விலங்கிற்கு இரையாகி விடும். 50 00:05:25,868 --> 00:05:27,738 அது மறைந்து கொள்ள ஒரு மரம் வேண்டும். 51 00:05:32,124 --> 00:05:33,754 ஆனால் எல்லா மரங்களும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கு. 52 00:05:38,839 --> 00:05:41,839 சுருள் மடிப்புப் பல்லிகள் அதன் நிலத்தையே சார்ந்து இருப்பவை. 53 00:05:45,053 --> 00:05:46,723 தலையை ஆட்டுவது ஒரு எச்சரிக்கை அறிவிப்பு. 54 00:05:52,352 --> 00:05:55,112 ஆனால் புதிதாக அங்கு வந்தவற்றிற்கு வேறு போக்கிடம் கிடையாது. 55 00:06:01,153 --> 00:06:06,203 காயம் ஏற்படாமல் தப்பிப்பதற்காக, இந்தப் பல்லிகள் தங்களின் சுருள்களால் போராடும். 56 00:06:10,120 --> 00:06:11,710 எவ்வளவு பிரகாசமாக இருக்கிறதோ, அவ்வளவு நல்லது. 57 00:06:13,707 --> 00:06:15,417 ஆனால் ஒரே அளவிலிருந்தால்... 58 00:06:15,959 --> 00:06:16,959 அது உடல் ரீதியாகப் போராடும். 59 00:06:29,264 --> 00:06:31,564 இந்த ஊடுருவும் உயிரினம் பார்ப்பதற்கு பலமானதாக இருக்காது. 60 00:06:41,610 --> 00:06:43,740 ஏற்கனவே தங்கியுள்ள உயிரினம் 61 00:06:45,531 --> 00:06:47,571 அதைப் பயமுறுத்தித் துரத்திவிடும். 62 00:06:58,043 --> 00:07:00,003 பலமான ஆண் பல்லியால் துரத்தப்பட்ட அது, 63 00:07:01,463 --> 00:07:03,173 தற்போதைக்கு அமைதியாக இருக்கும். 64 00:07:04,299 --> 00:07:08,179 ஆனால் சீக்கிரமே, அது ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேட வேண்டியிருக்கும். 65 00:07:10,973 --> 00:07:13,103 சோதனையான நேரங்கள் காத்திருக்கிறது. 66 00:07:17,604 --> 00:07:19,984 எறும்புகள் ஏற்கனவே மும்முரமாக உணவை சேகரித்துக் கொண்டிருக்கின்றன. 67 00:07:22,109 --> 00:07:24,189 ஆனால் இரையைத் தேடுவது ஆபத்தானது தான். 68 00:07:25,279 --> 00:07:29,279 தொலைதூர வனாந்திரப் பகுதிகளில் விலங்குகள் நிறைந்திருக்கும். 69 00:07:33,370 --> 00:07:35,500 பெரிய பாதங்களும்... 70 00:07:39,126 --> 00:07:43,456 முதுகெலும்பும், நீளமான, ஈரமான நாக்கும் உடையது. 71 00:07:46,758 --> 00:07:47,798 எசிட்னா என்னும் முள்ளம் பன்றி. 72 00:07:51,471 --> 00:07:53,681 பார்ப்பதற்கு அவ்வளவு பயங்கரமாகத் தோற்றமளிக்காது. 73 00:07:55,726 --> 00:07:57,936 ஆனால் ஒரு எறும்பைப் பொறுத்தவரை, அது கொடிய விலங்கு. 74 00:08:02,816 --> 00:08:06,236 அது, 60,000 எறும்புகளை, பத்து நிமிடங்களில் சாப்பிட்டுவிடும். 75 00:08:12,576 --> 00:08:15,496 மரங்கள் மூலம் உணவை உண்ணுவதற்கு அதிக நேரம் பிடிக்கும். 76 00:08:20,542 --> 00:08:23,092 பிசின் மர இலைகள் நச்சுத் தன்மை உடையவை, 77 00:08:23,170 --> 00:08:25,880 கோலாக்கள் போன்ற சில விலங்கினங்களால் தான் அவற்றை உண்ண முடியும். 78 00:08:38,477 --> 00:08:41,097 ஆனால் அவற்றை ஜீரணிக்க அதிக சக்தி வேண்டும்... 