1 00:00:08,634 --> 00:00:11,264 நியூயார்க் கோடை காலத்தை விட கடினமான ஒரே விஷயம் 2 00:00:11,345 --> 00:00:15,055 அந்த நியூயார்க் கோடை காலம் இலையுதிர் காலம் வரை தொடர்வதுதான். 3 00:00:15,140 --> 00:00:17,480 சிறிது நேரத்துக்கு பிறகு, எல்லோருடைய அழகும் கெட்டுப்போய் 4 00:00:17,559 --> 00:00:20,269 உருகிய மெழுகுவர்த்திகள் போல தோற்றமளித்தனர். 5 00:00:32,073 --> 00:00:33,083 தேடப்படும் குற்றவாளி 6 00:00:33,158 --> 00:00:35,578 இது உளவு பார்ப்பதை எனக்கு எளிதாக்கியது, 7 00:00:35,661 --> 00:00:38,661 ஏனென்றால் மக்கள் குளிர்ச்சியாக இருக்க வீட்டிலேயே இருந்தனர். 8 00:00:46,463 --> 00:00:50,093 கார்ட்டூன் போல பூனைகளால் தங்கள் வாலை புரோபெல்லராக மாற்ற முடியாதது வருத்தமளிக்கிறது, 9 00:00:50,175 --> 00:00:52,425 ஏனென்றால் அவற்றின் வால்களை விசிறிகள் போல பயன்படுத்த முடிந்திருக்கும். 10 00:01:01,937 --> 00:01:04,727 வெளியே நிச்சயமாக வெயில் அதிகம்தான், திருமதி. ராபின்சன். 11 00:01:04,815 --> 00:01:07,105 ஆம், திரு. ராபின்சன். 12 00:01:07,609 --> 00:01:10,899 ராபின்சன்களால் எப்படி சலிப்பாக இருக்க முடிகிறது? 13 00:01:10,988 --> 00:01:12,658 அவர்கள் பயிற்சி எடுத்திருக்கலாம். 14 00:01:20,581 --> 00:01:24,631 வீட்டிற்கு சென்று குளிர்சாதன பெட்டிக்கு ஒரு இன்ச் அருகாமையில் நிற்க வேண்டும் போல இருக்கிறது... 15 00:01:29,464 --> 00:01:33,514 ஆனால் நான் கண்காணிக்க வேண்டிய ஒரு புது இடம் என் உளவு பாதையில் இருக்கிறது. 16 00:01:38,056 --> 00:01:40,176 அதுதான் கார்ஸியா குடும்பம், 17 00:01:40,267 --> 00:01:43,597 அந்த வினோதமான வெப்ப அலையின் போது அவர்களை உளவு பார்க்கும் என் முடிவு 18 00:01:43,687 --> 00:01:48,067 எங்கள் எல்லோரையும் வினோதமான குற்ற அலையில் சிக்கவைத்தது. 19 00:01:49,610 --> 00:01:50,610 தேடப்படும் குற்றவாளி 20 00:01:51,195 --> 00:01:53,855 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 21 00:01:53,947 --> 00:01:55,617 நாம் விரும்புகிறோம் 22 00:01:56,742 --> 00:01:59,202 நான் எப்படியிருக்க விரும்புகிறேனோ அப்படியிருப்பேன் 23 00:01:59,286 --> 00:02:00,866 என் உரிமை 24 00:02:01,371 --> 00:02:04,291 முடியாது, என் தலைமுடியை நான் வெட்டிக்கொள்ளமாட்டேன் 25 00:02:04,374 --> 00:02:06,754 நான் எதை வேண்டுமானாலும் அணிவேன் 26 00:02:06,835 --> 00:02:12,875 நான் நானாக இருப்பதையே விரும்புகிறேன் 27 00:02:12,966 --> 00:02:15,506 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 28 00:02:15,594 --> 00:02:18,474 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 29 00:02:18,555 --> 00:02:19,555 "உளவாளி V. உளவாளி" 30 00:02:21,600 --> 00:02:22,680 லூயிஸ் ஃபிட்ஸ்ஹியூ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 31 00:02:24,394 --> 00:02:26,694 கார்ஸியா குடும்பத்தை என் உளவு பாதையில் சேர்த்ததிலிருந்து, 32 00:02:26,772 --> 00:02:28,362 அவர்களைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன். 33 00:02:31,276 --> 00:02:32,276 புதியது 34 00:02:32,361 --> 00:02:34,951 அவர்கள் சமீபத்தில்தான் கியூபாவிலிருந்து அமெரிக்கா வந்து 35 00:02:35,030 --> 00:02:37,910 ஒரு உணவகத்தை தங்கள் கட்டிடத்தின் முதல் தளத்தில் வாங்கியுள்ளனர். 36 00:02:38,408 --> 00:02:41,198 அவர்கள் சொன்ன எதுவும் எனக்கு புரியவில்லை என்றாலும் கூட, 37 00:02:41,286 --> 00:02:43,156 இயல்பானவர்களைப் போலவே தோன்றினார்கள். 38 00:02:43,247 --> 00:02:44,997 -ஹோர்ஹே! -என்ன! 39 00:02:52,756 --> 00:02:56,336 திரு. மற்றும் திருமதி. கார்ஸியா ஒருவர் மற்றொருவரிடம் நேரடியாக பேசுவதற்கு பதிலாக 40 00:02:56,426 --> 00:02:59,296 அறையின் எதிர் பக்கங்களில் இருந்து ஒருவரையொருவர் பார்த்து கத்தினார்கள், 41 00:02:59,388 --> 00:03:02,058 இது பெற்றோர்களுக்கே உரிய பெற்றோர்களின் குணாதிசயம்தான். 