1 00:00:07,257 --> 00:00:09,837 புவி மகிவும் வண்ணமயமாக இருப்பதால், 2 00:00:10,636 --> 00:00:13,676 வாழ்வில் சில சின்னஞ்சிறிய விஷயங்களை தவறவிடுவது சகஜம். 3 00:00:15,766 --> 00:00:17,636 ஆனால், சற்று கூர்ந்து கவனித்தால்... 4 00:00:18,143 --> 00:00:20,563 அங்கு கண்டறியப்படாத ஒரு உலகமே உள்ளது. 5 00:00:22,648 --> 00:00:24,978 சிறிய சாகசகாரர்களுக்கும்... 6 00:00:26,485 --> 00:00:27,815 சிறிய அரக்கர்களுக்கும்... 7 00:00:29,029 --> 00:00:31,409 ராட்ச எதிர்ப்புகள் மீது வெற்றிக் கொள்ள... 8 00:00:34,618 --> 00:00:40,038 அசாத்திய சக்திகள் தேவைப்படும் ஒரு உலகம். 9 00:00:52,135 --> 00:00:53,755 கரீபியன் தீவுகள். 10 00:00:54,304 --> 00:00:56,934 வர்ணனையாளர் பால் ரட் 11 00:00:57,015 --> 00:00:58,975 பார்க்க சொர்க்கம் போல இருக்கிறது. 12 00:01:03,438 --> 00:01:06,858 ஒரு க்யூபன் பீ ஹம்மிங்பர்டுக்கு, இது ஒரு நல்ல இருப்பிடம். 13 00:01:10,696 --> 00:01:13,696 ஒரு தேனீயைவிட ரொம்ப பெரிதில்லை. 14 00:01:14,533 --> 00:01:16,793 உலகத்திலேயே மிகச் சிறிய பறவை இதுதான். 15 00:01:23,625 --> 00:01:25,995 ஏதோ காரணங்களுக்காக எங்கிருந்தோ 16 00:01:26,086 --> 00:01:28,336 இந்த தீவுகளை சிறிய உயிரினங்கள் வந்து அடைந்துள்ளன. 17 00:01:30,090 --> 00:01:35,600 அதில் பலதும் மிகமிச்சிறியவை, மேலும் உலகில் வேறு எங்கும் காணமுடியாது. 18 00:01:45,939 --> 00:01:48,479 உணவும், இடமும் தீவுகளில் எப்போதும் குறைவுதான். 19 00:01:49,359 --> 00:01:52,029 பெரும்பாலும் அது சிறிய உயிரினங்களின் பிழைப்புத்திறனின் வெற்றியே. 20 00:01:54,781 --> 00:01:57,411 ஆனால் சொர்க்கத்திற்கு ஒரு கரிய முகமும் உண்டு. 21 00:02:04,333 --> 00:02:06,633 சூறாவளி காலம் துவங்கியதும், 22 00:02:07,794 --> 00:02:12,134 இந்த சிறிய உயிரினங்கள், இந்த கோளின் சில அசுர சக்திகளை எதிர்கொள்ள வேண்டிவரும். 23 00:02:12,591 --> 00:02:16,931 தீவு 24 00:02:20,766 --> 00:02:26,056 வெயில் காலங்களில், கரீபியன் தீவு நிறைய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். 25 00:02:29,107 --> 00:02:30,937 ஒரு ஆண் தேனீ ஹம்மிங்பர்டு. 26 00:02:32,194 --> 00:02:33,744 தனக்குத் துணையை தேடுகிறது... 27 00:02:35,239 --> 00:02:37,239 வசீகரிக்கவே அலங்கரித்துக் கொண்டு வந்துள்ளது. 28 00:02:39,952 --> 00:02:41,582 ஆனால் இந்த பெண் பறவையோ வேலையாக இருக்கிறது. 29 00:02:45,749 --> 00:02:47,579 அவள் காப்பிக் கொட்டைகள் அளவே இருக்கும் 30 00:02:48,293 --> 00:02:51,593 முட்டைகள் பொறிந்து வந்துள்ள இரண்டு குஞ்சுகளை, ஏற்கனவே பராமரித்து வருகிறாள். 