79 00:08:41,772 --> 00:08:45,232 கோலாக்கள் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் தூங்குவதற்காக செலவழிக்கின்றன. 80 00:08:47,819 --> 00:08:50,659 அவை விழித்திருக்கும் போது கூட, சற்று மயக்கத்தில் தான் இருக்கும். 81 00:08:56,286 --> 00:08:57,746 இது கனவல்ல. 82 00:09:04,086 --> 00:09:05,706 இது நிஜம். 83 00:09:10,968 --> 00:09:12,968 இது ஒரு மாட் ஹாட்டர்பில்லர். 84 00:09:13,679 --> 00:09:20,559 கொட்டிய தோல்கள் முழுவதையும் தலையின் மேற்புறத்தால், சமாளித்து வாழுபவை. 85 00:09:23,021 --> 00:09:25,691 விசித்திரமானது, ஆனால் உயிர்காப்பான். 86 00:09:30,487 --> 00:09:35,827 கொலைகார வண்டுகள், தனக்குள் சுரக்கும் விஷத்தின் மூலம் அவற்றைக் கொல்லும். 87 00:09:43,792 --> 00:09:45,462 ஆனால் அதனுடைய விசித்திர தோற்றத்தின் காரணமாக, 88 00:09:46,086 --> 00:09:50,216 இந்த மாட் ஹாட்டர்பில்லர், அதன் எதிரிகளை தாக்குபிடித்து வாழும். 89 00:09:58,682 --> 00:10:02,312 சிறு உயிரினங்கள், இந்தப் பிசின் இலைகளை செரிமானம் செய்ய பழகிக் கொள்கின்றன. 90 00:10:06,648 --> 00:10:09,398 முட்கள் நிறைந்த குச்சிப் பூச்சி கூட, பார்க்க இவற்றைப் போலதான் இருக்கும். 91 00:10:11,737 --> 00:10:16,327 புத்திசாலிதனமாக ஏமாற்றி, தான் சாப்பிட்டு தன்னை சாப்பிடாதவாறு பார்த்துக் கொள்ளும். 92 00:10:18,076 --> 00:10:22,246 அது தினமும் தன் எடைக்கேற்ற அளவு இலைகளை உண்ணும். 93 00:10:29,588 --> 00:10:31,168 பிள்ளைகளைக் கவனிக்க அவற்றுக்கு நேரம் கிடையாது. 94 00:10:34,092 --> 00:10:36,512 மாறாக, அந்தப் பொறுப்பை வேறு யாரிடமாவது விட்டுவிடும். 95 00:10:53,987 --> 00:10:55,987 எறும்புகள், அதனுடைய முட்டைகளை 96 00:10:57,366 --> 00:11:00,446 சுவையான விதைகள் என்று நினைத்து ஏமாந்து, தூக்கிச் சென்றுவிடும். 97 00:11:03,747 --> 00:11:06,287 ஆனால், அந்த முட்டையின் மேல் பாகம்தான் சாப்பிட ஏற்றதாக இருக்கும். 98 00:11:06,875 --> 00:11:08,995 மீதத்தை கூட்டிலேயே விட்டுச் செல்லும். 99 00:11:11,672 --> 00:11:13,172 அவை அங்கேயே இருக்கும்... 100 00:11:14,842 --> 00:11:17,932 குஞ்சு பொரிக்கும் வரை பாதுகாப்பாய் கீழே... 101 00:11:18,387 --> 00:11:20,257 பல மாதங்களுக்கு அப்படியே இருக்கும். 102 00:11:28,313 --> 00:11:29,863 சூரியனின் உஷ்ணம் அதிகரிக்கின்றது. 103 00:11:33,652 --> 00:11:37,032 சுகர் க்ளைடரின் அக்கம்பக்கப் பறவைகள் அதிகச் சத்தமிடுகின்றன. 104 00:11:44,746 --> 00:11:46,866 ஆனால் இது வழக்கமான சத்தமல்ல. 105 00:11:49,710 --> 00:11:51,250 இது ஒரு எச்சரிக்கை அழைப்பு. 106 00:11:59,011 --> 00:12:00,801 சூரிய ஒளியியால் சக்தி பெற்று, 107 00:12:01,263 --> 00:12:04,273 லேஸ் மானிட்டர், யாராலும் வெல்ல முடியாத வேட்டைக்காரனாக ஆகி விடுகிறது. 108 00:12:07,686 --> 00:12:12,436 பிளவு பட்ட நாக்கால் எந்த வித உணவு, எங்கு மறைந்திருந்தாலும், தேடி உண்ணும். 