42 00:03:04,476 --> 00:03:05,846 அவர்களுக்கு ஒரு பதின்பருவ மகள் இருக்கிறாள், 43 00:03:05,936 --> 00:03:09,816 மோசமாக பாடினாலும் தன்னை ஒரு சிறந்த பாடகி என நினைப்பவள். 44 00:03:10,691 --> 00:03:13,321 மி 45 00:03:14,695 --> 00:03:17,025 மி 46 00:03:17,114 --> 00:03:22,624 உணவகத்தை மூடிய பிறகு ஒவ்வொரு மாலையும் 10,000 டாலர் டவர் நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பார்கள். 47 00:03:24,121 --> 00:03:28,081 இது 10,000 டாலர் டவர் நிகழ்ச்சி! 48 00:03:28,667 --> 00:03:29,707 ஆம்! 49 00:03:29,793 --> 00:03:31,713 எல்லாமே இயல்பாக இருந்தது, சரியா? 50 00:03:32,254 --> 00:03:33,344 தவறு. 51 00:03:33,422 --> 00:03:37,222 ஏனென்றால் ஒவ்வொரு இரவும் அந்த நிகழ்ச்சி தொடங்கும் அதே நேரத்தில், 52 00:03:37,301 --> 00:03:41,181 அவர்களது மகன், கார்லோஸ், மர்மமாக காணாமல் போவான். 53 00:03:42,514 --> 00:03:47,354 இதனால் முக்கியமான தடயங்களைத் தேடுவதற்கு அவனது கடைக்கு உளவு பார்க்கச் செல்ல வேண்டியிருந்தது. 54 00:03:55,611 --> 00:03:56,611 திறந்திருக்கிறது மூடியிருக்கிறது 55 00:04:17,382 --> 00:04:19,592 ஒவ்வொரு இரவும் கார்லோஸ் எங்கு போகிறான்? 56 00:04:20,636 --> 00:04:22,636 அதைப்பற்றி எதுவும் தெரியாது. 57 00:04:24,389 --> 00:04:28,309 -ஹேய், அமெரிக்கா. இது டவர் நேரம். -இது டவர் நேரம்! 58 00:04:33,857 --> 00:04:35,277 இது டவர் நேரம். 59 00:04:35,776 --> 00:04:37,816 இது டவர் நேரம்! 60 00:04:38,820 --> 00:04:40,910 கார்லோஸ் எங்கு போயிருக்கலாம் என்பதற்கான யோசனைகள்: 61 00:04:40,989 --> 00:04:41,989 ஒன்று, 62 00:04:42,574 --> 00:04:44,334 உடற்பயிற்சி செய்யலாம், 63 00:04:44,409 --> 00:04:48,119 உணவகத்தில் உள்ள ஆரஞ்சு பெட்டிகளை தூக்குவதற்கு. 64 00:04:48,205 --> 00:04:49,405 இரண்டாவது... 65 00:04:52,459 --> 00:04:53,629 மி 66 00:04:53,710 --> 00:04:56,590 ஒருவேளை கார்லோஸ் தனது சகோதரி பாடுவதை வெறுத்து, 67 00:04:56,672 --> 00:04:58,512 அதற்கு பதில், திரு. விதர்ஸ் குடியிருப்புக்கு வெளியே நின்று 68 00:04:58,590 --> 00:05:01,640 ஏதோவொரு ராகத்தில் பூனைகள் கத்துவதை கேட்கலாம். 69 00:05:08,183 --> 00:05:09,353 மூன்றாவது. 70 00:05:09,977 --> 00:05:11,847 அல்லது ஒருவேளை... 71 00:05:11,937 --> 00:05:14,397 நம்முடைய புதிய போட்டியாளரை வரவேற்ப்போம், 72 00:05:14,481 --> 00:05:16,191 கார்லோஸ் கார்ஸியா. 73 00:05:17,234 --> 00:05:22,614 கார்லோஸ், 10,000 டாலர்களை வைத்து என்ன செய்வீர்கள்? 74 00:05:22,698 --> 00:05:25,118 நான் சைபீரியாவிற்கு செல்வேன், ஜானி. 75 00:05:25,200 --> 00:05:29,750 தனது சகோதரியின் பாட்டை மீண்டும் கேட்காத தூரம் செல்வதற்கு, 10,000 டாலர் டவரை 76 00:05:29,830 --> 00:05:33,250 -வெல்ல பயிற்சி பெறலாம். -லா, மி 77 00:05:34,084 --> 00:05:37,134 இந்த கார்லோஸ் எங்கு போகிறான் என்பதைக் கண்டுபிடிப்பதில் உறுதியாக இருந்தேன். 78 00:05:38,422 --> 00:05:41,552 ஒரு முக்கிய செய்திக்காக இந்த நிகழ்ச்சியை தடங்கல் செய்கிறோம். 79 00:05:41,633 --> 00:05:46,313 மன்ஹாட்டனின் கிழக்கு பகுதியில் மற்றொரு உணவகத்தில் மளிகைக் கடை திருடனின் கைவரிசை, 80 00:05:46,388 --> 00:05:50,388 இம்முறை இன்று மதியம் ஜோவின் 80வது தெருவிலுள்ள உணவகத்தில் திருடியிருக்கிறான். 81 00:05:52,352 --> 00:05:55,942 மளிகைக் கடை திருடனா? சுவாரஸ்யமாக உள்ளது. 82 00:05:56,023 --> 00:05:58,693 இது இந்த வாரத்தின் மூன்றாவது திருட்டு. 83 00:05:58,775 --> 00:06:03,355 பாபியின் மளிகைக் கடையும் கிழக்கு பகுதி உணவகமும் இலக்காகியுள்ளது. 