31 00:02:53,298 --> 00:02:55,928 அதுவும் எஸ்பிரேஸ்ஸோ கோப்பை அளவே உள்ள ஒரு கூட்டில். 32 00:03:07,062 --> 00:03:13,072 நான்கு நாட்களில், புழு பூச்சிகளையும், தேனையும் பருகி இரட்டிப்பு அளவு ஆவார்கள். 33 00:03:24,663 --> 00:03:27,883 இவ்வளவு உணவையும் தேடித் தருவது மாபெரும் வேலை. 34 00:03:29,001 --> 00:03:32,921 மற்ற உயிரினங்களைவிட ஹம்மிங் பர்ட்கள் விரைவாக சக்தியை இழக்கின்றன. 35 00:03:34,756 --> 00:03:37,506 எனவே அவள் தினமும் நூற்றுக்கணக்கான பூக்களுக்குச் சென்று வரவேண்டும். 36 00:03:41,346 --> 00:03:45,426 அவள் அளவில் அத்தனை சிறியதாக இருப்பதால் சின்ன வண்டுகளும் கூட பெரும் போட்டிதான். 37 00:03:48,770 --> 00:03:52,440 அவள் உணவை சேகரிக்கும் போது, கூடு பாதுகாப்பின்றி விடப்படுகிறது. 38 00:03:56,069 --> 00:03:58,489 ஒரே ஒரு எறும்பும் கூட அபாயம் தான். 39 00:04:17,798 --> 00:04:22,138 மேலும் இன்னும் நிறைய எறுப்புகள் வரவர, குஞ்சுகள் தீவிர அபாயத்தில் இருக்கின்றனர். 40 00:04:35,150 --> 00:04:36,530 சரியான வேளையில். 41 00:04:59,967 --> 00:05:01,507 அவள் தன் குஞ்சுகளைக் காப்பாற்ற வந்து விட்டாள், 42 00:05:09,601 --> 00:05:12,651 காலப் போக்கில், கரீபியன் உயிரினங்கள் பரிமாண வளர்ச்சி அடைந்துள்ளன, 43 00:05:13,313 --> 00:05:17,283 கிடைக்கும் சிறிய அளவு உணவிற்கு ஏற்ப தங்கள் அளவை சுருக்கிக் கொண்டுள்ளன. 44 00:05:22,322 --> 00:05:23,702 இது ஒரு நூல் பாம்பு, 45 00:05:25,450 --> 00:05:28,000 ஸ்பாகேட்டியின் நூலிழைகளைப் போல் அத்தனை மெல்லிது... 46 00:05:29,121 --> 00:05:30,541 நீளமும் அவற்றில் பாதி தான். 47 00:05:38,672 --> 00:05:39,802 அவன் எறும்புகளை வேட்டையாடுபவன்... 48 00:05:42,885 --> 00:05:43,965 ஒரு விதத்தில். 49 00:05:46,180 --> 00:05:49,680 பெரிய எறும்புகளை அவன் சிறிய தாடைகளால் பிடிக்க இயலாது. 50 00:05:51,435 --> 00:05:53,645 ஆனால் அவற்றின் புழுக்கள் மிகவும் எளிதாக வாயில் நுழையும். 51 00:06:15,209 --> 00:06:19,089 இந்த நுண்ணிய அதிசயங்களில் பலவும் ஒரு தனித் தீவில் மட்டும் காணப்படுபவை. 52 00:06:21,215 --> 00:06:23,465 தீக்குச்சியின் பாதி நீளம் மட்டுமே உள்ள, குள்ள கேக்கோ, 53 00:06:23,550 --> 00:06:27,890 உலகில் சிறிய பல்லிகளில் ஒன்று. 54 00:06:29,973 --> 00:06:34,443 கொட்டியுள்ள இலைகளுக்குள் உள்ள நுண்ணிய- பூச்சிகளை வேட்டையாட, கச்சிதமான அளவு. 55 00:06:39,983 --> 00:06:45,283 ஆனால் கோடைகால சூறாவளியை எதிர்கொள்ள சற்றே சிறியதாகத் தோன்றுகிறது. 