109 00:12:23,785 --> 00:12:29,245 வலிமையான, வளைந்த நகங்கள் மூலம், இந்த ராட்சத பல்லிகள், மரங்களின் மேல் கூட ஏறும். 110 00:12:39,009 --> 00:12:41,929 இந்த சின்ன க்ளைடர் தூக்க முடியாத அளவு கனமாகி விட்டது. 111 00:13:01,782 --> 00:13:05,042 விரைவிலேயே, இது தானாகவே உலகத்தைச் சுற்ற வேண்டும். 112 00:13:13,961 --> 00:13:17,261 நாளுக்கு நாள் நிலையற்றதாக மாறும் உலகத்தில். 113 00:13:27,766 --> 00:13:31,896 கோடையின் ஆரம்பத்தில், இந்த வனாந்திரம் நன்கு உஷ்ணமடைந்திருக்கும். 114 00:13:34,898 --> 00:13:36,728 சூரியனிடமிருந்து பாதுகாக்க, நிழலே இருக்காது... 115 00:13:39,653 --> 00:13:41,743 குடிக்கத் தண்ணீரும் இருக்காது. 116 00:13:53,000 --> 00:13:56,630 பென்சில் நீளமே உள்ள, முள் குச்சி போன்ற பூச்சி, 117 00:13:57,546 --> 00:14:00,756 நீர்ச்சத்து இழக்காமல் இருக்கும் வழியைத் தெரிந்து வைத்திருக்கும். 118 00:14:06,680 --> 00:14:11,270 எளிதான காரியம் அல்ல என்றாலும், காத்திருக்கும் காலத்திற்கு ஏற்றது. 119 00:14:23,030 --> 00:14:28,870 இறுதியாக, ஏதாவது தண்ணீர்க் குட்டையைப் பார்த்தால், அது அதில் நின்று கொள்ளும். 120 00:14:41,882 --> 00:14:46,222 தன் முதுகெலும்பிலுள்ள சிறு இடைவெளிகள்மூலம் தண்ணீரை உறிஞ்சித் தேக்கி வைத்துக்கொள்ளும். 121 00:14:47,596 --> 00:14:50,926 வாய் வரை உறிஞ்சி வைத்துக்கொள்ளும். 122 00:14:56,605 --> 00:14:58,225 அசாதரணமான யுக்தி, 123 00:14:58,690 --> 00:15:02,990 அது தான் இந்தக் கொளுத்தும் வெயிலை சமாளிக்க அதற்குக் கைகொடுக்கிறது. 124 00:15:10,994 --> 00:15:13,834 பிசின் மரக் காடுகள் கொஞ்சம் அதிக நிழலைத் தருகின்றன. 125 00:15:14,665 --> 00:15:15,955 ஆனால் இங்கேயும், 126 00:15:16,583 --> 00:15:19,593 சிறு உயிரினங்கள் வாழ்க்கையோடு போராடிக்கொண்டு தான் இருக்கின்றன. 127 00:15:25,175 --> 00:15:29,555 ஜொலிக்கும் ஆண் மயில் சிலந்தி, அதன் துணையைத் தேடிக்கொண்டு இருக்கிறது. 128 00:15:32,975 --> 00:15:34,595 சொல்வது எளிது, செய்வது கடினம். 129 00:15:38,939 --> 00:15:41,569 இந்தச் சிலந்திகள் ஒரு அவரை விதையை விட சிறியதாக இருக்கின்றன. 130 00:15:45,988 --> 00:15:52,158 இன்னொரு ஆண், தன் துணையை கண்டுபிடித்து விட்டது ஆனால் அதன் சம்மதம் கிடைக்கவில்லை. 131 00:15:54,705 --> 00:15:57,535 பெண் மயில் சிலந்திகள் ரொம்ப ஜாக்கிரதையானவை. 132 00:16:03,046 --> 00:16:07,836 ஆண் எப்படிப் பார்க்கிறது, எப்படி நகர்கிறது என்பது மிகவும் சரியாக இருக்க வேண்டும். 133 00:16:10,554 --> 00:16:11,764 தவறாகிவிட்டால்... 134 00:16:14,600 --> 00:16:15,890 நிராகரிக்கப்பட்டு விடும். 135 00:16:22,024 --> 00:16:25,244 80 வகைகளுக்கும் மேலான மயில் சிலந்திகள் உள்ளன, 136 00:16:26,069 --> 00:16:27,909 ஒவ்வொன்றும் தனித்துவமாக தங்களை வெளிப்படுத்துபவை... 137 00:16:30,199 --> 00:16:34,329 பெண் இனத்தின் விருப்பத்திற்கேற்ப அவை, பிரத்தியேக நடனங்கள் கற்றிருக்கும். 