84 00:06:03,447 --> 00:06:07,277 திருடன் பகல் நேரத்தில் கடை மற்றும் உணவகத்தில் நுழைந்து சாவியைத் திருடி 85 00:06:07,367 --> 00:06:11,287 இரவில் வந்து கொள்ளையடிப்பதாக போலீசார் கூறுகின்றனர். 86 00:06:11,788 --> 00:06:16,288 அவன் ஒரு சிறிய வளர்ந்த ஆண் என்றும் ஆபத்தானவன் என்றும் விவரிக்கிறார்கள். 87 00:06:16,376 --> 00:06:17,376 தேடப்படும் குற்றவாளி 88 00:06:19,213 --> 00:06:20,343 ஹோர்ஹே... 89 00:06:28,222 --> 00:06:31,852 தெருவிளக்குகள் எரியும்போது எப்போதும் ஏதோவொன்று சுவாரஸ்யமாக நடக்கும், 90 00:06:31,934 --> 00:06:34,654 வீட்டுக்கு போகும் நேரம் வந்துவிட்டது என ஞாபகப்படுத்தும். 91 00:06:37,022 --> 00:06:38,072 கார்லோஸ்? 92 00:06:42,611 --> 00:06:45,451 இப்போது என்ன நடந்தது? 93 00:06:50,702 --> 00:06:52,332 அவன் உன்னை உளவு பார்க்கிறானா? 94 00:06:52,412 --> 00:06:54,792 ஆம். என்னை உளவு பார்க்கிறான். 95 00:06:54,873 --> 00:06:58,383 பொறு. நீதானே முதலில் அவனையும் அவன் குடும்பத்தையும் உளவு பார்த்தாய்? 96 00:06:58,460 --> 00:07:00,000 அது வேறு கதை, ஸ்போர்ட். 97 00:07:00,087 --> 00:07:01,087 நான் ஒரு எழுத்தாளர். 98 00:07:01,171 --> 00:07:02,801 நான் உளவு பார்ப்பது எழுத்தாளர் ஆக, 99 00:07:02,881 --> 00:07:04,721 நான் எல்லாவற்றையும் அறிய வேண்டும், எல்லாவற்றையும் பார்க்க... 100 00:07:04,800 --> 00:07:08,600 சரி, எல்லோரும், பந்தை எடுத்து தூக்கி எறியுங்கள்! 101 00:07:13,100 --> 00:07:15,560 பந்து பட்டாலும் தொடர்வது நினைவிருக்கட்டும். தொடங்குங்கள். 102 00:07:18,772 --> 00:07:20,612 நீ என்ன செய்யப்போகிறாய், ஹேரியட்? 103 00:07:23,652 --> 00:07:27,992 முதலில், கார்லோஸ் என்னைப் பற்றி என்ன எழுதுகிறான் என்பதை அறிய வேண்டும். 104 00:07:28,073 --> 00:07:30,623 என்ன? உன்னைப் பற்றி எழுதுகிறானா? 105 00:07:32,619 --> 00:07:34,369 நீ அவுட், பிங்கி வைட்ஹெட்! 106 00:07:34,454 --> 00:07:38,084 பொறு. அவன் உன்னை உளவு பார்ப்பது மட்டுமில்லாமல், உன்னைப் பற்றி எழுதுகிறானா? 107 00:07:38,166 --> 00:07:41,546 ஹேரியட் அவனுக்கு என்ன செய்கிறாளோ அதையே செய்கிறான். 108 00:07:43,297 --> 00:07:45,007 நாம் இதில் கவனம் செலுத்த வேண்டும், ஹேரியட். 109 00:07:45,507 --> 00:07:47,717 வேண்டுமென்றே அவுட் ஆகு. 110 00:07:54,808 --> 00:07:57,518 என் வயிறு! என் வயிறு. எனக்கு அடிபட்டுவிட்டது. 111 00:08:02,357 --> 00:08:04,027 நான் அவுட்! 112 00:08:05,569 --> 00:08:08,609 என் சகோதரனிடம் சொல்லுங்கள் அவன் ஒரு முட்டாள். 113 00:08:13,368 --> 00:08:14,828 நீங்கள் அங்கே என்ன செய்கிறீர்கள்? 114 00:08:16,330 --> 00:08:18,620 வேண்டுமென்றே அவுட் ஆகு, ஸ்போர்ட். 115 00:08:18,707 --> 00:08:19,957 நாம் விவாதிக்க முக்கியமான விஷயம் இருக்கிறது. 116 00:08:20,042 --> 00:08:21,502 அடடா. 117 00:08:21,585 --> 00:08:23,545 ஆனால் இந்த விளையாட்டை நன்றாக ஆடிக்கொண்டிருக்கிறேன். 118 00:08:25,339 --> 00:08:27,169 நன்றாக தொடர்ந்தாய், ஸ்போர்ட்! 119 00:08:28,175 --> 00:08:29,215 பார்த்தீர்களா? 120 00:08:31,011 --> 00:08:32,301 சரி. 121 00:08:33,179 --> 00:08:35,059 அச்சச்சோ. நான் அவுட். 122 00:08:38,477 --> 00:08:40,937 கார்லோஸ் புதிய நண்பரை பெற நினைத்திருக்கலாமே? 123 00:08:41,020 --> 00:08:42,480 சமீபத்தில்தான் இங்கே குடியேறினான். 124 00:08:42,563 --> 00:08:44,533 அவனது புதிய பள்ளியில் யாரையும் தெரியாமல் இருக்கலாம். 125 00:08:44,608 --> 00:08:48,448 வாய்ப்பே இல்லை. அவனுக்கு என்ன வேண்டுமென கேட்டேன், அவன் என்னை இப்படி பார்த்துவிட்டு... 126 00:08:49,613 --> 00:08:50,613 ஓடிவிட்டான். 127 00:08:50,697 --> 00:08:52,617 "எனக்கு நண்பன் வேண்டும்" என்பதற்கான செயல் இல்லை. 