56 00:06:59,002 --> 00:07:01,962 மழைத்துளிகள், வெடிகுண்டுகளைப் போல தாக்குகின்றன. 57 00:07:07,553 --> 00:07:10,933 தன் குஞ்சுகளைக் காப்பாற்ற தாய் ஹம்மிங் பர்டு தன்னால் இயன்றவற்றை செய்கிறது, 58 00:07:15,185 --> 00:07:17,685 மற்றவை நிழலைத் தேடிப் போகின்றன. 59 00:07:24,236 --> 00:07:26,486 ஆனால் அந்த சூறாவளியோ மிகவும் சக்தி வாய்ந்தது... 60 00:07:28,282 --> 00:07:30,952 அந்த கூட்டை விட்டுவிட்டுப் போவதைத் தவிற வேறு வழியேயில்லை. 61 00:07:42,004 --> 00:07:46,134 காட்டின் மடிபாகத்திலோ, மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 62 00:08:01,815 --> 00:08:06,445 ஆனால், அதன் சின்ன தோற்றம் தான் குள்ள கேக்கோவின் அசாதாரண சக்தியே. 63 00:08:11,366 --> 00:08:16,246 அது அத்தனை சிறியது, மற்றும் அத்தனை இலகு, அதனால் நீரின் மேல் நடக்க முடிகிறது. 64 00:08:25,047 --> 00:08:28,047 அதேபோல் வெள்ளம் வடியும் வரை அதனால் நீரின் மேல் மிதக்கவும் முடிகிறது. 65 00:08:37,476 --> 00:08:41,686 ஒவ்வொரு வருடமும் 15-க்கும் மேற்பட்ட சூறாவளிகள் கரீபியனை தாக்குகின்றன, 66 00:08:42,438 --> 00:08:46,358 அதனால், சொர்க்கம் வெகு சீக்கிரம் நரகம் ஆகிவிடலாம். 67 00:08:55,035 --> 00:08:59,205 அந்த ஹம்மிங் பர்டின் குஞ்சுகள், அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. 68 00:09:09,591 --> 00:09:11,681 அவள் மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்... 69 00:09:13,011 --> 00:09:14,851 அடுத்த சூறாவளி தாக்கத்திற்கு முன்பாக. 70 00:09:27,442 --> 00:09:32,162 சூறாவளி மழைக்குப்பின், செடிக்கொடிகள் யாவும் கடலுக்குள் அடித்துச் செல்லப்படும். 71 00:09:33,448 --> 00:09:36,618 அதனுடனே சேர்த்து, உயிரினங்களும் அடித்துச் செல்லப்படுகின்றன. 72 00:09:38,787 --> 00:09:42,997 சில சமயங்களில், சில உயிரினங்கள், அதிர்ஷ்டவசமாக புதிய கரைகளை எட்டுகின்றன. 73 00:09:44,751 --> 00:09:48,211 இந்த முறையில் தான் பல விலங்குகள் புதிய தீவுகளை, ஆக்கிரமிக்கின்றன. 74 00:09:51,550 --> 00:09:56,470 அனோலிஸ் ஓணான்கள், சிறியதாக, திடமாக, இருப்பதால், வெற்றிகரமாக பயணிக்கின்றன. 75 00:09:59,183 --> 00:10:01,393 ஆனால் இவளுக்கு முன்னதாகவே வந்துவிட்ட பலர் இங்கு உள்ளனர். 76 00:10:06,356 --> 00:10:12,276 ஹூடியாக்களும் இக்குவானாக்களும் பிழைப்பதே, அடித்து தள்ளப்படும் எதையும் தின்பதால்தான். 77 00:10:29,755 --> 00:10:31,755 அவள் அந்த கடற்கரையை விட்டுச் செல்லணும். 78 00:10:37,346 --> 00:10:42,016 பாதுகாப்பை அடைய அவளுக்கு இன்னும் சில மீட்டர்களே உள்ளன. 79 00:11:04,122 --> 00:11:09,502 ஒரு புதிய இனத்தொகையை உருவாக்க, சில தைரியசாலி முன்னோடிகள் மட்டுமே போதுமானது. 