138 00:16:51,220 --> 00:16:54,140 கொள்ளை அழகுள்ள பெண் சிலந்தியின் அன்பைப் பெறுவதற்காக, தன் வாழ்க்கையே 139 00:16:54,890 --> 00:16:56,560 அதை நம்பி இருப்பது போல் ஆண் சிலந்தி நடனமிடும். 140 00:17:04,316 --> 00:17:06,896 ஆனால் அந்த ஜொலிக்கும் ஆண் சிலந்தி இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறது. 141 00:17:07,944 --> 00:17:11,824 பெண் சிலந்தியின் திரவ வாசனையைத் தேடி, தன் கால்களை அசைத்துக் கொண்டு இருக்கிறது. 142 00:17:19,414 --> 00:17:20,624 இதோ அவள் வந்து விட்டாள். 143 00:17:21,708 --> 00:17:23,378 அதனுடைய ஆட்டத்தை காண்பிக்க வேண்டிய நேரம். 144 00:17:44,064 --> 00:17:45,364 நன்றாக நடனமாடுகிறது... 145 00:17:47,234 --> 00:17:49,654 அவள் அதை உணருவது போல தெரிகிறது. 146 00:17:50,904 --> 00:17:56,374 இப்படி பின்புறத்தை சுழற்றினால் அது ஏற்கனவே துணையுடன் சேர்ந்திருக்கிறது என அர்த்தம். 147 00:18:03,000 --> 00:18:05,210 சரி, இது நேர விரயம் தான். 148 00:18:08,297 --> 00:18:11,087 நேரமும் கடந்து கொண்டே இருக்கிறது. 149 00:18:22,227 --> 00:18:23,767 இன்னும் சில வாரங்களில், 150 00:18:23,854 --> 00:18:27,734 இந்தச் சின்ன க்ளைடர், இந்த உலகத்தில் தன் வழியைத் தேடிக் கொள்ள வேண்டும்... 151 00:18:30,527 --> 00:18:32,607 எங்கே உணவு கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். 152 00:18:47,169 --> 00:18:48,669 இந்தப் பருவத்தில், 153 00:18:48,754 --> 00:18:51,424 பிசின் இலைகளில் எல்லாம் வினோதமான புள்ளிகளைக் கொண்டுள்ளன. 154 00:18:54,092 --> 00:18:56,222 சிலிட் பூச்சிகள் தங்களின் இனிப்புத் திரவத்தை உபயோகித்து 155 00:18:56,303 --> 00:18:59,933 ஒரு சிறு தானிய அளவில் தங்களின் உறைவிடத்தைக் கட்டிக்கொள்கின்றன. 156 00:19:04,353 --> 00:19:08,653 இந்த அழகான, சிறு வீடுகள் பார்ப்பதற்கு நல்ல கலை வேலைப்பாடுகள் போல் தெரிகின்றன. 157 00:19:14,780 --> 00:19:16,030 சுவையும் நன்றாக இருக்கும். 158 00:19:20,744 --> 00:19:25,464 ஆனால் இப்போது, விடியற்காலைகளில் கூட வெளியே போக முடியாத அளவு உஷ்ணமாக இருக்கிறது. 159 00:19:29,962 --> 00:19:35,592 வெப்ப நிலை 50 டிகிரிக்கு உயரும் போது, பிசின் இலைகள் உதிர்ந்து விழுந்துவிடும். 160 00:19:39,137 --> 00:19:44,387 ஆனால் அவையெல்லாம் நச்சு நிரம்பி இருப்பதால், அவை பொறுமையாகத்தான் மக்கும். 161 00:19:49,189 --> 00:19:53,859 தந்திரமாக வேட்டையாடுபவற்றிற்கு, இப்படிக் கீழே விழுந்த இலைகள் பாதுகாப்பை அளிக்கும். 162 00:19:59,116 --> 00:20:05,616 காலில்லாத பர்ட்டன் பல்லி, மற்ற ஊர்வனங்களை மட்டும் தான் வேட்டையாடும். 163 00:20:21,180 --> 00:20:23,390 பெரும்பாலானவை தம் உயிரைக் காத்துக் கொள்ள ஓடும். 164 00:20:31,315 --> 00:20:33,315 தங்க வால் கெக்கோ மட்டும் ஓடாது. 