128 00:08:53,325 --> 00:08:54,575 நல்ல வாதம். 129 00:08:54,660 --> 00:08:56,410 பொறு, உங்களுக்குப் புரியவில்லையா? 130 00:08:56,495 --> 00:09:00,075 உன்னை உளவு பார்க்கிறான், "வேறொரு நாட்டிலிருந்து" வந்திருக்கிறான், 131 00:09:00,165 --> 00:09:02,075 மற்ற மொழிகள் பேசுகிறான். 132 00:09:02,584 --> 00:09:03,634 கார்லோஸ்... 133 00:09:03,710 --> 00:09:06,340 ஒரு சர்வதேச உளவாளி. 134 00:09:07,172 --> 00:09:09,842 டிரான்சில்வேனியாவின் உருமாறும் இரத்தகாட்டேரி என்று சொல்ல வந்தேன். 135 00:09:12,636 --> 00:09:15,756 சரி, நல்லது. சர்வதேச உளவாளி அதைவிட பொருத்தமாக இருக்கிறது. 136 00:09:20,185 --> 00:09:21,645 பள்ளி முடியும்போது, 137 00:09:21,728 --> 00:09:26,188 ஒரு சர்வதேச உளவாளி என்னை பின்தொடர்கிறான் என்பதை மட்டுமே என்னால் சிந்திக்க முடிந்தது. 138 00:09:26,692 --> 00:09:28,032 இப்போது உன்னை பிடிக்கப்போகிறேன்! 139 00:09:39,705 --> 00:09:40,905 ஆனால் ஏன்? 140 00:09:42,165 --> 00:09:44,285 பார்க்கக்கூடாத ஒன்றை பார்த்துவிட்டேனா? 141 00:09:47,212 --> 00:09:50,172 அவன் என்ன எழுதுகிறான் என்பது தெரிந்தால் மட்டுமே, நான் யாரோடு மோதுகிறேன் என்பது தெரியும். 142 00:09:55,429 --> 00:09:56,969 அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. 143 00:09:58,974 --> 00:10:03,104 கார்லோஸுக்கு என் மீதான ஆர்வம் குறித்து துப்பறியப் போகிறேன் என்றால் 144 00:10:03,187 --> 00:10:06,437 நான் கார்லோஸின் மறைவிடத்தில் நுழைய வேண்டும். 145 00:10:09,443 --> 00:10:12,243 ஜேனி, இந்த செமஸ்டரில் நீ ஸ்பானிஷ் படிக்கிறாய், இல்லையா? 146 00:10:12,321 --> 00:10:14,571 ஆம், நிஜமாகத்தான். நான் அதைச் நன்றாகப் பேசுவேன். 147 00:10:14,656 --> 00:10:17,076 அருமை. நீங்கள் இருவரும் எனக்கு உதவ வேண்டும். 148 00:10:17,159 --> 00:10:18,699 -என்ன விஷயம்? -உதவுகிறோம். 149 00:10:26,710 --> 00:10:29,210 ஜேனி, நீ பெற்றோர்களை திசைதிருப்பு. 150 00:10:29,296 --> 00:10:30,416 என் சமிஞ்ஞைக்காக காத்திரு. 151 00:10:31,340 --> 00:10:34,090 ஸ்போர்ட், இரண்டாம் கட்டத்திற்கு தயாராகு. 152 00:10:35,177 --> 00:10:36,427 தயார்... 153 00:10:37,221 --> 00:10:38,221 போ. 154 00:10:49,775 --> 00:10:51,355 ஓ, இல்லை. 155 00:11:31,775 --> 00:11:33,565 அங்கே. காகிதம். 156 00:11:33,652 --> 00:11:35,402 அதில்தான் அவன் எழுதி கொண்டிருந்தான். 157 00:11:35,487 --> 00:11:36,657 நாம் அதை எடுக்க வேண்டும். 158 00:11:36,738 --> 00:11:38,698 நீ அவனை திசைதிருப்பு, நான் அதை எடுக்கிறேன். 159 00:11:45,914 --> 00:11:46,924 ஹலோ. 160 00:11:53,130 --> 00:11:55,590 ஹேய், பென்னி மிட்டாய்கள் எவ்வளவு? 161 00:11:58,844 --> 00:12:00,224 ஒரு பென்னி. 162 00:12:02,514 --> 00:12:04,314 சரி. சுவாரஸ்யமாக இருக்கிறது. 163 00:12:07,144 --> 00:12:09,984 அந்த பென்னி மிட்டாய்கள் எவ்வளவு? 164 00:12:12,024 --> 00:12:13,234 அதுவும் ஒரு பென்னிதான். 165 00:12:13,317 --> 00:12:14,437 சரி. 166 00:12:21,533 --> 00:12:22,533 அதோ இருக்கிறது. 167 00:12:27,122 --> 00:12:29,212 ஹேய். பார்த்துச் செல். 168 00:12:29,291 --> 00:12:30,581 மன்னிக்கவும். 169 00:12:46,391 --> 00:12:48,641 அவை எவ்வளவு? 170 00:12:50,604 --> 00:12:53,324 அதுவும் ஒரு பென்னிதான். அவை எல்லாமே ஒரு பென்னிதான். 171 00:12:53,398 --> 00:12:56,068 மில்லியன் டாலர் மிட்டாயைத் தவிர. அவை கால் டாலர். 172 00:12:56,151 --> 00:12:57,191 சரி. 173 00:13:01,615 --> 00:13:02,905 சரி, நான் அவற்றை பார்க்கலாமா? 174 00:13:03,575 --> 00:13:04,865 நிஜமாகவா? 175 00:13:05,953 --> 00:13:08,413 சரி. என் சாவிகளைப் பார்த்துக்கொள். 176 00:13:17,840 --> 00:13:22,180 -கிடைத்துவிட்டது. - ...