80 00:11:14,466 --> 00:11:18,426 ஹூட்டியாவிலிருந்து சான்ட் ஹாப்பர்கள் வரை என சூறாவளி... 81 00:11:20,138 --> 00:11:22,558 பல அளவுகளில் கிளிஞ்சல்கள் சேகரிப்பவைகளுக்கு வழங்கியுள்ளது. 82 00:11:31,275 --> 00:11:33,685 ஆனால் எல்லோருமே உணவு வேட்டையில் இல்லை. 83 00:11:34,987 --> 00:11:38,527 இந்த ஹெர்மிட் நண்டு தனக்கென்று ஒரு புதிய வீட்டைத் தேடுகிறது. 84 00:11:39,324 --> 00:11:41,994 அவளுடையது, மிக மோசமான நிலையில் உள்ளது. 85 00:11:48,458 --> 00:11:51,958 ஒரு புதிய கிளிஞ்சல்களின் புதையலை அடித்து வந்திருக்கிறது இந்த சூறாவளி மழை. 86 00:11:54,047 --> 00:11:56,257 எனினும் கச்சிதமாகப் பொருந்துவதைக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். 87 00:11:57,801 --> 00:11:59,801 அவளோ ஒரு கோல்ஃப் பந்தின் அளவே இருக்கிறாள். 88 00:12:00,345 --> 00:12:03,595 ஆனால், ஹெர்மிட் நண்டுகள் ஒரு தேங்காய் அளவிற்கு வளரக்கூடும் 89 00:12:04,266 --> 00:12:07,346 எனவே, அதற்கு தகுந்தார் போல தங்கள் கிளிஞ்சலை மாற்றிய வண்ணம் இருக்க வேண்டும். 90 00:12:13,150 --> 00:12:15,740 பெரிய வீடுகளுக்கான தேவை கூடிக்கொண்டேப் போவதால், 91 00:12:15,819 --> 00:12:19,869 ஹெர்மிட் நண்டுகள், ஒரு புதிய முறையில் அதற்கு தீர்வு காணுகின்றன. 92 00:12:32,294 --> 00:12:34,714 ஒரு நண்டு பொருந்தாத ஒரு கிளிஞ்சலை கண்டுபிடிக்கும் போது... 93 00:12:35,672 --> 00:12:38,092 அது மற்றவற்றிற்கு, அதை வந்து ஆராயும் படி, சைகை செய்கிறது. 94 00:12:40,052 --> 00:12:42,512 மேலும் சரியான அளவு நண்டு வரும் போது... 95 00:12:44,264 --> 00:12:46,434 அவை ஒரு வீட்டுச் சங்கிலித் தொடரை உருவாக்குகின்றனர். 96 00:12:47,559 --> 00:12:49,349 பெரியதிலிருந்து, சிறியது வரை. 97 00:12:52,481 --> 00:12:54,111 மிகவும் பெரிதாக உள்ளது முதலில் உள்ளே போகிறது. 98 00:12:58,403 --> 00:13:02,783 பின் ஒவ்வொன்றும், சமீபத்தில் காலியாகிய அடுத்த அளவு ஓட்டிற்குள் செல்லும். 99 00:13:10,082 --> 00:13:11,382 தாமதமாகவே அவள் பார்ட்டிக்கு வந்துள்ளாள். 100 00:13:18,006 --> 00:13:20,506 ஆனால் எப்போதும் ஏதாவது ஒரு ஓடு காலியாகவே இருக்கும். 101 00:13:27,391 --> 00:13:28,601 மிகவும் சிறியது. 102 00:13:30,769 --> 00:13:34,979 எப்படியோ, ஒரு நண்டிற்கு, தனக்கு கிடைத்தது சரியான வீடா என்பது தெரிந்து விடும். 103 00:13:51,498 --> 00:13:53,788 இறுதியில், ஒரு சரியான வீடு. 104 00:13:55,419 --> 00:13:56,919 அவளுக்கு அது தேவைப்படும் 105 00:13:57,004 --> 00:14:00,974 ஆண்டின் இப்பகுதியில், மோசமான வானிலை எப்போதும் நிகழக் கூடும். 