165 00:20:36,361 --> 00:20:40,071 சிறியதாகவும் மறைந்து கொள்ளும் உருவத்தோடும் இருப்பது அதற்கு ஓரளவு பாதுகாப்பு தரும்... 166 00:20:42,659 --> 00:20:44,079 ஆனால் சூரியனிடமிருந்து அல்ல. 167 00:20:46,163 --> 00:20:47,583 அதற்கு நிழல் தேவைப்படுகிறது. 168 00:20:48,415 --> 00:20:53,795 ஒரு கிரெடிட் கார்ட் அளவுள்ள அது, அங்கே கச்சிதமாக மறைந்து கொள்ளும். 169 00:21:06,183 --> 00:21:10,313 காலில்லாத பல்லிகளின் பார்வை, மிகச் சிறிய அசைவை கூட கண்காணிக்க பழகியிருக்கும். 170 00:21:35,212 --> 00:21:39,882 சின்ன பல்லியைப் பயமுறுத்தினால் போதும், அது எதிர்க்க ஆரம்பித்துவிடும். 171 00:21:52,312 --> 00:21:53,942 கூ-ஸ்லிங்கிங் கெக்கோ. 172 00:22:02,030 --> 00:22:06,370 அதன் திரவம் தீமை விளைவிக்காதது என்றாலும் துர்நாற்றம் வீசும், பசை போல் ஓட்டும், 173 00:22:07,452 --> 00:22:10,292 பயங்கரமான வேட்டை விலங்கைக் கூட நெருங்க விடாது. 174 00:22:25,304 --> 00:22:26,684 பொறுமையாக ஆனால் நிச்சயமாக... 175 00:22:28,724 --> 00:22:29,984 அது பதுங்கிவிடும். 176 00:22:44,781 --> 00:22:48,081 கோடை உஷ்ணத்தோடு சேர்த்து கோடைப் புயலும் வரும். 177 00:22:54,666 --> 00:22:56,336 மிகவும் உஷ்ணமாக இருக்கும். 178 00:22:57,252 --> 00:23:01,382 மழையின் முதல் துளி தரையில் விழும் முன்னே அது ஆவியாகிவிடும். 179 00:23:06,470 --> 00:23:11,100 ஆனால் மின்னல் அடித்தால், எல்லாக் காய்ந்த இலைகளும் பற்றிக்கொள்ளும். 180 00:23:12,184 --> 00:23:15,194 அவற்றின் எளிதில் பற்றக்கூடிய ரசாயணங்கள், அந்த நெருப்புக்கு எரிபொருளாக ஆகிவிடும். 181 00:23:30,536 --> 00:23:34,666 சிறிய விலங்குகள், வேகமாகப் பரவும் காட்டுத் தீயில் இருந்து தப்பிக்கப் போராடுகின்றன. 182 00:23:40,504 --> 00:23:43,554 எசிட்னாவின் ஒரே பதுங்குமிடம் நிலத்தடி தான். 183 00:23:47,970 --> 00:23:50,310 அது தானே தன்னுடைய கல்லறையைத் தோண்டிக் கொள்கிறது. 184 00:23:54,268 --> 00:23:55,688 தீப்பிழம்புகள் அதிகரிக்க ஆரம்பிக்கின்றன, 185 00:23:57,396 --> 00:24:00,396 ஆனால் அந்தச் சின்ன க்ளைடர் தூக்க முடியாத அளவு பெரிதாக உள்ளது. 186 00:24:02,276 --> 00:24:03,526 அந்தத் தாய்க்கு இருக்கும் ஒரே வழி... 187 00:24:05,362 --> 00:24:06,912 தன்னைக் காத்துக்கொள்வது தான். 188 00:24:13,287 --> 00:24:15,457 அந்தச் சின்ன க்ளைடர் தன்னைத்தானே பார்த்துக்கொள்ள வேண்டும். 189 00:24:44,735 --> 00:24:48,195 பூச்சிகள் பறக்கும் போது, வேட்டையாடுபவை உள்ளே நுழையும். 190 00:24:54,745 --> 00:24:57,615 சிறு பறவைகள் பெருமளவில் தீப்பிழம்பில் விழுந்து விடும். 191 00:24:59,166 --> 00:25:03,456 தீப்பருந்துகள் என்றழைக்கப்படும் பறவைகள் இந்தப் பதற்றத்தை அதிகரிக்கின்றன. 192 00:25:25,817 --> 00:25:27,647 இந்தச் சின்ன க்ளைடரை நெருப்பு சூழ்ந்துவிட்டது. 193 00:25:32,407 --> 00:25:35,907 அதன் முதல் பறத்தலே இறுதியானதாக ஆகி விடக் கூடும். 