ஆயிரம் டாலர் கோபுரம் நிறைய... 177 00:13:23,262 --> 00:13:24,512 ஹேய். நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? 178 00:13:24,596 --> 00:13:25,846 நீ திருடுகிறாயா? 179 00:13:27,391 --> 00:13:28,391 அவள் திருடி! 180 00:13:28,475 --> 00:13:29,725 திருடி, நில்! 181 00:13:31,186 --> 00:13:32,226 ஓடுங்கள்! 182 00:13:40,571 --> 00:13:41,571 என் சாவிகள்! 183 00:13:43,073 --> 00:13:44,453 நீ! 184 00:13:44,992 --> 00:13:47,492 ஹேய். உன் பாதையைப் பார்த்து நடக்கச் சொன்னேன்... 185 00:13:49,580 --> 00:13:51,250 வா. இங்கிருந்து ஓடிவிடுவோம். 186 00:14:01,967 --> 00:14:03,927 எனக்கு கிடைத்துவிட்டது. 187 00:14:04,011 --> 00:14:05,011 இது ஒரு... 188 00:14:05,095 --> 00:14:06,885 அதைப் பார்ப்போம். அதைத் திற. 189 00:14:08,223 --> 00:14:09,523 இது ஒரு வரைபடம். 190 00:14:09,600 --> 00:14:11,230 நியூயார்க் கிழக்கு பக்கம் ஹேரியட் 191 00:14:11,310 --> 00:14:13,980 எனது முழு உளவு பாதையையும் குறித்திருக்கிறான். 192 00:14:14,646 --> 00:14:16,686 ஜேனி, இந்த ஸ்பானிஷ் எழுத்துகள் என்ன சொல்கிறது? 193 00:14:20,027 --> 00:14:23,567 நீ ஸ்பானிஷ் மொழியைச் சரியாகப் பேசுவதாக நினைத்தேன். 194 00:14:23,655 --> 00:14:26,485 ஆம், நானும் அப்படித்தான் நினைத்தேன், ஆனால், சரியாக பேசவில்லை. 195 00:14:26,575 --> 00:14:27,575 ஜேனி! 196 00:14:27,659 --> 00:14:31,039 நான் ஸ்பானிஷ் பேசுவதில்லை, ஆனால் இது ஹேரியட் பற்றியது என்று உறுதியாக சொல்வேன். 197 00:14:31,121 --> 00:14:35,291 என்ன? அவனுக்கு என் பெயர் தெரியும். என் பெயர் எப்படித் தெரிந்திருக்கும்? 198 00:14:35,834 --> 00:14:38,424 கார்லோஸ் உண்மையில் ஒரு சர்வதேச உளவாளி. 199 00:14:38,504 --> 00:14:41,094 எனது உளவுப் பாதையில் நான் பார்க்கக்கூடாத ஒன்றைப் பார்த்திருக்க வேண்டும். 200 00:14:41,173 --> 00:14:43,473 ராபின்சன்கள் சலிப்பானவர்களாக இல்லாமல் இருக்கலாம். 201 00:14:43,550 --> 00:14:44,800 கார்லோஸ் அவர்களுக்காக வேலை செய்யலாம். 202 00:14:44,885 --> 00:14:47,715 இந்த வரைபடம் என்ன சொல்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும், வேகமாக. 203 00:14:48,430 --> 00:14:50,970 ஒருவேளை திருமதி. மார்ஷல், ஸ்பானிஷ் ஆசிரியர் உனக்கு உதவலாம். 204 00:14:51,058 --> 00:14:53,018 அவருடைய அலுவலக நேரம் 4 மணிக்கு தொடங்கும். 205 00:14:54,728 --> 00:14:56,608 அதாவது எனக்கு 15 நிமிடங்கள் இருக்கிறது. 206 00:14:57,189 --> 00:14:59,899 இது எனக்குக் கிடைத்த கௌரவம் நண்பர்களே. 207 00:14:59,983 --> 00:15:01,693 எங்களுக்குதான் கௌரவம். 208 00:15:07,616 --> 00:15:08,906 ஹேய்! ஓடக்கூடாது. 209 00:15:16,917 --> 00:15:20,297 ஜோவின் 80வது தெரு உணவுப் பொருட்கள் கடையைப் பார்த்தபோது நான் நின்றேன். 210 00:15:20,379 --> 00:15:22,129 செய்திகளிலிருந்து எனக்கு அது நினைவுக்கு வந்தது. 211 00:15:22,214 --> 00:15:25,514 அந்த இடம் மளிகைக் கடை கொள்ளையனால் கொள்ளையடிக்கப்பட்டது. 212 00:15:25,592 --> 00:15:29,262 திடீரென்று, எல்லாம் புரியவந்தது. 213 00:15:29,346 --> 00:15:34,016 கார்லோஸ் கடையில் வேலை செய்கிறான், சாவியைத் திருட சரியான நேரம் அவனுக்குத் தெரியும். 214 00:15:34,101 --> 00:15:36,481 இது சரியான யுக்தி. 215 00:15:36,562 --> 00:15:41,532 மளிகைக் கடையில் வேலை செய்யும் ஒருவன் திருடுவான் என யார் எதிர்பார்ப்பார்கள்? 216 00:15:41,608 --> 00:15:44,358 கார்லோஸ் ஒரு சர்வதேச உளவாளி அல்ல. 217 00:15:44,444 --> 00:15:46,784 அவன் ஒரு மளிகைக் கடை திருடன். 218 00:15:56,999 --> 00:15:58,289 ஹேய்! 219 00:16:04,006 --> 00:16:07,716 வீட்டிற்கு ஓட நினைத்தேன், ஆனால் மளிகைக் கடை திருடனுக்கு என் வீடு தெரிவதை விரும்பவில்லை, 220 00:16:07,801 --> 00:16:09,051 அதனால் தொடர்ந்து ஓடினேன். 