106 00:14:04,386 --> 00:14:08,846 சற்று உட்புறம் போனால், சூறாவளியினால் ஆறுகளில் இன்னும் நீர் பெருகி ஓடுகிறது... 107 00:14:10,184 --> 00:14:12,234 அவை கடலுக்குள் மழைநீரை கொண்டு சேர்க்கிறது. 108 00:14:15,189 --> 00:14:17,979 ஆனால், சில எதிர்புறமாகச் செல்கின்றன. 109 00:14:20,819 --> 00:14:26,579 இனப்பெருக்கத்திற்கு இடம் தேடி, டிரை-டிரை கோபீக்கள் எதிர்நீச்சல் செய்கின்றன. 110 00:14:29,453 --> 00:14:34,543 போட்டியைத் தவிர்க்க, சில ஆண்கள் அசாத்திய முயற்சிகளை எடுக்கின்றன. 111 00:14:43,509 --> 00:14:45,509 ஒரு டீஸ்பூனை விடவும் அவன் சிறியவன், 112 00:14:46,094 --> 00:14:49,774 ஆனால் தன் துடுப்புகளை உறிஞ்சும் கோப்பைகளாகவும், வாயை பிடிப்பாகவும் 113 00:14:50,390 --> 00:14:52,310 பயன்படுத்தி, அவன் அந்த வேக நதியின் மேலே போய் விடுகிறான். 114 00:15:07,449 --> 00:15:09,119 இது, எனினும்... 115 00:15:14,373 --> 00:15:15,873 இன்னும் ஒரு பெரிய சவாலாக அமையலாம். 116 00:15:25,676 --> 00:15:30,006 350 மீட்டர்கள் உயரமுள்ள நீர்வீழ்ச்சிகளை கோபீக்களால் ஏறி விடமுடியும். 117 00:15:31,932 --> 00:15:34,562 கிட்டத்தட்ட எம்பயர் ஸ்டேட் பில்டிங்கின் உயரம் அது. 118 00:15:38,480 --> 00:15:41,190 மேலே ஏறுவதற்கு பல நாட்கள் ஆகலாம். 119 00:15:53,203 --> 00:15:54,873 பல மீன்கள் ஏற முயற்சி செய்வதுண்டு... 120 00:16:02,754 --> 00:16:05,384 ஆனால் நூற்றில் ஒன்றுக்கும் குறைவாகவே அதில் வெற்றி அடைகிறார்கள். 121 00:16:27,571 --> 00:16:29,281 நிதானமாக முயல்வது நல்லது. 122 00:16:51,595 --> 00:16:52,845 வெற்றி. 123 00:16:54,431 --> 00:16:56,061 இப்போது இனப்பெருக்கத்திற்கு வாய்ப்பு. 124 00:16:59,144 --> 00:17:02,064 ஒரு புதிய தலைமுறையை இப்போது மீண்டும் நதியின் கீழே அனுப்ப முடியும். 125 00:17:11,156 --> 00:17:15,076 சூறாவளி பருவத்தின் ஈரப்பதம், உயிரினப் பெருக்கத்தின் வெடிப்பை தூண்டுகிறது. 126 00:17:20,624 --> 00:17:24,294 ஒரு ஜாமேய்கன் மோன்டேன் நண்டு ஒரு சர்க்கரைக் கட்டியின் அளவே உள்ளது. 127 00:17:27,631 --> 00:17:30,221 அது உயிர் பிழைக்க, நீரில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. 128 00:17:30,884 --> 00:17:33,224 எனினும் ஒரு தாய் நண்டிற்கு, அது, இனப்பெருக்கம் செய்யத் தேவைப்படுகிறது. 129 00:17:37,099 --> 00:17:39,979 பாறைகளுக்கு இடையே சிறு தேக்கங்களாக, மழைநீர் சிறைப்பட்டுள்ளது, 130 00:17:43,772 --> 00:17:46,402 ஆனால் ஒரு குடும்பத்தை வளர்க்க, அந்த இடம் மிக ஆபத்தானது. 131 00:17:50,779 --> 00:17:52,989 எனவே, அவளிடம் ஒரு நல்ல தீர்வு உள்ளது. 