194 00:26:31,466 --> 00:26:33,886 புதர் நெருப்புகள் அணைய ஆரம்பிக்கும் போது... 195 00:26:36,889 --> 00:26:39,139 இந்த நிலமே நாசமாகி இருக்கும். 196 00:27:01,580 --> 00:27:04,080 ஆனால், சுத்தமாக உயிர்களே இல்லாதவாறு அல்ல. 197 00:27:07,377 --> 00:27:12,927 எசிட்னாக்கள் உடல் உஷ்ணத்தை தணித்துக்கொண்டு இந்த நெருப்பில் தாக்குப் பிடிக்கின்றன. 198 00:27:28,732 --> 00:27:31,572 இந்தச் சின்ன சுகர் க்ளைடரும் தப்பித்துவிட்டது. 199 00:27:34,905 --> 00:27:38,615 அது இப்பொழுது, சாம்பலான இந்த உலகத்தில் தாக்குப்பிடித்து வாழ வேண்டும். 200 00:27:44,706 --> 00:27:50,626 காட்டின் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை, இந்த எரிந்த பூச்சிகளைத் தான் அது உண்ணும். 201 00:27:54,550 --> 00:27:56,590 வாழ்க்கை நிச்சயம் திரும்பும். 202 00:27:59,721 --> 00:28:02,181 பிசின் மரங்கள் நம்ப முடியாத அளவு திடமானவை, 203 00:28:03,600 --> 00:28:06,310 அவற்றின் தாதுக்கள் நிறைந்த சாம்பல் மண்ணிற்கு வளம் சேர்க்கிறது. 204 00:28:13,485 --> 00:28:14,695 கொஞ்சம் தண்ணீர் சேர்ந்து... 205 00:28:15,904 --> 00:28:18,284 காடு மீண்டும் பிறந்துவிட்டது. 206 00:28:36,091 --> 00:28:39,511 அதிகக் காலம் எடுப்பதற்கு முன்னரே, இந்தப் புதர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டன. 207 00:28:45,100 --> 00:28:46,640 புது உயிரினங்கள் வருகின்றன. 208 00:28:52,691 --> 00:28:54,691 பழக்கமான விலங்குகள் திரும்பி வருகின்றன. 209 00:28:56,820 --> 00:29:00,240 மீண்டும் ஒருமுறை, இந்தப் பிசின் மரங்கள் தான் 210 00:29:00,324 --> 00:29:03,584 எல்லா வகை விசித்திர, அற்புத, சிறு உயிரினங்களுக்கும் புகலிடம் அளிக்கின்றன. 211 00:29:10,709 --> 00:29:15,009 பல்லாயிரக்கணக்கான வருடங்களாக, இவை இந்த வருடாந்திர தீ சுழற்சிக்குப் பழகிவிட்டன. 212 00:29:17,925 --> 00:29:22,175 ஆனால் புதர் நெருப்பு, அதிகமாகவும், இன்னும் சூடாகவும், அடிக்கடியும் ஏற்பட்டால், 213 00:29:23,013 --> 00:29:26,103 ஆஸ்திரேலியாவின் சின்னஞ்சிறு உயிரினங்கள் உயிர் வாழவே போராட வேண்டி வரும். 214 00:29:26,183 --> 00:29:28,483 எங்களுக்கு சுருள்பட்ட பல்லிகள் பிடிக்கும் வறுபட்டது அல்ல 215 00:29:35,067 --> 00:29:38,277 தற்போது, இந்த இளைய சுகர் க்ளைடர் வனாந்திரத்தின் அதீத சவால்கள் நிரம்பிய... 216 00:29:40,113 --> 00:29:44,743 வாழ்க்கையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. 217 00:29:52,584 --> 00:29:54,804 அது மட்டும் தனியாக இருக்கப் போவதில்லை. 218 00:29:56,964 --> 00:29:59,684 அதிக சுயாதீனமான சிறு சுகர் க்ளைடர்கள் கூட இன்னமும்... 219 00:30:01,468 --> 00:30:03,968 தங்களுடைய சொற்ப நண்பர்களுடன் இணைந்து பதுங்கத்தான் விரும்புகின்றன. 220 00:31:08,368 --> 00:31:10,368 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்