221 00:16:19,438 --> 00:16:20,608 போகலாம். 222 00:16:26,069 --> 00:16:28,109 -பணம் இல்லையா... -சவாரி இல்லை. 223 00:16:28,197 --> 00:16:29,357 அடச்சே. 224 00:16:32,743 --> 00:16:35,413 உளவாளி பற்றிய படத்தில் வருவது போல துரத்தப்படும் போது, 225 00:16:35,495 --> 00:16:38,455 உளவாளி பற்றிய படத்தில் வருவது போலவே அவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும். 226 00:16:42,085 --> 00:16:43,085 ஹேய்! 227 00:16:45,130 --> 00:16:46,130 அந்த வழியாக! 228 00:16:58,143 --> 00:16:59,693 நீங்கள் ஆச்சரியப்படலாம், 229 00:16:59,770 --> 00:17:03,020 உங்களுக்கு அதிகம் தெரியும் என்றறிந்து அந்தத் திருடன் உங்களைத் துரத்தினால், 230 00:17:03,106 --> 00:17:06,316 அவன் அறிவதை நீங்கள் அறிந்தால், மிக வேகமாக ஓட முடியமா என்று. 231 00:17:13,784 --> 00:17:14,994 டைம்ஸ் சதுக்கம் 232 00:17:29,174 --> 00:17:30,184 எம்பையர் ஸ்டேட் 233 00:17:40,352 --> 00:17:41,602 சீக்கிரம் வா. 234 00:17:47,484 --> 00:17:48,494 பாதுகாப்பாக இருக்கிறேன். 235 00:17:50,112 --> 00:17:54,412 நான் மேலே சென்றதும், போலீஸை அழைத்து, ஹீரோவாக புகழப்படுவேன் என்று நினைத்தேன். 236 00:17:56,785 --> 00:17:58,995 இந்த காட்சி அற்புதம். ஆஹா. 237 00:18:01,248 --> 00:18:02,958 ஆனால் எப்படி? 238 00:18:04,877 --> 00:18:06,797 சரி. இரண்டு லிஃப்ட்கள் உள்ளன. 239 00:18:07,713 --> 00:18:10,263 -நீ. -நீ. 240 00:18:10,340 --> 00:18:12,510 நீ மளிகைக் கடை திருடன். 241 00:18:12,593 --> 00:18:14,473 என்ன? இல்லை, நான் இல்லை. 242 00:18:14,553 --> 00:18:16,853 நான் ஏன் மளிகைக் கடை திருடனாக இருக்க வேண்டும்? 243 00:18:16,930 --> 00:18:19,430 நீதான் என் குடும்பம் நடத்தும் கடைக்கு வந்து 244 00:18:19,516 --> 00:18:22,056 எனது வரைபடத்தை திருடி, என் சாவிகளை மாற்றினாய். 245 00:18:22,144 --> 00:18:24,524 உன் சாவிகளை மாற்றினேனா? நான் உன் சாவிகளை எடுக்கவில்லை. 246 00:18:24,605 --> 00:18:27,815 நீ சொன்னது சரி. நீ செய்யவில்லை. ஏனென்றால் அவை போலி சாவிகள். 247 00:18:27,900 --> 00:18:29,860 போலி சாவிகள் என்றால் என்ன? 248 00:18:29,943 --> 00:18:32,653 மளிகைக் கடை திருடனை பிடிக்க தூண்டிலாக 249 00:18:32,738 --> 00:18:36,028 வேலை செய்யாத சில பழைய சாவிகளை வெளியே வைத்தேன். 250 00:18:36,116 --> 00:18:37,696 -நீ. -இல்லை. 251 00:18:37,784 --> 00:18:39,544 நீதான் மளிகைக் கடை திருடன், 252 00:18:39,620 --> 00:18:43,000 அது எனக்குத் தெரிந்துவிட்டது என நினைத்து நீ என்னைப் பின்தொடர ஆரம்பித்தாய். 253 00:18:43,081 --> 00:18:45,671 அதை நிரூபிக்க என்னிடம் வரைபடம் உள்ளது. 254 00:18:45,751 --> 00:18:47,041 இல்லை! என் ஆதாரம்! 255 00:18:50,672 --> 00:18:51,672 அதோ அவர்கள் அங்கே. 256 00:18:51,757 --> 00:18:53,007 இல்லை! கொடு! 257 00:18:54,760 --> 00:18:56,090 ஜேனி? ஸ்போர்ட்? 258 00:18:56,803 --> 00:18:57,893 ஸ்போர்ட், தயவுசெய்து. 259 00:18:57,971 --> 00:18:59,471 ஸ்பானிஷ் தெரிந்தவள் நான்தான். 260 00:18:59,556 --> 00:19:01,056 கார்ஸியாக்கள் உங்களைப் பின்தொடர உதவினார்கள். 261 00:19:01,141 --> 00:19:02,981 நான் மளிகைக் கடை திருடன் அல்ல. 262 00:19:03,060 --> 00:19:04,310 ஆம், அவள் தான்! 263 00:19:04,394 --> 00:19:05,774 இல்லை, நான் இல்லை! 264 00:19:08,148 --> 00:19:10,028 நாம் எதையோ தவறவிட்டோம் என நினைக்கிறேன். 265 00:19:10,609 --> 00:19:12,319 நீ திருடன் அல்ல என்பது தெரியும். 266 00:19:12,402 --> 00:19:14,362 நீதான் திருடனை தடுத்தாய். 267 00:19:14,446 --> 00:19:15,446 என்ன? 268 00:19:17,991 --> 00:19:18,991 நான் சொல்கிறேன். 