132 00:17:55,659 --> 00:18:01,119 சிறப்பு ரோமங்களைக்கொண்டு, அவள் ஓட்டிற்குள் மெல்லிய நீர் படலத்தை ஏற்றுகிறாள். 133 00:18:10,674 --> 00:18:12,934 இப்போது அதை வைப்பதற்கு ஒரு இடம் மட்டும்தான் தேவை. 134 00:18:24,563 --> 00:18:27,483 ஒரு தீப்பெட்டியளவே உள்ள ஒரு காலி நத்தையோடு. 135 00:18:35,199 --> 00:18:37,239 ஒரு சில நீர் துளிகளை கொள்ளும் அளவிற்கு கச்சிதமானது. 136 00:18:40,287 --> 00:18:42,917 ஒரு புதிய குடும்பத்தைத் தொடங்க பாதுகாப்பான இடமும் கூட. 137 00:18:49,087 --> 00:18:50,627 இருபது குட்டி நண்டுகள், 138 00:18:50,714 --> 00:18:53,554 ஒவ்வொன்றும் ஒரு மணல் பொறியின் அளவுதான். 139 00:18:58,764 --> 00:19:00,394 அடுத்த மூன்று மாதங்களுக்கு, 140 00:19:00,474 --> 00:19:03,774 அவற்றை பாதுகாத்து, நீரும் உணவும் அளித்து பார்த்துக் கொள்வாள் 141 00:19:03,852 --> 00:19:05,902 அவர்களின் அந்த சிறிய நத்தையோட்டு வீட்டில். 142 00:19:14,279 --> 00:19:19,029 சூறாவளிக் காலம் முன்னேருகையில், காற்றில் உள்ள ஈரப்பதம் மிக அதிகம், 143 00:19:19,117 --> 00:19:22,697 கோக்கீ தவளைகள் நீருக்கு வெளியிலேயே இனபெருக்கத்தை செய்ய முடியும். 144 00:19:26,124 --> 00:19:29,384 உயிர் எனும் அற்புதம், ஒரே ஒரு செல்லில் தான் ஆரம்பிக்கின்றது. 145 00:19:50,524 --> 00:19:53,154 அக்கறையுள்ள அப்பா, அந்த முட்டைகளை பாதுகாக்கிறார். 146 00:19:54,736 --> 00:19:56,856 ஒரு ஸ்டிராபெரியின் அளவே உள்ள போதிலும், 147 00:19:56,947 --> 00:20:00,077 எந்த வித அபாயத்திலிருந்தும் தன் வம்சத்தை காப்பாற்ற தயாராக உள்ளான். 148 00:20:06,748 --> 00:20:08,078 பசியோடு வரும் ஒரு நத்தை... 149 00:20:09,042 --> 00:20:10,422 அவனை விட அளவில் இரண்டு மடங்கு பெரியது. 150 00:20:26,101 --> 00:20:27,641 அவனால் தன் முட்டைகளை நகர்த்த முடியாது. 151 00:20:30,355 --> 00:20:32,185 தப்பிக்க வேறு வழியும் இல்லை. 152 00:20:56,381 --> 00:20:57,421 எதிர்த்து நின்று போராடுகிறான்... 153 00:20:59,259 --> 00:21:01,299 ஆனால் அந்த நத்தையோ, விடாப் பிடியாக இருக்கிறது. 154 00:21:28,830 --> 00:21:32,460 இந்த வீர தந்தைக்கு இன்னும் இரண்டு வாரங்கள் அவற்றை காப்பாற்றும் பொறுப்பு உள்ளது 155 00:21:32,543 --> 00:21:35,093 அப்போது தான் அவனுடைய முட்டைகள் இறுதில் பொறிந்து குட்டிகள் வெளிவரும். 156 00:21:46,265 --> 00:21:49,225 பெண் ஹம்மிங்கு பர்டு புதிய துணையைத் தேடி வருகிறாள். 157 00:21:50,894 --> 00:21:54,024 இத்தனை சிறிய ஆண் கிடைப்பது கடினமாக இருக்கலாம். 158 00:21:58,110 --> 00:22:00,740 அவன் மட்டும் தன் பக்கம் கவனத்தை ஈர்க்க மிகவும் அதிக முயற்சி செய்யாவிடில். 159 00:22:09,997 --> 00:22:12,247 அவளை அவன் தன்பக்கம் ஈர்க்க விரும்பினால் அதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். 160 00:22:24,011 --> 00:22:25,641 ஒரு குட்டி நடனக்காரன். 161 00:22:40,235 --> 00:22:42,855 இறுதியில், விடாமுயற்சி பலனளிக்கிறது. 162 00:22:53,874 --> 00:22:58,344 விரைவில் மீண்டும் தாயாகப்போகும் அவள், தனக்கென்று ஒரு புதிய கூட்டைக் கட்டணும். 163 00:23:06,595 --> 00:23:10,215 அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து ஒட்ட, சிலந்திவலைகள் நல்ல பசையாக அமைகின்றன. 164 00:23:30,244 --> 00:23:32,704 அடித்தளங்களை நெசவு செய்வதிலிருந்து ஆரம்பிக்கிறாள். 165 00:23:36,792 --> 00:23:38,632 இன்னும் ஒரு சில நாட்களில், 166 00:23:38,710 --> 00:23:42,050 அவளுடைய கூடு, மதிப்புமிக்க புதிய கூறு முட்டைகளை தாங்கி நிற்க தயாராகிவிடும். 167 00:23:53,100 --> 00:23:57,600 ஆனால், அங்கு கடலிலோ... பெரியதாக ஏதோ உருவாகி வருகிறது. 168 00:24:05,779 --> 00:24:08,529 ஆண்டு முழுவதும் பெருங்கடலின் வெட்ப நிலைகள் அதிகமாகி வர வர, 169 00:24:09,616 --> 00:24:12,786 அவை இன்னும் சீற்றமுடைய கோடைகால சூறாவளிகளை உருவாக்கும். 170 00:24:23,547 --> 00:24:26,377 கரீபியன் அன்னோல்கள் ஆச்சரியத்தகு விதத்தில், இது போன்ற தீவிர வானிலை 171 00:24:26,466 --> 00:24:28,546 மாற்றங்களைத் தாங்கித் தழுவும் ஆற்றல் பெற்றது. 172 00:24:36,560 --> 00:24:39,440 மணிக்கு 200 கிலோமீட்டர்களைத் தொடும் காற்றின் வேகத்திலும், 173 00:24:39,938 --> 00:24:42,688 இவற்றின் மிக-அதிகமான அளவு கால் பாதுகைகள் அவற்றிற்கு பிடித்து நிற்க உதவுகின்றன. 174 00:24:46,153 --> 00:24:48,163 ஆனால் இந்த சூறாவளியோ இன்னும் வலுபெறுகிறது. 175 00:24:53,994 --> 00:24:56,414 இது தான் டோரியன் புயல் 176 00:24:58,665 --> 00:25:00,455 கன்ஸாஸ் நகரத்தின் அளவுள்ள ஒரு சூறாவளி இது. 177 00:25:07,591 --> 00:25:10,591 உலகின் மிக சக்திவாய்ந்த வானிலை நிகழ்வுகள் தாக்கும் போது... 178 00:25:14,431 --> 00:25:16,851 சிறிய உயிரினங்கள் இயற்கையின் கருணையில் தான் பிழைக்கின்றன. 179 00:25:34,701 --> 00:25:37,621 காற்றின் வேகம் மணிக்கு 300 கிலோமீட்டர்கள் வரை அதிகரிக்கின்றன. 180 00:25:44,419 --> 00:25:47,379 நேரடித் தாக்குதல், பெரும் நாசத்தை உண்டாக்குகிறது. 181 00:26:11,029 --> 00:26:14,579 ஒவ்வொரு ஆண்டும், கரீபியன் தீவு புயல்களால் பாதிக்கப் படுகின்றன. 182 00:26:18,662 --> 00:26:24,132 எனினும், ஆயிரக் கணக்கான தீவுகளில், நேரடி தாக்கத்திற்கு உள்ளாவது சில மட்டுமே. 183 00:26:29,256 --> 00:26:31,676 யார் உயிர் பிழைப்பார்கள் என்பது அதிர்ஷ்டத்தைப் பொருத்தது... 