269 00:19:20,077 --> 00:19:23,867 கடையில் இருந்து வெளியேறும் போது நீ மோதிய அந்த நபர்தான் திருடன். 270 00:19:23,956 --> 00:19:26,246 அவன்தான் துருப்பிடித்த பழைய 271 00:19:26,333 --> 00:19:28,463 வேலை செய்யாத சாவிகளை கவுண்டரில் இருந்து எடுத்தான். 272 00:19:28,544 --> 00:19:30,964 திரு. மற்றும் திருமதி. கார்ஸியா, ஸ்போர்ட் மற்றும் என்னை கண்டுபிடித்த பிறகு, 273 00:19:31,046 --> 00:19:34,296 போலீஸை அழைத்தோம், கடையைப் பூட்டிவிட்டு, உங்கள் இருவரையும் கண்டுபிடிக்க வந்தோம். 274 00:19:34,383 --> 00:19:37,513 பொறு. அதாவது… 275 00:19:37,594 --> 00:19:41,394 இரவில் கொள்ளையடிப்பதற்கு முன் திருடன் பகல் நேரத்தில் மளிகைக் கடை மற்றும் 276 00:19:41,473 --> 00:19:45,603 உணவகங்களுக்குள் நுழைந்து சாவியைத் திருடுவான் என்று போலீசார் கூறுகிறார்கள். 277 00:19:47,312 --> 00:19:51,112 திருடனை முட்டாளாக்குவதற்கு நீ உன் பழைய சாவிகளை பயன்படுத்தியிருக்கிறாய். 278 00:19:51,984 --> 00:19:54,654 நீ நிஜமாகவே மளிகைக் கடை திருடனை ஏமாற்றியிருக்கிறாய். 279 00:19:54,736 --> 00:19:56,106 எனக்கு இப்போது புரிகிறது. 280 00:19:56,196 --> 00:19:57,776 நீ ஒரு மேதாவி, கார்லோஸ். 281 00:19:57,865 --> 00:19:59,825 கார்லோஸ், நீ ஒரு மேதை என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை? 282 00:19:59,908 --> 00:20:02,038 நீ என்னை உளவு பார்த்ததால். 283 00:20:02,119 --> 00:20:06,079 அதோடு நீ ஏன் என்னையும் மற்ற எல்லா இடங்களையும் உளவு பார்த்தாய்? 284 00:20:06,164 --> 00:20:07,544 இது எளிதானது. நான் ஒரு எழுத்தாளர். 285 00:20:08,208 --> 00:20:09,208 எனக்குப் புரியவில்லை. 286 00:20:09,293 --> 00:20:13,633 என் பாட்டி, ஓல் கோலி, நான் எழுத்தாளராக ஆக, எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள சொன்னார். 287 00:20:13,714 --> 00:20:16,304 எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள, எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். 288 00:20:16,383 --> 00:20:18,433 எல்லாவற்றையும் பார்க்க ஒரே வழி உளவு பார்ப்பதுதான். 289 00:20:18,510 --> 00:20:20,180 நான் எழுதுவதற்காக உளவு பார்க்கிறேன். 290 00:20:20,262 --> 00:20:22,722 ஆக, நீ ஒரு எழுத்தாளர். அருமை. 291 00:20:22,806 --> 00:20:23,806 எனக்கு படிப்பது பிடிக்கும். 292 00:20:23,891 --> 00:20:27,191 என்னுடைய முதல் நாவலை ஒருநாள் உனக்கு படிக்கக் கொடுக்கிறேன். 293 00:20:27,269 --> 00:20:28,269 நல்ல ஒப்பந்தம். 294 00:20:34,610 --> 00:20:36,820 இருவரும் எப்படி மளிகைக் கடை திருடனை பிடித்தீர்கள் என்று 295 00:20:36,904 --> 00:20:39,074 செய்தியாளருக்கு தெரிவிக்கலாம் என என் அம்மாவும் அப்பாவும் சொல்கிறார்கள். 296 00:20:39,156 --> 00:20:41,326 அதற்கான பாராட்டைப் பெற உங்கள் இருவருக்கும் தகுதி உண்டு. 297 00:20:41,408 --> 00:20:44,238 நான் உளவாளி. என் அடையாளம் பிரபலமாகக் கூடாது. 298 00:20:44,328 --> 00:20:46,288 ஆனால், நீதான் உண்மையில் அவனைப் பிடித்தாய். 299 00:20:46,371 --> 00:20:48,671 உன்னிடம் முழு திட்டம் இருந்தது. நான் தெரியாமல் அதற்குள் வந்தேன். 300 00:20:49,208 --> 00:20:51,378 பொறு. சமீபத்தில்தான் இங்கே வந்தீர்கள், இல்லையா? 301 00:20:52,085 --> 00:20:54,955 நீங்கள் எம்பையர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சிக்கு சென்றிருக்கிறீர்களா? 302 00:20:55,047 --> 00:20:58,127 ஸ்போர்ட், ஜேனி மற்றும் நான் நல்ல நியூயார்க் நகர சுற்றுலா வழிகாட்டிகள். 303 00:20:58,217 --> 00:21:01,177 ஓ, ஆம். எந்தெந்த தொலைநோக்கிகள் வேலை செய்யும், வேலை செய்யாது, 304 00:21:01,261 --> 00:21:03,471 எல்லாமே எங்களுக்குத் தெரியும். 