184 00:26:34,344 --> 00:26:35,474 மற்றும் அளவைப் பொருத்தது. 185 00:26:39,099 --> 00:26:43,689 சின்னஞ்சிறு விலங்குகளுக்கு தான் சூறாவளிகளிலிருந்து பதுங்கி பிழைக்கவும், 186 00:26:44,897 --> 00:26:46,647 விரைவில் மீளவும் நல்ல வாய்ப்பு உள்ளது. 187 00:26:54,239 --> 00:26:57,909 புயல் காலத்தின் நடுவில், மழையோ வெயிலோ எது வந்தாலும் 188 00:26:57,993 --> 00:27:00,453 ஹெர்மிட் நண்டுகள் மீண்டும் கடற்கரைக்கு செல்கின்றனர். 189 00:27:16,220 --> 00:27:19,260 அவற்றின் கூட்டு இடம்பெயர்வை அம்மாவாசை தூண்டுகிறது. 190 00:27:24,228 --> 00:27:27,808 மூன்று நாட்கள், இரவும் பகலும், அவை ஆயிரக்கணக்கில் சேருகின்றன. 191 00:27:35,781 --> 00:27:39,491 அவை எல்லாமே பெண் நண்டுகள் தான், எல்லாம் முட்டைகளைச் சுமக்கின்றன. 192 00:27:51,964 --> 00:27:53,974 அவை நீரைத் தொட்டவுடன்... 193 00:27:55,467 --> 00:27:56,757 முட்டைகள் பொறிகின்றன. 194 00:27:59,179 --> 00:28:02,469 மில்லியன் கணக்கில் மிக நுண்ணிய புழுக்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப் படுகின்றன. 195 00:28:12,067 --> 00:28:14,237 அவை நீரின் வேகத்தில் பயணம் செய்யும் போது, வளர்கின்றன... 196 00:28:16,613 --> 00:28:18,623 மீண்டும் கரையை தொடும் காலம் வரும் வரை 197 00:28:19,783 --> 00:28:21,993 மற்றும் புதிய இடங்களை ஆக்கிரமிக்கும் வாய்ப்பு வரும் வரை. 198 00:28:27,833 --> 00:28:30,213 கரீபியன் தீவுகளில் கிடைக்கும் குறுகிய வாய்ப்புகளை 199 00:28:30,294 --> 00:28:33,514 தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, பெரும் அளவிற்கு பிழைப்பது குட்டி உயிரினங்கள். 200 00:28:42,681 --> 00:28:45,141 கோக்கீ தவளைக் குஞ்சுகள் இப்போது முழு வடிவம் பெற்று... 201 00:28:48,854 --> 00:28:50,444 வெளிவர தயார் நிலையில் உள்ளன. 202 00:29:01,366 --> 00:29:03,446 தந்தையின் அக்கறையான கவனிப்பினால் 203 00:29:03,535 --> 00:29:06,325 இந்த பெரிய பெரிய உலகில் அவர்கள் தங்களுக்கான பாதையை வகுக்க 204 00:29:06,413 --> 00:29:09,003 ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. 205 00:29:17,341 --> 00:29:21,681 இந்த தாயின் எதையும் தாங்கும் திறன் அவளுக்கு ஒரு புதிய தொடக்கத்தை தந்துள்ளது. 206 00:29:33,315 --> 00:29:36,605 சின்னஞ்சிறு அற்புதங்களின் புதிய தலைமுறையை... 207 00:29:37,736 --> 00:29:39,146 இந்த புதையல் தீவுகளைத் தவிர... 208 00:29:40,447 --> 00:29:42,987 வேறெங்கும் பார்க்க முடியாது. 209 00:30:46,722 --> 00:30:48,722 தமிழ் மொழி பெயர்ப்பு அகிலா குமார்