305 00:21:03,972 --> 00:21:05,972 சுதந்திர தேவி சிலை அங்கே இருக்கிறது 306 00:21:09,478 --> 00:21:14,228 அடித்தளத்தில் பந்து வீச்சுக்கான இடம் கொண்ட தேவாலயம் இருக்கிறது. 307 00:21:16,360 --> 00:21:19,490 அடுத்த நாள், வெப்ப அலையும் முடிந்தது, குற்ற அலையும் முடிந்தது, 308 00:21:19,571 --> 00:21:22,411 அதோடு கார்லோஸ் செய்தித்தாளில் ஒரு ஹீரோ என்று அழைக்கப்பட்டான். 309 00:21:22,491 --> 00:21:24,031 நான் உதவியதாகக் கூட அவன் தெரிவித்திருந்தான். 310 00:21:24,117 --> 00:21:25,487 உள்ளூர் பையன் மளிகைக் கடை திருடனை பிடித்தான் 311 00:21:25,577 --> 00:21:28,327 என் தோழி, ஹேரியட் எம். வெல்ஷ், மளிகைக் கடை திருடனை 312 00:21:28,413 --> 00:21:30,173 எளிதாக கீழே தள்ளி வீழ்த்தினாள். 313 00:21:30,666 --> 00:21:35,086 "M" உட்பட எனது முழுப் பெயரால் அவன் என்னை அழைப்பதை உறுதி செய்தேன். 314 00:21:36,213 --> 00:21:40,133 நீங்கள் எப்போதும் விரும்பும் அற்புதமான நண்பர்களில் ஒருவராக அவன் மாறிவிட்டான், 315 00:21:40,217 --> 00:21:43,467 இது முன்பே தெரிந்திருந்தால் ஒருவரை விட்டு ஒருவர் விலகுவதற்கு பதிலாக 316 00:21:43,554 --> 00:21:45,684 அதிகம் பேசியிருப்போம். 317 00:21:50,018 --> 00:21:51,558 சுவையாக இருக்கிறதா என அவர் கேட்கிறார். 318 00:21:51,645 --> 00:21:53,895 ஆம். சூப்பர் சுவை. 319 00:21:54,481 --> 00:21:58,691 கார்ஸியாக்களுடன் பழகியது ஜேனியின் ஸ்பானிஷை நன்றாக மேம்படுத்தியது. 320 00:22:01,405 --> 00:22:05,485 மறுபுறம், கிளாரிடா பாடும் கொடுமை மாறாமல் அப்படியே தொடர்ந்தது. 321 00:22:05,576 --> 00:22:07,736 10,000 டாலர் டவர் 322 00:22:07,828 --> 00:22:11,788 அது அதிகாரமும் பணமும் நிறைந்தது 323 00:22:11,874 --> 00:22:15,504 இதோ பணம் வருகிறது 324 00:22:17,004 --> 00:22:23,514 10,000 டாலர் டவர் அது அதிகாரமும் பணமும் நிறைந்தது 325 00:22:24,011 --> 00:22:30,141 இதோ பணம் வருகிறது 10,000 டாலர்... 326 00:22:30,726 --> 00:22:33,396 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 327 00:22:33,478 --> 00:22:35,148 நாம் விரும்புகிறோம் 328 00:22:36,273 --> 00:22:38,823 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 329 00:22:38,901 --> 00:22:44,411 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 330 00:22:46,575 --> 00:22:52,245 அக்கம் பக்கத்தில் நல்லதைச் செய்ய நான் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன் 331 00:22:52,331 --> 00:22:54,791 நான் நன்றாக சிரிக்கிறேன் 332 00:22:54,875 --> 00:22:58,085 நான் உண்மையைச் சொல்ல முயற்சி செய்கிறேன் 333 00:22:58,170 --> 00:23:00,670 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 334 00:23:00,756 --> 00:23:02,586 நாம் விரும்புகிறோம் 335 00:23:03,467 --> 00:23:06,217 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 336 00:23:06,303 --> 00:23:09,063 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 337 00:23:09,139 --> 00:23:11,639 நான் எப்படியிருக்க விரும்புகிறேனோ அப்படியிருப்பேன் 338 00:23:11,725 --> 00:23:13,635 என் உரிமை 339 00:23:14,353 --> 00:23:17,153 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 340 00:23:17,231 --> 00:23:19,151 நாம் விரும்புகிறோம் 341 00:23:19,233 --> 00:23:21,993 முடியாது, என் தலைமுடியை நான் வெட்டிக்கொள்ளமாட்டேன் 342 00:23:22,069 --> 00:23:24,659 நான் எதை வேண்டுமானாலும் அணிவேன் 343 00:23:24,738 --> 00:23:30,328 நான் நானாக இருப்பதையே விரும்புகிறேன் 344 00:23:30,410 --> 00:23:33,250 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 345 00:23:33,330 --> 00:23:37,880 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 346 00:23:37,960 --> 00:23:39,960 வசனத் தமிழாக்கம் அருண்குமார்